காசாவின் போர் செல்போன்களிலும் இடம்பெறுகின்றது
Published By: RAJEEBAN 13 NOV, 2023 | 04:17 PM
நியுயோர்க் டைம்ஸ்
By Yousur Al-Hlou
தமிழில் - ரஜீவன்
முற்றுகையிடப்பட்டுள்ள காசாவில் சிக்குண்டுள்ள பாலஸ்தீனியர்களில் செல்போன்களை வைத்துள்ளவர்கள் காசா யுத்தத்தை பதிவு செய்து வெளியிடுகின்றனர் – அவர்கள் ஆங்கில புலமை கொண்டவர்களாக உள்ளனர்- இன்ஸ்டகிராமில் பலரால் பின்தொடரப்படுபவர்களாக அவர்கள் காணப்படுகின்றனர்.
இஸ்ரேலும் எகிப்தும் பத்திரிகையாளர்கள் காசாவிற்குள் நுழைவதற்கு அனுமதி மறுத்து அவர்களை தடுத்து வருகின்ற நிலையில், பாலஸ்தீனியர்கள் இஸ்ரேலின் குண்டுவீச்சினால் ஏற்பட்டுள்ள பேரழிவை தரைதாக்குதல் கதைகளை பதிவு செய்கின்றனர், பகிர்ந்துகொள்கின்றனர்.
அவர்களின் பதிவுகள் யதார்த்தத்தை உண்மையை கற்பனை செய்து பார்க்க முடியாத அளவிற்கு வெளிப்படையாக தெரிவிப்பவையாக காணப்படுகின்றன-
மையநீரோட்ட ஊடகங்கள் அவை வெளியிட முடியாத அளவிற்கு பயங்கரமானவை என கருதக்கூடும்.
அவர்கள் தாங்கள் பதிவு செய்யும் யுத்தத்தின் நடுவில் வாழ்கின்றனர்,குண்டுவீச்சிலிருந்து உயிர்பிழைக்கின்றனர் ,உணவு குடிநீரை பங்கீட்டு முறையில் பெற்றுக்கொள்கின்றனர் மருத்துவமனையில் தஞ்சமடைகின்றனர்.
அவர்கள் நடுநிலையான பார்வையாளர்கள் இல்லை அவர்களின் உணர்ச்சிவசப்பட்ட பதிவுகளில் அவர்கள் தங்களை அவ்வாறு காண்பிக்க முயலவில்லை.
சிலர் அவர்கள் காசாவை தனது பிடியில் வைத்திருக்கும் ஹமாசுக்கு ஆதரவாக பிரச்சாரம் செய்பவர்கள் என தெரிவிக்கின்றனர்.
ஹமாசின் ஒக்டோபர் ஏழாம் திகதி தாக்குதலிற்கு பதிலடியாக தாக்குதலை இஸ்ரேல் ஆரம்பித்த பின்னர் இதுவரை பத்தாயிரத்திற்கும் அதிகமான பொதுமக்கள் - பாலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டுள்ளனர்.இவர்களில் 4500 பேர் சிறுவர்கள் என காசாவின் சுகாதார அமைச்சு தெரிவிக்கின்றது.
பாலஸ்தீன மக்கள் இனப்படுகொலை ஆபத்தை எதிர்கொள்கின்றனர் என ஐநாவின் அமைப்புகள் தெரிவித்துள்ளன.
இதுவரையில் 33 பத்திரிகையாளர்கள் கொல்லப்பட்டுள்ளனர் என பத்திரிகையாளர்களை பாதுகாப்பதற்கான குழு தெரிவித்துள்ளது.
எனினும் பாலஸ்தீனியர்கள் யுத்தத்தின் ஈவிரக்கமற்ற தன்மையை தொடர்ந்தும் பதிவு செய்கின்றனர்-அவர்களை மில்லியன் கணக்கான மக்கள் சமூக ஊடகங்களில் பின்தொடர்கின்றனர்.
மொட்டாஸ் அசைசா
ஒக்டோபர் ஏழாம் திகதி மொட்டாஸ் அசைசா 4 மணியளவில் உறங்கச்சென்றார்
இரண்டு மணித்தியாலங்களின் பின்னர் அவர் குண்டுவெடிப்புகளின் சத்தத்தை கேட்டு கண்விழித்தார்,தனது வீட்டின் கூரைக்கு சென்று என்னவென்று பார்த்தார் அவரது வீட்டின் மேலாக ரொக்கட்கள் சென்றதை பார்த்தார்.
