Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Leaderboard

  1. தமிழ் சிறி

    கருத்துக்கள உறவுகள்
    15
    Points
    87993
    Posts
  2. nunavilan

    கருத்துக்கள உறவுகள்
    6
    Points
    53011
    Posts
  3. suvy

    கருத்துக்கள உறவுகள்
    6
    Points
    33600
    Posts
  4. goshan_che

    கருத்துக்கள உறவுகள்
    6
    Points
    19139
    Posts

Popular Content

Showing content with the highest reputation on 02/24/23 in Posts

  1. பாகம் IV ஐ தவிர்த்து பாகம் III இருந்து நேரடியாக பாகம் V ஐ வாசிக்கவும். பாகம் V ஹைபோகிளைசீமியா ஒரு பொல்லாத விசயம். சாதாரணமாக இருப்பது போல் இருக்கும், ஆனால் உணவையும் மருந்தையும் கிரமமாக எடுக்காது போனால் குருதியில் குளுகோசின் அளவு திடீரென்று, ஹிடின்பேர்க்கின் அறிக்கைக்கு பின்னான அதானியின் நிகர மதிப்பு போல கிடுகிடு என இறங்க தொடங்கி விடும். உடல் வியர்க்கும், நடுங்கும், கடும் கோபம் வரும், ஏன் ஆக ரத்த குளுகோசின் அளவு குறைந்தால் கொலை வெறி கூட வரும். இன்னும் குறைந்தால் கோமாக்கு கொண்டுபோய் ஆளின் கதையையே முடித்து விடும். இதை எல்லாம் தவிர்க்கவேண்டும் என்றுதான் அவன் கோப்பி கடைக்குள் நுழைகிறான். ஆனால் அவனின் லக் அப்படி, கோப்பி கடையில் ஒரு கூட்டம் சனமாக இருந்தது. அந்த நெரிசலில் நிற்க தலையை சுத்தி கொண்டு வந்தது அவனுக்கு. பிரித்தானியரில் என்ன கெட்ட பழக்கம் இருந்தாலும் வரிசையில் நிற்கும் ஒரு நல்ல பழக்கம் இருக்கிறது. ஆனால் இப்போ அந்த நல்ல பழக்கமே அவனுக்கு எமனாக வந்து விடும் போல் இருந்தது. ஒரு வழியாக வரிசையில் முன்னுக்கு நின்றவனிடம் தன் நிலையை சொல்லி, அனுமதி பெற்று இரெண்டு சீனி தூவிய டோநட்களையும் ஒரு கோக் கானையும் வாங்கி கொண்டு மேசையில் போய் அமர்ந்தான் அவன். கோக் குடியாதேங்கோ எண்டு சொல்லுறது இதுக்குத்தான். குளுகோஸ் தண்ணிக்கு அடுத்து ரத்தத்தில் சீனியின் அளவை உடனடியாக கூட்ட கோக்கை விட்டால் வேறு பானம் இல்லை. ….இதைதான் வருத்தம் ஏதும் இல்லாத பிள்ளையள் கூட வாங்கி குடிக்குதுகள். பின்ன ஏன் டயபிடிஸ் வராது….. நினைத்தபடியே…கோக் கானை “டொப்” என மூடி உடைத்து பருக தொடங்கினான் அவன். கோப்பி கடையில் கல்லாவில் நின்றவனை நினைக்க நினைக்க அவனுக்கு கோவம் பற்றி கொண்டு வந்தது. என்ன அசிரத்தை இது? ஏதோ இலவசமாக தருவது போல் இருந்தது அவனின் பாவனையும் நடந்து கொண்ட முறையும். முந்தி எல்லாம் இந்த நாட்டில் இப்படி இல்லை. முன்பு யூகேயில் கஸ்டமர் சேர்விஸ் நன்றாக இருக்கும். இப்போ?…பச்…. அவனை பார்த்தால் உக்ரேன் காரன் போல இருந்ததது. உக்ரேன்காரர் உக்கல் சனம், நிறவெறி பிடித்தவர் என யாழ்களத்தில் முருகர்சாமி அண்ணை எழுதியது ஏனோ அவனுக்கு நியாபகம் வந்தது. கிட்டதட்ட ஒரு இருபது நிமிடம் ஆகி இருக்கும். கோக் கான் முக்கால்வாசி தீர்ந்து விட்டிருந்தது. ஆனாலும் ஓடர் பண்ணிய டோநட்டை இன்னும் காணவில்லை. “ஹலோ ஆம் ஐ கெட்டிங் மை டோ நட் டுடே, ஓர் டுமோரோ”? கொஞ்சம் சத்தமாகவே உக்ரேன்காரனை டோநட் இன்றா அல்லது நாளையா கிடைக்கும்? கேட்டான் அவன். ஆனால் அந்த உக்ரேனியனோ (முடிவே கட்டிவிட்டான்) கோப்பி மெசின் அருகில் எதையும் கேளாதவன் போல் நின்று எதையோ கழுவிக்கொண்டிருந்தான். திடீரென திரும்பி பார்த்தால் அந்த உக்ரேனியன் அவனை நோக்கி ஒரு பெரிய கத்தியோடு ஓடி வந்து கொண்டிருந்தான்…….. கண்களில் நிறவெறி ஜொலி ஜொலித்தது…….. ”என்ர பிள்ளையாரே, முருகர்சாமி அண்ணை உவங்களை உக்கல் எண்டு சொன்னது சரிதான்” என ஒரு கணம் அவன் திகைத்து நின்றாலும்……. மறுகணமே அவனின் உடலில் அதிரீனலீனின் “தப்பியோடு அல்லது சண்டையிடு” பொறிமுறை வேலை செய்ய தொடங்கி இருந்தது. உக்ரேனியன் கொண்டு வரும் கத்தியோ பெரிது…வேறு வழியில்லை, ஒரு நல்ல கனமான மரக்கதிரையை தூக்கி கொண்டு அந்த உக்ரேனியனை நோக்கி பாய்ந்தான் அவன். —————————————— அப்போதுதான் டிடெக்டிவ் இன்ஸ்பெக்டர் பிலிப்ஸ், அவனின் பிரான்சில் இருந்து வருவிக்கபட்டிருந்த தம்பிக்கும், டாக்டர் பிரணவணுக்கும் சீசீடிவி படங்களை போட்டு காட்டி முடித்திருந்தார். தம்பிக்கு ஏதோ விளங்கியது போலவும் இருந்தது ஆனால் விளங்காதது போலவும் இருந்தது. கேள்வி குறியோடு டாக்டரின் முகத்தை பார்த்தான் தம்பி. மொழி பிரச்சனையை விளங்கி கொண்ட டாக்டர், ”ஐ வில் எக்ஸ்பிளைன் டு ஹிம் இன் ஹிஸ் ஓன் லாங்குவேஜ்”…….. என பிலிப்சுக்கு சொல்லியபடி தம்பியிடம் தனது புலம்பெயர் கொச்சை தமிழில் பேச தொடங்கினார். சீசீடிவி பார்தனிங்கள்தானே…சும்மா டோநட் எடுத்து கொண்டிருந்த அவர போட்டு நல்லா அடிச்சு வச்சிருக்கிறார். இதுக்கு ஒரு ரீசனும் இல்லை. பொலிஸ் அன் புரொவோக்ட் அட்டாக் எண்டு சொல்லினம்….. அதுக்கு முதல் மூண்டு அவர்ஸ் காரில இருந்து…போனில கதைச்சிருக்கிறார்…. ஆனால் போனை செக் பண்ணி பார்த்தா அந்த மூண்டு அவர்ஸ்சும் எந்த ஒரு கோலும் கூட வரலேல்ல உங்கட அண்ணாக்கு…. அதுமாரி….