Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Leaderboard

  1. Kavi arunasalam

    கருத்துக்கள உறவுகள்
    9
    Points
    2958
    Posts
  2. கிருபன்

    கருத்துக்கள உறவுகள்
    7
    Points
    38770
    Posts
  3. alvayan

    கருத்துக்கள உறவுகள்
    5
    Points
    5417
    Posts
  4. ஏராளன்

    கருத்துக்கள உறவுகள்
    4
    Points
    31999
    Posts

Popular Content

Showing content with the highest reputation on 01/12/24 in Posts

  1. யூலியன் கப்பெலி (Julian Cappelli)அவுஸ்திரேலியாவைச் சேர்ந்த ஒரு எழுத்தாளர். சிறுவர்களுக்கான புத்தகங்கள் எழுதுவதில் ஆர்வம் உள்ளவர். அவருடைய சிறுவர்களுக்கான இரண்டு புத்தகங்களுக்கு( The Missing cup cake, Block Party) நான் படங்களை வரைந்திருக்கிறேன். யூலியன் கப்பெலி ஒருதடவை ஒரு தமிழ்க் குடும்பத்தை சிட்னியில் சந்தித்த பொழுது, “பாயசம் வைக்க வேண்டும் பானையிலே அரிசி இல்லை…” என்று அங்கே சிறுவன் ஒருவன் பாடுவதைக் கேட்டு அந்தப் பாடல் பிடித்துப் போய் அதைப் பற்றி என்னிடம் கேட்டார். அந்தப் பாடலை இணையத்தில் தேடி எங்கோ ஒளிந்திருந்த பாடலைத் தேடி எடுத்து அதன் விளக்கத்தை அவரிடம் சொன்னேன். அதை வைத்து அவர் எழுதிய சிறுவர்களுக்கான பாடல் புத்தகம்தான் Oats and honey. நான் படம் வரைந்து அவரது மூன்றாவது புத்தகமாக Oats and honey கடந்த வருடம் மார்கழியில் வெளிவந்திருக்கிறது. புத்தகத்தின் இறுதியில் “பாயசம் வைக்க வேண்டும் பானையிலே அரிசி இல்லை…” என்ற பாடலை தமிழிலேயே அவர் பதிந்திருக்கிறார். அது மட்டுமல்லாமல் பாயாசம் செய்யும் முறையையும் ஆங்கிலத்தில் பதிவிட்டிருக்கிறார். புத்தகத்தின் முகப்பை யாழ் இணைய விம்பகத்தில் பதிவிட்ட கிருபனுக்கு எனது நன்றி.
  2. கடந்த மார்கழியில் மகள் குடும்பத்தை பார்க்க சன்பிரான்சிஸ்கோ போயிருந்தோம். வழமையை விட கூடுதலான மழையாக இருந்தது.கலிபோர்ணியா மழை இல்லாமல் தண்ணீர் இல்லாமல் அழியப் போகுது என்று தொலைக்காட்சி பத்திரிகை செய்திகள் பல மாதங்களாக சொல்லிக் கொண்டிருந்தார்கள். இங்கு கூடுதல் மழை பெய்தால் மண்சரிவு ஏற்பட்டு அதனால் உயிர்ச் சேதம் பொருள் சேதம் என்று பல அழிவுகளை சந்திக்க வேண்டும். கலிபோர்ணியாவின் புவியியல் அமைப்பே சற்று வித்தியாசமானது.சமசீரான நிலங்களைக் காண்பது மிகவும் அரிது.மலைப் பிரதேசங்களை கூடுதலாக உள்ளடக்கியதே இந்த மாநிலம். இந்த புது வருடத்துக்கு பனிமலையில் சறுக்கி விளையாடப் போகிறோம் என்று மகள் சொன்னா.மகளும் கணவரும் ஒவ்வொரு வருடமும் பனியில் சறுக்கி விளையாட போவார்கள்.நீங்களும் சறுக்கி விளையாட போறீங்களோ என்று எம்மையும் கேட்டா.வேண்டாம் வேண்டாம் நாங்கள் பிள்ளைகளை பார்க்கிறோம் நீங்கள் விளையாடிப் போட்டு வாங்கோ என்று மறுத்துவிட்டோம். அவர்கள் வருடாவருடம் Tahoe என்ற இடத்துக்கு பனியில் சறுக்கி விளையாட போவதால் அதற்கேற்ற உடுப்புகள்,தண்ணீர் போகாத சப்பாத்து ,கையுறை என்று எல்லாமே வைத்திருக்கிறார்கள்.இப்போ நாங்களும் சேர்ந்து கொண்டபடியால் எங்களுக்கும் குளிருக்கு உடைகளும் தண்ணீர் போகாத கையுறையும் வாங்கினார்கள்.பின் விபரீதம் தெரியாமல் சப்பாத்தை ஏன் வீண்காசு என்று மறுத்துவிட்டேன். இந்த உடுப்பு பார்வைக்கு சாதாரணமாக இருந்தாலும் மிகவும் பாரமானதும் தடிப்பம் கூடியதும் ஆகும்.எவ்வளவு குளிரிலும் நம்பி போட்டுக் கொண்டு போகலாம். மூன்று நாள் கொட்டாட்டம் என்று புதுவருடத்துக்கு முதல்முதல் நாள் பெட்டி படுக்கைகளுடன் ஏற்கனவே பதிவு செய்த கொட்டேலை நோக்கி பயணம் தொடங்கினோம்.மகளும் கணவரும் சகலதையும் பொறுப்பெடுத்து செய்ததால் நான் எங்கு போகிறோம் காலநிலை என்ன எதுவுமே பார்க்கவில்லை.வழமையில் இப்படியான பயணங்கள் என்றால் அதுவும் குழந்தைகளுடன் போவதென்றால் போகிற வழியில் இருந்து நாங்கள் போய் நின்று திரும்ப வரும்வரை காலநிலை பாதுகாப்பு எங்கெங்கே வாகனத்துக்கு எரிபொருள் நிரப்ப வேண்டும் என்று அட்டவணையே போட்டுவிடுவேன். இந்த தடவை அப்படி எதுவும் செய்யாததன் விளைவை பின்னர் அனுபவிக்க நேரும்போது தான் உணர்ந்தேன். பனி பொழியும்.
  3. வடக்கின் அடையாளமாக றீ(ச்)ஷா சுற்றுலாத்தலம் மாறிவருகிறது. இங்கு பலதரப்பட்ட பொழுதுபோக்கு அம்சங்கள் இருப்பதோடு, வாழ்வை முன்னேற்றும் வகையிலான சிறுகைத்தொழில் செயற்பாடுகளும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. இயக்கச்சியில் அமைந்திருக்கும் இந்த பண்ணையானது, இலங்கையிலுள்ள சுற்றுலா பயணிகளின் கவனத்தை ஈர்த்துள்ளதுள்ளது. பல அனுபவங்களை கொடுக்கும் றீ(ச்)ஷாவில் பசுமை பண்ணை கால்நடை வளர்ப்பு, விவசாய பயிர்செய்கை மற்றும் காளான் வளர்ப்பு போன்றவையும் சிறப்பாக பேணப்பட்டு வருகின்றன. இவ்வாறு ஒரே சுற்றுவட்டத்தில் பல்வேறு பார்வைத்தளங்களை கொண்டுள்ள இந்த றீ(ச்)ஷா பண்ணை குறிப்பாக வெளிநாட்டு சுற்றுலா பயணிகளையும் ஈர்த்துள்ளது. https://tamilwin.com/article/most-tourist-arrive-best-place-reecha-world-1705067294
  4. இதன் இயக்குனர் பாஸ்கரனை உண்மையிலயே பாராட்ட வேண்டும்...
  5. இன்னொரு விடயத்தையும் அவதானிக்கலாம்: புலமைப் பரீட்சை தொடங்கி உயர்தர பரீட்சையில் உயர்ந்த பெறுபேறு பெற்ற மாணவர்களின் புகைப்படங்களைப் போட்டு பாடசாலைகளும் தனியார் வகுப்புப் நிறுவனங்களும் தமக்கான விளம்பரத்தைத் தேடிக் கொள்கிறார்கள். பரீட்சைப் பெறுபேறு வரும் காலங்களில் ஊரில் நின்றால் பத்திரிகைகளின் பெரும் பகுதியை இந்தப் பாராட்டு விளம்பரங்கள் நிரப்பிவிடும். முன்பை விட இந்த மாதிரியான போக்கு சற்றுக் கூடிவிட்டது எனலாம். பரீட்சையில் சித்தியடையாத மாணவர்களின் உளவியலை ஒருவருமே சிந்திப்பதில்லை. இந்த நிலை முன்பும் சரி இப்பொழுதும் சரி மாறவேயில்லை என்பதுதான் உண்மை.
  6. தமிழ்க்கடையளிலை விக்கிதோ? கேட்டதாலை குமாரசாமிக்கு சுகர் வருத்தம் இருக்கெண்டு நினைக்கப்படாது சிறித்தம்பி 😂
  7. மேட்டிமைவாதமா? jeyamohanDecember 26, 2023 அன்புள்ள ஜெ உங்களைப் பற்றிப் பேசும்போதெல்லாம் அடிக்கடி சமூகவலைத்தளங்களில் பயன்படுத்தப்படும் சொல் ’மேட்டிமைவாதம்’ என்பது. அதை நீங்கள் அறிந்திருப்பீர்கள். உண்மையில் என்னைப்போன்ற சாமானியர்களுக்கே இந்தப்பிரச்சினை உள்ளது. சமூகத்தையோ அல்லது சுற்றியிருக்கும் நண்பர்களையோ எதாவது குறைசொன்னால் உடனே மேட்டிமைவாதம் என்கிறார்கள். வரும் ஜனவரி 1 அன்று மெரினாவில் குடித்துவிட்டு பைக் ஓட்டி கூச்சல்போட திட்டம்போட்டு பட்ஜெட் போடுகிறார்கள். அது ஒரு வகை கேனத்தனம் என்று சொன்னால் உடனே மேட்டிமைவாதம் என்று சொல்லிவிடுகிறார்கள். இதைச் சொல்பவர்கள் ஒன்றரை லட்சம் ரூ கொடுத்து ஐஃபோன் வாங்குபவர்கள். முப்பதாயிரம் ரூபாய்க்கு ஷூ வாங்குபவர்கள். ஆனால் ஒரு புத்தகத்தை கையில் வைத்திருந்தால் மேட்டிமைவாதம் என்கிறார்கள். ஆலோசனை சொல்ல வருகிறார்கள். இவர்களைப்பற்றி உங்களுக்குச் சலிப்பாக இல்லையா? பிரதீப்ராஜ் அன்புள்ள பிரதீப், அண்மையில் பலபேர் இதைச்சுட்டி ‘ஆலோசனைகள்’ ‘வழிகாட்டுதல்கள்’ எழுதியிருந்தனர். இங்கே சமூகவலைத்தளங்களில் பேசப்படும் ஒவ்வொன்றும் நான் அவர்களைப் பற்றி என்ன சொல்கிறேனோ அதற்கான நேரடியான சான்றுகள். இலக்கியம், கலை என்பது குறித்த எந்த அறிதலுமற்ற ஒரு சூழல் இங்கே இருப்பதைத்தான் நான் சுட்டிக்காட்டுகிறேன். அவற்றின் இடம் பற்றி, இலக்கியவாதிகள் அல்லது கலைஞர்களின் வாழ்க்கை பற்றி அடிப்படைப் புரிதல்கூட இல்லாத பாமரத்தனம். பாமரர்களாக இருக்கிறோம் என்பதுகூட தெரியாது, பாமரராக இருப்பதில் பெருமையும் உள்ளது. அந்த பாமரத்தனத்தையே எதிர்வினைகளாக எழுதிக்கொண்டிருக்கிறார்கள். நான் எதையும் நிரூபிக்கவே வேண்டியதில்லை. எழுதினால்போதும், நம் பொதுப்புத்தியினரின் எதிர்வினைகளே நான் சொன்னவற்றுக்கான நிரூபணங்களாக எழுந்து வரும். அண்மையில் சாகித்ய அக்காதமி விருது குறித்து ஒரு பேச்சு உருவானது. அதில் மிகப்பெரும்பாலானவர்கள் எழுதியிருப்பதைக் கவனியுங்கள். ‘வெறும் ரெண்டு லட்சம் ரூபாய். அதுக்கு இவ்ளவு சண்டை’ இதுதான் பாமரத்தனம் என்பது. இவர்களுக்கு நோபல் பரிசுகூட அதிலுள்ள தொகை மட்டுமே. இவர்களுக்கு இவ்வுலகில் தெரிந்த ஒரே ‘மதிப்பு’ என்பது பணம், அதன் விளைவான அதிகாரம் மட்டுமே. இப்படி பேசுபவர்களில் பலர் நம் சூழலில் அளிக்கப்படும் ‘உயர்’கல்வி கற்றவர்கள். பலர் பொறுப்பான பணிகளில் இருப்பவர்கள். இலக்கியம் வாசிக்கும் நாம் இவர்களைத்தான் எதிர்கொள்கிறோம். இந்தப் புரிதல் நம்மிடம் இருக்கவேண்டும். (சுந்தர ராமசாமி எழுதினார். மேரி க்யூரி நோபல் பரிசு பெற்றபோது ‘என்ன பிரைஸ் வாங்கினா என்ன, அறுத்துக்கட்டுற சாதிதானே?’ என்று ஓர் ஐயர் சொன்னாராம். அந்தக்கால பொதுப்புத்தி. இப்போது பேசும் விதம் மட்டுமே மாறியிருக்கிறது. மனநிலை அதேதான்) இச்சூழலை வேறு எப்படி எதிர்கொள்ளமுடியும்? அவர்களுக்கு கலையிலக்கியம், சிந்தனை, தத்துவம் எதுவும் எளியமுறையில்கூட அறிமுகமில்லை. கோடிக்கணக்கில் செலவிடப்பட்டு இங்கே பிரச்சாரம் செய்யப்படும் மூன்று விஷயங்கள் மட்டுமே அவர்கள் அறிந்தவை. கட்சியரசியல், நுகர்வுப்பொருட்கள் , கேளிக்கை. அவை அவர்கள் அறிந்துகொண்டவை அல்ல, அவர்களின் மூளைக்குள் திணிக்கப்பட்டவை. வேறு எதையும் அறியும் ஆர்வமோ, அறிவுத்திறனோ இல்லை. அதேசமயம் அறியாமை அளிக்கும் அபாரமான தன்னம்பிக்கை உள்ளது. ஒரு பத்தி எழுதவோ ஒரு பக்கம் படிக்கவோ தெரியாதவர்கள் எழுத்தாளர்களுக்கு ஆலோசனை சொல்வதை, வழிகாட்டுவதை ஒவ்வொரு நாளும் பார்க்கிறோம். அந்த வெட்கமற்ற கீழ்மையை சந்திப்பது எப்படி என்பது கலையிலக்கியங்களில், அறிவியக்கத்தில் ஈடுபடுபவர்களுக்கு மிகப்பெரிய சவால். இதை என்னிடம் சொல்லாதவர்களே இல்லை. அண்மையில் ஒருவர், இசைத்துறையில் வளர்ந்து வருபவர், சொல்லிச்சொல்லி வருந்தினார். அவருடைய கனவு, முயற்சி எதுவுமே நம் சூழலுக்கு ஒரு பொருட்டல்ல. இசையென்றால் என்னவென்றே தெரியாதவர்கள் சொல்லும் ‘வாழ்க்கை ஆலோசனை’கள்தான் தன் மிகப்பெரிய பிரச்சினை என்றார். ‘யாரைப்பாத்தாலும் பயமா இருக்கு சார்’ என்றார். ’நான் ஜனங்களை ஃபேஸ் பண்றதே இல்லை…பொழைக்கிற வழியப்பாருன்னு ஆரம்பிச்சிருவாங்க’ நான் அவரிடம் ’ஜெயகாந்தன் சொன்னதுதான் ஒரே வழி’ என்றேன். ‘அற்பத்தனங்களை அகங்காரத்தால் எதிர்கொள்வது’ ஓவியர்கள், கலைஞர்கள் அனைவரும் இங்கே சந்திக்கும் சிக்கல் இது. இதே சிக்கல் இங்கே சமூகப்பணியாளர்களுக்கும் உண்டு. அவர்களுக்கு பிரச்சினையே இரண்டுவகை ஆலோசனைகள்தான். ஒன்று, சமூகப்பணியை எல்லாம் நிறுத்திவிட்டு எப்படி நல்ல உலகியல்வாழ்க்கையை வாழ்வது என்னும் ஆலோசனை. இரண்டு, சமூகப்பணி என்றால் என்னவென்றே தெரியாத கும்பல்கள் சமூகப்பணியை எப்படிச் செய்வது என்று அளிக்கும் ஆலோசனைகள். ஆச்சரியமென்னவென்றால், இங்கே ஏதேனும் துறையில் ஆய்வுசெய்பவர்களுக்கேகூட இன்று இப்பிரச்சினை உள்ளது. அறிவியலிலோ பிற துறைகளொலோ முனைவர் பட்டம் பெற முப்பது வயது கடந்துவிடும். ‘தம்பி என்ன செய்றீங்க? ஏதாவது வேலைக்கு போலாம்ல? இந்தக்காலத்திலே ரிசர்ச்சுக்கெல்லாம் என்ன மதிப்பு? நம்ம பையன் இப்பவே ஒரு லெச்சம் சம்பாரிக்கிறான்’ என்ற வார்த்தைதான் நாலாபக்கமிருந்தும் வரும். அந்த ’ஒரு லட்சம் வாங்கும் வெற்றிபெற்ற இளைஞன்’ ஆப்பிள் கணிப்பொறியை நோண்டியபடி ‘லைஃப்ல ஜாலியா இருக்கணும் புரோ’ என்பான். ஆய்வுமாணவன் கூனிக்குறுகி புன்னகைக்கவேண்டும். சமூகப்பணியாளர் இந்த ஆலோசனைக் கும்பலை ஓர் எளிய பணிவுப்பாவனையில் கடந்து செல்வார். கூடவே மனதுக்குள் சிரித்துக் கொள்வார். “ஆமாங்ணா..அப்டியே செய்றேங்ணா’ என அவர்கள் பவ்யமாகச் சொல்வதைக் கண்டு நானும் கூட நின்றே சிரித்திருக்கிறேன். ஆய்வு செய்பவர்கூட இவ்வகையில் இவர்களை கடந்து செல்லலாம். அறிவியக்கவாதி கடந்து செல்லமுடியாது. ஏனென்றால் அவன் உரையாடியே ஆகவேண்டியவன். அவன் என்ன நிலைபாடு எடுக்கவேண்டும்? அதைத்தான் நான் சொல்கிறேன், ’நிமிர்வு’. நிமிர்வினூடாக அன்றி இந்த கும்பலைச் சமாளிக்க முடியாது. நிமிர்வு சற்றுக் குறைந்தால்கூட உங்கள் தன்னம்பிக்கையை அழித்து , உங்களை மீளாச்சோர்வில் தள்ளி, செயலற்றவர்கள் ஆக்கிவிடுவார்கள். அல்லது உங்களை எரிச்சலூட்டி எரிச்சலூட்டி எதிர்மறை மனநிலை கொண்டவர்கள் ஆக்கிவிடுவார்கள். இரண்டுமே அறிவியக்கச் செயல்பாடுகளுக்கு எதிரான உளநிலைகள். இந்த அற்பர்களின் பாவனைகள் ஏராளமானவை. ‘சமூகத்துக்கு பயனுள்ள மக்கள் பிரச்சினைகளை எழுதணும் சார்’ என்பது தொடக்கம். (சமூகத்திற்கு மிகமிகப் பயனுள்ளவராக வாழ்ந்துகொண்டிருப்பவர் அவர் என்பது அவருடைய தோரணை). அந்தப்பேச்சு அப்படியே நீண்டால் ‘எழுதி என்ன ஆகப்போகுது? யார் சார் இப்பலாம் படிக்கிறாங்க? ஒரு நாலுபேருக்கு நல்லது செய்தா அதனாலே பிரயோசனம் உண்டு’ என்ற இடத்துக்கு வந்துசேரும். (அப்படி நாலுபேருக்கு அவர் என்ன செய்கிறார் என்று கேட்கக்கூடாது. அவர் செய்வது முகநூலில் அரசியல், சாதிச்சண்டை ’சவுண்டு’ விடுவதுதான்) அடுத்தது ‘எழுதுறது எல்லாம் சரிதான், நல்ல மனுசனா இருக்கணும் சார்’ (அதாவது அதைச் சொல்பவர் ஒரு அதிதூயோன்) அதன் முதிர்வு நிலை ‘யாரும் எதுவும் செஞ்சு ஒண்ணும் ஆகப்போறதில்லை. எல்லா பேரும் திருடன் சார்” . முத்தாய்ப்பு வரி “நாம நம்ம பொழைப்பப் பாப்பம்” ஆக, என்னைப்போல நீயும் வெந்ததைத் தின்று, விடியலில் அதை கழித்து, ஊடகம் ஊட்டுவதை மூளைக்குள் தேக்கி, அவற்றை பேஸ்புக்கிலும் வாட்ஸப்பிலும் ரீல்ஸிலும் அதைக் கழித்து வைத்து வாழ் என்பது சாராம்சம். இந்தக் கும்பலில் இருந்து முடிந்தவரை விலகி, தனித்து நிலைகொண்டாலொழிய இங்கே எந்தத்துறையிலும் எதையும் செய்துவிடமுடியாது. அதற்கான வழி என்பது தன்னைப் பற்றிய பெருமிதம். தன் செயல்பற்றிய நம்பிக்கை. தான் காலத்தின் குழந்தை என்னும் புரிதல். சமூகப்பெருக்கில் ஒருவனல்ல, அதை நடத்திச்செல்லும் சிலரில் ஒருவன் என்னும் தற்தெளிவு. அதையே நிமிர்வு என்று சொல்கிறேன். அதை ஏன் மேட்டிமைவாதம் என்கிறார்கள்? ஏனென்றால் அது இந்தப் பாமரர்களுக்கு எரிச்சலூட்டுகிறது. அதை அவர்களால் புரிந்துகொள்ள முடியவில்லை. அது அவர்களை விமர்சனமும் செய்கிறது. ஆகவே வேறு வழியே இல்லை. பாமரன் எதையேனும் சொல்லி அறிவியக்கத்தை, கலையை நிராகரித்தே ஆகவேண்டும். மூர்க்கமான நிராகரிப்பு, அல்லது கேலிதான் அவன் அறிந்த வழிகள். அதற்கு அவன் கண்டடையும் சில நிரந்தரமான வரிகள் உண்டு. பழைய ஆட்கள் ‘இதனால் பணலாபம் உண்டா’ என்பார்கள். அதே மனநிலை கொண்டவர்கள் சமூகவலைத்தளங்களில் ‘இதனாலே சமூகத்துக்கு என்ன பயன்?’ என்பார்கள். இரண்டும் ஒரே கேள்விதான். எந்த பாமரனுக்கும் ஒன்று உள்ளூரத் தெரியும், அவன் வாழ்க்கை சாதாரணமானது, சாதாரணமான அந்த வட்டத்தை விட்டு வெளியே செல்ல அவனுக்கு அறிவாற்றலோ துணிவோ இல்லை. ஆனால் அந்த பாமர வாழ்க்கை அவனுக்குச் சலிப்பையும் அளிக்கும். அவனுக்குத் தெரியும், அறிவியக்கத்திலோ கலையிலக்கியத்திலோ வாழ்பவர்களின் வாழ்க்கை பெரியது என்று. ஆகவேதான் அறிவியக்கவாதி அல்லது கலைஞன் பாமரனை தாழ்வுணர்ச்சி அடையச்செய்கிறான். அந்த தாழ்வுணர்ச்சியே எரிச்சலை மூட்டுகிறது பாமரனுக்கு. அறிவியக்கவாதி அல்லது கலைஞன் ஒன்றுமே செய்யவேண்டாம், சும்மா இருந்தாலே பாமரனை அவன் கூச்சம் கொள்ளச் செய்வான். ஆகவே பாமரனால் இகழப்படுவான். அதை அறிவியக்கவாதி அல்லது கலைஞன் எதிர்கொண்டே ஆகவேண்டும். நான் சொல்வது எழுத்தாளனையோ, கலைஞனையோ, ஆய்வாளனையோ, சமூகப்பணியாளனையோ மட்டும் அல்ல. நம் சூழலில் சாதாரணமாகப் புத்தகம் படிப்பவன், ஒரு நல்ல சினிமாவை தேடிப்பார்ப்பவன் கூட இதைச் சந்தித்தே ஆகவேண்டும். அதற்கான வழியே நிமிர்வு. ஆக, நான் மிகமிக திட்டவட்டமாகச் சொல்லிக்கொள்கிறேன். நான் முன்வைப்பது ஒருவகை மேட்டிமைவாதத்தையே. இன்று நம் சூழலில் ஓர் அறிவியக்கவாதி அல்லது கலைஞன் நிலைகொள்ள அந்த மேட்டிமையுணர்வு இன்றியமையாதது. இன்று தமிழில் எத்தனை வசைகளைப் பெற்றுக்கொண்டாலும் பாமரனை அவன் பாமரன் என்று சுட்டிக்காட்டியே ஆகவேண்டும். அது ஒரு சமூகக் கடமை. அதற்குப் பதிலாக ஜனநாயகம், மனிதசமத்துவம் என்றெல்லாம் பசப்புவார்கள் அதே பாமரர். ஜனநாயகமும் மனிதசமத்துவமும் உரிமைகளில் மட்டுமே. தகுதியில் அல்ல என்று சொல்லியாகவேண்டும். ஒரு சிறுபகுதியினரேனும் தாங்கள் பாமரர்களாகவே இந்த சூழலில் வளர்க்கப்பட்டிருக்கிறோம் என உணர்ந்தால், ஏதேனும் வகையில் மெலே செல்லமுயன்றால் அதுவே நம் சாதனை. சென்ற முப்பதாண்டுகளாக நான் திரும்பத் திரும்பச் சொல்லிவருவது கலையிலக்கியமும், சிந்தனையும் , சமூகப்பணியும்தான் ஒரு சூழலில் முதன்மையான செயல்பாடுகள் என. பிற பணிகள் அனைத்துக்கும் மேலாக அவற்றுக்கு ஓர் இடம் உண்டு என. அந்த மதிப்பும், அவற்றின் மீதான நம்பிக்கையும் கொண்ட சமூகங்களே வென்று வாழும். அந்த நம்பிக்கையும் மதிப்பும் நம் சமூகத்தில் இன்றில்லை, அவை உருவாக வேண்டும் என. நூற்றுக்கணக்கான கட்டுரைகளில் அதையே எழுதியிருக்கிறேன். இங்கே ஏதேனும் ஒரு தருணம் அமைந்தால் உடனடியாக அறிவியக்கவாதியை கும்பலாகக் கூடி வசைபாடி கும்மியடித்து மகிழ எத்தனைபேர் கூடுகிறார்கள் என்று பாருங்கள். எனக்கு எதிராக அப்படி கூடுவதற்கு என் நிமிர்வும், என் கருத்துக்களும் காரணமாக இருக்கலாம் என நினைக்கிறீர்கள் என்றால்; மிகப்பணிவான, அரசியலே பேசாத, அன்பையே முன்வைக்கும் அறிவியக்கவாதிகள்கூட தருணம் கிடைத்தால் இதே கும்பலால் இதே போல கும்பல்கூடி வசைபாடப்பட்டிருப்பதை எப்படி விளக்குவீர்கள்? இங்கே வசைபாடப்பட அறிவியக்கச் செயல்பாடு ஒன்றே போதும், வேறொன்றும் தேவையில்லை. நம் சூழலில் கலைஞனிடம், அல்லது அறிவியக்கவாதியிடம் ஒருபோதும் தாழ்வும் பணிவும் அமையலாகாது எனறு நான் வலியுறுத்துகிறேன். ஏனென்றால் இங்கே மிக எளிய உலகியல்வெற்றி அமைந்தவர்கள்கூட ஒருவகை மிதப்புத் தோரணையுடன் கலைஞனையும் அறிவியக்கவாதியையும் அணுகும் மனநிலை ஓங்கியுள்ளது. பரிவுடன் பார்ப்பார்கள். தட்டிக்கொடுப்பார்கள். தமிழின் தலைசிறந்த கவிஞனிடம் ‘ஏதாவது வேலைக்குப் போகலாம்ல?’ என்று கெத்தாகக் கேட்ட கார்ப்பரேட் குமாஸ்தாவை கண்டு உண்மையிலேயே குமட்டலெடுத்திருக்கிறது எனக்கு. இவர்கள் ஓர் எழுத்தாளன் வறுமையில் இருந்தால் உள்ளூர மகிழ்வார்கள். மனதுக்குள் நல்லவேளை நானெல்லாம் வேலைக்கு வந்துவிட்டேன் என நினைத்துக்கொண்டு வெளியே அடாடா என்பார்கள். கலைஞர்களும் எழுத்தாளர்களும் உலகியலில் துன்புற்று தோல்வியுற்றால் இவர்களுக்குள் ஒரு நிறைவு உருவாகிறது. கலைஞன் இவர்களுக்கு அளிக்கும் தாழ்வுணர்ச்சியின் எரிச்சல் சற்றுக் குளிர்கிறது. அந்த கலைஞனை அவன் உலகியலில் தோல்வியடைந்து இறக்கும்போது ஆகா அடடா என்று கொண்டாடுவார்கள். அப்படியே மறந்தும் விடுவார்கள். எண்ணிப்பாருங்கள், பிரான்ஸிஸ் கிருபா சாவின்போது இங்கே என்னென்ன பேசப்பட்டது என்று. அவரை சுட்டிக்காட்டி பிறரை வசைபாடினார்கள். ஆனால் இன்று அவரை இவர்கள் எவராவது பேசுகிறார்களா? பிரான்ஸிஸ் கிருபா இன்றும் நமக்குத்தான் முக்கியம். நாம்தான் அவருடைய கலைவெற்றியையும் கலைச்சிதறல்களையும் பற்றி பேசிக்கொண்டிருக்கிறோம். இவர்களுக்கு அவர் ஓர் அடையாளம். கலைஞன் எனும் நிலை ஒரு தோல்வி என்றும், தாங்கள் வென்றவர்கள் என்றும் சொல்லிக்கொள்ள ஒரு சான்று, அவ்வளவுதான். ‘அசல் கலைஞன்யா’ என்பார்கள். அடுத்த கணமே ‘குடிச்சே அழிஞ்சான்யா’ என்பார்கள். கலைஞன் என்றால் அழியவேண்டியயவன் என தங்களுக்கே சொல்லிக்கொள்ள அவன் ஒரு முகம், அதற்கப்பால் ஒன்றுமில்லை. இந்த பாமரர்களின் மனநிலைதான் ஒரு கலைஞன் உலகியலில் கொஞ்சம் வென்றால் உடனே வசைபாடச் செய்கிறது. அவனுடைய வெற்றியையோ நிமிர்வையோ கண்டால் எரிய வைக்கிறது. ஏனென்றால் அவன் இவர்கள் தாங்கள் அடைந்துவிட்டதாக எண்ணும் ஒரே வெற்றியைக்கூட இவர்களுக்கு அளிக்காமல் இவர்களைவிட மேலே அங்கும் சென்று நின்றிருக்கிறான். அதை அவர்களால் தாள முடிவதில்லை. அவர்களுக்கு முன் கலைஞனின் வெற்றியை, அவன் வாழ்வின் தீவிரத்தை நாம் முன்வைப்பதென்பது ஓர் அறிவார்ந்த அறைகூவல். உலகியலில் நாலுகாசு சேர்த்தவனின் வெற்று மேட்டிமைத்தனம் அல்ல இது. இங்கே ஒருவர் இன்னொருவரைச் சந்தித்ததுமே தன் பொருளியல்நிலையைத்தான் தன்னடையாளமாகச் சொல்கிறார் என்பதை கவனியுங்கள். தன் பணி, தன் தொடர்புகள் இரண்டையும் சொல்வார். அவற்றை அடைந்தவர் தன்னை ‘வெற்றியடைந்தவர்’ என நினைத்துக்கொள்கிறார். அதை வெற்றி என ஒருபோதும் கலைஞன், அறிவியக்கவாதி ஒப்புக்கொள்ளக்கூடாது. அந்தப் பாமரன் அப்படி நம்ப அனுமதிக்கக்கூடாது. அவன் முன் பணிவதென்பது அவன் அப்படி நம்ப வழியமைப்பதே. அது அறிவியக்கத்துக்கும் கலைக்கும் இழைக்கப்படும் துரோகம். ஆகவே சென்ற தலைமுறை எழுத்தாளர் சிலரின் மிகைப்பணிவு, தன்னிரக்கப் பாவனை ஆகியவற்றைக் கண்டும் எனக்கு அதே குமட்டல் உண்டு. அந்த உலகியலாளர் முன் நிமிர்ந்து நின்று ’நான் கலைஞன், நான் அறிவியக்கவாதி’ என்று சொல்லி கூடவே ’நான் இச்சமூகத்தில் மிக வெற்றிகரமானவன், உங்களை விட தீவிரமானதும் அதேசமயம் வெற்றிகரமானதுமான வாழ்க்கையை வாழ்பவன்’ என்று சொல்பவனே இன்றைய சூழலுக்குத் தேவையானவன். அவன் இந்தச் சமூகத்திற்கான மிகமிக அடிப்படையான ஒரு செய்தியைச் சொல்கிறான். இன்றைய அற்பர்களின் எல்லா வசைகளையும் வாங்கிக்கொண்டு அவன் நாளைய தலைமுறைக்காக அந்தப்பணியைச் செய்தாகவேண்டும் நாம் நீண்டகாலம் பஞ்சத்தில் உழன்ற ஒரு சமூகம். சென்ற தலைமுறை வரை உணவுக்கே போராடிய சமூகம். நம்மில் பெரும்பாலானவர்கள் கீழ்நடுத்தர, அடித்தளத்தில் இருந்து சென்ற ஒரு தலைமுறைக் காலத்தில் மேலெழுந்து வந்தவர்கள். இன்று நாம் அடிப்படை வறுமையை கடந்துவிட்டோம். சாப்பாட்டைப் பற்றி பதற்றப்படும் நிலையில் நம்மில் பெரும்பாலானவர்கள் இல்லை. இனி நாம் வெல்லவேண்டியது அறிவுத்தளத்தில், கலையில். இன்று தொழில், வணிகம் ஆகியவற்றுக்கு இணையாகவே கலையிலும் அறிவுத்தளத்திலும் நாம் முன்னகர்ந்தாகவேண்டும். நம் அடுத்த தலைமுறையினர் அதில் சாதித்தாகவேண்டும். அதற்கு நாம் நம் மூதாதையரின் பல உளநிலைகளை கடந்துசென்றாகவேண்டும். நம் மூதாதையர் நம்மிடம் அடிப்படையான ஒரு வருமானத்தில் நிலைகொள்ளும்படி கற்பித்தனர். ‘செட்டில்’ ஆவதைப்பற்றியே சொல்லிக்கொண்டிருந்தனர். நிலைகொண்டுவிட்டால் நிம்மதி அடைந்தனர். பொருளியல்நிலை தவிர எதற்குமே எந்த மதிப்பும் இல்லை என்று நமக்குக் கற்பித்தனர். பொருளியல் நிலையை அடைந்ததுமே முழுநிறைவு கொள்ள பயிற்றுவித்தனர். கலை, இலக்கியம், ஆய்வு என அறிவார்ந்த வாழ்க்கை அர்த்தமற்றது என்றும் அது மனிதனை தோல்வியடையச்செய்யும் என்றும் நம்பினர். இனியேனும் நாம் அந்த மனநிலையை கடந்தேயாகவேண்டும். இல்லையேல் நம் சமூகம் வெறும் நுகர்வுக்கூட்டமாகச் சுருங்கிவிடும். வெற்றுக்களியாட்டுகளில் வீணாகி அழியும். அதன் இறுதிநிலை என்பது ‘காஸினோ’க்கள்தான். இன்றே அதன் தடையங்களைக் காண்கிறோம். நீங்கள் சொல்லும் புத்தாண்டுக்கொண்டாட்டம் எல்லாம் அதன் வெளிப்பாடுகளே. பொருளியல்செயல்பாடு முக்கியம்தான். அதுவே மைய ஓட்டம் . ஆனால் சமூகத்தின் ஒரு பகுதியினரேனும் கலை, இலக்கியம், அறிவுச்செயல்பாடுகளில் ஈடுபடவேண்டும். மொத்தச் சமூகத்திற்கும் அச்செயல்பாடுகள் மேல் மதிப்பு உருவானாலொழிய அது நிகழாது. அந்த மதிப்பை அறிவுச்செயல்பாடுகளில், கலையிலக்கியங்களில் ஈடுபட்டுள்ள நாம் இன்று உருவாக்கவேண்டும். ஆகவே கலைஞனை, அறிவியக்கவாதியை பொதுச் சமூகம் குனிந்து பார்க்கலாகாது. நம் மேல் இரக்கமும் , ஊக்குவிப்பும் காட்டலாகாது. நம்மை நிமிர்ந்து பார்க்கவேண்டும். வியக்கவேண்டும். கலைஞனும் இலக்கியவாதியும் இரவலனாக இருந்த காலம் முடிந்துவிட்டது. அவன் கொடுப்பவனாக திகழ்ந்தாகவேண்டும். அவ்வாறு இலக்கியவாதி வெளிப்படும்போது உருவாகும் பொறாமை, கசப்பு, புகைச்சல், வசைபாடல் எல்லாம் நல்லதே. அவையெல்லாம்கூட பாமரர்களின் பாராட்டுதான். அவர்களின் பரிவும் கனிவும் மட்டும் உருவாகக்கூடாது. அவ்வாறு உருவானால் அடுத்த தலைமுறையில்கூட கலையிலக்கியம் மற்றும் அறிவுச்செயல்பாடுகள் மேல் சமூகமதிப்பு உருவாகாது. நான் நன்கு அறிந்த ஒன்றுண்டு. தமிழில் மிகப்புகழ்பெற்ற எழுத்தாளர்கள் பலர் தங்கள் இல்லத்தில் ஒரு புத்தகம்கூட வைத்துக்கொண்டதில்லை. தங்கள் குழந்தைகள் ஒரு புத்தகம்கூட வாசிக்க அனுமதித்ததில்லை. தங்கள் வாரிசுகள் முறையாகப் படித்து, ‘நல்ல வேலைக்கு’ சென்று விடவேண்டும் என்று அல்லும் பகலும் அப்படைப்பாளிகள் முயன்றனர். வாரிசுகள் அவ்வாறு வேலைக்குச் சென்றபின் அதை அப்படைப்பாளிகள் தங்கள் வெற்றியாக , வாழ்நாள் சாதனையாகச் சொல்லிக்கொண்டே இருப்பதை கண்டிருக்கிறேன். ‘நம்மைப்போல நம்ம பிள்ளை இருந்திரக்கூடாது’ என்று என்னிடம் சொன்ன பல எழுத்தாளர்களை நான் அறிவேன். அப்படியென்றால் அவர்களுக்கு உண்மையில் இலக்கியம், அறிவியக்கம் பற்றிய மதிப்புதான் என்ன? அவர்கள் சமூகத்துக்கு அளிக்கும் செய்திதான் என்ன? அவர்கள் இந்தச் சமூகத்தின் மொண்ணைத்தனத்தால் அவ்வளவு புண்பட்டார்கள் என கொள்வதா? நான் எதை நம்பினேனோ அதையே என் குடும்பத்திற்கு அளித்தேன். இலக்கியத்தை, அறிவுச்செயல்பாட்டை. அதுதான் பெருமைக்குரியது என எண்ணினேன். அதன் பொருட்டு எனக்கு வந்து குவிந்த அறிவுரைகள், குழந்தை வளர்ப்பு வழிமுறைகள் நான் எழுதிய நூல்களின் வரிகளை விட மிகுதி. ஆனால் என் வாரிசுகள் வேறெந்நிலைக்குச் சென்றாலும் ஏமாற்றமே அடைந்திருப்பேன். என் வாரிசுகளை இளமையிலேயே அதைச் சொல்லித்தான் வளர்த்தேன். இன்று அதன் பொருட்டு பெருமிதம் கொள்கிறேன். என் குடும்பமே அறிவுச்செயல்பாட்டில் ஈடுபாடுகொண்டிருப்பதை ஓர் இழிவென கேலி செய்து எழுதப்பட்ட நாலைந்து குறிப்புகள் என் கண்ணுக்குப் பட்டன. இந்த பாமரர் நடுவே நான் நிமிர்வை மட்டுமே முன்வைக்க முடியும் இல்லையா? அறிவியக்கச் செயல்பாடு, கலைச்செயல்பாடு உடனடியான வெற்றிகளை அளிப்பது அல்ல. அதற்கு நீண்டகாலத் தவம் தேவைப்படுகிறது. உறுதியான குறைந்தபட்ச வெற்றிக்கும் வாய்ப்பில்லை. அதில் எவ்வளவோ தற்செயல்கள் செயல்படுகின்றன. ஆய்வுகளுக்கும் இதுவே பொருந்தும். ஆனால் ஒரு சமூகத்தில் ஒரு சிறு பகுதியினரேனும் அவற்றுக்கு தங்கள் குழந்தைகளை துணிந்து அனுப்பவேண்டும். அவர்களுடன் நின்றிருக்கவேண்டும். சூழல் அளிக்கும் அழுத்தத்தை தாக்குப்பிடிக்க வேண்டும். படித்து வேலைக்குப்போய் சம்பாதிப்பது மட்டும் வெற்றி அல்ல என்றும் அறிவுச்செயல்பாடு மேலும் பெரிய வெற்றி என்று அவர்கள் நம்பவேண்டும். அவர்கள் பிறரிடம் அதைச் சொல்லவேண்டும். அந்த மனநிலையை இன்று நாம் உருவாக்கியாகவேண்டும். அண்மையில் மிகச்செல்வந்தரான ஓர் இளைஞரிடம் பேசினேன். அவர் ஏதாவது தொழில் செய்யவேண்டும் என குடும்பமும் சூழலும் சொல்வதாகச் சொன்னார். அவர் அறிவியக்க ஈடுபாடும், அதற்கான கூர்மையும் கொண்டவர். அவர் ஏன் சம்பாதிக்கவேண்டும் என்று நான் கேட்டேன். அவர் ஏன் தன் அகம் விழையும் அறிவுச்செயல்பாட்டில் ஈடுபடலாகாது? அவர் எவ்வளவு பெரும்பணிகளை ஆற்றமுடியும் . அவருக்கான நேரம் அவரிடமுள்ளது. அவருக்குத்தேவையான அடிப்படை முதலீடு கையிலுள்ளது. ஆனால் சம்பாதிக்காவிட்டால் சமூக மதிப்பு இருக்காது என குடும்பம் நினைப்பதாகச் சொன்னார். ’சம்பாதிப்பதை மட்டுமே மதிப்பெனக் கருதும் பாமரர்கள் எல்லா வற்கத்திலுமுண்டு. அவர்களின் மதிப்பை வைத்து என்ன செய்யப்போகிறீர்கள்?’ என்று நான் கேட்டேன். ‘தாகூர் என்ன சம்பாதித்தார்?’ என்று கேட்டபோது அவர் திகைத்து அமர்ந்திருந்தார். உலகமெங்கும் மகத்தான அறிவியக்கவாதிகள் பலர் செல்வந்தக் குடியில் பிறந்து அதையே நல்வாய்ப்பென பயன்படுத்திக்கொண்டவர்கள். நவீன ஐரோப்பாவை உருவாக்கியவர்களில் பெரும்பாலானவர்கள் அவர்களே. பதினாறாம் நூற்றாண்டு முதல் ஐரோப்பாவில் அறிவியக்கமே முதன்மையான சமூகச்செயல்பாடு என்ற பொதுமனநிலை உருவானது. எந்த அளவு செல்வமும் பதவியும் இருந்தாலும் ஒரு நல்லநூலை எழுதாவிட்டால், ஓர் அறிவியல்கண்டுபிடிப்பில் ஈடுபடாவிட்டால் எங்கும் மதிப்பில்லை என்னும் சூழல் முந்நூறண்டுக்காலம் ஐரோப்பாவில் இருந்தது. அதுவே ஐரோப்பிய மறுமலர்ச்சிக்கு வழிகோலியது. இன்றைய உலகம் ஐரோப்பிய மறுமலர்ச்சியால் உருவாகி வந்த ஒன்று. மிகச்சிலருக்கேனும் தங்கள் வாரிசுகள் கலைஞர்களாகவும் அறிஞர்களாகவும் ஆய்வாளர்களாகவும் ஆவது பெருமைக்குரியதே என நம்மால் காட்டமுடிந்தால் நம் வரலாற்றுப்பணியை ஆற்றுகிறோம். கலைஞர்களை, அறிஞர்களை, ஆய்வாளர்களை மதிப்புடன் நிமிர்ந்து பார்க்கும் ஒரு சூழலை அடுத்த தலைமுறையிலேலும் நாம் உருவாக்க முடிந்தால் நாம் வென்றோம். இன்று பாமரர்கள் பொறாமையால் எரிவதுகூட அதற்கான ஒரு தொடக்கமே. ஜெ https://www.jeyamohan.in/194617/
  8. கோவைக்காய் ஆதிகாலத்திலிருந்தே நீரிழிவு நோய் மருத்துவத்தில் பயன்படுத்தப்பட்டு வரும் காய்கறிகளில் ஒன்று. இது நீரிழிவு நோயாளிகளின் இரத்தத்தில் சேரும் சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்தும் என்று நிரூபிக்கப்பட்டுள்ளது. இந்த கோவைக்காய் தீவிரமில்லாத சர்க்கரை வியாதியை கட்டுப்படுத்தி நல்ல பலனை தரக்கூடியது. இந்த கோவைக்காயை நாம் அன்றாட உணவுகளில் அதிகளவு சேர்த்து கொண்டால் நம் உடலுக்கு தேவையான அளவுக்கு ஆரோக்கியத்தை பெற முடிவதோடு, பரம்பரை காரணமாக நீரிழிவு நோய் இருப்பவர்கள் கோவைக்காயை 30 வயது முதலே உணவில் சேர்த்துக் கொண்டால் நீரிழிவு நோய் வராமல் தடுக்க முடியும். அதுமட்டுமின்றி பச்சையாகவே கோவைக்காயை மென்று துப்பிவிட்டால் வாய்ப்புண் ஆறிவிடும். வயிற்றுப்புண் இருப்பவர்கள் வாரம் இரண்டு நாள் கோவைக்காயை சேர்த்துக்கலாம்.கோவைக்காய் பித்தம், இரத்தப் பெருக்கு, வாயு, வயிற்றில் உள்ள பூச்சி ஆகியவற்றுக்கெல்லாம் முடிவு கட்டும் நல்ல மருந்தாகும். (ஐ) https://newuthayan.com/article/சர்க்கரைநோயின்_எதிரியாகும்_ கோவைக்காய்!
