Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Leaderboard

  1. கிருபன்

    கருத்துக்கள உறவுகள்
    24
    Points
    39366
    Posts
  2. தமிழ் சிறி

    கருத்துக்கள உறவுகள்
    8
    Points
    88865
    Posts
  3. ரதி

    கருத்துக்கள உறவுகள்
    8
    Points
    14998
    Posts
  4. goshan_che

    கருத்துக்கள உறவுகள்
    8
    Points
    19683
    Posts

Popular Content

Showing content with the highest reputation on 10/20/21 in Posts

  1. பொறுப்பு துறப்பு இந்த திரியில் பகிரப்படும் எந்த தகவலுமே நிதி ஆலோசனை (financial advice) அல்ல. இவை வெறும் கருத்துக்கள் மட்டுமே. உங்கள் முதலீட்டு முடிவுகளுக்கு நீங்களே 100% பொறுபானவர்கள். நோக்கம் யாழில் பங்கு வர்த்தகம் பற்றிய ஒரு திரியை திறந்து அதில் உரையாடலை தொடர்வது, எதிர்காலத்தில் புலம்பெயர் சமூகம் ஒரு நிதிப் பலம் பொருந்திய கட்டமைப்பாக மாற உதவும் என்பது உறுப்பினர் @Maruthankerny யின் மனதில் உதித்த எண்ணம். அவர் இப்போ களத்துக்கு வருவது இல்லை என்பதால் - நான் இந்த திரியை திறக்கிறேன். @vasee @Kadancha @பிரபா சிதம்பரநாதன் @Elugnajiru போன்றவர்களின் கருத்துக்கள் அவர்களுக்கும் இதில் ஆர்வம், அறிவு, அனுபவம் இருப்பதை உணர்த்துகிறது. ஆகவே விடயங்களை பகிர்ந்து கொள்ளும், வினாக்களை எழுப்பும் ஒரு திரியாக இதில் நாம் ஒன்றிணைவது சாலப்பொருத்தம் என கருதி இந்த திரியை திறக்கிறேன். மேலே சொன்னோர் மட்டும் அல்ல இன்னும் பலர் இதில் ஆர்வம், அறிவு, அனுபவம் உள்ளவர்கள் நிச்சயம் இருப்பீர்கள். ஆகவே, பங்கு? வா பங்கு ஒரு கை பார்க்கலாம். பயனுள்ள கருத்துக்கள் பரிமாறப்பட்ட திரிகள் சில கீழே:
  2. வீடு லண்டன் நிலவரத்தை சொல்கிறேன். நீங்கள் மிக மட்டமான ஏனெஜ்சியிடம் போகதவரைக்கும் இப்படி நடக்க குறைவு. ஏற்கனவே இந்த துறையில் வீடு வாடகைக்கு விட்டு இருப்பவர்கள் நிச்சயம் ஒரு நல்ல எஸ்டேட் ஏஜெண்டை பரிந்துரைப்பார்கள். சிலர் rent guarantee அதாவது வாடைக்கு ஆள் வருதோ இல்லையோ ஏஜென்சி வாடகை தரும் என்ற ஏற்பாடும் தருவார்கள். ஆனால் அப்படியானவர்களின் கொமிசன் அதிகமாய் இருக்கும். அது உங்களுக்கு சரி வராவிடில் லோக்கல் கவுன்சில்கள் உங்களிடம் வீட்டை வாடைக்கு எடுக்க தயாராய் இருப்பார்கள். ஆனால் அவர்கள் தரும் வாடகை மாக்கெட் ரேட்டில் 10% அளவில் குறைவாய் இருக்கும். அவர்கள் கொண்டு வரும் ஆட்களும் குழப்படிகாரராய் அமையலாம். ஆனால் ஏஜெண்ட் பீஸ் இல்லை, நீண்டகால rent guarantee மற்றும் சில கவுன்சில்களில் வீட்டை வாடைக்கு விட முன் திருத்தி எடுக்க grant உம் கிடைக்கும். ஊருக்கு போவதாகின் மிக நல்ல ஐடியா நீங்கள் செய்ய நினைப்பது. எனக்கு தெரிந்த பலர் வாடைக்கு விட்டு விட்டு அமெரிகா, இலங்கை, அவுஸ், ஸ்பெயின் போயுள்ளார்கள். எப்போதும் வீடு நல்ல கொண்டிசனில், வாடைக்கு கிராக்கி உள்ள இடத்தில் இருந்தால் - கவுன்சிலிடம் போகாமல் எஜென்சி மூலம் கொடுப்பது லாபம். ஆனால் வருடம் அல்லது இரெண்டு வருடம் ஒரு முறை