அதுவரை எந்த எச்சரிக்கையும் வெளியாகவில்லை வழமையாக யுத்தத்தை அறிவிக்கும் துப்பாக்கி பிரயோகங்கள் அன்று இல்லை
ஆனால் இந்த யுத்தம் அவர் உறக்கத்திலிருந்தவேளை ஆரம்பித்தது.
காசா இஸ்ரேலை பிரிக்கும் எல்லையை கடந்து சென்ற ஹமாஸ் அமைப்பினர் இஸ்ரேலிய படையினரையும் சமூகங்களையும் தாக்கினர்.240 பொதுமக்கள் பணயக்கைதிகளாக பிடிக்கப்பட்டனர் 1400 பேர் கொல்லப்பட்டனர்
அதில் அதிகளவு இஸ்ரேலிய இராணுவத்தினரும் உள்ளனர் என இஸ்ரேல் தெரிவித்துள்ளது.
அதற்கு பதிலடியாக இஸ்ரேல் ஹமாசிற்கு எதிரான முழுமையான யுத்தத்தை ஆரம்பித்தது- அசைசாவும் இரண்டு மில்லியன் மக்களும் காசாவில் குண்டுவீ;ச்சிற்குள் சிக்குப்படும் நிலையை ஏற்படுத்தியது.
பல வருட மோதல்களிற்கு பின்னர் வெடிமருந்து கிடங்காக மாறியிருந்தது காசாவில் அவர்கள் சிக்குண்டனர்.
ஏற்கனவே நான்கு யுத்தங்களை சந்தித்த அசைசா தனது கமராவை எடுத்துக்கொண்டு தன் கண்முன்னால் புதிதாக அவிழ்ந்த உலகிற்குள் நுழைந்தார்.
ஆயுதமேந்திய பாலஸ்தீனியர்கள் கைதிகளாக பிடிக்கப்பட்ட இஸ்ரேலிய படையினருடன் இஸ்ரேலிய ஜீப்பில் அசைசாவை கடந்துசென்றனர்.
கைதுசெய்யப்பட்டவர்களில் இருவர் சீருடையில் காணப்பட்டனர் - இஸ்ரேலிய படையினரை பொதுமக்கள் முன்னிலையில் பாலஸ்தீனியர்கள் நிறுத்தியவேளை அவர்கள் கண்களில் அச்சம் தென்பட்டது என்கின்றார் அசைசா.
அவர் அதனை பதிவு செய்தார் -அந்த வீடியோவை தனது இன்ஸ்டகிராமில் பதிவு செய்தார் – அவரை 25000 பேர் இன்ஸ்டகிராமில் பின்தொடர்கின்றனர்.
நான் அந்த சம்பவத்தை உள்வாங்குவது எப்படி என தெரியாத நிலையிலிருந்தேன் என தெரிவிக்கும் அவர் அந்த ஜீப் எங்களுக்கு பேரழிவை கொண்டு வரப்போகின்றது என நான் அந்த நிமிடம் கருதவில்லை என்கின்றார்.
அசாசா காசா பல்கலைக்கழகத்தில் ஆங்கில மொழிபெயர்ப்பில் பட்டம்பெற்றவர்- புகைப்படத்துறை குறித்து மிகுந்த ஆர்வம் கொண்டவர்.காசாவின் அழகையும் பயங்கரத்தையும் பதிவு செய்து அவர் தன்னை பட்டை தீட்டிக்கொண்டார்.
ஆனால் காசா யுத்தம் சமூக ஊடக காலத்தின் யுத்த செய்தியாளராக அவரை மாற்றியிருந்தது.
தற்போது அவரை 13 மில்லியன் பேர் பின்தொடர்கின்றனர்.
அவர் இஸ்ரேலின் விமானக்குண்டு வீச்சினை தனது தலைமுறையை போல பதிவு செய்துவருகின்றார்.கண்முன் நடப்பதை அப்படியே பதிவு செய்து அப்படியே தரவேற்றுகின்றார் அவருக்கு ஆங்கில மொழியாற்றல் உள்ளதால் பலர் அவரை பின்தொடர்கின்றனர்.
நான் ஏனையவர்களை போலவே பதிவிடுகின்றேன் பிரபலங்கள் செய்வது போல நானும் எனது நாளாந்த வாழ்க்கையிலிருந்து பதிவிடுகின்றேன் என்கின்றார் அவர்.