  9. Published By: DIGITAL DESK 3 12 JAN, 2024 | 11:28 AM புத்தரின் மறு அவதாரம் என அழைக்கப்படும் சர்ச்சைக்குரிய நேபாள மதத்தலைவர் பாலியல் துஷ்பிரயோகம் செய்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டுள்ளார். 'குட்டிப் புத்தர்' என்று அழைக்கப்படும் ராம் பகதூர் போம்ஜன் என்ற மதத்தலைவரே சிறுமியை பாலியல் துஷ்பிரயோகம் செய்த வழக்கில் பல வருடங்களாக தலைமறைவாக இருந்த நிலையில் செவ்வாய்க்கிழமை மாலை கைது செய்யப்பட்டுள்ளார். நேபாளத்தின் தலைநகர் காத்மண்டுவின் தெற்கே உள்ள பாரா மாவட்டத்தில் உள்ள அவரது ஆசிரமத்தில் சீடராக வசித்து வந்த "சிறுமியை பாலியல் துஷ்பிரயோகம் செய்யப்பட்ட வழக்கில்" அவருக்கு எதிராக 2020 ஆம் ஆண்டு கைது செய்ய பிடியாணை பிறப்பிக்கப்பட்டது. இந்நிலையில், நேபாள பொலிஸாரின் மத்திய புலனாய்வு பிரிவினருக்கு கிடைத்த ரகசிய தகவலின் பேரில் காத்மண்டுவின் புறநகர்ப் பகுதியில் வீடு ஒன்றில் வசித்து வந்த 34 வயதான குறித்த மதத்தலைவரை கண்காணித்து வந்த நிலையில், அவர் தப்பியோட முயன்றபோது அவர் கைது செய்யப்பட்டுள்ளார். கைது செய்யப்பட்டபோது அவரிடமிருந்து ஒரு தொகை கைத்தொலைபேசிகள், ஐந்து மடிக்கணினிகள் மற்றும் டேப்லெட்டுகள் மற்றும் 200,000 அமெரிக்க டொலருக்கும் அதிகமான நேபாளி மற்றும் வெளிநாட்டு நாணயத்தாள்கள் கைப்பற்றப்பட்டுள்ளது. அவருக்கு உலகின் பல்வேறு பகுதிகளில் பக்தர்கள் உள்ளனர். அவர் பல மாதங்களாக தண்ணீர், உணவு இன்றி மரத்தின் அடியில் தியானம் செய்து மக்கள் மத்தியில் புகழ்பெற்றவராவார். 2005 காலக்கட்டத்தில் இவர் தலைப்பு செய்திகளில் இடம் பெற்றார். இதையடுத்து தான் அவருக்கான பக்தர்கள் என்பது அதிகரிக்க ஆரம்பித்தது. போம்ஜானின் "புத்த பையன்" என்ற பெயர் அவரது புகழுக்கு மேலும் உதவியது, அவர் காட்டில் இருந்தபோது அவரைப் பார்க்க நாடு முழுவதும் இருந்தும் அண்டை நாடான இந்தியாவிலிருந்தும் ஆயிரக்கணக்கானோர் பயணம் செய்தனர். போம்ஜன் தனது முதல் பிரசங்கத்தின் போது சுமார் 3,000 பேரைக் கவர்ந்ததன் மூலம் சுமார் இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு பிரசங்கம் செய்ய ஆரம்பித்தார் என அவரது இணையதளம் தெரிவிக்கிறது. பல்வேறு காலக்கட்டத்தில் போம்ஜானின் ஆசிரமத்தில் இருந்து காணாமல் போன சீடர்கள் குறித்து மேலதிக விசாரணைகள் மற்றும் தேடல்கள் நடத்தப்படுவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். https://www.virakesari.lk/article/173748
  10. Society of the snow (Netflix release) மனித இனத்துக்கு வேகமாக ஓடக் கூடிய கால்கள் இல்லை. பறப்பதற்கு சிறகுகள் இல்லை. ஏனைய விலங்குகளுடன் கைகளால் போரிட்டு வெல்ல நீண்ட நிகங்களோ அல்லது உறுதியான கைகளோ, உடலோ இல்லை. பழகாவிடின் நீந்தக் கூட முடியாது. பறவைகளைப் போல், இலகுவாக கூடு கட்ட முடியாது. அதிக குளிரையோ வெப்பத்தையோ தாங்கும் தோல் கூட இல்லை. காதின் கேட்கும் திறன் கூட மட்டுப்படுத்தப்பட்டது. இரவில் பார்க்க நல்ல வெளிச்சம் தேவை அதன் கண்களுக்கு. இயற்கையால் பல வழிகளில் வஞ்சிக்கப்பட்ட ஒரு உயிரினம் என்றால் அது மனித இனம் தான். அப்படி இருந்தும் ஏன் மனித இனம், மற்ற எல்லா உயிரினங்களை விட மேலாக நின்று ஆதிக்கம் செய்கின்றது இயற்கைக்கு சவால் விடுகின்றது என யோசித்துப் பார்த்தால், அது தன்னை தக்க வைக்க, உயிர்வாழ எந்த எல்லைக்கும் போகும் திறன் வாய்ந்தது என்பதுவும், இயற்கைக்கு சவால் விடுவதன் மூலமே தன்னை தக்கவைக்க முடிகின்றது எனவும் புரிந்து கொள்ள முடியும். இந்த அடிப்படை உண்மையை 1972 இல் அந்தீஸ் மலைத் தொடரில் இடம்பெற்ற விமான விபத்தில் தப்பி மனித இனம் வாழவே முடியாத கடும் குளிர் நிறைந்த பனி சிகரத்துக்குள் 70 நாட்களுக்கும் மேல் வாழ்ந்து உயிர் பிழைத்தவர்களின் வாழ்வு எமக்கு சொல்கின்றது. உண்பதுக்கு எதுவும் இன்றி, தம்முடன் பயணித்த சக நண்பர்களின் மற்றும் பயணிகளின் இறந்த உடல்களை வெட்டி உண்ணும் நிலை வரை அவர்கள் சென்று தம் உயிரை காப்பாற்றிக் கொள்கின்றனர். ஒரு கட்டத்தில் 4 தினங்களுக்கு மேல் பனிக்குவியலால் பல அடிகள் ஆழத்தில் புதைக்கப்பட்டு மீள்கின்றனர். அருகில் இருக்கும் சக நண்பர்களின் மரணங்களை நேரடியாகவே காண்கின்றனர். எந்த ஒரு உரினமும் வாழ முடியாத சூழலை தாக்குப் பிடித்து 16 பேர் தப்புகின்றனர். அவர்களை காப்பாற்றியது மனித இனத்துக்கு என்று இருக்கும் அந்த உயிர்பிழைத்தலுக்காக எந்த சவாலையும் எதிர் கொள்ளும் பண்புதான் (Survival). இவர்களின் உண்மைக் கதையை ஒட்டி Netflix இனால் எடுக்கப்பட்ட திரைப்படம் தான் Society of the snow. விபத்து நிகழ்ந்த இடத்துக்கே சென்று, அந்த கடும் குளிர் பிரதேசத்திலேயே செட் வைத்து, உண்மைக்கு மிக நெருக்கமாக சென்று இப்படத்தை எடுத்துள்ளனர். படம் ஆரம்பித்து, விமான விபத்து நிகழ்ந்த அந்த நிமிடத்தில் இருந்து முடிவு வரைக்கும் பார்ப்பவர்களை 'சில்லிட' வைக்கும் சினிமா இது. நேற்று இரவு இப் படத்தை பார்த்தேன். என் பிள்ளைகள் இருவருக்கும் 'கண்டிப்பாக பார்க்கவும்' என கேட்டுக் கொண்டுள்ளேன். முடிந்தால் நீங்களும் பாருங்கள்.
  11. வடக்கு கிழக்கு மக்கள் கடந்த முப்பது ஆண்டு போரால் கடுமையாக பாதிக்கப்பட்டவர்கள். இந்த நிலையில் பல்வேறு எதிர்பார்ப்புக்களுடன் இம் மக்கள் வாழ்ந்து வருகின்றனர். இடம்பெற்ற இனவழிப்புப் போரில் ஏற்பட்ட பாதிப்புக்களுக்கு நீதியை வலியுறுத்தும் வாழ்வும் போராட்டமாக வடக்கு கிழக்கு மக்கள் உள்ளனர். இந்த நிலையில் நாட்டின் ஜனாதிபதி விஜயம் மேற்கொள்ளுகின்ற போது தமது எதிர்பார்ப்புக்களை செவிசாய்க்க வேண்டும் என்று அம் மக்கள் எதிர்பார்ப்பது இயல்பானது. அண்மையில் வடக்கிற்கு ஜனாதிபதி ரணில் விஜயம் மேற்கொண்டுள்ள நிலையில் அது தமிழ் மக்களுக்கு எதிர்பார்ப்பை நிவர்த்தி செய்ததா? ஏமாற்றத்தை அளித்ததா என்று இப் பத்தி ஆராய விளைகின்றது. நான்கு நாள் பயணம் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க கடந்த சனவரி 04ஆம் திகதி வடக்கிற்கு தனது விஜயத்தை ஆரம்பித்திருந்தார். உலங்குவானூர்தி மூலம் வந்து யாழ் நகர பாடசாலை மைதானம் ஒன்றில் வந்திறங்கிய வேளை யாழ் நகரத்தின் இன்னொரு பக்கத்தில் மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டிருந்தார்கள். போராட்டத்தில் ஈடுபட்ட மக்களை காவல்துறையினர் தடுப்பு இட்டு தடுத்து வைத்திருந்ததுடன் சிலர் கைதும் செய்யப்பட்டுள்ளனர். இவ்வாறு ஜனாதிபதியின் வருகையின் போது மக்கள் தமது குரல்களை வெளிப்படுத்த முனைந்த போராட்டம் இடம்பெற்றது. சனவரி 4ஆம் திகதி வந்த ஜனாதிபதி சனவரி 7ஆம் திகதி வரை பல்வேறு சந்திப்புக்களில் ஈடுபட்டிருந்தார். இதன்போது யாழ் மாவட்ட செயலகத்தில் அரச அதிகாரிகள் மட்டத்திலான சந்திப்பு இடம்பெற்றிருந்தது. அத்துடன் பல்கலைக்கழக சமூகத்துடனும் அவர் சந்திப்பை மேற்கொண்டிருந்தார். இதை தவிர ஜனாதிபதியின் பயணத்தை முன்னிட்டு ஏற்பாடு செய்யப்பட்ட பல்வேறு சந்திப்புக்களும் இடம்பெற்றுள்ளன. இளைஞர்கள், யுவதிகளுடனான சந்திப்பும், ஐக்கிய தேசியக் கட்சி சார்ந்த சந்திப்பும் இடம்பெற்றது. தென்னிந்திய தொலைக்காட்சியில் பாடல் போட்டியில் வெற்றி பெற்ற சிறுமி கில்மிசாவையும் ஜனாதிபதி சந்தித்து செல்பி எடுத்துக்கொண்டார். இதுதானே மக்களின் பிரச்சினை தான் வடக்கிற்கு விஜயம் மேற்கொள்ளுகின்ற போதெல்லாம், வடக்கு மக்கள் காணாமல் ஆக்கப்பட்ட தமது உறவுகள் தொடர்பான பிரச்சினையையும் அரசியல் தீர்வையும் மாத்திரமே கோருகின்றனர் என்றும் இதனைத்தாண்டியும் பல பிரச்சினைகள் உள்ளன என்றும் அதனை ஆராயவே தான் விரும்புவதாகவும் இம்முறை விஜயத்தின் போது ஜனாதிபதி ரணில் கூறியுள்ளார். வடக்கு கிழக்கில் தமிழ் மக்கள் எதிர்கொள்ளும் பாரிய பிரச்சினையாக, தமிழ் மக்கள் அமைதி மற்றும் நிம்மதியை இழப்பதற்கு ஏதுவான பிரச்சினைகளாக இவைகளே உள்ள நிலையில் மக்கள் இதனைப் பற்றித்தானே எடுத்துரைப்பார்கள். இப்படி பாதிக்கப்பட்ட மக்கள் தெருவிலும் நகரங்களிலும் போராடி வருகின்றார்கள். இவர்களை சந்திக்காமல் அரச அதிகாரிகளை மாத்திரம் சந்திப்பதனால் என்ன பயன்? அதிலும் வடக்கு கிழக்கு இந்தப் பிரச்சினைகளால் இன்னமும் பாதிக்கப்பட்டு, உக்கிரமான போராட்டங்களை முன்னெடுக்கும் போது, இந்த மக்களை சந்திக்க தவறுவதும், இம் மக்களின் குரல்களை கேட்க மறுப்பதும் அர்த்தமுடைய செயலாக அல்லது பயன்தரும் செயலாக அமையுமா? அந்த வகையில் பாதிக்கப்பட்ட மக்களின் குரல்களை கேட்டு அதற்கு பதிலும் செயலும் அளிக்காத ஒரு பயணமாகவே ஜனாதிபதியின் பயணம் அமைந்தது. ஆடம்பர பயணம் நாடு பாரிய பொருளாதார பின்னடைவில் உள்ளது. அண்மையிலும் எரிபொருட்களின் விலை மீண்டும் உயர்த்தப்பட்டுள்ளது. தமிழர் தேச மக்கள் மாத்திரமின்றி தென்னிலங்கை மக்களும் வாழ வழியற்ற நிலையில் வெளிநாடுகளுக்கு தப்பி ஒடுகின்றனர். இந்த நிலையில் ஜனாதிபதியின் பயணம் ஆடம்பரப் பயணம் என்று தென்னிலங்கையை சேர்ந்த பாராளுமன்ற உறுப்பினர் ஒருவர் யாழ்ப்பாணத்தில் வைத்துக் கூறியுள்ளார். மக்கள் விடுதலை முன்னணியின் பாராளுமன்ற உறுப்பினர் விமர் ரட்ணாயக்க, ஜனாதிபதியின் பயணத்தை வெற்றுப் பயணம் என்று கூறியிருப்பது குறிப்பிடத்தக்க எதிர்வினையாகும். மேலும், காணி விடுவிப்பு, மீள்கட்டுமானம் காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கான தீர்வு, மற்றும் அரசியல் பிரச்சனைக்கான தீர்வு என தமிழ் மக்கள் பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து போராட்டம் நடத்தி வரும் நிலையில் வடக்கிற்கு வருகை தந்த அதிபர் ரணில் விக்ரமசிங்க ஒரு துண்டு காணியேனும் அந்த மக்களுக்கு விடுவித்துக் கொடுக்கவில்லை என்றும் ஜனாதிபதி, ஆடம்பரமாக வாகன தொடரணிகள் சகிதம் வருகை தந்து நான்கு நாட்கள் வடக்கில் முகாமிட்டமை மக்களின் பிரச்சனையை தீர்க்க அல்ல என்றும் விமல் ரட்ணாயக்க குறிப்பிட்டுள்ளார். ஏன் இந்தப் பயணம் அரசியல் தீர்வு குறித்து தனது கரிசனையை ஜனாதிபதி இப் பயணத்தின் போது வெளிப்படுத்தவில்லை என்ற ஆதங்கம் தமிழ் தலைவர்கள் மத்தியிலும் தமிழ் மக்கள் மத்தியிலும் உள்ளது. கடந்த காலத்தில் அரசியல் தீர்வொன்றை தனது ஆட்சியில் முன்வைப்பேன் என்றும் கடந்த காலத்தில் அது சாத்தியமாகவில்லை இம்முறை அதனை நிறைவேற்றுவேன் என்றும் ஜனாதிபதி ரணில் வாக்குறுதி அளித்திருந்தார். அண்மையில் தென்னிலங்கையில் ஒரு பாடசாலை நிகழ்வில் பேசிய போதும் பொருளாதார மேம்பாடு ஏற்பட வேண்டும் என்றால் அரசியல் தீர்வை முன்வைக்க வேண்டும் என்று ரணில் குறிப்பிட்டு இருந்தார். அத்துடன் வடக்கில் சிறந்த பொருளாதார வளம் காணப்படுகிறது என்ற கருத்தையும் ஜனாதிபதி கடந்த காலத்தில் வெளிப்படுத்தியுள்ளார். தற்போதைய பயணத்தின்போது பொருளாதார மேம்பாட்டை ஏற்படுத்துவதில்தான் அதிக கரிசனையை ஜனாதிபதி வெளிப்படுத்தியுள்ளார். தமிழ் தலைவர்கள் இந்த விடயத்தில் அரசுடன் இணைந்து பணியாற்ற வேண்டும் என்றும் இம்முறை பயணத்தில் தொடக்கத்தில் அவர் அழைப்பு விடுத்திருந்தார். ஆனால் அரசியல் தீர்வு காணும் பட்சத்தில் இலங்கையில் பொருளாதார மேம்பாடு இலகுவாக ஏற்படும் என்பதை ஜனாதிபதி ரணில் ஏற்றுக்கொள்ள வேண்டும். அதைவிடுத்து வடக்கின் பொருளாதாரத்தில் கண் வைத்துக் கொண்டு இத்தகைய விஜயங்களை மேற்கொள்ளுவது, இனப்பிரச்சினையை தீர்க்காமல், தமது இலக்கான பொருளாதார நெருக்கடியை தீர்க்க எடுக்கினற முனைப்பாகவே அமையும். ஆனால் இனப்பிரச்சினையை தீர்க்காமல் காலத்தை இழுத்தடிக்கும் ஒவ்வொரு நொடியும் இலங்கைத் தீவின் பொருளாதாரத்தை பின்னுக்கு தள்ளும். அதுவே நடந்தது. இனியும் நிலமை தொடர்ந்தால் அதுவே நடக்கும். -அலெக்ஸ் தமிழ்தேசியவாதி-
  12. போதமும் காணாத போதம் – 14 திருவாசகப்பிள்ளை மாமா அதிகாலையிலேயே வீட்டுக்கு வந்திருந்தார். அமிலம் வேகித் தோலுரிந்தது மாதிரி முகமிருந்தது. தீட்சை அணிந்த மேனியில் வாசனை கமழ்ந்தது. செந்தளிப்பும், புன்சிரிப்பும் உடைந்த மாமாவைப் பார்க்கவே பயமாகவிருந்தது. “நீ கதைச்சால் தான், அவன் விளங்கிக் கொள்ளுவான். மனசு மாறுவான்” என்று அம்மாவிடம் சொன்னார். குங்குமம் இயக்கத்தில் சேர்ந்துவிட்டானா! என்று வியந்தேன். ஊரை உலையில் போட்டு கஞ்சியாக குடித்துவிடும் நரியவன். அவனிடம் இனி மரியாதையாக நடக்கவேண்டுமேயென நினைத்து தலையிலடித்தேன். ஆனால் இயக்கத்துக்கு போனவனை மனசு மாற்றச்சொல்லி அம்மாவிடம் வந்து கேட்கும் மாமாவைப் பார்த்தால் கொஞ்சம் பரிதாபமாகவே இருந்தது. சொந்தச் சகோதரியாக இருந்தாலும் இவ்வளவு நம்பியிருக்க வேண்டாம். தன்னுடைய பிள்ளை இயக்கத்துக்கு போனதும் “பால்ராஜ் மாதிரி ஒரு சண்டைக்காரனோட போய் நில்லு. உனக்கு ரத்தம் கொடுத்தது நானில்லை, நிலம். இரத்தம் நிலத்தினது. என்றவள் அம்மா. மாமாவையும் அம்மாவையும் ஊடறுத்து என்னுடைய ஷெல்லை இறக்கினேன். அவன் இயக்கத்துக்கு போனால், அவனுக்கு அழிவில்லை. அங்கயிருக்கிற மிச்சப்பேரை நினைச்சுத்தான் எனக்கு கவலை” என்றேன். எடேய், அவன் இயக்கத்துக்கு போகேல்ல, யெகோவா சபையில சேர்ந்திட்டானாம்” என்று சொன்ன அம்மா சிரித்தாள். “என்ர தெய்வமே. இயக்கத்துக்கு இன்னும் நல்ல காலமிருக்கு” ஆறுதலடைந்தேன். மாமாவின் நெற்றியில் அழியாது காய்ந்திருந்த திருநீற்றை பிளந்தறுக்கும் ரகசியமாய் வேர்வை இறங்கியது. கொஞ்சம் நிமிர்ந்தமர்ந்து “அவனை நேற்றே வீட்டிலிருந்து வெளியேறுமாறு சொல்லியிட்டன்” என்ற மாமா எழுந்தார். “குங்குமம் இப்ப எங்கயிருக்கிறான்” என்று கேட்டேன். கைவிரித்து தெரியாதென்றார். மாலையில் யெகோவாவின் ராஜ்ஜியத்தை அறிவிக்கும் சபைக்குச் சென்றேன். கொய்யா மரத்தடியிலிருந்து பைபிளை வாசித்த குங்குமம் என்னைக் கண்டதும் பரபரப்படைந்து மூடி மறைத்தான். என்ன குற்றமிழைத்தான், ஏன் பதறுகிறான். சிறியவர்களாக இருந்தபோது காகிதத்தைச் சுருட்டி பீக்காட்டில் புகைத்த பீடிக்கு கூட அஞ்சாதவன் குங்குமம். என்னை அமரச் சொல்லி கதிரையை எடுத்துத் தந்தான். “பைபிள் என்ன சொல்லுகிறது” என்று எழுதப்பட்ட புத்தகமொன்றும் இருந்தது. காவற்கோபுரம் வண்ணமயமான சஞ்சிகை. ஒருமுறை விக்டர் பிரதரிடமிருந்து வாங்கிச் சென்றேன். ஏதேன் தோட்டத்தில் கனியுண்ணும் ஆதாமும் ஏவாளும் கண்சொருகி தித்திக்கும் கணத்தை வரைந்திருந்தார்கள். பாம்போ அதனை வேடிக்கை பார்த்தது. பாவத்தின் விளைவுகளை அறியாத மானுடரின் மூதாதையர்களை கையிலேந்தியபடி வீட்டுக்குள் சென்றேன். வாசலில் அமர்ந்திருந்த உண்ணி ஆச்சி, “கையில என்ன புத்தகமடா மோனே” என்று கேட்டாள். காவற்கோபுரம், பிரதரிட்ட வாங்கி வந்தனான் என்றேன். “பிரதரோ, அது ஆரடா?” புத்தகத்தை வந்து பார்த்தாள், உலக முடிவு எப்போது என்று எழுதப்பட்டிருந்தது. எடேய் சனியனே, உந்த வேதக்காரற்ற தரித்திரியத்தை வீட்டுக்குள் கொண்டு வந்து வைச்சிருக்கிறியே, உனக்கு