Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Leaderboard

  1. குமாரசாமி

    கருத்துக்கள உறுப்பினர்கள்
    11
    Points
    46808
    Posts
  2. goshan_che

    கருத்துக்கள உறவுகள்
    8
    Points
    19152
    Posts
  3. உடையார்

    கருத்துக்கள உறவுகள்
    4
    Points
    23926
    Posts
  4. விசுகு

    கருத்துக்கள உறவுகள்
    4
    Points
    34974
    Posts

Popular Content

Showing content with the highest reputation on 08/28/21 in all areas

  1. எம் நினைவுகளின் என்றும் நின்றகலாத நேசத்துக்குரிய மருத்துவப்போராளி லெப்டினன்ட் கேணல் கமலினி, கேணல் லக்ஸ்மன் அண்ணனின் மனைவி. முள்ளிவாய்க்கால் பகுதியில் அமைந்திருந்த வைத்தியசாலையில் கடமையின் போது வீரமரணத்தை தழுவிக்கொண்டார். ->Credit: Facebook
  2. கேள்வி : கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்கத்திற்கான கமிஷன் தனது விசாரணைகளின் முடிவில் சில விடயங்களைச் செய்யுமாறு பரிந்துரை செய்திருந்தது. ஆனால், அப்பரிந்துரைகளை நீங்கள் அங்கம் வகித்த முன்னைய அரசாங்கம் செய்யத் தவறியது ஏன்? கருணா : ஆம், அது ஒரு நல்ல திட்டம்தான், அதில் பல அருமையான விடயங்கள் கூறப்பட்டிருந்தன. ஆனால், துரதிஷ்ட்டவசமாக எவருமே அதனைச் செயற்படுத்த விரும்பவில்லை. தென்னாபிரிக்காவில் நடத்தப்பட்ட உண்மைகளைக் கண்டறியும் கமிஷனுக்கு நிகராக இதனைக் குறிப்பிட முடியும். நாம் அரசில் அமைச்சராக இருந்தபொழுது தென்னாபிரிக்காவுக்குச் சென்று இந்த கமிஷன் தொடர்பான கலந்துரையாடல்களிலும், ஆராய்ச்சியிலும் ஈடுபட்டிருந்தேன். அங்கும்கூட காணாமலாக்கப்பட்டவர்கள் தொடர்பான சிக்கல் ஒன்று இருந்தது. அங்கு 22,000 பேர் காணாமலக்கப்பட்டதாக கமிஷனிடம் தெரிவிக்கப்பட்டது. கமிஷனின் முடிவில் இவர்கள் அனைவருமே கொல்லப்பட்டு விட்டதாக அரசு அறிவித்து, அவர்களுக்கான நட்ட ஈட்டினையும் வழங்கியது. அதன் பின்னர் எவருமே காணாமலாக்கப்பட்டவர்கள் பற்றிப் பேசவில்லை. அதே செயன்முறையினைத்தான் நாமும் இங்கு செய்யவேண்டும். கேள்வி : ஆனால், தமிழர்கள் காணாமலாக்கப்பட்டவர்கள் தொடர்பாக விசாரிப்பதற்கு சர்வதேச விசாரணை அமைப்பொன்று தேவையென்று கோரிவருகிறார்களே, இது தொடர்பாக உங்களின் நிலைப்பாடு என்ன? கருணா : நிச்சயமாக இல்லை. சர்வதேச விசாரணை அமைப்பொன்று இங்கு வந்தால் அது தேவையற்ற பல பிரச்சினைகளை உருவாக்கிவிடும் என்று நாம் நிச்சயமாக நம்புகிறேன். சர்வதேச விசாரணைகள் என்று வரும்போது யுத்தத்தில் ஈடுபட்ட இரு தரப்பினரும் விசாரிக்கப்படவேண்டும். ஆனால், இரத்தம் தோய்ந்த கடந்த 30 ஆண்டுகால கொடிய போரிலிருந்து மீண்டுவரும் தெற்கின் சிங்கள மக்களும் வடக்கின் தமிழர்களும் தற்போதுதான் சகோதரர்கள் போல மீளவும் நெருங்கி வருகிறார்கள். இந்த நிலையில் சர்வதேச விசாரணை என்பது தெற்கின் மக்களை வெறுப்பேற்றும் நடவடிக்கையாக அமைவதோடு, இன நல்லிணக்கத்தினையும் முற்றாகப் பாதித்து விடும். இலங்கையில் இடம்பெற்ற யுத்தம் ஒரு உள்நாட்டு விவகாரமாகும். எங்களின் பிரச்சினைகளைத் தீர்த்துக்கொள்ள எங்களுக்குத் தெரியும், இதற்கு வெளியார் தலையீடு எதுவும் தேவையில்லை. எமக்கு வெளிநாட்டு உதவிகள் நிச்சயம் தேவை, ஆனால் எமது போர்க்குற்றங்களை விசாரிக்கவோ அல்லது காணாமலாக்கப்பட்டவர்கள் தொடர்பான விசாரணைக்கோ வெளியாரின் உதவியினை நாம் ஒருபோதும் அனுமதிக்கப்போவதில்லை. எமது எதிர்ப்பினையும் மீறி சர்வதேசம் ஒரு விசாரனையினை ஆரம்பித்தால், அவர்கள் போரில் ஈடுபட்ட இரு தரப்பினரான புலிகளையும், ராணுவத்தினரையும் விசாரிப்பது அவசியம். இன்று நாம் புலிகளை முற்றாக அழித்துவிட்ட நிலையில், அவர்கள் புரிந்த போர்க்குற்றங்களை விசாரித்து தண்டனை வழங்குவது எப்படிச் சாத்தியம்? ஆகவே இது இலங்கை ராணுவத்தினரை மட்டும் இலக்குவைத்து தண்டிக்க ஏற்படுத்தப்படும் ஒரு சர்வதேச சதியென்றுதானே தெளிவாகிறது? அவர்கள் போரின் இறுதிக்காலத்தில் புரியப்பட்ட போர்க்குற்றங்கள் பற்றி மட்டுமே பேசுகிறார்கள். அப்படியானால் அதற்கு முன்னர் புரியப்பட்ட போர்க்குற்றங்கள் பற்றி என்ன செய்யப்போகிறார்கள்? அவைபற்றியும் விசாரித்து தண்டிக்கப்போகிறார்களா? சிங்கள ராணுவத்தை மட்டுமே தண்டிப்பதுதான் இவர்களின் நோக்கமா? இது தெற்கில் பாரிய அதிர்வலைகளை