Leaderboard
-
ரஞ்சித்
கருத்துக்கள உறவுகள்17Points8910Posts -
suvy
கருத்துக்கள உறவுகள்8Points33600Posts -
மெசொபொத்தேமியா சுமேரியர்
கருத்துக்கள உறவுகள்7Points8557Posts -
ஈழப்பிரியன்
கருத்துக்கள உறவுகள்5Points20020Posts
Popular Content
Showing content with the highest reputation on 04/07/23 in Posts
-
இலங்கையில் ஆறு மாதங்கள்
4 points4 points
- இலங்கையில் ஆறு மாதங்கள்
3 pointsஇரண்டு என் நண்பியும் நானும் அடிக்கடி பலதையும் திட்டமிட்டுக்கொண்டோம். தான் கிட்டத்தட்ட 6000 டொலர் சேர்த்து விட்டதாகவும் போவதற்கிடையில் 10000 டொலர் சேர்த்துவிடுவேன் என்றும் யாரும் யாரிடமும் கடன் கேட்பதில்லை என்றும் செலவுகளை சமமாகப் பிரித்துக்கொள்ளவேண்டும் என்றும் அவள் கூறியபோது எனக்கும் நின்மதியாக இருந்தது. எனது கடைசி மகளின் பட்டப்படிப்பு யூலை மாதம் முடிவடைகிறது. அதன்பின் நாம் கிளம்பலாம் என்றதற்கு செப்டெம்பர் மாதம் தான் தான் வரமுடியும் என்று கூற, இப்பவே விமானச் சீட்டை எடுத்தால் மலிவாக இருக்கும் என்றேன் நான். அந்த மாதம் யாரும் விடுமுறையில் செல்ல மாட்டார்கள் ஆகவே ஒரு மாதத்தின் முன் எடுத்துக் கொள்ளலாம் என்றாள் அவள். சரி அவளுக்கும் என்ன பிரச்சனையோ, கொஞ்சம் பொறுப்போம் என்று எண்ணிக்கொண்டு நானும் அப்பப்ப வேறுவேறு விமானச் சீட்டுகளை மலிவாக இருக்கிறதா என்று பார்த்துக்கொண்டிருந்தேன். எமக்கு அங்கே தேவைபடக்கூடிய சில பொருட்களையும் வாங்கியாயிற்று. சரியாக ஒரு மாதம் இருக்க இனியும் தள்ளிப்போடக் கூடாது என்று எண்ணியபடி அவளுக்கு அழைப்பை ஏற்படுத்தி எத்தனையாம் திகதி புக் செய்வது என்று கேட்டபோது “சொறியப்பா நான் வர ஏலாது, எனக்கும் மனிசனுக்கும் பெரிய பிரச்சனையப்பா என்றவுடன் எனக்கு ஏற்பட்ட ஏமாற்றத்துக்கு அளவே இல்லை. உள்ளுக்குள்ளே சரியான கோபம் கனன்றுகொண்டிருந்தாலும் வெளியே அவளைத் திட்டவேயில்லை. சரி என்று ஒரு வார்த்தையில் கூறிவிட்டு தொலைபேசியை வைக்க பல தடவைகள் மன்னிப்புக் கேட்டு மெசேச் வர அதையும் திறந்து பார்க்காது என் கோபத்தை அவளுக்குக் காட்டுகிறேன். சரி இந்தியா போவது சரிவாராது. ஒஸ்ரேலியாவுக்காவது போகலாம். நீங்கள் எதற்கும் இலங்கை சென்று அங்கிருந்து செல்லலாம் என மனதுள் தனியாக அங்கு செல்வது என்னவோபோல் இருக்க அதைப் பிறகு பார்த்துக்கொள்ளலாம். இப்ப ஊருக்குத்தானே தனியாகப் போகலாம் என முடிவெடுத்து விமானச் சீட்டைப் பார்க்கத் தொடங்க எனக்கும் படிப்பு முடிஞ்சிட்டதுதானே, நானும் ஊருக்கு வரப்போறன் என்றாள் என் கடைக்குட்டி. ஆனால் உங்களோட வந்து ஊர் எல்லாம் சுற்றிப் பார்க்க வரமாட்டியள். எதுக்கும் அப்பாவோடை நான் வாறன். நீங்கள் தனியப் போங்கோ என்றதற்கு உடனே இடைப் புகுந்து கொழும்பில் இருந்து யாழ்ப்பாணம் போக 55,60 கேட்பான்கள். எதுக்கும் அம்மாவோடையே சேர்ந்து போவம் என்றார் என் ஆத்துக்காறர். எனக்கும் ஒருவிதத்தில அது நின்மதியாய் இருந்தது. இல்லாவிட்டால் நான் தானே இரண்டு பயணப் பொதிகளையும் இழுத்துக்கொண்டு திரியவேண்டும். யாழ்ப்பாணம் போனபிறகு எனக்கும் உங்களுக்கும் எந்த சம்மந்தமும் இல்லை என்று கூறிவிட்டு நானே ரிக்கற்றை புக் செய்கிறேன் என்று கணனியியின் முன் இருந்தாச்சு. நேரடியாகக் கொழும்பு செல்வதற்கு 880 பவுண்டஸ். ஓரிடத்தில் மட்டும் சில மணித்தியாலங்கள் தங்கிச் செல்வது 760 பவுண்டஸ். lufthansa என்னும் ஜெர்மன் விமானத்தில் சுவிசில் நான்கு மணித்தியாலங்களும் பொம்பேயில் இரண்டு மணித்தியாலங்களும் தரித்துச் செல்வதற்கு 440 பவுண்ஸ் மட்டும் என்று இருக்க வேறு எதையும் யோசிக்காமல் டிக்கற்றை புக் செய்தாச்சு. கிட்டத்தட்ட அரைவாசிக்காசு மிச்சம் என்று மனதுள் எண்ணியபடி மனிசனிடம் சொல்கிறேன். எத்தனை கிலோ கொண்டுபோகலாம் என்று கேட்கிறார். அப்போதுதான் என் மண்டையில் உறைக்கிறது. நான் அதைப்பற்றி யோசிக்கவுமில்லை. அதைப் பார்க்கவுமில்லை. உடனே சென்று பார்க்கிறேன் ஒருவருக்கு 23 kg பொதியும் கையில் கொண்டுபோக 8 kg மட்டுமே அனுமதி என்று இருக்க ஐயோ அவசரப்பட்டிட்டனே என்கிறேன். அது என்ன புதிசா. மகளிடம் கொடுத்திருந்தால் அவள் கவனமாக கேட்டுக் கேட்டு புக் பண்ணியிருப்பாள். எல்லாம் நீதான் செய்யவேணும். அங்க வந்து உன்னோடை என்ணெண்டு சமாளிக்கப் போறனோ என்கிறார். நீங்கள் இருவரும் உங்கள் தங்கை வீட்டில் இருந்துகொள்ளுங்கள். நான் சித்தியுடன் நிக்கிறன் என்றுவிட்டு “மூன்று பேர் போறம். உங்கள் சூட்கேசில் முக்கால்வாசி இடம் இருக்கத்தானே போகுது” என்று சமாதானம் சொன்னாலும் உள்மனது போதாது போதாது என்கிறது. DMA என்னும் பார்சல் சேர்விஸ் இங்கே உண்டு. நான்கு தொடக்கம் ஆறு வாரங்களில் பொதிகளை வீட்டிலேயே கொண்டுவந்து தருவார்கள். சிறிய பெட்டியுள் ஒரு இருபது இருபத்தைந்து கிலோ வரை வைக்கலாம் 35 பவுண்டஸ். அடுத்தது ஒரு 45 கிலோ வரை வைப்பது 55 பவுண்டஸ். அதிலும் பெரியது 105 பவுண்டஸ். அவர்களுக்கு தொலைபேசி எடுத்து நடுத்தரப் பெட்டியை தெரிவுசெய்து கொண்டுவரும்படி கூறிவிட்டு தேவையான பொருட்களை வாங்கத் தொடங்கினேன். என் பக்கம் ஒரு 10 பேர். கணவனின் நெருங்கிய உறவினர் ஒரு இருபதுபேர் எனக் கணக்கிட்டு சொக்ளற், பிஸ்கற், நிடோ பால்மா, சவர்க்காரங்கள், ஏலக்காய், ஷாம்பூ, toilet liquid cleaners, kitchen sink and basin cleaner,சேலைகள், சொக்ளற் பௌடர், சோஸ், …… இப்பிடிப் பார்த்துப் பார்த்து வாங்க மூன்று பெட்டி பொருட்கள் சேர்ந்துவிட்டன. கணவருக்குத் தெரியாமல் இரண்டு பெட்டிகளையும் தெரிய ஒரு பெட்டியையும் அனுப்பியாச்சு. கணவரும் மகளும் ஒரு மாதத்தில் திரும்பிவிடுவார்கள் என்பதால் பார்சல்கள் எப்படியும் நான்கு வாரங்களுள் வந்துவிடாது என்னும் நம்பிக்கையில் மனிசனின் திட்டிலிருந்து தப்பித்துவிட்டதாக மகிழ்ந்துபோகிறேன். நான் ஆறு மாதங்கள் நிற்கப் போவதால் எனது கணனியையும் கட்டாயம் கொண்டுசெல்ல வேண்டும் என முடிவெடுத்து நிறுத்துப் பார்த்தால் அதுவே 5 கிலோ என்று காட்டுகிறது. நாட்கள் நெருங்க நெருங்க எனது வீட்டின் conservatory யினுள் நிற்கும் நூற்றுக்கணக்கான பூங்கன்றுகள் செடிக்கொடிகளை எல்லாம் எப்படிப் பார்த்துக்கொள்ளப் போகிறார்களோ என்னும் கவலை கனவிலும் அவற்றைப் பாராமரிக்கச் செய்தது. வாரம் ஒருதடவை எவ்வளவு நீரைக் கன்றுகளுக்கு ஊற்றவேண்டும் என்று ஒவ்வொருவாராகச் சொல்லி ஒருவாறு மனதைத் தேற்றித் தயார் படுத்த, கனடாக்காறி போனேடுத்து என்னடியப்பா எல்லாம் ரெடியா என்கிறாள். நீர் வாராட்டில் நானும் நிண்டிடுவன் என்று நினைச்சீராக்கும் என்கிறேன். எதுக்கும் இரண்டு மூன்று மாதம் கழிய நான் வந்தாலும் வருவன். எதுக்கும் ஒரு அறை எனக்கும் எடுத்துவையும் என்கிறாள். சொறி இம்முறை உமக்காக உம்மை நம்பி நான் எதுவும் செய்யப்போவதில்லை. நீர் வந்தால் உமது அம்மாவுடன் தங்கி எனக்கு போன் செய்யும், வசதிப்படி பிறகு பார்ப்போம் என்கிறேன். பயணத்துக்கு ஒரு வாரம் இருக்க மனிசன் வானில் ஏறும்போது கால் சறுக்கி கெழித்துவிட்டதால் மருத்துவமனைக்குச் சென்று கட்டோடு நொண்டியபடி வர, என்ன இது சகுனம் சரியில்லையோ என மனதுள் கவலை எழுகிறது. அதை வாய் விட்டும் சொல்ல" நான் என்ன நடக்கவே முடியாமலா இருக்கிறன். ஒரு கிழமையில் எல்லாம் மாறிவிடும்" என்கிறார். அம்மா இதுவும் நல்லதுதான். விமானநிலையத்தில் சொன்னால் அப்பாவை electric வீல் செயாரில் கூட்டிக்கொண்டுவந்து விடுவார்கள். முதலில் ஏறவும் விடுவார்கள். நான் பொதிகளுக்குப் பொறுப்பு. நீங்கள் கவலை கொள்ள வேண்டாம் என்கிறாள். எனக்கு உபத்திரவம் இல்லாவிட்டால் சரி என எண்ணிக்கொள்கிறேன்.3 points- பிரபாகரன் - மூத்த செய்தியாளர் திரு த.சபாரட்ணம் எழுதிய தலைவரின் வாழ்க்கைச் சரித்திரம் - சங்கம் இணையம்
பிரபாகரன் - மூத்த செய்தியாளர் திரு த.சபாரட்ணம் எழுதிய தலைவரின் வாழ்க்கைச் சரித்திரம் - சங்கம் இணையம்
2 pointsதமிழ் மக்களின் தளபதி எனும் ஸ்த்தானத்திலிருந்து துரோகி எனும் நிலைக்கு இறங்கிய அமிர்தலிங்கம் அரசை மகிழ்விக்க எண்ணிய தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணியினர், அரசாங்கத்துடன் இணைந்து பாராளுமன்ற செயற்பாடுகளில் ஈடுபடும் விருப்பத்தைத் தெரிவித்ததோடு, 1982 ஆம் ஆண்டு சித்திரை 29 ஆம் திகதி, ஜெயவர்த்தனபுற கோட்டேயில் புதிதாக நிர்மாணிக்கப்பட்ட பாராளுமன்றக் கட்டிடத் தொகுதியினைத் திறந்துவைக்கும் உத்தியோகபூர்வ நிகழ்விலும் கலந்து கொண்டனர். இந்நிகழ்வில் கலந்துகொள்ளவேண்டாம் என்று போராளிகள், குறிப்பாக தமிழ் ஈழ விடுதலை முன்னணியின் எச்சரிக்கைகளையும் மீறி முன்னணியினர் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர். வழமைபோல அமிர்தலிங்கம் மிகச் சிறந்த பேச்சொன்றை வழங்கினார். தமிழர்களின் சரித்திரம் தொடர்பான சான்றுகளிலிருந்து ஆரம்பித்த அவர், தமிழர்களுக்கும், தொடந்ர்துவந்த அரசுகளுக்கும் இடையே செய்யப்பட்ட பல ஒப்பந்தங்களை அரசுகள் கைவிட்டு தமிழர்களை ஏமாற்றியது குறித்தும், தமிழர்களின் பூர்வீக தாயகம் எவ்வாறு சிங்களவர்களால் குடியேற்றங்கள் மூலம் ஆக்கிரமிக்கப்பட்டு வருகிறது என்பது குறித்தும், தமிழர்கள் எவ்வாறும் இரண்டாம்தரக் குடிமக்களாக ஆக்கப்பட்டிருக்கிறார்கள் என்பது குறித்தும், தமிழர்கள் தமது சொந்தத் தாயகத்திலேயே பாதுகாப்பற்றை நிலையில் வாழ்கிறார்கள் என்பதுபற்றியும், இவையனைத்தும் எவ்வாறு தமிழ் இளைஞர்களை ஆயுதப் போராட்டம் நோக்கித் தள்ளியது என்பது குறித்தும் பேசினார். ஆனால், தனது பேச்சின் இறுதியில், "முன்னர் நடந்தவை எப்படி இருந்தபோதும், ஜனாதிபதி ஜெயாரின் நேர்மையிலும், நீதியிலும், இனங்களைச் சமமாக நடத்தும் விதத்திலும் தனது கட்சி அசைக்கமுடியாத நம்பிக்கை வைத்திருப்பதாக" கூறி முடித்தார். பாராளுமன்றச் செயற்பாடுகள் தொடர்பான செய்திகளைச் சேகரிப்பதில் நான் ஈடுபட்டிருக்காமையினால், அதன் உத்தியோகபூர்வ நிகழ்வில் என்னால் கலந்துகொள்ள முடிந்திருக்கவில்லை. ஆனால், அமிர்தலிங்கத்தின் பேச்சினைக் கேட்டபின்னர் அவரை வாழ்த்துவதற்காகத் தொலைபேசியில் அவருடன் பேசினேன். "பல மக்கள் என்னை வாழ்த்தியிருக்கிறார்கள். தமிழ் மக்களின் பிரச்சினைகளையும், ஏமாற்றங்களையும் நாட்டிற்கும், சர்வதேசத்திற்கும் சொல்லும் ஒரு வாய்ப்பாக இந்தச் சரித்திர முக்கியத்துவம் வாய்ந்த நிகழ்வை நான் பாவித்துக்கொண்டது குறித்து அவர்கள் மகிழ்ச்சியடைந்திருக்கிறார்கள். இந்த நிகழ்வில் பங்குகொள்ளவேண்டாம் என்று இளைஞர்கள் விடுத்த வேண்டுகோள் தவறானது என்று அவர்கள் என்னிடம் கூறினார்கள். எமது பிரச்சாரத்திற்கு பாராளுமன்றத்தை ஒரு களமாக நாங்கள் பாவிக்கிறோம். இளைஞர்களுக்கு இது புரியுமாற்போல்த் தோன்றவில்லை" என்று என்னிடம் அமிர்தலிங்கம் கூறினார். இளைஞர்கள் மட்டுமல்லாமல், தமிழ் மக்களும் தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணியின் இச்செயற்பாட்டிற்கு எதிரான நிலைப்பாட்டினை எடுக்கத் தொடங்கியிருந்தார்கள். தமிழ் மக்கள் வழங்கிய ஆணையான தனிநாட்டிற்கான செயற்பாடுகளிலிருந்து விலகி, பாராளுமன்ற சுகபோகங்களில் திளைத்திருக்கவே முன்னணியினர் விரும்புகிறார்கள் என்று மக்கள் மத்தியில் இருந்துவந்த கருத்து மேலும் மேலும் வளரத் தொடங்கியது. 1982 ஆம் ஆண்டு சித்திரை மாதம் 29 ஆம் திகதி புதிய பாராளுமன்றம் திறக்கப்பட்ட அதே நாளில் யாழ்ப்பாணத்தில் பூரண ஹர்த்தால் ஒன்றிற்கு தமிழ் ஈழ விடுதலை முன்னணி, ஈழம் மாணவர் பொது மன்றம், யாழ் பலகலைக்கழக மாணவர் அமைப்பு, தமிழ் மாணவர் அமைப்பு, புரட்சிகர கம்மியூனிச அமைப்பு உள்ளிட்ட சில அமைப்புக்கள் அழைப்பு விடுத்திருந்தன. இந்த ஹர்த்தாலின் வெற்றியும், தமிழ் மக்கள் தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணியின் தலைமைத்துவத்தை நம்பவில்லை என்பதைப் பறைசாற்றியிருந்தது. யாழ்ப்பாணத்தின் பெரும்பான்மையான கடைகள் பூட்டப்பட்டிருந்தன. திரையரங்குகள் தமது திரையிடல்களை இரத்துச் செய்திருந்ததுடன், போக்குவரத்துச் சேவைகளும் முற்றாக ஸ்தம்பிதமடைந்திருந்தன. பாடசாலைகளுக்கான மாணவர் வரவு வெகுவாகப் பாதிக்கப்பட்டிருந்ததுடன், யாழ்ப்பாணத்துத் தெருக்களும் வெறிச்சோடிக் காணப்பட்டன. வைகாசி மாதத்தில் அமிர்தலிங்கம் யாழ்ப்பாணத்திற்கு பயணம் மேற்கொண்டபோது, அவரைச் சுற்றிவளைத்துக்கொண்ட ஆயிரக்கணக்கான மாணவர்கள் அவருக்கெதிராக கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதுடன், அவரையும் அவரது கட்சியான தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணியையும் தாம் முற்றாகப் புறக்கணிப்பதாகக் கோஷமிட்டனர். தமது சக மாணவர்கள் பொலீஸாரால் கைதுசெய்யப்பட்டு வருகையில், அமிர்தலிங்கமும் அவரது கட்சியினரும் ஜெயாருடன் ஆலோசனைகளில் ஈடுபட்டு வருவதாகவும், அவருடன் விருதுபசாரங்களில் கலந்துகொண்டு, ஜெயார் வழங்கும் தின்பண்டங்களையும் தேநீரையும் அருந்தி மகிழ்வதாகவும் அவர்கள் சாடினர். ஜெயாருடனும் அவரது அமைச்சர்களுடனும் விருந்துபசாரத்தில் ஈடுபடும் அமிர்தலிங்கம் அமிர்தலிங்கத்தை அவர்கள் "துரோகி" என்று விமர்சித்தனர். தமிழ் மக்களின் தளபதி எனும் நிலையிலிருந்து துரோகி எனும் நிலைக்கு அவர் கீழிறங்கியிருந்தார். அமிர்தலிங்கத்தினதும், தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணியினதும் சரிவு ஆரம்பித்திருந்தது. ஜெயவர்த்தனவின் திட்டம் வெற்றியளித்திருந்தது. அமிர்தலிங்கத்தின் கால்களுக்குக் கீழே பாரிய குழியொன்றினை ஜெயார் வெட்டிக்கொண்டிருந்தார்.2 points- பிரபாகரன் - மூத்த செய்தியாளர் திரு த.சபாரட்ணம் எழுதிய தலைவரின் வாழ்க்கைச் சரித்திரம் - சங்கம் இணையம்
பிரபாகரன் - மூத்த செய்தியாளர் திரு த.சபாரட்ணம் எழுதிய தலைவரின் வாழ்க்கைச் சரித்திரம் - சங்கம் இணையம்