பாவமாய் தெரியேல்லையோ. எடுத்து எரிச்சுப் போடுவன்” என்றாள். “விழிப்புடன் இருங்கள். ஏனென்றால் உங்களுக்கு அந்த நாளும் தெரியாது, அந்த நேரமும் தெரியாது” – மத்தேயு அதிகாரத்திலிருந்து அச்சிடப்பட்டிருந்த வாசகத்தை ஆச்சிக்கு முன்நின்று சத்தமாக வாசித்தேன். ஆச்சி கழுத்தில் கிடந்த உண்ணிகளை பிய்த்து எறிந்து வருகிற ரத்தத்தை விரல்களில் தொட்டுப் பார்த்தாள். உண்ணி ஆச்சி இருந்திருந்தால் குங்குமத்தை தோலுரித்திருப்பாள். இவனின் நல்ல காலத்துக்கு ஆச்சி இறைபதம் அடைந்திருந்தாள். நாங்கள் இருவரும் கதைத்துக் கொண்டிருந்தோம். அப்போதுதான் விக்டர் பிரதர் வந்து சேர்ந்தார். வணக்கம் சொன்னார், எழுந்து நின்று வணங்கினேன். அமரும்படி சைகை செய்தார். அம்மா சொன்னதைப் போலவே குங்குமத்தை வீட்டுக்கு அழைத்து வந்தேன். அன்றிரவு பைபிளும் கையுமாக இருந்தான். நீண்ட பிரார்த்தனையைப் போல ஒளிவீசும் குப்பி விளக்கில் வாசித்தான். நுளம்புக்கடி தாங்காது வலைக்குள் உறங்கினேன். விடியும் வரை பைபிளோடோயிருந்தான். தழும்பேறிய சிலுவையைப் போல என் மனத்துள் குங்குமம் உயர்ந்தான். ஏற்றுக்கொண்டதில் தீவிரமாகவிருப்பவன் மதிப்புடையவன். காலையில் ஒன்றாக காட்டுக்குப் போனோம். இரண்டு போராளிகள் சைக்கிளில் வீதியைக் குறுக்கறுத்துப் போயினர். காட்டில் கருமம் முடித்து அடிகழுவி எழுந்தோம். “நான் செய்தது பிழையில்லை. ஆனால் அப்பா நடந்து கொண்ட விதம் குரூரமானது. வேதத்துக்கு மாறினால் இவருக்கு என்ன பிரச்சனை” குங்குமம் பனிவிலக்கும் பூமியோடு கதகதப்பை உருவாக்கினான். “மச்சான், நீ விரும்புறது தான் உன்ர சமயம். தெய்வம். அதில எவரும் தலைநீட்டேலாது. அது அப்பாவா இருந்தாலும் பொருந்தும்” என்றேன். “இறுதி நாளில் உலகம் அழிந்து தேவனின் அரசு நிறுவப்படுகையில் திருவாசகப்பிள்ளை யெகோவாவை நம்புவார். அதுவரைக்கும் என்னை ஏசட்டும். நான் வீடு வீடாகச் சென்று ராஜ்ஜத்தை பிரச்சாரம் செய்யப் போறன்” என்றான். வீட்டுக்கு வந்தோம். இயக்கத்தின் பிரச்சார பிரிவுப் போராளிகள் மூவர் வந்து நின்றனர். மாலையில் எங்களுடைய கிராமத்தில் நடைபெறவிருக்கும் தெருநாடகமொன்றிற்கு வரும் கலைஞர்களை வீட்டில் தங்கவைக்க முடியுமாவென அம்மாவிடம் கேட்டார்கள். மறுப்பாளா அவள். இரவு இங்கேயே சாப்பிட வேண்டுமென வேண்டினாள். அவர்கள் பெருவிருப்புடன் தலையசைத்துச் சென்றனர். “இவர்கள் எல்லோரையும் ஒருநாள் யெகோவா மன்னிப்பார்” என்றான். குங்குமத்தின் நல்ல காலம், அம்மா அவர்களை வழியனுப்பச் சென்றிருந்தாள். அவள் காதில் விழுந்தால் மன்னிப்பெல்லாம் இல்லை. உடனடியாக வீட்டை விட்டு வெளியேற்றுவாள். ஜென்மம் தீர்ந்தாலும் படலை திறக்காள். குங்குமம் இவையெல்லாவற்றையும் அறிந்திருந்தும் துடுக்குத்தனமாய் நடந்தான். அம்மா சாப்பாடு போடுகிறேன் என்ற போது வேண்டாமென மறுத்தான். விரதமிருப்பதாக கூறினான். எப்போது பசித்தாலும் சாப்பிடு என்றாள். மாமா வீட்டுக்கு வந்தார். பைபிள் படித்துக் கொண்டிருந்த குங்குமம் எழுந்து ஆச்சியின் கொட்டிலுக்குப் போனான். “இவனை ஏன் வீட்டில அண்டி வைச்சிருக்கிறாய்” என்று அம்மாவோடு சண்டை போட்டார். “மாமா அவனை நீங்கள் குறைச்சு மதிப்பிடாதேங்கோ. இப்ப பழைய குங்குமம் இல்ல” என்றதும் “ஓமோம், படிச்சு கம்பெஸ்க்கெல்லே போய்ட்டான்” என்று நக்கல் அடித்தார். தனக்குப் பிடிச்ச சமயத்தில சேர்கிறதொண்டும் ராஜ துரோகம் இல்ல. இப்பிடி அவனைப் போட்டு எதையாவது செய்து கொண்டிருந்தால், நான் இயக்கத்திட்ட போய் சொல்லிப்போடுவன். மதவுணர்வுகளுக்கு மதிப்பளிக்காமல் இருக்கிறது பாரிய குற்றம்” என்றேன். “நாங்கள் பார்க்காத இயக்கத்தை இப்ப எங்களுக்கு நீங்கள் காட்டுறியள்” என்றார். “அப்பிடி வைச்சுக் கொள்ளுங்களேன்” என்று சொன்னதும் “இனிமேல் இந்த வீட்டுக்கும் நான் வரப்போறதில்லை” என்றார் மாமா. குங்குமம் ஊழியக்காரனாக தொடர்ந்து செயற்பட ஆரம்பித்தான். இரண்டு மாதங்களுக்கிடையில் சொந்தக்காரப் பெண்ணொருத்தி உட்பட எட்டுப்பேரை சபையில் இணைத்துக் கொண்டான். திருமுழுக்கு நடைபெறும் நாளையும் அவர்களுக்கு குறித்தனர். குங்குமம் களப்பணி அறிக்கையை கொடுத்து டேவிட் பிரதரிடம் பாராட்டுக்களை வாங்கியதாகச் சொன்னான். அவனிடமிருந்த நரித்தனமும் கெடு நினைப்புக்களும் இல்லாமல் சாதுவாகியிருந்தான். யெகோவாவின் அற்புதமே ஓங்குக! என்று ஒருதடவை மனதுக்குள் சொன்னேன். உண்ணி ஆச்சி வாசலில் அமர்ந்திருக்கிறாள். அவளுடைய காலுக்கடியில் கறுப்பன் வால் சுருட்டி படுத்திருந்தான். முகத்தில் வளர்ந்திருந்த உண்ணிகளை பிய்த்தெறிந்து ரத்தம் கசிய குந்தியிருந்து “என்னடா மோனே” என்று கேட்டாள். என்னுடைய கையில் கிடந்த துண்டுப் பிரசுரத்தை வாங்கிப் பார்த்தாள். “தமிழீழ விடுதலைக்கு தோள் கொடுங்கள்” என்று எழுதப்பட்டிருந்தது. பார்த்துவிட்டு தருவித்தாள். “இவன் குங்குமம் எங்க” கேட்டாள். அவன் யெகோவா சபையில இருக்கிறான். “அவனைக் கவனமாய்ப் பார், பெரிய பாரத்தை சுமந்து நெடுந்தூரம் போகப்போறான்” என்றாள். குங்குமம் சிலுவையில் அறையைப்பட்டு வானத்துக்கு உயர்ந்து நின்றான். அவனுடைய கால்கள் அசையமுடியாமல் ஆணியில் இறுக்கப்பட்டிருந்தன. முள்முடியில் ஒரு செம்போத்து அமர்ந்திருந்து அவனை கீழ்நோக்கி பார்த்துக் கொண்டிருந்தது. குங்குமத்தின் முகம் மலர்ந்து புன்னகைத்தபடியிருந்தது. கண்ணீர் வழிந்து ஒழுகியது. கண்களைத் திறந்தேன். சித்தம் படபடத்தது. தலைமாட்டிலிருந்த செம்புத் தண்ணீரைக் குடித்தேன். எழுந்து வெளியே வந்தேன். வாசலில் உண்ணித் தோல்கள் பரவியிருந்தன. ஆச்சியின் காலடிகள் வீட்டு முற்றத்திலிருந்து கிணற்றடி வரைக்கும் அழியாமல் இருந்தது. குசினிக்குள்ளிருந்த அம்மாவிடம் ஓடிச்சென்றேன். வானொலியில் திருச்சி லோகநாதன் “நெஞ்சம் கனிந்து முருகா என்று மனதில் நினைக்கின்ற நேரமெல்லாம்” என்று பாடிக்கொண்டிருந்தார். பாடலைக் கேட்டபடி அப்பம் சுட்டுக் கொண்டிருந்த அம்மாவிடம் ஆச்சி கனவில் சொன்னதை தெரிவித்தேன். ஒருநாள் மாலையில் குங்குமம் வீட்டிற்கு வந்திருந்தான். யெகோவா சபையின் வேலையாக மூன்று நாட்களில் கொழும்புக்கு செல்லவிருப்பதாக சொன்னான். இயக்கத்திடம் அனுமதி கேட்டிருப்பதாகவும் அது கிடைத்துவிட்டால் பிரதர் டேவிட்டோடு பயணமென்றான். ஆச்சி கனவில் வந்து சொன்னவவற்றை ஒரு சொல்லும் விடாமல் குங்குமத்துக்கும் அறிவித்தேன். “என்னிடத்தில் அக்கிரமம் இல்லாதிருந்தும், ஓடித்திரிந்து யுத்தத்துக்கு ஆயத்தமாகிறார்கள். எனக்குத் துணைசெய்ய விழித்து என்னை நோக்கிப் பாரும்” என கர்த்தரிடமும் ஆச்சியிடமும் பிரார்த்தித்து விட்டேனென குங்குமம் சொன்னான். ஒன்றாக அமர்ந்திருந்து சாப்பிட்டோம். அவனுக்குப் பிடித்தது மண்சட்டியில் வைக்கப்பட்டிருந்த மீன் குழம்பு. அம்மா நிறைவாகச் சாப்பிடுமாறு சொன்னாள். நிலவூறி வளர்ந்த இரவுக்கு சந்தோஷத்தை காணிக்கையாக்கினோம். குங்குமம் கொழும்புக்குச் சென்று நான்கு நாட்களில் தொடர்பு கொண்டான். வன்னியன் தொலைத்தொடர்பு நிலையத்தில் நானும் அம்மாவும் சென்றும் கதைத்தோம். அங்குள்ள சபையின் தலைமைக்காரியத்தில் இருப்பதாகச் சொன்னான். நன்றாக படித்து சமயக்குருவாக ஆகிவிடு என்றேன். குங்குமம் சரி மச்சான் என்று சொல்லி தொடர்பை துண்டித்தான். மாமாவுக்கு அவன் கொழும்பு சென்றடைந்ததைப் போய்ச் சொன்னேன். இறுகிப் போய் கேட்டு, தலையை மட்டும் ஆட்டினார். இயக்கம் பிரச்சாரத்தின் மூலம் ஆட்களை படையில் சேர்க்கும் ஒரு களமுனையை திறந்திருந்தது. சைக்கிளில் செல்லும் இளையோரை வழிமறித்து “வயது என்ன” என்று கேட்கும் போராளிகள், போராட்டத்தின் அவசியத்தைக் கூறி ஐந்து நிமிடங்கள் பேச எண்ணுவார்கள். பதினெட்டு வயது என்றால் அவர்களுடன் கதைப்பார்கள். குறைவான வயதென்றால் போகலாம் என்பார்கள். “என்னிடத்தில் பாவம் உண்டென்று உங்களில் யார் என்னைக் குற்றப்படுத்தக்கூடும்? நான் சத்தியத்தைச் சொல்லியிருக்க, நீங்கள் ஏன் என்னை விசுவாசிக்கிறதில்லை” என்பதைப் போல போராட்டம் வீதியில் பிரச்சாரம் செய்தது. நாங்கள் எங்களுடைய கிராமத்தை விட்டு இடம்பெயருமளவுக்கு யுத்தம் தொடங்கியது. யெகோவா சபைக்குள்ளிருந்த புத்தகங்களையும், பைபிள்களையும் ஒரு மூட்டையில் கட்டி நடக்க ஆரம்பித்தேன். இடம்பெயர்ந்து போன இடத்தில் மரத்தடியொன்றின் கீழே அமர்ந்திருந்தோம். அங்கே சமையல் செய்து, உண்டு, உறங்கி நான்கு நாட்களாகியும் பைபிளையே வாசித்தேன். “அவைகளைக் கேள்விப்பட்டாயே, அவைகளையெல்லாம் பார், இப்பொழுது நீங்களும் அவைகளை அறிவிக்கலாமல்லவோ? இதுமுதல் புதியவைகளானவைகளையும், நீ அறியாத மறைபொருளானவைகளையும் உனக்குத் தெரிவிக்கிறேன்” என்ற வாசகத்தில் வேரூன்றி நின்றேன். கொழும்பில் நடந்த தாக்குதல் ஒன்றில் இராணுவத் தளபதி ஒருவர் கொல்லப்பட்டிருப்பதாக செய்திகள் வரத் தொடங்கின. சூரியன் பண்பலைச் செய்தியில் அது தற்கொலைத் தாக்குதல் என உறுதியளிக்கப்பட்டிருப்பதாக தெரிவித்தனர். இராணுவ அணிவகுப்பில் நடந்த இந்தத் தாக்குதலில் பலியான சிப்பாய்களின் எண்ணிக்கை பற்றிய விவரம் எதுவும் அப்போது தெரியவில்லை. வன்னியின் வான்பரப்பில் போர்விமானங்கள் ஆவேசங்கொண்டு புகுந்தன. ஆறுக்கும் மேற்பட்ட போர்விமானங்கள் புலிகளை இலக்கு வைத்து குண்டுகளை வீசின என்று ஊடகங்கள் தெரிவித்தன. வழமை போல சனங்களின் பிணங்களை அடுக்கி, வன்னியே ஓலமிட்டது. நாங்களிருக்கும் இடத்தைத் தேடிக்கண்டு பிடித்த அரசியல் போராளிகள் மாமாவை அழைத்து உங்களுடைய மகன் வீரச்சாவு அடைந்து விட்டார் என்று சொல்லினர். “தம்பியவே, அவன் உங்கட கொம்பனியில இல்லை, கொழும்பில இருக்கிறான். அதுவும் யெகோவா சபையில. அவங்கள் சண்டைக்கு எதிரானவங்கள். ரத்தம் குடுக்கவே மாட்டங்கள். நீங்கள் மாறி வந்து நிண்டு கதைக்கிறியள்.” அய்யா. உங்கட மகனுக்கு குங்கும சிலையோன் தானே பேர். “ஓம்” “அவர் டேவிட் பிரதரோட இருந்தவர் தானே” “ஓம்” “இப்ப ஒரு மாசத்துக்கு முன்ன கொழும்புக்கு போனவர் தானே” “ஓம் “ “நாலு நாளுக்கு முன்னம் கொழும்பில நடந்த தாக்குதலில ஒரு இராணுவத்தளபதியை அடிச்சம் தானே. அதில கரும்புலியாய் இருந்ததில ஒருவர் உங்கட மகன் “மேஜர் இம்மானுவேல்” வீரச்சாவு அடைந்தார். மாமா ஓம்…ஓம்…ஓம்… என்பதைச் சொல்லிக் கொண்டே இருந்தார். விஷயம் கேள்விப்பட்ட அம்மாவும் நானும் சனங்களை விலத்திக்கொண்டு மாமாவிடம் ஓடிச் சென்றோம். ஓம்….ஓம்…ஓம் என்று சொல்லிக் கொண்டிருந்த மாமாவைப் பார்க்க இயலாது இருந்தது. ஏற்பற்ற பார்வையால் பூமியைப் பார்த்தார். வானத்தைப் பார்த்தார். அவனது தியாகத்தின் சாகசத்தில் உறைந்து நின்றேன். என்னைக் கண்டதும் கட்டியணைத்து “அவன் உன்னட்டையாவது உண்மையைச் சொல்லியிருக்கலாம் தானே” என்றார். “ஓம்” அன்றிரவு மரத்தின் கீழே உறங்கச் சென்ற போது “உனக்கு அவன் இயக்கமெண்டு உண்மையிலும் தெரியாதோ” கேட்டாள் அம்மா. “இல்லையம்மா, உங்களுக்குத் தெரியுமோ” அம்மா எதுவும் சொல்லாமல் நின்றாள். அவளது ரகசிய காப்புக்களை தகர்க்க இயலாது. “உண்ணி ஆச்சி, கனவில சொன்ன பாரம் இப்ப தான் எனக்கு விளங்குது அம்மா” என்றேன். “அண்டைக்கு அவன் சொன்னது உனக்கு ஞாபகம் இருக்கோ” “என்னம்மா” “பரலோகப் படைகளின்ர யெகோவா எங்களோடு இருக்கிறார். யாக்கோபின்ர கடவுள் எங்களுக்கு பாதுகாப்பான அடைக்கலமாக இருக்கிறார். தேசங்களின் மத்தியில் நான் உயர்ந்திருப்பேன். பூமியில் உயர்ந்திருப்பேன்” என்றானே, மறந்திட்டியோ! “எதோ சொன்னவன் தான். இப்ப நீங்கள் சொல்லும் போது தான் ஞாபகம் வருது” “அவனை இனி நீயில்லை நானில்லை. தேசமும் மறக்காது” என்றாள். அன்றைக்கு ஆச்சியின் கனவை சொன்ன போது “இஞ்ச எல்லாப்பிள்ளையளும் பாரம் தான் சுமக்கினம். அவனும் சுமக்கட்டும். அது சிலுவையோ, துவக்கோ. என்னவென்றாலும் கவலைப்பட எதுவுமில்லை” என்ற அம்மாவின் வார்த்தைகளையும் என்னால் மறக்க முடியாது. https://akaramuthalvan.com/?p=1556
  13. ஆமா ..தலைகீழாகத்தான்...இமயமலைக்கு சிங்களவனே பாடை கட்டிவிட்டான்...இப்ப என்னவென்றா இமயமலைப் பிரகடனத்தை ஜனாதிபதியிடம் கையளித்த பின்னர், உலகத் தமிழர் பேரவைத் தலைவர்கள் அஸ்கிரி மற்றும் மல்வத்து பீடங்களுக்கு விஜயம் மேற்கொண்டிருந்தபோதிலும், இலங்கையிலுள்ள பௌத்த தேரர்கள் மத்தியில் அதற்கு வரவேற்பு கிடைக்கவில்லை. இவ்வாறான சூழலில் இந்த அறிக்கை அமரபுர நிகாயவின் கருத்து அல்ல என அந்த சங்கத்தின் உதவிப் பதிவாளர் தெரிவித்துள்ளார். மகாநாயக்க தேரர்கள் மற்றும் பொதுமக்களின் தகவலுக்காக எனக் குறிப்பிட்டு, டிசம்பர் 30, 2023 அன்று, இலங்கை அமரபுர மகா சங்க சபையின் உதவிப் பதிவாளர் அம்பலன்கொட சுமேதானந்த தேரர் வெளியிட்ட அறிக்கையில், இமயமலைப் பிரகடனம் இலங்கை அமரபுர மகா சங்க சபையால் அங்கீகரிக்கப்படவில்லை எனக் குறிப்பிட்டிருந்தார். "இமயமலைப் பிரகடனம் தொடர்பாக இலங்கை அமரபுர மகா சங்கத்தில் எந்த உடன்பாடோ அல்லது விவாதமோ இடம்பெறவில்லை. அது ஒரு சில தேரர்களின் தனிப்பட்ட கருத்தின் வெளிப்பாடு மாத்திரமே என இதன் மூலம் வலியுறுத்தப்படுகிறது." 'அனைத்து சமூகங்களின் நல்வாழ்வை மேம்படுத்தும் பன்மைத்துவ இலங்கையை உருவாக்க' என அழைக்கப்படும் 'இமயமலைப் பிரகடனத்திற்காக' உலகத் தமிழர் பேரவையுடன் இணைந்து. அமரபுர நிகாயவின் அம்பகஹபிட்டிய பிரிவின் அனுநாயக்க மாதம்பாகம அஸ்ஸஜிதிஸ்ஸ தேரர் தலைமையிலான தேரர்கள் குழுவே பிரதானமாக இப்பணியில் ஈடுபட்டது. பல புலம்பெயர் தமிழ் அமைப்புக்கள் கோரி வரும் ஐ.நா மனித உரிமைகள் பேரவையினால் முன்மொழியப்பட்டுள்ள சர்வதேச ரீதியில் கண்காணிக்கப்படும் பொறுப்புக்கூறல் பொறிமுறை மற்றும் இலங்கை பாதுகாப்புப் படையினருக்கு எதிராக சுமத்தப்பட்டுள்ள கடுமையான போர்க்குற்றக் குற்றச்சாட்டுக்கள் குறித்து இந்த அறிக்கையில் குறிப்பிடவில்லை. தோல்வியடைந்த முயற்சிகள் புத்தசாசன, மத மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சும் கூட்டறிக்கை தொடர்பில் தம்மிடம் எந்த தகவலும் இல்லை என தெரிவித்துள்ளது. "மதங்களுக்கு இடையிலான முயற்சிகள் இலங்கைக்கு புதிதல்ல. மாறாக, இத்தகைய முன்முயற்சிகள் சர்வதேச நன்கொடையாளர்களால் நிதியளிக்கப்பட்டு பல தசாப்தங்களாக ஒரு சிறிய அமைதி கட்டியெழுப்பப்பட்டுள்ளது. பல்வேறு காரணங்களால் இந்த முயற்சிகள் தோல்வியடைந்தன முதலில் இதற்கு மறுமொழி சொல்லவும்...அப்புறம் வைக்கொல் பட்டடை நாய் ...யாரென்பதை யாழ்களம் தீர்மானிக்கட்டும்...கனடாவில் வேலை வெட்டி இல்லாமல் 24 மணி நேரமும் யாழ்களத்தில் தேவையில்லத கேள்விகள் கேட்டு...தமிழரை குழப்பியடிக்கும் வேலக்கு யார் காசு கொடுப்பார்..அதை முதலில் சொல்லவும்...பின் நான் கேட்ட கேள்விக்கு பதில் சொல்லிவிட்டு தொடரவும்..சும்ம வழ வழா தொழ் தொழாஎன்று கொண்டு இருக்க வேண்டாம் போர்த்துக்கொண்டு குப்பறப் படுத்துக்கொண்டால் எதுவுமே நடைபெறாது. இதை ஆர் செய்கிறது நீங்கள?
