Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Leaderboard

  1. குமாரசாமி

    கருத்துக்கள உறுப்பினர்கள்
    9
    Points
    46808
    Posts
  2. satan

    கருத்துக்கள உறவுகள்
    8
    Points
    10112
    Posts
  3. பெருமாள்

    கருத்துக்கள உறவுகள்
    7
    Points
    15756
    Posts
  4. suvy

    கருத்துக்கள உறவுகள்
    6
    Points
    33600
    Posts

Popular Content

Showing content with the highest reputation on 04/03/21 in all areas

  1. நீரிலும் நிலத்திலும் படு பயங்கர சக்தி கொண்ட மிருகம்.......! 😎
  2. மாலதி அதிகாலை விழித்து விட்டாள் .எழுந்து காலைக்கடனை முடித்தவள், அடுப்பை பற்ற வைத்து , தேநீருக்கான ஆயத்தங்கள் செய்தாள். அப்போது மாமியார் பசுக்களில் பால் எடுத்துக்கொண்டு பாற்செம்புடன் வந்தாள். அவர் வாடிக்கைக்காரர் இருவருக்கு போத்தலில் பாலை நிரப்பி மீதியை மாலதியுடம கொடுக்க அவள் அவற்றை காய்ச்சி குழந்தைகளுக்கும் மாமனாருக்கும் தேநீர் தயாரித்து கொடுத்தாள். தன் மாமியார் பங்கை கொடுக்கவும் அதை வாங்கி ....பருகிக்கொண்டே " மாலதி ...இன்று பட்டணம் போக வேணும் என்று சொன்னனீர். எத்தனை மணிக்கு போகவேனும். ......வரும்போது இவருக்கு ஒரு சாரமும்( லுங்கி) ..மறக்காமல் வாங்கி வாரும். என்றாள். சம்மதம் சொன்ன மாலதி உடுப்பு மாற்றி வெளிக்கிட தயாரானாள் நாலு வயது ரோகிணியும் இரண்டு வயது ரோஷானும் இவளது குழந்தைகள். அவர்களுக்கே உரிய துடுக்கு தனம் உடையவர்கள். மாமனார் பால் போத்தல்களுடன் விநியோகிப்பதற்காக புறப் பட்டார். காலை உணவை எல்லோருக்கும் கொடுத்து தனது பங்கையும் முடித்து கொண்டவள்.ஒன்பது மணி பஸ்சுக்காக புறப்படும் போது பிள்ளை களையும் அமைதிபடுத்தி "விளையாட்டு பொருட்கள் வாங்கி வர வேணும் அம்மா" என்னும் வேண்டுதல் வழியனுப்புதலோடு பஸ் தரிப்பு நோக்கி புறப்பட்டாள் . பஸ் வண்டியும் நேரத்துடன் வரவே ...அதில் ஏறி உட்கார்ந்தாள். பற்றுச்சீ ட்டை பெற்று கொண்டவள் எண்ணம் கடந்த காலத்தை நோக்கி சிறகடித்தது................. தன் பெற்றவரை மீறி மகேந்திரனை கைப்பிடித்துக் கொண்டவள் தான் மாலதி.இவள் பிறந்த வீட்டில் வசதி வாய்ப்புகளை கொண்டவள் . சற்று வசதியானவள். மகேந்திரனை காதலித்தபோது ...அந்தஸ்த்து காரணமாய் மறுக்கவே ஒருநாள் ஓடிபோய் திருமணம் செய்து கொண்டாள். அதே ஊரில் இருந்தாலும் இவளது பெற்றோரும் சகோதரார்களும் இவளை சேர்ப்பதில்லை . கைப்பிடித்த நாள் முதல் மகேந்திரனும் இவளை கண்கலங்காமல் பாதுகாத்தான். மகேந்திரன் , சாதாரண விவசாயக் குடிமகன். தாய் தந்தைக்கு ஒரே பிள்ளை . சற்று வசதி வாய்ப் புகள் குறைவு என்பதால் ஓலை வீட்டிலேயே வாழ்ந்தார்கள். இதனால் தான் மாலதி வீட்டுக் காரர் இந்த திருமணத்தை விரும்பவில்லை. தங்கள் அந்தஸ்துக்கு ஏற்ற மாதிரியில்லை என்பதால். மண முடித்து இரு குழந்தைகளும் பிறந்த பின் , தன் வாழ்வுக்காகவும் குழந்தைகளின் எதிர்காலத்துக்காகவும் பலத்த முயற்சியின் பின் வெளி நாட்டுக்கு புறப்பட்டான் . வாழ்வில் அவன் தாய் தந்தையை பிரிந்த துயரம் ...வேலையின் கடின உழைப்பு துயரை தந்தாலும் எதிர்காலத்துக்காக தாங்கி கொண்டான். மாலதி அவன் அனுப்பிய காசு வங்கியில் பெற்றுக்கொள்வதற்காக தான் பட்டணம் செல்கிறாள். புது வருடம் பிறக்க போகிறது மூத்தவள் ரோகினியை பாடசாலயில் சேர்க்க வேண்டும் ......மாமனார் ..மாமியாருக்கு துணிமணிகள் எடுக்கவேண்டும். மகன் ரோஷன் ...ஒரு மூன்று சில்லு சைக்கிள் வண்டி கேட்டுக்கொண்டிருந்தான்...........அத்தோடு இந்த பணத்தில் மகேந்திரன் போவதற்காக் பட்ட கடனுக்கும் கொஞ்சம் கட்டவேண்டும்......... வங்கிக்கு சென்று பணத்தை பெற்றவள் பெரும் பகுதியை ஒரு இறுக்கிய இணைப்பு கொண்ட கைப் பையினுள் மறைத்து வைத்தாள் மீதியில் தேவையான பொருட்களை வாங்கினாள் .இரண்டு கையிலும் பொருட்களின் சுமை . மனதில் வீடு நோக்கிய அன்புச்சுமை ...........அன்று ஏனோ வஸ் வண்டி மிகவும் ஊர்ந்து செல்வது போல் இருந்தது..வீட்டில் மாமியார் மதிய உணவை பேரப் பிள்ளைகளுக்கு ஊட்டி விட்டு, தான் உண்ணாமல் இவளுக்காக காத்திருப்பார்."அம்மா" என்று அழைத்துக்கொண்டு என் மருமகள் வருவாள் என்று பசியோடு வாசலை பார்த்து கொண்டிருப்பார் என்பது ...மனதை மெல்ல நெருடிக்கொண்டு இருந்தது . ஆம் இவள் தன் மாமியாரை " அம்மா " என்று தான் அழைப்பாள். அவரும் தனக்கு பெண் குழந்தை இல்லயே என்ற கவலை தீர்க்க வந்த இன்னொரு) மகள் என்று தான் உறவு பாராட்டுகிறார்கள். மாமி மருமகள் என்றாலும் வேற்றுமை பாராட்டுவதில்லை . .....மாலதிக்கு அவர் இன்னொரு அம்மா..... சில குடும்பங்களில் பெண்ணுக்கு பெண்களால் தான் எதிரி . எதிலும் குறை சொல்வது . பிழை பிடிப்பது மச்சாள் ( நாத்தனார் ) இருந்துவிடடால் போதும் தனது செல்வாக்கை கைப்பற்ற வந்த எதிரி என்றே எண்ணுவார்கள். அவளுக்கும் ஒரு காலம் வரும் .......நல்ல வாழ்வு வரும் . வாழ்வு வந்தால் இழந்த சொந்தங்கள் தேடி வரும். ..
