Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Leaderboard

  1. குமாரசாமி

    கருத்துக்கள உறுப்பினர்கள்
    23
    Points
    46808
    Posts
  2. கிருபன்

    கருத்துக்கள உறவுகள்
    8
    Points
    38778
    Posts
  3. உடையார்

    கருத்துக்கள உறவுகள்
    8
    Points
    23926
    Posts
  4. தனிக்காட்டு ராஜா

    கருத்துக்கள உறவுகள்
    7
    Points
    9976
    Posts

Popular Content

Showing content with the highest reputation on 03/13/21 in all areas

  1. அப்போது பார்த்தால் கள்ள மரம் வெட்டுபவர்கள் அவர்கள். எல்லோரும் ஒரே நேரத்தில் எழும்பி துப்பாக்கியை நீட்ட அவர்கள் அலறினார்கள் எங்களுக்கு சிங்களம் தெரியாது. அவர்களோ கைபாஷையில் மரம் வெட்ட வந்ததாக சொன்னார்கள் இவர்களை விடுவதா? அல்லது சுடுவதா? அல்லது கைது பண்ணி செல்வதா? என எங்களுக்குள் பாரிய வினா எழுகிறது ?? அப்போது எனது அப்பா ஞாபகமும் வருகிறது இப்படித்தான் எனது அப்பாவும் அகப்பட்டிருப்பாரோ படையினரிடம் என நினைத்து கொடிகளால் அவர்கள் கைகளை கட்டி மரக்கிளையுடன் அமர வைக்கிறோம் சத்தம் போட கூடாது என‌. நேரம் 3 மணி ஆனதும் அன்றய தாக்குதல் சம்பவங்களோ சண்டையோ இடம்பெறவில்லை அவர்களை விடுவதா அல்லது முகாமுக்கு கொண்டு செல்வதா என கேள்விகள் மீண்டும் எழ நான் விட்டு விடுவோம் ஆனால் இனிமேல் இங்கே வரக்கூடாது என சொல்ல கைகூப்பி கும்பிட்டு அவர்கள் காட்டுக்குள் ஓடுகிறார்கள் ஆனால் அவர்களால்தான் பல போராளிகள் சுடப்பட்டார்கள் என்பது தெரிந்தும் விட்டு செல்கிறோம். இந்த சம்பவம் பொறுப்பாளருக்கு தெரிய எனக்கு பணிஸ்மென்ற் கொடுக்கப்படுகிறது சமையல் பிரிவில் அந்த நேரமே சமாதான உடன்படிக்கை ஏற்பட்டு யுத்த நிறுத்தம் வருகிறது போராளிகளுக்கு சரியான சந்தோசம் பலர் அரசியல் நடவடிக்கயென எல்லா இடங்களுக்கு செல்கிறார்கள். மனிதர்களும் மனதும் மாறக்கூடியவை இதில் போராளிகளும் விதிவிலக்கல்ல நகர் புறங்களில் சென்றவர்கள் பலர் நாள் தோறும் விலகி செல்ல ஆரம்பித்தார்கள் சிலர் வெளிநாடு செல்ல ஆரம்பித்தார்கள். ஆனால் நாங்கள் செல்லவில்லை வெளிநாடு செல்ல காசும் இல்ல. பேச்சு வார்த்தையின் இடையில் போராட்டமும் நியாயப்படுத்தலால் பிளவுறுகிறது எங்களுக்கு என்ன நடக்கிறது ஏது நடக்கிறது என தெரியவில்லை ஒர் நாள் கர்ணா அம்மானால் அனைத்து போராளிகளும் அழைக்கப்படுகிறார்கள் நான் போராட்டத்திலிருந்து விலகுறன் இல்லாட்டால் கிழக்கு பகுதிய நாம் வச்சிருக்கணும் அப்படி இல்லையென்றால் அண்ணன் ஏதும் செய்ய வெளிக்கிட்டால் யாரும் இங்க நிற்கக்கூடாது எல்லோரும் அவங்கவங்க வீட்ட போகலாம் என்றார் அடியும் தெரியல முடியும் தெரியாமல் போராளிகள் முளித்துக்கொண்டிருந்தார்கள் பல ஆயிரக்கணக்கான போராளிகள் விலகி செல்ல ஆரம்பித்தார்கள் என்பதை விட