2 pointsராணுவத்தின் மீதான தாக்குதல்களுக்காக போராளிகளைக் கண்டித்த அமிர்தலிங்கமும் முன்னணியும் இராணுவத்தின் மீதான தாக்குதல் மற்றும் கிளிநொச்சி வங்கிக் கொள்ளை ஆகியவற்றினையடுத்து, ஐப்பசி 27 ஆம் திகதி தன்னை வந்து சந்திக்குமாறு ஜெயார் அமிர்தலிங்கத்தைப் பணித்திருந்தார். போராளிகளின் தாக்குதல்களுக்குப் பின்னர், ராணுவத்தினராலும் பொலீஸாரினாலும் பொதுமக்கள் மீது நடத்தப்படும் பழிவாங்கல்த் தாக்குதல்களைத் தடுக்கும் கலந்துரையாடல்களில் ஈடுபடுவதற்காகவே இந்த அழைப்பாணை விடுக்கப்படுவதாகவும் அமிர்தலிங்கத்திடம் கூறப்பட்டது. இக்கலந்துரையாடல்களில் கலந்து கொண்ட ராணுவத் தளபதிகள் அமிர்தலிங்கத்திடம் பேசும்போது, பொதுமக்கள் மீதும், அவர்களின் சொத்துக்கள் மீதும் பழிவாங்கும் தாக்குதல்களை நடத்தவேண்டாம் என்று தமது ராணுவ வீரர்களுக்கு கட்டாயமாக அறிவித்தல்கள் விடுக்கப்பட்டிருப்பதாகக் கூறினார்கள். இதற்குப் பதிலளித்த தமிழர் ஐக்கிய விடுதலைக் கூட்டணியினர், ராணுவத்தின்மீதோ அல்லது பொலீஸார் மீதோ நடத்தப்படும் எந்தத் தாக்குதல்களையும் தாம் ஆதரிக்கவில்லையென்றும், அவற்றைத் தாம் கண்டிப்பதாகவும் கூறினர். இதனை வெளிக்காட்டும் நோக்கத்துடன், அமிர்தலிங்கமும் சிவசிதம்பரமும் இணைந்து அறிக்கையொன்றினையும் வெளியிட்டனர், "இந்தப் படுகொலைகளை நியாயப்படுத்துவதற்கு எந்தவிதமான காரணங்களும் இல்லை. வன்முறைகள் மூலம் தமிழ் மக்களின் இலட்சியத்தை எந்தவகையிலும் அடையமுடியாது என்று நாம் முழுமையாக நம்புகிறோம். இவ்வாறான வன்முறைகள் தமிழ் மக்களின் அவலங்கள் குறித்து இருந்துவரும் கரிசணையினை முற்றாக இல்லாதொழிக்கவே துணைபோகும்" என்று அந்த அறிக்கை கூறியது. தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணியினருக்கும், போராளிகளுக்கும் இடையே எப்படியாவது பிளவொன்றினை உருவாக்கி விடவேண்டும் என்று காத்திருந்த ஜெயாருக்கு இதன்மூலம் வெற்றி கிடைத்திருந்தது. இந்த இலக்கினை அடைவதற்காகவே தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணியினர் மீது தொடர்ச்சியான இனவாதப் பிரச்சாரங்களை முன்னெடுக்குமாறு அமைச்சர் சிறில் மத்தியூவை ஜெயார் பணித்திருந்தார். முன்னணி மீது மத்தியூவினால் முன்வைக்கப்பட்ட முதலாவது குற்றச்சாட்டு, போராளி அமைப்புக்களின் வன்முறைகளின் பின்னால் இருப்பது முன்னணியினரே என்பதுடன், அதன் சூத்திரதாரிகள் அமிர்தலிங்கமும் யோகேஸ்வரனும் தான் என்பதுமாக இருந்தது. பொலீஸார் மீதான தாக்குதல்களை முன்னணியினர் கண்டிக்க வேண்டும் என்று கடுமையான அழுத்தங்களை சிறில் மத்தியூ முன்னணி மீது பிரயோகித்து வந்திருந்தார். அவரது விருப்பத்தின்படி, போராளிகளை கண்டித்து முன்னணியின் தலைமை அறிக்கையினை வெளியிட்டது. தனது வலையில் அமிர்தலிங்கமும் முன்னணியினரும் சிக்கிவிட்டதையடுத்து களிப்படைந்த ஜெயார், ஜெயரட்ணம் வில்சனை அமிர்தலிங்கத்திடம் தூதனுப்பி, உயர்மட்ட குழுவிற்கான கூட்டங்களை ஒவ்வொரு மாதமும் நடத்தலாம் என்று கூறினார். அமிர்தலிங்கமும் உடனடியாகவே இதற்கு ஒத்துக்கொண்டார். ஜெயாரின் நம்பிக்கைக்குரியவரும், ராஜாங்க அமைச்சருமான ஆனந்த திஸ்ஸ டி அல்விஸ் முன்னணியினருக்கும், போராளிகளுக்கும் இடையே ஏற்படுத்தப்பட்ட பிளவை இன்னும் விரிவாக்கும் நடவடிக்கையில் இறங்கினார். "மிதவாதிகளுக்கான கூட்டம்" என்கிற பெயரில் சிங்களவர்களையும் தன்னால் தேர்ந்தெடுக்கப்பட்ட சில தமிழர்களையும் இணைத்து கூட்டங்களை நடத்துவதன் மூலம் தீவிரவாதிகளை முற்றாக ஓரங்கட்டி விடலாம் என்று எண்ணினார். இனங்களுக்கிடையிலான நல்லிணக்கம், சமாதானம், சட்டம், ஒழுங்கு ஆகியவை தொடர்பாகவே இக்கூட்டங்கள் நடத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டது. இக்கூட்டங்கள் பற்றி அல்விஸ் பேசும்போது, அனைத்து மக்களையும் ஒன்றாக இணைத்து வன்முறைகளுக்கெதிரான மனோநிலையினை உருவாக்குவது, பயங்கரவாதத்தை நிராகரிப்பது, இன மத ரீதியிலான வன்முறைகளை தவிர்ப்பது ஆகியவையே தமது முக்கிய கருப்பொருளாக இருக்கும் என்று கூறினார். இதன்மூலம், தமிழ் மக்களிடமிருந்து தம்மை முற்றாகவே அந்நியப்படுத்துவிடும் நடவடிக்கையிலேயே அரசு இறங்கியிருக்கிறது என்பதை போராளிகள் உணர்ந்துகொண்டனர். அரசியல்க் கட்சிகளுக்கிடையிலான மாதாந்தக் கூட்டங்கள் 1981 ஆம் ஆண்டு, கார்த்திகை மாதத்திலிருந்து ஆரம்பமாகின. ஒவ்வொரு கூட்டத்திலும் தான் எழுப்பவிருக்கும் கேள்விகள் குறித்த நகலை கூட்டத்திற்கு முன்பாகவே ஜெயாருக்கு அனுப்பிவைத்த அமிர்தலிங்கம், அக்கேள்விகளுக்குப் பொறுப்பான அமைச்சர்களை இதன் மூலம் கூட்டத்திற்கு அழைக்கமுடியும் என்று நினைத்தார். இக்கூட்டங்களில் ஜெயார் மிகவும் கண்ணியமாக நடந்துகொண்டதுடன், அமைச்சர்களும் கூட்டுறவுடன் செயற்பட விரும்புவது போலத் தெரிந்தனர். மேலும், முன்னணியினரால் எழுப்பப்பட்ட அனைத்து கரிசணைகள் தொடர்பாகவும் தாம் செயற்படப்போவதாக அமைச்சர்கள் உறுதியளித்தனர். பதிலுக்கு அரசை மகிழ்விக்க எண்ணிய முன்னணியினர், 1982 ஆம் ஆண்டு மாசி மாதம் 13 ஆம் திகதி குறிக்கட்டுவானில் ராணுவத்தின் மீது நடத்தப்பட்ட தாக்குதலைத் தாம் கண்டிப்பதாக அறிக்கை விட்டனர். "எமது அரசியல்க் கட்சி ஆரம்பிக்கப்பட்ட நாளிலிருந்து, தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணி எந்தவிதமான வன்முறைகளையும் ஆதரித்தது கிடையாது. இந்த கண்மூடித்தனமான வன்முறைகளால் பாதிக்கப்பட்ட ராணுவவீரர்களின் குடும்பங்களுக்கு எமது அனுதாபத்தினைத் தெரிவித்துக் கொள்கிறோம்" என்று முன்னணியினரின் அறிக்கை கூறியது. காங்கேசந்துறைச் சீமேந்துத் தொழிற்சாலை - 2015 முன்னணியினரின் இந்த அறிக்கையினை சிறில் மத்தியூ வரவேற்றார். காங்கேசந்துறைச் சீமேந்துத் தொழிற்சாலைக்குச் சென்றுகொண்டிருந்த அவர், அங்குவைத்தே இந்த அறிக்கையினை தான் வரவேற்பதாகக் கூற நினைத்தார். நானும் அக்கூட்டத்திற்குச் சென்றிருந்தேன். மத்தியூ தன்னுடன் விமானத்தில் காங்கேசந்துறைக்கு அழைத்துச்சென்ற பத்திரிக்கையாளர் குழுவில் நானும் இருந்தேன். முன்னணியினரின் அறிக்கைக்குப் பதிலளித்து தான் வழங்கப்போகும் அறிக்கைக்கு மிகுந்த முக்கியத்துவம் கொடுத்து டெயிலி நியூஸ் பத்திரிக்கையில் பிரசுரிக்குமாறு தலைமை ஆசியரிடம் கூறுமாறு என்னை மத்தியூ பணித்தார். யாழ்ப்பாணத்திலிருந்து தான் வழங்கப்போகும் அறிக்கையினால் முன்னணியினர் மீது போராளிகள் சினம் கொள்வார்கள் என்று அவர் நன்கு அறிந்திருந்தார். அவர் எதிர்பார்த்தது போலவே நடந்தது. போராளிக் குழுக்கள், குறிப்பாக புளொட் அமைப்பு இதனால் அதிக சினங்கொண்டது. புதிதாக உருவாக்கப்பட்ட தமிழ் ஈழ விடுதலை முன்னணி எனும் அமைப்பு யாழ்ப்பாணமெங்கும் சுவரொட்டிகளை ஒட்டத் தொடங்கியது. "ஜெயாரின் தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணி தமிழ் மக்களின் விடுதலைக்கு எதிராக இயங்கத் தொடங்கியிருக்கிறது" என்று அந்தச் சுவரொட்டிகள் விமர்சித்திருந்தன.2 points- பிரபாகரன் - மூத்த செய்தியாளர் திரு த.சபாரட்ணம் எழுதிய தலைவரின் வாழ்க்கைச் சரித்திரம் - சங்கம் இணையம்
பிரபாகரன் - மூத்த செய்தியாளர் திரு த.சபாரட்ணம் எழுதிய தலைவரின் வாழ்க்கைச் சரித்திரம் - சங்கம் இணையம்
2 pointsதமிழர் ஐக்கிய விடுதலை முன்னணிக்கு வைக்கப்பட்ட பொறி போராளிகளின் செயற்பாடுகள் நடந்துகொண்டிருந்த அதேவேளை, ஜெயரட்ணம் வில்சனின் உதவியுடன், தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணிக்கு பொறியொன்றை மிகவும் நுணுக்கமாகத் திட்டமிட்டார் ஜெயவர்த்தன. ஜெயரட்ணம் வில்சன் , மாவட்ட அபிவிருத்திச் சபைத் தேர்தல்களின் வன்முறைகளின் காலம் கடந்துசென்றவுடன் அச்சபைகளை நடைமுறைப்படுத்துவதில் இருக்கும் சிக்கல்களை கலந்தாலோசித்து நிவர்த்திசெய்வதற்கு உயர்மட்ட அமைச்சர் குழுவுடன் தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணியினரையும் இணைத்து குழுவொன்றினை அமைக்கலாம் என்று ஜெயாரிடம் ஆலோசனை வழங்கினார். ஆனால், இந்த ஆலோசனையினை நிராகரித்த ஜெயார், தனது அமைச்சர்கள் இதற்கு ஒருபோதும் உடன்படமாட்டார்கள் என்று கூறினார். ஜெயவர்தன ஆனால், தமிழர் மீது அரச ஆதரவுடன் நடத்தப்பட்ட ஆவணி வன்முறைகள் முடிவிற்குக் கொண்டுவரப்பட்ட கையோடு கனடா திரும்பியிருந்த ஜெயரட்ணம் வில்சனை உடனடியாகக் கொழும்பு திரும்ப அழைத்த ஜெயவர்த்தன, வில்சன் முன்வைத்த உயர்மட்ட அமைச்சர்கள் - தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணி இணைந்த குழுவினை அமைக்க தான் தீர்மானித்திருப்பதாகக் கூறினார். தனது மொத்த அமைச்சரவையும் இந்த திட்டத்தை எதிர்த்தாலும்கூட, தான் இந்தக் குழுவை அமைத்தே தீருவேன் என்று கூறிய ஜெயார், தமிழருக்கும் சிங்களவருக்கும் இடையே இருந்துவரும் இனச்சிக்கலை இதன்மூலம் தீர்த்துவைக்க முடியும் என்று தான் நம்புவதாகவும் கூறினார். ஆகவே, இதுதொடர்பான கலந்துரையாடல்கள் உடனடியாக ஆரம்பிக்கப்படவேண்டும் என்று வில்சனிடம் கூறினார் ஜெயவர்தன. சில நாட்களுக்குப் பின்னர், அமிர்தலிங்கமும், சிவசிதம்பரமும், சம்பந்தனும் ஜெயாரை அவரது வீட்டில் சந்தித்தனர். அச்சந்திப்பில் அரச சார்பில் அமைச்சர்களான அத்துலத் முதலி, தொண்டைமான், நிசங்க விஜேரட்ண, ரணில் விக்கிரமசிங்க மற்றும் எம்.எச். முகம்மட் ஆகியோரும் கலந்துகொண்டனர். ஜெயரட்ணம் வில்சன் ஜனாதிபதியின் ஆலோசகர் என்கிற ரீதியில் இச்சந்திப்பில் கலந்துகொண்டார். மூன்று சுற்றுக்களாக நடைபெற்ற பேச்சுவார்த்தைகளின் முடிவில் உத்தியோகபூர்வ அறிக்கை ஒன்று ஆவணி 31 ஆம் திகதி வெளியிடப்பட்டது, "ஜனாதிபதி ஜெயவர்த்தனா தலைமையில் கூடிய ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர்களும், தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணியின் தலைவர்களும் , அண்மைய மாதங்களில் நாடுமுழுதும் அநியாயமான முறையில் இழக்கப்பட்ட உயிர்கள் தொடர்பாகக் கலந்துரையாடியதுடன், இனங்களுக்கிடையிலான பதற்ற நிலையினை தளர்த்தி, ஒற்றுமையினையும் சமாதானத்தையும் உருவாக்கும் வகையில் சில நடவடிக்கைகளை மேற்கொள்ளவும் இணங்கியிருக்கிறார்கள். 1. ஜனாதிபதி தலைமையில் உயர்குழுவொன்று அமைக்கப்படும். இக்குழுவில் பிரதம மந்திரி, அமைச்சர்கள், தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணியின் தலைவர்கள் ஆகியோர் அங்கம் வகிப்பர். சமாதானத் தீர்வொன்றைக் காண்பதற்குத் தடையாக இருக்கும் அனைத்துக் காரணிகள் பற்றியும் இந்தக் குழு கலந்துரையாடும். 2.நாடு முழுவதிலும் இடம்பெறும் வன்முறைகளைத் தவிர்ப்பதற்கு அனைத்து அரசியல்க் கட்சிகளும் ஒருங்கிணைந்து தமது பங்களிப்பினை வழங்குவதற்கு ஊக்குவிக்கப்படுவார்கள். 3. மேலும், மாவட்ட அபிவிருத்திச் சபைகளின் திறமையான செயற்பாட்டிற்கு தேவையான உதவியும் வழங்கப்படும். இப்படிக்கு, ஜே ஆர் ஜெயவர்த்தன, இலங்கையின் ஜனாதிபதி 31/08/1981 தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணியினரால் இக்குழுவின் முன்னால் வைக்கப்பட்ட நான்கு அம்சக் கோரிக்கையினைப் பற்றிக் கலந்தாலோசிப்பதற்கு குழுவொன்றினை அமைக்கவிருப்பதாக நான்காம் கட்டப் பேச்சுவார்த்தைகள் நடைபெற்றுக்கொண்டிருந்த நாளான புரட்டாதி 13 ஆம் திகதி ஜெயார் ஒரு அறிவிப்பினை வழங்கினார். முன்னணியினரால் வைக்கப்பட்ட நான்கு அம்சக் கோரிக்கைகளாவன, 1. யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற வன்முறைகளில் ஈடுபட்ட பொலீஸ் உத்தியோகத்தர்கள் மீது நடவடிக்கை எடுத்தல். 2. பொலீஸ் வன்முறைகளினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு இழப்பீடுகளை வழங்குதல். 3. வடக்குக் கிழக்கு மாகாணங்களில் பணிபுரியும் தமிழ்பேசும் பொலீஸ் அதிகாரிகளின் எண்ணிக்கையினை அதிகரித்தல். 4. வன்முறைகள் மீள் இடம்பெறுவதைத் தடுக்க ஊர்காவல்படையினை உருவாக்குதல். இக்குழுழுவின் செயற்பாடுகள் திருப்திகரமாக நடைபெறுவதாக நம்பத் தொடங்கிய அமிர்தலிங்கம், ஊடகங்களிடம் பேசும்போது, "தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணி தனது பங்கிற்கு பாதித்தூரத்தைப் பயணிக்க விடும்புகிறது" என்று கூறியதுடன், யாழ்ப்பாண நூலகத்தை எரித்தமைக்கு தமது எதிர்ப்பினை வெளிப்படுத்தும் முகமாக 3 மாதங்கள் பாராளுமன்றத்தைப் பகிஷ்கரிப்பது எனும் தனது முடிவையும் மாற்றிக்கொண்டுள்ளதாகவும் கூறினார். மொஹம்மட் ஹனீபா மொஹம்மட்2 points- பிரபாகரன் - மூத்த செய்தியாளர் திரு த.சபாரட்ணம் எழுதிய தலைவரின் வாழ்க்கைச் சரித்திரம் - சங்கம் இணையம்
பிரபாகரன் - மூத்த செய்தியாளர் திரு த.சபாரட்ணம் எழுதிய தலைவரின் வாழ்க்கைச் சரித்திரம் - சங்கம் இணையம்
2 pointsஇராணுவத்தின் மீதான முதலாவது தாக்குதல் சீலனின் சரித்திரம் சீலன் தலைமையில் புலிகள் இராணுவத்தின் மீது தாக்குதல் நடத்தியிருக்கிறார்கள் என்கிற செய்தி யாழ் பல்கலைக் கழகத்திற்குள் பரவியபோது "புலிகள் எல்லையைக் கடந்துவிட்டார்கள்" என்று தான் நினைத்ததாக பேராசிரியர் கைலாசபதி நினைவுகூர்ந்தார். அதுவரையில், பொலீஸார் மீதும், காட்டிக்கொடுப்பவர்கள் மீதும், அரசுடன் சேர்ந்து தமிழினத்திற்கெதிராக இயங்குவோர் மீதும் மட்டுமே தமது தாக்குதல்களை புலிகள் மட்டுப்படுத்தியிருந்தார்கள். இரு ராணுவ வீரர்களைக் கொன்று, அவர்களின் ஆயுதங்களைக் கைப்பற்றிய நிகழ்வே இராணுவம் மீது புலிகள் நிகழ்த்திய முதலாவது தாக்குதலாகும். இலங்கை ராணுவத்தின் முதலாவது ராணுவத் தளபதியாக திஸ்ஸ வீரதுங்கவை பதவியில் அமர்த்தும் உத்தியோக பூர்வ நிகழ்வு கொழும்பில் இடம்பெற்றுக்கொண்டிருந்த நாளை புலிகள் இராணுவம் மீதான தமது முதலாவது தாக்குதலுக்குத் தெரிவுசெய்தார்கள். 1981 ஆம் ஆண்டு ஐப்பசி மாதம் 15 ஆம் திகதி இந்தத் தாக்குதல் இடம்பெற்றது. திஸ்ஸ வீரதுங்க இராணுவத் தளபதியாக பதவியேற்றப்பட்டு, அவரது நிலையும் லெப்டிணன்ட் ஜெனரல் எனும் நிலைக்கு உயர்த்தப்பட்டது. 1979 ஆம் ஆண்டின் இரண்டாவது பகுதியில் ஜெயாரினால் யாழ்ப்பாணத்திற்கு அனுப்பப்பட்ட திஸ்ஸ வீரதுங்க யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற பாரிய சித்திரவதைகள், கொலைகள் காணாமற்போதல்கள் என்பவற்றிற்குக் காரணமாக இருந்தவர். புலிகளின் தாக்குதல் சீலன் தலைமையில் நடைபெற்றது. அவ்வருடம், ஆனி மாதத்தில் பிரபாகரனுடன் கூடவே தமிழ்நாட்டிற்குச் சென்றிருந்த சீலன், இராணுவத்தின்மீது தாக்குதல்களை நடத்துவதற்கென்று யாழ்ப்பாணம் திரும்பியிருந்தார். ஆனைக்கோட்டை பொலீஸ் நிலையத்தின் மீதான தமது தாக்குதலின் மூலம் புலிகள் பற்றிய மதிப்பினை மக்கள் மத்தியிலிருந்து குறைத்துவிடலாம் என்று புளொட் அமைப்பினர் எண்ணியிருந்தனர். ஆனால், பிரபாகரன் அதனை அனுமதிக்க விரும்பவில்லை. ஆகவே, ஆனைக்கோட்டைத் தாக்குதலைக் காட்டிலும் துணிகரமான நடவடிக்கை ஒன்றினைச் செய்யவேண்டும் என்று பிரபாகரன் திட்டமிட்டார். ஆகவேதான், தமிழர்களால் பெரிதும் வெறுக்கப்பட்ட கொடூரமான ராணுவத்தளபதி திஸ்ஸ வீரதுங்க பதவியேற்கும் நாளில் ராணுவத்தின்மீது தாக்குதலை நடத்த அவர் திட்டமிட்டார். இத்தாக்குதலுக்குப் பிரபாகரன் தேர்ந்தெடுத்தது , திருகோணமலை ஆலய வீதியைச் சேர்ந்த, உயர்ந்த ஆணழகனான் சீலனைத்தான் என்பது குறிப்பிடத் தக்கது. சீலனுடன் பிரபாகரன் சார்ள்ஸ் லூக்காஸ் அந்தணி எனும் இயற்பெயருடைய சீலன் இயக்கத்திற்குப் புதியவர். இயக்கத்தில் சேர்ந்து இருவருடங்கள் கூட ஆகியிருக்கவில்லை. போராட்டத்தின் மீதான ஈடுபாடும், பிரபாகரனுக்கான விசுவாசமும் அவரை முக்கியமான இத்தாக்குதலுக்குத் தலைமை தாங்கும் நிலைக்கு உயர்த்தியிருந்தது. சீலன் ஒரு வறிய கத்தோலிக்கக் குடும்பத்தில் பிறந்தவர். குடிகாரரான தகப்பனார் குடும்பத்தின் பொறுப்புக்களை கைகழுவி விட்டிருந்த நிலையில், மருத்துவர் ஒருவரின் வீட்டில் உதவியாளராகப் பணிபுரிந்த சீலனின் தாயாரே வீட்டின் சுமைகளைத் தாங்கி வந்தார். படிப்பில் ஆர்வம் கொண்டிருந்தபோதும் சீலனும் அவரது சகோதரியும் பெரும்பாலான நாட்களில் தண்ணீரையே மதிய உணவாக பாடசாலை விட்டு வீடு திரும்போது அருந்திவந்தனர். இலங்கைக் கொடியினை எரித்தார் என்பதற்காக பொலீஸாரால் சீலன் ஒருமுறை கடுமையாகத் தக்கப்பட்டிருந்தார். தமிழ்நாட்டிலிருந்து நாடு திரும்பிய இரண்டு வருடங்களில் சீலன் இராணுவத்திற்கும், பொலீஸாருக்கும் சிம்ம சொப்பனமாகத் திகழ்ந்தார். சீலனின் போரிடும் ஆற்றல் கண்டு அவர்கள் பெரிதும் அஞ்சியிருந்தார்கள். ஆகவேதான், 1983 ஆம் ஆண்டு மீசாலையில் நடந்த மோதலில் கொல்லப்பட்டவர்களில் ஒருவர் சீலன் என்று அவர்கள் அறிந்தபோது அவர்களின் மகிழ்ச்சிக்கு அளவேயிருக்கவில்லை. யாழ் குருநகர் முகாமில் நிலைகொண்டிருந்த இராணுவத்தினர் சீலனின் மரணத்தை களியாட்ட நிகழ்வொன்றை ஒழுங்குசெய்து கொண்டாடி மகிந்தனர். பிரபாகரனோடு தமிழ்நாட்டிற்குத் தப்பிச் செல்லுமுன் நீர்வேலி வங்கிக்கொள்ளையில் சீலனும் ஈடுபட்டிருந்தார். ராணுவ வாகனங்களின் நடமாட்டத்தை அவர் தொடர்ச்சியாகக் கண்காணித்து வந்தார். இந்த ராணுவ வாகனங்களின் வாடிக்கையான பயணிக்கும் தெருக்கள், நேரங்கள், அவை பயணிக்கும் ஒழுங்கு ஆகியவற்றை அவர் தொடர்ச்சியாக அவதானித்து வந்தார். அதன்படி, ஒவ்வொருநாள் காலையிலும் பலாலியிலிருந்து கிளம்பும் ராணுவத்தின் பொறியியல்ப் பிரிவிற்குச் சொந்தமான ஜீப் வண்டியொன்று யாழ்ப்பாணத்திற்குச் சென்று கட்டடப் பொருடக்ளைக் கொள்வனவு செய்துகொண்டு திரும்புவதை சீலன் அவதானித்தார். இந்த ஜீப் வண்டி யாழ்ப்பாணத்தில் அமைந்திருந்த கட்டடப் பொருட்கள் கூட்டுத்தாபனத்திலேயே தனக்குத் தேவையான பொருட்களைக் கொள்வனவு செய்யத் தரித்து