  3. அப்புவிட அப்புவும்,பேரனும்..! ********************* கந்தையா அண்ணரும் காசிம் நானாவும் றம்பண்டா மல்லியும் ஒரு குடும்பமாய் திரிந்த காலம் அப்போது .. ஒருநாளும் நான் கண்டதில்லை சண்டையை.. புத்த பெருமானுக்கும் நபிகள் நாயகத்துக்கும் ஜேசு பிரானுக்கும் சித்தர் சிவனுக்கும்-மதம் பிடித்ததாய்.. அப்போது.. ஒருநாளும் நான் கண்டதில்லை சண்டையை.. கண்டியில பெரகராவும் திருக்கேதீச்சரத்தில சிவராத்திரியும் கொச்சிக்கடையில பாலன் பிறப்பும் மட்டக்களபில நோன்புப் பெருநாளும் அன்பாக நடந்ததே தவிர அப்போது.. ஒருநாளும் நான் கண்டதில்லை சண்டையை.. ஒவ்வொரு இடத்தில ஒவ்வொரு ஆலயம் கட்டி வளிபாட்டுத்தலமெல்லாம் அனைவரும் வந்து வணங்கி வளிபட்டு போனார்களே தவிர அப்போது.. ஒருநாளும் நான் கண்டதில்லை சண்டையை.. தமிழ்.. வடக்கு கிழக்கென்றும் சிங்களம்.. தெற்கு மேற்கென்றும் ஒவ்வொரு பகுதியாக பிரிந்து வாழ்ந்தாலும் ஒற்றுமையைத் தவிர அப்போது.. ஒருநாளும் நான் கண்டதில்லை சண்டையை.. இப்படி எனக்கு-என் அப்புவிட அப்பு கனவில வந்து கதை சொல்லி போனார். அப்போது நினைத்தேன் இப்போது நடப்பது அரசியல் வாதிகளும்-சில அரசடி வாதிகளும் தாம் வாழ நினைத்து. வல்லரசு சிலதோட வறுமையை காட்டி முக்குலத்தையும் முட்டி மோதவிடும் முடிவால்தான்-இன்று எங்களுக்குள்ளே இத்தனை.. சண்டையோ? எண்ணித் திகைத்து இடையில.. எழுப்பி விட்டேன். “விடியவில்லை” ஐயோ பக்கத்தில.. அழுகுரல்கள் கேட்கிறது. அன்புடன் -பசுவூர்க்கோபி- 27.03.2021
  4. உலகம் பூராவும் வயதானவர்களையும் குழந்தைகளையும் தாக்கும் முக்கியமான நோய் தாக்கங்களில் ஒன்றாக செப்சிஸும் (Sepsis) மாறி வருகிறது.. செப்சிஸ் என்பது நுண்ணுயிர் நோய் தொற்றும் அதற்கு எதிரான உடலின் வினைத்திறனாற்றலும்.. மோதிக்கொள்ளும் போது.. குறிப்பாக உடலின் நோய் எதிர்ப்பு தன்மை குறைவடையும் வேளையில்..உடல் பகுதி பகுதியாக செயலிழந்து இறப்பு ஏற்படுகிறது. செப்சிஸ் காரணமாக ஒருவர் சில மணி நேரத்தில் இருந்து சில வாரங்களுக்குள் இறப்பை சந்திக்கலாம். அதிதீவிர சிகிச்சையும் உடலின் நோய் எதிர்ப்பு வலிமையும் இதில் இருந்து மீள உதவலாம். குறிப்பாக பிறந்த குழந்தைகளிலும்.. வயதானவர்களிலும் நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக இருப்பதால்.. உடலில் உள்ள சாதாரண பக்ரீரியாக்கள் கூட உடலின் பிறபகுதிகளுக்குள் செல்வதால் கூட இந்த நிலை ஏற்படலாம். குறிப்பாக குடலில் உள்ள பக்ரீரியாக்கள்.. இரத்தத்தை அடைவதால் கூட.. அவை உடலால் அழிக்கப்படாது பல்கிப் பெருகி உடலங்கங்களை பாதித்து உயிரிழப்பை ஏற்படுத்தலாம். குறிப்பாக வயதானவர்களில்.. (60 வயதினருக்கு மேல்) நோய் எதிர்ப்பு சக்தி குன்றியவர்கள்.. நாட்பட்ட நோய் கண்டவர்கள்.. தொடர்ந்து படுக்கையில் இருக்கும் வயதானவர்கள்.. நடமாட்டம்.. உடற்பயிற்சி அற்ற நிலையில் வாழ வேண்டி உள்ள வயதானவர்கள்.. நீரிழிவு நோய் கண்டவர்கள்.. தைரொயிட் உட்பட்ட ஹார்மோன் பிரச்சனை உள்ளவர்கள்.. உடற்தசையிழப்பை கண்டு வரும் நோயாளிகள்.. விற்றமின் டி குறைபாடுள்ளவர்கள்.. போதிய உணவின்மை.. போதிய ஊட்டச்சத்தின்மை.. வைத்தியக் கவனிப்பு சரிவரயின்மை.. போதிய சுகாதார வசதிகள் இன்மை.. தனிமைப்படுத்தப்பட்ட நிலையில் வாழுதல்.. போதிய வைத்திய பரிசோதனைகள் இன்மை.. இப்படி பல காரணிகள் தனித்தோ கூட்டாகவோ.. இந்த செப்ஸிஸ் உருவாக வாய்ப்பளிக்கின்றன. செப்சிஸ் தாக்கத்தின் பொதுவான அறிகுறிகளாவன.. 1.காய்ச்சல்/ குளிரும் காய்ச்சலும் 2. உடற்சோர்வு 3.சிறுநீர் உற்பத்தி குறைவு 4.மயக்க நிலை 5. அதிகரித்த இதயத்துடிப்பு 6. வாந்தி மற்றும் பேதி 7. தோலின் நிறம் வெளிர்ப்படைதல் 8. குறை குருதி அழுத்தம் சுவாசத்தொற்று எனில் சளி.. மூச்சு விடுவதில் சிரமம்.. மூச்சடைப்பு இவையும் சேர்ந்து கொள்ளும்.. அம்மாவின் விடயத்தில்.. அவருக்கு தைரொயிட் பிரச்சனை இருந்தது உண்டு. நடமாட்டம் வீட்டுக்குள் மையப்படுத்தி தான் இருந்தது. ஆனால் தொடர் வைத்திய கண்காணிப்பு.. மற்றும் எல்லா அடிப்படை வசதிகளும் கொடுக்கப்பட்டே வந்தன. அப்போ எப்படி செப்ஸிஸ் வந்தது.. எப்படி அதனை வைத்தியர் கண்டுபிடிக்கத் தவறினார்..??! இறப்பதற்கு சில வாரங்களுக்கு முன் தோல் சம்பந்தப்பட்ட சின்னப் பாதிப்பு ஏற்பட்டிருந்தது. அதன் விளைவாக.. காய்ச்சல் ஏற்பட்டிருந்தது. ஆனால்.. இது தொடர்பாக குடும்ப வைத்தியர் வந்து காய்ச்சலுக்கு மருந்து கொடுத்துச் சென்றிருக்கிறார்.. ஆனால்.. குருதி பரிசோதனையோ.. சிறுநீர் பரிசோதனையோ செய்யவில்லை. சில நாட்களின் பின் உடல்நிலை தீவிரமாக பாதிப்பட்ட நிலையில்.. அதி தீவிர சிகிச்சை பிரிவுக்கு எடுத்துச் செல்லப்பட்ட போதும் உயிரைக் காக்க முடியவில்லை. செப்சிஸ் (Sepsis).. செப்சிஸ் தாக்கம்/ அதிர்சி (Septic shock) என்பது.. குறிப்பாக.. சுவாச பாதிப்பை அதிகம் ஏற்படுத்தும்.. அதற்கு