Leaderboard
Popular Content
Showing content with the highest reputation on 12/26/23 in all areas
-
அறிவித்தல்: யாழ் இணையத்தில் இருந்து 'திண்ணை' நீக்கம்
வணக்கம், யாழ் களம் புதிய வழங்கிக்கு மாற்றப்பட்ட பின்னர், இணைப்புக்கள் சற்று மந்தமான வேகத்தில் இயங்குவதும், இதற்கு திண்ணை மென்பொருள் காரணமாக இருப்பதும் அவதானிக்கப்பட்டுள்ளதால், திண்ணை வசதி தற்காலிகமாக நீக்கப்பட்டுள்ளது. யாழ் இணையத்தின் இணைப்புக்களை திறப்பதற்கான வேகத்தை அவதானித்து, உரிய மாற்றங்கள் விரைவில் மேற்கொள்ளப்படும். நன்றி8 points
-
உலகத் தமிழர் பேரவை உறுப்பினர்களின் படங்கள் மீது முட்டை வீச்சு!
இலங்கை இனப்பிரச்சினை இப்போது உறங்கு நிலையில் இருப்பதாகவும் அதனால்தான் யாராவது இதை தொடங்க வேண்டிய நிலையில் இருப்பதால் தான் தொடங்கியதாக சுரேன் சுரேந்திரன் குறிப்பிட்டிருந்தார். அவர் குறிப்பிடத்தில் ஓரளவு உண்மை இருந்தாலும் அவரது செயட்பாடுகளின் நம்பக தன்மையில் கேள்விக்குறியும் இருக்கத்தான் செய்கின்றது. இந்த நாட்களில் முடடை தட்டுப்பாடாக இருப்பதால் இது பழுதாகின முடடையாக இருக்க முடியாது. அவர்கள் தங்கள் ஆதங்கத்தை வெளிப்படுத்துகிறார்கள். அதனால் பாதிக்கப்படடவர்களுக்குத்தான் அதன் துன்பங்கள் உணரப்படும்.4 points
-
கருத்துக்களம் : பிரச்சனைகளும் தீர்வுகளும்
3 points
-
உலகத் தமிழர் பேரவை உறுப்பினர்களின் படங்கள் மீது முட்டை வீச்சு!
இலங்கையில் உள்ள பல தமிழர்களுக்கு புலம் பெயர் தமிழர்களின் பலம் பற்றிய அதீத கற்பனை உண்டு. ஆனால் நடைமுறை உண்மையோ வேறு.இன்னும் பத்து ஆண்டுகளில் புலம் பெயர் தமிழர்களிடம் இருக்கும் குறைந்த பட்ச பலமும் முடிவுக்கு வந்து விடும். இங்கே நாட்டில் உள்ள மக்களுக்காக கவலைப் படும், அமைப்புக்களில் இணைந்து செயல்படும் நபர்களின் வயது அறுபது ஆகின்றது. அவர்களின் பிள்ளைகளோ அல்லது கடந்த 10 ஆண்டுகளில் புலம் பெயர்ந்தோரோ இந்த அமைப்புகளில் இல்லை, அதே நேரம் பலர் இன்னும் முழுமையாக இங்கு வீடு வாசல் வேலை என்று செட்டில் ஆகவும் இல்லை. இந்த நிலையில் இலங்கையில் உள்ள தமிழ் மக்களின் தீர்வுக்கான குறைந்த பட்ச வாய்ப்பு இப்போது உள்ள எங்களின் குறைந்த பட்சப் பலத்தைப் பயன் படுத்தி ஏதாவது ஒன்றைப் தமிழ் மக்களுக்குப் பெற்றுக் கொடுப்பது தான். காலமும் சூழலும் மாறட்டும். அதற்கு இன்னும் 100 ஆண்டுகள் கூட ஆகலாம். அது வரைக்கும் இயன்ற வரைக்கும் எமது மொழியையும், நிலத்தையும், அடுத்து வரும் இளம் சந்ததியையும் பாதுகாப்பதே புத்திசாலித்தனம். விரும்பாத தீர்வு ஒன்று கொடுக்கப்பட்டாலும் அதை ஏற்பது நீண்ட காலத்துக்கு பயனளிக்கும் எனில் அதை ஏற்போம். எந்தத் தீர்வும் இறுதித் தீர்வு அல்ல. சிதைக்கப் பட முடியாத பலம் மட்டுமே இறுதித் தீர்வு இலங்கைத் தமிழர்களின் உரிமைக்கான பிரச்சனையில் தடையாக இருப்பது அருகில் உள்ள இந்தியா என்கின்ற நாடு. இதை இலங்கை தமிழரில் பலர் முற்றாய் உணர்ந்து தெளிந்ததாக தெரியவில்லை. தமிழர்களை தனி நாடு அடைய விடாமல் தடுப்பதும் இந்தியா தான்,அதேநேரம் இலங்கை அரசோடு ஒன்றிணைந்து நாம் ஒரு தீர்வுத் திட்டத்திற்கு வர முடியாமல் பார்த்துக் கொள்ளும் நாடும் அதுதான். இலங்கையை கையாள தமிழர்களை பயன்படுத்திக் கொள்வது தான் இந்தியாவின் வெளிநாட்டு கொள்கை. நிலைமை இப்படி இருக்கும் பொழுது எப்படி தனி நாட்டைப் பெறுவது? சரி பிரிக்க முடியாத நாட்டுக்குள் சுய நிர்ணய உரிமை தமிழர்களுக்கு கொடுக்கப்பட்டாலும் அதைப் பயன்படுத்தி( அதிகாரம் கொடுக்கப்பட்ட தமிழர்களை பயன்படுத்தி ) எவ்வாறாயினும் இலங்கை அரசுக்கு குடைச்சல் கொடுப்பதே இந்தியக் கொள்கை வகுப்பாளர்களின் யுக்தியாக இருக்கும். ஏற்கனவே ஒரு சில தடவை குறிப்பிட்டது போல கடந்த மைத்திரி ரனில் அரசாங்கத்தில் இனப்பிரச்சனைத்தீர்வுக்கான ஒரு முஸ்தீவு எடுக்கப்பட்ட பொழுது அதை ஈஸ்டர்குண்டு வெடிப்பை நடத்தி குலைத்த பெருமை இந்தியாவையே சாரும். இந்தியா,தமிழர்கள் தனி நாட்டை அடைய விடுவதுமில்லை, சிங்களவர்களோடு இணைந்து தமிழர்கள் நல்லதொரு தீர்வை பெற்று வாழ விருப்பமும் இல்லை. இரண்டும் கெட்டான் நிலையில் நாங்கள் நின்று தடுமாறி இலங்கைக்குள் இந்தியாவின் கைப்பாவையாக செயல்படவேண்டும் என்பதுதான் அவர்களின் விருப்பம். இந்த நிலையில் இலங்கை அரசோடு ஏதேனும் ஒரு வகையிலான ஒரு இணக்கப்பாட்டுக்கு வந்து இந்தியாவின் தலையீடு இல்லாமல் இலங்கைக்குள் நிம்மதியாக வாழக்கூடிய வகையில் ஈழத் தமிழர்களுக்கு எப்பேற்பட்ட ஒரு தீர்வு வந்தாலும் நான் அதை வரவேற்பேன். அந்த வகையில் உலகத் தமிழர் பேரவை எடுத்து இருக்கும் இந்த முயற்சி பலனளிக்க வாழ்த்துக்கள். இந்தியா என்கின்ற நாடு எங்களுக்கு அருகில் ஒரு வல்லரசாக இருக்கும் வரை எம்மால் தனித்து சுய நிர்ணய உரிமையோடு இயங்க முடியாது. இந்தியா உடைந்து சிறு நாடுகளாக சிதறும் போது மட்டும் தான் எமக்கான வாய்ப்புக்கான கதவு திறக்கும். அதுவரை எமது கலாச்சாரங்களையும் அடையாளங்களையும் இயன்றவரை பாதுகாத்துக் கொள்வது தான் தூர நோக்கோடு சிந்திக்கும் ஒருவரால் எடுக்கப்படக்கூடிய முடிவு. கடும் பசியிலும் தாகத்திலும் வாடும் ஒருவர் பிரியாணி தான் வேண்டும் என்று அடம்பிடித்தால் நலிந்து சாக வேண்டி வருலாம் .மாறாக கிடைக்கும் சோற்றையும் நீரையும் பருகி உயிர் தப்பினால் பின்னோரு காலத்தில் பிரியாணிக் கடைக்கே ஓனர் ஆகலாம்.3 points
-
மனதும் இடம்பெயரும்
2 pointsஎனது மூன்றாவது சிறுகதைத் தொகுதி தயாராகிறது. அட்டைப்படத்தை வடிவமைத்துத் தந்தவர் மூணா அண்ணா. அவருக்கு நன்றி. நிறம் தான் சிறிது மாறிவிட்டது. என்னுரை பத்து ஆண்டுகளின் முன்னர் என் முதலாவது சிறுகதைத்தொகுதியும் நான்கு ஆண்டுகளின் முன் என் இரண்டாவது சிறுகதைத்தொகுதியும் வெளிவந்தபின் ஐந்து ஆண்டு ஆண்டுகால இடைவெளியில் மூன்றாவது தொகுதி வெளிவருகிறது. பெண்களால் தொடர்ந்து எழுத முடியாதவாறு பல தடைகள் குடும்பச் சூழலில் இருந்தாலும் அதையும் தாண்டி நான் காண்பவற்றை, கேட்பவற்றை எழுதும் ஆற்றல் எனக்குள்ளும் இருக்கின்றது. யாரின் புகழ்தலுக்காகவும் காத்திருக்காது என்னால் முடிந்ததைத் துணிவுடன் எழுதுவதும் எனக்கு நிறைவைத் தருகிறது. முக்கியமாய் யாழ்களமே எனது எழுத்துக்களுக்கு ஊக்கியாய் இன்றுவரை இருக்கின்றது. அதுமட்டுமன்றி என் கதைகளை விமர்சிக்கும் அத்தனை யாழ்கள உறவுகளுக்கும் நன்றிகூற நான் என்றும் கடமைப்பட்டவள். சரியோ தவறோ எம் நன்மைக்காய் விடமின்றி விமர்சிப்பவர்களின் விமர்சனங்களே என் எழுத்துக்களை மெருக்கேற்றிக் கொண்டிருக்கும். நான் கேட்டவுடன் நூல் விமர்சனம் ஒன்றை எழுதித் தந்த காரைக்கவி கந்தையா பத்தமநாதன் அவர்களுக்கும், அணிந்துரையை மிகக் குறுகிய காலத்தில் எழுதித் தந்த பேராசிரியர் வல்லிபுரம் மகேஸ்வரன் அவர்களுக்கும், அட்டைப்படத்தை வடிவமைத்துத் தந்த யாழ்கள உறவான மூணா எனப்படும் ஆள்வாப்பிள்ளை செல்வகுமாரன் அண்ணாவுக்கும் நான் என்றும் கடமைப்பட்டவள். என்னை எழுதுவதர்க்குத் தூண்டியதே சுமேரிய வரலாறு பற்றிய தூண்டாலே. அதுபற்றிய அடிப்படை அறிவை என்னுள் தூவிய மறைந்த நாதன் சிவகணேசன் அண்ணா அவர்களுக்கு இந்நூல் சமர்ப்பணம். அணிந்துரை தமிழ் பெண் எழுத்தாளர்களுள் புலம்பெயர்ந்து வாழுகின்ற நிவேதா உதயன் கணிப்புக்குள்ளான எழுத்தாளராகஅறியப்படுபவர்.| அவருடைய தொடர் எழுத்துக்களின் அறுவடையாக“மனதும் இடம்பெயரும்” என்ற மகுடத்துடன் பத்து சிறுகதைகள் அடங்கிய தொகுதி வெளிவருகின்றது.ஈழத்துத் தமிழ் புனைவு வெளி புலம் பெயர்ந்த எழுத்தாளர்களினது பங்களிப்பால் சற்று அகலக்கால் வைத்தது என்பதை எவரும் மறுபதற்கில்லை. ஈழத்துக் குடாநாடு, இலங்கைத் தீவு என்ற நிலவியல் எல்லைகளுக்குள் நீண்ட காலம் பயணம் செய்த புனைவு வெளி, ஈழத் தமிழர்களின் புலப்பெயர்வு என்ற செயற்பாட்டாலும் அதன் வழி உருவான கருத்துருவாக்கங்களாலும் 'புலம்பெயர் தமிழ் இலக்கியம்" என்ற அந்தஸ்த்தைப் பெற்றது. அதன் பேறாக, நாடுகளும், இயற்கையும் தட்ப வெப்பநிலைகளும், வாழ்வியலும் நேர் மறையாகவும் எதிர்மறையாகவும் நமது மனக்கண்முன் விரிந்தன. 'உலகமயமாதல்" என்ற கருத்தியல் அல்லது 'சுருங்கிய உலகு" என்ற கருத்தியலுக்கு அமைவாக எல்லாம் தான் எமது காலடியில் வந்து குவிந்தன. இதனால் புளகாங்கிதங்களும் கூடவே துயரங்களும் நம்மிடையே நிரம்பி வழிந்தன. மேற்குறித்த கருத்து நிலைகள் ஓரளவிற்குத் தேய்மானங்கண்டுள்ள நிலையில் தற்போது புலம்பெயர் தமிழ் மக்களின் தனியாள் அனுபவங்களும் கலாசாரச் சிதைவுகளும் வாழ்வியற் கோலங்களும் அரசல் புரசலாக புனைவுகளில் வெளிவரத் தொடங்கியமையின் வெளிப்பாடாகவே நிவேதாவின் இந்தத் தொகுதியில் அடங்கிய கதைகளிலும் பெரும்பாலும் முகங் காட்டுவதை இனங்காண முடிகின்றது. நமது பாரம்பரியமான பண்பாட்டில் நம் மூத்தோர் கடவுட்குச் சமமாக வைத்தென்னைப் படுபவர்கள், தாய், தந்தை, பேரன், பெயர்த்தி என அந்தத் தொகுதி நீளும் அந்தப் பெரியோரும் நம்மையும் நம் வாரிசுகளையும் “எம்மில் தம்மைக் கண்டு” மகிழ்வு கொள்பவர்கள்| நம் குடும்ப உறவுகளின் 'எல்லைக்கால்"களா நிற்பவர்கள்| அவர்களே அந்த எல்லைகளை மீறினால்… என்ற கருவை அடியாகக் கொண்ட 'தண்டனை" என்ற கதை வாசகரைப் பெரிதும் அதிர்ச்சிக்குள்ளாக்கக் கூடியது. நமது கலாசார விழுமியங்களைக் கேள்விக் குள்ளாக்கக் கூடியது. எனினும் தன் மனைவியை மத்திய கிழக்கிற்கு அனுப்பி விட்டு தன் சொந்தமகளையே வன்புணர்வு செய்யும் தந்தைகள் நிறைந்த உலகிற்தானே நாமும் வாழுகிறோம் என்று இதனால் சமாதானங் கொள்வதா அல்லது சிக்மன்ட் பிறைட்டின் உளவியற் கோட்பாட்டை முன்நிறுத்திக் சமாதானங்கொள்வதா அல்லது ஏங்கல்ஸ் குறிப்பிடும் 'புனசவா" குடும்பம் என்ற கருத்தியலில் வரலாற்றைப் பின்நோக்கிப் பார்ப்பதா என்ற வினாக்கள் இதனூடாக மேற்கிளம்புகின்றன. இவ்வாறான கருவை வெளிப்படுத்துவதற்கு 'அயல் நோக்காத்துணிவு" வேண்டும். நிவேதாவிடம் அது நிறையவே உண்டு. அவர் பாரம்பரியத்தைத் தாங்கிப்பிடிக்கும் தூணாக நிற்க விரும்பவில்லை. 'தானம் நீ", 'மன வாழ்வு", 'மனக்குரங்கு" ஆகிய மூன்று கதைகளின் கருவை ஒரே நேர்கோட்டில் வைத்துப் பார்க்க முடிகிறது. பெண்களை ஆண்களே பெரும்பாலும் ஏமாற்றுபவர்கள் என்ற பெரும்பான்மையான மதிப்பீடுகளை மறுதலித்து பெண்களும் வாய்ப்புக்கிடைத்தால் ஏமாற்றத் தயங்கார் என்ற கருத்தினை இக் கதைகளூடாக முன்வைக்கிறார் நிவேதா. தன் கல்லூரிக் காலத்தில் காதல் செய்த செந்தூரனுடன் சேர்ந்து வாழ்வதற்காக, தன்னைக் கட்டியவனுடன் போலிவாழ்வு வாழ்ந்து காதலனைக் கரம்பிடிக்கத் துடித்த நயனி, தன்னிலும் வயது கூடிய வெளிநாட்டு மணமகனைக் கரம்பிடித்து விட்டு வங்கியில் தன்னுடன் பணியாற்றும் வாகீசனுடன் வாழத்துடிக்கும் ஜீவா,கரம்பிடித்த காதலனும் கணவனுமான ரவியிடமிருந்து விவாகரத்துப் பெற்று மூன்று பிள்ளைகளுடன் கஷ்டஜீவனம் செய்தவருக்கு ஆபத்பாந்தவனாக வந்து கை கொடுத்து மறுவாழ்வு தந்து கடனாவுக்கு கூட்டி வந்து வாழவு தந்தவனை ஏமாற்றிய 'மனக்குரங்கு" கதையின் நாயகி" என இவர்கள் எல்லாம் ஏமாற்றுக்காரிகளாக நம்பிக்கைத் துரோகிகளாகச் சித்தரிக்கப்பட்டுள்ளனர். ஒருவேளை தான் நினைத்தவனை அடைதல் பெண் களுக்கான சுதந்திரம் என்ற கருத்தியலை இவ்விடத்தில் நிலைநாட்ட நிவேதா முனைகிறாரோ என்று எண்ணத்தோன்றினும் (ஏனெனில் அவரது முந்தைய கதைகள் அவ்வாறானவை) கதைகளின் முடிவுகளின் படி, நம்பி நடந்த ஆண் மக்களை ஏமாற்றிய பெண்களின் கதைகளாகவே அவற்றைக் கருத முடிகிறது. இதில் சித்திரிக்கப்பட்டுள்ள ஆண்கள் மிகவும் கண்ணியமானவர்களாகவே உள்ளனர். நிவேதாவின் இந்த மனமாற்றம் அல்லது கருத்தியல் புலம்பெயர் வாழ்வில் பெண்களின் நத்தைக்கோலங்களின் அபத்தங்களால் ஏற்பட்ட மன உளைச்சல்தான் காரணமாக அல்லது பிழைவிடுபவர் எல்லாத் தரப்பிலுமஉளர் என்ற சமாதானமா? எதுவெனப் புரியவில்லை. 'மருந்தே இல்லா நோய்" என்ற கதை இன்னோர் வகைமையான பெண்ணைக் கண்முன் நிறுத்துகிறது. பிரான்ஸில் பிறந்த மது என்ற பெண், புலம் பெயர் நாடுகளில் இன்னமும் வலுப்பெற்றுக் கொண்டிருக்கின்ற சாதீயத் தடைகளைத் தாண்டி, பெற்றோர் திர்ப்பையும் மீறிக் காதலித்த நவீன் என்பவனைக் கரம்பிடித்து இரு குழந்தைகள் பெற்ற பின்பும் தன்கணவன் வேறோர் பெண்ணுடன் காதலுறவு கொண்டுள்ளான் என்பதை அறிந்த மது அவனைத் தீவிரமாகக் கண்காணித்து கையும் மெய்யுமாக பிடித்து அவனிடமிருந்து பிரிந்து விடுவதாக இக்கதை அமைந்துள்ளது. தன் கணவன் எல்லை மீறுகிறான் என்பதை நிதானத்துடன் செல்லிடப்பேசியின்தொழில் நுட்பத்துடன் கண்காணித்து உண்மையை வெளிக்கொணரும் திறன் வாய்ந்த வளாக அவள் உருவாக்கப்பட்டுள்ளாள். ஒரு வகையில் இரு ஒரு புலனாய்வு சார்ந்த தன்மையுடன் கட்டமைக்கப்பட்டுள்ளது. இதனை வேறோர் வகையில் 'உளவியல் நாடகம்" என்றும் கட்டமைக்கலாம். குற்றமிழைத்த ஒருவரை அவர் சந்தேகப்படும்படியாக நடக்காமல் அவருடன் இயல்பாகப் பழகி, அதனூடாகக் கண்காணிப்பு அல்லது புலனாய்வை நிகழ்த்தி இறுதியில் இக்கட்டான ஒரு சூழலில் சிக்க வைத்து குற்றவாளியின் வாயிலாகவே குற்றத்தை ஒப்புக்கொள்ளச் செய்வதை உளவியல் நாடகம் (Phலஉhழ னுசயஅய) என்பர். உளவியலாளர் அந்த முறைமைதான் இக்கதையிலும் நடந்தேறியுள்ளது. இன்னோர் வகையில் அந்தப் பெண்ணின் ஆளுமையும் தெரிய வருகிறது. தன் கணவன் தனக்குத் துரோகம் செய்வதை எந்தப் பெண்ணால் தான் பொறுத்துக்கொள்ளமுடியும் என்ற பொதுவிதியைத் தாண்டி, கல்லானாலும் கணவன் என்ற கீழைத்தேய நியமங்களைக் கடந்து, மூக்குச் சிந்தி அழுது ஆர்ப்பரிக்காது அப்பெண் நடந்து கொண்டவிதம் அவளுக்கு மேலைத்தேய வாழ்க்கை முறை தந்த துணிவும், தன்னம்பிக்கையம் தான் என எண்ணத் தோன்றியது. ஓரினச் சேர்க்கையாளர்கள் தாம் விரும்பியவாறு சேர்ந்து வாழமுடியும் என்ற மேலைத்தேய அனுமதியை அனுசரித்துச் செல்கிறது. 'நான் வசந்தன்' என்ற கதை. கதையின் ஓட்டம் சராசரியாக இருந்தாலும் கதையின் முடிவில் நிவேதா எழுதிய உரையாடல் அந்த உறவின் நன்மையை அல்லது உணர்ச்சியை புரிந்துகொள் வைக்கிறது. அழைப்பு மணி அடிக்க அகிலுக்கு இதே வேலையாய்ப் போச்சு என்று மனதுக்குள் திட்டியபடி கதவைத் திறக்கிறேன். “நான் எங்காவது போயிருந்தால் என்ன செய்வாய்? திறப்பை மறக்காமல் எடுத்துக் கொண்டு போ என்று எத்தனை தடவை சொன்னாலும் கேட்கமாட்டியா?” “நான் எப்ப வருவேன் என்று நீ எனக்காகக் காத்திருப்பாய் என்று எனக்குத் தெரியுமே” என்றபடி வசந்தனை ஆசை தீர இறுக அணைக்கிறான் அகில். இதில் தெரியவருவது இரண்டு ஆத்மாக்களின் ஆழமான அன்பு தான். அது அபத்தமல்ல என்பதை நிவேதா நிறுவ முனைகிறார். இந்தத் தொகுதியில் உள்ள ஏனைய கதைகள் நிவேதாவின் அனுபவம் சார்ந்தவை. ஆயின் “அவனும் அவர்களும்” என்ற கதை நிவேதாவிற்கு உருவச் செழுமையுடனும் கதை சொல்ல முடியும் என்பதற்குப் பதந் சோறாக அமைகிறது. மரணமடைந்தவரே கதை சொல்லியாக மாறி, நனவோடை உத்தியில் கதையை நகர்த்திச் செல்லும் விதத்தால் அக்கதையை இத் தொகுதியின் கணிப்புக்குள்ளாகும் கதையாக மாறியுள்ளது. தவிர நிவேதாவின்கதை சொல்லும் முறை இன்னமும் நேர்கோட்டு முறையியலைத் தாண்டிச் செல்லவில்லை. ஆயின் கதைகளின் முடிவில் அதிர்ச்சி தருவதும் எதிர்பாராத திருப்பங்களை ஏற்படுத்துவதும் சில விடயங்களை வாசகரிடமே யுகத்துக்கு விட்டு விடுவதும் நல்ல சிறுகதைகளுக்கான குணாம்சங்கள். அவை நிவேதாவின் எழுத்துக்களில் துலங்கத் தொடங்கியுள்ளன. உரை நடையில் செம்மை சேர்வதும் அல்லது பேச்சோசை மிகுவதும் கதைகளின் களத்தைப் பொறுத்ததேயன்றி கதைசொல்லியின் மனவோட்டத்தை பொறுத்ததல்ல என்பதையும் கவனத்திற் கொள்ள வேண்டும். மற்றும் சுய விருப்பும் வெறுப்புகளுடனான தீர்வுகள் அல்லது அபிப்பிராயங்கள் கதை சொல்லியின் நேர்மையைச் சோதிப்பனவாய் அமைந்தால் அது வெறும் வக்கிரங்களின் வெளிப்பாடாய் அமைந்துவிடும் அபாயங்களும் உண்டு. எனவே முன்வைக்கும் கருத்தைத் தர்க்கத்துடனும் ஆதாரத்துடனும் சமூகவியல் கண்ணோட்டத்துடனும் அழகியலுடனும் படைக்கும் போது கதை சொல்லி நின்று நிலைப்பார்| கதைகள் சாகாவரம் பெறும். நிறைவாக நிவேதா எனும் கதைசொல்லி இன்றும் கடந்து செல்ல வேண்டிய களமும் காலமும் அவர் முன் விரிந்து கிடக்கின்றன. அவற்றை ஒருமுகப்படுத்தும் திறன் நிவேதாவிடம் நிறையவே உண்டு. அவற்றைக் கலா பூர்வமாகக் கட்டமைத்து நமது புனைவு வெளியில் தனித்துவமான தாக்கத்தை ஏற்படுத்தக் கூடிய எழுத்தாளராக நிவேதா நிலைக்க வேண்டும் என்பது என் அவா. அது ஈடேனும் என்பதில் அசைக்க முடியா நம்பிக்கையும் எனக்குண்டு. வாழ்த்துக்களுடன் பேராசிரியர் வல்லிபுரம் மகேஸ்வரன் தகைசால் வாழ்நாட்பேராசிரியர் பேராதனைப் பல்கலைக்கழகம்2 points
-
உலகத் தமிழர் பேரவை உறுப்பினர்களின் படங்கள் மீது முட்டை வீச்சு!
வருகின்ற நல்ல நோக்கம் கொண்ட முயற்சிகளையும் எதிர்பதை பார்த்தால் உறங்கு நிலை உறுதி போல் உள்ளது ☹️2 points
-
இரு வர்ணத்தில் இனிய பாடல்கள்.....!
2 points
-
உலகத் தமிழர் பேரவை உறுப்பினர்களின் படங்கள் மீது முட்டை வீச்சு!
