Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Leaderboard

  1. ரஞ்சித்

    கருத்துக்கள உறவுகள்
    16
    Points
    8907
    Posts
  2. suvy

    கருத்துக்கள உறவுகள்
    10
    Points
    33600
    Posts
  3. Kandiah57

    கருத்துக்கள உறவுகள்
    5
    Points
    4043
    Posts
  4. Elugnajiru

    கருத்துக்கள உறவுகள்
    4
    Points
    2573
    Posts

Popular Content

Showing content with the highest reputation on 02/03/24 in all areas

  1. அக்காவின் அக்கறை அன்பாய் என்னை அருகிலிருத்தி வலிக்காமல் தலைவாரி வகிடெடுத்த பின்னாலே சித்திரமாய் திலகமிட்டுடுவாள் தந்தையே தடியெடுத்திடினும் தானோடி வந்து தாவியெடுத்தென்னை தன்னோடணைத்து தான் அடிவாங்கி என்துயர் போக்கிடுவாள் முழுபாவாடையை முன் இடுப்பில் சொருகி எட்டுக்கால் கோட்டில் எம்பி எம்பி ஆடுகையில் பின் எல்லோரையும் தள்ளி விட்டு எஞ்ஞான்றும் அவளே ஜெயித்திடுவாள் கபடி விளையாடுகையில் கிளிபோலப் பறந்து பறந்து காலாலே கலங்கடித்து காளையரையும் விரட்டிடுவாள் எதிர் வீட்டு முகுந்தனிடம் மட்டும் எப்போதும் சண்டையும் சச்சரவும் கேலிசெய்து கொண்டு அவன் ஓட ஓட கோலிகுண்டால் எறிந்து கொண்டு பின்னாலே ஓடுவாள் முற்றத்து மாமரத்தில் கொக்கத்டியெடுத்து முற்றிய மாங்காய்களை நான் பறிக்கையில் முன்னால் வந்த அக்காளும் தடியெடுத்து தனக்கும் ரெண்டு பிஞ்சு பறித்துக்கொண்டாள் அக்காளும் முன்போல் இல்லை குறும்புத்தனமும் குறைஞ்சு போச்சு தடியெடுத்த தந்தையும் "யாரடி அவன்" என்று தளராமல் அடிக்கின்றார் அக்காளை அன்று என்னைப் பொத்திக் காத்தவளை அருகில் நெருங்கவும் என்னால் முடியவில்லை குறுக்கேவந்த அம்மாவுக்கும் குறைவின்றி அடிவிழுது வாடிய மலர்க்குவியலாய் மண்ணில் புரளும் அக்காள் படலையை தள்ளியே பதற்றமாய் வந்தாள் மாமி தந்தையிடம் தடியைப் பிடுங்கி எறிந்தாள் உன்ர பிள்ளையை நீ அடி அல்லது கொல் -ஆனால் என்ர வாரிசை வம்சத்தை அழிக்க உனக்கேது உரிமை விக்கித்து நின்ற அப்பாவை விலக்கிவிட்டு -அக்காளை அணைத்தெடுக்கையில் அருகே வருகின்றான் முகுந்தனும் இரு இறக்கைக்குள் குஞ்சுபோல் கூடவே அக்காள் செல்ல அம்மாவின் முகத்தில் நிம்மதி, அண்ணாந்து ஆகாசம் பார்க்கிறாள்......! ஆக்கம் சுவி ......! யாழ் அகவை 26 க்காக ........!
  2. நான் இதுபற்றி ஒரு காணொளி பார்த்தேன் கனடா டமிழர் பேரவை சார்பில் ஒரு பெண் உட்பட்ட மூவர் சில விளக்கங்களைச் சொன்னார்கள் அதில் தாங்கள் பயணம் தொடர்பான விடையங்களை ஒருவரிடம் கொடுத்ததாகவும் அவர் தங்களுக்கு மின்னஞ்சல்மூலம் தகவல்களைத் தந்துகொண்டே இருந்ததாகவும் மகிந்தவைச் சந்திக்காமல் இமாலயமலைக்கு ஏற முடியாது எனவும் காரணம் நாடாளுமன்றில் அவருக்கு ஆதரவான உறுப்பினர்கள்தான் பெருவாரி எனவும் தாங்கள் ஏதாவது பிரச்சனைக்கான உடன்பாட்டுக்கு வந்தால் மகிந்த தரப்பு குழப்பக்கூடாது எனவும் கூறியிருந்தார்கள். அவர்களது கூற்றுப்படி இமாலயப் பிரகடனத்தை சிங்களம் ஏற்று நாளைக்கெ தீர்வைத் தட்டில் வைத்துத் தரப்போகினம் அதுதான் மகிந்தவைத் தடவிக்குடுத்தனாங்கள் எனச்சொல்லினம். ஆனா ஒன்று மட்டும் தெரிகிறது கனேடியத் தமிழர் பேரவயில் உள்ள சிலரை சிங்களமும் இந்தியாவும் தங்கட கையுக்குள் கொண்டுவந்திட்டுது அந்த விடையம் ஏனையவர்களுக்கும் தெரியும் ஆனால் இதை தாங்கள் வெளியில சொன்னால் கனேடிய தமிழர் பேரவை இனிமேல் இல்லாமல் போயிடும் எண்டு பம்முகினம். ஆனால் உடைவு நடந்துவிட்டது நிஜம்போலத்தான் இருக்கு. இந்த விடையத்தில சுரேன் சுரேந்திரனுக்கும் ரூட் ரவியருக்கும் இந்தியா கொடுத்த கனேடியத் தமிழர் பேரவையை உடை எனும் அசைன்ட்மன் சக்சஸ். இந்தியாவினதும் சிங்களத்தினதும் கண்களைக்குத்திய விடையம் கனடாவின் அரசியலில் புலம்பெயர் இலங்கைத் தமிழர்களது ஆதிக்கம் மிகவும் முக்கியமாக இருக்கு இப்படியான நிறுவனங்களை உடைத்துக் குழப்பிவிட்டால் அவங்கள் தங்களுக்குள் அடிபட்டே மற்றையதை இழந்துவிடுவார்கள் உதாரணத்துக்கு இப்போ தமிழரசுக்கட்சிக்குள் சுமந்திரன் புகுந்து விளையாடுவதுபோலவும் ஆனந்தசங்கரியர் தமிழர் விடுதலைக் கூட்டணியை முடக்கியதுபோலவும் கனடாவில் கனேடியத் தமிழர் பேரவையை உண்டு இல்லை என்றாக்கிவிட்டால் தங்களதுபாடு கொண்டாட்டம்தான் என சிங்களமும் இந்தியாவும் நினைக்கிறது.
  3. மன்னிப்பெல்லாம் எதற்கு? கவலையை விடுங்கள். தீர்ப்பில் இருப்பது சமூக வலைத்தளங்களில் பதிவிடுவோர் சொல்வது போல காரமாக இருக்கிறதா என அறிய நான் ஒன்ராரியோ உயர் நீதிமன்றின் வலைத்தளத்தில் ஜனவரி மாத தீர்ப்புகளைத் தேடிப் பார்த்தேன். அந்தத் தேடலில், கார்த்திக் நந்தகுமார் என்ற பெயரோ, அய்யப்பன் சமாஜம் என்ற பெயரோ சிவில், கிரிமினல் வழக்கு பகுதிகளில் காணவில்லை. எனவே தான் கேட்டேன். என் ஊகம்: வழக்கு நடக்கும் அளவுக்கு இந்த முறைப்பாடு முன்னேறவில்லை. வழக்கு ஏற்றுக் கொள்ளப் படாமல் தள்ளுபடி செய்யப் பட்டிருக்கிறது. வழக்கு நடந்திருக்கா விட்டால் 75K பணம் செலுத்தும் உத்தரவும் கொடுக்கப் பட்டிருக்காதென ஊகிக்கிறேன்.
  4. 2024 -1994=30 ஆண்டுகள் கடந்து விட்டது…… மேலே சொல்லியது கடந்த 25 ஆண்டுகள் எனவே தகவல்கள் சரியானது இல்லையா?? இந்த சரிநிகர் பத்திரிகை யாரால் நடத்தப்பட்டது ?? எங்கிருந்து வெளியீடு செய்தார்கள்?? அருமை மிகத் தெளிவான பார்வை மற்றும் விளக்கங்கள்
  5. நன்றி தேவையில்லை மாற்றங்கள் பலவகை எனக்கு தெரிந்தது இரண்டு வகை மட்டுமே ஒன்று இயல்பாக எற்படுவது உதாரணமாக நீங்கள் ஐந்து வயதில் எவ்வளவு முயன்றாலும் அப்பா ஆக முடியவே முடியாது 🤣ஆனால் இருபது வயதில் இயல்பாக நீங்கள் அப்பா ஆக முடியும் இல்லையா?? இது இயற்கையான மாற்றம் இப்படியான மாற்றங்களை எற்றுக்கொண்டு வாழ வேண்டும் கனடா தமிழ் பேரவை பல நூறுக்கணக்கான தமிழ் ஆர்வலர்கள் சேர்ந்து உருவாக்கிய அமைப்பு இலங்கை தமிழருக்கு ஆதரவாகவும் இலங்கை அரசின் தமிழ் விரோத செயல்களை எதிர்த்தும். போரடா ஆரம்பிக்கப்பட்டு பல ஆண்டுகளாக இயங்குகிறது இயங்கி வருகிறது இதில் உள்ள ஒரு சிலர் தங்களின் சுய தேவைகளை பூர்த்தி செய்வதற்காக இலங்கையுடன் கள்ள உறவுகளை பேணி பேரவையின் இலக்குகளை விற்பனை செய்ய முடியாது அப்படி நடந்தால் பேரவையின் உருவாக்கத்துக்கு பங்களிப்புகள் வழங்கியவர்கள் சும்மா வேடிக்கை பார்த்து கொண்டு இருப்பார்களா??
  6. எளக்கு இந்த முகநூல் பதிவில் பிடித்த நகைசுவை உயர் நீதிமன்ற நீதிபதி தனது தீர்ப்பில் தமிழ் தேசியர் கார்த்திக் நந்தகுமார் பொது முக்கியத்துவம் வாய்ந்த விடயங்கள் அடங்கியுள்ளதை நிரூபித்துள்ளார் என்று சுட்டிக்காட்டினார் என்றது தான்😂
  7. பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, வெங்கி ராமகிருஷ்ணனுக்கு 2009 ஆம் ஆண்டு வேதியியலுக்கான நோபல் பரிசு வழங்கப்பட்டது. கட்டுரை தகவல் எழுதியவர், கார்லோஸ் செரானோ பதவி, பிபிசி நியூஸ் 28 ஜனவரி 2024 முதுமை அடைவதும், இறப்பதும் உலகில் உள்ள ஒவ்வொரு உயிரினமும் சந்திக்கும் நிலை. பலர் மரணத்திற்கு பயப்படுகிறார்கள். ஆனால் நாம் ஒவ்வொருவரும் ஏன் வயதாகி இறக்க வேண்டும்? வயதாவதை நிறுத்த முடியுமா அல்லது மரணத்தைத் தவிர்க்க முடியுமா? இந்தியாவைச் சேர்ந்த தமிழ் வம்சாவளி மூலக்கூறு உயிரியலாளரான வெங்கி ராமகிருஷ்ணன் தனது முழு வாழ்க்கையையும் இந்தக் கேள்விகளுக்கு பதிலளிப்பதற்காகவே செலவிட்டிருக்கிறார். ராமகிருஷ்ணன் தமிழ்நாட்டில் உள்ள சிதம்பரத்தில் 1952 இல் பிறந்தார். தாமஸ் ஏ. ஸ்டைட்ஸ், அடா ஈ யோனத்துடன் இணைந்து 2009 ஆம் ஆண்டு ராமகிருஷ்ணன் நோபல் பரிசு பெற்றார். ராமகிருஷ்ணன் எழுதிய வொய் வீ டை: தி நியூ சைன்ஸ் ஆஃப் ஏஜிங் அண்டு தி க்வெஸ்ட் ஃபார் இம்மோர்ட்டாலிட்டி (Why We Die: The New Science of Aging and the Quest for Immortality) என்ற புத்தகம் இந்த ஆண்டு மார்ச் மாதம் ஆங்கிலத்தில் வெளியிடப்படுகிறது. ராமகிருஷ்ணனிடம் இந்த விஷயங்களைப் பற்றிப் பேசியபோது, மனிதர்கள் நீண்ட காலம் வாழப் பயன்படும் செல்கள் சுருங்குவதற்குக் காரணமான ரசாயன எதிர்வினைகள் அனைத்தையும் விளக்கினார். பிபிசி: முதுமை என்றால் என்ன? மனிதர்களின் உடலில் இந்த செயல்முறை எப்படி நடைபெறுகிறது? வெங்கி ராமகிருஷ்ணன்: முதுமைக்கு முக்கிய காரணங்களில் ஒன்று நமது டிஎன்ஏவில் உள்ள மரபணுக்கள் சேதமடைவது. மரபணு மட்டத்தில், புரதங்கள் ஆயிரக்கணக்கான ரசாயன எதிர்வினைகளை இணைக்கின்றன. இந்த செயல்களால் தான் நாம் உயிர்வாழ்கிறோம். இவை நமது உடலுக்கு வலிமையையும் வடிவத்தையும் தருகின்றன. புரதங்கள் மரபணுக்களுக்கு இடையே தொடர்பு கொள்ள உதவுகின்றன. நமது நரம்பு மண்டலம் அவற்றைச் சார்ந்து செயல்படுகிறது. மூளையில் உள்ள பல காரணிகள் சேமிப்பிற்கு பங்களிக்கின்றன. வைட்டமின்கள், ஹார்மோன்கள், என்சைம்கள், ஆன்டிபாடிகள், ஹீமோகுளோபின் போன்றவையும் புரதங்களே. முதுமை என்பது உயிரணுக்களில் புரதங்களை உற்பத்தி செய்யும் திறனை நம் உடல் இழப்பதே ஆகும். நமது திசுக்கள், செல்கள், உயிர் மூலக்கூறுகள் மற்றும் இறுதியில் உடலும் சேதமடைவதை நாம் காணலாம். இது நாம் பிறந்தது முதல் படிப்படியாக நடக்கும் ஒரு செயல். குழந்தை பருவத்திலிருந்தே நம் வயது அதிகரிப்பதைக் காண்கிறோம். ஆனால், அந்த காலகட்டத்தில் நாம் வயதாவது பற்றி அதிகம் கவலைப்படுவதில்லை. ஏனென்றால் அப்போதும் நாம் வளர்கிறோம்... இளமைப் பருவத்தை அடைகிறோம்.... அது மிகவும் உற்சாகமாக இருக்கிறது. ஆனால் ஆண்டுகள் செல்லச்செல்ல, இந்த அறிகுறிகள் தீவிரமடைகின்றன. உடலில் உள்ள முக்கியமான அமைப்புகள் தோல்வியடையும் போது, உடல் முழுவதுமாக செயல்படாது. அதுவே மரணத்திற்கு வழிவகுக்கும் விளைவு. ஆனால் மரணத்தில் ஆச்சரியமான விஷயம் என்னவென்றால், நாம் இறந்த பிறகும் குறிப்பிட்ட நேரத்திற்கு, உடலில் உள்ள சில செல்கள் உயிர்வாழ்கின்றன. அதனால்தான் உடல் உறுப்புகள் தானம் செய்யப்படுகின்றன. ஆனால், உடலில் எந்த உறுப்பும் செயலிழந்தால் மரணம்தான் நிகழும். பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, வயதாவதைத் தடுத்து இறப்பை நிறுத்திவைக்கமுடியுமா என்ற கேள்விக்கு பதில் அளிக்க உலகம் முழுவதும் ஏராளமான முதலீடுகளில் பல்வேறு ஆராய்ச்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. பிபிசி: உயிரியலில் ஒவ்வொரு மரபணு