கிரிப்டோ பற்றிய உங்களதும் கோசானினது புரிதல் சிறப்பானது, ஆனால் எனக்கு கிரிப்டோ பற்றிய புரிதல் பூச்சியம், நீங்கள் கிரிப்டோவில் தற்போது முதலிடுவது ஏன் வாய்ப்பானது என கூறுகிறீர்கள், விலை குறைவாக இருப்பதாலா? அல்லது விலை இதற்கு மேல் குறையாது என நினைக்கிறீர்களா, அதற்கு ஏதாவது காரணம் உண்டா? (Fundamental, Technical or Market sentiment)
எனது கிரிப்டோ தொடர்பான கருத்து வெறும் Technical analysis அடிப்படையில் கூறப்படுவதுதான். அதுவும் எனது Technical analysis அறிவு அடிப்படை அறிவு மட்டுமே, அதனால் அதில் பல தவறுகள் இருக்கலாம். நான் மேலே கூறியது போல விலை இறங்காமல் இருப்பதற்கு சாத்திய கூறுகள் அதிகம்.
Fundamental அறிவு பூச்சியம் என்றே சொல்லலாம், கிரிப்டோ மட்டுமல்ல அனைத்து சந்தைகளிலும் எனது Fundamental அறிவு பூச்சியம். ஆனால் எனது முதலீட்டினை Fundamental analysis அடிப்படையிலேயே ஆரம்பித்தேன்.
நான் முன்பு ஒரு மருத்துவ நிறுவனத்தில் வேலை செய்தேன், அந்த நிறுவனம் மிக பெரிய பன்னாட்டு நிறுவனம், அந்த நிறுவனம் அவுஸ்திரேலியாவில் உள்ள ஒரு சிறிய மருத்துவ நிறுவனம் ஆராய்சி நிலையில் ஒரு தொழில்னுட்பத்தை கண்டுபிடித்திருந்த, (VAST Platform) தொழில்னுட்பத்தை 240 மில்லியனுக்கு வாங்கியிருந்தார்கள்.
மேலதிக ஆராய்சிகான செலவை எமது நிறுவனம் ஏற்றுக்கொண்டதுடன் அந்த தொழில்னுட்பத்தில் எமது நிறுவனம் தயாரிக்கும் மருந்தில் வரும் வருமானத்தில் ஒரு பகுதியை வழங்க ஒத்து கொண்டது. இது நிகழ்ந்தது 2013 இல் அந்த தொழில்னுட்பத்தினடிப்படையில் மருந்து தயாரிப்பு 2020 அளவில் ஏற்படும் என கூறினார்கள்.
இந்த ஒப்பந்தம் கைசாத்தாகிய 3ஆம் நாள் அந்த சிறிய நிறுவனத்தின் பங்கினை எனது கையிருப்பில் இருந்த பெரும் பகுதியான பணத்தில் 0.41 சத விலை படி வாங்கினேன்.
விலை தொடர்ச்சியாக இறங்க ஆரம்பித்தது, எனக்கு விளங்கவில்லை ஒரு சிறிய நிறுவனம் பெரிய நிறுவனத்துடன் ஒப்பந்தம் கைசாத்திட்டுள்ளது விலை ஏற வேண்டும் அதற்கு பதிலாக ஏன் இறங்குகிறது?
ஆனால் ஒன்று மட்டும் புரிந்தது அந்த நிறுவனம் ஒரு தங்க முட்டையிடும் வாத்து ஏதோ ஒரு தற்காலிக காரணமாக விலை இறங்குகிறது, எனவே மிகுதியிருந்த காசில் 0.35 விலை படி இன்னுமொரு தொகுதி பங்குகள் வாங்கினேன்.( Beginners mistake)
ஒரு மாதத்திற்குள்ளாக கிட்டத்தட்ட அரைவாசி விலையை நெருங்குவது போல இருந்தது. மே மாதமளவில் அந்த பங்கு முழுவதையும் சந்தை விலைப்படி விற்றேன் 0.28 படி அதுதான் அப்போது ஆகக்குறைந்த விலை.
எனது திட்டம் விலை மேலும் குறைந்த பின் அதை திருப்பி வாங்குவது, அத்துடன் அந்த இழப்பினை வரியில் தள்ளுபடி செய்யலாம் (ஆனால் அவ்வாறு வரி சலுகை பெற முடியாது என்பதை பிறகு அறிந்து கொண்டேன்).
நான் விற்ற 6 மாதத்திற்குள்ளாக கிட்டத்தட்ட 0.80 மேல் விலை சென்றது ஆனால் அதனை என்னால் திருப்பி வாங்க முடியவில்லை ஏனென்றால் நான் விற்ற 0.28 தான் மிக குறைந்த விலை.
சிறிது காலத்தின் பின் அந்த சிறிய நிறுவனத்தின் பங்கு விலை வீழ்ச்சியடைந்து, இறுதியில் காணாமல் போய்விட்டது.
பல முதலீட்டாளருக்கு கை கொடுக்கும் Fundamental analysis எப்போதும் எனக்கு மட்டும் காலை வாரிவிடுகிறது.
பங்கு சந்தை பற்றிய எந்த அறிவுமில்லாத காலத்தில் வாங்கிய பங்கு, பின் அதனை அவசரப்பட்டு நட்டத்திற்கே விற்றதை நினைக்க மனவருத்தமாகவிருந்தது, ஆனால் இப்போது அதனை நினைத்து பார்க்கும் போது அந்த வர்த்தகத்தில் நான் செய்த ஒரே சரியான விடயம் அந்த பங்குகளை தெரிந்தோ தெரியாமலோ விற்றதுதான், ஏனென்றால் விலை ஏன் இறங்குகிறது என தெரியவில்லை, அதற்குமேலும் அந்த பங்குகளை வைத்திருந்து ஒரு வேளை அதற்கு மேலும் விலை இறங்கி, விலை ஏறாமலே அந்த பங்கு காணாமல் போயிருந்தால் முழு பணத்தினையும் இழந்திருப்பேன்.