யாழ்கள கருத்தாடல்கள் விதிமுறைகள் தெளிவாகவே உள்ளன. விதிமுறைகளை உள்வாங்கிக் கருத்துக்கள் வைப்பதும், களவிதிகளை மீறும் கருத்துக்களை உடனுக்குடன் முறைப்பாட்டு (Report) முறை மூலம் அறியத்தருவதும் கருத்துக்களத்தின் தரத்தைப் பேண உதவும்.
மட்டுறுத்துனர்கள் சகல கருத்துக்களையும் பார்த்து மட்டுறுத்துவது என்பது நடைமுறைச் சாத்தியமில்லை. அதனால் களவிதிகளை மீறும் சில கருத்துக்கள் கருத்துக்களத்தில் காணப்படலாம். இவற்றினை அகற்ற கள உறுப்பினர்கள் ஒத்துழைப்பு வழங்கவேண்டும்.
மேலும், கள உறுப்பினர்களில் சிலர் கருத்துக்கள விதிமுறைகளை சட்டைசெய்யாதும், விதிமுறைகளை மீறும் வகையில் தந்திரமாக வளைத்தும் கருத்துக்கள் வைப்பதும் அவதானிக்கப்பட்டுள்ளது.
ஆகவே, கருத்துக்கள விதிமுறைகளை மீறும் பதிவுகள் மீது மட்டுறுத்துதலும், பயனர்கள்/கள உறுப்பினர்கள் மீது இறுக்கமான நடவடிக்கைகளும், எ.கா. நிரந்தர மட்டுறுத்துனர் பார்வையில் விடப்படுவது, எடுக்கப்படும் என்பதையும் கவனத்தில்கொள்ளும்படி கேட்டுக்கொள்கின்றோம்.
மேலே உள்ள கருத்துக்கள் தொடர்பான சில விதிகள்:
கருத்துக்கள், பின்னூட்டங்கள், விமர்சனங்கள் சமூகப் பொறுப்புடனும் பண்பான முறையிலும், கண்ணியமான முறையிலும் வைக்கப்படல் வேண்டும்.
தனிநபர்களையும் அமைப்புக்களையும் தாக்கும், திட்டித் தூற்றும், புண்படுத்தும், குந்தகம் விளைவிக்கும் பாதகமான கருத்துக்கள்/பதிவுகள் முற்றாகத் தவிர்க்கப்படல் வேண்டும்.
நாடுகளின் நிர்வாகத்தில் பொறுப்பான பதவிகளில் இருப்பவர்களையும் (உதாரணம்: சனாதிபதி, பிரதமர், மந்திரிகள்), சர்வதேச நிறுவனங்களின் பொறுப்பில் இருப்பவர்களையும், உயிரோடு இருக்கும்/மறைந்த சமூகத் தலைவர்களையும், கட்சித் தலைவர்களையும், கலைஞர்களையும் (சினிமாத்துறை உள்ளடங்கலாக) ஒருமையில் விளித்தலும், அவதூறான சொற்களால் இகழ்தலும், இழிவுபடுத்தும் காணொளிகளும், மீமி படங்களும், அசைபடங்களும், போலியாக உருவாக்கப்பட்ட படங்களும், சமூகவலை இணைப்புக்களும் கண்டிப்பாகத் தவிர்க்கப்படல் வேண்டும்.
யாழ்கள விதிகள்: