Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Leaderboard

  1. கிருபன்

    கருத்துக்கள உறவுகள்
    10
    Points
    38777
    Posts
  2. புரட்சிகர தமிழ்தேசியன்

    கருத்துக்கள உறவுகள்
    7
    Points
    16477
    Posts
  3. goshan_che

    கருத்துக்கள உறவுகள்
    6
    Points
    19152
    Posts
  4. தமிழ் சிறி

    கருத்துக்கள உறவுகள்
    6
    Points
    87997
    Posts

Popular Content

Showing content with the highest reputation on 09/30/21 in all areas

  1. வைரவரிடம் மன்னிப்பு கேட்கும் சிங்கம்.👌
  2. "அப்பா நான் ஒரு கேள்வி கேட்கவா ?" என்றாள் மகள். " என்னடாம்மா கேளு..?" "ஒரு மணி நேரத்தில் எவ்ளோ சம்பாதிப்பிங்கப்பா ?" அப்பா : " நீ எதுக்கு இது எல்லாம் கேக்குறே ?" மகள் : "சும்மா தெரிஞ்சிக்கத்தாம்பா...! சொல்லுங்கப்பா ." அப்பா : "உனக்கு தெரிஞ்சே ஆகணும்னா சொல்றேன் ...! மணிக்கு நூறு ரூபாய் சம்பாதிப்பேன் சராசரியா ...!" மகள் : "ஓ !!! (தலைகுனிந்தவாறே) .. அப்பா நா அதுல 50 ரூபாய் எடுத்துக்கவா ?" அப்பாவிற்கு கோபம் வந்தது ! "நீ இவ்ளோ பணம் கேக்குறது ஒரு நாய் பொம்மையை வாங்கி விளையாடத்தானே ?? ஒழுங்கா போய் படுத்து தூங்கு ... நான் இங்க உங்களுக்காக நாய்போல உழைக்கிறேன்..." அந்த சின்னபெண் அமைதியாக அவள் படுக்கைக்கு சென்று படுத்துக்கொண்டாள் ! அப்பா மகளின் கேள்விகளை எண்ணி மிகுந்த கோபம் அடைந்திருந்தார் . ஒரு மணி நேரம் கழித்து சாந்தம் அடைந்து யோசித்தார் ஏன் இப்படி மகள் கேள்வி கேட்டாளென்று ..! ஒருவேளை அவளுக்கு நிஜமாகவே ஏதோ அவசிய தேவை இருந்தால் என்ன செய்வதென்று முடிவுக்கு வந்து மகளிடம் சென்றார் . "தூங்கிட்டியாடா ?" "இல்லப்பா,. முழிச்சிட்டுதான் இருக்கேன் ..." "நா உன்கிட்ட ரொம்ப கோபமா நடந்துகிட்டேன் .. நாள் பூரா வேலை செஞ்சதுல இருந்த கோவத்துல திட்டிட்டேன் ... இந்தா நீ கேட்ட ஐம்பது ரூபாய் .." அந்த மகள் புன்னகையுடன் படுக்கையில் இருந்து எழுந்தாள் . "ரொம்ப தேங்க்ஸ் ப்பா... " அப்புறம் அந்த பணத்தை எடுத்து தலையணை அடியில் வைக்க போகும் போது அங்கு ஏற்கனவே சில ரூபாய்கள் இருந்தன .. அதைக்கண்ட தந்தை மறுபடியும் கோபமடைந்தார் .! அந்த சிறுமி மெதுவாக பணத்தை எண்ணி சரி பார்தாள்.! பிறகு அப்பாவை பார்த்தாள்...! "உனக்கு எதுக்கும்மா இவ்வளவு பணம்? அதுதான் ஏற்கனவே இவ்வளவு சேர்த்து வச்சி இருக்குயே ..." மகள் : "ஏன்னா நான் சேர்த்து வச்சிருந்தது அம்பது ரூபாய். இப்போ இதையும் சேர்ந்த்தா என்கிட்டே நூறு ரூபாய் இருக்கு ...! இதை நீங்களே வச்சிக்கோங்கப்பா..! இப்போ நான் *உங்களோட ஒரு மணி நேரத்தை வாங்கிக்கலாமா ?* நாளைக்கு ஒரு மணி நேரம் முன்னாடியே வீட்டுக்கு வாங்கப்பா ...! *எனக்கு உங்ககூட ஒண்ணா உட்கார்ந்து சாப்பிட ஆசையா இருக்குப்பா ..!* " அந்த அப்பா உங்களைப்போலவே உடைந்து விட்டார் ...! மகளின் தோள்மேல் கைகளை போட்டுக்கொண்டார் ...! தன் மகளிடம் தனது தவறை உணர்ந்து மன்னிப்புகேட்டார்! வாழ்க்கைக்கு பணம் முக்கியம் ! அதோடு குடும்ப உறவுகள் அதிமுக்கியம் ! *உழைப்பதற்காக வாழாதீர்கள் ! வாழ்வதற்காக உழையுங்கள் !*
  3. விவசாய பழமொழிகள் விளக்கத்துடன் விவசாய பழமொழிகள் நம் நாட்டில் பல உள்ளன. அவை விளக்கத்துடன் இங்கே கொடுக்கப் பட்டுள்ளன. குறைந்த சொற்களில் நிறைந்த பொருள் தரும் அத்தகைய விவசாய பழமொழிகள் சிலவற்றைப் பார்ப்போம். தவளை கத்தினால் தானே மழை மழைக்கான அறிகுறிகள் உண்டாகும் போதுதான் தவளைகள் பொதுவாகக் கத்தும். இதனைத் தான் தவளை கத்தினால், தானே மழை என்றனர். அந்தியில் ஈசல் பூத்தால் அடைமழைக்கு அச்சாரம் மாலை வேளையில் ஈசல்கள் நிறைய பறந்தால் தொடர்ச்சியாக நீண்ட நேரம் மழை பெய்யும். தும்பி எட்ட பறந்தால் தூரத்தில் மழை. தும்பி கிட்டப் பறந்தால் பக்கத்தில் மழை. தட்டான் உயரமாகப் பறந்தால் தூரமாக மழை பெய்யும். தட்டான் தாழ்வான உயரத்தில் பறந்தால் அருகில் மழை பெய்யும். எறும்பு திட்டை ஏறில் பெரும் புயல். எறும்பு உயரமான இடத்திற்கு வாயில் முட்டையை கவ்விக் கொண்டு கூட்டமாகச் சென்றால் கட்டாயம் பெரும் புயல் வரும். மார்கழி மழை மண்ணுக்கு உதவாது. மார்கழி மாதத்தில் பயிர்கள் அறுவடைக்கு தயாராயிருக்கும். அப்போது தண்ணீர் தேவை இருக்காது. அப்போது மழை பெய்வது பயிர் விளைச்சலை பாதிக்கும். எனவே மார்கழி மழை மண்ணுக்கு உதவாது. தை மழை நெய் மழை நெய்யானது சிறிதளவு ஊற்றினால் உணவு ருசிக்கும். அதே போல் தை மாதத்தில் பெய்யும் சிறிதளவு மழையானது வேளாண்மையை மணக்கவே செய்யும். தைப் பனி தரையை துளைக்கும். மாசிப்பனி மச்சை பிளக்கும். தை மாதப்பனியானது தரையை துளைக்கும் அளவுக்கு இருக்கும். மாசி மாதப்பனி உள்வீட்டிற்குள்ளும் குளிரும் அளவு இருக்கும். மச்சி வீடு என்பது பழங்காலத்தில் நீளமான நெட்டு வீடுகளில் கடைசியில் இருக்கும் அறையைக் குறிக்கும். தையும் மாசியும் வீடு மேய்த்து உறங்கு தை மற்றும் மாசி மாதங்களில் குளிர் அதிகமாக இருக்கும். ஆதலால் கூரை உள்ள வீடுகளில் உறங்க வேண்டும். திறந்த வெளியில் உறங்கக் கூடாது. புத்து கண்டு கிணறு வெட்டு கரையான் புற்றானது நிலத்தடி நீர் இருக்கும் இடங்களில்தான் பொதுவாக அமைந்திருக்கும். எனவேதான் புற்று இருக்கும் இடங்களில் கிணறு வெட்டினால் தண்ணீர் கிடைக்கும். வெள்ளமே ஆனாலும் பள்ளத்தே பயிர் செய் பள்ளத்திலேயே தண்ணீர் தங்கும். வெள்ளம் சூழும் என்றாலும் பள்ளமான இடத்தில் பயிர் செய்தால் பயிருக்கு தேவையான தண்ணீர் கிடைக்கும். காணி தேடினும் கரிசல்மண் தேடு. சிறிய அளவு நிலம் வாங்கும்போது நீரினைத் தேக்கும் தன்மை உடைய