நிற்கும். காங்கேசந்துறை வீதியில் அமைந்திருந்த இந்த அரச கட்டடப்பொருட்கள் கூட்டுத்தாபனத்தில் வழமைபோல தமக்குத் தேவையானவற்றைக் கொள்வனவு செய்வதற்கு ஐப்பசி காலை 10:30 மணிக்கு அந்த ஜீப் வந்தது. ராணுவத்தின் கொள்வனவு அதிகாரியான சார்ஜண்ட் தனது மெய்ப்பாதுகாவலரான லான்ஸ் கோப்ரல் ஹேவாவசத்துடன் கடைக்குள் சென்றுவிட, ராணுவச் சாரதி ஜீப் வண்டியிலேயே தலையை வாகனத்தில் திசைமாற்றியின் மேல் சாய்த்துக்கொண்டு இளைப்பாறிக் கொண்டிருந்தார். வாகனத்திலிருந்த இன்னொரு ராணுவ வீரரான திஸ்ஸேரா வாகனத்தை விட்டிறங்கி அதன் பின்புறத்தில் நின்றுகொண்டிருந்தார். அவருடைய 0.303 ரைபிள் வண்டிக்குள் கிடந்தது. இந்தத் தருணத்தையே எதிர்பார்த்துக் காத்திருந்தார் சீலன். சீலனும் அவரது மூன்று தோழர்களும் ஜீப்பின் பின்புறம் நோக்கிச் சைக்கிளில் வந்துகொண்டிருந்தனர். அவர்களது சைக்கிள்கள் ஜீப் வண்டியை அண்மித்ததும், திடீரென்று சைக்கிள்களிலிருந்து குதித்த சீலனும் இன்னொரு தோழரும் அவ்விடத்தில் நின்ற ராணுவ வீரகளான திஸ்ஸேரா மற்றும் ஹேவாவசம் ஆகியோரை மிக அருகிலிருந்து சுட்டுக் கொன்றனர். பின்னர் ஜீப் வண்டியிலிருந்த ஆயுதங்களைக் கைப்பற்றிக்கொண்டு அங்கிருந்து சைக்கிள்களில் தப்பிச் சென்றனர். சிங்கள இராணுவத்தினரும், பொலீஸாரும் தம்மீதான தாக்குதல்களுக்கு எவ்வகையான பழிவாங்கும் நடவடிக்கைகளில் இறங்குவார்கள் என்பதை அனுபவத்தின்மூலம் நன்கு அறிந்துகொண்டிருந்த யாழ்ப்பாணத்து வர்த்தகர்கள், அன்றைய தாக்குதல் குறித்த செய்தி பரவியதும், உடனடியாகக் கடைகளைப் பூட்டிக்கொண்டு அங்கிருந்து மறைந்துவிட்டார்கள். அனைத்துப் போக்குவரத்துக்களும் முற்றாக நிறுத்தப்பட்டதோடு, நகரமே வெறிச்சோடிக் காணப்பட்டது. ஆனால், இவை எதுவுமே இராணுவத்தினர் தமது பழிவாங்கும் நடவடிக்கைகளைக் கட்டவிழ்த்துவிடுவதைத் தடுக்கவில்லை. கடைகள் கொள்ளையடிக்கப்பட்டு எரியூட்டப்பட்டன. அருகிலிருந்த வீடுகள் மீது இராணுவத்தால் தாக்குதல் நடத்தப்பட்டதோடு கண்ணில்ப் பட்ட அப்பாவிகளை கண்மூடித்தனமாக இராணுவம் தாக்கியது. இத்தாக்குதல் அரசுக்குப் பெரிய தலையிடியாக மாறியது. மன உளைச்சலுக்கு ஆளான பொலீஸார் மீது மட்டுமே தமிழ்ப் போராளிகள் தாக்குதல் நடத்துவார்கள் என்று அதுவரை நம்பிவந்த அரசின் எண்ணத்தை இத்தாக்குதல் சிதறடித்திருந்தது. "அவர்கள் இப்போது ராணுவத்திமீதே கைவைக்கத் தொடங்கிவிட்டார்கள்" என்று அரச ஆதரவாளர்கள் பேசத் தொடங்கினர். இத்தாக்குதல் நடைபெற்று எட்டு நாட்களுக்குப் பின்னர் அரசிற்கு இன்னொரு அதிர்ச்சி காத்திருந்தது. புலிகளின் இத்தாக்குதலால் தாம் பிந்தள்ளப்பட்டுவிடக் கூடாது என்று எண்ணிய புளொட் அமைப்பு, ஐப்பசி 23 ஆம் திகதி கிளிநொச்சி மக்கள் வங்கியைக் கொள்ளையிட்டது. நன்கு திட்டமிடப்பட்ட இந்த வங்கிக்கொள்ளையில் ராணுவத்தின் கெமுணு படைப்பிரிவைச் சேர்ந்த கோப்ரல் விஜேவீர புளொட் அமைப்பினரால் கொல்லப்பட்டார். வங்கியின் முன்னால் அமைக்கப்பட்டிருந்த பெளத்த விகாரையின் காவலுக்கு நிறுத்தப்பட்டிருந்த இராணுவ அணியினால் வங்கிக் கொள்ளையினைத் தடுக்க முடியவில்லை. புளொட் அமைப்பினர் மீது ராணுவத்தினர் துப்பாக்கிப் பிரயோகம் செய்தபோதிலும், அவர்களால் 270 லட்சம் ரூபாய்கள் பெறுமதியான தங்க நகைகள் களவாடப்படுவதைத் தடுக்க முடியவில்லை. இந்தக் கொள்ளையின் பின்னர் மக்கள் வங்கி கிராமப்புற கிளைகளை மூடிவிட்டதுடன், பிரதான வங்கிகளின் அலுவலக நேரத்தினையும் குறைத்துக்கொண்டது. புளொட் கொடி கிளிநொச்சி வங்கிக் கொள்ளையே புளொட் அமைப்பினரால் நிகழ்த்தப்பட்ட இறுதியான நடவடிக்கையாகும். அதன்பின்னர் அந்த அமைப்பு கடுமையான பிரச்சினைகளுக்கு முகம்கொடுத்தது. 1982 ஆம் ஆண்டு, தை மாதம் 2 ஆம் திகதி அந்த அமைப்பின் உயிர்நாடியான சுந்தரம் என்பவர் சுட்டுக் கொல்லப்பட்டார். புலிகளையும், தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணியினரையும் கடுமையாக விமர்சித்து வந்த புளொட் அமைப்பின் இதழான "புதிய பாதை" பிரதிகளை யாழ்ப்பாணம் சித்ரா அச்சகத்தில் சரிபார்த்துக்கொண்டிருக்கும் போது அவர் சுடப்பட்டார். மார்க்ஸிசச் சிந்தனையுள்ள செயற்பாட்டாளராக விளங்கிய சுந்தரம், பிரபாகரனுடனான உமா மகேஸ்வரைன் பிணக்கின்போது, உமாவை ஆதரித்து அவருடன் சேர்ந்து வெளியேறியவர். பொலீஸ் விசாரணைகளின்போது, திறந்திருந்த அச்சகத்தின் யன்னலினூடாக சீலனே சுந்தரத்தைச் சுட்டுக்கொன்றதாகக் கூறப்பட்டது. இதனை சந்தர்ப்பவாத இலக்கு என்று ராணுவ பாஷையில் அழைப்பார்கள். ராணுவத்தின் கவச வாகனப் பிரிவின் சார்ஜண்ட் அப்புகாமி தனது குடும்பத்தை நகவிகாரைக்கு அழைத்துச் செல்ல விரும்பினார். ஆகவே, அவருக்கு ஒரு ஜீப் வண்டியும் காவலுக்கு ராணுவ வீரர்களும் வழங்கப்பட்டிருந்தது. குறிக்கட்டுவான் இறங்குதுறைக்கு ஜீப்வண்டியில் சென்ற அவர்கள் அங்கிருந்து படகின்மூலம் நாகவிகாரைக்குச் சென்றனர். ஜீப்பினை ஓட்டிச் சென்ற ராணுவச் சாரதி, படகுதுறையின் அருகிலிருந்த தேநீர்க் கடையின் முன்னால் வாகனத்தை நிறுத்திவிட்டு, அதன் திசைமாற்றியில் தலையைச் சாய்த்து இளைப்பாறிக்கொண்டிருந்தார். காவலுக்கு அனுப்பப்பட்ட இரு ராணுவ வீரர்களும், தமது ஆயுதங்களை வண்டியினுள் வைத்துவிட்டு, சற்றுத் தூரத்தில் நின்று அலவலாவிக்கொண்டு நின்றனர். காந்தனும் அவரது அணியும் அவ்விடத்தில் தற்செயலாக வந்தபோது, ராணுவத்தின்மீது தாக்குதல் நடத்தைக் கிடைத்த சந்தர்ப்பத்தைப் பாவிக்க எண்ணினர். ஆகவே, சாரதியைச் சுட்டுக் கொன்றுவிட்டு வாகனத்திற்குள்ளிருந்த ஆயுதங்களை எடுத்துக்கொண்டு தலைமறைவாயினர். கைப்பற்றப்பட்ட ஆயுதங்களில் தானியங்கி நிரப்பும் துப்பாக்கிகள் இரண்டும், ஒரு உப இயந்திரத் துப்பாக்கியும் அவற்றுக்கான ரவைகளும் அடக்கம். தாக்குதல் நடப்பதை சற்றுத் தொலைவில் நின்று அவதானித்த இரு ராணுவ வீரர்களும் நீர் ஏரிக்குள் பாய்ந்து மறுகரை நோக்கி நீந்தித் தப்பித்துக்கொண்டனர். கிளிநொச்சி வங்கிக்கொள்ளையினை அடுத்து, ராணுவத்தினரும், பொலீஸாரும் தமது தேடுதல் நடவடிக்கைகளை கிளிநொச்சி, வவுனியா மாவட்டங்களுக்கு விரிவுபடுத்தியிருந்தனர். இதனைத் தொடர்ந்து காந்தீயம் பண்ணைகளும் தேடுதல் வேட்டைகளுக்கு இலக்காகின. 1982 ஆம் ஆண்டு தை மாத இறுதியில் புளொட் அமைப்பைச் சேர்ந்த சிவம், மரியநாயகம், ஞானசேகரம், டிரக்டர் சிறி, பாங்கர், கணேசலிங்கம், ரொபேர்ட், பாரூக், உதயகுமார் ஆகியோர் பொலீஸாரின் தேடுதல் நடவடிக்கைகளில் கைதுசெய்யப்பட்டனர். ஆனால், இக்கைதுகள் புளொட் அமைப்பினை பெரிதாகப் பாதிக்கவில்லை. 1982 ஆம் ஆண்டு மாசி மாதம் 13 ஆம் திகதி, காந்தன் தலைமையில் சென்ற புளொட் அமைப்பினர் புங்குடுதீவில் அமைந்திருந்த குறிக்கட்டுவான் படகுத்துறையில் ராணுவத்தின் கவசப்படைப்பிரிவின் சார்ஜண்ட் அபெயரட்ண பண்டாவைச் சுட்டுக் கொன்றனர். ராணுவத்தினரிடமிருந்தும், பொலீஸாரிடமிருந்தும் தமது அமைப்பு மீது மேற்கொள்ளப்பட்டுவந்த அழுத்தத்தினைச் சமாளிக்கமுடியாது தள்ளாடிய உமா மகேஸ்வரன், கண்ணன் (சோமசுந்தரம் ஜோதீஸ்வரன்), காக்கா (துரைராஜா சிவனேஸ்வரன்), அன்டன் (சிவனாயகம் அன்பழகன்) மற்றும் தாசன் ஆகிய புளொட் முக்கியஸ்த்தர்கள் 1982 ஆம் ஆண்டு, மாசி மாதம் 25 ஆம் திகதி படகுமூலம் தமிழ்நாட்டிற்குத் தப்பிச் சென்றனர். ஏனையவர்களை தமிழ்நாட்டுக் கரையில் இறக்கிவிட்டு திரும்பிக்கொண்டிருந்த அன்டனை கடற்படையினர் கைதுசெய்தனர். விசாரணைகளின்போது, கிளிநொச்சி வங்கியிலிருந்து கொள்ளையடித்த நகைகள் கொண்ட இருபது பைகளுடன் உமா மகேஸ்வரன் தமிழ்நாட்டிற்குச் சென்றுவிட்டதாக அன்டன் கூறினார். மேலும், உமா மகேஸ்வரனும் ஏனையவர்களும் தம்முடன் உப இயந்திரத் துப்பாக்கி ஒன்றையும் மூன்று கைத்துப்பாக்கிகளையும் எடுத்துச் சென்றதாகவும் கூறப்பட்டது. உமா தப்பிச் சென்ற மூன்றாவது நாள் குருநகர் ராணுவ முகாமிலிருந்து கிளம்பிய ராணுவ அணியொன்று வவுனியாவில் இயங்கிவந்த உமாவின் மறைவிடம் ஒன்றைச் சுற்றிவளைத்துக்கொண்டது. தொடர்ந்து நடந்த துப்பாக்கிச் சமரில் புளொட் அமைப்பின் காந்தன் ராணுவத்தால் சுட்டுக் கொல்லப்பட்டார். இத்தாக்குதலின்போது குறிக்காட்டுவான் தாக்குதலில் காந்தனால் கைப்பற்றப்பட்ட இரு தானியங்கி குண்டேற்றும் துப்பாக்கிகளும் பெருமளவு ரவைகளும் ராணுவத்தால் கைப்பற்றப்பட்டன.2 points- பிரபாகரன் - மூத்த செய்தியாளர் திரு த.சபாரட்ணம் எழுதிய தலைவரின் வாழ்க்கைச் சரித்திரம் - சங்கம் இணையம்
பிரபாகரன் - மூத்த செய்தியாளர் திரு த.சபாரட்ணம் எழுதிய தலைவரின் வாழ்க்கைச் சரித்திரம் - சங்கம் இணையம்
2 pointsதேர்தலில் ஆள்மாறாட்டத்தில் ஈடுபட்ட ஜெயாரின் ஐக்கிய தேசியக் கட்சி யாழ்ப்பாணத்தில் பொலீஸாரால் எரிக்கப்பட்ட யோகேஸ்வரனின் வீடு அன்று பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டிருந்தது. அனைத்துத் வாக்குச் சாவடிகளுக்கும் பொலீஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டதுடன், வீதிச் சோதனைச் சாவடிகளும் பொலீஸாரால் அமைக்கப்பட்டிருந்தன. வீதி ரோந்துகளில் பொலீஸாருடன் இணைந்து இராணுவத்தினரும் பவனி வந்தனர். வாக்குப் பெட்டிகளும், சிங்கள தேர்தல் அதிகாரிகளும் இராணுவப் பாதுகாப்புடன் வாக்களிப்பு நிலையங்களுக்கு அழைத்துவரப்பட்டனர். வக்களிப்பு முடிவடையும்வரை வாக்களிப்பு நிலையங்களிலேயே பாதுகாப்பிற்கு நிறுத்தப்பட்ட இராணுவத்தினர், வாக்கெடுப்பு முடிந்தவுடன் அவற்றைப் பாதுகாப்பாக வாக்கு எண்ணப்படும் நிலையத்திற்கு எடுத்துச் சென்றனர். தேர்தல் விதிமுறைகளின்படி வாக்களிப்பு காலை 8 மணிக்கும் மாலை 4 மணிக்கும் இடையில் நடைபெறவேண்டும் என்றும், அனைத்து வாக்குப் பெட்டிகளும் வாக்குகள் எண்ணப்படும் நிலையத்திற்கு எடுத்துவரப்பட்டதன் பின்னரே வாக்கு எண்ணும் நடவடிக்கை ஆரம்பமாகும் என்பதும் குறிப்பிடத் தக்கது. யாழ்ப்பாண வாக்குச் சாவடிக்குப் பொறுப்பாகவிருந்த சரத் முனசிங்க கூறும்போது, "நாங்கள் அதிகாலையே வாக்களிப்பு நிலையத்திற்குச் சென்றுவிட்டோம். ஆனால், காலை 10 மணிக்குப் பின்னரே வாக்குப் பெட்டிகளைத் தாங்கிவந்த பஸ்கள் வக்களிப்பு நிலையங்களை வந்தடைந்தன. மாலை 6 மணியளவில் நாம் வாக்குப்பெட்டிகளை எடுத்துச் சென்ற பஸ்களுக்குப் பாதுகாப்பு வழங்கினோம்" என்றார். தேர்தல் நாளன்றும் பொலீஸார் மூன்று தலைவர்களைத் தடுத்து வைத்தனர். அவர்கள் சாவகச்சேரி பாராளுமன்ற உறுப்பினர் வி.என்.நவரட்ணம், மானிப்பாய் பாராளுமன்ற உறுப்பினர் வி.தர்மலிங்கம், நல்லூர் பாராளுமன்ற உறுப்பினரும் தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணியின் தலைவருமான எம்.சிவசிதம்பரமும் ஆகும். தேர்தல் அதிகாரிகளின்படி, வக்களிப்பு நிலையங்களில் குழப்பமான சூழ்நிலையும், வாக்குவாதங்களும், ஒருவரையொருவர் தூற்றும் நிகழ்வுகளும் இடம்பெற்றதாகக் கூறினர். தேர்தல் முடிந்த கையோடு சிங்கள தேர்தல் அதிகாரிகள் உடனடியாக தெற்கிற்குப் பாதுகாப்பாக அனுப்பி வைக்கப்பட்டனர். வாக்குகளை எண்ணும் நிலையத்தில் பாரிய குழப்பங்கள் ஏற்பட்டிருந்தன. சில வாக்குப் பெட்டிகள் கணக்கெடுக்கும் நிலையத்திற்கு வராததால் அங்கே குழப்பம் நிலவியது. அனைத்து வாக்குப் பெட்டிகளும் வராமல் கணக்கெடுப்பை ஆரம்பிக்க முடியாது என்று தேர்தல் அதிகாரி துரைசாமி மறுத்துவிட்டார். இதனால் கொதிப்படைந்த அமைச்சர் சிறில் மத்தியூ துரைசாமியைப் பார்த்து கோபத்துடன் கத்தினார். சிங்கள அதிகாரியான பியசேகர அரச தலைமை சட்ட அதிகாரியுடன் தொடர்புகொண்டு நிலைமையினை விளக்கினார். அதற்குப் பதிலளித்த சட்ட அதிகாரி, தேர்தலினை இரத்துச் செய்யும் அதிகாரம் தனக்குக் கிடையாது என்றும், அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் மற்றும் சுயேற்சைக் குழுக்களின் பிரதிநிதிகள் முன்னிலையில் தேர்தல் அதிகாரியான துரைசாமி வாக்குகளை எண்ணமுடியும் என்றும் கூறினார். யோகேந்திர துரைசாமி யாழ்ப்பாணத்தில் நடந்த தேர்தல் குறித்து தேர்தல் திணைக்களத்திற்கு தனது அறிக்கையை அனுப்பிய துரைசாமி பின்வருமாறு குறிப்பிட்டிருந்தார், சில வாக்குப் பெட்டிகள் தாமதமாகவே வாக்குகளை எண்ணும் நிலையத்தை வந்தடைந்தன. தேர்தல்க் கடமைகளில் ஈடுபட்ட பெருமளவு சிங்கள அதிகாரிகளுக்கு ஒவ்வொரு வாக்குச் சாவடியிலும் இடப்பட்ட வாக்குகளின் மொத்த எண்ணிக்கை பற்றி தேர்தலில் பங்கெடுத்த அரசியல்க் கட்சிகள், சுயேற்சைக் குழுக்களின் பிரதிநிதிகளுக்கு எழுத்துமூல அறிக்கையொன்ம்றினைச் சமர்ப்பிக்கவேண்டும் என்கிற அடிப்படை தெளிவு கூட இருக்கவில்லை. இத்தேர்தல் சரியான முறையில் நடத்தப்படவில்லை. ஆனால், தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணியோ இதுபற்றி அதிகம் அலட்டிக்கொள்ளவில்லை. ஏனென்றால், ஐக்கிய தேசியக் கட்சியின் வன்முறைகளும், சதிகளுமே தேர்தல் குழப்பமான முறையில் நடைபெறுவதற்குக் காரணமாகின என்பது வெளிப்படையாகவே தெரிந்தது. ஐக்கிய தேசியக் கட்சி பெற்றுக்கொண்ட வெறும் 23,302 வாக்குகளுக்குப் பதிலாக தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணி 263,369 வாக்குகளைப் பெற்றிருந்தது. ஜெயாரினால் யாழ்ப்பாணத்தில் ஒரு ஆசனத்தைத் தன்னும் கைப்பற்ற் முடியாது போய்விட்டது. அதேவேளை தமிழ்க் காங்கிரஸின் நிலைமை மிகவும் பரிதாபகரமானதாகக் காணப்பட்டது. அதற்குக் கிடைத்த வாக்குகளின் எண்ணிக்கை 21,369 மட்டுமே. ஐக்கிய தேசியக் கட்சிக்குக் கிடைத்த வாக்குகளில் பெரும்பான்மையானவை ஆள்மாறாட்டம் மூலமும், பொலீஸாரும் ராணுவத்தினரும் வாக்குப் பெட்டிகளை கள்ள வாக்குகளைக் கொண்டு நிரப்பியதாலும் பெறப்பட்டவை. ஒரு வாக்குப் பெட்டியில் 59 வாக்கட்டைகள் காணப்பட்டன. அவை அனைத்துமே ஐக்கிய தேசியக் கட்சிக்கு இடப்பட்டிருந்ததோடு, சேர்த்து ஒன்றாகக் கட்டப்பட்டும் இருந்தன. தேர்தலில் அரசு முறைகேடுகளில் ஈடுபட்டதனால் அதிருப்தியடைந்த தேர்தல் அதிகாரி பியசேகர, தனது அதிருப்தியைக் காண்பிக்க பதவியிலிருந்து இராஜினாமாச் செய்வதாக ஜெயாருக்கு அறிவித்தார். அவரது இராஜினாமாவை ஏற்றுக்கொண்ட ஜெயார், அவரை அமைதியாக வைத்திருப்பதற்காக ரோமிலிருக்கும் இலங்கை உயர்ஸ்த்தானிகராலயத்திற்கு தூதுவராக நியமனம் செய்து அனுப்பிவைத்தார். மாவட்ட அபிவிருத்திச் சபைகள் மூலம் தமிழர்கள் இன்னமும் வன்முறையற்ற, மிதவாத அரசியல் கட்சியான தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணிக்கு ஆதரவாக இருக்கிறார்கள் என்பது வெளிப்படுத்தப்பட்டது. போராளிகளின் அரச படைகள் மீதான தாக்குதல்களை வரவேற்றும், அவர்களின் அர்ப்பணிப்பின் மீதும், அசாத்திய துணிச்சல் மீதும் பெருமரியாதை வைத்திருந்தபோதும், அவர்கள் மீது தமது அரசியல் எதிர்காலத்தைக் கையளிக்கும் நிலைமைக்கு தமிழர்கள் இதுவரை வரவில்லையென்பதையே இந்தத் தேர்தல் முடிவுகள் காட்டின. இந்த சிறிய புரிதலைக் கூட மாவட்ட அபிவிருத்திச் சபைத் தேர்தல்களின் முடிவுகளின்மூலம் ஜெயார் புரிந்துகொள்ளத் தவறினார். அமிர்தலிங்கமும், தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணியும் ஜெயாருடன் சேர்ந்து இயங்குவதற்கு ஆயத்தமாகியதுடன், மாவட்ட அபிவிருத்திச் சபைகளுக்கான பதவிகளையும் ஏற்றுக்கொள்ளத் தயாராயினர். அரச நிர்வாகத்துறையில் பரீட்சயமும், அனுபவமும், திறமையும் மிகுந்த தமிழர்களை தமது கட்டுப்பாட்டின் கீழிருந்த மாவட்ட அபிவிருத்திச் சபைகளை நடத்துவதற்கு தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணி தேர்வு செய்திருந்தது. முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரான சுப்பிரமணியம் நடராஜா யாழ்ப்பாண மாவட்ட அபிவிருத்திச் சபையின் தலைவராகத் தேர்வுசெய்யப்பட்டார்.2 points- கொட்டும் பனிக்குள் 2023 புதுவருடம்.