சில மாசமா…. ஒவ்வொரு நாள் காலமையிலும், பின்னேரமும் ஒப்பசிட்டா இருக்கிறா ஸ்கூல் வாசலில் வந்து நிண்டிருக்கிறார்….. ஆனா நாங்கள் செக் பண்ணி பார்த்தா உங்கட அண்ணாக்கு பிள்ளையோ, வைவ்வோ கூட இல்லை. எல்லாம் சேர்த்து பார்த்தா எனக்கு இது ஒரு மனசு சரியில்லாத வருத்தம் எண்டுதான் விளங்குது…. இத நான், தொடர்ந்து வெளிநாட்டில தனியாவே இருந்ததால வந்த ஒரு மெண்டல் ஹெல்த் பிரச்சனை என சஸ்பெட்க் பண்ணுறன்…. அதால… உங்கட அண்ணையை செக்சன் பண்ணுற முடிவை எடுக்கப்போறம்…. செக்சன் எண்டால்…? புரியாதவனாக கேட்டான் தம்பி. செக்சன் எண்டால்…. வந்த வருத்தம் மாறும் வரைக்கும் அவரை ஒரு சைகியாடிரிக் கொஸ்பிடலை தடுத்து வச்சிருப்பம். உங்களுக்கு விருப்பம் இல்லாட்டி நீங்கள் அப்பீல் பண்ணலாம். நாளைக்கு ஒரு இண்டர்பிரிட்டரை வச்சு எல்லாத்தையும் வடிவா சொல்லுறன். அவன் இப்போதைக்கு வெளியில் வர வாய்ப்பில்லை என்பதை முடிந்தளவு தன்மையாக சொன்னார் டாக்டர் பிரணவன். என்ன செய்தாலும்….. அண்ணையை பழையபடி மாத்தி தாங்கோ டொக்டர்…. எங்களை எல்லாம் வெளிநாட்டுக்கு எடுத்து ஆளாக்கினது அவர்தான்…. கண்ணீர் புரண்டோட…கை கூப்பினான் அவனின் தம்பி. அப்ப கூட்டத்தை முடிக்கலாம்…… என்ற தோரணையில்……. கையை திருப்பி….. மணிக்கூட்டை வெறித்துப்பார்த்தார் இன்ஸ்பெக்டர் பிலிப்ஸ். (யாவும் கற்பனை) முற்றும். வருகைக்கும் கருத்துக்கும் நன்றி பிரபா. ஐந்தாம் பாகம் பற்றிய பார்வையையும் எழுதுங்கள்.🙏🏾 நன்றி சுவை அண்ணா. இப்ப எழுதியதை வாசிதால் சேது விக்ரம் நியாபகம் வருவாரோ?😀
  2. வணக்கம் தங்கச்சி! ஊரிலையே நாங்கள் ஆரெண்டு பாத்தால் எல்லாம் பெரிய ஐடியா ஐயாத்துரையள் கண்டியளோ... ஆறுகோணத்தில தென்னங்குத்தியளை அடுக்கினால் மொடேர்னாய் இருக்கும். கவனிக்க... புழுதி மண் நாகர் கோவில் வெள்ளை மண் நல்லது.தடக்குப்பட்டு விழுந்தாலும் சேதாரம் இருக்காது. கட்டதுரைக்கு கட்டம் சரியில்லை.
  3. இவையள் நில்மினியை பிளாவுல கள்ளு குடிக்க வைக்காமல் ஓய மாட்டார்கள் போலிருக்குது.......இந்தப் பெருமையெல்லாம் கு.சா, பிரியன், நிலாமதி, நுணா ஆகியோருக்குத்தான் சேரும்......போகட்டும் நானும் என் பங்குக்கு, பிள்ளை கள்ளுல ஒரு பனைக் கள்ளுதான் உடம்புக்கு நல்லது. ஒரு வடலியை கொண்டுவந்து வளவுக்க ஒரு ஓரமா வைத்தீர்கள் என்றால் அது வளர்ந்து பாளை விட பிறகென்ன காலையும் மாலையும் ஒவ்வொரு பிளா கள்ளுதான் ......! 😂 நான் பகிடியாய் எழுதினானாலும், முன்பு நல்லூரில் எனது காணிக்குள் ஒரு மூலையில் பனை ஒன்று வளர்த்தனான். அதுவும் கொஞ்சம் வளர்ந்து மதிலுக்கு மேலால வந்துட்டுது. அப்பா பக்கத்து வீட்டு அண்ணர் (உறவினர்தான்) தம்பி உது வளர வளர என்ர டாய்லட் குழியை உடைத்துக் கொண்டு போகுது என்று சொல்லி தறித்துப் போட்டச்சுது.......அங்கு சின்ன காணிதான்......முன்னுக்கு ஒரு வேம்பு வைத்து அது வளர்ந்து வர இன்னொரு அக்கா அது மதிலை உடைக்குது என்று சொல்லி வெட்டிபோட்டா........ 😢
  4. வாங்கும் வைக்கலாம்.....கதிரையும் வைக்கலாம்....ஐ திங்......புழுதி மண்ணை பரப்பி தென்னங்குத்தியும் வைக்கலாம்
  5. பைத்தியம் U mad bro பாகம் I நதியே…நதியே காதல் நதியே நீயும் பெண்தானே…. அடி நீயும் பெண்தானே …. நிசப்தமான இரவை குலைத்தபடி சங்கர் மகாதேவன் போனில் பாடத்தொடங்கி இருந்தார். சை…இந்த அலாம் டோனை மாத்த வேணும். பழைய நொக்கியா மாரி இல்லை, இந்த போனில் புதிதா ஒரு டோன் போடுறதுகுள்ளா போதும் போதும் எண்டாயீடும். நினைத்து கொண்டே கட்டிலில் இருந்து பிரண்டு, போனின் அலார்மை அணைத்தான் அவன். அலாம் அடிக்கிறது என்றால் அது ஒரு கிழமை நாள், காலை ஆறரை மணியாக இருக்க வேண்டும். அவன்……. அப்படி ஒன்றும் கதாநாயகன் களை எல்லாம் இல்லாவிடிலும் இந்த கதையின் நாயகர்களில் ஒருவன். ஒரு பெண்ணின் கணவன். ஒரு மகனின் தந்தை. கட்டிலில் திரும்பி பிரண்டபோதுதான் அருகில் மனைவி இல்லை என்பது உறைத்தது. நேற்றே சொல்லி இருந்தாள் “நாளைக்கு காலமை அப்பாவுக்கு ஹொஸ்பிட்டல் அப்பொயிண்ட்மெண்ட், ஸ்கூல் ரன் உங்கள் பாடு”. கட்டிலால் எழுந்து பல்லை விளக்கி விட்டு வந்து மகனை எழுப்பி, மகனுடன் பள்ளிக்கு வெளிக்கிடசொல்லி தேவாரம் பாடி, இடையில் உணவும் தயார் செய்து, அதை உண்ணவும் வைத்து, வெளியே ரத்தம் உறையும் குளிரில் நிண்டபடி காரில் படிந்திருக்கும் பனியை சுரண்டி……. நினைக்கவே அலுப்பாக இருந்தது அவனுக்கு. ஆனாலும் செய்யதான் வேண்டும். சோம்பலாய் எழுந்து போனை பார்த்தால் - இவன் மிஸ்டுகால் என காட்டியது. இவன்…….. இந்த கதையின் இன்னுமொரு நாயகன். கொழும்பில் நல்ல வசதியாக வாழும் ஒருவன். மூன்று மாடியில் ஏழு அறை வீடு, டிரரைவர், சமமையல்காரன், தோட்டகாரன் என சகல செளபாக்கியமுமான வாழ்க்கை வாழ்பவன். சரி ஏதோ ஸ்கூல் விசயமாக்கும். பிறகு அடிப்பம். என நினைத்தபடி வேலையில் மூழ்கிப்போனான் அவன். காரில் இருந்து மகன் இறங்கி போகும் போது, urgent. Plz call…..plz அவனின் போனில் இவன் அனுப்பிய குறுஞ்செய்தி மின்னியது. (தொடரும்) (யாவும் கற்பனை அல்ல) ——————————————-