ஏற்படுத்தப்போவது இவர்களுக்குத் தெரியாதா? அப்படியானால், பயங்கரவாதப்புலிகளுக்காக இன்று குரல் கொடுத்துவரும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு புலிகள் செய்த போர்க்குற்றங்களுக்காகத் தண்டிக்கப்படட்டும், அப்போது இருபக்கமும் சமமாகப் பார்க்கப்படும் வாய்ப்புக் கிடைத்துவிடும். கேள்வி : முன்னாள்ப் புலிப் போராளிகளைக்கொண்டு தன்னைக் கொல்வதற்கான சதி நடப்பதாக தேசியக் கூட்டமைப்பின் உறுப்பினர் சுமந்திரன் அவர்கள் கூறியிருக்கிறார்கள், இதுபாற்றி உங்களின் நிலைப்பாடு என்ன? கருணா : அவரது குற்றச்சாட்டு ஆதாரமற்றது என்பதுடன், போலியானது என்பதுதான் எனது நிலைப்பாடு. வடக்குத் தமிழர்கள் அவர்மீது கடுமையான அதிருப்தியில் இருப்பதால் தனது பாதுகாப்பைப் பலப்படுத்தவே இவ்வாறான போலியான குற்றச்சாட்டுக்களை அவர் முன்வைத்துவருகிறார். கொழும்பில் பிறந்து வளர்ந்த அவருக்கு வடக்கின் மக்களின் பிரச்சினைகள் குறித்து எதுவுமே தெரியாது. அவர் வடக்கில் இன்று பாரிய பிரச்சினகளை உருவாக்கிவருவதால், அவர்மீது வடக்குத் தமிழர்கள் கடுமையான அதிருப்தி கொண்டிருக்கிறார்கள். பலமான பாதுகாப்பு ஏற்பாடுகள் இன்றி அவரால் இன்று வடக்கிற்குச் செல்வதை நினைத்துக் கூடப்பார்க்கமுடியாது. புணர்வாழ்வளிக்கப்பட்ட முன்னாள்ப் போராளிகளை தனது சுய லாபத்திற்காக அவர் பகடைக் காய்களாகப் பாவிப்பது துரதிஷ்ட்டவசமானது. அப்பாவிகளான அவர்கள், இன்றுவரை தமது வாழ்விற்காக அல்லற்பட்டு வருகின்றார்கள். இதுவரை 6 முன்னாள்ப் போராளிகள் கைதுசெய்யப்பட்டிருக்கிறார்கள். வன்முறையினைக் கைவிட்டு சகஜவாழ்விற்குத் திரும்பியிருக்கும் இவ்வாறான பல முன்னாள்ப் போராளிகளின் வாழ்வும் சுமந்திரன் போன்றவர்களால் கடுமையாகப் பாதிக்கப்பட்டிருக்கிறது.
  3. கேள்வி : உங்களின் தாய்க்கட்சி சுதந்திரக் கட்சியாக இருக்கும் நிலையில் நீங்கள் மீண்டும் அக்கட்சியில் இணைந்துகொள்ளும் வாய்ப்புக்கள் இருக்கின்றனவா? கருணா : சுதந்திரக் கட்சியுடன் எனக்கு எந்தச் சிக்கலும் இல்லை, இன்னும் சொல்லப்போனால் அக்கட்சிக்காக நான் பெரிதும் பாடுபட்டிருக்கிறேன். கிழக்கில் 30 வருடங்களுக்குப் பின்னர் என்னால்த்தான் சுதந்திரக் கட்சிக்கென்று அலுவலகமும் அரசியல் வேலைப்பாடுகாளும் ஆரம்பிக்கப்பட்டன. பிரபாகரன் உயிருடன் இருக்கும்போதே நான் துணிவாக இதனைச் செய்தேன். வேறு எவராலும் பிரபாகரனை எதிர்த்து இவ்வாறான துணிச்சலான நிலைப்பாட்டினை எடுத்திருக்க முடியாது. சுதந்திரக் கட்சி அரசுக்கான மக்கள் ஆதரவை கிழக்கில் வளர்த்து, தெற்கின் தேசியக் கட்சியொன்று தமிழர் பகுதிகளில் காலூன்றமுடியாது எனும் நிலையினை உடைத்து, அக்கட்சிக்கு வாக்குகளைச் சேகரித்துக் கொடுத்திருக்கிறேன். நான் எனது பொதுக் கட்சியை ஆரம்பித்ததன் நோக்கம் தமிழர்களுக்காகப் பேசுவதற்காகவே. நாம் எவருக்கெதிராகவும் அரசியல் செய்யப்போவதில்லை. தமிழ்த் தேசியம் எனும் மாயைக்குள் வீழ்ந்திருக்கும் தமிழர்களின் மனங்களை மாற்றி பலமான அரசியல் தலைமைத்துவம் ஒன்றினை நான் வழங்குவதன் மூலம் அவர்களின் பிரச்சினைகளுக்குத் தீர்வு காண்பதே எனது நோக்கம். அப்பாவித்தமிழர்களை தமிழ்த் தேசியத்தினுள் இழுத்து வைத்திருக்கும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் அரசியலைத் தோற்கடிப்பதே எனது நோக்கம். இதற்கு நல்ல உதாரணம்தான் வடக்கு மாகாண முதலமைச்சர் விக்னேஸ்வரன். கொழும்பில் வாழ்ந்த மிதவாதியான அவர் வடமாகாணத்தின் முதலமைச்சர் ஆகி இன்று இனவாதம் கக்கி வருகிறார். தன்னை ஒரு கதாநாயகனாக தமிழர்கள் முன் நிலைநிறுத்தப் பார்க்கிறார். அவர் முதலமைச்சராக வந்தபொழுது வடக்குத் தமிழர்கள் தமது பிரச்சினைகளை அவர் தீர்த்துவைப்பார் என்று நம்பியிருந்தனர். ஆனால், அதில் அவர் தோல்வி கண்டிருப்பதோடு, பல சந்தர்ப்பங்களையும் தவறவிட்டு விட்டார். இன்று அவர் வேறொரு வழியில் பயணிக்கிறார். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் அரசியலில் இருந்து அவர் விலகிச் செல்வதுபோலத் தெரிகிறது. ஆனால், அரசுக்கு முண்டுகொடுத்துவரும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக் கூட இன்றுவரை தமிழர்களுக்கு எதனையுமே செய்யவில்லை. கேள்வி : கிழக்கில் பிரச்சாரத்தில் ஈடுபட்டுவரும் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு காணாமலாக்கப்பட்ட தமிழர்கள் தொடர்பான விசாரணைகளை ஆரம்பிக்கவேண்டும் என்று கோரிக்கை வைத்து வருகின்றனர். இவ்வாறு காணாமலாக்கப்பட்டவர்கள் என்று கூட்டமைப்பு கூறிவருபவர்கள் பற்றி உங்களின் நிலைப்பாடு என்ன ? கருணா : காணாமலாக்கப்பட்டவர்களுக்கான விசாரணை, ராணுவத்தால் ஆக்கிரமிக்கப்பட்டிருக்கும் தமிழர்களின் காணிகளை விடுவிப்பது தொடர்பான அவர்களின் கோரிக்கைகளை ஓரளவிற்கு ஏற்றுக்கொண்டாலும்கூட, அவர்கள் அதனை முன்வைக்கும் விதத்தினை நிச்சயமாக ஏற்றுக்கொள்ள முடியாது. அவர்கள் தமது அரசியல் லாபத்திற்காக அப்பாவிகளின் உணர்வுகளுடன் விளையாடுகிறார்கள். பல்லாண்டுகளாக காணாமலாக்கப்பட்ட தமது சொந்தங்களைத் தேடித்தாருங்கள் என்று இன்றுவரை ஏங்கிவரும் எவருமே கூட்டமைப்பின் இந்த போலியான அரசியல் பரப்புரைகளுக்கு இலகுவாக உள்வாங்கப்பட்டு விடுவார்கள். கூட்டமைப்பு அண்மையில்கிழக்கில் நடத்திய எழுக தமிழ் நிகழ்வில் அப்பாவித்தமிழர்களின் உணர்வுகளைப் பாவித்து அரசியல் ஆதாயம் தேடிவருவது தெரிகிறது. எந்த அரசாங்கம் ஆட்சியில் இருந்தாலும் காணாமலாக்கப்பட்ட தமிழர்கள் தொடர்பான நிலைப்பாட்டினை உண்மையுடன் தெரிவிக்க வேண்டும். ஒரு அரசியல் கட்சியொன்று தனது லாபத்திற்காக இந்த காணாமலாக்கப்பட்ட தமிழர்கள் இன்றுவரை ராணுவத்தால் ஏதோவொரு தடைமுகாமில் அடைத்துவைக்கப்பட்டிருக்கிறார்கள் என்று குற்றஞ்சாட்டி வருகிறது. இதனை எவராவது ஏற்றுக்கொள்வார்களா? இவ்வாறு இவர்களால் கூறப்படும் ரகசிய தடுப்புமுகாம்கள் அம்பாந்த்தோட்டையிலோ அல்லது அநுராதபுரத்திலோ நடத்தப்பட்டு வந்தால் அவை இன்றுவரை வெளியுலகிற்குத் தெரியாமல்ப் போனது எப்படி? அமெரிக்கா தனது செய்மதிகளைப் பாவித்து முழு நாட்டினையும் சல்லடைபோட்டு வைத்திருக்கும்போது, இம்முகாம்களை நாங்கள் நடத்துவது சாத்தியமா? காணாமலாக்கப்பட்ட தமிழர்களை அடைத்துவைத்திருப்பதாகக் கூறப்படும் இம்மாதிரியான ரகசிய முகாம்கள் இலங்கையில் எங்கும் நடத்தப்படவில்லை என்பதை என்னால் அதிகாரபூர்வமாகக் கூறமுடியும். உண்மையைச் சொல்லவேண்டிய காலம் வந்துவிட்டது, அவ்வாறு காணாமலாக்கப்பட்டவர்கள் எல்லோருமே கொல்லப்பட்டு விட்டார்கள், இதில் மறைப்பதற்கு எதுவுமேயில்லை. காணாமலாக்கப்பட்டுக் கொல்லப்பட்டவர்கள் அனைவருக்கும் அரசாங்கம் நட்ட ஈடு வழங்கவேண்டும். அவர்களுக்கான இறுதி வணக்கத்தினை அவர்களின் குடும்பங்கள் இனிச் செய்ய வேண்டும். காணாமலாக்கப்பட்டவர்களை தேடும் கமிஷனை ஆரம்பிப்பதால் எதுவுமே நடக்கப்போவதில்லை, இதனால் யாருக்கும் லாபம் இல்லை. எனது சகோதரர் கூட காணாமல்ப்போயிருந்தார். புலிப்பயங்கரவாதிகளால் கொல்லப்பட்டுவிட்ட அவர் மீண்டும் வருவார் என்று எதிர்பார்க்கவேண்டாம் என்று நான் எனது தாயாரிடம் கூறிவிட்டேன். அவருக்கான இறுதி மரியாதையினை நாங்கள் செலுத்திவிட்டோம். அவரது உடலினை நாம் இதுவரையில் கண்டுபிடிக்காததால், அவரையும் காணமாலாக்கப்பட்டோர் பட்டியலில் சேர்த்துவிட்டோம். ஆனால், நான் எனது தாயாரிடம் அதுபற்றித் தெளிவாகக் கூறிவிட்டேன். உண்மையினைச் சொல்லவேண்டிய காலம் வந்துவிட்டது என்பதை நான் ஆழமாக நம்புகிறேன். பலருக்கு இது கடிணமாக இருக்கலாம், ஆனால் அவர்கள் அனைவருமே கொல்லப்பட்டு விட்டார்கள் என்பதே கசப்பான உண்மையாகும். புலிப்பயங்கரவாதிகள் ஆனையிறவு முகாமைத் தாக்கியபோது பல ராணுவ வீரர்கள் கொல்லப்பட்டார்கள். கொல்லப்பட்ட ராணுவ வீரர்களை பொறுப்பெடுக்குமாறு புலிப்பயங்கரவாதிகள் அரசாங்கத்தினைக் கேட்டபோது, அரசு உடனடியாக மறுத்துவிட்டது. பெருமளவில் கொல்லப்பட்ட ராணுவ வீரர்களைப் பொறுப்பெடுத்து அவர்களின் குடும்பங்களுக்கு அனுப்பும்போது பாரியளவிலான பதற்றமும், அச்ச நிலையும் தோன்றலாம் என்று அரசு அஞ்சியது. ஆகவே கிளிநொச்சியைச் சேர்ந்த பொதுமக்களும் புலிப்பயங்கரவாதிகளும் கொல்லப்பட்ட பலநூறு ராணுவ வீரர்களை தாங்களே அடக்கம் செய்தார்கள். இவ்வாறு கொல்லப்பட்ட ராணுவ வீரர்கள் கூட காணமலாக்கப்பட்டவர்களின் பட்டியலில் சேர்க்கப்பட்டிருக்கலாம். தமிழர்கள் மட்டுமல்லாமல் ராணுவ வீரர்களும், புலிகளால் கொல்லப்பட்ட அப்பாவிச் சிங்களக் குடியேற்றவாசிகளும் கூட காணமலாக்கப்பட்ட பட்டியலில் சேர்க்கப்பட்டிருக்கிறார்கள். இவர்கள் அனைவரும் கொல்லப்பட்டுவிட்டார்கள் என்கிற உண்மை அவர்களின் சொந்தங்களுக்கு உறுதியாகத் தெரிவிக்கப்பட வேண்டும்.