கடந்த மார்கழியில் மகள் குடும்பத்தை பார்க்க சன்பிரான்சிஸ்கோ போயிருந்தோம். வழமையை விட கூடுதலான மழையாக இருந்தது.கலிபோர்ணியா மழை இல்லாமல் தண்ணீர் இல்லாமல் அழியப் போகுது என்று தொலைக்காட்சி பத்திரிகை செய்திகள் பல மாதங்களாக சொல்லிக் கொண்டிருந்தார்கள். இங்கு கூடுதல் மழை பெய்தால் மண்சரிவு ஏற்பட்டு அதனால் உயிர்ச் சேதம் பொருள் சேதம் என்று பல அழிவுகளை சந்திக்க வேண்டும். கலிபோர்ணியாவின் புவியியல் அமைப்பே சற்று வித்தியாசமானது.சமசீரான நிலங்களைக் காண்பது மிகவும் அரிது.மலைப் பிரதேசங்களை கூடுதலாக உள்ளடக்கியதே இந்த மாநிலம். இந்த புது வருடத்துக்கு பனிமலையில் சறுக்கி விளையாடப் போகிறோம் என்று மகள் சொன்னா.மகளும் கணவரும் ஒவ்வொரு வருடமும் பனியில் சறுக்கி விளையாட போவார்கள்.நீங்களும் சறுக்கி விளையாட போறீங்களோ என்று எம்மையும் கேட்டா.வேண்டாம் வேண்டாம் நாங்கள் பிள்ளைகளை பார்க்கிறோம் நீங்கள் விளையாடிப் போட்டு வாங்கோ என்று மறுத்துவிட்டோம். அவர்கள் வருடாவருடம் Tahoe என்ற இடத்துக்கு பனியில் சறுக்கி விளையாட போவதால் அதற்கேற்ற உடுப்புகள்,தண்ணீர் போகாத சப்பாத்து ,கையுறை என்று எல்லாமே வைத்திருக்கிறார்கள்.இப்போ நாங்களும் சேர்ந்து கொண்டபடியால் எங்களுக்கும் குளிருக்கு உடைகளும் தண்ணீர் போகாத கையுறையும் வாங்கினார்கள்.பின் விபரீதம் தெரியாமல் சப்பாத்தை ஏன் வீண்காசு என்று மறுத்துவிட்டேன். இந்த உடுப்பு பார்வைக்கு சாதாரணமாக இருந்தாலும் மிகவும் பாரமானதும் தடிப்பம் கூடியதும் ஆகும்.எவ்வளவு குளிரிலும் நம்பி போட்டுக் கொண்டு போகலாம். மூன்று நாள் கொட்டாட்டம் என்று புதுவருடத்துக்கு முதல்முதல் நாள் பெட்டி படுக்கைகளுடன் ஏற்கனவே பதிவு செய்த கொட்டேலை நோக்கி பயணம் தொடங்கினோம்.மகளும் கணவரும் சகலதையும் பொறுப்பெடுத்து செய்ததால் நான் எங்கு போகிறோம் காலநிலை என்ன எதுவுமே பார்க்கவில்லை.வழமையில் இப்படியான பயணங்கள் என்றால் அதுவும் குழந்தைகளுடன் போவதென்றால் போகிற வழியில் இருந்து நாங்கள் போய் நின்று திரும்ப வரும்வரை காலநிலை பாதுகாப்பு எங்கெங்கே வாகனத்துக்கு எரிபொருள் நிரப்ப வேண்டும் என்று அட்டவணையே போட்டுவிடுவேன். இந்த தடவை அப்படி எதுவும் செய்யாததன் விளைவை பின்னர் அனுபவிக்க நேரும்போது தான் உணர்ந்தேன். பனி பொழியும்.1 point- இலங்கையில் ஆறு மாதங்கள்
1 pointஇலங்கையில் ஆறு மாதங்கள் நீண்ட நாட்களாகவே எம்மூரில் சென்று வாழவேண்டும் என்ற ஆசை என்னை அலைக்கழித்தபடியே இருந்ததுதான். அதிலும் ஆறு மாதங்களாவது நின்மதியாய் கணவர் பிள்ளைகளின் தொல்லைகள் இன்றி நினைத்த நேரத்தில் தூங்கி எழுந்து, நினைத்ததை உண்டு மகிழ்ந்து, நினைத்த இடங்களுக்குப் போய்வந்து இப்படி இன்னும் சின்னச் சின்ன ஆசைகளை எல்லாம் செய்து முடிக்க வேண்டும் என்ற என் எண்ணத்தை கனடாவில் இருக்கும் என் நண்பியுடன் கதைத்துக்கொண்டிருந்தேன். அடியே நல்ல யோசனை எனக்கும் உப்படித் திரியவேண்டும் என்று ஆசை இருக்கடி. நானும் நீயும் சேர்ந்து போவோமாடி என்றாள். இந்தியா சென்று ஒரு மாதமாவது எல்லா இடங்ககளையும் சுற்றிப் பார்த்துவிட்டு இலங்கை வந்து அங்கு ஒரு மாதம் நின்றபின் அங்கிருந்து ஒஸ்ரேலியா சென்று இரண்டு மூன்று வாரங்கள் அங்கு பார்த்தபின் மீண்டும் இலங்கை வந்து நின்றுவிட்டு திரும்புவதே திட்டம் என்றேன். எனக்கு இந்தியா செல்வதில் விருப்பம் இல்லை என்றவளை நீ முன்னர் அங்கு சென்றுள்ளீரா என்று கேட்க இல்லை என்றாள். நீர் ஒருமுறை சென்றால் மீண்டும் போக ஆசைப்படுவீர் என்று கூறி இந்தியாவில் எந்த இடங்களுக்குப் போகலாம் என்று அவளுக்குக் கூறினேன். நான் விபரித்ததைக் கேட்டபின் அவளுக்கும் ஆசை வந்ததோ என்னவோ சரி உமக்காக வாறன் என்றாள். எனக்கோ மட்டற்ற மகிழ்ச்சி ஒருபுறமாயினும் இவளே எனக்கு இடைஞ்சலாய் வந்திடுவாளோ என்னும் யோசனையும் ஓடிக்கொண்டிருந்தது. அவளை நான் ஒரேயொரு தடவைதான் சந்தித்திருந்தேன். தொலைபேசியில் என்னதான் கதைத்தாலும் அவர்களோடு கூட இருக்கும்போதுதான் அவர்களது குணம் முழுவதுமாகத் தெரியவரும் என்பதும், என் நினைத்ததைச் செய்து முடிக்கும் குணமும் அவளுக்கும் எனக்குமான நட்பில் விரிசலை ஏற்படுத்துமா என்னும் யோசனையையும் தந்தது. இந்தியாவைப் பொறுத்தவரை தங்கு விடுதிகளில் தங்கும்போது சுத்தமான நல்ல விடுதிகளிலேயே தங்கவேண்டி இருக்கும். பணமும் அதற்கேற்ப அதிகமாகவும் இருக்கும். தூர இடங்களுக்குச் செல்லும்போது பொது வாகனங்களில் செல்வது எமக்குச் சரிவாராது. அதற்கும் பாதுகாப்பான வாகனங்களில் செல்வதாயின் அதிக செலவாகும். இதற்கெல்லாம் அவளால் ஈடுகட்டமுடியுமா என்னும் யோசனையும் ஓடியது. சரி உனக்குத் துணையாக அவள் வருகிறாள் தானே. அதுவே பெரிய விடயம். அதனால் பணத்தைப் பற்றி யோசிக்காதே என்றது மனம். இலங்கையில் எனக்கு வசிப்பதற்கு எனது சிறியதாயார் வசிக்கும் என் கனடாத் தங்கையின் வீட்டில் மலசலக்கூட வசதியுடன் ஒரு அறை உண்டு. அந்த அறையுள் 120 - 200 அளவுள்ள கட்டிலும் உண்டு. நானும் கணவரும் சென்றாலோ அல்லது உறவினர்கள் சென்றாலோ இருவர் மட்டும் அங்கு தங்கலாம். அதாவது கணவன் மனைவி ஒட்டி உரசிக்கொண்டு சகித்துக்கொண்டு படுத்தாலும் தனியாக அக்கட்டிலில் படுப்பதுதான் சுகமானது என்பதும் ஒரு நண்பியுடன் அக்கட்டிலைப் பகிரவே முடியாது என்றும் என் மனம் கூற, அவளுடன் கதைக்கும்போது அவளுக்கும் இதைக் கூறினேன். ஒரே ஒரு அறை தான் உங்கள் வீட்டில் இருக்கா? வேறு அறைகளே இல்லையா என்று குத்தலாகக் கேட்டாள் இன்னும் மூன்று அறைகள் இருந்தாலும் ஒரு அறையில் என் சிறிய தாயாரும் மிகுதி இரு அறைகளிலும் இவ்விரண்டு பேராக நான்கு இராமநாதன் அக்கடமியில் கற்கும் மாணவிகளும் இருக்கின்றனர் என்றேன். அப்ப நாங்கள் ஒரு வீட்டை வாடகைக்கு எடுத்து இருப்போம். செலவை இருவருமாகப் பங்கிட்டுக்கொள்வோம் என்றாள் அவள். அது ஒருவிதத்தில் நல்ல யோசனையாக இருந்தாலும் வாடகையே காட்டாமல் இருக்க வீடு இருக்கும்போது எனக்கு ஏன் வீண் செலவு என எண்ணியபடி நீர் உமது அம்மாவுடன் தங்கியிரும். ஒவ்வொருநாளும் வெளியே போகும்போது இருவரும் சேர்ந்து போவோம் என்றேன். உமக்கு என் அம்மாவைப் பற்றி சொன்னால் விளங்காது. நான் அவவிடம் சென்றால் அவதான் எனக்கு முழுப் பாதுகாப்பும் என நினைத்துக்கொண்டு எங்கை போறாய் ? ஆரோடை போறாய்? எத்தினை மணிக்கு வருவாய் என்று சின்னப்பிள்ளை போலவே நடத்துவா. அதுமட்டுமில்லை அயலட்டைக்கெல்லாம் அது இது என்று வாங்கிக் குடு என்று கரைச்சல் வேறை. அதுமட்டுமில்லை இல்லாத கடனெல்லாம் சொல்லி கண்ணீர் விட்டால் எனக்கு ஒண்டும் செய்ய ஏலாமல் போயிடும். அதனால அவவிட்டை நிக்கிறது சரிவாராது என்றாள். சரி யோசிப்பம் என்றுவிட்டு என கணவனின் சகோதரி வீட்டிலும் எல்லா வசதியும் உண்டு. சரி நான் அங்கு நின்றுகொண்டு இவளை எங்கள் வீட்டில் தங்கவைப்போம் என மனதுள் எண்ணிக்கொள்கிறேன். பேச்சு வாக்கில் கணவர் பிள்ளைகளிடம் கூறியபோது உங்களுக்கு விருப்பம் என்றால் போய் நின்றுவிட்டு வாருங்கள் எனப் பிள்ளைகளும்,” நீ போய் இரு. நாங்களும் கொஞ்சநாளைக்கு நின்மதியாய் இருப்பம்” என மனிசனும் கூற இத்தனை இலகுவாகச் சம்மதித்துவிட்டனரே என மகிழ்வும், நான் இல்லாமல் ஆறு மாதம் இருந்து பாருங்கோ. அப்ப தெரியும் என்அருமை என விசனமும் ஏற்பட்டது. அதன் பின் அங்கு போய் எங்கு எல்லாம் செல்வது, யாரை எல்லாம் சந்திப்பது என்று மனதுள் கூட்டிக் கழித்துப் பார்த்ததில் எல்லாமே சரியாக இருப்பதாய்ப் பட நின்மதியுடன் வேலைத் தலத்திலும் நான் ஆறுமாத காலம் அங்கு தங்கியிருப்பது பற்றி கூறத் தொடங்கினேன். நான் வேலை செய்வது எனது நண்பனின் தபாற் கந்தோரில் என்பதனால் அவருக்கும் பகிடிபகிடியாக விடயத்தைக் கூற அவரோ நம்பவில்லை. 2019 ம் ஆண்டு கோவிட் வந்தபோது மெசெஞ்சரில் ஒரு குழுவை உருவாக்கி அதில் “சமூக மீட்சிக்கான உலகளாவிய நண்பர்கள்” என்னும் குழுவை உருவாக்கி அதில் 143 பேர் அப்போது இணைந்திருந்தனர். அதனூடாக அனைவரின் பங்களிப்புடன் பலருக்கும் உணவுப் பொருட்கள் முதல் பல உதவிகளையும் செய்தபடி இருந்தார் சுப்பிரமணிய பிரபா என்னும் முகநூல் பெயருடைய ஒருவர். அவரை உங்களுக்கும் தெரிந்திருக்கலாம். அவரின் செயற்றிட்டம் எமக்குப் பிடித்திருந்தமையால் அவரின் திட்டப்படி ஒருங்கிணைந்த பண்ணை ஒன்றை கிளிநொச்சியில் உருவாக்கி பலருக்கும் வேலைவாய்ப்பைக் கொடுக்கலாம் என்னும் நல்லெண்ணத்தில் புலம்பெயர்ந்து வாழும் எனைப் போன்ற எட்டுப் பேரும் இலங்கையில் இருக்கும் இன்னொருவருமாக பத்துப்பேர் கொண்ட குழு இதில் இணைந்தோம். கடந்த மூன்று ஆண்டுகளாக ஒரேயொருவர் மட்டும் நாட்டுக்குச் சென்று வந்தாலும் பண்ணையை யாருமே சென்று பார்க்கவில்லை. பிரபா அனுப்பும் படங்களிலும் வீடியோவிலும் பண்ணை பரந்து விரிந்து செழிப்பாகக் காணப்பட்டது. நான் அதைப் போய் பார்க்கப்போகிறேன் என்பதும் எனக்கு மகிழ்வையும் ஒரு எதிர்பார்ப்பையும் தந்திருந்தது. ஆரையும் நம்பிக் காசைக் குடுத்திட்டு. உனக்கு வேறை வேலை இல்லை. நான் சொன்னால் கேட்கப் போகிறாயோ? என்ணெண்டாலும் செய்துகொள் என்று பலதடவை மனிசன் புறுபுறுத்தும் நான் கவலைப்படவே இல்லை. என கண்முன்னே பெரிதாய் விரிந்தது பண்ணை. ஒன்று1 point- தையல்கடை.
