Leaderboard
-
Kavi arunasalam
கருத்துக்கள உறவுகள்11Points2954Posts -
Justin
கருத்துக்கள உறவுகள்10Points7051Posts -
Kapithan
கருத்துக்கள உறவுகள்7Points9308Posts -
suvy
கருத்துக்கள உறவுகள்7Points33600Posts
Popular Content
Showing content with the highest reputation on 01/08/24 in all areas
-
ஊருலா
7 pointsமிரிசா கடற்கரைக்குச் சென்றோம். வெளிநாட்டவர்கள் அதிகமாக இருந்தார்கள். “போதைப் பொருள் இங்கே தாராளம்” என்றும் சொன்னார்கள். அழகான கடற்கரை என்பதை மறுப்பதற்கில்லை. உல்லாசப் பயணிகளை கவர்வதற்காக பெரிய பெரிய ஹொட்டல்களைக் கட்ட முயன்றிருக்கிறார்கள். பொருளாதார அலைக்குள் சிக்குண்டு இப்பொழுது அவை பாதியிலேயே அநாதைகளாக, கடல் காற்றும் வெய்யிலும் பட்டு கறுத்துப் போய் நிற்கின்றன. அடுத்து காலி. இலங்கையின் இரு முனைகளில் ஒன்று பனை முனை (பருத்தித்துறை). மற்றது தெய்வேந்திர முனை(காலி). காலியில் கோட்டைக்குள்ளேயே அரச அலுவலகங்களை வைத்திருந்தார்கள். நகரின் பழமையை நன்றாகப் பராமரித்து வெளிநாட்டவர்களை க் கவர்ந்து கொண்டிருக்கிறார்கள். காலியில் இருந்த பராமரிப்பு பருத்தித்துறை (முனை)யில் எங்களிடம் இல்லை என்பதை ஒத்துக் கொள்ளத்தான் வேண்டும். ஒரு பனை, ஒரு வெளிச்ச வீடு, இவை மட்டுந்தான் எங்களிடம் இருக்கின்றன. இருந்தாலும் பல சிங்களச் சுற்றுலாப் பயணிகளை பருத்தித்துறை வெளிச்ச வீட்டின் அருகே என்னால் காண முடிந்தது. காலியில் கடற்கரை ஓரமாக, ஒரு வீட்டை இரண்டு நாட்களுக்கு வாடகைக்கு எடுத்திருந்தோம். “இங்கே சிங்கறால் (Lobster) கிடைக்காதா?” என்று சும்மாதான் மணியனிடம் கேட்டேன். மாலையில் வெளியே போய்விட்டு வந்து பார்த்தால், சட்டிக்குள் இரண்டு சிங்கறால்கள் துடித்துக் கொண்டிருந்தன. “களுத்துறையும் நல்லதொரு இடம். அங்கே அனந்தரா ஹொட்டல் என்று ஒன்று இருக்கிறது. அந்தக் ஹொட்டலை வடிவமைத்தது ஒரு பிரெஞ் ஆக்கிடெக். நல்லாயிருக்கும். நான் அங்கே அடிக்கடி போவேன்” என்று மணியன் களுத்துறைக்கு அழைத்துப் போனான். மணியன் சொன்னதில் உண்மை இருந்தது. ஹொ ட்டலின் வாசலில் நான்கு இளம் பெண்கள் காத்திருந்தார்கள். நாங்கள் ஹொட்டலுக்குள் நுளைந்தவுடன், சிங்கள இசை முழங்கப் பாடியபடியே தங்களது பாரம்பரிய நடனத்துடன் எங்களை வரவேற்றார்கள். உண்மையிலேயே எங்களுக்குத்தான் அந்த வரவேற்பு நடனமா என முதலில் எனக்குச் சந்தேகம் வந்தது. திரும்பிப் பார்த்தேன் எங்களுக்குப் பின்னால் யாரும் இல்லை. ஆக அந்த வரவேற்பு நடனம் எங்களுக்குத்தான் என்பது தெளிவான பிறகு ஒரு உற்சாகம் பிறந்தது. ஹொ ட்டலின் நிர்வாகத்தில் உள்ள ஒருவர் வந்து, பணிவுடன் இரு கரம் கூப்பி வணங்கி ஆயுபவன்( ayubowan)சொல்லி வரவேற்பறையில் உட்கார வைத்தார். இருக்கையில் அமர்ந்து ஹொட்டலின் அழகை உள்வாங்கிக் கொண்டிருக்கையில் ஆடிய ரம்பைகளில் ஒருத்தி கையில் பானங்களுடன் வந்து நின்றாள். தேங்காய்ச் சிரட்டைகளில் சிவந்த குளிர் பானங்களுடன் சிதம்பரத்தை பூ வைத்த தட்டை வைத்துக் கொண்டு புன்னகைத்தாள். தேங்காய் சிரட்டைகளைக் கண்டவுடன் சட்டென்று எனது நினைவுக்கு வந்தவர்கள் அன்றைய பிள்ளைவாள்களும் முதலியார்களும்தான். 100க்கு மேற்பட்ட அறைகள். பழமைவாய்ந்த பொருட்களை காட்சிக்கும், அழகிய கலைப்படைப்புகளை சுவர்களிலும் மாட்டியிருந்தார்கள். லிப்றில் மேல் நோக்கிப் போகும் அடையாள விளக்கில் புத்தர் இருந்தார். வரவேற்பு இடத்துக்கு அருகேயே ‘பார்’ இருந்ததால் மணியன் பெரும்பாலும் அங்கேயே இருந்து விட்டான். அங்கிருந்த அழகை எல்லாம் ரசித்து விட்டு மணியனிடம் வந்தால். “ நாங்கள் இஞ்சை வாறதெண்டால் இரண்டு நாள் தங்குவம். இப்பிடி நல்லா என்ஜோய் பண்ணி Buffet இலே ஒரு பிடி பிடிச்சிட்டுப் போவம். நீயும் இருகிறாய். யேர்மனியிலை என்னத்தைத்தான் கிழிச்சியோ?” என்று என்னைக் கிண்டல் செய்தான். மாலையில் சூரிய அஸ்தமனத்திலும் நீச்சல் தடாகத்தின் அருகே ஒரு நடனம் இருந்தது. மஞ்சள்வெயிலில் பளபளக்கும் நீச்சல் குளத்தின் அருகே அந்த நடனம் பார்ப்பதற்கு நன்றாக இருந்தது. இரண்டு நாட்களின் பின்னர் அனந்தரா ஹொட்டலில் இருந்து புறப்படும் போது வாசலில் வைத்து மந்திரம் சொல்லி வழியனுப்பி வைத்தார்கள். அங்கிருந்தவர் சொன்ன மந்திரம் அச்சு அசலாக எங்கள் ஐயர் சொல்லும் மந்திரம் போலவே இருந்தது. நாவூறு பட்டுவிடும் என்ற எச்சரிக்கையோ? அல்லது ரம்பைகளை மறந்து விடச் சொல்லிய மந்திரமோ? திரும்பி வரவழைவைக்கப் போகும் (வசிய) மந்திரமோ? தெரியவில்லை.7 points
-
நோர்வேயில், இலங்கையை பூர்விகமாகக் கொண்ட தமிழ் பெண் சுட்டுக்கொலை!
என்ன சொல்கிறீர்கள்? நெடுக்கரின் குடியேறி எதிர்ப்பு மனநிலை அவர் குடியேறியாக இருந்த போதே அவரது எழுத்தில் வெளிவந்திருக்கிறது. ஓரினச் சேர்க்கையாளர் மீதான காண்டு போலி விஞ்ஞானக் கட்டுரையை இணைத்து வாதிடும் அளவுக்கு வெளிப்பட்டிருக்கிறது. இறந்தது பெண், கொன்றது ஆண் என்பதால் கொன்றவரை விட்டு விட்டு, எல்லாரையும் கை காட்டியிருக்கிறார்! இது பழைய நெடுக்கர் தான்! புதிதாக ஒன்றுமில்லை😎. நோர்வே ஐரோப்பிய ஒன்றியத்தில் இல்லை, ஆனால் ஐரோப்பிய ஒன்றிய பயண ஏற்பாடான செங்கன் (Schengen) நடைமுறையில் இருக்கிறது. எனவே, செங்கனில் இல்லாத பிரிட்டனின் பிரஜைகள் நடந்து தான் போக வேணும்! "போலந்துக் காரன் சட்டரீதியாக பிரிட்டனுக்குள் வரவும் கூடாது - எனவே ஐ.ஓவில் இருந்து நாம் அவுட், ஆனால் பிரிட்டன் பிரஜைகளை ஐரோப்பிய நாடுகளில் திறந்த வீட்டினுள் செல்லப் பிராணி செல்வது போல அனுமதிக்கவும் வேண்டும்!" இரண்டையும் எப்படி எதிர்பார்க்க முடியும்😎?6 points
-
பிரபாகரன் - மூத்த செய்தியாளர் திரு த.சபாரட்ணம் எழுதிய தலைவரின் வாழ்க்கைச் சரித்திரம் - சங்கம் இணையம்
பிரபாகரன் - மூத்த செய்தியாளர் திரு த.சபாரட்ணம் எழுதிய தலைவரின் வாழ்க்கைச் சரித்திரம் - சங்கம் இணையம்
3 pointsஇந்த றோ அதிகாரியினை தேன் பொறி (Honey Trap) எனும்முறையில் தம்பக்கம் அமெரிக்கா ஈர்த்திருந்ததாக கூறப்பட்டது, இந்திய இலங்கை ஒப்பந்தம் நிக்ழ்ந்த 3ம்ணித்தியாலத்திற்குள் அமெரிக்க அரசு அதனை வரவேற்றதன் பிண்ணனியிலேயே அவரினை இந்தியா அடையாளம் கண்டு கொண்டதாக பத்திரிகைகளில் வாசித்தாக நினைக்கிறேன். அவ்வாறாயின் இலஙகை அரசிற்கும் இந்த ஒப்பந்த விவகாரம் ஏற்கனவே தெரிந்திருக்க வாய்ப்புள்ளது, இலங்கை அரசு இலங்கை அரச தொலைக்காட்சியில் ஒரு ஆவணம் (Documentary) ஒன்றினை வெளியிட்டிருந்தது அதன் தலைப்பு அக்கோடிங் அன்ட் வித்டோரவல் என நினைக்கிறேன் சரியாக தெரியவில்லை, ஒப்பந்திற்கு எதிர்ப்பு தெரிவித்தால் என்ன நிகழும் எனும் தொனியிலான ஒரு ஆவணம்.3 points -
நோர்வேயில், இலங்கையை பூர்விகமாகக் கொண்ட தமிழ் பெண் சுட்டுக்கொலை!
தமிழர்களுக்குள் நடந்த கொலையில் பாதிக்கப்பட்டது அப்பாவி தமிழ் பெண். கொலையாளி தமிழர். கொலையாளி மீது கோபம் வரவில்லை. ஆனால், நோர்வே இமிக்கிறேசனை திட்டுகின்றீர்கள். பாகிஸ்தானியரை, சோமாலியரை கிழக்கு. ஐரோப்பியரை, உக்கிரேனரை கேய், லெஸ்பியனை எல்லாம் இதற்குள் இழுத்து அவர்கள் தான் இதற்கு காரணம் போல்…….. என்ன டிசைனப்பா நீங்கள்.3 points
-
ஊருலா
3 pointsகொழும்பில் இருந்து கொண்டே அவ்வப்போது மணியனைக் கூட்டிக் கொண்டு வெளியிடங்களுக்குப் போய் வந்து கொண்டிருந்தேன். விடுமுறைக்கு வருபவர்கள் ‘எலா’விற்கு விரும்பிப் போவார்கள். நாங்களும் போனோம். எலாவின் இயற்கையான சூழல் என்னை மிகவும் கவர்ந்தது. தெறித்து விழும் அருவியின் சாரல் படும் போது உடல் குளிர்ந்தது. சாரல் பட்டு நனைந்து வீதி ஓரத்தில் ஆங்காங்கே இருந்த குரங்குகளைப் பார்க்க பரிதாபமாக இருந்தது. இராவணனை பெரிதாக, பலமானவனாக வடிவமைத்திருந்தார்கள். ‘இராவணன்’ ‘இராவணா’வாக மாறி மஹா வம்சத்தில் ஏற்கனவே இணைக்கப் பட்டுவிட்டாரா அல்லது இனித்தானா என்பது தெரியவில்லை. Flying Ravana விலும் பறந்து பார்த்தேன். பறப்பதற்கு முன்னர் பாதுகாப்பிற்காக பட்டி இட்டு தலைக்கவசத்தையும் மாட்டி விட்டார்கள். பலரின் வியர்வைகள் சங்கமித்த அந்த தலைக்கவசம் கொஞ்சம் அசெளகரியமாக இருந்தது. சத்தி வந்து விடுமோ என்ற அச்சமும் கூடவே இருந்தது. “கவனம், அட்டைகள் இருக்கு. மழையும் பெய்கிறது. புல் தரைக்குள் போகாதீர்கள் ” என்று எச்சரித்தார்கள். எவ்வளவு கவனமாக இருந்த போதும் இரண்டு அட்டைகள் உடலில் ஏறி விட்டன. ஒன்றை உடனடியாகக் கண்டதால் அப்புறப் படுத்தி விட்டேன். மற்றொன்று துணிச்சலாக எனது கையில் ஏறி இரத்தம் குடித்து விட்டது. எலாவில் இருந்து வரும் வழியில் நுவரெலியாவுக்குப் போனோம். குட்டி இலண்டன் என்று அழைக்கப்படும் நுவரெலியா அந்தப் பெயருக்குப் பொருத்தமாக இருந்தது. குளிருக்கு ஏற்ப சுடச்சுட கிடைத்த சிற்றுண்டிகள் சுவை சேர்த்தன.3 points
-
நோர்வேயில், இலங்கையை பூர்விகமாகக் கொண்ட தமிழ் பெண் சுட்டுக்கொலை!
நொச்சி அவர்களே, உங்கள் கருத்திற்கு நன்றிகள்! ஆனால், நெடுக்கர் காட்டமாகச் சொன்ன கருத்தை யாரையும் நோகடிக்காமல் அழகு தமிழில் எழுதியிருக்கிறீர்கள். உங்கள் கருத்தோடு பெரும்பாலும் முரண்படுகிறேன்: சட்டம்: LGBTQ+ சார்ந்து அப்படி என்ன சட்டத்தை அரசுகள் உருவாக்கி , பண்பாட்டைக், கலாச்சாரத்தைச் சீரழித்து விட்டார்கள் என்று உங்களால் சொல்ல முடியுமா? நான் அறிந்த வரையில், ஆண் பெண் உறவிற்கு இருக்கும் சாதாரண தன்மையை, அங்கீகாரத்தை ஒரு பால் உறவிற்கும் வழங்க வேண்டுமென்ற சமத்துவம் பேணும் சட்டங்கள் தான் உருவாக்கப் பட்டிருக்கின்றன. திரியில் இருக்கும் கொலைச் சம்பவத்தில் நிகழ்ந்தது போல, அரசுகள், மக்கள் தலையில் துப்பாக்கியை வைத்து மிரட்டி "நீயும் உன் குடும்பமும் ஒரு பால் உறவில் ஈடுபட வேண்டும்" என்று சட்டம் இயற்றியதாக நான் அறியவில்லை! எனவே, உலகின் இன்னொரு பகுதியில், இயற்கையாகத் தமிழர் அடையாளத்தோடு பிறந்த எம்மை, ஒதுங்கியிருக்கும் படி செய்த சட்டங்களை விட்டு விலகி, லிபரல் ஜனநாயக நாடுகளில் "யாரும் எப்படியும் முன்னேறலாம்" என்ற சமத்துவ சட்டங்களால் ஈர்க்கப் பட்டு குடியேறிய நாம், இன்று இன்னொரு இயற்கையான அடையாளத்திற்கு சமத்துவம் கொடுப்பதை சீரழிவு என்கிறோம் , அதற்கெதிராக வலதுசாரிகளோடு கை கோர்த்து எதிர்ப்பைக் காட்டுகிறோம். இதைப் பற்றி நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்? பி.கு: கொசுறுக் கேள்வியொன்று- உலகில் 35 நாடுகள் மட்டும் தான் ஓரின உறவை அங்கீகரித்திருப்பதால், பரந்து விரிந்த உலகம் இன்னும் இந்த LGBTQ+ விடயங்களை விரும்பாதோருக்கு திறந்திருக்கிறதல்லவா? அப்படியானால், ஏன் இன்றும் கூட அந்த 170+ நாடுகளில் இருந்து இந்த 35 நாடுகளுள் சில நோக்கி மட்டும் மக்கள் கும்பல் கும்பலாகக் குடியேறுகிறார்கள்? நாணயப் பரிமாற்ற வீதமா, சோசியல் காசா, அல்லது வேறேதுமா?2 points
-
நோர்வேயில், இலங்கையை பூர்விகமாகக் கொண்ட தமிழ் பெண் சுட்டுக்கொலை!
அதுமட்டுமல்ல, இறந்தவர்களது நல்ல பண்புகளைப்பற்றிக் கதைப்பதுதான் இதுவரை நமது கலாசாரத்தில் நடைமுறையில் உள்ள பழக்கம்.2 points
-
நோர்வேயில், இலங்கையை பூர்விகமாகக் கொண்ட தமிழ் பெண் சுட்டுக்கொலை!
நடந்த கொலை நீங்கள் சொன்ன எந்த காரணிகளுக்குள்ளும் வராது.2 points
-
இரசித்த.... புகைப்படங்கள்.
2 points2 points
- பொருளாதார நெருக்கடி! மக்களின் வருமானத்தில் பெரும் வீழ்ச்சி !
வருமானத்தில் வீழ்ச்சி என்று சொல்ல முடியாது. சில ஏற்ற தாழ்வுகள் இருக்கலாம். ஆனால் , அளவுக்கதிகமான வரிகள், உட்பத்தியின்மை என்பவைகளே மக்களின் பொருளாதார நெருக்கடிக்கு முக்கிய காரணம். சோமாலிய போன்ற ஒரு நாட்டில் மேற்கத்திய நாடுகளின் வரி விதிப்பு கொள்கையை நடைமுறை படுத்தினால் எப்படி இருக்கும்? அதே நிலைமைதான் இங்கும்.2 points- பிரபாகரன் - மூத்த செய்தியாளர் திரு த.சபாரட்ணம் எழுதிய தலைவரின் வாழ்க்கைச் சரித்திரம் - சங்கம் இணையம்
பிரபாகரன் - மூத்த செய்தியாளர் திரு த.சபாரட்ணம் எழுதிய தலைவரின் வாழ்க்கைச் சரித்திரம் - சங்கம் இணையம்
2 pointsஜெயவர்த்தனவின் ஆலோசனைகள் இந்திரா காந்தியுடனான தனது சந்திப்பு நிறைவுபெற்று மூன்று வாரங்களின் பின்னர் ஆடி 23 ஆம் திகதி சர்வகட்சி மாநாட்டின் கட்சித் தலைவர்களுடன் கூட்டம் ஒன்றினை ஜெயார் நடத்தினார். இணக்கப்பாட்டிற்கு வரமுடியாத இரு விடயங்களினால் சர்வகட்சி மாநாட்டின் கலந்துரையாடல்கள் தடைப்பட்டுள்ளதாக அவர் கூறினார். ஒருபகுதியினர் மாவட்ட அபிவிருத்திச் சபைகளுக்கு மேலதிகமாக எதனையும் கொடுக்கக் கூடாது எனும் வேளை, இன்னொரு பகுதியினர் அதிகாரம் மிக்க பிராந்தியங்களுக்குக் குறைந்த எந்தத் தீர்வையும் ஏற்றுக்கொள்ளமுடியாது என்று கூறிவருகிறார்கள். ஆகவே, இவ்விரு பகுதியினரினதும் அடிப்படை கொள்கைகளைப் பாதிக்காவண்ணம் இரு பகுதியினரும் சந்திக்கக் கூடிய சமரச நிலைப்பாடு ஒன்றிற்கு வருவது அவசியம் என்று அவர் கூறினார். பின்னர் "இரண்டாவது சபையினை" அமைக்கும் ஆலோசனையினை ஜெயார் முன்மொழிய சர்வகட்சி மாநாட்டு உறுப்பினர்களும் அதனை ஏற்றுக்கொண்டார்கள். மேலும், ஏலவே அமைக்கப்பட்டிருந்த இரு குழுக்களும் சமர்ப்பிக்கவிருக்கும் அறிக்கையினை அடுத்துவரும் அமர்வில் விவாதிக்கலாம் என்றும் முடிவெடுக்கப்பட்டது. ஆனால், ஜெயார் முன்மொழிந்த இரண்டாவது சபை யோசனையினை எதிர்க்கட்சியான சுதந்திரக் கட்சி உடனடியாகவே நிராகரித்தது. "அதனை கருத்திக் கொள்ளக் கூடத் தேவையில்லை" என்று சிறிமாவோ கூறினார். இரண்டாவது சபைக்கான முன்மொழிவை ஆரம்பத்தில் அமிர்தலிங்கமும் அதிகம் விரும்பவில்லை. "இந்த ஆலோசனைகள் தமிழர்களின் அபிலாஷைகளைப் பூர்த்திசெய்யப் போதுமானவை என்று நாம் நம்பவில்லை" என்று அமிர் கூறினார். ஆனால் லங்கா சம சமாஜக் கட்சியும், கம்மியூனிஸ்ட் கட்சியும் இந்த ஆலோசனையினை வரவேற்றிருந்ததுடன், நாட்டி வாழும் அனைத்து இனக் குழுமங்களினதும் கருத்துக்களும், விருப்பு வெறுப்புக்களும் இதற்குள் உள்வாங்கப்படவேண்டும் என்றும் அவை கேட்டுக்கொண்டன. ஆவணி மாதத்தின் முதலிரு வாரத்தில் இரண்டாவது சபை பற்றிய கலந்துரையாடல்கள் இடம்பெற்று வந்தன. ஆவணி 17 ஆம் திகதி அரசியல் நடைமுறைபற்றிய குழுவின் அறிக்கையினை பிரேமதாச மாநாட்டில் முன்வைத்தார். ஆனால், அதிகாரப் பரவலாக்கம் தொடர்பான கலந்துரையாடலினை அவர் வேண்டுமென்றே தவிர்த்திருந்தார். அதிகாரப் பரவலாக்கம் நடைபெறப்போகும் அலகு மாவட்ட சபையா அல்லது மாகாணசபையா என்பதை மாநாட்டு உறுப்பினர்களே தீர்மானிக்க வேண்டும் என்று அவர் கூறினார். பிரேமதாச முன்வைத்த அறிக்கையினை சர்வகட்சி மாநாட்டு உறுப்பினர்கள் நான்கு நாட்களாக விவாதித்தனர். ஆவணி 21 ஆம் திகதி தான் வழங்கிய அறிக்கையில், மாவட்ட சபைகளை அதிகாரப் பரவலாக்கத்திற்கான அலகு என்பதை தான் நிராகரிப்பதாக அமிர்தலிங்கம் கூறியிருந்தார். உயிர்வாழ்தலுக்கான பாதுகாப்பும், தமது சொத்துக்களைப் பாதுகாத்துக்கொள்ளுதலுமே தமிழர்களின் தற்போதைய அதிமுக்கியமான