Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Leaderboard

  1. குமாரசாமி

    கருத்துக்கள உறுப்பினர்கள்
    10
    Points
    46808
    Posts
  2. கிருபன்

    கருத்துக்கள உறவுகள்
    9
    Points
    38791
    Posts
  3. பெருமாள்

    கருத்துக்கள உறவுகள்
    7
    Points
    15756
    Posts
  4. nunavilan

    கருத்துக்கள உறவுகள்
    6
    Points
    53011
    Posts

Popular Content

Showing content with the highest reputation on 11/01/21 in all areas

  1. உண்மையில் இது அந்த பெண்ணால் balance ஆகவில்லை. உழவு இயந்திரத்தில் Axels பகுதியில் உள்ள இடைவெளியில் மரக்கட்டையை பொருத்தி balance ஆக உள்ளது. எல்லா பெருமையும் சும்மிற்கே 🙏
  2. *1967 ஆண்டு பொது தேர்தல் நடந்த ஒரு வாக்கு சாவடி* இதில் *போலீஸ்கார் ஒருவர் மட்டும் உள்ளார் ஆனால் தற்போது வாக்கு சாவடிக்கு துனை இராணுவம் தேவைப்படுகிறது*
  3. க.மு / க.பி ......(கல்யாணத்துக்கு முன் / பின் )........! 😂
  4. இயற்கை.... மீண்டும், தனது இடத்தை... தக்க வைத்த தருணம்.
  5. இடிச்சு சாய்ச்சுப்புட்டு ஏதோ சாதிச்ச மாதிரி நடையை பாருங்க! ஆனாலும் இவன் ரொம்ப நல்லவன், மாறி குத்தினதோட கோபம் போயிற்று.
  6. சொல்லட்டுமா சொல்லட்டுமா .......! 👍
  7. ஒரு வரியில்... திகில் கதை.
  8. நீங்கள் எவ்வித சமூக சேவையும் செய்யத் தேவையில்லை... குப்பையை குப்பை தொட்டியிலேயே போடுங்கள் அதுவே போதும்...
  9. Manike Mage Hithe - Yohani & Satheeshan - Violin Cover by Karolina Protsenko
  10. புலிகளுக்கு அனுப்பப்பட்ட ஆயுதக் கப்பல்களை தானே காட்டிக்கொடுத்த கே பி மூலம் " லங்கா கார்டியன் காலம் : ஆடி 2, 2010 அண்மையில் புலம்பெயர் நாடுகளில் இயங்கிவந்த புலிகளுக்குச் சார்பான தமிழர்கள் சிலர் இலங்கைக்கு விஜயம் செய்து அரசு தரப்பினருடனும், கே பி யுடனும் கலந்துரையாடல்களில் ஈடுபட்டது பலரதும் கவனத்தை ஈர்ந்திருந்தது. மலேசியாவில் கே பி கைதுசெய்யப்பட்டதாகக் கூறப்படும் நாடகத்தினை கோத்தாபயவும், கேபியும் இணைந்தே திட்டமிட்டு ஆடியதாகவும், மலேசிய அரசாங்கம் இந்த நாடகத்திற்கு உடந்தையாக இருந்துள்ளதாகவும் செய்திகள் வெளிவரும் நிலையில், இந்த புலம்பெயர் புலிகள் அணியினரின் கோத்தாவுடனான சந்திப்பும் இடம்பெற்றிருக்கிறது. இந்த சர்ச்சைக்குரிய கோத்தாவுக்கு ஆதரவான "புலம்பெயர் புலிகள்" அணியில் கலந்துகொண்டவர்களில் ஒருவரான கலாநிதி அருணகுமார் தனது விஜயம் பற்றியும், அங்கு நடந்த சந்திப்புக்கள் பற்றியும் வெளியில் பேசியிருக்கிறார். அவரால் வெளியிடப்பட்டிருக்கும் பகிரங்க அறிக்கையில் தமது குழு இலங்கையில் நடத்திய சந்திப்புக்கள், சந்தித்த மகிந்த - கோத்தா அரசின் தலைவர்கள் பற்றிய விபரங்களை அவர் அதில் குறிப்பிட்டிருக்கிறார். அவரது அறிக்கையின் ஒருபகுதியில் குறிப்பிடப்பட்ட விபரங்களின் அடிப்படையில் பார்க்கும்போது புலிகளை முற்றாக அழித்துமுடிக்கும் காரியத்தில் ஒருவருக்கு ஒருவர் உற்ற நண்பர்களாக இருந்து செய்துமுடித்தது யாரென்பது ஓரளவிற்குப் புரிந்துகொள்ளக்கூடியதாக இருக்கிறது. உள்நாட்டு வெளிநாட்டு செய்தி ஊடகங்களைப் பொறுத்தவரை பாதுகாப்புச் செயலாளர் கோத்தாவுக்கும், ராணுவத்தளபதி சரத் பொன்சேக்காவுக்கும் இடையில் நிலவிய நெருங்கிய ஒத்துழைப்பே புலிகளை அழிக்க உதவியதாகக் கூறப்படுகிறது. இது ஓரளவிற்கு உண்மையாக இருந்தாலும்கூட, புலிகளை முற்றாக அழித்த இன்னொரு நட்பு இருப்பதாகவே தெரிகிறது. கலாநிதி அருணகுமாரின் அறிக்கையின்படி இந்த ரகசிய நட்பு வெளிச்சத்திற்கு வந்திருக்கிறது. கலாநிதி அருணகுமார் தனது அறிக்கையில் கூறும்போது, தானும் தனது அரச ஆதரவு - புலம்பெயர் புலிகள் அணியும் புலிகளின் சர்வதேச ஆயுத முகவரும், அரசாங்கத்தின் விருந்தாளியுமான கே பி எனப்படும் குமரன் பத்மனாதனுடன் கலந்துரையாடிக்கொண்டிருக்கும்பொழுது, எதிர்பாராத விதமாக பாதுகாப்புச் செயலாளர் கோத்தாபய ராஜபக்ஷ அக்கலந்துரையாடல் நடைபெற்ற அறையினுள் நுழைந்திருக்கிறார். கோத்தாவைக் கண்டதும் மிகுந்த மகிழ்வுடன் எழுந்த கே பி அவரை மிகுந்த மரியாதையுடனும் தோழமையுடனும் ஆரத்தழுவி அழைத்தார் என்று எழுதியிருக்கிறார். அவர்கள் இருவரும் நட்பாகப் பழகிய விதத்தினைப் பார்க்கும்போது அவர்களுக்கிடையில் நீண்டகாலமாகவே நட்பு இருப்பது அங்கிருந்த அனைவராலும் இலகுவாக உணர்ந்துகொள்ளமுடிந்தது என்று அவர் கூறுகிறார். இதில் ஆச்சரியப்படத்தக்க இன்னொரு விடயம் யாதெனில், தம்முடன் பேசிய கோத்தபாய கே பி இற்கும் தனக்கும் இடையிலான நட்புப் பற்றிக் கூறும்போது, "1996 இல் நாம் ஒருவரையொருவர் நேரடியாகச் சந்தித்தோம், அன்றிலிருந்து தொடர்பில் இருக்கிறோம் " என்று கூறியமைதான் என்று அருணகுமார் மேலும் தெரிவிக்கிறார். கோத்தா கூறுவது உண்மையாக