அம்மாமார் வந்து அழைத்து செல்ல ஆரம்பித்துவிட்டார்கள். முக்கியமானவர்கள் சிலரே இருந்தார்கள் போராட்டம் தலைகீழாக மாறியது ( அது யாவரும் அறிந்தது) என்னையும் அம்மா அழைத்து சென்றுவிட்டார் நானும் நகர் பகுதிதில் வந்து ஒளிந்து கொண்டேன் அழைப்புக்கள் வந்தன இணையச்சொல்லி ஆனால் மீண்டும் சேரவோ இணையவோ மனதும் உறவுகளும் விரும்பல ஆனால் காட்டிக்கொடுப்பால் சிறை செல்ல அங்கே சகோதர யுத்தமும் அரங்கேறுகிறது இந்த நேரத்திலே அரசு வெற்றி கொண்டது என்றும் சொல்லலாம். சிறையிலிருந்து வந்தால் எல்லாமே வேதனையான வெற்றியுடன் முற்று முழுதாக முற்றுப்பெற்றிருந்தது. படிப்பும் இல்லை தொழிலும் இல்லை அம்மாவை தேடி நானும் செல்ல அம்மாவோ படுக்கையில் அண்ணன் மிருக வைத்திய துறையில் தங்கை திருமணம் முடித்து இருந்தாள் நம்மவர் யாரிடமாவது ஓர் வேலையை பெற்று வாழலாம் என நினைத்தால். வாழ்க்கையை இந்த சமுதாயத்தில் வாழ முடியாது ஓடி விடு என துரத்திக்கொண்டே இருக்கிறது துரோகியென்ற‌ பட்டத்துடன். திடிரென யாரோ என் மீது விரலால் தட்ட துப்பாக்கி முனைதானோ என‌ துடித்து எழும்புகிறேன் தம்பி கடையை திற சனம் வந்துட்டுது என்று சொன்னார் அந்த முஸ்லீம் கடை முதலாளி முகத்தை கழுவி முன்கண்ணாடியில் பார்க்கிறேன் கண்ணாடி மட்டும் பொய் சொல்லாமல் என்னைப்பார்கிறது. பொய்யென்றும் சொல்ல முடியல கற்பனையென்றும் சொல்ல முடியல‌ முற்றும் .
  2. மொழி ஆதிக்கம்..! ************ சிங்கள நகரமெல்லாம் சீன எழுத்துக்கு முதலிடமா.. சிங்களம் ஆங்கிலம் அதற்கு கீழே இருப்பது சிரிப்பைத் தருகிறது. ஊர் பலகையில்-தமிழ் மொழி இல்லையென்று உனக்கு மகிழ்வு இருந்தால் விரைவில்.. உன் மொழியும் அழிந்து உலக மொழியொன்று வியாபிக்கும்.. இது உண்மை. அப்போதும் உணருவாயோ தெரியவில்லை ஏனென்றால் இப்போது தேசத்தின் கீதம் கூட குயிலாக இருந்தாலும் மயிலாக இருந்தாலும் சிங்கம் போலத் தான் கர்ச்சிக்க வேண்டுமாமே. உன்நாட்டில்.. அன்புடன் -பசுவூர்க்கோபி-
  3. நான் ஜிம்மாவுக்கு போய் வருகிறன் கடை பூட்டித்தான் இருக்கிறது நீ வெளியில் இரு. சரி காக்கா. அந்த மனுசன் கடவுளுக்கு மிக பயந்தவர் 5 வேளையும் தொழுது கொண்டே இருப்பார். நான் சிறையிலிருந்து வந்து பல இடங்களில் வேலை தேடினேன் கிடைக்கவில்லை யாரும் கொடுப்பதாகவும் இல்லை போராளிகளுக்கு வேலை கொடுத்தால் எங்களுக்கு பிரச்சினை வரும் என்று சொன்ன கூட்டங்களுக்காக போராடினோமே என நினைக்கும் போது மனத்துக்குள் எனக்கு நானே காறி உமிழ்ந்து கொள்கிறேன். சிறையிலிருந்த‌ சிங்களவராகட்டும் , சிறைக்காவலராகட்டும் , அடிமை என நினைத்தாலும் மனிதராக பார்த்தார்கள் தமிழர்களோ மனிதராக பார்க்காமல் விரோதியாகவும் , துரோகியாவுமே பார்த்தார்கள் இதில் தமிழர்களின் பழக்கம் ஒன்று இருக்கிறது எப்பவும் வெளித்தோற்றத்தை வைத்து ஒருவரை கணித்து விடுவது, அல்லது இப்படித்தான் நடந்து இருக்குமெனவும் எண்னி கணித்தும் விடுவார்கள் இதுதான் இன்றுவரைக்கும் தொடர்கிறது என நினைத்து. வெளியில் இருந்த ஒரு உடுப்பு மூடையில் சாய நித்திரை வருகிறது எப்போதும் வேலை நேரத்திலே நித்திரை வரும் .