இந்த மெழுகுதிரி என்பது, சந்தையில் வாங்குபவர்களும், விற்றுபவர்களும், குறிப்பிட்ட நேர இடைவெளியில் முட்டி மோதி, எவரின் விலை இறுதியாக தீர்மானிக்கப்படுகிறது என்பது குறிக்கிறது.
இது எப்போதுமே இறந்த கால தரவு என்பதால், குறிப்புட கால இடைவெளியை, நிமிடம், மணிகள், நாட்கள், வாரங்கள், மாதங்கள் என்று பார்ப்பவர் வகைப்படுத்தலாம்.
சிவப்பு நிற மெழுகு திரி, விற்பவர்கள் ஒங்கி விட்டதை குறிக்கும். பச்சை நிறம் வாங்குபவர் ஓங்கி விட்டார்கள்.
தடித்த மெழுகு திரியின் மேலேம், கீழும் சற்று கோடாக இருப்பவை, முறையே அதி கூடிய விலை, அதி குறைந்த விலை. தடித்த மெழுகு திரிரில் இருக்கும் விலைவாசிகளே பெரும்பான்மையான வாங்குதல்கள் (பச்சை நிறம்), விற்பனைகள் (சிவப்பு நிறம்) நடை பெற்று இருக்கிறது.
அதனால், சிவப்பு நிற மெழுகு திரி நேர இடைவெளியில், வாங்குதல்கள் நடைபெற இல்லை என்பது அல்ல, வாங்குதல்கள் நடைபெற்று இருக்கிறது, ஆனால், விற்றுபவர்கள் விலையை தஹிர்மானிப்பதில் ஓங்கி விட்டார்கள்.
இதை நீங்கள், livecharts.co.uk இணைய தளத்தில், எதாவது ஓர் சந்தையை தெரிவு செய்து, பொறுமையாக அவதானியுங்கள், உங்களுக்கு புரியும்.
சிலவேளை, சிவப்பாக ஆரம்பித்து, பச்சையாக மாறும், மறு வளமாகவும் நடக்கும். முட்டி, மோதி ஒன்றை ஒன்று ஓங்குவதற்கு நடைபெறும் போராட்டத்தையும் உணரலாம்.
முக்கியமாக, மெழுகு திரி, சந்தையின் முட்டி மோதும் உணர்வை (emotions) மற்றும் போக்கை காட்டுவது.
அனால், எப்படி கணக்கு பார்ப்பது என்பது வேறு விடயம், முழு chart உடன் தொடர்பு பட்டத, technical analysis.