பிரச்சினைகளாக மாறியிருப்பதாக அவர் கூறினார். அன்றைய நாளுக்கு ஒருநாள் முன்னதாகக் கூட கிளிநொச்சியில் இரு விவசாயிகளைச் சுட்டுக் கொன்றுள்ள இராணுவம் இன்னுமொருவரை படுகாயப்படுத்தியிருப்பதாக அவர் குறிப்பிட்டார். அதற்கு முதல்வாரம் மன்னாரின் விவசாயக் கிராமம் ஒன்றிற்குள் நுழைந்த இராணுவம், அங்கிருந்த அப்பாவி மக்களைக் கொன்று, அவர்களின் சொத்துக்களை அழித்து, அவர்களின் பெறுமதியான பொருட்களைக் களவாடிச் சென்றதாகவும் அவர் மேலும் தெரிவித்தார் (இப்படுகொலைகள் குறித்த மேலதிக விபரங்கள் இனிவரும் அத்தியாயங்களில் விபரிக்கப்படும்). "தமிழர்களின் தாயகத்தின் ஒருமைப்பாட்டையும், தனித்தன்மையினையும் பாதுகாப்பதூடாகவே தமிழர்கள் தமது வாழ்தலுக்கான பாதுகாப்பையும், சொத்துக்களுக்கான பாதுகாப்பையும் உறுதிப்படுத்திக் கொள்ள முடியும்" என்று அமிர்தலிங்கம் அங்கு கூறினார். "தமிழ் மக்கள் தமது தாயகத்தில் அரசியல் அதிகாரத்தையும், உள்ளக சட்டம் ஒழுங்கு மீதான அதிகாரத்தையும், பொருளாதார அபிவிருத்தி மற்றும் காணி பிரச்சினைகள் தொடர்பாக தீர்மானம் எடுக்கும் அதிகாரத்தையும் கொண்டிருப்பது அவசியமாகும். இத்தகைய பொறிமுறையினை உள்ளடக்கிய ஆலோசனையொன்றினை சர்வகட்சி மாநாட்டில் இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் முன்வைத்திருக்கிறது. ஆகவே, இந்த பொறிமுறையினைக் கொண்டிராத எந்த அரசியல்த் தீர்வையும் தமிழ் மக்கள் ஒருபோதும் ஏற்றுக்கொள்ளப்போவதில்லை" என்று அவர் மேலும் கூறினார். மேலும் இரண்டாவது சபைக்கான முன்மொழிவையும் இரு காரணங்களை முன்வைத்து அமிர்தலிங்கம் எதிர்த்திருந்தார். முதலாவது காரணம், இரண்டாவது சபை எனும் கருதுகோள் ஏற்கனவே நடைமுறையில் இருக்கும் அடிப்படை நிர்வாக அலகான மாவட்ட சபைகளை அடிப்படையாகக் கொண்டே உருவாக்கப்பட்டிருந்தது. இரண்டாவது காரணம், இரண்டாவது சபை உருவாக்கப்படுவதன் நோக்கமே மத்தியில் குவிக்கப்பட்டிருக்கும் அதிகாரத்தினை உறுதிப்படுத்தி அதனை மேலும் பலப்படுத்தும் நோக்கத்திற்காகவே முன்வைக்கப்படுகிறது என்பதாகும். அமிர்தலிங்கம் கூறியதன்படி, இரண்டாவது சபையின் முன்மொழிவே மத்திய அரசாங்கத்தின் அதிகாரத்தை பலப்படுத்துவதும், நடைமுறையில் இருக்கும் பொறிமுறையினை நீட்டிப்பதும்தான் என்பதில் எந்தச் சந்தேகமும் இல்லை. ஆனால், இரண்டாவது சபை எனும் அமைப்பை வெறும் பிரச்சார அழகுப் பொருளாகவே அரசாங்கம் பாவிக்க விரும்பியது. சிங்கள மக்களுக்கு இருக்கும் முற்றான ஆட்சியதிகாரத்தினை பரவலாக்குவதற்குப் பதிலாக, அதனை மேலும் மேலும் மத்திய அரசின் கைக்குள் இறுகச் செய்வதுதான் இதன் உண்மையான நோக்கம். மாவட்ட அதிகார சபைகளுக்கும் அப்பால் சென்று இலங்கையரசு தமிழர்களுக்கு அதிகாரங்களை வழங்கவே இரண்டாவது சபையினை உருவாக்கியிருக்கிறது என்று சர்வதேசத்தை அரசு ஏமாற்ற முயலும் அதேவேளை சிங்களவர்கள் ஏற்கனவே கொண்டிருக்கும் நாடு முழுவதற்குமான ஆட்சியதிகாரத்தை மேலும் மேலும் பலப்படுத்திக் கொள்ளவும் இதனைப் பாவிக்க நினைத்தது. தன்னால் அமைக்கப்பட்ட குழுக்கள் முன்வைத்த அறிக்கையினையும், இரண்டாவது சபைக்கான கருத்துக்கள் தொடர்பாகவும் ஆவணி 21, 29 மற்றும் புரட்டாதி 1, 3 ஆகிய நாட்களில் சர்வகட்சி மாநாட்டு கட்சிப் பிரதிநிதிகளுடன் ஜெயார் உரையாடினார். இறுதிநாளான புரட்டாதி 3 ஆம் திகதி அதிகாரப் பரவலாக்கம் செய்யப்படவேண்டிய அலகு குறித்து சபை உறுப்பினர்களால் விவாதிக்கப்பட்டது. மாவட்ட சபை மற்றும் மாகாண சபை நடைமுறையினை முற்றாக நிராகரித்த அமிர்தலிங்கம், அதிகாரம் மிக்க பிராந்திய அலகே தமிழர்களால் ஏற்றுக்கொள்ளப்படக் கூடியது என்று கூறினார். "அதிகாரம் மிக்க பிராந்திய அலகு எனும் தமிழர்களின் கோரிக்கை அரசால் நிராகரிக்கப்படுமிடத்து, தமிழர்களின் உயிர்களைப் பாதுகாக்கவும் அவர்களது உடமைகளைப் பாதுகாக்கவும் ஒன்றுபட்ட, தனியான தமிழர்களின் தாயகத்தினை விடுவிப்பதற்கான சாத்வீக வழிப் போராட்டத்திற்குள் தன்னை ஈடுபடுத்திக் கொள்வதைத் தவிர தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணிக்கு வேறு தெரிவுகள் இல்லை" என்று அவர் மேலும் அரசை எச்சரித்தார். அமிர்தலிங்கம் முன்வைத்த பிராந்திய அலகுக் கோரிக்கையினை குமார் பொன்னம்பலமும் தொண்டைமானும் ஏற்றுக்கொண்டனர். சர்வகட்சி மாநாட்டின் அடுத்த அமர்வு புரட்டாதி 21 ஆம் திகதி இடம்பெற்றது. தனது அறிக்கையினை சபையில் முன்வைத்த ஜெயார், புரட்டாதி 30 ஆம் திகதிக்கு அதனை ஒத்திவைத்தார். எட்டுப் பக்கங்கள் அடங்கிய அவரது அறிக்கை கடந்த எட்டு மாதங்களாக இடம்பெற்றுவரும் மாநாட்டில் எட்டப்பட்ட விடயங்கள் குறித்துப் பேசியிருந்தது. மேலும், நான்கு விடயங்கள் குறித்து உடன்பாடு எட்டப்பட்டுள்ளதாகவும் அவர் தனது அறிக்கையில் குறிப்பிட்டிருந்தார். அவையாவன, 1. அடிமட்ட ஜனநாயக வழி அமைப்புக்களுக்கான அதிகாரம் அதிகப்படுத்தப்பட்டிருக்கிறது. 2. நாடற்றவர்கள் எனும் நிலையினை ஒழிப்பது. 3. பயங்கரவாதத்தின் அனைத்து வடிவங்களையும் முற்றாக அழிப்பது. 4. இரண்டாவது சபையினை உருவாக்குவது. ஒரு மாகாணத்திற்கு இருக்கும் ஒன்றிற்கு மேற்பட்ட மாவட்ட சபைகள் இணைந்து, ஒருங்கிணைந்த மாவட்டங்களாக செயற்பட முடியும் என்றும், இவ்வாறான மாவட்ட சபைகளுக்கு இரண்டாவது சபையினூடாக சட்டவாக்கல் அதிகாரங்கள் வழங்கப்பட முடியும் என்றும் அவர் குறிப்பிட்டிருந்தார். சர்வகட்சி மாநாட்டின் மிகப்பெரிய வெற்றி என்று இதனை அரச ஆதரவாளர்கள் கொண்டாடி மகிழ்ந்தனர். அதிகாரப் பரவலாக்கத்திற்கான அலகு குறித்து பேச்சுக்களில் முன்னேற்றம் கண்டிருப்பதாக டெயிலி நியூஸ் எக்காளப்படுத்திச் செய்தி வெளியிட்டிருந்தது. தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணியோ இதுகுறித்து மிகுந்த அதிருப்தியடைந்திருந்தது. புரட்டாதி 30 ஆம் திகதி அமிர்தலிங்கம் தனது அதிருப்தியை வெளியிட்டார். மாவட்ட அபிவிருத்திச் சபைகள் ஒன்றுடன் ஒன்று இணைக்கப்பட முடியுமென்றாலும் கூட, அவை தற்போதும் வெறும் அடிப்படை அலகுகள்தான் என்று அவர் கூறினார். மாவட்டங்களுக்கான அதிகாரங்கள் வழங்கப்பட்டிருந்தாலும் கூட, ஒருங்கிணைந்த மாவட்டங்களின் அலகுகளுக்கு தனியான அதிகாரம் ஏதும் பகிரப்படவில்லை என்று அவர் சுட்டிக்காட்டினார். ஆனாலும், முன்வைக்கப்பட்டிருக்கும் பரிந்துரைகளை முற்றாக நிராகரித்துவிடவும் அவர் விரும்பவில்லை. இவற்றினை முற்றாக நிராகரிக்காது இருப்பதன் மூலம் தொடர்ச்சியான பேரம்பேசலுக்கான கதவுகளை திறந்தே வைத்திருக்கலாம் என்று அவர் எண்ணினார். வடக்கையும் கிழக்கையும் இணைத்த தமிழ்பேசும் தனியான அதிகாரம் மிக்க அலகே தமிழ் மக்களின் பிரச்சினைகளுக்கான தீர்வாக அமையும் என்று அவர் ஆணித்தரமாக விவாதித்தார். இதன்பின்னர் மாநாட்டினை கார்த்திகை 15 ஆம் திகதிவரை ஜெயார் ஒத்திவைத்தார். ஆனால், ஜெயார் எதிர்பார்த்ததற்கு மாறாக புரட்டாதி, ஐப்பசி ஆகிய மாதங்களில் வன்முறை தலை விரித்தாடியது. குறிப்பாக கிழக்கிற்கும் வன்முறைகள் பரவத் தொடங்கியிருந்தன.2 points- நோர்வேயில், இலங்கையை பூர்விகமாகக் கொண்ட தமிழ் பெண் சுட்டுக்கொலை!
பிரித்தானிய கடவுச்சீட்டு வைத்துள்ளவர்களும் இரண்டு காலில் தானே நடக்கின்றார்கள்? உங்களுக்கு பிரித்தானிய கடவுச்சீட்டுடன் சென்றபோது நோர்வே விமான நிலையத்தில் நல்ல வரவேற்பு கிடைக்கவில்லையோ? இந்தப்பெண்ணின் தந்தை மாஸ்டர் என காணப்பட்டது, பெயர் வரதராஜன் (வரதர்) என உள்ளது. நான் யாழில் பிரபலமான பொருளியல் ஆசிரியர் பெண்ணோ என நினைத்தேன். இது வேறோர் வரதர் பொண்ணு. தமிழ் பல் மருத்துவர் மீது துப்பாக்கி சூடு அதுவும் நோர்வேயில் இது அரிதான சம்பவம். அதற்காக நோர்வேயை இழுத்து வைத்து கும்மக்கூடாது. கடந்த வருடம் என நினைக்கின்றேன் தனது மனைவியை இன்னோர் ஆள் மூலம் சுட்டுக்கொன்ற தமிழருக்கு கனடா நீதிமன்றத்தில் தண்டனை கொடுக்கப்பட்டது என ஒரு செய்தி வாசித்த ஞாபகம். இதுவும் ஒரு உறவுநிலை சம்மந்தப்பட்ட மரணம் போலுள்ளது. தனிப்பட்டவர்களின் மனநல பிரச்சனைகளுக்கு அடைக்கலம் கொடுத்த நாட்டை குறை சொல்லலாமா?2 points- தமிழர்களின் முடிவை மாற்ற ரணில் மேற்கொண்ட பயணம் .