நித்திரைக்கு போனால் நித்திரை வரவே வராது எனக்கு. பலர் ஏன் மதம் மாறுகிறார்கள் இனத்தை விட்டு தூர செல்கிரார்கள் என மெல்ல எனக்கும் புரிய வைத்தது அந்த வேலைத்தள சம்பவங்கள் எப்போதும் கஸ்டத்தில் இருப்பவர்களை கண்டு கொள்ளாது நம்ம சமூகம் அவன் வேறு மதத்தை தளுவிக்கொண்டால் அவன் வம்சத்தை இழுத்து கழுவிதிரிவார்கள் , காவியும் திரிவார்கள். நித்திரை மெல்ல கண்ணை அரட்ட என் இருண்ட வாழ்வு கனவு வெளிச்சத்தில் நிழலாக மிதந்து வருகிறது. எடேய் சின்னவோவ்!!................ அவன காணல்ல அம்மா என்ற சத்தத்தோடு பெரியவன் வருகிறான் அவன கண்ட நீயா? பள்ளிவிட்டு வந்தான் இந்தா புத்தக பைய எறிஞ்சு போட்டு , சோத்துக்கோப்பையும் கழுவல விளையாட ஓடிட்டான் நீ வெளிய எங்கயும் போகாத எங்க தங்கச்சி? இந்தா உள்ள இருக்கா சரி ரெண்டு பேரும் வீட்டில இருங்க அவனுக்கு ரெண்டு போட்டு ஆள கூட்டுக்கொண்டு வாரன் என செல்கிறாள் பொன்னி . பொன்னி வாழ்வது படுவாங்கரையில். படுவாங்கரையென்பது மட்டக்களப்பில் சூரியன் எழும் பகுதி எழுவாங்கரையெனவும் மறையும் பகுதி படுவாங்கரையெனவும் அந்த காலத்திலிருந்து சொல் வழக்கில் வருகிறது படுவாங்கரையில் அழகிய கிராமம் தும்பங்கேணி. பொன்னியும் அவள் மூன்று பிள்ளைகளும் வாழ்ந்து வருகிறார்கள் . மூத்தவன் ( மோகன் ) சின்னவன் ( கீரன் ) புள்ள ( கீதா) தன் பிள்ளைகளை பெயர் சொல்லி அழைக்கமாட்டாள் பொன்னி மூத்தவனை மூத்தவன் எனவும் , இளையவனை சின்னவன் எனவும் பெண் பிள்ளையை புள்ள எனவும் செல்லமாக கூப்பிடுவாள். ஊரவர்களும் அப்படியே கூப்பிடுவார்கள் மூத்தவன் உயர்தரம் படிக்க, இளையவன் தரம் 10 படிக்க , பெண் புள்ள தரம் 8 படிக்கிறாள் . தகப்பனாரோ விறகு வெட்ட காடு சென்றவர் இதுவரை வீடுதிரும்பல இவர்களும் தேடாத காடு இல்லை. சின்னவனை தேடிச்சென்ற பொன்னிக்கு அவன் மைதானத்தில் விளையாடிக்கொண்டிருந்தான் எடேய் இப்ப வரப்போறியா இல்ல கம்ப முறிச்சு வெளுக்கட்டுமா உனக்கு? நான் வரமாட்டன் போ போ என்றான் அவன். எடேய் நீ எங்க விளையாடுனாலும் ராவைக்கு வீட்டுக்குத்தானே வரணும் வா உனக்கு அப்ப பூச தாரன் . ஒரு வழியாக அவனும் வர எடேய் கெதியா வாடா வீட்டுக்கு விசயம் ஒன்று சொல்லுறன் என்ன சொல்லுங்கவன் ஊட்ட வா சொல்லுறன் ம் வீட்டை வந்தடைந்ததும் முதலில் வாசலில் இருந்த முருங்க கம்பை முறிச்சு நாலு அடி போட்டாள் பொன்னி அவனும் அடியாதீங்க அம்மா அடியாதீங்க அம்மா என கத்தினான் . அடேய் நாளைக்கு பொடியனுகள் ஆள் பிடிக்கப்போறாங்களாம் உங்க மாமா வந்து சொல்லிட்டு போனான். உங்கள கவனமா இருக்கட்டாம் நீ சொன்ன