அடுத்த படியாக.. சிறுநீரகத்தை பாதிக்கும். அதன் தொடர்ச்சியாக இதயத்தாக்கு ஏற்படும்.. மூளை செயலிழப்பு ஏற்படும். இதில் குருதி நஞ்சாதல்.. என்பது சிறுநீரக பாதிப்பின் விளைவாக ஏற்படுவதோடு.. சிறுநீர் தொற்று.. சிறுநீர் உற்பத்தி அளவு குறைவு என்பன செப்சிஸ் தாக்க விளைவுகளாகின்றன. குறிப்பாக மருந்துகளுக்கு எதிர்ப்புக்காட்டும் பக்ரீரியா வகை நுண்ணங்கள் உடலில் தொற்றாகி பெருகுவதால்.. சரியான பகுப்பாய்வுகள் செய்யப்பட்டால் அன்றி சரியான மருந்துகளை கொடுக்க வைத்தியரால் முடியாது. அந்த வகையில்.. குருதிப் பரிசோதனை மற்றும் Blood culture மற்றும்.. சிறுநீர் பரிசோதனை மற்றும் சிறுநீர் மாதிரியில் இருந்தான Urine culture என்பன செய்யப்படுதல்.. செப்சிஸ் தாக்கத்தினை இலகுவாக ஆரம்பத்தில் கண்டறிந்து கொள்ளலாம். ஆனால்.. இலங்கையில் வைத்தியர்கள்.. Blood culture மற்றும் Urine culture செய்வதை அரிதாகவே காண முடிகிறது. அதிலும் High Risk நோயாளிகளுக்கு கூட இவற்றை பரிந்துரைப்பதில்லை. அம்மா விடயத்தில் அவருக்கு காய்ச்சல் ஏற்பட்ட வேளையில்.. குருதிப் பரிசோதனை.. சிறுநீர் பரிசோதனையுடன் Urine culture மற்றும் Blood culture செய்யப்பட்டு தொற்றுக்கான நோய்க்காரணி கண்டறியப்பட்டு சரியான சிகிச்சை அளிக்கப்பட்டிருப்பின் அவரின் வாழ்நாளை நிச்சயம் அதிகரித்திருக்க முடியும். அதைவிடுத்து.. அதிதீவிர சிகிச்சைப் பிரிவுக்கு எடுத்துச் சென்ற பின்.. பரிசோதனைகளையும்.. கண்காணிப்பையும் செய்வதால் மட்டும் High Risk நோயாளிகளை பாதுகாக்கலாம் என்பது சரியான வழிமுறையாக தெரியவில்லை. உலகில் எங்கு என்றாலும் செப்சிஸ் மரணங்கள் வயதானவர்கள் மத்தியில் அதிகரித்து வரும் நிலையில்.. இந்த அனுபவப் பகிர்வு உங்களுக்கும் உதவலாம்.. என்பதால் பகிர்ந்து கொள்கிறோம். தீவிரமான உடற்தொற்று கண்டால்.. நிச்சயமாக உங்கள் வைத்தியர்.. குருதி.. சிறுநீர் பரிசோதனைகளுக்கு மேலதிகமாக.. Urine culture செய்யச் சொல்லி கோருவது.. தேவை எனின் Blood culture செய்யச் சொல்லிக் கோருவது சரியான நோயாக்கியை கண்டறியவும் சரியான மருந்துகளை கன்டறிந்து.. தெரிவு செய்து வழங்கவும்.. உதவும். இது நோயாளிகளின் சடுதியான தேவையற்ற மரணங்களை கட்டுப்படுத்த உதவும். உசாத்துணை: https://www.ncbi.nlm.nih.gov/pmc/articles/PMC3956061/ (யாழிற்கான சுய ஆக்கம்)
  5. வண பிதா வுக்கு கண்ணீரால் எழுதுகின்றேன். ********************* வண பிதாவே.. நீங்கள் பிறந்ததாலே நெடுந்தீவு தாய்க்கு மகிழ்ச்சி நீங்கள் பிறந்த மண்ணில் நாங்களும் பிறந்தோம் என்பது எங்களுக்கு மகிழ்ச்சி நீங்கள் இறைபணித்தூதராய் துறவறம் பூண்டு செய்த சேவைகள் இலங்கை மக்களுக்கே மகிழ்ச்சி தமிழ் உணர்வாளராய் தமிழை தலைநிமிர வைத்தது-உலக தமிழினத்துக்கே மகிழ்ச்சி. மனித நேயம் கலந்து.. இத்தனை மகிழ்சிகள் எமக்குத்தந்த பிதாவே இன்று(1.04.21) எமைவிட்டு பிரிந்த செய்தி அறிந்து அகிலமே கண்ணீரால் கரையுதையா. இறைவனோடு இறைவனாய் என்றும் எம்மனதில் நிலைத்திருப்பீர்கள். போய் வாருங்கள் ஆண்டகையே.🙏 அன்புடன் -பசுவூர்க்கோபி-
  6. வணக்கம் வாத்தியார்......! குக்கூ குக்கூ தாத்தா தாத்தா கல வெட்டி குக்கூ குக்கூ பொந்துல யாரு மீன்கொத்தி குக்கூ குக்கூ தண்ணியில் ஓடும் தவளைக்கி குக்கூ குக்கூ கம்பளிப்பூச்சி தங்கச்சி அல்லி மலர் கொடி அங்கதமே ஒட்டார ஒட்டார சந்தனமே முல்லை மலர் கொடி முத்தாரமே எங்கு ஊரு எங்கு ஊரு குத்தாலமே.....! ---எஞ்சாமி எஞ்சாமி--- ப த நி சுரங்கள் பருகினாலும் ச ரி ம .....ச ரி ம என்றுதான் வரும்......! 😂
  7. அருமையாக கவிதை வடிவில் நிஐத்தை சொல்லியுள்ளீர்கள், பாராட்டுக்கள்
  8. இவர்கள் எப்படி இத்தனை மகிழ்ச்சியாக இருக்கிறார்கள்? குடும்பத் தலைவன் 7 சங்கீதச் சுரங்களில் 3 மட்டும் பாடிவருவதால்! அது எந்த 3 சுரங்கள் ?? ச ரி ம !! 😂🤣
  9. நன்றிகள் பலகூறி நாம் பாடுவோம் நாளும் நமைக் காக்கும் இறை இயேசுவை (2) அல்லும் பகலிலும் செல்லும் இடமெங்கும் (2) அன்னையாய் தந்தையாய் அருகில் இருந்து அணைக்கும் தேவனை 1. கோடி துன்பம் வந்த போதும் கொடிய நோயில் வீழ்ந்த போதும் தேடி வந்து நம்மைக் காத்திட்டார் (2) வாடிய மலரைப் போல் வதங்கி வீழ்ந்தாலும் அன்னையாய் தந்தையாய் அருகில் இருந்து அணைக்கும் தேவனை 2. உலகம் நம்மை வெறுத்த போதும் கலகம் நம்மை சூழ்ந்த போதும் விலகவில்லை அன்பர் இயேசுவே (2) நிலைகள் குலைந்ததும் அலையாய் எழுகின்றார் அன்னையாய் தந்தையாய் அருகில் இருந்து அணைக்கும் தேவனை
  10. காலை வணக்கங்கள் எல்லாம் வல்ல இறைவனின் அருள் பெற்று நோய் நொடியின்றி எல்லோரும் இன்புற்றிருக்க. வாழ்க வளமுடன்🙏 கையேந்தி கேளுங்கள் இறைவனிடத்திலே
  11. நுரை போல பொங்கி வரும் அழகுத்தமிழ் சொற்களால் கவிதை பொங்கி வருகிறது உங்கள் இதயத்திலிருந்து....👍🏽
  12. ஈஸ்டர் தின வாழ்த்துக்கள்.