1 point- நோர்வேயில், இலங்கையை பூர்விகமாகக் கொண்ட தமிழ் பெண் சுட்டுக்கொலை!
அந்தப் பிள்ளையின் இறப்பால் துயர் உற்று இருக்கும் குடுமபத்தினருக்கு ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவிப்பதோடு..🙏 இதில் கருத்து பகிரும் உறவுகள் தயவு செய்து இந்தப் பதிவோடு விட்டு விடுங்கள்..ஒரு பெண் பிள்ளையின் இறப்பில் கூட உங்களுக்கு வேண்டாத விமர்சனம் வேணுமா..உங்களால் ஏன் அந்த பிள்ளையை உங்கள் சகோதரியாக இல்லை ஒரு பெண் பிள்ளையாக தன்னும் நினைக்க முடியாதிருக்கிறது..?தவறாக நான் எதுவும் பகிரவில்லை..கடந்த சில நாட்களாக இந்தப் பகுதி படும் பாட்டை பார்த்து விட்டு தான் இந்தக் கருத்தை பகிர்கிறேன்.1 point- விடுதலைப்புலிகள் செயற்பாட்டாளர்கள் கனடாவில் தஞ்சம் கோருவதில் சிக்கல்.
கனடாவில் ஏற்கனவே உள்ள நடைமுறைதான். பாரிய மாற்றங்கள் என்று எதுவும் கூறக்கூடிய அளவில் இல்லை. 👇 Artificial Intelligence (AI) இப்போது எல்லாவற்றிற்கும் பாவிக்கிறார்கள். இது மிகவும் முக்கியமான விடயம். இதில் எம்மவர்கள் கோட்டை விட்டுவிடுகிறார்கள்.1 point- இரசித்த.... புகைப்படங்கள்.
1 point1 point- இலங்கை வருகிறார் ஜப்பானிய நிதியமைச்சர்
தாம் இலங்கையர் என பெருமையாக கூறுபவர்கள் அவமானப்படும் வகையில், இலங்கை ஒரு சிறுபான்மையினரினை அடக்குவதற்காக கடன் வாங்கி; இப்போது அதனை செலுத்த முடியாமல் திணறுகின்றது. இலங்கையில் இன்னமும் பயங்கரவாத சட்டத்தின் பின்னே மறைந்து கொண்டே அரசுகள் இயங்கும் கேவலமான நிலையிலேயே இலங்கை உள்ளது, இதனை பற்றி படித்த, பாமர மக்கள் கூட கவலைப்படுவதில்லை, காரணம் அந்தளவிற்கு இனவாதம் கண்ணை மூடியுள்ளது, அந்த அவமானகரமான நிலையினை கூட உணரமுடியாதவாறு எருமை மாட்டின் மேல் மழை பெய்வது போல இருக்கும் இலங்கை குடிமக்களுக்கு, அவர்கள் அரசு கொடுக்கும் பரிசு என்ன என்பதனை காலம் தீர்மானிக்கும். இலங்கை எவ்வாறான கடன் மீழ்சீரமைப்பிற்கு தயாராகிறது என்பதனை இதுவரை தெரிவிக்கவில்லை, 87 பில்லியன் கடனினை எவ்வாறு தீர்க்கவுள்ளது? debt swap 1:1 அல்லது 1:2 என்பது கூட தெரிவிக்கபடவில்லை. நாடுகளின் கடன் மறுசீரமைப்பு தெரியவில்லை, ஆனால் நிறுவனங்கள் தமது கடன் மறு சீரமைப்பிற்கு 1:1 என்றால் $100 கடனிற்கு $100 செலுத்துவது 1:2 என்றால் $100 கடனிற்கு $200 செலுத்துவது. ஏற்கனவே 87 பில்லியன் கடன் நாட்டின் மொத்த தேசிய வருமானத்தில் 131% இந்த 87 பில்லியனை 1:2 என செலுத்துவதாயின் 174 பில்லியன் கடனாகிவிடும், அது தற்போதய கடனினை விட இரட்டிப்பானது. இந்த கடன் சுமைகள் அனைத்தும் மக்கள் மேலேயே சுமத்தப்படும், ஆரம்பத்தில் 10 வருட பணமுறியினை பயன்படுத்தி கடன் மீழழிப்பு செய்யப்படும் என கூறப்பட்டது, இலங்கையின் கிரடிட் தரம் தாழ்வாக உள்ள நிலையில் முதலீட்டாளர்கள் எவ்வாறு ஆர்வம் காட்டுவார்கள்? இலங்கை பணமுறியில் முதலிட? அல்லது அதிக வட்டி செலுத்த வேண்டும் (ஆபத்தான முதலீடு). வட்டி அதிகம் செலுத்தினால் ஒரு கட்டத்தில் மீண்டும் இலங்கை கடன் செலுத்த முடியா முறிவு நிலைக்குள்ளாகும் (குறைந்த கால முதிர்ச்சி கடன்), உதாரணமாக 30 வருட வீட்டுக்கடனை 10 வருடத்திற்குள் செலுத்துவதென்றால் மீள செலுத்தும் மாதாந்த கட்டணம் அதிகரிக்கும் அதனை போல ஒரு நிலைதான். இலங்கை தொடர்ந்தும் கடன் வாங்கி கடன் செலுத்தி ஒரு ஐந்தாறு வருடங்களின் பின்னர் மீண்டும் தற்போதுள்ளதனை விட அதிக கடனுக்கு வட்டி கூட செலுத்தமுடியாமல் தற்போதுள்ள நிலையினை விட இன்னும் மோசமானநிலையில் முறிவடையலாம். இதற்கு காரணம் அரசுகள் மட்டுமல்ல அங்குள்ள மக்களின் மனங்களும்தான் காரணம். பொதுவாக பார்க்கும் போது இலங்கை இந்த நச்சுவட்டத்திற்குள்ளே தொடர்ந்திருக்க வாய்ப்புள்ளது அல்லது ஏதாவது புரட்சிகரமான மாற்ற்ம் நிகழ வேண்டும்.1 point- விடுதலைப்புலிகள் செயற்பாட்டாளர்கள் கனடாவில் தஞ்சம் கோருவதில் சிக்கல்.
சிறு விளக்கம்; விடுதலைப் புலிகள் என்றில்லை, வன்முறையை ஊக்குவிக்கும் அல்லது வன்முறை மூலம் அரசியல் இலக்கை அடைய முயற்சிக்கும் அமைப்பிற்கு ஆதரவளித்த அல்லது உறுப்பினராக இருந்த எவருடைய அகதிக் கோரிக்கையையும் கனேடிய குடிவரவு, குடியகல்வு, அகதிகளுக்கான அமைப்பு ஏற்றுக்கொள்வதில் பாரிய சிக்கல் உண்டு. அதன் அர்த்தம் கனடாவில் முன்னாள் விபு க்கள் அகதிக் கோரிக்கையை முன்வைக்க முடியாது என்பது அல்ல. அகதிக் கோரிக்கையை முன்வைக்கலாம் ஆனால் அதில் வெல்வதற்கான வாய்ப்பு மிகவும் குறைவு. ஆனால் இலங்கையில் உயிராபத்துக்கள் இருப்பதனால் முன்னாள் விபு க்களை இலங்கைக்கு திருப்பி அனுப்பக் கூடாது என Canadian courts தீர்ப்பளித்த பல உதாரணங்கள் உள்ளன.1 point- குமாரசாமியின்ரை வேஸ்ற் & பேஸ்ற் புக்.
https://www.facebook.com/reel/894766818933857 தரமான சம்பவங்கள் 😂1 point- இரு வர்ணத்தில் இனிய பாடல்கள்.....!
பார்த்தீரா ஐயா பார்த்தீரா ........ நடிப்பு: தங்கவேலு & சரோஜா .......படம்: பாக்யலக்சுமி ......! 😍1 point- மீண்டும் சக்திமான் -shaktimaan
1 pointதூர்தர்ஷனில் சக்திமான் பார்த்த நினைவிருக்கிறதா?டாக்டர் ஜாகல், தம்ராஜ் கில்விஸன்,கீதாவிஸ்வாஸ்?கங்காதரர் வித்தியாதரர் மாயாதரர் ஓம்காரசாஸ்திரி? வாருங்கள் நினைவை மீட்டுவோம் சக்திமான் எமது சிறியவயது ஹீரோ.அந்த நாட்களில் ஒரே ஒரு சானல்தான் யாழ்ப்பாணத்தில் வேலைசெய்தது அது தூர்தர்ஸன் தான்.சன் டி.வி எல்லாம் அப்போது அறிமுகமில்லை.தூரதர்ஸனில் ஜேய் ஹனுமான்,நிகழ்வுகள் அதோடு சக்திமானையும் பார்ப்பது வழக்கம். அதில் நிகழ்வுகள் என்ற தொடர் இரவு 11 மணிக்கு ஒளிபரப்பப்படும் அது ஆவிகள் தம் சாவுக்கு காரணமானவர்களை பழிவாங்கும் கதை ஆகையால் இரவில் வீட்டிற்கு வெளியில் செல்லப்பயந்து யன்னலினூடாகவே சிறுனீர் கழித்த சம்பவங்களும் நடந்தன . அவ்வளவு பீதி.சக்திமான் தொடர் ஒவ்வொரு சனி 11 மணிக்கு ஒளிபரப்பப்படும்.தனியார்நிலையத்தில் கல்விகற்ற போது தனியார்கல்வினிலையம் காலை 7.30 ற்கு ஆரம்பமாகி 11 மணிக்கு முடிப்பார்கள்.பெரும்பான்மையான எனது சகபாடிகளுக்கும் சரி எனக்கும் சரி 10 மணிக்கு மேல் படிப்பு மண்டைக்குள் ஏறுவது சற்றுக்கடினமாகத்தான் இருந்தது.காரணம் 11 மணிக்கு சக்திமான் இருப்பதுதான்.1997 இல் யாழ்ப்பாணத்தில் இணையமோ கணணிவசதிகளோ ஒரிரு இடங்களில்தான் இருந்தன இதன் காரணமாக சக்திமானின் புகைப்படங்களோ..அல்லது கார்ட்கள் போன்ற எதுவும் எம்மிடம் இருந்ததில்லை.ஆனால் ஒரு சகபாடி எங்கிருந்தோ ஒரு படத்தைக்கொண்டுவந்துவிட்டான்.அந்த ஒரே ஒரு படத்தால் ஒரே நாளில் ஹீரோ ஆகிவிட்டான் அவன். 11 மணிக்கு வகுப்பு முடிவடைந்ததும் விழுந்தடித்து வீடுநோக்கி ஓடிதொலைக்காட்சிக்கு முன்னால் ஓட்டம் நிறைவடையும்.சக்திமான் தொடக்கப்பாடல் முடிவடைந்த பின்னர்தான் பெரும்பாலான நேரங்களில் வீடுவரமுடிந்தது.