Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Leaderboard

  1. suvy

    கருத்துக்கள உறவுகள்
    9
    Points
    33600
    Posts
  2. குமாரசாமி

    கருத்துக்கள உறுப்பினர்கள்
    9
    Points
    46793
    Posts
  3. தமிழ் சிறி

    கருத்துக்கள உறவுகள்
    9
    Points
    87990
    Posts
  4. ஈழப்பிரியன்

    கருத்துக்கள உறவுகள்
    9
    Points
    20019
    Posts

Popular Content

Showing content with the highest reputation on 03/25/23 in all areas

  1. அந்தக் கண்கள் *************************** அவருக்கும் எனக்கும் இடையில் இரண்டு அடிகள் மட்டுமே இடைவெளி இருந்தன. எனக்கும் அவருக்குமான அந்த இடைவெளியில் சில யுகங்கள் நீண்டு பரவிக் கிடந்தன அந்த யுகங்களில் துயரம் ஒரு பேறாறாக பெருகி வழிந்து கொண்டு இருந்தது அந்த துயரை, ஆற்றா மனவலியை, அடக்க முடியாத சோகத்தை, வாழ்வு மீதான அவ நம்பிக்கையை இரண்டு கண்களும் கசிய விட்டுக் கொண்டிருந்தன. அந்தக் கண்களை நான் இரண்டடி தூரத்தில் கண்டேன். அந்தக் கண்கள் என்னையே உற்றுப் பார்த்துக் கொண்டு மரணத்தை யாசித்துக் கொண்டு இருந்தன. மரணம் இரண்டு கைகளையும் விரித்து அரவணைக்க ஆயத்தமானது, நாசிகளில் மரணத்தின் வாசனை. . ************************* எனக்கு பொதுவாக கடைகளுக்கோ அல்லது நண்பர்களின் வீடுகளுக்கோ செல்லும் போது தனிய போவது பிடிக்காது, மனைவியுடன் அனேகமான நாட்கள் போவது. சில நாட்களில் மகளுடன் போவதுண்டு. மனைவி பக்கத்தில் இருக்கும் கடை என்றாலும் எனக்கு ஒரு 'சிண்' வேண்டும், கதைத்துக் கொண்டு போக. மனைவி பக்கத்தில் இருந்தால், "அந்தக் கார் உங்கள் முன்னுக்கு பிரேக் அடிக்கின்றான்.. காரை ஸ்லோ பண்ணுங்களன்.." என்றோ அல்லது "தூரத்தில் ஒருவர் ரோட்டை க்ரோஸ் பண்ணுகின்றார் கவனம் என்றோ " சொல்வதும் அதற்கு நான் "16 வருசமா ஒரு Traffic டிக்கெட்டும் எடுக்காமல் கனடாவில் கார் ஓடுறன். இப்படி பக்கத்தில் இருந்து கொண்டு எனக்கு படிப்பிக்க வேண்டாம்." என்று பதில் சொல்வதும் நடக்கும். பெண்கள் எப்பவும் பெண்களாக இருப்பது போன்றுதானே ஆண்கள் எப்பவும் ஆண்களாவே இருக்கின்றோம். சில விடயங்களை எப்பவும் மாற்ற முடியாது. ஆனால் அவ்வாறு அன்று அவர் சொன்னதால் தான் என் வாழ்வின் மிகப்பெரிய அனர்த்தம் ஒன்று தவிர்க்கப்பட்டது. இல்லாவிடின் விசரனாக தான் மாறியிருப்பேன். அன்றும் அப்படித்தான் டிசம்பர் மாதம். பனிவிழும் காலம் ஆரம்பித்து இருந்தது. இரவு 8 மணி. சாலைகளில் பனி ஈரத்தில் மினுங்கும் மின் விளக்குகளின் நிழல்களை மீறி இருள் கவிண்டு கிடந்திருந்தது. பனி மூட்டமும், இருளும், இலேசாக தூறும் உறை பனி மழையும் என அந்த இரவு வெளிச்சம் குறைந்த இரவாக இருந்தது. தமிழ் கடைக்காரர் கொஞ்சம் முந்தி தான் தொலைபேசி அழைப்பு எடுத்து "அண்ணை ஊசிக் கணவாய் வந்திருக்கு...வந்து வாங்க போறியளோ..நாளைக்கு காலம நீங்கள் வாறதுக்கு முன் முடிந்து விடும்" என்று சொல்லியிருந்தார். ஊசிக் கணவாய் என்ற சொல்லை கேட்டாலே எனக்கு வாய் ஊறும். நல்ல உறைப்பாக, கொஞ்சம் தேங்காய்ப்பால் போட்டு, கறி வைச்சு சாப்பிட்டால் அந்த மாதிரி இருக்கும். அதுவும் சில ஊசிக்கணவாய்கள் பிஞ்சில பழுத்த மாதிரி, சரியாக வளற முன்னரே வயிற்றில் முட்டையை வாங்கியிருக்கும். அந்த முட்டைகளின் ருசி தனி ருசி! மெல்லிய பனி விழும் இரவின் அழகை ரசித்தவாறு, பின்னனியில் எப்பவும் இசைக்கும் இளையராஜாவின் பாடலைக் கேட்டவாறு, 80 கிலோ மீற்றர் வேகம் அனுமதிக்கப்பட்ட சாலையில் 85 கிலோ மீற்றர் வேகத்தில் , மனைவியுடன் சந்தோசமாக கதைத்து சிரித்துக் கொண்டு ஊசிக் கணவாயை வாங்குவதற்காக சென்று கொண்டு இருக்கின்றேன்.... தூரத்தில் ஒரு கார் எமர்ஜென்சி விளக்குகளை போட்டவாறு வீதியின் கரையில் நிறுத்தி இருப்பது தெரிந்தது. குளிர் காலம் வந்தவுடன் இப்படி கார்கள் இடைக்கிடை வேலை செய்யாமல் வீதி ஓரங்களில் நின்று விடும். அனேகமாக பற்றரி போயிருக்கும் அல்லது போனில் கதைப்பதற்காக நிறுத்தி வைத்து இருப்பர். நான் தொடர்து காரை செலுத்துகின்றேன். திடீரென்று... மனைவி "ஐயோ.... நடு றோட்டில் ஒருவன் நிற்கின்றான்... நிற்பாட்டுங்கோ" என்று அலறினார். 85 கிலோ மீற்றர் வேகத்தில் காரைச் செலுத்திக் கொண்டு வந்த நான், மனைவி போட்ட கூச்சலில் சடுதியாக தன்னிச்சையாகவே ப்ரேக்கினை போடுகின்றேன். என் கார், ஒரு சில மீற்றர்கள் ஓடி, தன்னால் முடியுமானளவுக்கு வேகத்தை சடுதியாக குறைத்து, முற்றாக நின்ற போது எனக்கும் அந்த நபருக்கும் இடையில் இரண்டு அடிகள் மட்டுமே இருந்தன. அவர் எந்தச் சலனமும் இன்றி, நடு வீதியில், என் கார் வந்த திசையில், என்னை பார்த்தாவாறு நின்று கொண்டு இருந்தார். வேகமாக வரும் ஒரு வாகனத்துக்காக வந்தவுடன் மோதி உடலை சிதைக்க வைக்க வேண்டும் என்பதற்காக மோதித் தள்ளினால் மரணம் கட்டாயம் நிகழ்வதற்காக நின்று கொண்டு என் கண்களை ஊடறுத்து பார்க்கின்றார். எனக்கும் அவருக்குமான அந்த இடைவெளியில் சில யுகங்கள் நீண்டு பரவிக் கிடந்தன... அந்த யுகங்களில் துயரம் பல பேறாறுகளாக பெருகி கொண்டு இருந்தன.. அந்த துயரை, ஆற்றா மனவலியை, அடக்க முடியாத சோகத்தை, வாழ்வு மீதான அவ நம்பிக்கையை இரண்டு கண்களும் கசிய விட்டுக் கொண்டு இருந்தன.. அந்தக் கண்களை நான் இரண்டடி தூரத்தில் கண்டேன். அவை என்னிடம் தன் மரணத்தை யாசித்துக் கொண்டு இருந்தன. அவை வாழ்வை தன்னிடம் இருந்து பிய்த்து எறியும் ஒரு தருணத்துக்காக காத்துக் கிடந்தன. என்னை கொன்று விட்டு போ என்று இறைஞ்சிக் கொண்டு இருந்தன... அவர் ஆறடிக்கும் மேல் உயரம். சிறு தாடி, 35 வயதுக்குள் இருப்பார், அரேபியராகவோ அல்லது ஐரோப்பியராகவோ இருக்கலாம். ஒரு சில வினாடிகளுக்குள் நிகழ்ந்த பேரதிர்ச்சியில் என் முழு உடலும் நடுங்கிக் கொண்டு இருக்கின்றது நான் சடுதியாக ப்ரேக் போட்டு நிறுத்தியதால் என் பின்னால் வந்து கொண்டிருந்த வாகனம் என் காரை முட்டி மோதுவதை தவிர்ப்பதற்காக கடும் பிரயத்தனப்பட்டு கொண்டு இருந்ததை கண்டவுடன்,ப்ரேக்கில் இருந்து காலை எடுத்து வேகமாக அடுத்த லேனுக்குள் விட்டேன். பின்னால் வந்த வாகனமும் ஒருவாறு அவ் நபரை இடிக்காமல் நகர்ந்தது. என் உடல் இன்னும் நடுங்கிக் கொண்டு இருந்தது. கைகள் சோர்வாக தெரிந்தன. அழ வேண்டும் போலவும் இருந்தது. நெஞ்சு அடைத்துப் போய் விட்டது. அடைபட்ட நெஞ்சில் இருந்து விடுபட்ட மூச்சு பெரு மூச்சாக வெளியே வந்தது. சில நூறு மீட்டர்கள் காரைச் செலுத்திய பின் தான் என்ன நிகழ்ந்தது என்பதை மனம் மீட்டிப் பார்க்க தொடங்கியது. "மோட்டு மனுசன்.. இந்த இரவில் றோட்டை க்ரொஸ் பண்ணுகின்றார்" என்று மனைவி சொன்னார். "இல்லை...அவர் என் காரின் திசையில் உடலைக் காட்டியவாறு நின்றவர்... தற்கொலைக்கு முயன்று இருக்கின்றார்" என்றேன். அப்பதான் இன்னொன்றும் உறைத்தது. அந்த எமர்ஜென்சி போட்ட கார் அவருடையதாகவே இருக்கும். காரைச் செலுத்திக் கொண்டு வந்தவர் ஏதோ ஒரு கணத்தில் தற்கொலையை நாடியிருக்கின்றார். ஒரு புள்ளியில் மரணமே தனக்கு தீர்வு என்று நம்பியிருக்கின்றார்.ஏதாவது வாகனத்தில் அடிபட்டு செத்துப் போவோம் என்று நினைத்து இருக்கின்றார். என்மனைவியின் அலறல் அவரது மரணத்தை தள்ளி வைத்து விட்டது. பிறகு, நான் கடைக்கு போய் கணவாயை வாங்கிவிட்டு வெளியே வந்து காரில் ஏறியபின்... மனைவிக்கு "கவி, எனக்கு மனசுக்குள் ஒரு மாதிரி இருக்கு... திருப்பி அதே வீதியால் போய் பார்க்க போகின்றேன்.. அவருக்கு என்ன நடந்தது என்று அறியாவிடின் என்னால் கன நாட்களுக்கு நித்திரை கொள்ள முடியாது " என்றேன். அவரும் "சரி.. மனசுக்கு மாதிரி இருக்கு என்றால் போய் பார்ப்பம்" என்றார் மீண்டும் அவ் வழியால் திரும்பி செல்லும் திசையில் சென்ற போது, அவர் நின்ற அதே இடத்தில், வீதி ஓரம் மூன்று பொலிஸ் கார்கள் வரிசையாக நின்று கொண்டு இருக்கின்றதை காண்கின்றேன். அந்த மூன்று கார்களும் அந்த எமர்ஜென்ஸி விளக்குகள் போட்டு நிறுத்தி இருந்த, நான் முன்னர் குறிப்பிட்ட அந்த காரை சுற்றித்தான் நின்றன. நான் அடுத்த சந்தியில் ஒரு யூ ரேர்ன் போட்டு, அந்த பொலிஸ் கார்கள் நிற்கும் இடத்துக்கு வந்து காரை நிறுத்தி விட்டு, மனைவிக்கு "என்ன நடந்தது என்று போய் கேட்க போகின்றேன்" என்றேன். "பயமில்லையா... உங்களை சந்தேகப்பட்டால்" என்று கேட்கின்றார். "இல்லை,... எனக்கு என்ன நடந்தது என்று அறிய வேண்டும்" என்று விட்டு இறங்கி பொலிஸ்காரர்கள் நின்ற திசையில் நடந்து அவர்களருகில் செல்லும் போது, அவர்களில் இருந்த மூன்று பேர் என்னை நோக்கி வந்து "என்ன விடயம்" என்று கேட்டார்கள். நான் "10 நிமிடங்களுக்கு முன் இதே இடத்தில், இதே வீதியில், ஒருவர் என் காரின் முன் நின்று தற்கொலைக்கு முயன்றார்... அவர் அநேகமாக இந்த காரில் தான் வந்திருப்பார்" என்றேன். அவர்கள் ஆங்கிலத்தில் "dont worry... we are taking care of him now (கவலைப்படாதே நாங்கள் அவரை கவனித்துக் கொண்டு இருக்கின்றோம் இப்ப) " என்றனர். அவர்களில் ஒரு இளம்பெண் பொலிசாரும் இருந்தார். நான் அவரிடம் "Did he try to commit suicide" என்று கேட்க "Yes he was" என்று அழகான முகத்தில் ஒரு புன்னகையை தவழ விட்டவாறு சொன்னார். என்ன நடந்திருக்கும் என்று என்னால் ஊகிக்க முடிந்தது. என் பின்னால் வந்த வாகனத்தில் இருந்தவரோ அல்லது அதன் பின்னால் வந்தவரோ 911 இற்கு அடித்து பொலிசாருக்கு தகவல் சொல்லியிருக்கினம். அவர்கள் ஓடி வந்து ஆளை மீட்டு இருக்கினம். யோசித்துப் பார்த்தால், நானும் 911 இற்கு அடித்து உடனே சொல்லி அவர் உயிரை காப்பாற்ற முயன்று இருக்க வேண்டும். நிகழ்வு தந்த பதட்டத்தில் புத்தி எதையும் யோசிக்கவில்லை. ஆனால் இன்னொருவர் அந்த கடமையை செய்து இருக்கின்றார். இது நிகழ்ந்து ஒரு வாரம் போன பின்னும் காரை செலுத்த தொடங்கும் நேரம் எல்லாம் எனக்குள் சிறு பதட்டம் வந்து போகும். அதுவும் அதே வீதியால் போகும் போது உடலில் நடுக்கம் ஏற்படும் இப்ப அப்படி வருவதில்லை...ஆயினும் அந்தக் கண்கள் மட்டும் எப்ப நினைத்தாலும் மனசுக்குள் அப்படியே வந்து போகும். இனி என்னால் ஒரு போதுமே அந்தக் கண்களை மறக்க முடியாது!