  6. தமிழர்களுக்கும் சிங்களவர்களுக்குமிடையில் வளரத் தொடங்கிய முறுகல் நிலை இனவாதப் பிரச்சாரம் தின்னைவேலி வங்கிக்கொள்ளை ஜெயவர்த்தனவை ஆத்திரப்படுத்தி விட்டிருந்ததுடன் பொலீஸாரையும், இராணுவத்தினரையும் வெகுவாக அலைக்கழித்திருந்தது. ஜெயவர்த்தனவும் அவரது ஆதரவாளர்களும் தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணியினருக்கும் தமிழருக்கும் எதிரான விஷமப் பிரச்சாரத்தை முடுக்கிவிட, இராணுவமும் பொலீஸாரும் தமிழ் மக்கள் மீதான தாக்குதல்களை தீவிரப்படுத்தத் தொடங்கியிருந்தனர். இதற்குப் பதில் வழங்க விரும்பிய தமிழ்ப் போராளிகளும் செயல்களில் இறங்கத் தொடங்கினர், குறிப்பாக டெலோ அமைப்பு செயலில் இறங்கியது. 1979 ஆம் முதற்பாதியில் தமிழருக்கும் சிங்களவருக்கும் இடையிலான முறுகல் நிலை அதிகரிக்கத் தொடங்கியிருந்ததுடன் இரண்டாம் பகுதியில் நடைபெறப்போகும் படுகொலைகளுக்கான களத்தையும் அது திறந்துவிட்டிருந்தது. தின்னைவேலி வங்கிக்கொள்ளை நடந்து ஏறத்தாள 10 மணிநேரத்திற்குப் பின்னர், 1978 ஆம் ஆண்டு மார்கழி 5 ஆம் திகதி இராணுவமும் பொலீஸும் தமிழர் மீதான தாக்குதல்களில் இறங்கினர். யாழ் நகரில் அமைந்திருந்த மதுபான விற்பனை நிலையத்திற்கு சாதாரண உடையில் சென்ற இரு சிங்களப் பொலீஸார் மது அருந்தியபின்னர் அந்த மதுபான விற்பனை நிலையத்திற்கு அருகிலிருந்த வியாபார நிலையம் ஒன்றிற்குள் புகுந்து அதனை அடித்து நொறுக்கியதுடன், அங்கிருந்த பணத்தையும் ஏனைய பெறுமதியான பொருட்களையும் கொள்ளையிட்டுச் சென்றனர். அதே இரவு பலாலி நிலையத்தில் முகாமிட்டிருந்த இராணுவத்தினர் அருகிலிருந்த வியாபார நிலையம் ஒன்றிற்குச் சென்று இலவசமாக சிகரெட்டுக்களைக் கேட்க, உரிமையாளர் தரமறுத்துவிட்டார். எதுவும் கூறாது அங்கிருந்து அகன்ற ராணுவத்தினர் சில நேரத்தின்பின்னர் தமது சகாக்களை முகாமிலிருந்து ஆயுதங்களுடன் அழைத்துவந்து அக்கடையினை அடித்து நொறுக்கிவிட்டுச் சென்றனர். மார்கழி 14 ஆம் திகதி இரவு படம் பார்த்துவிட்டு வீடு திரும்பிக்கொண்டிருந்த மக்களை வழிமறித்து இராணுவத்தினர் தாக்கியதுடன் 18 ஆம் திகதி இரவு வல்வெட்டித்துறையினுள் நுழைந்து மக்களின் வீடுகளையும் கடைகளையும் தாக்கிச் சேதப்படுத்தினர். தமிழர்கள் அநியாயமாக இராணுவத்தினராலும் பொலீஸாராலும் தாக்கப்படுவது குறித்து பாராளுமன்றத்தில் பேசிய அமிர்தலிங்கம், இத்தாக்குதல்கள் குறித்து விசாரணை நடக்கவேண்டும் என்று கோரினார். இதற்குப் பதிலளித்த சிங்கள இனவாதியான கைத்தொழில் அமைச்சர் சிறில் மத்தியூ, இராணுவமும் பொலீஸாரும் நடத்திவரும் தாக்குதல்களை நியாயப்படுத்தியதோடு, தமிழ் ஆயுதக் குழுக்களை தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணியினரே பாதுகாத்து வருவதாகக் குற்றஞ்சாட்டினார். "நீங்கள் பயங்கரவாதிகளையும், கொலைகாரர்களையும் பாதுகாத்து வைத்திருக்கிறீர்கள்" என்று அமிர்தலிங்கத்தைப் பார்த்து அவர் கர்ஜித்தார். அமிர்தலிங்கம் சிறில் மத்தியூவின் குற்றச்சாட்டினை மறுத்தார். மத்தியூவின் குற்றச்சாட்டுக்களை மீளப்பெறவேண்டும் என்று அவர் கோரினார். மத்தியு தனது கருத்துக்களை மீளப்பெற பிடிவாதமாக மறுக்க, அதனை ஆதரித்துப் பேசிய சபாநாயகர் , "மத்தியூ தனிப்பட்ட ரீதியில் எவரையும் குறிப்பிடவில்லை, பொதுவாக ஒரு அரசியல் கட்சியினை குறித்தே பேசியதனால், அவர் கூறியதை மீளப்பெறவேண்டியதில்லை" என்று கூறினார். ஆனால், தொடர்ந்தும் அமிர்தலிங்கம் இதனை எதிர்த்துக்கொண்டிருந்துவிட்டு இறுதியில் தனது கட்சியினருடன் வெளிநடப்புச் செய்தார். 