இருக்கும் பட்சத்தில் புலிகளின் மிகவும் நம்பிக்கைக்குப் பாத்திரமானவராகவும், தலைவர் பிரபாகரனின் நெருங்கிய தோழனாகக் கருதப்பட்டவருமான கே பி யின் உண்மையான நோக்கமும், அவரது செயற்பாடுகளும் நிச்சயம் கேள்விக்குள்ளாக்கப்படவேண்டியவையே. கலாநிதி அருணகுமாரின் அறிக்கையிலிருந்து நாம் அறிந்துகொள்ளக்கூடியவை என்னவென்றால், 1. மலேசியாவில் நடந்த கே பி யின் கைது, கே பி யினாலும், கோத்தாவினாலும் திட்டமிடப்பட்டு, மலேசிய அரசின் அனுசரனையுடன் நடத்தப்பட்ட ஒரு நாடகம் என்பது. 2. இந்த திட்டத்தின்படியே கே பி இற்கு கொழும்பின் பிரபல வாசஸ்த்தல இடமான கொழும்பு 7 இல் உல்லாச மாளிகையொன்று அரசால் வழம்க்கப்பட்டமை. 3. நாடு கடந்த அரசாங்கம் என்று ஒன்றினை உருவாக்கியதன் மூலம் புலம்பெயர் நாடுகளில் இயங்கிய புலிகளின் அமைப்புக்களைக் கூறுபோட்டு செயலிழக்கப் பண்ணியமை. 4. தானே புலிகளுக்கு அனுப்பிவைத்த ஆயுதக் கப்பல்கள் பற்றிய விபரங்களை தனது நண்பரான ராணுவப் புலநாய்வுத்துறைத் தளபதி கபில ஹெந்தவிதாரணவூடாக அரசுக்கு வழங்கி, அக்கப்பல்களை நடுக்கடலில் வைத்து அழித்து, புலிகள் ஆயுதப் பற்றாக்குறையால் அல்லற்பட்டு ஈற்றில் அழிக்கப்படுவதை உறுதிப்படுத்தியமை. http://www.srilankaguardian.org/2010/07/did-kp-help-sri-lanka-to-sink-ltte-arms.html
  11. குமரன் பத்மனாதன் எனப்படும் கே பி இன் கைது நாடகம் பற்றி அந்த நாடகம் நடந்த சில மாதங்களின் பின்னர் மெலேசியாவிலிருந்து லங்கா கார்டியன் பத்திரிக்கைக்கு அங்கிருந்து முகம்மத் எனும் செய்தியாளர் எழுதிய கட்டுரை காலம் : ஆவணி, 2021 துரோகங்களுக்கிடையிலான போட்டி புலிகளின் சர்வதேச ஆயுத கொள்வனவுகளுக்குப் பொறுப்பாகவிருந்த கே பி எனப்படும் குமரன் பத்மனாதன் இலங்கை அரசாங்கத்தினதும், அதன் ராணுவ உயர் மட்டங்களினதும் செல்லப்பிள்ளையாக வலம் வரத் தொடங்கியிருப்பதுடன் இலங்கை அரசாங்கத்தினால் அவருக்கு வழங்கப்பட்டிருக்கும் மிக உல்லாசமான வாழ்க்கையினையும் அனுபவித்து வருவது தெளிவாகத் தெரிகிறது. அவன் அண்மையில் வெளியிட்டிருக்கும் சில கருத்துக்களால, இலங்கை அரசுக்கு எதிரான தமிழர்களும், தமிழ்நாட்டு அரசியல்வாதிகளும் கடுமையான சீற்றம் அடைந்திருப்பதும் தெரிகிறது. தனக்கும் இலங்கையரசுக்கும் இடையில் இருக்கும் அந்நியோன்னியத்தை வெளிப்படையாகக் காட்டிவருவதன் மூலம் கே பீ தமிழர்களில் பல எதிரிகளைச் சம்பாதித்து வருகிறார் என்பது