முட்டை விக்கிற விலைக்கு இதென்ன விசர் வேலை….. மாட்டு சாணி….இப்பவும் free தானே?2 points
-
மூனா என்னும் ஒரு தோழமைக்கரம்
1 pointமூனா என்னும் ஒரு தோழமைக்கரம் ஆதவன் பொங்குதமிழ் இணையம் 5 வருடங்களைப் பூர்த்தி செய்யும் இந்நேரத்தில், பொங்குதமிழில் வெளியாகும் தனித்துவமான கருத்துப்பட ஓவியங்கள் குறித்தும், ஓவியர் மூனா குறித்தும் சில வார்த்தைகள் பேச வேண்டும். பொங்குதமிழில் பங்களித்துவரும் எழுத்தாளர்கள், படைப்பாளிகள் குறித்து தனிப்பட எதுவுமே நான் எழுதியதில்லை. ஆயின், மூனா பற்றிய இக்குறிப்பிற்குக் காரணமென்ன? பொங்குதமிழ் தனது முதற்காலடியை எடுத்துவைத்த 2010 பொங்கல் நாளிலிருந்து, இன்றுவரையான இந்த 5 வருடங்களில் 500 கருத்துப்படங்கள் என்ற இலக்கை தாண்டியுள்ளார் ஓவியர் மூனா. பொங்குதமிழ் தனது 6 வது காலடியை எடுத்துவைக்கும் இந்நேரத்தில் இந்த இலக்கை அவர் அடைவது குறித்து பெருநிறைவு அடைகிறோம். 500 கருத்துப்படங்கள் என்பதை வெறும் எண்ணிக்கை மட்டுமே சார்ந்த சாதனையாக நாம் பார்க்கவில்லை. முள்ளிவாய்க்காலுக்குப் பின்னான குழப்பங்கள் நிறைந்த ஒரு காலத்தில், ஈழ அரசியல் குறித்த கருத்துருவாக்க முயற்சிக்கு மூனாவின் ஓவியங்கள் காத்திரமான பங்களிப்பை வழங்கியுள்ளன என்பதே இங்கு முதன்மையானது. அவரின் ஓவியங்கள் தனித்துவமானவை. அவை பேசும் மொழியும் சொல்லும் சேதியும் எளிமையானது. வாசகனை இலகுவாக சென்றடையக்கூடியது. மூனா போன்ற ஓவியர்கள் தொடர்ச்சியாக இயங்குவது என்பது சாதாரணமான ஒன்றல்ல. வாரம் தோறும் அன்றைய அரசியல் சூழல்களை மையப்படுத்தி யோசிக்கவும் வேண்டும், அந்த யோசனைகளை படங்களாக வெளிக்கொண்டுவரவும் வேண்டும். அவை வாசகனுக்கு புதிதாக ஒன்றை சொல்வதாகவும் இருக்கவேண்டும். எத்தனை நீண்ட, கடினமான பணி இது. ஆனாலும் மூனாவின் கரங்கள் ஒரு வாரம்கூட ஓய்வெடுத்ததில்லை. வாரம்தோறும் அவை எவ்வித தடங்கலுமின்றி வாசகர்களை சென்றடைந்துவிடும். இந்த 500 கருத்துப்படங்களும் பேசாத விடயங்களேயில்லை. சிங்கள பௌத்த மேலாண்மை மீதான கோபங்களை அவை வெளிப்படுத்தியுள்ளன. ஈழ அரசியலின் இரட்டைப் போக்குகள் குறித்து அவை விமர்சனங்களை முன்வைத்துள்ளன, ஈழத் தமிழ் சமூகம் செய்ய வேண்டிய பணிகள் குறித்தும் அவை பதிவுகளை மேற்கொண்டுள்ளன. தமிழக, உலக அரசியல் சார்ந்தும் அவை பேசியுள்ளன. மூனாவின் ஓவியங்கள் பொங்குதமிழின் முகங்களில் ஒன்று. 2009 ம் ஆண்டின் இறுதிப் பகுதி. பொங்குதமிழை ஆரம்பிப்பதற்கான ஆரம்ப பணிகளில் ஈடுபட்டிருந்தபோது, தற்செயலாக அவரின் வலைப்பக்கத்தை பார்க்க நேரிட்டது. அங்கு வெளியாகியிருந்த கருத்துப் படங்களைப் பார்த்தவுடன் அவரிடமிருந்து ஒரு படமாவது வாங்கிவிட வேண்டும் என்ற உந்துதலுடன் அவரின் மின்னஞ்சலுக்கு தொடர்புகொண்டேன். பதிலேதுமில்லை. நண்பர் இரஞ்சித் இலண்டன் ஐ.பி.சியுடன் இயங்கியவர். பலருடனும் அவருக்குத் தொடர்பிருந்தது. 'மூனா என்பவரை தெரியுமா? அவருடன் அறிமுகம் உண்டா' என்று பேச்சுவாக்கில் கேட்டேன். 'அவர் எனது நண்பர்தான், கேட்டுப் பார்க்கிறேன்' என்று மட்டும் சொன்னார் இரஞ்சித். எனக்கு ஏனோ நம்பிக்கையில்லை. ஆனால், நாம் எதிர்பார்த்த நாளுக்கு முன்னராகவே படம் வந்துசேர்ந்தது. அத்துடன் பொங்குதமிழின் அறிமுகம் குறித்து அவர் எழுதிய வாழ்த்தும் வந்து சேர்ந்தது. எமது வேண்டுதல்கள் எதுவும் இன்றியே தொடர்ந்தும் கருத்தோவியங்களை அனுப்பிக்கொண்டேயிருந்தார். பொங்குதமிழ் கட்டியமைக்க விரும்பிய கருத்துத்தளத்திற்கு அவரின் படங்கள் பெரிதும் துணைநின்றன. அவர் அனுப்புகின்ற படங்களில் சில வெளியாகாமலும் போனதுண்டு. ஆனாலும் அவை குறித்து அவர் எந்தக் கேள்வியும் எழுப்பியதில்லை. படைப்பொன்றை வெளியிடுவதும் தவிர்ப்பதும் பொங்குதமிழ் ஆசிரியரின் உரிமை என்ற விடயத்தில் அவர் எப்போதும் தெளிவாகவே இருந்தார். நீண்டகாலமாக ஜேர்மனியில் வாழ்ந்துவரும் மூனா, ஓவியர் மாற்கு அவர்களின் மாணவர். கருத்துப்பட ஓவியக்கலை பெரியளவில் வளர்ச்சிபெறாத ஈழத்தமிழ் சமூகத்தில் மூனாவின் பங்களிப்பு மிகப்பெரியது. அவரிடம் இயல்பாகவே உள்ள நகைச்சுவை உணர்வு கருத்துப்படங்களையும் அதே நகைச்சுவை கலந்த கிண்டலுடன் வரைவதற்கான ஆற்றலை அவருக்கு கொடுத்திருக்கிறது. தவிர, இக் கருத்துப்படங்களுடன் தொடர்பானவர்களும் மனம்கோணாத ஒரு நாகரீகமான எல்லைக்கோடு எப்பவுமே மூனாவிடம் இருந்ததுண்டு. தவிர, மூனாவின் கருத்துப்படங்கள் ஓர் உன்னதமான சமூக நோக்கில் நின்று வரையப்பட்டவை. ஆழமான கருத்துச்செறிவும், முள்ளிவாய்க்காலுக்குப் பின்னான ஐந்து ஆண்டுகால வரலாற்றின் முழுமையான பதிவுகளாகவும் அவை கொள்ளக்கூடியவை. அவரின் கருத்துப்படங்களை காலஒழுங்கில் பார்க்கின்ற ஒருவர், கடந்த ஐந்தாண்டு நிகழ்வுகள் தொடர்பான ஒரு மேலோட்டமான வரலாற்று ஓட்டத்தைப் பெற்றுவிட முடியும். அந்தளவிற்கு வரலாற்று நிகழ்வுகள் குறித்து ஆழமான பதிவுகளாகவும் அவை அமைந்துள்ளள என்பதே என் எண்ணம். பொங்குதமிழுக்கென அவர் வரைந்துதரும் கருத்தோவியங்களை வேறு பல இணையத்தளங்களும் பிரதிசெய்தி வெளியிட்டு வருகின்றன. கனடாவிலிருந்து வெளியாகும் பத்திரிகைகளும் பொங்குதமிழில் வெளியாகும் அவரின் கருத்தோவியங்களை வெளியிட்டு வருகின்றன. சில வருடங்களுக்கு முன்னர், அப்போதைய தமிழக முதல்வர் கருணாநிதி குறித்து மூனா வரைந்த ஒரு கருத்தோவியம் குறித்து, குமுதம் இணையத் தொலைக்காட்சியின் விவாதமொன்றில் பேசப்பட்டதையும் நானறிவேன். உண்மையைச் சொல்வதானால், ஓவியர் மூனாவுடன் தனிப்பட்ட முறையில் எனக்கு அறிமுகமேதுமில்லை. பொங்குதமிழுடன் அவர் இணைந்து பணியாற்றிய இந்த ஐந்து ஆண்டுகளில் ஒருமுறைதானும் நான் அவருடன் பேசியதில்லை. ஆனாலும் 500 கருத்தோவியங்களை பொங்குதமிழில் பூர்த்திசெய்துள்ள சாதனை குறித்து எழுதவேண்டும் என்ற உந்துதல் எனக்கு இருந்துகொண்டே இருந்தது. அவரின் தனித்துவமான இயல்புதான் அதற்கான முதற்காரணம். தன்னை முன்னிலைப்படுத்தாத இயல்பு அவருடையது. மூனா என்றும் இந்த கலைஞனுக்கு ஈழத்தமிழ் சமூகம் இன்னும் முழுமையான அங்கீகாரம் அளிக்கவில்லை என்ற வருத்தம் எனக்குண்டு. அவரின் கருத்தோவியங்கள் நூலாக்கம் பெறவேண்டும். வரலாற்றில் அவை பதிவாகவேண்டும். வாழ்த்துக்களும் வணக்கமும். http://ponguthamil.com/showcontentnews.aspx?sectionid=9&contentid=7ee47c90-a649-4413-ac37-6956e4cfc4c51 point
-
பக்கத்து வீடு
1 pointநாங்கள் இந்த வீட்டுக்கு வந்து இருபது ஆண்டுகள் முடியப்போகிறன. காலம் தான் எத்தனை வேகமாக எல்லாவற்றையும் கடந்துபோக வைக்கிறது. ஆசைகள் தான் மனிதனை ஆட்டிப் படைக்கின்றது. எனினும் பல ஆசைகள் நிராசையாகியும் போயிருக்கின்றனதான். நல்ல ஆசைகள் முயற்சியின் காரணமாக நிறைவேறி மனதுக்கு நிம்மதியையும் மகிழ்ச்சியையும் கொடுப்பதோடு மட்டுமல்லாது திருப்தியுடன் வாழ்வை நகர்த்திச் செல்கின்றன. திருப்தி எப்போது இல்லாது பேராசை மேலோங்குகிறதோ அதன்பின் மனிதன் வாழ்வின் இன்பமான நாட்களைத் தொலைத்து இன்னும் இன்னும் என்று வசந்தங்களை எல்லாம் தொலைத்து ஒன்றுமில்லாதவனாகி விடுகிறான். நான் மகிழ்வாகவும் நிம்மதியாகவும் தானே இப்பொழுது இருக்கிறேன் என என்னை நானே கேட்டுக்கொள்கிறேன். சுற்றிவர கண்ணாடி அறையினுள் தொங்கும் பூங்கன்றுகளை ஆசைதீரப் பார்க்கிறேன். எத்தனை தடவைகள் பார்த்தாலும் அலுக்காத பச்சைப் பசேல் எனவும் வண்ணவண்ண நிறங்களுடனும் பூத்துக் குலுங்கும் இந்தச் செடிக்கொடிகளை நாள் முழுதும் பார்த்துக்கொண்டே இருந்தாலும் எனக்குச் சலிப்பதில்லை. எட்டு ஆண்டுகளுக்கு முன் இதைக் கட்டியபோதும் சரி அதன்பின் சில மாதங்களாக நான் பட்ட மன வேதனையையும் எண்ண இப்போ சிரிப்புத்தான் வருகிறது. என் நீண்ட நாள் ஆசையான குளிர் காலத்திலும் பூங்கன்றுகள் வளர்ப்பதற்கான கண்ணாடி அறை ஒன்றை அமைப்பது குறித்து கணவருடன் பலநாட்கள் தர்க்கம் செய்தாகிவிட்டது. அந்தாளும் அசையிற மாதிரி இல்லை. நானும் விடுவதாய் இல்லை. “உதெல்லாம் வீண் செலவு. கொஞ்ச நாள் சும்மா இருக்க உன்னால முடியாது. காசை கரியாக்கிறதெண்டால் முன்னுக்கு நிப்பாய்” “இருந்தாப்போல செத்திட்டால் என்ர ஆசை நிறைவேறாமல் போயிடுமப்பா” “நீ ஒண்டைச் செய்ய நினைச்சால் செய்து முடிக்குமட்டும் விடவே மாட்டாய். உப்பிடிச் சொல்லிச் சொல்லியே எல்லாத்தையும் நிறைவேற்றிக் கொள்” “நான் என்ன நகை நட்டு வாங்கித் தாங்கோ என்றா கேட்கிறன்” “என்னவோ செய்து முடி” அடுத்த நாளே நான் வேலையைத் தொடங்கியாச்சு. சாதாரணமாக எந்தச் சிறிய கட்டட வேலை செய்வதாயினும் கவுன்சிலில் அதற்கான வரைபைக் கொடுத்து சிறிது பணமும் செலுத்தி அதற்கான அனுமதியைப் பெறவேண்டும். சாதாரணமாக மூன்று அடி உயரமும் மூன்று அடி நீளமும் இருந்தால் சரி. சரிவான கூரைக்கு அனுமதி தந்திருக்க, வேலை ஆரம்பிக்க வேலைகளைச் செய்வதற்கு ஒரு தமிழர் தான் ஒப்பந்தம் செய்யப்பட்டி ருந்தார். சமரில் முழுவதும் திறப்பதுபோல் மடியும் கதவுகள்வரை போட்டாச்சு. கூரை வேலை மட்டுமே மிகுதியாக இருக்க விக்டோரியன் ஸ்டைல் கூரை இன்னும் நன்றாக இருக்கும் அக்கா என்கிறார் அந்தத் தமிழர். எனக்கும் ஆசை எட்டிப்பார்க்க கவுன்சிலில் சாய்வான கூரை என்றுதானே கொடுத்துள்ளோம் என்கிறேன். பக்கத்து வீட்டுக்காரர் பிரச்சனை இல்லையோ என்கிறார். அந்தக் கிழவன் கொஞ்சம் துவேஷம் தான். ஆனால் கிழவி நல்லது என்கிறேன். அப்ப நான் விக்டோரியன் கூரையே போட்டு விடுறன். ஒரு ஆயிரம் பவுண்டஸ் தான் அதிகம் என்கிறார். அப்ப கவுன்சிலுக்கு அறிவிக்கத் தேவை இல்லையோ என்கிறேன். அவங்களுக்கு அறிவிச்சு திருப்ப பிளான் கீறி காசும் நாளும் விரயம் அக்கா என்கிறார். அந்தக் கூரையை எத்தனை பதிவாகப் போட முடியுமோ போடுங்கோ என்கிறேன். அவர்களும் எவ்வளவு பதிவாக்கமுடியுமோ அவ்வளவு பதித்தேதான் போட்டுவிட்டுப் பார்த்தால் மிக அழகாக இருக்க என் கண்ணே பட்டுவிடும்போல் கண்ணாடி அறை ஒளிர்கிறது. எதற்கும் ஒருக்கா அளந்து பார்ப்போம் என்று அலுமினிய அளவுநாடாவை எடுத்து அளந்து பார்க்க மூன்று மீற்றர் இருக்கவேண்டிய உயரம் முப்பது சென்ரிமீற்றர் அதிகமாக இருக்கிறது. என் மகிழ்ச்சி எல்லாம் ஒரு நொடியில் வடிந்துபோக ஒப்பந்தக்காரருக்கு போன் செய்கிறேன். அது பெரிய பிரச்சனை இல்லை அக்கா. நீங்கள் வீணாப் பயப்படாதைங்கோ என்கிறார். இதுக்கு மிஞ்சி என்ன செய்ய வருவது வரட்டும் என்று நான்கு மாதங்கள் பயத்துடனேயே கழிய குளிரும் குறைந்துகொண்டு வர சிறிது சிறிதாகப் பூங்கன்றுகள் எல்லாம் வைத்து கண்ணாடி அறை மிக அழகாகக் காட்சிதருகிறது. இலைதுளிர் காலமும் வந்துவிட எனக்கு அந்த அறையுள் நிற்பதும் இரசிப்பதுமாக காலம் நகர வெயிலும் எறிக்க ஆரம்பிக்கிறது. கணவர் கண்ணாடி அறையின் கதவுகளை முழுவதுமாகத் திறந்துவிடுகிறார். அந்தக் கண்ணாடி அறையின் அழகு தோட்டம் முழுதுமே பிரதிபலிக்கிறது. சமையல் செய்தபடியே நான் அவற்றை இரசித்தபடி இருக்க, அங்கு ஒரு சிறிய வட்ட மேசையும் கதிரைகளுமாய் நாம் உணவை அங்கு இருந்து இயற்கையை இரசித்தபடி உண்பதும் மனதுக்கு மகிழ்வாய் இருக்கிறது. வீண் காசு என்ற கணவரே உன்ர ஐடியா நல்லாத்தான் இருக்கு என்று கூற என் மனம் நிறைந்துபோகிறது. பிள்ளைகளும் படங்கள் எடுத்து அம்மாவின் பூங்கன்றுகள் என்று இன்ஸ்ரகிறாமில் படங்கள் போட எனக்குப் பெருமிதமாயும் இருக்கு. பறவைகளும் அணில்களும் போடும் உணவுகளைக் கொத்தி உண்பதும் ஒலி எழுப்புவதுமாக இருக்க அவற்றை இரசித்தபடி பார்த்துக்கொண்டிருக்கவே பொழுது போய்விட ஆறு மாதங்கள் முடிந்து போயிருந்தது. ஒருநாள் நானும் கணவரும் மட்டும் மதிய உணவை இரசித்துச் சுவைத்து உண்டு கொண்டு இருக்கிறோம். பக்கத்து வீட்டுக்கு அவர்களின் நண்பர்கள் யாரோ இருவர்கள் வந்திருக்கிறார்கள் போல. பெரிதாக சிரித்துக் கதைப்பது கேட்கிறது. சாதாரணமாக யாருமே வந்து நான் பார்ப்பதில்லை. யாராய் இருக்கும் என்கிறேன் கணவரைப் பார்த்து. நான் என்ன சாத்திரம் தெரிஞ்ச ஆளே. உன்னை மாதிரித்தான் நானும் என்று கணவர் சிரிக்க, அவர்கள் பக்கமிருந்து எமது கண்ணாடி அறையின் பக்கம் ஒரு தடி நீள்கிறது. நான் தான் அதை முதலில் பார்க்கிறேன். அங்க பாருங்கோப்பா. எங்கட சுவரை அளக்கினமோ என்கிறேன். அதுகள் என்ன செய்யுதோ. உனக்கு எப்பவும் வீண் பயம் என்றபடி அவர் திரும்பிப் பார்க்க மறுபடி மறுபடி கண்ணாடிச் சுவரில் ஒரு தடியை வைத்துப் பார்ப்பதைக் கணவரும் கண்டுவிடுகிறார். நீ சொன்னது சரிதான். உதுகள் எங்கடை சுவரை அளந்துதான் பார்க்குதுகள். பொறு பார்ப்போம் என்றுவிட ஏன் அளக்கிறீர்கள் என்று அஞ்சலாவிடம் கேட்கட்டா என்கிறேன். பேசாமல் இரு, சும்மா இருந்த சங்கை ஊதிக் கெடுத்தானாம் ஆண்டி எண்டதுபோல நீ கேட்கப்போய் பெரிசுபடுத்தாதை என்றுவிட்டு எழுந்துவிட நானும் யோசனையோடு எழுகிறேன். அடுத்துவந்த ஒவ்வொருநாளும் எனக்கு நிம்மதி இன்றிக் கழிய சரியாக ஒரு மாதத்தின் பின் ஒருநாள் கவுன்சிலில் இருந்து நான் எதிர்பார்த்த கடிதம் வந்திருக்க படபடப்புடன் கடிதத்தை உடைக்கிறேன். நீங்கள் கவுன்சிலில் தந்த பிளானில் இல்லாத விக்டோரியன் ஸ்ரையில் கண்ணாடி அறையைக் கட்டியுள்ளதாக எமக்கு முறைப்பாடு வந்துள்ளது. வருகிற வெள்ளி கவுன்சிலில் இருந்து ஒருவர் அதைப் பார்க்க வருவார் என்று போட்டிருக்க, எனக்குக் கோபம், அவமானம், ஏமாற்றம் எல்லாம் ஒன்றாக எழுகின்றன. மனிசனுக்கு போன் செய்கிறேன். “அண்டைக்கே சொன்னனான். உதுகளின்ர குணத்துக்கு வளவுக்குள்ள வந்த ஆமையை அடிச்சுச் சாப்பிடாட்டிலும் எங்கேயாவது கொண்டுபோய் விட்டிருக்கவேணும். நீயும் மேளும் தடுத்திட்டியள்” “ஆமையின்ர பாவம் எங்களுக்கு எதுக்கப்பா? எப்பிடி உதுகளுக்கு நாங்கள் சாய்வான கூரைக்குத்தான் குடுத்தனாங்கள் எண்டு தெரிஞ்சது?” “நாங்கள் கட்ட முதலே கவுன்சில் அவர்களுக்கும் கடிதம் போடும்” “அப்ப முதலே உவை எங்களுக்குச் சொல்லி இருக்கலாம் தானே” “அவை உன்ர சொந்தக்காரரே. சரி வீட்டை வந்து கதைக்கிறன்” என்றபடி கணவரின் போன் நிறுத்தப்பட யோசனையோடு நானும் போனை வைக்கிறேன். . இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் நடந்தது நினைவில் வருகிறது. பக்கத்து வீட்டார் ஒரு ஆமையை வளர்க்கின்றனர். நாம் வந்தநாள் முதல் சமரில் பகலில் அவர்கள் பின் வீட்டுத் தோட்டத்தில் அங்கும் இங்குமாய் திரியும் இரவில் அதைப் பின் வளவில் உள்ள கட்டடத்தின் உள்ளே விட்டு அடைத்துவிடுவார்கள். ஆனால் அந்த கட்டட அமைப்பு எப்படி இருக்கு என்று பார்க்கவேண்டும் என்ற ஆசை எனக்கு இருந்தாலும் இதுவரை பார்க்கும் சந்தர்ப்பம் எனக்குக் கிடைத்ததே இல்லை. ஒருநாள் பக்கத்து வீட்டு ஆமை எங்கள் வளவுக்குள் வந்துவிட்டது. இந்தப் பத்து ஆண்டுகளில் இதுதான் முதல் தடவை. மகள் கண்டுவிட்டு கணவரைக் கூப்பிட்டுக் காட்ட கணவர் அதைக் கையில் எடுத்து இரண்டு கிலோ இருக்கும் போல. கறி வைத்தால் எப்பிடி இருக்கும் என்கிறார் கணவர். நானும் மகளும் ஒரே நேரத்தில் உங்களுக்கு விசரா என்கிறோம். கிழவன்ர கொழுப்புக்கு உதுதான் செய்யவேணும் என்கிறார் மீண்டும். கடைசிவரை உதுக்கு நான் சம்மதிக்க மாட்டேன் என்று நான் கூற லபக் என்று மகள் ஆமையைக் கணவரின் கைகளிலிருந்து வாங்கி விடுவவிடுவென்று கொண்டுசென்று அவர்களிடம் கொடுத்துவிட்டு வருகிறாள். அடுத்தநாள் என்னைக் காணும்போது இரண்டு மூன்று தடவை ஆமையைக் கொடுத்ததற்கு அஞ்சலா என்னிடம் நன்றி கூற எனக்கே ஒருமாதிரியாகிப்போகிறது. ************ கவுன்சில்க் கடிதம் வந்த அடுத்தடுத்த நாட்கள் வெளியே செல்லும்போது அஞ்சலாவையோ கணவனையோ கண்டும் காணாமல் செல்லவாரம்பிக்கிறேன். கணவனும் யாருக்கும் எதுவுமே சொல்வதில்லை என்று கூற நான் வணக்கம் சொல்கிறனான் என்கிறாள் மகள். அதற்கு நான் எதுவும் கூறாது அமைதி காக்கிறேன். நீங்கள் அவர்களைக் கோபித்து என்ன பயன். முதலே சரியாகச் செய்திருக்க வேண்டும். அவர்கள் இந்த நாட்டவர். நாம் வெளிநாட்டவர். சட்டதிட்டத்துக்கு அமையச் சரியாக நடக்கவேண்டும் என்று எதிர்பார்ப்பதில் என்ன குற்றம் அம்மா என்கிறாள். என்னிடம் அதற்குப் பதில் இல்லைத்தான். எம் வீட்டுக்கு பின்னால் உள்ள எத்தனையோ வீடுகளுக்கு நாம் கட்டியதிலும் உயர்வான நான்கு மீற்றர் உயரக் கண்ணாடி அறைகள் கூடக் கட்டப்பட்டிருக்க இந்தக் கேவலம் கெட்டதுகள் எரிச்சலில் கவுன்சிலுக்குச் சொல்லியிருக்குதுகள் என்று மனதுள் பொருமியபடி அடுத்த வாரத்துக்காகக் காத்திருக்கிறேன். ஒரு வாரத்தின் பின் வந்த கவுன்சில் பொறியியலாளர் நீங்கள் கூரையை மாற்றவே வேண்டும். உயரத்தைக் கண்டும் காணாமல் விட்டுவிடுகிறேன். ஆனால் எல்லாம் சரி என்ற பத்திரத்தை என்னால் வழங்க முடியாது என்கிறார். இந்தளவோடு விட்டாரே என மனதில் நிம்மதி ஏற்பட வேறுவழியின்றிக் கூரை மாற்றிய செலவு 1500 பவுண்டஸ் நட்டமாகியதுதான் மிச்சம் என்று கணவர் புறுபுறுத்ததை கேட்டும் கேளாதாவளாய் இருக்க மட்டுமே முடிந்தது. மாற்றிய கூரையைப் பார்க்கும் நேரம் எல்லாம் பக்கத்து