வேளாண்மைக்கு ஏற்ற, கரிசல் மண் உள்ள நிலமாக வாங்குவது சிறந்தது. களர் கெட பிரண்டையைப் புதை களர் நிலத்தினை சீராக்க பிரண்டையை அந்நிலத்தில் புதைத்து வைக்க வேண்டும். கெட்ட நிலத்துக்கு எட்டு வன்னி. கெட்ட குடும்பத்துக்கு எட்டு வெள்ளாடு. வளமில்லாத நிலத்துக்கு வன்னி மரங்களை நட்டால் நிலம் வளமாகும். அதே போல் வறுமை மிக்க குடும்பத்திற்கு வெள்ளாடுகளை வளர்த்தால் வறுமை நீங்கும். நன்னிலம் கொழுஞ்சி, நடுநிலம் கரந்தை, கடைநிலம் எருக்கு. நல்ல நிலத்தில் கொழுஞ்சி விளையும். நடுத்தர வளமான நிலத்தில் கரந்தை விளையும். தரமற்ற நிலத்தில் எருக்கச் செடி விளையும். எனவே ஒரு நிலத்தின் வளமையை அந்நிலத்தில் இருக்கும் தாவரங்களை வைத்து அடையாளம் கண்டு கொள்ளலாம். நீரும் நிலமும் இருந்தாலும் பருவம் பார்த்து பயிர் செய். ஓரிடத்தில் வேளாண்மைக்கு தேவையான நீரும், வளமையான நிலம் இருந்தாலும், காலநிலையை கணக்கில் கொண்டே வேளாண்மை செய்ய வேண்டும். ஆடிப்பட்டம் பயிர் செய். ஆடி மாதத்தில் செய்யும் பயிரானது நல்ல விளைச்சலைத் தரும். இதனையே ஆடிப்பட்டம் பயிர் செய் என்றனர். விண் பொய்த்தால் மண் பொய்க்கும். பருவ மழை பெய்யாவிட்டால் பயிர் விளைச்சல் இருக்காது. மழையடி நஞ்சை, மதகடி புஞ்சை. மழை நீரை மட்டும் நம்பி இருக்கும் இடங்களில் நஞ்சை பயிர்களை பயிர் செய்யவும். மழை நீரை சேமித்து வைத்திருக்கும் கண்மாய், ஏரிகள் ஆகியவற்றின் மடைக்கு அருகில் இருக்கும் நிலங்களில் புஞ்சைப் பயிர்களை பயிர் செய்யலாம். களரை நம்பிக் கெட்டவனும் இல்லை. மணலை நம்பி வாழ்ந்தவனும் இல்லை. களர் நிலமானது தண்ணீரை தேக்கி வைக்கும் தன்மை கொண்டது. மணலானது தண்ணீரை வடித்து விடும் தன்மை உடையது. அதனால் களர் நிலத்திற்கு ஏற்ற பயிரை பயிர் செய்தவன் ஏமாற மாட்டான். மணலில் பயிர் செய்தால் விளைச்சல் நன்றாக இருக்காது. உழவில்லாத நிலமும் மிளகில்லாத கறியும் வழவழ. மிளகு சேர்க்காத குழம்பு எப்படி பலன் இல்லாது போகுமோ அது போல உழவில்லாத நிலம் பலன் தராது. அகல உழுவதைவிட ஆழ உழுவது மேல். வேளாண்மைக்கு நிலத்தை தயார் செய்யும்போது அகலமாக உழுவதைத் தவிர்த்து ஆழமாக உழ வேண்டும். புஞ்சைக்கு நாலு உழவு நஞ்சைக்கு ஏழு உழவு. புஞ்சை நிலத்தைவிட நஞ்சைக்கு உழவு செய்யும்போது மண்ணானது நன்றாக சந்தனம் போல் மையாக இருக்குமாறு உழவ வேண்டும். குப்பை இல்லாத வெள்ளாமை சப்பை. எரு இடப்படாத வேளாண்மை பயன் தராது. ஆடு பயிர் காட்டும். ஆவாரை கதிர் காட்டும். ஆட்டுச் சாணம் பயிரை வளரச் செய்யும். ஆவாரை உரம் பயிரில் தானிய முதிர்ச்சியை உண்டாக்கும். கூளம் பரப்பி கோமியம் சேர். கூளம் எனப்படும் சிதைந்த வைக்கோல் கழிவுகளை பரப்பி வைத்து அதன்மீது கோமியத்தை தெளித்தால் உரம் விரைவில் சத்தானதாக மாறும். ஆற்று வண்டல் தேற்றும் பயிரை. ஆற்று வண்டலானது வளமானதாக உள்ளதால் அது பயிரின் வளர்ச்சியை ஊக்குவிக்கும். நிலத்தில் எழுந்த பூண்டு நிலத்தில் மடிய வேண்டும். பசுந்தாள் உரப்பயிர்களை வளர்த்து பின் அதனை மடக்கி உழுது நிலத்தின் வளத்தை அதிகரிக்கும். காய்ச்சலும் பாய்ச்சலும் வேண்டும். பயிருக்கு தினமும் தண்ணீர் விடக்கூடாது. தண்ணீர் பாய்ச்சி நிலம் காய்ந்தபின் மீண்டும் தண்ணீர் விடவேண்டும். தேங்கிக் கெட்டது நிலம்; தேங்காமல் கெட்டது குளம். நிலத்தில் நீர் தேங்கினால் பயிர் செழித்து வளராது. குளத்தில் தண்ணீர் தேங்காவிடில் பயிர்கள் வாடும். கோரையைக் கொல்ல கொள்ளுப்பயிர் விதை. களைப்பயிரான கோரையின் வளர்ச்சியை தடை செய்ய கொள்ளுப்பயிரினை பயிர் செய்யவும். சொத்தைப் போல் விதையைப் பேண வேண்டும். வேளாண்மை செய்பவர் தன்னுடைய சொத்துகளைப் பாதுகாப்பது போல் விதைகளைப் பாதுகாக்க வேண்டும். பாரில் போட்டாலும் பட்டத்தில் போடு. சரியன பருவத்தில் பயிரினை பயிர் செய்ய வேண்டும். ஆடி ஐந்தில் விதைத்த விதையும், புரட்டாசி பதினைந்தில் நட்ட நடவும் பெரியோர் வைத்த தனம். ஆடி ஐந்தாம் தேதி விதைக்க வேண்டும். புரட்டாசி பதினைந்தாம் தேதி நடவு செய்ய வேண்டும். அவ்வாறு செய்தால் நம் முன்னோர்களின் சொத்து போன்று அது பலன் தரும். கலக்க விதைத்தால் களஞ்சியம் நிறையும். அடர விதைத்தால் போர் உயரும். விதைகளை இடைவெளி விட்டு விதைத்தால் விளைச்சல் பெருகும். அதனால் தானியங்களைப் பாதுகாத்து வைத்திருக்கும் களஞ்சியம் நிறையும். நெருக்கி விதைத்தால் விளைச்சல் பயன் தராது. அதனால் வெறும் வைக்கோல் மட்டும் கிடைக்கும். இதனால் வைக்கோல் போர் உயரும். விவசாய பழமொழிகள் படிப்போம். அவை தரும் பாரம்பரிய அறிவைப் பாதுகாப்போம்.
  4. கிரிப்டொ கொயின் வாங்குவதற்கான முதலாவது நடவடிக்கையில் கடந்த 1 மணி நேரமாக ( இங்க இப்ப இரவு 11:59 - Brisbane Time ) ஈடுபட்டு 12 பாஸ்வேர்ட் எல்லாம் எழுதி எடுத்து திருப்பி என்டர் பண்ணி ஒரு 1750 டாலரை பதிந்து (with my debit card details) Payment Authorise பண்ண எனது வங்கிக்கு connect பண்ணி One Time Password உம் என்டெர் பண்ணி அழுத்திவிட்டு கணக்கு சரி பார்க்கப்படுகிறது திரையை மூடாதே என்ற எச்சரிக்கையை திரில்லோட பார்த்துக் கொண்டிருக்க -- டொட் டொடைங் ..Your Payment is not approved , use a different card or contact your bank எண்டு வருகுது .. முன்பு கெட்ட பாடல் ஒன்று தூரத்தில் ஒலிக்குமாப் போல இருப்பது ஒருவேளை பிரமை தானோ .. ஊர்காவிற்கு செல்லும் பாதைகள் கடினம் தான் கல்லும் முள்ளும் னிறைந்தன என்றாலும் என் பாதங்கள் தொடர்ந்து நடக்கும் .😕