சக்திமான் தொடரின் இடைவேளையின் போதுதான் போய் மதிய சாப்பாட்டை எடுத்துவருவேன்.பின்னர் சாப்பாடு முடிந்ததோ இல்லையோ தட்டுடன் தொடர் முடியும்வரை இருப்பது வழக்கம்.எனது நண்பர்களுக்கும் இதே நிலைதான். நாம் பல நேரங்களில் சக்திமான் கில்விஸனிடம் தோற்பாரா? கீதாவிஸ்வாஸை காப்பாற்ற வருவாரா?கங்காதரர் அகப்படுவாரா? என்று நண்பர்களிடம் வாக்குவாதம் செய்துமிருக்கிறோம். ஏதோ நாம் மட்டும் இதற்கு அடிமையாகவில்லை இந்தியாவில் இருக்கும் அனைத்து சிறுவர்களுக்கும் ஏகோபித்த ஒரே ஹீரோவாக சகலரையும் அடிமையாக்கியவர் சக்திமான்.பல சிறுவர்கள் சக்திமான் வந்து காப்பாற்றுவார்,அவரைபோல் சாகசம் செய்யலாம் என்று உயரமான கட்டடங்களில் இருந்து குதித்து இறந்தமை இதற்கு நல்ல ஆதாரம்.இதனால் பெற்றோர் மிகுந்த சங்கடத்திற்குள்ளானார்கள் இவ்வாறான சம்பவங்களின் பின்னர் வெளிவந்த தொடர்களில் இவை கற்பனையே இவற்றை செய்து பார்க்க முயற்சிக்காதீர்கள் என்று எச்சரிக்கை விடப்பட்டதுடன் எவ்வாறு சூட்டிங்க் எடுக்கப்படுகின்றது என்பதையும் ஒளிபரப்பினார்கள். டைட்டிள் சோங்க் சக்திமான் என்றகற்பனைக்கதாப்பாத்திரத்தை உருவாக்கியவர்கள் டிங்கெர் ஜானி மற்றும் முகேஸ் கண்ணா.முகேஸ்கண்ணா என்பவர்தான் சக்திமானாக அசத்தியவர்.1997 செப்டெம்பர் 13 இல் சக்திமானின் முதலாவது எபிசோட் ஒளிபரப்பப்பட்டது. கதை இதுதான் தீய சக்திகளுக்கு எதிராக போராடும் வீரனாக சக்திமான் தெரிவு செய்யப்படுகின்றார். சக்திமானுக்கான சக்திகள் 7 யோகிகளால் வழங்கப்படுகின்றன.இதற்காக இவருக்கு குண்டலினி யோகா பயிற்சியளிக்கப்படுகின்றது.இதனால் அசாத்திய சக்திகளை பெற்றுவிடுகிறார் நம்ம தல.மரணத்தை வெல்வதற்கான சடங்கை செய்தார்கள் ஆனால் அது ஈடேறவில்லை பதிலாக சாதாரண மனிதனை விட அதிகாஅயுள்மட்டும் கிடைக்கின்றது.இறுதியில் அக்கினி குண்டத்தில் இறங்கியதும் பஞ்சபூதங்களின் சக்தி கிடைக்கிறது.இவ்வாறு சக்திமான் உருவாகினார். http://4.bp.blogspot.com/-O2-mBeo5Aa8/UAFqJcjWWgI/AAAAAAAAHqQ/MMN07yupOJI/s320/kilvish.jpg சக்திமானுக்கு பல எதிரிகள் அவர்களுள் முக்கிமான எதிரி தம்ராஜ்கில்விஸன்.இவனை அழிக்கும் நோக்கத்திற்காகவே சக்திமான் படைக்கப்பட்டாரென்றும் கூறலாம்.அத்துடன் கில்விஸனுடன் இலவச இணைப்பாக பல சிறிய வில்லன்களும் இருக்கிறார்கள்.சலாம் அலைக்கும்...அலைக்கும் சலாம் என்பதுபோல் கில்விஸன் வரும்போதும் ஒரு வார்த்தை பிரயோகிக்கப்படும் நினைவுக்கு வந்துவிட்டதா அதே தான் க.க.க.போ "இருள் நீடிக்கிறது". http://2.bp.blogspot.com/-TsIESzQE6HE/UAFsjR7Kn9I/AAAAAAAAHqg/qcRgLh3Hn5M/s320/311507_372570069474306_1403959557_n.jpgசக்திமான் என்னேரமும் அதே உடையில் உலாவர முடியாதல்லவா? அதனால் மாறுவேடத்தில் மக்களோடு மக்களாக சுற்றுவதற்காக பற்கள் சொண்டைக்கிளித்துக்கொண்டிருக்கும் கெங்காதரர் ஆனார்.அதில் தன்னை யார் என்று கேட்பவர்களுக்கு இவர் கூறும் விளக்கம்தான் ஹைலைட்.."என் பெயர் கங்காதரர் வித்யாதரர் மாயாதர் ஓம்காரர் சாஸ்திரி" இதோடு கேட்பவர்களின் நட்டு கழன்றுவிடும். http://1.bp.blogspot.com/-dYa0cfksRiM/UAFtQcLvXbI/AAAAAAAAHrY/n-tdW68y6ws/s1600/48978_100001641115134_9902_n.jpg கீதா விஸ்வாஸ் அத்தோடு வேலையும் வேண்டுமல்லவா இதனால் ஒரு பத்திரிகை நிறுவனத்தில் பணிபுரிகிறார் கெங்காதரர்.இந்த இடத்தில்தான் அடுத்த முக்கிய கதாப்பாத்திரம் அறிமுகம் கீதா விஸ்வாஸ் இவர் சக்திமானை காதலிப்பவர்.கீதா விஸ்வாஸாக நடித்தவர் வைஸ்ணவி.ஹீரோயின் வந்துவிட்டாலே புரிந்திருக்கும் இதனால் வில்லன்களிடம் ஹீரோ படும் அத்தனை அவஸ்தைகளையும் சக்திமானும் பட்டார். இத்தொடர் மொத்தமாக 461 எபிசோட்களாக வெளிவந்தது.அனைத்து எபிசோட்களையும் இலவசமாக பார்வையிட.1998 இல் MDb ரேட்டிங்கில் 10 ற்கு 6.9 ஐ பெற்றுள்ளது. எபிசோட் முடிவில் சக்திமான் கருத்துக்கள் கூறுவார். சின்ன சின்ன விடயங்கள் பெரிய பெரிய கருத்துக்கள். http://1.bp.blogspot.com/-9TydEhLIjyg/UAFpTNaXG7I/AAAAAAAAHqI/3NnNEpjVaRc/s320/407815_341453482552703_162551560442897_1102676_162347799_n.jpg உண்மையில் சக்திமான் தொடர் சுப்பர்மான் திரைப்படத்தை சார்ந்து எடுக்கப்பட்டதுதான்.ஆனால் அத்துடன் நிற்கவில்லை எக்ஸ்மான் என்று பல திரைப்படங்களும் உள்ளே தலைகாட்டியிருந்தன.ஆரம்பகாலங்களில் ஹொலிவூட் எமக்கு அறிமுகமில்லாத காரணங்களால் இவை நமக்கு புலப்படவில்லை.சக்திமான் முடிவடைந்த பின்னர் ஆரியமான் என்ற தொடரை அறிமுகப்படுத்தியிருந்தார்கள் முகேஸ் கண்ணாதான் அதிலும் ஹேரோ ஆனால் அது ஆரம்பிக்கும் பொழுது நான் ஸ்டார்வேர்ஸ் பார்த்துவிட்டிருந்தேன்.சோ பருப்பு வேகல. எது எப்படியிருந்தாலும் நமது சிறியவயது ஹீரோ சக்திமான் தான் அத்துடன் இந்தியாவின் முதலாவது சூப்பர் ஹீரோவும் இவர்தான்.இதன் பின்னர் முகேஸ்கண்ணா வேறுதொலைக்காட்சித்தொடர்களில் நடித்தாலும் எதிர்ப்பட்டவர்கள் இவரை சக்திமான் என்றுதான் அழைத்தார்கள். பல சக்திமான் கொமிக்ஸ்களும் வெளிவந்த்துள்ளன. http://2.bp.blogspot.com/-bp_l7blF6Uc/UAFs0LP87OI/AAAAAAAAHqo/FL1gC1xMz7s/s320/1126840-spcl_0140_e_super.jpg http://3.bp.blogspot.com/-3AP8pEX-5lw/UAFs2U5GYFI/AAAAAAAAHqw/U1PrXioz2cI/s320/1126841-spcl_0153_e_super.jpg http://3.bp.blogspot.com/-Q05sOp1JKWw/UAFs4hkZlVI/AAAAAAAAHq4/bnBLBLR6wo8/s320/1126842-spcl_0156_e_super.jpg http://1.bp.blogspot.com/-4YwQ7JGogUU/UAFs7aHdbnI/AAAAAAAAHrA/PwIFY6X5upc/s320/1126843-spcl_0161_e_super.jpg http://4.bp.blogspot.com/-dnehr7I7I_8/UAFs86YNA9I/AAAAAAAAHrI/b2qtZ2knq4I/s1600/Shaktiman%5B11%5D.jpg http://2.bp.blogspot.com/-BLxCX65AQPE/UAFs9r_yVfI/AAAAAAAAHrQ/QBaBypqaz9o/s1600/rom42.jpg 2012 ல் சக்திமானை 3டி திரைப்படமாக எடுக்க முடிவு செய்தார்கள் .2012 மார்ச் 24 இல் இதை அதிகாரபூர்வமாக அறிவித்திருந்தார்கள் .சக்திமான் சீரிஸ்ஸில் நடித்த அதே முகேஸ்கண்ணாதான் இத்திரைப்படத்திலும் ஹேரோவாக நடிப்பதாக இருந்தார்,2012 ல் இதைப்பற்றி முகேஸ் கூறும்பொழுது"இப்பொழுது நான் திரைப்படத்தில் மட்டுமே எனது கவனத்தை செலுத்துகின்றென்.சக்திமான்தான் இந்தியாவின் முதலாவது சூப்பர் ஹீரோ கிரிஸ்ஸோ ராவன்னோ ஜி வன்னோ அல்ல.சக்திமான் திரைப்படத்தை விரைவில் வெளியிடுவோம்" என கூறினார் ஆனால் துரதிர்ஷ்டவசமாக இன்றுவரை இது நிறைவேறவேல்லை போதாததற்கு கொரோனா காரணமாக முகேஸ்கண்ணா மரணமடைந்துவிட்டார் என்றும் அண்மையில் நெட்டிசன்கள் வதந்தியை பரப்பியிருந்தார்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது1 point- நோர்வேயில், இலங்கையை பூர்விகமாகக் கொண்ட தமிழ் பெண் சுட்டுக்கொலை!
