Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Leaderboard

  1. கிருபன்

    கருத்துக்கள உறவுகள்
    10
    Points
    38778
    Posts
  2. goshan_che

    கருத்துக்கள உறவுகள்
    8
    Points
    19157
    Posts
  3. nedukkalapoovan

    கருத்துக்கள உறவுகள்
    6
    Points
    33035
    Posts
  4. Nathamuni

    கருத்துக்கள உறவுகள்
    6
    Points
    13720
    Posts

Popular Content

Showing content with the highest reputation on 07/24/21 in all areas

  1. இதைப்பற்றி போடுவோம் என நினைத்தேன்.. COVIDற்கு முன்பு அலுவலத்திற்கு போன ஒரு காலத்தில், அங்கேயும் இந்த மாதிரி rubber bandல் சிறு கடதாசி துண்டை வைத்து எறியும் நாங்கள், சிறு வயதில் செய்யாமல் விட்டிருப்போமா😎
  2. நிச்சயமாக அது தவறான பார்வைதான். அதை அவரின் பார்வை என்பதாக மட்டுமே என்னால் கருத முடியும். எனது பார்வை என்ன என்பதை மேலே சொல்லியுள்ளேன். நான் கண்ட மட்டில் போராட்ட வாழ்வு மிக கடினமானது என தெரிந்தே போனார்கள் (எல்லா இயக்கங்களுக்கும்). ஆகவே நான் மட்டும் அல்லாது ஏனையோரும் தமது பார்வையை முன் வைக்க வேண்டும். இப்படி ஒவ்வொருவரும் சாட்சியம் கொடுக்கும் போது உண்மையாக என்ன நடந்தது என்பது தானாக பதிவாகும். தவிர உங்கள் ஆதங்கம் புரிந்தாலும், அவமதிக்கும் நோக்கில் ரதி அக்கா எழுதியதாக நான் நினைக்கவில்லை. இறந்தவர்கள் அவரது சகோதர, சகோதரிகளும்தான். மிகுதியை அவரின் பதிலுக்கு விடுகிறேன்.
  3. ஒரு நற்செய்தி : அட்சயதிருதியைக்கு நகைகள் வாங்குவது அவசியமில்லை......உங்களை கடன்காரனாக்கிக் கொண்டு கோல்டுஸ்டோர்ஸ் காரரை ரோல்ஸ்ராய்ஸ் வாங்க வைக்க வேண்டாம்......! 👌
  4. நிச்சயமாக. இதனால்தான் மீள் பார்வை அவசியமாகிறது. Finding fault (குற்றம் கண்டு பிடித்தல் ) இல்லாமல் lessons learnt (பாடம் கற்றல்) தேவைப்படுகிறது. இப்படி முயற்சிகவில்கையே? எனும் போது இல்லை முயற்சிதோம். இப்படி அது முடிந்தது என்று சொல்லும் போது அடுத்த நிலைக்கு போகலாம்.
  5. இது எனது பார்வை இலங்கையில் கமெரன், மனிங், டொனமூர் சோல்பெரி என்று பல யாப்புகளை வைத்து ஆங்கியேயர்கள் படிபடியாக ஒரு அரசியலமைப்பு சோதனை களமாகவே இலங்கையை பார்த்தார்கள். இந்தியாவை போல் அன்றி இலங்கையில் மத, இன குழுக்கள் வன்முறையாக மோதவில்லை. வன்முறையான அல்ல மென்முறையான சுதந்திர போர் கூட நடக்கவில்லை. இலங்கையை Asia’s oldest democracy என்பார்கள். காராணம் 21 வயதுக்கு மேலானா அனைவருக்கும் 1931, ஆசியாவிலே முதன் முறையாக இங்குதான் வாக்குரிமை கொடுக்கப்பட்டது. கல்வியறிவும் மிகுந்து இருந்தது. சட்டம், ஒழுங்கு, நிர்வாக சேவை எல்லாம் தரமானதாக இருந்தது. இன அடிப்படையிலான அரசியல் இருந்தாலும் அது ஒரு கொலைவெறி அரசியலாக இருக்கவில்லை. எந்த