  2. மலர்..........(3). நிர்மலாவும் தான் இனி என்ன செய்யவேண்டும் என்று மனதுக்குள் நினைத்து கொள்கிறாள். தொடர்ந்து இங்கே இருப்பதா அம்மா வீட்ட சென்று அவர்களுக்கு சுமையாக இருப்பதா. ஏற்கனவே பெரியத்தான் குடி வெறி என்று ஒழுங்காக இல்லாததால பெரியக்கா குடும்பமும் பிள்ளைகளுடன் அம்மாவோடுதான் இருக்கிறார்கள். இதில் நானும் அங்கு சென்று இருப்பது சரியாய் இராது. என்று பலவாறு நினைக்கிறாள். தான் முன்பு விளையாட்டாக "யூ டியூபில்" சமையல் மற்றும் தோட்டக் கலை என்று தொடங்கிய நிகழ்ச்சிகள் மூலம் ஏதோ கொஞ்ச காசு வருகுதுதான் ஆனால் அது மட்டும் போதாது வேறு ஏதாவதும் செய்ய வேண்டும். அவளால் சரியாக ஒரு முடிவுக்கும் வர முடியவில்லை. அன்று இராசம்மாவும் சங்கரும் வீட்டில் பரபரப்பாக வேலைகள் செய்து கொண்டிருக்கிறார்கள். சங்கர் கடைக்கும் போகவில்லை. அவன் தனது பெட்டியில் வேட்டி, சட்டை மற்றும் புது ஆடைகள் எல்லாம் எடுத்து வைத்து பூட்டுகிறான்.வளமையாய் அவன் எங்காவது வெளியூர் போவதென்றால் நிர்மலாதான் எல்லா ஆயத்த வேலைகளும் செய்து வைப்பாள். அவனுக்கு ஒரு வேலையும் இருக்காது. ஐயா ஹாயாக பெட்டியை உருட்டிக் கொண்டு கிளம்பிப் போவார்.இப்போது எதற்கும் அவளை கூப்பிடவில்லை.அவர்களுக்கு உள்ளுக்குள் குற்ற உணர்வு இருப்பதையும் அவள் கவனிக்கிறாள். வெளியே அவர்களது கார் வந்து நிக்கும் சத்தம் கேட்கிறது. அதை சாரதி மிகவும் அழகாக கழுவி பொலிஸ் போட்டு துடைத்துக் கொண்டு வந்திருந்தார். வெளியே தயாராய் இருந்த இவர்களது சாமான்கள் எல்லாவற்றையும் அவரே எடுத்துக் கொண்டு போய் கார் டிக்கியில் வைக்கிறார். நிர்மலா எல்லோருக்கும் தேநீர் கொண்டுவந்து குடுக்கும் போது இராசம்மாவும் நிர்மலாவிடம் பிள்ளை நாங்கள் ஒரு அலுவலாய் ஒரு இடத்துக்கு போயிட்டு இரண்டுநாள் கழித்துத்தான் வருவம். அதுவரை தாயம்மாவும் நீயும் வீட்டைப் பார்த்துக்கொண்டு கவனமாய் இருங்கோ. நான் போய் வந்து எல்லாம் சொல்லுறன். வீட்டையும் கொஞ்சம் கழுவித் துடைத்து வளைவுகளையும் கூட்டிப் பெருக்கி சுத்தமாய் வைத்திருங்கோ என்று சொல்லி கொஞ்சநேரம் அவளது கையை வாஞ்சையாய் பிடித்திருந்தது விட்டு கலங்கிய கண்களுடன் காருக்குப் போக சங்கரும் அவளைத் தீர்க்கமாய் ஒரு பார்வை பார்த்து விட்டு தலை குனிந்து கொண்டு போய் காருக்குள் ஏறுகிறான். காரும் புறப்பட்டு செல்கிறது. நிர்மலாவுக்கும் வேலைக்காரம்மாவுக்கும் வீட்டில் நிறைய வேலைகள் இருந்தன. அவர்கள் கூடுதலாக இரண்டு ஆட்களையும் கூலிக்கு கூப்பிட்டு வீடு மட்டுமன்றி தோட்டம், முற்றம் என்று எல்லாவற்றையும் நன்றாக செப்பனிட்டு மரம் செடி கொடிகள் எல்லாவற்றையும் அழகாக கத்தரித்து செழிப்பாக வைத்திருந்தார்கள். நான்காம் நாள் அதிகாலை நிர்மலா முதல்நாளே ஒழுங்கு செய்து வைத்திருந்த தனது சூட்கேஸ், கணனி கைபேசி எல்லாவற்றையும் எடுத்துக் கொண்டாள். மறக்காமல் போன் சிம்மை கழட்டி பையில் வைத்துவிட்டு மிக்க வேதனையுடன் தாலிக்கொடியை கழட்டி தனது கூறைச் சேலையின் மேல் வைத்து அவற்றை சங்கரின் மேசைமேல் வைத்து விட்டு வெளியே வருகிறாள். பின் குசினி அருகே இருக்கும் அறையை சென்று பார்க்க அங்கு தாயம்மா பகல்முழுதும் வேலை செய்த களைப்பில் நன்றாக அயர்ந்து உறங்குகிறாள். அப்படியே வீதிக்கு வந்தவள் சிறிது தூரம் நடக்கும்போது அவ்வழியால் வந்த ஒரு ஆட்டோவைப் பிடித்து புகையிரத நிலையத்துக்கு வருகிறாள். எதற்கும் இருக்கட்டும் என்று கொழும்புவரை பயணச்சீட்டு எடுத்துக் கொண்டு அடுத்து வந்த புகையிரதத்தில் ஏறி அமர்ந்து கொள்கிறாள். அந்த வண்டியும் சாவகச்சேரி, கொடிகாமம் என்று ஒவ்வொரு நிலையமாய் நின்று நின்று போகிறது. நிர்மலாவுக்கு எங்கு போவது, எங்கு இறங்குவது என்ற எண்ணம் இல்லை. அவர்கள் வரமுதல் இங்கிருந்து போக வேண்டும் என்ற எண்ணம்தான் மேலோங்கி இருக்கின்றது. வவுனியாவில் வண்டி நிக்கும்போதுதான் தன் நினைவுக்கு வந்தவள் இனி அங்கால எல்லாம் சிங்கள ஊர்கள்தான் வரும், அதனால் இங்கேயே இறங்கி அடுத்த அலுவலைப் பார்க்கலாம் என்று நினைத்து வண்டி புறப்பட முன் பெட்டியுடன் இறங்கி விடுகிறாள். காலைப் பொழுது பலபலவென்று விடிந்து விட்டிருந்தது. நேராக வவுனியா மையத்துக்கு நடந்து வருகிறாள். இது எனக்குப் பழக்கமில்லாத ஊர் அதனால் எதற்கும் பயந்தவளாக தன்னைக் காட்டிக் கொள்ளக் கூடாது என்று தனக்குள் சொல்லிக்கொண்டே வருகிறாள். அதனால் மிகவும் பழகியமாதிரி அங்கிருந்த ஒரு கைபேசி விற்கும் கடைக்கு சென்று புதிதாக ஒரு சிம் வாங்கிப் போனுக்குள் பொருத்திவிட்டு ஒரு புதிய இலக்கத்தையும் பெற்றுக் கொண்டு வெளியே வரும்போது எங்கிருந்தோ ஒரு கோவில் மணி ஒலிக்கின்றது. அந்த ஓசையைப் பிடித்துக் கொண்டு அங்கு சென்றால் அது ஒரு முருகன் கோவில். அங்கு நன்கு வணங்கி முருகனுக்கு ஒரு அர்ச்சனையும் செய்துவிட்டு தனது கைபேசி மூலம் அருகில் இருக்கும் பல விடுதிகளில் ஒன்றைத் தெரிவுசெய்து அங்கு சென்று தனியறை ஒன்றை எடுத்து அங்கே தனது பெட்டியை வைத்துவிட்டு சிறிது ஒய்வு எடுக்கிறாள். பின்பு நிர்மலா அறையைப் பூட்டிவிட்டு கைப்பையுடன் வெளியே வருகிறாள். அவளது நோக்கமெல்லாம் நகரத்தைத் தாண்டி கொஞ்சம் உள்ளூருக்குள் சென்று ஒரு பாடசாலையை அண்மித்த இடமாக வதிவிடம் பிடிக்க வேண்டும் என்பதுதான். தற்போது நிர்மலாவிடம் போதிய அளவு பணமும் தனக்குப் பெற்றோர் போட்டுவிட்ட நகைகளும் கொஞ்சம் இருக்கின்றன. கைபேசியிலேயே அங்குள்ள பாடசாலைகளைத் தெரிவு செய்து பின் ஒரு வீதியைப் பிடித்து நடந்து செல்கிறாள்.......! மலரும்..........!🍁
  3. புட்டின் அருமை தெரியுமா ஞானத்தங்கமே 🤣 குழல் புட்டின் மகிமை தெரியுமா சின்னத்தங்கமே... நீற்று பெட்டி புட்டின் பக்குவம் தெரியுமா குஞ்சுத்தங்கமே... கோதுமை மா புட்டின் சுவை தெரியுமா ஞானத்தங்கமே... வழுக்கல் தேங்காய் கலந்த புட்டின் சுவை தெரியுமா சின்னத்தங்கமே... வறுத்த அரிசி மா புட்டின் வாசனை தெரியுமா குஞ்சுத்தங்கமே.. ஒடியல் புட்டின் பலன் தெரியுமா ஞானத்தங்கமே... மரக்கறி புட்டின் சுவை தெரியுமா சின்னத்தங்கமே.. பால் புட்டின் சொர்க்கம் தெரியுமா குஞ்சுத்தங்கமே... அரிசி மா புட்டின் பதம் தெரியுமா ஞானத்தங்கமே... கூப்பன் மா புட்டின் பதம் தெரியுமா சின்னத்தங்கமே... ஒடியல் மா புட்டின் பதம் தெரியுமா குஞ்சுத்தங்கமே... கருவாட்டு குழம்புடன் சேர்ந்த புட்டின் சுவை தெரியுமா ஞானத்தங்கமே ... சிவன் மண் சுமந்த புட்டின் கதை தெரியுமா சின்னத்தங்கமே...
  4. சிங்கள இராணுவத்தினர் 1983 பின்னரான காலகட்டங்களில், சாதாரண நூலகங்கள் பலவற்றினை எரித்தது கூட ஒரு திட்ட மிட்ட செயற்பாட்டினடிப்படையில் என புரிகிறது. அப்படியானால் தமிழாரது கல்வியினை பார்த்து சிங்களம் அச்சம் கொள்கிற நிலை உள்ளது என்பதினை காணமுடிகிறது, (பொதுவாக கல்வி தொடர்பாக இதுவரை எனக்கு பெரியளவில் நன்மதிப்பு இருந்திருக்கவில்லை) இந்த தொடரினை தற்போது எப்போது அடுத்த பதிவு வரும் என ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருந்து படிக்கும் ஒரு சுவாரசியாமான பதிவாகவும் அதே வேளை வரலாற்றினை சமரசமின்றி கூறும் பதிவாகவும் உள்ளது. நன்றி ரஞ்சித், உங்களது முயற்சிக்கு.
  5. உண்மை அண்ணா. பதட்டத்தில் எதுவும் செய்யத் தோன்றவில்லை. அத்துடன் அவர் வீதியை கடக்க முயன்று வாகனத்தை கண்டவுடன் ஸ்தம்பித்து நின்றரா அல்லது தற்கொலைக்கு முயன்றவரா என்ற கேள்விகளும் எனக்கு இருந்தன. யோசித்துப் பார்க்கும் போது இப்படி எத்தனை தவறுகளை நாம் வாழ்க்கையில் புரிந்து இருப்போம் என யோசிக்க தோன்றுகின்றது. சரியாக அடுத்த வாரமே இந்த தவறைத் திருத்துவதற்கு எனக்கு ஒரு வாய்புக் கிடைத்தது ஒரு ஆச்சரியமான விடயமே. சரியாக ஒரு வாரம் கழிய, இரவு 8 மணிக்கு என் மகளை அவள் தோழி வீட்டில் இருந்து கூட்டிக் கொண்டு வந்து கொண்டு இருந்தேன். ஒரு வீதியில் இருந்து மறு வீதிக்கு திரும்ப எத்தனித்த போது, 25 வயது மதிக்கத்தக்க ஒரு இளைஞன் பாதசாரிக் கடவையில் நடந்து தெருவைக் கடந்து வந்து கொண்டு இருந்தான். உடலில் மேற்சட்டை எதுவும் இல்லை. பிஜாமாவுக்கு வரும் காற்சட்டை மட்டும் அணிந்து இருந்தான். குளிர் -20 C (மறை 20) ஆள் தள்ளாடி தள்ளாடித்தான் தெருவைக் கடக்க முயன்றான். அவன் பாதசாரிக் கடவையை கடக்காமல் நடு வீதியில் கொஞ்ச நேரம் அப்படியே நின்று விட்டு நகர்ந்தான். போதையில் இருக்கின்றான் எனப் புரிந்தது. இங்கு கஞ்சாவை சட்ட ரீதியாக்கிய பின் இவ்வாறு தள்ளாடும் பல இளைஞய வயதினரை அடிக்கடி காண்கின்றேன். நான் Bluetooth இன் மூலம் காரை connect பண்ணி இருந்தமையால், உடனடியாக Call emergency என்று கூறி, 911 இற்கு அழைத்து "இந்தக் குளிரில் ஒரு இளைஞன் மேற்சட்டை இல்லாமல் வீதியில் நிற்கின்றான் " என்ற தகவலை கூற, அவர்கள் தாம் உடனடியாக அங்கு ஆட்களை அனுப்புவதாக உத்தரவாதம் தந்து, என் நம்பரையும் வாங்கி குறித்து கொண்டார்கள். மனசு கொஞ்சம் ஆறுதலடைந்தது. இந்தப் பழக்கம் எனக்கும் உள்ளது. முக்கியமாக என் 17 வயது மகன் காரை ஓட்டும் போது.
  6. நான் ரசித்த நடனங்கள்.