  13. காப்பாற்றப்பட்ட முதலையும், கையறு நிலையில் தாய் மானும்......! 🐊
  14. தூங்கி எழுந்தது போன்ற உணர்வுடன் அவன் கண்ணை விழித்து, தான் எங்கிருக்கிறேன் என்பதை உறுதிப்படுத்த முயன்ற போது தான், மிருதுவான, ஆனால் மென்மையான வெட்பத்துடன் ஒரு சோடிக் கைகள் அவனது கைகளைப் பிடித்திருந்ததை உணர்ந்தான். தலையைத் திருப்பிப் பார்க்கக் கூடிய ஒரு நிலைக்குத் தன்னை சுதாகரித்துக் கொண்டவனுக்கு, அந்தக் கைகளிலில் பச்சை குத்தியிருந்த ரோஜாப்பூக்களின் அழகு, அவனுக்கான நினைவுகளை மீட்டெடுக்கப் பிரயத்தனம் செய்தன. இந்தக் கைகளை எங்கோ பார்த்திருக்கிறேன், ரசித்திருக்கிறேன்! ரோஜாப் பூக்கள் போன்ற அந்தக் கைகளிலும் ரோஜாப்பூக்களா என வியந்தும் இருக்கிறேன் என்பதும் நினைவுகளின் சுழற்சியில் அவனுக்கு வந்து போனது. அந்தக் கைகளின் சொந்தக்காரியையோ அவளது முகத்தையோ அவன் முன்னெப்போதும் பார்க்கும் சந்தர்ப்பம் வாய்த்ததில்லை என்பது மட்டும் திடமாக அவனுக்குத் தெரிந்தது. ஆனால் அவள் எப்படி இங்கே என்பது தான் புரியாத புதிராய்... தான் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருப்பது அவனுக்கு புரிந்தது. அவனுக்கு முதுகைக் காட்டியபடி வைத்தியருடன் அவள் பேசுவதும் பல மைல் தூரத்திற்கப்பால் கேட்பது போலிருந்தது. அவள் முகம் தெரியவில்லை, பாதி மயக்கத்திலும் அவள் முகம் தேடி அவன் கண்கள் அலைந்தன. இன்று மட்டுமல்ல அவளைப் பார்க்கவென பரிதவித்த கடந்த பல மாதங்களும் மனக்கண்ணில் வந்து போயின.முதன் முதலாய் ஒரு பெண்ணின் நெருக்கத்தை தேடி அலைந்த அந்த உணர்வு அவனுக்கே ஆச்சரியமாகத்தான் இருந்தது. பாறாங்கல் ஒன்றைத் தலையில் தூக்கி வைத்திருப்பது போன்ற வலியோடு, அப்போது தான் அவனுக்கு தனக்கு என்ன நடந்திருக்கும் என்பதான கேள்வி ஒன்று எட்டிப் பார்த்தது. முழுவதும் ஞாபகம் வரவில்லை. இருந்தாலும் அவன் மிகப்பிரயத்தனப்பட்டு சில நினைவுகளை சுழியோடிப் பிடித்துக் கொண்டான். ****************************************************************************** வழமை போலவே அன்றும் விடிகாலை ஐந்தரை மணிக்கு சொல்லி வைத்தாற் போல் கீழே கதவை திறக்கும் சத்தமும் அதைத் தொடர்ந்து சில வினாடிகளில் மீண்டும் கதவை அறைந்து சாத்தும் சத்தமும் கேட்டது. தினசரி வேலைக்குப் போக முன்னே வீட்டுக்கழிவுகளைக் கட்டி வெளியேயுள்ள கழிவுப்பெட்டிக்குள் எறிந்து விட்டுப்போகும் அந்தப் பெண்ணின் முகத்தை அவன் தன் மூன்றாவது மாடியிலிருந்த அறையின் சாளரத்தினூடே மறைந்து நின்று பார்க்கும் போதெல்லாம், அவனுக்குத் தெரிந்தது அவள் கைகள் மட்டுமே. கழிவுப்பையை எறியும் போது கூட மிக நிதானமாகவும், நேர்த்தியாகவும் அவள் அதை சிரத்தையுடன் செய்வது போலிருக்கும். குளிருக்காக தன் தலையை குளிர் அங்கியால் மூடியபடி, ஒரு ரோஜாப்பூ பறந்து போவது போல மெதுவாக அவள் அந்த மென்பனியில் இன்றும் மறைந்து போனாள். கடந்த சில மாதங்களாகவே முகம் தெரியாத அந்த ரோஜாப்பூவிற்காக அவன் மனதில் இனம் புரியாத ஒரு தேடல் பரிதவிப்பாய் மாறிக்கொண்டிருந்தது. இப்போதைக்கு மூன்று பேரில் ஒருவர் வீட்டிலிருந்து வெளியே போய் விட்டது உறுதியாகியது அவனுக்கு. அடுத்த இரண்டு கதவுச் சத்தங்கள் வரும் வரை அவன் கட்டிலை விட்டு இறங்க மாட்டான். இதுவே கடந்த பல மாதங்களாக, முக்கியமாக தொற்றுப் பரவத் தொடங்கிய பேரிடர் காலத்திலிருந்து நடை பெற்று வருகிறது. மாதங்கள் கடந்ததில், ஊரடங்கிய நிலைமை வழமையானதாய் போக, தனிமையாய் இருப்பது, வழக்கமாகிப் பழக்கப்பட்டுப் போயிற்று. அது ஒரு வகையில் அவனுக்கு ஆறுதலாகவும் இருந்தது. யாரையும் முகம் பார்த்துக் கதைக்க வேண்டிய அவசியம் இல்லாமற் போயிற்று. மனிதர்களை அதுவும் புதிய மனிதர்களைச் சந்திப்பதென்பது மனதின் ஆழத்தில் ஒரு பயத்தை, ஒரு பதற்றத்தை அல்லது ஒரு இனம் தெரியாத படபடப்பை அவனுக்குத் தோற்றுவித்திருந்தது. இந்த நாட்டில் அவனுக்கென்று கைவிட்டு எண்ணக்கூடிய நண்பர்களே இன்றுவரை இருக்கிறார்கள். வேறு யாருக்கும் அவன் சக பணியாளர்களைத் தவிர அவனது இருப்பிடமோ வேறு தனிப்பட்ட விபரங்களோ தெரியாது. தெரிய வரக்கூடாது என்பதில் அவன் தன்னால் முடிந்தவரை சிரத்தை எடுத்துக் கொண்டான். அவனது அறைக்கும் வெளியே இருந்த வீதிக்குமிடையே ஒரு பத்து யார் தூரம் தான் என்றாலும், வாகனங்களின் இரைச்சல், வீதி ஓரமாக நடந்து போகும் பாதசாரிகளின் காலடிச் சத்தங்கள், சில வேளைகளில் அவர்கள் தொலைபேசியில் சத்தமாக கதைக்கும் உரையாடல்கள் என எல்லாமும் அவனுக்கு துல்லியமாக கேட்கத் தொடங்கியிருந்தன. இதற்கு முன் இவையெல்லாம் காதுக்குக் கேட்காமல் இல்லை. வழமையான சத்தங்கள் தாம், ஆனால் இப்போதெல்லாம் ஒவ்வொரு சின்னஞ்சிறு ஒலியும் வழமையை விட பிரமாண்டமாகக் கேட்பது போல் ஒரு உணர்வு. அது பிரமையாய் இருக்குமோ என்று பல தடவை யோசித்தும் பார்த்தான். எந்த