1 pointதையல்கடை. தச்சுக் கிழிக்கும் தையல்கள் .........(1). சுமதி சதயம் நட்ஷத்திரம் கும்பராசி...... அன்று லீவுநாளானபடியால் சுமதி வீட்டில் சின்ன சின்ன வேலைகள் செய்து கொண்டிருக்கிறாள்.எல்லாம் வளந்திட்டுதுகள் ஒரு வேலையும் செய்கிறதில்லை.பிள்ளைகளுக்கு திட்டும் நடக்குது.தொலைக்காட்சியில் செய்திகள் ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கு. சுமதி ஒரு பெரிய ஹோட்டலில் முப்பதுக்கு மேற்பட்ட தொழிலாளர்களுக்கு மேலாளராக பணிபரிகிறாள்.அவளுக்கு ஒரு வீட்டுக்காரரும் இரண்டு பிள்ளைகளும் ஒரு கணவனும் இருக்கிறார்கள். மூத்தவன் முகிலன் பதினெட்டு வயது அடுத்து வானதி பத்து வயது. அவர்கள் இப்போதும் வாடகை வீட்டில் இருப்பதால், இப்ப உங்களுக்கு புரிந்திருக்கும் அவளின் வீட்டுக்காரர் யார் என்று.......!கணவன் சுரேந்தரும் வீடுகள் விற்கும் வாங்கும் ஒரு ஏஜென்சியில் மேலாளராக இருக்கிறார். சுமதிக்கு நல்ல ஊதியமும் காரும் கொம்பனி கொடுத்திருக்கு. இவற்றைவிட அவளுக்கு நன்றாகத் தையல் வேலை தெரியும். அதனால் வீட்டில் ஒரு தனியறையில் தையல் மிசின் வைத்து அக்கம் பக்கம் தெரிந்தவர்கள், உறவினர்களுக்கெல்லாம் ஆடைகள் நவீன மாடல் ப்ளவுஸ்கள் தைத்து கொடுத்து உபரியாக சம்பாதிக்கிறாள். இதெல்லாம் இருந்தபோதிலும் அவளுக்கென்று ஒரு ஆசை இந்த "லா சப்பலில்" சொந்தமாக ஒரு தையல்கடை போடவேண்டும் என்று. அதற்குத் தோதாக சென்றவாரம்தான் எதேச்சயாக அவள் சேகரிடம் கட்டிய சீட்டு ஒன்று சீட்டு கேட்டு ஏற்றுகிற வல்லுநர்கள் வரத் தவறியதால் குறைந்த கழிவில் சுமதிக்கு கிடைத்திருக்கு. அந்தப் பணம் இன்னும் சில நாட்களில் கைக்கு வந்து விடும்.என்ன ஒரு பிரச்சினை என்றால் அதை அப்படியே வங்கியிலும் போட முடியாது. நூற்றியெட்டு கேள்விகள் கேட்பாங்கள். இன்றைய நாளில் வீட்டில் வைத்திருப்பதும் பிரசினைதான்.கள்ளர்களுக்கும் உளவாளிகள் உண்டு.அவங்களும் நவீன தொழில் நுட்பத்துடன் கூடிய ஆயுதங்களைக் கொண்டுவந்து வெகு சுளுவாக பணம் நகைகள் மட்டும் எடுத்துக் கொண்டு போயிடுறாங்கள். பக்கத்தில ஐ போன் 14 இருந்தாலும் தொடுகிறதில்லை. வீடும் அலுங்காமல் குலுங்காமல் பூட்டியபடியே இருக்கும். ஆனால் சுமதிக்கு நகைகள் பற்றி பயமில்லை. அவையெல்லாம் வங்கிப் பெட்டியில் ஆழ்நிலைத் தியானத்தில் இருக்கின்றன. இவன் மூத்தவன் முகிலன் மட்டும் ஒரு பெட்டையாய் பிறந்திருந்தால் ஒரு சாமத்தியவீடு செய்து அதைக் காரணம் காட்டியாவது கொஞ்சப் பணத்தை வங்கிகளில் போட்டிருக்கலாம்.இப்போதைக்கு அதற்கும் வழியில்லை. அவனுக்கும் இப்ப பதினெட்டு வயதாகின்றது. ஒரு காதில் கடுக்கணும் போட்டுக்கொண்டு உரித்த சேவல் மாதிரி ஒரு மோட்டுச் சைக்கிளில் யுனிக்கு போய்வாறார். சுமதியின் கை பழக்கத்தில் வேலைகளை பர பர வென்று செய்ய மனம் தனக்குள் கணக்கு போட்டுக்கொண்டு இருக்கு. உடனே மூளைக்குள் பளிச் என ஒரு யோசனை, ஏன் நான் இந்தப் பணத்தைக் கொண்டு "லா சப்பலில்" ஒரு கடை போடக் கூடாது. நாலு தையல் மிசின் வாங்கிப் போட்டு மூன்று நாலு ஆட்களை சம்பளத்துக்கு வைத்துக்கொண்டு வியாபாரம் ஆரம்பிக்கலாம் தானே. மெலிதாகத் தோன்றிய எண்ணம் நேரம் செல்ல செல்ல விருட்ஷமாய் வளர்ந்து கொண்டிருக்கு. அப்போது செற்றியில் கிடந்த அவளது போன் ரிங்டோன் " ரஞ்சிதமே ரஞ்சிதமே " என்று அழைக்கிறது. செய்த வேலையை அப்படியே போட்டு விட்டு அங்கு போகிறாள். கவிதாதான் அழைப்பு எடுத்திருந்தாள். ஓ .கவிதா எப்படி சுகம் என்று தொடங்கி அக்கம் பக்கம் மற்றும் நண்பர்கள் எல்லாரையும் அலசிக் கழுவிக் கொண்டிருக்கும் பொழுது தொலைகாட்சியில் ஒரு ஐயா அங்கவஸ்திரம் அணிந்து வீபூதி சந்தனம்,குங்குமம் எல்லாம் போட்டுக் கொண்டு இராசிபலன் சொல்லுகிறார்.அப்போது வீட்டின் அழைப்புமணி ஒலிக்கிறது. பொறடி கவிதா ஆரோ பெல் அடிக்கினம்,நான் பிறகு எடுக்கிறன். என்ர வீட்டுக்காரர்தான் வாறதெண்டவர் அவராய்த்தான் இருக்கும் என நினைத்துக்கொண்டு கதவைத் திறக்க அவர்தான் நிக்கிறார். பொறுங்கோ அங்கிள் கவர் எடுத்துக் கொண்டு வாறன் என்று சொல்லி உள்ளே சென்று செக் இருந்த கவரைக் கொண்டுவந்து அவரிடம் குடுத்து விட்டு அவர் சொன்ன "A " ஜோக்குக்கு சிரித்து கதைத்துக் கொண்டிருக்க.... இராசிபலனில், எதிலும் நிதானத்தை கடைபிடிக்கும் கும்பராசி அன்பர்களே ! உங்களுக்கு ஏழரை சனியின் கடைக்கூறு நடைபெறுவதால் மிச்சம் இருக்கும் இரண்டு வருடங்களும் நீங்கள் மிகக் கவனமாய் இருக்க வேண்டும். மேலும் இன்னும் இரு மாதங்களில் குருபகவான் ஆறாம் வீட்டில் மறைவதால் சனியும் உக்கிரேன் மாதிரி உக்கிரமாக உங்களை வாட்டும். பிரச்சினைகளும் எந்தப் பக்கம் என்றில்லாமல் ரஷ்ய ஏவுகணைகள் போல் அடுத்தடுத்து வந்து தாக்கும். அதனால் இப்ப இருக்கிற பணத்தை, சொத்துக்களை பாதுகாத்து வைத்திருந்தாலே போதுமானது.இரு வருடங்களுக்கு புதிதாய் முதலீடுகள் செய்வதை தவிர்த்தல் நல்லது.சதயம் நட்ஷத்திரத்தில் பிறந்த கும்பராசிக்காரர்களே உங்களின் கும்பம் ஓடிகிற அளவுக்கு சுமை இருப்பதால் எதிலும் கவனம் தேவை........தொடர்ந்து அடுத்து அழகிய கண்களையுடைய மீனராசி அன்பர்களே.........! அப்போது அந்த பலூன் ஜோக்குக்கு சிரித்தவாறு உள்ளே வந்த சுமதி அட கும்பராசிக்கு சொல்லி முடிஞ்சாச்சுது போல, ச் சா.... மிஸ் பண்ணிட்டன் என்று சொல்லியபடி செற்றியில் அமர்கிறாள். சற்று நேரத்தில் அவளது கணவன் சுரேந்தர் வேலையால் அலுத்துக் களைத்து வீட்டிற்குள் வருகிறார். இன்னும் தைப்பார்கள்........! 🥻1 point- பிரபாகரன் - மூத்த செய்தியாளர் திரு த.சபாரட்ணம் எழுதிய தலைவரின் வாழ்க்கைச் சரித்திரம் - சங்கம் இணையம்
பிரபாகரன் - மூத்த செய்தியாளர் திரு த.சபாரட்ணம் எழுதிய தலைவரின் வாழ்க்கைச் சரித்திரம் - சங்கம் இணையம்
1 pointஎங்கே போனாலும் தனித்துவம் கூடவே போகும்.1 point- பிரபாகரன் - மூத்த செய்தியாளர் திரு த.சபாரட்ணம் எழுதிய தலைவரின் வாழ்க்கைச் சரித்திரம் - சங்கம் இணையம்
பிரபாகரன் - மூத்த செய்தியாளர் திரு த.சபாரட்ணம் எழுதிய தலைவரின் வாழ்க்கைச் சரித்திரம் - சங்கம் இணையம்
1 pointஒரு காலத்தில் இலங்கையின் வலது சாரி அரசு(UNP) போல தற்போது இந்திய அரசு(BJP) இயங்குகிறது (சிறுபான்மையினரின் மீதான வன்முறையினை அரசியல் இலாபத்திற்காக தூண்டுவது).1 point- கொட்டும் பனிக்குள் 2023 புதுவருடம்.
1 point- கொட்டும் பனிக்குள் 2023 புதுவருடம்.
1 point- இலங்கையில் ஆறு மாதங்கள்
1 pointஉண்மைதான். மற்றைய தளங்களில் எழுதும்போது ஏதோ அந்நிய நாட்டுக்குப் போவது போல் ஓர் உணர்வு. யாழ் இணையத்தில் எழுதும்போதுதான் கருத்துக்களத்தினூடாக வரும் விமர்சனங்கள் எழுதும் எமக்கு மிகுந்த உற்சாகத்தையும் நிறைவையும் தருகின்றன குமாரசாமி. அது அத்தாருக்கு மட்டும் இல்லை உங்கள் எல்லாருக்கும் வரும்தான். ஆனா உணக்களுக்கு அந்தக் கொடுப்பினை இல்லை 😂1 point- இலங்கையில் ஆறு மாதங்கள்
1 pointஉண்மையில் யாழ்களம் தமிழ் படைப்பாளிகளுக்கு பெரியதொரு தளம். அதை சீராக பயன்படுத்த தெரியாமல் பலர் விலகியே நிற்கின்றனர். முகநூல் டிவிட்டர் போன்ற ஊடகங்கள் அன்றாடத்திற்கு உதவுமே தவிர படைப்புக்களுக்கு அல்ல.1 point- வெள்ளித் தேரோட்டி...
1 pointசிறுக ஓர் தேர் கட்டி ஊர் கூடி இழுக்க ஆசை வைச்சு.. தமிழ் தேசியம் சில்லாய் வைச்சு கருத்துக்கள் எனும் தடம் பதித்து ஆண்டுகள் 25 தானிழுக்க வெள்ளித் தேராய் ஓடுகிறது அதுவே யாழ் களம்..! களத்தின் நாயகனே மோகன் எனும் முதல்வரே தேரோட்டியாய் தாங்கள் என்றும் அமைய வேண்டும்...! விலகி நின்றாலும் நீங்கள் வழிநடத்த வெள்ளித் தேரது பொன்னாக வேண்டும் அதன் காலக் கண்ணாடியில்...! வம்புகள் தும்புகள் வந்தாலும் போனாலும் சம்பவங்கள் நொடி மறந்து கருத்தால் வேறுண்டாலும் தமிழால் இணைந்து நவீனத்துவம் உள்வாங்க தொடரட்டும் யாழ் எனும் வெள்ளித் தேர் இழுப்பு...!! இன்று போல் என்றும் ஊர்கூடி இழுக்கட்டும் பொழுதுகள் இனிதே பயனடைய.. மொழியும் மக்களும் தெளிவடைய...!! ஆக்கம்: நெ.போ (31-03-2023)1 point- சிரிக்கலாம் வாங்க
1 point1 point- கொட்டும் பனிக்குள் 2023 புதுவருடம்.
1 point- கொட்டும் பனிக்குள் 2023 புதுவருடம்.
1 point- இலங்கையில் ஆறு மாதங்கள்
1 pointம் தொடரிறன் 😀 அப்பா நீங்கள் உண்மையை எழுதுவதில்லையா?? 😀 ம்கும் 😃 எழுதி முடியத்தான் இதுக்குப் பதில் சொல்லலாம். ஏன் நான் மட்டும் சுதந்திரமாய் இருக்கேல்லையோ? இப்ப படம் போடமுடியாது. எப்ப போடவேணுமோ அப்ப படம் வரும். இங்க விட்டா வேறெங்க எழுதுறது.1 point- மாதமோ ஆவணி மங்கையோ மாங்கனி
1 pointபாடல்: அக நக படம்: பொன்னியின் செல்வன் 2 இசை: இசைப்புயல் பாடியவர்: சக்திசிறி கோபாலன் வரிகள்: இளங்கோ கிருஸ்ணன் அக நக அக நக முக நகையே முக நக முக நக முறு நகையே முறு நக முறு நக தரு நகையே தரு நக தரு நக வருணனையே யாரது? யாரது? புன்னகை கோர்ப்பது? யாவிலும் யாவிலும் என் மனம் சேர்ப்பது? நடைபழகிடும் தொலை அருவிகளே முகில் குடித்திடும் மலை முகடுகளே குடை பிடித்திடும் நெடுமரச் செரிவே பனி உதர்த்திடும் சிறு மலர் துளியே அழகிய புலமே, உனதிள மகள் நான் வளவனின் நிலமே, எனதரசியும் நீ வளநில சிரிப்பே, எனதுயிரடியோ? உனதிள வனப்பே, எனக்கினிதடியோ? உனை நினைக்கையிலே மனம் சிலிர்த்திடுதே உன் வழி நடந்தால் உயிர் மலர்ந்திடுதே உன் மடி கிடந்தால் தவிதவிக்கிறதே நினைவழிந்திடுதே... அக நக அக நக முக நகையே முக நக முக நக முறு நகையே முறு நக முறு நக தரு நகையே தரு நக தரு நக வருணனையே யாரது? யாரது? புன்னகை கோர்ப்பது? யாவிலும் யாவிலும் என் மனம் சேர்ப்பது? யாரது? யாரது? புன்னகை கோர்ப்பது? யாவிலும்... யாவிலும்... என் மனம் சேர்ப்பது? https://lyricstranslate.com/en/aga-naga-aga-naga.html-01 point- பங்கு/கிரிப்டோ வர்த்தகம் - வா பங்கு ஒரு கை பார்க்கலாம்
1 point- தையல்கடை.
1 pointஅருமையான தையல் சுவி அண்ணா...இன்று தான் முழுவதுமாக வாசித்து முடித்தேன். நன்றி அண்ணா1 point- சிரிக்கலாம் வாங்க
1 pointஎங்கட யாழ்ப்பாணம் rostndopSe2a0c3508ic1g69c363737t4gh830gmt1523m6hlm 41961331m · நாம் எல்லாவற்றுக்கும் இயந்திரம் கண்டுபுடிக்கிறோம் ஆனால் நம்ம வீடுகளில் . இந்த Toys அ அள்ளி அந்த பெட்டில போட்றதுக்கு ஒரு மிஷின் கண்டுபுடிச்சா பெரிய உதவியா இருக்கும். காலுக்கயும் கைக்கயும் பஸ்ஸூம், காரும், ஓட்டோவும், Fire Engine உம். நடு ரோட்டுல நிக்கிற மாதிரி தான் இருக்கு.1 point- இரசித்த.... புகைப்படங்கள்.
1 point1 point- கொட்டும் பனிக்குள் 2023 புதுவருடம்.
பிழையான சக்கர சங்கிலி கொண்டுவந்தபடியால் இனி வேலைக்காகது மெதுவாக திரும்ப வேண்டியது தான்.ஆனாலும் எப்படி போவது?பிள்ளைகள் விளையாட வைத்திருந்த பனி அள்ளும் சவல் எடுத்து மெதுவாக தோண்டி தோண்டி கொஞ்சம் கொஞ்சமாக அருகில் இருந்த வீட்டு பாதையில் திருப்பிவிட்டோம்.நியூயோர்க்கில் வண்டி ஓட்டும் போது பனி தொடங்கினால் றைக்சன் கொன்றோலை வேலை செய்யாமல் பண்ணிவிடுவேன்.இது ஓரளவுக்கு பனியை கவ்விப் பிடிக்கும்.நீங்களும் முயற்சி செய்யலாம். இதற்கும் அதே மாதிரி றைக்சன் கொன்ரோலை நிற்பாட்டி போட்டு பெரிய கஸ்டப்பட்டு இருபக்கமும் வந்த வாகனங்களை நான் மறிக்க பின்பக்கமாக வெளியே வீதிக்கு வந்துவிட்டது.இனி பள்ளம் என்றபடியால் மெதுவாக போய் சேர்ந்துடலாம். எனக்கும் கால் விறைத்து இயலாத கட்டம்.வானுக்குள் ஏறியவுடன் சப்பாத்து ஒன்று இரண்டு சொக்ஸ் எல்லாம் களட்டி போட்டு சூட்டையும் காலுக்கு படக்கூடிய மாதிரி திருப்பிவிட்டு இருந்தேன்.போன உயிர் கொஞ்சம் கொஞ்சமாக வந்தது போல இருந்தது.கொட்டேலுக்கு போய் உடைகளை மாற்றிவிட்டு எல்லோரும் ஒரு குட்டி தூக்கம். எழும்பி பார்த்தால் பெரியபெரிய தடலாக பனி கொட்டோ கொட்டுன்னு கொட்டுது.எல்லா அறைக் கதவுகளிலும் அறிவித்தல் ஒட்டப்பட்டிருக்கிறது. இப்போது முதல் மறு அறிவித்தல்வரை அவசரகாலநிலை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது.சக்கரத்துக்கு சங்கிலியோ வாகனத்துக்கு நான்கு சக்கரத்துக்கும் பிடிப்புள்ள வாகனம் மட்டுமே வீதியில் ஓடலாம் என்று இருந்தது.மதிய சாப்பாடும் அம்போ தான்.வீட்டிலிருந்து கொண்டு போன ரூணா பாண் வாழைப்பழம் இதை வைத்து ஒருமாதிரி சமாளித்தாகிவிட்டது.இனி என்ன செய்வது திரும்பவும் படுக்கை தான்.பிற்பகல் எழும்பி வாகனத்தை கொஞ்சம் துப்பரவாக்கி வைத்திருந்தால் நாளைக்கு கொஞ்சம் சுலபமாக இருக்கும் என்று வெளியே போனால் இந்த நிலையில் வாகனம். விடுதியில் இருந்த சவல் தும்புதடியைக் கொண்டு மகளும் மருமகனும் துப்பரவாக்கினர்கள்.எனது சப்பாத்து இன்னமும் ஈரமாக இருந்ததால் என்னால் உதவி செய்ய முடியவில்லை. பனிப் பொழிவுக்கு மத்தியிலும் நீச்சல் தடாகத்தில். பனிப் பொழியும்.1 point- இரசித்த.... புகைப்படங்கள்.