1979 ஆம் ஆண்டு பங்குனியில் அரசாங்கத்திற்கும், தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணியினருக்கும் இடையில் இன்னொரு முறுகல் உருவாகியது. அந்த மாதத்தில் அமிர்தலிங்கமும், அவரது துணைவியார் மங்கையற்கரசியும் இந்தியாவுக்குச் சென்றிருந்தனர். ஆட்சியிலிருந்த திராவிட முன்னேற்றக்கழகத்தினர் சென்னையில் அவர்களுக்கு மகத்தான பொதுமக்கள் வரவேற்பொன்றினை அளித்திருந்தனர். அங்குபேசிய அமிர்தலிங்கம் சிங்கள இராணுவத்தினரும் பொலீசாரும் தமிழ் மக்களுக்குச் சொந்தமான பல மில்லியன் ரூபாய்கள் பெறுமதியான சொத்துக்களை அழித்துவிட்டதாகவும், பல தமிழர்களைக் கொன்றிருப்பதாகவும் கூறினார். "பாதுகாப்பாக வாழ்வதென்பது தமிழர்களைப்பொறுத்தவரையில் மிகவும் சவாலான விடயமாக மாறியிருக்கிறது. எமக்கான ஒரே தெரிவு தனியான நாடு மட்டுமே" என்று அவர் அங்கு கூடிநின்ற மக்களைப் பார்த்துக் கூறினார். மிகவும் உணர்ச்சிவசப்பட்ட நிலையில் அங்கு பேசிய மங்கையற்கரசி, 1977 ஆம் ஆண்டு தமிழர்மீது நடத்தப்பட்ட அரச ஆதரவு வன்முறைகளில் பெருமளவு தமிழ்ப்பெண்கள் சிங்கள இராணுவத்தாலும் சாதாரணச் சிங்களவர்களாலும் வன்புணர்விற்குள்ளாக்கப்பட்டதாகவும், தமிழ்ப்பெண்கள் இரவு வேளைகளில் வீதிகளில் நடமாடுவது என்பது இனிமேல் முடியாது என்றும் கூறினார். பங்குனி மாதம் 21 ஆம் திகதி அமிர்தலிங்கம் சென்னை பத்திரிக்கையாளர் அமைப்பினரின் கூட்டத்தில் பேசும்போது தமிழீழ விடுதலைப் புலிகள் எனும் அமைப்பென்பது உண்மையில் இல்லையென்றும் தமிழினத்திற்கெதிரான பலரின் கொலைகளுக்காக புலிகளால் வெளியிடப்பட்ட உரிமைகோரலே பொலீஸாரால் வேண்டுமென்றே கட்டவிழ்த்துவிடப்பட்ட சதிதான் என்று பேசினார். தமிழர்கள் சுய கெளரவத்துடனும், கண்ணியத்துடனும் வாழ்வதற்கான ஒரே வழி அவர்கள் தமக்கான தனிநாட்டினை உருவாக்குவது மட்டும் தான் என்றும் கூறினார். தமிழர்கள் தமக்கான உரிமைகளைப் பெற்றுக்கொள்ள ஆயுதப் போராட்டத்தில் ஈடுபடுவார்களா என்று அவரிடம் பத்திரிக்கையாளர்கள் கேட்டனர். அதற்குப் பதிலளித்த அமிர்தலிங்கம், "இல்லை நாம் ஜனநாயக வழியிலேயே எமது உரிமைகளைப் பெற்றுக்கொள்வோம்" என்று கூறினார். உங்களின் உரிமைகளை பெற்றுக்கொள்வதற்கான கால அட்டவணை ஒன்றினை வைத்திருக்கிறீர்களா என்று அவரிடம் கேட்டபோது,"எமக்கான தனிநாட்டினை இன்னும் பத்து வருடங்களில் உருவாக்குவோம்" என்று அவர் பதிலளித்தார் (அதாவது 1989 ஆம் ஆண்டில்). இந்தியப் பிரதமர் மொரார்ஜி தேசாய் மற்றும் இந்திரா காந்தியுடன் அமிர்தலிங்கம் அதன் பின்னர் தலைநகர் தில்லிக்குப் பயணம் செய்த அமிர்தலிங்கம் இந்தியப் பிரதமர் மொரார்ஜி தேசாயையும் இந்திரா காந்தியையும் சந்தித்தார். பிரதமர் தேசாய் தமிழர்களின் பிரச்சினை இலங்கையின் உள்நாட்டுப் பிரச்சினை, அதற்கும் இந்தியாவிற்கும் சம்பந்தம் இல்லை என்று தலையிடாமை எனும் தனது முடிவில் தீவிரமாக இருந்தார். இந்த முடிவினால் சற்று அதிருப்தியடைந்த அமிர்தலிங்கம், இந்திரா காந்தியிடம் இதுபற்றிப் பேசினார். அதற்குப் பதிலளித்த இந்திரா பின்வருமாறு கூறினார், " தேசாயும் ஜெயவர்த்தனாவும் இரு கிழட்டு நரிகள், அவர்கள் குறித்து நீங்கள் மிக்க அவதானமாக இருக்கவேண்டும்".
  7. நன்றி அண்ணா. நிறைய இடங்களுக்கு போய் படங்கள் எடுத்தது வைத்திருக்கிறேன். இந்த கிழமை மடகாஸ்கர் பற்றி எழுதலாம் என்று இருக்கிறேன். ஜெர்மனி தமிழ் பேப்பர் ஒன்றுக்கும் கேட்டிருந்தார்கள். வீட்டு வேலை நான் நினைத்தது போல் இன்னும் முடிக்கவிலை. ஜூலை மாதம் செய்யலாம் என்று இருக்கிறேன்.
  8. இந்தப் பாகத்தில்… திடீரென்று இன்ஸ்பெக்டர் பிலிப்ஸ் வருவது ஏன் என்று புரியவில்லை. அவரை யார் அழைத்தார்கள்.
  9. இதை விட வேறு என்ன அதிகமாக சொல்ல முடியும். கதையை வாசித்து இதை பகிர வேண்டும் என நினைத்ததையே கதையின் வெற்றியாக கொள்கிறேன்🙏🏾. நன்றி. சியாமளனின் இந்த படத்தை பார்த்துப்போட்டு இரெண்டு நாள் பேயறைந்தது போல் இருந்திருக்கிறேன். என்னை ஊக்க்கப்படுத்த சொல்லுகிறீர்கள் என புரிந்தாலும், மூன்றாம் பிறை, Sixth Sense என வித்யாசமான படக்கதைகளை இணைத்து கதைப்பதே சந்தோசமாக உள்ளது🙏🏾.
  10. அதுதானே இவர்கள் எல்லோரும் சேர்ந்து ஐடியா தருவதால் கட்டாயம் ஒருக்கால் ட்ரை பண்ணலாம்🤣. எமது வீட்டிலும் இதே கதைதான். ஓட்டை உடைக்குது என்று மாமா அருமந்த மாமரத்தை தறித்துப்போட்டார் த . நின்றது ஒரே ஒரு பானை. அதையும் ஆண் பனை என்று தறிச்சாச்சு . வேப்பம் மரம் எப்பவோ இல்லாமல் போய்விட்டது. எனது முயற்சியால் தான் இப்ப 10 கமுகு, 3 தென்னை, ஒரு விளைட்டு நட்டிருக்கு குடில் சும்மா கிடக்குதென்று ஏதாவது யோசனை சொன்னாலும் குற்றமாப்பா?
  11. என்ன ஈழப்பிரியன் , கு. சா அண்ணாக்கள் எல்லாரும் ஒரே கள்ளுக்கொட்டில் கதையா கிடக்கு? அப்பத்துக்கு கலக்கும்போது அம்மம்மா கள்ளை யாருக்கும் தெரியாமல் ஒளித்து கொண்டுவந்து வைத்ததுதான் ஞாபகம் வருகுது. கள்ளில் ஒரு after taste இருக்கு என்று சொல்ல்கிறார்கள் உண்மையா? இப்பதான் கு .சா அண்ணா ஆர் என்று தெரியுது. உண்மையிலேயே நல்ல ஐடியா. மேலும் விளக்கம் தர முடிந்தால் பகிரவும். ஆடி மாதம் போய் வேலைகளை முடிக்கலாம் என்று இருக்கிறேன்.
  12. படித்தவன் படித்தவன் தான். உடனே வரை படத்துடன் திட்டமே வந்துட்டுது. அதென்ன அட்சரகணிதம் எல்லாம் பழைய ஞாபகமோ? அப்ப என்ன கடைசியா காணியையே வித்தாச்சோ?