  5. உங்களது வணிகத்தின் நோக்கம், அளவு(SME, Corporate, Property Finance), கடனை திருப்பிகட்டும் தன்மை, காலம், சொத்துக்களின் பெறுமதி என்பவற்றை வைத்து உங்களிற்கு நீங்கள் securityயாக கொடுக்கும் உங்களது சொத்தின் பெறுமதியில் 80% மட்டுமே கடனாக தரும் என உங்களிற்கு கூறியிருக்கலாம்.. அத்துடன் வர்த்தக சொத்துகளின் பெறுமதியையும் எப்படி நீங்கள் இந்த வர்த்தக சொத்தின் மூலம் வருமானத்தை ஈட்டுவீர்கள் என்பதையும் கருத்தில் கொண்டுதான் உங்களுக்கான கடன் தீர்மானிக்கப்படும்.. அதே நேரம் இங்கே உங்களது வீட்டை securityயாக காட்டி வீட்டிற்கான கடனோ இல்லை வர்த்தக கடனோ பெறலாம். ஆனால் வர்த்தக கட்டிடத்தை காட்டி வீட்டுக்கான கடன் பெறமுடியாது. மேலும், நீங்கள் கூறியது போல உங்களது வீட்டின் பெறுமதியில் 100% வரை வர்த்தக கடன் பெறலாம் ஆனால் வங்கிகள் உங்களிடம் GSA(முன்பு Fixed and Floating Charge) அல்லது Guarantee and Indemnity கேட்பார்கள். அதுமட்டுமல்ல வேறுவகையாக acknowledgement letter, etc.. இப்பொழுது இந்த G&Iன் கொள்கைகளை மாற்றியுள்ளனர்.. இவ்வளவும்தான் நான் இந்த வர்த்தக கடன் சம்பந்தமான எனது அனுபவம்
  6. படம் : கல்யாண மண்டபம்(1965) பாடியோர் : PBS & P சுசீலா இசை :ரங்கசாமி பார்த்தசாரதி வரிகள் : தெள்ளுர். தர்மராசு டிஸ்கி : சிலோன் ரேடியோ உபயம்கள்..👌
  7. அட நம்ம தனுஸ் கோடியா.? அந்தால சிலோன் தெரியும் போல கிடக்கே..😊
  8. எம் மண்ணின் சாதனைத் தமிழனை ஒரு முறை நினைத்துப் பார்ப்போம். ஒன்பது கின்னஸ் உலக சாதனைகளைப் படைத்த சாதனையாளர் வல்வையின் விவேகானந்தன் செல்வகுமார் ஆனந்தன் – ஆழிக்குமரன் ஆனந்தன் வல்வையின் விவேகானந்தன் செல்வகுமார் ஆனந்தன் – ஆழிக்குமரன் ஆனந்தன் ஒரு நீச்சல் வீரர். பாக்கு நீரிணையை நீந்திக் கடந்த வீரர் ஆவார். ஒன்பது உலக சாதனைகளைப் படைத்து கின்னஸ் புத்தகத்தில் இடம்பெற்றவர். பாக்குநீரிணையை நீந்திக்கடந்த நீச்சல்வீரர் நவரத்தினசாமியின் ஆசியுடன், பாக்குநீரிணையை ஒரேதடவையில் நீந்திக்கடந்தார் ஆனந்தன். 1971 ஆம் ஆண்டில் மன்னாரில் இருந்து தனுஷ்கோடிக்கு நீந்தி, அங்கிருந்து மீண்டும் மன்னாரை நீந்திச் சாதனை படைத்தார். அப்போது வீரகேசரி ஆசிரியராக இருந்த எஸ். டி. சிவநாயகம் இவருக்கு ‘ஆழிக்குமரன்’ என்ற பட்டத்தை வழங்கிச் சிறப்பித்தார். சிறுபிள்ளையிலேயே இவர் இளம்பிள்ளை வாதத்தினால் பாதிக்கப்பட்டாலும், நீரில் மிதத்தல், மெதுநடை, தொடர்ந்து நடனம் என்று பல செயல்களில் சாதனைகளைப் படைத்து கின்னஸ் புத்தகத்தில் இடம்பெற்றார். ஆழிக்குமரன் ஆனந்தன் படைத்த ஒன்பது கின்னஸ் சாதனைகளும் பின்வருமாறு; சாதனை 1971 ஆம் ஆண்டில் பாக்கு நீரிணையை 51 மணி நேரத்தில் நீந்திக்கடந்தது. சாதனை 1978 ஆம் ஆண்டில் தொடர்ச்சியாக 128 மணி நேரம் Twist Dance (60 பதுகளில் பிரசித்திபெற்ற ஒரு வகை நடனம்) ஆடியது. சாதனை 1979 ஆம் ஆண்டில் 1487 மைல் தூரத்தை 187 மணி நேரத்தில் இருசக்கர வாகனம் மூலம் இடைவிடாது ஓடி முடித்தமை. சாதனை 