1 point1 point- கருத்து படங்கள்
1 point1 point- பிரபாகரன் - மூத்த செய்தியாளர் திரு த.சபாரட்ணம் எழுதிய தலைவரின் வாழ்க்கைச் சரித்திரம் - சங்கம் இணையம்
பிரபாகரன் - மூத்த செய்தியாளர் திரு த.சபாரட்ணம் எழுதிய தலைவரின் வாழ்க்கைச் சரித்திரம் - சங்கம் இணையம்
1 point1981 இனக்கலவரம் சிங்களக் காடையர்கூட்டங்களால் தமிழர்களுக்குச் சொந்தமான கடைகள் வீடுகள் ஆகியவை கொள்ளையிடப்பட்டதுடன் தீவைத்து எரிக்கப்பட்டன . நகர்ப்பகுதிகளான இரத்திணபுரி, பலாங்கொடை, கஹவத்தை, கொழும்புக் கரையோரப்பகுதிகள், மட்டக்களப்பு அம்பாறை மாவட்டங்களின் எல்லையோரத் தமிழ்க் கிராமங்கள் ஆகியவை இந்த அரச ஆதரவுபெற்ற காடையர்களால் தாக்குதலுக்குள்ளாயின. கொள்ளைகளும், தீமூட்டல்களும், படுகொலைகளும் நாட்டின் உட்புறம் நோக்கியும் விரிவைடைய ஆரம்பித்தன. மலையகத் தோட்டப்பகுதிகளில் வீதிகளில் கத்திகள், வாட்கள், தடிகள், சைக்கிள்ச் சங்கிலிகளுடன் சுதந்திரமாக வலம் வந்த சிங்களக் காடையர் குழு தமிழர்களின் வீடுகளை கொள்ளையிட்டதுடன் தீமூட்டி அழித்தது. கையில் அகப்பட்ட தமிழர்களை வெட்டியும், அடித்தும் கொன்றது. காடையர்களுடன் வலம் வந்த பொலீஸாரும் இராணுவத்தினரும், காடையர்களின் செயலை ஊக்குவித்ததுடன், பலவிடங்களில் அவர்களுடன் சேர்ந்தே தாக்குதல்களில் இறங்கியிருந்தனர். கிழக்கு மாகாணத்தின் எல்லையோரக் கிராமங்கள் பல முற்றாகவே சிங்களக் காடையர்களால் எரியூட்டப்பட்டன. பல தமிழர்கள் கிராமங்களிலிருந்து தப்பியோடி அருகிலிருந்த காட்டுப் பகுதிகளில் தஞ்சம் அடைந்தனர். இத்தாக்குதல்களில் குறைந்தது 25,000 மலையகத் தமிழர்கள் தமது வீடுகளை இழந்து நிர்க்கதியாகிய அதேவேளை கிழக்கு மாகாணத்தில் 10,000 தமிழர்கள் வீடுகளை இழந்திருந்தனர். மலையகத் தமிழர் மீது அரச ஆதரவுடன் சிங்களக் காடையர்கள் நடத்திய தாக்குதலால் மிகவும் கோபமடைந்திருந்து காணப்பட்ட இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் தலைவர் தொண்டைமானும், செயலாளர் செல்லச்சாமியும் ஆவணி 17 ஆம் திகதி கொழும்பு வோர்ட் பிளேசில் அமைந்திருந்த ஜெயாரின் வதிவிடத்திற்குச் சென்று, "ஒன்றில் எனது மக்கள் மீது சிங்களக் காடையர்கள் நடத்திவரும் தாக்குதலை உடனே நிறுத்துங்கள், அல்லது நான் அவர்களைத் தடுத்து நிறுத்தவேண்டி வரும்" என்று கூறவும், தனது பாதுகாப்புப் பிரிவினரான உதவி பாதுகாப்பமைச்சர் வீரப்பிட்டிய, பாதுகாப்புச் செயலாளர் தர்மபால, ஒருங்கிணைப்புச் செயலாளர் சேபால ஆட்டிகல , பொலீஸ் மா அதிபர் அனா சென்விரட்ண ஆகியோருடன் உயர் பாதுகாப்பு மாநாட்டில் ஈடுபட்டிருந்த ஜெயவர்த்தன, தொண்டைமானைச் சாந்தப்படுத்தும் நோக்கில், "அதைத்தான் நாங்கள் அனைவரும் இங்கே பேசிக்கொண்டிருக்கிறோம்" என்று பதிலளித்தார். தனது மக்கள் மீது சிங்கள மக்கள் தாக்குதல் நடத்துவதை உடனடியாகத் தடுக்கவேண்டும் என்று ஜெயவர்த்தன உட்பட பல உயர் அதிகாரிகளுடன் தொண்டைமான் அழைப்புக்களை ஏற்படுத்தியிருந்தார். அவர்களுடனான அவரது உரையாடல்கள் மென்மையாக இருக்கவில்லை, அவரது குரலில் கோபமும் அழுத்தமும் தெரிந்தது. "உங்கள் அனைவருக்கும் நான் பலமுறை தொலைபேசி அழைப்புக்களை ஏற்படுத்தியிருக்கிறேன். இதுவரை நீங்கள எந்த நடவடிக்கையினையும் எடுக்கவில்லை. ஆனால், நிலைமை மோசமாகிக்கொண்டே போகிறது. காடையர்கள் எமது தெருக்களில் வலம்வந்து எமது மக்களைத் தாக்குகிறார்கள். எனது மக்களை தனியாகப் பிரித்தெடுத்து கொலை செய்கிறார்கள். இந்தக் காடையர்களுக்கும், சமூக விரோதிகளுக்கும் உங்கள் அரசாங்கத்தில் இருக்கும் பலம்வாய்ந்த அமைச்சர்கள் ஆதரவு வழங்கிவருகிறார்கள் என்பது எமக்கு நன்றாகவே தெரியும். உங்களால் இந்தத் தாக்குதல்களைக் கட்டுப்படுத்த முடியவில்லை என்றால், கூறுங்கள். எனது மக்கள் தமது சொந்தப் பாதுகாப்பை உறுதிப்படுத்துவதற்காகத் தேவையானதைச் செய்வார்கள்" என்று மிகவும் காட்டமாகப் பேசியிருந்தார். இதனையடுத்து தானே செயலில் இறங்கிய ஜெயவர்த்தன, உடனடியாக இராணுவத்தினரையும், பொலீஸாரையும் மலையகத்திற்கு அனுப்பி நிலைமையினைக் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவந்தார். மலையகத் தமிழர்கள் மீது சிங்களக் காடையர்கள் நடத்திய மிலேச்சத்தனமான தாக்குதல்கள் தமிழகத்திலும், இந்தியாவிலும் எதிரொலித்தது. 1981 ஆம் ஆன்டு ஆவணி 19 ஆம் திகதி தமிழ்நாட்டு சட்டசபை உறுப்பினர்கள் மத்திய அரசாங்கத்தின் கவனத்திற்கு இத்தாக்குதல்களைக் கொண்டுசெல்லும் நோக்கில் "கவனயீர்ப்பு நடவடிக்கை" எனும் தீர்மானத்தை கொண்டுவந்தார்கள். இதுகுறித்து லோக்சபாவில் பேசிய இந்திய வெளிவிவகார அமைச்சர் நரசிம்ம ராவோ, இந்த வன்முறைகள் யாழ்ப்பாணத்திலிருந்தே ஆரம்பிக்கப்பட்டதாகவும், மாவட்ட அபிவிருத்திச் சபைகள் தேர்தல் வன்முறைகள், ஆனைக்கோட்டைத் தாக்குதல் ஆகியவற்றிற்குப் பிறகு கொழும்பிற்கும் மலையகப் பகுதிகளுக்கும் பரவியதாக இந்தியப் பாராளுமன்றத்தில் தெரிவித்தார். "இந்தத் தாக்குதல்களில் பெரிதும் பாதிக்கப்பட்டிருப்பவர்கள் தமிழர்கள். குறிப்பாக மலையகத் தோட்டங்களில் வேலைபார்ப்பவர்கள். பல தமிழர்கள் கொல்லப்பட்டுள்ளதுடன் அவர்களின் சொத்துக்களும் சூறையாடப்பட்டு எரிக்கப்பட்டிருக்கின்றன. பல்லாயிரக்கணக்கான மலையகத் தோட்டத் தொழிலாளர்கள் தமது வீடுகளை இழந்து நிர்க்கதியாக்கப்பட்டுள்ளனர்" என்று அவர் கூறினார். நரசிம்ம ராவோ "இலங்கையரசாங்கம் அவசரகால நிலைமையினைப் பிரகடணம் செய்திருக்கிறது. மேலும், நிலைமையினைக் கட்டுக்குள் கொண்டுவர தன்னாலான அனைத்து முயற்சிகளையும் அது செய்துவருகிறது. நாட்டின் இன்னமும் சுமூகமான நிலை திரும்பாதலால், மக்கள் மத்தியில் பாரிய குழப்பம் நிலவுகிறது. அதனால், இந்திய பிரஜைகளுக்கு உண்மையாகவே நடந்த அநர்த்தங்கள் பற்றி தெளிவான தகவல்கள் எமக்கு இதுவரையில் கிடைக்கவில்லை" என்றும் அவர் கூறினார். "அங்கு நடப்பது நிச்சயமாக இலங்கையின் உள்நாட்டுப் பிரச்சினை. ஆனாலும், இந்தப் பாராளுமன்றத்தின் உறுப்பினர்கள் அங்கே நடந்துவரும் அவலங்கள் குறித்த இந்தியாவின் கவலையினை இலங்கை அரசிற்குத் தெரிவிக்க விரும்புகிறார்கள். ஏனென்றால், அங்கே பாதிக்கப்பட்டிருப்பவர்களில் பெரும்பாலானவர்கள் இந்திய பூர்விக்கத்தைக் கொண்டவர்கள், சிலர் இந்தியக் குடிமக்கள். ஆகவே, இந்த வன்முறைகளை முடிவிற்குக் கொண்டுவரும் இலங்கையரசின் நடவடிக்கைகள் வெற்றிபெறும் என்று நாம் எதிர்பார்க்கிறோம். இதன்மூலம் தற்போது நடைபெற்றுவரும் சிக்கல்கள் முடிவிற்குக் கொண்டுவரப்படுவதுடன் சரித்திர காலம் தொட்டு, இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையே இருந்துவரும் நட்புறவு மீது எழும் எந்தச் சந்தேகமும் முற்றாகக் களையப்பட்டு விடும் என்றும் நாம் முழுமையாக நம்புகிறோம்" என்றும் அவர் கூறினார். கதிர்காமம் - முழுச் சிங்கள பெளத்த மயமாக்கலின் பின்னால் இந்தியப் பிரஜைகள் மீதான முதலாவது தாக்குதல் சம்பவம் புரட்டாதி மாதம் முதலாம் வாரத்தில் இடம்பெற்றது. தென்னிந்திய யாத்திரீகர்களை ஏற்றிக்கொண்டு கொழும்பிலிருந்து கதிர்காமத்திற்குச் சென்றுகொண்டிருந்த பஸ்வண்டி திஸ்ஸமஹராம எனும் பகுதியில் இயந்திரக் கோளாறு காரணமாக நின்றுவிட்டது. தனபதி எனும் திராவிட முன்னேற்றக் கழகத்தைச் சேர்ந்த உள்ளூர்த் தலைவர் ஒருவரும் அப்பேரூந்தில் பயணம் செய்திருந்தார். பேரூந்து இயந்திரக் கோளாறு காரணமாக நின்றுவிட்டதையடுத்து, அருகிலிருக்கும் வாகனத் திருத்துமிடமொன்றிற்குச் சென்று உதவ முடியுமா என்று கேட்டிருக்கிறார். தம்மிடம் உதவிகேட்டு வந்திருப்பது தமிழர் என்பதை அறிந்துகொண்ட அங்குநின்ற சிங்களவர்கள் அவரைக் கடுமையாகத் தாக்கியதோடு வாட்களால் வெட்டிக் கொன்றிருக்கிறார்கள். இதனையடுத்து தமிழ்நாடு அரசு இச்சம்பவத்தைக் கடுமையாகக் கண்டித்திருந்ததுடன், சென்னையில் ஒருநாள் ஹர்த்தாலுக்கும் அழைப்பு விடுத்தது. தமிழகத்தைச் சேர்ந்த மத்திய அமைச்சர்கள் ராஜ்ய சபாவில் (மேற்சபை) இந்தத் தாக்குதல் குறித்து புரட்டாதி 11 ஆம் திகதி விவாதித்திருந்தனர். மேற்சபையில் பேசிய நரசிம்ம ராராவோ, இலங்கையின் ஜனாதிபதியும், வெளிவிவகார அமைச்சரும் நடந்த வன்செயலுக்காக வருத்தம் தெரிவித்திருப்பதாகவும், கொல்லப்பட்ட இந்தியரின் உடலை தமிழ்நாட்டிற்கு எடுத்துவர நடவடிக்கை எடுத்திருப்பதாகவும் தெரிவித்தார். "இலங்கையில் தற்போது நடந்துவரும் வன்செயல்கள் முழுக்க முழுக்க இலங்கையின் உள்விவகாரமாக இருந்தபோதும், நாம் இலங்கை அரசுடன் தொடர்ச்சியான தொடர்பாடல்களில் ஈடுபட்டிருக்கிறோம். அங்கு தற்போது இடம்பெற்றுவரும் வன்செயல்கள் குறித்த இந்தியாவின் கவலையினை அவர்களுக்கு தெரியப்படுத்தியிருக்கிறோம். தற்போதைய நிலைமைகள் குறித்து எமக்கு தகவல்களை வழங்கிவரும் இலங்கையரசு, தான் எடுத்துவரும் நடவடிக்கைகள் பற்றியும் எமக்கு விளக்கமளித்திருக்கிறது. இவ்விடயங்கள் குறித்து தாம் அதியுச்ச கவனம் எடுத்திருப்பதாகவும், இவற்றினை உடனடியாக முடிவிற்குக் கொண்டுவரும் அனைத்து நடவடிக்கைகளையும் தாம் எடுத்துவருவதாகவும் இலங்கையரசு எமக்கு உத்தரவாதம் அளித்திருக்கிறது" என்றும் அவர் கூறினார். தொண்டைமானின் வற்புருத்தலின் காரணமாக மிகக்கடுமையாகப் பாதிக்கப்பட்ட இரத்திணபுரி, பலாங்கொடை ஆகிய இடங்களைப் பார்வையிடச் சென்றிருந்தார் ஜெயவர்தன. பாதிக்கப்பட்ட தமிழர்களிடம் பேசும்போது, தான் சிங்கள பெளத்த தீவிரவாதிகளின் நாசச் செயலினால் வெட்கப்படுவதாகக் கூறினார். "அவர்கள் மிருகங்கள். அவர்கள் மிருகங்களைக் காட்டிலும் கீழ்த்தரமாகச் செயற்பட்டிருக்கிறார்கள். நூற்றுக்கணக்கான அப்பாவி மக்களின் அவலங்களுக்குக் காரணமாக இருந்திருக்கிறார்கள்" என்று அவர் கூறினார். ஆனால், ஜெயவர்த்தனவின் இந்த முதலைக் கண்ணீரை தமிழர்கள் நம்பத் தயாராக இருக்கவில்லை. இதுகூட அவரது சூழ்ச்சியின் ஒரு பகுதிதானோ என்று அவர்கள் எண்ணினார்கள். "தனது சிங்கள மக்கள் எம்மீது இந்த அக்கிரமங்களை நடத்தும்வரையில் அவர் பார்த்துக்கொண்டுதானே இருந்தார்?" என்று அவர்கள் தமக்குள் பேசிக்கொண்டார்கள். 1981 ஆம் ஆண்டு கார்த்திகை மாதம் நியூஸ் இன்டர்னஷனல் எனும் செய்திச்சேவை, ஜெயாரின் வேஷம் தொடர்பாகத் தமிழர் கொண்டிருந்த சந்தேகங்கள் குறித்து கேள்வியெழுப்பியிருந்தது. "அவர்கள் உங்களை ஒரு ஏமாற்றூப்பேர்வழியென்றும், சூழ்ச்சிக்காரர் என்றும் அழைக்கிறார்களே?" என்று அச்செய்தியாளர் கேட்டதற்கு, "அவர்கள் என்னை ஏமாற்றுப்பேர்வழி என்றும் சூழ்ச்சி செய்பவர் என்றும் அழைப்பது எனக்குத் தெரியும். ஆனால், நீங்கள் ஏமாற்றத் தெரியாதவராகவோ சூழ்ச்சி செய்யத் தெரியாதவராகவோ இருந்தால் , ஒரு நாட்டின் தலைவராக இருப்பதில் அர்த்தமில்லை. அரசியல் என்றாலும், போரென்றாலும் தனிமனித வாழ்வென்றாலும், சூழ்ச்சிகளின்றி வெற்றிபெற முடியாது. ஒரு குத்துச்சண்டை வீரர் கூட சூழ்ச்சி செய்யவேண்டும், எதிரியை ஏமாற்ற வேண்டும். நான் இளவயதினனாக இருக்கும்போது குத்துச்சண்டையில் ஈடுபட்டிருக்கிறேன். நீங்கள் எதிரியின் முகத்தில் அடிப்பதுபோல் பாசாங்குசெய்துவிட்டு, வயிற்றில் குத்த வேண்டும். ஆமாம், நீங்கள் கட்டாயம் சூழ்ச்சி செய்யவே வேண்டும்" என்று சாதாரணமாகப் பதிலளித்தார். ஆவணியில் இடம்பெற்ற வன்முறைகள் இந்திய மேற்சபையில் மார்கழி 18 ஆம் திகதி மீண்டும் எதிரொலித்தன. நரசிம்ம ராவோ பேசும்போது, ஆவணி வன்முறைகளில் பல்லாயிரக்கணக்கான இந்திய வம்சாவளித் தமிழர்கள் பாதிக்கப்பட்டதாகக் கூறினார். பொலீஸாரின் கூற்றுப்படி 7 தமிழர்கள் கொல்லப்பட்டதோடு, 196 எரிப்புச் சம்பவங்களும், 35 கொள்ளைச் சம்பவங்களும், 15 வழிப்பறிச் சம்பவங்களும், 7 காயப்படுத்தல்களும் இடம்பெற்றதாகக் கூறப்பட்டதாக அவர் கூறினார். "இந்திய அரசு, இலங்கையரசுடன் நெருக்கமான தொடர்பாடல்களைப் பேணி வருவதுடன், எமது கவலையினை அவர்களுக்குத் தெளிவாக எடுத்துக் கூறியிருக்கிறோம். சட்டம் ஒழுங்கினை நிலைநாட்ட இலங்கையரசு எடுத்திருக்கும் நடவடிக்கைகள் போதிய பலனைத் தந்திருப்பதாக இந்தியா ஏற்றுக்கொள்கிறது" என்றும் அவர் தெரிவித்தார். இலங்கையரசால் உத்தியோகபூர்வமாக் வெளியிடப்பட்ட தகவல்களை மேற்கோள்காட்டி நரசிம்ம ராவோ பேசிவருவதாக லண்டன் ஒப்சேர்வர் பத்திரிக்கையில் ப்றையன் ஏட்ஸ் எனும் பத்திரிக்கையாளர் 1981 ஆம் ஆண்டு புரட்டாதி 20 ஆம் திகதி இப்படி எழுதுகிறார், "இலங்கையில் தேற்கிலும், கிழக்கிலும், மத்திய மலைநாட்டிலும் வாழும் தமிழர்களுக்கெதிராகவே ஆடி, ஆவணி ஆகிய மாதங்களில் சிங்களவர்களால் திட்டமிட்ட முறையில் வன்முறைகள் கட்டவிழ்த்து விடப்பட்டன என்பது தெளிவாகிறது. இத்தாக்குதல்கள் ஆளும் ஐக்கிய தேசியக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்களின் தலைமையில் மிகவும் திட்டமிடப்பட்ட வகையில் நேர்த்தியாக நடத்தி முடிக்கப்பட்ட தாக்குதல்கள் என்பதும் தெளிவாகிறது. இந்த அமைச்சர்கள் இலங்கை ஜனாதிபதியின் நெருங்கிய தோழர்கள். குறைந்தது 25 தமிழர்கள் கொல்லப்பட்டும், பல தமிழ்ப்பெண்கள் பாலியல் வன்புணர்வுக்குள்ளாக்கப்பட்டிருப்பதுடன், அவர்களின் வாழ்நாள் சொத்துக்களும் சூறையாடப்பட்டு அழிக்கப்பட்டிருக்கின்றன. இந்த முழு முட்டாள்த்தனமான அக்கிரமங்களை நிகழ்த்தியவர்கள், சிங்கள மக்களின் அன்றாட வாழ்க்கைச் சுமைகளிலிருந்து அவர்களின் கவனத்தைத் திசை திருப்பவும், தமிழர்களின் இலட்சியமான ஈழம் எனும் தனிநாட்டிற்கெதிரான தடுப்பு நடவடிக்கையாகக் காட்டவுமே இந்தப் பாதகங்களைச் செய்திருக்கிறார்கள். இலங்கை எனும் தீவு முகம்கொடுத்துவரும் பல பிரச்சினைகளில் இதுவும் ஒன்றாகச் சேர்ந்திருக்கிறது" என்று கூறுகிறார்.1 point- பிரபாகரன் - மூத்த செய்தியாளர் திரு த.சபாரட்ணம் எழுதிய தலைவரின் வாழ்க்கைச் சரித்திரம் - சங்கம் இணையம்
பிரபாகரன் - மூத்த செய்தியாளர் திரு த.சபாரட்ணம் எழுதிய தலைவரின் வாழ்க்கைச் சரித்திரம் - சங்கம் இணையம்