  13. என்னமோ போங்கோ.நீங்கள் பேய்க்காய்.😗
  14. என்ன சாப்பாடு வேணுமா...... இரு கொண்டு வாறன்......புறா பிடிக்காத என்ன........! 😂
  15. மாணிக்கம் மகுடம் சூட்டிக் கொண்டாள்
  16. நன்றி நிலாமதி. சின்னனில பிளா வில் கூழ் குடிக்க ட்ரை பண்ணினான். ஆனால் பெயர் தெரியவில்லை. சிரட்டையில் குடித்திருக்கிறேன் நன்றி நுணாவிலான். கட்டாயம் ஒருக்கா செய்து பார்க்கவேணும். உங்கள் புனை பெயர் எமது அய்யாவின் (அம்மாவின் அப்பா) ஊரை ஞாபகப்படுத்துகிறது (எழுதுமட்டுவாள்).
  17. வாங்கும் வைக்கலாம்.....கதிரையும் வைக்கலாம்....ஐ திங்......புழுதி மண்ணை பரப்பி தென்னங்குத்தியும் வைக்கலாம் தங்கச்சி ஒட்டகம் மெதுவா தலையை ஓட்டுது.கவனம்.
  18. ம் ம் குடிலைக் கண்டவுடனை கள் அடிக்க நல்ல இடம் வாச்சிருக்கு என்று எண்ணிவிட்டீர்கள் போல. இரண்டு மூன்று பிழாவும் செய்து அதில தொங்க விட்டுவிடுங்கோ.
  19. காதல் இன்னும் தொடருமா ? 😃
  20. வீட்டு வேலைகள் முடிந்து விட்டது. ஆனால் நான் நினைத்தது போல பினிஷிங் வரவில்லை. சமருக்கு போய்தான் செய்யப்போகிறேன். தோட்டம் அழகாக வருகிறது. ஓய்வு பெற்ற பரி யோவான் கல்லூரி விவசாய டீச்சர் தான் தோட்டம் செய்து பராமரிக்கிறார். சில யாழ் பல்கலைக்கழக மாணவர்களுக்கும் பகுதி நேர வேலை இந்தமாதிரி தோட்டங்களில் கொடுக்கிறார். இப்போது பல்கலைக்கழக தோட்டக்காரரும் அவர்தான். மருத்துவக்கல்லூரி, யாழ் பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாக்களுக்கு இவர்தான் அலங்காரம் செய்வபவர்
  21. ஓம் .....பாம்பின் தலை வரையும் உள்ளே சாடிகள் இருக்கும் ......நல்ல பசளைகள் இட்டு அழகாக கட்டிங் ஷேவிங் எல்லாம் செய்திருக்கிறார்கள்.........! 😍
  22. மிகுந்த அவதானத்துடன், மினக்கெட்டு செய்திருக்கிறார்கள். இவை யாவும்... வளருக்கின்ற செடிகள் என நினைக்கின்றேன்.
  23. இதுக்குத்தான் சொல்லுறது ஊருக்கு ஒரு சைவப்பழமாவது இருக்க வேணும் எண்டு
  24. இது சரியாக புரியவில்லை ....... ஒத்துவராத காரணத்தினால்தானே மொழி இனம் தெரியாத நாடுகளுக்கு கூட ஓடி வேண்டி வந்தது இப்போதும் கூட ஆயிரக்கணக்கான சிங்களவர்களே வெளியேறிக்கொண்டு இருக்கிறார்கள் குடிசையில் பிறந்து வளர்ந்தால் ? குடிசையிலேயே வாழ்ந்து இறக்கவும் வேண்டுமா? ஒரு மனிதன் முன்னேறவே கூடாது என்கிறீர்களா? அல்லது எங்கு எப்படி பிறந்தார்களோ அங்கே அப்படியே வாழ வேண்டும் என்கிறீர்களா? உண்மையில் சரியாக புரியவில்லை! உங்களிடம் இருக்கும் எண்ணத்தை கொஞ்சம் விளக்கமாக தருவீர்களா? எந்த நிலையிலும் சிங்களபேரினவாதம் ஆட்ச்சி வைத்திருக்கும் நாடு பெரும்பன்மை தமிழர்களுக்கு ஒதட்டுவந்ததே இல்லையே ? உயிரை கூட விடுவோம் மண்டியிட்டு வாழோம் என்று ஆயிரக்கணக்கானவர்கள் இருந்துகூட இருக்கிறார்களே ?
  25. இந்தப் பூனை பால் குடிக்காது ஆனால் புறா பிடிக்கும்........! 😎
  26. திரும்பும் வரலாறு - பாகம் 3 – நாசிகள். fபிரிட்ஸ் ஹேபர் (Fritz Haber) ஒரு வித்தியாசமான பேர்வழி. பயிர்கள் வளர நைதரசன் அவசியம். ஆனால், காற்றில் நிறைந்திருக்கும் நைதரசன் வாயுவை எல்லாப் பயிர்களாலும் பயன்படுத்திக் கொள்ள இயலாது. ஹேபர், நைதரசனை அமோனியா உரமாக மாற்றும் வழியைக் கண்டு பிடித்தது உலக விவசாய உற்பத்திக்குப் பாரிய பங்களிப்புச் செய்தது. இந்தக் கண்டு பிடிப்பிற்காக அவருக்கு இரசாயனவியலில் நோபல் பரிசும் கிடைத்தது. ஹேபரின் அடுத்த கண்டு பிடிப்பு கொஞ்சம் விவகாரமானது. குளோரின் வாயுவை, வாயுவாகவே குடுவையில் வைத்திருக்கும் முறையை ஹேபர் கண்டு பிடித்த போது, முதலாம் உலகப் போர் முடிவிற்கு வந்து கொண்டிருந்தது. ஹேபர், பிரெஞ்சுப் போர் முனைக்கு தனது குளோரின் வாயுச் சிலிண்டர்களை ஜேர்மன் படையினரோடு சேர்ந்து எடுத்துச் சென்று பதுங்கு குழியில், காற்று பிரெஞ்சுப் படைகள் இருந்த பக்கம் வீசும் வரைக் காத்திருந்தார். காற்று வளமாக வந்த வேளையில் குளோரின் வாயுவைத் திறந்து விட்டார். காற்றோடு சேர்ந்து பிரெஞ்சுப் படைகளின் பக்கம் நகர்ந்த குளோரின் வாயு தான் முதலாவது இரசாயன ஆயுதம். தரையோடு சேர்ந்து பரவிய குளோரின் வாயு எதிரிகளின் பதுங்கு குழிகளுக்குள்ளும் இறங்கி அவர்களை மூச்சுத் திணற வைத்தது. குளோரின் வாயுவினால் உடனடியாக இறக்காதோர் கண் பார்வை, நுரையீரல் என்பன நிரந்தரமாகப் பாதிக்கப் பட்டு சில நாட்களில் இறப்பர். அந்த மரணம் வரை உடல் அனுபவிக்கும் உபாதை கொடூரமானது. இவ்வாறு ஒரு தடவையில் ஜேர்மனி பயன்படுத்திய குளோரின் வாயுவினால் மட்டும் ஆயிரத்திற்கு சற்று அதிகமான பிரெஞ்சு, கனேடியப் படைகள் இறந்தனர். ஹேபருக்கு ஜேர்மனியில் மதிப்பு உயர்ந்தது, ஆனால் அவர் தனது விஞ்ஞான