Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Leaderboard

  1. ரஞ்சித்

    கருத்துக்கள உறவுகள்
    28
    Points
    8975
    Posts
  2. தமிழ் சிறி

    கருத்துக்கள உறவுகள்
    11
    Points
    88816
    Posts
  3. suvy

    கருத்துக்கள உறவுகள்
    10
    Points
    33807
    Posts
  4. nunavilan

    கருத்துக்கள உறவுகள்
    7
    Points
    53012
    Posts

Popular Content

Showing content with the highest reputation on 02/02/24 in all areas

  1. அன்பார்ந்த யாழ் இணைய உறவுகளுக்கு, எதிர்வரும் 30.03.2024 அன்று யாழ் இணையம் 25 அகவைகளைப் பூர்த்திசெய்து தனது 26 ஆவது அகவைக்குள் காலடி எடுத்து வைக்கின்றது. 1999ம் ஆண்டு மார்ச் மாதம் 30ம் நாள் தொடங்கப்பட்ட யாழ் இணையம், பல்வேறு சவால்களையும் தாண்டி, தொழில்நுட்ப வளர்ச்சியின் வேகமான மாற்றங்களுக்கும், சமூக வலைத்தளங்களின் துரித வளர்ச்சிக்கும் ஈடுகொடுத்து இன்றும் தன்நிகரற்ற தமிழ் இணையத்தளமாய் இருக்கின்றது. யாழ் இணையம் 26 ஆவது அகவையில் காலடி எடுத்து வைக்கும் நாளினைச் சிறப்பிக்கும் முகமாக இம்முறையும் கள உறுப்பினர்களின் சுயமான ஆக்கங்களைக் கோருகின்றோம். சுய ஆக்கங்கள் கவிதை, கதை, அனுபவங்கள்(பயணங்கள் உட்பட), மொழியாக்கம், பத்திகள், அறிவியல் கட்டுரைகள், ஆய்வுகள் போன்று எந்த வடிவிலும் அமையலாம். கலை வெளிப்பாடுகளைக் கொண்ட ஒளிப்படமாகவோ, ஓவியமாகவோ, காணொளியாகவோ கூட இருக்கலாம். சுய ஆக்கங்கள் உறுப்பினர்கள் விரும்பும் எத்தகைய கருப்பொருள்களிலும் அமையலாம். இச் சுய ஆக்கங்கள் முகநூல் நிலைத்தகவல், டுவிட்டர் குறுஞ்செய்தி போன்று மிகவும் குறுகியதாக அமையாமல் இருத்தல் வேண்டும். மேலும், இச் சுய ஆக்கங்களில் யாழ் களம் 26 ஆவது அகவையில் காலடி வைப்பதற்கான வாழ்த்து விடயங்களை தவிர்ப்பது நல்லது. எமது நோக்கம் அனைத்து கள உறவுகளையும் அவரவர் திறமைகளுக்கேற்ப சுயமான ஆக்கங்களைப் படைப்பதற்கான வெளியை யாழ் கருத்துக்களத்தில் வழங்குவதேயாகும். இதன் மூலம் அனைத்து கள உறவுகளும் தேங்கிப்போயுள்ள தமது படைப்புத் திறனை வெளிக்காட்டுவார்கள் என்று நம்புகின்றோம். எனவே அனைவரையும் உற்சாகத்துடன் பங்குகொள்ளுமாறு கோருகின்றோம். யாழ் களம் 26 ஆவது அகவைக்குள் காலடி வைப்பதை முன்னிட்டு யாழ் கள உறவுகளின் சுய ஆக்கங்களுக்கான சிறப்புப் பக்கம் வெகுவிரைவில் தயாராகும். கள உறவுகள் சுய ஆக்கங்களைத் தயார்படுத்தவும், மெருகேற்றவும் ஒரு சில வாரங்களே இருக்கின்றன. நாட்கள் விரைந்து ஓடிவிடும் என்பதால், காலந்தாழ்த்தாது சுய ஆக்கங்களைத் தயார்படுத்த இப்போதே ஆயத்தமாகுங்கள். விதிமுறைகள்: யாழ் கள உறுப்பினர்கள் மட்டுமே ஆக்கங்களை படைக்கலாம். உறுப்பினர்கள் அல்லாதவர்கள் உறுப்பினர்களாக இணைந்து ஆக்கங்களை இணைத்துக் கொள்ளலாம். ஆக்கங்கள் கள உறுப்பினர்களின் சுயமான ஆக்கங்களாக இருக்கவேண்டும். கருப்பொருள் எதுவாகவும் இருக்கலாம் (வாழ்த்துக்களைத் தவிர்த்து). எனினும் ஆக்கங்களின் உள்ளடக்கத்திற்கு உறுப்பினர்களே முழுப் பொறுப்பும் ஏற்க வேண்டும். கள உறுப்பினர் ஒருவர் ஒன்றுக்கு மேற்பட்ட ஆக்கங்களைப் படைக்கலாம். கள உறுப்பினர் ஒருவர் ஒன்றுக்கு மேற்பட்ட வகைமைகளில் ஆக்கங்களைப் படைக்கலாம். ஆக்கங்கள் இதற்கு முன் வேறெங்கும் பிரசுரம் ஆகாததாக இருக்கவேண்டும். ஆக்கங்கள் யாழ் கள விதிகளை மீறாத வகையில் அமையவேண்டும். "நாமார்க்கும் குடியல்லோம்" நன்றி யாழ் இணைய நிர்வாகம்