வீட்டின் மேல் வரும் கோபம் மாறாமலே ஒரு ஆண்டு ஓடிப்போக வேலை முடிந்து ஒருநாள் வந்து இறங்கும்போது பக்கத்து வீட்டின் முன் ஆம்புலன்ஸ் நிற்க என்னவாக இருக்கும்என்று யோசித்தபடி உள்ளே செல்கிறேன். அடுத்தநாள் மாலை கடைக்குச் செல்வதற்காக வெளியே சென்றபோது வழியில் அஞ்சலா வந்துகொண்டிருப்பது தெரிய நானாகவே வணக்கம் என்றுவிட்டு யாருக்கு என்ன பிரச்சனை? நீ ஓகே தானே என்கிறேன். அஞ்சலாவின் முகம் சோர்ந்து போய் இருக்கிறது. மார்க்குக்கு நேற்று காட் அற்றாக் வந்து வைத்தியசாலைக்குக் கொண்டு சென்றவர்கள். இன்று கண் திறந்துவிட்டார். ஆனால் ஒரு காலும் கையும் இயல்பாக இல்லை என்கிறார். அவருடன் ஆறுதலாகக் கதைத்துவிட்டு வந்தாலும் நீ எனக்குச் செய்ததுக்கு வேணும் என்று என் மனம் எண்ண, அற்ப மகிழ்ச்சிகூட எட்டிப்பார்க்கிறது. அதன்பின் எப்போதாவது மார்க்கை பிரத்தியேக வாகனம் வந்து அழைத்துப்போகும். அதுதவிர வெளியே அவரைக் காணவே இல்லை. ஆனாலும் அஞ்சலாவை சுகம் கேட்பதை நான் நிறுத்தவில்லை. நாம் முதல் முதல் அந்த வீட்டுக்கு வரும்போதே வீட்டின் வாசலுக்கு அண்மையில் மிகப் பெரிய ஊசி இலை இன மரம் ஒன்று நீண்டு நெடிதாய் வளர்ந்திருந்தது. பார்ப்பதற்கு அழகாய் இருந்ததுதான். ஆனாலும் வீட்டுக்கு அண்மையில் இதை ஏன் வைத்தார்கள் என்னும் அளவு அதன் கிளைகள் வாசல் கதவைத் திறக்க முடியாதபடி பெரிதாகிக் கொண்டிருந்தன. நாம் கதவைத் திறந்து உள்ளே செல்லாது அந்த மரத்தை வெட்டுவோமா என்று கதைத்துக்கொண்டு நிற்க, பக்கத்து வீட்டு வெள்ளைக்காரர் ஒரு அறுபது வயதாவது இருக்கும் வணக்கம் என்கிறார். நாமும் வணக்கம் சொல்லி முடிய நீங்கள் தான் இங்கு குடிவருக்கிறீர்களா என்கிறார். ஓம் என்று என் கணவர் தலையாட்ட வாடகைக்கு இருக்கப்போகிறீர்களா என்கிறார் மீண்டும். இல்லை இதை நாம் வாங்கிவிட்டோம். எமது சொந்த வீடு என்று கூறி முடிய முதலே இந்தமரத்தை வெட்டிவிடுங்கள். இதன் வேர் என் வீட்டு அத்திவாரத்தையும் வெடிக்கச் செய்துவிடும் என்கிறார். என்னடா இது வந்து வீட்டுக்குள் செல்லவே இல்லை. இந்த மனிதன் மரத்தை வெட்டச் சொல்கிறதே என்கிறேன். நீயும் வெட்டுவது பற்றிக் கதைத்தாய் தானே. பிறகெதற்கு கிழவனைக் குறை சொல்கிறாய் என்று கணவர் என்னை கடிந்துவிட்டு வெட்டத்தான் வேண்டும். நாம் இன்றுதான் வந்திருக்கிறோம். நிறைய வேலைகளிருக்கு. முடிந்தபிறகு பார்ப்போம் என்று கூறி உள்ளே செல்கிறோம். ஒரு ஐந்து நிமிடங்கள் ஆகவில்லை. கதவின் அழைப்பு மணி அடிக்க யார் என்று பார்த்தால் பக்கத்துவீடுக்காரர் மரம் அரியும் வாள் ஒன்றுடன் நிற்கிறார். நான் கீழே உள்ள கிளைகளை வெட்டிவிடுகிறேன் மிகுதியை நீங்கள் வெட்டுங்கள் என்று சிரித்தபடி கூற, சரி வெட்டுங்கள் என்கிறார் கணவர். நாம் உள்ளே சென்று வேறு விடயங்களைக் கதைத்துவிட்டு வந்து பார்த்தால் மரத்தின் அரைவாசிக் கிளைகள் வெட்டப்பட்டு எம் வீட்டின் முற்றத்தில் குவிக்கப்பட்டிருக்க இனி நீங்கள் வெட்டுங்கள் என்று கூறி வாளையும் எம்மிடம் தந்துவிட்டு அவர் உள்ளே போக, நானும் கணவரும் சேர்ந்து மிகுதியை வெட்டிக் குவித்துவிட்டோம். பக்கத்து வீட்டுக் கணவன் மனைவி இருவரும் வெளியே வந்து இப்போதுதான் வீட்டைப் பார்க்க நன்றாக இருக்கு என்று முகமெல்லாம் பல்லாய் கூறிவிட்டுச் செல்ல நாமும் நல்லதொரு சனம் பக்கத்தில என்று மகிழ்ந்துதான் போனோம். அந்தமரத்தின் கிளைகளை அகற்ற நான்கு தடவை காரில் கொண்டுசெல்லவேண்டி இருந்தது வேறு கதை. அதன் பின் எம்மைக் கண்டால் ஒரு வணக்கம் சொல்வதோடு சரி. அவர்களுக்கு ஏதும் எம் உணவு செய்துகொண்டுபோய் கொடுப்போமா என்கிறேன் கணவரிடம். நாங்கள் குடுக்க, அவை தர எதுக்கு உதெல்லாம் பேசாமல் இரு என்று கணவர் சொன்னது எனக்கும் சரியாகவே படுகிறது. அதன்பின் ஐந்து ஆண்டுகள் வணக்கம் சொல்வதுடனேயே கழிகிறது. நத்தார் தினத்துக்கு இரு வாரத்துக்கு முன்னர் வாழ்த்து மடல் போட, நாமும் திருப்ப அவர்களுக்குப் போடுவதுடன் எங்கள் உறவு நிறைவடைந்துவிடும். மூன்று பிள்ளைகளுடன் இருந்த எமக்கு சமையலறை மிகச் சிறிதாக இருக்க வீட்டைப் பின்புறமாக நீட்டுவதற்கு ஆலோசித்து அந்த வேலைகளில் இறங்க, சைனீஸ் வேலையாட்கள் கூறிய பொருட்களை கடைகளில் ஓடர் செய்ய, அவர்கள் வாகனங்களில் கொண்டுவந்து இறக்குகின்றனர். மரக் குற்றிகள், நீளமான பலகைகள் என்பன வந்து இறங்குகின்றன. அவர்கள் நடைபாதையில் அவற்றை இறக்கி வைக்கின்றனர். சில பலகைகள் ஆறு மீற்றர் நீளம் கொண்டவை, அவை பக்கத்து வீட்டு வாசலைக் கடந்து நிற்கின்றன. இன்னும் சிறிது நேரத்தில் வேலையாட்கள் வந்துவிடுவார்கள். அதன்பின் அவர்கள் இறக்கியவற்றை உள்ளே கொண்டு செல்வார்கள். “நாங்கள் அதை எடுத்துக்கொண்டு போய் உள்ளே வைப்போமா” என்று கணவரைக் கேட்கிறேன். “நீ உன்ர அலுவலைப் பார். அவங்கள் தூக்கி வைப்பாங்கள்” என்று கணவர் சொல்லி முடிக்குமுன்னரே எங்கள் அழைப்புமணி கோபத்துடன் அழுத்துப்பட கணவர் சென்று கதவைத் திறக்க, பக்கத்து வீட்டு மனிதர் தன் வளவில் முகத்தில் எள்ளும் கொள்ளும் வெடிக்க நிற்கிறார். “நீயா மணியை அழுத்தினாய்” “ஓம் நான் தான். நீ உடனடியாக உந்தப் பலகைகளை எடு. எனக்கு இடைஞ்சலாக இருக்கு” “உனக்கென்ன இடைஞ்சல்? உன் வீட்டுக்குள்ளா வைத்திருக்கிறோம்” “என் வாசல் வரை வந்திருக்கு. நான் வெளியே செல்லவேண்டும்” “உனக்கு அவசரம் என்றால் கடந்து செல். இன்னும் 10 நிமிடங்களில் வேலையாட்கள் வந்து தூக்குவார்கள்” “நான் போலீசுக்கு போன் செய்யப் போகிறேன்” “தாராளமாகச் செய்” கணவர் கதவை அடித்துச் சாத்திவிட்டு வருகிறார். “என்னப்பா பிரச்சனை” “பக்கத்து வீட்டுக் கிழடு சரியான துவேஷம். மரங்கள் தனக்கு இடைஞ்சலாம். உடனே தூக்கு என்கிறது” “அதுக்குத்தான் நான் முதலே நாங்கள் தூக்குவம் என்றனான்” “நீ உன்ர அலுவலைப் பார். அவர் போலீசுக்கு அடிக்கமாட்டார். எங்களை வெருட்டுறார்” “இத்தனை ஆண்டுகளாய் இருக்கிறம். ஒரு சத்தம் கூடப் போட்டதில்லை. அடிமனதில் நாங்கள் கறுப்பர் எண்டது உதுகளுக்கு இருக்கு. அதின்ர வெளிப்பாடுதான் இது” “சரியப்பா டென்ஷன் ஆகாமல் பெல் அடிக்குது. திரும்பக் கிழவன்தானோ தெரியேல்லை. போய் கதவைத் திறவுங்கோ” அடுத்தநாள் காலை நான் வேலைக்குச் செல்ல வெளியே வர, நான் எப்ப வருவேன் என்று பார்த்துக்கொண்டு இருந்ததுபோல் பக்கத்துவீட்டுப் பெண் கதவைத் திறந்து வணக்கம் என்கிறார். அவருக்கும் வயது ஒரு ஐம்பத்தைந்து அறுபது இருக்கலாம். குறை நினைக்காதை டியர். என் கணவர் கொஞ்சம் முசுடு. நேற்று அப்படிக் கதைத்துவிட்டார். மன்னித்துக்கொள் என்கிறார். எனக்கு உடனே மனது இளகிப்போக அதனால் என்ன. நாம் எதுவும் நினைக்கவில்லை என்று கூற அஞ்சலாவின் முகம் மலர்ந்துபோக நான் பாய் என்றுவிட்டுக் காரில் ஏறுகிறேன். அதன்பின் என் கணவர் பக்கத்து வீட்டுக்காரருக்கு வணக்கம் எதுவும் சொல்வதில்லை. ஆனால் என்னை கண்டால் அவர் வணக்கம் சொல்ல நானும் சொல்வேன். அஞ்சலாவைக் கண்டால் மட்டும் நின்று கதைபேன். அவவும் நானும் பிள்ளைகளின் படிப்பு என் வேலை இப்படி இரண்டு மூன்று விடயங்களைக் கதைத்துவிட்டு போய்விடுவோம். நாம் மூன்று பிள்ளைகள் என்பதால் வாரத்தில் இரு நாட்கள் உடைகளைத் துவைத்துக் காயவிடுவோம். கோடை காலங்களில் வெளியே போட்டால் அன்றே காய்ந்துவிடும். குளிர் காலத்தில் வீட்டின் உள்ளே இரண்டு நாட்கள் எடுக்கும். கொடி முழுவதும் எம் ஆடைக்களால் நிரம்பி வழியும். ஆனால் அவர்கள் வீட்டில் இரண்டு மூன்று ஆடைகளே காயப்போட்டிருக்கும். பணத்தை ஏன் இப்படிமிச்சம் பிடிக்கின்றனர். வெள்ளைகள் வாழ்வை நன்றாகத்தானே அனுபவிக்கின்றனர். இவர்கள் மட்டும் ஏன் இப்படி என்று எண்ணிக்கொள்வதோடு சரி. கேட்பதற்கு முடியவில்லை. நாம் ஒருதடவை நானும் கணவரும் கிரேக்கத்துக்குச் சென்று வந்தபோது எம்மைக் கண்ட அஞ்சலா “ஓ விடுமுறைக்குச் சென்று வருகிறீர்களா” என்றுமட்டும் கேட்டுவிட்டுச் சென்றுவிட்டார். அடுத்த நாள் என்னைக் கண்டபோது எங்கே சென்றீர்கள்? என்றார். நான் கிரேக்கம் என்றதும் வாயைப் பிளந்தபடி பயமின்றிப் போய் வந்தீர்களா என்றார். நீங்கள் அங்கு சென்றிருக்கிறீர்களா? மிக அழகிய இடம். எந்தப் பயமும் இல்லை என்கிறேன். நான் லண்டன் நகருக்கே இதுவரை சென்றதில்லை. என் கணவருக்கு எங்கு செல்வதும் பிடிக்காது என்றுகூற எனக்கு நம்பமுடியாததாக இருக்கிறது. கோடை மாரி குளிர் வெயில் என்று காலங்கள் எத்தனை விரைவாகச் சென்றுவிட்டன. *********************************** நாம் லண்டன் வந்து பதினெட்டு ஆண்டுகள் ஆகிவிட்டதை நம்பத்தான் முடியாமல் இருக்கு. பதினெட்டு ஆண்டுகளா என்னும் மலைப்போடு பல யுகங்கள் ஆகிவிட்டதான ஆயாசமும் சேர்ந்துகொள்கிறது. இத்தனை ஆண்டுகளில் பக்கத்து வீட்டுக்கு ஒருநாள் கூட நாங்கள் போக முடியவில்லையே என்னும் ஆதங்கம் மனதில் ஏற்படுகிறது. சில நண்பர்கள் அயல் நாட்டுப் பக்கத்து வீட்டாரைப் பற்றிச் சொல்லும்போது எமக்கும் ஒரு நல்ல நட்பான பக்கத்து வீடு அமைந்திருக்கலாமோ என்னும் எண்ணம் எழும். நாம் மட்டும் எல்லோரோடும் நட்போடுதான் பழகினோமா என்னும் கேள்வியும் கூடவே எழும். பிடித்தவர்களுடன் மட்டும்தானே நெருக்கமாகினோம். எமது பக்கத்து வீட்டாருக்கும் எமக்கும் நல்ல பொருத்தங்கள் இல்லைபோல என நானே என்னை ஆற்றிகொள்கிறேன். ஒருநாள் அவர்கள் வீட்டுக்கு இரண்டு மூன்று வெள்ளை இனத்தவர் வந்துபோக ஏதும் விசேடமாக இருக்குமோ என்று எண்ணியபடி செல்கிறேன். மூன்றாவது வீட்டில் வசிக்கும் ஆபிரிக்கப் பெண்மணி எப்பவாவது கண்டால் நின்று கதைப்பார். அன்று கண்டவுடன் மார்க் எப்படி இறந்தார் என்று கேட்கிறார். இறந்துவிட்டாரா? எனக்கு இதுவரை தெரியாதே என்கிறேன். நேற்று இரவு நான் வேலை முடிந்து வந்தபோது அம்புலன்சில் ஏற்றினார்கள். முகத்தை மூடியிருந்தது. அதனால்தான் கேட்டேன் என்கிறார். எனக்கு என்ன செய்வது என்று தெரியவில்லை. ஊரில் என்றால் ஒருவர் இறந்தால் அடுத்தமணியே அனைவருக்கும் தெரிந்துவிடும். பக்கத்து வீட்டில் இருந்தும் எனக்குத் தெரியவில்லை என்பது வெட்கமாகவும் குற்றஉணர்வாகவும் இருக்க கணவருக்குப்போன் செய்கிறேன். கணவர் போனை எடுக்கவில்லை. அஞ்சலாவின் வீட்டுக் கதவைத் தட்ட அவரே வந்து திறக்கிறார். “நான் மார்க் பற்றிக் கேள்விப்பட்டேன்” “ஓ நேற்று மாலை இறந்துவிட்டார். இரவு ஏழு மணிவரை வீட்டில் வைத்திருந்தோம். அதன்பின் கொண்டுசென்றுவிட்டார்கள்” “ஏலாமல் இருந்தாரா” “ஆறு மாதங்கள் படுத்த படுக்கைதான். ஒரு நர்ஸ் வந்து பார்த்துவவிட்டுச் செல்வார். எனக்கு அவரை கோமில் கொண்டுபோய் விட விருப்பம் இல்லை. என் பிள்ளைகள் பலதடவை சொன்னார்கள்” “உனக்குப் பிள்ளைகள் இருக்கின்றார்களா??” “ஓம் இரண்டு ஆண் பிள்ளைகள். ஒருவன் திருமணமாகி மான்சஸ்ரரில் இரண்டு குழந்தைகளுடன் இருக்கிறான். மற்றவன் திருமணம் செய்யவில்லை. அவனும் தூரத்தில்த்தான்.” “நான் அவர்களை ஒருநாளும் கண்டதில்லையே” “அவர்களுக்கு எங்கே நேரம். கடைசி மகன் அப்பப்ப வந்துவிட்டுப் போவான். அவனுக்கும் தகப்பனுக்கும் சரிவாராது” “அவர்கள் வந்திருக்கிறார்களா?” “இல்லை நாளைதான் வருவார்கள்” “தனியாகத்தான் வீட்டில் இருக்கிறாயா? யாரும் துணைக்கு இல்லையா?” “இல்லை எனக்குப் பழகிவிட்டது” “உனக்கு உணவு ஏதும் கொண்டுவந்து தரட்டுமா??” “வேண்டாம், வேண்டாம். என்னிடம் உணவு இருக்கிறது” “ஏதும் தேவை என்றால் என்னைக் கூப்பிடு” “நன்றி தேவை என்றால் அழைக்கிறேன்” வீட்டுக்கு வந்தபின் மனதில் எதுவோ அடைத்ததுபோல் இருக்க அஞ்சலா என்னை வீட்டுக்குள் வா என்று அழைக்காததும் மனதை எதுவோ செய்ய மனிசிக்கும் என்ன பிரச்சனையோ என்று மனதைத் தேற்றிக் கொள்கிறேன். ஒரு வாரத்தின் பின் மார்க்கின் மரண வீடுக்கு நானும் கணவரும் சென்றிருந்தோம். எல்லோருடனும் கை குலுக்கிய பிள்ளைகள் எம்முடனும் அடுத்த வீட்டு ஆபிரிக்கப் பெண்ணிடமும் கை குலுக்காததை கவனித்தபின் மனதில் சிறிது ஆசுவாசம் ஏற்பட்டதுதான். ஒரு மாதம் செல்ல மீண்டும் இலைதளிர் காலத்தில் கடைசி மகன் தாயுடன் வசிக்க வந்துவிட பக்கத்து வீட்டில் பேச்சும் சிரிப்புமாக அஞ்சலாவின் வாழ்கை மாறியிருந்தது. கொடிகளில் விதவிதமாக அழகிய ஆடைகள் காய்ந்தன. எழுபத்தைந்து வயதான முகத்தில் ஒரு பளபளப்பும் மலர்ச்சியும் தெரிந்தன. கிழவியைப் பாத்தியே. விதவிதமாய் உடுப்புப் போடுது என்று கணவர் நக்கலாகக் கூற எனக்குக் கோபம் வருக்கிறது. அந்தக் கிழவன் சரியான அடக்குமுறையாளனாகத்தான் இருந்திருக்க வேண்டும். இப்பவாவது அந்த மனிசி தன் ஆசைப்படி வாழட்டுமன். உங்களுக்கு அதில் என்ன நட்டம் என்கிறேன். கடந்தவருடம் இலங்கை சென்று ஆறு மாதங்களின் பின் தான் நான் திரும்பி வந்தேன். அடுத்தநாள் நான் வெளியே செல்ல என்னைக் கண்ட அஞ்சலா “ஓ டியர் உன்னை இத்தனை நாள் நான் காணவில்லை. எங்கே சென்றாய், உனக்கு ஏதும் ஆகிவிட்டதோ என்று நான் பயந்துவிட்டேன்” என்றபடி கட்டியணைக்க நான் திக்குமுக்காடிப்போய் பேச்சற்று நிற்கிறேன்.1 point
-
உலகத் தமிழர் பேரவை உறுப்பினர்களின் படங்கள் மீது முட்டை வீச்சு!
ஆயுதங்கள் மெளனிக்கப்பட்டு கிட்டத்தட்ட 15 வருடங்கள் ஆகின்றது. இன்னும் இதே அளவு காலம் சென்றால் 30 வருடங்கள். இனி வரும் தலைமுறை பிரச்சனைகளை எப்படி கையாளுமோ.1 point
-
ரஷ்யா - உக்ரைன் போர் செய்திகள்
1 pointஐயோ பயங்கரமாக பயமுறுத்துகிறார்களே 😭 தற்போது ஈரானுடன் கூட்டு சேர்ந்த ஆண்கள் எல்லாம் தாடி வைத்து பெண்கள் எல்லாம் புர்க்கா கட்டாயமாக்கபட்ட ஷரியா சட்டம் ஆட்சி செய்கின்ற நவீன கம்யுனிச பேரரசு. நல்ல நாடுகளில் நன்றாக வாழ்ந்து கொண்டு எதற்காக பயங்கரமான கணவுகள் காணவேண்டும்1 point
-
உலகத் தமிழர் பேரவை உறுப்பினர்களின் படங்கள் மீது முட்டை வீச்சு!
உரம் விக்கிற விலையில மாட்டுச்சாணியை இவர்களுக்கு வேஸ்ட் பண்ணக்குடாது வேணுமெண்டால்......1 point
-
ரஷ்யா - உக்ரைன் போர் செய்திகள்
1 point
-
ரஷ்யா - உக்ரைன் போர் செய்திகள்
1 pointஎங்கள் கண்ணெதிரில் பழைய உலக ஒழுங்கு மறைந்து புதிய உலக ஒழுங்கு ஒன்று உருவாகிவருவதைக் காண்கிறோம். உண்மையை ஏற்றுக்கொள்ள நெஞ்சுரம் வேண்டும்.1 point
-
தமிழ் மக்கள் பக்கம் நின்றே நாம் தீர்க்கமான முடிவை எடுப்போம்-சம்பந்தன்!
ஓஓஓ அப்ப சிங்களமக்கள் பக்கம் நின்று 2015 இல் செய்தது போல இம்முறையும் செய்யும் எண்ணம் ஐயாவுக்கு இருக்கிறதா? ஐயாவைக் கேட்டு என்ன பிரயோசனம்? வருங்கால தலைவர் சுமந்திரனைக் கேட்டால்த் தான் எதிர்கால முடிவுகள் தெரியும்.1 point
-
உலகத் தமிழர் பேரவை உறுப்பினர்களின் படங்கள் மீது முட்டை வீச்சு!
எமக்கு முன்னமே தெரியும் ..பேச்சுவார்த்தையில் பேசப்படும் எந்த விடையமும்..நடைமுறைப்படுத்த சிங்களம் தயாரில்லை.. ஆனால் உலகப்பந்திலெமக்கான குறைந்தளவு தீர்வுக்கான ,அல்லதுசட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படும் சூழ்நிலை வரும்போது..அரசின் கைக்கூலிகள் ..இலங்கைநோக்கிப் படைய்டுப்பார்கள்...நடைபெறும் ஆலாபனையில்..உள்ளதும் இல்லாமல் போகும்...இதற்கு யாழில் உள்ள ஒத்தூதி தொடக்கம் முதலே மூளைச்சலவை செய்யத்தொடங்கிவிடுவார்..எனெனில் அவரி ன் தொழிலே அதுதான்..இந்த யாழில் இவர் முன்மொழியாத பேச்சுவார்த்தை நாடகம் ஏதாவது உண்டா என்று யாராவது கூறட்டும் பார்க்கலாம்...எனெனில் அவரின் டிசைனே அப்படி..கனடா ,அவுச்திரேலிய ,லண்டன் பொது அமைப்புக்களே.. இதற்கு கண்டனம் தெரிவிக்கும்போது..யாழில் ஒருவர் மட்டும் ஊதிப்பெருப்பித்து ஆரவாரம்..செய்வதன் நோக்கம் என்ன..பொது சனங்களே உங்கள் தீர்ப்புக்கு விட்டுள்ளேன்..1 point
-
தமிழ் மக்கள் பக்கம் நின்றே நாம் தீர்க்கமான முடிவை எடுப்போம்-சம்பந்தன்!
தமிழ் மக்கள் இவளவுகாலமும் எவளவு பிழையா விளங்கி இந்த மனிதனைத் திட்டித்தீர்த்திருக்கினம். இனித்தானாமே அவர் தமிழர்பக்கமாக நின்று தீர்க்கமான முடிவை எடுக்கப்போறாராம். திருகோணமலையிற் தனக்கு வாக்குப்போட்ட மக்களுக்கே ஒன்றும் செய்யாதவரால் இனி எழும்ப முடியாத காலத்தில் என்னத்தை செய்ய உத்தேசம். என்ன கடைசியிலை இந்தியா கைகாட்டுற தலைக்குப் கைப்பெட்டியை வேண்கொண்டு கையைக் காட்டுவார். வேறென்னத்தை செய்யப்போகிறார்.1 point
-
அறிவித்தல்: யாழ் இணையத்தில் இருந்து 'திண்ணை' நீக்கம்
வணக்கம், ஆரோக்கியமான உரையாடல்களுக்காகவும் யாழ் கள உறவுகளுக்கிடையேயான இலகுவான மற்றும் சுமூகமான கருத்தாடல்களுக்கான மேடையாகவும் அமைக்கப்பட்டு இருந்த திண்ணை, பல முறை விதி மீறல்களை பற்றி குறிப்பிட்டும் அவற்றை அலட்சியம் செய்து யாழ் கள விதிகளுக்கு முற்றிலும் எதிராகவும், களத்தில் நீக்கப்படுகின்ற விதி மீறல்களுக்குரிய கருத்துகளை வைப்பதற்கான தளமாகவும்,குழுவாதத்தை தூண்டுவதற்கான வெளியாகவும் பயன்படுத்தப்பட்டு வந்தமையால் யாழில் இருந்து நீக்கப்படுகின்றது. நன்றி நிர்வாகம்1 point
-
உலகத் தமிழர் பேரவை உறுப்பினர்களின் படங்கள் மீது முட்டை வீச்சு!