அறிவை இவ்வாறு பயன்படுத்தியதை அறிந்து அதிர்ச்சியடைந்த ஹேபரின் மனைவி தன் உயிரை மாய்த்துக் கொண்டார். இதில் சுவாரசியமான தகவல் என்னவெனில், ஹேபர் ஒரு ஜேர்மனிய யூதர்! ஆனால், ஜேர்மன் தேசபக்தி காரணமாக கிறிஸ்தவ மதத்திற்கு மாறி, 1933 இல் ஹிற்லர் ஆட்சிக்கு வந்த வேளையிலும் மேலும் சில இரசாயனவியல் வாயுக்களைக் கண்டறிந்து ஜேர்மனியின் விஞ்ஞான வளர்ச்சிக்கு உதவிக் கொண்டிருந்தார். இவ்வாறு இவர் அடுத்துக் கண்டு பிடித்த வாயு, ஐதரசன் சயனைட் வாயு. சிக்லோன் (Zyklon) என்று அழைக்கப் பட்ட இந்த நச்சு வாயுவை இலகுவாக சில திண்மப் பொருட்களிலிருந்து தயாரிக்கும் வழியை ஹேபர் கண்டு பிடித்தார். இந்த நச்சு வாயுவை பூச்சி கொல்லியாகப் பாவிக்கும் நோக்கமே ஹேபரினுடையதாக இருந்தது. ஹேபரின் இந்தக் கண்டு பிடிப்புத் தான் அடுத்த 5 ஆண்டுகளில், சிக்லோன் - பி என்ற பெயரில் மில்லியன் கணக்கான யூதர்களை வாயு அறைகளில் அடைத்து வைத்துக் கரப்பான் பூச்சிகள் போல சில நிமிடங்களில் கொலை செய்யப் பயன் படுத்தப் பட்டது. ஆனால், இது நடப்பதற்கு முன்னரே ஹேபரின் யூத அடையாளம் காரணமாக அவரையும் ஜேர்மன் நாசிகள் ஒதுக்கி வைத்து விட்டமையும் நடந்தது. திட்டமிட்ட யூத ஒதுக்கல் முதலில், எடுத்தவுடனேயே நாசிகள் யூதர்களையும் ஏனையோரையும் கொலை செய்ய ஆரம்பிக்கவில்லை. உலக நாடுகள் பார்த்துக் கொண்டிருக்கின்றன, சர்வதேச வர்த்தகம், இராஜ தந்திர உறவுகள், 1936 பேர்லின் ஒலிம்பிக் என்பன இன்னும் ஜேர்மனியை படுகொலைகள் செய்ய விடாமல் தடுத்திருந்தது. ஆனால், சில திட்டமிட்ட நாசி நடவடிக்கைகள் யூதர்களைக் குறி வைத்தன (இது முழுமையான பட்டியல் அல்ல!): 1. யூதர்களின் வியாபாரங்களைப் புறக்கணிக்கும் படி கோரும் பிரச்சாரம் மூலம் யூதர்களின் பொருளாதாரம் முடக்கப் பட்டது. இது மட்டுமன்றி, புதிதாக ஆரம்பிக்கப் படும் வியாபரங்களில் யூதர்கள் முழு உரிமையாளர்களாக இருக்க முடியாத கட்டுப் பாடுகளும் உருவாக்கப் பட்டன. 2. வர்த்தக சங்கங்களில் யூதர்கள் அங்கத்துவராக இருக்க முடியாத சட்டங்கள் உருவாக்கப் பட்டன. நாசி ஆதரவாளர்களால் நிர்வகிக்கப் பட்ட தொழிற்சங்க அமைப்புகளே முன்னின்று இந்த ஒதுக்கல்களைச் செயல் படுத்தினர். 3. சட்டத்தரணிகளாக, மருத்துவர்களாக, மருந்தாளர்களாக யூதர்கள் பணி செய்யும் அனுமதியை ஜேர்மன் நகரங்களும் மானிலங்களும் மறுத்தன. 4. ஒரு கட்டத்தில், ஜேர்மன் யூதர்களின் பிரஜாவுரிமையைப் பறித்து விடும் சட்டமொன்று வரைபாக சில மாதங்கள் விவாதிக்கப் பட்டது. இறுதியில், சர்வதேச எதிர்ப்பு வரலாமென்பதால் அதை நிறைவேற்றாமல் விட்டார்கள். ஆனால், 1938 அளவில் ஜேர்மன் யூதர்களின் கடவுச் சீட்டுகளைத் தற்காலிகமாகப் பறிமுதல் செய்து, அதில் "ஜெ" என்ற எழுத்தைக் குறித்துத் திருப்பிக் கொடுத்தார்கள். இந்த "ஜெ" என்ற எழுத்துக் குறித்த கடவுச் சீட்டுகளை ஜேர்மன் அதிகாரிகள் புதுப்பிக்க மறுத்ததால், நடைமுறையில் ஜேர்மன் யூதர்கள் தங்கள் குடியுரிமையை இழந்தனர். 5. ஜேர்மன் பாடசாலைகளில் யூதக் குழந்தைகள் சேர முடியாமல் தடை வந்தது. ஒரு கட்டத்தில் எல்லா யூதர்களையும் ஒன்று கூட்டி, பஸ்களில் ஏற்றி நகரின் ஒரு மூலையில் யூதர்களுக்கு மட்டுமே உரியதான ஒரு குடியேற்றத்தில் ஒதுக்கி வாழ வைத்தனர். நினைத்த நேரத்தில், ஜேர்மன் பொலிஸ், காக்கிச் சட்டைக் கும்பல் என்பன இங்கே நுழைந்து யாரையும் கைது செய்ய, தாக்க இந்தக் குடியேற்றங்கள் வாய்ப்பாக இருந்தன. யூதர்கள் அல்லாதோருக்கும் சட்டரீதியான ஒதுக்கல் முன்னரே குறிப்பிட்டது போல, றோமா எனும் ஜிப்சி மக்களும் கூட யூதர்களுக்கு இணையாகப் பாதிக்கப் பட்டனர். இன்னொரு விதமான கொடுமையான ஒதுக்கலையும் நாசிகள் சட்ட ரீதியாக்கினர்: 1933 இல், நாசிகள் உடற்குறைபாடுகள் தொடர்பான ஒரு சட்டத்தை இயற்றினர்: Law for the Prevention of Progeny with Hereditary Diseases. இந்தச் சட்டத்தின் நோக்கம், அப்பழுக்கற்ற ஆரிய இனமாக ஜேர்மனியர்களை மாற்றும் போலி விஞ்ஞான நோக்கமாக இருந்தது (Eugenics - இதை மனிதர்களில் செய்யவே முடியாதென்பது வேறு கதை). அடுத்த 8 வருடங்களில், ஹிற்லரின் கட்டளைப் படி, “ஒபரேஷன் T4” எனும் பெயரில் இரகசியமாக முன்னெடுக்கப் பட்ட திட்டத்தின் கீழ், மூன்று லட்சம் வரையான உடல், மன ஊனங்கள் உடையவர்கள் வாயுக் கூடங்களிலும், விஷ ஊசிகளாலும் கருணைக் கொலை செய்யப் பட்டனர். உண்மையில், யூதர்களைக் கொல்லப் பயன்படுத்தப் பட்ட சிக்லோன் பி விஷவாயு, இந்த உடல் ஊனமுற்றோரில் தான் பரீட்சித்துப் பார்க்கப் பட்டது. பின்னர், 1938 இல் இருந்து இதே முறை மூலம் யூதர்களும் கொல்லப் பட்டனர். இறுதித் தீர்வு - “Final Solution” 1938 நவம்பர் 9 