  2. மிக்க நன்றி. நானும் யோசித்து பதிகிறேன்.🙏 ஒருவேளை, அது இனிய யாழ் உறவின் சந்திப்பாகவும் இருக்கலாம்.😍
  3. @ரஞ்சித் எழுதிய இரண்டாம் பயணத்தையும் 26 வது அகவைக்குள் உள்வாங்கலாமே.
  4. முடிவு பிழை என்றால் கனடிய தூதுவரை ஏன் திருப்பி அழைக்கவில்லை,சுரேன்.சுரேந்திரன். எனும் திரியில் இருந்து பல தனிமனித தாக்குதல் கருத்துக்களும் பதில்களும் நீக்கப்பட்டுள்ளன. களவிதிகளை மீறும் கருத்துக்களை உறுப்பினர்கள் நிர்வாகத்திற்கு முறைப்பாட்டு முறை மூலம் அறியத்தந்தால் உடனடியாக நடவடிக்கை எடுத்து யாழ் களத்தின் தரத்தைப் பேணமுடியும். இதற்கு கள உறுப்பினர்களின் ஒத்துழைப்பைக் கோருகின்றோம்.
  5. அட, கழுகு தேன் குடிக்குமா.....! 😂
  6. 'கனேடிய தமிழர் பேரவை அலுவலகம் மீது தாக்குதல்...! விசாரணை தீவிரம்' என்ற தலைப்பிலிருந்து சக உறுப்பினரை விமர்சித்து எழுதிய கருத்துகள் மற்றும் அநாவசிய உரையாடல்கள் நீக்கப்பட்டுள்ளன.
  7. ஆகா வன்னியர் உங்கள் சந்திப்பை படங்களுடன் பதியுங்கள்.
  8. ஒரு சின்ன முயற்சியில் வெற்றி அடைந்துள்ளேன்! யாழில் மட்டும் பாவிக்கத்தக்க தமிழீழத் தேசியக் கொடி எமோஜியை வடிவமைத்துள்ளேன். வழக்கமாக ஊரில் செய்வது போன்று இருப்பதை வைத்தே ஒன்றை உருவாக்கியுள்ளேன். இது ஒரு செப்பமற்ற வடிவமைப்பே (crude design) ஆகும். இருப்பினும் ஒரு முயற்சிதான். கிட்டத்தட்ட ஒரு எமோஜிக்கு நிகராக இதை நீங்கள் பாவிக்கலாம். ஏன், ஒரு செப்பமற்ற ஒரு எமோஜிதான் இதுவும் கூட. முயற்சி செய்து எப்படி இருக்குதென்டு சொல்லுங்கோ! செய்முறை: ஒரு புலிக்கொடியை எடுத்து 30 தர 16 என்ற அளவிற்கு மாற்றியுள்ளேன். பாவிக்கும் முறை: இதனை "Copy image address"/ "Copy link address"/ "Copy link" செய்து உங்களுக்குத் தேவையான எழுத்துக்களின் நடுவில் எவ்விடத்தில் ஒட்டினாலும் அவ்விடத்தில் புலிக்கொடியின் எமோஜி தோன்றும் . Copy this and save it in your keyboard clipboard. So that you can reuse it. image address: <-- எடுத்துக்காட்டு https://yarl.com/forum3/uploads/monthly_2024_02/large.Tamil_Eelam_Flag_svg.png.42a10655ca40d28029bdb47880fc1971.png
  9. Packiyanathan Sasikumar derStponos031l5hc071i f58c3a206288m13g38hcm8hg545036h9a0m09a · முன்னொரு காலத்தில் ஜப்பான் நாட்டில் சட்டம் ஒன்று நடைமுறையில் இருந்தது.