வரிசையும் கணக்கில் எடுத்துக் கொள்ளப்படுவதாக உங்கள் புத்தகத்தில் குறிப்பிட்டுள்ளீர்கள். மரபணு ரீதியாக நாம் ஏன் வயதாகிறோம்? ஏன் இறக்க வேண்டும்? வெங்கி ராமகிருஷ்ணன்: ஏனென்றால் மரபணு பரிணாமம் என்ற மாற்றம் நம்மை தனிநபர்களாக பார்க்கவில்லை. அது எல்லா இடங்களிலும் அதுவாகவே நடந்து கொண்டிருக்கிறது. மரபணு பரிணாமம் என்பது மரபணுக்களின் பரிமாற்றம். நம் உடல்களில் பெரும்பாலானவை வயதானதைத் தடுக்க முயற்சிப்பது உண்மைதான். சிறந்த செயல்களின் மூலம் தங்களை மேம்படுத்திக் கொள்ள அவை முயல்கின்றன. வேட்டையாடுபவர்களால் கொல்லப்படும் அபாயத்தில் உள்ள உயிரினங்களில், மிக நீண்ட காலம் வாழும் உயிரினமாக இருந்தாலும் இந்த பரிணாமம் தடைபடுவதில்லை. இருப்பினும், மிக நீண்ட காலம் உயிர் வாழும் தன்மையும் அதுபோன்ற உயிரினங்களுக்கு எந்தப் பயனையும் அளிப்பதில்லை. ஏனென்றால் அவை ஒரு கட்டத்தில் மற்ற உயிரினங்களின் கைகளில் சிக்கி உயிரிழக்கின்றன. சிறிய உயிரினங்களுடன் ஒப்பிடுகையில், நடைமுறையில் பெரிய உயிரினங்கள் நீண்ட காலம் வாழ்கின்றன. எலிகளும் வெளவால்களும் ஒரே எடையில் இருந்தாலும், வெளவால்களே நீண்ட காலம் வாழ்கின்றன. ஏனென்றால் அவை பறக்கின்றன. அதனால் பிற உயிர்களின் கைகளில் சிக்கி அவை உயிரிழப்பதில்லை. பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, உயிர்களின் உருவ அமைப்புக்கும், அவை உயிர் வாழும் காலத்திற்கும் நேரடித் தொடர்பில்லாவிட்டாலும், சிறிய உயிர்கள் குறைந்த காலமே உயிர் வாழ்கின்றன. பிபிசி: கடந்த 150 ஆண்டுகளில் மனித ஆயுள் காலம் கிட்டத்தட்ட இரு மடங்காக அதிகரித்துள்ளது. ஆனால் மக்களின் ஆயுட்காலம் மேலும் அதிகரிக்குமா? அல்லது நமது உயிரினங்கள் வாழக்கூடிய அதிகபட்ச ஆயுட்காலத்தை நாம் ஏற்கனவே அடைந்துவிட்டோமா? இது விஞ்ஞானிகளிடையே பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த விவாதத்தைப் பற்றி நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்? வெங்கி ராமகிருஷ்ணன்: மேம்பட்ட ஆரோக்கியம் மற்றும் மருத்துவ முறைகளுடன் இன்று நாம் நீண்ட காலம் வாழ்கிறோம். அப்படிப்பட்ட காலங்களில் நாம் 120 ஆண்டுகள் வாழலாம். இந்த வயதிற்கு மேல் உயிர் பிழைப்பதற்கான வாய்ப்புகள் குறைவு. 100 வயதை எட்டுபவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது, ஆனால் 110 வயதை எட்டியவர்களின் எண்ணிக்கை அதிகரிக்கவில்லை என்று அமெரிக்காவின் பாஸ்டன் நகரில் நீண்ட ஆயுட்காலம் குறித்து ஆய்வு செய்யும் விஞ்ஞானி டாம் பேர்ல்ஸ் தெரிவித்துள்ளார். 110 ஆண்டுகளுக்குப் பிறகு நாம் இயற்கையாகவே உயிரியல் வரம்புகளை எதிர்கொள்வோம் என்று அவர் உணர்ந்தார். மரபணு காரணிகள் மற்றும் அவர்களின் வாழ்க்கை முறைகளுடன் 110 ஆண்டுகளுக்கும் மேலாக வாழும் மக்கள் உள்ளனர் என்பது உண்மைதான். ஆனால், இந்த எண்ணிக்கை அதிகரிக்கவில்லை. அதாவது, இயற்கையாகவே இந்த வயதைத் தாண்டிய பிறகு ஒரு எல்லை இருப்பதாகத் தோன்றுகிறது. புற்றுநோய் போன்ற நோய்கள் வராமல் தடுக்க முடிந்தால்தான் சராசரி ஆயுளை இன்னும் சில ஆண்டுகள் அதிகரிக்க முடியும். வயதாவதற்கான காரணங்களை திறம்பட எதிர்த்துப் போராடினால், ஒருவேளை இந்த வரம்பை மீறலாம். ஆனால், அதைச் செய்வது எவ்வளவு எளிது என்று எனக்குத் தெரியவில்லை. இது பற்றி சிந்திக்க வேண்டும். பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, புற்றுநோய் போன்ற நோய்கள் வராமல் தடுக்க முடிந்தால்தான் சராசரி ஆயுளை இன்னும் சில ஆண்டுகள் அதிகரிக்க முடியும் என விஞ்ஞானிகள் கருதுகின்றனர். பிபிசி: முதுமை ஒரு நோயா என்பதும் விவாதத்திற்குரியது... வெங்கி ராமகிருஷ்ணன்: புற்றுநோய், ஞாபக மறதி, உடல் உறுப்புகளில் வீக்கம், மூட்டுவலி, இதயம் தொடர்பான நோய்களும் வயதுக்கு ஏற்ப வருகின்றன. அதனால்தான் இந்த நோய்களுக்கு முதுமையே காரணம் என்று கூறப்படுகிறது. முதுமை ஒரு நோயாகத்தான் பார்க்கப்படுகிறது. ஆனால், முதுமை என்பது ஒவ்வொருவரும் எதிர்கொள்ள வேண்டிய இயற்கையான நிகழ்வு. இந்த தவிர்க்க முடியாத, பொதுவான செயல்முறையை எப்படி நோய் என்று அழைக்க முடியும் என்று சிலர் கேள்வி எழுப்புகின்றனர். சமீபத்தில் உலக சுகாதார நிறுவனமும் முதுமை ஒரு நோய் அல்ல என்று கூறியுள்ளது. முதுமையை ஒரு நோயாகக் கருதும் அழுத்தம் அதிகரித்ததால், ஆராய்ச்சிக்காகப் பெரும் தொகை செலவிடப்பட்டது. பிபிசி: எதிர் காலத்தில் வயதாவதற்கு எதிரான சிகிச்சையில் எந்தெந்த பகுதிகளில் மேலும் முன்னேற்றங்களைக் காண எதிர்பார்க்கிறீர்கள்? வெங்கி ராமகிருஷ்ணன்: ''இதில் எதையும் எளிதாகக் கணிக்க முடியாது. குறிப்பாக எதிர்காலத்தைப் பற்றி...’’ என்று கிண்டல் செய்தார் பேஸ்பால் வீரர் யோகி பெர்ரா. அந்த சிகிச்சைகள் எவ்வளவு மேம்பட்டவையாக இருக்கும் என்று எனக்குத் தெரியவில்லை. ஆனால், முதுமையை குறைக்க பல நடைமுறைகள் உள்ளன. உதாரணமாக, கலோரிகளை கட்டுக்குள் வைத்திருப்பது வயதாகும் ஆபத்தை குறைக்கும் என்று ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்துள்ளனர். இளம் வயதில் இப்படிச் செய்வதால் பிரச்னைகள் ஏற்படும் என்பதால், கலோரிகளைக் கட்டுக்குள் வைத்திருக்க இதேபோன்ற மருந்து தேடப்படுகிறது. ஆனால், ஐஸ்க்ரீமுடன் கேக் சாப்பிட்டுவிட்டு, எந்தக் கவலையும் இல்லாமல் மருந்து சாப்பிட்டால் போதுமா..? ராபமைசின் என்ற மருந்தில் பலர் ஆர்வமாக உள்ளனர். ஆனால், அதிக அளவு எடுத்துக் கொண்டால், அது நோயெதிர்ப்பு மண்டலத்தை நசுக்கி, கடுமையான சேதத்தை ஏற்படுத்தும் என்று கூற்றுகள் உள்ளன. மற்றொரு செயல்முறை..பரபியோசிஸ். ஒரு இளம் விலங்கிலிருந்து இரத்தம் எடுக்கப்பட்டு ஒரு வயதான விலங்குக்கு செலுத்தப்படுகிறது. அந்த இரத்தத்தைப் பெறும் விலங்கு அதன் உடல் உறுப்புகளில் புத்துணர்ச்சி பெறுகிறது. முதுமையை ஏற்படுத்தும் பெரும்பாலான காரணிகள் இரத்தத்தில் உள்ளன. அவற்றை அடையாளம் காண பல ஆய்வுகள் செய்யப்பட்டுள்ளன. ஒரு சில முதிர்ந்த செல்கள் வயதுக்கு ஏற்ப வளரும். வீக்கமும் இதன் அறிகுறியாகும். வயதான செல்கள் அழிக்கப்பட வேண்டுமா? இதை அடைய முடிந்தால், சில ஆராய்ச்சியாளர்கள் இதுபோன்ற வயதான சில விளைவுகளை மாற்றியமைக்க முடியும் என்று கூறுகிறார்கள். மற்றொரு சுவாரசியமான ஆராய்ச்சி... செல்லுலார் ரீப்ரோகிராமிங். இதில், செல்கள் அவற்றின் அசல் நிலைக்கு கொண்டு செல்லப்பட்டு, அவற்றில் ஏற்பட்ட மாற்றங்களை சமாளிக்கும் வகையில் உருவாக்கப்படுகின்றன. இந்த செயல்முறை சற்று ஆபத்தானது. ஏனெனில் சில நேரங்களில் புற்றுநோய் ஏற்படும் அபாயம் உள்ளது. இருப்பினும், விலங்குகள் மீதான இந்த சோதனைகள் நம்பிக்கைக்குரிய முடிவுகளை அளித்துள்ளன. பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, வயதாவதைத் தடுத்து, இறப்பைத் தவிர்க்கமுடியும் என்பது குறித்து உலகம் முழுவதும் ஏராளமான கதைகள் இருந்துவருகின்றன. பிபிசி: இவை தவிர, அறிவியல் கட்டுக்கதைகளும் உள்ளன. அது போன்ற கதைகளுக்கு நிறைய விளம்பரங்கள் கிடைக்கின்றன. வெங்கி ராமகிருஷ்ணன்: ஆமாம். முற்றிலும் அறிவியலுக்கு ஏற்பில்லாத, தவறான கருத்துகளும் உள்ளன. மக்கள் நம்பும் விஷயங்களில் ஒன்று கிரையோனிக்ஸ். இதன் பொருள் ஒருவர் இறந்தால், அவரது உடல் திரவ நைட்ரஜனில் பாதுகாக்கப்படுகிறது. எனவே அவர்கள் மரணத்தை வெல்ல முயல்கிறார்கள். ஆனால், அவற்றைப் பாதுகாப்பாக வைத்திருந்து மீண்டும் உயிர்ப்பிக்கக் கூடிய தொழில்நுட்பம் எதிர்காலத்தில் கிடைக்குமா என்பது தெரியவில்லை. இப்போதைக்கு இது வெறும் கட்டுக்கதை தான். இது மக்களின் மரண பயத்தை சுரண்டுவதற்கான ஒரு வழியாகும். கிரையோனிக்ஸ் மீது நம்பிக்கை வைத்து பணத்தைச் செலவழிப்பவர்களும் உண்டு. எல்லாவற்றையும் காசு கொடுத்து வாங்கலாம். ஆனால், இளமையை வாங்க முடியாது. நான் இந்தியாவில் வளர்ந்தவன். ஆப்ரிக்கா மற்றும் அனைத்து பகுதிகளில் இருந்து வரும் பலரை நான் அறிவேன். கிரையோனிக்ஸ் பற்றி யாரும் யோசிக்கவே இல்லை. பிபிசி: முதுமைப் பயம் பலரிடையே அதிகரித்துள்ளது. அதனால்தான் போடோக்ஸ் பயன்படுத்துகிறோம். அதாவது நரைத்த முடிக்கு கலர் அடிப்பது போல. இப்படிப்பட்டவற்றால் நமக்கு வயதாகிறது என்ற பயம் குறையும் என்று நினைக்கிறீர்களா? வெங்கி ராமகிருஷ்ணன்: வயது வித்தியாசமின்றி ஒருவருக்கு பல அழுத்தங்கள் உள்ளன. குறிப்பாக பெண்களுக்கு அதிக அழுத்தம் உள்ளது. ஆனால் முதுமையை தடுக்கும் ஆராய்ச்சி முதுமை பயத்தை குறைக்கும் என்று நான் நினைக்கவில்லை. பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, வயதாவதைத் தடுக்கும் எந்த மருந்தும் சந்தையில் இல்லை என்ற நிலையில், நல்ல தூக்கம், நல்ல உணவு, உடற்பயிற்சி போன்றவை அவசியத் தேவையாக உள்ளன. பிபிசி: முதுமையை தாமதப்படுத்த அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்தில் நிறைய ஆராய்ச்சிகள் செய்யப்பட்டு வருகின்றன. நிறைய பணம் முதலீடு செய்யப்படுகிறது. ஆனால், உங்கள் புத்தகத்தில் ஆரோக்கியமாக இருக்க மற்ற வழிகளை தெளிவாக விளக்கியுள்ளீர்கள். அவற்றைப் பற்றி விளக்க முடியுமா? வெங்கி ராமகிருஷ்ணன்: நல்ல தூக்கம், நல்ல உணவு, உடற்பயிற்சி போன்றவை அவசிய தேவை. வயதாவதைத் தடுக்கும் எந்த மருந்தும் சந்தையில் இல்லை. நமது பழக்கவழக்கங்களை மாற்றிக்கொள்ள அதிக பணம் செலவழிக்க வேண்டியதில்லை. எந்த பக்க விளைவுகளும் இதில் இல்லை. நமது உயிரியல் பரிணாமம் சார்பு மற்றும் வேட்டையாடலில் தொடங்கியது. அந்தக் காலத்தில் மக்கள் சீரான முறையில் சாப்பிட்டு வந்தனர். இயற்கையாகவே அவர்கள் மிகச்சரியாக சாப்பிட்டு, நன்றாக உறங்கி வந்த நிலையில், நான் முன்பே குறிப்பிட்டது போல அவை கலோரிகளையும் கட்டுக்குள் வைத்திருக்க உதவுகின்றன. ஆனால் இப்போது பசி இல்லாவிட்டாலும் சாப்பிடுகிறோம். மேற்கில் உடல் பருமன் வியத்தகு அளவில் அதிகரித்துள்ளது. நம் முன்னோர்களை ஒப்பிடும்போது நாம் வயிற்றில் எப்போதும் எதையாவது வைத்திருக்கிறோம். உடற்பயிற்சியையும் போதுமான அளவு நாம் செய்வதில்லை. மேலும் தூக்கம் வரும்போது, அதன் முக்கியத்துவம் கணக்கில் எடுத்துக் கொள்ளப்படுவதில்லை. நன்றாகத் தூங்குவது நமது உடலின் மறுசீரமைப்பு அமைப்புகளில் மிக முக்கியமான பகுதி என்பதை நாம் மறந்துவிடுகிறோம். இப்போது நம் முன்னோர்களின் நடைமுறைகளைப் பின்பற்றினால், தசை, மைட்டோகாண்ட்ரியல் செயல்பாடு, இரத்த அழுத்தம், மன அழுத்தம், நினைவாற்றல் இழப்பு போன்ற அபாயங்களைக் குறைக்கலாம். இவற்றை எப்போதும் பின்பற்றுவது எளிதாக இருக்காது. சில நேரங்களில் மக்கள் ஒரு மாத்திரையை எடுத்துக் கொண்டு அவர்கள் விரும்பிய வாழ்க்கையை வாழ்கிறார்கள். ஆனால், அதைக் கடக்க வேண்டும். பிபிசி: நீங்கள் எவ்வளவு காலம் வாழ்கிறீர்கள் என்பதல்ல முக்கியம்... எப்படி வாழ்கிறீர்கள் என்பதுதான் முக்கியம் என்ற பழமொழி உங்களுக்கு பிடிக்குமா? வெங்கி ராமகிருஷ்ணன்: ஆம், நல்ல வார்த்தை. இதற்கு நான் உடன்படுகிறேன். அதுதான் தேவை. வாழ்க்கையின் நோக்கம் என்ன என்று தெரிந்து கொண்டால்.. நெஞ்சு வலி அபாயங்கள் குறையும். மனநிலையையும் அது நன்றாக மேம்படுத்துகிறது. முடிந்தவரை நாம் விரும்பும் வரை வாழ விரும்புகிறோம். அது குழப்பத்தை ஏற்படுத்துகிறது. நாம் தனிப்பட்ட முறையில் விரும்புவது இந்த சமுதாயத்திற்கோ அல்லது இந்தச் சூழலிற்கோ சிறந்ததாக இருக்காது. புதைபடிவ எரிபொருள் பயன்பாடு மற்றும் புவி வெப்பமடைதல் காரணமாக பல்லுயிர்ப் பெருக்கத்தின் பாதிப்பை நாம் காண்கிறோம். தனி மனிதனாக நாம் எடுக்கும் முடிவுகள் சமூகத்திற்கு கேடாக அமைகின்றன. அதைக் கடக்க நமக்கு ஒரு உண்மையான உணர்வு தேவை. https://www.bbc.com/tamil/articles/ckd47vx780xo