நடந்த மரணங்களைப் பற்றிய உத்தியோகபூர்வமான விபரங்கள் வராமல், அவற்றைப் பற்றி எதுவித ஆதாரங்களும் இல்லாமல் எழுந்தமானத்திற்கு எழுதுவதும், சம்பந்தமில்லாத விடயங்களை (உறுதி செய்யப்படாத) எழுதி திசையைத் திருப்புவதும் ஆர்வக்கோளாறு அல்லது விடுப்புக்கேட்கும் மனநிலை என்றுகொள்ளமுடியாது. அதையும் தாண்டி ஏதோ ஒரு வெறுப்பு இருக்கின்றது. குடும்பத்தினருக்கு மேலும் வேதனைகளைக் கொடுக்காமல் இருக்க முயற்சிக்கவேண்டும்.1 point- பிரபாகரன் - மூத்த செய்தியாளர் திரு த.சபாரட்ணம் எழுதிய தலைவரின் வாழ்க்கைச் சரித்திரம் - சங்கம் இணையம்
பிரபாகரன் - மூத்த செய்தியாளர் திரு த.சபாரட்ணம் எழுதிய தலைவரின் வாழ்க்கைச் சரித்திரம் - சங்கம் இணையம்
1 pointரஜீவ் காந்தியையும், ரொமேஷ் பண்டாரியையும் இலகுவாகக் கையாள நினைத்த ஜெயவர்த்தன அரசு இந்திரா காந்தியின் இறுதிக் கிரியைகள் நடைபெறும் நாளான கார்த்திகை 3 ஆம் திகதியை இலங்கையரசு பொது விடுமுறை நாளாக அறிவித்தது. இரங்கல்ப் புத்தகத்தில் கையொப்பம் இடுவதற்காக இந்திய தூதுவராலயம் அமைந்திருந்த பகுதியில் சிங்களவர்கள் உட்பட பல பொதுமக்கள் வரிசையில் காத்திருந்து தமது இறுதி மரியாதையினைச் செலுத்திச் சென்றனர். யாழ்ப்பாணத்தில் இந்திரா காந்தியின் இறுதி வணக்க நாளை ஒவ்வொரு அரை மணிநேரத்திற்கு ஒன்றென்று குண்டுகளை வெடிக்க வைத்து போராளிகள் தமது மரியாதையினைச் செலுத்தினர். அந்த நாள் முழுதும் யாழ்க்குடாநாடு குண்டுச் சத்தங்களால் அதிர்ந்துகொண்டிருந்தது. இந்திரா காந்தியின் இறுதிக் கிரியைகளில் ஜெயவர்த்தனவும் கலந்துகொண்டார். அங்கிருந்தவேளையில் ரஜீவுடனும் சிறிய சந்திப்பொன்றை நிகழ்த்தினார். ரஜீவுடன் பேசும்போது, " இந்தியா தமிழர்களுக்குச் சார்பாக நடந்துகொள்வதாகவும், அதனாலேயே தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணியின் கோரிக்கைகளை வழங்குவதற்காக தனது அரசாங்கத்தை இந்தியா அழுத்தம் கொடுத்துவருவதாகவும் சிங்கள மக்கள் நம்புகிறார்கள்" என்று கூறினார். மேலும், இந்தியாவினால் வழங்கப்படும் அரசியல் தீர்வு தொடர்பான உதவிகளைத் தொடர்ந்தும் பயன்படுத்தும் அதேவேளை, தமிழர்களின் பிரச்சினை தொடர்பாக புதிய வழிகளில் செயற்படுவதும் அவசியமாகும் என்றும் ரஜீவிடம் நாசுக்காகத் தெரிவித்தார் ஜெயார். ஜெயாரின் வேண்டுகோள்களை அமைதியாகச் செவிமடுத்துக்கொண்டிருந்த ரஜீவ் அதற்குச் சாதகமான முறையில் செயற்படச் சம்மதம் தெரிவித்தார். ஜெயாருக்குப் பதிலளித்த ரஜீவ், ஜெயார் கேட்டுக்கொண்டத்ற்கேற்ப இலங்கை தொடர்பான இந்தியாவின் மத்தியஸ்த்தத்தில் புதிய வழிமுறையினைப் பின்பற்றப்போவதாகத் தெரிவித்தார். இதுவரை தமிழருக்குச் சார்பாக செயற்பட்டுவந்த இந்தியாவின் நிலைப்பாடு இனிமேல் பக்கச்சார்பின்றி இருக்கும் என்று கூறிய ரஜீவ் ஜெயவர்த்தன தமிழரின் பிரச்சினைக்கான தீர்வொன்றினைக் கண்டறிவது அவசியம் என்றும் கூறினார். மேலும், தமிழரின் அபிலாஷைகளைப் பூர்த்திசெய்யாத எந்தத் தீர்வும் நாட்டினை மேலும் மேலும் பிரச்சினைக்குள் இட்டுச் செல்வதுடன், ஈற்றில் நாடு பிளவுபடுவதற்கும் காரணமாகிவிடும் என்றும் எச்சரித்தார். இறுதியாக, இந்தியா இலங்கையின் இறையாண்மையினையும், ஒருமைப்பாட்டையும் எப்போதும் காத்து நிற்கும் என்றும் உறுதியளித்தார். இந்திரா காந்தியின் இறுதிநிகழ்வில் பங்குபற்றிவிட்டு கொழும்பு திரும்பிய ஜெயார் பத்திரிக்கையாளரைச் சந்தித்தார். அங்கு பேசிய ஜெயார், ரஜீவுடனான சந்திப்பு மிகவும் பயனுள்ளதாய் அமைந்ததாகக் கூறினார்."இளைய பிரதமர் புதிய ஆரம்பம் ஒன்றினை ஏற்படுத்த விரும்புகிறார்" என்று கூறியதுடன் "பிரிவினைக்கு ஒருபோதும் இடமளிக்கப்போவதில்லை என்று உறுதியளித்தார்" என்றும் கூறினார். பின்னர் அமைச்சரவையில் பேசும்போது, ரஜீவ் தொடர்பான தனது கணிப்புப் பற்றி அமைச்சர்களுக்கு விளங்கப்படுத்தினார். "ரஜீவ் காந்தியுடன் மேம்பட்ட தொடர்பாடல்களை நாம் மேற்கொள்ள முடியும் என்று நம்புகிறேன்" என்று கூறினார். அப்போது கொழும்பில் நிலவிய கணிப்பீடு என்னவெனில், "புதிய பிரதமர் ரஜீவும், அவரது ஆலோசகர் ரொமேஷ் பண்டாரியும் அனுபவம் இல்லாதவர்கள், ஆகவே இவர்கள் இருவரையும் எமக்கேற்றவழியில் கையாள்வது மிக இலகுவானது" என்பதுதான். இந்திராவின் மறைவிற்குப் பின்னர், சர்வகட்சி மாநாட்டினை சூழ்நிலைக்கேற்ப நடத்திச் செல்லவே ஜெயார் நினைத்தார். கார்த்திகை 14 அன்று கூடவிருந்த மாநாட்டினை மார்கழி 14 இற்கு ஒத்திவைத்த அவர், அரசாளும் பொறிமுறை குறித்த அறிக்கை தயாரிப்பதில் தாமதம் ஏற்பட்டுள்ளதால் மாநாடு பிற்போடப்படுவதாக அறிவித்தார். மார்கழி 14 இல் அறிக்கையினைச் சமர்ப்பித்த ஜெயார், மாநாட்டினை மீண்டும் மார்கழி 21 இற்கு ஒத்திவைத்ததுடன் அன்றே உறுப்பினர்கள் அறிக்கை குறித்த தமது கருத்துக்களை முன்வைக்கலாம் என்றும் கூறினார். அரசாளும் பொறிமுறைக்கான உத்தேச சட்டம் ஐந்து நிலை நிர்வாகக் கட்டமைப்பைக் கொண்டிருந்தது. அவையாவன, 1. கிராமோதய மண்டலங்கள் : தன்னார்வ மக்கள் அமைப்புக்களில் இருந்து 4500 கிராமோதய மண்டலங்கள் கிராமங்களில் உருவாக்கப்படும். 2. பிரதேச சபைகள்: இவை தற்போதிருக்கும் உதவி அரசாங்க பிரிவுகளில் இருந்து தெரிவுசெய்யப்படும். இவ்வாறு தெரிவுசெய்யப்படும் 250 சபைகள் பிரதானமாக உள்ளூராட்சி விடயங்களில் மட்டும் கவனம் செலுத்தும். 3. மாவட்ட சபைகள் : இவை அபிவிருத்திச் சபைகளைப்போன்று செயற்படும். மாவட்ட நிர்வாகச் செயற்பாடுகளுக்குள் இவற்றின் அதிகாரம் மட்டுப்படுத்தப்படும். 25 மாவட்டங்களுக்கும் ஒவ்வொன்றாக உருவாக்கப்படும் இச்சபைகளுக்கான தலைவர்களும், உதவித் தலைவர்களும் அம்மாவட்ட வாக்களர்களாலும், அச்சபையின் உறுப்பினர்களிடையிலான வாக்களிப்புகள் ஊடாகவும் தெரிவுசெய்யப்படுவார்கள். அபிவிருத்திச் சபைகளைக் காட்டில் சற்று அதிகமான, பரந்துபட்ட அதிகாரங்களையும் மாவட்ட சபைகள் கொண்டிருக்கும். 4. மாகாண சபைகள் : இரண்டு அல்லது இரண்டிற்கு மேற்பட்ட மாவட்டங்களை உள்ளடக்கியதாக மாகாண சபைகள் அமையும். மாவட்ட சபைகள் கலைக்கப்பட்டு அதே மாகாணத்திற்குள் அமைந்திருக்கும் இன்னொரு மாவட்ட சபையுடன் அம்மாவட்டங்களில் நடத்தப்படும் வாக்களிப்பின் ஊடாக இணைந்துகொள்ளமுடியும். மாவட்ட சபைகளால் பகிர்ந்தளிக்கப்பட்ட அதிகாரங்களை அந்தந்த மாகாணசபைகள் பயன்படுத்தும். கலைக்கப்படும் மாவட்ட சபைகளில் இருக்கும் சபை உறுப்பினர்கள் மாகாணசபையில் இணைந்துகொள்ள முடியும். 5. மாகாண மற்றும் மாவட்ட அமைச்சர்கள் : பாராளுமன்றத்திற்கான அமைச்சர்களையோ அல்லது இராஜாங்க அமைச்சர்களையோ மாகாண சபை அமைச்சர்களாகவும், மாவட்ட சபை அமைச்சர்களாகவும் நியமிக்கும் அதிகாரத்தை ஜனாதிபதி கொண்டிருப்பார். ஒரு குறிப்பிட்ட மாகாண சபையின் ஆதரவினைக் கொண்டிருக்கும் ஒருவரை அந்த மாகாண சபையின் முதலமைச்சராக நியமிக்கும் அதிகாரத்தையும் ஜனாதிபதி கொண்டிருப்பார். மாவட்டங்களின் சம்மேளனம் சுமார் 75 உறுப்பினர்களைக் கொண்ட மாவட்டங்களின் சம்மேளனம் எனும் அமைப்பு உருவாக்கப்படும். இவர்களில் ஒவ்வொரு மாவட்ட சபையிலிருந்தும் தெரிவுசெய்யப்படும் தலைவரும், உப தலைவருமாக 50 பேர் இருப்பர். மேலும் ஒவ்வொரு மாகாணத்திலிருந்தும் இருவர் என்கிற அடிப்படையில் 18 பேரும் (மாவட்ட சபைகளில் சனத்தொகை விகிதாசாரம் சரியான முறையில் பாவிக்கப்படாதுவிடத்து) அம்மாகாணங்களில் இருக்கும் சனத்தொகை அடர்த்திக்கேற்ப இச்சம்மேளனத்தில் இடம்பெறுவர். மீதி 7 பேரும் ஜனாதிபதியினால் நியமிக்கப்படுவார்கள். இந்தச் சம்மேளனத்தின் ஒரே பணி அரசாங்கத்திற்கு ஆலோசனை வழங்குவது மட்டும்தான். பாராளுமன்றத்தினால் சட்டமாக்கப்படும் எதனையும் நிராகரிக்கும் அதிகாரம் இச்சம்மேளனத்திற்கு இருக்காது. ஆனால், பாராளுமன்றத்தால் சட்டமாக உருவாக்கபடுவனவற்றை அமுல்ப்படுத்தும் அதிகாரமும், அடிப்படை மனிதவுரிமைகள், மொழியுரிமை, பிராந்திய உரிமைகள், தேசிய ஒற்றுமை, நாட்டின் ஒருமைப்பாடு ஆகிய விடயங்களில் பாராளுமன்றத்தில் கருத்துக்கூறும் அதிகாரமும் இச்சம்மேளனத்திற்கு வழங்கப்படும். மேலும் மாவட்டங்களுக்கிடையிலான பிணக்குகள், மாகாணங்களுக்கிடையிலான பிணக்குகள், தேசிய ஒற்றுமை, சமூக பொருளாதார விடயங்கள் குறித்து விசாரிக்க ஆணைக்குழுக்களை இச்சமேளனத்தினால் உருவாக்க முடியும். இச்சம்மேளனத்திலிருந்து பாராளுமன்றத்திற்கு அமைச்சர்கள் தெரிவுசெய்யப்படவும் இயலும்.1 point- காத்தான்குடியின் முதல் Satellite 🛰️
சின்ன வயதில் பழைய VHF & UHF video cassette player இனை செய்மதி அலைகளை பெறுவதற்காக செய்த கோமாளித்தனங்கள் நினைவுக்கு வருகின்றது இந்த கட்டுரையினை வாசிக்கும் போது😁.1 point- மலரும் நினைவுகள் ..
1 point1 point- கருத்துக்களம் : பிரச்சனைகளும் தீர்வுகளும்
1 point- நோர்வேயில், இலங்கையை பூர்விகமாகக் கொண்ட தமிழ் பெண் சுட்டுக்கொலை!