தெளிவு. அவர் அண்மைக்காலங்களில் வழங்கிவரும் பல செவ்விகளில் தான் மலேசியாவில் கைதுசெய்யப்பட்டுதபற்றி மேலெழுந்தவாரியாகச் சொல்லிவரும் அதேவேளை, தான் கொழும்பிற்கு இலங்கை ராணுவ புலநாய்வுத்துறையினரின் ரகசிய ராணுவ நடவடிக்கை ஒன்றின் மூலம் அழைத்துவரப்பட்டதுபற்றி வாய்திறக்கத் தொடர்ச்சியாக மறுத்தே வருகிறார். இந்தியாவின் சர்வதேச புலநாய்வுத்துறை அதிகாரிகளின் கருத்துப்படி கே பீ யின் கைது என்பது கே பீ இற்கும் இலங்கை அரசாங்கத்திற்கும் இடையே மிகவும் ரகசியமான முறையில் ஒருங்கிணைக்கப்பட்ட நாடகம் ஒன்றின்மூலமே அரங்கேற்றப்பட்டிருப்பதாக தெரியவருகிறது. புலிகளின் தலைமையினால் சிறிதுகாலம் சர்வதேச ஆயுதக் கொள்வனவுக்கான பொறுப்பிலிருந்து இறக்கப்பட்டு பின்னர் மீளவும் இறுதி யுத்த காலத்தில் புலிகளின் தலைமையினால் முகவராக அழைக்கப்பட்ட கே பீ, அப்போதிருந்தே இலங்கை ராணுவத்தின் உளவாளியாகவும், புலிகளின் ஆயுதக் கொள்வனவாளராகவும் இயங்கி வந்திருக்கிறார் என்று அவர்கள் மேலும் கூறுகிறார்கள். 2001 இல் செய்துகொள்ளப்பட்ட சமாதான ஒப்பந்தக் காலத்தில் புலிகளின் சர்வதேச ஆயுதமுகவராகவும், சர்வதேச விவகாரங்களுக்குப் பொறுப்பானவராகவும் இருந்த தன்னை புலிகளின் தலைமைப்பீடம் ஒழுக்காற்று நடவடிக்கை ஒன்றிற்காக பதவியிறக்கம் செய்தமையினால் அவர் கடும் சீற்றம் கொண்டிருந்ததாகத் தெரிகிறது. புலிகளைப் பழிவாங்க ஏதாவது செய்தாகவேண்டும் என்கிற கோபத்தில் இருந்த கே பீ இற்கு எவரை அணுகுவது என்பது அப்போது பெரும் பிரச்சினையாகவே மாறியிருந்தது. 2001 இன் பின்னர் புலிகளின் சர்வதேச விவகாரங்களுக்கும் ஆயுதக் கொள்வனவுக்கும் பொறுப்பாக காஸ்ட்ரோ எனப்படும் வீரகுலசிங்கம் மணிவண்ணன் பிரபாகரனால் நியமிக்கப்பட்டதால் கடும் சினமுற்றிருந்த கே பீ தனது நெருங்கிய சகாக்களிடம் தனக்கு இயக்கம் மீதான நம்பிக்கை முற்றாக போய்விட்டதென்றும், தலைவர் சரியான காரணங்களைத் தனக்குக் கூறாமல் தன்னை பதவியிலிருந்து அகற்றியதை தன்னால் ஏற்றுக்கொள்ளமுடியாதென்றும், பிரபாகரன் தன்னை அவமானப்படுத்திவிட்டார் என்று கறுவியிருக்கிறார். புலிகள் மீதான கோபமும், வெறுப்பும் கே பீயை இலங்கையின் ராணுவப் புலநாய்வுத்துறையின் தளபதி மேஜர் ஜெனரல் கபில ஹெந்தவிதாரனவோடு தொடர்புகளை ஏற்படுத்துமளவிற்குச் சென்றிருக்கிறது. இதன் அடிப்படையில் கபில ஹெந்தவிதாரணவும் கே பீ யும் பலதடவைகள் பங்கொக்கில் சந்தித்துப் பேசியிருப்பதாக