Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Leaderboard

  1. விசுகு

    கருத்துக்கள உறவுகள்
    14
    Points
    34974
    Posts
  2. தமிழ் சிறி

    கருத்துக்கள உறவுகள்
    9
    Points
    87992
    Posts
  3. nedukkalapoovan

    கருத்துக்கள உறவுகள்
    8
    Points
    33035
    Posts
  4. goshan_che

    கருத்துக்கள உறவுகள்
    6
    Points
    19139
    Posts

Popular Content

Showing content with the highest reputation on 02/11/23 in all areas

  1. கொழும்பில எல்லோருக்கும் தெரிந்த ஒரு இடம் அல்லது விடயம் அங்கொட. அதோட அங்க போற இபோச BUS இலக்கம் 134 என்றதும் தெரியும். காரணம் என்ன? எதுக்கு கொழும்பில இவ்வளவு இடம் இருக்க இந்த இடமும் BUS இலக்கமும் நமக்கு பாடம் என்று கொஞ்சம் மண்டைய சுத்தினால் நமக்கே உறைக்கும் மற்றவரை பைத்தியம் அல்லது மட்டம் தட்ட நமக்கு இருக்கும் ஆர்வம் தான் காரணம் என்று. தம்பி 134 இல் ஏறியே வருகிறீர் என்பதும் இவனை 134 இல் ஏற்றி விடுங்கோ என்பதும் பெரிய பகிடி அப்ப. ஏன் இப்பவும் தான். அதாவது ஒருவருடைய மனதில் ஏற்படும் சிறு பிசகை அல்லது சிறியதொரு மன அழுத்தத்தை நாம் ஏளனமாக அல்லது விளையாட்டாக எடுத்துக்கொள்கின்றோம்? நான் பிரான்சுக்கு வந்தும் இந்த மனநிலை தான். நான் இருக்கும் வீட்டிலிருந்து ஒரு 100 மீற்றரில் மனநிலை வைத்தியசாலை இருக்கிறது. மனைவி மக்களுடன் சிரிப்பதுண்டு. உங்களை அடிக்கடி கொண்டு திரிய முடியாது என்று தான் பக்கத்தில் வீடு எடுத்தனான் என்று. ஆனால் இது பற்றி கொஞ்சம் ஆளமாக அல்லது தற்போதைய சூழ்நிலைப்படி பார்த்தால் மனநிலை வைத்தியரைப்பார்ப்பது என்பது சிறியவர் தொடக்கம் பெரியவர்கள் வரை இன்று சாதாரணமாகிவிட்டது நித்திரை வராததிலிருந்து வேலை மற்றும் படிக்க ஆர்வமில்லாதவர் வரை சர்வசாதாரணமாக மனநிலை சார்ந்த வைத்தியர்களின் ஆலோசனைகளைக்கேட்பது அவர்களுடன் தொடர்பில் இருப்பது நாளாந்த நிகழ்வாகிவிட்டது. இன்றைய இயந்திர வாழ்வு காரணமாக அதற்கு அடுத்த கட்டமாக அதற்கு தேவையான மாத்திரைகளை பாவிப்பதும் சாதாரண நிகழ்வுகள். ஆனால் தமிழர்கள் நாம் இன்றும் இவை கொஞ்சம் குறைவான ஆட்கள் என்ற மனநிலையுடன்??? அவர்களை ஒதுக்கியபடி??? நமது குடும்பத்தில் கூட அவ்வாறு யாருக்கும் இவ்வாறான வைத்திய தேவைகள் இருப்பின் சமூதாய பயத்தைக்காட்டி நாம் எதை விதைத்தோமோ அதையே இந்த சமூகம் பரிசாக நமக்கு தந்துவிடக்கூடும் என்ற தேவையற்ற பயம் மற்றும் குறுகிற மனப்பான்மையுடன் எவ்வளவு நாளைக்கு இன்னும்??? 25வது சுய ஆக்கத்திற்காக விசுகு...
  2. இன்றைய சமூகத்துக்கு மிகவும் அவசியமான கருத்துக்கள் பல விவாதிக்கக் கூடிய தலைப்பு.......! 70 வயதுக்கு மேல் கொஞ்சம் மறதி வரத்தான் செய்யும் அதையெல்லாம் மனநிலை பிறழ்த்தலுடன் ஒப்பிடக்கூடாது.........உது காரியவிசர் என்றெல்லாம் பேசக்கூடாது.......(அட என்ர மைண்ட் வாய்ஸ் எல்லாம் வெளிய வருது போலக்கிடக்கு) 😂 5/6 வருடங்களுக்கு முன் மகளுடன் காரில் வரும்பொழுது அவதான் ஓடிக்கொண்டு வந்தவ, வீதிமாறி ஒரு இடத்துக்குள் வண்டி வந்து நிக்குது பெயர் பலகையைப் பார்த்தால் அது ஒரு மனநலக் காப்பகம்........நானும் "ஏன் பிள்ளை நான் இன்னும் கொஞ்சநாள் இருந்து உங்கட கலியாணங்கள் எல்லாம் பார்த்தபின் இஞ்ச கொண்டுவந்து விடலாம்தானே என்று சொல்ல அவளுக்கு சிரிப்பு வந்திட்டுது......! 😂
  3. பகிடி பகிடியாக தொடங்கி ஒரு சீரியசான விடயத்தையும் எழுதியுள்ளீர்கள் சிறி அண்ணா.. நல்ல விடயம்.. உங்களது ஜேர்மன் ஆள் கூறியது என்னளவில் சரியே இன்றைய நிலையில் அங்கே போய் ஒரு பொது விடயங்களிலும் மூக்கை நீட்டாமல் இருந்தால் கொஞ்சம் மரியாதையாக இருக்கலாம்..இங்கே சட்டம் சுதந்திரம் என்பவற்றை அனுபவித்து விட்டு அங்கே போய் இது பிழை..அது சரி என்றால் அங்கே இருப்பவர்களுக்கும் எங்களுக்கும் வீண் கரைச்சலைத்தான் உருவாக்குவோம்.. எனது அனுபவத்தில் பணம் மட்டும் எதையும் தீர்மானிக்கும் கருவியில்லை. மருந்து இல்லை என்றால் அவ்வளவுதான். சில சமயங்களில் பொருட்களும் இல்லை. இந்த நிலையை மாற்ற முடியாது ஏனெனில் நாடு இவ்வளவு கீழ் நோக்கிப் போயும் கூட தமிழர்களுக்கு நல்லது நடக்க கூடாது என நினைக்கும் பெரும்பான்மையே அதிகம். அதே போல உண்மையான அரசியல் தலைவர்களைத் தெரிவு செய்ய வேண்டும் என்ற அக்கறையும் அங்கே உள்ள எங்களது மக்களுக்கு இல்லை(என்னைப் பொறுத்த வரை). எங்கள் எல்லோருக்கும் நாங்கள் பிறந்த நாடு என்ற பாசம் என்பது இருந்தாலும் கூட நடைமுறையில் சாத்தியமானதைத்தான் செய்யலாம்.. இது அங்கே உள்ளவர்களுக்கும் நன்கு விளங்கும். ஆனால் எங்கட புலம்பெயர்ந்தவர்கள் அங்கே போய் செய்யும் வேலைகளால் என்ன மாதிரியான மறைமுக விளைவுகளை ஏற்படுத்துகிறார்கள்/ஏற்படுத்தியுள்ளார்கள் என்பதை அங்கே போகும் சமயங்களில் உணரமுடிகிறது..