முடிவுக்கும் வர முடியவில்லை. அவனது அறையோடு ஒட்டிய வீதியின் ஓரமாக ஓங்கி வளர்ந்திருந்த மரங்களில் இருந்த மரக்கிளைகளின் உறவினர்கள் விடி காலையிலேயே இதமாகப் பாடத் தொடங்கி விட்டனர். கீச்சுக் கீச்சென்ற பாடல்கள் அவனுக்கு பிடித்திருந்தாலும் அவர்களின் பாடல்களின் ஒலி ஒவ்வொரு நாளும் வர வர அதிகமாகி வருவது போலவே அவனுக்கு நினைக்கத் தோன்றியது. அவர்களின் ரீங்காரமும் சுரமும் சுருதியுமாக மிகத் தெளிவாகக் கேட்பதை அவன் ரசிக்கத் தொடங்கி ஒரு சில நிமிடங்கள் கடந்த போது மீண்டும் அவன் அறைக்கு வெளியே, கீழ்த் தட்டிலிருந்து இரண்டாவது தடவையாக கதவு திறக்கும் ஓசையும் பின் அதை அறைந்து சாத்தும் ஓசையும் கேட்டு அடங்கியது. அவன் கடிகாரத்தைப் பார்க்காமலே இப்போது மணி ஐந்தே முக்கால் என நினைத்துக் கொண்டான். ஆடாமல் அசையாமல் படுத்திருந்தால் இயற்கை உபாதைகளை வராமல் தடுக்கலாம் என்ற மனப்பக்குவமும் நாளடைவில் வந்து விட்டிருந்தது. இன்னும் ஒரேயொரு கதவுச் சத்தம் தான் மிச்சமிருந்தது. அதை ஆவலோடு எதிர்பார்த்திருந்தான். இன்னும் ஒரு பத்து நிமிடங்களுக்குள் அதுவும் கேட்டு விடும் என்ற நம்பிக்கை வீண் போகவில்லை. இரண்டாவது தட்டிலிருந்த அறைக்கதவு திறக்கப்படும் ஓசையும் அதைத் தொடர்ந்து இதோ தட தடவென்ற காலடிச் சத்தம் வீட்டின் பிரதான வெளிக் கதவை நோக்கி நகர்ந்து போவது அவன் காதுகளுக்கு மிகத் தெளிவாகக் கேட்டது . வர வர அவன் காதுகள் இரண்டும் மிகவும் தீவிரமாக வேலை பார்ப்பது போல இருப்பதை அவனால் புறம் தள்ள முடியவில்லை. அப்பாடி வீட்டிலிருந்த மூன்று மனிதர்களும் வேலைக்குப் புறப்பட்டு விட்டார்கள், இனி மதியம் தாண்டி, மாலை ஐந்து, ஆறு மணி வரையில், அவர்கள் வருவதற்கிடையில் அவனுக்குச் செய்ய வேண்டிய வேலைகள் எத்தனையோ இருந்தன. அவற்றுக்கான சிறிய நேர அட்டவணை ஒன்று அவன் அலுவலக மேசையின் சுவரில், நிறங்கள், வேலைகளின் முக்கியத்துவம் குறித்த வித்தியாசங்களைக் காட்டி நிற்க, ஓட்டப் பட்டிருந்தது. வீட்டிலிருந்து வேலை பார்க்கத் தொடங்கிய புதிதில் எதுவுமே பிடிக்காமல், மனதில் ஒட்டாமல் செயற்கைத் தனமாய் இருந்தது என்னவோ உண்மை தான். இருந்தாலும் எல்லாம் நாளடைவில் மாறத் தொடங்கியதற்கு வலுவான காரணம் என்ன என எதையும் அவனால்ச் சுட்டிக் காட்ட முடியவில்லை. ஆனால் அவனோடு மிக நெருங்கிய உறவுகள் இரண்டு திடீரெனத் தொற்று ஏற்பட்டு இறந்து போனதும், அவன் இருந்த நாட்டில் அவசர காலச் சட்டங்கள் பிறப்பிக்கப்பட்டு, எல்லோரும் வீடு அடங்கி இருக்க வேண்டி வந்ததோடும் தான் எல்லாமுமே அவனுக்குள் ஒரு மாற்றத்தைக் கொண்டு வந்திருக்க வேண்டும் என்ற கணிப்பீடு ஒன்றும் அவனுக்குள் இல்லாமல் இல்லை. முக்கியமாக அவனுடைய வேலை தொழில் நுட்பம் சார்ந்திருந்த படியினால் அவனுக்கு அவன் பணி சார்ந்த அனைத்து பட்டறிவையும் அனுபவத்தையும் ஒரு விரல் நுனியில் வைத்திருக்க முடிந்தது. எப்போதாவது சந்தேகங்கள் வந்த போது அவனுடைய குழுவில் உள்ளவர்களுக்கு குறுஞ்செய்தி அல்லது மின்னஞ்சல் அனுப்பினால் அவர்களில் ஒருவர் எப்படியாவது ஒரு பத்தே நிமிடத்தில் அந்தப் பிரச்சனைக்கு எவ்வாறு தீர்வு காண்பதென்பதை 'மாதிரிக் காணொளி வாயிலாக' (demo video) அல்லது அது குறித்த ஆவணத்தில் போய் (Google document) தேவையான மாற்றங்களைச் செய்து அனுப்பி விட்டு, தொலைபேசியில் வந்து அவனுக்கு விளக்கமும் தந்து விடுகிறார். அதைப் பற்றி நினைத்து, அதற்காக அலட்டிக் கொள்ளும் மன நிலையில் அவன் இப்போது இல்லை என்பது தான் நிஜமாகிப் போனது. இன்று அவனுக்கிருந்த வழமையான வேலைகளுடன் இன்னுமொரு புதிய அதிகப்படியான கடமை ஒன்றும் ஒட்டியிருந்தது. அம்மாவுக்கு தொலைபேச வேண்டும், அவனது குரலுக்காக ஏங்கிப் பார்த்துக் கொண்டிருப்பாள். இன்று அவனது பிறந்த நாள், ஏதோ அவளுக்குத் தான் பிறந்த நாள் போல கடந்த முறை கதைத்த போதே சொல்லி வைத்திருந்தாள். உலகில் உள்ள அம்மாக்கள் அனைவருக்கும் இது போல இருக்குமா அல்லது இவளுக்கு மட்டும் தான் அநியாயத்துக்கு இப்படி ஒரு ஏக்கமா? அம்மாவை நினைத்த போது கண்களில் இயல்பாக ஈரம் தோன்றியதை அவன் கைகள் பட்டெனத் துடைத்து விட்டன. அவள் நினைவுகள் அந்தக் குளிரின் கடுமையைக் குறைத்து தற்காலிகமாக ஒருவித வெப்பத்தை அந்த அறையில் கொண்டு வந்ததைப் போல உணர்ந்தான். அவனுக்கு அம்மா மீதிருந்த பாசத்தையும் மீறி அன்றைய பொழுதில் முடிக்க வேண்டிய வேலைகளுக்குள், இதுவும் ஒரு வேலையாக, வேலைப்பளுவை அதிகரித்த மனோநிலையானது சாதுவான எரிச்சலை ஏற்படுத்தியிருந்தது. நேர அட்டவணையில் மிகவும் நெருக்கமான இரண்டு மதிய வேளை அலுவலகக் கூட்டங்களுக்கிடையே தொலை பேச வேண்டியதையும் சிவப்பில் அடிக்கோடிட்டிருந்தான். அவனுடைய போதாத காலம், அவனுடைய பிறந்த நாள் புதன் கிழமையில் வந்து தொலைத்திருந்தது. புதன் கிழமைகளில் வழமையாக இருக்கும் அவன் சார்ந்த குழுவின் கூட்டத்தோடு