வழமை போல, தரவுகளைப் புறந்தள்ளி விட்டு உங்கள் கற்பனைகளை அள்ளி விட்டிருக்கிறீர்களென நினைக்கிறேன்😎. உங்கள் கற்பனை உலகை குலைக்காமல், உண்மை அறிய விரும்பும் யாழ் வாசகர்களுக்கு மட்டும் எழுதுவது: உலகில், LGBTQ+ இனருக்கு அதிக பாதுகாப்பும், சமத்துவமும் வழங்கும் முதல் 10 நாடுகளில் நோர்வே உட்பட்ட ஸ்கண்டினேவிய நாடுகள் அடங்கும். இன்று வரை அமெரிக்கா, கனடா, பிரிட்டனில் நடக்கும் கலாச்சாரப் போர் (Culture war) ஸ்கண்டினேவிய நாடுகளில் பரவவில்லை. நோர்வே கிறிஸ்தவர்கள், LGBTQ+ இனை ஒதுக்காமல் வரவேற்கும் Evangelical Lutherans எனப்படும் தரப்பினர். நோர்வே திருச்சபை எந்த போப்பின் கீழும் இல்லாத சுதந்திர திருச்சபை (அங்கிலிக்கன் போல). 2015 இல் இருந்து ஒர் பாலினத் திருமணங்களை நோர்வே திருச்சபை தன் ஆலயங்களில் அனுமதித்திருக்கிறது. பொது மக்களிடையேயும் இந்த உறவுகளுக்கு எதிர்ப்புக் குறைவு. இவை நோர்வே அரசு, HRW ஆகியவற்றின் தளங்களில் இருக்கும் தரவுகள்! நெடுக்கர் சொல்லும் ஓர் பாலின உறவுகள் பற்றிய homophobia நோர்வேயில் இருந்தால், நிச்சயமாக நெடுக்கர் போன்ற குடியேறிகளிடையே தான் அதிகமாக இருக்குமென நினைக்கிறேன்.1 point- நாட்டைக் கட்டியெழுப்பும் அபிவிருத்தித் திட்டத்தில் இணையுங்கள் – பல்கலைக்கழக மாணவர்களுக்கு அரச அதிபர் அழைப்பு!
தமிழர்களுக்கான சம உரிமைகளை கொடுத்து விட்டு அதன் பின்னர் நாட்டை கட்டியெழுப்புவது பற்றி பேசலாம். இன்று பிரபாகரன் காலத்தை விட இன்னும் பலமாக ஈழத்தமிழர்கள் இருக்கின்றார்கள்.1 point- இலங்கையில் சோழர் ஆட்சிக்குப் பிறகு மீண்டும் பிரமாண்ட ஜல்லிக்கட்டு - 57 வயதிலும் காளை அடக்கும் வீரர்
1 pointமாட் டை கலைத்து சண்டை போடும் மோசமான விளையாட்டைவிட இது எவ்வளவோ நல்ல விளையாட்டு. எடுத்து கொள்ளலாம். -------------------------------------------------------- முற்று முழுதான உண்மை.வெட்கபட வேண்டியது .1 point- இலங்கையில் சோழர் ஆட்சிக்குப் பிறகு மீண்டும் பிரமாண்ட ஜல்லிக்கட்டு - 57 வயதிலும் காளை அடக்கும் வீரர்
1 pointஅவர்களை மீறி (இந்தியா) ஈழத்தமிழர்களால் எதுவுமே செய்ய முடியாது என்பதை 2009 சம்பவங்கள் நிரூபித்து காட்டி விட்டது. இதை சிங்களம் நன்றாகவே தெரிந்து வைத்துக்கொண்டு நெஞ்சை நிமிர்த்தி,தலையை நிமிர்த்தி சர்வதேசத்தில் ஓடி விளையாடுகின்றார்கள்.1 point- நோர்வேயில், இலங்கையை பூர்விகமாகக் கொண்ட தமிழ் பெண் சுட்டுக்கொலை!
இது குடியேறி எதிர்ப்பு மனநிலை அல்ல.. குடியேறி.. குடியேறிய நாட்டின் உயர் பண்புகளை ஏற்றுக் கொள்ளாமல்... தங்கள்.. தாய் நாட்டில் செய்த அதே கீழ்த்தரமான செயல்களை குடியேறிய நாட்டிலும் அரங்கேற்றும் செயல்களுக்கு எதிரான மனநிலை. செங்கனில் இல்லாத போதும்.. நோர்வே உட்பட ஐரோப்பிய பிரஜைகளை பிரிட்டன் தானியங்கி மூலம் உள்நுழைய அனுமதிக்கும் போது தாராளவாதம் பேசும் நோர்வே உட்பட்ட ஐரோப்பிய நாடுகள்.. பிரிட்டன் மீது காட்டும் இந்த வேற்றுமைக்கு என்ன காரணம்.. செங்கனா..??????! ஓரினச் சேர்க்கை என்பது...இப்போ இயற்கை சார் விடயமாக அன்றி.. புகுத்தப்படும் விடயமா மாறி கனகாலமாயிட்டுது. நீங்கள் இன்னும் உங்கள் பழைய நிலைப்பாட்டில் நின்று தொங்குவதற்கு நாம் என்ன செய்ய முடியும். அந்தளவு தான் தாங்கள் விளங்கிக் கொண்டிருக்கிறீர்கள் என்று கடந்து செல்வதைத் தவிர.1 point- நோர்வேயில், இலங்கையை பூர்விகமாகக் கொண்ட தமிழ் பெண் சுட்டுக்கொலை!
கருத்தை முதலில் ஒழுங்காக இணைக்கப்பட்ட செய்தியோடு சேர்த்து வாசிச்சு விளங்கப்பழகனும். அது யாழில் பலருக்கு இல்லை என்பது இங்கு தெளிவாகிறது. நோர்வே.. அமைதிப்பூங்காவாக இருந்த காலம் எப்பவோ மலையேறிட்டுது. அதேபோல் சுவீடனும். இதற்கு முதன்மைக் காரணம் எல்லைகள் கிழக்கு ஐரோப்பியர்களுக்கு திறந்து விடப்பட்டமை. நோர்வே மக்களே சொல்லினம்.. முன்னர் ஒரு பொருளை வீதியில் போட்டால்.. அது அப்படியே இருக்கும். ஆனால்.. இப்போது கிழக்கு ஐரோப்பியர்கள் வந்த பின்.. போட்ட பொருள் தனக்குத்தான் என்று களவாடிச் சென்று விடுகிறார்கள் என்று. இது நோர்வேயில் மக்களிடம் கதைச்சறிந்த விடயம். அதேபோல்.. மிகவும் கிறிஸ்தவ கலாசாரத்தில் பற்றுள்ள நோர்வே மக்கள் ஒருபால் சேர்க்கை அதிகரிப்பு குறித்தும் மிகுந்த கவலை கொண்டுள்ளனர். சாதாரண மக்களின் கருத்துக்களில் இவை தொணிக்கும். அதற்கு முதலில் நோர்வே மக்களோடு பழகனும். தமிழ் கடையிலும்.. பாக்கி கடையிலும்.. சமான் வாங்கிறதும்.. சமைக்கிறதும்.. சாப்பிடுறதும்.. பேர்த்டே பார்ட்டி செய்யுறதும்.. ஏதோ வேலைக்கு போறதும்.. வாறதும் என்ற வாழ்க்கையில்.. இவை தெரிய வர வாய்ப்புக் குறைவு. மேலும்.. மேற்குறிப்பிட்ட சம்பவத்தில்.. கொலைக்கான காரணம் என்ன என்பது யாருக்கும் தெரியாது. ஆனால்.. நோர்வேயில் உள்ள தமிழ் பெற்றோர் தங்கள் பிள்ளைகள்.. அதிகரித்துவரும்.. ஒருபாலினச் சேர்க்கைக்குள் இழுபட்டு விடுவார்களோ என்ற அச்சம் கொண்டிருப்பதை.. பொதுவாக அவதானிக்கலாம். இதனை நோர்வே மட்டுமல்ல.. பிற மேற்குலக நாடுகளிலும் காணலாம். ஆனால்.. நோர்வேயில்.. இந்தக் கவலை முன்னரை விட இப்போ அதிகரித்திருப்பது தெரிகிறது. அந்த வகையில்.. தான்.. அதுவும் ஒரு காரணமாக இருக்கலாம்.. என்று சொல்லப்பட்டிருக்கே தவிர.. வேறு எதையும் புனையும் நோக்கம் இங்கில்லை. முதலில் கருத்தை செய்தியோடு சரிவர பொருந்தி படித்து விளங்கத் தெரிய வேண்டும். அதைவிடுத்து வெறுமனவே குற்றம் சாட்டிச் செல்வது பொருத்தமானதல்ல. மேலும் சிலர் அவர்கள் பார்வையை மாற்றத் தயாரில்லை. தாங்கள் நெடுக்ஸை நோக்கி உருவகித்து வைத்திருக்கும்.. விம்பத்திற்கு லைக் வெறுப்பு கருத்து எழுதிச் செல்கிறார்கள். அவர்களின் கருத்தை.. செயல்களைக் கண்டுகொள்வதே இல்லை.1 point- இலங்கையில் சோழர் ஆட்சிக்குப் பிறகு மீண்டும் பிரமாண்ட ஜல்லிக்கட்டு - 57 வயதிலும் காளை அடக்கும் வீரர்
1 pointஇலங்கையில் ஈழத்தமிழர் பிரச்சனைகள் உலகிற்கு பிரபலமாவதற்கு முன்னரேயே தமிழர் பகுதிகள் இந்தியாவின் ஒரு மாநிலம் போலவே இருந்துள்ளது. பாட புத்தகங்கள் முதல் தெரு சிலைகள் ஈறாக உணவு,ஆடை அலங்காரம்,இசை நடனம் என சொல்லிக்கொண்டே போகலாம். ஏன் கட்டும் கோவணம் கூட.....😂1 point- கருத்துக்களம் : பிரச்சனைகளும் தீர்வுகளும்
சில வேளைகளில் வேலை செய்யாது. அந்த வகையில்.. Other Media (you can see it at the right bottom corner of text box where you type your message to post)---> Insert image from URL ---> copy and paste image link address---> click insert into post இப்படி செய்தால் வேலை செய்யும். நான் நினைக்கிறேன் சில ஊடகங்களில் இருந்து நேரடியாக வெட்டி ஒட்ட அனுமதிக்கினம் இல்லை.1 point- கருத்துக்களம் : பிரச்சனைகளும் தீர்வுகளும்
இப்போது காணொளி தோன்றுகின்றது. நன்றி! யூரியூப்பில் இணைப்பு முகவரி எடுக்கும்போது முன்பு நகல் செய்தேன். இப்போது வட்சப் பகிர்வு இணைப்பை சொடுக்கி அதை இங்கு இணைக்கும் போது காணொளி தோன்றுகின்றது. முதலாவது முறையில் முகவரி சுருக்கப்பட்டு உள்ளதோ தெரியாது.1 point- கருத்து படங்கள்
1 point1 point- வடக்கில் உயர்பாதுகாப்பு வலயங்களுக்குள் இருக்கும் ஆலயங்களின் பிரச்சினைகளுக்கு, விரைவில் தீர்வு!