  4. வாழ்க்கையின் ஒரு சில நேரம்களில் ஏற்படும் மனஉலைசசல் அல்லது பொறுக்க முடியாத மன குமுறல்கள் போது மூளை பிழையான நடவடிக்கைகளை எடுக்க தொடங்கும் ஆரம்பத்தில் கவனித்து அதற்க்கு தகுந்த வைத்தியம் எடுக்க காய்ச்சல் தடிமன் போல் வந்து போய் விடும் ஆனால் எங்கள் XXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXX ஒருத்தனுக்கு மனநிலை பிறள்வு வந்தால் அது ஏதோ பாரதூரமான வியாதி போல் உலகம் முழுக்க போன் போட்டு இன்னாரின் இன்னாருக்கு மண்டை தட்டி விட்டது என்று செய்தி பரப்பி கடசியில் சிறிய அளவான பிறள்வை பெரிதாக்கி விட்டு வேடிக்கை பார்ப்பார்கள் ஒரு நோயாளிக்கு அன்பும் அரவணைப்பும் தேவைப்படும் முக்கிய நேரத்தில் நக்கலும் நையாண்டியமாக பார்த்து இங்கு வந்த 90 களில் வந்த இளைய உயிர்கள் ரெயில்வே மதகுகளில் இருந்து குதித்து தற்கொலை செய்து கொண்டவர்கள் எனக்கு தெரிய ஐந்துக்கும் மேல் .
  5. பகிர்வுக்கு நன்றி ...விசுகர் . தலையங்கத்தில் இன்னொரு மயக்கமும் உண்டு 1...அந்த பிள்ளை கொஞ்சம் புத்தி குறைவானது 2. அவை கொஞ்சம் (சாதி )குறைவான ஆட்களாம்.
  6. வேறு நாட்டினர் எந்த நாட்டுக்கு போய் குடியேறினாலும் தாம் பிறந்த நாட்டை மறக்க மாட்டார்கள் . தாம் பிறந்த நாட்டுக்கு நன்றி விசுவாசமாய்த் தான் இருப்பார்கள்...உதாரணத்திற்கு இந்தியர்கள் ஐந்தாம் தலைமுறையாய் இங்கு வாழ்ந்தாலும் , ஐந்தாம் தலைமுறை குழந்தைக்கும் அவர்களது பாஷை தெரிந்திருக்கும் ,தங்கள் மூதாதையர்களது நாட்டை பற்றி தெரிந்திருக்கும். ஆனால் நாம், இலவசக் கல்வியில் படித்து,இலவச மருத்துவம் எல்லாம் பாவித்து வளர்ந்து விட்டு எந்த விதத்திலும் போரில் பாதிக்க படாமல் [என்னையும் சேர்த்து தான் ] இங்கு வந்து அடைக்கலம் கோரி புகலிடம் எடுத்த பின் அது ஒரு நாடா? அங்கு மனிசன் இருப்பானா என்று சீன் காட்டுவோம்... எந்த விதத்திலாவது நாம் பிறந்த நாட்டுக்கு ஏதாவது செய்து இருப்போமா என்று பார்த்தால் இல்லை. முந்தி போரை குற்றம் சாட்டினார்கள்...இப்ப பொருளாதாரத்தை குற்றம் சாட்டுகிறார்கள் ...ஊரில் போய் இருக்க விருப்பமில்லாவிட்டால் போக வேண்டாம் ....யாராவது உங்களை வெத்திலை பாக்கு வைத்து அழைத்தார்களா? வளர்ந்துவரும் நாடுகளில் பொருளாதார சிக்கல்கள் இருக்கும் தான்..போர்,ஈஸ்டர் குண்டு வெடிப்புகள் ,கொரோனா , அதை விட ஊழல் நிறைந்த அரசியல்வாதிகள் அதனால் நாடு பாதிக்கப்பட்டு இருக்குது என்பது உண்மை தான் ...அந்த நேரத்தில் மருந்துகளுக்கு தட்டுப்பாட்டு ஏற்பட்டது என்பது உண்மை தான் ...அதை எப்படி நிவர்த்தி செய்யலாம் என்பதை விட்டு , எம்மால் எப்படி உதவலாம் என்பதை விட்டுட்டு உதவ விருப்பம் இல்லாட்டில் பேசாமல் இருப்பது நல்லது . அங்கு இருப்பவர்கள் மனிசர்கள் இல்லையா?...அங்கு இருக்கும் பெரிய பணக்காரர்களுக்கும், பெரும் பதவியில் இருப்பவர்களுக்கும் நாட்டை விட்டு போவது நாகரீகமாய் போய் விட்டது ...ஒருவர் போனால் அவர்களை பார்த்து தாமும் போக வெளிக்கிடுவது , வெளி நாட்டு மோகத்திற்காய் ஆயிரம் கதைகள் சொல்ல வேண்டி இருக்குது ஊர் ஆகோ ,ஓகோ என்று இருக்குது என்று சொல்ல வரவில்லை ஆனால் இப்ப ஊரை விட்டு வெளிக்கிடுபவர்கள் எல்லோரும் அந்த நேரத்தில் போரினால் பாதிக்க படாமல் ஒருத்தரை பார்த்து மற்றவர்கள் வெளிக்கிடும் ஆட்கள்....ஓவர் பில்டப் விடும் ஆட்கள்
  7. என்னுடன் தற்போது Reha Clinic‘ல் தெரப்பி செய்து கொண்டு இருக்கும், 25 வயதுடைய ஜேர்மன் இளைஞனும் அவனது நண்பியும், சென்ற வருடம் 2022 மாசி மாதமளவில் “Gotha Go Home“ போராட்டம் மும்முரமாக நடந்து கொண்டிருந்த போது இலங்கைக்கு நான்கு கிழமை ✈️ சுற்றுலாவில் 🛩 சென்றவர்கள். பெடியனுக்கு… 25 வயது என்ற படியால், அவன் என்றே தொடர்ந்து குறிப்பிடுகின்றேன். 