1979 ஆம் ஆண்டில் 33 மணி நேரம் ஒற்றைக் காலில் நின்றமை. சாதனை 1979 ஆம் ஆண்டில் 136 மணி நேரம் Ball Punching செய்தமை. சாதனை 1980 ஆம் ஆண்டில் 2 நிமிட நேரத்தில் 165 தடவைகள் குந்தி எழுந்தது (Sit-ups). சாதனை 1980 ஆம் ஆண்டில் 9100 தடவைகள் High Kicks செய்தமை. சாதனை 1981 ஆம் ஆண்டில் 296 மைல் தூரத்தை 159 மணி நேரத்தில் இடைவிடாது நடந்து கடந்தமை சாதனை 1981 ஆம் ஆண்டில் 80 மணி நேரம் தொடர்ச்சியாக தண்ணீரில் (சென்னை அண்ணா நீச்சல் தடாகத்தில்) செங்குத்தாக நின்றமை. ஓர் மோட்டார் சைக்கிள் விபத்தின் விளைவால் இவரது மண்ணீரலை அகற்ற நேரிட்டது. ஆயினும் அவர் மனம் தளரவில்லை. இதன் பின்னர் இவர் ஆங்கிலக் கால்வாயை நீந்திக்கடக்கத் திட்டமிட்டு இங்கிலாந்து சென்றார். ஆங்கிலக் கால்வாயை நீந்திக் கடக்கும் சாதனை முயற்சியின்போது 6 மணிநேர துணிகர முயற்சியின் பின் வலுவான சாதகமற்ற நீரோட்டத்தாலும் , நீரின் குறைந்த வெப்பநிலையாலும் பாதிக்கப்பட்டு சாதனை முயற்சியின் போதே மரணத்தையும் தழுவிக்கொண்டார். சாதனை முயற்சியின் போது “குளிர்ந்த கடலே கவலை தருகிறது” அதற்கேற்ப என்னை தயார் செய்ய கால அவகாசம் போதவில்லை” என்று தெரிவித்தார். இதுதான் அவர் 1984 ஆம் ஆண்டு ஆகஸ்து 6 ஆம் தேதி ஆங்கிலக் கால்வாய்யை கடக்கும் முயற்சியின் போது இறக்கும் முன்னர் கூறிய கடைசி வார்த்தை. ஆழிக்குமரன் ஆனந்தன் கின்னஸ் சாதனைகளைப் படைத்தது மட்டுமன்றி, இலண்டன் பல்கலை கழகத்தில் விஞ்ஞான பட்டதாரி பட்டத்தையும் இலங்கையில் சட்டமானிப் பட்டத்தையும் பெற்று கல்வியிலும் சிறந்து விளங்கினார். என்பது குறிப்பிடத்தக்கது. ஆழிக்குமரன் ஆனந்தனின் சாதனைத்திறமைகளை கௌரவப் படுத்தும் முகமாக இலங்கை அரசாங்கம் இவரின் படம் பொறித்த ஒரு ரூபா முத்திரையினை வெளியிட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது எத்தனை பேர் அறிவோம் இவரை, எம் மண்ணின் சாதனைத் தமிழனை ஒரு முறை நினைத்துப் பார்ப்போம். வரலாற்றுத் தகவல்கள்.
  9. இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் சகோதரம் விசுகு.
  10. இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள், விசுகர்…! இன்றைய நாள் இனிதாக அமையட்டும்..!
  11. இன்று பிறந்த நாளை கொண்டாடும்... அன்பு நண்பர்... விசுகு அவர்களுக்கு, உளம் கனிந்த, இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்.
  12. கூறு 2 ரூபாய் - காபூல் தெரு ஒர கடை.😊
  13. பொன்னியின் செல்வன் :: (த்ரிஷா).. 😊..☺️ அடேய்.. பார்த்து பார்த்து கட்டி வச்ச கற்பனை கோட்டைடா .. இப்படி சல்லி சல்லியா நொறுக்கிடாதீங்கடா..😊
  14. என்னை முதன்முதலாக பார்த்தபோது என்ன நினைத்தாய்.......நான் உன்னை நினைத்தேன்.....! 😂

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.