ஆம் திகதி "உடைந்த கண்ணாடி இரவுகள்" (Kristallnacht) என அழைக்கப் படுகிறது. அந்த இரவில் தான், கும்பலாக நாசி ஆயுததாரிகளும், காக்கிச் சட்டைகளும் ஜேர்மன் யூதர்கள் மீது வன்முறையைக் கட்டவிழ்த்து விட்டு சில நூறு யூதர்களைக் கொன்றனர். ஆயிரக் கணக்கான யூதர்கள் கைது செய்யப் பட்டு, புச்சன்வால்ட் வதை முகாமிற்கு அனுப்பப் பட்டனர் - இவர்களுள் பெரும்பாலானோர் நச்சு வாயு அறைகளில் பின்னர் கொல்லப் பட்டனர். இதே ஆண்டில், நாசிகள் ஆஸ்திரியாவையும், பின்னர் செக்கோஸ்லோவாக்கியாவையும் எதிர்ப்பின்றிக் கைப்பற்றி, அங்கே வாழ்ந்த யூதர்களையும் வெவ்வேறு வதை முகாம்களில் அடைத்தனர். ஜேர்மனிக்கு வெளியே, போலந்தில் இருந்த ஆஸ்விற்ஸ் வதை முகாம் தான் அதிக கிழக்கு ஐரோப்பிய யூதர்களைப் பலி கொண்ட கொலைக்களம். ஆனால், வதை முகாம்களில் மட்டுமன்றி சில இடங்களில் திறந்த வெளிகளிலேயே யூதர்கள் பெருந்தொகையாகக் கொல்லப் பட்டனர். இத்தகைய திறந்த வெளிக் கொலைக்களங்களில் முக்கியமானதாக உக்ரைன் தலைநகர் கியேவிற்கு அண்மையில் இருக்கும் பாபி யார் (Babi Yar) பள்ளத் தாக்கு விளங்குகிறது. இந்தப் பகுதியை இயற்கைப் புதைகுழியாகப் பயன்படுத்தி, சுமார் 34,000 யூதர்களை நாசிகள் சில நாட்களில் இயந்திரத் துப்பாக்கிகளால் சுட்டே கொன்றொழித்தனர். இந்த பாபி யார் படுகொலையில் அந்தக் காலப் பகுதியில் சோவியத் எதிர்ப்பாளர்களாக இருந்த உக்ரைனிய ஆயுதக் குழுக்களும் பங்கு கொண்டிருந்தன. 1938 முதல் 1945 வரையான காலப்பகுதியில் மூன்றுக்கு மேற்பட்ட வதை முகாம்கள், ஏனைய திறந்த வெளிக் கொலைகளங்களில் கொல்லப் பட்ட யூதர்களின் எண்ணிக்கை மட்டும் 6 மில்லியன்கள். இதை விட மேலதிகமாக நாசிகளால் கொல்லப் பட்ட ஏனையோர் 4 மில்லியன் வரை இருப்பர். இப்படி, செறிவான, வினைத்திறனான மனிதக் கொலையே முழுமூச்சாக இயங்கிய ஒரு அரச நிர்வாகத்தை அது வரை உலகம் கண்டிருக்கவில்லை. “மிகுந்த வீரரான” 😎ஹிற்லர், இத்தனை படுகொலைப் பழிக்குப் பின்னரும் பொறுப்பை முன்வந்து ஏற்றுக் கொள்ள முடியாமல், தன் காதலியோடு தற்கொலை செய்து கொண்டார். ஆனால், அவரது குற்றத்தில் பங்கு கொண்ட பலர் பிடிக்கப் பட்டு மரண தண்டனைக்குள்ளாகினர். இஸ்ரேல் சில நாசிகளை, தென்னமெரிக்கா வரைப் பின் தொடர்ந்து துரத்திச் சென்று பிடித்து வந்து இஸ்ரேலில் வைத்துத் தூக்கில் போட்டது சுவாரசியமான கதை. ஆனால், ஹிற்லர் இருக்கும் போதே அவருக்குத் தண்ணி காட்டிக் கலங்கடித்த ஒரு கதாநாயகனும் இருந்தார்: அவர் அக்கால பிரிட்டன் பிரதமர் வின்ஸ்ரன் சேர்ச்சில்! சேர்ச்சிலின், அவர் தலைமையில் நாசிகளுக்கு சவால் விட்ட பிரிட்டனின் கதை நாசிகளின் நரவேட்டையை விட உரத்துச் சொல்லப் பட வேண்டிய வெற்றிக் கதை! - வெற்றிக் கதை தொடரும்- -ஜஸ்ரின்
  27. முன் குறிப்பு பாகம் IV ம் V ம் இக்கதையின் இரு வேறுபட்ட முடிவுகள் (கிளைமாக்ஸ்). ———————————————— பாகம் IV இன்று ஒரு மிக முக்கியமான நாள். அவனுக்கும் இவனுக்குமான அந்த சம்பாசணை நிகழ்ந்து கிட்டத்தட்ட பதின்மூன்று மாதங்கள் உருண்டோடி விட்டிருந்தன. அதன் பின் வைத்திய நண்பனின் ஆலோசனையின் பெயரில் அவன் இவனுடன் தொடர்பு ஏற்படுத்துவதை அறவே தவிர்த்து விட்டிருந்தான். பதின்மூன்று மாதங்கள் முன்னதாக நடந்த அன்றைய சம்பாசணையின் போது இவனுக்கு… நீ கட்டாயம் ஒரு சைக்கியாடிரிஸ்டை பார்க்க வேண்டும் மச்சான்…. உடல் காயம் போலத்தான், மனக்காயமும். இரெண்டுக்கும் ஒரு அளவுக்கு மேல் மருந்து அவசியம்….. என தயங்கி, தயங்கி அவன் சொல்லி இருந்தான். இவனும் கூட சற்றே மனம் நிதானப்பட்ட ஒரு நிமிடத்தில்… நீ சொல்றது சரிதான் மச்சான்…. எனக்கு ஏதோ பிசகீட்டுது எண்டு விளங்குது…கெதியா காட்டோணும்…மருந்து எடுக்கோணும்…. இல்லாட்டில் முழு விசராக்கிப்போடும்… என சொல்லியும் இருந்தான். ஆனால் அடுத்த நொடியே, போரிஸ், ஏலியன், மனைவி என வேதாளம் மீண்டும் மரத்தில் ஏறிவிட்டது. இதை எல்லாம் கருத்தில் எடுத்த வைத்திய நண்பன் அவனுக்கும், இவனுக்கும் மட்டுமான உறவை மட்டும் அல்ல, இத்தனை மாதகாலமும் இவனுக்கும் அவனின் வட்டத்தில் மனைவியை தவிர மிகுதி அனைவருக்குமான தொடர்புகள் அனைத்தையும் துண்டித்தே சிகிச்சையை தொடர்ந்தான். இந்த ஏற்பாட்டின் பலனாக, தன்னையும், மனைவியையும், வைத்தியரையும் தவிர வேறு எவருக்கும் இந்த பிரச்சனையின் ஆழம் தெரியாது என்ற நம்பிக்கையோடு இத்தனை மாதகாலமாக இவனும் தொடர்ந்து சிகிச்சையை எடுத்து வந்தான். இவனோடு தொடர்பில் இல்லாதபோதும் வைத்திய நண்பனோடும், திருமதி இவனோடும் அவன் தொடர்பில் இருந்து, இவனுக்கு வழங்கப்படும் மருந்துகள், சிகிச்சைகள் பற்றி முழுவதுமாக அறிந்தே இருந்தான். நேற்று வைத்திய