Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Leaderboard

  1. Nathamuni

    கருத்துக்கள உறவுகள்
    11
    Points
    13720
    Posts
  2. தமிழ் சிறி

    கருத்துக்கள உறவுகள்
    10
    Points
    88007
    Posts
  3. ராசவன்னியன்

    கருத்துக்கள உறவுகள்
    9
    Points
    7401
    Posts
  4. அன்புத்தம்பி

    கருத்துக்கள உறவுகள்
    6
    Points
    5633
    Posts

Popular Content

Showing content with the highest reputation on 05/19/21 in all areas

  1. எல்லோரும் நலமா? அஞ்சு மாசங்கள் கழிச்சு வந்தால், ஒரு திரியிலும் எழுத முடியவில்லை..! ஒருவேளை எனக்கு வயசாகி போச்சுதா..? இல்லை, யாழுக்கு வயசு போச்சுதா..? சொல்லுங்கள்...! Admin .., சொல்லுங்கள்..!!
  2. அது வேறொன்றும் இல்லை சார்.. நீங்கள் ஒருதரம் கணனியில் பதிவை தட்டிவிட, அதே நேரம் தங்கள் வீட்டம்மணி உங்கள் தலையில் குட்ட, அந்த பயத்தில் மறுபடியும் 'விசைப்பலகையில் பொத்தானை தட்டிவிடுகிறீர்கள்..' என புரிந்துகொள்கிறேன். 😜
  3. ஒரு இன்னிங்சில் அதிகமான சிக்ஸர்கள்...... world record.......! 🏏
  4. கொரோனா பேசுகிறேன்....ஏன் மனிதா! என்னைக் கண்டு பயப்படுகிறாய் ..?நான் கிருமி அல்ல …கடவுளின் தூதுவன் ...ஆயிரமாயிரம் பட்டு பூச்சிகளைக் கொன்று பட்டாடை உடுத்தியவன் தானே நீ…ஆயிரமாயிரம் விலங்குகளை கொன்று பயணித்தவன் தானே நீ ....ஆயிரமாயிரம் மரங்களை அழித்து...நாற்காலியில் அமர்ந்து தேனீர் பருகியவன் தானே நீஆயிரமாயிரம் பறவைகளை அழித்து...தொலைபேசியில் உரையாடியவன் தானே நீஇப்போது புரிகிறதா! வலி என்றால் என்ன என்று …?பணத்துக்கு ஒரு நீதி..வீதிக்கு ஒரு சாதி. ...பெயருக்கு ஒரு வாழ்க்கை ....என வாழ்ந்தவன் தானே நீ ..இப்போது என்னை கண்டு பயந்து நடுங்கி ஓடுகிறாய் ... வானத்தை போல் பரந்த மனம் கொண்டாயா ….?நிலத்தை போல் சமமாக பிறரை நினைத்தாயா ….?நீரைப் போல் தன்னலமின்றி தாகம் தீர்த்தாயா ....?காற்றை போல் அனைத்தையும் அரவணைத்தாயா ….?நெருப்பை போல் தீயதை பொசுக்கத் துணிந்தாயா .. ...?பின் ஏன் வாழ துடிக்கிறாய் ?காற்றை மாசுபடுத்தவா ?இயற்கையை அழிக்கவா ?பூமியை கழிப்பிடமாக்கவா ?ஒன்றை மட்டும் புரிந்துகொள் ....உலகம் உனக்காக மட்டும் சுழலும் பம்பரம் அல்ல ....இந்த உண்மையை உணர்ந்தால்....கடவுளையே கண்டுபிடித்த உனக்கு ....எனக்கான மருந்தினைகக் கண்டுபிடிப்பது சிரமம் அல்ல ….அச்சம் கொள்ளாதே. ...நானே வெளியேறுவேன் ....பூமியில் உள்ள சில நல்ல உள்ளங்களுக்காக ….உலகம் நிறைந்த பிஞ்சுக் குழந்தைகளுக்காக .... ️ படித்ததில் பிடித்தது
  5. மீண்டும் காண்பது மிக்க மகிழ்ச்சி
  6. ராஜவன்னியனை.... மீண்டும் காண்பதில் மகிழ்ச்சி. 🙂
  7. தோழர், கரண்டுக்கு கடுக்காய் கொடுத்து வந்திருக்கிறார். 😁