கேட்கமாட்டியா உங்க அப்பன தொலச்சிட்டு நான் படுற பாடு காணாத நீங்களும் போகப்போறிங்களா? அவனுகள் வேற வீட்டுக்கு ஒருவர் வந்து போராட்டத்துக்கு வாங்க என கூப்பிடுறானுகள் உங்க மாமாவ‌ அம்மம்மா காறி கொடுத்துட்டு இப்பவும் அழுது கொண்டிருக்கிறது நீங்க பார்க்கலயா? நானும் அது போல வாழ்நாள் முழுக்க அழணுமா? சொல்லு சொல்லு என கண்னைக்கசக்கினாள் பொன்னி. நீ இங்க படிக்காத கல்லடி சிவானந்தா கொஸ்டலில் படி இளையவா அண்ணா இங்க படிக்கட்டும் வீட்ட ரெண்டு பொடியனுகள் இருந்தால் விடமாட்டானுகள் எப்படியும் பிடிச்சிட்டு போயிடுவானுகள் . சொல்லுறது விளங்குதா ம்ம் அங்க உங்க அப்பாட சொந்தங்கள் எல்லாம் இருக்கு அவங்க கிட்ட போகவேணாம் போனால் எப்படியும் நாலு கத கத கதைக்கும் காது பட. நீ கொஸ்டலில இருந்து படி அப்பாவும் இல்லலெண்டால் படிக்க இடம் தருவாங்கள் நான் இங்க ஆட , மாட வச்சி இவங்களுக்கு சோறு கொடுப்பன் . உன்னை நாளைக்கு கொண்டு போய் அங்க சேர்க்கிறன் என்ன ம்ம் என்றான் இளையவன். ஆட்டம் தொடரும்
  4. நாமும் நம் பழக்க வழக்கங்களும்.. அனேகமாக நான் ஏதாவது எழுதினால் அது அப்படியே தேடுவார் இல்லாமல் கிடப்பதை பல முறை அவதானித்த படியால் தனித்து எழுத மனம் எழுவதில்லை.. ஆனாலும் சில சங்கடங்களை சந்திக்கும் போது எழுத வேண்டும் போலவும் இருக்கிறது.. எழுதுகிறேன்.. ஆண்டவன் படைப்பில் ஆண், பெண் என படைப்பில் அவை அவைக்கு ஏற்ப அவயவங்களையும் சேர்த்தே படைத்திருக்கிறார்.அதை நாம் இடம் பொருள் ஏவல் அறியாது நாகரீகமற்ற முறையில் பேபசிக்கொள்வது அவர்கள் மேல் உள்ள மதிப்பை எப்படியும் குறைத்து விடும். அதுவம் நாம் போகும் கடை தெருக்களில் பேசும் போது மிகவும் கவனமாக ஒன்றுக்கு இரண்டு தடவைகள் யோசித்து பேச வேண்டும்.. சூழ்நிலைக்கு ஏற்ப மாற்றம் வேண்டும்,மாற வேண்டும்.. நேற்று நான் ஒரு தமிழ் கடைக்கு போயிருந்தேன்.அங்கு மூன்று வாடிக்கையாளர்கள் நின்றோம்.இருவர் பெண்கள் ஒருவர ஆண்.அந்ந ஆண் முக கவசத்தை சரியாக அணியாமல் வநீதிருந்திருந்தார்.எனக்கு சற்று தள்ளி நின்ற பெண் பிள்ளை கவனித்து விட்டார் போலும்.மாஸ்க்கை சரியாக பார்த்து போடுங்கள் என்றார். சொன்னது தான் தாமதம் அந்த ஆண் நீங்கள் விட்டால் கால் சட்டைக்குள் போடடு இருப்பதையும் கழட்டி மாத்தி போடச் சொல்லுவீங்க போலிருக்கே என்று சத்தம் போட்டார்.. கொரோனாவோடு எல்லோருக்கும் ஒரு மாதிரி ஆகி விட்டது.அவ்வப்போது குடுத்தால் தான் அடங்குவார்களாம். அது உங்கள் வீட்டுப் பெண் பிள்ளையாக கூட இருக்கலாம், இல்லாமலும் போகலாம் கொஞ்சம் அனுசரிப்பு வேண்டாமா.வெளியில் கேட்பவர்களுக்கு எவ்வளவு அசௌகரியம் புரிகிறதா. கடைக்காரருக்கு எப்படி சமாளிப்பது பேச்சை என்ற மாதிரி நின்றார்.ஏன் தமிழ் மக்களே போகும் இடத்திலுமா நாம் இப்படித் தான் என்பதை காட்ட வேண்டுமா...எப்போ மாறப் போகிறோம்..???
  5. நல்லதொரு ஆதங்க கவிதை. 👍🏽
  6. இங்கே இந்தி ; அங்கே சிங்களம் .. பகிர்விற்கு நன்றி தோழர்..👌
  7. அருமையான ஒரு சிந்தனையைச் சீண்டிப் பார்க்கும் ஒரு கவிதை! புத்த பிக்குகள் காலா காலமாகக் கட்டிக் காத்த இலங்கை என்னும் தேசத்தில் கற்பு...மன்னிக்க வேண்டும் அதன் இறைமையும் தன்னாதிக்கமும் நமது கண்ணின் முன்னாலேயே காற்றில் பறக்கின்றது! இன்று சிங்களத்தின் தேசீய கொடி, நாளை புத்த பிரானின் திருவுருவம் அடுத்தவர்களின் காலில் மிதி படும் போது, பொத்திக் கொண்டு இருக்க வேண்டிய கட்டாயம் அவர்களுக்கு உள்ளது! இராவணனின் மன நிலையை ஒப்பிடுவதற்கு வார்த்தைகளைத் தேடிய கம்பன், கண்டு பிடித்த ஒப்பீடு இது தான்! கடன் பட்டார் நெஞ்சம் போலக், கலங்கினான் இலங்கை வேந்தன்!
  8. உங்கள் கருத்துக்கு மிக்க நன்றி நிழலி தணிக்கை ஒன்றை கையில் வைத்தே நகர்த்துகிறேன் வீட்டுக்கு ஒரு போராளி வந்தே ஆகவேண்டுமென்ற கட்டாயத்திலே பல இளவயது திருமணங்கள் நடந்து மட்டு மேற்கு கல்வியில் இன்று பிந்தங்கி நிற்கிறது ஆனால் அந்த ஆளணி சேர்ப்பை இங்கே குறை சொல்ல ஆட் கள் இல்லை காரணம் போராட்டம் வெல்ல வேண்டும் ஆயிரக்கணக்கான தாய்மார்கள் கண்ணீரின் வேதனையென்பது இப்பவரைக்கும் சொரிந்து கொண்டே இருக்கும் ஓர் துர்ப்பாக்கிய நிகழ்வு கருத்துக்கு நன்றி அண்ணா மட்டு தமிழ் வித்தியாசமானது யாழ்ப்பாண தமிழ் போல் அல்ல தற்போது ஆள் வீட்டுச்சுவரை கிறுக்க ஆரம்பித்துவிட்டாள் அம்மா ஆசிரியை மகள் கிறுக்கத்தொடங்கி விட்டாள் வீட்டு சுவற்றையும் நிலத்தையும் வீட்டிலிருந்து 100 மீற்றர் தொலைவில் கடல் உள்ளது அந்த மணலில் கிறுக்கி விளையாட கொண்டு செல்வதுண்டு ஆளை
  9. "சிங்கப்பூருக்கு... போனதாம் நண்டு, கால், சுளுக்கி வந்ததாம் சுண்டு." என்று... முதலாளி நினைத்ததில் தப்பில்லை, ஈழப்பிரியன்ஸ்.... 💓
  10. நயினா தீவும் நல்ல ஒரு இடம், தனி! சிலப்பதிகாரத்தில் வரும் மணிபல்லவம் என்னும் பெயருள்ள தீவும் இது தான்! கௌதம புத்தர் நயினாதீவு ஊடாகத் தான்..இலங்கைக்கு வந்தார் என்று...குறிகாட்டுவான் துறையில் எழுதியிருந்தார்கள்! அந்தக் காலத்தில்...இராமர் பாலத்தால் அவர் நடந்து வந்திருக்கும் சாத்தியங்களே அதிகம் உள்ளன! அவரைக் காரில் கொண்டு திரிந்தது போல...இப்போது புத்த பிக்குமார் சிலர் கதை விடுகின்றார்கள்! யாழ், மட்டக்களப்பு இளைஞர்களில் கைகள் குடும்பம் என்னும் கயிறு கொண்டு இறுக்கமாகக் கட்டப்பட்டுள்ளன! கையைக் கொடுத்து அவளைத் தூக்கி விடுவதுடன் கையைக் காட்டி விட வேண்டியது தான்! இப்போது கையைக் காலைக் கொஞ்சம் நீட்ட முடியும் என்று நம்புகின்றேன்!