  4. ---- தலிபான் ரோக்குத்தர்--- வேளைக்கு மருந்து எடுக்கல என்டா துவக்கால மண்டைய பொளந்துடுவன்..😊
  5. மாவீரர்களுக்கு வீரவணக்கங்கள் https://eelapparavaikal.com/ஆவணி-மாதம்-27-ம்-திகதி-வீரச்/
  6. மாவீரர்களுக்கு வீரவணக்கங்கள் https://eelapparavaikal.com/ஆவணி-மாதம்-25-ம்-திகதி-வீரச்/
  7. உண்மை தோழர் , தனி திறக்க பஞ்சி .. (ctrl + a , ctrl + c, ctrl +v ) 😢 அகழ்வாராய்ச்சி செய்திகள் தினமும் நிறைய வருகிறது .. மொத்தமாக இங்கே கொண்டு வந்து இணைக்கிறேன். நன்றி.👌 மூலம் .. https://tamil.gizbot.com/news/11th-century-chola-era-stone-oil-press-found-in-vengalam-village-near-perambalur-district-030616.html
  8. கேள்வி : உங்களின் புதிய கட்சி பற்றி விபரமாகச் சொல்ல முடியுமா? கருணா : நான் தமிழர் ஐக்கிய சுதந்திர முன்னணியினை ஆரம்பித்ததன் ஒரே நோக்கம் மிதவாத அரசியலைச் செய்வதுதான். கிழக்கில் இன்று பெரும்பான்மையினராக இருக்கும் சிங்கள மக்களும் எனது கட்சியில் இணைந்து இனிச் செயலாற்றமுடியும். முஸ்லீம்களும் எனது கட்சியில் இணைந்து பயணிக்கமுடியும். எனது கட்சி வெறுமனே கிழக்கு மாகாணத்திற்கோ அல்லது வட கிழக்கு மாகாணங்களுக்கோ மட்டுமே சொந்தமான கட்சியல்ல, மாறாக இந்த நாட்டு மக்கள் அனைவருக்கும் சொந்தமான தேசியக் கட்சி. நான் பிராந்திய, மாகாண அரசியல் செய்வதற்காக இதனை ஆரம்பிக்கவில்லை. கேள்வி : வடக்கில் இதுவரையில் தீர்க்கப்படாத மிகப்பெரிய பிரச்சினை எதுவென்று நீங்கள் கருதுகிறீர்கள்? கருணா: வடக்கில் புலிகளாலும் பின்னர் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினராலும் மூளைச்சலவைச் செய்யப்பட்டு இன்றுவரை இனவாதம் பேசும் தமிழர்களின் மனோநிலையினை மாற்றுவதே எம்முன் உள்ள மிகப்பெரிய சிக்கலாக நான் பார்க்கிறேன். வடக்கும் கிழக்கும் இணைந்த பிரதேசம் தமது பூர்வீக தாயகம் எனும் போலியான கற்பனைக்குள் அவர்கள் வாழவைக்கப்பட்டிருக்கிறார்கள். முன்னர் இந்த இரு மாகாணங்களும் இணைக்கப்பட்டபோதும் ஜே வி பியினரின் நீதிமன்ற முயற்சியின்மூலம் அவை மீண்டும் பிரிக்கப்பட்டு விட்டன. கிழக்கில் வாழும் தமிழர்கள் வடக்குத் தமிழர்களுடன் இணையவே விரும்புகிறார்கள். ஆனால், வடக்கும் கிழக்கும் இணைக்கப்பட்டால் தமது சனத்தொகை வீதம் வெகுவாகக் குறைக்கப்படும் என்று கிழக்கு முஸ்லீம்கள் அஞ்சுகிறார்கள். சமஷ்ட்டி முறையிலான தீர்வொன்றே எதிர்காலத்தில் தேவைப்படும் என்று நாம் நம்புகிறேன். இலங்கை 80 வீதம் சிங்களவர்களையும் 20% வீதம் தமிழ்பேசும் தமிழர்களையும் முஸ்லீம்களையும் கொண்ட நாடு. சிங்களவர்களின் ஆதரவு இல்லாமலும், விருப்பம் இல்லாமலும் நாம் வடக்குக் கிழக்கு மாகாணங்களை இணைக்கலாம் என்று கனவு காணக்கூடாது. தமிழர்கள் இன்னொரு போருக்கு இனிமேல் ஒருபோதும் தயாரில்லை என்பதை நாம் சிங்களவர்களுக்கு சரியான வழியில் விளங்கப்படுத்தவேண்டும். கேள்வி : வடக்கில் இருக்கும் இதுவரை தீர்க்கப்படாத ஏனைய பிரச்சினைகள் என்ன? கருணா: வடக்கிலும் கிழக்கிலும் வாழும் தமிழர்கள் கடந்த 30 வருடகாலப் போரில் சொல்லொணாத் துயரங்களை அனுபவித்து விட்டார்கள். புதிதாகப் பிறக்கும் குழந்தைகள் போர்ச்சூழலினுள் பிறப்பதால் அவர்களுக்கு ஜனநாயகம் பற்றிய எந்தவிதமான பார்வையும் இல்லை. யுத்தக் காயங்களை ஆற்றுவதற்கு சரியான நல்லிணக்க முயற்சிகள் அவசியம். கேள்வி : கடந்த அரசாங்கத்திலும், தற்போதைய அரசாங்கத்திலும் மீளிணக்கம் என்பதே பெரும் பேசுபொருளாக இருந்துவருகிறது. இனிமேலும் இது தொடர்பாக நாம் செய்வதற்கு என்னவிருக்கிறது என்று நினைக்கிறீர்கள்? கருணா : மீளிணக்கச் செயற்பாடுகள் மிகவும் துரிதகதியில் நடந்துவருகின்றன. இரு அரசாங்கங்களுமே திறம்படச் செயலாற்றித்தான் வருகின்றன. மகிந்த ராஜபக்ஷவின் ஆட்சியில் நான் மிகுந்த அர்ப்பணிப்புடன் நல்லிணக்க முயற்சிகளில் ஈடுபட்டு வந்தேன். புலிகள் அமைப்பு தமிழர்கள் சிங்கள மொழியினைக் கற்றுக்கொள்வதை முற்றாகவே தடைசெய்து வைத்திருந்தது. துரதிஷ்ட்டவசமாக தமிழரில் ஒரு தரப்பினர் இன்னமும் சிங்களம் கற்பதை எதிர்த்தே வருகின்றனர். பல ஐரோப்பிய நாடுகலில் தொழில்வாய்ப்புகளுக்காக ஜேர்மன் மொழியினையோ பிரெஞ்சு மொழியினையோ அவர்கள் மறுபேச்சின்றிக் கற்றுக்கொள்கிறார்கள். என்னைப்பொறுத்தவரை நல்லிணக்க முயற்சிகள் திறம்பட நடப்பதற்கு தமிழர்கள் சிங்கள மொழியினையும், சிங்களவர்கள் தமிழ்மொழியினையும் கற்றுக்கொள்வதன்மூலம் இனங்களுக்கிடையே ஒற்றுமையினை உருவாக்கலாம் என்று நம்புகிறேன். மகிந்தவின் கடந்த ஆட்சியின்போது சுமார் 12000 முன்னாள்ப் புலிப் போராளிகளுக்கு புணர்வாழ்வு அளிக்கப்பட்டது. அவர்களுக்கு தொழில் ரீதியிலான பயிற்சிகள் வழங்கப்பட்டு, தொழில்முயற்சிகளுக்கு ஊக்கம் அளிக்கப்பட்டது. அவர்களில் பலருக்கு தாம் தவறவிட்ட கல்வியினைத் தொடரவும் வாய்ப்புகள் ஏற்படுத்திக் கொடுக்கப்பட்டது. இன்று அவர்கள் அமைதியான மக்களாக விளங்குவதோடு, வன்முறைகளுக்கெதிரான போராட்டத்தையும் முன்னெடுத்துச் செல்கிறார்கள். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு புலிப் பயங்கரவாதிகளுக்காக எப்போதுமே முதலைக் கண்ணீரைச் சிந்திக்கொண்டுதான் இருக்கும். புலிகளின் இனவாதக் கோட்பாடுகளை ஆதரித்துக்கொண்டும், மூன்னாள்ப் போராளிகள் ஜனநாயக அரசியலில் ஈடுபடுவதையும் அது எதிர்த்துக்கொண்டுதான் இருக்கும். ஆனால், முன்னாள்ப் போராளிகளின் அரசியல் வருகை பாராட்டப்படவேண்டிய ஒன்று. இவர்களை முன்னாள் அரசுத்தலைவர் மகிந்தவின் கைக்கூலிகள் என்று கூட்டமைப்பு கூறினாலும், அதனை நாம் பொருட்படுத்தத் தேவையில்லை. கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தன் முன்னாள்ப் போராளிகளை வெளிப்படையாக நிராகரித்திருக்கிறார். ஆனால், எனது கட்சியில் அவர்கள் எப்போதும் இணையலாம், அவர்களின் ஜனநாயக அரசியலுக்கான எனது ஆதரவு என்றும் அவர்களுக்குக் கிடைக்கும். மக்கள் விடுதலை முன்னணியினரே இலங்கையில் வன்முறைக் கலாசாரத்தை முதன்முதலில் ஆரம்பித்தவர்கள். ஆனால், இன்றைக்கு அவர்கள் ஜனநாயக நீரோட்டத்தில் இணைந்துவிட்டார்கள். அப்படியானால் முன்னாள் புலிப் போராளிகள் அரசியலில் இணைவதில் என்ன பிரச்சினை இருக்கிறது? கூட்டமைப்பில் இருக்கும் சில அரசியல்வாதிகள் கூட முன்னாள்ப் போராளிகள்தான், அப்படியிருக்கும்போது முன்னாள்ப் புலிப் போராளிகள் இணைவதில் என்ன தவறு இருக்கிறது. அடுத்த முக்கியமான பிரச்சினை என்னவென்றால், யுத்தத்தில் தமது கணவன்மாரை இழந்த விதவைகளுக்கான உதவி. சுமார் 85,000 குடும்பங்கள் குடும்பத் தலைவியினாலேயே கொண்டுநடத்தப்படுகின்றன. இவர்களுக்கான சிறப்பு நடவடிக்கைகளை நாம் ஆரம்பிக்க வேண்டும்.