  14. ஈழப்பிரியன், இனி அந்தப் பக்கம்... தலை வைச்சும் படுக்காதேங்கோ.
  15. இதுக்கெல்லாம் விதை போட்ட பெருமை, ஸ்ரீலங்கா புத்த பிக்குகளையே சேரும். 😂
  16. வணக்கம் வாத்தியார்......! ஆண் : பிரம்மா உன் படைப்பினிலே… எத்தனையோ பெண்கள் உண்டு ஆனாலும் அசந்துவிட்டேன் அழகினிலே இவளைக் கண்டு அழகினிலே.. இவளைக்கண்டு பெண் : ஏ வாடா வாடாப் பையா என் வாசல் வந்துப்போயா என் வாசல் தாண்டி வந்து என் வாசம் வாங்கிப்போயா ஆண் : என் இராத்திரியின் நாவல் நீ நட்சத்திரத்தூவல் நீ நடமாடும் காமக்கோவில் நீ ஆடைக்கட்டும் ஆப்பிள் என் ஆசைகளின் சேம்பல் நான் விளையாடும் காதல் ஊஞ்சல் பெண் : நீப்போடுப்போடு சக்கப்போடு ஆண் : என்னப் போத்திக்கடி தேகத்தோடு பெண் : அட வாடா ராஸ்கல் நேரத்தோடு குழு : ஆடி உன்னைப் பார்க்கும் போது உள் நாடித்துடிக்குதே உன் தேகம் கண்டப் பின்பு என் வேகம் குறையுதே குழு : ஒடையுதே செதறுதே ஆணினம் மொத்தமாய் இடுப்பின் மடிப்பில் சிக்கித்தவிக்கிதே பெண் : புள்ளிவைக்காமலே புதுக்கோலமிடும் வந்த ஹீரோக்களின் கில்லி நீ.. ஏதும் சொல்லாமலே என்ன செய்வோம் என அந்த லீலைகளின் கள்ளி நான் ஆண் : ஆத்தி சீனிப்பேச்சிக்காரி என் சில்மிஷ சிங்காரி நீ சிரித்தாலே தீபாவளி நான் ஏணி வச்சி ஏறி உன்ன எட்டி பார்க்கும் ஞானி நாம் வெடிபோம்மா காதல் வெடி பெண் : அட சீசன் வந்த வேடந்தாங்கல் நான் தானடா சும்மா தங்கிச்செல்லும் பறவைப்போல வா வா ஜீவா.......! --- ஏ வாடா வாடாப் பையா ---
  17. கதையொன்று நான் சொல்லவா ........! 😍 நடிப்பு : ஆனந்தன் & ராஜஸ்ரீ ........!
  18. 11 JAN, 2024 | 07:25 PM நாட்டிலுள்ள அனைத்து பாலர் பாடசாலை மாணவர்களுக்கும் காலை உணவு வழங்கும் வேலைத்திட்டம் இவ்வருடத்திலிருந்து ஆரம்பிக்கப்படுமென மகளிர், சிறுவர் விவகார இராஜாங்க அமைச்சர் கீதா குமாரசிங்க தெரிவித்தார். ஆண், பெண் சமத்துவத்தை (Gender Equality Bill) ஆண், பெண் சமத்துவ சட்டமூலத்தின் வாயிலாக உறுதிப்படுத்த எதிர்பார்ப்பதாகவும் அவர் தெரிவித்தார். ஜனாதிபதி ஊடக மையத்தில் இன்று வியாழக்கிழமை (11) நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டிலேயே இராஜாங்க அமைச்சர் இதனைத் தெரிவித்தார். அங்கு மேலும் கருத்து தெரிவித்த அவர், நாட்டின் 120,000 பாலர் பாடசாலை மாணவர்களுக்கும் காலை உணவை வழங்குவது சவாலாக அமைந்திருந்தது. அந்த வகையில் தற்போது மாணவர் ஒருவருக்காக ஒதுக்கப்படும் தொகையை 60 ரூபாய் முதல் 100 ரூபாய் வரையில் அதிகரிக்குமாறு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க பணிப்புரை விடுத்துள்ளார் என்று இராஜாங்க அமைச்சர் தெரிவித்தார். இலங்கையின் பெருமளவான மாணவர்கள் போசாக்கு குறைப்பாட்டிற்கு ஆளாகியுள்ள நிலையில் புரோட்டின் நிறைந்த போசாக்கான உணவை வழங்க திட்டமிடப்பட்டிருப்பதாகவும் இராஜாங்க அமைச்சர் தெரிவித்தார். அதற்கமையவே நாட்டிலுள்ள அனைத்து பாலர் பாடசாலை மாணவர்களுக்கும் காலை உணவு வழங்க எதிர்பார்ப்பதாகவும் தெரிவித்தார். நாட்டின் அனைத்து பிரதேச செயலாளர் பிரிவுகளும் உள்ளடங்கும் வகையில் திட்டத்தை செயற்படுத்தவிருப்பதாகவும், தோட்ட பாடசாலைகள் தவிர்ந்த பாலர் பாடசாலைகளில் மட்டும் 120,000 மாணவர்கள் இருப்பதாகவும் தோட்ட பாலர் பாடசாலைகளிலிருக்கும் 35,000 மாணவர்களும் உள்ளடங்களாக 155,000 மாணவர்கள் இத்திட்டத்தினால் பயன்பெறுவர் என்றும் தெரிவித்தார். அதேபோல் கர்பிணித் தாய்மாருக்கான போசாக்குப் பொதிகளை வழங்க எதிர்பார்த்திருப்பதாகவும், அதற்காக 220,214 கர்பிணித் தாய்மாருக்கு 4,500 பெறுமதியான போசாக்கு பொதிகளை 10 மாதங்களுக்கு வழங்க எதிர்பார்த்திருப்பதாகவும் தெரிவித்தார். மேலும் பாலர் பாடசாலை ஆசிரியர்களை பயிற்றுவிக்கும் வேலைத்திட்டம் ஒன்று ஆரம்பிக்கபடவிருப்பதாகவும் தெரிவித்தார். நாட்டின் அனைத்து மாவட்டங்களும் உள்ளடங்கும் வகையில் பாலர் பருவகால மேம்பாடு தொடர்பிலான தேசிய செயலாளர் அலுவலகத்தின் கீழ் பதிவு செய்யப்பட்டிருக்கும் 18,333 பாலர் பாடசாலை ஆசிரியர்கள் உள்ளனர். அவர்களுக்கு சம்பளம் வழங்க வேண்டும். பாலர் பாடசாலைகளை மேம்படுத்தும் நோக்கில் ஆசிரியர்களுக்கான கொடுப்பனவாக மாதாந்தம் 2500 ரூபாயினை வழங்கவும், அது போதுமான தொகை இல்லை என்பதால் அதனை மேலும் அதிகரிக்க எதிர்பார்ப்பதாகவும் தெரிவித்தார். மேலும் அமைச்சினால் மகளிர் மற்றும் சிறுவர் உரிமைகளைப் பாதுகாப்பதை நோக்கமாக கொண்டு 03 புதிய சட்டங்களை கொண்டுவரவிருப்பதாகவும் தெரிவித்தார். அதற்கமைய, ஆண், பெண் சமத்துவ சட்டம். (Gender Equality Bill) ஊடாக ஆண், பெண் சமத்துவத்தை பாதுகாக்கவும், LGBTIQ ஊடாக ஆண், பெண் சமூக சமத்துவத்தை நிலைப்படுத்தும் சபையொன்றை நிறுவி அதன் கீழ் சமூக சமத்துவ மத்தியஸ்த அதிகாரிகளின் (Gender Focal Point) என்ற அரச நிறுவனத்திற்கான ஆட்சேர்ப்புச் செய்ய எதிர்பார்த்திருப்பதாகவும் தெரிவித்தார். அதேபோல் பெண்கள் வௌிநாடு செல்லும் போது குழந்தையின் வயது குறைந்தபட்சம் 5 ஆக கருத்தில் கொள்ளப்படும் என்றும், 05 வயதுக்கு குறைவான குழந்தைகளிருக்கும் எத்தனை தாய்மார் வெளிநாடுகளுக்குச் சென்றுள்ளனர் என்பது தொடர்பிலான தகவல்களை பிரதேச செயலக மட்டத்தில் தேடியறிவிருப்பதாகவும் தெரிவித்தார். அதேபோல் மாகாண ஆளுநர்கள், போக்குவரத்து அமைச்சர், தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவிற்கும் அறிவித்து மாகாண போக்குவரத்து அதிகாரசபையின் கீழ் போக்குவரத்து சேவையில் ஈடுபடும் பஸ்களில் (CCTV) பொருத்த எதிர்பார்த்திருப்பதாகவும் தெரிவித்தார். அதேபோல் பொது போக்குவரத்து சேவைகளுக்குள் பெண்கள் முகம்கொடுக்கும் நெருக்கடிகளை ஓரளவு தடுக்கும் எதிர்பார்ப்புடனேயே கெமராக்களை பொருத்த எதிர்பார்த்திருப்பதாகவும் அதற்காக பொது போக்குவரத்து சேவையில் ஈடுபடும் பஸ்களில் கெமராக்களை பொருத்த வேண்டியது அவசியம் என்ற நிபந்தனையுடன் அனுமதி பத்திரங்கைளைப் பெற்றுக்கொடுக்க எதிர்பார்ப்பதாகவும் தெரிவித்தார். https://www.virakesari.lk/article/173740
  19. அண்மையில் தமிழகத்தை சேர்ந்த குடும்பத்தவர் வீட்டிற்கு வந்திருந்ந போது, கோவைக்காய் கறி செய்து கொண்டு வந்திருந்தார்கள். முதல் முறையாக அப்போதுதான் நாங்கள் கோவைக்காய் கறியை சாப்பிட்டோம். மிக நல்ல சுவையாக இருந்தது. அன்றிலிருந்து நாமும் கோவைக்காயை கடையில் கண்டால், வாங்கி சமைக்க ஆரம்பித்து விட்டோம். தமிழன்பன் இணைத்த பதிவை பார்த்த பின்... கோவைக்காயில் உள்ள மருத்துவ குணங்களை அறிந்ததும் அடிக்கடி அதனை சமைக்க யோசித்துள்ளோம்.
  20. மூஞ்சூறு தான் போக காணேல்லையாம்.....இதுக்குள்ள ?
  21. முக்கியமான சர்வதேசக் கடற்பாதையினை முடக்கி, அப்பாதையினூடாக வரும் வர்த்தகக் கப்பல்களைத் தாக்கியும், கடத்தியும் வந்த யெமெனின் ஹூத்திக் கிளர்ச்சிக்காரர்கள் மீது அமெரிக்காவும், இங்கிலாந்து ஏவுகணை மற்றும் விமானத் தாக்குதல்களை நடத்தியிருக்கின்றன. சர்வதேச வணிகக் கப்பல்களைத் தாக்குவதன் மூலம் பாலஸ்த்தினர்களின் மரணத்திற்குப் பழிவாங்குகிறோம், இஸ்ரேலினைத் தாக்குகிறோம் என்று கூறிக்கொண்டு பலமுறை இப்பாதையினைப் பயன்படுத்திய சர்வதேச வணிகக் கப்பல்கள் மீது ஏவுகணைகள் மூலமும், ஆளில்லா வானூர்திகள் மூலமும், கடற்படைப் படகுகள் மூலமும், உலங்குவானூர்திகள் மூலம் தரையிறங்கியும் ஈரானின் முழு ஆதரவு பெற்ற ஹூத்திக் கிளர்ச்சியாளர்கள் தாக்குதல்களில் ஈடுபட்டு வந்தனர். இத்தாக்குதல்களை நிறுத்துங்கள் என்று பலமுறை கேட்டுக்கொள்ளப்பட்டபோதும், "இஸ்ரேலுக்கு பொருட்களைக் கொண்டு செல்லும் கப்பல்களே இவ்வழியால் பயணிக்கின்றன, ஆகவே நாம் தாக்குவோம். எம்மீது அமெரிக்காவோ அல்லது வேறு யாராவதோ தாக்கினால், அவர்கள் மீது நாம் நடத்தும் தாக்குதல் அவர்கள் கனவில் கூட நினைக்க முடியாதளவிற்கு பயங்கரமானதாக இருக்கும்" என்று தமது தாக்குதல்களை நடத்திவிட்டு அவர்கள் தெரிவித்திருந்தார்கள். அந்த நிலையிலேயே இத்தாக்குதல்கள் நடத்தப்பட்டிருக்கின்றன. US and UK carry out strikes against Iran-backed Houthis in Yemen | CNN Politics
  22. புத்தர் இல்லாத அகழ்வாராச்சி இலங்கையில் நடந்ததுண்டா? அவர் அடியில் இருக்கிறார். அவர் இல்லாத இடத்தில அகழ்வாராச்சி நடக்காது. இதுக்கெல்லாம் அவசரப்பட கூடாது. விரைவில் திருக்கேதீஸ்வரம் ஆலயத்தை சுற்றியும் அகழ்வாராச்சி நடக்க போகுது. அப்போ பாருங்கள் எப்படியான சிலைகள் அகப்பட போகுதென்று.
  23. பாகிஸ்தான் கடைசியில் நாலாம் இடத்தை எடுக்கும்போது, வங்குரோத்தான நிலையிலும் எமது இடத்தை வைத்து இலங்கைத்தமிழர் என்று பெருமை (?) கொள்ளலாம்.
  24. இதெல்லாம் அரசியலில் ஒரு அங்கம். ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு திட்ட்ங்கள் அபிலாஷிகள் இருக்கும். அதட்கு எப்படியான வழிகள் என்பதை யோசிக்கும்போது அதை எப்போதும் உயிர்ப்புடன் வைத்திருப்பார்கள். எனவே இலங்கையாக இருக்கட்டும், உலக நாடுகளாக இருக்கட்டும், அயல் நாடாக இருக்கட்டும் அவர்களுக்கு இலங்கை பிரச்சினை தேவைப்படுகின்றது. எனவே என்னை பொறுத்த வரைக்கும் தமிழர் பிரச்சினை தீர்க்கப்படாது என்பது எனது நம்பிக்கை. ஏன் என்றால் உலக நடப்புக்கள் அப்படிதான் இருக்கின்றன.
  25. நாட்டாமைகள் எல்லாம் கீழேதான் பெோல இருக்கு!!!!!