இந்திய உளவுத்துறை அதிகாரிகள் கூறுகின்றனர். இதே காலப்பகுதியில் புலிகளின் முன்னாள்த் தளபதியாகவிருந்து பின்னர் ராணுவத்துடன் சேர்ந்து இயங்கியவரும், ஆரம்பகாலப் பேச்சுவார்த்தைகளில் புலிகளின் சார்பாக பேச்சுவார்த்தைக் குழுவில் இடம்பெற்றிருந்தவருமான கருணா எனப்படும் விநாயகமூர்த்தி முரளிதரனுடனும் கே பி ரகசியப் பேச்சுக்களில் ஈடுபடத் தொடங்கியிருந்ததாகவும் பாங்கொக்கின் காட்டுப்பகுதியொன்றில் இந்தப் பேச்சுக்கள் நடைபெற்றதாகவும், அப்போதிருந்தே புலிகளுக்கெதிரான தனது செயற்பாடுகள் குறித்து கே பீ கருணாவுடன் பேசிவந்ததாகவும் அவ்வதிகாரிகள் கூறுகின்றனர். ராணுவப் புலநாய்வுத்துறையின் அதிகாரியொருவரான "சாம்" என்று புனைபெயருடன் அழைக்கப்பட்ட ஒரு முஸ்லீம் அதிகாரியும், அவரது சகாவுமே கே பீ இற்கும் கபில ஹெந்தவிதாரனவிற்குமிடையையிலான தொடர்பினை தாய்லாந்தில் வெற்றிகரமாகக் ஏற்படுத்திக் கொடுத்திருக்கிறார்கள் என்று தெரியவருகிறது. காஸ்ட்ட்ரோ தலைமையில் புலிகளின் சர்வதேச வலையமைப்பு ஆயுதக் கொள்வனவில் இறங்கி அடைந்த பல தோல்விகள், செயற்பாட்டாளர்களின் கைதுகளுக்குப் பின்னர் கே பி யை பிரபாகரன் மீண்டும் தனது சர்வதேச ஆயுத முகவராகவும், சர்வதேச விவகாரங்களுக்குப் பொறுப்பானவருமாக பதவியில் அமர்த்திய காலத்தில் கே பி இலங்கை ராணுவப் புலநாய்வுத்துறையினருடன் நெருங்கிய தொடர்புகளை ஏற்படுத்தி விட்டிருந்தார் என்றும், அரச , ராணுவ தலைமைப்பீடங்களுக்கு கே பி மிகவும் நெருக்கமாகச் செயற்பட்டு வந்தாரென்றும் இந்திய புலநாய்வுத்துறை கூறுகிறது. தனது பழிவாங்கலுக்கான தருணத்தை எதிர்பார்த்துக் காத்திருந்த கே பீ இற்கு பிரபாகரன் மீண்டும் தன்னை பதவியில் அமர்த்தியது பழம் நழுவிப் பாலில் விழுந்த கதையாகிப் போனது. பிரபாகரன் கேட்டுக்கொண்டபடியே புலிகளுக்கான சில ஆயுதங்களை கொள்வனவு செய்து கப்பல்களில் ஏற்றியனுப்பிய கே பீ, தவறாமல் ராணுவப் புலநாய்வுத்துறைக்கும் இக்கப்பல்களின் அமைவிடம், பாதைகள் தொடர்பான தகவல்களை வழங்கிவரத் தொடங்கினார். கே பீ யிடம் இருந்து தமக்குக் கிடைத்த வரப்பிரசாதமான புலிகளின் கப்பல்கள் தொடர்பான துல்லியமான தகவல்களை அடிப்படையாகக் கொண்டு இலங்கை விமானப்படையும் கடற்படையும் புலிகளின் ஆயுதக் கப்பல்களை நடுக்கடலில் தாக்கியழித்துக்கொண்டிருந்தன. இறுதியுத்த காலத்தில் கடுமையான ஆயுதத் தட்டுப்பாட்டினை எதிர்கொண்டிருந்த