ஆனால் அவரது வீடியோக்கள் முற்றிலும் வித்தியாசமானவை. ஓக்டோபர் 9 ம் திகதி குண்டுவீச்சிலிருந்து தப்பியவுடன் அவர் கதறியழுதார்.
அது எனக்குள்ளே இருந்த எதனையே அசைத்துவிட்டது நான் கடும் அதிர்ச்சியடைந்தேன் இரண்டு மணிநேரம் அழுதேன் என அவர் குறிப்பிட்டார்.
ஒக்டோபர் 11ம் திகதி அவர் குண்டுவீச்சில் தனது நெருங்கிய நண்பரை இழந்தார்-அதன் பின்னர் அவரது குடும்ப உறவுகள் கொல்லப்பட்டனர்.
ஒக்டோபர் 22 ம் திகதி அவர் கொல்லப்பட்ட குழந்தைகள் சிறுவர்களின் சடலங்களுடன் காணப்பட்டார்.23 ம் திகதிஇடிபாடுகளிற்கு மேலாக நடந்துசென்ற அவர் நாங்கள் இன்னமும் உயிருடன் இருக்கின்றோம் என தெரிவித்தார்.
ஆரம்பத்தி;ல் என்ன செய்கின்றேன் என்பதோ என்ன செய்யப்போகின்றேன் என்பதோ தெரியாத நிலையில் நான் காணப்பட்டேன் என தெரிவிக்கும் அவர் நான் நடக்கும் விடயங்களை பதிவிட்டு நாங்கள் இங்கே இருக்கின்றோம் என தெரிவிக்க விரும்பினேன் என குறிப்பிட்டார்.
அவரது சமூக ஊடக செயற்பாடுகளும் பிரபலமும் அவருக்கு நெருக்கடிகளை உருவாக்கியுள்ளன,அவர் தான் சந்தித்த அனுபவங்களால் களைப்படைந்துள்ளார், பணியில் கவனம் செலுத்த முடியாத நிலையில் காணப்படுகின்றார், தனது பாதுகாப்பு குறித்து அச்சமடைந்துள்ளார்
அவர் தனது சகாக்கள் இஸ்ரேலின் தாக்குதலில் கொல்லப்பட்டதை பார்த்துள்ளார். விமானகுண்டுவீச்சில் அவர்களின் வீடுகள் எப்படி நொருங்கின தரைமட்டமாகின என்பதை நேரில் பார்த்துள்ளார். நான் எனது நண்பர்களை இடிபாடுகளிற்குள் இருந்து இழுத்தெடுத்தேன் என அவர் தெரிவிக்கின்றார்.
நேற்று நான் எனது வீட்டில் ஒரு கால் கட்டிலும் ஒரு கால் தரையிலுமாக உறங்கினேன் , நான் அங்கேயே இருக்கவேண்டுமா வெளியேறவேண்டுமா என்பது தெரியாத நிலையிலிருந்தேன், எனது தாயார் மிகுந்த மன உளைச்சலுக்கு உள்ளாகியுள்ளார் என அவர் பதிவிட்டுள்ளார்.
நான் தற்போது காசாவில் இல்லை என அவர் நவம்பர் நான்காம் திகதி பதிவில் தெரிவித்தார். இஸ்ரேலிய துருப்பினரின் பிடியில் தனது வீடு உள்ளதால் மீண்டும் திரும்பி செல்வது ஆபத்தானது என அவர் தெரிவித்தார்.
தொடர்ந்தும் யுத்தம் குறித்த தகவல்களை வெளியிடுவதாக தன்னை சமூக ஊடகங்களில் பதிவு செய்பவர்களிற்கு தெரிவித்துள்ள அவர் அதேவேளை தனக்குள்ள மட்டுப்பாடுகளையும் தெரிவித்துள்ளார்.
நான் சுப்பர்மான் இல்லை என அவர் தெரிவித்துள்ளார்.
நான் சோர்வடைந்து விழப்போகின்றேன் போல உணர்கின்றேன் என கமராவை பார்த்தபடி அவர் தெரிவித்தார். அனைத்தையும் பதிவு செய்யவேண்டும் என்பதுதான் எனது விருப்பம் ஆனால் எனது உயிருக்கு ஆபத்தில்லாமல் அவற்றை பதிவு செய்ய விரும்புகின்றேன் என அவர் குறிப்பிட்டார்.
https://www.virakesari.lk/article/169207