  7. முன்குறிப்பு பகுதி 1 இங்கே *** மீள்குடியேற்றம் நாம் ஏதோகாரணங்களுக்காகப் புலம்பெயர்ந்து விட்டாலும் எமது சரியான நோக்கம் அல்லது இலக்கு எதுவென்று தெரியாமல் வாழ்கிறோமா என்று அடிக்கடி யோசிப்பதுண்டு. வெளிநாட்டில் எனது குடும்பத்தை உருவாக்கியபோது அது தனது அடுத்த சந்ததியுடன் தமிழர் என்ற ஆலமரத்தின் விழுதுகளிலிருந்து பிரிந்து போகப்போவதைப் பற்றிச் சிந்திக்கவில்லை. தமிழன் என்ற பேருணர்வு என்னுடன் முற்றுப் பெறுகிறது. மேற்கூறிய நிலையிலிருந்து மாற்றங்களை ஏற்படுத்தவோ எதிர்பார்க்கவோ முடியாது. வேறு என்ன செய்யலாம் ? அங்கு சென்று குடியேறுவதன் மூலம் எமது பணம் அனுபவம் ஆகியவற்றைப் பயனுள்ள முறையில் அங்கே வாழ்ந்தபடியே பயன்படுத்தலாம். அண்மைய நாட்களாக பல திரிகளிலும் இது பற்றி மேலோட்டமாகப் பேசப்படுவதுதான். அங்கு வாழலாம் வாழ முடியாது என்பது ஒவ்வொருவரினது தனிப்பட்ட முடிவு. இதில் சரி பிழை என பிரிவினை பேச வேண்டாம். எனக்கு இது அனுகூலமாக இருப்பதால் எனது பார்வையில் எனது நிலையிலிருந்து இதன் சாத்தியங்களை விபரிக்கிறேன். எல்லோராலும் மீளக் குடியேற முடியாது என்பதும் அதன் காரணங்களும் புரியும். ஒருவேளை தனிநாடு கிடைத்திருந்தாலும் எம்மில் பெரும்பான்மையானவர்கள் எமது நாட்டிற்குத் திரும்பியிருக்க மாட்டார்கள். இதற்குப் பல காரணங்கள் உண்டு. இவற்றை ஒவ்வொன்றாக ஆராய்ந்து மாற்று வழிகளுக்கான பதில்களை நானே தேட முயல்கிறேன். ஓய்வூதியத்தில் வெளிநாட்டு வாழ்க்கை எப்படி உள்ளது என்பது பற்றிய எனது அவதானிப்புதான் மீள் குடியேற்றத்துக்கான முதலவது காரணம். என்னைச் சுற்றியுள்ள வயதானவர்களின் அன்றாட வாழ்க்கை இப்படி உள்ளது . சமையல், வீட்டு வேலைகள பேரப்பிள்ளையைப் பராமரித்தல் உலகம் முழுவதுமுள்ள உறவினர்களுடன் தொலைபேசியில் பேசுவது பெரும் பகுதி தொலைக்காட்சிக்கு முன்னால் இத்தனையும் நான்கு சுவருக்குள்ளேயே நடக்கும். வீட்டை விட்டு வெளியே வருவது மிகக் குறைவு. ஆனாலும் தொலைபேசி உரையாடல்களின்போது இலங்கையில் வாழ்ந்த ஏக்கம் அடிக்கடி அசைபோடப்படும். சிலர் விடுமுறைக்குப் போவதுபோல் அடிக்கடி இலங்கை சென்றாலும் ஆகக் கூடியது இரண்டு அல்லது மூன்று மாதங்களுக்குள் திரும்பி விடுவார்கள். ஏனென்றால் மேலே சொல்லப்பட்டதுதான் அவர்களது வாழ்க்கை முறையாக மாறி விட்டது. இதே வட்டத்துக்குள் நான் அடிமையாக விரும்பவில்லை. நான் வாழ்வதற்கு வாழ்க்கை உள்ளது. அதை அனுபவித்து வாழ விரும்புகிறேன். இதற்காகச் சில தடைகளைத் தாண்டி வர வேண்டும். தடைகள் துணை வாழ்க்கைத் துணையின் அனுகூலம் இல்லாமல் முதலாவது அடியை எடுத்து வைக்க முடியாது. இது எனது தனிப்பட்ட விடயமாதலால் விவாதத்திலிருந்து கடந்து செல்கிறேன். உறவுகள் நாம் பிரதானமாகச் சொல்லும் காரணம், பிள்ளைகள் பேரப்பிள்ளைகளைப் பிரிந்து வாழ முடியாது. நியாயமானது. ஆனால் நாம் இலங்கையிலிருந்து இங்கு வரும்போது எமது தாய் தந்தை மனைவி பிள்ளைகளைப் பாதுகாப்பற்ற சூழலில் விட்டுவிட்டு வந்துள்ளோம். இப்போது அவர்களைப் பாதுகாப்பான சூழலில் அல்லவா இருக்கவிட்டுத்தான் போகப் போகிறோம். அவசியப்படும்போது திரும்பி வந்து சில நாட்கள் அவர்களுடன் இருந்து செல்லலாம். அதேபோல் அவர்களும் அடிக்கடி இலங்கை வரலாம். பிரிவு என்பது நீண்டது கிடையாது. எப்படியோ பிள்ளைகள் திருமணம் செய்தவுடன் பிரிந்துதான் வாழப் போகிறார்கள். எனது மகளிடம், உன்னைச் சின்ன வயதிலிருந்து பாட்டி தாத்தா பராமரித்ததுபோல் என்னை அதிகம எதிர்பார்க்க வேண்டாம் என்று அடிக்கடி சொல்வேன். பார்க்கலாம். மருத்துவம் இது ஒரு பெரிய பிரச்சனை. நோய் வராமல் ஆரோக்கியத்தைப் பேணுவதே சிறந்த வழி. ஆரோக்கியமான உணவு, உடற்பயிற்சி, நல்ல நித்திரை அவசியமாகும். நீண்டகால நோய்களை வருடத்துக்கு ஓரிரு தடவை வெளிநாட்டுக்கு வரும்போது கவனித்துக் கொள்ள வேண்டும். பாதுகாப்பு அங்குள்ள பாதுகாப்பற்ற காரணங்களையும் தவிர்ப்பதற்கான வழிகளை அடைப்புக் குறிக்குள்ளும் தருகிறேன் - இராணுவ அச்சுறுத்தல் (அரசியல் - குழுக்கள் - இனவாதம போன்ற வில்லங்கங்களில் நுளையக் கூடாது) - உள்ளூர் சண்டித்தனம் (உள்ளூர் பிரச்சனைக்குள் தலையிடக் கூடாது கூடாது. முடிந்தவரை அயலவர்கள் எல்லோருடனும் நட்பாகப் பழக வேண்டும்) - கொள்ளை (நவீன தொழில்நுட்பம் மூலம் பாதுகாத்துக் கொள்ளலாம்) - பாம்பு பூச்சி நுளம்பு (பாதுகாப்பு வழிகள் உள்ளன) வாழ்க்கை வசதி குடியேறுவதற்கு முன் ஆடம்பரம் இல்லாமல் அதற்குரிய வசதிகளைச் செய்து கொள்ள வேண்டும். இப்போது மேலத்தேய வீடுகளைப் போன்ற வசதிகளை அங்கே செய்து கொள்ளலாம். வெப்ப காலநிலை உலக வெப்பமாதலில் இலங்கையிலும் கோடை காலத்தில் வெளியே போக முடியாத அளவு வெப்பம் அதிகரித்துள்ளது. இதற்கும் முன்னேற்பாடான வழிமுறைகளை ஏற்படுத்திக் கொள்ளலாம். சுதந்திரம் உண்மையில் வெளிநாடு வந்தபின்தான் சுதந்திரம் என்றால் என்னவென்று தெரிந்தது. நான் மேலே குறிப்பிட்டது போல் வெளிநாட்டில் ஓய்வூதியத்தில் குறுகிய வாழ்க்கைமுறைக்குள் அடிமைப்பட வேண்டாம் என்று கருதுவதால் இதுவும் பெரிய பிரச்சனையாக இராது என்றே கருதுகிறேன். நோக்கம் ஓய்வுபெற்ற பின் இங்கு இருக்கக் கூடாது என்று சில வருடங்களுக்கு முன்னரே யோசிக்க ஆரம்பித்தேன். அப்போது இருந்த மனநிலை வேறு. முதல் பகுதியில் சொன்னதுபோல் பிரான்ஸ் மட்டுமே எனது நாடு என்றிருந்தேன். Guadeloupe, Martinique போன்ற கரிபியன் தீவு அல்லது ரெயுனியன் தீவு போன்ற இடம் ஒன்றில் குடியேறலாமா என்றும் யோசித்திருந்தேன். மகிழ்ச்சியன வாழ்க்கைதான் எனது நோக்கம் என்றால் அதற்கு ஒரு அர்த்தமும் இருக்க வேண்டாமா என்ற சிந்தனையில் காலப்போக்கில் இலங்கையில் குடியேறுவதையே விரும்புகிறேன். சில நாட்களுக்கு முன் அங்கு சென்றிருந்தபோது வெளிநாட்டிலிருந்துவிட்டு நிரந்தரமாக மீழ் குடியேறிய இருவரைச் சந்தித்தேன். எனது ஆவல் மேலும் அதிகமானது. என்னதான் நாம் இங்கிருந்து தமிழ்த் தேசியம் பேசினாலும் அங்கிருப்போருக்கு சிங்கள அரசின் கீழிருக்கும் இலங்கைதன் அவர்களது நாடு. எமது இனம் அழிந்து போகாமல் இருக்க வேண்டுமானால் ஒவ்வொருவரும் ஏதோ ஒரு வழியில் முயற்சிப்போம். அங்கு அவர்களோடு வாழ்வதன் மூலம் என்னாலான ஒரு சிறு முன்னேற்றத்தை ஒரு கிரமத்த்திலாவது ஏற்படுத்த முடியும் என்று நம்புகிறேன். இயற்கையைப் பாதுகாக்கும் வாழ்க்கை முறையை வாழ்ந்து காட்டப் போகிறேன். இது எனது பூமி என்ற பரந்த சிந்தனையில் பார்த்தால் எல்லாமே எனது மண்தான். அந்த மண்ணைப் பாதுகாப்பது எனது கடமை. நான் இத்தனை காலமும் வாழ்வதற்காக பூமியிலிருந்து எடுத்ததை மறுபடி பூமியில் வைக்கப் போகிறேன். இறுதியாக, நான் கட்டியெழுப்பிக் கொண்டிருக்கும் கற்பனைக் கோட்டை பற்றிய சில குறிப்புகளோடு விடை பெறுகிறேன். எனது வீடு யாழிலோ அல்லது வேறு பெரு நகரிலோ இல்லமல் நில ஆக்கிரமிப்பைத் தடுப்பதற்காக பிந்தங்கிய கிராமம் ஒன்றில் இருக்கும். சீமெந்து பாவிக்காமல் இயற்கை மூலப்பொருட்களைக் கொண்டு கட்டப்படும் வீட்டில் இயற்கையான முறையில் (மிகக் குறைந்த சூரிய ஒளி மின்சாரத்தில்) குளிரூட்டப்பட்ட தன்னிறைவானதாக இருக்கும். விசாலமான காணியில் மழைநீர் சேகரிப்புடன் கூடிய இயற்கை வீட்டுத் தோட்டம் இருக்கும். அருகி வரும் மருத்துவச் செடிகள், நிழல் தரும் மரங்கள் பூஞ்செடிகள் புல் வெளி என்று எல்லாமே பசுமையாக இருக்கும். காணியைச் சுற்றி குறைந்தது 500 மீற்றராவது நிழலுடன் கூடிய ஓடுபாதை, உடற்பயிற்சிக் கூடம் இருக்கும். தேனீ, கோழி வளர்ப்பு என்ற இன்னும் பல… இது எத்தனை வீதம் சாத்தியமாகுமோ தெரியாது, தொடர்ந்து முயற்சி செய்து பார்க்கலாம். இதுவே எனது தேசியம். நன்றி.
  8. உ மலருக்கு தென்றல் பகையானால் .......! மலர்ந்திட கதிரவன் துணையுண்டு. (1). நிர்மலா சங்கரைத் திருமணம் செய்து கொண்டு இந்த வீட்டுக்கு வந்து பத்து வருடமாகின்றது. முன்பெல்லாம் மிக அன்பாயிருந்த அவளது மாமியார் இராசம்மா இப்போதெல்லாம் அவள்மீது கொஞ்சம் எரிச்சலாகத்தான் இருக்கிறாள். அது நிர்மலா அவளைக் கடந்து போகும் போதெல்லாம் ஜாடைமாடையாக கதைப்பதும், ஏதாவது சிறு தவறு செய்தாலும் அதைப் பெரிதாக்கி சண்டை போடுவதுடன், மாலையில் மகன் சங்கர் வேலையால் வந்ததும் போட்டுக் குடுப்பதிலும் தெரிகிறது. அவனும் வேலையால் அலுத்துக் களைத்து வரும்போது தாயின் புறணியைக் கேட்டு சில நேரங்களில் நிர்மலாவை கை நீட்டி அடித்தும் விடுகிறான். நிர்மலாவின் குடும்பம் அவ்வளவு வசதியில்லா விட்டாலும்கூட சராசரியான நடுத்தரக் குடும்பம்தான். சண்முகம் கோமளம் தம்பதிகளுக்கு நிர்மலா ஐந்தாவது பெண்பிள்ளை. ஆனாலும் அவர்கள் அவளை நன்றாகப் படிக்க வைத்திருந்தார்கள். அவளும் படிப்பில் நல்ல கெட்டிக்காரி. விசேஷமாக கணிதம் மற்றும் விஞ்ஞான பாடங்களில் அந்தப் பாடசாலையிலேயே சிறப்பான சித்தி பெற்றிருந்தாள். அத்துடன் சங்கீதத்திலும் நல்ல தேர்ச்சி உண்டு. யாழ் பல்கலைக்கழகத்தில் படித்துக் கொண்டிருக்கும்போது அவசரம் அவசரமாக இந்தத் திருமணம் வந்தது. அவர்கள் சீர்வரிசை எதுவும் கேட்கவில்லை. ஆயினும் நிர்மலா எவ்வளவோ மறுத்தும்கூட, இனி இப்படி ஒரு சம்பந்தம் அமைவது கஷ்டம் என்று சொல்லு அவளை சம்மதிக்க வைத்துவிட்டார்கள். ஆனாலும் சண்முகம் அவளுக்கு கழுத்துக்கு காதுக்கு கைகளுக்கு என்று சில பல நகைகள் எல்லாம் போட்டுத்தான் புகுந்த வீட்டுக்கு அனுப்பி வைத்தார். அவளும் வரும்போது மறக்காமல் தனது மடிக்கணனியையும் கைபேசியையும் கையேடு கொண்டு வந்திருந்தாள். இராசம்மாவும் கொடுமையானவள் அல்ல. அவளுக்கு வயசும் நாற்பத்தைந்தில் இருந்து நாற்பத்தெட்டில்தான் இருக்கும். அவளுக்கு குட்டையான தலைமுடி. முன்பெல்லாம் முடி நீளமாக வளரவில்லையே என்பதுதான் அவளது குறையாக இருந்தது. அதற்காக "கேசவர்த்தினி" உட்பட பல எண்ணெய்கள் தைலங்கள் எல்லாம் பாவித்தும் வந்திருக்கிறாள். இப்பொழுது அந்தக் குறைகூட இல்லை அவளுக்கு. முடிவாக இருக்கிற முடியை காப்பாற்றினாலே போதும் என்னும் மனநிலைக்கு வந்திருக்கிறாள்.அவ்வளவுக்கு முடி கொட்டத் தொடங்கி விட்டது. அத்துடன் இத்தனை வருடங்களாகியும் மகனுக்கு பிள்ளை இல்லையே என்னும் கவலையும் சேர்ந்துகொண்டது. அதற்கேற்றாற்போல் கோயில் குளங்கள், கடைகளில் சந்திக்கும் அவளது சிநேகிதிகளும் சங்கருக்கு இன்னொரு திருமணம் செய்து வைத்தால் எல்லாம் சரியாகி விடும் என்று தூபம் போட்டுக் கொண்டிருந்தார்கள். "கரைப்பார் கரைத்தால் கல்லும் கரைவதுபோல்" இப்போதெல்லாம் அந்த எண்ணங்கள்தான் அவளை ஆட்டிப் படைக்கிறது. முன்பு இராசம்மாதான் மகனிடம் சொல்லி நிர்மலா விட்ட அவள் படிப்பைத் தொடர வழி செய்து பட்டப் படிப்பை முடிக்கவும் உதவியவள். சமைக்கவே தெரியாமல் இருந்த அவளை தனக்குப் பக்கத்தில் வைத்து தான் சமைக்கும் போதெல்லாம் அவளுக்கும் சொல்லிக் குடுத்து சாம்பார்,ரசம்,கறி குழம்புகளுக்கு ஏற்றாற்போல் காய்கறி வெட்டுவதில் இருந்து மீன்கள், இறைச்சிகள் எப்படி வெட்டுவது என்பதுவரை கற்றுக் குடுத்திருந்தாள். கூடவே வேலைக்காரி தாயம்மாவும் இருப்பதால் சமைக்கிற நேரம் போக மிச்சம் நிறைய நேரம் இருக்கும். அந்நேரங்களில் இருவரும் சங்கீதம்,இராகங்கள் பற்றி விலாவாரியாக விவாதிப்பதும் தேவாரம் கீர்த்தனைகள் சாதகம் செய்வதுமாய் பொழுதுகள் போகும். அதனால் மாமியாரை அவளுக்கு மிகவும் பிடித்திருந்தது. அவவை தனது தாய்க்கும் மேலாக மதித்து கவனித்து வருவாள். ஆனாலும் என்ன செய்வது தன் குலம் விளங்க ஒரு பேரனோ பேத்தியோ அவள் பெற்றுத் தரவில்லை என்னும் ஆதங்கம் அவளை கொஞ்சம் மாற்றி விட்டது. மலரும்...........! 🌹
