நீங்கள் இருவரும் சொல்லுவது ஓரளவுக்கு உண்மை. இருவருமே அடிமை முறையை கொண்டுதான் தங்களை வளப்படுத்தினார்கள், மெக்ஸிக்கர்கள் அடிமை முறையை சட்டப்படி முதலில் முடிவுக்கு கொண்டு வந்தார்கள், அனால் அமெரிக்கா கொஞ்சம் லேட். ஆங்கிலேயர்கள் infrastructureஐ நன்றாக கவனித்து தங்களுக்கு உட்பட்ட இடங்களை வளப்படுத்தினார்கள், ஸ்பானியர்கள் இந்த விடயத்தில் அவ்வளவு சொல்லும்படியாக இருக்கவில்லை. இருவருமே இங்குள்ள மக்களுடன் கலந்த முறைகளில் வேறுபாடு உண்டு. வெள்ளை அமெரிக்கர்கள், பெரும்பாலானவர்கள் ஜெர்மானியர்கள், அடுத்து ஐரிஷ் உம் ஆங்கிலேயர்களும் , இங்குள்ள native மக்களுடன் அவ்வளவாக கலக்கவில்லை, ஆனால் ஸ்பானியர்கள் நன்றாகவே கலந்தார்கள். இதன் காரணமாக இந்தியாவில் இருப்பதுபோல் மெக்சிக்கர்களிடமும் ஒருவகை சாதி முறை உண்டு. கலப்பு குறைந்த, வெள்ளையின தோற்றம் கொண்டவர்கள் உயர் சாதிகளாகவும், நன்றாக கலந்தவர்கள் குறைந்த சாதிகளாகவும் கருதப்படுவதாக மெக்ஸிகோவில் இருந்து வந்த ஒருவன் சொன்னான், எவ்வளவு தூரம் இவை அங்கெ நடையின்முறையில் இருக்கிறது என்பது தெரியவில்லை. இந்த கலப்பின் அளவு விஞ்ஞானரீதியானது நிருபிக்கப்பட்டதல்ல, நமது சாதி போன்ற ஒரு சமூக கட்டமைப்பு (Social Construct)
தற்பொழுது அமரிக்காவும் மெக்ஸிகோவும் சில இடங்களை, native மக்களுக்குரிய தனி நாடுகளாக அங்கீகரித்துள்ளார்கள். அமெரிக்காவில் அவர்களுக்கும் அவர்களின் இடங்களுக்கும் வரிகள் மற்றும் இதர சலுகைகள் நிறைய உண்டு. பக்கங்களில் இருப்பவர்கள் அங்கு சென்று சாமான்களும் வாங்கிக்கொண்டு எரிபொருள் நிரப்பிக்கொண்டு வருவார்கள். பொருளாதார நிலைமைகளினால், மெக்ஸிகோவில் இவை அவ்வளவாக நன்றாக நடைமுறைப்படுத்தப்படுவதில்லை. இந்த கதை எவ்வளவு தூரம் உண்மை என்று தெரியவில்லை, முன்பு அங்கீகரிக்கப்பட்ட செவ்இந்தியர்களின் தலைவர்கள், எவரையுமே தங்கள் இனத்தில் சேர்க்கலாம், அப்பிடி சேர்த்தவர்கள் உடனடியாக அமெரிக்கா குடியுரிமை பெறுவார்கள், சில சீனர்கள் இப்படி அவர்களின் இனத்தில் சேர்ந்து அமெரிக்கர்கள் ஆனார்கள், பின்பு இந்த முறையை ஒளித்து விட்டார்கள் என்று ஒரு கதை உலாவியது.
தமிழ் சிறி,
எனது பிள்ளைகளுக்கு படிப்பதுக்கு உதவி செய்யும்பொழுது அந்த பாடப்புத்தகங்களிலில் இருந்து நான் இவற்றை நிறைய அறிந்து கொண்டேன். கொலம்பஸ் இறங்கியது கிழக்கு கரை. 1600 கடைசியிலும் 1700 ஆரம்பத்திலும், மெக்ஸிகோவில் இருந்து அமெரிக்காவின் மேற்கு பக்க மாநிலங்கலில் ஸ்பானிஷ் குடியேற்றங்கள் வேகமாக நடைபெற்றது. ஸ்பெயின் அரசரின் கட்டளைக்கு இணங்க, முறைப்படுத்தப்பட்ட குடியேற்றங்கள் நடைபெற்றது. படைவீரர்களுடன், பாதிரியார்களும் ஆண்களும் பெண்களுமான குழுவாக சென்று குடியேறினார்கள். அமெரிக்கா-மெக்ஸிகோ யுத்தம் நடந்தது 1848இல். அதன்முடிவில் பல மாநிலங்களை/நிலங்களை அமெரிக்கா பெற்றுக்கொண்டது. அமெரிக்காவின் கிழக்கு பக்கங்களில் (அதிக மக்கள் கொண்ட இடங்கள்) ஆங்கிலேயர்களும், நடுப்பகுதிகளில் பிரான்ஸ் உம், தென் அமேரிக்காவில் இருந்து, மெக்ஸிகோ மற்றும் அமெரிக்காவின் மேற்குவரைக்கும் ஸ்பானியர்களும் ஆதிக்கம் செலுத்தினார்கள். கிழக்கின் சில பகுதிகளில் (உதாரணம் நியூயார்க், Delaware) Dutch West India கம்பெனி மூலம் ஹாலந்தும் ஆதிக்கம் செலுத்தி செவ்விந்தியர்களுடன் வியாபாரம் செய்தார்கள்.
1776 இல் கிழக்கில் இருந்த 13 மாநிலங்கள் பிரித்தானியாவிடம் இருந்து சுதந்திரம் பெற்றது, பிறகு Louisiana மற்றும் சில நடுப்பகுதிகளை பிரான்ஸின் நெப்போலியன் உடனான ஒப்பந்தத்தின் மூலம் வாங்கினார்கள், பிறகு மெக்ஸிக்கோவிடம் இருந்து மேற்கு பகுதிகளை பிடித்தார்கள், வடஅமேரிக்காவில் ரஷ்யா இருப்பது நல்லதல்ல என்ற காரணத்தினால், கிட்டடியில் அலாஸ்காவை ரஷ்யாவிடம் இருந்து வாங்கி சேர்த்தார்கள். ரஷ்யாவிற்கும் அலாஸ்காவுக்கும் இடைப்பட்ட கடல் பகுதியில் இருக்கும் இரண்டு சிறிய தீவுகளுக்கிடையில் எல்லை பகுதியை வகுத்தார்கள். ஒரு தீவு ரஷ்யாவிடமும் மறு தீவு அமேரிக்காவிடம் இருக்கிறது. தற்பொழுது அமெரிக்காவுக்கும் ரஷ்யாவுக்கும் இடைப்பட்ட தூரம் வெறும் 2.4 மைல்கள் மட்டுமே.
நான் எனக்கு தெரிந்தவற்றை பொதுவாக, மேலோட்டமாகவே எழுதியுள்ளேன், தவறுக்கு இருக்கலாம்.