😁 அவன் போன நேரம்… காலி முகத் திடல் மட்டுமல்லாது பல இடங்களிலும் ஆர்ப்பாட்டாங்கள் நடந்து கொண்டு இருந்தாலும்… தங்களை அது பெரிதாக பாதிக்கவில்லை என்றும், பார்ப்பதற்கு சுவராசியமாக இருந்ததாக குறிப்பிட்டார். ஶ்ரீலங்கா போய் இறங்கிய நேரம் ஒரு ஐரோ 280 ரூபாய் இருந்தது என்றும், பிறகு தினமும் 📈 அதிகரித்து சென்று 380 ரூபாயில் வந்து நின்றது மகிழ்ச்சியாக இருந்தது என்று சொன்னார். ஒரு முறை 🚅 ரயிலில் போக… ரயில் நிலையத்துக்கு சென்று பயணசீட்டு கேட்ட போது, அங்கு இருந்த அரச 👨🏻‍✈️ ஊழியர் இனி ரயில் ஒண்டும் ஓடாது, வேண்டுமென்றால் மலிவான விலையில் வாடகைக் 🚙 கார், சாரதியுடன்… ஒழுங்கு செய்து தருவதாகவும், இலங்கையில் நிற்கும் காலம் முழுக்க அதனையே பாவிக்கலாம் என்றும்… ஒரு நாள் வாடகை 250 ஐரோ படி, மிகுதி மூன்று கிழமைக்கும் மொத்தமாக முற்பணம் செலுத்த வேண்டும் என்றும் அந்த ரயில் நிலைய அரச அதிகாரி கேட்டாராம். தான் ஹோட்டேலுக்கு போய் யோசித்து சொல்வதாக சொல்லிவிட்டு வந்துவிட்டாராம். அடுத்த நாள் பார்த்தால்… வழமை போல் ரயில் ஒடுவதாகவும். நல்ல காலம் ஒரு ஏமாற்று பேர் வழியிடம் இருந்து தப்பி விட்டதாகவும் குறிப்பிட்டார். 🚂 ரயிலில்… கதவருகே இருந்து… அவனும், நண்பியும் தொங்கிக் கொண்டு சாகசம் செய்தபடி போன தருணங்கள் மிக இனிமையான நிகழ்வுகளில் ஒன்றாக குறிப்பிட்டார். 🐘 யானையில் சவாரி செய்ததையும், யானையை தொட்டு குளிப்பாட்டியதையும் அடிக்கடி குறிப்பிடுவதோடு… மற்றைய ஜேர்மன்காரருக்கும் அந்தப் படங்களை காட்டி பெருமைப் பட்டுக் கொள்வார். 😀 நான் இலங்கையில் வசிக்கும் போது…. சிவனொளிபாத மலை, சிகிரியா போன்றவற்றை பார்க்கவில்லை என்று அறிந்ததும்… நான் பார்க்காததை, தான் பார்த்து விட்டதாக… அவருக்கு அற்ப சந்தோசமும் உள்ளது. 😂 உணவு வகைகளில்…. விதம் விதமான 🥬 மரக்கறி வகைகள் தமக்கு மிகவும் பிடித்தவை என்றும், தாம் மாமிசம் சாப்பிடாதவர்கள் என்பதால், தம் வாழ் நாளில் சாப்பிடாத 🥒 மரக்கறிகளை உண்டதாகவும், அதிலும் பிலாக்காய் கறியின் 🌶 சுவையையும் பாராட்டினார். 🍌 வாழைப்பழம் எல்லாம்… ஒரே மாதிரி என்று நினைத்துக் கொண்டிருந்த தனக்கு…. இலங்கை சென்ற பின்தான் தெரிந்ததாம் சிவப்பு, பச்சை நிறங்களிலும்… வித்தியாசமான அளவுகளிலும், சுவைகளிலும் வாழைப்பழங்களை பார்த்து ஆச்சரியப் பட்டதாக கூறினார். ஒரு முறை, தான் வாங்கிய ரயில் பயணச் சீட்டு குறிப்பிட்ட ரயிலுக்கு செல்லாது என தெரிந்து கொண்ட உள்ளூர் தம்பதிகள்.. தம்முடைய செலவிலேயே புதிய ரயில் பயணச் சீட்டை வாங்கித் தந்ததை நன்றியுடன் குறிப்பிட்டார். எப்போ, எங்கு… சாப்பிடப் போனாலும் தினமும் பருப்புக் கறியை தந்து, தனக்கு வெறுப்பு ஏற்படுத்தி விட்டார்களாம். 😂 ஜேர்மனிக்கு வந்து ஒரு வருடமாகியும் பருப்பை கண்டால் வெறுப்பாக இருக்குதாம். 🤣 பெடியன்… யாழ்ப்பாணம், நயினாதீவு எல்லாம் போயிருக்கிறான். 🥰யாழ்ப்பாண பயணம்தான்… இலங்கையிலேயே தனக்குப் பிடித்த இடம் என்றான். அது வரை, நான் அங்கு பிறந்ததாக அவனுக்கு சொல்லவில்லை. அவனாகவே சொன்ன கருத்து அது. ஏன் யாழ்ப்பாணம் பிடிக்கும் என்று கேட்ட போது… வெள்ளைக்காரர் ஒருவரும் இல்லாமல் தாங்கள் மட்டும் அந்த மக்களிடையே வித்தியாசமாக இருந்தது தனக்கு மிகவும் பிடித்துக் கொண்டதாக கூறினார். பிற்குறிப்பு: கிளினிக்கில் இருந்து கைத்தொலை பேசியில் எழுதியதால், பதிவை… வர்ணமயமாக மெருகூட்ட முடியாமைக்கு மன்னிக்கவும். இன்னும் இரண்டு நாள்தான் இங்கு இருப்பேன். பெடியனிடம் உங்கள் சார்பாக கேட்க வேண்டிய கேள்விகள் இருந்தால் கீழே எழுதவும். கேட்டு பதில் சொல்கின்றேன். 😁 புதன் கிழமை வீட்டிற்கு செல்வதால்… அதற்குப் பின் கேட்கும் கேள்விகளுக்கு பதில் வராது. 🤪 🤣
  8. யூரேக்கா...யூரேக்கா என்று நிர்வாணமாக வீதியில் ஓடிய ஆக்கிமிடிசு, தமிழராக இருந்திருந்தால் நிச்சயம் 134 பஸ்ஸில் ஏற்றி அனுப்பப் பட்டிருப்பார் என்பது மட்டும் உறுதி...! சிங்களவராக இருந்தால்...தொவில் சடங்கு நடத்தப்பட்டிருக்கும்! இது தான் நமது நாட்டின் நிலை....! நல்ல ஒரு சிந்தனையைத் தூண்டும் பதிவு, விசுகர்.....!