  9. அது ஒரு நிலாக்காலம். வானத்தில் நட்சத்திரங்களை மேவி நிலா பொழிந்து கொண்டு இருந்தது. குளிர் அடர்ந்த வனமாக வானம் விரிந்து கிடந்தது. பறவைகளின் கூடுகளிற்குள் இருந்து அவற்றின் கலவி ஒலி சங்கீதமாக ஒலித்துக் கொண்டு இருந்தது. நந்தியாவட்டை மொட்டுக்கள் பூப்பதற்கான தன் இதழ்களை அவிழ்த்துக் கொண்டு இருந்தன. தெருவில் பவள மல்லிகையின் வாசம் பரவிக் கிடந்தது. என்று இப்படி எல்லாம் வர்ணணைகளுடன் ஒரு கதை எழுதுவம் என்று யோசித்தால், இந்த சொந்தக் கதை, சோகக் கதையைத் தான் முதலில் எழுது என்று மனம் அருட்டிக் கொண்டு இருந்தது. இது போன வருடம் சென்னை சென்று திரும்பும் போது நிகழ்ந்த சோகக் கதை. சோகக் கதை என்பதை விட நான் கிலோக்கணக்கில் அசடு வழிந்த வண்ணம் விமானத்தில் பயணம் செய்த கதை இது. எப்பவும் விமானப் பயணம் என்றால் பக்கத்தில் ஒரு பருவ மங்கை அமர்ந்து பயணிக்கும் அதிஷ்டம் கிடைக்கலாம், அவர் என்னை பார்த்த முதல் வினாடியிலேயே சொக்கிப் போய் விட வேண்டும் என்று நல்ல ஆடையை தேர்ந்தெடுத்து அணிவது வழக்கம். அன்றும் அப்படி தான் சென்னைக்கு அக்கா குடும்பத்தை பார்க்க போய் 10 நாட்கள் நின்று விட்டு மீண்டும் ரொரண்டோ திரும்பு நாள். சென்னை - எப்ப நினைத்தாலும் என் மனசுக்குள் இனிக்கும் நகரம்! அங்கு போனவுடன் ஒரு பழைய பாட்டா (Bata) செருப்பை மாட்டிக் கொண்டு, அரைக்காற்சட்டையுடன், ரொரண்டோவில் 10 டொலருக்கு வாங்கிய ஷேர்ட் போட்டுக் கொண்டு ஆட்டோவில் (Auto) வெளியே சுற்றுவது பிடித்த விடயங்களில் ஒன்று. பத்து நாட்கள் நின்றால் 5 நாட்களாவது அங்குள்ள சைவ கடைகளான சரவணபவனிலோ அல்லது அடையார் ஆனந்தபவனிலோ ஒரு நேரச் சாப்பாடாவது சாப்பிடுவன். ஊருக்கு சென்றாலோ அல்லது சென்னைக்கு சென்றாலோ "வெளிநாட்டு மிதப்பை " காட்டக் கூடாது என்பதில் உறுதியாக இருப்பதுண்டு. எனவே எப்பவும் சாதாரண உடுப்பும் பாட்டா செருப்பும் தான். ஆனால் விமானப் பயணத்தில் அப்படிச் செய்ய முடியுமோ? தச்சுத்தவறி பக்கத்து சீட்டில் ஒரு அழகி வந்து அமர்ந்து விட்டால் என்ன ஆவது? அதுவும் தனியாக பயணம் போகும் போது... சொல்லி வேலை இல்லை...! எனவே அங்கு கொண்டு போய், ஒரு நாளும் போடாத நல்ல முழுக்கை ரீஷேர்ட் ஒன்றை எடுத்து அணிந்து கொண்டு, ஒன்றுக்கு பல தடவை கண்ணாடியில் என்னை நானே அழகு பார்த்து "நீ மன்மதன் தாண்டா.. " என்று திருப்தி பட்டுக் கொண்டு, அக்காவிடம் "நான் நல்ல வடிவா இருக்கின்றேனா" என கனக்க தரம் கேட்டு வெறுப்பேற்றி விட்டு, விமான நிலையம் வந்தேன். என்னைப் பொறுத்தவரைக்கும் சென்னை விமான நிலையம் ஒரு கரைச்சல் இல்லாத விமான நிலையம். நல்ல வசதியான விமான நிலையம் (இன்னும் 100 வரிகளிற்குள் இதை நான் மாற்றிச் சொல்ல போகின்றேன் என்று எனக்கே தெரியாது அப்ப). 10 வயது சின்னப் பிள்ளை கூட குழப்பம் இல்லாமல் பயணிக்கலாம் . வாசலில், கடவுச் சீட்டையும் விமான சீட்டையும் பரிசோதிக்கும் வேறு மானிலத்தை சேர்ந்த பொலிஸ்காரர் மேல் மட்டும் தான் குறை சொல்ல முடியும். ஒவ்வொரு முறையும், வேண்டும் என்றே தாமதித்து விட்டு, முறைத்து பார்த்து விட்டு தான் உள்ளே செல்ல அனுமதிப்பார். தமிழனை தமிழன் ஆள வேண்டும் என்று தொண்டைத் தண்ணீர் வற்ற பேசும் தம்பி சீமான் , தமிழர் விமான நிலைய வாசலில் தமிழர் தான் நின்று பரிசோதிக்க வேண்டும் என்ற உப கோரிக்கையையும் வைத்து பேசினால் புண்ணியம் கிடைக்கும் என எண்ணிக் கொண்டு உள்ளே சென்றேன். விமான நிலையம் சென்று 30 நிமிடங்களில் பரிசோதிப்புகள் எல்லாம் முடிந்து, போர்டிங் பாஸ் (Boarding pass) எல்லாம் எடுத்து விமானத்துக்காக காத்திருக்கும் அறைக்குள் சென்று விட்டேன். பாஸ்போர்ட்டை செக் பண்ணிய, நல்ல கறுத்த தமிழர் ஒருவர் "...அங்கம் முழுதும் பொங்கும் இளமை இதம் பதமாய் தோன்ற.. அள்ளி எடுத்த கைகள்" என்று "இளமை எனும் பூங்காற்று" பாடல் வரிகளை முணு முணுத்துக் கொண்டே செக் பண்ணினார். ஆள் வேலைக்கு வர முன்னர் வீட்டில் என்ன செய்து விட்டு வந்திருப்பார் என்று ஊகித்துக் கொண்டேன். உள்ளே இருக்கும் ஒரு பெரிய கண்ணாடியில் மீண்டும் என்னை பார்த்து... "அழகண்டா நீ" என்று மனசுக்குள் நினைத்து விட்டு மேலும் உள்ளே சென்றேன். அக்கா வீட்டில் இரவுச் சாப்பாட்டை 8 மணிக்கே முடித்து இருந்தேன். சாமம் 3 மணிக்கு கிளம்பும் விமானத்தை பிடிக்க நடு இரவு 11:30 இற்கே விமான நிலையம் வந்து விட்டேன். எப்பவும் 4 மணித்தியாலங்கள் முன்னதாக விமான நிலையம் வந்து விடுவேன். ( ஒரு முறை தாமதமாக போய் அருந்தப்பில் விமானத்தை தவற விட பார்த்த பின் ஏற்பட்ட ஞானத்தால் வந்த பழக்கம் இது) 8 மணிக்கே சாப்பிட்டதால் லைட்டாக பசி எடுக்க ஆரம்பித்தது. சரி என்ன விற்கின்றார்கள் என்று பார்த்து வருவதற்காக எழும்பி மெதுவாக விமான நிலையத்துக்குள் நடக்க ஆரம்பித்தேன். ஒரு இடத்தில் அழகான சின்ன சின்ன சிலைகளுடன் பெரிய நடராஜர் சிலையையும் வைத்து இருந்தார்கள். நவராத்திரி காலம் அப்பதான் முடிவடைந்தமையால் கொலுவும் வைத்து இருந்தார்கள். ஒன்றிரண்டு படங்களை கிளிக்கி விட்டு என்ன சாப்பாட்டுக் கடை இருக்கு என்று பார்க்கத் தொடங்கினேன். ஒரு இடத்தில் இட்டலியும் சட்னியும் வைத்து இருந்தார்கள். ஆஹா, இட்டலி என்று நினைத்து வாங்க போகும் போது "உதை சாப்பிட்டால் உழுந்து சில நேரம் 'பின்' விளைவுகளை வேகமாக்கும்" என்று மனம் எச்சரித்தது. சரி இட்டலி வேண்டாம் என்று அங்கிருந்து நகர்ந்து இன்னொரு பக்கம் போனால், நல்ல சுடச் சுட பால் கோப்பியும், சமோசாவும் விற்றுக் கொண்டு இருந்தார்கள். ஐரோப்பியர் ஒருவர் அவற்றை வாங்கி நல்ல ஸ்ரைலாக சமோசாவை சாப்பிட்டுக் கொண்டு இருந்ததை பார்க்க எனக்கு வாயூறியது. சமோசாவை சாப்பிட்டு விட்டு கோப்பியை குடித்தால் இந்த சாமத்தில் நல்ல தெம்பாக இருக்கும் என்று அவற்றை வாங்கினேன். இப்படி உணவை வாங்கியவர்கள் நின்றபடியே சாப்பிட்டுக் கொண்டு இருந்தார்கள். "என்ன இப்படி நின்றபடி சாப்பிடுகின்றார்கள்... நாகரீகம் தெரியாதவர்கள்... ஐ யாம் ப்றோம் கனடா.. இப்படி நின்று சாப்பிட்டால் சரியாக இருக்காது" என்று நினைத்துக் கொண்டு, வசதியாக எங்காவது அமறலாமா என தேடத் தொடங்கினேன். ஒரு கையில் சில்லு இருக்கும் சூட்கேஸ் (Hand luggage). மற்ற கையில் கோப்பியும் சமோசாவும் உள்ள ஒரு சிறு Tray. கோப்பி வாசனை நாக்கில் உள்ள சுவையரும்புகளை மீட்டிக் கொண்டு இருந்தது. கதிரைகள் வரிசையாக இருக்கும் ஒரு இடத்தில் நாலு ஐந்து கதிரைகள் காலியாக இருந்தன. ஒருத்தரும் அந்த வரிசையில் இல்லை. அப்பாடி, ஒருத்தரும் அருகில் இல்லை...ஆற அமர இருந்து சமோசாவை சாப்பிட்டு கோப்பியை குடிப்பம் என்று போய் ஐந்து கதிரைகள் கொண்ட வரிசையில் நடு நாயகமாக போய் இருக்கும் கதிரையில் போய் அமர்ந்தேன். ஒரு கிளிக் சத்தம்.. .சின்ன கிளிக் சத்தம்... அவ்வளவு தான். அந்த 5 கதிரைகளும் அப்படியே சற்று பின்னால் சரிந்தன. அமரப் போகும் போது, கதிரைகள் பின்னால் சரிந்ததால், நிலை தடுமாறினேன். முதலில், முதலாவது சமோசா Tray யில் இருந்து வழுக்கி, என் மூக்கில் மோதி கீழே வீழ்ந்தது. இரண்டாவது சமோசா நெஞ்சில் வீழ்ந்து, நிலத்தில் கலந்து, இரண்டாக பிழந்து தரையில் வீழ்ந்தது. இவை எல்லாம் இப்படி சரிய முன்னரே.. கோப்பையில் இருந்த நல்ல சூடான பால் கோப்பி, முழுதுமாக என் மேல் கவிண்டு, என் அழகான, வடிவான, மெல்லிய உடலாக என்னைக் காட்டிய என் அருமை ரீஷேர்ட் மேல் முழுதுமாக கொட்டி, தெப்பலாக என்னை நனைத்து உருண்டோடி சற்று தள்ளி கிடந்து என்னைப் பார்த்து நமுட்டுச் சிரிப்பு சிரித்தது. என்ன நடந்தது என்று நான் உணரும் போது பால் கோப்பி என்னை முழுதுமாக நனைத்து விட்டது. பாலாபிஷேகம் போல், பால் கோப்பி அபிசேகம்! எவராவது இந்த கோலத்தை பார்க்கின்றார்களா என சுற்றும் முற்றும் பார்த்தேன். ஒருவரும் கவனித்து இருக்கவில்லை. "ஆஹா.. இந்த கதிரைகளின் நிலை தெரிந்து தானா இந்த சனம் இந்த கதிரை வரிசைக்கு கிட்ட கூட வரவில்லை" என்பதை அப்போது தான் புரிந்து கொண்டேன். "சரி இப்படி கோப்பி நாற்றத்துடன் (வாசம் நாற்றமாகியது இந்த வரியில் இருந்து தான்) போக முடியாது, கோப்பியில் ஊறிய நனைந்த உடுப்பை உடனடியாக மாற்ற வேண்டும் என ஹாண்ட் லக்கேஜ் (Hand luggage) இனை திறந்து பார்த்தேன். வழக்கமாக இப்படி அவசரத்துக்கு தேவைப்படும் என்று இரண்டு செட் உடுப்பும் சறமும் ஹாண்ட் லக்கேஜ் ஜில் வைப்பது வழக்கம். கிட்டத்தட்ட 60 தடவைகளாவது விமானப் பயணம் செய்து உள்ளேன். ஒவ்வொரு முறையும் கண்டிப்பாக எடுத்து வைப்பேன். ஹாண்ட் லக்கேஜ் ஜினை திறந்து பார்க்கின்றேன்... அதில் மனுசிக்கு வாங்கிய சாறியும், துவாயும், போன் சார்ஜரும், தான் இருக்கு. என் உடுப்பு ஒன்றையும் காணவில்லை.. மாற்றிக் கொள்ள ஒரு உடுப்பும் இல்லை... இனி நான் என்ன செய்வேன்... (மிகுதி தொடரும். அதில் நான் புது உடுப்பு வாங்க இந்த வசதி ஒன்றும் இல்லாத விமான நிலையம் எங்கும் கோப்பியில் ஊறிய, பால் கோப்பி நாற்றத்துடன் கடை கடையாக ஏறி இறங்கிய கதையையும் எனக்கு வாய்த்த ரீஷேர்ட் பற்றியும் எழுதுகின்றேன்.)
  10. அம்மா பிள்ளைகளாக இருக்கும் ஆண்கள் எப்போதும் அப்படியே வாழ்வது நன்று...பெண்கள் தனித்து வாழும் நிலை ஏற்பட்டால் சந்தோசமாக ஏற்று தங்களை முன்னேற்றி யார் கை விட்டார்களோ அவர்கள் முன்னாடி வாழ்ந்து காட்ட வேண்டும்..என்ன மனமும், உடலும் கொஞ்சம் சோர்ந்து போய் விடும் அவ்வளவு தான்..தொடருங்கள் சுவியண்ண...
  11. 1995 இன் பிற்பாடு கல்வி கலாச்சாரம்களை அழிப்பதற்கு சிங்களம் மிகவும் திட்டமிட்டு செயல்படுத்தி இப்போ வெற்றியும் காண்கிறது.
  12. ஒரு பெண்ணால் தன் வாழ்க்கையை தீர்மானிக்க முடிகிறது, எல்லோரும் கைவிடும் போது. தொடருங்கள் சுவி அண்ணா.
  13. கதை வேகமாக போகிறது . இதுசற்றுமுந்தைய காலமாக இருக்கும். தற்போது என்றால் சண்டைக்குவந்து மாமியாரை உண்டு இல்லை என்றாக்கி விடுவார்கள் மருமகள். ஏன் திருமணம் பதிவு செய்யப்படவில்லை? இது குற்றமாச்சே ? முதல்மணமகள் உயிரோடு இருக்கும்போது இரண்டாம் திருமணம் முதல் மணமகள் விருப்பின்றி குற்றமாகும் . தொடருங்கள்........
  14. வண்டி போய்க் கொண்டிருக்கும் போது, திடீரென நின்றால் ... தள்ள ஆள் வேணும் என்று கவலைப் படத் தேவையில்லை. 🤣
  15. ஜனநாயகமும் சர்வாதிகாரமும். ஜனநாயகம்:--- பிள்ளைகள் : அம்மா எங்களுக்கு சைக்கிள் வாங்கித் தாங்கம்மா..... இந்தா மூன்று சில்லு சையிக்கிள். இதை வைத்து ஓடுங்கோ. சர்வாதிகாரம்:--- பிள்ளைகள்: அப்பா எங்களுக்கு சைக்கிள் வாங்கித் தாங்கப்பா......இந்தா மூன்று சில்லு சைக்கிள். இதை வைத்து ஓடுங்கோ. (சில மாதங்களின் பின் ) ஜனநாயகம்:--- அம்மா எங்களுக்கு இரண்டு சில்லு சைக்கிள் வாங்கித் தாங்கம்மா....... கொஞ்சம் பொறுங்கோ பிள்ளைகள் பக்கத்து வீட்டில் கடன் கேட்டிருக்கிறேன் தந்ததும் உங்களுக்கு புது சைக்கிள் வாங்கித் தருகிறேன். சர்வாதிகாரம்:--- பிள்ளைகள்: அப்பா எங்களுக்கு இரண்டு சில்லு சைக்கிள் வாங்கித் தாங்கப்பா...... ம்கூம் முடியாது நீங்கள் இதைத்தான் வைத்து ஓடவேண்டும். இதற்குமேல் கேட்டால் குரல்வளையை நசித்து விடுவேன். ஜனநாயகம்:--- பிள்ளைகள்: அம்மா உங்களுக்கு கடன் கிடைத்துட்டுதுதானே எங்களுக்கு இரண்டு சில்லு சைக்கிள் வாங்கித் தாங்கம்மா........அம்மா வந்து அந்த மூன்று சில்லு சைக்கிளில் ஒரு சில்லைக் எடுத்து விட்டு இந்தாருங்கோ பிள்ளைகள் நீங்கள் விரும்பியபடி இந்த இரண்டு சில்லு சைக்கிளை வைத்து ஓடுங்கள். (பிள்ளைகள் சைக்கிளையும் அம்மாவையும் பார்க்கிறார்கள், அம்மாவின் கழுத்திலும் கைகளிலும் தங்க ஆபரணங்கள் மின்னுகின்றன. சர்வாதிகாரம்:--- பிள்ளைகள் வெளியே வந்து பார்க்கிறார்கள், முற்றத்தில் புத்தம் புதிய இரண்டு சில்லு சைக்கிள் நிக்கிறது. தோட்டத்தில் அப்பா வியர்வை சிந்த வேலை செய்து கொண்டிருக்கிறார். யாவும் கற்பனை.......!