அப்படியென்றால், கந்தையரும் அல்வாயனும் குறை கூறிக்கொண்டு இருப்பீர்களே தவிர அதற்கான காரணங்களைச் சொல்லப் போவதில்லை? நீங்களும் செய்யப்போவதில்லை, யாரவது நன்மை செய்ய முனைந்தால் அவர்களையும் விடப் போவதில்லை. இதற்கு தமிழில் அழகான சொல்லடை ஒன்று உண்டு,......1 point
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
1 point
-
யாழ். நீராவியடியில் தென்னாடு செந்தமிழ் ஆகம மார்கழிப் பெருவிழா
Published By: VISHNU 26 DEC, 2023 | 01:12 PM தென்னாடு செந்தமிழ் ஆகம சிவமட சைவ மாணவர் சபை முன்னெடுத்த மார்கழிப் பெருவிழா திங்கட்கிழமை (25) இலங்கை வேந்தன் கலைக்கல்லூரி மண்டபத்தில் இடம்பெற்றது. காலை, மாலை அரங்குகளாக மார்கழிப் பெருவிழாவில் திருமுறை விண்ணப்பம், சிறப்பு உரைகள், பட்டிமன்றம் உள்ளிட்ட தெய்வீக நிகழ்வுகள் இடம்பெற்றன. https://www.virakesari.lk/article/1724931 point
-
யாழ். நீராவியடியில் தென்னாடு செந்தமிழ் ஆகம மார்கழிப் பெருவிழா
என்னுடைய அயல்தான் ......பார்க்கவே ரம்மியமாய் இருக்கிறது, மனசு பூ - பூக்கிறது........! 🙏 நன்றி ஏராளன் .......!1 point
-
15 கோடி ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த கடல் அசுரனின் மண்டை ஓடு கண்டுபிடிப்பு
பதவி, பிபிசி நியூஸ் 4 மணி நேரங்களுக்கு முன்னர் பிரிட்டன் நாட்டின் டோர்செட்டில் உள்ள ஜுராசிக் கடற்கரையின் பாறைகளிலிருந்து பிரமாண்டமான கடல் அசுரனின் மண்டை ஓடு கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இது சுமார் 15 கோடி ஆண்டுகளுக்கு முன்பு பெருங்கடல்களை பயமுறுத்திய ஒரு மூர்க்கமான கடல் ஊர்வனவாக விளங்கிய ப்ளியோசருக்கு சொந்தமானது. 2 மீட்டர் நீளமுள்ள இந்தப் புதைபடிவம் இதுவரை கண்டுபிடிக்கப்பட்ட இதே போன்ற படிவங்களிலேயே முழு வடிவத்தில் கிடைத்த மாதிரிகளில் இதுவும் ஒன்று. மேலும் இந்த பழங்கால வேட்டையாடும் விலங்கு குறித்த புதிய பல தகவல்களை இது அளிக்கிறது. புத்தாண்டு தினத்தன்று ‘பிபிசி ஒன்’னில் நடைபெறும் சிறப்பு ‘டேவிட் அட்டன்பரோ’ நிகழ்ச்சியில் இந்த மண்டை ஓடு குறித்த புதிய தகவல்கள் வெளியிடப்படும். பட மூலாதாரம்,BBC STUDIOS பார்க்க பார்க்க ஆச்சர்யம் “எவ்வளவு அற்புதமாக இருக்கிறது!” அந்த புதைபடிவ மாதிரியை மூடியிருந்த விரிப்பு திறக்கப்பட்டு முதன்முறையாக அந்த மண்டை ஓட்டை பார்க்கும்போது நமக்கு திகைப்பு மேலிடுகிறது. இந்த ப்ளியோசரை பார்க்கும்போது அது மிக பெரிதாக இருந்ததும் நேர்த்தியாக பதப்படுத்தப்பட்டிருந்ததும் உடனடியாக புலப்படுகிறது. வேறு எங்கும் இதுபோன்ற ஒரு புதைபடிவ மாதிரியை பொருத்திப் பார்க்க முடியாது என நம்புகிறார், உள்ளூரைச் சேர்ந்த பழங்கால ஆராய்ச்சியாளர் ஸ்டீவ் எட்செஸ். “நான் ஆராய்ந்ததிலேயே மிகவும் சிறந்த புதைபடிவ மாதிரி இதுதான். இது மிகவும் முழுமையானது என்பதுதான் இதன் தனிச்சிறப்பே,” என அவர் பிபிசியிடம் தெரிவித்தார். “உயிருடன் இருக்கும்போது எப்படி இருந்திருக்குமோ அதேபோன்று அதன் கீழ்த்தாடையும் மேல் மண்டை ஓடும் ஒன்றாக பிணைக்கப்பட்டுள்ளது. இந்தளவு விவரிப்புகளுடன் உலகளவில் வேறு எந்த புதைபடிவ மாதிரியும் கண்டுபிடிக்கப்படவில்லை. அப்படி கண்டுபிடிக்கப்பட்டிருந்தாலும் அதில் சில பகுதிகள் இல்லாமல் இருந்திருக்கும். ஆனால், இந்த ப்ளியோசர் கொஞ்சம் சிதைந்திருந்தாலும் எல்லா எலும்புகளும் இதில் உள்ளன,” என அவர் தெரிவித்தார். பட மூலாதாரம்,BBC STUDIOS சவரக்கத்தி போன்ற கூரான பற்கள் பெரும்பாலான மனிதர்களின் உயரத்தைவிட இதன் மண்டை ஓடு உயரமாக இருக்கிறது என்பது, இந்த உயிரினம் மொத்தத்தில் எவ்வளவு பெரிதாக இருந்திருக்கும் என்பதை நமக்கு உணர்த்துகிறது. அதன் 130 பற்களை, குறிப்பாக முன்வரிசையில் உள்ள பற்களை கவனிக்காமல் உங்களால் இருக்க முடியாது. நீளமான, சவரக்கத்தி போன்ற கூர்மையான பற்களை கொண்ட அந்த விலங்கு ஒரே கடியில் தன் இரையை கொன்றுவிடும். உங்களுக்கு தைரியமிருந்தால் கொஞ்சம் அதன் ஒவ்வொரு பற்களின் பின்னால் உள்ள கூர்மையான முகடுகளை நன்றாக உற்றுப்பாருங்கள். இவை, இந்த அசுர மிருகம் தன் இரையை குத்தி எடுத்து அதன் சதையை ’பட்டாக்கத்தி’ போன்ற கோரைப்பற்கள் மூலம் பிரித்தெடுத்து விரைவாக அடுத்த தாக்குதலுக்குத் தயாராக உதவியிருக்கும். பட மூலாதாரம்,BBC/TONY JOLLIFFE சிறப்பாக கொல்லும் இயந்திரம் போன்றிருக்கும் இந்த ப்ளியோசர் 10-12 மீட்டர் நீளத்துடன் அதிவேகத்தில் நீந்தும் அளவுக்கு நான்கு தட்டையான கை, கால்களை கொண்டது. இது கடலில் வேட்டையாடும் விலங்குகளில் முதன்மையானதாகும். “அதன் வாழ்விடத்தில் எதிர்வரும் துரதிருஷ்டவசமான எதையும் திறம்பட தன் இரையாக்கிக் கொள்ளும் அளவுக்கு அந்த விலங்கு மிக பெரிதாக இருந்திருக்கும் என நான் நினைக்கிறேன்,” என பிரிஸ்டல் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த டாக்டர் அன்ட்ரே ரோவ் தெரிவித்தார். “கடலுக்கடியில் வாழும் டைரனோசெரஸ் ரெக்ஸ் வகையை சேர்ந்த உயிரினமாக இது இருக்கும் என்பதில் எனக்கு எந்த சந்தேகமும் இல்லை,” என்கிறார் அவர். கடிக்கும் திறன் ஒப்பீடு இந்த உயிரினத்தின் இரைகள் என்னென்ன? நீண்ட கழுத்து கொண்ட அதன் உறவினரான பிளெஸியோசர் மற்றும் டால்பின் போன்ற இச்த்யோசர் (டைனோசர் காலத்தில் வாழ்ந்த உயிரினம்) போன்ற மற்ற ஊர்வன வகையை சேர்ந்த உயிரினங்கள் இதன் உணவாக இருந்திருக்கக்கூடும். மேலும், தன்னை கடந்து செல்லும் மற்ற ப்ளியோசர்களையும் இது சாப்பிட்டிருக்கக்கூடும் என்பது அதன் புதைபடிவ சான்றுகள் உணர்த்துகின்றன. இந்த புதைபடிவ மண்டை ஓடு எப்படி தோண்டி எடுக்கப்பட்டது என்ற கதையும் அதிசயமானது. தெற்கு இங்கிலாந்தின் புகழ்பெற்ற உலகப் பாரம்பரியச் சின்னமான ஜுராசிக் கடற்கரையில் கிம்மெரிட்ஜ் விரிகுடாவுக்கு அருகில் ஒரு கடற்கரையில் உலா வரும்போது இதை கண்டெடுக்கும் வாய்ப்பு தொடங்கியது. ஸ்டீவ் எட்செஸின் நண்பரும் சக புதைபடிவ ஆர்வலருமான பில் ஜேக்கப்ஸ் கூழாங்கற்கள் குவியலில் கிடந்த ப்ளியோசரின் மூக்கின் நுனியைக் கண்டார். எடுத்துச் செல்ல முடியாத அளவுக்கு கனமாக இருந்ததால், அவர் ஸ்டீவை அழைத்து வந்தார். இந்த புதைபடிவத் துண்டை பாதுகாப்பாக எடுத்துச் செல்ல அவர்கள் இருவரும் தற்காலிக ஸ்ட்ரெச்சர் ஒன்றையும் தயார் செய்தனர். பட மூலாதாரம்,BBC STUDIOS ஆனால், விலங்கின் மற்ற பாகங்கள் எங்கே? உயரமான குன்றில் ட்ரோன் மூலம் ஆய்வு செய்ததில் அவை எங்கே இருக்கலாம் என்ற ஒரு சாத்தியமான இடம் புலப்பட்டது. குன்றின் மேலே இருந்து கீழே இறங்குவதுதான் அதை தோண்டி எடுப்பதற்கான ஒரே வழி. பாறையிலிருந்து புதைபடிவங்களை அகற்றுவது எப்போதும் கடினமான, நுட்பமான வேலை. ஆனால், கடற்கரையிலிருந்து 15 மீட்டர் உயரத்தில் இடிந்து விழும் பாறையில் இருந்து கயிறுகளில் தொங்கியபடியே போது இதைச் செய்வது இன்னும் கடினமானது. துணிச்சல், அர்ப்பணிப்பு மற்றும் மண்டை ஓட்டை சுத்தம் செய்ய செலவழித்த மாதங்கள் நிச்சயமாக மதிப்புக்குரியவை. உலகெங்கிலும் உள்ள விஞ்ஞானிகள், இந்த அற்புதமான ஊர்வன இனத்தைச் சேர்ந்த உயிரினங்கள் எவ்வாறு வாழ்ந்தன, எவ்வாறு நமது சுற்றுச்சூழல் அமைப்பில் ஆதிக்கம் செலுத்தின என்பதைப் பற்றிய புதிய கண்ணோட்டத்தைப் பெற டோர்செட் புதைபடிவத்தைப் பார்வையிட ஆர்ப்பரிப்பார்கள். ப்ளியோசரின் சிறப்பம்சங்கள் பழங்கால உயிரியியலாளர் பேராசிரியர் எமிலி ரேஃபீல்ட் ஏற்கனவே அதன் தலையின் பின்புறத்தில் உள்ள பெரிய வட்டமான திறப்புகளை ஆய்வு செய்துள்ளார். ப்ளையோசரின் தாடைகளை இயக்கும் தசைகளின் அளவைப் பற்றியும், வாயை மூடிக்கொண்டு தன் இரையை நசுக்கும்போது உருவாகும் சக்தி பற்றியும் பேராசிரியர் எமிலியிடம் அவர்கள் விளக்கினர். இந்த விலங்கு தன் இரையை நசுக்கும்போது அதிகபட்சமாக சுமார் 33,000 நியூட்டன்கள் (விசை அலகு) வெளிவருகின்றன. தற்போது வாழும் விலங்குகளில் மிகவும் சக்திவாய்ந்த தாடைகள் உப்பு நீர் முதலைகளில் 16,000 நியூட்டன்களாக உள்ளன. "உங்களால் மிகவும் சக்தியுடன் கடிக்க முடிந்தால், உங்கள் இரையை நீங்கள் செயலிழக்கச் செய்யலாம்; இதனால் உங்கள் இரை வெளியேறும் வாய்ப்பு குறைவு. சக்திவாய்ந்த கடி என்றால் இரையின் திசு மற்றும் எலும்பை மிகவும் திறம்பட நசுக்க முடியும் என்பதுதான்" என்று பிரிஸ்டல் ஆராய்ச்சியாளர் விளக்கினார். "உணவு உத்திகளைப் பொறுத்தவரை முதலைகள் தங்கள் தாடையை எதையாவது சுற்றி இறுக்கி, பின்னர் முறுக்கி, ஒருவேளை தன் இரையின் மூட்டைத் திருப்பலாம். பெரிய தலைகளை கொண்டிருக்கும் விலங்குகளின் சிறப்பியல்பு இது. இதனை நாங்கள் ப்ளியோசரில் காண்கிறோம்" என்கிறார் அவர். பட மூலாதாரம்,BBC/TONY JOLLIFFE ”இன்னும் தடயங்கள் மிஞ்சியிருக்கலாம்” புதிதாகக் கண்டுபிடிக்கப்பட்ட இந்த மாதிரியானது சில குறிப்பிட்ட தீவிரமான மற்றும் மிகவும் பயனுள்ள உணர்வுகளைக் கொண்டிருப்பதாகக் கூறும் அம்சங்களைக் கொண்டுள்ளது. அதன் நீள் மூக்கு சிறிய குழிகளால் ஆனது. தன் இருப்பிடத்தை நோக்கி ஒரு இரை வரும்போது நீரின் அழுத்தத்தில் ஏற்படும் மாற்றங்களைக் கண்டறிய உதவும் சுரப்பிகளின் தளமாக இது இருக்கலாம். அதன் தலையில் ஒரு துளை உள்ளது. அதில், மண்டை ஓட்டின் இணைப்புகளில் ஒன்று அல்லது மூன்றாவது கண் என அழைக்கப்படும் பாரியட்டல் உள்ளது. தற்போது வாழும் பல்லிகள், தவளைகள் மற்றும் மீன்கள் இதை கொண்டுள்ளன. குறிப்பாக ஆழமான, இருண்ட நீரில் ப்ளையோசர் இருக்கும்போது இது ஒளி உணர்திறனாக செயல்பட்டு பிற விலங்குகளைக் கண்டறிய உதவியிருக்கலாம். ஸ்டீவ் எட்செஸ் இந்த மண்டை ஓட்டை அடுத்த ஆண்டு கிம்மெரிட்ஜில் உள்ள ‘எட்செஸ் கலெக்ஷன்’ எனும் தனது அருங்காட்சியகத்தில் காட்சிக்கு வைக்க உள்ளார். இதன் தலையின் பின்புறத்தில் கூர்மையான சில முதுகெலும்புகள் உள்ளன. ஆனால் சில எலும்புகளுக்குப் பின்னர் அதை காணமுடியவில்லை. அதன் எச்சங்கள் இன்னும் அந்த குன்றின் மீது இருக்கக்கூடும் என்பதற்கான அதிர்ச்சியூட்டும் துப்பு தான் இது. தான் தொடங்கியதை முடிக்க ஆர்வமாக உள்ளார் ஸ்டீவ். பட மூலாதாரம்,BBC/TONY JOLLIFFE "மீதமுள்ள புதைபடிவங்களை கண்டெடுக்க எனது உயிரையும் பணயம் வைப்பேன்" என்று அவர் பிபிசி செய்தியாளரிடம் கூறுகிறார். "அது மிக வேகமாக கடல் அரிப்பு ஏற்படும் சூழலில் இருப்பதால் அந்த புதைபடிவங்களை விரைவில் கண்டறிந்தாக வேண்டும். புதைபடிவங்கள் கண்டெடுக்கப்பட்ட குன்றின் பகுதி ஓராண்டுக்கு ஒரு அடி என பின்னோக்கி செல்கிறது. இதனால், ப்ளையோசரின் எஞ்சிய பகுதிகள் தொலைந்துபோவதற்கு அதிக நேரம் ஆகாது. இது வாழ்நாளில் ஒருமுறை கிடைக்கும் வாய்ப்பு” என அவர் தெரிவித்தார். ரெபெக்கா மோரெல்லே மற்றும் டோனி ஜோலிஃப் இருவரும் கூடுதல் தகவல்களை வழங்கியுள்ளனர். https://www.bbc.com/tamil/articles/c98385vdr57o1 point
-
கருத்து படங்கள்
1 point1 point
- உலகத் தமிழர் பேரவை உறுப்பினர்களின் படங்கள் மீது முட்டை வீச்சு!
(நீங்கள் என்ன சொல்ல வருகிறீர்கள் என்பது புரிகிறது. நாள் முழுவதும் computer முன்னால் குந்தியிருந்து எப்படித்தான் குத்தினாலும்மிஞ்சி மிஞ்சிப் போனால் துரோகி என்று கூறுவீர்கள். அவ்வளவுதான் உங்களால் முடியும் 😁) ஆனால் ஈழத் தமிழருக்கு ஆகக் குறைந்த தீர்வு தொடர்பாக தாங்கள் எதனையும் கூறவில்லை. அத்துடன் எம் மக்களுக்கு ஏதேனும் நன்மை நடைபெற வேண்டும் என்று விரும்பி அதற்காக உழைப்பவர்களையும் குறை சொல்லிக்கொண்டிருக்கிறீர்கள். காரணம் கேட்டால் பதில் இல்லை? ஏன்? பிரச்சனை தீர்ந்தால் தாங்கள் அனுபவிக்கும் நன்மைகள் எதனையும் இழந்துவிடுவோம் என்கிற பயமா ? எந்தத் தீர்வும் இறுதித் தீர்வு அல்ல. சிதைக்கப் பட முடியாத பலம் மட்டுமே இறுதித் தீர்வு. 100% ✅1 point- உலகத் தமிழர் பேரவை உறுப்பினர்களின் படங்கள் மீது முட்டை வீச்சு!
ஈழத்தமிழர் விசயத்தில் இதுதான் உங்கள் வழி...எதுவோ பீரபாகரன் என்ற நினைப்பில் ..உங்கடை அட்வைஸ்.. உங்கள் முகமூடி..யாழ்களம் முழுவதும் தெரியும்...தடவி குத்தி ஒரு இனத்தை அழிக்க உதவி செய்வது என் வேலையில்லை அய்யா...காசுக்காக மோசம் செய்வதும் என் தொழிலல..நல்லவனாக நடிப்பது நம் தொழிலல்ல...1 point- உலகத் தமிழர் பேரவை உறுப்பினர்களின் படங்கள் மீது முட்டை வீச்சு!
பிரச்சனை தமிழ் மக்களுக்கு. தமிழ் மக்களால் தெரிவு செய்யப்ப்பட்ட பா.உ களுக்கோ அல்லது மக்களுக்கோ வெளிப்படையாக தெரிவிக்காமல் என்ன உடன்படிக்கை கையெழுத்து என அறிய விரும்புகிறேன். இனப்படுகொலை செய்து குதூகலித்தவர்களிடம் இருந்து ஏதாவது தீர்வு வருமா? பேச்சுவார்த்தை முடிந்த பின் சிங்கள மக்களால் ஏற்காத தீர்வை தமிழ் மக்களுக்கு தர முடியாது எனும் வழமையான பல்லவியா? ஏன் இப்படியான கமுக்கமான கள்ள உடன்படிக்கைகைகள்? பிரச்சனைக்குரிய மக்களுக்கு சுரேன் என்ன யாரும் பேசுவதில் பிரச்சனை அல்ல. ஏன் தமிழ் மக்களிடம் சந்தேகத்துக்கு இடமாக செயற்பட வேண்டும்? என்ன பேச வேண்டும் என்பது தமிழீழத்தில் வாழும் மக்களிடம் இருந்து வர வேண்டும்.1 point- ஊழல்வாதிகளை பாதுகாக்கும் அரசாங்கத்திடமிருந்து நாடு விடுதலை பெறும் காலம் வெகு தொலைவில் - பேராயர்
1 pointஇப்போது இவர் பெரிதாக கதைக்கிறார். இவர்தான் ராஜபக்சக்களை வளர்த்து விடடவர். பொதுவாக எந்த இனவாத சிங்கள அரசியல் வாதிகளையும் தாராளமாக ஆதரித்தவர். தமிழர்களை அழிப்பதென்றால் இவருக்கு மிகவும் சந்தோசம். இப்போது அதே நிலைமை அவருக்கும் அவர் சார்ந்த இனத்துக்கும் வந்துள்ளதால் போர்க்கொடி தூக்குகிறார். எல்லாம் காலம் செய்யும் கோலம். வளர்த்த கடா மார்பில் பாய்ந்ததடா...........1 point- உலகத் தமிழர் பேரவை உறுப்பினர்களின் படங்கள் மீது முட்டை வீச்சு!
நிச்சயமாக ஆளை அடையாளம் காணமல்...பதில் அளித்து நேரம் காலத்தை வீண்விரையம் செய்யக்கூடாது1 point- உலகத் தமிழர் பேரவை உறுப்பினர்களின் படங்கள் மீது முட்டை வீச்சு!
இலங்கையில் பல்வேறு தரப்புக்களை சந்தித்தவர்கள் தமிழர் தரப்பில் உள்ளவர்களையும் சந்திக்கலாம். இனி இதை செய்வார்கள் என எதிர்பார்ப்போம்.1 point- உலகத் தமிழர் பேரவை உறுப்பினர்களின் படங்கள் மீது முட்டை வீச்சு!
எந்த அரைகுறாஇத்தீர்வுக்கும் கொடிபிடித்து ஆதரவு தெர்விக்கும் நீங்கள்..என்ன கலர் கொடி ஆதரவு காரற்என்பதை அறியஆவலாக இருக்கின்றேன்...அரசாங்கத்துக்கு எந்த முட்டுக்கொடுப்புக்காரர் போனாலூம் அதுக்கு கொடிபிடிப்பதை ..இந்த யாழ்கள உறவுகல் பல்ரும் அறிவர்...அத்ஹவது இந்த்தின்மீது அனுதாபன் உள்ளமாதிரிக்காட்டி ..அனத்தை அழிக்கும் கூட்டாத்திற்கு ஆலத்தி எடுப்பவர் நீங்கள்...அந்த கொடிக்கலரை மட்டும் தெரிவியுங்கள் .. போதும்1 point- Imagine Dragons - Thunder
1 point1 point- பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
1 point- சிரிக்க மட்டும் வாங்க
1 point1 point- போதமும் காணாத போதம் - அகரமுதல்வன்
தாயகத்தை நேசிக்கும் எவரையும் சோதிக்கும் வாழ்வியல் அனுபவங்களாக எழுத்துக்கோர்வையுள் மயங்காது மனதினுள் வினாவையும், விரக்தியையும், இயலாமையையும் ஒருசேர எழுத்தர் வடித்துச்செல்கிறார். படிக்கும்போது மனம் கொத்தளித்து நொருங்கிவிடுகிறது. 32வயதில் அற்புதமான படைப்பினைத் தரும் விதம் செழிப்பு. தொடர்க நின் பணி. இணக்க அரசியல் பேசுவோரும் படித்துப் பகுத்தறியவேண்டிய பல பக்கங்கள் விரிகின்றன. நோக்குவார்களாயின் அவர்களிடமும், அவர்களிடம் உண்மையிருப்பின் கடந்து செல்லமுடியாத வினாத்தோன்றும். இதனை நூலுருவில் வெளியிட்டால் நன்று. இணைப்புக்கு நன்றி.1 point- உலகத் தமிழர் பேரவை உறுப்பினர்களின் படங்கள் மீது முட்டை வீச்சு!
1 point- அதே வானம் அதே பூமி - சுப.சோமசுந்தரம்
அதே வானம் அதே பூமி புத்தக வெளியீட்டிற்கு பேராசானுக்கு வாழ்த்துகள்.1 point- இமாலயப் பிரகடனமும் மகா சங்கமும் – நிலாந்தன்.
Canadian Tamil Congress · இலங்கையில், குறிப்பாகப் போரின் இறுதிக் கட்டங்களில், இலங்கையில் நடந்த மனித உரிமை அநியாயங்களுக்கு, பொறுப்புக்கூறல் மற்றும் நீதியை அடைவதற்கு உழைப்பது கனடியத் தமிழர் பேரவையின் முக்கிய பணிகளில் ஒன்றாகும். இலங்கையில் போரினால் பாதிக்கப்பட்ட வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் பொருளாதார அபிவிருத்தியை ஏற்படுத்துவதற்கும் இலங்கையில் நிலையான நீண்டகால சமாதானத்தை உருவாக்குவதற்கான செயல்முறைக்கும் ஆதரவளிக்கும் போது, கனடியத் தமிழர் பேரவையானது இலங்கைத் தமிழ் மக்களின் நலன்களுக்கான ஆணையை விட்டுக் கொடுக்காது, சமரசம் செய்யாது என்பதை உறுதிப்படுத்திக்கொள்கின்றோம். கனடிய தமிழர் பேரவையின் முழுமையான ஊடக அறிக்கை இணைக்கப்பட்டுள்ளது. ----------------------------------------------------------------- கனடிய தமிழர் பேரவை ஊடக வெளியீடு 21/12/2023 கனடியத் தமிழர் பேரவை (CTC) இமாலயப் பிரகடனத்தைக் கையளிப்பதற்காக மகிந்த ராஜபக்சாவை சந்தித்தமையால் எமது மக்களுக்கு ஏற்பட்ட வலியை உணர்ந்து ஆழமாக வருந்துகிறது. இந்த ஆண்டு 2023 ஏப்ரலில் உலகத் தமிழர் பேரவையின் (GTF) பிரதிநிதிகள் மற்றும் இலங்கையில் உள்ள பல்வேறு பௌத்த உயர் மதபீடங்களின் மூத்த பௌத்த பிக்குகள் நேபாளத்தின் நாகர்கோட்டில் உரையாடல்களை மேற்கொண்டு இமாலயப் பிரகடனத்தை உருவாக்கினார்கள். (பிரகடனத்தின் பிரதி இணைக்கப்பட்டுள்ளது). இந்த நடவடிக்கையின் அடுத்த கட்டமாக, இரு தரப்பினரையும் உள்ளடக்கிய தூதுக்குழு இலங்கையில் பல்வேறு சந்திப்புகளை நடத்தியது. அமெரிக்கா, இங்கிலாந்து, சுவிஸ் மற்றும் கனடா நாட்டு இராஜதந்திரிகள் உட்பட இலங்கையின் முக்கியமான அனைத்து மதத் தலைவர்கள், சிவில் சமூகத் தலைவர்கள், இலங்கை ஜனாதிபதி, எதிர்க்கட்சித் தலைவர், பெரும்பாலான தேசிய அரசியல் கட்சிகளின் தலைவர்கள், ஈழத் தமிழர்கள், மலையகத் தமிழர்கள் மற்றும் முஸ்லிம்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் முக்கிய அரசியல் கட்சித் தலைவர்கள், முன்னாள் ஜனாதிபதிகள், முன்னாள், இன்னாள் சபாநாயகர்கள், அனைத்து அரசியல் கட்சிகளையும் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்கள் என அனைவரையும் தூதுக்குழுவினர் சந்தித்து உரையாடியிருந்தார்கள். இமாலயப் பிரகடனத்தைக் கையளித்து, தேசிய உரையாடலை ஆரம்பிக்க நாடு முழுவதும் உள்ள மக்களிடம் இந்த முன்னெடுப்பு எடுத்துச் செல்லப்படும் என்பதைத் தெரிவிப்பதே இந்தச் சந்திப்புகளின் பிரதான நோக்கமாகும். இமாலயப் பிரகடனத்தைப் பெற்றுக்கொண்ட அனைவரும் இந்த முன்னெடுப்புக்குத் தமது முழு ஆதரவைத் தருவதாக கூறியதோடு மக்களால் தேர்வு செய்யப்பட்ட தமிழ்த் தலைவர்கள் தலைமையில் இலங்கையில் நிரந்தர சமாதானத்துக்கான அரசியல் முன்னெடுப்புகள் நடைபெறக்கூடிய சூழலை உருவாக்க இத் தேசிய உரையாடல் உபயோகமாக அமையுமெனவும் குறிப்பிட்டிருந்தார்கள். இமாலயப் பிரகடனத்தின் பன்மைத்துவ ஈடுபாட்டிற்கான ஆணையின் ஒரு பகுதியாக, தற்போதைய இலங்கை நாடாளுமன்றத்தில் அதிக உறுப்பினர்களைக் கொண்ட கட்சியான ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் (SLPP) தலைவரான முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சாவையும் தூதுக்குழுவினர் சந்தித்திருந்தனர். இமாலயப் பிரகடனம் மற்றும் அர்த்தமுள்ள உரையாடலுக்கான முக்கியத்துவத்தைப் பற்றி இலங்கையில் செல்வாக்குள்ள அனைவருக்கும் தெரியப்படுத்தப்படுவதை உறுதி செய்வதற்காக மட்டுமே இந்தக் கூட்டம் இடம்பெற்றிருந்தது. இந்தச் சந்திப்பு மற்றும் சந்திப்பின் படங்கள், புலம்பெயர் தமிழர்களிடமும், கனடியத்தமிழர்களிடமும் வேதனை தரும் வகையில் தீவிரமாக உணர்வுகளைத் தூண்டியுள்ளன என்பதை நாங்கள் புரிந்துகொள்கிறோம். கனடியத் தமிழர் பேரவை உண்மையிலேயே இது குறித்து ஆழமாக வருந்துகிறது. இவ்வாறான வேதனை உணர்வினை எமது மக்களுக்கு ஏற்படுத்துவதைக் கனடியத் தமிழர் பேரவை தனது நோக்கமாக கொண்டிருக்கவில்லை. இமாலயப் பிரகடனத்தின் முதன்மையான நோக்கமும், அதைத் தொடர்ந்து நடைபெறும் அனைத்துச் சந்திப்புகளும், ஈழத்தமிழர்களுக்கு ஏற்றுக்கொள்ளக்கூடிய நிரந்தரத் தீர்வை அடைவதை நோக்கமாகக் கொண்ட ஒரு தேசிய உரையாடலை ஆரம்பிப்பதாகும். அத்துடன் தீவில் உள்ள அனைத்து முக்கிய பங்குதாரர்களையும் இந்த முயற்சியில் ஈடுபடுத்துவதாகும். நாங்கள் அரசியல் தீர்வுப் பேச்சுவார்த்தைகளில் ஈடுபடவில்லை. அவ்வாறான வேலைத்திட்டம் இலங்கையில் தமிழ் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட தமிழ்த் தலைவர்களைச் சார்ந்த விடயமாகும். கனடிய தமிழர் பேரவை 2009 ஆம் ஆண்டு முதல் ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் பேரவையில் (UNHRC) பங்கேற்பது உட்பட உள்நாட்டிலும் சர்வதேச அரங்கிலும் இலங்கையில் மேற்கொள்ளப்பட்டு வரும் போர்க் குற்றங்கள், மனித குலத்திற்கு எதிரான குற்றங்கள், அதற்கான பொறுப்புக்கூறல் மற்றும் ஈழத்தமிழ் மக்களின் நீதிக்காகக் கடுமையாக முன்னின்று உழைத்து வருகின்றது. இலங்கையில், குறிப்பாகப் போரின் இறுதிக் கட்டங்களில், இலங்கையில் நடந்த மனித உரிமை அநியாயங்களுக்கு, பொறுப்புக்கூறல் மற்றும் நீதியை அடைவதற்கு உழைப்பது கனடியத் தமிழர் பேரவையின் முக்கிய பணிகளில் ஒன்றாகும். இலங்கையில் போரினால் பாதிக்கப்பட்ட வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் பொருளாதார அபிவிருத்தியை ஏற்படுத்துவதற்கும் இலங்கையில் நிலையான நீண்டகால சமாதானத்தை உருவாக்குவதற்கான செயல்முறைக்கும் ஆதரவளிக்கும் போது, கனடியத் தமிழர் பேரவையானது இலங்கைத் தமிழ் மக்களின் நலன்களுக்கான ஆணையை விட்டுக் கொடுக்காது, சமரசம் செய்யாது என்பதை உறுதிப்படுத்திக்கொள்கின்றோம். தூரதிர்ஷ்டவசமாக, இமாலயப் பிரகடனத்தின் உண்மையான நன்நோக்கம் குறித்துத் தவறான விளக்கங்கள் பரப்பப்பட்டுக் கனடியத் தமிழர் பேரவை அலுவலகர்கள், உறுப்பினர்கள், தொண்டர்கள் மற்றும் ஆதரவாளர்களுக்கு எதிராகத் தேவையற்ற தாக்குதல்கள் நடந்துவருகின்றன. நீண்டகாலமாக கனடியதமிழர் பேரவையின் பொறுப்புக்கூறல், நீதியை நிலைநாட்டுதல் மற்றும் சமாதானத்துக்கான பணியையும் முன்னேற்றத்தையும் இழிவுபடுத்தும் இத்தகைய செயல்களை நாங்கள் வன்மையாகக் கண்டிக்கின்றோம். மேலதிக தகவல்கள் மற்றும் ஊடக விவரங்களுக்கு, கீழுள்ள மின்னஞ்சல் முகவரியோடு தொடர்பு கொள்ளவும்: info@canadiantamilcongress.ca1 point- இரு வர்ணத்தில் இனிய பாடல்கள்.....!