  9. மாவீரர்களுக்கு வீரவணக்கங்கள் https://eelapparavaikal.com/ஆவணி-மாதம்-22-ம்-திகதி-வீரச்/
  10. தமிழர் வரலாறு: கீழடி உள்ளிட்ட பல இடங்களில் தோண்ட தோண்ட கிடைக்கும் பழந்தமிழர் பொருட்கள் - விரிவான தகவல்கள் முரளிதரன் காசிவிஸ்வநாதன் பிபிசி தமிழ் 31 ஜூலை 2021, 01:19 GMT புதுப்பிக்கப்பட்டது ஒரு மணி நேரத்துக்கு முன்னர் பட மூலாதாரம்,DEPARTMENT OF ARCHAEOLOGY, TAMILNADU படக்குறிப்பு, கீழடியில் 104 செ.மீ. ஆழத்தில் கிடைத்த அரிவாள். தமிழ்நாட்டின் பல இடங்களில் மாநில தொல்லியல் துறை ஆய்வுகளை செய்துவருகிறது. நீண்ட வாள், வெள்ளிக்காசு, முதுமக்கள் தாழி என புதைந்துகிடந்த வரலாற்றின் எச்சங்கள் மாநிலத்தின் பல இடங்களிலிருந்தும் மேலெழ ஆரம்பித்துள்ளன. 2015ஆம் ஆண்டில் மதுரைக்கு அருகில் உள்ள கீழடியில் நடந்த அகழாய்வில் பெரும் கட்டடத் தொகுதிகள் கண்டுபிடிக்கப்பட்டதையடுத்து, தமிழ்நாட்டின் தொல்லியல் வரலாறு மற்றும் அகழாய்வுப் பணிகள் மீதான ஆர்வம் வெகுவாக அதிகரித்தது. ஆனால், கீழடி அகழாய்வை நடத்திவந்த இந்தியத் தொல்லியல் துறை, மூன்றாம் கட்ட அகழாய்வுகளுக்குப் பிறகு, தமிழ்நாட்டில் வேறு அகழாய்வுகளை நடத்தவில்லை. நடத்தப்பட்ட அகழாய்வின் முடிவுகளையும் வெளியிடவில்லை. பட மூலாதாரம்,DEPARTMENT OF ARCHAEOLOGY, TAMILNADU படக்குறிப்பு, கிருஷ்ணகிரி மாவட்டம் மயிலாடும் பாறையில் கிடைத்த பானை. இதற்குப் பிறகு எழுந்த கோரிக்கைகளால், நான்காம், ஐந்தாம், ஆறாம் கட்ட அகழாய்வுகளை மாநிலத் தொல்லியல் துறையே நடத்தி முடித்தது. இதற்குப் பின் கீழடியில் ஏழாம் கட்ட அகழாய்வை நடத்த முடிவுசெய்தபோது, கீழடி மட்டுமல்லாமல் ஆதிச்சநல்லூர், சிவகளை உள்ளிட்ட தமிழ்நாட்டின் தொல்லியல் முக்கியத்துவம் வாய்ந்த வேறு பல இடங்களிலும் அகழாய்வுகளை நடத்த மாநில தொல்லியல் துறை முடிவெடுத்தது. கீழடி அகழாய்வில் மகத பேரரசு காலத்தைச் சேர்ந்த வெள்ளிக் காசு 'தமிழ்ப் பொண்ணுக்கு' பிறகு கீழடியில் கிடைத்த சுடுமண் விலங்கு பொம்மை கடந்த ஆண்டே கீழடி மட்டுமல்லாமல், அதன் அருகில் உள்ள சில ஊர்களிலும் அகழாய்வு நடத்தப்பட்டது. அதன்படி கீழடி தொகுப்பு (கீழடி, அகரம், கொந்தகை, மணலூர்), ஆதிச்சநல்லூர், கொற்கை, கங்கை கொண்ட சோழபுரம், கொடுமணல், மயிலாடும்பாறை ஆகிய ஏழு இடங்களில் அகழாய்வுப் பணிகள் தீவிரமாக நடந்து வருகின்றன. மார்ச் மாதத்தில் துவங்கிய அகழாய்வு கொரோனா ஊரடங்கு காரணமாக மே 10ஆம் தேதி நிறுத்தப்பட்டது. ஊரடங்கு காலகட்டம் முடிந்த பிறகு, ஜூன் மாத இறுதியில் இருந்து மீண்டும் அகழாய்வுப் பணிகள் நடந்துவருகின்றன. மழைக் காலம் துவங்குவதற்கு முன்பாக அகழாய்வுப் பணிகள் நிறைவடைய வேண்டும் என்பதால் தற்போது பணிகள் தீவிரமடைந்துள்ளன. கீழடியைப் பொறுத்தவரை தொடர்ந்து தொல்லியல் பொருட்கள் கிடைத்துவரும் பகுதியாக இருந்து வருகிறது. 2019 -20ல் நடந்த அகழாய்வில் 25க்கும் மேற்பட்ட தாழிகள் உட்பட பல தொல்லியல் பொருட்களும் கலைப் பொருட்களும் கிடைத்தன. பட மூலாதாரம்,DEPARTMENT OF ARCHAEOLOGY, TAMILNADU படக்குறிப்பு, கீழடிக்கு அருகில் உள்ள அகரத்தில் கிடைத்த மட்பாண்டங்கள் இந்த முறை நடந்த அகழாய்வில் பல மணிகள், பானை ஓடுகள், கூரை ஓடுகள் போன்றவை கிடைத்திருக்கின்றன. இங்குள்ள தரைகள் செங்கல் கற்களால் அமைக்கப்பட்டிருக்கின்றன. இரு கற்களை இணைக்க களிமண்ணும் சுண்ணாம்பும் பயன்படுத்தப்பட்டிருக்கிறது. அகரம் தளத்தில் நடந்த அகழாய்வில் சில நாட்களுக்கு முன்பாக சுடுமண்ணால் ஆன அடையாளம் தெரியாத ஒரு விலங்கின் உடல் பாகத்தின் உருவ பொம்மை கிடைத்தது. பத்து சென்டிமீட்டர் அலகமும் நான்கு சென்டிமீட்டர் உயரமும் கொண்ட அந்த பொம்மை எந்த விலங்கைக் குறிக்கிறது என்பது தெளிவாக தெரியவில்லை. மேலும் இதே அகரம் பகுதியில் 17ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த வீரராயன் காசுகளும் கிடைத்தன. இந்த ஏழாம் கட்ட அகழாய்வில் அகரத்தில் மட்டும் விலங்கு உருவ பொம்மை, சுடுமண்ணால் ஆன பெண் முகம், செம்பு நாணயங்கள், புகைப்போக்கி