  26. சிறிலங்கா ஏர்லைன்சில் பிரி டிக்கட் போட்டு தந்தாலும் வரமாட்டேன்,
  27. 👆இது கேள்வி 🤣 திராவிடர் என்பதற்குள் சிங்களம் வருமா? ஸ்ராலினுக்குப் பக்கத்தில் கதிரை போடவேண்டி ஏற்படுமல்லோ அதுதான் அழைப்பில்லை என நினைக்கிறேன். 🤣
  28. டெஸ்ட்ராயர், எப் 18 சூப்பர் ஹார்னெட் என்று கலக்கும் அமெரிக்கனுடன் , 5 இத்துப்போன சீனத்து மிக் சங்டுக்களை அதுவும் கப்பலில் ஏற்றி இறக்க முடியாத இறதல், மற்றும் இந்தியனின் பிச்சை கப்பலையும் வைத்துக்கொண்டு ஆசியாவின் பிச்சைக்காரன் போடும் போட்டி இருக்கே வேற லெவல்
  29. சசி, நானும் இளையராஜாவின் பரம ரசிகன். என் வாழ்வின் எல்லா தருணங்களிலும் அவரது இசை என்னுடன் பயணித்துக் கொண்டே இருக்கின்றது. என் வாழ்வில் இருந்து அவரது இசையை பிரித்து விட்டால், பின்னனியிசை அற்ற ஒரு சினிமாவை பார்ப்பது போலத்தான் வெறுமையாக இருக்கும். ஆனால், அவரது இசைக்கும் அவர் குணத்துக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. உயர்வு வருகையில் பணிவு வேண்டும் என்பர். பணிவு கூட இல்லாவிட்டாலும் பரவாயில்லை, மற்றவர்களை ஏளனத்துடன் அணுகுவதும், அவர்களை மதிக்காமல் அதை எந்த கூச்சமும் இன்றி வெளிப்படுத்துவதும் இளையராஜாவின் குணங்கள். பாலா (SPB) இறந்தவுடன் அவர் விகடனுக்கு பாலா பற்றிஒரு பேட்டி கொடுத்து இருந்தார். அதை தேடி வாசித்துப் பாருங்கள் என்ன சொன்னார் என. அதே போன்று பிரசாத் ஸ்டூடியோவை விட்டு வெளியேற வேண்டி வந்த பின் அவர் ஊடகங்களுக்கு கொடுத்த பேட்டியே போதும் அவரது மன ஒட்டம் எந்தளவுக்கு சிறுமையானது என (பிரசாத் ஸ்டூடியோ நாசமாக போய்விடும் எனும் தொனியில் பேட்டி கொடுத்து இருந்தார்). 96 படத்தில் அவரது பாடலை சில இடங்களில் ஒலிக்க விட்டமைக்கு கூட தரக் குறைவாக அப்படத்தின் இசையமைப்பாளரை திட்டி இருந்தார். ஊடகவியலாளர்களை மதிக்காதவர் (ஆனால் அவர்களின் புகழுரையை வேண்டி நிற்பவர்). அவரது இந்த உரையில் கூட, இப்ப இருக்கும் இசையமைப்பாளர்களுக்கு திறமை இல்லை என சாடியிருந்தார் (அந்த வரிகள் இந்த திரியில் இல்லை- ஆனால் பல தமிழக ஊடகங்களில் முழுமையாக வந்துள்ளது) இந்த திட்டு, அகங்காரமாக நடந்து கொள்வது எல்லாம் தான் சிறுமையாக நினைக்கும் மனிதர்களிடம் மட்டும்தான். பிஜேபி தலைவர்களுடன், மோடியுடன், அரசியல்வாதிகளுடன், சூப்பர் ஸ்டார்களுடன், குனிந்து குழைந்து பேசுகின்ற ஆள் மட்டுமன்றி, முட்டுக் கொடுப்பவராகவும் உள்ளார். அவ்வளவு ஏன், தான் பிறந்து வளர்ந்த சாதி 'உயர் சாதி' என போற்றப்படும் சாதியில் பிறந்தவர்களால் ஏளனமாக பார்க்கப்படுவதால், தன்னை அந்த சாதியில் இருந்து விலத்தி வைக்க விரும்புகின்றவர் மட்டுமன்றி, தன்னை பிராமணராக ஏற்றுக் கொள்ள மாட்டார்களா என்று ஏங்குகின்றவர். அதற்காகவே சங்கிகளுக்கு முட்டுக் கொடுப்பவர். ஒருவரை விரும்புகின்றோம், அவரது திறமையை விரும்புகின்றோம் என்பற்காக சிறுமைத்தனத்துக்கு முட்டுக் கொடுக்க அவசியம் இல்லை. என் அப்பாவுக்கு அவர் தலைமுறை இசையமைப்பாளர்களை பிடித்து இருந்தது. அவரது அப்பாவுக்கு அதற்கும் முற்பட்ட இசையமைப்பாளர்களின் இசையை / பாடலை பிடித்து இருந்தது. கண்டசாலாவின் பாடல்களை என் அப்பப்பா விரும்பி கேட்பார். அப்பாவுக்கு கே.வி. மகாதேவனது பாடல்கள் உயிர். சுசீலா அம்மாவின் குரல் தான் அவருக்கு பிடித்தமானது. அதே போன்று, எனக்கு இளையராஜாவின் இசையை பிடித்தும் அனிருத் இன் இசையை பிடிக்காமலும் உள்ளது. என் மகனதும் மகளதும் Play List டில் தமிழ் பாடல்கள் கொஞ்ச எண்ணிக்கையில் தான் உள்ளன. அவற்றில் அனிருத் இனதும், ஏ.ஆர்.ரஹுமானின் இன்றைய பாடல்களும் தான் உள்ளன. நாளைக்கு இதுவும் மாறி விடும்.
  30. இந்த பாட்டையெல்லாம் கேட்டதற்கு பின்பு, இப்போது வரும் எந்த பாட்டை கேட்டாலும் மனசில் ஒட்டவில்லை. காதோடு நுழைந்தது காதோடு போய்விடுகிறது !!! என்னுடைய இந்த மண்ணாங்கட்டி பிறப்புக்கு சிறப்பு சேர்த்த ஒருசில விடயங்கள் என நான் நினைப்பது. தமிழன் என்ற அடையாளம். ஈழ விடுதலை போராட்ட காலத்தில் உன்னதமான ஒரு தலைவனை, ஒப்பற்ற போராளிகளை சாட்சியமாய் பார்த்து வாழ்ந்தது. வள்ளுவன், பாரதி இப்படி சில படைப்புகளை நுனிப்புல் மெய்தது. இசைஞானி இளையராஜா, MSV ஐயா படைப்புகளில் கரைந்து போனது.
  31. 1 point
    ஏன் Tulip Inn என்று பருத்தித்துறையில் பெயர் உள்ளது என்பது இப்போது விளங்கிவிட்டது! இங்கு 2022 சம்மரில் நண்பர்களுடன் சிலநாட்கள் தங்கி இருந்து கும்மாளம் போட்டிருந்தோம்! போய்ஸாகப் போய் குஷியாக இருக்கலாம் என்று நினைத்தால் இந்தாள் கோயிலுக்குப் போறமாதிரி போகச் சொல்றார்☺️
  32. 1 point
    அடுத்து வவுனியா. இந்தப் பயணத்தில் மணியன் என்னுடன் கலந்து கொள்ளவில்லை. வெள்ளவத்தை புகையிரத நிலையத்திலேயே ரிக்கெற்றைப் பதிவு செய்து கொண்டேன். எயார் கொன்டிசனில் இடம் இல்லை என்று கையை விரிக்க சதாரண வகுப்பில் பதிவு செய்தேன். இரயில் பெட்டியில் சுத்தம் குறைவாகவும் சத்தங்கள் அதிகமாகவும் இருந்தது. இடம் வலமாக ஆடியாடிப் போய்க் கொண்டிருந்த இரயில் அநுராதபுரத்துக்கு அப்பால் சீராக, வேகமாகப் போக ஆரம்பித்தது. பக்கத்தில் இருந்தவரிடம் இதைப்பற்றிக் கேட்க, “இப்ப கிட்டடியலேதான் பாதையை திருத்தினவங்கள்” என்று பதில் கிடைத்தது. வவுனியா வீதிகள் துப்பரவாக இருந்தன. நல்லதொரு மழை நேரத்தில் அங்கே மாட்டிக் கொண்டதால் கொஞ்சம் சிரமமாக இருந்தது. தங்கியிருந்த ஹொட்டலின் வாசலில் இரண்டு துவார பாலகர் போல் நாய்கள் (நிற்காமல்) படுத்திருந்தன. நாய்கள் வவுனியா வீதிகளில் மட்டுமல்ல, தெற்கே நெடுஞ்சாலையில் இடைநிறுத்தும் உணவகம் தொட்டு பருத்தித்துறை வரை அவை வீதிகளிலும் பொது வெளியகளிலும் படுத்திருந்தன. அவைகளைக் காணும் போதெல்லாம் அச்சம், மடமை இல்லாமல் எட்டிப் பார்த்தது. பருத்தித்துறை நான் பிறந்த ஊர். கைத்தடி இல்லாமல் வடக்கே கடலைப் பார்த்து உட்கார்ந்திருந்த காந்தி இப்பொழுது எழுந்து நிற்கிறார். சிலையின் அழகு முன்னதைப் போல் இல்லை. முன்பிருந்த வணிக நிலையங்கள் எதுவும் இப்பொழுது அங்கே என் கண்களில் படவில்லை. மழை என்னைத் தொடர்ந்து கொண்டிருந்ததால் நினைத்து வந்த பலதை ப் பார்க்க முடியாமல் போயிற்று. ஆனாலும் பலரைச் சந்திக்க முடிந்தது. புற்றளை மகா வித்தியாலத்தில்தான் என் ஆரம்பக் கல்வி இருந்தது. ஒருதடவை பள்ளியை எட்டிப் பார்த்தேன். பக்கத்தில் இருந்த புற்றளை ப் பிள்ளையார் கோவில் கேணிக்கு முன் இருக்கும் மகிழமரத்தில் குரங்குகளாக ஏறி விளையாடி மகிழம் பழங்களைச் சாப்பிட்டது நினைவுக்கு வர வயதை மறந்து மரத்தில் ஏறி பழங்களைப் பறித்துச் சாப்பிட்டேன். பழங்களைச் சாப்பிட்டதும் தொண்டையில் கரகரப்பு வந்து கொஞ்சம் சிரமப்பட்டேன். பருத்தித்துறை சிவன் கோவிலுக்கு அருகே ஒரு அம்மா சுடச்சுட தோசை சுட்டுத் தருகிறார். சுவையாக இருக்கும் எனக் கேள்விப்பட்டு ஒரு காலைச் சாப்பாட்டை அங்கே எடுத்துக் கொண்டேன். பொலித்தீனால் சுற்றப்பட்ட தட்டில் சாப்பிட்டதாலோ என்னவோ அங்கே உணவை என்னால் ரசித்துச் சாப்பிட முடியவில்லை. அதுவும் குடிக்கத் தண்ணீர் கேட்ட போது, நீல நிற பிளாஸ்ரிக் குடுவையில் இருந்து அவர் தண்ணி எடுத்துத் தந்த அழகும், அந்த குடுவை இருந்த கோலமும் எனக்குத் திருப்தியாக இருக்கவில்லை. வேலாயுதம் பாடசாலைக்கு முன்னால் நல்ல சாப்பாடு கிடைக்கிறது என்றார்கள். அங்கேயும் பொலித்தீன் சுற்றிய தட்டில் உணவு வந்தது. பொலித்தீனின் விளைவுகளைத் தெரியாமல் இருக்கிறார்களே என்ற கவலை வந்தும் நான் எதுவும் அவர்களிடம் சொல்லவில்லை. ஏனெனில் இப்பொழுது பருத்தித்துறைக்கு நான் அந்நியன். ஹொலண்டில் வசிக்கும் ஒரு தமிழர், விஎம் (விநாயகர் முதலியார்) றோட்டில் ஒரு ஹொட்டலை வைத்திருக்கிறார். அங்கேதான் தங்கினேன். ஹொட்டலில் எங்கெல்லாம் கமரா வைக்க முடியுமோ அங்கெல்லாம் வைத்திருந்தார்கள். ஹொட்டலின் பொறுப்பாளரைக் கேட்டால், “இங்கே நடப்பதை ஹொலண்டில் இருந்து முதலாளி பார்ப்பதற்காக” எனப் பதில் வந்தது. கிராமக்கோட்டுச் சந்தியில் இருந்து மருதங்கேணி போகும் வீதியில்தான் என் வீடு இருந்தது. சந்தியில் இருந்து முதலியார் வாசிகசாலைவரை எனது உறவினர்கள்தான் வசித்தார்கள். இப்பொழுது அந்த வீதியே வெறிச்சோடி இருந்தது. உறவுகள் மட்டுமல்ல பல வீடுகளையும் அங்கே காணவில்லை. இருந்த ஒன்றிரண்டு வீடுகளும் பாழடைந்திருந்தன. அத்தி பூத்தாப்போல் ஒரே ஒரு குடும்பம், அதுவும் கணவன்,மனைவி இருவரும்தான் எனக்குத் தெரிந்தவர்கள் இருந்தார்கள். அவர்களுக்குப் பிள்ளைகள் இல்லை. பல வருடங்கள் தமிழ்நாட்டில் இருந்து விட்டு இப்பொழுது ஊருக்கு வந்து வீட்டைத் திருத்தி வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். அவர்களைப் போய் பார்த்தேன். “ஆரெண்டு தெரியேல்லை. இடம் பெயர்ந்த ஆக்களாத்தான் இருக்கவேணும். அவையள்தான் இப்ப உங்கடை வீட்டிலை இருக்கினம். வீடு பாழடைஞ்சு போகுது, சும்மாதான் இருக்குது எண்டு ஆறுமுகமண்ணைதான் அவையளை இருக்க விட்டவர். அவர் இப்ப புற்றளையிலை தம்பிக்காரனோடை இருக்கிறார். அவருக்கும் ஏலாமல் வந்திட்டுது. வந்தனீ எதுக்கும் போய் அவரை பாரன்” தேனீருக்கு மத்தியில் அங்கே அவர்களிடம் இருந்து எனக்கு அறிவுரை கிடைத்தது. ஆறுமுகண்ணையைப் பார்ப்பதற்கு முன்னர் நான் வாழ்ந்த வீட்டைப் பார்ப்பது என்று முடிவு செய்து அங்கே போனேன். எனது அம்மா சொல்லுவார், “எனக்கு எந்தக் குறையும் எப்போதும் வராது. நாலு இளவரசர்களுக்கும் ஒரு இளவரசிக்கும் நான் தாய்” வீட்டின் கேற்றை நான் நெருங்கும் போது ஏனோ அம்மா எங்கள் சொந்தங்களுக்குச் சொல்லும் வாசகங்கள் எனக்குள் கேட்டன. 2008இல் எனது தாய் இறந்த சோகம் மறையும் முன்னர் அடுத்த ஆண்டு அண்ணன் ஒருவன் இறந்து போக எங்கள் கோட்டை தளர ஆரம்பித்து விட்டது. மிகுதியான மூன்று இளவரசர்களும் இளவரசியும் இராச்சியங்களை இழந்து இப்போ வெவ்வேறு நாடுகளில் சிதறி இருக்கிறார்கள். இதற்குள் சிதிலமடைந்திருக்கும் இந்த வீட்டுக்குள் போய் நான் எதைப் பார்க்கப் போகிறேன்? எதைத் தேடப் போகிறேன்? உள்ளே இருப்பவர்களுக்கு என்னைத் தெரியாது. அவர்களை எனக்கும் தெரியாது. அப்படியே எதுவும் தெரியாமலே இருந்து விட்டுப் போகட்டும் என்று முடிவெடுத்தேன். அம்மா வைத்த விலாட் மாமரம் பெரிதாக வளர்ந்து காய்கள் தொங்கிக் கொண்டிருந்தன. அதை மட்டும் வீதியில் நின்றே கமராவில் பதிந்து கொண்டு திரும்பி விட்டேன். ஆறுமுகமண்ணையைப் போய்ப் பார்த்தேன். முதுமையும் இயலாமையும் அவரிடம் தெரிந்தது. “என்னாலை இப்ப ஏலாது தம்பி. அதுதான் அவையளை இருக்க விட்டனான். வாடகை எண்டு ஒண்டும் வேண்டிறதில்லை.சும்மா கிடந்து பாழடையிற நேரத்திலை..” “நான் உங்களைப் பாக்கத்தான் வந்தனான். வீட்டை அல்ல” நான் இதைச் சொன்ன போது அவரது முகத்தில் ஒரு திருப்தி தெரிந்தது. “உங்கடை அம்மான்ரை தையல் மெசினை மட்டும் எடுத்துக் கொண்டு வந்தனான்” “அப்பிடியே அதை நான் பாக்கலாமா?” “அது நல்லா கறல் பிடிச்சுப் போட்டுது. சும்மா எப்பவாவது தைப்பம்” கறள் பிடித்திருந்தாலும் அது அம்மாவின் தையல் மெசின். எத்தனை தீபாவளி, தைப்பொங்கல்களுக்கு அம்மா அதைப் பயன்படுத்தி இருப்பார். அந்தத் தையல் மெசினைப் படம் பிடித்துக் கொண்டு ஆறுமுகமண்ணையிடம் இருந்து விடை பெற்றேன். பாலா எனது பாடசாலை நண்பன். நீண்டகாலமாக அமெரிக்காவில் இருந்து விட்டு இப்பொழுது ஊருக்கு வந்திருக்கிறான். மந்திகைச் சந்தைக்கு அருகே அவனது நண்பர் இருவர்களுடன் (அவர்களும் அவனுடன் அமெரிக்காவில் இருந்தவர்கள்) இருப்பதாகச் சொன்னார்கள். தகவல் அறிந்து அவனைக் காணப் போனேன். புதிதாக, பாதுகாப்பு வசதிகளுடன் அந்த வீடு இருந்தது. வெளியில் இருந்து அழைப்புமணி அடித்தும் யாரும் வரவில்லை. பக்கத்தில் இருந்த நாகேந்திரத்தின் (தெரிந்தவர்) கடைக்குப் போய் கேட்டேன். “பாலுவோ? ஆளைப் பிடிக்கிறது சரியான கஷ்டம். அமெரிக்கப் பென்ஷனியர். ஆனால் சாமிப் போக்கு. காலமை பின்னேரம் எண்டு எந்த நேரமும் கோயில்தான். வல்லிபுரக் கோவிலுக்குப் போய் கூட்டி, குளிச்சு ஆழ்வாரைக் கும்பிட்டு எப்ப வருவார் போவார் எண்டு தெரியாது. வேணுமெண்டால் ஆளின்ரை ரெலிபோன் நம்பர்தாரன் அடிச்சுப் பாருங்கோ” ஹொட்டலுக்குப் போய் நானும் குளித்து, சுத்தமாக ‘சாமி’க்கு ரெலிபோன் எடுத்தால் பாலுவின் குரல் கேட்டது. “என்ன சாமியாராயிட்டியாம்?” பாலுவின் சிரிப்புத்தான் பதிலாக வந்தது. “தனியாக இருக்கிறாயோ? அல்லது குடும்பமாகவோ..?” “நான் கலியாணமே கட்டேல்லை” எனக்கு ஆச்சரியமாக இருந்தது. காலை, மாலை என நேரம் தவறாமல் அட்டவணை போட்டு வடமராட்சி,மெதடிஸ் பாடசாலைகளை என்னுடன் சேர்ந்து சுத்தி வந்த பாலு ஏன் இப்படி மாறினான் என்பது எனக்கு விளங்கவில்லை. நான் இருக்கும் ஹொட்டலை சொன்னேன் வந்து பார்ப்பதாகச் சொன்னான். சொன்னது போல் அடுத்தநாள் மதியம் என்னைப் பார்க்க பாலு வந்திருந்தான். அந்த நேரம் நான் அங்கே நிற்கவில்லை. அவன் வந்த தகவல் அறிந்து ஓட்டோ பிடித்து அவன் வீட்டுக்குப் போனால் அவன் வீட்டுக்குள் இருந்து பதில் வரவில்லை. “பகலிலே சந்திரனைப் பார்க்கப் போனேன் அவன் இரவிலே வருவதாக ஒருத்தி சொன்னாள் கடலிலே மீன் பிடிக்க நானும் போனேன் மீன் கரையேறிப் போனதாக ஒருத்தி சொன்னாள்..” என்ற கண்ணதாசன் பாடல்தான் என் நினைவுக்கு வந்தது. தொலைபேசியில் பல தடவைகள் அழைத்தும் பாலுவை மீண்டும் என்னால் தொடர்பு கொள்ள முடியவில்லை. அன்று இரவு நான் மீண்டும் கொழும்புக்குப் பயணம் செய்ய வேண்டி இருந்தது. இனி எனக்கு, பருத்தித்துறைக்குப் போக வேண்டிய தேவை இல்லை. எனது அடுத்த பயணத்தில் பருத்தித்துறை வருவதற்கு சந்தர்ப்பங்கள் குறைவு என்று மனது சொன்னது. பல இடங்களுக்குப் போக வேண்டும். அதிலே கிழக்கு மாகாணம் முக்கியம் என கணக்குப் போட்டிருந்தேன். மழை பெரிதாக ஆக்கிரமித்து இருந்ததால் இந்த முறை அது முடியவில்லை. அடுத்தடுத்த பயணங்களில் பார்க்கலாம். மணியனுடன் கொழும்பில் இருந்த போது, அஞ்சப்பன், சண்முகாஸ், தலைப்பாய்கட்டு, இந்தியன் மசாலா, சரஸ்வதிவிலாஸ், ஹோல் பேஸ் ஹொட்டல், … என்று ஏகப்பட்ட இடங்களில் வயதை மீறி சாப்பிட்டிருக்கிறேன். கொஞ்சம் அவகாசம் எடுத்து உடம்பைக் குறைக்க வேணும். ஊர்உலாவில் என்னுடன் பயணித்த உங்கள் அனைவருக்கும், யாழ் இணையத்துக்கும் நன்றி.