  8. திம்புலாகலை பிக்கு - காவி உடையில் இனவாதப் பேய் 1983 ஆம் ஆண்டு புரட்டாதி 8 ஆம் திகதி காலை என்னைத் தொடர்புகொண்ட உள்ளகத்துறை அமைச்சர் தேவநாயகத்தின் ஒருங்கிணைப்பாளர், அமைச்சர் என்னை அவசர விடயம் ஒன்றிற்காகச் சந்திக்க விரும்புவதாகக் கூறினார். அமைச்சரை அவரது அலுவலகத்தில் நான் சந்தித்தேன். தனது தொகுதியான கல்க்குடாவில் சிங்களக் குடியேற்றம் ஆரம்பித்துவிட்டதாகவும் இதுதொடர்பான தனது அதிருப்தியை தான் ஜெயாரிடம் தெரிவித்திருப்பதாகவும் அவர் கூறினார். இச்செய்தியை டெயிலிநியூஸ் பத்திரிக்கையில் வெளியிடவேண்டும் என்றும் என்னைக் கேட்டுக்கொண்டார். கல்க்குடா அவரது வேண்டுகோள் எனக்கு தர்மசங்கடத்தினை ஏற்படுத்தியது. இதில் எனக்கிருக்கும் சிக்கலை அவருக்கு விளங்கப்படுத்தினேன். டெயிலி நியூஸ் பத்திரிக்கை அரசுக்குச் சொந்தமான ஒரு ஊடகம் என்பதனையும், ஜனாதிபதியின் நேரடிக் கட்டுப்பாட்டிலேயே அது இயங்கிவருவதையும் அவருக்குப் புரியப்படுத்தினேன். பத்திரிக்கை ஆசிரியர் இவ்வாறான செய்தியொன்றினைப் பிரசுரிக்க விரும்பப்போவதில்லை என்பதுடன், அவ்வாறு பிரசுரிக்கப்படுமிடத்து அது ஜனாதிபதிக்கு அவமானத்தை ஏற்படுத்துவதோடு இந்தியாவின் கவனத்தையும் ஈர்த்துவிடும். ஆகவே, அமைச்சர் தனது நிலைப்பாட்டினை பத்திரிக்கையாளர் சந்திப்பொன்றினூடாக வெளிப்படுத்த முடியும் என்றும், அதனை என்னால் செய்தியாக்க முடியும் என்றும் அவருக்கு ஆலோசனை வழங்கினேன். அன்று மாலையே தேவநாயகம் பத்திரிக்கையாளர் சந்திப்பொன்றினை நடத்தினார். தனது தொகுதிற்குட்பட்ட வடமுனைப் பகுதியில் நடைபெற்றுவரும் முக்கியமான விடயம் தொடர்பாக நாட்டு மக்களுக்குத் தெரியப்படுத்தவே பத்திரிக்கையாளர்களை தான் அழைத்ததாக அவர் குறிப்பிட்டார். மகாவலி அபிவிருத்தி அமைச்சரான காமிணி திசாநாயகக்கவுடன் தான் செய்துகொண்ட ஒப்பந்தத்திற்கமைய மாதுரு ஓயா பகுதியில் தமிழ் மக்களுக்கென்று ஒதுக்கப்பட்ட விவசாயக் காணிகளில் தெற்கிலிருந்து வரும் சிங்கள விவசாயிகளை திம்புலாகல தேரை என்றழைக்கப்படும் சீலாலங்கார தேரை நீதிக்குப் புறம்பான முறையில் அடாத்தாகக் குடியமர்த்தி வருவதாகக் குறிப்பிட்டார். மாதுரு ஓயா குடியேற்றம் புரட்டாதி முதலாம் திகதி 700 சிங்களவர்களைத் தெற்கிலிருந்து அழைத்துவந்த திமுபுலாகலை தேரை, அப்பகுதியிலிருந்து வெளியேறுமாறு மட்டக்களப்பு அரசாங்க அதிபர் அந்தோணிமுத்து விடுத்த வேண்டுகோளினை உதாசீனம் செய்து தொடர்ந்தும் அப்பகுதியில் தங்கியிருப்பதாகவும் கூறினார் தேவநாயகம். 1974 ஆம் ஆண்டு இதே பகுதியில் அடாத்தாகச் சிங்களவர்கள் குடியேற முயன்றபோது பொலீஸாரின் உதவியுடன் அவர்களை அங்கிருந்து அரசாங்க அதிபரினால் அப்புறப்படுத்த முடிந்தபோதும், இப்போது பொலீஸார் அரசாங்க‌ அதிபருக்கு உதவ மறுப்பதோடு சிங்களக் குடியேற்றத்திற்கு ஆதரவான நிலைப்பாட்டினையும் எடுத்திருப்பதாகக் கூறினார். நான் இந்த விடயம் பற்றி மேலும் தேடியபோது, அடாத்தான‌ இச்சிங்களக் குடியேற்றத்தின் பின்னால் இருப்பது தேவநாயகத்துடன் ஒப்பந்தம் செய்துகொண்ட அதே மகாவலி அமைச்சரான காமிணி திசாநாயக்க என்பதுடன், அவரின் ஆசீருடன் இயங்கும் திம்புலாகலை தேரை அரசாங்க அதிபரை உதாசீனம் செய்துவருவதுடன், பொலீஸாரும் அமைச்சர் காமிணியின் சொற்படி நடப்பதையும் என்னால் அறிந்துகொள்ள முடிந்தது. வடமுனைப் பகுதியில் தமிழருக்குச் சொந்தமான காணிகளை அடாத்தாகக் கைப்பற்றும் நடவடிக்கைகளுக்குப் பொறுப்பாக இருப்பது முன்னாள் மகாவலி அபிவிருத்தி அமைச்சின் மேலதிக பொது மேலாளர் ஹேர்மன் குணரட்ன என்பதும் எனக்குத் தெரிந்தது. மலையகத்தில் இடம்பெற்ற தமிழருக்கெதிரான வன்முறைகளையடுத்து பல மலையகத் தமிழர்கள் வடமுனைப்பகுதியில் அரச காணிகளில் குடியேறிவருவதாக வேண்டுமென்றே வதந்தி ஒன்று பரப்பப்பட்டது. இதனை மகாவலி அபிருத்தியமைச்சர் காமிணி திசாநாயக்கவின் கவனத்திற்குக் கொண்டுவந்தார் ஹேர்மன் குணரட்ன. இதனையடுத்து அப்பகுதிகளில் உடனடியாக சிங்களவர்களைக் குடியேற்றுமாறு காமிணி அவருக்கு உத்தரவு வழங்கினார். அதனைத் தொடர்ந்து திம்புலாகலை தேரையினைத் தொடர்புகொண்ட ஹேர்மன், சிங்களவர்களை அப்பகுதியில் குடியேற்றுவதற்கான நடவடிக்கைகளை உடனடியாக ஆரம்பிக்க வேண்டும் என்று கோரியதுடன், இக்குடியேற்றத்திற்கான அனைத்து உதவிகளையும் மகாவலி அபிவிருத்திச் சபையே வழங்கும் என்றும் உறுதியளித்தார். அமைச்சரினதும், அமைச்சின் மேலாளரினதும் உத்தரவாதத்தினையடுத்தே திம்புலாகலை தேரை சிங்களக் குடியேற்றத்தை முன்னெடுத்திருந்தார். மட்டக்களப்பு அரசாங்க அதிபர் அந்தோணிமுத்து வடமுனையில் இடம்பெற்றுவந்த அடாத்தான சிங்களக் குடியேற்றம் தொடர்பான கடிதம் ஒன்றினை உள்ளக அமைச்சர் என்கிற ரீதியிலும், அப்பகுதியின் பாராளுமன்ற உறுப்பினர் என்கிற ரீதியிலும் அமைச்சர் தேவநாயகத்திற்கு அனுப்பியிருந்தார். அவர் அனுப்பிய கடிதத்தின் முதற்பகுதி, இப்பகுதியில் இடம்பெற்றுவரும் குடியேற்றங்கள் தொடர்பான சரித்திரத்தை விளக்கியிருந்தது. கடிதத்தின் இப்பகுதியை பத்திரிக்கையாளர்களுக்குப் படித்துக் காட்டிய அமைச்சர் தேவநாயகம், "இப்பகுதியில் மலையகத் தமிழர்கள் சட்டத்திற்குப் புறம்பான வகையில் குடியேறிவருவதாக திம்புலாகலை தேரை பரப்பி வரும் பொய்யான பிரச்சாரத்திற்கு இதன்மூலம் பதில் வழங்கப்பட்டிருக்கிறது" என்று கூறினார். மேலும் கள்ளிச்சேனை, ஊற்றுச்சேனை ஆகியன பாரம்பரிய தமிழ்க் கிராமங்கள் என்றும் அக்கடிதத்தில் விரிவாக விளக்கப்படுத்தப்பட்டிருந்தது. கிராம அபிவிருத்தித் திட்டத்திற்கமைய 1958 ஆம் ஆண்டிலேயே 685 ஏக்கர்கள் உயர் நிலக் காணிகளும், வயற்காணிகளும் தமிழ் விவசாயிகளுக்கு பகிர்ந்தளிக்கப்பட்டிருந்ததுடன் இப்பகுதிகளுக்கான நீர்ப்பாசணத் திட்டமும் நடைமுறையில் இருந்தது என்கிற விடயங்களும் அக்கடிதத்தில் குறிப்பிடப்பட்டிருந்தன. தொடர்ந்து பேசிய தேவநாயகம் நீர்ப்பாசண அமைச்சுடன் தான் செய்துகொண்ட ஒப்பந்தத்தின்படி இத்திட்டத்தின் கீழ் 10 மலையகத் தமிழ்க் குடும்பங்களைத் தான் குடியமர்த்தியிருந்ததாகவும் அவர் குறிப்பிட்டார். மேலும், 1977 ஆம் ஆண்டு தமிழர் மீது கட்டவிழ்த்து விடப்பட்ட வன்முறைகளையடுத்து இன்னும் 48 மலையகத் தமிழ்க் குடும்பங்களை மகாவலி அமைச்சரான காமிணி திசாநாயக்கவுடன் தான் செய்துகொண்ட ஒப்பந்தத்தினூடாக இப்பகுதியில் தான் குடியமர்த்தியதாக அவர் கூறினார். மேலும், இப்பகுதியில் மீதமாயிருந்த காணிகளை இதேபகுதியில் பாரம்பரியமாக வாழ்ந்துவந்த தமிழ் விவசாயிகளுக்குத் தான் வழங்கியதாகவும் அவர் கூறினார். அவர் தொடர்ந்தும் பேசுகையில் மாதுரு ஓயா நீர்ப்பாசணத் திட்டத்தின் வலதுபுற அபிவிருத்திக்கென்று ஒதுக்கப்பட்ட‌ இன்னும் 600 ஏக்கர் காணிகளை 200 இலங்கைத் தமிழ்க் குடும்பங்கள் சுவீகரித்துக்கொண்டதாகவும், ஆனால் 1979 ஆம் ஆண்டு மகாவலி அபிவிருத்தி அமைச்சர் காமிணி திசாநாயக்க கொண்டுவந்த காணி சுவீகரிப்புச் சட்டத்தின் மூலம் இக்காணிகள் இவர்களுக்கே சொந்தமாவதாகவும் கூறினார். மலிங்க ஹேர்மன் குணரட்ன‌ (இடது) ஆகவே, தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணியினர் மலையகத் தமிழர்களை கிழக்கு மாகாணத்தில் அரசுக்குச் சொந்தமான காணிகளில் குடியேறுமாறு தூண்டிவருகின்றனர் என்பது அபத்தமான பொய்ப்பிரச்சாரம் என்றும் தேவநாயகம் கூறினார். மாதுரு ஓயாக் குடியேற்றத் திட்டத்தில் தமிழர்களுக்கென்று அரசால் ஒதுக்கப்பட்ட இடங்களிலேயே திம்புலாகல தேரை சிங்களவர்களை அடாத்தாகக் கொண்டுவந்து குடியேற்றிவருவதாக தேவநாயகம் பத்திரிக்கையாளர்களிடம் மேலும் தெரிவித்தார். தமிழர்கள் பாரம்பரியமாக வாழ்ந்துவந்த காணிகளிலேயே சிங்களவர்களை பெளத்த பிக்கு தற்போது குடியமர்த்தி வருவதாக அவர் குற்றஞ்சாட்டினார். "தமிழருக்குச் சொந்தமான காணிகளை சிங்களவர்கள் ஆக்கிரமித்துக் குடியேற முயற்சிக்குமிடத்து, தமிழர்களுக்கும் சிங்களவர்களுக்கும் இடையில் இப்பகுதியில் மோதல்கள் ஏற்படுவதைத் தடுக்க முடியாது. நான் இதுகுறித்து ஜெனாதிபதிக்குத் தெரிவித்திருப்பதுடன், இன்னொரு இனக்கலவரம் ஏற்படுவதைத் தடுக்குமாறும் கோரியிருக்கிறேன். அவர் சரியான முடிவினை எடுப்பார் என்று நம்புகிறேன்" என்றும் அவர் கூறினார்.
  9. யாழ் களச் சொந்தங்களுக்கு வணக்கம். நான் எழுதும் கட்டுரைகள் அனைத்தும் என் சுய ஆக்கங்களாய் இருப்பினும், பெரும்பாலும் 'சமூகச் சாளரம்', 'தமிழும் நயமும்' பகுதிகளில் பதிவிடுகிறேன். சமீப காலமாக ஒளிப்படம் இணைந்த சில கட்டுரைகளை முகநூலில் பதிந்து பின்னர் யாழில் அவற்றின் இணைப்பை 'சமூகவலை உலகம்' பகுதியில் பதிகிறேன். ஒன்றிரண்டு கட்டுரைகளை 'யாழ் அகவை - சுய ஆக்கங்கள்' பகுதிக்கு நான் கேட்டுக் கொண்டதற்கு இணங்க மாற்றித் தந்தார்கள். நேராக 'சுய ஆக்கங்கள்' பகுதியில் பதிய வழி உள்ளதா என்பதை யாழ் உறவுகளில் யாராவது தெரிவிக்கக் கேட்டுக் கொள்கிறேன். மற்றபடி மாற்றித் தரக் கோருதலையும் முறையாக எந்த இடத்தில் எழுதலாம் எனக் கூறவும்.