1 pointஆனைக்கோட்டைத் தாக்குதல் தமிழ் மக்களின் சரித்திரத்தில் சிங்களவர்களால் நிகழ்த்தப்பட்ட இன்னொரு அவமானமான நம்பிக்கையில்லாப் பிரேரணைகள் முடிவடைந்து மூன்று நாட்களுக்குப் பின்னர், புளொட் அமைப்பின் தலைவர் உமாமகேஸ்வரன் மற்றும் அவ்வமைப்பின் உதவித்தலைவர் சுந்தரம் தலைமையில் அவ்வமைப்பினர் யாழ்ப்பாணத்திலிருந்து 9 கிலோமீட்டர்கள் தொலைவில் அமைந்திருந்த ஆனைக்கோட்டை பொலீஸ் நிலையம் மீது தாக்குதல் நடத்தினர். இத்தாக்குதலில் இரு பொலீஸ்காரர்கள் கொல்லப்பட்டதோடு பொலீஸ் நிலையத்திலிருந்த அனைத்து ஆயுதங்களையும் புளொட் அமைப்பினர் எடுத்துச் சென்றிருந்தனர். சிங்கள அதிகார மமதைக்கு விழுந்த முதலாவது குறிப்பிடும்படியான அடியாக இத்தாக்குதலைக் குறிப்பிட முடியும். மிகச் சிறப்பாக திட்டமிடப்பட்ட இத்தாக்குதல் ஆடி மாதம் 27 ஆம் திகதி இரவு 10 மணிக்கு நடத்தப்பட்டது. வான் ஒன்றைக் கடத்திக்கொண்டு பொலீஸ் நிலையத்திற்குச் சென்ற புளொட் போராளிகள், வாயிற்கதவை தட்டினார்கள். காவலுக்கு நின்ற கொன்ஸ்டபிள் கதவைத் திறக்கவே அவர்மீது துப்பாக்கிப் பிரயோகம் நடத்தப்பட அவர் அவ்விடத்திலேயே விழுந்து இறந்தார். வாசலில் சூட்டுச் சத்தங்கள கேட்டதையடுத்து உள்ளேயிருந்த கொன்ஸ்டபிள்களான ஜயரத்ண, குருசாமி மற்றும் பந்துலசேன ஆகியோர் வாயிலை நோக்கி ஓடிவந்தார்கள். அவர்கள் மீதும் துப்பாக்கித்தாக்குதல் நடத்தப்பட்டது. அங்கிருந்த பதினேழு 0.303 ரைபிள்கள், ஒரு உப இயந்திரத் துப்பாக்கி, ஐந்து ஷொட் கண்கள், சுமார் 1500 ரவைகள் என்பன புளொட் போராளிகளால் கைப்பற்றப்பட்டன. தாக்குதல் முடிந்ததும் தாம் வந்த வாகனத்திலேயே அவர்கள் தப்பிச் சென்றுவிட்டார்கள். காயப்பட்ட நிலையிலிருந்த பொலீஸாரை யாழ் மருத்துவமனையில் அனுமதித்தபோது, கொன்ஸ்டபிள் ஜயரத்ண சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். 1971 ஆம் ஆண்டில் தெற்கில் மக்கள் விடுதலை முன்னணியினரால் பொலீஸார் மீது நடத்தப்பட்ட தாக்குதல்களுக்குப் பின்னர் நடைபெற்ற மிகவும் துணிகரமான இத்தாக்குதலால் ஜெயாரும், பொலீஸாரும் நிலைகுலைந்து போயினர். இலங்கைப் பாதுகாப்புத்தரப்பும் கடுமையான அதிர்ச்சிக்குள்ளானது. தேசிய பாதுகாப்புச் சபையினைக் கூட்டிய அன்றைய பிரதிப் பாதுகாப்பு அமைச்சர் டி.வி. வீரப்பிட்டிய இரு முக்கியமான முடிவுகளை எடுத்தார். முதலாவதாக யாழ்ப்பாணத்தில் மீளவும் ராணுவத் தலைமைக் காரியாலயம் ஒன்றினை நிறுவுவது. இரண்டாவது சிறிய பொலீஸ் நிலையங்களை மூடிவிடுவதுடன், ஓரளவு பெரிய பொலீஸ் நிலையங்களின் பாதுகாப்பினை அதிகப்படுத்துவது. ஜெயாருடன் சிறில் ரணதுங்க ஆனைக்கோட்டை பொலீஸ் நிலையம் மீதான தாக்குதல் நடைபெற்று சரியாக இரு நாட்களுக்குப் பின்னர், அதாவது ஆடி 29 ஆம் திகதி பிரிகேடியர் சிறில் ரணதுங்க வடமாகாணத்தின் ராணுவத் தளபதியாகப் பொறுப்பேற்றதுடன், அவர் தனது தலைமைக் காரியாலயத்தை பலாலி இராணுவ முகாமில் உருவாக்கினார். அவருக்கு உதவியாக லெப்டினண்ட் ஜெனரல் டென்சில் கொப்பெக்கடுவ எனும் உயர் அதிகாரி நியமிக்கப்பட்டார். இந்தத் தலைமைக் காரியாலயம் ஆவணி 11 ஆம் திகதி குருநகரில் அமைந்திருந்த இலங்கை மீன்பிடிக் கூட்டுத்தாபனத்திற்குச் சொந்தமான கட்டிடத்திற்கு மாற்றப்பட்டது. டென்சில் கொப்பெக்கடுவ பிரிகேடியர் சிறில் ரணதுங்க இராணுவப் புலநாய்வு அமைப்பை உருவாக்கியதுடன் ராணுவத்தினதும், பொலீஸாரினதும் புலநாய்வு வலையமைப்புக்களை ஒருங்கிணைந்து செயற்படப் பணித்தார். மேலும், பலவீனமான, சிறிய பொலீஸ் நிலையங்களை மூடிவிடும் நடவடிக்கையும் உடனடியாகவே ஆரம்பிக்கப்பட்டது. யாழ்ப்பாணத்தில் இயங்கிவந்த 16 பொலீஸ் நிலையங்களில் 9 நிலையங்கள் மூடப்பட்டதோடு, மீதி 7 நிலையங்களினதும் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டது. கால்நடையாகப் பொலீஸார் ரோந்துசெல்வதை நிறுத்திய சிறில் ரணதுங்க, வாகனங்களில் மட்டுமே குழுக்களாக ரோந்தில் ஈடுபடமுடியும் என்று பொலீஸாரைப் பணித்தார். பெரும்பாலான நேரங்களில் பொலீஸ் வாகனங்களுக்குப் பாதுகாப்பாக இராணுவ வாகனங்களும் ரோந்துகளில் இணைந்துகொண்டன. பொலீஸாரின் இந்த நடவடிக்கைகளைக் கண்ணுற்ற வெளிநாட்டுச் செய்தியாளர்கள் பலர், பொலீஸார் சட்டம் ஒழுங்கினை நிலைநாட்டுவதைக் கைவிட்டு இராணுவ வீரர்கள் போல் செயற்படுகிறார்கள் என்று எழுதத் தொடங்கினர். ஆனைக்கோட்டைத் தாக்குதலால் கடுமையான சிற்றமடைந்த அமைச்சர் சிறில் மத்தியூ, அதுபற்றிப் பேசுவதற்காக ஜெயாருக்கு தொலைபேசி அழைப்பினை ஏற்படுத்தினார். "அதை என்னிடம் விடுங்கள், நான் பார்த்துக்கொள்கிறேன்" என்று மறுமுனையிலிருந்து பதில் வந்தது. ஆனால், மத்தியூவிற்கோ அந்தப் பதிலினை ஏற்றுக்கொள்ள முடியவில்லை. ஆகவே, மறுநாள் காலை , 28 ஆம் திகதி, ஆவணி 1981 ஆம் ஆண்டு அவர் ஜெயாருக்குக் கடிதம் ஒன்றினை எழுதினார். கனம் ஜனாதிபதி அவர்களுக்கு, தமிழர் ஐக்கிய விடுதலைக் கூட்டணியினரை மகிழ்விக்க நீங்கள் தேவைக்கதிகமாக வளைந்து கொடுப்பதாக நான் உணர்கிறேன். இந்த வளைந்துகொடுத்தல்கள் இன்னும் அதிகமானால், நீங்கள் உங்களின் சமநிலையினை இழந்து கீழே மல்லாக்காக விழுந்துவிடப்போகிறீர்கள். தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணி உங்களைத் திரும்பிக் கூடப் பார்க்கப்போவதில்லை. அவர்கள் அடுத்து ஆட்சிக்கு வரும் கட்சியோடு புதிய ஒப்பந்தங்களைச் செய்யச் சென்றுவிடுவார்கள். இப்படிக்கு சிறில் மத்தியூ தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணியினரை மகிழ்விப்பதையே ஜெயார் தனது தலையாய கடமையாகச் செய்துவருவதாக மத்தியூ குற்றஞ்சாட்டுவதற்கு அமிர்தலிங்கத்தின் மீதான தண்டனைக்கு தான் பரிந்துரை செய்தவற்றினை ஜெயார் ஏற்றுக்கொள்ளவில்லை என்கிற கோபமே காரணமாக இருந்தது. ஆனால், அரசியல் யாப்பில் ஒரு பாராளுமன்ற உறுப்பின்பர் மீது கடுமையான தண்டனைகளை வழங்குவதற்கான அதிகாரம் அப்போது இருந்தது. மத்தியூவின் கடிதம் ஜெயவர்த்தனவுக்கு கடும் சினத்தினை ஏற்படுத்தியிருந்தது. தன்னிடம் எழுத்துமூலமாக சிறில் மத்தியூ மன்னிப்புக் கோரவேண்டும் என்று ஜெயார் கோரினார். மத்தியூவும் அப்படியே செய்திருந்தார். தனது ஏவலாளிகளைத் தேர்வு செய்வதிலும், அவர்களுக்கான பணிகளை வழங்குவதிலும் ஜெயவர்த்தன மிகவும் அவதானமாகச் செயற்பட்டு வந்தார். ஜெயாரினால் மத்தியூவிற்கு வழங்கப்பட்ட பணி சிங்கள இனவாதிகளை மகிழ்வாக வைத்திருப்பதே. மத்தியூவை ஜெயவர்த்தனா சிங்கள இனவாதிகளை மகிழ்வாக வைத்திருக்கப் பணித்திருந்தபோதும், அவர் தன்னைக் காட்டிலும் மக்களிடையே பிரபலமாவதை அவர் விரும்பியிருக்கவில்லை. மத்தியூவின் குறைந்த குலத்தினால் அவரை ஒருபோதுமே பெளத்த மகாசங்கத்தினர் சிங்கள பெளத்தர்களின் தலைவராக ஏற்றுக்கொள்ளப்போவதில்லை என்பதை ஜெயவர்த்தனா நன்கு அறிந்தே இருந்தார். இதனாலேயே அவரை பெளத்த சாசன அமைச்சராக ஆக்குவதை ஜெயவர்த்தன தவிர்த்து வந்தார். மத்தியூவும், ஏனைய சிங்கள இனவாதிகளும் நாட்டில் தமிழருக்கெதிரான வன்மத்தை உருவேற்றிக்கொண்டு வந்தனர். அமிர்தலிங்கத்திற்கெதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணையில் தான் நிகழ்த்திய பேச்சின் 20,000 பிரதிகளை அவர் பெளத்த விகாரைகள், பொலீஸ்நிலையங்கள், இராணுவ முகாம்கள், அரச கூட்டுத்தாபனங்கள், பொது அமைப்புக்கள் என்பவற்றிற்கு அனுப்பி வைத்தார். அவரது பேச்சின் பிரதிகளோடு, தமிழ் ஈழம் அமையும் பட்சத்தில் எத்தனை பெளத்த விகாரைகள் தமிழர்கள் வசமாகும் என்கிற விபரங்களோடு வரைபடங்களையும் அவர் அனுப்பிவைத்தார். நாடெங்கிலும் சிங்களவர்களை விழித்து, "சிங்கள மக்களே" எனும் தலைப்பில் சுவரொட்டிகள் மத்தியூவினால் ஒட்டப்பட்டு வந்தன. "திராவிடர்களுக்கெதிராக கிளர்ந்தெழுங்கள்" என்கிற வாசகங்கள் நாடெங்கிலும் ஒட்டப்பட்டன. மேலும், தமிழ் பிரதேசங்களில் சிங்களவர்கள் கட்டாயம் குடியேறவேண்டும் என்றும், அதன்மூலமே பெளத்த சின்னங்களும், விகாரைகளும் பாதுகாக்கப்பட முடியும் என்றும் அவர் சிங்கள மக்களை வேண்டிக்கொண்டார். இவ்வாறான இனவாதத் தூண்டுதல்களின் ஒரு கட்டமாக தமிழர்களுக்கு கூட்டுத்தண்டனை ஒன்றினை நிச்சயம் வழங்கியே தீர்வேண்டும் என்கிற வெறி அரச அமைச்சர்களிடையே சுடர்விட்டு எரிய ஆரம்பித்திருந்தது. விமலா கன்னங்கர கிராமப்புற அபிவிருத்தி அமைச்சர் விமலா கன்னங்கர ஒரு கூட்டத்தில் பேசும்பொழுது, "நாங்கள் ஆட்சி செய்கிறோம் என்றால், நாமே ஆட்சி செய்ய வேண்டும். நாம் ஆளுகிறோம் என்றால், நாமே ஆள வேண்டும். சிறுபான்மையினத்தினருக்கு நாம் எதையுமே கொடுக்கக் கூடாது. நாம் சிங்கள பெளத்தர்களாக இந்நாட்டில் பிறந்திருக்கிறோம். நாம் பெரும்பான்மையின மக்களாக இருந்தபோதும் கூட, கடந்த நான்கு வருடங்களாக சிறுபான்மையினத்தவருக்கு அடிபணிந்தே வாழ்ந்து வருகிறோம். நாம் மீண்டு பெரும்பான்மையின மக்களாக இந்த நாட்டினை ஆளவேண்டும்" என்று அறைகூவல் விடுத்தார். தமிழருக்கெதிரான வன்மம் மொத்தச் சிங்கள இனத்திற்குமே பற்றிக்கொண்டது. ஆங்காங்கே தமிழருக்கெதிரான வன்முறைகள் எட்டிப்பார்க்கத் தொடங்கின. ஆனைக்கோட்டை பொலீஸ் நிலையத்தின் மீதான தாக்குதலை தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணியினர் உடனடியாகவே கண்டித்திருந்தனர். பொலீஸாரைக் கொல்வது உணர்வற்ற ஒரு நடவடிக்கை என்று அவர்கள் விமர்சித்திருந்தனர். ஆனால், நாட்டில் தமிழர்களுக்கெதிராக சூழ்கொண்டுவந்த வன்மத்தை அவர்களால் தணிக்க முடியவில்லை. ஆனைக்கோட்டைத் தாக்குதலில் கொல்லப்பட்ட கொன்ஸ்டபிள் ஜயரத்ணவின் உடல் அவரின் ஊரான இரத்திணபுரிக்குக் கொண்டுவரப்பட்டபோது வன்முறைகள் வெடித்துக் கிளம்பின.1 point- பிரபாகரன் - மூத்த செய்தியாளர் திரு த.சபாரட்ணம் எழுதிய தலைவரின் வாழ்க்கைச் சரித்திரம் - சங்கம் இணையம்
பிரபாகரன் - மூத்த செய்தியாளர் திரு த.சபாரட்ணம் எழுதிய தலைவரின் வாழ்க்கைச் சரித்திரம் - சங்கம் இணையம்
1 pointயாழ்ப்பாணத்தை விட்டு வெளியேறிய பிரபாகரன் நீர்வேலி வங்கிக்கொள்ளை, தங்கத்துரை குட்டிமணியின் கைதுகள், மாவட்ட அபிவிருத்திச் சபைகளுக்கான தேர்தலின்போது இடம்பெற்ற அரச பயங்கரவாதம் ஆகியவை தமிழ்ப் போராளி அமைப்புக்கள் மீது அரச இராணுவம் பாரிய தேடியழிக்கும் நடவடிக்கைகளில் ஈடுபட வழிசமைத்திருந்தது. இதனால், யாழ்க்குடாநாட்டில் தனது இரகசிய மறைவிடங்களில் தொடர்ந்தும் தங்கியிருப்பது உகந்ததல்ல என்பதனை பிரபாகரன் உணரத் தொடங்கினார். மிகுந்த களைப்படைந்த நிலையிலும், பலவீனமாகவும், சோர்வாகவும் காணப்பட்ட பிரபாகரன் தமிழ் ஈழ விடுதலைப் புலிகள் அமைப்பை நடத்தும் பொறுப்பினை மாத்தையாவிடம் அப்போதைக்குக் கொடுத்துவிட்டு தமிழ்நாட்டிற்குப் பயணமானார். பிரபாகரனும் அவரது நம்பிக்கைக்குரிய சில இளைஞர்களும் 1981 ஆம் ஆண்டு ஆனி மாதம் 6 ஆம் திகதி அதிகாலை படகு மூலம் தமிழ்நாட்டின் வேதாரணியத்திற்குத் தப்பிச் சென்றனர். வேதாரணியத்தின் வரைபடம் ஆனால் அந்தக் கடற்பயணம் இலகுவானதாக இருக்கவில்லை. தனக்கு நம்பிக்கையான எம். கே. சிவாஜிலிங்கத்தினூடாக (டெலோ உறுப்பினர்) தனது பயணத்திற்கு படகு ஒன்றினை ஒழுங்குசெய்யுமாறு பிரபாகரன் கேட்டிருந்தார். ஆனி 5 ஆம் திகதி இரவு, தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணியின் ஆதரவாளர்கள் தமது தேர்தல் வெற்றியை வெடிகொழுத்திக் கொண்டாடிக்கொண்டிருக்கும்வேளை, பிரபாகரனும் அவரது நம்பிக்கைக்குப் பாத்திரமான இன்னும் 10 இளைஞர்களும் வல்வெட்டித்துறைப் பொலீஸ் நிலையத்திற்கு அருகிலிருந்த வீடொன்றிற்கு இரகசியமாக வந்து சேர்ந்தனர். அவர்களிடம் ஒரு ஜி - 3 ரைபிள், ஒரு ஏ.கே 47 துப்பாக்கி, ஒரு உப இயந்திரத் துப்பாக்கி, ஒரு ஒற்றைச் சூட்டுத் துப்பாக்கி மற்று சில கைத்துப்பாக்கிகள் ஆகிய ஆயுதங்கள் இருந்தன. திடீரென்று ஒரு துப்பாக்கி வெடித்துவிட்டது, ஆனால் அவர்களின் அதிஷ்ட்டமாக கட்டிலின் மெத்தையொன்றிற்குள் சன்னம் புகுந்துகொண்டதனால் சத்தம் வெளியே கேட்கவில்லை. மறுநாள் , ஆனி 6 ஆம் திகதி, முழுநாளும் அவர்கள் அந்த வீட்டிலேயே ஒளிந்திருந்தனர். அன்று இரவு, படகுப் பயண்த்திற்காக கடற்கரை நோக்கி அவர்கள் மெதுவாக நகர்ந்து செல்கையில் இராணுவ ஜீப் வண்டியின் விளக்கு வெளிச்சத்தினைக் கண்ணுற்றார்கள். உடனேயே கடற்கரை மணலில் வீழ்ந்து படுத்துக்கொண்ட அவர்கள், தாம் கிடந்த பகுதியினை அந்த ஜீப் வண்டி கடந்து செல்லும்வரை அசையாது கிடந்தார்கள். "படகில் பயணிக்கும்போது பிரபாகரன் சிந்தனையில் மூழ்கியிருந்தார். பின்னால் தொலைவில் மறைந்துகொண்டிருக்கும் கடற்கரையினைப் பார்த்துக்கொண்டு இருந்த அவர், தமிழ் மக்கள் மீது ஜெயார் நிகழ்த்திவரும் அட்டூழியங்களுக்குப் பழிவாங்கியே தீருவேன் என்று சொல்லிக்கொண்டார்" என்று அன்றிரவு அவருடன் படகில் தமிழ்நாட்டிற்குச் சென்றுகொண்டிருந்த கிட்டு பின்னர் எழுதியிருந்தார். வைகாசி 31 ஆம் திகதியிலிருந்து ஆனி 2 ஆம் திகதி வரையான மூன்று நாட்களிலும் நடைபெற்ற நிகழ்வுகள், தமிழ் மக்களின் உரிமைகளையும், சுய கெளரவத்தையும், கண்ணியத்தையும் மீளப்பெற்றுக்கொள்ள வேண்டும் என்கிற அவாவினை அவருள் அதிகரித்திருந்தது. "தம்மிடமிருக்கும் அதிகார மமதையிலும், தமக்கு எதுவுமே ஆகப்போவதில்லை என்கிற அகம்பாவத்திலும் சிங்களவர்கள், தமிழர்களின் கலாசாரத் தலைநகரையும், தமிழர்களின் பொக்கிஷமான நூலகத்தையும் எரித்தார்கள். தமிழர்கள், அவர்கள் நினைப்பதுபோல அக்கிரமங்களுக்கு அடங்கிக் கிடக்கும் இனமல்ல என்பதை சிங்களவர்களுக்கு நிச்சயம் புரியவைப்போம்" என்று அவர் பல நேர்காணல்களில் கூறியிருக்கிறார். 1958 ஆம் ஆண்டு, எஸ். டபிள்யூ.ஆர்.டி.பண்டாரநாயக்காவின் ஆட்சிக்காலத்தில் சைவ மதகுரு உயிருடன் எரிக்கப்பட்ட சம்பவம், 1974 ஆம் ஆன்டு சிறிமாவின் ஆட்சியில் உலகத் தமிழாராய்ச்சி மாநாட்டில் ஒன்பது அப்பாவிகளின் படுகொலைச் சம்பவம், 1981 ஆம் ஆண்டு ஜே.ஆர்.ஜெயவர்த்தனவின் ஆட்சியில் யாழ்நகரும், யாழ் நூலகமும் எரியூட்டப்பட்ட சம்பவம் ஆகியவையே பிரபாகரனை ஆயுத ரீதியிலான விடுதலைப் போராட்டம் ஒன்றினை உருவாக்கவும், தொடர்ந்து முன்னெடுக்கவும் உந்தித் தள்ளியிருந்தது என்றால் அது மிகையில்லை. தமிழ்நாட்டிற்குப் பாதுகாப்பாக வந்திறங்கிய பிரபாகரன் விடுதலைப் போராட்டத்தை முன்னெடுக்கத் தேவையான விடயங்களில் தன்னை ஈடுபடுத்தத் தொடங்கினார். அன்றிலிருந்து தனது இலட்சியத்தின்மீது தான் கொண்டிருந்த உறுதியிலும், அர்ப்பணிப்பிலும் எந்த விட்டுக்கொடுப்புக்களுக்கும் இடமின்றி செயற்பட்டு வரலானார். தமிழ்நாட்டின் சிறுமலை காட்டுப்பகுதியில் பயிற்சியில் ஈடுபடும் பிரபாகரனும் புலிகளும் தனது இயக்கத்திற்கென்று சிறுமலை, பொள்ளாச்சி மற்றும் மேட்டூர் ஆகிய காட்டுப் பகுதிகளில் பாதுகாப்பான வாழ்விடங்களை அவர் உருவாக்கினார். இந்த மறைவிடங்களிலேயே புலிகள் இயக்கத்திற்குச் சேர்க்கப்பட்ட இளைஞர்கள் ஆயுதப் பயிற்சியிலும், தொலைத் தொடர்புக் கருவிகளை உபயோகிப்பதிலும் பயிற்றப்பட்டனர்.1 point- பிரபாகரன் - மூத்த செய்தியாளர் திரு த.சபாரட்ணம் எழுதிய தலைவரின் வாழ்க்கைச் சரித்திரம் - சங்கம் இணையம்
பிரபாகரன் - மூத்த செய்தியாளர் திரு த.சபாரட்ணம் எழுதிய தலைவரின் வாழ்க்கைச் சரித்திரம் - சங்கம் இணையம்