  33. 1 point
    நீங்கள் சொல்வதுபோல் ‘செவ்வரத்தை’தான் சரியானது. சிதம்பரத்தை பூ எங்களது ஊர் பேச்சுத் தமிழ்☺️ Address: St. Sebastian Rd, Kalutara 12000, Sri Lanka +94 342 220 222
  34. இஸ்ரேலின் உத்தியை உக்ரைனில் பயன்படுத்திய ரஸ்யா | அரசியல் களம் | ஆய்வாளர் அருஸ் | இலக்கு | ILC திரியோடு தொடர்புடைய விடயங்கள் உரையாடப்படுவதால் இணைக்கப்பட்டுள்ளது. நன்றி - யூரூப்
  35. போதமும் காணாத போதம் – 12 கிளிநொச்சி சந்தையில் மரக்கறிகளை வாங்கி அவசர அவசரமாக வெளியே வந்த “பச்சை” இரணைமடுவுக்குச் செல்லும் பேருந்தில் ஏறி அமர்ந்தார். உளமழுத்தும் இன்னல் முகம் முழுதும் நின்றது. வியர்வையில் தோய்ந்திருந்தார். இன்னுமிரண்டு நாட்களில் பயணம் சரிப்பட்டால் பிள்ளைகளைக் காப்பாற்றி விடமுடியுமென்ற வேண்டுதல். பச்சைக்கு அருகில் வந்தமர்ந்தார் கருவாட்டி யாபாரி மாசிலா. அவரின் பொய்க்கால் நன்றாகப் பழுதடைந்திருந்தது. வெண்புறா நிறுவனத்தில் புதிய பொய்க்கால் வேண்டிப் பதிவு செய்துள்ளதாக பச்சையிடம் தெரிவித்தார். இரணைமடு பேருந்து நிறுத்தத்தில் இறங்கிய பச்சை, ஜன்னல் வழியாக மாசிலாவைப் பார்த்தார். மாசிலா தனது பொய்க்காலை சரிப்படுத்தி கொஞ்சம் ஆசுவாசமாக அமர்ந்திருந்தான். வீட்டில் நின்ற இரண்டு கிடாய்களுக்கும் தவிடு கரைத்து வைத்த “கொண்டோடி” சுகந்தா படலைக்குள் நுழையும் பச்சையை பார்த்தாள். புருஷனின் நடையில் ஏதாவொரு குழப்பமிருப்பதாக உணர்ந்தாள். “என்னன, ரத்தச் சோகை வந்த ஆக்கள் மாதிரி தெம்பில்லாம நடக்கிறியள்” என்று கேட்டாள். பச்சையிடம் பதிலில்லை. வாசலிலிருந்த வாளி நீரில் கால்களைக் கழுவி, வீட்டிற்குள் நுழைந்தார். இரண்டு கிடாய்களும் தவிட்டுத் தண்ணியை மூசி மூசி உள்ளிளுக்கும் சத்தம் மத்தியான வெயிலோடு கூடியிருந்தது. கறுத்து மினுமினுத்து நன்றாக உயர்ந்து நிற்கும் முதல் கிடாய் சித்திரனுக்கும், செவி நீண்ட கறுப்பு நிறத்திலான துடியான மற்ற கிடாய் அப்பனுக்குமென பாலத்தடி சிவன் கோவிலுக்கு நேர்த்தியாக வளர்த்தாள். ஆனால் பிள்ளைகளை காப்பாற்ற தெய்வத்தால் முடியாதென்றும், அது தெய்வத்தையே படைத்த மனுஷனாலேயே ஆகும் காரியமெனவும் பச்சை நம்பினார். தன்னிடமிருந்த பணத்தையும், சொத்துக்களையும் மனம் நிறுத்தி எண்ணினார். கனகாம்பிகைக் குளத்தடியில் ஏக்கர் கணக்கிலிருந்த தென்னந்தோப்பும், முறிகண்டியில் தரிசாகக் கிடக்கும் எழுபது ஏக்கர் நிலமும் வேண்டாமெனத் தோன்றியது. கையிருப்பிலிருந்த பணம் பல லட்சங்கள். வங்கியில் வைப்பிலுள்ள பணத்தையும் கணக்குப் போட்டார். தமிழீழ வைப்பகத்தில் இருக்கிற பணத்தை எடுப்பதில்லை என முடிவு செய்தார். சொத்துக்களை விற்பது இயக்கத்திற்கு தெரிந்தாலும் ஆபத்து நேரும். எதுவும் வேண்டாம். “உயிர். அந்த பொக்கிஷத்தை மட்டும் மீட்டுவிட்டால் போதுமானது. “எத்தனை காலம் இந்த மயிரெல்லாம் நீடிக்கப்போகிறது. இவர்கள் எல்லாம் அழிந்து போகுமொரு நாள் வராமலா போகும். நிலத்துக்காக சாவதெல்லாம் விஷர்த்தனம். ஆயுத வெறி. இத்தனை வசதிகளோடு இருக்கும் எனது பிள்ளைகள் ஏன் துவக்கெடுத்து சண்டை செய்ய வேண்டும்?” என்று கற்பூரத்தைக் கொளுத்தி பாலத்தடி சிவனை வழிபட்டார் பச்சை. “கொண்டோடி”சுகந்தாவிடம் பச்சைத் தண்ணீர் கேட்டால் கூட கிடைக்காது. கோவில் உண்டியலில் ஒரு ரூபாய் போட்டுக்கூட சனங்கள் பார்த்ததில்லை. இயக்கம் சனங்களிடம் நகையும், பணமும் கேட்ட காலத்தில் தன்னுடைய இரண்டு தோட்டையும் கழற்றிக் கொடுத்ததாக ஒரு வரலாறு சொல்லுவாள். ஏற்பாடுகள் எதனையும் சுகந்தாவிடம் பச்சை சொல்லவில்லை. அவளை நம்பமுடியாது. யாரிடமாவது வாய்தவறிச் சொல்லவும் செய்வாள். சித்திரன் பன்னிரெண்டாம் வகுப்பு படித்துக் கொண்டிருந்தான். அப்பன் பதினோராவது வகுப்பு. இருவரும் நல்ல கெட்டிக்காரர்கள். இந்தியாவிற்கு அழைத்துச் சென்று தனது பிள்ளைகளை பெரிய படிப்பெல்லாம் படிக்க வைக்கவேண்டுமென பச்சை ஆவலாதிப்பட்டார். முதன்முதலில் சித்திரனுக்கு தனது திட்டத்தைச் சொல்லலாமென பச்சை உறுதி பூண்டார். வீட்டுக்குப் பின்னாலுள்ள மாந்தோப்பில் கட்டிலில் உறங்கியிருந்த சித்திரனை தட்டியெழுப்பினார். எப்போதுமற்ற பழக்கமொன்றை எதிர்கொண்ட திகைப்பில் கொஞ்சம் நேரம் கதையாமல் இருந்தான். ஆனாலும் பச்சை கதைக்கத் தொடங்கினார். “சித்து, நாங்கள் இஞ்ச இருந்து வெளிக்கிடலாம், இயக்கம் நல்லா இறுகப்போகுது. பிள்ளையளை பிடிச்சு போருக்கு படைக்கப்போறாங்கள். நான் எல்லா ஏற்பாட்டையும் செய்திட்டன். நாளைக்கு பின்நேரமாய் இஞ்சயிருந்து வெளிக்கிட்டு போய்டலாம். பிறகு கடலால இந்தியாவுக்கு” “அப்பா, உங்கட திட்டம் சரி வருமே, ஏதேனும் தகவல் கசிஞ்சால் கூட இயக்கம் மன்னிக்காது. எல்லாத்தையும் பறிச்சுப்போட்டு உள்ள தள்ளிடுவாங்கள்” சித்திரன் ஒத்துக்கொண்டது நல்ல சகுனமென எண்ணினார். பச்சைக்கு கொஞ்சம் தெம்பு வந்தது. “அதைப் பற்றி நீ கவலைப்படாத. கொம்மாவை மட்டும் சம்மதிக்க வைச்சுப் போடு. அதுதான் இப்ப ஒரே தலையிடி.” என்றார். “நாங்கள் எல்லாரும் வெளிக்கிடப் போகிறம் எண்டால் அம்மா இஞ்ச தனிய இருப்பாவே, வரத்தானே வேணும்” காலில் ஒட்டியிருந்த மண்ணைத் தட்டிவிட்டு, நான் அம்மாவிட்ட கதைக்கிறன்” என்றான் சித்திரன். அன்றிரவு வீட்டில் கடுமையான வாக்குவாதங்கள் நிகழ்ந்தன. “இத்தனை சொத்துக்களையும், நிலங்களையும் அம்போவிண்டு விட்டிட்டு ஆள்தெரியாத ஊருக்கு எதுக்கு ஓடோணும். செத்தால் சாவம். எல்லாற்ற பிள்ளையளுக்கும் நடக்கப்போறது தானே எனக்கும் நடக்கப்போகுது. நான் அதைத் தாங்கிக் கொள்வன். ஆனால் இந்த ஊரை விட்டு என்னால வர ஏலாது” சுகந்தா மறுத்தாள். அப்பனுக்கு எந்த விருப்பும் வெறுப்பும் இல்லை. அவன் எல்லாவற்றையும் அமைதியாக கவனித்துக் கொண்டிருந்தான். “சுகந்தா நாட்டில நடக்கப்போறது என்னெண்டு தெரியாமல் கதையாத, இஞ்ச இருக்கிற ஒருத்தரும் மிஞ்சப்போவதில்லை. அந்த நிலைமைக்குத் தான் இவங்கள் ரெடியாகுறாங்கள்”பச்சை சொன்னார். “உயிர் சாம்பலாய்ப் போனாலும் இந்த மண்ணில போகட்டும். இவ்வளவு சனமும் இஞ்ச இருக்க நாங்கள் மட்டும் சாகப்பயந்து ஓடித்தப்புறத நினைக்க குமட்டுது. அவமானம்” “எடியே வே*, உனக்கு அப்பிடியென்னடி கரப்பன் வியாதி. இஞ்ச ஆரோடையோ படுக்க நாள் பார்த்து வைச்சிருக்கிறியோ. நான் என்ன சொல்லுறனோ. அதைச் செய்” அப்பன் வெகுண்டு துடித்தான். அவனது கை நரம்புகளில் கொலைத்துடி எழுந்தது. பச்சையை நோக்கி நடந்து போய் பளார் என்று கன்னத்தில் அறைந்தான். சித்திரன் அதிர்ச்சி அடைந்து அப்பனை இழுத்துப் பிடித்தான். பச்சை கன்னத்தைப் பிடித்தபடி பார்வை மங்க அமர்ந்தார். உடல் சிவந்து தளும்பி அழுதார். சுகந்தா அப்பனை அரவணைத்து நின்றாள். மாந்தோப்பிலிருந்த கட்டிலில் அமர்ந்திருந்த பச்சையிடம் “ அப்போய், இவையள் வராட்டி என்ன நீங்களும் நானும் வெளிக்கிடுவம்” சித்திரன் சொன்னது அவ்வளவு தீவிரமாயிருந்தது. அது பச்சையின் உடலில் எரிந்தடங்க மறுத்த காயத்தின் எரிச்சலுக்கு குளிர் பரப்பியது. ஆனாலும் வேண்டாமென்று மறுத்தார். எல்லாரும் மனம் ஒத்து வெளிக்கிடுவம். அது விரைவிலேயே நடக்கும். பொறுத்திருப்பம்” என்றார். “அதுக்குள்ள தமிழீழம் கிடைச்சால் என்ன செய்யிறது” சித்திரன் கேட்டான். பச்சை தன்னுடைய கன்னத்திலிருந்த கையை எடுத்து “எழும்பிப் போடா மடப்*** சொல் நீக்கப்பட்டுள்ளது - யாழ் இணையம்யாண்டி” என்று ஏசினார். ஒரு சில மாதங்களில் வன்னியில் நிறைய மாற்றங்கள் நிகழ்ந்தன. “புலிகள் படையில் சேர்க” என்ற பிரச்சாரங்கள் வீதிகள் தோறும் நிகழ்ந்தன. பள்ளிக்கூடம் சென்று வருகிற இளவட்டங்களை நிறுத்தி வைத்து போராட்டத்தின் அவசியத்தையும் இக்கட்டையும் பிரச்சாரப் பிரிவு போராளிகள் முன்வைத்தனர். கதைத்து விளங்கவைத்து இயக்கத்தில் இணையுங்கள் என்பது மேலிடத்து ஆணையாம். சுகந்தாவுக்கு சில சம்பவங்கள் அச்சத்தை ஏற்படுத்தின. சித்திரன் நாளும் பொழுதும் தாயிடம் ஒப்புக்கொள்ளல் வாங்கவே நேரம் செலவழித்தான். பச்சை முல்லைத்தீவுக்குச் சென்று ஓட்டியைச் சந்தித்து வந்தார். ஏற்கனவே நடந்ததைப் போல ஏமாற்றம் எதுவும் இந்தத் தடவை நிகழாதென ஓட்டிக்கு உறுதியளித்தார். சுகந்தா ஆடுகளையும் வீட்டிலுள்ள சில பொருட்களையும் சொந்தக்காரர்களிடம் ஒப்படைக்க விரும்பினாள். “எதுவும் செய்ய வேண்டாம். நாங்கள் இல்லையென அறிந்த பிறகு மாமாவே எல்லாவற்றையும் வந்து எடுத்துவிடுவார்” என்றான் சித்திரன். கிளிநொச்சி பேருந்து நிலையத்தில் பச்சை இறங்கினார். அங்கிருந்து இரணைமடுவுக்கு செல்லும் பேருந்துக்காக காத்திருந்தார். சித்திரன் தன்னுடைய நண்பர்களோடு கிரிக்கெட் விளையாடிக் கொண்டிருந்தான். அப்பன் வீரபத்திரர் கோவிலுக்குப் பின்புறமுள்ள பெரிய கல்லொன்றில் அமர்ந்திருந்தான். சுகந்தா தன்னுடைய நகைகளை எடுத்து ஒரு பெரிய தலையணைக்குள் பதுக்கினாள். தங்கத் தலையணை. அதற்கு மேல் எத்தனையோ மெழுகுத்தாள்களால் அரண் அமைத்தாள். எல்லோருக்குள்ளும் நெடிய வலி குறுக்குமறுக்காக தையலிட்டது. எதன்பொருட்டு நிலம் பிரிந்தாலும் வருந்துயர் ஆறாதது. அப்பனுக்குப் பின்னால் வந்து நின்றாள் நறுமுகை. அவளது கைகளில் பனங்காய் பனியாரம் நிரம்பியிருந்தது. நிலத்தின் வாசனையோடு கமழும் பொழுது. அப்பன் அவளை இறுகக் கட்டியணைத்து முத்தமிட்டான். அவளுடைய கைகள் தளர்ந்தன. மண்ணில் சிறுமுலைக்காம்புகள் தோன்றியதைப் போல பனங்காய்பனியாரம் சிதறுண்டன. கல்லின் மீது யாக்கைகள் கனன்றன. அமுதுண்ணும் பொலிவுடன் வண்டுகள் பறந்தன. அப்பனின் மூச்சில் சிவந்த உதடுகளால் நறுமுகை தாகம் பெருகி மிடறு எச்சில் விழுங்கினாள். அப்பனின் தவிப்புக்கூடியது. அவன் சொன்னான் “ நாங்கள் இஞ்ச இருந்து தப்பியோடப் போகிறம்” “எங்க” “இந்தியாவுக்கு. அப்பா ஏற்பாடு செய்திட்டார். படகில போகப் போகிறம்” “உங்கட குடும்பத்துக்கு என்ன விசரே, கடல் முழுக்க இயக்கம் தான். அலைகளையே எண்ணிக் கொண்டிருப்பினம். இதில நீங்கள் எங்க தப்பி, எங்க போகப்போறியள்” “தெரியேல்ல, நடக்கிறது நடக்கட்டும். எல்லாரும் போய், நான் மட்டும் நிண்டால் இயக்கம் என்னைத்தான் சிறையில அடைக்கும்” “நீ, போய் இயக்கத்திட்ட சொல்லு. அப்படியெண்டால் உனக்கு தண்டனை இருக்காது” “அய்யோ, குடும்பத்தைக் காட்டி குடுக்கச் சொல்லுறியோ, அம்மா பாவம்” “அப்ப, கடலில போய் சாகப்போறாய். அப்பிடித்தானே?” “நீ இயக்கத்தில போய் சொல்லிப்போடாத, எனக்கு பயமாயிருக்கு. எதோ ஒரு குறுகுறுப்பில உன்னட்ட சொல்லிட்டேன்” “எனக்கு அது வேலை கிடையாது. ஆனால் உங்கட அப்பா, இதுமாதிரி திட்டத்தில இருக்கிறார் என்று இயக்கத்துக்கு தெரியாமல் இருக்காது. ஊரில இருக்கிற முகவர்கள் ஆரேனும் மணந்து பிடிச்சிருப்பினம்” “எப்பிடி உறுதியாய் சொல்லுறாய் நறுமுகை” “இஞ்ச எதையும் ஆரும் ரகசியமாய் செய்து தப்ப ஏலாது. ஏனென்டால் இயக்கத்தை விடவும் அதைச் செய்ய உலகத்தில ஆளில்லை. ஆனா நீ உந்தப் பயணத்தில சேராத. எனக்காக மட்டுமில்ல, உனக்காகவும் சொல்லுறன்” என்று சொல்லிய நறுமுகை மண்ணில் விழுந்து கிடந்த பனங்காய் பணியாரங்களை ஊதி ஊதி அவனுக்கு தீத்திவிட்டாள். “இவ்வளவு உருசையாய் கிடக்கு” அப்பன் கேட்டான், “மண்ணில இருந்தெடுத்தால” என்ற நறுமுகை அங்கிருந்து புறப்பட்டாள். அப்பன் அதே கல்லிலேயே அமர்ந்திருந்தான். இரவு முழுவதும் அவனைக் காணாது தேடிய சித்திரன் அதிகாலையில் அப்பனைக் கண்டான். வீட்டிற்கு தன்னால் வரமுடியாதென மறுத்து அங்கேயே அமர்ந்தான். சுகந்தா சென்றழைத்தும், பச்சை கெஞ்சிக் கேட்டும் வரப்போவதில்லையென உறுதியாக கூறிவிட்டான். குறிப்பிட்ட நாளில் மூவரும் வீட்டிலிருந்து புறப்பட்டனர். அப்பன் அதே கல்லிலேயே அமர்ந்திருந்தான். சுகந்தா சென்று பயணம் சொன்னாள். அவன் கைகளை காட்டி செல் என்றான். இரண்டு நாட்கள் வெவ்வேறு இடங்களில் பதுங்கியிருந்த மூவரும் கடற்கரைக்கு ஓட்டியொருவரால் அழைத்துச் செல்லப்பட்டனர். பச்சை ஒரு தலைக்கு ஐம்பதாயிரம் ரூபாய்ப் படி பணத்தை அளித்தார். படகு இந்தியாவை நோக்கிப் புறப்பட்டது. அடுத்தநாள் காலையிலேயே படகு ஆளற்ற கரையை அடைந்தது. கண்டல் செடிகளும் தென்னைகளும் நிரம்பி நின்றன. “வந்திட்டமா” பச்சை ஓட்டியிடம் கேட்டார். “ஓம் அண்ணே, இன்னும் கொஞ்சத் தூரம் நடந்து போனால் ராமேஸ்வரம் கோவிலே வந்திடும். இறங்குங்கோ. அக்கா பார்த்து இறங்க வேணும்” என்றான் ஓட்டி. சித்திரன் பாய்ந்து இறங்கி தாய்க்கு கைகொடுத்தான். கடல் மணலில் புதையுண்ட பாதங்களை முன்நகர்த்தாமல் பின்நோக்கித் திரும்பி அவள் இரு கைகளையும் தலைக்கு மேல் உயர்த்தி “என்ர பாலத்தடி சிவனே, அப்பனைக் காப்பாற்றிப் போடு” என்று வணங்கினாள். கொஞ்சத் தூரத்தில் நடந்து சென்றதும் ஓட்டி சொன்னதைப் போலவே விசாரணை அதிகாரிகள் அவர்களை அகதிகளாக பதிவு செய்தனர். பிறகு அவர்களை கூட்டிச் சென்றதொரு வாகனத்தில் ஏற்றினார்கள். வாகனம் சில நிமிட பயணத்துக்குப் பின்பு வீதிக்கு வந்தது. முல்லைத்தீவு என்று கடைப்பலகைகள் தொங்கின. பச்சை அதிகாரிகளிடம் கேட்டார் “ இஞ்சையும் ஒரு முல்லைத்தீவு இருக்கோ” “இருக்கு. அதுக்கு நீங்கள் விசுவமடுவாலையே வந்திருக்கலாம். ஏன் இப்பிடி சுத்தி படகில வந்தனியள்” – அதிகாரியொருவர் கேட்டார். பச்சைக்கு வியர்த்துவிட்டது. சித்திரனுக்கு நடுங்கத் தொடங்கியது. சுகந்தா தனது கைகளை மேலே உயர்த்தி என்ர அப்பனே, உன்னட்டையே கூட்டிக்கொண்டு வந்திட்டாய்” என்றாள். பச்சை அழுது புலம்பி அவர்களின் கையப்பிடித்து “தம்பியவே என்னை மன்னிச்சுக் கொள்ளுங்கோ” என்றார். “இயக்கத்தைச் சுத்திப் போட்டு போகலாமெண்டு நினைச்சியளோ” என்று கேட்டார்கள். “ ஓம். அதுக்கு என்ன, பிள்ளையள அம்மா அப்பா ஏமாத்தக் கூடாதோ?” “அம்மா, நீங்கள் வீட்டுக்கு போகலாம். இவர்களை மட்டும் விசாரணை செய்து விட்டு அனுப்பி வைக்கிறோம்” என்றார்கள். சுகந்தாவை இன்னொரு இயக்க வாகனத்தில் வீட்டில் கொண்டே இறக்கினார்கள். அவள் நேராக அப்பன் அமர்ந்திருக்கும் கல் நோக்கி ஓடினாள். அப்பன் அப்படியே அமர்ந்திருந்தான். “பிள்ளை, அம்மா வந்திட்டன். எழும்பி வா. இனி எங்கையும் போகேல்ல” “நானும் தான். இனி இதுதான் என்னோட இடம். என்னைப் பார்க்க ஆர் வந்தாலும் இங்க வரட்டும்” என்றான். இயக்கத்தினரால் விசாரணை செய்யப்பட்ட பச்சைக்கும் சித்திரனுக்கும் ஆறுமாதம் சிறைத்தண்டனை வழங்கப்பட்டது. தண்டனைப் பணமாக லட்சங்கள் அளிக்கப்பட்டன. பச்சை சிறைக்குள் தனது ஓட்டியை ஒருநாள் கண்டார். புலிச்சீருடையணிந்த அவனது இடுப்பில் கைத்துப்பாக்கி பட்டியில் இருந்தது. அவனுக்குப் பின்னால் பொய்க்காலால் தாண்டித் தாண்டி கருவாட்டு யாபாரி மாசிலா புலிச்சீருடையோடு வந்திருந்தார். பச்சைக்கு நடுநடுங்கியது. மாசிலாவை அழைத்த பச்சை “நீயும் இயக்கமே, என்னட்ட ஒருநாளும் சொன்னதேயில்லையே” என்றார். உங்களுக்கும் எனக்குமிடையே கருவாட்டில் விலைகுறைப்பதற்கு தானே பேச்சுவார்த்தை நடந்திருக்கிறது. கருவாடு வாங்கிற எல்லாரிட்டையும் நான் இயக்கமெண்டு சொல்லி என்ன நடக்கப்போகுது “ என்றார். கல்லின் மீது அமர்ந்திருந்த அப்பன் ஒரு நாள் காணாமல் போனான். நறுமுகையையும் காணவில்லை. ஊரிலுள்ளவர்கள் தேடும் போது இருவரும் மறுகரையில் படகை விட்டு கீழே இறங்கினர். வேதாரண்யம் கடற்கரையில் மீனவர்கள் சிலர் அவர்களைக் கண்டனர். ஓடிச் சென்று அரவணைத்தனர். அப்பனும் நறுமுகையும் அவர்களிடம் குடிப்பதற்கு தண்ணீர் தாருங்கள் எனக்கேட்டனர். அளிக்கப்பட்ட நீரை அள்ளித்தரும் மீனின் வாசனையோடு பருகினர். “இருவரும் கணவன் மனைவியா” “ஓம்” “சின்னஞ்சிறுசுகளாக இருக்கிறீர்களே” “எங்கள் நாட்டில் எல்லோரும் சீக்கிரமாக வளர்ந்து விடுவோம்” “ஏன்” “துவக்கேந்த வேண்டும்” என்றான் அப்பன். https://akaramuthalvan.com/?p=1481