  8. Bangalore A.R. Ramani Ammal- "Pal Manakkuthu Pazham Manakkuthu Pazhani Malaiyile" பால் மணக்குது பழம் மணக்குது பழனி மலையிலே மலையைச் சுற்றி முருகன் நாமம் எங்கும் ஒலிக்குதாம் பழனி மலையைச் சுற்றி முருகன் நாமம் எங்கும் ஒலிக்குதாம் … !!! முருகா உன்னைத் தேடி எங்கும் காணேனே அப்பப்பா முருகா உன்னைத் தேடி எங்கும் காணேனே. எங்கும் தேடி உன்னைக் காணா(து) மனமும் வாடுதே முருகா உன்னைத் தேடித் தேடி எங்கும் காணேனே தேனிருக்குது தினையிருக்குது தென் பழனியிலே தெருவைச் சுற்றி காவடி ஆட்டம் தினமும் நடக்குதாம் பால் காவடி பன்னீர் காவடி புஷ்பக் காவடியாம் சர்க்கரைக் காவடி சந்தனக் காவடி சேவல் காவடியாம் சர்ப்பக் காவடி மச்சக் காவடி புஷ்பக் காவடியாம் மலையைச் சுற்றிகாவடி ஆட்டம் தினமும் நடக்குதாம் வேலனுக்கு அரோகரா முருகனுக்கு அரோகரா கந்தனுக்கு அரோகரா… !!! அதோ வாராண்டி பழனி ஆறுமுகம் தாண்டி – அவன் போனா போராண்டி முருகன் தானா வாராண்டி வேல் இருக்குது மயில் இருக்குது விராலிமலையிலே இந்த விராலிமலையிலே … !!! மலையைச் சுற்றி மயிலினாட்டம் தினமும் நடக்குதாம் விராலி மலையைச் சுற்றி மயிலினாட்டம் தினமும் நடக்குதாம் முருகா உன்னைத் தேடி தேடி எங்கும் காணேனே… !!!
  9. English Notes | H.N.Muthiah Bhagavatar இனிமையான இசை
  10. அருள் மணக்குது | Islamic Song | Nagore Hanifa அருள் மணக்குது அறம் மணக்குது அரபு நாட்டிலே
  11. எது எதுவோ அதை அதுவாகவே விட்டு விடுங்கள் ... தயவு செய்து தமிழில் மட்டும் மாற்றி வாசித்து விடாதீர்கள்
  12. குட்டிக்கதை. ஒருத்தன் சரியான போதையில் தவறணைக்கு முன்னால் இருந்த கழிவுநீர் வாய்க்கால் அருகே விழுந்து அரற்றிக் கொண்டு கிடந்தான். எல்லோரும் அவனை வேடிக்கை பார்த்து கொண்டு கடந்து போய்க்கொண்டிருந்தனர். சிலர் அவன் எப்போது வாய்க்காலில் விழுவான் என்று ஆர்வத்துடன் பந்தயம் கட்டிப் பார்த்துக்கொண்டிருந்தனர். அப்போது அவ்வழியே வந்த ஒரு பெண் நின்று அவனது விலகிய ஆடையை சரிசெய்துவிட்டு நகரும் பொழுது அவன் அவளை விளித்து, ஏ ...குட்டி நில். இந்தா அந்த தவறணையில் எனக்கு ஒரு போத்தல் சாராயம் வாங்கித் தந்துட்டு போ என்று காசை நீட்டினான்......! குட்டியும் போ....எனக்கு வேலை இருக்கு நான் போறன் என்று சொல்ல அவன் மீண்டும் கெஞ்சிக் கேட்டான். சரியென்று குட்டியும் காசை வாங்கிக்கொண்டு தவறணைக்கு போனாள்....திரும்பி வரவில்லை.....! இவனும் காத்திருந்தபடியே கிறக்கத்தில் மயங்க சற்று நேரத்தில் சிறு தூறல் தொடங்கி மழையாகிக் கொண்டிருந்தது.......! நேரம் கடந்து செல்ல இவன் பெருமழையில் தெப்பமாக நனைந்து போனான்....வெறியும் முறிந்து விட்டது....அப்போதுதான் கொஞ்சம் நினைவு நிழலாடியது, யாரோ ஒரு குட்டியிடம் தான் சாராயம் வாங்க பணம் கொடுத்ததும் அவள் அப்படியே ஏமாத்திப் போட்டு போனதும்.......! அட .....காலையில் இந்த காசை மனிசிட்ட குடுத்திருந்தாலாவது அவள் சுடசுட நல்ல கறியும் சோறும் சமைத்து வைத்திருந்திருப்பாள்.......இந்த மழைக் குளிருக்கு மூக்கு முட்ட சாப்பிட்டுட்டு ஒரு சாறத்துக்குள்ள ரெண்டு பெரும் போர்த்துக் கொண்டு படுத்திருக்கலாம் என்று நினைத்த படியே வீட்டுக்கு வருகிறான்......! அங்கே அவன் கண்ட காட்சி அவனை அதிர்ச்சிக்குள்ளாக்கியது.....