தமிழ்தலைவரும், போத்துகேயர் வரும் போது நாம் தனிநாடு, ஆகவே பிரித்து கொடுங்கள் என ஜின்னா போல் கேட்கவும் இல்லை. ஆகவே, அவுஸ்ர்ரெலியா, நியூசிலாந்து போல ஒரு mature democracy யாக, இலங்கை இருக்கும் என அப்போ, ஆங்கிலேயரும், தமிழரும் எதிர்பார்த்தார்கள். அது நியாயமான எதிர்பார்ப்பும்தான். அப்படி இருந்தும் சோல்பெரி யாப்பில் சில இன ஒதுக்கலுக்கு எதிரான சரத்துகளை சேர்த்து, இராணியே நாட்டின் தலைவர் என்ற நிலையில், லண்டன் பிரிவீ கவுன்சிலே அரசியல் யாப்புக்கான நீதிமன்றம் போன்ற பாதுகாப்பு ஏற்பாடுகளை வைத்து விட்டே போனார்கள். பண்டரநாயகவுக்கு பிரதமர் ஆசை வரும் வரை எல்லாம் சுமூகமாகத்தான் (ஒப்பீட்டளவில்) போனது. இனவாதம் ஆட்சியை பெற்று தரும் என இலங்கையில் முதலில் நிறுவியவர் பண்டா. அதன் பின் நடந்தது race to the bottom தான். மாறி மாறி, யார் பெரிய இனவாதி என நிறுவ போட்டி போட, மக்களும் உள்ளதில் பெரிய இனவாதியை ஒவ்வொரு தேர்தலிலும் வெல்லவைத்தார்கள். சிங்களவர்கள் மட்டும் ஆங்கிலேயன் விட்டுப்போன சோல்பெரி யாப்பின் படி ஆட்சி செய்திருந்தால், நாடு இன்றைக்கும் சொர்க்கம்தான். ஆகவே 73 வருடங்களாக விடப்பட்ட பிழைகளுக்கு ஆங்கிலேயர்களையோ, 1948 இல் இருந்த தமிழ் தலைவர்களியோ நோவது நியாமில்லை. 48க்கு முன் பண்டாரநாயக்கவே இலங்கையை, கண்டி, கரையோரம், யாழ் என பிரித்து மூன்று சமஸ்டிகளின் ஒன்றியம் ஆக்க வேண்டும் என்ற நிலைப்பாட்டில் இருந்தார். எனவே 1948 இல் நாம் இருந்திருந்தாலும், தமிழருக்கு தனிநாடு கேட்டிருக்க மாட்டோம். பின்னாளில் இனவாதம் இப்படி கோரத்தாண்டவம் ஆடும் என்பதை அன்று யாரும் எதிர்வு கூற முடியாமலே இருந்திருக்கும். இல்லவே இல்லை. தமிழர்கள் அடிக்க தொடங்கியது 83 க்கு பிறகுதான். அதன் பிறகு கலவரமே நடக்கவில்லை. அப்படி அவர்கள் ஏன் செய்யவில்லை? அவர்களுக்கு வாக்கு அரசியலில் எதுவும் சாதிக்க முடியாது என்ற நம்பிக்கை இருந்தது. ஆகவே அவர்கள் இவர்களின் பேச்சை (உணர்சி வசப்படுத்தல்) கவனத்தில் எடாமல், தம் வழியே பயணித்தர்கள். ஓம்
  6. தாயக பள்ளி நாட்களில் சாக்கு பை மாட்டி கொண்டு குதித்து ஓடியது நினைவில் உண்டா.?
  7. சாகசம் என்றால் இதுதான்........! 🌹
  8. போராட்டம் உணர்சி வசப்பட்டதால், படுத்தியதால் ஏற்பட்டது என்பதை நான் முற்றாக மறுக்கிறேன். 1. உணர்சிவசப்படுதல் வேறு, உணர்வு உந்தல் வேறு. உணர்வில்லாதவன் ஏன் போராடப்போகிறான்? ஆகவே எல்லா போராட்டமும் உணர்வின் அடிப்படையிலேயே எழுகிறது. 2. தொடர்சியான திட்டமிட்ட கலவரங்கள். இவற்றை கலவரங்கள் என்பதே பிழை. இரு குழுக்கள் அடிபட்டால்தான் கலவரம். ஒரு குழு இன்னொரு குழுவை அரச ஆதரவோடு தாக்குவது - வேட்டை. தொடர்ந்து ஆண்டுவிழா போல தமிழர்கள் வேட்டையாடப்படார்கள். 3. திட்டமிட்ட குடியேற்றங்கள். தமிழர் நிலங்கள் கல்லோயா, மகாவலி என்று அபகரிக்கப்பட்டது. 