வந்து பாக்கிற மாரி இருங்கோ. எப்பவும் உடையவன் பாரா வேலை ஒரு முழம் கட்டை. தவிரவும் மருத்துவ இதர செலவுக்கு இலங்கையில் காசில்லை என்றால் நாயும் சீண்டாது. ஆகவே எப்போதும் அடுத்த பிளேன்னில் ஏற தயாராகவே அங்கே போக வேண்டும் என்பது என் கருத்து. நான் 80 (இருந்தால்) க்கு மேல் ஊரில் இருக்க விரும்பமாட்டேன். கேர் ஹோமில் இருந்து யாழில் வந்து அறழை கதையள் கதைக்க வேண்டியதுதான் (இப்பவே அதுதானே🤣).
  3. கிரிப்டோ நல்ல முதலீடு தான் ,நான் doge coin 0.09 $ வாங்கினேன் அது கிட்டதட்ட .50$ வரை ஏறி இப்போது இறங்கி இருக்கிறது ,நான் குறைந்த விலையில் வாங்கி இருந்ததனால் லாபமே, இப்போது shiba inu coin வாங்கி உள்ளேன் ,ஒரு 50யூரோ. / பவுண்/ டொலர் நட்டம் ஆனால் கூட பரவாயில்லை போனால் போகட்டும் என மன நிலை இருப்போர் 50 ற்கு இதை வாங்கி பாருங்கள் 0.1ற்கு இந்த வருட இறுதியில் வரும் என்கிறார்கள்
  4. கிரிப்டோ கரன்சி எனக்கு நீண்ட நாளாக அறிமுகம் ஆனாலும் சென்ற மாதம்தான் ஒரு 150 யூரோ முதலீடு செய்தேன் ஆரம்பத்தில் 0.0000034 என ஒரு நாணயத்தை வாங்கி காத்திருப்புக்குப் பின்பு 0.00005490 என்னும் அளவுக்குக் கூடியது வித்த வகையில் ஒரு 150 யூரோ இலாபம் அதுக்குப் பின்புதான் பிரச்சனை கண்டதையெல்லாம் வாங்கிப்போட்டால் லாபம் சம்பாதிக்கலாம் என நினைச்சு வாங்கியவிடத்தில் கால்வாசி அடிபட்டுட்டு. பின்பு கொஞ்சம் இலாபம் வந்தது பிற்காயின் விலை அதிகரிக்குது என இருந்த 300 யூரோவை அதில் போட இலாபம் என்பது கண்ணுக்குத் தெரிந்தது ஆனால் கணக்குக்கு வரவில்லை காரணம் 56000 த்தை பிற்காயின் தாண்டியதால எனது பணம் அதுக்குப் புழுதியாகத் தெரிந்தது. பின்பு அதை வித்திட்டு யூ எஸ் டி ரீ ஆக வைத்திருக்கிறேன் எங்காயாவது சந்தர்ப்பம் கிடைத்தால் இறக்கிப்பார்க்கலாம் என. சரி அதைவிடுங்கோ வீ ஆர் ஏ எனும் காயின் வாங்கும்போது அரைமனத்தில வாங்கினேன் இப்போ அது கொங்சம் ஏறி நிற்குது ஒருத்தன் சொல்லுறான் அண்ணை அவசரப்பட்டு விற்காதையுங்கோ இன்னும் ஏறும் என பாப்பம் இன்னுமொரு விடையம் இதில் கூடய அளவு ஈடுபாடு காட்டவேண்டாம் பிறகு கசிணோ விளையாட்டாக மாறிவிடும். முக்கிய தகவல் இன்னுமொருதர் ரோபோ ஒன்றைச் செற் பண்ணிவைத்திருக்கிறார் 5000 யூரோகளை முதலிட்டு, ஒருநாளைக்கு 25 டாலர் தருகுது நீங்கள் ஒப்போ இதலை போடவேண்டாம் இப்பதான் ரோபோவைச் செற்பண்ணிணான் ஒருமாதத்துக்குப் பின்பு சொல்லுறன் இலாபமா நட்டமா என அதுக்கு பிறகு நீங்கள் செற் பண்ணுங்கோ என எதோ சின்ன வீடு செற் பண்ணுமாப்போல் சொல்லுறான் நல்லா வந்தால் ஒரு குறிப்பிட்ட தொகையை முதலீடு செய்யலாம் என நினைக்கிறன். மீண்டும் சொல்லுறன் ஆயிரம் தடவை யோசிச்சுச் செய்யுங்கோ இது கசிணோ விளையாட்டு மாதிரி இரவு பகலாக நித்திரை கொள்ளவும் விடாது.
  5. குங்கும பொட்டு குலுங்குதடி .......! 👍
  6. https://www.udemy.com/courses/search/?q=alpesh+patel&src=sac&kw=alpesh+p 6 கற்கை நெறிகள் இலவசமாக வழங்குகிறார், அன்னிய செலாவணி சந்தை பற்றிய பாடத்திட்டத்தை மேலோட்டமாக பார்த்தேன் மிகவும் தரமான கற்கை நெறி, ஆர்வமுள்ளவர்கள் இலவசமாக கற்கலாம்.