புலிகளுக்கு கே பி யின் மூலம் கொள்வனவு செய்யப்பட்டு தாயகத்திற்கு கொண்டுவரப்படும் என்று அவர்கள் நம்பிக்கையுடன் காத்திருந்த பல ஆயுதக் கப்பல்கள் அதே கே பி யினால் அரசிற்குக் காட்டிக்கொடுக்கப்பட்டு ஒன்றன் பின் ஒன்றாக கடலில் தாக்கியழிக்கப்பட்டமை கடும் அதிர்ச்சியினை ஏற்படுத்தியிருக்கும். கே பியின் ஊடாக தமக்குக் கிடைத்த விலைமதிப்பற்ற புலிகளின் ஆயுதக் கப்பல்கள் தொடர்பான தகவல்களையடுத்து மிகுந்த உற்சாகத்துடன் செயல்ப்பட்ட கபில ஹெந்தவிதாரனவும் அவரது இலங்கை பாதுகாப்புத்துறையும் தமது திட்டத்தின்படி புலிகளுக்கான ஆயுத வழங்கல்கள் முற்றாக வரண்டுபோவதுகண்டு மகிழ்வுடன் காணப்பட்டதாக இந்திய உளவுத்துறை மேலும் கூறுகிறது. புலிகளுக்கான ஆயுத வழங்கல்களைத் தடுத்து நிறுத்தி, இறுதிப்போரில் முற்றாக அவர்களை அழிப்பதற்கான கே பியின் உதவிக்குப் பிரதியுபகாரமாக இலங்கைக்கு அவர் மீளவும் வந்து அரசியலில் பங்களிப்புச் செலுத்தும் வசதிகளை ஏற்படுத்திக் கொடுப்பதாக அரசாங்கம் அவருக்கு உறுதியளித்திருந்தது. கே பியினை இலங்கைக்கு கொன்டுவரும் தமது திட்டத்தினை செயற்படுத்தவே மலேசியாவில் இடம்பெற்ற கடத்தல் நாடகம் கே பி யினாலும், இலங்கை அரசாலும் திட்டமிடப்பட்டு அரங்கேற்றப்பட்டதாக இந்திய அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். கே பி யின் கைதில் மலேசிய அரசாங்கம் தலையீடு செய்யவில்லை என்றும் தெரியவருகிறது. மலேசியாவில் கூலிக்கு வேலைசெய்யும் சில ஆயுததாரிகளின் உதவியுடன் கே பி கைதுசெய்யப்பட்டதாக நடத்தப்பட்ட நாடகத்தில் , மலேசிய அரசும் இலங்கை அரசும் சேர்ந்தே இந்தக் கைதில் ஈடுபட்டதாக செய்தி கசியவிடப்பட்டதன் மூலம் மலேசிய அரசும் தமிழருக்கெதிரான தனது நடவடிக்கைகளைத் தீவிரப்படுத்துவதாக உள்ளூரில் காட்டிக்கொள்ள ஒரு சந்தர்ப்பமும் ஏற்படுத்திக் கொடுக்கப்பட்டது. ஏற்கனவே கே பி இற்கும், கபில ஹெந்தவிதாரனவிற்கும் இடையில் செய்துகொள்லப்பட்ட திட்டத்தின் அடிப்படையில் இக்கைது நாடகத்தில் கே பி எதிர்ப்பின்றி கைதாவது போன்று பாசாங்கு செய்ய, இலங்கை அரசு இக்கைதினை தனது புலநாய்வுத்துறையின் வெற்றியாகப் பறைசாற்றிக்கொண்டது. தனிப்பட்ட விமானத்தில் கொழும்பிற்குக் கொண்டுவரப்பட்ட கே பி, ஊடகங்களின் பார்வையிலிருந்து விலக்கப்பட்டு, மிகவும் பாதுகாப்பாக அரசாங்கத்தின் ரகசிய இடமொன்றிற்கு அழைத்துச் செல்லப்பட்டிருக்கிறார். புலிகளை