அலுவலகப் பணியாளார்கள் அனைவரும் சேர்ந்து பங்கு பற்ற வேண்டிய வழமையான கூட்டமும் ஒன்று இருந்தது. பரவாயில்லை, முதலாவது கூட்டத்திற்கும் இரண்டாவது கூட்டத்திற்குமிடையே இருபத்தியைந்து நிமிட இடைவெளி இருந்தது. அந்த இடைவெளிக்குள் எப்படியும் அம்மாவுக்கு தொலைபேசி விடவேண்டும் என முடிவெடுத்துக் கொண்டான். முதல் நாள் இரவு வேலைப்பளுவினால் மின் அஞ்சல்களுக்குப் பதில் எழுவதை சற்றே ஒதுக்கி வைத்திருந்தான். அதன் விளைவு இன்று தெரிகிறது, பல்வேறு விதமான மனிதர்களின் தேவைகளும் கேள்விகளும் அவனைச் சற்றே களைப்படைய வைத்தது. பதில் அனுப்ப வேண்டிய மின் அஞ்சல்களுக்கு ஏற்றாற்போல் பதில்களை அனுப்பினான். சில மின் அஞ்சல்களுக்கு ஆவணங்கள் இணைத்து அனுப்ப வேண்டிய கட்டாயமிருந்தது. ஒவ்வொன்றையும் மிகக் கவனமாகக் கையாண்டவன், மேசைக்கு எதிரே தினசரி நேர அட்டவணையைக்குப் பக்கத்தில் இருந்த சுவர் மணிக்கூட்டைப் பார்த்ததும் ஒரு வினாடி அதிர்ந்து போனான். முதலாவது கூட்டம் தொடங்குவதற்கு இன்னும் ஐந்தே நிமிடங்கள் இருந்தன. உடனடியாக, தற்சமயம் செய்து கொண்டிருந்த மின் அஞ்சல் தொடர்பான ஆவணங்களை சேமித்து வைத்துவிட்டு, மின்னம்பல வழி (zoom meeting) கூட்டத்திற்கு தன்னை தயார்படுத்தி, அதில் அமர்ந்து கொண்ட அந்த நிமிடத்தில் கூட்டம் ஆரம்பமானது. அவன் எப்போதுமே கூட்டங்களுக்கு இணையவழியிலோ அல்லது இப்பேரிடர் காலத்தின் முன்னே நேரடி வருகைகளுக்கோ பிந்திப் போனதில்லை. அவனுக்கு அலுவலக ஊழியர்கள் மத்தியில் இதற்கென நல்லதொரு பெயர் எப்போதுமே இருந்து வருகிறது. அதைப் பேணிப் பாதுகாப்பதில் அவனுக்கொரு அலாதியான மகிழ்ச்சி மனதின் ஆழத்தில் இருப்பது அவனுக்கு மட்டுமே தெரியும். கூட்டத்தில் இருந்தவர்கள் அனைவரும் ஒரு வித ஆர்வத்துடனும் அதே சமயம் புன்னகையுடனும் இருந்தது அவனுக்கு மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது. அவர்கள் அனைவருமே அவனுடன் ஒரு அலுவலகத்தின் பணி சார்ந்து வேலை பார்ப்பவர்கள். எதிர்வரும் வாரத்தில் செய்ய வேண்டிய வேலைகளைத் திட்டமிட்டு, அவற்றை அவன் உட்பட தமது கடமைக்கான பங்கை அனுப்பியிருந்ததால் அதை எல்லோருக்கும் சமர்ப்பித்து, அதில் எதாவது மாற்றங்கள் அல்லது மேற்கொண்டு அத்துடன் இணைக்க வேண்டிய கடமைகள் ஏதாவது உண்டா எனப்பார்ப்பதே அக்கூட்டத்தின் பிரதான நோக்கமாயிருந்தது. இருந்தாலும் கூட்டம் அதிகாரபூர்வமாக ஆரம்பிப்பதற்கு முன்னர் அனைவரும் ஒருவருக்கொருவர் கை அசைத்தோ, புன்னகைத்தோ அல்லது வணக்கம் சொல்லியோ கொண்டது அவனுக்கு பெரியதொரு ஆறுதலைத் தந்தது. அவர்கள் அவனுக்குத் தெரிந்தவர்கள், அவர்களுடன் பழகுவது பாதுகாப்பானது, அவர்கள் அவனுக்கு பல வழிகளிலும் அவன் பணி சார்ந்த தொழில் நுட்பங்களை அவனுக்கு அறிமுகம் செய்து, அது தொடர்பான சிக்கல்களைக் கூட தீர்ப்பவர்கள். வாரத்தில் ஒரு முறை இப்படியாவது அவர்களைச் சந்திப்பது அவனுக்கு மனத்திருப்தி தந்தது. கூட்டம் அவனுடைய சில கருத்துக்களையும் உள்வாங்கிக் கொண்டதுடன் அது தொடர்பாக சில மாற்றங்களையும் ஏற்படுத்திக்கொண்டது. அவனும் வணக்கம் சொல்லி விடை பெற்றுக் கொண்டான். நேர அட்டவணையை நிமிர்ந்து பார்த்ததில் அவன் தன்னுடைய தனிப்பட்ட மின் அஞ்சல்களை வாசிக்காதது தெரிய வந்தது. அவசரம் அவசரமாக அந்தப் பக்கத்தை திறந்து, முக்கியமான மின் அஞ்சல் ஏதாவது வந்துள்ளதா என ஆராய்ந்தான். வீட்டின் சொந்தக்காரர் ஒரு மின் அஞ்சல் அனுப்பியிருந்தார், அதை அவசரமாகப் பிரித்தான். வழமையாக அவரிடமிருந்து வாடகைக்கான நன்றி சொல்லி ஒரு வரியில் ஒரு அஞ்சல் வரும். இது என்னவோ வித்தியாசமாக இருந்ததில் அவன் வாசிப்பதை ஆறப்போடாமல் கண்ணால் மேயத் தொடங்கினான். அன்புள்ள என்று தொடங்கி, அவனுக்கு ஒரு விடயத்தை தெரிவிப்பது நல்லது என்ற ரீதியில் கடிதம் தொடர்ந்தது. இந்த வீட்டில் சில திருத்த வேலைகள் இருப்பதால், அந்த வீட்டில் இருக்கும் மற்றைய அறைகளில் இருப்பவர்களை வீட்டை விட்டு எழுப்புவதற்கு அறிவித்தல் கொடுத்து விட்டதாகவும் குறிப்பிட்டிருந்தார். அவனது அறை நல்ல நிலையில் இருப்பதால் அவன் வெளியேற வேண்டிய அவசியம் இல்லை எனவும் அடிக்கோடிட்டு எழுதியிருந்தார். இவ்வீட்டில் இருக்கும் மற்றவர்கள் அனைவரும் அவனுக்குப் பின்னர் தான் அவ்வீட்டிற்கு குடி புகுந்திருந்தனர். அவர்களும் அவனும் எப்போதுமே சந்தித்ததில்லை. அவர்களுக்கு அவன் இந்த அறையில் இருப்பது தெரிந்திருந்தும் அவரவர் வேலையும் வீடுமாய் இருந்த இந்த பேரிடர் காலம் அவனை முற்றாக இவ்வுலகத்தில் இருந்து வெகு தூரத்தில் வைத்திருந்தது. அவன் ஒருவன் தான் அந்த வீட்டில் நம்பிக்கைக்குப் பாத்திரமான நீண்ட கால வாடகைக்காரனாயிருப்பதால் வீட்டின் உரிமையாளருக்கும் அவனுக்கும் இடையில் ஒரு நல்ல உறவு நிலவியது. அவரைப் பற்றி ஒரு சில நிமிடங்கள் சிந்தித்தவன் திடீரென