நண்பன் பேசும் போது இவன் கிட்டதட்ட முழுவதுமாக தேறி விட்டான் எனவும். அன்றைய சம்பாசணையை பற்றி இவனுக்கு அதிகம் நியாபகம் இல்லை எனவும். அதை பற்றி கதைப்பதை தவிர்த்து, வழமை போல் உரையாடலை தொடரும் படியும் அவனுக்கு கூறி இருந்தான். இதோ…நெஞ்சம் நிறைந்த படபடப்போடு அவன் மொபலை எடுத்து இவனின் வாட்சப் நம்பரை அழுத்த தயாராகி விட்டான்……. அழைப்பை எடுக்க முதல், வைத்திய நண்பன் கடைசியாக சொன்னதை மீண்டும் ஒரு முறை அவன் நினைவு படுத்தி கொண்டான். மச்சான்…மறந்தும் வாயை விட்டுடாதயடா…இவனுக்கு தனக்கு வந்த பிரச்சனை எவ்வளவு பெரிசு…தான் என்ன குழிசையள் எடுத்தது…இனியும் என்ன குழிசையள் எடுக்க வேணும்…எல்லாம் வடிவா தெரியுமடா. ஆனால் இவனை பொறுத்தவரை…இது எதுவும் உனக்கு தெரியாது…அதை நீ மறந்துடாத… ——————————— இவனுடனான தொலைபேசி அழைப்பு நினைத்தததை விட சகஜமாகவே போய் கொண்டிருந்தது. ஆனால் உறவு முன்னர் போல் அந்நியோனியமாக இல்லை என்பதாக அவனுக்கு தோன்றியது. தொடர்பு விட்டு போனமைக்கு பரஸ்பரம் மன்னிப்புகள், குடும்பத்தினர் நலம் விசாரிப்புகள் என வழமையான விடயங்கள் பேசித்தீர்ந்த பின் உருவான அந்த அசெளகரியமான நிசப்தத்தை கலைத்து கொண்டு…இவன் தானாகவே பேசினான். மச்சான்…அண்டைக்கு நான் கதைக்கேக்க கொஞ்சம் அப்செட்டா இருந்தனாண்டா… ஒரு சின்ன ஸ்டிரெஸ்…நித்திரை கொண்டு எழும்பினதும் அது சரியாப் போச்சு…. என்ன சொல்வது என தெரியாத அவன்…ம்ம்…என்று சொல்லி விட்டு இதை எப்படி கையாள்வது என யோசித்து கொண்டிருக்கும் போதே…இவன் தொடர்ந்தான்…. நல்ல காலம் மச்சான்…. உண்ட பேய் கதையை கேட்டு நான் டொக்டரிட்ட போய் இருந்தா என்னை பைத்தியம் எண்டே முடிவு கட்டி இருப்பாங்கள்…. இனிமேலாவது கண்டதையிம் வாசிச்சு போட்டு…அட்வைஸ் பண்ணுறன் பேர்வழி எண்டு மற்றவனுக்கு விசர்பட்டம் கட்டாத மச்சான்……. அதிர்ச்சியில் இருந்து இன்னமும் மீளாத அவன்…கதையை மேலும் வளர்க்க விரும்பாதவனாக…… ம்……ம்…ம் கொட்டினான். #stigma #கேடிசூழ் #கறை #வடு (யாவும் கற்பனை) பாகம் IV முற்றும்.
  28. பாகம் III அவனின் காருக்குள் மூச்சுக்காற்று புகாராகி, கண்ணாடியிலும் பதிந்து ஒரு திரைச்சீலை போல் ஆகி இருந்தது. அநேகமாக மூன்று அல்லது மூன்றரை மணி நேரம் அவன் இப்படி காரில் இருந்தபடியே பேசி கொண்டிருந்திருக்க வேண்டும். எஞ்சினை ஆன்பண்ணி புகார் நீக்கியை தட்டி விடவோ, அல்லது கண்ணாடியை இறக்கி விடவோ கூட அவனுக்குத் தோணவில்லை. பேச்சின் பொருள் அத்தகையது. காரினை ஸ்டார் செய்தபோது வெளியே வெப்பநிலை -2 எனக்காட்டியது டாஷ்போர்ட். ஆனால் அவனின் உடலோ தெப்பமாக வியர்வையில் நனைந்திருந்தது. இவனுடன் போனில் கதைத்து கொண்டே வேலைக்கு இன்று அவசர லீவு என ஒரு இமெயிலை தட்டிவிட்டிருந்தான் அவன். இனி இந்த நாள் முழுவதும் அவனுக்கு ஓய்வுதான். வேலையில் இருந்து போனிலும், இமெயிலிலும் நொய் நொய் என்று யாரும் தொந்தரவு செய்ய மாட்டார்கள். இவன் போனில் சொன்னதை முதல் ஐந்து நிமிடம் வரை கூட அவன் பகிடி என்றே நினைத்தான். தன்னை ஏலியன்கள் பிந்தொடர்வதாயும். பெப்ரவரி 2023 இல் தன்னை கடத்திப் போக அவர்கள் திட்டமிட்டிருப்பதாயும். தனது மனைவியை பிரித்தானியாவின் முன்னாள் பிரதமர் பொரிஸ் ஜோன்சன் காதலிப்பதாயும். அவளை கவர திட்டமிடுவதாயும். பொரிசும் ஒரு ஏலியன் என்றும் இவன் சொல்ல, சொல்லத்தான், அவனுக்கு கொஞ்சம், கொஞ்சமாக இது வழமையான பிராங்க் இல்லை என்பது புரிய தொடங்கி இருந்தது. படி… பொரிஸ் வாண்ட்ஸ் டு டேக் ஹேர் ப்ரொம் மீ படி… பிளீஸ் ஹெல்ப் மீ… ஐ ஒன்லி ஹாவ் யூ… என தன் ஆருயிர் நண்பன் உடைந்து அழுத போது…..அவனுக்கு முள்ளம் தண்டில் உள்ளிருக்கும் முன்ணானின் அடியில் இருந்து, மூளை வரை, சில்லிட்டது போல ஒரு உணர்வு பரவியது. ஒரு வழியாக இவனை சமாதானப்படுத்தி போனை வைத்து விட்டு, கொழும்பில் பெயர் போன இன்னொரு மன நல வைத்தியர் நண்பனுக்கு போன் பண்ணி, விபரம் சொல்லி, அவனை உடனடியாக இவன் வீட்டுக்கே போய் வைத்தியம் பார்க்கும் ஏற்பாட்டை செய்து விட்டு அதை இவனின் மனைவிக்கும் எடுத்து சொல்லி ஒருவழியாக இந்த பிரச்சனையின் தீர்வை நோக்கி ஒரு அடியை எடுத்து வைத்தபோதுதான்…. சுகர் வருத்தகாரனான அவன் நேற்று முன்னிரவில் இருந்து எதையும் சாப்பிடவில்லை என்பதும்….ஹைபோ கிளைசீமியா எனும் ரத்தத்தில் குளுகோசின் அளவு குறையும் நிலைக்கான அறிகுறிகள் அவனில் தோன்ற ஆரம்பித்துள்ளமையையும் அவன் அவதானித்தான். ஆன் செய்த வாகனத்தை அப்படியே ஆப் செய்து விட்டு…டெஸ்கோவில் இருக்கும் கோஸ்டா கோப்பிக்கடை நோக்கி நடக்கத்தொடங்கினான் அவன். தொடரும்…. (யாவும் கற்பனை)

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.