துரோகத்தின் நாட்காட்டி : துரோகிகளை பினாமிகளாக வைத்து இனவழிப்புப் போரை அன்றே திட்டமிட்ட சிங்களம்
கருணாவைப் பாவித்து புலிகளை அழிக்க இலங்கையரசு திட்டமிடுகிறது - அமெரிக்க ஆய்வுக்குழு
அமெரிக்காவின் தனியார் ராணுவ, அரசியல் , பொருளாதார புலநாய்வு மைய்யமான (Strategic Forecasting - STRATFOR) வெளியிட்டிருக்கும் ஆய்வறிக்கையில் கருணாவின் பிளவினை அரச - ராணுவ உயர்மட்டத்தினர் ஆதரிப்பதாகவும், இதற்கு அமெரிக்காவின் ஆசி கிடைத்திருப்பதாகவும் தெரிவித்திருக்கிறது.
"அவர்களின் திட்டம் இதுதான், புலிகளை நிலைகுலைய வைப்பது, தமக்குள் பிளவுகளை உண்டுபண்ணி, பலவீனப்படுத்துவது, இறுதியாக பலவீனப்பட்டிருக்கும் அந்த அமைப்பை பாரிய ராணுவ நடவடிக்கை ஒன்றின்மூலம் முற்றாக அழித்தொழிப்பது" என்று அரச உயர்மட்டத்திலிருப்பவர்களால் தமக்குக் கூறப்பட்டதாக இந்த ஆய்வுமைய்யம் கூறுகிறது.
"கருணா தொடர்ந்தும் புலிகளிடமிருந்து பிரிந்துநின்று செயற்படுவாரானால், அவரது குழுவுக்கும் புலிகளுக்குமிடையே தொடர்ச்சியான மோதல்கள் இடம்பெறும். இவ்வாறான சூழ்நிலையொன்று இலங்கையரசிற்கு மிகவும் உவப்பானதாக இருக்கும் என்பதும், இந்த நிலையினைத் தனக்குச் சாதகமாகப் பாவிக்க அது கருணா குழுவைத் தொடர்ந்தும் அதிகம் அதிகமாக ஆதரிக்கும்" என்று இவ்வாய்வறிக்கை கூறுகிறது.
"புலிகளின் உள்வீட்டுப் பிரச்சினையால், அவர்கள் உள்ளுக்குள் மோதி, பலவீனப்படுவதை விரும்பும் அரசு, இதன்மூலம் சமாதானப் பேச்சுவார்த்தைகள் குழம்புவதையும் எதிர்பார்க்கிறது. இதனாலேயே கருணவை அவரது பிளவின்போது காப்பாற்றிய அரசு, அப்பிளவு தொடர்ந்தும் உயிர்ப்புடன் இருக்க அவரைத் தொடர்ச்சியாக ஆதரித்தும், பாதுகாத்தும் வருகிறது".
"சமாதானப் பேச்சுவார்த்தைகள் குழம்புமிடத்து புலிகள் மீண்டும் போரை நோக்கித் தள்ளப்படலாம், ஆகவே அதற்குமுன்னர் அவர்களுக்குள் ஏற்படும் பிளவு அவர்களை ராணுவ ரீதியில் கடுமையாகப் பலவீனப்படுத்தும். இந்தச் சூழ்நிலை அவர்களை இலகுவாக அழித்துவிட உதவும் என்று கொழும்பு எதிர்பார்க்கிறது".
"தமக்கும் கருணாவுக்கும் இடையே எதுவித தொடர்புகளும் இல்லையென்று இலங்கையரசு திரும்பத் திரும்பக் கூறிவந்தாலும் கூட, அரச உயர் பீடத்திலிருப்பவர்களும், ராணுவத் தளபதிகளும் தனிப்பட்ட சந்திப்புக்களில் கருணாகுழுவுக்கான தமது ஆதரவினை ஒத்துக்கொண்டிருக்கிறார்கள்".
புலிகளுடனான 6 வார மோதல்களில் வெட்கக்கேடான தோல்வியினைத் தழுவியிருந்த கருணா 3 மாதகாலத்திற்குப் பிறகு முதன்முறையாக இலங்கை அரச வானொலிச் சேவைகளிலும், பி பி சி செய்திச் சேவையிலும் தோன்றிப் பேட்டிகளை வழங்கியிருந்தார்.
"அவமானகரமான தோலிவியின் பின்னரும் வெளிப்படையாக பேட்டிகளை அளித்திருப்பதன்மூலம் கருணா தனக்கான ஆதரவினை குறிப்பாக, கிழக்கு மக்களிடையே பெற்றுக்கொள்ள முயலலாம். அத்துடன், புலிகளின் தலைமையினை அகற்றும் நடவடிக்கைகளில் அவர் தொடர்ந்தும் ஈடுபடலாம்" என்றும் அவ்வறிக்கைகூறுகிறது.
"தனது பேட்டிகளின்போது அரசியலில் ஈடுபடப்போவதாக கருணா கூறியிருப்பது, தன்னை வேண்டுமென்றே புலிகளின் இலக்காக காட்டுவதற்காகத்தான் என்பதும், இதன்மூலம் தனக்கும் புலிகளுக்குமான பகையினை இலங்கையரசின் விருப்பத்தின்படி அவர் தொடரப்போகிறார் என்பதையும், இவரைப் பாவிப்பதன் மூலம் பலவீனமாக்கப்படும் புலிகளை தனது விருப்பப்படி அழிக்க அரசு முயல்வதும் தெரிகிறது " என்றும் அவ்வறிக்கை மேலும் கூறுகிறது.
"ஆனால், புலிகள் இலங்கை அரசுகளுடன் பல தசாப்த்தங்களாக மோதிவருகின்றனர். ஆகவே, பெருமளவு இரத்தம் சிந்துதலில்லாமல் தீர்வொன்றை அடைவதற்கான சாத்தியக்கூறுகள் இப்போது தெரியவில்லை" என்றும் அது கூறுகிறது.
"போர் ஒன்று மீண்டும் ஆரம்பிக்கும் பட்சத்தில் புலிகள் மிகவும் பலவீனமான நிலையினை அடைவார்கள் என்பது திண்ணம். இது பேச்சுவார்த்தைகளில் அவர்களது நிலையினை மிகவும் பலவீனப்படுத்தும் என்பதுடன், அவர்கள் இதுவரை காலமும் முன்வைத்த
சுயநிர்ணய உரிமை அடிப்படியிலான கோரிக்கைகளை இலங்கையரசு உதாசீனம் செய்யும் நிலையும் ஏற்படப்போகிறது".
"அதேவேளை, காயப்பட்ட புலியினை வலிந்து போருக்கு அழைப்பதும் பாதுகாப்பானது அல்ல. புலிகள் தமது கோரிக்கைகளைத் தளர்த்தினாலோ அல்லது இலங்கையரசு அவர்களது கோரிக்கைகளை ஏற்றுக்கொண்டாலோவன்றி, இப்போது தடைப்பட்டிருக்கும் பேச்சுவார்த்தைகள் மீள ஆரம்பிக்கப்போவதில்லை" என்றும் அவ்வறிக்கை கூறுகிறது.
“