  9. கீழடி அகழாய்வு கூறும் தமிழர் வரலாறு: குதிரை எலும்புகள், நெற்பயிர் எச்சங்கள் ஆய்வில் கிடைத்திருப்பது ஏன் முக்கியம்? - பாகம் 2 #Exclusive முரளிதரன் காசி விஸ்வநாதன் பிபிசி தமிழ் 11 பிப்ரவரி 2023 பட மூலாதாரம், Archeological Survey of India படக்குறிப்பு, முதல்கட்ட ஆய்வுக்காக தோண்டப்பட்ட குழிகள் - கழுகுப் பார்வையில் கீழடியில் குதிரையின் எலும்புகள் கிடைத்திருப்பது தென்னிந்திய தொல்லியல் ஆய்வில் மிக முக்கியமானதாகக் கருதப்படுகிறது. சங்கப் பாடலான பட்டினப்பாலையில் குதிரை குறிப்பிடப்பட்டிருந்தாலும், அதன் எச்சங்கள் முதல் முறையாக கீழடியில்தான் கிடைக்கின்றன. கீழடி அகழாய்வு அறிக்கை குறித்த தொடர் கட்டுரையின் இரண்டாம் பாகம் இது. தற்போது கீழடி தொல்லியல் தளம் உள்ள இடத்தில் ஒரு காலத்தில் வைகை நதி ஓடியிருக்க வேண்டும். பிறகு நதி தன் பாதையை மாற்றிக் கொண்டுவிட்ட நிலையில், அங்கிருந்த வண்டலின் காரணமாக செறிவுமிக்க விளைநிலமாக கீழடி மாறியது. (தற்போது வைகை கீழடியிலிருந்து வடக்கில் சுமார் 2 கி.மீ. தூரத்தில் உள்ளது). இங்கு கிடைத்த உயிரியல் எச்சங்களை ஆய்வுசெய்தபோது, அதில் குறிப்பிடத்தக்க அளவில் நெற்பயிரின் எச்சங்களும் உமியும் கிடைத்திருப்பதை வைத்துப் பார்க்கும்போது, அங்கு பெரிய அளவில் நெற்பயிர் விளைவிக்கப்பட்டிருப்பது தெரிகிறது. இங்கு தொடர்ந்து விளைச்சல் அதிகரித்தது. குறிப்பாக நெற்பயிரின் விளைச்சல் தொடர்ந்து அதிகரித்ததன் காரணமாக இந்தப் பகுதியில் வர்த்தகம் அதிகரிக்க ஆரம்பித்தது. இதனால் ஏற்பட்ட உபரியால், உள்நாட்டு - வெளிநாட்டு வணிகமும் வர்த்தகமும் நடக்க ஆரம்பித்து. மெல்ல மெல்ல கீழடி ஒரு நகர்ப்புறமாக மாற ஆரம்பித்தது. இதனால், வளர்ச்சி அதிகரிக்க இந்தப் பகுதி ஒரு நகர்ப்புற மையமாகவே மாற ஆரம்பித்தது. கீழடியில் கிடைத்த விலங்குகளின் எச்சங்கள் புனேவில் உள்ள டெக்கான் கல்லூரிக்கு அனுப்பி வைக்கப்பட்டு ஆராயப்பட்டன. அதில் கிடைத்த முடிவுகளின்படி, பல்வேறு வகையிலான விலங்குகள் கீழடி பகுதியில் வளர்க்கப்பட்டுள்ளன அல்லது வாழ்ந்துள்ளன. பசு, காளை, எருமை, ஆடு, பன்றி, நாய் போன்ற வீட்டு விலங்குகளும் நீலான் மான் (Nilgai), மறிமான் (Antelope), புள்ளிமான் போன்ற மான் இனங்களும் இங்கே இருந்துள்ளன. பட மூலாதாரம், Archeological Survey Of India படக்குறிப்பு, கீழடியில் கிடைத்த விரிவான கட்டடத் தொகுதிகள். விலங்குகளின் எலும்புகள் கீழடி பகுதியில் பெரிய அளவில் விலங்குகளின் எலும்புகள் கிடைத்ததை வைத்துப் பார்த்தால், கீழடியின் பொருளாதாரத்தில் அவை முக்கியப் பங்கை வகித்திருக்கக்கூடும். எருமை, ஆடு, செம்மறியாடு ஆகியவையே கீழடி மக்களின் உணவுகளில் முக்கியப் பங்கு வகித்தன. அவற்றோடு ஒப்பிட்டால், உணவில் பன்றியின் பங்கு குறைவாகவே இருந்தது. வீடுகளில் இந்த விலங்குகளை வளர்த்ததுபோக, கொம்புகள், தோல் போன்ற பொருட்களுக்காக மிருகங்களை வேட்டையாடுவதும் கீழடியில் நடந்திருக்கிறது. காட்டு மாடுகள், காட்டெருமைகள் போன்றவை வேட்டையாடப்பட்டிருக்கின்றன. நாய்கள் செல்லப் பிராணிகளாகவோ, பாதுகாப்புக்காகவோ வளர்க்கப்பட்டிருக்கக்கூடும். பட மூலாதாரம், Archeological Survey of India ஆனால், கீழடியில் கிடைத்த விலங்கு ஆதாரங்களிலேயே மிகவும் கவனிக்கத்தக்கது குதிரை பற்றியதுதான். கீழடியில் இருந்த மக்கள் குதிரைகளை வளர்த்ததற்கான ஆதாரங்கள் கிடைத்திருப்பது தொல்லியல்ரீதியில் மிக முக்கியமானது. "நீரின் வந்த நிமிர்பரிப் புரவியும், காலின் வந்த கருங்கறி மூடையும், வடமலைப் பிறந்த மணியும், பொன்னும், குடமலைப் பிறந்த ஆரமும் அகிலும்" என்கிறது