  7. கொழும்புப் பகுதி மணப்பெண் ஒருவருக்கு கிராமப்புறத்து மாப்பிள்ளை ஒருவரை பேசித் தீர்ப்பதற்காக கலியாண புரோக்கர் மணப் பெண்ணின் தகப்பனை மாப்பிள்ளையின் வீட்டுக்கு கூட்டிச்செல்ல முடிவாகியது. மாப்பிள்ளையின் தொழில் மாணிக்க ( Diamand ) வியாபாரம் எனவும் வயது 20 எனவும், கார் (Car) இருப்பதாகவும் புரோக்கர் கூறினார். காரின் இலக்கம் என்ன எனக் கேட்டபோது தான் இன்னும் காரைக் காணவில்லை எங்காவது போயிருக்கும் என்றார். நீண்ட நாட்களாக இப்படியே சொல்லிச் சொல்லி புரோக்கர் வீட்டு செலவுக்குப் பணம் வாங்கினார். திடீரென ஒருநாள், ஆட்டோ ஒன்றில் வந்த மணப்பெண்ணின் தகப்பன் புரோக்கரை ஆட்டோவினுள் இழுத்துப் போட்டுக்கொண்டு மாப்பிள்ளை வீட்டை இன்று காட்ட வேண்டும் என்றார். கலியானம் பேசிப் பேசியே வழிச் செலவுக்குப் பணம் தந்து கடனாளியாகிவிட்டேன் என்று குறை கூறினார். கலங்கிய கண்களுடன் சென்ற புரோக்கர் சிறியதொரு வீட்டைக்காட்டி இதுதான் மாப்பிள்ளையின் வீடு என்றார். மாப்பிள்ளையின் தாய் முன்னே வந்தார். இருவரையும் உட்காரச் சொன்னார். பழவர்க்கங்களும், பலகாரங்களும், குளிர்பானமும் இருவரினதும் பசியைப் போக்கின. ” மாப்பிள்ளக்கு கார் ஒன்று இருப்பதாகச் சொன்னீர்களே! அதை இன்று பார்க்க வேண்டும்” இது மணப்பெண்ணின் தகப்பன். புரோக்கர் அந்தக் காரைக் காட்டும்படி மாப்பிள்ளையின் தாயைக் கெஞ்சினார். வீட்டு அறையினுள் சென்ற மாப்பிள்ளையின் தாய் தும்புத்தடி ஒன்றை எடுத்து வருவதை கண்டு ” மாப்பிள்ளையின் தாய்க்கு பைத்தியமா?” எனக் கேட்ட்டுக்கொண்டு மாமா தலைதெறிக்க ஓடினார். ஒருவாறு மாமாவை மீண்டும் அழத்துவந்தபோது மாப்பிள்ளையின் தாய் கையில் இருந்த தும்புத்தடியை கட்டிலின் கீழ் போட்டு இழுத்தபோது விளையாட்டு கார் ஒன்று வெளியே வந்தது. புரோக்கரின் முகம் வியர்த்தது. மாப்பிள்ளையின் தாய் ” எனது மகனுக்கு 18 வருடங்களுக்கு முன்னர் வாங்கிக் கொடுத்த கார்” என்றார். புரோக்கர் மயக்கமடைந்து நிலத்தில் வீழ்ந்தார்.
  8. நானும் கொஞ்ச காலமாக பங்குசந்தை வியாபாரத்தில் குதித்துள்ளேன். நேரமிருக்கும் போது விபரமாக எழுதுகிறேன். இதில் இறங்கினால் சிறிய வயது விளையாட்டொன்று நினைவுக்கு வரும். எல்லோருமே விளையபடியிருப்போம். அதாவது மயிலிறகை புத்தகத்துக்குள் வைத்து குஞ்சு பொரித்து விட்டதா என்று அடிக்கடி திறந்து பார்த்திருப்போம். அதே மாதிரியான செயலில் மீண்டும் எங்களைக் கொண்டு போகும்.
  9. குடித்துவிட்டு மனிசிக்கு அடிப்பவர் -- மது ஹிட்டர். குடித்துவிட்டு பிள்ளைகளுக்கு உதைப்பவர் - மது ஹிக்கர். குடித்து விட்டு சைட் அடிப்பவர் - மது நோக்கர். குடித்துவிட்டு நடனமாடுபவர் - மது டான்சர். குடித்துவிட்டு வாந்தி எடுப்பவர் - மது வாமிட்டர். 😁 😁
  10. நானும் கண்ணை மூடிக்கொண்டு 4000 பவுண்சைத் தொலைத்துவிட்டு நிற்கிறேன். என்ன செய்வது நட்டப்பட்டுத்தான் அனுபவத்தைப் பெறவேண்டி இருக்கு .

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.