1 pointமொழி 1960 களின் பிற்பகுதிகளில் தமிழ் இளைஞர்கள் தீவிரவாத நிலைப்பாட்டினை எடுக்கும் நிலைக்குத் தள்ளப்பட்டனர். தமிழ் மொழியென்பது ஒவ்வொரு தமிழனைப் பொறுத்தவரையிலும் மிகவும் முக்கியமானதாகக் கருதப்படும் ஒரு விடயமாகும். தமது மொழியின் தொன்மை பற்றியும் செழுமை பற்றியும் தமிழர்கள் மிகவும் பெருமை கொண்டவர்கள். தமிழ் மொழி மூலம் தாம் ஒரு தேசிய இனமாக அடையாளப்படுத்தப்படுவதை தமிழர்கள் பெருமையாகவே கருதினர். ஆகவேதான் 1956 இல் பண்டாரநாயக்க தனிச் சிங்களச் சட்டத்தினை அமுலாக்கியது தமிழர்களைக் கடுஞ்சினம் கொள்ள வைத்தது. தமிழுக்குச் சம அந்தஸ்த்துத் தரப்படும் என்கிற சிங்களத் தலைமகளின் முன்னைய நிலைப்பாட்டிலிருந்து பண்டாரநாயக்கவின் தனிச் சிங்களச் சட்டம் முற்றிலும் மாறுபட்டு தமிழர்மீது சிங்களத்தினைத் திணித்தது அவர்களை வெகுவாகக் காயப்படுத்தியிருந்தது. காலிமுகத்திடலில் சத்தியாக்கிரகத்தில் ஈடுபடும் தந்தை செல்வா பாராளுமன்றத்திற்கு முன்பாக, காலிமுகத்திடலில் தந்தை செல்வா தலைமையில் தமிழ்ப் பாராளுமன்ற உறுப்பினர்கள் நடத்திய சத்தியாக்கிரகம் தமிழர்களை வெகுவாக ஈர்த்திருந்ததுடன், அவர்கள் மேல் அனுதாபத்தினையும் ஏற்படுத்தியிருந்தது. ஆனி 5 ஆம் நாள், 1956 ஆம் ஆண்டு காலிமுகத்திடலில் செல்வாவினால் நடத்தப்பட்ட சத்தியாக்கிரகத்தின் மேல் சிங்களக் காடையர்கள் தாக்குதல் நடத்தினர். சமஷ்ட்டிக் கட்சி தனிச் சிங்களச் சட்டத்திற்கெதிரான தனது நிலைப்பாட்டினைத் தமிழர்களிடத்தில் கொண்டுசென்றது. சித்திரை 1957 இல் தமிழர் விடுதலைக் கூட்டணி திருகோணமலைக்கான யாத்திரையினை ஆரம்பித்ததுடன், அதன் முடிவில் மூன்று மாநாடு ஒன்றினையும் நடத்தியிருந்தது. இந்த மாநாட்டின் முடிவில் அரசாங்கத்திடம் 4 அம்சக் கோரிக்கையினைக் கூட்டணி முன்வைத்து ஒருவருடத்திற்குள் இவை நடைமுறைப்படுத்தப்படவேண்டும் என்றும் கோரியிருந்தது.1 point- பிரபாகரன் - மூத்த செய்தியாளர் திரு த.சபாரட்ணம் எழுதிய தலைவரின் வாழ்க்கைச் சரித்திரம் - சங்கம் இணையம்
பிரபாகரன் - மூத்த செய்தியாளர் திரு த.சபாரட்ணம் எழுதிய தலைவரின் வாழ்க்கைச் சரித்திரம் - சங்கம் இணையம்
1 pointடட்லியுடன் தான் செய்துகொண்ட ஒப்பந்தத்தில் தமிழருக்கான சுயாட்சிப் பிராந்தியம் ஒன்றிற்கான அடித்தளத்தினை உருவாக்கும் வழியினையும் தந்தை செல்வா சேர்த்திருந்தார். இவ்வொப்பந்தத்தில் பிராந்திய சபைகள் மாவட்ட சபைகளாக பெயர் மாற்றம் செய்யப்பட்டிருந்தன. இவ்வொப்பந்தத்தின் பிரிவு 3 இன்படி..... இரு தலைவர்களுக்கிடையே ஒருமித்து ஏற்படுத்தப்படும் இணக்கப்பட்டிற்கு அமைவாக அதிகாரம் மிக்க மாவட்ட சபைகள் இலங்கையில் உருவாக்கப்படும். ஆனால், தேசிய நலனைக் கருத்திற்கொண்டு இம்மாவட்ட சபைகள் இயங்கவேண்டிய திசையினைத் தீர்மானிப்பதற்கான அதிகாரம் மத்திய அரசாங்கத்திடமே இருக்கும்..... என்று கூறியிருந்தது. டட்லி சேனநாயக்க ஒரு கண்ணியவான், ஆகவே தான் கொடுத்த வாக்கை நிறைவேற்றுவார் என்கிற நம்பிக்கையினை மட்டுமே அடிப்படியாகக் கொண்டே தந்தை செல்வா தேசிய அரசாங்கத்திற்கு ஆதரவளிக்கும் தனது நிலைப்பாட்டினை எடுத்திருந்தார். ஆனால், டட்லியோ குறைந்தது மூன்று வருடங்கள்வரை தமிழர்களையும் தந்தை செல்வாவையும் அலைக்கழித்துவிட்டு இறுதியில் சமஷ்ட்டிக் கட்சியுடனான தனது அரசியல்க் கூட்டையும் துண்டித்துக் கொண்டார். இதனால் விரக்தியடைந்த தந்தை செல்வா சிங்கள மக்கள் தூரநோக்குச் சிந்தனையுள்ள தலைவர்களைக் கொண்டிருக்கவில்லை என்று கூறினார். இதேவேளை தமிழ் இளைஞர்கள் சிங்களவர்களின் அரசியல் வஞ்சகத்தினால் ஆத்திரமடைந்து வந்ததுடன், இதற்கெதிரான தமது கடுமையான அதிருப்தியையும் வெளிக்காட்டத் தலைப்பட்டனர். தமிழர்களின் அரசியல்ப் பாதையின் திசையினை அவர்கள் மாற்றவேண்டிய காலத்தின் அழுத்தம் அவர்கள்மேல் திணிக்கப்பட்டது. சிங்களத் தலைமைகளின்மேல் தமக்கு நம்பிக்கையில்லை என்று தமிழ் அரசியல்த் தலைவர்களிடம் வெளிப்படையாகக் கூறிய தமிழ் இளைஞர்கள், தமிழர்களுக்கான தனியான நாட்டினை உருவாக்குவதே தமக்கிருக்கும் ஒரே தீர்வென்றும் கூறத் தலைப்பட்டனர்.1 point- பிரபாகரன் - மூத்த செய்தியாளர் திரு த.சபாரட்ணம் எழுதிய தலைவரின் வாழ்க்கைச் சரித்திரம் - சங்கம் இணையம்
பிரபாகரன் - மூத்த செய்தியாளர் திரு த.சபாரட்ணம் எழுதிய தலைவரின் வாழ்க்கைச் சரித்திரம் - சங்கம் இணையம்
1 pointசமஷ்ட்டி அடிப்படையிலான அதிகாரப் பகிர்விற்கெதிரான சிங்கள பெளத்தர்களின் கடுமையான எதிர்ப்பினை அறிந்துவைத்திருந்த தந்தை செல்வா அவர்கள் சமஷ்ட்டி அடிப்படையிலான தீர்வொன்றிற்கான அடித்தளத்தினை உருவாக்குவதில் 1957 ஆம் ஆண்டிலிருந்து 1968 வரையான தனது அரசியல்க் காலத்தினைச் செலவிட்டிருந்தார். பண்டாரநாயக்காவுடன் தான் செய்துகொண்ட ஒப்பந்தத்தில் பிராந்திய சபைகளின் உருவாக்கம் பற்றி அவர் கோரிக்கையினை முன்வைத்து அதற்கான சம்மதத்தினை பண்டாரநாயக்காவிடமிருந்து பெற்றுக்கொள்வதிலும் வெற்றி கண்டிருந்தார். இவ்வொப்பந்தத்தின் மூலம் வடக்கிற்கென்று ஒரு பிராந்திய சபையும், கிழக்கிற்கென்று இரு பிராந்திய சபைகளும் உருவாக்கப்படும் என்று ஒத்துக்கொள்ளப்பட்டது. அதுமட்டுமல்லாமல், தேவையேற்படும் பட்சத்தில் மாகாண எல்லைகளைத் தாண்டி இரு வேறு பிராந்தியங்கள் ஒன்றாக இணைக்கப்பட முடியும் என்கிற கொள்கையும் ஏற்றுக்கொள்ளப்பட்டது. மேலும், வடக்குக் கிழக்கு மாகாணங்களுக்கான நிர்வாகம் தமிழ் மொழியிலேயே நடைபெற வேண்டும் என்கிற கோரிக்கையும் அவ்வொப்பந்தத்தின் பிரகாரம் ஏற்றுக்கொள்ளப்பட்டதன் மூலம் இணைந்த வடக்குக் கிழக்கு மாகாணங்களுக்கான அடித்தளமும் இடப்பட்டது. இவ்வொப்பந்தத்தின் முக்கிய சில பகுதிகள், 1. குறித்த கால அட்டவணையின்படி பிராந்திய சபைகளின் உருவாக்கம் நடத்தப்பட வேண்டும். 2. வட மகாணம் ஒரு பிராந்தியமாக மாற்றப்படும் அதேவேளை கிழக்கு மாகாணம் இருவேறு பிராந்தியங்களாகப் பிரிக்கப்படும். 3. ஒப்பந்தத்தில் ஏற்றுக்கொள்ளப்படும் ஏற்பாடுகள் மூலம் மாகாண எல்லைகளைக் கடந்துகூட இரு வேறு பிராந்தியங்கள் ஒன்றாக இணைக்கப்பட முடியும். அதேபோல ஒரு பிராந்தியம் இரண்டாகப் பிரிக்கப்படும் தேவையேற்படின் பாராளுமன்ற அதிகாரம் மூலம் அதனைச் செய்யமுடியும். அத்துடன், பொதுவான ஒரு நோக்கத்திற்காக இரு பிராந்தியங்கள் ஒன்றாக இணைத்துக்கொள்ளப்பட முடியும். 4. பிராந்தியங்களுக்கான தனியான தேர்தல்களை நேரடியாக நடத்த முடியும். ஆனால், தந்தை செல்வாவுடன் தான் செய்துகொண்ட இந்த உடன்படிக்கையினை 1958 ஆம் ஆண்டு சித்திரை 9 ஆம் நாளன்று ஒருத்லைப் பட்சமாக பண்டாரநாயக்கா கைவிட்டார். தனது உத்தியோகபூர்வ வாசஸ்த்தல்கம் அமைந்திருந்த ரோஸ்மீட் பிளேஸின் முன்பாகக் கூடிய நூற்றுக்கணக்கான பெளத்த துறவிகளின் அழுத்தத்திற்குப் பணிந்து தந்தை செல்வாவுடன் தான்செய்துகொண்ட ஒப்பந்தத்தினை அவர் முற்றாகக் கைவிட்டார். மேலும் அன்றைய எதிர்க்கட்சியாக இருந்த ஐக்கிய தேசியக் கட்சி இவ்வொப்பந்தத்தினை எதிர்த்து கண்டிக்கு பாத யாத்திரை ஒன்றினையும் ஆரம்பித்திருந்தது. ஆட்சியைக் கைப்பற்றும் போட்டியில் இரு சிங்களக் கட்சிகளும் சிங்களவர்களின் நலன்களைக் காப்பதில் தாமே மேலானவர்கள் என்று காட்டுவதற்காக ஏட்டிக்குப் போட்டியாக தமிழர்களை வஞ்சிக்கும் நடவடிக்கைகளை அன்றிலிருந்து முடுக்கிவிட்டிருந்தனர். பண்டாரநாயக்காவின் கொலையினையடுத்து இரு சிங்களத் தேசியக் கட்சிகளுக்கிடையேயும் ஆட்சியைக் கைப்பற்றும் கடுமையான போட்டியொன்று ஆரம்பித்திருந்தது. இச்சந்தர்ப்பத்தினைப் பாவித்து தந்தை செல்வா அவர்கள் அரசாங்கத்தினை அமைக்கவும், தேவையேற்படும்போது அதனைக் கலைக்கவும் கூடிய அரசியல் நடவடிக்கைகளில் ஈடுபடும் பலம் கிடைத்தது. 1960 பங்குனியில், பண்டாவுடன் தான் செய்துகொண்ட ஒப்பந்தத்தினை அப்படியே நடைமுறைப்படுத்துவோம் என்கிற சிறிமாவின் உறுதிமொழிக்கு அமைவாக அவருக்கு ஆதரவளித்ததன் மூலம், டட்லியின் ஐக்கிய தேசியக் கட்சியினைத் தோற்கடித்து சிறிமா தலைமையிலான சுதந்திரக் கட்சியினை ஆட்சி ஆட்சியமைக்க தந்தை செல்வா உதவினார். ஆனால், ஆட்சிக்கு வந்தவுடன் தான் கொடுத்த உறுதிமொழியை உதாசீனம் செய்த சிறிமாவோ, தொடர்ந்தும் தமிழர் விரோத நிலைப்பாட்டில் செயற்பட ஆரம்பித்தபோது தந்தை செல்வா, 1965 இல் சிறிமாவின் அரசிற்கு கொடுத்த ஆதரவினை விலத்தி, டட்லியுடன் சேர்ந்து தேசிய அரசாங்கத்தினை அமைத்தார்.1 point- பிரபாகரன் - மூத்த செய்தியாளர் திரு த.சபாரட்ணம் எழுதிய தலைவரின் வாழ்க்கைச் சரித்திரம் - சங்கம் இணையம்
பிரபாகரன் - மூத்த செய்தியாளர் திரு த.சபாரட்ணம் எழுதிய தலைவரின் வாழ்க்கைச் சரித்திரம் - சங்கம் இணையம்
1 pointஅம்பாறை மாவட்டத்தில் ஏற்படுத்தப்பட்ட சனத்தொகை வளர்ச்சி வீதத்திற்கு கல்லோயாக் குடியேற்றத்திட்டம் காரணமாயிருந்தது போல திருகோணமலை மாவட்டத்தின் அல்லை, கந்தளாய் ஆகிய பகுதிகளில் வலிந்து ஏற்படுத்தப்பட்ட சிங்களக் குடியேற்றங்களும், புதிதாக ஏற்படுத்தப்பட்ட மொறவெவ, மஹதுவுலுவெவ ஆகிய குடியேற்றங்களும் காரணமாய் அமைந்திருந்தன. வவுனியா மாவட்டத்தின் தமிழர் சனத்தொகை வீதத்தை வெகுவாகக் குறைக்கவும், சிங்களவர்களின் எண்ணிக்கையினை அதிகரிக்கவும் பதவிய எனும் சிங்களக் குடியேற்றம் முடுக்கிவிடப்பட்டிருந்தது. தமிழரின் பூர்வீகத் தாயகத்தில் சிங்களக் குடியேற்றங்கள் ஏற்படுத்தப்பட்டதைத் தொடர்ந்து அப்பகுதிகளுக்கான தனியான சிங்களத் தேர்தல்த் தொகுதிகளையும் சிங்கள அரசு அறிவித்தது. தமிழரின் பாரம்பரிய வாழிடங்களான அம்பாறை மாவட்டத்தில் திகாமடுல்லை எனும் புதிய தேர்தல் தொகுதியும், திருகோணமலை மாவட்டத்தில் சேருவில எனும் புதிய தேர்தல் தொகுதியும் ஏற்படுத்தப்பட்டது. 1976 ஆம் ஆண்டு ஏற்படுத்தப்பட்ட இந்தத் தேர்தல் தொகுதிகள் மூலம் 1977 ஆம் பொதுதேர்தலில் கிழக்கு மாகாணத்திலிருந்து இரு சிங்களவர்கள் பாராளுமன்றம் செல்லும் வாய்ப்பும் இதனால் ஏற்படுத்தப்பட்டது. அத்துடன் 1978 இல் ஏற்படுத்தப்பட்ட வீதாசாரப் பிரதிநிதித்துவம் மூலம் இச்சிங்கள ஆசனங்களின் எண்ணிக்கை 5 ஆக உயர்ந்தது. இதுபோல் வவுனியா மாவட்டத்திலிருந்தும் மேலதிகமாக ஒரு சிங்களவர் பாராளுமன்றம் செல்லும் வாய்ப்பும் ஏற்படுத்தப்பட்டது. 1977 இல் தந்தை செல்வா அவர்கள இறந்ததையடுத்து தமிழர் தாயகத்தில் அரச ஆதரவில் ஏற்படுத்தப்பட்டு வந்த திட்டமிட்ட சிங்களக் குடியேற்றங்கள் அரசியல் - ராணுவப் பின்புலத்துடன் அசுர கதியில் முடுக்கிவிடப்பட்டன.தமிழர் தாயகமான வடக்குக் கிழக்கின் நிலத்தொடர்பினைத் துண்டிப்பதன் மூலம் அவர்களைன் தாயக் கனவைக் சிதைக்கவும் , தமிழ்ப் போராளிகளை வடக்கிற்குள் முடக்கி முற்றாக அழிக்கும் நோக்கிலும் முல்லைத்தீவு மாவட்டத்தின் மணலாற்றுப் பகுதியில் "வலிஓயா" எனும் பெயரில் முற்றான ராணுவப் பலத்துடன் சிங்களக் குடியேற்றம் ஒன்று ஏற்படுத்தப்பட்டது. இதுபற்றிப் பிரபாகரனின் கதையில் நாம் மேலும் பேசலாம். அதிகாரங்களைப் பகிர்தல் அரசாங்கத்தில் தமக்கு நீதியாகக் கிடைக்கவேண்டிய அதிகாரப் பகிர்வைத் தமிழர்கள் முற்றாக இழக்கும் சந்தர்ப்பம் உருவாகிவருவதுபற்றி தந்தை செல்வா அச்சம் கொண்டிருந்தார். ஒற்றையாட்சியின் கீழ் மொத்த ஆளும் அதிகாரமும் எண்ணிக்கையில் பெரும்பானமையினரான சிங்களவர்களிடமே குவிக்கப்படும் என்பதை அவர் உணர்ந்துகொண்டார். தமது பெரும்பான்மைப் பலத்தினூடாக தமிழர்களை அடக்கவும், வஞ்சிக்கவும் அவர்களுக்கு வாய்ப்பு இதனால் ஏற்படுத்தப்பட்டது. தன்னால் ஆரம்பிக்கப்பட்ட சமஷ்ட்டிக் கட்சியினூடாக அவர் நிறைவேற்றிய தீர்மானத்தில் தமிழர்களை அடக்கி ஒடுக்குவதற்காக சிங்களவர்களால் ஏற்படுத்தப்பட்ட ஒற்றையாட்சி முறைமையினை நீக்கி, அதிகாரங்களைப் பகிரும் சமஷ்ட்டி அடிப்படையிலான அரசியல்த் திட்டமொன்றை முன்வைக்குமாறு அவர் அரசைக் கேட்டுக்கொண்டார். அவரது தீர்மானத்தின் சாராம்சம் கீழே..... தமிழருக்கான சுயாட்சி அதிகாரமுள்ள பிரதேசம் ஒன்றினை சமஷ்ட்டி ஒன்றியமான இலங்கைக்குள் பெற்றுக்கொள்ளுதல்...... சமஷ்ட்டிக் கட்சியின் முதலாவது தேசிய மாநாடு திருகோணமலையில் 1951 ஆம் ஆண்டு சித்திரை 12 இலிருந்து 15 வரை நடத்தப்பட்டது. இந்த மாநாட்டில் இலங்கையில் தமிழருக்கு இருக்கும் ஒரே தீர்வு சம்ஷ்ட்டி ஒன்றியமான இலங்கைக்குள் அவர்களுக்கான சுயாட்சிப் பிரதேசம் ஒன்றினை உருவாக்குவதுதான் என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. 1952 ஆம் ஆண்டின் பாராளுமன்றத் தேர்தலில் தமது தேர்தல் விஞ்ஞாபனமாக தமிழருக்கான சுயாட்சிப் பிரதேசம் எனூம் கோரிக்கையினை தந்தை செல்வா தலைமையிலான சமஷ்ட்டிக் கட்சியினர் தமிழரிடம் முன்வைத்ததோடு ஒற்றையாட்சி முறைமையினை முற்றாக நிராகரிக்கவேண்டும் என்கிற கோரிக்கையினையும் முன்வைத்தனர். ஆனால் இத்தேர்தலில் இந்தக் கோட்பாட்டினைக் கண்டுகொள்ள மறுத்த தமிழர்கள் தமது தவறை உணர்ந்து 1956 ஆம் ஆண்டுத் தேர்தலில் இக்கோரிக்கைக்கான தமது ஆதரவினை நல்கினர். இத்தேர்தலில் வடக்குக் கிழக்கின் 14 இடங்களில் போட்டியிட்ட தந்தை செல்வாவின் சமஷ்ட்டிக் கட்சி 10 இடங்களில் வெற்றி பெற்றதன் மூலம் ஒற்றையாட்சிக்கெதிரான தமிழ் மக்களின் முற்றான நிராகரிப்பை பறைசாற்றியது. இதனைத் தொடர்ந்து நடைபெற்ற தேர்தல்களான பங்குனி 1960, ஆடி 1960 மற்றும் 1965, 1970 ஆகிய தேர்தல்களிலும் தமிழ் மக்கள் ஒற்றையாட்சிக்கெதிரான தமது எதிர்ப்பினைக் காட்டியிருந்தனர். இவற்றிற்கெல்லாம் மகுடம் வைத்தாற்போல், 1977 ஆம் ஆண்டுப் பொதுதேர்தலில் தமிழருக்கென்று தனியான சுதந்திர நாடொன்றினை உருவாக்குவதற்கான தமது ஆணையினை தமிழ்மக்கள் வழங்கினர்.1 pointImportant Information
By using this site, you agree to our Terms of Use.
- இலங்கையில் ஆறு மாதங்கள்
Navigation
Search
Configure browser push notifications
Chrome (Android)
- Tap the lock icon next to the address bar.
- Tap Permissions → Notifications.
- Adjust your preference.
Chrome (Desktop)
- Click the padlock icon in the address bar.
- Select Site settings.
- Find Notifications and adjust your preference.
Safari (iOS 16.4+)
- Ensure the site is installed via Add to Home Screen.
- Open Settings App → Notifications.
- Find your app name and adjust your preference.
Safari (macOS)
- Go to Safari → Preferences.
- Click the Websites tab.
- Select Notifications in the sidebar.
- Find this website and adjust your preference.
Edge (Android)
- Tap the lock icon next to the address bar.
- Tap Permissions.
- Find Notifications and adjust your preference.
Edge (Desktop)
- Click the padlock icon in the address bar.
- Click Permissions for this site.
- Find Notifications and adjust your preference.
Firefox (Android)
- Go to Settings → Site permissions.
- Tap Notifications.
- Find this site in the list and adjust your preference.
Firefox (Desktop)
- Open Firefox Settings.
- Search for Notifications.
- Find this site in the list and adjust your preference.