சங்க காலப் பாடலான பட்டினப்பாலை. அதாவது, "கடல் மூலம் கொணடுவரப்பட்ட வேகமாகச் செல்லக்கூடிய நிமிர்ந்த குதிரைகள், சரக்கு வண்டிகளில் கொண்டுவரப்பட்ட மிளகு மூட்டைகளும் வடமலையில் இருந்து வந்த தங்கமும் மேற்கு மலைகளில் இருந்து வந்த சந்தனமும் அகிலும்" என்பது இந்த வரிகளின் அர்த்தம். பட மூலாதாரம், Archeological Survey of India படக்குறிப்பு, தரையில் செங்கல் பாவிய தளங்களுடன் கூடிய கட்டடத் தொகுதிகள். ஆனால், தமிழ்நாட்டில் மட்டுமல்ல, தென்னிந்தியாவிலேயே தொல்லியல் தளங்களில் குதிரைகள் வளர்க்கப்பட்டதற்கான ஆதாரங்கள் மிகக் குறைவாகவே கிடைத்திருக்கின்றன. (ஆந்திர பிரதேசத்தில் உள்ள வரலாற்று ஆரம்ப கால தொல்லியல் தளமான கொட்டிப்ரோலுவில் நடந்த தொல்லியல் ஆய்வில் சமீபத்தில் குதிரை இருந்ததற்கான சான்றுகள் கிடைத்திருக்கின்றன.) இந்தப் பின்னணியில் பார்க்கும்போது, குதிரைகள் சங்க காலப் பாடலான பட்டினப்பாலையில் சொல்லப்படுவதைப்போல, வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்பட்டிருக்கக்கூடும். முயல் மற்றும் பறவைகளின் எலும்புகளும் கிடைத்திருக்கின்றன. ஆனால், மீனின் எலும்புகள் ஏதும் கிடைக்கவில்லை. நன்னீர் சங்குகள் கிடைத்திருக்கின்றன. இப்போதைப் போலவே அப்போதும் நத்தைகள் உணவாக இருந்திருக்கக்கூடும். பட மூலாதாரம், Amarnath Ramakrishna படக்குறிப்பு, கீழடியில் அகழாய்வு மேற்கொண்ட அமர்நாத் ராமகிருஷ்ணன் தலைமையிலான அணி. கீழடி பொருளாதாரத்தில் கால்நடைகளின் பங்கு ஒட்டுமொத்தமாகப் பார்க்கும்போது, கீழடியின் பொருளாதாரத்தில் கால்நடைகளுக்கு மிகவும் முக்கியமான பங்கு இருப்பது தெரிய வருகிறது. இது தொடர்பாக கூடுதல் ஆய்வு அங்கு நடத்தப்பட வேண்டும் என்கிறார் அமர்நாத் ராமகிருஷ்ணா. இந்த இரண்டு அகழாய்வுகளிலும் சேர்த்து மொத்தமாக 2,447 பானை ஓட்டு கிறுக்கல்கள் கிடைத்துள்ளன. பல தமிழ் பிராமி எழுத்துகளும் கிடைத்துள்ளன. 'திசன்' போன்ற பிராகிருத வார்த்தைகளும் கிடைத்துள்ளன. பட மூலாதாரம், Archeological Survey of India படக்குறிப்பு, கீழடியில் பல இடங்களில் இரட்டை அடுப்புகள் கிடைத்துள்ளன. "ஆனால், கீழடியில் கிடைத்த பிராகிருத வார்த்தைகள் இலங்கையின் தாக்கத்தில் வந்தவை. அதேபோல, இங்குள்ள தமிழ் பிராமி அல்லது தமிழி எழுத்து, அசோக பிராமியின் தாக்கத்தைக் கொண்டதல்ல. மாறாக இலங்கையில் கிடைத்த பிராமி எழுத்துகளோடு ஒத்துப்போகக்கூடியவை. எடுத்துக்காட்டாக, இங்கு கிடைத்த 'இ', 'எ' பிராமி எழுத்துகளுக்கும் அசோக பிராமிக்கும் வித்தியாசம் உண்டு. அவை இலங்கையில் கிடைக்கும் பிராமி எழுத்துகளுடன் நெருக்கமாக உள்ளன. அதேபோல, 'm' என்ற ஒலிக்குறிப்பைக் கொண்ட அசோக பிராமி எழுத்து பானை ஓடுகளில் இதுவரை கிடைத்ததில்லை," என்கிறார் அமர்நாத் ராமகிருஷ்ணா இந்திய தொல்லியல் துறை நடத்திய இரண்டு அகழாய்வுகளிலும் 88 கரிம பொருட்கள் கிடைத்தன. இவற்றில் 18 கரிமப் பொருட்கள் ஃப்ளோரிடாவில் உள்ள பீட்டா அனலிடிகள் லெபோரட்டரியில் ஏஎம்எஸ் ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டன. 5 கரிமப் பொருட்கள் புது டெல்லியில் உள்ள இன்டர் யுனிவர்சிடி அக்சலரேட்டர் சென்டரில் ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டன. இங்கு கிடைத்த பெரும் எண்ணிக்கையிலானை ஓடுகளை தெர்மோலூமினசென்ஸ் ஆய்வுக்கு உட்படுத்த வேண்டும் என்றும் இங்கு கிடைத்த காசுகளைத் தவிர பிற உலோகப் பொருட்களும் அவற்றின் உலோகத் தன்மை குறித்த ஆய்வுக்கு உட்படுத்தப்பட வேண்டும் என்றும் அமர்நாத் சுட்டிக்காட்டுகிறார். இந்த இரண்டு அகழாய்வுகளில் கிடைத்த முடிவுகளை