* அதாவது வேலை செய்ய முடியாத முதுமைப் பருவத்தினை அடையும் வயதானவர்களை தூக்கிச் சென்று, மலைப் பகுதியில் விட்டு விட வேண்டும். இதனால் வயதானவர்களைப் பராமரிக்க வேண்டிய சுமை நாட்டு மக்களுக்கு இல்லை என்பது அரசனின் எண்ணம். அந்தச் சட்டம் நடைமுறையில் இருந்த போது ஒரு தந்தையும் மகனும் ஒருவரிடம் ஒருவர் மிகுந்த அன்பு கொண்டவர்களாக விளங்கினர். நாளடைவில் அந்த‌த் தந்தை வேலை செய்ய இயலாத முதுமைப் பருவத்தை அடைந்தார். ஆதலால் அந்நாட்டின் சட்டப்படி அவரை மகன் மலைப்பகுதியில் கொண்டு விட்டு விட வேண்டிய நிர்பந்தத்திற்கு ஆளானான். தந்தையைப் பிரிய அவனுக்கு மனமே வரவில்லை. எனினும் அரச தண்டனைக்குப் பயந்து அவன் தன்னுடையத் தந்தையை மலைப்பகுதிக்கு முதுகில் சுமந்து சென்றான். மலைப்பகுதியை அடைந்த போது அவனுடைய மனம் மிகவும் வருந்தியது. ஆதலால் அவன் தந்தையை தன்னுடனே அழைத்துக் கொண்டு திரும்பி வீட்டிற்கு வந்து விட்டான். வீட்டின் பின்பகுதியில் தந்தையை யாருக்கும் தெரியாமல் மறைத்து வைத்தான். மிகவும் ரகசியமாக அவருக்கு உணவளித்து வந்தான். சாம்பல் கயிறு. ஒரு நாள் அரசன், தன் மக்களின் அறிவுத் திறனை சோதிக்க எண்ணி, போட்டி ஒன்றை அறிவித்தான். சாம்பலால் திரிக்கப்பட்ட கயிறினை கொண்டு வர வேண்டும் என்பதே அப்போட்டியாகும். போட்டியைக் கேட்டதும் எல்லோரும் சாம்பலால் எவ்வாறு கயிறு திரிக்க இயலும் என்று எண்ணினர். யாராலும் சாம்பல் கயிறு உருவாக்க முடியவில்லை. அரசனின் போட்டி பற்றி அந்த‌ மகன் தன் தந்தையிடம் தெரிவித்தான். போட்டியைக் கேட்ட தந்தை, மகனிடம் பெரிய தாம்பாளத்தில் கயிறினை முறுக்கி வைத்து, அதனை எரியச் செய்தால் சாம்பலால் திரித்த கயிறு கிடைக்கும் என்றார். மகனும் தந்தை கூறியபடி தாம்பாளத்தில் கயிறினை வைத்து எரித்தான். கயிறு எரிந்து சாம்பாலான பின்பும் அதே கயிறு வடிவில் இருந்தது. இதனை அரசனிடம் காண்பித்து பரிசினைப் பெற்றான். அடி எது? நுனி எது? ஒரு மாதம் கழித்து அரசன் இரண்டாவது போட்டியை அறிவித்தான். அரசன் ஒரு மரக்கொம்பைக் கொடுத்து இதனுடைய அடிப் பாகம் மற்றும் நுனிப் பாகத்தைக் கண்டு பிடிக்குமாறு மக்களுக்கு ஆணையிட்டான். கிட்டத்தட்ட இரு பகுதியும் ஒன்றாகத் தெரிந்ததால் யாராலும் அடி எது? நுனி எது? என்று சொல்ல முடியவில்லை. மகன் தந்தையிடம் அரசனின் கேள்வியைக் கேட்டான். தந்தை மரக்கொம்பை தண்ணீரில் போட்டால், அது லேசாக சாய்வாக மூழ்கும்; அப்போது கீழ் நோக்கி இருக்கும் பகுதி அடி, மேல் நோக்கி இருக்கும் பகுதி நுனி என்றார். மகனும் தந்தை கூறியவாறே அரசனுக்குச் செய்து காண்பித்து இம்முறையும் பரிசினைப் பெற்றான். தட்டாமல் ஒலி எழுப்பும் மேளம். அரசன் மூன்றாவது போட்டியை மிகவும் கடுமையானதாக வைத்தான். அதாவது தட்டாமல் ஒலி எழுப்பும் மேளம் ஒன்றினைத் தயார் செய்து வருமாறு மக்களிடம் கூறினான். வழக்கம் போலவே எல்லா மக்களும் பின்வாங்கி விட்டனர். அரசனின் கேள்வியால் மகன் மிகவும் சோர்ந்து தந்தையிடம் வந்து நடந்ததைக் கூறினான். தந்தை அவனிடம் “மேளத்திற்குத் தேவையான தோல்களை எடுத்துக் கொள். மலைப்பகுதிக்குச் சென்று தேனீக்கூடு ஒன்று கொண்டு வா. அதனை உள்ளே வைத்து மேளத்தை தயார் செய்” என்றார். மகனும் தந்தை கூறியவாறே மேளத்தை தயார் செய்து அதனை அசைக்காமல் கொண்டு சென்று அரசனிடம் தந்தான். அரசன் மேளத்தைக் கையில் எடுத்து மேளத்தை அசைத்தான். மேளத்திற்கு உள்ளே இருந்த