அவன் மனைவி விறாந்தையில் இருந்து உருண்டு விழுந்து முற்றத்தில் கிடக்கிறாள்.....ஆடைகள் விலகியிருக்க புடைத்திருக்கும் அழகுகளில் மழைத்துளிகள் கொட்டித் தெறிக்கின்றது..... விறாந்தையில் ஒரு போத்தல் சாராயம் வெறும் போத்தலாய் உருண்டு கிடக்கின்றது. அருகே சாப்பிட்ட இறைச்சி எலும்புகள் இறைஞ்சு கிடக்க வெறுஞ் சட்டி இருக்குது....! அவனுக்கோ அகோரப்பசி....அப்படியே அவளைத் தூக்கி வந்து விறாந்தையில் கிடத்தி விட்டு, பானைக்குள் இருந்த சோற்றை அள்ளி அந்த வெறுஞ் சட்டிக்குள் பிரட்டி சாப்பிடுகின்றான். அப்போது நினைவில் நிழலாடுகின்றது, தன்னிடம் காசு வாங்கிய குட்டியின் முகமும் தன் மனைவியின் முகமும் ஒன்றுபோல் இருக்கின்றது.......அப்போ அந்தக்குட்டி இவளா.......! அப்போதே முடிவெடுக்கிறான்.அவனுக்குள் உறங்கிக் கொண்டிருந்த அவனது இலட்சியம் கொள்கை எல்லாம் விஸ்வரூபம் எடுக்கின்றது..... இனிமேல் குடிப்பதற்கு முன் தேவையான சரக்கை முதலே வாங்கி சாறத்துக்குள் வைத்திருக்க வேண்டும். இது சத்தியம் சத்தியம் என்று.....! (வாரியார் சுவாமிகளின் தகுதிக்கு அவரின் குட்டிக் கதை அப்படித்தான் இருக்கும்.....சுவியின் ரேஞ்சுக்கு குட்டிக்கதை குட்டியும் புட்டியுமாய் இப்படித்தான் வந்து தொலைக்குது என்ன செய்ய....).
  13. ஸ்ரீமத் பாம்பன் குமரகுருதாச சுவாமிகள் அருளிய சண்முக கவசம். (அறுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்) அண்டமாய் அவனியாகி அறியொணாப் பொருள (து) ஆகித் தொண்டர்கள் குருவுமாகித் துகள் அறு தெய்வமாகி எண்திசை போற்ற நின்ற என்அருள் ஈசன் ஆன திண்திறள் சரவணத்தான் தினமும் என் சிரசைக் காக்க…(1) ஆதியாம் கயிலைச் செல்வன்அணிநெற்றி தன்னைக் காக்க தாதவிழ் கடப்பந் தாரான் தானிரு நுதலைக் காக்க சோதியாம் தணிகை ஈசன் துரிசுஇலா விழியைக் காக்க நாதனாம் கார்த்தி கேயன் நாசியை நயந்து காக்க…(2).............................
  14. Geethai Sonna Kannan Sirkazhi Govindarajan நீலமேனி கோலம் காண கண்கள் மறுக்குமோ அவன் நிமிர்ந்த தோளும் விரிந்த மார்பும் நெஞ்சம் மறக்குமோ? தீரன் வடிவும் மீசை அழகும் வெற்றி ரகசியம்
  15. களத்திற்கு நாள் கழித்து வந்தால் அப்படித்தான், பரவாயில்லை, போகட்டும்... அம்மணி. இரண்டாம் அலையால் பிப்ரவரி மாதத்தில் வந்த கொரானா தொற்றிலிருந்து முழுவதும் குணமாக 20 நாட்கள் தனிமைபடுத்திக்கொள்ள வேண்டியதாயிற்று. வருத்தம், உடல் சோர்வினால் வலுவிழப்பு, பயம், உணவு, வீட்டிலிருந்து அலுவலக வேலைகள், வாழும் நாட்டின் கடுமையான கட்டுப்பாடுகள், சட்டங்கள் என ஆளை படுத்தி எடுத்துவிட்டுதான் சென்றது. 😜 இந்த சிரம காலத்தில்தான், சக மனிதர்களின் சில அரிய(?) குணங்களையும் அறிய முடிந்தது. 🤭 சமீபத்தில்தான் தடுப்பு ஊசி போட்டுக்கொண்டேன்..!

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.