வைத்துப் பார்க்கும்போது, தமிழ்நாட்டின் ஆரம்பகால வரலாற்றையும் சங்க காலத்தையும் மேலும் அறிந்துகொள்ள கீழடி மிக மிக முக்கியமான தொல்லியல் தளமாக இருக்கும் என்பதைப் புரிந்துகொள்ள முடியுமென அமர்நாத் ராமகிருஷ்ணா கூறியிருக்கிறார். பட மூலாதாரம், Archeological Survey of India படக்குறிப்பு, கீழடியில் அகழ்வாராய்ச்சியில் காலப்படிநிலையைக் காட்டும் படம். தொடர் ஆய்வுகளுக்கான தேவை வைகை நதிக் கரையில் அமைந்த ஒரு நகர நாகரீகத்தின் ஆரம்பக்கட்டத் தகவல்களை மட்டுமே இந்தத் தொல்லியல் ஆய்வு முடிவுகள் அளித்திருக்கின்றன என்றும் அந்தத் தொல்லியல் தளத்தில் மேலும் பல ஆய்வுகளைச் செய்ய வேண்டுமென்றும் அவர் கூறியிருக்கிறார். பெருங்கற்கால வாழிடங்களைப் பற்றி அறிந்துகொள்ளத் தேவையான மிகப்பெரிய ஆய்வுகள் ஏதும் தென்னிந்தியப் பகுதியில் பெரிய அளவில் செய்யப்பட்டதில்லை. மாறாக, இங்குள்ள பெருங்கற்காலப் பகுதிகள் அனைத்தும் இரும்புக் காலத்தோடு தொடர்புபடுத்தி முடிக்கப்பட்டுவிடுகின்றன. அதற்கு அருகில் உள்ள வாழிடப் பகுதிகள், அவற்றில் வாழ்ந்த மக்கள் ஆகியோர் குறித்து தொடர் ஆய்வுகள் மேற்கொள்ளப்படுவதில்லை. பட மூலாதாரம், Archeological Survey of India படக்குறிப்பு, தமிழ் பிராமி எழுத்துகள் பொறிக்கப்பட்ட பானை ஓடுகள். ஒரு பெருங்கற்காலத் தலமும் அதை ஒட்டிய வாழிடத்தலமும் கண்டறியப்படும்போது, எப்படித் தொடர் ஆய்வுகளை மேற்கொள்ள வேண்டும் என்பதற்கு தற்போது கீழடியில் செய்யப்பட்டுள்ள ஆய்வுகளை சான்றாகக் கொண்டு செயல்படலாம். அப்படிச் செய்யும்போது தமிழ்நாட்டில் பெருங்கற்காலப் பண்பாடு எப்படி வளர்ந்தது, தென்னிந்தியாவில் அதை ஒட்டிய பண்பாடுகள் தொடர்ந்து வளர்ச்சியடைந்தன என்பதைப் புரிந்துகொள்ள முடியும் என்கிறார் அமர்நாத் ராமகிருஷ்ணா. ஒட்டுமொத்தமாக இந்த ஆய்வின் முடிவுகளை எப்படிப் புரிந்துகொள்ளலாம்? பெருங்கற்காலப் பண்பாடு என்பது தமிழ்நாட்டில் சங்க காலம் எப்படி இருந்தது என்பதைச் சுட்டிக்காட்டுவதாகச் சொல்லலாம். சங்க கால நகர நாகரீகம் எப்படி இருந்தது என்பதை மேலும் அறிய, கீழடியில் விரிவான ஆய்வுகளைச் செய்ய வேண்டும். வேறு வார்த்தைகளில் சொல்வதாக இருந்தால், சங்க காலத்தில் தமிழ்நாட்டின் நகர வாழ்க்கை எப்படியிருந்தது என்பதை சங்கப் பாடல்கள் விரிவாக உரைக்கின்றன. கீழடியில் கிடைத்த சில சான்றுகள், இந்த இலக்கிய ஆதாரங்களுக்கான தொல்லியல் ஆதாரங்களின் மூலம் சிறிய அளவிலாவது உறுதிப்படுத்துகின்றன. ஆனால், மேலும் ஆய்வுகள் செய்யப்பட வேண்டும். https://www.bbc.com/tamil/india-64601317
  10. நீங்க இது பற்றி எழுதணும் பெரியப்பா என்று என்னை எழுத தூண்டியவன் இவன். (ஆனால் இதை எழுதி விட்டு தான் அவனது வீடியோவை பார்க்க நேரம் கிடைத்தது) https://m.facebook.com/story.php?story_fbid=pfbid0etJDhzHipHopcVUbutHZeeCXH5kAHydawN17z8UtwDHJT1i7WMFGTi7LLkGRvSuql&id=718105359
  11. நன்றி சகோ நான் உண்மையில் மனநிலை பாதிக்கப்பட்டவர்கள் பற்றி பேச விழையவில்லை மாறாக மனநிலை வைத்தியரைப்பார்ப்பதே தீண்டத்தகாதது போல் பார்க்கும் எமது சமூகத்தின் மனநிலையைத்தான் இங்கே கொண்டு வந்தேன் நீங்கள் குறிப்பிடுவது அடுத்த கட்டம் நன்றி சகோ நேரத்துக்கும் கருத்துக்கும்
  12. இதற்கான பதிலும் மேலே இருக்கு தம்பி நுணா (நமக்கே உறைக்கும் மற்றவரை பைத்தியம் அல்லது மட்டம் தட்ட நமக்கு இருக்கும் ஆர்வம் தான் காரணம் என்று.) நன்றி நேரத்துக்கும் கருத்துக்கும்
  13. இதுவும் உண்மைதான். எதையும் நோய் என பார்க்காமல் எல்லாவற்றையும் போர்த்து மூடல் Vs தொட்டதுக்கும் நோய் சொல்லல். இரெண்டு extreme உம் கூடாது.