1 pointவடக்கில் உயர்பாதுகாப்பு வலயங்களுக்குள் இருக்கும் ஆலயங்களின் பிரச்சினைகளுக்கு, விரைவில் தீர்வு! வடக்கில் உயர்பாதுகாப்பு வலயங்களுக்குள் இருக்கும் கோவில்கள் மற்றும் தேவாலயங்களின் பிரச்சினைகளுக்கு விரைவில் தீர்வுகள் வழங்கப்படும் எனவும், அந்த மத ஸ்தலங்களை மீளமைக்க நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். யாழ்.மாவட்ட செயலகத்தில் நேற்றைய தினம் சனிக்கிழமை மத தலைவர்களுடனான சந்திப்பின் போதே அவ்வாறு தெரிவித்தார். பொருளாதார அபிவிருத்திக்கு மத நல்லிணக்கம் மிகவும் முக்கியமானது. வடக்கில் யுத்தத்தினால் இழந்த வருமானத்தை வடக்கிற்கு மீள வழங்குவதற்கான அபிவிருத்தி வேலைத்திட்டங்களை துரிதப்படுத்த உள்ளது. அதற்கு மதத் தலைவர்கள் ஆற்றக்கூடிய பணிகள் பாரியதாக இருக்கும். அனைத்து மதத் தலைவர்களும் நல்லூர் ஆலய பொறுப்பாளர்களும் விரும்பினால் நல்லூர் ஆலயத்தை விட பெரிய ஆலயத்தை அமைக்க முடியும். கிறிஸ்தவ தேவாலயங்களில் நிலவும் பிரச்சினைகள் தொடர்பில் மேலதிக நடவடிக்கை எடுக்கப்படும். குறிப்பாக மடு தேவாலயத்தில் நிலவும் பிரச்சினைகளுக்கு விரைவில் தீர்வு காணப்படும். யுத்த காலத்தில் முஸ்லிம் மக்கள் இந்தப் பிரதேசங்களை விட்டு வெளியேறியதாகவும், அவர்கள் மீள்குடியேறுவதற்கு தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளது. இனம் மற்றும் மதம் என்ற அடிப்படையில் பிளவுபட வேண்டிய அவசியமில்லை. அனைத்து மக்களினதும் உரிமைகளைப் பெற்றுக் கொண்டு ஒரு நாடாக முன்னோக்கிச் செல்ல வேண்டும். நாட்டின் சமய மற்றும் கலாசார விழுமியங்களை முன்வைத்து நாட்டின் பொருளாதாரத்தை கட்டியெழுப்ப முடியும் என தெரிவித்தார். https://athavannews.com/2024/13651391 point- இலங்கையில் சோழர் ஆட்சிக்குப் பிறகு மீண்டும் பிரமாண்ட ஜல்லிக்கட்டு - 57 வயதிலும் காளை அடக்கும் வீரர்
1 pointகிரிக்கெட் கால்பந்து நானும் விளையாடுவேன், என்னுடன் வேலைபார்க்கும் வேறு இனத்தவரும் விளையாடுவார்கள், ஈழதமிழர்களும் விளையாடுவார்கள். ஆனால் இந்த மாட்டோடு சண்டை போடுவதை இலங்கை தமிழர்களிடம் திணிப்பதற்கு ஒடுக்கபட்ட ஏழ்மையான ஈழதமிழர்களை தேடிபிடித்து மாட்டோடு சண்டை போட வைக்க வேண்டும் 😟மேற்குலக நாடுகளில் வாழ்கின்ற தமிழர்கள் இலங்கைக்கு வந்து மாட்டோடு ஒருபோதும் சண்டைபோட போவது இல்லை. இந்திய தமிழக ஜல்லிக்கட்டு பாதுகாப்பு நலன்புரி சங்கம், இலங்கையின் சுற்றுலா அதிகார சபை, ஆளுநர் செந்தில் தொண்டமான் இந்த பணியை செவ்வனே செய்வார்கள்.1 point- இலங்கையில் சோழர் ஆட்சிக்குப் பிறகு மீண்டும் பிரமாண்ட ஜல்லிக்கட்டு - 57 வயதிலும் காளை அடக்கும் வீரர்
1 pointஇலங்கை தமிழர்கள் சீரழிந்து போகட்டும் என்று இந்த நிகழ்வை நடத்த தொடங்கியுள்ளார்கள்.1 point- ஊருலா
1 pointசிரிக்கும் போது சூத்தையைக் கண்டுட்டாரோ? மினி ஏஜென்ட் போல இருக்கு. கொஞ்ச சனம் இருக்க போகுது. கொஞ்ச சனம் இருக்கிறவையை பார்க்க போகுது. அதுவும் குடையோடு இருந்தால் கண்ணாலே ஸ்கான் பண்ணி விடுவார்கள்.1 point- ஊருலா
1 pointஇது உங்களுக்கு மருந்து தந்த ஆயுள்வேத டொக்ரருக்கும் தெரியாது😂! (மீண்டும் கண்டது மகிழ்ச்சி!)1 point- இரசித்த.... புகைப்படங்கள்.
1 point1 point- ஊருலா
1 pointகாலையில் பாண் வாங்குவதற்காக மணியனும் நானும் பேக்கரிக்குப் போயிருந்தோம். அங்கே ஒரு சிறிய கூட்டம் வரிசை கட்டி இருந்ததால் மணியன் பாண் வாங்கி வரும் வரை நான் ஓரமாக ஒதுங்கி நின்றேன். பிளாஸ்ரிக் பையில் பாணை வாங்கிக் கொண்டு ஒரு புன் சிரிப்போடு வந்த மணியன், “உனக்கு பல்லெல்லாம் ஓகேதானே?” என்று என்னைக் கேட்டான். அவன் அப்படி அதுவும் காலையிலேயே என்னைக் கேட்டது ஏன் என்று புரியாமல் விழித்து நின்ற எனக்கு, அவன் தொடர்ந்து சொல்லும் போதுதான் புரிந்தது. “எனக்குப் பின்னாலே மூண்டாவதா நின்றாரே, அவர் ஒரு டென்ரிஸ்ட். ஊர் வல்வெட்டித்துறை. வெள்ளவத்தையிலைதான் அவரின்ரை டிஸ்பென்சரி இருக்கு. நான் அவரிட்டைத்தான் பல்லைக் காட்டுறனான். எனக்கு முன் பல்லிலை ஒரு ‘ஈவு’ இருந்ததெல்லோ! அந்த இடைவெளியை மறைச்சவர் இவர்தான்” என்று தன்னுடைய பல்லைக் காட்டிச் சிரித்தான் மணியன். கதைத்துக் கொண்டிருக்கும் போதே பல் வைத்தியர் பாணுடன் எங்கள் பக்கத்தில் வந்து நின்றார். “எப்பிடி, சுகமா? கனகாலமா அந்தப் பக்கம் காணேல்லே?” “ ஓம்..ஓம். ஒருக்கால் வரத்தான் வேணும். இவர் என்னுடைய பழைய சினேகிதன். யேர்மனியிலை இருக்கிறார்” மணியன் என்னை அவருக்கு அறிமுகம் செய்து வைத்தான். “அப்பிடியே! நல்லது. நாளைக்கு மகள் நியூசிலாந்திலை இருந்து வாறா. எயார் போர்ட்டுக்குப் போயிடுவன். வாறதெண்டால் செவ்வாய், புதனிலை வாங்கோ” சொல்லிவிட்டு, சிரித்து விடை பெற்றார். “டென்ரிஸ்ரட்டை போற எண்ணம் இருக்கோ? போறதெண்டால் சொல்லு” “ டென்ரிஸ்ற் சிரிக்கக்க பாத்தன். மேல் பல் வரிசையில் இடது, வலது பக்கங்களில் ஒன்றிரண்டு பல்லுகளைக் காணேல்லை. முதலிலே அவர் தன்ரை பல்லைக் கட்டட்டும். பிறகு பாப்பம்” என்று மணியனுக்குச்சொன்னேன். “சரி உன் இஷ்டம். இங்கை எண்டால் செலவு குறைவு” என்று மணியன் சொல்ல, “பல்லை விடு, பிறகு பாப்பம்.” என்று சொல்லிவிட்டு கதையை வேறு பக்கம் திருப்பினேன். “உன்னைக் கேக்கோணும் எண்டு நினைச்சனான். இப்ப சிறீலங்காவிலை முள் முருங்கை முற்றா அழிஞ்சு போச்சு எண்டு சொல்லுறாங்களே உண்மையோ?” மணியனிடம் இருந்து பதில் வரவில்லை. வீட்டில் காரை நிறுத்தி விட்டு “வா” என்ற ஒற்றை வார்த்தையுடன் தன் வீட்டு முற்றத்துக்கு அழைத்துப் போனான். “பார். இதுதான் முள் முருங்கை. பழைய மரம் பெருத்து உயர்ந்து நிக்கிறதாலை உன்ரை கண்ணுக்குப் படேல்லை. முள் முருங்கை மட்டுமில்லை. பனையும் வெள்ளவத்தையிலை இருக்கு. நீ மேலை இருக்கக்கை பல்கணியிலை இருந்து பார் தெரியும்” என்று சொல்லிவிட்டு, “வா சாப்பிடுவம்” என்று வீட்டுக்குள் போனான். அடுத்தநாள் மணியனின் பிறந்தநாள். கோல்பேஸ் ஹொட்டலில் மனைவி, உறவினர்கள், நண்பர்களுடன் கொண்டாடினான். அன்றுதான் நான் அந்த ஹொட்டலுக்கு முதன் முதலாகப் போனேன். வெளிநாட்டுத் தலைகள் ஹொட்டலில் அதிகமாகத் தெரிந்தன. "விரும்பியதைச் சாப்பிடு" என்று என்னிடம் சொல்லிவிட்டு நண்பர்களுடன் தன் விருந்தை அனுபவித்தான். கோல் பேஸ் ஹொட்டலில் பாரம்பரியமாக ஒவ்வொரு வருடமும் நடக்கும் கிறிஸ்மஸ் கேக் நிகழ்ச்சி நடந்தது. கிறிஸ்மஸுக்கு ஒருமாதம் முன்பே பழங்களை மது பானங்களில் ஊற வைத்து, பின்னர் கேக் தயாரிப்பார்கள். என்னிடமும் ஒரு போத்தல் விஸ்கி தந்தார்கள். பழங்களில் ஊற்றி விட்டு வந்தேன்.1 point- கருத்து படங்கள்
1 point1 point- தேயும் ஈழத் தமிழ்மொழி
1 point- ஊருலா
1 point- இரசித்த.... புகைப்படங்கள்.
1 point1 point- Vijayakanth: தேமுதிக தலைவர் விஜயகாந்த் காலமானார்
நல்ல உள்ளம் படைத்த உண்மையான மனிதர் , ஆத்மா சாந்தியடையட்டும்1 point- பெயர் மாற்றங்கள்.
1 pointஒரு பெயர் எடுப்பது எவ்வளவு கடினம் தெரியுமா......அதுவும் யாழில் "குமாரசாமி" என்னும் பெயர் எவ்வளவு வீரத் தழும்புகள், நெஞ்சில் கருத்து வடுக்கள் எல்லாம் கொண்டது என உலகறியும்.....அப்படியான ஒன்றை எதுக்காக, ஏன் மாற்றவேண்டும்......கொஞ்சம் சிந்தித்து முடிவெடுக்கவும்......! முன்பு தமிழ்சிறியும் மாற்ற வெளிக்கிட்டு தடுக்கி விழுந்த இடத்தில் இப்போ நீங்கள்....வேண்டாம் கோபால்......!1 point- பெயர் மாற்றங்கள்.
1 pointதம்பி வெளிநாட்டில 65 முடிந்தா தான் பென்சனைப் பற்றி வாயே துறக்கலாம். அக்கா இனி டாக்ரர் மாரை எப்படியாம் கூப்பிடுவது?1 pointImportant Information
By using this site, you agree to our Terms of Use.
Navigation
Search
Configure browser push notifications
Chrome (Android)
- Tap the lock icon next to the address bar.
- Tap Permissions → Notifications.
- Adjust your preference.
Chrome (Desktop)
- Click the padlock icon in the address bar.
- Select Site settings.
- Find Notifications and adjust your preference.
Safari (iOS 16.4+)
- Ensure the site is installed via Add to Home Screen.
- Open Settings App → Notifications.
- Find your app name and adjust your preference.
Safari (macOS)
- Go to Safari → Preferences.
- Click the Websites tab.
- Select Notifications in the sidebar.
- Find this website and adjust your preference.
Edge (Android)
- Tap the lock icon next to the address bar.
- Tap Permissions.
- Find Notifications and adjust your preference.
Edge (Desktop)
- Click the padlock icon in the address bar.
- Click Permissions for this site.
- Find Notifications and adjust your preference.
Firefox (Android)
- Go to Settings → Site permissions.
- Tap Notifications.
- Find this site in the list and adjust your preference.
Firefox (Desktop)
- Open Firefox Settings.
- Search for Notifications.
- Find this site in the list and adjust your preference.
- பொருளாதார நெருக்கடி! மக்களின் வருமானத்தில் பெரும் வீழ்ச்சி !