குழாய் உள்ளிட்ட 200க்கும் மேற்பட்ட பொருட்கள் கிடைத்துள்ளன. கண்ணாடி, யானை தந்தம், சங்கு ஆகியவற்றால் ஆண அணிகலன்களும் அதிக எண்ணிக்கையில் கிடைத்துள்ளன. ஆதிச்சநல்லூர் ஆதிச்சநல்லூரில் அலெக்ஸாண்டர் ரீ ஆய்வு நடத்திய புதைமேடு சுமார் 114 ஏக்கர் பரப்பளவுடையது. அந்தப் பகுதி தற்போது பாதுகாக்கப்பட்ட பகுதியாக அறிவிக்கப்பட்டுள்ளது. அங்கு ஆய்வுகள் நடத்த அனுமதியில்லை. ஆகவே அதற்கு அருகில் உள்ள பகுதியில் ஆய்வு நடத்த மாநில தொல்லியல் துறை அனுமதி பெற்றுள்ளது. ஆதிச்சநல்லூர் புதைமேடு என்பது இறந்தவர்களை அடக்கம் செய்யும் இடமாகப் பயன்படுத்தப்பட்டுவந்த பகுதி. இதற்கு அருகில் மக்கள் வசித்த இடமாக கருதக்கூடிய பகுதியில் ஆய்வை நடத்த தொல்லியல் துறை விரும்பியது. அதில் பெரும்பகுதியில் மத்திய கால ஏரி ஒன்று இருக்கிறது. ஆகவே அருகில் உள்ள கிராமத்தில் அகழாய்வு நடந்துவருகிறது. பட மூலாதாரம்,DEPARTMENT OF ARCHAEOLOGY, TAMILNADU படக்குறிப்பு, கீழடிக்கு அருகில் உள்ள அகரத்தில் கிடைத்த தங்கக் கம்பி. இங்கு இரண்டு மீட்டர் ஆழத்தில் பல பானை ஓடுகள் கிடைக்க ஆரம்பித்துள்ளன. ஆனால், அருகிலேயே ஏரி உள்ளதால், அகழாய்வுப் பள்ளங்களில் தெளிவாக பண்பாட்டு அடுக்குகளை அடையாளம் காண்பதில் சிரமம் இருக்கிறது. ஆதிச்சநல்லூரில் வாள், வேறு சில இரும்புப் பொருட்கள் கிடைத்தாலும் அலெக்ஸாண்டர் ரீயின் ஆய்வில் கிடைத்த அளவுக்கு பொருட்கள் கிடைக்கவில்லை. சிவகளை ஆதிச்சநல்லூருக்கு அருகில் உள்ள சிவகளையும் ஈமத் தாழிகள் புதைக்கப்பட்ட இடம்தான். இதுவும் ஆதிச்சநல்லூரும் தொடக்க இரும்பு காலத்தை அதாவது கி.மு. 8 முதல் கி.மு. 9 வரையிலான காலகட்டத்தைச் சேர்ந்தவை. ஆதிச்சநல்லூரையும் சிவகளையையும் ஒரே நிலப்பகுதியாகவும் கருத முடியும். இந்த சிவகளை புதைமேடு கிட்டத்தட்ட ஆயிரம் ஏக்கருக்குப் பரந்து கிடக்கிறது. இந்த அளவுக்கு மிகப் பெரிய புதைமேடு இருக்கிறதென்றால், அதற்கு அருகில் உள்ள பராக்கிரமபாண்டிய புரம், மூலக்கரை போன்ற பகுதிகளில் மனிதர்கள் வாழ்ந்த இடங்கள் இருக்கலாம் எனக் கருதப்படுகிறது. சிவகளையில் சிவகளைப் பரம்பு, பேட்மாநகரம், ஸ்ரீ மூலக்கரை ஆகிய இடங்களில் 15க்கும் மேற்பட்ட ஆய்வுக் குழிகள் அமைக்கப்பட்டுள்ள நிலையில், ஒரே குழியில் 16 முதுமக்கள் தாழிகள் கண்டெடுக்கப்பட்டன. இவற்றில் 5 தாழிகள் மூடியுடன் கண்டெடுக்கப்பட்டன. ஒட்டுமொத்தமாக இதுவரை சுமார் 40க்கும் மேற்பட்ட முதுமக்கள் தாழிகள் இங்கு கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. பட மூலாதாரம்,DEPARTMENT OF ARCHAEOLOGY, TAMILNADU படக்குறிப்பு, சிவகளையில் ஒரே இடத்தில் 16 முதுமக்கள் தாழிகள் கண்டறியப்பட்டுள்ளன. இவை தவிர, நூல் நூற்க உதவும் தக்கிளி, புகைப்பான், கருப்பு - சிவப்பு மண்பாண்டங்கள், பழங்கால மற்றும் இடைக்கால கருவிகள், எலும்புகள், நடுகற்கள் உள்ளிட்டவையும் கண்டெடுக்கப்பட்டுள்ளன. ஆதிச்சநல்லூரைப் போலவே இங்கும் மூன்று பண்பாட்டு அடுக்குகள் காணப்படுகிறன. இங்கு கிடைத்த ஈமத் தாழிகளில் கிடைத்த பொருட்களை ஓஎஸ்எல், டிஎல் டேட்டிங் செய்து பார்க்கும்போது ஒவ்வொரு பண்பாட்டு அடுக்கின் காலமும் தெளிவாகத் தெரியவருமெனத் தொல்லியல் துறை நம்புகிறது. கொற்கை பாண்டிய நாட்டின் துறைமுக நகரமாக இருந்ததாகக் கருதப்படும் கொற்கையில் 1968ல் முதல்முதலாக ஆய்வு நடத்தப்பட்டது. தமிழ்நாடு மாநில தொல்லியல் துறை 1961ல் உருவாக்கப்பட்ட நிலையில் அந்தத் துறையின் சார்பில் முதல்முதலில் நடந்த அகழாய்வே இங்குதான் நடத்தப்பட்டது. இங்கு கிடைத்த பொருட்களை வைத்து, இந்த இடத்தின் காலம் என்பது கி.மு. 