1 point- போதமும் காணாத போதம் - அகரமுதல்வன்
போதமும் காணாத போதம் – 09 அண்ணாவின் வித்துடலை குருதியூறும் நிலத்தினுள் விதைத்து மூன்றாம் நாள் அதிகாலையில் பெருங்குரலெடுத்து அழுதாள் அம்மா. திகைப்படைந்து எழுந்தவர்கள், மங்கலான உறக்கக் கலக்கத்தோடு பார்த்தார்கள். நீராடி விரிந்திருந்த ஈரக் கூந்தலோடு அண்ணாவின் புகைப்படத்துக்கு முன் அமர்ந்திருந்தாள். சிறிய குத்து விளக்கில் அணையாச் சுடர் ஈகித்திருந்தது. நேற்றிரவு படைக்கப்பட்ட சாப்பாட்டில் ஈரம் விலகியிருந்தது. அம்மா தண்ணீர் செம்பைத் தூக்கி கவிழ்த்துக் காட்டினாள். ஒரு சொட்டு நீரில்லை. மீண்டும் அழத்தொடங்கினாள். வாதையின் செதில்கள் அகலமறுத்துப் பெருகிய பொழுதாயிற்று. “என் நிழலில் மரணத்தின் நித்தியம் முழுமரமாய் வளர்ந்து நிற்கிறது. ஆனாலும் உதிரும் ஓரிலையின் நடுக்கம் கூட என் இதயத்தில் இல்லை. மீளவும் சொல்கிறேன். பீரங்கிகளினதும் போர்விமானங்களினதும் தாக்குதல்களால் பீதியாகமாட்டேன். விடுதலைக்காக போரிட்டு மடியுமிந்த வாழ்வு மகத்தானது. தெளிந்த வானத்தை விடவும் ஆகிருதியில் வலுத்தது என் பெருங்கனவு. இதோ இக்கணத்தில் தியாகத்தின் பலிபீடத்தில் கிடத்தப்பட்டுள்ளேன். என் விழுப்புண் மீது அழுந்தப் பதிந்திருக்கும் ரத்த வரிகளை மேற்கு வானில் தாழும் சூரியன் பார்க்கிறது. நெருப்பேந்தி நாளையது கிழக்கில் தோன்றுகையில் என் முகத்தைச் சூடி வரும். ஆகுதியின் இனிமையை அருளும் நிலத்தை எதனாலும் விழுங்கிவிட முடியாது.” வீரச்சாவு எய்துவதற்கு முன்பாக அண்ணா திரும்பத் திரும்ப சொன்ன வார்த்தைகள் இவையென களமுனையிலிருந்து வந்த படையணிக்காரர்கள் சொன்னார்கள். அண்ணா நன்றாக உரையாற்றுவான். கவிதைகள் எழுதவும் செய்வான். விடுப்பில் வந்திருந்த நாட்களில் எழுதிய சில கவிதைகளை அம்மாவிடம் கையளித்திருந்தான். ஒருநாள் நானும் அவனும் குளத்தில் குளித்துவிட்டு வீடு திரும்பிய போது கொந்தளிப்பாக சிலவற்றைக் கதைத்தோம். “போரால் எதையும் பெறமுடியாது போனால், இத்தனை இழப்புகளும் வீண் அல்லவா” என்றேன். இத்தனை தியாகங்களும் வெறும் இழப்பாகவே எஞ்சுமென உன்னால் நினைத்துப் பார்க்க முடிகிறதா! போரை நம்பியதல்ல இந்தப் போராட்டம். எங்கள் வாழ்வுரிமையை போரின் வழியாக மட்டுமே வலியுறுத்த வேண்டிய நிர்ப்பந்தத்தை நம்பமுடியாதபடி காலம் தருவித்துவிட்டது. நீ சொல்வதைப் போல இழப்புக்கள் வீண் போனாலும் மிஞ்சியிருப்பவர்கள் நினைவு கூருவர். மாண்டவர்கள் இங்கேயே தான் இருப்பார்கள். ஏனென்றால் இந்த மண் அவர்களின் மேனி. எஞ்சியவர்களை அவர்கள்தான் சுமப்பார்கள். இறுதியில் இழப்பைத் தான் பெறுவோமென்றால் ஞாலத்தின் அறம் புழுத்துப்போகும். குமட்டல் வாடை மனுஷகுலத்தின் மீது ஈயெனப் பெருகும். அற்பமான நோய்களில் உலகு நொடியும். எம் இனத்தின் புராதனக் கண்ணீரும் குருதியும் அறத்தை விடவும் மேன்மையான ஆற்றலோடு தீவிரமாகும். இழப்பின் ஞாபகங்கள் பரம்பரை பரம்பரையாக எங்கள் மாதர்களின் ஆதிக்குகையுள் அனற்குழம்பெனக் கனன்று கருவாகி வெளியுமிளும். பூர்வீகச் சந்ததி பெருகும்” என்றான். உடலீரம் காய்ந்திருந்தது. அண்ணாவின் சொற்கள் சுதந்திரத்தின் பிரசங்கமென என்னுள்ளே வலுவாக உருகி இறங்கியது. “தியாகங்கள் எல்லாமும் ஞாபகங்களாய் எஞ்சினால், பாழான போரை பூமி நினைவில் வைத்துக் கொள்ளும். அது நன்மைக்கே” என்றேன். “போரை விடவும் பூமி பாழானது. ஏனெனில் போர் கண்டுபிடிக்கப்பட்ட ஒரு வழி மட்டுமே” என்ற அண்ணா நாயுண்ணிப் பழங்களைப் பிடுங்கி வாயில் போட்டான். இனிப்புச் சுரந்து இதமாய் உடல் மொழிந்தான். அன்றிரவு நேரமாகியும் நான் விழித்திருந்தேன். குப்பி விளக்கு வெளிச்சத்தில் ஓவியமொன்றை வரைந்து கொண்டிருந்தேன். வீட்டின் வெளியே அமர்ந்திருந்து அம்மாவும் அண்ணாவும் கதைத்துக் கொண்டிருந்தார்கள். களமுனையாகவிருக்கும் சொந்தவூரின் கோவில்களுக்கு விளக்கு வைக்குமாறு சொன்னாள். அண்ணாவுக்கு இறை பக்தி அதிகம். சிறிய வயது முதலே சைவ மடத்தில் தீட்சை பெற்று நடராஜருக்கு பூசை செய்தவன். அவனுடைய ஆச்சார நெறிகள் தீவிரமானவையாக இருந்தன. இயக்க வாழ்க்கையில் எல்லாமும் நொறுங்குண்டு தலைகீழானது. மாட்டிறைச்சியை விடவும் ருசியானது எதுவுமில்லை என்பது அண்ணாவின் உச்சாடனமாய் ஆகியிருந்தது. அண்ணாவுக்கு எட்டாம் நாள் படையல் வைக்கும் போது அம்மா மாட்டிறைச்சியையும் சேர்த்துக் கொண்டாள். சொந்தக்காரர்கள் சிலர் முகம் சுழித்து வேண்டாமென்றனர். “பிள்ளைக்கு பிடிச்சததான் வைக்கோணும், உங்களுக்கு பிடிச்சத வைக்க வேணுமெண்டால் நீங்கள் மோசம் போன பிறகு செய்து வைக்கிறன்” என்ற அம்மாவின் கூற்று பலரையும் சங்கடத்தில் ஆழ்த்தியது. செம்பு தளும்ப தண்ணீர் வைக்கப்பட்டு தலை வாழை இலையில் மாமிசக் குழம்புகள் எல்லாமும் படைக்கப்பட்டன. முச்சந்தியில் கழிப்புக் கழித்து பூசணியை இரண்டாகப் பிளந்து குங்குமம் தடவி, எல்லாவற்றையும் சுளகொன்றில் பரப்பி வைத்துவிட்டு வந்தோம். வீட்டில் அனைவரும் நிறைவாகச் சாப்பிட்டனர். அம்மா உபசரித்து கவனித்தாள். தண்ணீர் என்று சபையில் யாரும் கேட்காத வண்ணம் எல்லோருக்கும் வழங்கப்பட்டுக் கொண்டே இருந்தது. வீட்டைச் சுற்றியும் புதுக்குடங்களில் குடிதண்ணீர் நிறைத்து வைத்திருந்தாள். அம்மாவுக்கு சித்தம் குலைந்திற்றோவென நொந்த சிலர் சிறிய தலையசைப்போடு எழுந்து சென்றனர். பிள்ளையின் வருகையை எதிர்பார்த்து காத்திருந்தாள் அம்மா. “நான் சாகத் தயாரானவன், வீரச்சாவு அடைந்தால் அழாதேங்கோ. நீங்கள் என்னைப் பிரசவித்த தருணத்தை விடவும் பூமிக்குள் விதைக்கும் போது மங்கலம் கொள்வீர்கள்” என்றுரைத்த அண்ணாவின் குரல் அம்மாவின் ஞாபகத்தில் பொங்கி நுரைத்தது.”வந்து கொண்டிருக்கிறான், தேவலோகத்திலிருந்து என் மகன் வருகிறான்” அம்மா ஆனந்தித்து உறுதியாகச் சொன்னாள். பரவசமாகி தன்னுடைய முலைகளை எடுத்து வெளி நோக்கி விரல்களால் பிசுக்கி “பிள்ளைக்கு சரியான தண்ணி விடாய்” என்றாள். இரவு முழுதும் நிலவும் பனியும் விழித்திருந்தது. அம்மா அடிக்கடி குடங்களையும், படையலில் வைக்கப்பட்டிருந்த செம்பையும் சென்று பார்த்தாள். அளவு குறையவில்லை. வீட்டின் வாசலை விட்டு ஒதுங்கியிருந்தாள். அண்ணா உள்ளே செல்ல ஏதும் தடையாக இருக்கவே கூடாது என ஒழுங்குகள் செய்திருந்தாள். ஆவியாய் அலைக்கழியும் அண்ணாவுக்காக சொந்தக்காரர்கள் சிலரும் காத்திருந்தனர். அற்புதங்களுக்காக காத்திருந்த சனங்களின் கதைகள் இரவைத் தீண்டியது. வீட்டினுள்ளே ஒரு பல்லி சொன்னது. அதன் நீளவொலி எல்லோரையும் தன்பக்கம் திருப்பியது. செய்வினைகள் அறுப்பதில் வல்லவளாக இருந்த புறாக்குட்டி அத்தை “காயப்பட்டு துடிதுடித்து பங்கருக்குள்ள தாகமெடுக்க, தண்ணியில்லாமல் தன்ர ரதத்தையே அள்ளி நக்கியிருக்கிறான். அந்தச் சீவன்ர தாகம் பூலோகத்தில தான் இருக்கு. அவன் வருவான்” என்றாள். நான் பொறுமையிழந்து “ எங்களுடைய ஊகத்திற்கும் ஆசைக்கும் எதுவும் நடக்காது. விசர்த்தனமாய் கதைக்கிறத விட்டிட்டு எல்லாரும் போய் படுங்கோ” என்றேன். “இந்தப் பூமியில இரவு வாறதே ஆவிகளுக்காகத் தான். அதுகள் நடமாடுகிற ஒரு பொழுது இது. நீ நம்பாட்டி உள்ள போய் படன்ரா” என்ற கனகு பெரியப்பா சுருட்டை புகைக்கத் தொடங்கினார். “அவன் வந்து தண்ணி குடிப்பான். அதுவரைக்கு நான் முழிச்சிருப்பன்” அடைகாத்திருக்கும் தாய்மையின் தழல் குழம்பு வெடித்தது. “எடியே விசரி. இப்பிடி செத்த இயக்கப் பிள்ளையள் வந்து தண்ணி குடிக்க வெளிக்கிட்டால் எங்கட கடல் தண்ணி வத்தியிருக்குமெல்லே. உள்ளே போய் படு” என்று முஸ்பாத்தியாகச் சொன்ன காங்கேசந்துறை மாமாவை திரும்பிக்கூடப் பார்க்காமல் அம்மா தவிர்த்தாள். “உன்னுடைய முஸ்பாத்திக்கு அந்த செவிட்டுப் பரத்தை சிரிக்கலாம். இஞ்ச ஆரும் சிரிக்க மாட்டினம். எழும்பிப் போடா பு***ண்டி” கனகுப் பெரியப்பாவின் பேச்சில் எச்சரிக்கை தொனி தெரிந்தது. காங்கேசந்துறை மாமா பேச்சிழந்து வெட்கி நின்றார். அம்மாவுக்கு விழித்திருப்பது ஆறுதலாகவிருந்தது. ஆமை போலூர்ந்த இரவு தீர்ந்து போனது. ஆனாலும் செம்பிலோ, குடங்களிலோ தண்ணீர் அப்படியே இருந்தது. அம்மா செம்பு நீரை எடுத்து பூக்கன்றின் அடியில் ஊற்றிவிட்டு புதிய நீர் நிறைத்து வைத்தாள். அவளுக்குள் பிரார்த்தனையின் அழுகுரல் பூகம்பமாய் ஒட்டிக்கிடந்தது. தன்னையிழந்த ஞாபகமாய் அம்மா வீட்டுக்குள் நடமாடினாள். கல்லறைகளும் நடுகற்களும் நிறையும் விதியின் வசியத்தை வாழ்வென எண்ணும் வருத்தம் எனக்குமிருந்தது. சாவளிக்கும் அடைக்கலம் அரணாகவிருந்தது. “அண்ணா வந்து தண்ணி குடிக்கவில்லையெண்டு, கவலைப்படாதேயம்மா. அவன் உன்ர விரும்பத்தை விளங்கிக் கொள்வான்” என்றேன். “அவனுக்கு தண்ணி விடாய், பிள்ளையைத் தெய்வம் அப்பிடி கூட்டிக் கொண்டு போயிருக்க கூடாது. சீவனுக்கு தாகமிருக்கிறது சிவனுக்கு தெரியாமல் போச்சே” “அதுக்காக அவர் ஆவியா வந்து தண்ணி குடிப்பாரே ” “அடேய், அண்டைக்கு வந்து தண்ணி குடிச்சது அவன் தான். அவன் ஆவியில்லை. என்ர பிள்ளை தேவர். முப்பத்து முக்கோடி தேவர்களுக்கு நிகர்த்த முதலாமவன்” மறக்கவியலாத தழும்பென பதில் உரைத்தாள் அம்மா. முகம் வெளிறி இயல்புக்கு வர முயன்றேன். தீ பெருகும் காலத்தின் முற்றுகையில் உதிர்காலத்து இலையென கணங்கள் பொசுங்கின. அலைகளின் ஓயாத முறையீடு போல அம்மா பெரும் பொழுதுக்காய் காத்திருந்தாள். பெருங்கூவலோடு மழையின் பெருவிழிகள் திறந்தன. உப்புதிர்க்கும் கடல் காற்று கூரையூடே புகுந்தது. கொடுஞ்சாபமென உறைந்திருந்த நிலப்புழுதி மணமெழுந்தது. இடியதிர மிகுந்து பரவிய மின்னல் ஒளியிழந்து உலர்ந்தது. அண்ணாவின் புகைப்படத்து குத்துவிளக்குத் திரியில் குருதியின் சுளிப்பு நிறம் கொண்டெரிந்தது. “அற்புதங்களின் வருகையை நிரூபிக்க அதிகம் சிரமப்படவேண்டியதில்லை” என்றாள் அம்மா. ஒழுகும் தாழ்வாரத்தின் கீழ் நின்று சிறுநீர் பொழியும் நாயின் கண்கள் சலனமடைந்திருந்தன. நிழல் மரவள்ளி மரத்தில் அடைந்திருந்த கோழிகள் நனைந்து நடுங்கின. அம்மா மழையில் நனைந்தபடி வீட்டுப் படலையைத் திறந்து வைத்தாள். “அவன் வருகிறான், தண்ணி விடாய்ல வருகிறான். இந்தத் தண்ணி போதாது.” என்றாள். துயர் ததும்பும் ஒரு முதுமுரம் மண்ணில் வேரூன்றி மழையில் நனைந்து கிளையசைப்பதைப் போல கையசைத்து சொல்லிக்கொண்டே இருந்தாள். “அவன் வருகிறான் அவனுக்கு சரியான தண்ணி விடாய்” அடுத்தநாள் காலையில் குடங்களில் தண்ணீர் இல்லை. செம்பு காய்ந்திருந்தது. வரலாற்றை தேடுபவளைப் போல வீட்டின் வாசல்வரை அண்ணாவின் காலடித்தடம் தேடி கண்ணீர் கசிந்தாள். கரைக்க இயலாது திணறும் சாம்பல் சேற்றில் அவள் கால்கள் புதைந்து விடுபட மறுத்தன. “அவன் வந்திருக்கிறான். ஆனால் நடந்து வரேல்ல. பறந்து வந்திருக்கிறான். பூமியில் தேவர்கள் நடக்க மாட்டார்கள் அல்லவா” என்றாள். இது நீண்டால் அம்மாவுக்கு சித்தம் பிசகிவிடுமென எண்ணிப் பயந்தேன். எங்கள் சொந்தக்கார பரியாரியிடம் விஷயத்தைச் சொல்லி மருந்து கேட்டேன். “அவளுக்கு சித்தம் நன்றாகவே இருக்கிறது. எங்களுக்குத் தான் பிசகிவிட்டது மோனே. நீ எழும்பிப் போ” என்றார். அம்மா வீட்டுக்குளேயே இருந்தாள். ஊரிலுள்ள குளங்களில் இருந்து கிணறுகள் வரை தண்ணீர் சுத்தமாக இருக்கிறதாவென கூலிக்கு ஆள் வைத்துப் பார்த்தாள். ஒவ்வொரு இரவும் அவள் அண்ணாவுக்காக காத்திருந்தாள். குடங்களையும், செம்பையும் வற்றிய நீரோடு கனவில் கண்டாள். அன்றைக்கு ஊரில் இன்னொரு வீட்டில் வீரச்சாவு. இரவு முழுவதும் அங்கிருக்கலாமெனத் தோன்றியது. ஆனாலும் அம்மாவை தனியாக விடுவது பயமாகவுமிருந்தது. நள்ளிரவு வீட்டுக்கு புறப்பட்டு வந்தேன். இரண்டு நாய்கள் தெருவின் முடக்கில் படுத்திருந்தன. ஒரு நாயின் குழைவொலி கொஞ்சம் துணையாகவிருந்தது. வீட்டின் படலையைத் திறந்து உள்ளே நுழைந்தேன். தாழ்வாரத்தின் கீழே அமர்ந்திருந்த அண்ணா சிதைந்து அறுந்து தொங்கும் காலைப்பிடித்தபடி குடத்திலிருந்து தண்ணீரைக் குடிக்கிறான். இரண்டு கால்களும் சிதைந்து ரத்தம் விலகித் தேங்கியிருந்தது. விடாய் அடங்காது நிலமெனக் கிடக்கும் குருதியை அள்ளி பருகுகிறான். அண்ணா….என்று பெருங்குரலெடுத்து அழுதபடி ஓடிப்போனேன். வீட்டினுள்ளிருந்து அம்மா சொன்னாள் “ எடேய், விசரா கொண்ணா வீட்டுக்குள்ள என்னோட இருக்கிறான். உள்ள வா” வாசலில் நின்று உள்ளே பார்த்தேன். சிதைந்து தொங்கிய கால்களோடு குருதி தேங்கிய சாணத்தரையில் அண்ணாவுக்கு பாலூட்டிக் கொண்டிருந்தாள் அம்மா. என்னைக் கண்டதும் “ இவனுக்கு சரியான தண்ணி விடாய், பா**யை விட்டு வாய எடுக்க மாட்டேன் என்கிறான்” எனச் சொல்லி மகிழ்ந்தாள். அம்மா, என்றபடி அவளருகே ஓடினேன். அவள் என்னை அணைத்துச் சொன்னாள். “சந்ததி சந்தியாய் இவனுக்கு நாங்கள் தண்ணி வைக்கவேணும். அவன் எங்கட வாசலுக்கு பறந்து வருவான்” அண்ணாவின் கால்களைத் தொட்டுப் பார்த்தேன். குருதியின் நீளக் கனியென தணல் பழுத்திருந்தது. கைகளை விசுக்கென எடுத்துக் கொண்டேன். “சரியான வெக்கை என்ன! இதுதான் எங்கட ஞாபகமடா மோனே” என்றாள் அம்மா. https://akaramuthalvan.com/?p=13591 point- பக்கத்து வீடு
1 pointபக்கத்து வீட்டு அய்யாவை அஞ்சலா ஒழுங்கான சைக்கயாறிக் டொக்ரரிட்ட காட்டாமல் வைத்திருந்தது எவ்வளவு தப்பு...சுமே அக்கா பக்கத்து வீட்டில பாதியையா, இல்ல முழுசா படம் எடுத்து இங்க சொருகி விட்டு இருக்கிறியள்..அது இரண்டாவது தப்பு.பிறைவேசி.✍️😆1 point- போதமும் காணாத போதம் - அகரமுதல்வன்
போதமும் காணாத போதம் – 08 அபாயம் நெருங்கியதென அச்சப்பட்டு அசையாது நின்றான் சங்கன். கலவரத்தோடு உடல் வியர்த்து மூச்செறிந்தவன் சட்டென கருவறைக்குள் பதுங்கினான். அவனை விழிப்புற வைத்த சத்தம் சில நிமிடங்களிலேயே வெட்டுண்டது. அரிய விலங்கென மடிந்திருந்த தன்னுடலைத் தளர்த்தி விரித்தான். ஆறடி உயரமான ஆகிருதி. தலையுயர்த்தி எழுந்தான். வைரவர் விக்கிரகத்தை அடியோடு தகர்த்து அதனடியிலிருந்த தகடுகளை எடுத்தான். பழமையான ஐம்பொன் சிலைகளை ஈரச்சாக்கில் போட்டான். உண்டியலைப் பிளந்து நாணயங்களை மணல் நிரப்பப்பட்ட சிறிய பைக்குள் போட்டான். தாள் காசுகளை ஈரமான உள்ளாடைக்குள் சுருட்டி வைத்தான். தன்னுடைய தடயங்கள் ஏதேனும் விடுபட்டு இருக்கிறதாவென மீளாய்வு செய்தான். எதுவுமில்லை. காலடித்தடங்களையும் அழித்து கோவிலை விட்டு வெளியேறினான். எத்தனையோ களமுனைகளில் வேவு பார்த்து வென்ற கண்கள். எதிரியின் காலடி வரை ஊர்ந்து சென்று நோட்டமிட்ட தீர உடல். எத்தனையோ பகலிரவுகள் சடமென உருமாறி பகைவர் வழியில் அமைந்திருந்த வல்லபம் சங்கனுடையது. மனுஷ வாடையறியும் கூர் நாசி. பாம்பின் லாவகமாய் நிலம் நீந்தி மறைபவன். தேரைகள் மறைந்து கொள்ளும் இடுக்குகளில் கூட இருந்தான் என்பார்கள். எதிரின் தோல்வியைத் தீர்மானிக்கும் வேவுக்காரன். இயக்கத்தின் தலைவரால் பலமுறை கெளரவிக்கப்பட்டவன். தளபதிகளின் நேசன். சங்கன் பணியாற்றிய களமுனையில் எதிரிகளின் முன்னேற்ற நடவடிக்கைகள் அதிரடியாக முறியடிக்கப்பட்டன. மண்ணை அபகரிக்கும் வன்கவர் வெறியர்களுக்கு எதிரான போராட்ட வரலாற்றில் சங்கன் ஒரு சுருட்டை பாம்பு. அவனிருந்த இடத்தை யாரும் அறியார். எதிரிகளின் காலடிக்குள் மிதிபட்டும் மனுஷ பாவனை காட்டாமல் மரக்குத்தியென கிடந்தது தப்பியவன். அத்தனையும் தடயமற்று அழிந்து போயிற்றே என்று கலங்கிய கண்களையும் துடைக்காமல் சாக்குப்பையை சுருக்கிட்டு கட்டினான். பசி எரிந்து உளம் புகையும் ஏழ்மையின் வயிற்றில் துடிதுடிக்கும் புழுவான வாழ்வு சங்கனுக்கு நேர்ந்திருந்தது. கோவிலை விட்டு வெளியேறி கோபுரத்தை வணங்கினான். கற்பூரச் சட்டியில் இரண்டு பெட்டி காவடி கற்பூரத்தை வைத்துவிட்டு மெல்ல நடக்கத்தொடங்கினான். கொஞ்சத் தூரத்திலேயே அவனைத் தன்னுள் புகுத்தியது இருள். அதிகாலையிலேயே வைரவர் கோவில் பூசாரியின் ஓலம் சனங்களை அழைத்தது. ஐம்பொன் சிலைகள், தகடுகள், உண்டியலென ஒன்றும் மிச்சமில்லாமல் துடைத்து வழிக்கப்பட்டிருந்தது. சூறையில் வேர் பிளந்து தரைவிழுந்த மரமென கருவறை விக்கிரகம் தூக்கி வீசப்பட்டிருந்தது. சனங்கள் மண்ணைவாரி தம்மிலடித்துக் கொண்டனர். “எங்கட ஊர்க்காரன் வைரவரில கை வைச்சிருக்க மாட்டான். கேணியடிக்காரர்கள் தான் வேலையைக் காட்டியிருக்கினம்” முதல் அனுமானத்தைச் சொன்னார் செல்லையா. “அண்ணா என்னவாய் இருந்தாலும் பொலிஸ்ல போ கேஸ் குடுப்பம். அதுதான் முறையாய் இருக்கும்” என்றவர் கொக்குவில் மாமா. “இவ்வளவு சண்டைக்குள்ள தப்பி, கஷ்டப்பட்டு திரும்பவும் ஊருக்கு வந்தோமெண்டு நினைச்சு கோயிலை புனரமைப்புச் செய்தால், களவெடுத்துக் கொண்டு போறாங்களே” என்றனர் ஊர்ப்பெண்கள். “இப்ப நீங்கள் என்ன செய்யப்போறியள். கேணியடி ஊருக்குள்ள புகுந்து ஒவ்வொருத்தனையும் பழி சொல்லி அடிக்கப் போறியளோ” என்று குரல் உயர்த்தினார் விநாயகம். “முதலில கேஸ் குடுக்கலாம். வெளிக்கிடுங்கோ” அழுத்தமாகச் சொன்னார் கொக்குவில் மாமா. “எல்லாத் துன்பத்துக்கும் இவங்கள் தான் காரணம். இவங்களிட்ட போய் நிண்டு எங்கட தெய்வத்தோட சிலை களவு போட்டுதெண்டு முறைப்பாடு கொடுக்க எனக்கு விருப்பமில்லை” என்றார் செல்லையா. “நீங்கள் சொல்றதெல்லாம் நூறுவிதம் சரிதான், ஆனால் வேற என்னதான் வழி. தொடர்ந்து களவு கொடுத்திட்டு இருக்கேலுமோ” கொக்குவில் மாமா கேட்டார். “நாட்டைப் பறிச்சு வைச்சிருக்கிறவனிட்ட போய், கோயிலில களவு போச்செண்டு சொல்லுறதோ” செல்லையாவின் பதில் கேள்வியில் கோபம் அதிகரித்திருந்தது. ஒரு வெள்ளைத்துணியில் சில்லறையை முடிந்து கோவில் வாசலில் கட்டிய செல்லையா “இந்த அநியாயத்த செய்தவன் எவனாயிருந்தாலும், இன்னும் ரெண்டு நாளில இங்க வந்து நிப்பான். வைரவர் பொல்லாதவர். அவற்ற கோபத்துக்கு ஆளானால் அவன்ர குலம் தழைக்காது” என்றார். சில நாட்களிலேயே யாழ்ப்பாணத்திலிருந்து கேதீஸ்வர குருக்கள் வரவழைக்கப்பட்டார். விக்கிரகம் பிரதிஷ்டை செய்யப்பட்டது. களவாடியவனே விரைவில் எல்லாப் பொருட்களையும் கொண்டு