  16. இலங்கையின் முதன்மை நூலகமாகத் திகழ்ந்த யாழ் நூலகம் யாழ்ப்பாணம் பல விடயங்களில் இலங்கையின் முன்னணி மாவட்டமாகத் திகழந்தது போல் நூலகத்துறையும் சிறந்து விளங்கியிருந்தது. முதலாவது வாசகர் அறையினை யாழ் நூலகமே கீரிமலையில் 1915 ஆம் ஆண்டு நகுலேஸ்வரா வாசக அறை என்ற பெயரில் உருவாக்கியிருந்தது. அதேபோல் இலங்கையின் முதலாவது பொது நூலகம் யாழ்ப்பாணத்திலேயே 1934 ஆம் ஆண்டு ஆவணி மாதம் முதலாம் திகதி திறக்கப்பட்டது. யாழ் பொது நூலகம் திறக்கப்பட்டு ஒரு ஆண்டிற்குப் பின்னரே கொழும்பு பொதுநூலகம் திறந்துவைக்கப்பட்டது. யாழ்ப்பாண நூலகம் சர்வதேச நூலகத்துறையில் நடைபெற்றுவந்த நிகழ்வுகளைத் தொடர்ந்து அவதானித்து, அவற்றினை தானும் நடைமுறைப்படுத்தி வந்தது. அந்தவகையில் பொதுமக்களிடம் வாசிப்புத்திறனை ஊக்குவிக்கும் நோக்கில் பொதுமக்கள் புத்தக இயக்கம் எனும் செயற்பாட்டினை யாழ்ப்பாண நூலகம் அறிமுகப்படுத்தியிருந்தது. இந்த இயக்கத்தின் மூலம் 1930 களில் மக்களுக்கு மலிவான விலையில் பல புத்தகங்களை அச்சிட்டு வெளியிட்டு வந்திருந்தது. இதற்கு முதல், புத்தகங்கள் பல்கலைக்கழகங்கள், மத வழிபாட்டுத்தளங்கள், செல்வம் படைத்தவர்களின் இல்லங்களில் மட்டுமே காணப்பட்ட அரிய பொருளாக இருந்ததும் குறிப்பிடத் தக்கது. அக்காலத்தில் புத்தகங்கள் கம்பளியில் எழுதப்பட்டு, நேர்த்தியாகக் கட்டப்பட்டு, மினுங்கும் மைகளினால் அலங்கரிக்கப்பட்டிருந்தன. யாழ் நூலகத்திற்கு முன்னால் அமைக்கப்பட்டிருந்த கிறித்தவப் பாதிரியார் லோங்கின் உருவச் சிலை யாழ் நூலகத்தின் முதலாவது கட்டிடம் 1842 ஆம் ஆண்டு யாழ்ப்பாண நீதிமன்றின் செயலாளர் எப். சி. கிரெய்னரின் வாசிப்பு அறையாகவே உருவாக்கப்பட்டிருந்தது. 1848 இல் இந்த வாசிப்பு அறை முறையான பொது நூலகமாக உதவி அரசாங்க அதிபர் வில்லியம் டியுனத்தினால் மேம்படுத்தப்பட்டது. 1933 ஆம் ஆண்டு நீதிமன்ற செயலாளராகக் கடமையாற்றிய கே. எம். செல்லப்பா அவர்கள் கந்தர்மடத்து இளைஞர்களை ஊக்கப்படுத்தி யாழ்ப்பாண நூலகத்திற்காக புத்தகங்களைச் சேகரிக்குமாறு கேட்டிருந்தார். மேலும், அவ்வருடம் மார்கழி 11 ஆம் திகதி தமிழிலும், ஆங்கிலத்திலும் பொதுமக்களுக்கான வேண்டுகோள் ஒன்றினை அவர் விடுத்திருந்தார். "யாழ்ப்பாணத்தில் இயங்கப்போகும் இலவச மத்திய நூலகம்" என்கிற தலைப்பில் அவரால் விடுக்கப்பட்ட வேண்டுகோளுக்கு மக்களிடமிருந்து சிறந்த வரவேற்புக் கிடைத்தது. 1934 ஆம் ஆண்டு ஆனி 9 ஆம் திகதி யாழ்ப்பாணம் மத்திய கல்லூரியின் மண்டபத்தில் மாவட்ட நீதிபதி சி. குமாரசாமி தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் யாழ்ப்பாணம் பொதுநூலகத்தை அமைக்கும் நிர்வாக சபைக்கான உறுப்பினர்கள் தெரிவுசெய்யப்பட்டனர். அதன்படி நூலக நிர்வாக சபையின் தலைவராக நீதிபதி குமாரசாமியும், உதவித் தலைவராக பாதிரியார் ஐசக் தம்பையாவும், இணைந்த செயலாளர்களாக வழக்கறிஞர் சி பொன்னம்பலமும், செல்லப்பாவும் தெரிவுசெய்யப்பட்டனர். கே. எம். செல்லப்பா யாழ்ப்பாண நூலகம் முதன்முதலாக 1934 ஆம் ஆண்டு, ஆவணி முதலாம் திகதி 844 புத்தகங்களுடனும், 30 செய்தித் தாள்களுடனும், ஆஸ்பத்திரி வீதியில் அமைந்திருந்த இலங்கை மின்சார சபைக் கட்டடத்தின் முன்னாலிருந்த தனியார் கட்டிடம் ஒன்றை வாடகைக்கு எடுத்து ஆரம்பித்து வைக்கப்பட்டது. யாழ்ப்பாணத்து மாநகரசபையின் பிரிவான யாழ்நகர அபிவிருத்திச் சபை 1935 ஆம் ஆண்டு தை மாதம் 1 ஆம் திகதியிலிருந்து இந்த நூலகத்தினை பொறுப்பெடுத்து நடத்தி வருகிறது. யாழ் நூலகம் தொடர்ச்சியாக வளர்ந்து வந்தது. 1952 ஆம் ஆண்டு நூலகத்தின் செயற்பாடுகள் விஸ்த்தரித்து மக்களின் அபிமானத்தை பெருவாரியாகப் பெற்றுவந்த நிலையில் அதற்கென்று தனியான கட்டடம் ஒன்றின் அவசியத்தினை உணர்ந்த அன்றைய யாழ் நகர மேயர் சாம் சபாபதி கட்டடம் ஒன்றினைக் கட்டுவதென்று முடிவெடுத்தார். கட்டடத்திற்கான அமைவிடம் நகர அபிவிருத்தி அதிகாரியான வீரதுங்கவினால் தெரிவுசெய்யப்பட்டு அதற்கான அடிக்கல் 1954 ஆம் ஆண்டு வைகாசி மாதம் 29 ஆம் திகதி மேயர் ஆர். விஸ்வநாதனின் மற்றும் பாதிரியார் லோங்கினாலும் நாட்டி வைக்கப்பட்டது. இந்த நூலகத்தை அமைப்பதற்கான முயற்சிகளின் பின்னணியில் பிரித்தானியா , அமெரிக்கா மற்றும் இந்தியா ஆகிய நாடுகளின் தூதுவர்களும் இருந்திருக்கின்றனர். கலாநிதி எஸ்.ஆர். ரங்கநாதன் இரு இந்தியர்களான நூலக விஞ்ஞானத்தின் நிபுணர் கலாநிதி எஸ்.ஆர். ரங்கநாதன் மற்றும் திராவிட கட்டிடக் கலையின் விற்பன்னரான கே. எஸ். நரசிம்மன் ஆகியோர் நூலகக் கட்டிடத்தின் வடிவமைப்பையும், நூலகத்தின் பிரிவுகள் அமைக்கப்படவேண்டிய ஒழுங்கினையும் வரைந்து கொடுத்திருந்தனர். நூலகத்தின் முதலாவது கட்டம் பூர்த்தியாக்கப்பட்டபோது அன்றைய யாழ் மேயராக இருந்த அல்பிரெட் துரையப்பாவினால் 1959 ஆம் ஆண்டு ஐப்பசி மாதம் 11 ஆம் திகதி வைபவரீதியாகத் திறந்துவைக்கப்பட்டது. தொடர்ச்சியாக ஏனைய பிரிவுகளும் பூர்த்திசெய்யப்பட்டு வந்தன. இலங்கையின் இரண்டாவது பெரிய நூலகமாக யாழ் நூலகம் திகழ்ந்ததோடு 15,910 சதுர அடிகள் நிலப்பரப்பையும் கொண்டிருந்தது. பூர்த்திசெய்யப்பட்ட நூலகத்தில் ஏழு முக்கிய பகுதிகள் இருந்தன. புத்தகங்களை வாசிப்பதற்குக் கொடுக்கும் பகுதி, புதினப் பத்திரிக்கைகள் மற்றும் பருவப் புத்தகங்கள் பகுதி, சிறுவர் பிரிவு, கேட்போர் கூடம், குறிப்புப் புத்தகங்கள் பிரிவு, கலைப்பிரிவு மற்றும் கற்றல் பிரிவு ஆகியவையே அவை. நூலகம் எரிக்கப்பட்டபோது அங்கு 96,000 நூல்கள் இருந்தன. புத்தகங்களைப் பாவனைக்கு வழங்கும் பகுதியிலேயே அதிகளவான புத்தகங்கள் அடுக்கப்பட்டிருந்தன. குறிப்புப் பகுதியில் 29,000 புத்தகங்கள் பராமரிக்கப்பட்டு வந்ததுடன் இவற்றுள் ஓலைச்சுவடிகளில் எழுதப்பட்ட பழமையான நினைவுக் குறிப்புக்கள், பழைய எழுத்தாளர்களின் ஆக்கங்கள், நாடகக் குறிப்புகள், அரசியல்க் குறிப்புகள், பாரம்பரிய வைத்திய முறைகள் பற்றிய தொகுப்புகள் உள்ளிட்ட விலைமதிப்பற்ற பல வரலாற்று ஆவணங்கள் கவனமாகப் பராமரிக்கப்பட்டு வந்திருந்தன. இறுதியாக பாதுகாத்து வைக்கப்பட்டிருந்த யாழ்ப்பாண வைபவமாலையின் பிரதியும் அங்கிருந்தது. இலங்கையின் பெரிய சிறுவர் பகுதியைக் கொண்டிருந்த யாழ் நூலகம் 8,995 சிறுவர்களுக்கான புத்தகங்களையும் தன்னகத்தே கொண்டிருந்தது. இக் கொடூரமான நூலக எரிப்பினை விசாரித்த பிரபல நூலகரான எம்.கமால்டீன் தனது விசாரணைகளின் முடிவில் பின்வருமாறு கூறியிருந்தார். "அந்தப் பயங்கரமான இரவில் யாழ்ப்பாண நூலகத்திற்குள் நுழைந்தவர்களின் ஒரே நோக்கம் அங்குள்ள புத்தகங்கள் அனைத்தையும் அழிப்பதுதான் என்பது தெளிவாகத் தெரிந்தது. அவர்கள் ஒரு புத்தகத்தையாவது விட்டுவைக்க விரும்பவில்லை. பாதி எரிந்த நிலையில் ஒரு சில புத்தகங்களை மட்டுமே எம்மால் அங்கிருந்து மீட்க முடிந்தது" என்று குறிப்பிட்டிருந்தார்.
  17. இனி இதுதான் சரிவரும், கூடுதலாக நாலுபேரை ஏற்ற அனுமதிக்குமோ தெரியாது........! 😂 நன்றி பெருமாள்......!
  18. யாழ்ப்பாண நூலகத்தை எரிக்கும்படி உத்தரவு வழங்கியது யார்? நூலகத்தை எரித்தது யார்? யாழ்ப்பாண நூலகம் தமிழரின் பொக்கிஷமான யாழ்ப்பாண நூலகம் எரிக்கப்பட்டது தொடர்பாக முக்கியமான மூன்று கேள்விகள் எழுந்தன. நூலகத்தை எரித்தது யார்? எவ்வாறு அதனை எரித்தார்கள்? எரிக்கும்படி உத்தரவிட்டது யார்? என்பனவே அம்மூன்று கேள்விகளும். யாழ்ப்பாண தமிழர்களின் கலாசாரப் பொக்கிஷமான நூலகம் கொழுந்துவிட்டு எரிந்தபோது, அதனைப் பார்த்துக்கொண்டிருந்த பிரபாகரன் மிகுந்த வேதனையும், அதேநேரம் ஆத்திரமும் கொண்டார். இந்த நாசகாரச் செயலினால் தமிழினம் "கலாசாரப் பேரிழப்பொன்றினை அடைந்திருக்கிறது" என்று அவரது வாய் முணுமுணுத்தது. தென்னாசியாவின் முக்கிய நூலகங்களில் ஒன்றான யாழ்ப்பாண நூலகம் எரிக்கப்பட்டதை இன்னும் பலர் செய்வதறியாது பார்த்துக்கொண்டு நின்றார்கள். சரித்திரத்தில் ஒரு இனத்தின் கலாசார அடையாளத்தைப் பேணும் நூலகங்கள் எரிக்கப்படுவது இதுவே முதல்முறையுமல்ல. இதற்கு முன்னர் இரு தடவைகள் இவ்வாறான் நூலக எரிப்புக்கள் சரித்திரத்தில் நடைபெற்றிருக்கிறன. முதலாவது 12 ஆம் நூற்றாண்டில் மத்திய ஆசிய காடையர் கூட்டமான கில்ஜி எனப்படும் கொடூரனின் படைகள் நாலந்த என்றழைக்கப்பட்ட பெளத்த பல்கலைக் கழகத்தையும், அதனோடிணைந்த நூலகத்தையும் எரித்தது. இரண்டாவதாக 1619 ஆம் ஆண்டில் தென்னிந்தியாவின் தமிழ் ராஜதானியைக் கைப்பற்றிய போர்த்துக்கேய படைகளின் தளபதியான பிலிப்பே டி ஒலிவேரா என்பவன் தமிழர்களின் மிகவும் பழமைவாய்ந்த நூலகமும், தமிழர்களின் சரித்திரம், திராவிடப் பாரம்பரியம் ஆகியவற்றின் மூலங்களையும் கொண்ட சரஸ்வதி மகால் எனும் நூலகத்தை எரித்தான். மேலும், 500 சைவக் கோயில்களையும் அழித்துத் தரைமட்டமாக்கியதுடன் தமிழரின் தொன்மையின் அடையாளங்களை இல்லாமப் போகச் செய்தான் என்பதும் குறிப்பிடத் தக்கது. மூன்றாவதாக பாரம்பரிய நூலகம் ஒன்றும் பெளத்த நாடு என்று அறியப்பட்ட, பெளத்த ஜனாதிபதியினால் ஆளப்படும் இலங்கையில் எரிக்கப்பட்டிருக்கிறது. 1981 ஆம் ஆண்டு, ஆனி 1 ஆம் திகதி இரவு 10:30 மணிக்கு அடையாளம் தெரியாத நபர் ஒருவர் யாழ்ப்பாணம் மாநகர ஆணையாளரான சி.வி. சிவஞானம் அவர்களுக்கு தொலைபேசி அழைப்பொன்றினை ஏற்படுத்தி யாழ் நூலகம் எரிந்துகொண்டிருப்பதாகக் கூறிவிட்டு தொடர்பைத் துண்டித்துக்கொண்டார். உடனேயே சிவஞானம் அவர்கள் யாழ்ப்பாண அரசாங்க அதிபரான யோகேந்திரா துரைசாமிக்குத் தொலைபேசி அழைப்பினை ஏற்படுத்த, அவரது மனவி மறுமுனையில் பேசினார். நூலகம் எரிவதுபற்றி தனக்கெதுவும் தெரியாது என்று கூறிய அவர், விடயங்களை அறிந்துகொண்டு மீளவும் அழைப்பதாகக் கூறினார். சில நிமிடங்களுக்குப் பின்னர் சிவஞானத்தை மீள அழைத்த அரசாங்க அதிபரின் மனைவி நூலகம் எரிவது உண்மைதான் என்பதனை உறுதிப்படுத்தினார். உடனேயே சிவஞானம் நகரசபையின் காவலர் அறைக்கு தொலைபேசி அழைப்பினை ஏற்படுத்தி நூலகம் எரிவது உண்மையா என்று கேட்டார். காவலர்களும் அதனை உறுதிப்படுத்தினர். நூலகத்தைச் சுற்றி நிற்கும் பொலீஸாரே நூலகத்திற்கு தீவைப்பதாக காவலர்கள் சிவஞானத்திடம் கூறினர். சி.வி. சிவஞானம் கடமையிலிருந்து ஆறு காவலர்களை தீயணைக்கும் இரு வாகனங்களை எடுத்துக்கொண்டு நூலகத்தை தீயிலிருந்து காக்குமாறு சிவஞானம் உத்தரவிட்டார். ஆனால், யாழ்ப்பாண நகரசபையிடம் அன்றிரவு தீயணைப்பு வாகனங்கள் இருக்கவில்லை, "குறைந்தது நூலகத்தின் ஏனைய பகுதிகளுக்கு தீ பரவுவதையாவது தடுத்து நிறுத்துங்கள்" என்று தனது காவலாளிகளிடம் கத்திவிட்டு, தானும் நூலகப் பகுதிக்குச் சென்றார். ஆனால் நூலகத்திற்கு அருகில் செல்வதிலிருந்தும், யாழ் நகரசபை கட்டடத்திற்குள் செல்வதிலுமிருந்து அவர் தடுக்கப்பட்டார். அவரை வழிமறித்த பொலீஸார், "நீ உள்ளே போகமுடியாது , திரும்பி சென்றுவிடு" என்று திருப்பியனுப்பினர். மேலும், மாநகரசபையின் ஊழியர்கள் சிலர் எப்படியாவது நூலகத்தினுள் சென்று தீயை அணைக்க முயற்சியெடுத்த வேளை, "வீதிக்கு வந்தீர்கள் என்றால் சுட்டுக் கொல்வோம்" என்று மாநகரசபையின் வாயிலுக்கு முன்னாலிருந்த் பொலீஸ் காவலரனில் கடமையிலிருந்த பொலீஸ் காடையர்கள் ஊழியர்களைப் பார்த்துக் குரைத்தனர். பீட்டர் கியூனுமென் கம்மியூனிஸ்ட் கட்சியின் பீட்டர் கியூனுமென் நூலகம் எரிந்த பின்னர் அதனை விசாரிப்பதற்கு யாழ்ப்பாணத்திற்குச் சென்றிருந்தார். அவருடன் கூடவே "அத்த" (உண்மை) எனும் சிங்களப் பத்திரிக்கையும் யாழ்ப்பாணத்திற்குச் சென்றிருந்தது. அப்பத்திரிக்கைக்கு அழுதுகொண்டே பேட்டியளித்த நகரசபை ஊழியர் ஒருவர், "எங்களை உள்ளே செல்ல விடுங்கள் என்று பொலீஸாரிடம் நாங்கள் மன்றாடினோம். அவர்கள் எம்மை அனுமதிக்கவில்லை. அவர்களில் ஒருவர் எம்மைப்பார்த்து, நூலகம் முற்றாக எரியவேண்டும்" என்று கத்தினார்" என்று கூறினார். கியூனுமெனின் விசாரணைகளின்போது, நூலகம் எரிக்கப்பட்ட அன்றிரவு, அதனைச் சூழவுள்ள வீதிகளில் வீதித்தடைகளை ஏற்படுத்திக் காவலுக்கு நின்ற பொலீஸார் அப்பகுதியினூடாக நூலகத்தை நோக்கி செல்லும் அனைவரையும் தடுக்கும் நோக்குடன் செயற்பட்டிருக்கிறார்கள் என்பது தெரியவந்தது. நூலகத்தின் பிரதான வாயில் இரும்புக் கம்பிகளால் அடைக்கப்பட்டு, அவற்றின் முன்னால் பழைய டயர்கள் போடப்பட்டு எரியூட்டப்பட்டிருந்தன. ஊர்காவற்றுரையில் இருந்த இலங்கை கப்பற்படையின் தளபதியுடன் தொடர்புகொண்ட சிவஞானம் உடனடியாகச் செயற்பட்டு தமிழரின் கலாசார சின்னமான நூலகம் முற்றாக எரிந்து சாம்பலாவதைத் தடுக்க உதவுமாறு கெஞ்சினார். தயக்கத்துடன் கடற்படைத் தளபதி சில வீரர்களை யாழ்ப்பாணத்திற்கு அனுப்பி வைத்தார். ஆனால், அவர்கள் வருவதற்குள் நூலகம் முற்றாக எரிக்கப்பட்டுவிட்டது. நூலகத்தின் முழுக் கட்டிடமும் தீப்பிடித்து எரிந்துகொண்டிருந்தது. தமிழரின் வரலாற்றுப் பெருமையான யாழ்ப்பாண நூலகம் சாம்பல் மேடாக மாறிக்கொண்டிருந்தது.