  10. சமைக்கும்போது எண்ணை முகத்தில் தெறிக்காமலும், முத்தமிட வருபவரை எட்டியும் நிக்க வைக்கும் கேடயம்.......! 😂
  11. கண்ணிவெடி யுத்தம் போராளிகளின் தாக்குதல்களின் மும்முரம் அரசாங்கத்தை அதிர்ச்சிக்குள்ளாக்கியிருந்தது. பாதுகாப்பு அமைச்சு வெளியிட்ட அறிக்கையில் வட கிழக்கில் அதிகரித்துவரும் பயங்கரவாதிகளின் செயற்பாடுகள் என்கிற தலைப்பில் செய்திவெளியிட்டிருந்தது. மேலும், யாழ்ப்பாணம் செல்லும் பொதுமக்கள் மிகுந்த கவனத்துடன் தமது பயணங்களை மேற்கொள்ளவேண்டும் என்றும் அவ்வறிக்கை கேட்டுக்கொண்டது. யாழ்ப்பாணத்திற்கு மரக்கறிகளையும், தேங்காய்களையும் எடுத்துச் சென்ற பாரவூர்தியொன்று பயங்கரவாதிகளின் கண்ணிவெடித் தாக்குதலுக்கு இலக்காகி சாரதியும், நடத்துனரும் கொல்லப்பட்டதாக அவ்வறிக்கை கூறியிருந்தது. ஆவணியின் இறுதிப்பகுதியில் புலிகளால் நடத்தப்பட்ட கண்ணிவெடித் தாக்குதல்கள் இராணுவத்தினருக்கு அச்சுருத்தலாகவும், சவாலாகவும் மாறியிருந்தன. ஆகவே, இதற்கு முகம் கொடுப்பதற்காக கண்ணிவெடிகளில் இருந்து இராணுவத்தினருக்குப் பாதுகாப்பு வழங்கக் கூடிய கவச வாகனங்களை தென்னாபிரிக்காவிலிருந்து அரசு கொள்வனவு செய்தது. இதற்கு மேலதிகமாக இராணுவ ரோந்துகளுக்கு முன்னர் வீதிகளை சோதனை செய்து, கண்ணிவெடிகளை முன்கூட்டியே கண்டறிந்து அகற்றும் நடவடிக்கைகளிலும் அரசு இறங்கியது. போராளிகளின் கண்ணிவெடித் தாக்குதல்களும், இராணுவத்தினரின் காப்பு நடவடிக்கைகளும் இருதரப்பினரதும் புத்திசாதுரியங்களுக்கிடையிலான போட்டியாக மாறியது. ஆவணி 24 ஆம் திகதி நடைபெற்ற இரு சம்பவங்கள் அக்காலத்தில் நிலவிய சூழ்நிலையினை விளக்கப் போதுமானவை. கண்ணிவெடிகளுக்குத் தாக்குப்பிடிக்கும் பவள் கவச வாகனத்தைப் புரட்டிப் போட்ட புலிகள் முதலாவது சம்பவம் கரவெட்டி மேற்கில் இருக்கும் கல்லுவம் மண்டான் பகுதியில் நடைபெற்றது. இப்பகுதியினூடாகச் செல்லும் பிரதான வீதியில் கண்ணிவெடிகள் புதைக்கப்பட்டிருப்பதாக இராணுவத்தினருக்குத் தகவல் கிடைத்தது. இத்தகவலை வழங்கியவர்களே புலிகள்தான். ஆகவே, இராணுவத்தின் கண்ணிவெடி அகற்றும் பிரிவினர் அப்பகுதிக்குச் சென்று தமது தேடுதலை ஆரம்பித்தனர். கண்ணிவெடி அகற்றும் பிரிவுக்குப் பாதுகாப்பாக இன்னொரு தொகுதி இராணுவத்தினர் தென்னாபிரிக்க பவள் கவச வாகனங்களில் வந்திருந்தனர். கண்ணிவெடி புதைக்கப்பட்ட பகுதியின் மேலாக கவச வாகனம் ஏறியபோது குண்டு வெடிக்கவைக்கப்பட்டது. பவள் வாகனம் குடைசாய உள்ளிருந்த 8 இராணுவத்தினர் அவ்விடத்தில் பலியானார்கள். அதே நாளன்று நீர்வேலிப் பகுதியில் இவ்வாறான கண்ணிவெடி அகற்றும் பிரிவொன்றின்மீது புலிகள் நடத்திய கண்ணிவெடித் தாக்குதலில் மேலும் மூன்று இராணுவத்தினர் கொல்லப்பட்டனர். புரட்டாதி மாதமளவில் தமது கண்ணிவெடித் தாக்குதல் திறமையினை புலிகள் நன்கு வெளிப்படுத்தியிருந்தனர். இம்மாதத்தின் முதலாம் திகதி வடமாராட்சி திக்கம் பகுதியில் அவர்கள் நடத்திய கண்ணிவெடித் தாக்குதலில் ஐந்து பொலீஸ் கொமாண்டோக்கள் கொல்லப்பட்டனர். இதற்குப் பழிவாங்க பொலீஸார் நடத்திய தாக்குதல்களில் அப்பகுதியில் பொதுமக்கள் சிலர் கொல்லப்பட்டதோடு வீடுகளுக்கும், கடைகளுக்கும் தீவைக்கப்பட்டது. இருநாட்களுக்குப் பின்னர், புரட்டாதி 3 ஆம் திகதி வடமராட்சி, கிழக்குப் பருத்தித்துறைப் பகுதியில் கடற்தொழிலில் ஈடுபட்டுவந்த எட்டு மீனவர்களை ரோந்துவந்த கடற்படையினர் சுட்டுக் கொன்றனர். இஸ்ரேலிய பயங்கரவாத எதிர்ப்பு நிபுணர்களின் ஆலோசனைகள் மூலமாகவும், வெளிநாட்டு இராணுவ உதவிகள் மூலமாகவும் போராளிகளின் ஆயுதச் செயற்பாட்டினை வடக்கிற்குள் மட்டுப்படுத்திவிடலாம் என்று பாதுகாப்பு அமைச்சர் லலித் அதுலத் முதலி நம்பிவந்தார். ஆனால், அவரின் நம்பிக்கையினைச் சிதைக்கும் விதமாக புரட்டாதி 10 ஆம் திகதி புலிகள் தமது கண்ணிவெடித் தாக்குதல்களை முல்லைத்தீவு மாவட்டத்திற்கும் விஸ்த்தரித்துக்கொண்டனர். புரட்டாதி 11 ஆம் திகதி வர்த்தக அமைச்சின் பத்திரிக்கையாளர் மாநாட்டில் பேசிய லலித், பயங்கரவாதம் கிழக்கிற்கும் பரவுவதைத் தடுப்பதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்தார். "கிழக்கிற்கான பாதைகளை நாம் மூடிவருகிறோம். இதற்காக வடக்குக் கிழக்கு எல்லையோரங்களில் சிங்களக் கிராமங்களை நாம் உருவாக்கி வருகிறோம்" என்று அவர் கூறினார். இராணுவமயப்படுத்தப்பட்ட எல்லையோர சிங்களக் குடியேற்றங்களை இலக்குவைத்த புலிகள் முல்லைத்தீவு மாவட்டத்தில் லலித் அதுலத் முதலியின் ஆலோசனையின் பேரில் நடத்தப்பட்டுவரும் இராணுவமயப்படுத்தப்பட்ட‌ சிங்களக் குடியேற்றங்கள் மீது தமது பார்வையைத் திருப்பினர் புலிகள். பாலஸ்த்தீனத்தில் ஆக்கிரமிப்பில் ஈடுபட்டுவரும் இஸ்ரேலிய அரசின் திட்டத்தினைனை நகலாகக் கொண்ட இராணுவமயமாக்கப்பட்ட இவ்வகைச் சிங்களக் குடியேற்றங்கள் திருகோணமலை முதல் முல்லைதீவு வரையான கரையோரப்பகுதிகளிலும், 1950 களில் அமைக்கப்பட்ட சிங்களைக் குடியேற்றமான பதவியாவுக்கும் பாரம்பரிய தமிழ்க் கிராமமான நெடுங்கேணிக்கும் இடையே தமிழ்ப் பிரதேசங்களுக்கிடையிலான நிலத்தொடர்பினை ஊடறுத்து அமைக்கப்பட்டிருந்தன. ஏற்கனவே அமைக்கப்பட்ட சிங்கள மீனவக் குடியேற்றங்களான கொக்கிளாய் நாயாறு ஆகியவற்றின் தொடர்ச்சியாகவும் விவாசாயக் குடியேற்றக்கிராமமான பதவியாவின் விஸ்த்தரிப்பாகவும் இவை உருவாக்கப்பட்டு வந்தன. இக்குடியேற்றங்களில் அமர்த்தப்பட்ட சிங்களவர்களுக்கு இராணுவப் பயிற்சியும் ஆயுதங்களும் அரசாங்கத்தால் வழங்கப்பட்டன. செம்மலைத் தாக்குதல் மாத்தையா தலைமையிலான 16 போராளிகள் அடங்கிய புலிகளின் அணியொன்று, முல்லைத்தீவு - கொக்கிளாய் வீதியில், முல்லைத்தீவு நகரிலிருந்து பத்துக் கிலோமீட்டர்கள் தொலைவில் அமைந்திருக்கும் செம்மலைக் கிராமத்தில் கண்ணிவெடியொன்றைப் புதைத்துவிட்டு இராணுவத்தினரின் வருகையினை எதிர்பார்த்துக் காத்திருந்தனர். காலை 10:15 மணிக்கு ஜீப் வண்டி முன்னல் வர பின்னால் இரு ட்ரக்குகளில் இராணுவத்தினர் அப்பகுதிநோக்கி வந்துகொண்டிருந்தனர். முன்னால் வந்துகொண்டிருந்த ஜீப் வண்டி தம்மைக் கடக்கும்வரை பொறுமையாகக் காத்திருந்த புலிகளின் அணி, நடுவில் வந்துகொண்டிருந்த ட்ரக்கினை இலக்குவைத்து கண்ணிவெடியை இயக்கியது. ட்ரக் கண்ணிவெடியில் வெடித்துச் சிதற பின்னால் வந்த இரண்டாவது ட்ரக் வண்டியில் இருந்த இராணுவத்தினர் வெளியே குதித்துத் தாக்குதலில் ஈடுபட, புலிகளுக்கும் இராணுவத்திற்கும் இடையில் கடும் துப்பாக்கிச் சமர் மூண்டது. ஒருகட்டத்தில் தாக்குதலை முடித்துக்கொண்டு புலிகளின் அணி பின்வாங்கிச் சென்றது. இந்தச் சண்டையில் ஒன்பது இராணுவத்தினர் கொல்லப்பட மேலும் மூவர் காயமடைந்தனர். முல்லைத்தீவு முகாமிலிருந்து வந்த மேலதிக இராணுவத்தினர் அப்பகுதியை சல்லடை போட்டுத் தேடினர். இச்சண்டையில் நான்கு பயங்கரவாதிகளைத் தாம் கொன்றுவிட்டதாக கொழும்பில் அரசாங்கம் கோரியபோதும், புலிகள் அதனை மறுத்திருந்தனர். மேலதிக இராணுவத்தினர் அப்பகுதிக்கு வருமுன்னரே தமது அணி அப்பகுதியில் இருந்து வெளியேறிவிட்டதாக அவர்கள் அறிவித்தனர். கொக்கிளாயில் இராணுவத்தின்மேல் நடத்தப்பட்ட தாக்குதல் அப்பகுதியில் அரச ஆதரவுடன் குடியேறியிருந்த சிங்களவர்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தியிருந்தது. சிலர் தமது சொந்தக் கிராமங்களுக்கு திரும்பிச் செல்லத் தொடங்கினர். ஆனாலும், அப்பகுதியில் தான் முன்னெடுத்து வந்த இராணுவமயப்படுத்தப்பட்ட சிங்களக் குடியேற்றத்தை விஸ்த்தரிப்பதில் இருந்து அரசாங்கம் சிறிதும் பின்வாங்க விரும்பவில்லை.
  12. அன்பார்ந்த யாழ் இணைய உறவுகளுக்கு, எதிர்வரும் 30.03.2024 அன்று யாழ் இணையம் 25 அகவைகளைப் பூர்த்திசெய்து தனது 26 ஆவது அகவைக்குள் காலடி எடுத்து வைக்கின்றது. 1999ம் ஆண்டு மார்ச் மாதம் 30ம் நாள் தொடங்கப்பட்ட யாழ் இணையம், பல்வேறு சவால்களையும் தாண்டி, தொழில்நுட்ப வளர்ச்சியின் வேகமான மாற்றங்களுக்கும், சமூக வலைத்தளங்களின் துரித வளர்ச்சிக்கும் ஈடுகொடுத்து இன்றும் தன்நிகரற்ற தமிழ் இணையத்தளமாய் இருக்கின்றது. யாழ் இணையம் 26 ஆவது அகவையில் காலடி எடுத்து வைக்கும் நாளினைச் சிறப்பிக்கும் முகமாக இம்முறையும் கள உறுப்பினர்களின் சுயமான ஆக்கங்களைக் கோருகின்றோம். சுய ஆக்கங்கள் கவிதை, கதை, அனுபவங்கள்(பயணங்கள் உட்பட), மொழியாக்கம், பத்திகள், அறிவியல் கட்டுரைகள், ஆய்வுகள் போன்று எந்த வடிவிலும் அமையலாம். கலை வெளிப்பாடுகளைக் கொண்ட ஒளிப்படமாகவோ, ஓவியமாகவோ, காணொளியாகவோ கூட இருக்கலாம். சுய ஆக்கங்கள் உறுப்பினர்கள் விரும்பும் எத்தகைய கருப்பொருள்களிலும் அமையலாம். இச் சுய ஆக்கங்கள் முகநூல் நிலைத்தகவல், டுவிட்டர் குறுஞ்செய்தி போன்று மிகவும் குறுகியதாக அமையாமல் இருத்தல் வேண்டும். மேலும், இச் சுய ஆக்கங்களில் யாழ் களம் 26 ஆவது அகவையில் காலடி வைப்பதற்கான வாழ்த்து விடயங்களை தவிர்ப்பது நல்லது. எமது நோக்கம் அனைத்து கள உறவுகளையும் அவரவர் திறமைகளுக்கேற்ப சுயமான ஆக்கங்களைப் படைப்பதற்கான வெளியை யாழ் கருத்துக்களத்தில் வழங்குவதேயாகும். இதன் மூலம் அனைத்து கள உறவுகளும் தேங்கிப்போயுள்ள தமது படைப்புத் திறனை வெளிக்காட்டுவார்கள் என்று நம்புகின்றோம். எனவே அனைவரையும் உற்சாகத்துடன் பங்குகொள்ளுமாறு கோருகின்றோம். யாழ் களம் 26 ஆவது அகவைக்குள் காலடி வைப்பதை முன்னிட்டு யாழ் கள உறவுகளின் சுய ஆக்கங்களுக்கான சிறப்புப் பக்கம் வெகுவிரைவில் தயாராகும். கள உறவுகள் சுய ஆக்கங்களைத் தயார்படுத்தவும், மெருகேற்றவும் ஒரு சில வாரங்களே இருக்கின்றன. நாட்கள் விரைந்து ஓடிவிடும் என்பதால், காலந்தாழ்த்தாது சுய ஆக்கங்களைத் தயார்படுத்த இப்போதே ஆயத்தமாகுங்கள். விதிமுறைகள்: யாழ் கள உறுப்பினர்கள் மட்டுமே ஆக்கங்களை படைக்கலாம். உறுப்பினர்கள் அல்லாதவர்கள் உறுப்பினர்களாக இணைந்து ஆக்கங்களை இணைத்துக் கொள்ளலாம். ஆக்கங்கள் கள உறுப்பினர்களின் சுயமான ஆக்கங்களாக இருக்கவேண்டும். கருப்பொருள் எதுவாகவும் இருக்கலாம் (வாழ்த்துக்களைத் தவிர்த்து). எனினும் ஆக்கங்களின் உள்ளடக்கத்திற்கு உறுப்பினர்களே முழுப் பொறுப்பும் ஏற்க வேண்டும். கள உறுப்பினர் ஒருவர் ஒன்றுக்கு மேற்பட்ட ஆக்கங்களைப் படைக்கலாம். கள உறுப்பினர் ஒருவர் ஒன்றுக்கு மேற்பட்ட வகைமைகளில் ஆக்கங்களைப் படைக்கலாம். ஆக்கங்கள் இதற்கு முன் வேறெங்கும் பிரசுரம் ஆகாததாக இருக்கவேண்டும். ஆக்கங்கள் யாழ் கள விதிகளை மீறாத வகையில் அமையவேண்டும். "நாமார்க்கும் குடியல்லோம்" நன்றி யாழ் இணைய நிர்வாகம்
  13. நான் இறுதியாக ஊருக்குச் சென்றது 2018 இல். எனது சித்தியைப் பார்ப்பதற்காக அன்று சென்றிருந்தேன், கூடவே குடும்பமும். சித்தியைப் பற்றி முதல் ஒரு பதிவில் கூறியிருக்கிறேன். 1988 இல் எனது தகப்பனாரின் கொடுங்கரங்களிலிருந்து என்னை மீட்டு மட்டக்களப்பிற்கு அழைத்துச் சென்றவர். தன்னால் முடிந்தவரையில் எனக்கு உணவும், உறையுளும், கல்வியும் தந்தவர். அன்னைக்கு அடுத்த தானத்தில் இருப்பவர். என்மேல் உண்மையான அக்கறை கொண்டவர். ஆகவே, அவரது உடல்நிலை ஓரளவிற்கேனும் நல்லநிலையில் இருக்கும்போது பார்த்துவிட்டு வரலாம் என்கிற எண்ணத்தில், அதுவரை எனது 16 ஆண்டுகள் அஞ்ஞாதவாசத்தைக் கலைந்து சென்று வந்தேன். அந்தப் பயணம் பற்றி அதிகம் கூற எதுவும் என்னிடத்தில் இல்லை. சித்தியை ஊர்காவற்றுறையில் இருந்து அவர் இருந்த யாழ்ப்பாணம் கன்னியாஸ்த்திரிகள் மடத்தில் இருமுறை சென்று சந்தித்தோம். ஒரு சில நினைவுகளைத் தவிர பல நினைவுகளை அவர் தொலைத்திருந்தார். ஆனால், உடல் ஓரளவிற்குத் தாக்குப் பிடித்துக்கொண்டிருந்தது. அதிகம் பேசவில்லை. என்னையும் குடும்பத்தையும் நீண்டநேரம் பேச்சின்றிப் பார்த்துக்கொண்டிருந்தார். அவரைச் சென்று சந்தித்ததைத் தவிர அப்பயணத்தில் குறிப்பிடும்படியாக பல விடயங்கள் இருக்கவில்லை. எனது அன்னையின் இன்னும் மூன்று தங்கைகளை யாழ்ப்பாணத்தின் கரவெட்டி மற்றும் கொழும்பின் கம்பஹ ஆகியவிடங்களில் சென்று பார்த்தேன். எவருமே அதிகம் பேசவில்லை. சிலவேளை எனது குடும்பத்தை முதன்முதலில் பார்ப்பதால் வந்த சங்கோஷமாக இருக்கலாம். அவர்களை விடவும் நான் சந்தித்த வெகு சிலரில் எனது நண்பன் ஜெயரட்ணமும் அவனது சகோதரர் ராசா அண்ணையும் குறிப்பிடத் தக்கவர்கள். அவர்கள் பற்றியும் முன்னர் எழுதிவிட்டேன். அங்கிருந்த இரு வாரங்களில் மன்னாருக்கு ஒருநாள் சென்றுவந்தோம். இன்னொருநாள் காங்கேசந்துறைக்கும் கரவெட்டிக்கும் பயணம் இருந்தது. இடையில் நுவரெலியாவுக்குப் போனோம். குளிர், இதனைத்தவிர வேறு எதுவும் மனதில்ப் பதியவில்லை. நான் விரும்பிய இடங்களையும், மனிதர்கள் அனைவரையும் சந்திக்கும் சுதந்திரம் எனக்கு இருக்கவில்லை. பிள்ளைகளை விட்டு வெளியே செல்ல முடியாது, அவர்களும் வெளியே வரப்போவதில்லை. சித்திரை வெய்யில் காய்த்தெடுக்க வீட்டிலேயே இருந்துவிட்டார்கள். மேற்குநாட்டு வளர்ப்பு என்று கூறுவீர்கள், இருக்கலாம். என்னைப்போன்று இங்கிருந்து செல்லும் அனைத்துப் பெற்றொரும் முகம்கொடுக்கும் கேள்விகள் இவை, அதில் தவறுமில்லை.