ஞாபகம் வந்தவனாய், நேரத்தைப் பார்த்த போது அவனுக்குத் தூக்கி வாரிப் போட்டது! அடுத்த அலுவலக கூட்டத்திற்கு இன்னும் பதினைந்தே நிமிடங்கள் இருக்க, அந்த இடைவெளியில் அம்மாவுடன் பேசவும் சாப்பிடவும் வேண்டும் என்பதை மூளையும் வயிறும் ஞாபகப்படுத்தின. அலுவலக மேசையிலிருந்து அவசரமாய் எழுந்து, தன் அறைக் கதவில் பொருத்தப்பட்டிருந்த தொலைக்கண்ணாடியூடாக வெளியே யாராவது நடமாடும் அசைவுகள் இல்லை என்பதை உறுதி செய்த அதே வேளை அவன் காதுகளும் துல்லியமாக எந்த அரவமும் இல்லை என்பதை அடித்துக் கூறின. அவன் அப்படியிருந்தும் சத்தமின்றி கதவைத் திறந்து, இரண்டாவது தளத்தில் இருந்த சமையலறையை இரண்டே நிமிடத்துக்கும் குறைவான நேரத்தில் எட்டி, கைகளை நன்றாகக் கழுவி, குளிர் சாதனப்பெட்டியில் பதப்படுத்தி வைத்திருந்த தன் உணவை மின்கதிர் சூடாக்கியில் மூன்று நிமிடங்களில் சூடாக்கி பழையபடி தன் அறைக்குத் திரும்பிய போது கூட்டம் ஆரம்பிப்பதற்கு, இன்னும் ஐந்தே நிமிடங்கள் தான் இருந்தன. அவசர அவசரமாக உணவு வயிற்றினுள்ளே போய் பசியை அடக்கியது, ஏற்கனவே மேசையில் வைத்திருந்த தண்ணீரையும் அருந்திக் கொண்டான். இனி மாலை ஆறு மணிவரை வயிறும் மனதும் சொல்வழி கேட்டு நடக்கும் என்பது உறுதியாயிற்று அவனுக்கு. ஊரில் இப்போதே ஆறு மணிக்கு மேலாகி விட்டது, இதற்குப் பின் தொலைபேசினால் அம்மா சோர்ந்து போவாள், கவலைப்படுவாள், அழுதபடியே தூங்கி விடுவாள், அவளுக்கு அவன் தன் இருப்பைத் தக்க வைத்துக் கொள்ள, இப்பேரிடர் காலத்தில் படும்பாடுகளை புரிய வைக்க முடியாது. அப்படி அவன் முயன்றதும் கிடையாது. அவன் அம்மாவிற்கு தொலைபேசி அழைப்பை தொடர்ந்து கொடுத்தும் இணைப்பை ஏற்படுத்த முடியாது தவித்த வேளை அவனுடைய அலுவலகக் கூட்டமும் ஆரம்பித்தது. அவன் ஒரு நாளும் இல்லாதவாறு தன் காணொளி, ஒலி வாங்கி இரண்டையும் மறைத்தவாறே அம்மாவுக்கு அழைப்பை அனுப்பியவாறே இருந்தான். ஏன் அம்மா தொலைபேசி அழைப்பை இணைக்கிறாள் இல்லை என்ற யோசனை பலமாகத் தாக்கியதில் அவனுக்கு கூட்டத்தில் கவனம் செலுத்த முடியவில்லை. அம்மாவின் இணைப்புக் கிடைத்த போது அவனுக்கு சரியாகப் பேசக்கூட முடியவில்லை. அம்மாவும் அவன் அலுவலகத்தில் பலரோடு இருப்பதாகத் தெரிந்த போது, அவசர அவசரமாக அவனை வாழ்த்தி விடை பெற்றது, அவனுக்கு ஒரு விதத்தில் நிம்மதியாக இருந்தது. அலுவலகக் கூட்டம் முடிந்த கையோடு அவனுக்குத் தேவையான உணவுப் பொருட்கள் அனைத்தும் அவன் கேட்டபடியே ஒரு பல்பொருள் அங்காடியொன்றிலிருந்து வீட்டுக்கு வெளியே வந்திறங்கியிருந்தன. யாரும் பார்க்க முதலே அவற்றை எடுத்து வந்துவிட வேண்டும் என்ற துடிப்பில் சாளரத்தின் வாயிலாக, பனி படர்ந்திருந்த முன் முற்றத்தை நோட்டம் விட்டு, யாரும் இல்லை என்பதை உறுதி செய்த பின் மெதுவாக கீழ்த் தளத்திற்கு விரைந்தான். இப்படியெல்லாம் பிந்தியதற்கு அந்த ஒரு தொலைபேசி தான் காரணம் எனத் தோன்றியதில் தேவையில்லாமல் அம்மா மீது கோபம் வந்தது. முன் கதவைத் திறந்து முற்றத்திற்கு வந்து உணவுப் பெட்டிகளைத் தூக்கிய போது அவனது வலது கால் பனியில்ச் சறுக்கி அவனை நிலை குலையப் பண்ணியது மாத்திரமில்லாமல், சரிவான ஒற்றையடிப் பாதையில் அவனை வழுக்கி இழுத்துச் சென்று மதிலைக் கடந்து வெளியே தள்ளியது. மதிலின் முனையில் தலையடிபட்ட ஞாபகம் இருந்தது. அவன் தன் கைகளை அந்தப் பனிப்பாறைகளில் ஊன்றி எழும்ப எத்தனித்ததும் ஞாபகம் வந்தது, அவ்வளவு தான், அதற்கு மேல் எதுவும் நினைவில் இல்லை. ****************************************************************************** அந்த ரோஜாப்பூ இப்போது தன் முதுகை அவனுக்கு காட்டியபடியே, வைத்தியருக்கு தன் அழகான ஆங்கிலத்தில் சொல்லிக்கொண்டிருந்தது எல்லாம் மிகத் தெளிவாக அவனுக்கு கேட்கத் தொடங்கியது. "இவர் நான் இருந்த வீட்டில் தான் ஒரு அறையில் இருந்தார் என்பது எமக்கு ஒருவருக்குமே தெரிந்திருக்கவில்லை. பனியில் சறுக்கி விழுந்து, தலையில் பலமாக அடிபட்டதில் மயங்கியிருக்க வேண்டும் என்பதால் அவரது காற்சட்டைப் பையைச் சோதனை போட்டதில் தான் அவர் முகவரியைக் கண்டு பிடித்தோம். நல்ல வேளையாக சரியான நேரத்தில் அம்புலன்சில் வைத்தியசாலை வரை கொண்டு வந்து சேர்த்தாயிற்று. என்னுடைய கடமை முடிந்தது. நான் இன்றுடன் வீடு மாறிப் போகிறேன்.' அந்த ரோஜாப்பூ முகம் காட்டாமலே அவனிருந்த வைத்தியசாலை அறையிலிருந்து மிக மெல்லிய துள்ளலுடன் மறைந்து போனது. அவனால் பேச எத்தனித்தும் பேச முடியவில்லை, ஆனால் அவள் பேசுவது யாவும் தெளிவாகக் கேட்டது. அவன் கண்களில் கண்ணீருடன் அவள் காலடிச் சத்தத்தை நீண்ட நேரத்திற்கும் , பின் நீண்ட காலத்துக்கும் மிகத் துல்லியமாகக் கேட்டுக்கொண்டிருந்தான். -