  19. பார்த்த படங்களுள் மிகவும் சோகமான படம் தியேட்டரில் அழாதவரே இல்லை என்று சொல்லலாம். துலாபாரம் பூஞ்சிட்டுக் கன்னங்கள்
  20. காற்றினிலே பெரும் காற்றினிலே ஏற்றி வைத்த தீபத்திலும் இருள் இருக்கும்......! 😍
  21. அதையேன் பேசுவான் உதே சோலிதான் எனக்கும்...... கார் சீற்றிலை இருந்து ஸ்ரேரிங் பிடிக்கிறது மட்டும் நான்......கியர் போட்டு பிரேக் பிடிக்கிறது தொடக்கம் சிக்னல் லைற்றிலை நிப்பாடுறது வரைக்கும் அவையள் தான்
  22. இங்கே தான் மிகப்பெரிய தவறு செய்துவிட்டீர்கள். பரவாயில்லை. இன்னொருவன் அவரது உயிரை காப்பாற்றிவிட்டான். எனது மனைவி 95இல் சாரதி அனுமதிபத்திரம் எடுக்கும் வரை காரில் ஏறினால் தன்பாட்டில் ஏதாவது செய்து கொண்டிருப்பா. எப்ப சாரதி அனுமதிபத்திரம் எடுத்தாவோ அப்ப இருந்து இப்போது வரை எப்படி எப்படி எல்லாம் ஓட வேண்டுமென்று பாடமெடுத்தபடியே இருப்பா. முன்னுக்கிருந்தால் தேவையான நேரத்தில் இல்லாத பிரேக்கை அழுத்துவா.
  23. மலர்.................(2). சங்கரும் நிர்மலாவும் எல்லா வைத்தியர்களையும் போய் பார்த்து தேவையான பரிசோதனைகள் எல்லாம் கூட செய்து விட்டார்கள். எல்லா பதில்களும் அவர்கள் இருவர் மீதும் உடலளவில் எந்தக் குறையும் இல்லை என்றே சொன்னார்கள். இப்போதெல்லாம் சங்கருக்கும் குழந்தை இல்லாதது பெரிய குறையாகத் தெரிகின்றது. தனக்குப் பின் திருமணம் செய்தவர்கள் எல்லாம் பிள்ளை குட்டிகளுடன் வரும்போது ஏக்கமாய் இருக்கும். அவளுக்கும் அந்த ஏக்கம் இருக்கிறது. தாயையும் மகனையும் பார்க்கும்போது கவலையாகவும் இருக்கும். இவ்வளவுகாலமும் இல்லாத பிள்ளை இனி கிடைக்குமா என்னும் விரக்தியும் அவர்களை வாட்டிக் கொண்டிருக்கு. நிர்மலாவின் மூத்த தமக்கைக்கு நான்கு பிள்ளைகள். அவளுக்கு பின் திருமணம் செய்த இரண்டாவது அக்காவுக்கு இரண்டு பிள்ளைகள். தனக்கும் எந்தக் குறையும் இல்லை என்பதை தானே நன்றாக உணர்ந்திருந்தாள். ஆனால் இந்த சமூகம் பெண்கள் மீதுதானே குறைகளைக் கூறி வசை பாடுகிறது. ஒருபோதும் ஆண்களை சந்தேகிக்கிறதில்லையே. ஏதாவது உறவினர்களின் விசேடங்களுக்கு இவர்கள் போனாலும் அவர்களின் மங்களமான எந்த நிகழ்வுகளிலும் நிர்மலாவை தவிர்த்து விடுவார்கள். அதனால் இப்போதெல்லாம் அவளாகவே அது போன்ற நிகழ்வுகளில் இருந்து ஒதுங்கி விடுகிறாள். அன்று ஒரு ஞாயிற்றுக்கிழமை நிர்மலா அழுக்குத் துணிகளை அலசிப் பிழிந்து அவற்றை வாளியோடு தூக்கிக் கொண்டு வீட்டுக் கொல்லையில் இருந்த கொடியில் விரித்துக் கொண்டிருக்கிறாள். அப்போது அதன் பக்கத்தில் இருந்த அறையில் இருந்து இராசம்மாவும் மகன் சங்கரும் கதைப்பது கேட்கிறது. அவர்களது பேச்சில் தனது பெயரும் அடிபடுவதால் அவளும் அப்படியே நின்று கேட்கிறாள்......! --- இராசம்மா மகனிடம் தம்பி நான் சொன்னதை யோசிச்சனியோடா..... நீ என்ன சொல்கிறாய் என்று வினவ --- அது அம்மா வந்து.....நிர்மலா பாவம் அம்மா, இதெல்லாம் தேவையா என்றுதான் யோசிக்கிறேன்.....! --- நீ ஒன்றும் அதைப்பற்றி கவலைப் படவேண்டாம். நான் நல்ல நேரம் பார்த்து அவளிடம் பக்குவமாய் எடுத்து சொல்லுறன். அதுக்கென்ன அவளும் எங்களுடன் கூடவே இருக்கட்டும்......என்ன ஊர் உலகத்தில இல்லாததையா நீ புதுசா செய்யப் போகிறாய்......உங்களுக்கு ஒரு பிள்ளை இருந்தால் நான் ஏன் இப்படி சொல்லப் போறன்.......நானும் ஒரு பொம்பிளைதானே.....! --- அதுக்கு இன்னும் கொஞ்சகாலம் பார்த்து விட்டு செய்யலாம்தானே அம்மா. --- அது சரிதான்......ஆனால் நான் இப்ப பார்த்திருக்கிற இடம் நல்ல இடம். அப்பாவழி உறவும் கூட....பொம்பிளையும் நல்ல லட்ஷணமாய் இருக்கிறா. அதோட அவையிலும் அவசரப் படுகினம். இதை விட்டால் பிறகு எப்ப இப்படி அமையுமோ தெரியாது.அதுதாண்டா மோனை.....! --- சரியம்மா என்னவோ செய்யுங்கோ. பட்டும் படாமலும் சொல்கிறான். --- அப்ப நான் அவையளிட்ட சரியென்று சொல்லுறன்.நீ ஒன்றுக்கும் யோசியாத, வாறமாதம் நல்லநாள் இருக்கெண்டு சொன்னவை, கொஞ்ச ஆட்களுடன் சென்று கோயிலில தாலி கட்டி கூட்டிக் கொண்டு வரலாம். எல்லா அலுவலும் அவையளே பாக்கினம்,நாங்கள் செலவில் பாதி குடுத்தால் போதும். --- இதால பிரச்சினை ஒன்றும் வராதுதானே அம்மா. --- நான் நல்லா விசாரிச்சுட்டன். நிர்மலாவோடு பதிவுத் திருமணம் செய்யவில்லைத்தானே அதனால் பெரிசா ஒரு பிரச்சினையும் இல்லை. நாங்கள் அவளையும் எங்களோடுதானே வைத்திருக்கப் போகிறோம். என்று சொல்லிவிட்டு வெளியே வருகிறாள். இவையனைத்தையும் எதிர்பாராமல் வெளியில் நின்று கேட்ட நிர்மலாவுக்கு வானமே இடிஞ்சு தலைமேல் விழுந்தது போல் இருக்கிறது. இந்த கல்யாணத்துக்கு சங்கரும் சரியென்று சொல்லுவான் என்பதை அவள் கொஞ்சமும் எதிர்பார்க்கவில்லை. கொஞ்சம் அங்கிருந்து அழுதுவிட்டு பேசாமல் துணிகளை கொடியில் விரித்து விட்டு முத்தத்துக்கு வருகிறாள். அவள் பின் பக்கத்தில் இருந்து வெறும் வாளியுடன் வருவதைப் பார்த்த இராசம்மாவுக்கு தாங்கள் கதைத்ததை இவள் கேட்டிருக்கக் கூடும் என்ற சந்தேகமும் வருகிறது. கேட்டிருந்தால் அதுவும் ஒன்றுக்கு நல்லதுதான் என்று நினைக்கிறாள். அதற்கேற்றாற்போல் நிர்மலாவின் அழுது சிவந்த முகத்தைப் பார்த்தும் பார்க்காததுபோல் உள்ளே போகிறாள்.......! மலரும்........! 🌷
  24. No Phone No Life. மலரும் வாசனைக்காக காத்திருப்பேன்.
  25. தொடர்ந்து வாடா மலராக மலர காத்திருக்கிறோம்.
  26. தமிழரின் பொக்கிஷத்தை எரித்த சிங்களக் காடையர்கள் யாழ்ப்பாணத்தில் அரசியல் சூழ்நிலை எப்படியிருக்கிறது என்று அறிந்து கொள்வதற்கு வன்னியில் மறைந்திருந்த நாட்களிலும் கூட, இரவு வேளைகளில் யாழ்ப்பாணத்திற்கு வந்து சென்றார் பிரபாகரன். ஆனால், அவரும், மீதமாக இருந்த டெலோ தலைவர்களும் மிகவும் இரகசியமாகவே இயங்கிவந்தனர். டெலோ இயக்கம் 1981 ஆம் ஆண்டு சித்திரை 26 ஆம் திகதி தனது தலைவர்களில் ஒருவரான ஜெகன் எனப்படும் கணேசநாதன் ஜெகநாதனை காட்டிக்கொடுத்தல் ஒன்றின் மூலம் பொலீஸாரிடம் பறிகொடுத்தது. இதனையடுத்து, தமிழ் மக்களின் மனங்களில் தானும் இடம்பிடித்துவிட வேண்டும் என்று எதிர்பாத்திருந்த உமா மகேஸ்வரனுக்கு ஒரு சந்தர்ப்பம் கிடைத்தது. சுந்தரம் எனப்படும் சிவஞானமூர்த்தியுடன் இணைந்து மாவட்ட அபிவிருந்திச்சபைகளுக்கான தேர்தல்களைக் குழப்புவதென்று உமா முடிவெடுத்தார். அதன்படி, வைகாசி 24 ஆம் திகதி, காரைநகர் இந்துக் கல்லூரியின் முன்னைநாள் அதிபரும், வட்டுக்கோட்டைத் தொகுதி பாராளுமன்ற உறுப்பினருமான ஐக்கிய தேசியக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர், ஏ. தியகாராஜா புளொட் ஆயுததாரிகளால் சுட்டுக் கொல்லப்பட்டார். ஏ. தியகாராஜா தொண்டைமானும், 1978 ஆம் ஆண்டிலிருந்து ஜெயாருக்கு ஆலோசகராகக் கடமையாற்றி வந்தவரான ஏ.ஜே. வில்சனும் வட மாகாணத்தில் ஐக்கிய தேசியக் கட்சி வேட்பாளர்களை நிறுத்தவேண்டாம் என்று ஜெயாருக்கு ஆலோசனை வழங்கியிருந்தனர். "தமிழர்கள் தமக்குள்ளேயே அடிபட்டு ஒருவரைத் தெரிவு செய்யட்டும்" என்று வில்சன் ஜெயாருக்கு ஆலோசனை வழங்கியிருந்தார். ஆனால், ஜெயாரோ வடக்கில் தனது விசுவாசிகளாக இருந்த கணேசலிங்கம், புலேந்திரன் போன்றோரின் ஆலோசனைகளையே நடைமுறைப்படுத்த விரும்பினார். 10 உறுப்பினர்களைக் கொண்ட யாழ்ப்பாண மாவட்ட அபிவிருத்திச் சபையில் குறைந்தது இரு உறுப்பினர்களையாவது வெல்லவைப்பதன் மூலம் சர்வதேசத்திற்கு தமிழர்கள் தன்னுடன் இருப்பதாகக் காட்டலாம் என்று அவர் கணக்குப் போட்டிருந்தார். இதனைச் செய்வதற்கு தேர்தலில் எந்தவகையான முறைகேடுகளையும் செய்வதற்கு அவர் தயாராக இருந்தார். ஏ.ஜெயரட்ணம் வில்சன் ஐக்கிய தேசியக் கட்சியின் தேர்தல் பிரச்சாரப் பணிகளுக்கும், தேர்தல்களை நடத்துவதற்கும் உதவியாக தனது இரு முக்கிய அமைச்சர்களான சிறில் மத்தியூவையும், காமிணி திசாநாயக்கவையும் ஜெயவர்த்தன யாழ்ப்பாணத்திற்கு அனுப்பிவைத்தார். முதலில் யாழ்ப்பாணத்திற்குச் சென்ற சிறில் மத்தியூ, இலங்கை போக்குவரத்துச் சபைக்குச் சொந்தமான பல பஸ்களில் தனது காடையர்களை ஏற்றிக்கொண்டு காங்கேசந்துறை சீமேந்துத் தொழிற்சாலையின் விருந்தினர் விடுதியில் தங்கிக்கொண்டார். ஒரு சில நாட்களுக்குப் பின்னர் யாழ்ப்பாணத்திற்குச் சென்ற காமிணி திசாநாயக்க யாழ்ப்பாணம் சுபாஸ் விடுதியில் தங்கிக்கொண்டார். வில்சனின் கூற்றுப்படி, காமிணி யாழ்ப்பாணத்திற்குப் போகும், அவரை வழியனுப்பி வைத்த ஜெயார், "சிறில் மத்தியூ மீது ஒரு கண் வைத்துக்கொள்ளுங்கள்" என்று கூறி அனுப்பியதாகத் தெரிகிறது. இதன்மூலம், சிறில் மத்தியூ யாழ்ப்பாணத்தில் மிகப்பெரிய அசம்பாவிதம் ஒன்றில் ஈடுபடப்போகிறார் என்பதை ஜெயார் அறிந்திருந்தார் என்பது உறுதியாகிறது. சிங்கள மிருகங்கள் - ஜெயவர்த்தன, சிறில் மத்தியூ இளைஞர்களின் கடுமையான எதிர்ப்பிற்கு மத்தியிலும், தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணி யாழ்ப்பாணத்தில் தனது தேர்தல்ப் பிரச்சாரத்தை மும்முரமாக நடத்தி வந்தது. அக்கட்சியின் இறுதி பிரச்சாரக் கூட்டம் வைகாசி 31 ஆம் திகதி, காங்கேசந்துறை வீதியில், நாச்சிமார் கோயிலடியில் இடம்பெற்றது. இக்கூட்டத்திற்கு யாழ் நகர மேயர் தலைமை தாங்கியிருந்தார். பெருந்திரளான மக்கள் இக்கூட்டத்திற்குச் சமூகமளித்திருந்தனர். கூட்டத்திற்குப் பாதுகாப்பளிக்க வந்திருந்த நான்கு பொலீஸார், கூட்டத்தின் பின்புறமாக அடுக்கப்பட்டிருந்த வாங்குகளில் அமர்ந்திருந்து கூட்டத்தை அவதானித்தானித்துக்கொண்டு இருந்தனர். பொலீஸாரின் பின்புறமாக வந்த புளொட் அமைப்பின் ஆயுததாரிகள் பொலீஸார் மீது துப்பாக்கிப் பிரயோகம் செய்தபோது சார்ஜன்ட் புஞ்சி பண்டா மற்றும் கொன்ஸ்டபிள் கனகசுந்தரம் ஆகிய இரு பொலீஸ்காரர்கள் ஸ்தலத்திலேயே கொல்லப்பட்டனர். ஏனைய இரு பொலீஸ்காரர்களான உஸ்மானும், குலசிங்கவும் காயப்பட்டனர். இச்சூட்டுச் சம்பவம் இன்னொரு வன்முறையினைத் தூண்டிவிட்டது. வெற்றிவேல் யோகேஸ்வரன் இச்சம்பவம் நடந்து சரியாக 30 நிமிடங்களுக்குள் அப்பகுதிக்கு வந்த பொலீஸார், கொல்லப்பட்ட மற்றும் காயப்பட்ட தமது சகாக்களை எடுத்துச்சென்றதுடன், அவ்வாறு செல்லுமுன் நாச்சிமார் கோயிலுக்கும், அருகிலிருந்த சில வீடுகளுக்கும், வீதியில் நிறுத்திவைக்கப்பட்டிருந்த இரு கார்களுக்கும் தீவைத்துவிட்டுச் சென்றனர். மேலும், காங்கேசந்துறையிலிருந்து யாழ்ப்பாணம் நோக்கி வந்துகொண்டிருந்த இறுதி போக்குவரத்து பஸ்ஸை மறித்து, பயணிகளை அடித்து விரட்டிவிட்டு அதிலேறி யாழ்நகர் நோக்கிப் பயணித்தது ஒரு பொலீஸ் குழு. யாழ்நகரை அடைந்ததும், யாழ்ப்பாண வைத்தியசாலை வீதியில் இயங்கிவந்த பல வியாபார நிலையங்களை வரிசையாகக் கொழுத்திக்கொண்டே சென்றனர் பொலீஸார். பின்னர், யாழ்நகர மத்தியிலிருந்து சுமார் ஒரு கிலோமீட்டர் தொலைவில் அமைந்திருந்த யாழ்ப்பாண பாராளுமன்ற உறுப்பினரான