  14. சுவிற்சர்லாந்தில் நடிகமணிக்கு ஒரு பெருவிழா! … அருந்தவராஜா .க காலம் அழைத்துச் சென்ற கலைஞர்களில் நடிகமணி வி.வி வைரமுத்து ஒருவரானாலும் காலகாலமாக மக்கள் மனங்களில் வாழ்ந்து நிறைந்திருக்கிறார். இலங்கையின் இசை நாடக வரலாற்றில் தனி ஆளுமை மிக்கவராகவும் பல்துறை கலை ஆற்றல் உள்ளவராகவும் விளங்கிய நடிகமணியவர்கள் அரிச்சந்திர மயானகாண்டம் நாடகத்தை 3000 தடவைகளுக்கு மேலாகவும் பக்த நந்தனார் நாடகத்தை1000 தடவைகளுக்கு மேற்படவும் நடித்துப் பெருமை சேர்த்தார். இவற்றை விட மேலும் பல நாடகங்கள் பற்பல முறை மேடையேற்றங்கள் கண்டுள்ளன. இலங்கையில் ஒரு அரங்க நடிகனுக்கு இரசிகப்பட்டாளம் அதிகம் உருவாகியிருப்பதும் நாடக அரங்குக்கு பின்னரான கதைக் களங்கள் உருவாகியும் பின்னர் அவை கொத்தணிக் கதைக் களங்களாகப் பல்கிப் பெருகிய பெருமையும் நடிக மணி வைரமுத்து அவர்களையே சாரும். இவ்வகை அரங்காடல், கதையாடல் என்பன வைரமுத்து அவர்களை இலங்கையின் தேசிய மகா கலைஞனாகவும் இனங்காட்டியது .பேராதனைப் பல்கலைகழகத்தில் சிங்கள நாடகப் பேராசான் சரத்சந்திரா முன்னிலையில் அரிச்சந்திரா மயான காண்டம் மேடையேற்றப்பட்டு பெரும் பாராட்டைப் பெற்றுக் கொண்டது . யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம் 1984 இல் நடிகமணி யவர்களை அழைத்து கைலாசபதி கலையரங்கில் மதிப்பளித்தும் 2004 இல் கௌரவ கலாநிதிப் பட்டத்தை வழங்கியும் தன்னைப் பெருமைப்படுத்திக் கொண்டது . இலங்கை ஒலி பரப்புக் கூட்டுத்தாபனம் இவரது நாடகத்தை ஒலிப்பதிவு செய்து ஒலிபரப்பியும் ஒலிப்பேழையாகவும் வெளியீடு செய்துள்ளது. லண்டன் BBC நிறுவனமும் இவரது நாடகத்தை ஒளிப்பதிவு செய்து வெளியிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது . பேராசிரியர் வித்தியானந்தன் அவர்கள் நடிக மணியின் இசை நாடகத்தை புதிய பாய்ச்சலுக்கான பல ஆலோசனைகள் , உதவிகளையும் வழங்கியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கதாகும் . இவ்வாறு பெருமை பெற்றுள்ள கலைஞனுக்கு மதிப்பளிக்கும் வகையிலும் அவரது 100 ஆவது அகவை வருடத்தை நினைவு கூரவும் சுவிஸ் நாட்டின் தலைநகரில் ஐரோப்பிய மதிப்பளிப்புக் கழக நிறுவுனர் வைகுந்தன் அவர்களில் தலைமையில் (28 .O1.2024 ) நிகழ்வு இடம்பெற்றது . இந்த நிகழ்வில் நடிக மணியவர்களின் பிள்ளைகள் உறவுகள் மற்றும் பலரும் பங்கு பற்றி நிகழ்ச்சிகளையும் வழங்கியிருந்தனர். பல் துறைக் கலைஞன் மயிலை இந்திரன் குழுவினரின் அரிச்சந்திரா மயானகாண்டம் , கலைவளரி இரமணன் குழுவினரின் பண்டாரவன்னியன் நாடகம் என்பன மேடையேற்றப்பட்டு மக்களின் பாராட்டைப் பெற்றுக் கொண்டன. நடிகமணி நினைவுப் பேருரையை நானும் (க.அருந்தவராஜா) வழங்கியிருந்தேன் . யாழ் பல்கலைக்கழகத்தில் 1984 இல் நடிக மணியவர்களுக்கு பாராட்டு விழா நடைபெறும் போது அங்கு ஒரு மாணவனாக இருந்து அந்த நிகழ்வை கண்டு களித்தவன் என்ற வகையில் இன்று 40 ஆண்டுகள் கடந்து விட்ட நிலையில் அவரது மறைவுக்குப்பின் சுவிஸ் நாட்டில் அவருக்கான நினைவுரையை வழங்கியிருக்கிறேன். காலங்கள் தான் ஓடுகின்றனவே தவிர நினைவுகள் காலைவரை கதவைத் தட்டிக் கொண்டேயிருக்கின்றன. காலத்தால் மறக்கமுடியாத மகா கலைஞன் நடிகமணி வி.வி.வைரமுத்து இலங்கையின் இசை நாடக வரலாற்றில் மாபெரும் சொத்து .காலங்கள் கடந்தும் பேசப்படுவார் . அருந்தவராஜா .க ஜெனீவா. https://akkinikkunchu.com/?p=267459
  15. அமெரிக்காவுக்கும் ஈரானுக்கும் இடையே ஒரு யுத்தம் இடம்பெறுவதற்கான மணித்துளிகள் எண்ணப்பட்டுக்கொண்டிருக்கதாகக் கூறுகின்றார்கள் சில போரியல் நோக்கர்கள். சில தினங்களுக்கு முன்னர் ஜோர்தானில் உள்ள அமெரிக்க காவல் நிலையான டவர்-22 மீது ஈரான் வழிநடாத்தலில் செயற்பட்டுவருகின்ற Kataib Hezbollah என்ற அமைப்பு மேற்கொண்ட தாக்குதலில் 3 அமெரிக்க வீரர்கள் கொல்லப்பட்டு 40 வீரர்கள் வரையில் காயமடைந்ததைத் தொடர்ந்து அமெரிக்கா பதில் நடவடிக்கையில் இறங்கும் என்று பரவலாகவே எதிர்பார்க்கப்பட்டுவருகின்றது. https://tamilwin.com/article/us-iran-war-in-middle-east-1706876382
  16. பங்குகள் வாங்க நினைப்பவர்கள் இப்ப வாங்கினால் நல்லது, 5 வருடங்களில் பல மடங்காகும் என நினைக்கின்றேன், லித்தியம் இப்ப குறைந்திருந்தாலும், ஏதிர்காலம் இதுதான் With 100% ownership of 34,572 Ha (346km2) of prospective lithium projects within the James Bay region of Quebec. https://www.jamesbayminerals.com.au/
  17. அப்படி நடந்திருந்தால் அதன் ஆதாரத்தையல்லவா நீங்க வைக்க வேண்டும்? வெறுமனே அவர் மீது குற்றம் சொல்வதில் பிரயோசனம் இல்லை.
  18. இந்த தாக்குதல் என்பதை தமிழ் சமூகத்தில் ஒரு விதி விலக்கு என்று கூறுகிறார். இதற்கு முன் தமிழ் சமூகத்தில் இப்படி தாக்குவது இல்லையாம். கடந்த 25 வருடங்ககளில் தமிழ் சமூகத்தில் ஒரு தமிழ் அமைப்பு மீது தாக்குதல் நடந்தது இதுவே முதல் தடவை என்று சிரிக்காமல் கூறியிருப்பதில் இருந்து இவர் தமிழ் தேசியவாதியாக இருப்பதற்கான முழுத் தகுதியை பெற்றிருக்கிறார் என்று நினைக்கிறேன். 😂
  19. Published By: DIGITAL DESK 3 03 FEB, 2024 | 05:04 PM (எம்.நியூட்டன்) பாராளுமன்ற உறுப்பினர்களான சிவஞானம் சிறீதரன், தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவர் மனோ கணேசன் ஆகியோர், ராஜிவ் காந்தி கொலை வழக்கில் விடுதலைபெற்றுள்ள சாந்தனை இலங்கை வர அனுமதிக்குமாறு இன்று சனிக்கிழமை நண்பகல் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவை நேரில் சந்தித்து கோரிக்கை விடுத்துள்ளனர். இக்கோரிக்கையை சாதகமாக பரிசீலித்து, சாந்தன் இலங்கை வந்து தன் வயதான தாயாரைச் சந்திக்கும் வாய்ப்பை ஏற்படுத்தித் தருவதாக ஜனாதிபதி உறுதியளித்துள்ளார். இது தொடர்பான அடுத்தகட்ட நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு தேசிய பாதுகாப்புக்கான ஜனாதிபதி ஆலோசகர் சாகல ரட்னாயக்கவுக்கு, சந்திப்பின் போதே ஜனாதிபதி பணிப்புரை விடுத்துள்ளார். சாந்தனின் தாயாரின் கோரிக்கைக் கடிதம் மற்றும் மேலதிக தகவல்களை தருமாறும் ஜனாதிபதி சிறீதரன் எம்.பியிடம் கோரிக்கை விடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
  20. வணக்கம், யாழ் 26 அகவை - சுய ஆக்கங்கள் சிறப்புப் பகுதி திறக்கப்பட்டுள்ளது. கடந்த வருடங்கள் போன்று சுய ஆக்கங்களைப் பதிந்து யாழ் அகவை 26 இனை சிறப்பிக்குமாறு சகல கள உறுப்பினர்களையும் கேட்டுக்கொள்கின்றோம். நன்றி யாழ் 26 அகவை - சுய ஆக்கங்கள்சிறப்புப் பகுதி திறக்கப்பட்டுள்ளது ஆக்கங்கள் இதற்கு முன் வேறெங்கும் பிரசுரம் ஆகாததாக இருக்கவேண்டும். யாழ் களத்தில் முதலில் பதிந்த பின்னர் முகப்புத்தகத்தில் விரும்பினால் பிரசுரிக்க வேண்டுகின்றோம். சுய ஆக்கங்கள் பகுதிக்கு ஏதாவது பதிவுகளை மாற்ற விரும்பினால் இந்தத் திரியிலேயே அறியத்தாருங்கள். நன்றி.
  21. ""தமிழ்த் தேசிய அரசியலை தமிழ் மக்கள் வெறுக்கும், வேறு அரசியல்களுக்குள் சாய்கின்ற நிலை ஆபத்தானது "" 100% உண்மை
  22. தமிழர்களின் தாயகக் கோட்பாட்டினைச் சிதைத்து, அழித்துவிட உருவாக்கப்பட்ட குடியேற்றத் திட்டங்கள் தேவநாயகத்தின் பத்திரிக்கையாளர் அழைப்பிற்கு வந்தவர்கள் ஓரளவிற்கு நடுநிலைமையுடன் நடந்துகொணடதுடன் அதற்குத் தேவையானளவு முக்கியத்துவத்தையும் தமது ஊடகங்களில் வழங்கியிருந்தனர். ஆனால், இந்த பத்திரிக்கையாளர் சந்திப்பு மகாவலி அபிவிருத்தி அமைச்சிற்கு மிகுந்த கோபத்தினை ஏற்படுத்தியிருந்தது. அமைச்சகத்தைக் கட்டுப்பாட்டில் வைத்திருந்த சிறிய, ஆனால் பலம்வாய்ந்த குழுவினர் உடனடியாக நடவடிக்கையில் இறங்கினர். தமிழ் மக்களின் தாயகக் கோட்பாட்டுடனான தனிநாட்டுக்கான கோரிக்கையின் அஸ்த்திவாரத்தினை முற்றாகத் தவிடுபொடியாக்கிவிட மகாவலி அபிவிருத்தி என்கிற பெயரில் தாம் எடுத்துவரும் இரகசிய நடவடிக்கைகளை தேவநாயகத்தின் இந்த முயற்சி முறியடித்துவிடும் என்று அவர்கள் அஞ்சினர். ஆகவே தமது இரகசியத் திட்டத்தினை துரிதப்படுத்தும் வேலைகளை அவர்கள் ஆரம்பித்தனர். மகாவலி அமைச்சில் செயற்பட்டு வந்த அதிதீவிர சிங்கள அமைப்பினால் இந்த இரகசியத் திட்டம் தயாரிக்கப்பட்டது. இக்குழுவிற்கு திட்டமிடல்ப் பிரிவின் இயக்குநர் டி.எச். கருணாதிலக்கவும், மகாவலி அபிவிருத்தி அமைச்சர் காமிணி திசாநாயக்கவின் செயலாளர் ஹேமப்பிரியவும் தலைமை தாங்கினர். இவர்களுக்கு மேலதிகமாக அமைச்சில் பணியாற்றிய ஏனைய உயர் அதிகாரிகள், சர்வதேச பிரசித்தி பெற்ற சிங்களக் கல்விமான்கள் ஆகியோரும் இத்திட்டத்திற்கு உதவிகளை வழங்கிவந்தனர். தமது திட்டத்தினை செயற்படுத்த மலிங்க ஹேர்மன் குணரட்ணவை இக்குழுவினர் அமர்த்திக்கொண்டனர். அமைச்சகத்தின் மேலதிக பொது முகாமையாளர் எனும் பதவியும் இத்திட்டத்தினை நடைமுறைப்படுத்துவதற்காக அவருக்கு வழங்கப்பட்டது. 1990 ஆம் ஆண்டு கொழும்பில் அவரது வீட்டில் என்னுடன் பேசிய ஹேர்மன் குணரட்ண, தமது இரகசியத் திட்டத்திற்கு மகாவலி அபிவிருத்தி அமைச்சரான காமிணி திசாநாயக்க முழு ஆதரவினையும் வழங்கியதாகக் கூறினார். ஜனாதிபதி ஜெயாரும் இத்திட்டத்திற்கு முற்றான ஆதரவினை வழங்கியிருந்ததாக தான் நம்புவதாகவும் அவர் கூறினார். தனது நம்பிக்கைக்கான காரணங்களாக பின்வரும் இரு விடயங்களை அவர் முன்வைத்தார். "முதலாவது காரணம், எமது இரகசியத் திட்டத்திற்கு முற்றான ஆதரவினை வழங்கிய மூன்று முக்கிய மனிதர்களும் ஜனாதிபதியின் நம்பிக்கைக்குப் பாத்திரமாகச் செயற்பட்டவர்கள்". அவர் குறிப்பிட்ட அந்த மூன்று முக்கிய நபர்கள், ஜெயாரின் மகனான ரவி ஜெயவர்த்தன, ஜெயார் தனது இன்னொரு மகனாக நடத்திவந்த அமைச்சர் காமிணி திசாநாயக்க, ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவராக ஜெயாரினால் நியமிக்கப்பட்ட பண்டிதரட்ண ஆகியோராகும். இவர்கள் மூவரும் ஜெயாரிடமிருந்து எந்த விடயத்தையும் மறைப்பதில்லை என்று அறியப்பட்டவர்கள். ஹேர்மன் குணரட்ண கூறிய இரண்டாவது காரணம், மாதுரு ஓயா சிங்கள ஆக்கிரமிப்பில் ஈடுபட்டவர்களைக் கைதுசெய்யுமாறு ஜெயார் அறிவித்த அதே நாளான ஐப்பசி 6 ஆம் திகதி தனது வீட்டில் நடைபெற்ற நிதிதிரட்டும் நிகழ்வில் தன்னிடம் கேள்விகேட்ட தாஸ‌ முதலாலிக்குத் காமிணி திசாநாயக்க வழங்கிய பதிலாகும். இதுகுறித்து பின்னர் விரிவாகப் பார்க்கலாம். காமிணியிடம் பேசிய தாஸ முதலாளி, "மகாவலி அமைச்சின் இரகசியத் திட்டம் குறித்து ஜனாதிபதிக்குத் தெரியுமா?" என்று வினவியிருந்தார். அதற்குப் பதிலளித்த காமிணி, "ஜனாதிபதிக்கு இத்திட்டம் தெரியும் என்பது மட்டுமல்லாமல், இத்திட்டத்தினை வெற்றிகரமாக பூரணப்படுத்த ஜனாதிபதி நிதியத்திலிருந்தும் பெருமளவு பணத்தினை அவர் வழங்க முன்வந்திருக்கிறார்" என்று பதிலளித்தார். பண்டிதரட்ண 1983 ஆம் ஆண்டின் கறுப்பு யூலை இனக்கொலை நடப்பதற்கு சில மாதங்களுக்கு முன்னதாக, மகாவலி அபிவிருத்தி அமைச்சின் குளிரூட்டப்பட்ட அறைகளில் ஒன்றில், பண்டிதரட்ண தலைமையில் இடம்பெற்ற கூட்டத்திலேயே இந்த இரகசியத் திட்டத்திற்கான மூலம் விதைக்கப்பட்டது. அமைச்சகத்தில் பணிபுரியும் தமிழ் அதிகாரிகளுக்கு இத்திட்டம் தெரியாதவகையில் மிகவும் இரகசியமான முறையில் தீட்டப்பட்டது. இரகசியத் திட்டம் இரு கட்டங்களாக நடைமுறைப்படுத்தப்படும் என்று தீர்மானிக்கப்பட்டது. முதலாவது, தமீழத்திற்கான அடிப்படையினை முற்றாக அழிப்பது. இதனை அடைவதற்கு தமிழர் தாயகத்தின் நிலத்தொடர்பினையும், ஒருமைப்பாட்டினையும் உடைக்கும் நோக்கில், தமிழர் தாயகத்தின் மாதுரு