வந்து ஒப்படைப்பான் என அருள் வாக்கு சொன்னார் பூசாரி. சனங்களும் அப்படி நிகழவேண்டுமென விரும்பினர். சங்கன் திருடிய பொருட்களை முந்திரித் தோப்பொன்றில் புதைத்து வைப்பது வழக்கம். ஏற்கனவே தாமரைக்குள முருகன் கோவிலில் திருடிய தங்க வேல் ஒன்றும் அங்குதான் புதைக்கப்பட்டிருக்கிறது. இன்னும் வியாபாரப் பேரம் சரியாகப் படியவில்லை. பத்தர் காந்தியோடு மல்லுக்கு நின்றான். “இந்த வேல உருக்கி தங்கக்கட்டியா மாத்திறத்துக்கு எனக்கு கூலி வேண்டாமடாப்பா, ஆனால் நான் சொல்ற விலைக்கு தா” “பத்தரே, நான் சொல்றது தான் காசு. உங்களால வாங்க முடியுமா, முடியாதாவெண்டு சொல்லுங்கோ. எனக்கு உங்கட கூலி இனாமெல்லாம் வேண்டாம்” “உனக்கு உதவி செய்ய இஞ்ச வேற ஆருமில்லை. என்னைத் தவிர எந்தப் பத்தனும் இந்த வேலைக்கு துணிய மாட்டான். விளங்கி நட” “பத்தரே, கரட்டி ஓணான் வெருட்டி**க்குமாம். நீங்கள் அதுக்குத் தான் முயற்சிக்கிறியள். அது என்னட்ட சரிவராது” என்று சொல்லிவிட்டு அங்கிருந்து போனான். ஐம்பொன் சிலைகளையும் தகடுகளையும் புதைத்துவிட்டு, சில்லறைகளை எண்ணி முடித்தான். இரண்டாயிரத்து நான்கு ரூபாய் இருந்தது. முந்திரித் தோப்பிலிருந்து வீட்டுக்கு போகிற வழியிலிருந்த முருகன் கோவில் உண்டியலில் ஒரு ரூபாய் குற்றியை இட்டு கும்பிட்டான். “முருகனே, நான் செய்யிறது பிழை தான். ஆனால் வேற என்ன செய்ய ஏலும் சொல்லு. இத்தனை துன்பங்களைத் தந்த அரசாங்கத்தையே தண்டிக்காத நீ, உன்னட்ட களவெடுத்த என்னையும் தண்டிக்க மாட்டாய் என்றொரு நம்பிக்கை. என்றனை யாளும் ஏரகச் செல்வ மைந்தன் வேண்டும் வரமகிழ்ந்து தவும் லாலா லாலா லாலா வேசமும் லீலா லீலா லீலா வினோதனென்று உன்திரு வடியை உறுதியென்றெண்ணும் என்தலை வைத்துன் இணையடி காக்க” என்று பாடிக்கொண்டான். எதிர்ப்பட்ட எல்லோரும் சங்கனைப் பார்த்து அகமகிழ்ந்து புன்னகைத்தனர். “சங்கன் நாளைக்கு ஒரு கிணறு வெட்டிருக்கு வாறியோ” வழிமறித்த கிளியனிடம் வருகிறேன் என்றான். கொக்குவில் மாமா பொலிஸ் ஸ்டேசனில் முறைப்பாடு கொடுத்தார். கோவிலில் களவாடியவனை பிடித்து தரவேண்டுமென ஆங்கிலத்திலும் சிங்களத்திலும் கடிதம் எழுதி அளித்தார். இவ்வளவு தாமதமாக வந்து முறைப்பாடு தந்தால் எப்படி கண்டுபிடிக்க முடியுமென பொலிஸ் ஆவேசம் கொண்டது. “தெய்வம் பிடிச்சுத் தருமெண்டு வெயிட் பண்ணினாங்கள். அது நடக்கேல்ல, அதுதான் உங்களிட்ட வந்திருக்கிறம்” என்றார். பொலிஸ்காரர்கள் புல்லரித்துப் போனார்கள். கண்டிப்பாக அவனை கைது செய்துவிடுவோமென சிலர் நம்பிக்கையளித்தனர். இந்தச் செய்தியை ஊர்முழுவதும் தேநீரோடு பருகியது. சங்கன் எல்லாவற்றையும் அவதானிக்கத் தவறுவதில்லை. வீட்டு முற்றத்தில் மண்ணள்ளித் தின்னும் நந்திக்கடலின் கையில் லேசாக அடித்து நெஞ்சோடு தூக்கி அணைத்தான். சமையலிலிருந்த மலரினி வெளியே வந்து உங்கட மோளுக்கு ஒரு லோட் மண் வாங்கினால், இருபது வயசு மட்டும் சாப்பிடக் காணும்” என்றாள். வீட்டுக்குப் பின்னாலிருந்த சிறிய கொட்டிலில் இரண்டு போதல்களில் கள்ளு இருந்தது. பொரித்த சூடை மீனோடு கள்ளைக் குடித்து முடித்து அங்கேயே உறக்கம் கொண்டான். மலரினியும் சங்கனும் போராளிகளாக இருந்தவர்கள். ஒரே களமுனையில் சந்தித்துக் கொண்டவர்கள். வேவு அணிக்கு தலைமை தாங்கிய சங்கன் களமுனையிலுள்ள ஏனைய படையணிகளுக்கு வழங்கிய தகவல்கள் மாபெரும் வெற்றிகளை அளித்தது. மலரினி மகளிர் படையணியொன்றின் முக்கியமான தாக்குதல் அணித்தலைவியாக இருந்தாள். நிலமும் பனையும், களமும் சேனையும் சொந்தமாகவிருந்த நாட்களில் இருவரும் காதல் உறவெய்தினர். பின்னர் எல்லாமும் கானலெனக் கலைந்தவொரு காலத்தில் வதைமுகாம்களில் அடைக்கப்பட்டனர். போராளிகளாகவிருந்து புனர்வாழ்வளிக்கப்பட்டு விடுதலை செய்யப்பட்ட பின்பு திருமணம் செய்தனர். முதற்குழந்தை இறந்து பிறந்தது. பின்னர் வந்துதித்த பெண் குழந்தைக்கு நந்திக்கடல் என்று பெயர் சூட்டினான் சங்கன். பல்வேறு களவுச் சம்பவங்களை ஆராய்ந்து பொலிஸ் தேடுதலை நடத்தியது. கோவிலில் நிகழ்த்தப்படும் களவுகளில் மட்டுமே எந்தத் தடயங்களும் கிடைக்கவில்லையென ஒரு சிறந்த புள்ளியை இனங்கண்டார்கள். திறமையாக திட்டமிடப்பட்டு ஒரு குழுவால் செய்யப்படுவதாக உத்தேசித்தார்கள். தடயமில்லாத ஒன்றின் பின்னால் பயணிக்க இயலாது. அது ஒன்றாகவோ நூறாகவோ கூட இருக்கலாம். பொலிஸ் கைவிரித்தது. எங்கும் பிடி கிடைக்காமல் துருவித் துருவி விசாரித்தனர். சங்கன் கூலி வேலைக்குச் சென்றான். கிணறு வெட்டுவது உடல் வருத்தும் பணி. தசை தசையாக நோவெழும். வயிறு முட்ட கள்ளுக் குடித்தாலும் அலுப்புத் தீராது. இன்று வேலை முடிந்ததும், நேராக பத்தர் ஒருவரைப் பார்க்கச் செல்ல வேண்டும். இவனோடு இயக்கத்தில் இருந்த தோழமை. இப்போது வட்டக்கச்சியில் இருக்கிறான். பொன்னுருக்கும் கூடம் வைத்து சின்னச் சின்ன வேலைகள் செய்வதாக அறிந்திருந்தான். ஒருதடவை சென்று அவனிடம் கதைத்துப் பார்க்கலாமென சங்கனுக்குத் தோன்றியது. வட்டக்கச்சியிலுள்ள வெத்திலை பத்தரின் வீடு தேடிக் கண்டுபிடித்தான். உள்ளே இரண்டு நாய்கள் கட்டப்பட்டிருந்தன. வெளியே நின்று பட்டாம்பூச்சி என்று அழைத்தான் சங்கன். இரண்டு கைகளுமில்லாது வீட்டு வாசலில் வந்து நின்றவொரு உருவம் “நீங்கள் ஆர்” என்று கேட்டது. சங்கனால் அந்தக் குரலை உணர முடிந்தது. “பட்டாம்பூச்சி நான் வியட்நாம். உந்த நாயளைப் பிடி மச்சான்” என்றான். அந்த உருவம் அற்புதமொன்றைக் கண்டதைப் போல திகைப்படைந்து சங்கனை நோக்கி ஓடிவந்தது. அப்போதுதான் பட்டாம்பூச்சியின் முகத்தைப் பார்த்தான் சங்கன். தீக்காயத்தின் தழும்பு மெழுகெனவிருந்தது. கண்கள் எரியும் திரியென சிவந்திருந்தன. வெறிகொண்ட சூனியம் தங்கிய மேனி. “பட்டாம்பூச்சி நாயளைப் பிடி, நான் வியட்நாம்” என்றான். பட்டாம்பூச்சி நாய்களை விரட்டினான். உள்ளே வாங்கோ என்பதைப் போல ஒரு தலையசைப்பு. சங்கன் அவனைக் கட்டித்தழுவினான். பட்டாம்பூச்சி பெருங்குரலெடுத்து விம்மி அழுதான். “ஏன் மச்சான் இப்பிடி குழந்தையள் மாதிரி அழுகிறாய், அழாதே” என்றான். “நீ வீரச்சாவு எண்டு கேள்விப்பட்டனான். அதுவும் ஆனந்தபுரம் பொக்சில. அங்க நிண்டனியோ” பட்டாம்பூச்சி கேட்டான். “நீ கேள்விப்பட்ட மாதிரியே வீரச்சாவு அடைஞ்சிருக்கலாம். ஆனால் இப்ப கிடந்தது உத்தரிக்க வேண்டியிருக்கு” “இயக்கத்திலையும் சரி, சாவிலையும் சரி முடிவு நாங்கள் எடுக்க ஏலாது. ஏற்கனவே எழுதின தாளில கோடுபோட முடியாதெல்லே” “டேய், பட்டாம்பூச்சி தத்துவம் கதைக்கிறது இன்னும் குறையேல்ல. நீ எங்க காயப்பட்டனி. இப்படி எரிஞ்சு போய் இருக்கு” தன்னுடைய இல்லாத கைகளின் மீதத்தைக் காட்டி “இது ரெண்டும் மாத்தளனில போனது. அதுக்குப் பிறகு மெடிஸ்ல இருந்தனான். அங்க பொஸ்பரஸ் குண்டு முகத்தை எரிச்சுப்போட்டுது” “இப்ப முந்திய விட நல்ல வடிவாய் இருக்கிறாய் மச்சான்” “ஓமடா, வெளிநாட்டில தான் கலியாணம் பார்க்கினம். போட்டோவ பார்த்த ஒரு பிள்ளையும் நீ சொன்ன மாதிரி சொல்லுதில்லை.” “ஏன் இஞ்ச இருக்கிற பிள்ளையை நீ கலியாணம் செய்ய மாட்டியோ. உனக்குத் தானே தொழிலிருக்கு” “இப்ப என்ர முடிவுகளை நான் எடுக்கிறதில்லை. நான் எடுத்த முடிவுகள் முள்ளிவாய்க்காலோட முடிஞ்சுது. இனிமேல் அக்காமார் சொல்றத கேட்டு நடப்பம்” “அதுசரி, உன்னட்ட ஒரு விஷயம் சொல்லவேணும். அது எங்கட இயக்க ரகசியத்துக்கு ஒப்பானது. நீ ஆரிட்டையும் சொல்லமாட்டேன் என்றால் சொல்லுகிறேன்” “வியட்நாம் எனக்கு எந்த ரகசியமும் நீ சொல்ல வேண்டாம். நான் அதை வைச்சு என்ன செய்யேலும் சொல்லு” “இல்ல,நீ எனக்கொரு உதவி செய்ய வேணும். அது உன்னால மட்டும் தான் முடியும்” “எனக்கு ஒண்டுமாய் விளங்கேல்ல. சரி என்ன விஷயம் சொல்லு” சங்கன் எல்லாவற்றையும் சொல்லி இறுதியில் “அந்த வேல் இப்பவும் என்னட்டத் தான் இருக்கு. நீ உருக்கித் தரவேணும். எங்களை மாதிரியிருந்து இண்டைக்கு கஷ்டப்படுகிற ஆக்கள் நிறையப் பேர் இருக்கினம். அவையளுக்கு பிரிச்சு குடுக்கலாம்” என்றான். பட்டாம்பூச்சி சரியென்று தலையசைத்தான். மூன்று நாட்கள் கழித்து அதனை எடுத்துவரும்படி சொன்னான். சங்கன் சந்தோசத்தோடு விடைபெற்றுச் சென்றான். மழையும் மின்னலும் இரவில் விழுந்தன. சங்கன் நனைந்து நடுங்கியபடி நெருப்புக்குச்சியைத் தட்ட முயற்சித்தான். சிறுஞ்சுடர் அணிந்த அவளது கண்கள் சங்கனைப் பார்த்தது. அவளது கழுத்தில் அணியப்பட்டிருந்த அலங்கார நகையைக் கழற்றி பையில் போட்டான். கைகளைத் துடைத்து மீண்டுமொருமுறை நெருப்புக்குச்சியைத் தட்டினான். அம்மன் முகத்தில் மழைநீர் சொட்டிக்கொண்டிருந்தது. சங்கன் அவளது நெற்றியில் குங்குமமிட்டு வணங்கினான். கையில் கிடைத்த ஐம்பொன் சிலைகளையும் கைப்பற்றி அங்கிருந்து வெளியேறினான். கோவிலின் வெளிப்புற கதவடியில் கறுப்பு நிறச்சேலை அணிந்த குமரியொருத்தி ஆங்காரமாய் சங்கனை இடை மறித்தாள். அவனால் எதுவும் செய்ய இயலவில்லை. எடுத்தவற்றையெல்லாம் என் கழுத்தில் அணிவித்து உன் உயிரைக் காப்பாற்று என்றாள். “நீ ஆர், உனக்கேன் அணியவேண்டும்” “நான் தெய்வம். உன்னைக் காத்து நிற்கும் தெய்வம்” “சமாதானத்துக்கான யுத்தம், நல்லிணக்கத்திற்கான அரசு, போர்க்குற்ற உள்ளக விசாரணை போல காத்து நிற்கும் தெய்வம், எவ்வளவு பெரிய பம்மாத்து. சனியனே தள்ளி நில்” என்று சுட்டியலை எடுத்து ஓங்கிய சங்கனைக் கண்டு தெய்வம் மறைந்தது. மின்னல் விழுந்தது. இடி முழங்கிற்று. எப்போதும் போல் காற்றின் அரவம் அன்றில்லை. சங்கன் முந்திரித் தோப்புக்குள் நுழைந்து மண்ணைத் தோண்டி நகையையும் சிலைகளையும் புதைக்க ஆயத்தமானான். அப்போது மின்னல் வெளிச்சமொன்று பூமியில் விழுந்தது. அவனின் முன்னே ஓருருவம் நிற்பதைப் போல எண்ணினான். வெளிச்சத்தில் அந்த உருவத்தின் முகத்தைக் கண்டான். ஒளிதுலங்கிய கண்கள். விடுதலையின் கனல் சுமந்த நிமிர்வின் மேய்ப்பன். கம்பீரத்தின் ஞானம் தரித்தவன். திகைப்புக்கும் மிரட்சிக்கும் உள்ளாகிய சங்கன் “தெய்வமே எங்களை ஏன் கைவிட்டாய்” என்று எழுந்தோடிப் போனான். அவனை இறுக அணைத்தபடி அந்த உருவம் சொல்லிற்று. “ஒரு மகத்தான தோல்வியைக் கூடத் தராது யுத்தம் தான் எங்களை கைவிட்டது. இதன்பொருட்டு என்னோடு பொருதாதே இளையவனே” மீண்டும் ஒரு இடி மின்னல். சங்கனை அணைத்த உருவம் அப்போதில்லை. முந்திரித்தோட்டம் முழுதும் சுழன்று பார்த்தான் எவருமில்லை. எடுத்து வந்த பொருட்களை புதைத்தான். அங்கிருந்து வீட்டுக்கு நடக்கலானான். அந்தப் பேரிருளிலும் வீட்டின் முற்றத்தில் அமர்ந்திருந்து மண்ணள்ளித் தின்னும் நந்திக்கடலைத் தூக்கி நெஞ்சோடு அணைத்துக் கொண்டு “தெய்வம் எங்களைக் கைவிடாது” என்றான். நந்திக்கடல் தனது கைகளில் கிடந்த மண்ணை சீற்றம் கொண்டு குருதியால் துருப்பிடித்த இரவின் முகத்தில் எத்தினாள். https://akaramuthalvan.com/?p=13351 point- போதமும் காணாத போதம் - அகரமுதல்வன்
போதமும் காணாத போதம் – 07 ஆயிரத்து தொள்ளாயிரத்து தொண்ணூற்றி இரண்டாம் ஆண்டு மே மாதம் முதலாம் திகதி வெள்ளிக்கிழமை மாலையில் சங்கிலி பெரியப்பாவை புலிகள் இயக்கம் சுட்டுக்கொன்றது. மூன்று பிள்ளைகளையும் அழைத்துச் சென்று வீதியில் கிடந்த கணவனின் உடலத்தின் முன்பாக விழுந்தரற்றினாள் கிடுகு பெரியம்மா. ஊர்ச்சனங்கள் கூடி அவளையும் பிள்ளைகளையும் ஆற்றுப்படுத்தி, சங்கிலியின் இறுதிச் சடங்கை செய்து முடித்தனர். சங்கிலி பெரியப்பா ஆயுதமேந்திய வேறொரு அமைப்பைச் சேர்ந்தவர். அவர்களுக்கும் புலிகளுக்கும் இடையே மோதல்கள் நடந்தன. அந்த நடவடிக்கைகளில் சங்கிலிக்கு பெரிய பங்கிருந்தது. பிறகான நாட்களில் தான் சார்ந்திருந்த ஆயுத அமைப்போடு முரண்பட்டு புலிகளிடம் சரணடைந்து விசாரணைகளைச் சந்தித்தார். உயிருக்கு அச்சமற்று உலகியலோடு மட்டும் அமைந்திருந்தார். கிணறு வெட்டுவது, வேலி அடைப்பது, வீடு வேய்வதென கூலியானார். ஆனாலும் மீண்டும் மீண்டும் விசாரணைகளுக்கு அழைக்கப்பட்டார். “பெடியள் உங்களில எதோ ஐமிச்சப்படுறாங்கள். அதுதான் இப்பிடி அடிக்கடி விசாரிக்கிறாங்கள். எனக்கு பயமாயிருக்கு” என்றிருக்கிறாள் பெரியம்மா. பதிலுக்கு “நான் பயப்பிடேல்ல, அதிகபட்சம் சுடுவாங்கள். அதுதானே நடக்கும்” என்றிருக்கிறார். பெரியம்மா மூன்று பிள்ளைகளுக்கு நடுவில் அவரை உறங்குமாறு கூறினாள். அவளுக்கு ஆறுதல் தருகிற ஒன்றைச் செய்வதில் பெரியப்பா பின் நின்றதில்லை. அப்படித்தான் உறங்கவும் செய்தார். குளித்து முடித்து குளத்திலிருந்து வீடு நோக்கி நடந்து சென்றவரை போராளிகள் அழைத்துச் சென்றனர். பெரிய புளியமரத்தின் கீழே நிற்கவைத்து அவருடைய தலைக்கு மேல் துரோகியென எழுதப்பட்ட சிறிய இரண்டடியிலான கரும்பலகையை அறைந்தார்கள். துரோகம் ஒழியட்டும் எனத்தொடங்கும் மரண தண்டனை அறிக்கையை வாசித்து முடித்த குரல் ஓய்வதற்குள் தோட்டாக்கள் பாய்ந்தன. வெளியேறிக் கொதித்த குருதியை வெடியோசைகள் அறைந்தன. சங்கிலி பெரியப்பாவின் உடலுக்கு கொள்ளிவைக்கும் போது சந்தனனுக்கு ஏழு வயது. மிச்ச இருவரும் அவனிலும் இளையவர்கள். தியாகம் துரோகம் எதுவுமறியாத மழலைகள். எச்சில் சிந்தும் அமுத உயிரிகள். சந்தனன் தோளில் கொள்ளிக்குடத்தை வைத்து சங்கிலி பெரியப்பாவின் உடலத்தை மூன்றுமுறை சுந்திவந்தான். ஒவ்வொரு சுற்று முடிந்ததும் தன்னிடமிருந்த கத்தி முனையால் கொள்ளிக்குடத்தைக் கொத்தினார் மார்க்கண்டு மாமா. சந்தனன் கொள்ளி வைத்து திரும்பிப் பார்க்காமல் அழைத்துச் செல்லப்பட்டான். ஆனாலும் அவன் எரியும் சிதையை ஒருகணம் திரும்பி நின்று பார்த்தான். தீயென எரியும் குருதி. நிணமுருக்கும் சுவாலை. மஞ்சள் சிவப்பென எழுந்தாடும் ஒரு போழ்தெனப் பிணையும் வெளிச்சம். அப்பாவென்று அழைத்தான். மார்க்கண்டு மாமா அவனை அணைத்தபடி கண்ணீர் உகுத்தார். காடாற்றும் சடங்குக்காக போயிருக்கையில் சாம்பலை அள்ளி சிறு மண்முட்டியில் போட்டனர். சந்தனன் கையில் வைத்திருந்து அந்த முட்டியைப் பார்த்தான். குருதி தளும்பிக் கிடந்தது. ரத்தமென பயந்தடித்து முட்டியைத் கை தவறிக் கீழே போட்டான். சாம்பல் மண்ணில் கலந்தது. மண்ணெனக் கிடந்த சாம்பலை அள்ளி வேறொரு முட்டியில் அடைத்து கடலில் கரைத்தனர். ஒரு பேரலையின் சீற்றம் சாம்பலை உள்வாங்கிக் கொண்டது. சந்தனன் ஆர்ப்பரிக்கும் கடலைப் பார்த்தான். குருதியலைகள். ஓலங்கள் நிரம்பிய உடலங்கள் அதில் சுருள்கின்றன. திடுமென கடலின் இரைச்சல் கூடி “துரோகி சங்கிலி” என்று ஒலித்தது. கரையொதுங்கிக் கிடந்த மண்டையோடொன்றையெடுத்து வெறிகொண்டு வீசினான். “அப்பாவை ஏனம்மா சுட்டவே” சந்தனன் கேட்டான். காற்று மோதும் குப்பி விளக்கு அணையாது தப்ப “ துரோகம் செய்திட்டாராம். துரோகியாம்” பெரியம்மா சொன்னாள். “துரோகமென்றால் என்னம்மா” இதனைக் கேட்ட சந்தனனை அணைத்துச் சொன்னாள் “ நாங்கள் மனுஷராய் பிறந்தது. அதுவும் இந்த மண்ணில பிறந்தது. இதுதான் துரோகம்” என்றாள். நிலவேறி அலை மடித்து வெறித்திருந்த கடலில் சாம்பல் முட்டி மிதந்தது. இரண்டாயிரத்து ஆறாம் ஆண்டு நவம்பர் மாதம் இருபத்தேழாம் திகதி. இருபத்தோராவது வயதில் சந்தனன் தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தில் இணைந்தான். அவன் எழுதிய கடிதம் செத்தையில் செருகியிருந்தது. பெரியம்மா அதனை வாசித்ததும் அச்சத்தில் துண்டு துண்டாய் கிழித்து அடுப்பை மூட்டி ஒவ்வொன்றாக சாம்பலாக்கினாள். பிள்ளைக்கு எதுவும் நேரக்கூடாதென தெய்வத்திடம் இறைஞ்சி அழுதாள். ஏனைய இரண்டு பிள்ளைகளையும் வெளியே செல்ல வேண்டாமென கட்டளையிட்டாள். தன் பிள்ளையிடம் துளிர்த்த வன்மத்தை எண்ணி கசந்து அழுதாள். ஏற்கமுடியாதவொரு சூளுரையை சந்தானம் அளித்திருக்கிறான். அவனுள் தலைவிரித்து நிற்கும் அனலரவத்தின் விஷம் முறிக்க ஏது வழி? இதற்கெல்லாம் காரணம் தானன்றி வேறு யார்? சொல்லிச் சொல்லி வளர்த்தேனா? என்று நெஞ்சிலடித்து அழுதாள். ரத்தத்தால் பழியழிக்கும் வெறியூட்டிய மார்போ தன்னுடையதென தாய்மை கருக பேதலித்தாள். அன்றிரவு அடிப்படை ஆயுதப் பயிற்சிக்கான முகாமில் சேர்க்கப்பட்டான் சந்தனன். அங்கே பேண வேண்டிய ஒழுங்குகளையும், மீறல்களையும் பயிற்சி ஆசிரியர்களில் ஒருவர் அறிவுறுத்தினார். தனக்கு ஒதுக்கப்பட்ட இடத்தில் சந்தனன் அமர்ந்தான். அதிகாலையில் விசில் சத்தம் கேட்டதும், எழுந்திட வேண்டுமென கூறப்பட்டிருந்தது. மெல்லக் கண்களை மூடி உறங்கிப் போனான். ஆனால் பெரியம்மா இயல்பு குலைந்திருந்தாள். ஒருதடவையேனும் அவனை நேரில் சந்தித்து அறிவுரை சொல்லவேண்டுமென பதகளித்தாள். அம்மாவைச் சந்திக்க வீட்டிற்கு வந்தாள். அம்மாவைத் தனியாக அழைத்துச் சென்று நடந்தவற்றை சொன்னாள். “உடனடியாக சந்திக்க வாய்ப்பிருக்குமோ தெரியாது. எண்டாலும் கேட்டுப் பார்க்கிறேன்” என்றாள் அம்மா. வெளியே துப்ப இயலாத ஒரு நஞ்சைத் தன்னுள்ளே விழுங்க இயலாமலும் துடித்து நின்றாள் பெரியம்மா. சந்தனனுக்கு இயக்கத்தைப் பிடியாது. எப்போதும் குற்றம் சொல்லுவான். தந்தையைக் கொன்றவர்கள் என்பதைத் தாண்டியும் இயக்கத்திடம் குறைப்பட அவனுக்கு காரணங்களிருந்தன. அந்தப் புளியமரத்தை தாண்டும் போதெல்லாம் “அப்பா கடைசியா இதில தான் படுத்திருந்தவர். ரத்தம் வேரடி முழுவதும் பரவியிருந்தது. குப்புறக்கிடந்த வாயில் ரத்தமும் மண்ணும் ஒட்டிக்கிடந்தது. ரத்தம் குடித்து செழித்து நிற்கும் புளியம் மரம்” என்பான். ஆனால் இன்று இயக்கத்தில் இணைந்திருக்கிறான். அவனுள் நிகழ்ந்திருப்பது திரிபென நம்ப இயலவில்லை. அம்மாவும் பெரியம்மாவும் இரவோடு இரவாக ஓட்டோவில் புறப்பட்டனர். “நான் வரப் பிந்துமடா, நீ படு” என்ற அம்மாவின் கண்களில் ஒருவிதமான அவசரத்தைப் பார்த்தேன். “எங்க போறியள்” கேட்டேன். “கிளிநொச்சிக்கு, ஏன் நீயும் வரப்போறியோ” என்று அம்மா கேட்டாள். அது அழைப்பல்ல. இதற்கு மேல் கேளாதே என்கிற சமிக்ஞை. ஓட்டோ புறப்பட்டது. பெரியம்மாவின் கண்ணீர் வெளியெங்கும் பறந்தது. இரண்டு கைகளையும் கூப்பி ஐந்தெழுத்து மந்திரத்தை சொல்லத் தொடங்கினாள். “இப்ப