  14. நல்ல தலைப்பு விசுகு அண்ணா ...தொடருங்கள் வாசிக்க ஆவல்
  15. உண்மையில் அவர்கள் குழந்தைகளின் மனநிலை உடையவர்கள். அவர்களை நம் நாட்டில் நடத்தும் விதங்களைப் பார்க்க வேதனையாக இருக்கும். நாளை எவரும் இந்த நிலைக்கு வரலாம் என்பதை யோசித்து பார்ப்பதில்லை. அவர்களுக்காக… யாழ்.களத்தில் ஒரு ஆக்கம் படைத்தமைக்கு நன்றி விசுகர். 👍🏽
  16. இங்க பாருடா குயின் எலிசபெத் பேரன் இங்கிலீசில எல்லாம் திட்டுறார் ...உங்கட பெரிய படிப்பிக்கும்,பணத்திற்கும் என்ன மண்ணாங்கட்டிக்கு உங்கட காசை கொண்டு போய் பிச்சைகார நாட்டில கொண்டு போய் கொட்டுகிறீர்கள் ...போய் அமெரிக்காவில் கொட்டலாமே?...உங்களை தங்க தாம்பாளம் வைச்சு கூப்பிடினம். அங்க போய் இருக்க போவதுமில்லை .அங்கிருங்ப்பவர்களுக்காய் ஒரு மண்ணாங்கட்டியும் புடுங்க போவதுமில்லை ..ஆனால் இங்கிருந்து கொண்டு உங்களுக்கு தமிழீழமும் ,சுயாட்சியும்,மண்ணாங்கட்டியும் வேண்டும் நீங்கள் அங்கே போய் வீடுகள் ,காணிகள் வாங்கேலை என்று யார் அழுதா?...உங்கள் பணக்காரத்தனத்தை காட்டுவதற்காய் அங்கே போய் வீடுகள் ,காணிகள் அறா விலைக்கு வாங்கிப் போட்டு ,அங்கேயிருப்பவர்களை இவற்றை வாங்க முடியாத நிலைக்கு தள்ளுவது உங்களை போல ஆட்கள் தான்....சிங்களவன் இனவாதி தான் அதில் எந்த மாற்றுக கருத்துமில்லை ...அவர்கள் ஒரு காலத்தில் திருந்த வாய்ப்புண்டு ...ஆனால் உங்களை மாதிரி பண திமிர் பிடித்த ஆட்களால் தமிழருக்கு அழிவு...உங்களை போன்றவர்களுக்கு அங்கிருக்கும் தமிழர்களை பற்றி எந்த வித அக்கறையும் இல்லை ...நாடு நல்ல கீழ் நிலைக்கு போகோணும் அதை விஸ்கியை குடித்து கொண்டு உங்களை மாதிரி ஆட்கள் ரசிக்கோணும் நீங்கள் எழுதினது தான் அதே உங்களுக்கே திரும்பி சொல்கிறேன் ...உங்களை வைத்து மற்றவர்களை எடை போட வேண்டாம்...உங்கள் பணக்கார மேற் தட்டு வர்க்கத்தை வைத்து மற்றவரை எடை போட வேண்டாம்
  17. ஆக்கத்துக்கு நன்றி விசுகண்ணா. சின்னதாக இருவர் வாதிட்டாலே counseling தேவை எனும் அளவில் நாமுள்ளோம். 🙂
  18. சுவியிண்ணை காதல் கசக்காது ? ஆனால் இன்று மெய் தீண்டாக்காதல் ஏது?❤️
  19. தேவையான ஒரு தலைப்பு. மன நிலை சமநிலை குழம்புவதை இன்னும் ஒரு இழுக்காக stigma பார்க்கும் நிலையில்தான் எம் சமூகமும், ஏனைய சமூகங்களும் உள்ளன. இதனடிப்படையில் ஒரு கதை எழுதிகொண்டிருக்கிறேன். உங்கள் பதிவு வருகிறது. Great minds think alike 🤣 பிகு 134 பஸ்சுக்கு இன்னொரு சிறப்பும் உண்டு. அது கொழும்பு லேடிஸ் காலீஜை தாண்டி போகும் ஒரே பஸ் 🤣
  20. வேறு மாநில பெண்களை மணந்த தமிழர்கள்.............
  21. நன்றி. நான் ஊரில் ஒரு கணிசமான முதலீட்டையும் போட்டு, போயிருக்கும் போது பிராக்காக செய்ய என ஒரு திட்டத்தையும் அமல்படுத்தியும் ஆகி விட்டது. ஆனால் இப்போ அதை போய் செய்யத்தான் வேணுமா என்றாகி விட்டது. அண்மையில் என் முஸ்லிம் நண்பன் ஒருவன் சொன்னது யோசிக்க வைத்தது. அவரின் அப்பாவுக்கு ஒரு மருந்து கட்டாயம் தேவை. என்ன விலை கொடுத்தும் வாங்க முடியும். வசதி அப்படி. ஆனால் எங்கும் மருந்து இல்லை. ஒரு பாமசியில் நம்பரை வாங்கி கொண்டு பிறகு கூப்பிடுகிறோம் என்றுள்ளார்கள். பின் ஒரு அழைப்பு வந்துள்ளது சாதாரண விலையை விட 3 மடங்கு அதிகம், அத்தோடு நாம் தரும் மருந்தில் எந்த நிறுவன, மருந்து பெயரும் இராது என்றுள்ளார்கள். ஆரோ ஒரு அநாமேதய நபர் தரும் பெயர் இல்லாத மருந்தை வாங்கி போட வேண்டும் அல்லது மருந்து போடாமல் இருக்க வேண்டும். எப்படி இருக்கு? இப்போ கொஞ்சம் நிலமை சீராகியுள்ளது. ஆனாலும் முன்னரே கான்சர் என போய் அப்பலோவில் படுத்தால் - மஹரகமவுக்கு கொண்டு போங்கோ என்பதே பதில். எனக்கு தெரிய சிறுநீரக பிரச்சனைக்கே நவலோக்கா - பல மில்லியனை புடிங்கி விட்டு, கடைசியில் தேசிய ஆஸ்பத்திரிக்கு போங்கோ எண்டு சொல்லி உள்ளது. எல்லாம் ஒப்பீட்டளவில்தான் அண்ணை. அந்த நோக்கியாவை புடிங்கி விட்டால் அவர்களும் சோகம் ஆகி விடுவார்கள்.
  22. அவர் தமிழர், சிங்களவர் என்று பிரித்து பார்க்கவில்லை. யாழ்ப்பாணத்தில் விடுதியிலும், சிங்களப் பகுதிகளில்… கிராமத்து வீடுகளிலும் தங்கியுள்ளார். இலங்கையில் இறங்கிய முதல் நாள் மட்டும் கொழும்பில் நின்றதாகவும், அங்கு ஒரு ஹொட்டேலில் இரண்டு பேர் படுக்கும் அறைக்கு 150 € கொடுத்ததாகவும், அது அதிகமாக தெரிந்ததால் உள்ளூர் நகரங்களில் தங்க முடிவு எடுத்ததாகவும் கூறினார். உள்ளூரில்…. 20 € விலிருந்து 35 € விற்கு அந்த குடும்பத்தினருடன் தங்கக் கூடிய திருப்திகரமன அறைகள் கிடைத்ததாக சொன்னார். கொழும்பில் நின்ற காலங்களில்… பாதுகாப்பற்ற சூழ்நிலை இருந்த மாதிரியும், வங்கிக்கு சென்றால் ஆட்கள் பின் தொடர்ந்து வந்து கொண்டிருந்தார்களாம். (வெளிநாட்டு பணத்தை வாங்கி விற்பவர்காளாக இருக்கலாம் என நினைக்கின்றேன்.) அத்துடன் இலங்கை தெருக்கள் முழுவதும் பிளாஸ்ரிக் கழிவுகளும், குப்பைகளும் அதிகமாக இருந்தனவாம். திருகோணமலை கடலில் சுழியோடிய போது, கடலுக்கு அடியிலும்.. பிளாஸ்ரிக் போத்தல்களை கண்டதாக கூறினார். தனக்கு அங்குள்ள சிறுவர்கள் தொடக்கம் பெரியவர்கள் வரை.. கிடைப்பதை வைத்து, மிக மகிழ்ச்சியாக வாழ்வதாக கூறினார். உதாரணத்துக்கு…. ஒரு வீட்டில் ஒரு சிறுவர் சைக்கிள் இருந்தால்… அந்தத் தெருவில் உள்ள பிள்ளைகள் எல்லோரும் அதனை மாறி, மாறி ஒடி குதூகலமாக இருந்தார்களாம். பெரியவர்களிடம் நவீன தொலை பேசிகள் இல்லாமல் “Nokkia“ கைத்தொலைபேசிகளை வைத்துக் கொண்டே திருப்தியான வாழ்க்கை வாழ்வதாக குறிப்பிட்டார். ஜேர்மனியில் என்றால்… வருடா வருடம் புதிதாக வரும் தொலை பேசிக்கும், குறிப்பிட்ட காலத்துக்கு ஒரு முறை, பாவிக்கும் வாகனத்தை மாற்றவும்… பணத்தை செலவழித்துக் கொண்டு இருக்க வேண்டும் என்றார்.