ஓயா, யன் ஓயா, மல்வத்து ஓயா ஆகிய நதிகளை அண்டிய பகுதிகளில் சிங்களக் குடியேற்றங்களை உருவாக்குவது. மாதுரு ஓயா விவசாயக் குடியேற்றத்தின் மூலம் திருகோணமலை மாவட்டத்திற்கும் மட்டக்களப்பு மாவட்டத்திற்கும் இடையே இருந்த நிலத்தொடர்பு முற்றாக அறுத்தெறியப்படும். யன் ஓயாக் குடியேற்றத்திட்டத்தின் மூலம் திருகோணமலை மாவட்டத்திற்கும் முல்லைத்தீவு மாவட்டத்திற்கும் இடையிலான நிலத்தொடர்பு கடுமையாகச் சிதைக்கப்படும். மல்வத்து ஓயா திட்டத்தின் ஊடாக மன்னார் மற்றும் புத்தளம் மாவட்டங்களுக்கிடையிலான தொடர்பு துண்டிக்கப்படும். திருகோணமலை மட்டக்களப்பு மாவட்டங்களின் நிலத்தொடர்பை அறுத்தெறியும் மாதுரு ஓயா குடியேற்றத் திட்டம் திருகோணமலை முல்லைத்தீவு மாவட்டங்களுக்கிடையிலான நிலத்தொடர்பினைச் சிதைக்கும் யன் ஓயாக் குடியேற்றம் புத்தளம் மன்னார் ஆகிய மாவட்டங்களைப் பிரிக்கும் மல்வத்து ஓயா குடியேற்றம் இரகசியத் திட்டத்தின் முதலாவது கட்டம் தமிழர் பெரும்பான்மையினராக வாழும் வடமாகாணம் மற்றும் கிழக்கு மாகாணத்தின் மட்டக்களப்பு, திருகோணமலை மாவட்டங்களை விலத்தியே அமுல்ப்படுத்துவது என்று முடிவெடுக்கப்பட்டது. "இறையாண்மை கொண்ட நாட்டினை உருவாக்க" எனும் தலைப்பில் தான் எழுதிய புத்தகம் தொடர்பாக சண்டே டைம்ஸ் பத்திரிகையில் 1990 ஆம் ஆண்டு ஆவணி 26 ஆம் திகதி, இந்த இரகசியத் திட்டத்தினை முன்னெடுத்தவர் என்கிற வகையில் ஹேர்மன் ஒரு கட்டுரையினை வரைந்திருந்தார். என்னுடன் பேசுகையில் இத்திட்டத்தின் எல்லைகள் குறித்தும் குறிப்பிட்டார் ஹேர்மன். தமிழர் தாயகத்தில் முன்னெடுக்கப்படும் இத்திட்டங்கள் ஒவ்வொன்றிலும் 50,000 சிங்களவர்களைத் தாம் குடியேற்றத் திட்டமிட்டதாகவும், இதன்மூலம் இப்பகுதிகளின் இனப்பரம்பலினை முற்றாக மாற்றிவிடுவதே தமது நோக்கம் என்றும் அவர் கூறினார். குணரட்ணவுடன் பேசும்போது அவர் ஒரு நேர்மையான மனிதர் என்பதனை என்னால் உணர்ந்துகொள்ள முடிந்தது. தனது திட்டம் வெற்றியடைய வேண்டும் என்று அவர் கொண்டிருந்த உறுதிப்பாடும், அதற்காக அவர் நேர்மையாக உழைத்த விதமும் என்னை ஆச்சரியப்பட வைத்தன. அவருடன் நான் பேசிக்கொண்டிருக்கும்போது, "நீங்கள் எதற்காகச் சண்டை பிடிக்கிறீர்கள்?" என்று என்னைக் கேட்டார் ஹேர்மன். "தமிழர்களுக்கென்று தனியான நாட்டினை உருவாக்கவே போராடுகிறோம்" என்று நான் பதிலளித்தேன். "தமிழ் ஈழத்திற்கான அடிப்படையினையே நாம் அழித்துவிட்டால், அதன்பிறகு தமிழீழத்திற்காக நீங்கள் போராட முடியாது, இல்லையா?" என்று அவர் கேட்டார். பின்னர் சலித்துக்கொண்டே, "தமிழ் ஈழத்திற்கான அடிப்படையினைச் சிதையுங்கள் என்று அவர்களே எங்களிடம் கூறிவிட்டு, பின்னர் சர்வதேசத்திற்குக் காட்ட எம்மை சிறையில் அடைத்து தம்மை நேர்மையானவர்களாகக் காட்டிக்கொள்வார்கள். குள்ளநரிக் கூட்டம்" என்று அவர் மேலும் கூறினார். குணரட்ண உடபட 40 மகாவலி அபிவிருத்தி அமைச்சின் அதிகாரிகள் அரசால் தடுத்து வைக்கப்பட்டார்கள். ஒருவரோடு ஒருவர் தொடர்புகொள்ள முடியாத பொலீஸ் தடுப்புக்காவல் அவர்களுக்கு வழங்கப்பட்டது. இவர்கள் மீது நீணட தொடர்ச்சியான விசாரணைகளும் அரசால் முன்னெடுக்கப்பட்டன. தொண்டைமானின் சுயசரிதையினை நான் எழுதியது குறித்து முன்னர் கூறியிருந்தேன். இதுதொடர்பான மேலதிகத் தகவல்களை சேகரிப்பதற்காக பெருந்தோட்டத்துறையில் ஆரம்பத்தில் பணியாற்றியவர் என்கிற ரீதியில், ஹேர்மன் குணரட்ணவைச் சந்திக்க தொண்டைமான் என்னை அனுப்பியிருந்தார். நான் அவரைச் சந்திக்க வருவது குறித்து தொண்டைமானின் செயலாளர் திருநாவுக்கரசு ஏற்கனவே குணரட்ணவிடம் தெரிவித்திருந்தமையினால், என்னுடன் ஒளிவுமறைவின்றி அவர் பேசினார். தான் எவ்வாறு கைதுசெய்யப்பட்டேன், தொண்டைமான் தன்னை எவ்வாறு பிணையில் விடுவித்தார் என்பது குறித்த பல தகவல்களை குணரட்ண என்னிடம் கூறினார். "காலை 4 மணியிருக்கும், எனது வீட்டுக் கதவினை யாரோ பலமாகத் தட்டும் சத்தம் கேட்டது. திறந்துபார்த்தால் உதவிப் பொலீஸ் அத்தியட்சகர் ரொனி குணசிங்க அங்கு நின்றிருந்தார். எனது வீட்டைச் சுற்றிப் பல பொலீஸார் நிற்பதும் எனக்குத் தெரிந்தது. வீட்டில் எனது புதல்விகள் மட்டுமே இருந்தனர். மாதுரு ஓயா இரகசியத் திட்டத்திற்காகவே நான் கைதுசெய்யப்படுவதாக ரொனி என்னிடம் தெரிவித்தார். நான் உடனேயே, இக்கைது குறித்து ஜனாதிபதிக்குத் தெரியுமா என்று ரொனியிடம் கேட்டேன். உங்களைக் கைது செய்யச் சொல்லி என்னை அனுப்பியதே ஜனாதிபதிதான் என்று ரொனி பதிலளித்தார். அப்படியானால், காமிணி திசாநாயக்கவுக்கு இக்கைது பற்றித் தெரியுமா என்று நான் மீண்டும் கேட்டேன். நீங்கள் என்னுடன் பொலீஸ் நிலையத்திற்கு வாருங்கள், இவைகுறித்து விரிவாக அங்கே பேசலாம் என்று அவர் பதிலளித்தார். என்னைக் கைதுசெய்து ஜீப் வண்டியில் தள்ளி ஏற்றிய விதத்தினைக் கண்ட எனது புதல்விகள் நடுங்கிப் போயினர்" என்று குணரட்ண என்னிடம் கூறினார். பொலீஸ் நிலையத்திலிருந்து காமிணி திசாநாயக்கவையும், பண்டிதரட்னவையும் தொடர்புகொள்ள தான் எடுத்த முயற்சிகள் தோல்வியில் முடிவடைந்ததாக குணரட்ண கூறினார். ஆனால், பெருந்தோட்டத்துறையில் பணிபுரிந்த நாட்களில் தனக்குப் பரீட்சயமான தொண்டைமானுடன் தன்னால் தொடர்புகொள்ள முடிந்ததாக அவர் கூறினார். "எனது அவல நிலையினை அவரிடம் கூறினேன். எனது புதல்விகள் குறித்த எனது கவலையினைனை அவரிடம் கூறினேன். அதன்பின் உடனடியாக என்னைப் பிணையில் விடுவித்தார்கள். ஜனாதிபதியுடன் தொடர்புகொண்ட தொண்டைமான் என்னை விடுவிக்கும்படி கேட்டுக்கொண்டதனாலேயே ஜெயார் என்னை பிணையில் செல்ல அனுமதித்ததாக நான் பின்னர் அறிந்துகொண்டேன். நான் தமிழர்களுக்கு எதிராக வேலை செய்கிறேன் என்பது அவருக்குத் தெரிந்தே இருந்தது. அப்படியிருந்தபோதும் அவர் எனக்கு உதவினார். அவருக்கு நான் எப்போதும் கடமைப்பட்டிருக்கிறேன்" என்று அவர் கூறினார். இரகசியத் திட்டத்தின் இரண்டாவது கட்டம், முதலாவது கட்டத்தின் மூலம் மாற்றியமைக்கப்பட்ட இனப்பரம்பலினைப் பாவித்து இலங்கைக்கான புதிய மாகாண வரைபடத்தினை உருவாக்குவது. பின்வரும் நான்கு மாகாணங்களின் எல்லைகளை மீள உருவாக்குவது இரண்டாம் கட்டத்தின் ஒரு அங்கமாகும். அம்மாகாணங்களாவன, வட மாகாணம், வட மத்திய மாகாணம், வட மேற்கு மாகாணம் மற்றும் கிழக்கு மாகாணம் ஆகியனவவாகும். இந்த நான்கு மாகாணங்களினதும் எல்லைகளை மாற்றியமைப்பதன் மூலம் ஐந்தாவது மாகாணம் ஒன்றினை உருவாக்குவதே இதன் நோக்கம். இவ்வாறு உருவாக்கப்படும் புதிய மாகாணம், வட கிழக்கு மாகாணம் என்று அழைக்கப்படும். இவ்வாறு உருவாக்கப்படும் மாகாணங்களுக்குள் உள்ளடக்கப்படும் மாவட்டங்களாவன, 1. வடக்கு மாகாணம் ‍: யாழ்ப்பாணம், கிளிநொச்சி, முல்லைத்தீவு 2. வட மத்திய மாகாணம் ‍: வவுனியா, அநுராதபுரம், வலி ஓய (மணலாறு, முல்லைத்தீவு மாவட்டத்தை சிதைப்பதன் மூலம் புதிய மாவட்டமான வலி ஓய முல்லைத்தீவிலிருந்து பிரித்தெடுக்கப்படும்). 3. வட மேற்கு மாகாணம் ‍: மன்னார், புத்தளம், குருநாகலை 4. வட கிழக்கு மாகாணம் ‍: பொலொன்னறுவை, திருகோணமலை 5. கிழக்கு மாகாணம் ‍: மட்டக்களப்பு, அம்பாறை மாவட்ட எல்லைகளை இவ்வாறு மீள வரைவதன் மூலம் வட மாகாணம் மட்டுமே தமிழர்களைப் பெரும்பான்மையாகக் கொண்ட மாகாணமாக விளங்கும். தற்போதைய வடக்குக் கிழக்கு மாகாணங்களின் எஞ்சிய மாவட்டங்கள் சிங்களப் பெரும்பான்மை மாவட்டங்களாக மாற்றப்படும். தமிழர்களைப் பெரும்பான்மையாகக் கொண்ட வடக்கு மாகாணத்தின் தென் எல்லையாக மாங்குளம் அமைந்திருக்கும். குணரட்ண தனது இரகசியத் திட்டத்தில் தொடர்ந்தும் உறுதியாக இருந்தார். தனது புத்தகத்தின் இரண்டாம் பாகத்தையும் அவர் அச்சிட்டு வெளியிட்டார். தமது திட்டம் தோல்வியடைந்தமைக்கான காரணம் அரச மேல் மட்டத்திலிருந்து தொடர்ந்தும் ஆதரவு கிடைக்காது போனமையே என்று அவர் நம்புகிறார். நதிகளை அண்டி உருவாக்கப்படும் புதிய மாவட்ட எல்லைகள்
  23. உங்கள் பயணத்தில் எங்களையும் அழைத்துச் சென்றதற்கு மிக்க நன்றி ரஞ்சித். வன்னிக்கு நீங்கள் போன இடங்களை எல்லாம் போய்ப் பார்க்கவேண்டும் என்று நினைத்து பல வருடங்கள் ஆகின்றது. 2022 இல் கிளிநொச்சி, ஆனையிறவு ஊடாகப் போனபோது மிகவும் மனச்சோர்வு ஏற்பட்டது. எங்கள் பெருமிதங்களையும் சேர்த்து எல்லாவற்றையும் இழந்துவிட்டோம்! ஆனாலும் ஊருக்குப் போய் முதியவர்களாக எஞ்சி இருக்கும் சொந்தங்களைக் கண்டு பேசியபோதும், பதின்ம வயதில் கிடைத்த நண்பர்களுடன் மனம்விட்டு உரையாடியபோதும் ஏற்பட்ட சந்தோசத்திற்கு அளவில்லை!
  24. இப்போது இருக்கின்றதா என்று தெரியவில்லை. எனது பதின்ம வயதுகளின்போது சோளங்கன் ரீமுக்கு விளையாடிய பிரபலமானவர்களை நன்கு தெரியும். ஒருவர் மிக நெருங்கிய நண்பன். 91 இலிருந்து இப்போதும் இலண்டனில் கோடை காலம் என்றால் ஒவ்வொரு ஞாயிறும் கிரிக்கெட் விளையாடுகின்றான்.! அவ்வளவு கிரிக்கெட் பைத்தியம்!
  25. உங்கள் பத்து வயதில் என்ன சிந்தனைகள் உடனிருந்தீர்களே அதே சிந்தனையில் ஒரு சிறுதுளி கூட மாற்றங்கள் இன்றி இன்னமும் இன்றும் நீங்கள் இருக்கிறீர்கள் என்பதை எற்றுகொள்கிறேன். என்னால் அப்படி இருக்க முடியவில்லை மன்னிக்கவும்
  26. வணக்கம் சுப.சோமசுந்தரம் மேலே நியானி எழுதிய பந்தியில் உங்கள் கேள்விக்கான பதில் இருக்கிறது.
  27. எனக்கு என்னவொஇந்திய சங்கிகள் புகுந்த மாதிரிஇருக்குது .
  28. பொதுமக்களல் நிறுவப்பட்ட நிறுவனம் ..இனம் சார்ந்த எந்த முடிவையும் எடுக்கமுன்னர் ..பொதுச்சபையுடன் ஆராயவேண்டும்...இதுதான் உலக நியதி...அதவிட்டுவிட்டு ..15 பேர் கொண்ட நிர்வாகிகள் ..முடிவெடுக்க முடியாது...இனம் சார்ந்த எந்த முடிவும் பொதுச்சபை முடிவாகவே இருக்கவேண்டும்...ப்தவி கிடைத்தபின் ..சுயநலத்துக்காக ..சுயதேவைக்காக்...இனத்தை விற்பதை ..எந்த இன உணர்வாளனும் விரும்பமாட்டான்....அதற்கு வன்முறைதான் தீர்வு என்பதை ஏற்றுக்கொள்ளவில்லை..ஆனால் பதவிக்கு வருவோர் இதனை உணர்ந்து பதவியில் செயல்படவேண்டும்..
  29. தாங்கள் பிறந்து வளர்ந்து வரும்போது கொண்டிருந்த அதே சிந்தனைமுறையையும் அதே கருத்துக்களையும் அபிப்பிராயங்களையுமா தற்போது கொண்டிருக்கிறீர்கள்? சூழலுக்கேற்ற/காலத்துக்கேற்ப உங்களில் ஏற்பட்ட மாற்றங்களுக்காக உங்கள் பொருள் ஒன்றை அழிக்கலாமா? பொது நிறுவனங்கள் ..பொதுமக்களுக்காக நிறுவப்பட்டவை...அவை பொதுவாக பொதுமக்களின் கருத்தையே பிரதி பலிக்கவேண்டும்...அதை நிர்வகிக்கும் நிர்வாகிகள் அந்த இன பொதுமக்களாலேயே தெரிவு செய்யப் படுவார்கள்... பதவி எடுக்குமட்டும் நல்லபிள்ளைக்கு ஆடிவிடு ..பதவியேற்றபின் ..தங்களுடைய சுயலாபத்துக்காக விலை போவதை எந்த இன்மானமிக்க ஒருவன் ஏற்றுக் கொள்வான்...இதுதான் இங்கு நடந்தது....இதனை கனடியத் தமிழன் ஒவ்வொருவரும் உணர்வான்...இதன் பிரதிபலிப்பே ..இந்த அசம்பாவிதம் என நினைக்கிண்றேன்....உண்மை பொய் தெரியாது...என்வே பொது நிறுவனங்களுக்கு ப்தவி எற்போர் சுயநலத்தை கைவிடவேண்டும்...இனத்தின் நலனை ..அந்த குழுமத்துடன் கலந்தாலோசித்தபின்பே ..முடிவு எடுக்க வேண்டும் ...ஒரு சிலரின் சொல்கேட்டு இனத்தையே விற்க நினைக்கக்கூடாது....இது என்னுடைய தனிப்பட்ட கருத்து..
  30. மிக்க நன்றி. நானும் யோசித்து பதிகிறேன்.🙏 ஒருவேளை, அது இனிய யாழ் உறவின் சந்திப்பாகவும் இருக்கலாம்.😍
  31. அங்க வைத்து ஐயாவுக்கு பழுதான மருந்துகளை ஏற்ற வேண்டும்.
  32. இன்றைக்கே அமைச்சருக்கு காட் அட்ராக் வந்து ஆசுப்பத்திரிக்கு போய்விடுவார்....