  11. அருட்பெரும் சுடரே காணிக்கை கொண்டு வந்தேன் இறைவா கனிவுடன் ஏற்றருள்வாய் என்னிடம் உள்ளதெல்லாம் இறைவா உனக்கென தருகின்றேன் இதை ஏற்பாய் இறைவா திருப்பலிதனில் ஏற்பாய் என்னை முழுவதும் உவந்தளித்தேன் 1. மலர்கள் கொண்டு வந்தேன் மலர் போல் மணம் வீச கனிகள் கொண்டு வந்தேன் கனி போல் சுவை கொடுக்க என்னையே கொண்டு வந்தேன் - 2 ஏற்றருள்வாய் இறைவா 2. ஒளியினை கொண்டு வந்தேன் சுடராய் ஒளிவீச கரங்கள் விரித்து வந்தேன் என்னையே உமக்களிக்க அனைத்தையும் தருகின்றேன் - 2 ஏற்றருள்வாய் இறைவா
  12. காலை வணக்கங்கள் எல்லாம் வல்ல இறைவனின் அருள் பெற்று நோய் நொடியின்றி எல்லோரும் இன்புற்றிருக்க. வாழ்க வளமுடன்🙏
  13. புதிதாக வாற பேயைவிட ஏற்கனவே தெரிந்த பிசாசு பரவாயில்லை என்று முதலாளி நினைத்திருப்பார்.
  14. பலரின் ஆதங்கம் நியாயமான உங்களின் கோபத்தினூடே கவிதையில் தெறிக்கிறது கோபி......! 😎
  15. மிஷேலின் தொழிற்சாலை... சன நடமாட்டம் குறைவான, ஊரின் ஒதுக்குப் புறத்தில் இருந்தது. அந்த இடத்தில் சில தொழிற்சாலைகளைத் தவிர, வீதி அமைதியாகவே இருக்கும். வேலை ஆட்கள் எல்லோரும், காலை 7´மணிக்கு வேலை தொடங்கிய பின்... 9´மணியளவில் தான்... முதலாளி வேலைக்கு வருவார் என்பதால், தொழிற்சாலையிலிருந்து சிறிது தூரத்தில்.... அவரின் காரை மறித்து, வேலை கேட்கலாம் என முடிவெடுத்து.... 8 மணிக்கே... குறிப்பிட்ட இடத்தில் நின்ற போதும், அவனுக்கு, தான் செய்த செயலுக்கு, முதலாளி என்ன சொல்லுவாரோ... கை, கால் எல்லாம் உதறல் எடுத்தது. 🥶 வீட்டிற்கு... திரும்பிப் போய் விடலாமா என யோசித்தாலும், 🍛 "சோத்துக்கு... என்ன வழி❓" என மனதை திடப் படுத்திக் கொண்டு, வருவது வரட்டும் என நின்றான். ஆஹா... தூரத்தே முதலாளியின் கார், வீதியில் தனியே... வேறொரு வாகனமும் இல்லாமல், வந்து கொண்டிருப்பதை கண்டவுடன், கையை அசைத்து... அவரின் காரை மறித்தான். கார் நின்றது, யன்னல் கண்ணாடி இறங்கியது. 🚗 முதலாளியிடம்.... "வந்த வெள்ளம், நின்ற வெள்ளத்தை" கொண்டு போய் விட்டதென்று.. தனக்கு நடந்த சோகங்களை சொல்லி... தன்னை மீண்டும் வேலையில் சேர்க்கும் படி... கேட்ட போது, "நீ... திரும்பி வருவாய் என்று, எனக்குத் தெரியும்." ஒரு கிழமை... கழித்து, வேலையில் வந்து சேர். என்று சொல்லி விட்டு... புறப்பட்டு விட்டார். மிஷேலுக்கு... இந்த வார்த்தை, ஆறுதலாக இருந்தது. குறிப்பிட்ட நாளில்... வேலைக்கு சேர்ந்தான். மற்ற வேலை ஆட்கள், இவனது கடந்த காலத்தை பற்றி எதுகும் கேட்கமால், முன்பு போல்... சாதாரணமாக பழகியது, சந்தோசமாக இருந்தது. ஆனாலும்... மனைவியும், பிள்ளைகளும் பிரிந்து போன சோகம் அவனது மனதை... தினமும், வாட்டிக் கொண்டிருந்தது. 😢 //"விட்ட காசை, திருப்பி எடுப்பம்" என்று... அவனது 🐵 "மங்கி" புத்தி 🐒 சொன்னதால்...// சிறிய பணத்தில்... லொத்தர் போட்டுக் கொண்டிருந்தான். என்ன... ஆச்சரியம்!!!!!! அவனுக்கு... "7 மில்லியன் ஐரோ", விழுந்து விட்டது. 😮 ➡️தொ➡️ட ➡️ரு➡️ம்.....➡️ 🤣
  16. அவர்கள் நாட்டில் எந்த மொழியில் இருந்தாதான் நமக்கென்ன. தமிழ் இடங்களில் சிங்களமொழிக்கு முதலிடம் கொடுக்கும் போது தட்டிக் கேட்க வக்கில்லாத பாராளுமன்ற உறுப்பினர்கள்.