4. மொழி வாரி அடக்குமுறை. சிங்களம் மட்டுமே தமிழர் பகுதிகளிலும் ஆட்சி மொழி என்பதன் மூலம், தமிழ் மட்டும் அல்லது தமிழும் ஆங்கிலமும் மட்டும் தெரிந்த பல்வேறு சமூக நிலைகளில் இருந்த தமிழரை ஒரிரவில் “எழுத்தறிவில்லாதவர்கள்” ஆக்கியது. 5. தமிழர் தாயகம் தவிர ஏனைய பகுதிகளில் தொழில் கூட செய்ய முடியாது என்ற நிலையை உருவாக்கியது. 6. ஆங்கிலேயர்கள் விட்டு சென்ற சோல்பெரி யாப்பு தந்த சிறுபான்மை உரிமைகள் பாதுகாப்பு சரத்தை 1ம் குடியரசு யாப்பு அகற்றியது. 7. சத்தியாகிரகங்கள் வன்முறை மூலம் கேலிக்கூத்தாக்கப்பட்டது. ஒப்பந்தங்கள் மீள, மீள கிழிக்கப்பட்டது. இப்படி தமிழர்கள் இரண்டாம் தர பிரஜைகளாக, கெளரவம் குறைவதாக, அழித்தொழிக்க படப்போகிறோம் என்று அச்ச உணர்வு வருவதாகவே வட்டு கோட்டை தீர்மானத்துக்கு முந்திய காலம் இருந்தது. தரப்படுத்தல் ஒன்றை தவிர போராட்டம் ஆரம்பிக்க கால்கோலிய அத்தனை காரணங்களிலும் தமிழர் பக்கம் 100% நியாயம் இருந்தது. Survival instinct என்பார்கள். திருப்பி அடி, அல்லது அழிக்கப்படுவாய் என்ற உணர்வே அப்போ இருந்தது. அழியப்போகிறோம் என்ற நிலையில், அகிம்சை வழியில் ஏதும் செய்யமுடியாது என்ற நிலை வந்த பின்பே போது போராட்டம் எழுந்தது. மேலே சொன்னது போல கூட்டணி உணர்சிவசப்படுத்தியது உண்மை. ஆனால் இயக்க தலைவர்கள் எவரும் இந்த உணர்சி வசத்தால் போராட வரவில்லை. நான் அறிந்தவரை தலைவரோ, ஏனைய இயக்க தலைவர்களோ உணர்சி வசப்படும் பேர்வழிகள் அல்ல. தவிரவும் வெகு விரைவிலேயே எல்லா இயக்க தலைமகளும் கூட்டணி உசுப்பேத்துவதை தவிர எதையும் செய்யாது என்பதை கண்டு, கூட்டணியின் உண்ணாவிரதத்தை கலைப்பது போன்ற செயல்களில் ஈடுபட தொடங்கியும் விட்டார்கள். மாணவர் பேரவை, தலைவர், தியாகி சிவகுமாரன் போன்றோர் தனியாக அல்லது சிறு குழுவுடன், புரட்சிகர சிந்தனையாளர்கள் இன்னொரு புறம் - தீர்க்கமான பார்வையோடுதான் போராட்டத்தை தொடங்கினார்கள். உசுப்பேத்தல், உணர்சி வசப்படுத்தல் நிச்சயம் இருந்தது. ஆனால் போராட்டம் உருவாக பெரிதும் காரணமானது, அநியாயம் நடக்கிறது, போராடாவிட்டால் அழிந்து போவோம் என்ற பய/எச்சரிக்கை உணர்வுதான். இந்திரா காந்தி இலங்கையில் நடப்பது nothing less than genocide என்று பேசியுள்ளார். இந்தியா படைகளை அனுப்பியது. இணை அனுசரனை நாடுகள் என ஜி7 இல் உள்ள பெரும்பாலான நாடுகள் கவனம் செலுத்தின. கொழும்பு வருபவர்கள் வன்னிக்கு போய் கை நனைக்காமல் திரும்பாத காலம் ஒன்று இருந்தது. நோர்வே மத்தியஸ்தம் செய்தது. தேவையான அளவு சர்வதேச கவனத்தை போராட்டம் ஈர்த்தது அதற்கு ஒரு காரணம் அதன் பின்னால் இருந்த நியாயம். ஓம் எல்லாருக்கும் எந்த நேரமும் அடங்க மறுக்க கூடாது என்பதை நான் ஒரு பாடமாக கருதுகிறேன்.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.