  36. போதமும் காணாத போதம் – 10 ” பூமியை பாவங்களால் நிறைத்தவர்களுக்கு தண்டனையுண்டு. எங்கும் தப்பியோட முடியாதபடி நீதியின் பொறியில் அகப்படுவார்கள். கடந்த காலங்களுக்கான தீர்ப்பு வழங்கப்படும்” அதிவணக்கத்திற்குரிய பிதா இராயப்பு ஜோசப் அவர்கள் குழுமியிருந்த சனங்களுக்கு மத்தியில் உரையாற்றினார். அரச வன்கவர் படையினரால் கடுமையான நெருக்கடிகளையும் சவால்களையும் எதிர்கொண்ட பிதா இராயப்பு ஜோசப் பின்வாங்கவில்லை. பயந்தொடுங்கி வெளிறவில்லை. நிகழ்ந்த மானுடப்படுகொலைக்கு சர்வதேச விசாரணை வேண்டுமென குரல் கொடுத்தார். நீதிமான்களுடைய கூடாரங்களில் இரட்சிப்பின் கெம்பீர சத்தம் உண்டு என்று சொல்லி உரையை நிறைவு செய்தார். அக்கா எதையும் கவனிக்காமல் இரண்டு கைகளையும் தூக்கி முட்டுக்காலில் நின்றாள். சாட்சியமற்ற வெளியில் உதிர மறுக்கும் உதிரச் சிறகுகள் குரூரமாய் வளர்ந்திருந்த நினைவது. மூர்க்கமாய் கொந்தளித்து பற்களை நெருமினாள். அக்காவைப் பிடித்துக் கொண்டேன். அவள் கேட்டாள் “எங்கட பாதர் சொல்ற தீர்ப்பு வழங்கப்படும் நாள் எப்ப வரும் தம்பி?” அவலத்தின் புன்சிரிப்புக்கு பதில்களற்று இரையானேன். சில நாட்களில் அக்காவின் உடல் வலுவிழந்திருந்தது. யாழ்ப்பாண பெரியாஸ்பத்திரிக்கு அழைத்துச் சென்றேன். உளநல மருத்துவ நிபுணரிடம் காண்பித்தேன். ஏற்கனவே அக்காவுக்கு வழங்கப்பட்ட மருந்துகளோடு சிலவற்றை அதிகரித்தார். வாய்ப்பிருந்தால் களவாவோடை அம்மன் கோவிலுக்கு கூட்டிச் செல்லுங்கள் என்றார். துக்க நிவாரணமற்ற வாழ்வு, சிதலங்களின் நீள் சுருள் குறுக்கு மறுக்காக ஓடிக்கிழித்த பாதையில் தனித்துவிடப்பட்டது. நரகத்தில் வெறித்து வருந்தும் பாவிகளாய் எஞ்சிய ஒவ்வொருவருமே சித்தமழிகிறோம் என்றாள் அக்கா. அவளை இறுக அணைத்து தலைதடவினேன். நாங்கள் ஆஸ்பத்திரியை விட்டு வெளியேறி பேருந்துக்காக நின்றோம். பீதி நிரம்பிய கண்களோடு சனங்கள் வாழப்பழகினர். எது நேர்ந்தாலும் தாங்கிக் கொள்ளுமளவு மரத்துப் போனார்கள். இராணுவத்தினர் வீதிகளின் இருமருங்கிலும் நின்று யாழ் நகரத்தை கண்காணித்தனர். “இயக்கத்தை அழிச்சிட்டினம் தானே, இப்ப ஆருக்கு பயப்பிடினம்” மாங்காய் விற்கும் சிறுவன் கேட்டான். “எடேய், தம்பியா மொக்குத்தனமாய் கதைச்சு செத்துப்போய்டாத. உன்னட்ட மாங்காய் வாங்கினது பிழையா போயிற்று” நடுநடுங்கி அங்கிருந்து விலகியோடினார் படித்த யாழ்ப்பாணன். மீளக்குடியமர்ந்து சில நாட்களிலேயே அக்காவைப் பீடித்த உளத்துயரினால் வன்னியில் வாழ முடியவில்லை. அவளை அமைதிப்படுத்தவோ சுகப்படுத்தவோ தெய்வங்களிடம் வல்லமை இல்லாதிருந்தது. சொந்தக் கிராமத்தை விட்டு வெளியேறி யாழ்ப்பாணத்தில் வாடகைக்கு குடியிருந்தோம். செப்பனிடப்பட்டு இரண்டு அறைகள் கொண்ட கல்வீட்டில் உறங்கி விழித்தோம். ஏழாலையிலுள்ள பரியாரியார் ஒருவரிடம் அக்காவை அழைத்துச் சென்றோம். அவர் லேகியங்களையும், சூரணங்களையும் வழங்கி சுகமாகும் என்றார். ஆனால் அதற்கான எந்தச் சமிக்ஞைகளும் தோன்றவில்லை. நாளுக்கு நாள் அவளது பிரச்சனை அதிகமாயிற்று. அக்காவுக்கு விசர் என்று யாழ்ப்பாணத்திலும் சொல்லத் தொடங்கினர். வீட்டின் முன்னே நிற்கும் வாதாம் மரத்திலேறி ஊர் விழிக்க கத்தினாள். கோவிலில் தீபாராதனை நடந்து கொண்டிருந்த போது, தன்னுடைய பாவாடையைக் கழற்றி கருவறைக்குள் வீசிவிட்டாள். கட்டுப்படுத்த இயலாமல் அவளுக்கிருந்த ஒரே காலில் உருகுதடமிட்டு கயிற்றால் இறுக்கினோம். வீட்டிற்கு வந்தவர்கள் அக்காவுக்காக பரிதாபம் கொண்டனர். எங்களைப் போன்ற கல்மனம் கொண்டவர்கள் யாருமில்லையென சொல்லினர். தெய்வத்தை விடவுமா? என்றேன். “தம்பி, டாங்க் வருகிற சத்தம் கேக்குது, பங்கருக்குள்ள வா” அக்கா சொன்னாள். அவளுடைய கணுக்காலில் கயிற்றுத் தடம் நிரந்தரமாய் பதியத் தொடங்கியது. “சண்டை முடிஞ்சுது, இனி டாங்க்ம் வராது, கிபிரும் வராது. அமைதியாய் இரு” என்றேன். “போடா விசரா. சண்டை முடிஞ்சுதோ. நீயென்ன தளபதியே. சண்டை நடக்குது. எனக்குச் சத்தம் கேக்குது.” “எடியே வே*! கொஞ்சம் சும்மா இரடி. உதால போற ஆர்மிக்காரங்கள் கேட்டால் எங்கட கெதியென்ன” வீட்டிற்கு வந்திருந்த அத்தை நடுங்கிச் சொன்னாள். அக்கா பல ஆண்டுகளாய் உறங்காதவள். எத்தனையோ மருந்துகள் கொடுத்தும் பயனில்லை. அவள் யாருடனோ கதைத்துக் கொண்டே இருக்கிறாள். தன்னுடைய பெயரை ஒவ்வொரு நாளும் ஒன்றாகச் சொல்லுகிறாள். திடீரென அழத்தொடங்கி நிலத்தில் விழுந்து துடிக்கிறாள். அவளுக்குள் நிகழ்வது என்ன? ஒரு யுகத்தின் வீழ்ச்சியைப் பொடித்து அவளுக்குள் புதைத்தவர்கள் யார்? எப்போதாவது ஜன்னல் வழியாக நட்சத்திரங்களைப் பார்த்து உறைந்திருப்பாள். ஒருநாள் என்னையழைத்துக் கேட்டாள். “இண்டைக்கு வந்திருக்கிற நட்சத்திரங்கள் எல்லாமும் ஆர் தெரியுமா?” வானத்தைப் பார்த்தபடி கேட்டேன், ஆர்? “ஆரோ! எல்லாம் எங்கட குழந்தையள் தான். நாங்கள் இதுவரைக்கும் மண்ணுக்குள்ள புதைச்ச குழந்தையள். ஷெல்லடியிலையும், கிபிர் அடியிலையும் காயப்பட்ட அதுகளின்ர கடைசி நொடித் துடிப்ப மேல உத்துப் பார் என்றாள். நம்பவியலாதபடி எல்லா நட்சத்திரங்களும் துடியாய்த் துடித்தன. தானியங்கள் சொரிவதைப் போல அவை மண்ணில் விழுந்தன. வானில் யாவும் அழிந்திருந்தன. திடுமென மழை கொட்டத் தொடங்கிற்று. அக்கா வானத்தையே பார்த்துக் கொண்டிருந்தாள். அவளை படுக்கைக்கு அழைத்துச் சென்று நித்திரை கொள் என்றேன். “எனக்கு நித்திரை வரவில்லை. நீ போய் படு” சலிப்புடன் தலையாட்டிவிட்டு விலகினேன். அக்கா கட்டிலிலேயே அமர்ந்திருந்தாள். இல்லாது போன காலின் எஞ்சிய துண்டத்தை பார்த்துக் கொண்டேயிருந்தாள். எக்காளச் சிரிப்போடு எழுந்து நின்றாள். மூதாதையர்களின் காலடியென மழை சீற்றம் கொண்டாடியது. தலையைத் தாழ்த்தி உச்சாடனமாய் அக்கா எதையோ சொல்லத் தொடங்கினாள். படுக்கையை விட்டு எழுந்து வந்து அவளைப் பார்த்தேன். முகம் முழுதும் ஆக்ரோஷத்தின் தீ பழுத்து அவளுடல் காயங்களால் துடிதுடித்தது. பக்கத்தில் செல்லப் பயந்தேன். யாரோடோ அவ்வளவு வேகமாக கதைக்கத் தொடங்கினாள் அக்கா. தெய்வத்தின் லட்சணத்தோடு அகோரம் பூண்டிருந்தாள். குருதியின் வரலாற்றுப் படலம் மிதக்கும் துயரத்திவலையாக அசையாதிருந்தாள். “அக்கா” என்றழைத்தேன். அவளால் முடிந்ததெல்லாம் இதுதான் என்பதைப் போல தன்னுடைய கையிலிருந்த சிறிய தீப்பெட்டியைத் தந்து அதனைத் திறந்து பார் என்றாள். யாரோ கடித்து மிச்சம் வைத்த பிஸ்கட் கடல் மணலும் குருதியும் ஒட்டி உலர்ந்திருந்தது. மீண்டும் மீண்டும் எதுவும் புரியாமல் பார்த்தேன். “இதென்னக்காக, ஆரோ சாப்பிட்ட மிச்ச பிஸ்கட்ட எடுத்து வைச்சிருக்கிறாய். அதில ரத்தம் வேற காய்ஞ்சிருக்கு” என்றேன். “இந்த பிஸ்கட்டும் அதில ஒட்டியிருக்கிற கடல் மணலும் ரத்தமும் தான் எங்கட மிச்சம்” “ஆர் சாப்பிட்ட மிச்சமிது” “எங்கட சந்ததியோட மிச்சம். அந்த மிச்சம் சாப்பிட்ட மிச்சம்” என்று சொல்லிக்கொண்டிருந்த அக்காவின் மீது இறங்கியதொரு நிழல் கண்டேன். கண்களை மூடித் திறந்தேன். அக்கா படுக்கையில் அமர்ந்திருந்து “என்னடா” என்று கேட்டாள். என்னால் எதுவும் சொல்ல இயலவில்லை. மழை பாதாளம் வரை இறங்குகிறேன் என்பதைப் போல அடித்துப் பெய்தது. அன்றைக்கு மதியம் கோவிலில் கும்பாபிஷேகம் நடந்தது. வீட்டுக்கு பக்கமிருப்பதால் நானும் அம்மாவும் சென்றோம். அக்கா வீட்டிலிருந்தாள். அவளது கையில் கோவில் நூலைக் கட்டிவிட்டேன். அம்மா காலில் கயிற்றைக் கட்டி இரும்போடு இணைத்தாள். அன்னதானம் முடித்து திரும்பிவருகிற போது அக்கா யாரோடோ கதைப்பது கேட்டது. வாசலை எட்டிப் பார்த்தால் எவரின் செருப்பும் இல்லை. நாங்கள் உள்ளே சென்றோம். அக்கா, தனக்கருகே இருந்த கதிரையை நகர்த்தி வைத்து விட்டு, “இதில இருந்து கதையுங்கோ” என்றாள். அம்மா “ஆரடி மோளே வந்திருக்கிறது” என்று கேட்டாள். “உங்களுக்குத் தெரியாதம்மா. இயக்கத்தில பெரிய ஆள். பெயர் சொல்ல வேண்டாமாம்” அக்கா சொன்னாள். “எனக்கு பெயர் மறைக்கிற இயக்க ஆளை இண்டைக்குத் தான் கேள்விப்படுகிறன். சரி சாப்பிடுகிறாரோ. சமைக்கவா.கேள்” “வேண்டாம் அவர் வெளியால போய் மச்சம் சாப்பிடுகிறாராம். இண்டைக்கு நாங்கள் விரதமெண்டு யோசிக்கிறார்” “எடியே விசரி. வந்திருக்கிறவன் இயக்கமோ, அல்லது கோவில் தர்மகர்த்தாவோ. தெய்வத்துக்கு தானே விரதமிருக்கிறம். அது என்ன கேக்குதோ குடுக்கிறதுதான் விரதம். என்ன வேணுமெண்டு கேள்” “மீன் பொரியலாம்” “சரி அரைமணித்தியாலம் கதைச்சுக் கொண்டிரு. சமையல் முடிஞ்சிடும்” என்றாள் அம்மா. நான் அடுப்படிக்குள் நுழைந்து “என்னம்மா நீயும் அவளோட சேர்ந்து விசராட்டம் போடுகிறாய்” என்று கத்தினேன். அம்மா கண்ணீரை துடைத்து வீசினாள். “ஓலமிட்டு குரல் கரைக்குமளவு சாம்பலின் பாரம் நெஞ்சில இருக்கு, ஆனால் அழக் கூடாது. கழிவிரக்கம் காட்டி துயரத்திட்ட மண்டியிடக் கூடாது. இந்தக் குறுகிய வாழ்வில சித்தம் பிறழ்ந்து வாழ்றதெல்லாம் கொடுப்பினை மோனே. கொக்காவுக்கு எதுவும் தெரியேல்ல. அவளுக்குள்ள கொந்தளிப்புமிருக்கு அமைதியுமிருக்கு. ஆனால் நல்லாய் இருக்கிற எங்களிட்ட அமைதி எங்கயிருக்கு சொல்லு. அவள் ஆரோடையாவது கதைக்கிறாளே அது காணும். எனக்கு அது நிம்மதியாய் இருக்கு” என்றாள். அம்மா கீரி மீன் பொரியலோடு சோற்றைப் பரிமாறினாள். ஏற்கனவே கால் கட்டை கழற்றியிருந்தேன். அக்கா கூந்தலை அவிழ்த்து ஒற்றைக்காலில் நின்று கொண்டு சாப்பிடத் தொடங்கினாள். கண்கள் நிறம் மாறி ஒளிர்ந்தன. வயிறு திறந்து அலறுவதைப் போல அக்கா காற்றை விட்டாள். சோற்றுக் கவளங்களை எரியும் தீயில் வீசுவதைப் போல தனக்குள் தள்ளினாள். பசியின் காலடியில் அவளுடல் நடுங்குகிறது. அவளது பசியா? யாரின் பசிக்கு அக்கா உணவு உண்கிறாள்? அம்மாவை அந்தத் காட்சி தாளமுடியாது உருக்குலைத்தது. தட்டில் மீண்டும் சோறு பரிமாறினோம். புதிய கனவு மாதிரி அக்காவுக்குள் விழித்தெழுந்தது யார்? ஒற்றைக்காலுடன் நின்றுகொண்டே உணவுண்ட அவளின் ஆங்காரம் மெல்ல மெல்ல அடங்கியது. சோற்றுத் தட்டை வீசி எறிந்தாள். யாராலும் அறியமுடியாத மொழியின் தெய்வச் சடங்கா நிகழ்ந்து முடிந்தது. அக்கா அப்படியே சிறுநீர் கழிந்தாள். வீடெங்கும் வெக்கையும் கடல் வாசனையும் எழுந்தது. அம்மா எதுவும் சொல்லவில்லை. நடப்பவற்றை பார்த்தபடி இருந்தாள். சில நாட்களுக்குப் பிறகு ஒரு மழைப் பொழுதில் அக்கா நன்றாக உறங்கினாள். கடைக்குச் சென்று திரும்பிய அம்மாவுக்கு அதுவொரு திருக்காட்சியாக அமைந்தது. சிறிய போர்வையால் அவளது கால்களை மூடினேன். “பரியாரியிடம் போய் அவள் நித்திரை கொண்டதைச் சொல்லு” என்றாள் அம்மா. போகலாமென தலையசைத்தேன். அக்கா விழிக்கும் வரை அருகிலேயே இருந்தேன். ஒருக்களித்துப் படுத்தவள் மல்லாந்து கொண்டாள். அவளுடைய பாயின் விளிம்பில் பிள்ளையார் எறும்புகள் ஓடின. அக்காவின் முகத்தில் இறுமாப்பு சேர்ந்திருந்தது. எல்லாமும் புதைந்த கடைசித் திகதியில் முள்ளிவாய்க்காலை விட்டு வெளியேற முடிவு செய்தோம். அக்கா வர மறுத்தாள். உந்தக் கெடுவார் ஆர்மிக்காரங்களிட்ட வந்து வாழ ஏலாது. என்னை ஆரேனும் சுட்டுக் கொல்லுங்கோ” என்று சத்தமாய் கத்தினாள். அன்றைக்குத் தான் இந்த இறுமாப்பை கடைசியாகக் கண்டது. அக்கா விசுக்கென விழித்தெழுந்து தலையிலடித்தபடி கேட்டாள். “நாங்கள் எப்பிடி தப்பினாங்கள்” “நாங்களும் தப்பேல்ல மோளே” என்றாள் அம்மா. திசை பிறழாது கடல் நோக்கி ஓடினாள். தன்னுடைய நிர்வாணத்தை வெறிகொண்டு படைத்து, “கடலே! மீதியற்று அழிந்து போ, லட்சோப லட்ச சனங்களின் பிணம் விழுங்கிய உன் அலைகளில் கொடுஞ்சாபம் படிந்திருக்கிறது. அழிந்து போ. பூமியிலிருந்து பாவம் மறைந்து போகட்டும். தீயோர் என்றென்றும் அழிந்து போவார்களாக!” என்றாள். அலை ஒடுங்கி இருண்டது கடல். ஊர்ந்து வந்து அக்காவின் தாள் பணிந்து “என் மகளே! மன்னிக்க” என்றது. வானத்தில் சுடர்ந்த நட்சத்திரங்கள் துடிதுடித்தபடி நடப்பவற்றை பார்த்தன. அக்கா மேல்நோக்கிப் பார்த்து “பிள்ளைகளே! உங்களின் பொருட்டு எவரையும் மன்னிக்கேன், நீங்கள் அமைதி கொள்ளுங்கள். உம்முடைய நியாயத்தீர்ப்புகள் நல்லவைகள்”என்றாள். மோதித்தெறிக்கும் முழக்கத்தோடு மழை பொழிய கடல் மீது ஒலித்த அவளின் குரல் நூற்றாண்டின் முறையீடு. எம்மை வஞ்சித்த பூமி அஞ்சட்டும் என்றனர் சனங்கள். https://akaramuthalvan.com/?p=1388
  37. பிரபா சிதம்பரநாதனின் வேண்டுகோளுக்கு அமைய அவர் பெயர் 'P.S.பிரபா' என மாற்றப்பட்டுள்ளது.
  38. புலிகள் இதனைச் சோதனைப் பதிப்பாக உருவாக்கியிருக்கிறார்கள். மேற்கண்ட கலத்தின் உட்பகுதி:
  39. கடந்த வருடம் இதே இடத்தில் கொட்டும் பனிக்குள் அகப்பட்டு மிகவும் அவதிப்பட்டோம். இப்போது அதே மாதிரி பனிச்சரிவுக்குள் அகப்பட்டு ஒருவர் காலமாகியுள்ளார்.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.