  17. இங்கு பிரபலமான பெத்தாங் என்னும் குண்டு விளையாட்டு........!
  18. இப்போதுதான் படித்தேன் நல்ல கவிதை கோபி.பாராட்டுக்கள்......! 👍
  19. இந்த கைத்தொலைபேசி இல்லாத காலத்திலும் நாம் வாழ்ந்தோம் என்று நினைக்க எனக்கே வியப்பாயுள்ளது. எப்படி ஒருவரை ஒருவர் தொடர்பு கொண்டோம்? எப்படி பயணங்களை மேற்கொண்டோம்? எப்படி காரில் றைவிங் செய்தோம்? என்ன விடயத்தை எடுத்தாலும் எம் அத்தியாவசிய தேவைகளில் ஒன்றாக இந்த தொல்லைபேசி எம்முடன் ஒன்றித்து விட்டது. ஆனாலும் அன்று ஊரில் கிணற்றடி குழாயடி இவற்றில் பரப்பப்படும் செய்கிகளை மறக்காமல் கவி வடித்த பசுவூர் கோபியின் கவிதை அருமை. நோயும் இதுதான் நோய்க்கு மருந்தும் இதுதான் என்பதுபோல் ஆகிவிட்டது இத்தொலைபேசி.
  20. வெற்றி கொடி கையில் எடு
  21. கார்த்திகை 27 மாமலை ஒன்று
  22. அழாதே அம்மா கிழக்கு வானம் சிவக்கும் கண்மூடி தூங்கும் எந்தன் தோழா
  23. நடந்து வந்த பாதை தனை
  24. எதிரிகளின் பாசறையை தேடி
  25. அன்றைய நாள் மாலை நால்வரும் சாப்பிட ஆயத்தமாகிறார்கள். பொன்னாங்கண்ணி சுண்டல், மீன்பொரியல் ,செல்வன் மீன் குழம்பு அம்மா கையால அந்த சாப்பாடுதான் கடைசி சாப்பாடு என சின்னவன் நினைத்துக்கொள்கிறான். அடுத்த நாள் காலை மூத்தவனையும் , மகளையும் பாடசாலைக்கு அனுப்பி விட்டு சின்னவனை கூட்டிக்கொண்டு களுவாஞ்சிக்குடி வந்து கல்லடியில் உள்ள பாடசாலையில் கதைத்து கொஸ்டலில் சேர்த்துவிட்டு மகன் இங்க நல்லா படி படிச்சால் படிக்கிற பிள்ளையெண்டு ஒன்றும் செய்ய மாட்டாங்கள். சரியா சரி அம்மா அடிக்கடி வாங்கம்மா இல்லாட்டி அண்ணாவையும் ,தங்கச்சியையும் கூட்டிக்கொண்டு இங்க வாங்களன் அம்மா நிம்மதியாக இருக்கலாம் தானே. இல்ல மகன் அங்கதானே எல்லாம் இருக்கு இங்க எங்க? ஆடு, மாடு வளர்க்கிற அதுகளை வளர்த்தால் தானே சோறாவது சாப்பிடலாம் நாம். அவனோ ஒன்றும் பேசாமல் இருக்கிறான் சரி மாதத்துக்கு ஒரு தடவையெண்டாலும் வாம்மா உன்ன பார்க்கணும் வரும் போது அண்ணாவையும், தங்கச்சியையும் கூட்டிக்கொண்டு வாம்மா சரி நான் போறன். நீ கவனமா இரு ரோட்டால வாகனம் அதிகம் ரோட்டு மாறுததெல்லம் கவனமா மாறு ரெண்டு பக்கமும் பார்க்கணும் சரியா ம் ம் கண்களால் கண்ணீர் சொரிய இருவரும் பிரிகிறார்கள் . அடுத்த பஸ்ஸ பிடித்து ஊர் வருகிறாள் பொன்னி இரு பிள்ளைகளும் வீட்டிலே இருக்க மூத்தவன் என்ன அம்மா ஆள விட்டாச்சோ? ஓம்டா சரியா குளறுறான்டா என்று சொன்னவளும் மன நிம்மதியான அழுகையை தொடர்கிறாள். சரி அம்மா அவன்ற நல்லதுக்குத்தானே எனச் சொல்லி மூத்தவன் பொன்னியை தேர்த்துகிறான் . சில மாதங்கள் கழிகிறது மூத்தவன் ஏ எல் பரீட்சை எழுதி முடித்துவிடுகிறான் மாட்டை மேய்க்க சென்றவன் அன்று மாலை வீடு வரவில்லை. எங்கு தேடியும் அவன் இல்லை ஒரு வழியாக அவனை