  33. தில்லிக்குச் செல்லும் விமானத்தை எதிர்பார்த்து கட்டுநாயக்க விமான நிலையத்தில் அமர்ந்திருந்தேன். தில்லியுடன் ஒப்பிடும்பொழுது மிகச்சிறிய விமான நிலையம் இலங்கையினுடையது. பழமையானபோதும் கூட ஓரளவிற்குத் தூய்மையாக இருந்தது. நள்ளிரவு நேரமான போதும் மிகுந்த சனக்கூட்டம். வெளிநாட்டவர்கள் பலரும் அக்கூட்டத்தில் காணப்பட்டனர். இவர்களுள் இந்தியர்கள் குறிப்பிடத் தக்கவர்கள். பலர் வந்து செல்கிறார்கள் போலும். சற்றுத் தாமதமாக இந்தியன் எயர்வேஸ் விமானம் வந்து சேர்ந்தது. இலங்கையைச் சேர்ந்த சில ஊழியர்களே அங்கு பணிக்கு அமர்த்தப்பட்டிருந்தார்கள். பயணிகளை மரியாதையாக நடத்தியதுபோல் உணர்ந்தேன். விமானத்தில் ஏறுமுன் கெடுபிடிகளை அவர்கள் கட்டவிழ்த்துவிடவில்லை. நாட்டைவிட்டு வெளியேறுகிறவர்களை எதற்குச் சோதிக்கவேண்டும் என்று நினைத்திருக்கலாம். விமானத்தினுள் ஏறும்போது தவறாமல் நமஸ்த்தே என்று ஒரு விமானப் பணிப்பெண் வரவேற்றாள். செயற்கையான அவளது சிரிப்பை ஏனோ ஏற்றுக்கொள்ள மனம் மறுத்தது. ஹெல்லோ என்று ஆங்கிலத்தில் நானும் செயற்கையாக அவளைப் பார்த்துப் புன்னகைத்துவிட்டு இருக்கை தேடி அமர்ந்துகொண்டேன். சிறிய விமானம், இரண்டு, இரண்டு இருக்கைகளாக இரு வரிசைகள். விமானம் நிரம்பியிருந்தது. சுமார் இரண்டரை மணிநேரத்திற்குப் பின்னர் அதே இந்திரா காந்தி விமான நைலையத்தில் இறக்கிவிட்டார்கள். சிட்னிக்கான விமானத்திற்கு இன்னும் 6 மணித்தியாலங்கள் இருந்தன. உள்வருகை சுங்க அதிகாரிகளிடம் கடவுச் சீட்டைக் கொடுத்து மீள்பறப்பிற்கான அனுமதியைப் பெறுவதற்கான வரிசையில் நின்றுகொண்டேன். எனக்கு முன்னால் ஒரு அப்பிரிக்க இளைஞன், இந்தியாவூடாக சிட்னிக்கு வருகிறான். அவனது கடவுச்சீட்டினைப் பரிசோதிக்கும் சுங்க அதிகாரிக்கு 25 இலிருந்து 30 வயதுதான் இருக்கும். அந்த ஆப்பிரிக்க இளைஞனை இந்திய அதிகாரி நடத்திய விதம் அங்கு நின்றவர்களை மனங்கோண வைத்தது. ஒருவரையொருவர் நாம் பார்த்துக்கொண்டோம். "எங்கேயிருந்து வருகிறாய்?, எங்கு செல்கிறாய்? எதற்காகச் செல்கிறாய்? எந்தப் பல்கலைக்கழகத்தில் படிக்கப்போகிறாய்? அங்கு படிப்பதற்கு உனக்குப் பணம் எங்கிருந்து கிடைக்கிறது? நீ அங்கு வேலைசெய்வதற்காகத்தான் போகிறாய் என்று நான் நம்புகிறேன், அங்கு நீ தங்கியிருக்கும் விலாசம் என்ன? எவ்வளவு பணம் கொண்டுசெல்கிறாய்? எதற்காக இந்தியாவிற்கூடாகப் பயணம் செய்கிறாய்?" என்று அடுத்தடுத்து அவனைக் கேள்விகளால்த் துளைத்தெடுத்துக்கொண்டிருந்தான் அந்த இந்திய அதிகாரி. அந்த இளைஞனின் பல்கலைக்கழக விபரங்களைக் காட்டுமாறு பணித்தான். அந்த ஆவணங்கள் அவனுக்குத் திருப்திகரமாக இருக்கவில்லையென்பது அவனது முகபாவனையில் இருந்து தெளிவாகியது. அருகிலிருந்த இன்னொரு அதிகாரியிடம் அவற்றைக் காண்பித்து இவை போலியானவை எனுமாப்போல் பேசிக்கொண்டான். சிறிதுநேரம் அந்த இளைஞனைக் குடைந்தெடுத்த பின் போக விட்டான். தனது நாட்டினூடாக‌ இன்னொரு நாட்டிற்குப் பயணிக்கும் வெளிநாட்டவரை இந்தியர்கள் எவ்வளவு தூரத்திற்கு கீழ்த்தரமாக நடத்துகிறார்கள் என்பதற்கு இது ஒரு உதாரணம். எனது முறை வந்தது. எங்கேயிருந்து வருகிறாய் என்கிற அதே கேள்வி. கொழும்பு என்று சொன்னதும், எங்கே போகிறாய் என்று அடுத்த கேள்வி. சிட்னி என்றதும் கடவுச்சீட்டினைப் பார்த்துவிட்டு, சரி போகலாம் என்று அனுமதித்தான். விமான நிலையம் விசாலமானது என்று பலமுறை சொல்லியாயிற்று. அதிலும் ஒரு சின்னச் சிக்கல். இன்னும் 5 மணித்தியாலங்கள் இருக்கின்றன சிட்னிக்கான விமானம் வருவதற்கு. இவ்வளவு நேரம் என்ன செய்வது என்று யோசனை எழவே, சரி விமான நிலைய Wifi இனை இணைந்த்து ஏதாவது பார்க்கலாம், நேரத்தைப் போக்கலாம் என்று தோன்றியது. சரி, விமான நிலையத்தின் Wifi இனை எனது கையடக்கத் தொலைபேசியில் தேடிய போது இணைப்புக் கிடைத்தது. ஆனால் அதற்கான கடவுச்சொல் தெரியாது. ஆகவே அங்கு பணிபுரியும் அதிகாரி எவரிடமாவது கேட்கலாம் என்று தேடினால் பலர் இருக்கிறார்கள், ஆனால் எவருமே நின்று, நிதானித்து நான் கேட்பதற்குப் பதிலளிப்பார்கள் போல்த் தெரியவில்லை. ஒருவாறு அதிகாரியொருவரை அணுகி, Wifi கடவுச்சொல் எங்கெடுக்கலாம் என்று வினவினேன். "அதற்கு நீங்கள் தகவல் அறியும் நிலையத்திற்குப் போகவேண்டும், விமான நிலையத்தின் நடுப்பகுதியில் அது இருக்கிறது" என்று கூறிவிட்டுச் சென்றுவிட்டார். விமான நிலையத்தின் பலவிடங்களில் தகவலறியும் நிலையத்திற்கான வழிகாட்டும் அம்புக்குறிகள் கீறப்பட்டிருந்தன. ஆனால் அவற்றின் வழியே போனால் சுற்றிச் சுற்றி ஒரே இடத்திற்கு வருவது போலத் தோன்றியது. 10 - 15 நிமிடங்கள் நடந்து ஒருவாறு அந்த நிலையத்தைக் கண்டுபிடித்தேன். அங்கிருக்கும் ஸ்கானர் ஒன்றினுள் உங்களது கடவுச்சீட்டை வைத்து ஸ்கான் செய்தால் உங்களுக்கான கடவுச்சொல் ஒன்றினை அது தரும். நான்கு மணித்தியாலங்களுக்கு அது செல்லுபடியாகும். சரி, மீதி நான்கு மணித்தியாலங்களுக்குப் பொழுது போக்குக்கிடைத்துவிட்டது என்கிற சந்தோசத்தில் இடம் தேடி அமர்ந்துகொண்டு யூடியூப் பார்த்தேன். யாழில் என்ன செய்தி, சி.என்.என் என்ன சொல்கிறது என்று அலசிவிட்டு இறுதியாகக் களைத்துப்போய் பேசாமல் இருந்துவிட்டேன். நேரமாகியதும் சிட்னி செல்லும் இந்தியர்களின் கூட்டம் அப்பகுதியில் அதிகமாகியது. விமானத்தில் பயணிகளை ஏற்றும் நேரம் வந்தபோதும் கடவுச்சீட்டுக்களைப் பரிசோதித்து விமானத்தினுள் அனுமதிக்கும் நிலை திறக்கப்படவில்லை. சிறிது நேரத்தின் பின்னர் விமானச் சேவையின் பணியாளர் ஒருவர் வந்தார். காத்திருக்கும் மக்களைச் சட்டை செய்யாது வேண்டுமென்றே தொலைபேசியில் யாருடனோ சத்தமாக உரையாடிக்கொண்டிருந்தார். அவரைக் கண்டதும் பயணிகள் கூட்டம் தாமாகவே வரிசை ஒன்றினை ஏற்படுத்தி தமக்கருகில் பயணப் பொதிகளையும் இழுத்துவைத்துக்கொண்டனர். இவை எல்லாவற்றையும் அந்த அலுவலகர் ஒரு கண்ணால் பார்த்துக்கொண்டு வேண்டுமென்று தொலைபேசியில் பேசிக்கொண்டிருந்தார். பேசி முடிந்ததும், "நான் இன்னும் கவுன்ட்டர் திறக்கவிலை, ஏன் இங்கு வந்து நிற்கிறீர்கள், அழைக்கும்போது வருங்கள், இப்போது உங்கள் இருக்கைகளுக்குச் செல்லுங்கள், அழைக்கும்போது வந்தால்ப் போதும்" என்று ஹிந்தியில் சத்தம் போடுவது புரிந்தது. பலர் தமது பொதிகளை வரிசையில் நின்ற இடத்திலேயே விட்டு விட்டு தமது இருக்கைகளுக்குத் திரும்பினார்கள். சிறிது நேரத்தின் பின்னர் சீக்கிய இனப் பணியாளர் ஒருவர் வந்தார். கூடவே பெண் பணியாளரும் வந்திருந்தார். அவர்களைக் கண்டபின்னர்தான் முதலாவது பணியாளரின் முகத்தில் சிரிப்பே வந்தது. பின்னர் இரு வரிசைகளில் நிற்குமாறு பயணிகளை அழைத்து கடவுச் சீட்டினை பரிசோதித்து உள்ளே அனுபினார்கள். வழமைபோலவே விமானத்தில் ஏறுமுன் எல்லைப் பாதுகாப்புப் படைவீரரின் வீரம் பயணிகள் மீது பரிசோதித்துப் பார்க்கப்பட்டது. ஆளை விட்டால்ப் போதுமடா சாமி என்று அவர்களுக்கும் அவர்களது நாட்டிற்கும் ஒரு கும்பிடு போட்டுவிட்டு விமானத்தில் ஏறி அமர்ந்துகொண்டேன். அதே விமானம், அதே பணிப்பெண்கள், அதேயுணவு, இதைத்தவிர அந்த விமானப் பயணம் குறித்து சொல்வதற்கு விசேடமாக எதுவும் இருக்கவில்லை. ஞாயிற்றுக்கிழமை 3 ஆம் திகதி காலை 8 மணிக்கு சிட்னியில் வந்திறங்கினேன். அன்று மாலையே வேலைக்குச் செல்லவேண்டும். எல்லாம் பழமைக்குத் திரும்பியாயிற்று. முற்றும் ! இதனை எழுதும்படி கேட்டுக்கொண்ட நிழலிக்கும், கருத்தும் ஆதரவும் நல்கிய அனைத்து நல்லுள்ளங்களுக்கும் எனது மனமார்ந்த நன்றிகள்.
  34. நியூட்டன் தலையில் ஆப்பிள் விழவே இல்லையா? ஈர்ப்பு விசையை அவர் எப்படி கண்டுபிடித்தார்? பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, ஐசாக் நியூட்டன் ஆப்பிள் மரத்தடியில் அமரவுமில்லை, அந்த மரத்திலிருந்து அவர் தலைமீது பழம் விழவுமில்லை. கட்டுரை தகவல் எழுதியவர், க. சுபகுணம் பதவி, பிபிசி தமிழ் ஒரு மணி நேரத்துக்கு முன்னர் புவியீர்ப்பு விசையைக் கண்டுபிடித்தது யார்? இந்தக் கேள்விக்குப் பள்ளிப்பருவத்தில் அனைவருமே ஒருமித்த குரலில் ஐசாக் நியூட்டன் என்று உரக்கச் சொல்லியிருப்போம். அவர் ஈர்ப்பு விசையைக் கண்டுபிடித்தது எப்படி என்ற கேள்விக்கும் அதேபோல் ஒருமித்த குரலில், நியூட்டன் தலையில் விழுந்த ஆப்பிள்தான் காரணம் என்றும் உரக்கச் சொல்லியிருப்போம். ஆனால் இதில் பாதிதான் உண்மை, மீதி பொய். நியூட்டன் ஈர்ப்பு விசையைக் கண்டுபிடித்தார் என்பது உண்மை. ஆனால், அவரது தலையில் ஆப்பிள் விழுந்ததுதான் அவர் அதைக் கண்டுபிடிக்கத் தூண்டியது என்பது பொய். அப்படியென்றால் ஈர்ப்பு விசை கண்டுபிடிக்கப்பட்டதில் ஆப்பிளுக்கு பங்கு இல்லையா என்றால் இருக்கிறது. ஒரே வித்தியாசம். நியூட்டன் ஆப்பிள் மரத்தடியில் அமரவுமில்லை, அந்த மரத்திலிருந்து அவர் தலைமீது பழம் விழவுமில்லை. ஆனால் ஆப்பிள் விழுந்தது. அதைச் சற்றுத் தள்ளியிருந்த பெஞ்சில் அமர்ந்திருந்த நியூட்டன் தற்செயலாகப் பார்த்தார். அப்படிப் பார்த்தபோது அவரது மூளையில் நீண்டநாட்களாக ஓடிக் கொண்டிருந்த ஒரு கேள்விக்கான பொறி தூண்டப்பட்டது. அந்தப் பொறி தட்டிய தருணத்தை நியூட்டன் எப்படி அடைந்தார்? அதற்குப் பின் ஈர்ப்பு விசையை அவர் எப்படி கண்டுபிடித்தார்? இங்கு விரிவாகக் காண்போம். பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, கேம்ப்ரிட்ஜ் பல்கலைக்கழகத்தில் இருந்த நியூட்டன் தனது சொந்த ஊரான வூல்ஸ்தார்ப் என்ற பகுதிக்குத் திரும்பிச் சென்றார். கேம்ப்ரிட்ஜில் இருந்து வெளியேற்றப்பட்ட நியூட்டன் பல நூற்றாண்டுகளுக்கு முன்பு கத்தோலிக்க ஆட்சி நடந்துகொண்டிருந்த காலகட்டத்தில் பூமியைச் சுற்றியே சூரியன், நிலா உட்பட அனைத்து கோள்களுமே சுற்றுகின்றன என நம்பப்பட்டது. அதை உடைத்து, சூரியனையே பூமி உட்பட அனைத்து கோள்களும் சுற்றுகின்றன என கலிலியோ நிரூபித்தார். பிறகு வந்த கோப்பர்நிகஸ் கோள்கள் சூரியனை வட்டப் பாதையில் சுற்றுகின்றன எனக் கூறினார். ஆனால், உண்மையில் அவையனைத்தும் நீள்வட்டப் பாதையில்தான் சுற்றுகின்றன என நிரூபித்துக் காட்டியவர் கெப்லர். இவர்களுக்குப் பிறகு வந்த நியூட்டனே கோள்கள் ஏன் நீள்வட்டப் பாதையில் சுற்றுகின்றன, அவற்றை அப்படி நிலைநிறுத்திய ஆற்றல் எது என்பதைக் கண்டறிந்தர். அத்தகைய ஆற்றலான ஈர்ப்பு விசை மட்டுமின்றி நியூட்டனின் இன்னும் பல கண்டுபிடிப்புகளுக்கான தொடக்கப் புள்ளியாக இருந்த 1665, 1666 ஆகிய ஆண்டுகள் அமைந்தன. அந்தக் காலகட்டத்தில் லண்டன் நகரத்தில் வரலாற்றிலேயே மிகப்பெரிய பேரழிவை ஏற்படுத்திய பிளேக் பரவல் ஏற்பட்டிருந்தது. சுமார் 5 லட்சம் மக்கள்தொகை கொண்ட லண்டன் நகரத்தில் மக்கள் திடீரென நோய்வாய்ப்படத் தொடங்கினார்கள். கடுமையான தலைவலி, மயக்கம் எனத் தொடங்கிய நோய், மோசமான காய்ச்சல் மற்றும் இறுதியில் மரணம் வரை இட்டுச் சென்றது. பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, பிளேக் நோய் லண்டனில் உச்சத்தைத் தொட்டிருந்த 1665ஆம் ஆண்டில்தான் நியூட்டன் நவீன அறிவியலுக்கான தனது முக்கியக் கண்டுபிடிப்புகளிலும் மூழ்கியிருந்தார். கருப்பு மரணம் என வரலாற்றில் குறிப்பிடப்படும் இந்த பிளேக் பரவல், 1660களில் லண்டன் முழுக்கப் பரவியது. 