வீழ்த்தி முற்றாக அழிப்பதற்கு கருணா இலங்கையரசிற்குச் செய்த பங்களிப்பைக் காட்டிலும் கே பி செய்த துரோகம் அதிகமானது என்று நம்பப்படுகிறது. கே பி இற்கு வழங்கப்பட்டிருக்கும் ஆடம்பரச் சலுகைகளும், வசதிகளும் புலிகளை வீழ்த்த முன்னின்று போராடிய ராணுவத் தளபதி சரத் பொன்சேக்காவிற்குக்கூட எக்கட்டத்திலும் வழங்கப்பட்டிருக்கவில்லையென்பதும், இன்று அரசுக்கெதிராகச் செயற்பட்டார் என்கிற காரணத்திற்காக சிறையில் அவர் அடைக்கப்பட்டிருக்கிறார் என்பதும் குறிப்பிடத் தக்கது. இலங்கை அதிகாரிகளின் கூற்றுப்படி புலிகளின் ஆயுதக் கப்பல்கள் தொடர்பாக மிகவும் சரியான தருணத்தில் தமக்கு வழங்கப்பட்ட துல்லியமான தகவல்களே அக்கப்பல்களை அழித்து, புலிகளின் ஆயுத வழங்கல்களைத் தடுத்து, அவர்களின் முதுகெலும்பினை உடைக்க உதவின என்று உறுதியாக நம்புகிறார்கள். இதற்குப் பிரதியுபகாரமாகவே கே பி கேட்கும் அனைத்து சலுகைகளையும் அரசு அவருக்குச் செய்துகொடுத்து வருவதாகவும், அரசியலில் அவர் செயற்படுவதற்கான வெளியினை அரசே ஏற்படுத்திக் கொடுக்க முன்வந்திருப்பதாகவும் தெரிகிறது. இலங்கையின் நல்லிணக்க இணக்கப்பட்டு கவுன்சிலின் அமர்வுகளுக்கு கே பீ யும், சரத் பொன்சேக்காவும் நிச்சயம் சாட்சிகளாக இருக்கக் கூடியவர்கள், ஆனால், அவர்கள் இருவரையும் ஏதோ ஒருவகையில் இந்த அமர்வுகளிலிருந்து அகற்றிவருகிறது இலங்கையரசு. ஆயுத நடவடிக்கைகளில் ஈடுபடாத புலிகளின் அரசியல்த்துறைத் தலைவர்களான பாலகுமார், யோகி ஆகியோர் ராணுவத்தினரிடம் சரணடைந்த வேளையில் கடுமையான சித்திரவதைகளுக்கு உட்படுத்தப்பட்டு படுகொலை செய்யப்பட்டிருக்கும் நிலையில், புலிகளின் போராட்டக் காலத்திலிருந்து இறுதிவரை அவர்களின் சர்வதேச ஆயுத முகவராகச் செயற்பட்டு வந்த கே பீற்கு அரசின் செல்லபிள்ளை எனும் அந்தஸ்த்துக் கொடுக்கப்பட்டு வருவதுபற்றி பலரும் கேள்வியெழுப்பி வருகின்றனர். அரசுக்குச் சார்பான நடவடிக்கைகளில் இறங்கியுள்ள கே பி, தற்பொழுது புலம்பெயர் நாடுகளில் புலிகளின் செயற்பாட்டாளர்களாக இருந்து வரும் சிலரைத் தொடர்புகொண்டு, மீதமிருக்கும் புலிகளின் சர்வதேச வலையமைப்பினை முற்றாகச் சிதைக்கும் கைங்கரியத்தில் ஈடுபடுத்தப்பட்டிருக்கிறார் என்றும் தெரிய வருகிறது. http://www.srilankaguardian.org/2010/08/kp-and-sl-government-must-tell-truth.html

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.