புலிகளின் மட்டக்களப்பு மாவட்ட புலநாய்வுப் பொறுப்பாளர்கலைக் கொன்றது கருணா குழுவே - ராணுவம் தெரிவிப்பு
காலம் : கருணா மட்டக்களப்பிலிருந்து விரட்டியடிக்கப்பட்ட பின்னர் ராணுவ முகாம்களில் இருந்து செயற்பட்டு வந்த காலம்
மூலம் : சிங்கள இனவாதி வோல்ட்டர் ஜயவர்தின
பிரபாகரனின் புலிகள் பிரிவுக்கும் கருணாவின் பிரிவுக்கும் இடையே கிழக்கில் தொடர்ச்சியாக இடம்பெற்று வரும் மோதல்களில் அண்மையில் புலிகளின் மட்டக்களப்பு மாவட்ட புலநாய்வுப் பொறுப்பாளரும் அவரது நெருங்கிய சகாவும் கருணாவினால் கொல்லப்பட்டுள்லதாக ராணுவத்தினர் கூறியிருக்கின்றனர்.
ராணுவத்தினர் மேலும் தகவல் தருகையில் புலிகளின் மட்டக்களப்பு மாவட்ட புலநாய்வுப் பொறுப்பாளர் பகலவன் என்றழைக்கப்படும் சிவானந்தன் முரளி மற்றும் அவரின் நெருங்கிய சகாவான வதனன் ஆகிய போராளிகள் கடந்த மே மாதம் 6 ஆம் திகதி பிற்பகல் மட்டக்களப்பின் வடமேற்கே அமைந்திருக்கும் தன்னாமுனைப் பகுதியில் கருணா குழுவினரால் சுட்டுக் கொல்லப்பட்டதாகத் தெரியவருகிறது.
ராணுவத்தினரின் தகவல்களின்படி பகலவன் பொட்டு அம்மானுடன் நேரடித் தொடர்பில் இருந்து வந்தவர் என்றும், வதனன் அவரின் நடவடிக்கைகளில் உதவிவந்தவர் என்றும் தெரியவருகிறது. மட்டக்களப்புப் பொலீஸாரின் கூற்றுப்படி இவர்களைச் சுட்டுக் கொன்ற ஆயுததாரிகள் தலைமறைவாகிவிட்டதாகவும், அவர்கள்பற்றிய தகவல்கள் தமக்குக் கிடைக்கவில்லையென்றும் கூறியிருக்கின்றனர்.
புலிகளின் இரு புலநாய்வுப் போராளிகளும் தமது மரணத்தினை மட்டக்களப்பு - வாழைச்சேனை நெடுஞ்சாலையில் மோட்டார் சைக்கிளில் பயணித்துக்கொண்டிருக்கும்போதே தழுவிக்கொண்டதாக ராணுவத்தினர் கூறுகின்றனர். ஏறாவூர் பொலீஸ் நிலையப் பொறுப்பாளர் தர்மசேன ரத்நாயக்கவின் கூற்றுப்படி கைத்துப்பாக்கியினால் சுடப்பட்ட இரு போராளிகளும் சம்பவ இடத்திலேயே மரணமடைந்ததாகத் தெரியவருகிறது.
ஆனால், புலிகளின் ஆங்கிலமூல இணையச் செய்திச் சேவை தமிழ்நெட்டோ கொல்லப்பட்ட இருபோராளிகளும் அரசியல்த் துறையினைச் சேர்ந்தவர்கள் என்றே கூறுகிறது.
தமிழ்நெட்டின் செய்தியின்படி இந்த அரசியல்த்துறைப் போராளிகள் இருவரும் ராணுவத்துடன் சேர்ந்து இயங்கும் துணைராணுவக் குழுவின் ஆயுததாரிகளால் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளதாகத் தெரிவித்திருக்கிறது.
இக்கொலைகளை தமது ஆதரவாளரான 49 வயது செல்லையா குமாரசூரியர் என்பவர் புலிகளால் கொல்லப்பட்டமைக்கான பழிவாங்கலாகவே கருணா மேற்கொண்டதாக ராணுவத்தினை நம்புகின்றனர்.
கருணா குட்ழு ஆதரவாளர் குமாரசூரியர் கொல்லப்பட்ட நாளன்று, அவரின் வீட்டிற்குச் சென்ற புலிகளின் பிஸ்ட்டல் குழுவினர் அவரது பெயரைச் சொல்லி அழைத்ததாகவும், அழைத்து 15 நிமிடங்களின் பின்னர் வீட்டிற்கு வெளியே துப்பாக்கிச் சூட்டுச் சத்தம் கேட்டதாகவும், வெளியே சென்று பார்த்தபோது குமாரசூரியர் கொல்லப்பட்டுக் கிடந்ததாகவும் அவரது மனைவி கூறியிருக்கிறார்.
தமது போராளிகள் இருவர் கொல்லப்பட்டதுபற்றி செய்திவெளியிட்ட தமிழ்நெட், அண்மையில் ஆயித்தியமலைப் பகுதியில் கருணா குழுவினராலும் ராணுவத்தாலும் கொல்லப்பட்ட தமது 7 அரசியல்த்துறைப் போராளிகள்பற்றியும், பெண்டுகல்ச்சேனைப் பகுதியில் கொல்லப்பட்ட இன்னொரு அரசியல்த்துறைப் போராளிபற்றியும் செய்திவெளியிட்டிருந்தது.
புலிகள் மீதான படுகொலைகலை ராணுவத்தினரும் கருணாவும் இணைந்தே நடத்துவதாகப் புலிகள் தெரிவித்திருக்கும் நிலையில், ராணூவமோ கருணா குழு மட்டுமே இந்த நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருவதாக தெரிவித்திருப்பது குறிப்பிடத் தக்கது.
http://www.lankaweb.com/news/items04/080504-2.html