  15. ஊர் வம்பும், கைபேசியும்..! ********************* அந்தக்காலம்.. நல்லதண்ணிக் கிணத்தில நாலுபேர் கூடுமிடத்தில பக்கத்து வீட்டு பழசுகள்-2 பவ்வியமாய் வந்தாலே குலநடுங்கி போகுமாம் குடும்பங்கள் எல்லாம். மூல வீட்டுப் பெட்ட முளங்காலுக்கு மேல போடுது சட்ட ஓல வீட்டுப் பொடியன் ஒருத்தியோட ஓடிட்டான். வேலைக்கு அவன் போக-வீட்ட வேறொருவன் நிக்கிறான் காலக் கொடுமையென கதிராச்சி முடிக்க முன்ன.. குப்பத்தொட்டியில ஒரு குழந்த கிடந்தது-அது பக்கத்து வீட்டு பணக்காரச் சமாச்சாரம். எண்டு தொடங்கி எல்லா வரலாறும் சொண்ட நெளிச்சு சொல்லி முடிக்குமாம் மற்றது.. கடுகளவு உண்மையை மடுவளவு பெரிதாக்கி வதந்திய பரப்பிவிட்டு வாயமூடு நமக்கேன்-ஊர் வம்பு என்று சொல்ல.. வந்த சனமெல்லாம் வாயும் காதும் வைத்து சொந்தங்களுக்குள்ளே சொறிநாயாய் கடிபட்டு வெட்டுக்குத்தில போய்-ஊரே வெடிச்சு பிளந்து உண்மை பொய் தெரியாமல் ஓராயிரம் பிரச்சனைகள். கலியாணக்குளப்பமும் கருமாரியும்-வதந்தி கதை பேச்சால் நடந்த அந்தகாலம். இன்றும் வேறு வடிவில வீட்டுக்குள்ள திரியுதாம் எச்சரிக்கை.. கையில இருக்கிற கை பேசியை நம்பிறதால் பொய் வதந்தியெல்லாம் பொட்டளமாய் கொட்டி குடுப்பத்தை குலைத்து கொடுமை நடக்கிறது. கணவனுக்கு போண் வந்தால் மனைவிக்கு தூக்கமில்லை மனைவிக்கு மெசேச் வந்தால் கணவனுக்கு வாழ்க்கையில்லை. உள்ளத்து தூய்மையில்லா உணர்வு எமக்கிருந்தால் கள்ளப் போண் வருகுதென்று கணவன் மனைவிக்கே கை பேசி மூட்டி விட்டு-பல கலவரங்கள் அது பார்க்கும். பிள்ளைகளை வழி நடத்த முதலில்.. பெற்ரோரே முடிவெடுங்கள் இல்லையேல் ஒவ்வொரு மூலையாய் உங்களைப் போல் பிள்ளைகளும். குரோதம் தவிர்த்து குடும்பத்துக்குள்ளே திறந்த மனதுடன் திறப்பின்றிப் “போணை” அனைவரும் பார்க்க அனுமதித்தாலே வதந்திகள் பயப்படும் வாழ்வே ஒளி பெறும். அன்புடன் -பசுவூர்க்கோபி- 07.03.2021
  16. பெ ண்மை எனும் நல் மனையாள் . பெண் என்பவள் ,என் தாய்க்கு பிறகு , அவளுக்கு நிகராக, என்னையும் எல்லா விதத்திலும் கரிசனை கொள்ள வந்த தாரமானவள். என் மனைவி , எனக்கானவள் . என்னை நம்பி வந்தவள். என் உயிர் தாங்கி பத்து மாதம் சுமந்து வலி தாங்கி என் மகவை பெற்றவள் . செல்வி என வாழ்ந்தவள். திருமதியானவள். தன் பெயர் மாற்றி என் பெயர் தாங்கியவள். (ஒரு சில விதிவிலக்குண்டு ) என் பசியாற்றுபவள் என் வாரிசுகளுக்கு அம்மா . என் மகனுக்கு/மகளுக்கு , அப்பா என அறிமுகம் செய்தவள்.தாலி எனும் வேலி தாங்கி எனக்காக வாழ்பவள். தன பசி மறந்து நம் பசி போக்கியவள். உதிரத்தை பாலாக்கி உணவூட்டியவள். விலையில்லாதவள் . என் தாய்க்கு மகளாக என்தந்தைக்கு மறு மகளாக (மரு மகளாக ) என் மக்களுக்கு தாயாக வாழ்ந்தவள் . ஆண்மைக்கு உயிர் கொடுத்தவள் தனக்கு நிகராக என்னையும் மக்களையும் நேசித்தவள் சபையிலே எனக்கு கெளரவம் தந்தவள் . மக்கள் பேற்றின் மூலம் உலகை உருவாக்கியவள் . என் குடும்ப நிர்வாகி , நல்ல வழி காட்டி. தாய்மையை போற்று வோம் . சகல பெண்களுக்கும் இன்றைய தினத்தில் சமர்ப்பணம். இப்படிக்கு ஆண்மை (ஆண்மக்கள் )
  17. சிறு வயதில் கனக்க கதைகள் படித்திருப்போம் கேட்டிருப்போம் ஏன் கனக்க அனுபவங்களை கதைகளாக நாமே கண்டிருப்போம் அவை சொல்லப்படும் விதமும் எம்மை வந்து சேர்ந்த விதமும் மாறுபடுவது போல கதையை அல்லது அனுபவத்தை கிரகித்தலும் மாறுபடலாம் மாறுபட்டு விடக்கூடும் ஆனால் கதையின் கருவும் அனுபவத்தின் அனுகூலமும் மாறுவதில்லை அதேநேரம் அதை நாம் கடந்து செல்வதும் கூட அல்லது கண்டும் காணதுபோவதும் போவது போல பாசாங்கு செய்வதும் கூட நடக்கும் நடந்திருக்கலாம்? சின்ன சின்னக்கதைக்குள் திருக்குறளைப்போல பெரும் புதையலும் கருவும் பாடமும் புதைந்து கிடக்கின்றன அவரவரது அனுபவங்களுக்கேற்ப ஒன்றிலிருந்து இன்னொன்றாக மாறுபடுமே அன்றைய சமூக கால நேர நிலைக்கேற்ப மாறுபடுமே தவிர புதிதாக எதையும் கண்டு பிடிப்பதில்லை என்பதைப்போன்றதே கதையும் கருவும் ஏன் இசையும் கூட. இதில் சில விடயங்களை நாம் தவிர்த்தே செல்கின்றோம் தவிர்க்கின்றோம் என்பதற்காக அவை எம்மை விட்டு வைப்பதில்லை நாமுண்டு எம் வாழ்வுண்டு என்று நாம் விலகிச்சென்றாலும் இந்த சமூகமும் அதன் கட்டுமானங்களும் எம்மை தங்களுக்குள் இழுக்காமல் விடுவதில்லை பொருளாதாரம் சார்ந்த இன்றைய உலக ஒழுங்கில்..... அப்படியொரு கதையை சொல்ல விளைகின்றேன் (எல்லோரும் தாண்டி வந்த பாதையாதலால் சிலரை குத்தக்கூடும் பலரது மனதை சாந்தப்படுத்தக்கூடும்) ஆமையும் முயலும் இந்த சின்னக்கதைக்குள் எவ்வளவு அர்த்தங்கள்?? ஆமை : தளராத முயற்ச்சி தன்னம்பிக்கை அடுத்தவரைப்பார்த்து தன்னை மாற்றாமை கல்லெறிகளின் போது பொறுமை எவருடனும் போட்டி போடாத தன்மை முயல்: ஆணவம் அதீத நம்பிக்கை சோம்பேறித்தனம் வல்லவன் என்ற மமதை அகங்காரம் தனக்கு கீழுள்ளோரை மிதித்தல் முக்கியமாக தமக்கு பிடிக்காதவரை பிரச்சினைகளுக்குள் தள்ளி விட்டு நகைத்தல்..... தொடரும்....

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.