நடக்கிறதுக்கெல்லாம் நீ தான் காரணம் அக்கா” என்றாள் அம்மா. பெரியம்மா எதுவும் பதில் கதைக்கவில்லை. மூன்று மாத ஆயுதப் பயிற்சி முடித்த சந்தனனை சந்திக்க நாங்கள் போயிருந்தோம். உடல் பெருத்திருந்தான். புலிச்சீருடை அணிந்து மிடுக்கேறி நின்றான். பெரியம்மா அவனது கைகளைப் பிடித்து “சந்தனா, கடிதத்தில நீ எழுதியிருந்த எல்லாத்தையும் மறந்திடு. உன்னைத் தெய்வமாய் பார்த்தனான். ஆனா ரத்தம் கேக்கிற தெய்வமில்லை நீ” என்றாள். அந்தச் சொற்களில் எவற்றையும் பொருட்படுத்தவில்லையென அவன் உடல்மொழி கூறியது. தன்னுடைய கழுத்தில் கிடக்கும் குப்பியை தாயிடம் காட்டி “ இது கழுத்தில மட்டுமில்ல, எனக்குள்ளேயும் கிடக்கு” என்றான். பெரியம்மா அவனை கன்னத்தில் அறைந்து “நீ செத்தொழிஞ்சாலும் கவலையில்லை” என்று கத்தியபடி வெளியேறினாள். பெரியம்மாவுக்கு பின்னால் ஓடினேன். அம்மா சந்தனனிடம் “ நீ அவனைச் சுட்டுப் பழி தீர்க்க நினைக்கிறாய் எண்டு தெரிஞ்சாலே, அவ்வளவு தான்” என்றாள். என்ன நடந்தாலுமென்ன சாகத்தானே போகிறேன். அதிகபட்சம் என்ன செய்வார்கள். சுடத்தானே செய்வார்கள்” என்றான். சங்கிலிப் பெரியப்பாவை சுட்டுக்கொன்றவர் சரித்திரன். இன்றைக்கு முக்கிய பொறுப்பொன்றில் உள்ளவர். அன்று துரோகிகளை அழித்தொழிக்கும் பணியில் துடிப்புடன் இருந்தவர். இத்தனை வருடங்களில் பெரியம்மா சந்தனனுக்கு அடிக்கடி சொன்ன பெயர் சரித்திரன். எங்கு சரித்திரனைக் கண்டாலும் “அங்க பார், அவன் தான்” என்பாள். அப்படித்தான் சந்தனன் குருதியில் தீ மூண்டது. மெல்ல மெல்ல கங்குகள் பிணைந்து, காற்றில் தப்பிப் புகைந்து எரியத்தொடங்கியது. “அப்பாவைச் சுட்டவனை சுடுவேன்” என்று சந்தனன் முதன்முதலில் சத்தியம் செய்தது அந்தப் புளியமரத்தில் தான். அதற்கு ஒரே வழியாக இயக்கத்தில் சேர்ந்தான். ஆதிப்பலிக்கு ரத்தம் கேட்கும் உக்கிரம் அவனுள் உயர்ந்தது. சந்தனன் சொன்னதும் அம்மா அதிர்ச்சியடையவில்லை. அவனிடம் தெளிவாகவும் உறுதியாகவும் சொன்னாள். “இஞ்ச பார் சந்தனன், நீ சின்னப்பெடியனில்லை. உனக்கு நான் சொல்றது விளங்குமெண்டு நினைக்கிறன். பழிவாங்கத் துடிக்கிறது உனக்குத் தான் ஆபத்து.” என்றாள். சந்தனன் எதுவும் கதையாமலிருந்தான். புதிய போராளிகளின் பெற்றோர்கள் அனைவருக்கும் சந்திக்கும் நேரம் முடிவடைந்து விட்டதாக அறிவிக்கப்பட்டது. படையணி முகாமிற்கு கொண்டு செல்லப்பட்டான். அங்கிருந்து களமுனைக்கு கொண்டு செல்லப்படும் அணியோடு சேர்க்கப்பட்டான். சந்தனனிடமிருந்த ஆயுதத்தின் ஒயில் வாசனை அவனுக்குப் பிடிக்கவில்லை. மீண்டும் மீண்டும் துணியால் துடைத்தான். இரண்டு நாட்கள் பயணம் செய்து, களமுனைக்கு வந்தடைந்தான். முன்னரங்கு. எப்போதும் விழிப்பு. பதுங்குகுழிகள் நீண்டிருந்தன. காப்பரண்கள் கொதித்தன. நாளுக்கு பத்து மணிநேரம் மோதல் நிகழும் படுகளம். சந்தனனுக்கு காவலரண் ஒதுக்கப்பட்டது. ஏற்கனவே அங்கிருந்தவர்களோடு அறிமுகமானான். துவக்கைத் தன்னுடைய நெஞ்சோடு அணைத்தபடி பதுங்குகுழிக்குள் அமர்ந்தான். அன்றிரவு எந்த மோதலும் நிகழவில்லை. உறக்கம் வாய்த்தது. சந்தனன் மட்டும் விழித்திருந்தான். அவனுடைய காவல் நேரம் தாண்டியும் கடமை செய்தான். டிகரில் வலது கையின் ஆட்காட்டி விரலை வைத்தபடி புளியமரத்தை நினைத்துக் கொண்டான். தேசத்துரோகியென எழுதப்பட்டு முதல் ஆணியில் அறையப்பட்டிருந்த தந்தை பெயரைச் சொன்னான். உள்ளம் எரிந்து கண்ணீர் புகைந்தது. அப்பா அப்பா என்றான். இயலாமை ஊறி இருள் திரண்டு நின்றது. அவனிருந்த திசை நோக்கி குண்டுகள் பொழிந்தன. போழ்தின் இருள் அழிந்து ஊழி பொழிந்தது. சந்தனன் சண்டையில் காயமுற்றான். அவனிருந்த மருத்துவ விடுதியின் தலைமைப் பொறுப்பதிகாரியாய் சரித்திரன் இருந்தார். மேனியெங்கும் நஞ்சின் சூறை தீப்பிடிக்க சந்தனன் யாரோடும் கதையாமலிருந்தான். வீட்டில் செய்த உணவுகளை சரித்திரன் மூலமாய் அம்மா கொடுத்தனுப்பினாள். சந்தனன் அந்த உணவுகளைத் தீண்டக் கூடவில்லை. சரித்திரனுக்கு அது கவலையாகவிருந்தது. சில நாட்கள் கழித்து சரித்திரன் தனது வாகனத்தில் சந்தனனை ஏற்றிக்கொண்டு சென்றான். அவன் எதுவும் கதையாமல் வீதியை வெறித்திருந்தான். மழை பெய்யத் தொடங்கியது. “நீ என்னைச் சுடத்தான் இயக்கத்துக்கு வந்தனியெண்டு கேள்விப்பட்டனான்” என்ற சரித்திரனை அதிர்ச்சியோடு பார்த்தான் சந்தனன். உன்ர தந்தையைச் சுட்டது நானெண்டு தெரிஞ்ச உனக்கு ஏன் சுட்டனான் எண்டு தெரிஞ்சிருக்க வாய்ப்பில்லை” என்று தொடர்ந்தார். “அதுதான் நல்லாய்த் தெரியுமே, தேசத்துரோகி, ஒருத்தனைக் கொல்ல நீங்கள் துவக்கெடுக்க முதல், இப்பிடியொரு பட்டம் வைச்சே கொலை செய்திடுவியள்” என்றான் சந்தனன். சரித்திரன் கொஞ்சம் இறுக்கமாக “அது பட்டமில்லை. தண்டனையோட முதலடி.” என்று சொன்னார். வாகனம் புளியமரத்தடியில் நின்றது. அங்கு நிறைய ஆணிகள் அறையப்பட்டிருந்தன. சரித்திரன் வாகனத்தை விட்டு கீழே இறங்கி, தன்னுடைய பிஸ்டலை அவனிடம் கொடுத்து என்னைச் சுடு என்றார். சந்தனன் வாகனத்தை விட்டு கீழே இறங்கினான். பிஸ்டலை சரித்திரனின் நெற்றி நோக்கி நீட்டினான். மூன்று வெடிகள் முழங்கின. துரோகத்தின் துருவேறிய ஆணிகள் சிதறுண்டு பறந்தன. கிளையில் துளிர்த்திருந்த இலைகள் மெல்லக் காற்றில் அசைந்தன. இராணுவ மிடுக்கோடு, பிஸ்டலை சரித்திரனிடம் கையளிக்க முன்னே நடக்கலானான். துரோகத்தின் ஆணிகள் சிதறிக்கிடந்த நிலத்தில் சந்தனன் அவதானமும் விழிப்பும் கூட்டியிருந்தான். புளியமரத்தின் கீழே இரண்டு பேரும் நின்று கதைக்கத் தொடங்கினார்கள். இத்தனை நாட்களும் ஆறாத தன்னுடைய காயத்தைப் பார்த்தான் சந்தனன். அது கொதியடங்கி ஆறியிருந்தது. https://akaramuthalvan.com/?p=13041 point- கருத்துக்களம் : பிரச்சனைகளும் தீர்வுகளும்
சிறிய மாற்றங்கள் செய்த பின்னர் கடந்த சில தினங்களை விட நேற்று மாலையில் இருந்து பக்கங்களைத் திறக்க எடுக்கும் நேரம் குறைவாக இருக்கும்.1 point- நகுலாத்தை.
1 pointஎனக்கும் இந்த ஐயம் உண்டு. கதை சுவாரஸ்யத்திற்காக இது போன்ற இழிவுகள் சேர்க்கப்பட்டிருக்கலாமோ என்னவோ! (உன் நிலைமை கொஞ்சம் இறங்கி வந்தால் நிழலும் கூட மிதிக்கும்)1 point- போதமும் காணாத போதம் - அகரமுதல்வன்
போதமும் காணாத போதம் – 06 இருபத்தைந்து வருடங்கள் வன்கவர் படை ஆக்கிரமித்திருந்த கேணியடி கிராமத்திற்குள் சனங்கள் அனுமதிக்கப்பட்டனர். ஐந்து ஏக்கர் பரப்பளவில் அமைந்திருந்த படைமுகாம் மட்டும் நாலுசுற்று முட்கம்பி வேலிகளால் அரணாகியிருந்தது. சூனியம் சடைத்த கிராமம் பெருவயிறெனத் திறந்து கிடந்தது. சனங்கள் கருப்பையின் தட்பத்தை உணர்ந்த உயிரென குதூகலத்தில் கால் பதித்தனர். ”இந்த நிலம் இராணுவத்துக்குச் சொந்தமானது. அனுமதியின்றி உட்பிரவேசியாதீர்கள்” என்றெழுதப்பட்டிருந்த அறிவிப்பு பலகையை கழற்றி வீசினர். ஆயுதமற்ற சிப்பாயொருவன் குதிரையிலிருந்தபடி எல்லாவற்றையும் கண்காணித்தான். சின்னாச்சி மண்ணை அள்ளி மேலெங்கும் பூசினாள். உயிர்மீட்சி கொண்ட ஆனந்தத்தில் அருள் கொண்டாடினாள். குண்டுமணி அத்தை வேப்பிலைகளைப் பிடுங்கி வந்து சின்னாச்சி கையில் கொடுத்தாள். பேரன் புண்ணியன் வேதத்துக்கு மாறியிருந்தான். அதனால் பக்கத்தில் வரவில்லை. சின்னாச்சி சன்னதம் கொண்டாடினாள். மண்ணுக்குத் திரும்பியது சனங்கள் மட்டுமல்ல, கண்ணகித் தெய்வமும் தான் என்றார் ஊத்தை மாமா. சின்னாச்சி கண்கள் சிவந்து அந்தரத்தில் எழுந்து நிலத்தில் இறங்கி ஆவேசம் கொண்டாள். ஆங்காரம் பொங்க கைகள் விரித்து ஆலமரம் நோக்கி சின்னாச்சி ஓடினாள். “இந்த நிலம் இராணுவத்துக்குச் சொந்தமானது” என்ற அறிவிப்பு பலகையைத் மிதித்தேறி ஆலமரத்தை அண்மிக்கையில் நிலம் பிளந்து ஒலித்தது வெடியோசை. சின்னாச்சி கீழிருந்து மேலேறி ஒரு விழுதென நிலம் பதிந்தாள். ஆலமரத்தின் கீழே மேடெனக் கிடந்த பறவை எச்சங்களோடு அவளது கால்விரல்கள் எஞ்சியிருந்தன. சனங்கள் சின்னாச்சி என்று கதறினார்கள். சூனியமெரிந்த வெளியில் மனுஷ அழுகுரல் கேட்ட பறவைகள் எழுந்து பறந்தன. சிப்பாய் குதிரையை உசுப்பிவிட்டு சனங்களைச் சிதறியோடச் செய்தான். சனங்கள் உறைந்தனர். ஆலமரத்தின் கீழே குருதிக் குத்தியாய் சின்னாச்சி மீந்திருந்தாள். அவளுடைய உடலத்தை மீட்பது சிரமம். கண்ணிவெடிகள் புதைக்கப்பட்டிருக்கும் வலயத்திலிருந்து சின்னாச்சியை குப்பைவாரியால் இழுத்து எடுத்தோம். சின்னாச்சியின் கால் துண்டொன்று ஆலமரத்தின் வேர் இடுக்கில் இறுகிக்கிடந்தது. சின்னாச்சியை கேணியடிக் கிராமத்தின் சுடலையிலேயே தகனமாக்க முடிவெடுத்தனர். அந்தப் பகுதிக்குச் செல்ல அனுமதியில்லையென வன்கவர் படை மறுத்தது. “மொத்தக் கிராமத்தையும் சனங்களிட்ட குடுத்தாச்செண்டு சொல்லிப்போட்டு, இப்ப செத்துப்போன ஆள எரிக்க அனுமதியில்லை எண்டால் எப்பிடி?” புண்ணியன் கேட்டான். “உங்களுடைய எல்லா இடங்களையும் நீங்கள் துப்பரவு செய்யத்தானே போகிறீர்கள். அதற்கு தீ வைக்க வேண்டுமல்லவா. ஆகவே இங்குள்ள எந்த இடத்திலாவது போட்டு எரியுங்கள்” என்றான் வன்கவர் படை அதிகாரி. “இந்தப் பாழ்படுவார் இத்தனை சனங்களை முள்ளிவாய்க்கால்ல கொண்டு குவிச்சும் கொலைவெறி அடங்காமல் நிக்கிறாங்களே” என்று குண்டுமணி அத்தை கொதித்தாள். சின்னாச்சியின் உடலத்தை தூக்கி வந்து வன்கவர் படை முகாமுக்கு முன்னால் கிடத்தினார்கள். ஈமச் சடங்கை செய்து முடித்தனர். பட்டினத்தார் பாடலைச் சுந்தரம் பாடினார். நெற்றியிலும் வயிற்றிலும் கற்பூரம் குவித்து சிதை மூட்டினான் புண்ணியன். எரிந்துருகும் சின்னாச்சியின் உடலத்தைச் சூழ்ந்த பெண்கள், தங்களுடைய முலைதிருகி வான் பார்த்து எறிவதைப் போல பாவித்தனர். “தீ மூளும், தீ மூளுமெனப் பாடுகையில் சின்னாச்சியின் உடல் விறகென மிளாசி எரிந்தது. அடுத்து சில மாதங்களில் இருபது குடும்பங்கள் கிராமத்தில் குடியேறி அங்கிருந்த தேவாலயத்தைச் சுத்தப்படுத்தினர். சின்னாச்சி கண்ணிவெடியில் செத்துப்போன ஆலமரத்தைச் சுற்றியுள்ள பகுதிகளில் ஆட்கள் நடமாட அஞ்சினர். “கண்ணிவெடியை நெருக்கிப் புதைச்சிருக்கிறாங்கள். அங்கால் பக்கம் போகாதேங்கோ” பெரியவர்கள் சொல்லினர். சுத்திகரிக்கப்பட்ட தேவாலய கிணற்றிலிருந்து பெரிய ரங்குப் பெட்டியொன்று மீட்கப்பட்டது. அது தண்ணீர் புகமுடியாத தடித்த பொலித்தீன் உறைகளாலும், விலையுயர்ந்த மெழுசீலையாலும் பொதி செய்யப்பட்டிருந்தது. தேவாலயத்தின் உள்ளே எடுத்துவந்து ரங்குப்பெட்டியைத் திறந்தனர். உள்ளே பாதிரியார் அணியும் வெள்ளைநிற அங்கியும், பவளத்தால் செய்யப்பட்ட செபமாலை இரண்டும் இருந்தன. இன்னொரு அடுக்கில் சிறிய தங்கச் சிலுவையொன்றில் அறையப்பட்டிருந்த இயேசுவும் தங்கமாயிருந்தார். புண்ணியன் அந்தச் சிலுவையைத் தூக்கிச் சென்று பீடத்தில் வைத்தான். சனங்கள் முழந்தாளிட்டு அமர “அவர் பூமி முழுவதும் போர்களுக்கு முடிவுகட்டுகிறார். வில்லை உடைத்து, ஈட்டிகளை முறிக்கிறார். போர் ரதங்களை நெருப்பில் சுட்டெரிக்கிறார்” என்றாள் ஒற்றைக்கண் சரசு. “கடவுளே, உங்களுடைய பெயரைப் போலவே உங்களுடைய புகழும் பூமியெங்கும் எட்டுகிறது. உங்களுடைய வலது கை நீதியால் நிறைந்திருக்கிறது. உங்களுடைய நீதித்தீர்ப்புகளால் எங்கள் நிலம் சந்தோஷிக்கட்டும்.” என்ற புண்ணியனின் கண்களை முட்டிப் பெருகிய கண்ணீர் செபமாலையின் மீது சொரிந்தது. இந்தச் சம்பவத்திற்கு பிறகு “தங்க இயேசு கோயில்” என்று புதுநாமம் பொறிக்கப்பட்ட தேவாலயத்தில் கேணியடிச் சனங்கள் வாரமொருமுறை ஒன்று கூடுவர். கிராமத்தில் இன்னும் செய்யவேண்டிய பொதுவேலைகளைப் பற்றி கதைத்து முடிவு செய்வார்கள். முதலில் சுடலைக்குச் செல்லும் பகுதியை இராணுவத்திடமிருந்து பெற்றுத் தரவேண்டுமென தமிழ் பாராளுமன்ற உறுப்பினருக்கு அழுத்தமாக கடிதம் எழுதினர். கேணியடி கிராமம், மக்களிடம் கையளிக்கப்பட்டது தன்னாலென தம்பட்டம் அடித்த அரசியல்வாதியைச் சந்திக்க இயலாமல் சனங்கள் சோர்ந்தனர். குதிரையில் சென்றுவரும் சிப்பாய்கள், பெண்கள் நீரள்ளும் சந்திக்கிணற்றடியில் குவிந்து நின்றனர். பெண்பிள்ளைகளை வெளியே அனுப்ப பயந்தொடுங்கினர் சனங்கள். சிப்பாய்களிடமிருந்து இனிப்பும் பழங்களும் வாங்கியுண்ட எதுவுமறியாத குழந்தைகளை பூவரசம் கம்பு தும்பாக அடித்தனர் தாய்மார்கள். சுடலை மீட்பை கேணியடி தீவிரமாக்கியது. கையளிக்கப்பட்ட பகுதியிலிருந்து இடதுபக்கமாக ஆறுகிலோ மீட்டர் பகுதிகளை இன்னும் இராணுவமே வைத்திருப்பதாக சனங்கள் வீதிக்கு வந்தனர். புண்ணியன் அந்தப் போராட்டத்தை முன்னெடுத்தான். சின்னாச்சி எரியூட்டப்பட்ட அதே இடத்தில் சனங்கள் அமர கொட்டகை அமைக்கப்பட்டது. கைக்குழந்தைகளை ஏந்தி வந்தவர்களும் அங்கேயே இருந்தனர். நெடுத்துக் கிளைவிரித்து நிழலூட்டும் வேப்பமரத்தில் குழந்தைகள் உறங்க ஏணைகள் கட்டப்பட்டன. இரவு பகலாக சனங்கள் வீதியில் படுத்துறங்கினர். போராட்டத்தை தலைமையேற்று நடத்தும் புண்ணியனை அவனது அணியினரையும் அழைத்து வன்கவர் வெறியர்கள் மிரட்டினர். “கடத்திச் சென்று உயிரோடு புதைப்போம்” என்றார்கள். புண்ணியன் சாந்தமூறும் புன்னகையோடு “அரசனுடையதை அரசனுக்கும் கடவுளுடையதைக் கடவுளுக்கும் கொடுக்கும் நீங்கள் எங்களுடையதை எங்களிடம்தான் தரவேண்டும்” என்றான். இராணுவம் சனங்களைச் சுடலைக்குள் அனுமதிக்கவில்லை. சனம் போராட்டத்தில் அரசியல்வாதிகளை அனுமதிக்கவில்லை. மூன்று நாட்களுக்கு மேலாக தொடரும் போராட்டம் ஊடகங்களில் செய்தியானது. மனித உரிமை ஆர்வலர்கள் துணை நின்றார்கள். “பேச்சுவார்த்தைக்கு தயாரில்லை. எழுந்து செல்லுங்கள். நீங்கள் எரிய வேண்டுமென்று அவசியமில்லை. உங்கள் உடலங்களை நான் வளர்க்கும் நாய்களுக்கு அளிப்பேன்” என்ற வன்கவர் படை அதிகாரி, மேலும் ஒருமணி நேரம் கெடு வழங்கினான். அதற்குள் போராட்டம் கைவிடப்பாடாது போனால் உயிரிழப்பு நிகழுமென்றான். நிலவெறியும் இரவு. வேப்பமரத்தில் கட்டப்பட்டிருந்த ஏணைகளில் குழந்தைகள் உறங்கினர். குதிரைகளின் குளம்பொலிகள் நிலத்தை அதிர்வித்தன. வன்கவர் வெறிப்படை முகாமின் பெருத்த கதவுகள் வாய் பிளந்தன. குதிரைகளின் மூச்சில் நடுங்கிய இரவு, புழுதியால் போர்த்தப்பட்டது. ஏணையில் கிடந்த குழந்தையின் அழுகுரல் கேட்ட தாய் ஓடோடி விரைந்தாள். குதிரைகள் கொட்டைகையை நோக்கி பாய்ந்து வந்தன. சிப்பாய்கள் தங்களது துவக்குகளை நீட்டி “ பத்து நிமிசத்திற்குள் எழுந்து செல்ல வேண்டும், இல்லையேல் வெடிதான் கதைக்கும்” என்றனர். சனங்கள் பின்வாங்கினர். குதிரைகள் கொட்டகைக்குள் புகுந்து வெறிகொண்டு அலைந்தன. மண்ணில் சரிந்தது கொட்டகை. புண்ணியன் எல்லாவற்றையும் பார்த்தபடி நின்றான். அவனை நோக்கி வந்த சிப்பாயொருவன் துவக்கின் பின்பகுதியால் தோள்மூட்டில் ஓங்கி அடித்தான். புண்ணியன் ஷணத்தில் சுதாகரித்து தப்பி தங்க இயேசு கோயிலுக்குச் சென்றான். ஏற்கனவே அங்கு சனங்கள் கூடியிருந்தனர். புண்ணியன் யாரோடும் எதுவும் கதையாமல் தங்கச்சிலுவையின் முன்பாக முழந்தாளிட்டான். “கர்த்தாவே! நீரோ, வியக்கத்தக்க காரியங்களைச் செய்தீர்! விண்ணுலகம் இதற்காக உம்மைத் துதித்தது. ஜனங்கள் உம்மைச் சார்ந்திருக்கமுடிந்தது. பரிசுத்தரின் கூட்டம் இதைப்பற்றிப் பாடியது. ஆனால் என்றைக்கும் இருளை மட்டுமே எங்களிடம் நிலைகொள்ளச் செய்திருக்கிறீர். துயரங்களுக்காக அழுது எங்கள் கண்கள் புண்ணாகிவிட்டன. ஏற்கெனவே கொல்லப்பட்ட சனங்களை புதைக்காமலும் எரிக்காமலும் கைவிட்டோம். வாழப் பெலனற்று மரித்தவர்கள் இங்கு குறைவு. கர்த்தாவே! இது எத்தனை காலம் தொடரும், எதுவரைக்கும் நீர் எங்களை உதாசீனப்படுத்துவீர்? என்றென்றும் உமது கோபம் நெருப்பைப் போல் எரியுமென்றார்கள். எமக்காக ஒரு தீக்குச்சி அளவு கூட எரிய மாட்டேன் என்கிறீர்கள். எங்கள் ஆயுள் எத்தனை குறுகியது என்பதை நினைவுகூரும். குறைந்த காலங்கள் வாழ்ந்து, மடியும்படியா நீர் எங்களைப் படைத்தீர். நீர் எங்கள் அரசனின் பகைவர்கள் அனைவரையும் மகிழ்ச்சியடையச் செய்தீர். போர்ப் பகைவர்கள், அவனை வெற்றிக்கொள்ள அனுமதித்தீர். எம் அரசன் யுத்தத்தில் வெல்ல நீர் உதவவில்லை. நீர் அவனை வெல்ல விடவில்லை. நீர் அவனைத் தரையில் வீசினீர். நீர் அவனது ஆயுளைக் குறைத்தீர். நீர் அவனை அவமானப்படுத்தினீர். கர்த்தாவே, உமது அன்பு என்றைக்கேனும் எங்களுக்காய் நிலைக்குமென உண்மையாகவே நான் நம்புகிறேன். கர்த்தருக்கே என்றென்றும் ஸ்தோத்திரம்! ஆமென், ஆமென்” என்றான். அப்போது புண்ணியனைச் சூழ்ந்து நின்ற சனங்கள் ஒரு முடிவை அறிவித்தனர். சுடலை எப்போது தங்களுக்கு கையளிக்கப்படுகிறதோ அன்றைக்கு இந்தவூருக்கு திரும்பலாம் என்றார்கள். புண்ணியன் இந்த முடிவை ஏற்றுக்கொள்ளவில்லை. இனியும் இடப்பெயர முடியாது, எல்லாத்துக்கும் ஒரு முடிவு கிடைக்கும் தானே என்றான். அவர்கள் ஒப்புக்கொண்டனர். அடுத்தநாள் பகல் முழுதும் தேவாலயத்திலேயே தனித்திருந்தான் புண்ணியன். சூரியன் வீட்டுக்கூரையில் தொங்கிநிற்பதைப் போல வெயில் உலர்த்தியது. வன்கவர் வெறிப்படையினர் குதிரைகளோடு ஊர் புகுந்தனர். வாசலில் உறங்கிக் கிடந்த செட்டித்தாத்தாவை குதிரைகள் மிதித்தன. அவர் சீவன் சிலிர்த்து அடங்கியது. செட்டித்தாத்தா கண்கள் மலர்த்தி வானத்தைப் பார்த்திருந்தார். சனங்கள் ஓலமெழுப்பி குதிரைகளை எதிர்த்தனர். சிப்பாய்கள் புண்ணியனைத் தேடினர். அவன் தேவாலயத்தில் இருப்பதை அறிந்து கொண்டு பாய்ந்து விரைந்தனர். தேவாலயத்தினுள்ளே அமர்ந்திருந்த அவனுக்கு குளம்படிகள் கேட்டன. சிப்பாய்கள் வருவது நன்றாகத் தெரிந்தது. ஆனாலும் அவன் அஞ்சவில்லை. நடப்பதை எதிர்கொள்ள காத்திருந்தான். உள்ளே நுழைந்தவர்கள் ஆயுதமுனையில் அவனை மண்டியிடப் பணித்தனர். சிலுவையைப் பார்த்தபடி முழந்தாளிட்டு அமர்ந்தவனின் பிடரியில் துவக்கின் குழல் அமைந்தது. கபாலத்தில் உலோகக் குளிர். சனங்கள் ஆர்ப்பரிப்போடு உள்ளே நுழைந்தனர். புண்ணியனை நோக்கிப் அன்னை மரியாக்கள் ஓடிவந்தனர். சிப்பாய்கள் அங்கிருந்து வெளியேறினர். முழந்தாளிட்டு அமர்ந்திருந்தவன் எழுந்திராமல் நெடுநேரமாக கண்களை நிலைகுத்தியிருந்தான். குண்டுமணி அத்தை அவனைத் தொட்டு “புண்ணியா, எழும்புடா செல்லம், நாங்கள் இந்த ஊர விட்டே போகலாம்” என்றாள். தலையை மேல் நோக்கிய அவன் கருவிழிக்குள் நெருப்புச் சுவாலை. அன்றிரவு புண்ணியனின் தலைமையில் ஊர், சுடலை நோக்கிச் சென்றது. செட்டித்தாத்தாவின் உடலத்தை சாக்குப் பையில் போட்டு மூட்டையாக்கினார்கள். குழந்தைகள் அழாமல் முலைகள் அவர்களது வாயிலேயே கிடந்தது. பாதையில் அரவமில்லை. புண்ணியன் எதிரே உருவமொன்று அசைந்தது. பின்னால் வருபவர்களுக்கு தொடுதல் மூலம் தகவல் சொன்னான். உருவம் எங்கே பதுங்கிற்று? புண்ணியன் மெல்லக் காலடி எடுத்து வைத்து யாருமில்லையென உறுதி செய்தான். பிறகு மீண்டும் நடக்கத் தொடங்கினார்கள். சுடலை எங்கே இருக்கிறதென அடையாளம் சொல்ல வந்த ஊத்தை மாமா இன்னும் கொஞ்சத் தூரம் போகவேண்டுமெனச் சொன்னார். அவருக்கு பூதவராயர் கோயில் கடந்து மூன்றாவது வளைவு என்பது ஞாபகம். அவர் வளைவை எட்டிய போது அடையாளம் காணமுடியவில்லை. திடீரென ஒரு வளவில் சிதையெரிந்து ஒளி ஊண்டியது. எல்லோரும் தெய்வச் செயல் என்றார்கள். அவ்விடம் நோக்கி எல்லோரும் ஓடினார்கள். சிதைக்கருகில் புண்ணியன் சென்றான். ஒற்றைக்காலுடன் சின்னாச்சி எரிந்து கொண்டிருந்தாள். இழந்துபட்ட கால்விரல்களை பொறுக்கி பொறுக்கித் தீயிலிடும் இன்னொரு சின்னாச்சி நிலத்தில் அமர்ந்திருந்தாள். புண்ணியன் அவள் சிதையை விழுந்து வணங்கி, செட்டித்தாத்தாவின் உடலத்தில் தீ எழுப்பினான். சனங்கள் ஊருக்குள் நுழைந்த போது குதிரைகளின் ஓலவொலி எழுந்தது. பெருந்தீ எழுந்தாடும் வெளிச்சம் ஊர் முழுதும் நிலைத்தது. சிப்பாய்கள் உறங்கிய ஆடைகளோடு வெளியேறி ஓடினர். முகாம் வாசலுக்கு சனங்கள் போயினர். தீ மூண்டு ஆயுதங்கள் வெடித்தன. சிப்பாய்கள் எரிந்துருகிச் சாம்பலாய் ஆனார்கள். போர்க்குதிரைகளின் மயிர் பொசுங்கும் வாடை கேணியடிக் கிராமத்தை அடைத்தது. வன்கவர் படையின் முகாமுக்கு முன்பாக, சின்னாச்சியை எரித்த ஸ்தலத்தில் ஒரு முலை தீக்குண்டாய் தகித்துக் கிடப்பதைப் பார்த்த குண்டுமணி அத்தை “அது எங்கட கண்ணகியின்ர இடது முலை. காலங்காலமாய் கவிந்த இருள் எரிக்கும் அமுதம், அதுக்குள்ள சுரக்குது என்றாள். அப்போது “ என் பிள்ளைகளே! குந்த ஒருபிடி நிலமும், எரிய ஒரு பிடிநிலமும் சொந்தமாய் வேணும். இல்லாட்டி அலைவு தான்” என்றொரு குரல் கேணியடியெங்கும் ஒலித்தது. https://akaramuthalvan.com/?p=12721 point- போதமும் காணாத போதம் - அகரமுதல்வன்