தேனீக்கள் அசைவினால் மேளத்திற்குள் இங்கும் அங்கும் பறந்தன. இதனால் மேளத்தில் தட்டாமல் ஒலி உண்டானது. இதனைக் கண்டு ஆச்சர்யமடைந்த அரசன் “உன்னால் எப்படி மூன்று கேள்விகளுக்கும் சரியான விடைகளை செய்து காண்பிக்க முடிந்தது?” என்று கேட்டான். அனுபவம் தந்த பதில்கள். “அரசே உங்களுடைய கேள்விகளுக்கு விடை காணும் அளவிற்கு எனக்கு அனுபவம் கிடையாது. என்னுடைய வயதான தந்தை என்னுடன் இருக்கிறார். அவர் மூலமே எனக்குத் தங்களின் கேள்விக்கான பதில் கிடைத்தது.” என்று கூறினான். இளைஞனின் பதில் அரசனை நெகிழச் செய்தது. சிக்கலான பிரச்சினைகளைத் தீர்வு செய்ய‌ வயதானவர்களின் அனுபவம் உதவியாக இருக்கும் என்பதை அரசன் உணர்ந்து கொண்டான். உடனே அவன் “இனி வேலை செய்ய இயலாத வயதானவர்களை, மலைப்பகுதிக்கு கொண்டு போய் விடத் தேவையில்லை” என்று உத்தரவு போட்டான். அதுமுதல் வயதானவர்கள் தங்கள் கடைசிக் காலத்தை பிள்ளைகளுடன் மகிழ்ச்சியாகக் கழித்தனர். அனுபவ அறிவு என்றைக்கும் விலை மதிப்பில்லாதது என்பதைத் தட்டாமல் ஒலி எழுப்பும் மேளம் கதை மூலம் அறியலாம். ஆம், வயதான பெரியவர்கள் வீட்டில் இருப்பதே நமக்கு இறைவன் கொடுத்த அருள் என்று உணர்வோம். நம்மை ஆளாக்கிய பெற்றோரின் வயதான காலத்தில் அவர்கள் நம்மோடு இருப்பதும் அவர்களை பராமரிப்பதும் நமக்கான கடமை மட்டுமல்ல நமக்கு கிடைத்த அருள் என்று உணர்வோம். தொப்புள் கொடியில் இருந்தே தொடங்கிய தாயும் மார்பிலும் தோளிலும் தூக்கிச் சுமந்து கால் தேய உழைத்து நம்மை உருவாக்கிய தந்தையும் நம்மிடம் நன்றியை எதிர்பார்க்கவில்லை *என்றாலும் நாம் நன்றியுடன்* *பராமரிக்க வேண்டும்.*
  10. நுவரெலியாவில் வீதி ஓரத்தில் (கண்டி வீதி) உள்ள ஒரு மரக்கறி கடை.
  11. Putin னின் உக்ரேன் யுத்தம் தொடர்பாக வாய் கிழியக் கத்தியவர்கள் தற்போது பலஸ்தீனத்தில் நடைபெற்றுக்கொண்டிருக்கும் இனவழிப்பு தொடர்பாக ஊமையானது ஏன்? South Africa Beefs Up Security After Dispute With Israel http://www.bnnbloomberg.ca/polopoly_fs/1.2029681!/fileimage/httpImage/image.jpg_gen/derivatives/landscape_620/khumbudzo-ntshavheni-south-africa-s-minister-in-the-presidency-during-a-bloomberg-television-interview-at-the-south-africa-investment-conference-in-johannesburg-south-africa-on-thursday-april-13-2023-today-s-conference-starts-as-data-this-week-showed-that-the-south-african-economy-has-probably-entered-a-technical-recession.jpg Khumbudzo Ntshavheni, South Africa's minister in the Presidency, during a Bloomberg Television interview at the South Africa Investment Conference in Johannesburg, South Africa, on Thursday, April 13, 2023. Today's conference starts as data this week showed that the South African economy has probably entered a technical recession. , Bloomberg S'thembile Cele, Bloomberg News 23h ago (Bloomberg) -- South Africa has beefed up its state security agency and placed it on high alert amid concerns over the possible fallout