வெற்றிவேல் யோகேஸ்வரனின் வீட்டின் முன்னால் பஸ்ஸை நிறுத்தி, அங்கு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த யோகேஸ்வரனின் ஜீப் வண்டி, அவரது நண்பரின் கார் மற்றும் யோகேஸ்வரனின் வீடு ஆகியவற்றிற்கும் தீமூட்டினர். தாக்குதல் நடந்தவேளை யோகேஸ்வரனும், மனைவியும் வீட்டில் இருந்தபோதும், சமயோசிதமாக தமது வீட்டின்பின்புறத்தால் ஏறிக் குதித்து அயலவரின் வீட்டிற்குள் தஞ்சமடைந்ததன் மூலம் உயிர்தப்பிக்கொண்டனர். யோகேஸ்வரனின் வீட்டிற்குத் தீமூட்டிய பொலீஸார் பின்னர் அங்கிருந்து, பிரதான வீதியில் அமைந்திருந்த தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணியின் அலுவலகம் நோக்கிச் சென்று அதற்கும் தீமூட்டினர். பொலீஸாரின் இந்த வன்முறைகள் நடந்தேறி சரியாக ஒருவாரத்தின் பின்னர் பாராளுமன்றத்தில் இதுகுறித்து முறையிட்ட யோகேஸ்வரன், "என்னைக் கொல்வதற்காகவே அன்றிரவு பொலீஸார் எனது வீட்டிற்குத் தீவைத்தனர். நான் உயிருடன் இருப்பது அதிஷ்ட்டமே" என்று கூறினார். யோகேஸ்வரனின் பேச்சினை இடைமறித்து வாக்குவாதத்தில் ஈடுபட்ட சிறில் மத்தியூ, "யோகேஸ்வரனது வீட்டில், அவரும் பயங்கரவாதிகளும் ஆலோசனைகளில் ஈடுபட்டு வருவது குறித்து பொலீஸாருக்குத் தகவல் வந்ததனாலேயே பொலீஸார் அங்கு செல்லவேண்டி ஏற்பட்டது" என்று கூறினார். மேலும், "யோகேஸ்வரனின் வீட்டிற்குள் இருந்த பயங்கரவாதிகள் பொலீஸார் மீது தாக்குதல் நடத்தியதாலேயே வீடு தீப்பற்றிக்கொண்டது" என்றும் பொலீஸாரின் அக்கிரமத்தை நியாயப்படுத்தினார் சிறில் மத்தியூ. கொழும்பை மையமாகக் கொண்டு இயங்கும் இனங்களுக்கிடையிலான சமத்துவம், நீதிக்கான அமைப்பு இத்தாக்குதல் குறித்து வெளியிட்ட அறிக்கையில் யோகேஸ்வரனைக் கொல்லும் நோக்கிலேயே பொலீஸார் அன்றிரவு அவரது வீட்டிற்குத் தீவைத்தனர் என்று கூறியிருந்தது. "பாராளுமன்ற உறுப்பினர் யோகேஸ்வரன் உயிர் தப்பியது அதிஷ்ட்டமே, ஏனென்றால், அவரைக் கொல்லும் ஒரே நோக்கத்திற்காகவே பொலீஸார் அன்றிரவு அவரது வீட்டிற்குச் சென்றனர்" என்று அது கூறியிருந்தது. பொலீஸாரின் வெறியாட்டம் மறுநாளான, 1981 ஆம் ஆண்டு, ஆனி 1 ஆம் திகதியும் தொடர்ந்தது. அந்தச் சோகமான இரவில், தமிழர்களின் பெருமையான, விலைமதிப்பற்ற யாழ்ப்பாண நூலகம் தீக்கிரையாக்கப்பட்டது. அந்த நிசப்தமான இரவில், யாழ்ப்பாணத்தின் வானத்தை மறைத்துக்கொண்டு மேலெழுந்த கரிய புகையினை, உதவுவார் எவருமின்றி ஆதரவற்ற தமிழர்கள், செய்வதறியாது பதைபதைப்புடன் பார்த்துக்கொண்டு நின்றனர். தமது பொக்கிஷமான யாழ் நூலகம் எரிக்கப்படுவது தெரிந்து உணர்வுமேலீட்டால் ஓடிச்சென்று அணைத்துவிடலாம் என்று எண்ணி, வீதிகளில் இறங்கி நூலகம் நோக்கிச் சென்ற தமிழர்களை நூலப்பகுதியில் நின்றிருந்த பொலீஸார் அடித்து விரட்டினர். பல தமிழர்கள் தம் கண்முன்னே தமது சொத்து எரிக்கப்படுவது கண்டு ஓவென்று அழ, மீதிப்பேர் அந்த அக்கிரமத்தைப் பார்க்க விரும்பாது கண்களை இறுக மூடிக்கொண்டனர். எரிக்கப்பட்டுக் கிடக்கும் எமது பொக்கிஷம் - யாழ்ப்பாண நூலகம் 1981 ஆனால், ஒரு இளைஞன் மட்டும் இதனை எப்படியாவது எதிர்க்கவேண்டும் என்று உறுதிபூண்டான். வான் நோக்கி எழுந்த தீச்சுவாலைகளை அவன் ஏறெடுத்துப் பார்த்துக்கொண்டான். கண்கள் வீங்கிச் செந்நிறமாக, முகத் தசைகள் இறுகத்தொடங்க அவனது இதயம் வேகமாகப் படபடக்கத் தொடங்கியது. இதற்குப் பழிவாங்குவேன் என்று அவன் சபதம் பூண்டான். ஜெயவர்த்தனவின் காடையர்கள் எனது பணியை இலகுவாக்கி விட்டார்கள் என்று அவனது வாய் முணுமுணுத்துக்கொண்டது. உலகத்தமிழர் மாநாட்டில் 11 தமிழர்கள் கொல்லப்பட்டபோது தமிழர்கள் அடைந்த துன்பத்தைக் காட்டிலும் பன்மடங்கு துன்பத்தை இந்த நூலக எரிப்பு அவர்களுக்குக் கொடுத்தது. அவர்கள் மனங்களில் என்றும் அழியாத வடுவை அது ஏற்படுத்தியது. இந்த சதிகார நாசச் செயலை எந்தவொரு தமிழனும் மறக்கவோ மன்னிக்கவோ போவதில்லை. அந்த இளைஞன் வேறு யாருமல்ல, அவனே பிரபாகரன். எரிந்துகொண்டிருந்த தமிழரின் பொக்கிஷத்திற்கு வெகு அருகிலேயே அவன் அப்போது ஒளிந்திருந்தான். அவனது மனம் கோபத்தால் கொப்பளித்துக்கொண்டிருந்தது.
  27. நீர்வேலி வங்கிக்கொள்ளை கடுமையான பணத்தட்டுப்பாடினை எதிர்நோக்கிய டெலோ அமைப்பு, தமிழ் மக்கள் அரசின் செயற்பாடுகள் மீது கொண்டிருந்த அதிருப்தியான சூழ்நிலையினைப் பாவித்து, குறும்பசிட்டியில் இயங்கிவந்த தனியாருக்குச் சொந்தமான நகை அடைவுபிடிக்கும் நிலையம் ஒன்றினை 1981 ஆம் ஆண்டு தை மாதம் 7 ஆம் திகதி கொள்ளையடிக்கத் தீர்மானித்தனர். பின்னர் நடைபெறவிருந்த வன்முறைகளுக்கு இது முன்னோடியாக அமைந்திருந்தது. தனது பணத்தினையும், நகைகளையும் கொள்ளையடிக்க வந்திருந்த குழுவைக் கண்டதும் உரத்துக் கூக்குரலிட்ட உறிமையாளர், அயலவர்களின் உதவியுடன் கொள்ளையிட வந்த குழுவினரைக் கலைத்துவிட்டார். ஆனால், அக்குழு ஒரு தமிழ்ப் போராளி அமைப்பென்பதை அவர் தெரிந்திருக்கவில்லை. தப்பியோடிய கொள்ளைக் குழு தம்மைத் துரத்தி வந்தவர்கள் மீது துப்பாக்கிப் பிரயோகம் நடத்தியதில் ஐய்யாத்துரை, குலேந்திரன் ஆகிய இரு பொதுமக்கள் கொல்லப்பட்டனர். பங்குனி 16 ஆம் திகதி, டெலோ அமைப்புடன் சேர்ந்து பிரபாகரன் தனது முதலவாது ஒருங்கிணைந்த நடவடிக்கையினை மேற்கொண்டார். பொலீஸாருக்குத் தகவல் கொடுக்கும் உளவாளியாக மாறியிருந்த முன்னாள் புதிய தமிழ்ப் புலிகள் அமைப்பின் தலைவரான செட்டி தனபாலசிங்கத்தை யாழ்ப்பாண நகருக்குச் சற்று வெளியே இருந்த கல்வியங்காடு பகுதியில் சைக்கிளில் சென்ற பிரபாகரனும், குட்டிமணியும் சுட்டுக் கொன்றனர். வீதியில் நண்பர் ஒருவருடன் பேசிக்கொண்டிருந்த செட்டி, பிரபாகரனும், குட்டிமணியும் வருவதைக் கவனித்திருக்கவில்லை. செட்டி சுதாரித்து, இடுப்பில் செருகியிருந்த தனது கைத்துப்பாக்கியை எடுக்கும் முன்னரே நெற்றியில் சுட்டுக் கொல்லப்பட்டிருந்தார். 1981 ஆம் ஆண்டு, பங்குனி 25 ஆம் திகதி, இலங்கையில் அதுவரை நடைபெற்றிருந்த வங்கிக்கொள்ளைகளில் மிகவும் அதிகமான பணம் கொள்ளையிடப்பட்ட சம்பவமான நீர்வேலி வங்கிக்கொள்ளையினை குட்டிமணி நடத்தியிருந்தார். நீர்வேலிக் கிளையில் தினமும் சேரும் பணத்தினை யாழ்ப்பாணத்தில் இயங்கிவரும் தலைமைக் கிளைக்குக் கொண்டு சேர்க்கும் மக்கள் வங்கியின் செயற்பாட்டினை மிகவும் உன்னிப்பாக அவதானித்துவந்த குட்டிமணி இக்கொள்ளையினை மிகவும் சிறப்பாகத் திட்டமிட்டார். நீர்வேலிச் சந்திக்கு அருகில், ஆளரவமற்ற பகுதியில், இராணுவச் சீருடையில் பதுங்கியிருந்த குட்டிமணியும் அவரது தோழர்களும் யாழ்ப்பாணக் கிளைக்கு பணத்தை எடுத்துச் செல்லும் வண்டி வரும்வரை காத்திருந்தனர். பணத்தைக் காவிவந்த வாகனம் தமக்கருகில் வந்தவுடன், குட்டிமணியின் தோழர்களில் ஒருவர் வீதிக்குக் குறுக்கே, வாகனத்தின் முன்னால்ப் பாய்ந்து, "நிறுத்துங்கள்" என்று சிங்களத்தில் உரக்கக் கூவியிருக்கிறார். தம் முன்னால் நிற்பது இராணுவ வீரர்கள்தான் என்று எண்ணிய வாகனத்திலிருந்த பொலீஸார், வாகனத்தை அவ்விடத்திலேயே நிறுத்திவிட்டு கீழிறங்கும்போது, அவர்கள் இருவரையும் குட்டிமணியும் தோழர்களும் சுட்டுக் கொன்றனர். கொல்லப்பட்ட பொலீஸ்காரர்களின் பெயர்கள் முதுபண்டா மற்றும் ஆரியரட்ண என்பதுடன், வாகனத்தில் நேர்த்தியாக பணம் அடுக்கப்பட்டிருந்த ஐந்து சூட்கேஸுகளுடன் குட்டிமணியும், தோழர்களும் தப்பிச் சென்றனர். அன்று கொள்ளையிடப்பட்ட பணத்தின் அளவு 79 லட்சம் ரூபாய்கள். அரசாங்கம் அதிர்ந்து போனது. ஜெயவர்த்தன கலங்கிப் போனார். வீரதுங்கவின் ராணுவ நடவடிக்கையினால் தமிழ்ப் போராளி அமைப்புக்கள் செயலிழந்து போய்விட்டன என்று அவர் கட்டிவந்த கனவுக் கோட்டை கலைந்துபோனது. தனது பாதுகாப்பு அதிகாரிகளுடன் ஆலோசனையில் ஈடுபட்ட ஜெயார், கொள்ளையிட்டவர்களை எப்படியாவது கைதுசெய்யவேண்டும் என்று கூறியதுடன், கொள்ளைக்காரர்கள் தமிழ்நாட்டிற்குத் தப்பிச் செல்வதைத் தடுக்க கடலோரப் பாதுகாப்பினைப் பலப்படுத்தவேண்டும் என்றும் கட்டளையிட்டார். மேலும், கொள்ளையர்கள் தொடர்பான தகவல்களை வழங்குவோரு பத்து லட்சம் ரூபாய்கள் சன்மானமாக வழங்கப்படும் என்றும் அவர் அறிவித்தார். சித்திரை 5 ஆம் திகதி, பருத்தித்துறை கிழக்கில் அமைந்திருந்த கரையோரக் கிராமமான மணற்காடு பகுதியில் தமிழ்நாட்டிற்குத் தப்பிச் செல்ல படகிற்காகக் காத்திருந்தவேளை குட்டிமணி, தங்கத்துரை, செல்லத்துரை சிவசுப்பிரமணியம் (தேவன்) ஆகிய மூவரும் பொலீஸாரால் கைதுசெய்யப்பட்டனர். கொழும்பில் வழக்கைச் சந்தித்த தங்கத்துரையுடன் பேசுவதற்கு எனக்குச் சந்தர்ப்பம் வழங்கப்பட்டது. என்னிடம் பேசிய தங்கத்துரை பின்வருமாறு கூறினார், "எங்களை சிறிசபாரட்ணமே கடற்கரையில் இறக்கிவிட்டார். படகு இரவு 11 மணிக்கு வரும் என்று எங்களிடம் அவர் கூறினார். ஆனால், அது வரவில்லை. பின்னர், துப்பாக்கிகளை எம்மை நோக்கி நீட்டியபடி வந்துகொண்டிருந்த பொலீஸ்காரரை நாங்கள் கண்டோம். "சரணடையுங்கள்" என்று அவர்கள் உரக்கக் கத்தினார்கள். தப்பியோடுவதற்காக சுற்றுமுற்றும் பார்த்தோம், அப்போதுதான் நாம் சுற்றிவளைக்கப்பட்டிருப்பது தெரிந்தது. எம்மால் தப்பிச்செல்ல முடியவில்லை. நாம் கைகளை உயர்த்தியபடி சரணடைய முயலும்போது, குட்டிமணி தன்னிடமிருந்த கைத்துப்பாக்கியை வெளியே எடுக்க முனைந்தார். தன்னைத்தானே சுட்டுக்கொல்லவே அவர் முயன்றார். ஆனால், பொலீஸார் அவரை மடக்கிப் பிடித்துவிட்டனர். கைகலப்பில் துப்பாக்கி வெடித்து, சன்னம் அவரது காதினைத் துளைத்துச் சென்றது. எம்மைக் கைது செய்து, விலங்கிட்டு, சங்கிலிகளால் பிணைத்து வைத்தார்கள். பின்னர் கொழும்பிற்கு விமானத்தின்மூலம் கொண்டுவரப்பட்டு பனாகொடை இராணுவ முகாமிற்குக் கொண்டுசெல்லப்பட்டோம்". "உங்களைப் பற்றி யாராவது பொலீஸாருக்கு அறிவித்திருக்கலாம் என்று சந்தேகிக்கிறீர்களா?" என்று நான் அவரைக் கேட்டேன். "நாமும் அந்த முடிவிற்குத்தான் வந்திருக்கிறோம்" என்று அவர் கூறினார். தனது சந்தேகத்திற்கான காரணங்களை தங்கத்துரை பின்வருமாறு கூறினார். அவர்களைக் கைதுசெய்ய வந்த பொலீஸ் பரிசோதகரும் அவரது படையும் தமது ஜீப் வண்டியை தொலைவில் நிறுத்திவிட்டு, கால்நடையாகவே சத்தமின்றி அவர்களை நோக்கி முன்னகர்ந்து வந்திருக்கின்றனர். ஆறுபேர் அடங்கிய அந்த பொலீஸ் குழுவினர் தாமிருந்த பகுதியை வட்டமாகச் சுற்றிவளைத்து முன்னேறியது தாம் தப்பிச்செல்வதைத் தடுத்துவிடவே என்று அவர்களுக்குப் புரிந்தது. பொலீஸார் தம்முடன் கைவிலங்குகளையும் எடுத்து வந்திருந்தது, குட்டிமணி குழுவினரைக் கைதுசெய்யும் திட்டத்துடனேயே என்பதைப் புலப்படுத்தியிருந்தது. மேலும், சிறி சபாரட்ணம் கூறியபடி இரவு 11 மணிக்கு படகு வராது போனது கூட, நேரம் வேண்டுமென்றே தவறாகக் கூறப்பட்டதனால்த்தான் என்றும் அவர்கள் சந்தேகித்திருந்தனர். "நீங்கள் யாரையாவது