785 என கணிக்கப்பட்டிருக்கிறது. இடைச் சங்ககால பாண்டியர்களின் துறைமுக நகரமாக கொற்கை இருந்ததாகக் கருதப்படுகிறது. இங்கு இப்போது நடத்தப்பட்டுவரும் அகழாய்வில், பல பானை ஓடுகள் கிடைத்திருக்கின்றன. மேலும் கடந்த வாரம் துளையிடப்பட்ட குழாய்கள் ஒன்பது அடுக்குகளாகக் கிடைத்திருக்கின்றன. இதற்குள் உள்ள பொருட்களை ஆய்வுசெய்த பிறகு, இவை எதற்காகப் பயன்படுத்தப்பட்டன என்பது தெரியவரக்கூடும். பட மூலாதாரம்,DEPARTMENT OF ARCHAEOLOGY, TAMILNADU படக்குறிப்பு, கீழடி அகழாய்வில் கிடைத்த தாயக் கட்டைகள். அப்பகுதி மக்களுக்கு ஓய்வு நேரம் இருந்திருப்பதையே விளையாட்டுப் பொருட்கள் காட்டுகின்றன. கங்கை கொண்ட சோழபுரம் கங்கை கண்ட சோழபுரத்தில் முதலாம் ராஜேந்திரச் சோழனின் அரண்மனை அமைந்திருந்ததாகக் கருதப்படும் மாளிகை மேடு பகுதியில் தற்போது அகழாய்வு நடத்தப்பட்டுவருகிறது. இங்கு ஏற்கனவே நடந்த அகழாய்வில் சோழர் காலத்து அரண்மனையின் அடிப்பகுதியின் ஒரு பகுதி வெளிப்பட்டது. தற்போது, அரண்மனையின் அமைப்பைப் புரிந்துகொள்ளும் வகையில் ஏதாவது ஒரு பகுதியின் முழுமையையும் வெளிப்படுத்த முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டிருக்கின்றன. இங்கு ஆங்கில எழுத்தான 'T' வடிவில் ஒரு பெரிய சுவர் கிடைத்துள்ளது. மிகப் பெரிய ஆணிகளும் கிடைத்துள்ளன. "இந்த அளவுக்கு ஆணி பெரிதாக இருக்கிறதென்றால், அங்கு இருந்திருக்கக்கூடிய கதவு போன்ற மரப் பொருட்களின் உயரத்தையும் அகலத்தையும் புரிந்துகொள்ளலாம்" என்கிறார் மாநிலத் தொல்லியல் துறையின் துணை இயக்குனரான ஆர். சிவானந்தம். இங்குள்ள அரண்மனை இரட்டைச் சுவர்களால் கட்டப்பட்டிருப்பதாகக் கருதப்படுகிறது. இந்த மாளிகை சுமார் ஒன்றரைக் கி.மீ. பரப்பளவுக்கு இருந்திருக்கலாம் எனக் கருதப்படுகிறது. கங்கைகொண்ட சோழபுரம் கோவிலில் இருந்து 500 மீட்டர் தொலைவில் இந்த மாளிகையின் மதில் சுவர் காணப்படுகிறது. ஏற்கனவே 2008ல் இங்கு நடந்த அகழாய்வில் இந்த மதில் சுவர் கண்டுபிடிக்கப்பட்டது. இவை தவிர, கொக்கிகள், சீன நாட்டுப் பானை ஓடுகள் போன்றவையும் கிடைத்திருக்கின்றன. டெரகோட்டா உருவங்களும் கிடைத்திருக்கின்றன. பட மூலாதாரம்,DEPARTMENT OF ARCHAEOLOGY, TAMILNADU படக்குறிப்பு, கொந்தகையில் கிடைத்துள்ள டெரகோட்டா பொம்மைகளின் தலைப்பகுதிகள். பட மூலாதாரம்,DEPARTMENT OF ARCHAEOLOGY, TAMILNADU படக்குறிப்பு, கீழடி அகழாய்வில் இந்த முறை கண்டறியப்பட்ட உறை கிணறு கொடுமணல் கொடுமணல் அகழாய்வைப் பொறுத்தவரை, இங்கு பல முறை தஞ்சாவூர் பல்கலைக்கழகம், பாண்டிச்சேரி பல்கலைக்கழகம், இந்தியத் தொல்லியல் துறை, மாநிலத் தொல்லியல் துறை போன்றவை அகழாய்வுகளைச் செய்திருக்கின்றன. சுமார் 12 முறை இங்கு அகழாய்வு செய்யப்பட்டிருக்கிறது. இங்கு இதுவரை கிடைத்துள்ள பொருட்கள் எல்லாமே ஒரே காலகட்டத்தைச் சுட்டிக்காட்டுபவையாகவே இருக்கின்றன. இங்கு இரண்டு விதமான தலங்கள் இருக்கின்றன. ஒன்று ஈமத் தலம். மற்றொன்று தொழில் நடைபெற்ற இடம். இங்கு பெரும்பாலும் மணிகள் செய்யப்பட்ட இடங்கள் அதிகம் கிடைத்திருக்கின்றன. இங்கு மணிகள் அறுக்கும் தொழிற்சாலைகளுக்கான உலைகள், காசுகள் போன்றவை கிடைத்திருக்கின்றன. ஒரு கிணறும் அதற்கு அருகில் இரண்டு பக்கமும் படிகள் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. இந்த இடத்தைப் பொறுத்தவரை கி.மு. 3ஆம் நூற்றாண்டு முதல் கி.பி. 3ஆம் நூற்றாண்டுவரை சேர்ந்ததாக இருக்கலாம் என்கிறார் சிவானந்தம். மயிலாடும்பாறை பட மூலாதாரம்,DEPARTMENT OF ARCHAEOLOGY, TAMILNADU படக்குறிப்பு, மயிலாடும்பாறை அகழாய்வில் கிடைத்த நீண்ட வாள். கிருஷ்ணகிரியில் உள்ள மயிலாடும்பாறையைப் பொறுத்தவரை, அந்தப் பகுதி புதிய கற்காலத்தைச் சேர்ந்ததாகக் கருதப்படுகிறது. அடுத்ததாகப் பெருங்கற்காலத்தைச் சேர்ந்த பொருட்களும் இங்கு கிடைத்துள்ளன. குறிப்பாக மிக நீளமான வாள் ஒன்று கிடைத்துள்ளது. இங்கு கிடைத்துள்ள பானைகள் பெரும்பாலும் சக்கரங்களைக் கொண்டு வனையாமல், கையால் வனையப்பட்டவையாக உள்ளன. இந்த அகழாய்வு முடிந்த பிறகு, ஏற்கனவே நடந்த அகழாய்வின் முடிவுகளை வெளியிடுவதோடு, தொடர்ச்சியாக இடங்களைக் கண்டறிந்து அகழாய்வு நடத்த முடிவுசெய்திருப்பதாக மாநில தொல்லியல் துறை அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்திருக்கிறார். https://www.bbc.com/tamil/arts-and-culture-58037319

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.