of the government’s decision to take legal action against Israel to try and bring a halt to its war with Hamas. Khumbudzo Ntshavheni, the state security minister, reiterated concerns voiced by President Cyril Ramaphosa earlier this week that “foreign intelligence agencies” were being used to retaliate against South Africa for filing its lawsuit in the International Court of Justice. Neither of them named the countries they suspected of being involved. “There are international misinformation campaigns which are aimed at destabilizing the country,” Ntshavheni said. “ As the security cluster we are very focused on that work, we are monitoring, and we are strengthening our capacity.” The ICJ last week ruled that Israel — accused by South Africa of genocide amid its crackdown on Hamas — must act to prevent Palestinians from being killed or injured, but stopped short of demanding an immediate cease-fire. Israel denied that it was targeting civilians and re-affirmed it’s right to self-defense when it appeared before the UN Security Council on Wednesday. https://www.bnnbloomberg.ca/south-africa-beefs-up-security-after-dispute-with-israel-1.2029680.amp.html Civilian Deaths In Ukraine War Top 10,000, UN Says 21 November 2023 At least 10,000 civilians, including more than 560 children, have been killed and over 18,500 have been injured since Russia launched its a full-scale armed attack against Ukraine on 24 February 2022, the United Nations Human Rights Monitoring Mission in Ukraine (HRMMU) said today. On 15 November, four people were killed when a missile struck a four-storey apartment building in Selydove village in the Donetsk Oblast, in an area controlled by Ukraine, pushing the total number of those killed above 10,000. Among these latest victims was a family that had been displaced earlier in the war and an 85-year-old woman. “Ten thousand civilian deaths is a grim milestone for Ukraine,” said Danielle Bell, who heads the monitoring mission. “The Russian Federation's war against Ukraine, now entering into its 21st month, risks evolving into a protracted conflict, with the severe human cost being painful to fathom,” she added. The HRMMU stated that the figure of 10,000 represents civilian deaths verified according to its methodology but cautioned that the actual figure may be significantly higher given the challenges and time required for verification. https://ukraine.un.org/en/253322-civilian-deaths-ukraine-war-top-10000-un-says

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.