சந்தேகிக்கிறீர்களா?" என்று அவரிடம் கேட்டேன். அவர் பதில் கூறவில்லை. புன்னைகையே பதிலாக வந்தது. "நாங்கள் வெளியில் வந்ததன் பின்னர் நீங்களே அறிந்துகொள்வீர்கள்" என்று அவர் என்னிடம் கூறினார். "அப்படியானால், படகோட்டியைச் சந்தேகிக்கிறீர்களா?" என்று மீண்டும் அவரைக் கேட்டேன். அதற்கும் புன்னகையே பதிலாக வந்தது. "படகினை ஒழுங்கு செய்தது யார்?" என்று நான் கேட்டேன். "பிரபாகரன்" என்று அவர் பதிலளித்தார். "அவரைச் சந்தேகிக்கிறீர்களா?" என்று நான் மீண்டும் கேட்டேன். சிரித்துக்கொண்டே பேசிய அவர், "நான் எனது சந்தேகங்களை ஒரு பத்திரிக்கையாளரிடம் சொல்ல முடியாது. நான் வெளியே வந்தவுடன் இதுபற்றி நானே விசாரிப்பேன்" என்று அவர் கூறினார். ஆனால், அவரால் வெளியில் வரமுடியாமலேயே போய்விட்டது. அவரும், குட்டிமணியும், தேவனும் வெலிக்கடைச் சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டிருந்தார்கள். இந்த நேர்காணல் நடந்து சரியாக ஒருவருடத்தின் பின்னர், 1983 ஆம் ஆண்டு ஆடி மாதம் 25 ஆம் திகதி சிறைச்சாலைப் படுகொலைகளின் முதலாம் நாளன்று அவர்கள் மூவரும் கொல்லப்பட்டுப் போனார்கள். நீர்வேலி வங்கியைக் கொள்ளையடித்தவர்களைத் தேடி இராணுவத்தினர் பாரிய தேடுதல் வேட்டையொன்றினை முடுக்கிவிட்டிருந்தனர். அதனைச் செய்தது டெலோ அமைப்பினரே என்பது அவர்களுக்குத் தெரிந்திருந்தது. இந்த தேடுதல் வேட்டை மீண்டும் ஒருமுறை பிரபாகரனின் சமயோசிதத்தை வெளிக்காட்டியிருந்தது. பொலீஸாரின் ஒவ்வொரு அசைவினையும் முன்னமே கணிப்பிட்டு , அவர்களிடமிருந்து தப்பித்துக்கொண்டார். தனது ஆயுதங்களை உடனடியாக புதிய மறைவிடங்களுக்கு அவர் மற்றிக்கொண்டார். பிரபாகரனின் பழைய மறைவிடங்களைப் பொலீஸார் சோதனையிட்டபோது எதுவுமே அவர்களுக்குக் கிடைக்கவில்லை. ஆனால், அவர்களின் தேடுதல் நடவடிக்கை பிரபாகரனைத் தொடர்ந்தும் ஓட்டத்தில் விட்டிருந்தது. இதனால் வன்னிக்குத் தப்பியோடிய பிரபாகரன், காட்டில் வாழ்ந்து வந்ததுடன் முட்புதர்களுக்குள் தூங்கியும், உணவின்றியும் அவதிப்பட்டார். குட்டிமணியும், ஜெகனும் 1982 ஆம் ஆண்டில்
  28. அரசியலில் பிரபாகரனுக்கு இருந்த ஆர்வம் எத்தனையோ சவால்களுக்கும், கஷ்ட்டங்களுக்கும் பின்னர் தான் மீளப் பெற்றெடுத்துக்கொண்ட தனது இயக்கமான தமிழ் ஈழ விடுதலைப் புலிகளை மீளவும் கட்டுக்கோப்பாக ஒருங்கிணைப்பதில் மும்முரமாக பிரபாகரன் ஈடுபட்டிருந்தபோதும் கூட, அரசியலில் அப்போது நடைபெற்று வந்த நிகழ்வுகளையும் உன்னிப்பாக அவதானித்து வந்தார். இயல்பில் அவர் ஒரு அரசியல்த் தீவிரவாதியாகத் திகழ்ந்தார். இதனை பலமுறை நேர்காணல்களில் அவர் வெளிப்படுத்தியிருக்கிறார். அரசியல் மீதிருந்த தீவிர ஈடுபாடே தன்னை ஒரு போராளியாக மாற்றியிருப்பதாக அவர் கூறியிருக்கிறார். அனித்தா பிரதாப்பிற்கு அவர் 1984 இல் வழங்கிய முதலாவது நேர்காணலில் பின்வருமாறு கூறுகிறார், அனித்தா பிரதாப் : எந்தக் கட்டத்தில் பாராளுமன்ற நடைமுறைகளில் நீங்கள் நம்பிக்கையிழந்தீர்கள்? அதன்மீதான உங்களிம் ஏமாற்றத்திற்கு காரணமாக அமைந்தது எது? பிரபாகரன் : இளைய சமுதாயம் பாராளுமன்ற அரசியலில் நம்பிக்கையிழந்த 70 ஆம் ஆண்டு காலப்பகுதியிலேயே நான் அரசியலுக்குள் நுழைந்தேன். ஆயுத ரீதியிலான போராட்டச் சிந்தனையுடனேயே நான் அரசியலுக்குள் நுழைந்தேன். தமிழ் மக்களின் அவலங்கள் மீது அடுத்தடுத்து ஆட்சி செய்த சிங்கள அரசுகள் காட்டிய அசமந்தமும், அலட்சியமும் மாற்றாந்தாய் மனப்பாங்குமே பாராளுமன்ற அரசியல் ஒரு ஏமாற்று நாடகம் எனும் நிலைக்கு என்னைத் தள்ளியது. பிரபாகரனைப் பொறுத்தவரை, தமிழ் மக்கள் எதிர்கொண்ட அவலங்களும், அந்த அவலங்களைத் தீர்ப்பதற்குத் தமிழ் மக்கள் அகிம்சை ரீதியில் முன்னெடுத்த போராட்டங்களின் முற்றான தோல்வியுமே ஆயுதம் ஏந்துவதற்குக் காரணமாக இருந்தது. அரசியலில் ஏற்பட்டு வரும் மாற்றங்கள் ஒவ்வொன்றையும் மிகவும் நெருக்கமாக அவதானித்து வந்த பிரபாகரன், இந்த அரசியல் மாற்றங்கள் குறித்த நுட்பங்களைத் தொடர்ச்சியாக அரசியல் அவதானிகளுடன் பேசிவந்திருக்கிறார். வி. தர்மலிங்கம் தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணியின் தலைமைப்பீடத்துடன் இளைஞர்கள் மாவட்ட அபிவிருத்திச் சபைகள் தொடர்பாக பிரச்சினைப்படுகையில் பிரபாகரன் யாழ்ப்பாணத்திலேயே தங்கியிருந்தார். ஒரு நாள் காலை வி தர்மலிங்கத்தின் வீட்டிற்குச் சென்ற பிரபாகரன் அரசு முன்வைக்கும் யோசனைதான் என்ன என்று அறிய முயன்றார். தர்மலிங்கத்தின் மகனான சித்தார்த்தனினின் கூற்றுப்படி, அன்று காலை பிரபாகரனுக்கு தோசை உணவாகப் பரிமாறப்பட்டிருக்கிறது. அங்கு, தனது கைத்துப்பாக்கியை பிரபாகரன் சித்தார்த்தனுக்குக் காட்டியிருக்கிறார். "இது பஸ்டியாம்பிள்ளையிடம் முன்னர் இருந்தது" என்று பிரபாகரன் கூறியிருக்கிறார். இன்று புளொட் அமைப்பிற்குத் தலைமை தாங்கும் சித்தார்த்தன், அன்று பிரபாகரனுக்கு தனது தந்தையாரான தர்மலிங்கம், அரசின் மாவட்ட அபிவிருத்திச் சபை திட்டத்தினை விளக்கியதாகக் கூறினார். மாவட்ட அபிவிருத்திச் சபைகள் மூலம் சமஷ்ட்டி முறையிலான அதிகாரப் பரவலாக்கத்திற்கு அடித்தளமிட முடியும் என்றும் தர்மலிங்கம் பிரபாகரனிடம் கூறியிருக்கிறார். "தமிழர்களுக்கான சுயாட்சிப் பிராந்தியம் ஒன்றிற்கான அடித்தளத்தினை இந்த மாவட்ட அபிவிருத்திச் சபைக் கட்டமைப்பு கொடுக்கக் கூடியது என்பதனால், இதனை நாம் ஏற்றுக்கொள்ளலாம் " என்று பிரபாகரனிடம் தனது தந்தையார் கூறியதாக சித்தார்த்தன் கூறுகிறார். தனது தந்தையாரிடம் மிகவும் தீவிரமாகப் பிரபாகரன் பேசிக்கொண்டிருந்ததை தான் அவதானித்ததாக சித்தார்த்தன் கூறுகிறார். மாவட்ட அபிவிருத்திச் சபையின் நிதி அதிகாரம், காணியதிகாரம், பொலீஸ் அதிகாரம் குறித்து பல கேள்விகளை பிரபாகரன் தர்மலிங்கத்திடம் கேட்டிருக்கிறார். பிரபாகரனின் அடுத்தடுத்த கேள்விகளால் அதிர்ந்துபோன தர்மலிங்கம், இறுதியில் மாவட்ட அபிவிருத்திச் சபைகளுக்கு இருக்கும் அதிகாரம் பண்டா - செல்வா ஒப்பந்தத்தில் இருந்த அதிகாரங்களைக் காட்டிலும் மிகவும் குறைவானது என்பதை ஒப்புக்கொண்டார். "பிரபாகரன் அதுகுறித்து எந்தவித அபிப்பிராயத்தையும் கூறவில்லை. ஆனால் அவரது கேள்விகளில் அவரது சிந்தனையின் வீச்சு தெளிவாகத் தெரிந்தது" என்று சித்தார்த்தன் அந்த நாளை நினைவுகூர்ந்தார். மாவட்ட அபிவிருத்திச் சபைகள் குறித்து பிரபாகரன் அதிகம் அலட்டிக்கொள்ளாதபோதும், தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணியின் இளைஞர் பிரிவு தமது தலைமைக்கெதிரான தமது எதிர்ப்பினை இன்னும் அதிகப்படுத்தியிருந்தனர். இவ்வகையான முதலாவது சம்பவம் 1981 ஆம் ஆண்டு மாசி மாதம் நடந்தது. யாழ்ப்பாணத்தில் நடைபெற்ற மாவட்ட ஒருங்கிணைப்புக் குழு கூட்டத்தில் தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணி பாராளுமன்ற உறுப்பினர்கள் கலந்துகொண்டதுடன் அக்கூட்டத்திலேயே அமிர்தலிங்கம் அரசின் மாவட்ட அபிவிருத்திச் சபைத் திட்டத்திற்கு தமது ஆதரவினை வழங்கப்போவதாக அறிவித்திருந்தார். அடுத்த சம்பவம், 1981 ஆம் ஆண்டு ஆனி 4 ஆம் திகதி நடக்கத் தீர்மானிக்கப்பட்டிருந்த மாவட்ட அபிவிருத்திச் சபைகள் தேர்தலில் போட்டியிடப்போவதாக முன்னணியினர் தீர்மானம் எடுத்தபோது நடந்தது. அதுவரை காலமும் தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணியின் தலைமைக்கெதிராக அகிம்சை ரீதியில் தமது எதிர்ப்பினைக் காட்டி வந்த இளைஞர்கள் 1981 ஆம் ஆண்டு பங்குனி 16 ஆம் திகதி வன்முறையில் ஈடுபட்டிருந்தனர். அன்றிரவு, அமிர்தலிங்கமும், தர்மலிங்கமும், ராஜலிங்கமும் வல்வெட்டித்துறையில் தமது இரவுணவை அருந்திக்கொண்டிருந்தனர். வெளியே நிறுத்தப்பட்டிருந்த தர்மலிங்கத்தின் ஜீப் வண்டியை மூன்று இளைஞர்கள் சேதப்படுத்தினர். இரு நாட்களுக்குப் பின்னர் யாழ்ப்பாணம் அரசடி வீதியில் நிறுத்திவைக்கப்பட்டிருந்த ராஜலிங்கத்தின் ஜீப் வண்டியும் அடித்து நொறுக்கப்பட்டது. சில நாட்களுக்குப் பின்னர் மன்னாரில் பொதுக்கூட்டம் ஒன்றில் கலந்துவிட்டு வீடு திரும்பிக்கொண்டிருந்த பருத்தித்துறை பாராளுமன்ற உறுப்பினர் துரைரட்ணம் மீதும் தாக்குதல் நடத்தப்பட்டது.
  29. அண்டாசிபே லெமூர் சரணாலயத்தில் இருந்து மிக அருகில் இருக்கும் லெமூர் தீவுக்கு விடிய காலமய் படகுகளில் புறப்பட்டோம். வெள்ளைக்காரர்களுக்கு பொதுவாக படகோட்டல் நீர், மலை, காடு சம்பத்தப்பட்ட விடயங்கள் எல்லாம் சர்வ சாதாரணம் என்றபடியால், எனக்கும் படகோட்டத்தெரியும் என்று நினைத்திருந்தார்கள். ஏரிக்கு அருகில் சென்றதும் ஒரு படகுக்கு இருவர், நாலு துடுப்புகள் என்று எடுத்துக்கொண்டு படபடவென்று ஏறிவிட்டார்கள். எனக்கு படகு ஓட்டத்தெரியாது என்று அவர்களிடம் உடனேயே சொல்லிவிட்டேன். எம்முடன் வந்த guide, தான் என் படகில் முன்னுக்கு இருந்து துடுப்பை இயக்குவதாகவும், நான் எப்படி பின்னுக்கு இருந்து அதே மாதிரி செய்யவேண்டும் என்றும் சொல்லித்தந்தான். அமைதியான ஏரிதான். என்றபடியால் பிரச்சனை இல்லை என்று ஒருமாதிரி நானும் படகை ஓட்டினேன். அரைவாசி வழியில் ராட்சத மரம் ஒன்று அரைவாசி வெட்டப்பட்டு எரிந்த நிலையில் குறுக்கே விழுந்திருந்தது. மடகாஸ்கர் மக்கள் பொருளாதார பிரச்சனைகளால் சட்டத்தை மீறி காடுகளையும், மிருகங்களையும் அழித்து வருகிறார்கள். அந்தமரத்தை கடந்து படகை எடுத்துக்கொண்டு நாமும் போகவேண்டும் என்பது நினைத்துப்பார்க்க முடியாத மாதிரி இருந்தது. எல்லோருக்கும் ஒத்தபடிதானே என்று நான் அவ்வளவு கவலைப்படவில்லை. உதவிக்கு வந்த சிலருடன் உதவியுடன் படகில் இருந்து மரத்தில் ஏறி பிறகு, அவர்கள் படகை மற்றப்பக்கம் கொண்டுவர திரும்ப படகுப்பயணம் தொடர்ந்தது. அப்பாடா என்று நினைக்கும் முதல் பாறைகள் நிறைந்த எரிப்பக்கத்தில் நீரின் ஓட்டம் அதிகமாக இருந்தது. என்னுடன் படகை ஒட்டிய மடகாஸ்கர் காரனே கொஞ்சம் படபடத்தமாதிரி இருந்தது. வந்த எல்லோருமே மிகவும் பயந்து போனோம். இடையிடையே படகைவிட்டு பாறையில் ஏறி நிற்பதும் பிறகு படகில் போவதுமாக ஒருமாதிரி லெமூர் தீவை சென்றடைந்தோம். தூரத்தில் எங்களை கண்டதுமே அழகான ரிங் டெய்ல் லெமூர் இன மிருகங்கள் ஏரியின் கரையில் வந்து வரவேற்பதுபோல் ஆவலாக நின்றார்கள். படகுகள் அவர்களை அண்மித்ததும் பாய்ந்தோடிவந்து எங்கள் தோள்மூட்டு, தலை என்று ஏறி நிண்டுகொண்டார்கள். கூட்டி வந்த guide மார் வாழைப்பழங்களை தந்து அவர்களுக்கு கொடுக்கும்படி கூறினார். மிகவும் நற்பான மனிதர்களை நம்பும் காட்டு விலங்கினங்கள் அவை. எமது மாணவிகள் செல்பி எடுக்க வெளிக்கிட்டவுடனேயே அந்த லெமூர்கள் அவர்களது தலையில் இருந்துகொண்டு தாமும் போஸ் கொடுத்தது மிகவும் அழகாக இருந்தது.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.