போதமும் காணாத போதம் – 05 புலித்தேவன் பிறந்து பத்து நாட்களில் அவனது தாயும் தந்தையரும் முள்ளிவாய்க்காலில் கொல்லப்பட்டார்கள். துரதிஸ்டவசமாய் உயிர் தப்பினான். நச்சுப்புகை மூடிய பாழ்வெளியில் பச்சிளம் குழந்தையாக அலறினான். இறந்துபட்ட தாயின் வலதுமுலையில் பாலுண்டு தவித்தான். குருதியும் பாலும் கலந்து ஊட்டிய தாய்நிலத்தில் தனியனாய் துடித்தான். தீச்சூளையில் பொசுங்கிடும் பட்டுப்பூச்சியைப் போல அலைகுமுறும் கடலுக்கு முன்பாக தாய்ப்பிணத்தின் மீது நெளிந்த புலித்தேவனை தூக்கி ஏந்தினாள் அம்மா. அக்கணம் எறிகணைகள் வீழவில்லை. போர்விமானங்கள் வானத்தில் இல்லை. கடற்பறவைகள் கரை வந்து திரும்பின. கூடாரங்களுக்குள் கிடந்த போர்க்காயங்களில் எரிவு அடங்கியிருந்தது. அம்மா புலித்தேவனை அரவணைத்து மிகவேகமாக பதுங்குகுழிக்குள் நுழைந்தாள். புலித்தேவனின் முகத்தை ஈரச் சீலையால் துடைத்து, சரையில் வைத்திருந்த புளியன் பொக்கணை நாகதம்பிரான் கோவில் திருநீற்றைத் தரித்தாள். பாலுக்குப் பாலகன் வேண்டியழுதிட பாற்கடல் ஈந்தபிரான் புலித்தேவனுக்கு இரங்கவில்லை. பால்வற்றிய தன்முலையை ஈய்ந்து போக்கு காட்டினாள் அம்மா. குடிதண்ணீரும் கிட்டாத கடல் வெளியில் சனங்களின் கண்ணீர் உப்பளமாயிற்று. ஓயாது அழுது சோர்ந்தான் பாலகன். மகப்பேறு கொண்ட பெண்ணொருத்தியை கூடாரங்களுக்குள் தேடி, புலித்தேவனுக்கு பாலூட்டினாள். “ஒருவேளை இஞ்ச நான் செத்துப்போனாலும், உங்களில ஆர் மிஞ்சியிருக்கிறியளோ புலித்தேவன கைவிடாமல் வளர்க்க வேணும்” என்றாள் அம்மா. நாங்களிருந்த இடத்திலிருந்து வேறொரு இடத்திற்கு நள்ளிரா வேளையில் ஓடிச்சென்றோம். கடுமையான தாக்குதல்கள் தொடர்ந்த வண்ணமிருந்தன. புலித்தேவனை அணைத்துப் பிடித்தோடி வந்த அம்மாவின் வலது காலை துப்பாக்கி ரவைகள் தாக்கின. அம்மா முகங்குப்புற மண்ணில் விழுந்தாள். புலித்தேவன் பிடிதளர்ந்து மண்ணின் மீது தொப்பென விழுந்தும் அழாமலிருந்தான். அவனுக்கருகில் அசையாமலிருந்தது வடலி. அடுத்த இரண்டு நாட்களிலேயே எங்கள் பனைகளை நாங்கள் பறிகொடுத்தோம். எங்கள் கம்பீரங்கள் முற்றுகையிடப்பட்டன. எரிந்தெரிந்து சாம்பலான நிலத்தின் மீது எஞ்சிய விறகுகளாய் தோற்கடிக்கப்பட்டோம். அம்மாவின் காயத்திலிருந்து குருதியின் பெருக்கு நிற்கவில்லை. அன்று தாயும் தாய்நிலமும் குருதியின் அனாதைகளாக முழங்காலில் நிறுத்தப்பட்டார்கள். ஆயுதங்கள் அவர்களை நிர்வாணப்படுத்திச் சோதனை செய்தன. யுத்தம் தீர்ந்த பின்னைய வருடங்களில் வெளிநாட்டிலிருந்த வந்தவர்கள் சிலர் புலித்தேவனை சந்தித்து உதவிகளைச் செய்ய விரும்புவதாகக் கூறினார்கள். அம்மா வேண்டாமென்று மறுத்தாள். புலித்தேவனோ அவர்களைச் சந்திக்கவே விரும்பாதிருந்தான். ஒருமுறை ஐரோப்பாவிலிருந்து தாயகம் திரும்பிய புலம்பெயர் தமிழர் மூன்று கிலோ சீனியும், இரண்டு ஷேர்ட்டும் அளித்து புகைப்படமாக்கினார். புலம்பெயர்ந்த தமிழர் நீட்டிய உதவிக்கரமென இணையத்தளங்களில் செய்தி வெளியானது. இதனைக் கேள்விப்பட்ட அம்மா கொதித்தாள். “கள்ள வேசமொக்கள், வெளிநாட்டில இருந்து வந்து எங்களை வைச்சு ஷோ காட்டுறாங்கள். மூண்டு கிலோ சீனிக்கும், ரெண்டு ஷேர்ட்டுக்கும் வழியில்லாமலா இஞ்ச நாங்கள் இருக்கிறம்” என்று பேருந்தில் ஏறினாள். அந்த நபர் தங்கியிருந்த வீட்டுக்குச் சென்று அவர் கொடுத்த பொருட்களை தூக்கி வீசிவிட்டு “இவ்வளவு பெரிய யுத்தத்துக்குள்ளையும் சாகாமல் தப்பி மீண்ட சனங்களை, இப்பிடி நீங்கள் குடுக்கிற சீனியையும், உடுப்பையும் போட்டோ எடுத்துச் செய்தி போட்டு அவமானப்படுத்தி கொல்லாதேங்கோ” என்றாள். புலித்தேவனின் கண்களை சந்திக்க முடியாமல் தலைதாழ்த்தி நின்றார் அந்த நபர். இப்போது அவனுக்கு பதின் மூன்று வயது. பள்ளிக்கூடத்தில் பெயர் பெற்ற மாணாக்கன். மாலையில் குளக்கரைப் பட்டியைப் பார்த்து வருவான். விடுப்பு நாட்களில் நாற்பது ஆடுகளையும் அழைத்துச் சென்று, சடைத்து வளர்ந்திருக்கும் புல் காணிகளுக்குள் மேய்ப்பான். வாய்க்காலில் நீரருந்தவிட்டு மரத்தின் கீழே இளைப்பாறுவான். வன்கவர் படையினரின் முகாம்கள் நிலந்தோறும் முளைத்து வளர்ந்திருந்தன. சஞ்சீவி தோட்டத்தின் வழியாக ஆடுகளைச் சாய்த்துப் பட்டிக்குத் திரும்புவான் புலித்தேவன். ஒருநாள் ஆடுகளைப் பட்டியில் கிடத்திவிட்டு வீட்டிற்கு வந்து குளித்துமுடித்து நீறள்ளிப் பூசியவன் “அம்மா, இண்டைக்கு ஒற்றன் தோப்பு பக்கமாய் ஆடு மேய்க்கப்போனான். வாய்க்கால தாண்டி அங்கால போனால் ஒரு குடிசை மண்ணோடு மண்ணாய் இத்துக் கிடக்குது. அதுக்கு மேல சிவப்புக் குமிழி உலையாய் பொங்கி வெடிக்குது” என்றான். “அலட்டாம சாப்பிடு. உலை பொங்கிறதுக்கு அங்க என்ன அடுப்பா இருக்கு. அது எதாவது பூச்சி புழுவாய் இருக்கப்போகுது” என்றாள். “இல்லை அம்மா. நான் நல்லாய்ப் பாத்தனான். அடுப்பில கொதிக்கிற மாதிரி உலை பொங்கின சிவப்புக் குமிழ்கள்” அம்மா எதுவும் பதிலுக்கு கதைக்கவில்லை. புலித்தேவன் சாப்பிட்டு முடித்ததும் படிக்க அமர்ந்தான். அவனுக்கு குமிழ் குமிழாக உலையெழுந்தது குழப்பமாகவே இருந்தது. நாளைக்கும் விடுமுறை என்பதால் ஒற்றன் தோப்புக்கே பட்டியை அழைத்துச் செல்வதென தீர்மானித்தான். அவன் சொன்ன சித்திரமே அம்மாவின் மூளையில் தையலாய் ஏறியும் இறங்கியும் பின்னியது. வன்னி முழுதும் காட்டாறாய் பெருகி மண்ணுக்குள் இறங்கிய ரத்தம் கனன்று பூமிக்கு திரும்புகிறதோ என எண்ணினாள். ஒருகணம் சிவந்து கொப்பளிக்கும் குருதியாக நிலம் அகத்துள் விரிந்தது. “என்ர நாகதம்பிரானே” என்று உடல் சிலிர்த்து விதிர்விதிர்த்து அம்மா திடுக்குற்றாள். புலித்தேவன் பயந்தடித்து “அம்மா, என்னனே, என்ன நடந்தது” என்றுலுக்கினான். ஒவ்வொருவருக்குள்ளும் சொல்லவியலாத துயரங்களும் அச்சங்களும் சுருண்டிருந்தன. உள்ளம் காய்ந்திருந்தது. அம்மா எழுந்து படுக்கைக்குச் சென்றாள். இரவு முழுதும் குருதி உலையெனக் கொதித்துப் பொங்கி காய்ச்சலில் தவித்தாள் அம்மா. அதிகாலையிலேயே இடியுடன் கூடிய மழை நீடித்துப் பெய்தது. புலித்தேவன் உறக்கம் கலைந்து சீதளக்காற்றால் நடுங்கினான். எரிந்துபட்ட எரிமலையின் மீதமாய் உறங்கிக் கொண்டிருந்த அம்மாவை அப்போதுதான் பார்த்தான். அவளுடைய உடலிலும் குமிழ்கள் தோன்றி மறைந்தன. அதனைக் கற்பனையென எண்ணி தன்னைத் தானே நொந்தான். கண்களை அங்கிருந்து நகர்த்தி மீண்டும் அம்மாவிடம் கொண்டு வந்தான். உலைக் குமிழ்கள் தோன்றி உடையும் நிலமென அம்மாவின் மேனியிருந்தது. மழையை உமிழும் இடியும் மின்னலும் தொடர்ந்தன. புலித்தேவன் பதறியடித்துக் கொண்டு தட்டியெழுப்பினான். ஆழ்ந்த கனவிலிருந்து அறுபட்டு எழுந்தவளைப் போல பிரமையற்று எழுந்த அம்மா, புலித்தேவனை அடையாளம் காணவே நொடிகள் ஆனது. நடப்பது எதையும் புலித்தேவனால் நம்பமுடியவில்லை. அவன் கட்டியணைத்தபடி “அம்மா உங்கட உடம்பிலயும் அந்தக் குமிழ்கள் தோன்றி மறைவதைப் பார்த்தேன்” என்றான். “சும்மா விசரன் மாதிரி அலட்டாத. உனக்கு தேத்தண்ணி வைச்சுத்தாறன்” என்று சொன்ன அம்மாவை கட்டியணைத்து விம்மி விம்மி அழுதான். அம்மா அவனுக்கு நீறள்ளிப் பூசினாள். மாலையில் ஒற்றன் தோப்புக்குள் ஆடுகளை சாய்த்து விட்டவன், அந்த இடத்துக்குப் போனான். அங்கே மட்டும் மழை பெய்தமைக்கான அறிகுறிகள் எதுவுமில்லை. நிலமுலர்ந்து வெப்பம் தகித்தது. கொஞ்சச் சருகுகளை எடுத்து வந்து போட்டால் தீ மூளுமளவுக்கு அனல் வந்தது. புலித்தேவன் அங்கேயே நின்று கொண்டான். குமிழ்கள் தோன்றத்தொடங்கின. குருதிக் குமிழ்கள். சூறைக்காற்றின் பேரொலி. காதை விண்ணென்று அதிர்விக்கும் கூர்மையான சப்தம். ஊன்றியிருக்கும் கால்களுக்கு கீழேயும் குமிழ்கள் கொப்பளித்தன. புலித்தேவன் சலனமுற்றான். நிகழ்வது மாயமல்ல.எங்கிருந்தோ தனக்கு கிடைக்கும் செய்தியென எண்ணினான். வானத்திலிருந்து பூமிக்கு இறங்கிய கட்டளைகளைப் போலவல்ல இது. பாதாளத்திலிருந்து பூமியை வந்தடையும் சமிக்ஞையென நம்பினான். அவன் மண்ணைத் தொழுது மண்டியிட்டு அமர்ந்தான். குருதிக் குமிழ்கள் தோன்றத் தோன்ற நிலம் பிளந்து நாகங்கள் மேலேறின. புலித்தேவனுக்குள் அச்சத்தின் தலை விரிந்தது. ஒவ்வொரு குருதிக் குமிழிலிருந்தும் நாகக் குட்டிகள் ஜனித்தன. புலித்தேவன் “என்ர நாகதம்பிரானே” என்று சிலிர்த்துச் சிலிர்த்து அழுதான். நிலம் பரவசமாய் பூர்வபிள்ளைகளை ஏந்தியது. நாகங்கள் நெளிந்தோடின. வாய்க்காலைக் கடந்து வீட்டிற்கு ஓடினான். நடந்தவற்றை அம்மாவிடம் சொல்லி அழைத்தான். இருவரும் ஒற்றன் தோப்பையடைந்து வாய்க்காலைக் கடந்து போயினர். அந்தவிடத்தில் நின்று கொண்டவன் “ அம்மா, இந்த இடத்தில் லட்சக்கணக்கான நாக குட்டிகள் நெளிந்தன. என் கண்ணுக்கெட்டிய தூரம் வரை புற்களைப் போல நாகங்கள் விளைந்திருந்தன” என்றான். அவ்விடத்தில் பெருகிய வெப்பத்தை அம்மாவும் உணர்ந்தாள். புலித்தேவன் சொல்வதைக் கேட்டதும் அவளுக்கு பயமாகவிருந்தது. “நாகதம்பிரான் சித்து விளையாட்டெதோ காட்டுறார்” என்றாள் அம்மா. “ஆயிரம் தலை கொண்டு பூமியைத் தாங்கும் ஆதிசேஷன் பாதாளத்திலிருந்து ஏதேனும் செய்திகள் அனுப்புகிறாரோ” “எங்கட நாட்டுப் பிரச்சனையை தீர்க்க எத்தனை பேர் செய்தியனுப்பி முடியாமல் போனதெண்டு உனக்கு தெரியாது. ஆதிசேஷனுக்கு நல்லாய்த் தெரியும். அதனால அவர் இப்ப மினக்கெட மாட்டார்” “அம்மா, நாகங்கள் மேல வந்தது ஏதோவொரு நல்ல சகுனம். எங்கட மூதாதையர் பாதாளத்திலயிருந்து பூமிக்கு வருகினம். அதுதான் நடக்குது” என்றான் புலித்தேவன். “எடே, இத்தனை பிள்ளையளைச் சாக குடுத்தும் விடிவு வராமல் போயிற்று. இனி ஆர் வந்தென்ன, வராமல் போனாலென்ன” “அம்மா அங்க பாருங்கோ. குமிழி தோன்றி உடையுது” என்று புலித்தேவன் காட்டினான். அவர்கள் நின்றதிலிருந்து ஏழடிகள் தள்ளி குமிழ்கள் உடைய நாகங்கள் அசைந்தன. அம்மா கையெடுத்துக் கும்பிட்டு, என்ர நாகதம்பிரானே, எல்லாமும் உன்ர அற்புதம் என்று நெக்குருகி அழுது கசிந்தாள். உடல் வியர்த்து விழுந்து மண்ணில் புரண்டாள். அன்றிரவு ஊருக்குள்ளிருந்த வன்கவர் வெறிப்படையினரின் முகாம்களுக்குள் பாம்புகள் புகுந்தன. ஆயுதங்களோடு வீதியில் குவிந்து நாகங்களை சுடத் தொடங்கினர். இரவே ஒரு மாபெரும் குமிழாகத் தோன்றி நாகங்கள் வந்தவண்ணமிருந்தன. சனங்கள் வீடுகளுக்குள் பதுங்கிக் கொண்டனர். நாகங்கள் தம்மைத் தீண்டத் துரத்துவதாக வன்கவர் வெறியர்கள் மக்களின் வீடுகளுக்குள் அத்துமீறி நுழைந்து அடைக்கலம் கேட்டனர். அம்மா வீட்டினுள்ளே அமர்ந்திருந்தாள். புலித்தேவன் படலையில் நின்றபடி வீதியில் நடப்பவற்றை வேடிக்கை பார்த்தான். வன்கவர் சிப்பாயொருவன் புலித்தேவனிடம் ஓடிவந்து “எங்களை விஷப்பாம்பு துரத்துகிறது. காப்பாற்றுங்கள்” என்றான். அவனிடம் ஆயுதமிருந்தது. கண்களில் போர் வெறியிருந்தது. பகைமையிருந்தது. ஆனால் புலித்தேவன் எதையும் பொருட்படுத்தவில்லை. நாகம் கொத்திய சிப்பாய் விஷமேறிச் சாகும் வரை புலித்தேவன் பார்த்துக் கொண்டேயிருந்தான். ஊர்ந்து சென்ற அந்த நாகத்தை வாசுகி என்று அழைக்க, சிவனின் கழுத்திலிருந்து கீழே இறங்கி புலித்தேவனின் கால்களுக்குள் ஊர்ந்து வந்தது. அச்சத்தில் அம்மாவென்று கதறியெழுந்தவனை கட்டியணைத்து மூன்றுமுறை எச்சிலால் துப்பி “ஒன்றுமில்லை ஒன்றுமில்லை கனவு” என்று உறங்க வைத்தாள் அம்மா. காலையில் பள்ளிக்கூடம் போகாமல் ஒற்றன் தோப்பின் வழியாக அந்த இடத்தை அடைந்தான். அப்போதும் குருதிக் குமிழ்கள் உடைத்து நாகங்கள் ஜனித்தன. புலித்தேவன் அந்தக் குடிசைக் கஞ்சல்களை அள்ளியெறிந்தான். நிலத்தில் புலிவரிக் கோடுகளோடு உறங்கிக் கிடந்த ராஜ நாகம் அசையத் தொடங்கியது. தனது செட்டையைக் கழற்றி அவனுக்கு தருவித்தது. இன்னும் பக்கமாய் புலித்தேவனை அழைத்தது. ஒரு கொடிபோல அவனில் பற்றியேறி கழுத்தில் படம்விரித்து நின்றது. பாரந்தாளது மண்ணில் அமர்ந்த புலித்தேவன் “அம்மா”வென அழைத்தான். நிலம் நீண்டு கடல் பிளந்து தொனித்தது அவன் குரல். உடலழிந்து, முகமழிந்த பெண்ணொருத்தி முலைகட்டிய வலியால் துடிதுடித்து அங்கே தோன்றினாள். அவள் அள்ளியெடுத்து அமுதூட்ட புலித்தேவன் உறங்கிப் போனான். ஒற்றன் தோப்புத்தாண்டி அம்மா அவனைத் தேடிப்போனாள். ராஜ நாகத்தின் பாம்புச் செட்டையால் போர்த்தப்பட்டிருந்தான். அவனது கடவாயில் குருதியும் பாலும் ஒட்டிக்கிடந்ததைப் பார்த்து “என்ர நாகதம்பிரானே” எனச் சதுரம் நடுங்கிப் அவனை அள்ளியெடுத்தாள். இப்போதும் பத்து நாள் குழந்தையாகவே அம்மாவின் கரங்களில் குளிர்ந்தான் புலித்தேவன். https://akaramuthalvan.com/?p=12131 point- மூனா என்னும் ஒரு தோழமைக்கரம்
1 pointகவி அருணாசலம் என்னும் “மூனா”வைப் பற்றி… ஆதவன் எழுதிய கட்டுரையை 2015’ம் ஆண்டு கிருபன், “வேரும் விழுதும்” பகுதியில் இணைத்த போதும்…. எவரும் கருத்து எழுதப் படாமலே அந்தத் தலைப்பு பின்னோக்கி போய் விட்டது பெரும் சோகம். “மூனா” என்பவர் தான்… கவி அருணாச்சலம் என்று பலருக்கும் தெரிந்திராத காரணத்தால் அந்தத் தலைப்பில் எவரும் கருத்து எழுதவில்லை என நினைக்கின்றேன். கவி அருணாசலத்தை நேரில் சந்தித்தவன் என்ற வகையில்… ஆதவன் கூறிய அத்தனையும் உண்மை. நிறைகுடம் தழும்பாது என்ற மாதிரி… பல விடயங்களில் அவருக்கு ஆற்றல் இருந்தும் தனது கருத்தை மட்டும் கூறிவிட்டு அமைதியாகி விடுவார். ஒரு கலைஞனை… அதுகும் யாழ். களத்தில் தொடர்ந்து கருத்தோவியங்கள் வரையும் நமது உறவை… பாராட்டி ஊக்கப் படுத்துவது நமது கடமை. இந்தப் பதிவை மீட்டு எடுத்துத் தந்த மோகன் அண்ணாவுக்கு நன்றி.1 point- இஸ்ரேல் - பாலஸ்தீன போரும் அழிவுகளும் - செய்திகளின் தொகுப்பு
சப்பானின் முத்துத் துறைமுகத் தாக்குதல் போன்றது தான் உது..🤡 வாங்கிக் கட்டப் போயினும், உவையள் நல்லா வாங்கிக் கட்டப் போயினம்.1 point - உலகத் தமிழர் பேரவை உறுப்பினர்களின் படங்கள் மீது முட்டை வீச்சு!
Important Information
By using this site, you agree to our Terms of Use.
Navigation
Search
Configure browser push notifications
Chrome (Android)
- Tap the lock icon next to the address bar.
- Tap Permissions → Notifications.
- Adjust your preference.
Chrome (Desktop)
- Click the padlock icon in the address bar.
- Select Site settings.
- Find Notifications and adjust your preference.
Safari (iOS 16.4+)
- Ensure the site is installed via Add to Home Screen.
- Open Settings App → Notifications.
- Find your app name and adjust your preference.
Safari (macOS)
- Go to Safari → Preferences.
- Click the Websites tab.
- Select Notifications in the sidebar.
- Find this website and adjust your preference.
Edge (Android)
- Tap the lock icon next to the address bar.
- Tap Permissions.
- Find Notifications and adjust your preference.
Edge (Desktop)
- Click the padlock icon in the address bar.
- Click Permissions for this site.
- Find Notifications and adjust your preference.
Firefox (Android)
- Go to Settings → Site permissions.
- Tap Notifications.
- Find this site in the list and adjust your preference.
Firefox (Desktop)
- Open Firefox Settings.
- Search for Notifications.
- Find this site in the list and adjust your preference.