பொடியங்கள் பிடித்துப்போனதாய் கேள்விப்படவே வீட்டில் பெண்பிள்ளையை விட்டு தனியே செல்ல முடியவில்லை அவளால். அடுத்தநாள் காலை பயிற்சி முகாமுக்கு செல்கிறாள். அவன் வரவும் இல்லை அவனை பிடிக்கவும் இல்லை என்றார்கள் அவர்கள் இவளோ விடுவதாயில்ல என்ற பிள்ளய கொடுங்கள் இல்லாட்டால் நான் தூங்கி சாகப்போறன் என மிரட்டியும் அவன் இங்கில்லை என்ற பதிலை மட்டுமே தந்தார்கள் . அடுத்தநாள் கல்லடிக்கு வந்து சின்னவனைக்கூட்டிக்கொண்டு சைக்கிளில் அவன் ஏற்றிக்கொண்டு அவள் தம்பி இருக்கும் முகாமுக்கு செல்கிறார்கள் (பொன்னியும் இளையவனும்). அவனோ விசாரிச்சு பார்க்கிறன் அக்கா என்று சொல்லிவிட்டு விசாரிச்சு இருக்கிறான் ஓமாம் அக்கா தரவையில தான் நின்கிறான் போல அங்க போ நான் வந்தால் வேற பிரச்சினையாகும் நீ போ கத்து , வெரட்டிப்பாரு என்று சொல்ல சைக்கிள் தரவை விரைகிறது அங்கே சென்று பார்க்கும் போது பல பிள்ளைகள் பயிற்சியில் நிற்கிறார்கள் எல்லோரும் கட்டாயமாக பிடித்து செல்லப்பட்டவர்கள் . எடேய் மூத்தவா அவள் கூப்பிட கூப்பிட்ட குரலைக்கேட்டதும் அழுகிறான் அவன். அவன விடுங்கடா என்ட பிள்ளைய தாங்கடா எனக்கு என ஒப்பாரி வைக்க‌ பொறுப்பாளரோ நான் கூட இப்படித்தான் குளறுனான் என்ற அம்மாவும் இப்படித்தானி இஞ்ச நிண்டு அழுதவ என்று சொல்ல அதான் என்ற தம்பிய தந்திருக்கனே என்ட பிள்ளய விடுங்கடா பதில் இல்லை அண்ண இஞ்ச கொஞ்சம் வாங்கள் ஓம் என்ன தம்பி அண்ண அவன விடுங்கள் நான் வாரன் போராட்டத்துக்கு உங்களோட சரியா?? அம்மா மீண்டும் விறைச்சுப்போகிறாள் குளறாதீங்க அம்மா அவனுக்கு ஒன்றும் தெரியாது அவன கூட்டிட்டு போங்க என்னை பிரிஞ்சு இருந்து பழகி இருப்பீங்க தானே அது போல நினைச்சுங்க என்றான் இளையவன் அம்மா மீண்டும் ஓலமிட்டா ஆனால் ஒன்றும் ஆகப்போவதில்லையென்பதை உணர்ந்தேன் நான் உள்ளே செல்ல அண்ணா என்னை கட்டிப்பிடித்து விட்டு அம்மாவைத்தேடி ஓடுகிறான் அம்மாவோ அவனைக்கண்டதும் தம்பிய பிடிச்சிட்டானுகளென மீண்டும் அழுகிறாள் நான் தூரம் செல்கிறேன் வீட்ட போங்கள் என சைகையால் காட்ட‌ அவர்களோ போகாமல் என்னையே பார்த்திருந்தார்கள். போய் பெயர் விலாசம் எல்லாம் பதிந்த பின் வந்து பார்க்கிறேன் அவர்களைப்போல பலரை துரத்திக்கொண்டிருந்தார்கள் பொறுப்பாளர்கள் . பொறுப்பாளர் சொன்னார் இவர்களை இங்கு வைத்திருந்தால் இவர்களை பார்க்க அவர்கள் ஒவ்வொரு நாழும் வருவார்கள் இடத்தை மாற்ற சொன்னார் அவர். இடமும் மாற்றப்பட்டது . அம்மாவுக்கு அதிக பாசம் அவனுடன் மூத்த பிள்ளையும் நல்லா படிப்பான் ஆடு , மாடுகள் கோழிகள் எல்லாவற்றையும் பொறுப்பாக பார்த்துக்கொண்டு அப்பா இல்லாமல் போனதும் குடும்பத்தை சுமந்தவனும் அவனே நானோ விளையாட்டுப்பிள்ளை. தொடரும் .

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.