  23. என்னட்ட காசில்லை. இதை சொல்ல நான் ஒரு போதும் வெட்கப்பட்டதில்லை. பசித்திருபவன் முன் ஒப்பீட்டளவில் பகட்டாய் வாழ்வதை இட்டு வெட்கப்பட்டிருக்கிறேன். ஊரில் பஞ்சபராரிகளாக நிற்கும் குழந்தைகளோடு ஒரு திருவிழாவிலோ அல்லது கூட்டத்திலோ லண்டன் புஷ்டியோடு என் மகன் நிற்பதை பார்த்து வெட்கப்பட்டிருக்கிறேன். கால்கள் இல்லாமல் வீதியில் நின்று ஐஸ்கிரீம் வித்த முன்னாள் போராளியிடம் நைக் சூ போட்டபடி ஓடிவந்த நான் ஐஸ்கிரீம் வாங்கி குடித்த போது வெட்கத்தால் கூனி குறுகி போயிருக்கிறேன். ஆனால் என்றும் என் பொருளாதாரத்தை, இல்லாமையை எண்ணி வெட்கப்பட்டதில்லை. நான் எப்போதுமே மத்திய தர வாழ்க்கையே. இலங்கையிலும், வெளிநாட்டிலும். ஆனால் நீங்கள் சொல்லுவது மிக சரி. வெளிநாட்டில் மத்திய தர வாழ்க்கை வாழ்வோர் டிரைவர், வேலையாள் வைத்து வாழ முடியாது. ஆனால் ஒன்று தெரியுமா ? இலங்கையில் ஒரு டிரைவர், ஒரு வேலையாள் வைக்கும் காசுக்கு சென்ட்ரல் ஆபிரிகன் ரிபப்ளிக்கில் இருபது பேரை வேலைக்கு வைக்கலாம். டிரைவருக்கு டிரைவரும் வைக்கலாம். அதற்காக சென்ரல் ஆபிரிக்கன் ரிபளிக் இலங்கையை விட சொர்க்கம் என்றா சொல்வீர்கள். நீங்கள் தினேஷ் ஷாப்ரடை விட பெரிய பணக்காரரா ஓணாண்டி? அவரின் அப்பா என்ன சொல்லியுள்ளார் என பாருங்கள் - குடும்பத்தை லண்டனுக்கு கொண்டு வந்து செட்டில் ஆக்க, கொலையாகிய இரவு புறப்பட இருந்துள்ளார். கொவிட்டுக்கு பின் மட்டும் என் தெரிந்த வட்டத்தில் இருந்து 10 பேர் அளவில் என்னிடம் வெளிநாடு போவது பற்றி கேட்டிருப்பார்கள். அதில் பலர் பவுண்ஸ்கணக்கில் மல்டி மில்லியனர்கள். ஆள், அம்பு, சேனை, நிறைவேற்று அதிகாரி, கொழும்பு 7 மாளிகை, எல்லாவறையும் விட்டு விட்டு, மனைவியை ஸ்டூடன் விசாவில் அனுப்பி விட்டு, தாமும் பிள்ளைகளும் அவரில் தங்கியவர்களாக வந்து இறங்கியுள்ளார்கள். ஒருவர் இருவர் அல்ல. பலர். இதுதான் இலங்கையில் பணக்காரரின் நிலை. நீங்கள் சொல்வதை போல் அப்போலோவில் மருந்து பார்க்கலாம் - என் நெருங்கிய உறவை வைத்து பார்த்த அனுபவத்தில் சொல்கிறேன் - கையிருப்பு இருக்கும் வரை, சொத்தை வித்தும் செலவழிக்கலாம் - அதன் பின்? முன்பும் சொல்லி இருக்கிறேன். நிச்சயமாக நான் ஒரு போதும் (கொவிட்டுக்கு முன் கூட) இலங்கைக்கு முற்றாக போக மாட்டேன். ஒரு 10 வருடம் வெள்ளன ஓய்வை எடுத்து விட்டு, 6 மாதம் அங்கே, 6 மாதம் இங்கே என இருப்பதே என் ஐடியாவாக இருந்தது. வாழ்க்கை பூராக இங்கே வரியை கட்டி விட்டு, பாழும் வயதில் இலங்கை போய், சொத்தை வித்தோ, அல்லது சொந்த காசிலோ வைத்தியம் பார்க்க நான் மடையன் இல்லை. அதே போல் உங்களுக்கு நேரடியாகவே சொல்லி உள்ளேன், வாழ வேண்டிய பிள்ளைகை, வாய்புக்கள் நிறைந்த வெளிநாட்டில் இருந்து கூட்டிப் போய் சிங்களவனுக்கு பின்பக்கம் கழுவும் நிலைக்கு உள்ளாக்குவதை போல் ஒரு சுயநலம் வேறு எதுவும் இல்லை. என்னை பொறுத்தவரை என்ன பொருளாதார வளம் நாளை எனக்கு கிடைத்தாலும், மகனின் படிப்பு ஏ எல் தாண்டும் வரை நான் அவரை விட்டு அகல போவதுமில்லை, அவரை யூகேயை விட்டு அகற்ற போவதும் இல்லை ( பள்ளி படிப்பை யூகேயில் படியாததால் நான் கண்ட பிரதிகூலங்களை வைத்து) . அதன் பின் விருப்ப ஓய்வை எடுத்து, 6 மாதம் 6 மாதம் யுகேயிலும் இன்னொரு நாட்டிலும் இருப்பதுதான் திட்டம். அந்த இன்னொரு நாட்டு லிஸ்டில் இலங்கை முதலாம் இடத்தில் முன்பு இருந்தது. இப்போ யோசிக்க வேண்டி உள்ளது. ஓம்… மிக சரியான தகவல்.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.