1347ஆம் ஆண்டில் மத்திய கிழக்கில் இருந்து வந்த கப்பலில் எலிகள் சுமந்து வந்த உண்ணிகளில் இருந்து ஐரோப்பாவில் முதன்முதலாகப் பரவத் தொடங்கியது. பணக்காரர், வணிகர்கள், ஏழைகள், பிச்சைக்காரர்கள் என எந்தப் பாகுபாடும் இன்றி அனைவருமே இந்த நோய்த் தாக்குதலுக்கு ஆளாகி மடிந்து கொண்டிருந்த காலகட்டம் அது. வணிகம், விவசாயம் என அனைத்துமே முடங்கியது; நகரத்தின் பல்வேறு பகுதிகள் கைவிடப்பட்டன. அந்தப் பெருநகரத்தின் கிட்டத்தட்ட பாதி மக்கள்தொகை இதற்குப் பலியானதாக சில பதிவுகள் குறிப்பிடுகின்றன. செப்டம்பர் 1665ஆம் ஆண்டின்போது, இந்த நோய்ப் பரவல் உச்சத்தைத் தொட்டிருந்தது. அப்போது வாரத்திற்கு 8,000 பேர் என்ற அளவில் பலியாகிக் கொண்டிருந்ததாக கருப்பு மரணம் குறித்த பதிவுகள் கூறுகின்றன. இதற்கு அடுத்த மாதத்தில் கேம்ப்ரிட்ஜ் நிர்வாகம், பாதுகாப்பு கருதி பல்கலைக்கழகத்தை மூடுவதாக முடிவெடுத்தது. இதனால், அங்கிருந்த நியூட்டன் பிளேக் நோய்த்தொற்றுப் பரவலில் இருந்து தப்பிக்கத் தனது சொந்த ஊரான வூல்ஸ்தார்ப் என்ற பகுதிக்குத் திரும்பிச் சென்றார். பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, லிங்கன்ஷயரில் உள்ள வூல்ஸ்தார்ப்பில் நியூட்டன் பிறந்த வீடு நியூட்டனின் கண்டுபிடிப்புக்கான தொடக்கம் பிளேக் நோய் லண்டனில் உச்சத்தைத் தொட்டிருந்த 1665ஆம் ஆண்டில்தான் நியூட்டன் நவீன அறிவியலுக்கான தனது முக்கியக் கண்டுபிடிப்புகளிலும் மூழ்கியிருந்தார். அவர் கேம்ப்ரிட்ஜில் இருந்து அனுப்பப்பட்ட பிறகு, லிங்கன்ஷயர் மாவட்டத்தில் இருந்த தனது வூல்ஸ்தார்ப் கிராமத்தில் தனது பணியைத் தொடர்ந்தார். அந்தக் காலகட்டம் குறித்து பின்னாட்களில் நியூட்டன் பிரெஞ்சு அறிஞர் பியர் டிமெசுவுக்கு எழுதிய கடிதத்தில் குறிப்பிட்டிருப்பதாக ஐசாக் நியூட்டன் அண்ட் தி சயின்டிஃபிக் ரெவல்யூஷன் என்ற நூலில் கேல்.இ.கிறிஸ்டியன்சன் எழுதியுள்ளார். பிரெஞ்சு அறிஞர் பியருக்கு நியூட்டன் எழுதிய கடிதத்தில், “அந்த நாட்களில் நான் எனது கண்டுபிடிப்புகள் காலகட்டத்தின் உச்சத்தில் இருந்தேன். வேறு எந்தக் காலத்தையும்விட அதிகமாக எனது சிந்தனை கணிதம் மற்றும் சித்தாந்தத்தில் ஆட்கொண்டிருந்தது,” என்று குறிப்பிட்டிருந்ததாக அந்நூல் கூறுகிறது. ஐசாக் நியூட்டன், 1666ஆம் ஆண்டின் இறுதியில் தனது 24வது பிறந்தநாளை நெருங்கிக் கொண்டிருந்த காலகட்டம். அப்போதே அவர் உலகம் அதுவரை அறிந்திராத மிகச் சிறந்த கணிதவியலாளர்களில் ஒருவராகப் புகழ் பெற்றிருந்தார். இன்று கால்குலஸ் என அழைக்கப்படும் அப்போது ஃப்லுக்சியான்ஸ் (Fluxions) என்றழைக்கப்பட்ட கணித பிரிவை அவர் கண்டுபிடித்திருந்தார். அதை வைத்து அவரால் மிக நுண்ணிய அளவிலான கணித மதிப்பீடுகளையும் மிகத் துல்லியமாகக் கணக்கிட முடிந்தது. பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, ஆப்பிள் கதை குறித்து அறிஞர்கள் மத்தியில் வேறுபட்ட கருத்துகள் நிலவுகின்றன. ஆனால் அனைவருமே அவர் தலையில் ஆப்பிள் விழுந்து, ஈர்ப்பு விசையைக் கண்டுபிடித்தார் என்பதை மறுக்கின்றனர். நியூட்டன் ஈர்ப்பு விசையைப் புரிந்துகொள்ள ஆப்பிள் உதவியதா? பிளேக் பரவலின்போது தனது சொந்த ஊரான வூல்ஸ்தார்ப்பில் இருந்தபோதுதான் நியூட்டன் ஈர்ப்பு விசையை முழு வீச்சில் புரிந்துகொள்வதற்கான தொடக்கப்புள்ளியை அடைந்தார் என்று கூறுகிறது கிறிஸ்டியன்சனின் நூல். அதற்கு வித்திட்ட ஆப்பிள் மரமும் கீழே விழுந்த ஆப்பிளும் அங்குதான் இருப்பதாகவும் அந்நூல் குறிப்பிடுகிறது. ஆனால், ஐசக் நியூட்டனின் வாழ்க்கை வரலாற்றை 1980ஆம் ஆண்டில் எழுதிய ரிச்சர்ட் வெஸ்ட்ஃபால், நியூட்டனை போன்ற ஒரு மேதைக்கு இத்தகைய சிந்தனைகள் ஓரிரவில் உதித்துவிடவில்லை எனக் குறிப்பிடுகிறார். மேலும், இந்தச் சிந்தனை அவரது மூளையில் தோன்றிக்கொண்டே இருந்ததாகவும் அதற்கு விடையைக் கண்டுபிடிக்கும் முயற்சியையும் அவர் முன்பே மேற்கொண்டிருந்ததாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். அறிஞர்கள் மத்தியில் வேறுபட்ட கருத்துகளைக் கொண்ட இந்த ஆப்பிள் கதையைப் பொறுத்தவரை, நியூட்டன் இறப்பதற்கு ஓராண்டு முன்பு அவர் தன்னிடம் பகிர்ந்துகொண்டதாக அவரது நண்பரும் பழங்காலம் குறித்து ஆய்வு செய்தவருமான வில்லியம் ஸ்டுக்லி குறிப்பிட்டார். பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, நியூட்டன், ராபர்ட் ஹூக் இருவருமே ஈர்ப்பு விசை கோட்பாட்டை முன்வைத்தபோது, அதை நிரூபித்துக் காட்டுவதில் நியூட்டனுக்கு கால்குலஸ் உதவியது. நியூட்டன் இறப்பதற்கு ஓராண்டு முன்பு, லண்டனுக்கு அருகே கென்சிங்டனில் உள்ள நியூட்டனின் வீட்டில் அவரைச் சந்தித்தபோது, இரவு உணவை முடித்துவிட்டு அவர்கள் இருவரும் தோட்டத்தில் அமர்ந்து தேநீர் பருகச் சென்றுள்ளனர். அப்போது நியூட்டன் வூல்ஸ்தார்ப்பில் நடந்த ஆப்பிள் கதையைக் கூறியதாக அவர் குறிப்பிட்டுள்ளார். “மற்ற பல உரையாடல்களுக்கு மத்தியில், அவர் இதே போன்றதொரு சூழ்நிலையில் இருக்கும்போதுதான் ஈர்ப்பு விசை குறித்துத் தன் மூளையில் தோன்றியதாகக் கூறினார். ஆழ்ந்த சிந்தனையில் இருந்த நேரத்தில் மரத்திலிருந்து ஆப்பிள் பழம் கீழே விழுந்ததாகவும் அந்த நாளில் நடந்ததை அவர் நினைவுகூர்ந்து கூறினார்,” என்று வில்லியம் ஸ்டுக்லி எழுதியுள்ளார். ஆனால், ஆப்பிள் விழுந்ததைப் பார்த்துதான் நியூட்டன் ஈர்ப்பு விசை கோட்பாட்டை ஆராயத் தொடங்கினார் என்பதற்கு வலுவான ஆதாரம் இல்லை என்கிறார் சென்னையிலுள்ள கணித அறிவியல் கழகத்தின் ஓய்வுபெற்ற பேராசிரியர் கோவிந்தராஜன் கூறுகிறார். “நியூட்டன் ஆப்பிள் மரத்தடியில் அமர்ந்து தனது பணிகளை மேற்கொள்வதை வழக்கமாக வைத்திருந்தார். கேம்ப்ரிட்ஜில் அந்த ஆப்பிள் மரம் மிகப் பிரசித்தி பெற்றும் இருந்தது என்பது உண்மை. ஆனால், ஆப்பிள் விழுந்தது, ஈர்ப்பு விசையை நியூட்டன் கண்டறிந்தார் என்பதற்கு வலுவான ஆதாரம் இல்லை. அதுகுறித்து எங்கும் அவராகக் குறிப்பிடவும் இல்லை,” என்று அவர் கூறுகிறார். பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, ஆப்பிள் மட்டுமின்றி, நிலா, கோள்கள் உட்பட அனைத்துவிதமான இரண்டு பொருட்களுக்கும் இடையே ஒரு விசை இருக்கும் என்பதை நியூட்டன் கண்டறிந்தார். நியூட்டன் நிலாவை ஆப்பிளுடன் ஒப்பிட்டாரா? நிலாவை ஒரு பிரமாண்ட ஆப்பிளை போல் கற்பனை செய்து, அது ஏன் பூமியையே சுற்றி வருகிறது என்ற கேள்விக்கு நியூட்டன் விடை கண்டுபிடித்தார் என்று 'ஐசாக் நியூட்டன் அண்ட் தி சயின்டிஃபிக் ரெவல்யூஷன்' என்ற நூல் கூறுகிறது. நியூட்டனுடைய பொருளின் நகர்வு விதிகள்படி, ஒரு பொருளின் மீது வெளிப்புற விசை செயல்படும் வரை எந்தவொரு பொருளும் தனது ஓய்வு நிலையையோ அல்லது நேர்க்கோட்டில் அமைந்த சீரான இயக்க நிலையையோ மாற்றிக்கொள்ளாது. இதை அடிப்படையாக வைத்துப் பார்த்தால், ஒரு பந்தை வீசும்போது அது வேறு விசையேதும் கொடுக்கப்படாத வரை மேலே மேலே சென்றுகொண்டேயிருக்க வேண்டும். ஆனால் மாறாக வேறொன்று நடக்கிறது. பந்து ஓர் அளவு வரை உயரப் பறந்து, பிறகு கீழே விழுகிறது. அப்படியென்றால், அந்த இடத்தில் வேறொரு விசை அதன்மீது தாக்கம் செலுத்துகிறது. அதுதான் ஈர்ப்பு விசை. உயரப் பறக்கும் பந்தின்மீது ஈர்ப்பு விசை செலுத்தப்பட்டு அதைக் கீழே தரையை நோக்கித் தள்ளுகிறது. இதைப் புரிந்துகொண்ட நியூட்டன் இதுதானே நிலா, புதன், வெள்ளி, சனி, செவ்வாய் என அனைத்து கோள்களிலுமே நடந்திருக்க வேண்டும் என்பதைக் கண்டறிய முற்பட்டார். இங்கு இன்னொன்றையும் நியூட்டன் கண்டறிந்தார். அதாவது, ஒவ்வொரு பொருளுக்குமே அதன் அளவுக்கு ஏற்ப குறிப்பிட்ட அளவிலான ஈர்ப்பு விசை இருக்கும். ஆப்பிளின் அளவுக்கு ஏற்ப ஒரு விசை இருக்கும். அதேபோல் நிலாவுக்கும் இருக்கும். நிலா ஒருபுறம் பூமியின் ஈர்ப்பு விசையால் இழுக்கப்படுகிறது. அதேபோல், நிலாவுக்கு இருக்கும் ஈர்ப்பு விசையும் இந்தச் செயல்முறையில் பங்கு வகிக்கிறது. இங்கு நிலாவை ஒரு பிரமாண்ட ஆப்பிளாக உருவகப்படுத்திய நியூட்டன், ஈர்ப்பு விசை எப்படிச் செயல்படுகிறது என்பது குறித்த கோட்பாட்டை உருவாக்கத் தொடங்கினார் எனக் குறிப்பிட்டுள்ளார் கேல்.இ.கிறிஸ்டியன்சன். பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, நியூட்டன், ராபர்ட் ஹூக் இருவரும் இதே கோட்பாட்டை 1684ஆம் ஆண்டில் ஆங்கிலேய வானியலாளரும் கணித அறிஞருமான எட்மண்ட் ஹாலியிடம் முன்வைத்தனர். ஈர்ப்பு விசையை நிரூபிக்க நியூட்டனுக்கு உதவிய கால்குலஸ் (நுண்கணிதம்) ஆப்பிள் விழும்போது அது ஏன் கீழ்நோக்கி விழுகிறது, ஏன் மேல்நோக்கிப் போவதில்லை என்று நியூட்டன் சிந்தித்தார் எனப் பொதுவாகச் சொல்லப்படுவது உண்டு. அதேபோல் அவர் நிலா குறித்தும் சிந்தித்தார். “ஆப்பிள் விழும்போது கீழ்நோக்கி விழுகிறது. ஆனால், நிலா ஏன் கீழ்நோக்கி விழாமல் அங்கேயே இருக்கிறது?” என்ற கேள்வியை நியூட்டன் கேட்டுக்கொண்டார். இதைக் கண்டுபிடித்து நிரூபிப்பதில் அவருக்கு கால்குலஸ் உதவியாக இருந்தது. ஆப்பிளுக்கும் பூமிக்கும் அல்லது பூமிக்கும் நிலாவுக்கும் என இரண்டு பொருட்களுக்கு இடையே ஒரு விசை இருந்தது என்பதை நியூட்டன் உணர்ந்தார். அதேபோல், “நிலா போன்ற துணைக் கோள்கள் உட்பட, கோள்கள் பூமியையோ சூரியனையோ ஏன் சுற்றி வருகிறது, அதுவும் நீள்வட்டப் பாதையில் சுற்றுகிறது என்பதற்கான விடையையும் அவர் தேடினார்,” என்கிறார் கோவிந்தராஜன். கோள்கள் வட்டப் பாதையில் சுற்றவில்லை, நீள்வட்டப் பாதையில்தான் சுற்றுகின்றன என்பதை முன்பே கெப்லர் கண்டுபிடித்திருந்தார். ஆனால், அது ஏன் என்பதே நியூட்டனின் கேள்வியாக இருந்தது. அதாவது, கோள்களை நீள்வட்டப் பாதையில் நிறுத்தும் விசை எது என்பதைக் கண்டறிய அவர் முயன்றார். “அங்குதான் அவருக்கு எதிர் இருமடி விதி பயன்பட்டது. எந்தவொரு இயற்பொருளின் செறிவும் மூலத்தில் இருந்து அதன் தொலைவின் இருமடிக்கு எதிர்விகிதத்தில் அமையும் என்பதே எதிர் இருமடி விதி,” என விளக்கினார் ஓய்வுபெற்ற கணித அறிவியல் பேராசிரியர் கோவிந்தராஜன். பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, நியூட்டன் ஈர்ப்பு விசை உட்படத் தனது பல்வேறு கண்டுபிடிப்புகள் அடங்கிய ப்ரின்சிபியா என்ற நூலை 1687ஆம் ஆண்டு வெளியிட்டார். நியூட்டனின் போட்டியாளர் ராபர் ஹூக்கின் குற்றச்சாட்டு இதை 1684ஆம் ஆண்டில் நியூட்டன், அவரது போட்டியாளர் மற்றும் கணித அறிஞரும் இயற்பியலாளருமான ராபர்ட் ஹூக் ஆகிய இருவருமே இதை இங்கிலாந்தில் உள்ள ராயல் சொசைட்டியில் இருந்த ஆங்கிலேய வானியலாளரும் கணித அறிஞருமான எட்மண்ட் ஹாலியிடம் முன்வைத்தனர். ஹாலி அதை நிரூபிப்பதற்கான அறிவியல்பூர்வ ஆதாரத்தைக் கோரினார். அப்போது நியூட்டனின் கையில் கால்குலஸ் இருந்த காரணத்தால், கணிதரீதியாக ஈர்ப்பு விசையின் இருப்பை நிரூபித்துக் காட்டினார். ஆனால், ராபர்ட் ஹூக் அவர் முன்வைத்த கோட்பாட்டை நிரூபிக்கவில்லை. நிலாவின் நகர்வுகள், அது பூமியை ஒரு நீள்வட்டப் பாதையில் சுற்றி வருவது, பூமியிலுள்ள கடல்கள் நிலாவால் ஈர்க்கப்படுவது, அதன் சார்பில் மாற்றங்களைச் சந்திப்பது ஆகியவை நியூட்டன் முன்வைத்த கணித ஆதாரங்களில் மேற்கோள் காட்டப்பட்டன என விவரிக்கிறார் கோவிந்தராஜன். ஆனால், இத்தகைய ஆதாரங்களை ஹூக் முன்வைக்கவில்லை. பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, ஐசாக் நியூட்டனின் ப்ரின்சிபியா நூலுக்கு எட்மண்ட் ஹாலி எழுதிய அணிந்துரை. இதைத் தொடர்ந்து 1987ஆம் ஆண்டு நியூட்டன் தனது புகழ்பெற்ற ‘ப்ரின்சிபியா (Principia)’ என்ற நூலை ஹாலியின் உதவியுடன் வெளியிடுகிறார். அப்போதும்கூட, ராபர்ட் ஹூக் இந்தக் கோட்பாட்டைக் கூறியது தானே என்றும் அதற்கு எந்தவித ஒப்புகையும் நூலில் கொடுக்கப்படவில்லை என்றும் நியூட்டனுடன் சண்டை போட்டுள்ளார். மேலும், தனது கோட்பாட்டை அவர் எடுத்துக்கொண்டார் என்ற குற்றச்சாட்டையும் முன்வைத்துள்ளார். இதுகுறித்து நெவர் அட் ரெஸ்ட் என்ற நியூட்டனின் வாழ்க்கை வரலாற்று நூலில் அதன் ஆசிரியர் ரிச்சர்ட் எஸ்.வெஸ்ட்ஃபால் நியூட்டன், ஹாலி, ஹூக் இடையிலான கடிதப் பரிமாற்றங்களைக் குறிப்பிட்டு விவரித்துள்ளார். இந்தக் குற்றச்சாட்டால் நியூட்டன் ராபர் ஹூக் மீது கோபம் கொண்டதாகவும் அந்தக் கோபம் நீண்ட நாட்களுக்கு நீடித்ததாகவும் ரிச்சர்ட் வெஸ்ட்ஃபால் தனது நூலில் தெரிவித்துள்ளார். இந்தப் பிரச்னையில் எட்மண்ட் ஹாலி நியூட்டனுக்கே ஆதரவாக இருந்ததாகக் கூறுகிறார் பேராசிரியர் கோவிந்தராஜன். மேலும், பின்னாட்களில் நியூட்டன் ராயல் சொசைட்டியின் தலைவர் ஆனபோதும்கூட ராபர்ட் ஹூக்கின் உருவப்படத்தை நியூட்டன் அங்கு நிறுவாமலே தவிர்த்துவிட்டார் எனவும் சொல்லப்படுவதுண்டு. https://www.bbc.com/tamil/articles/cv27p0z50l6o
  35. பணத்தைக் கொட்டி தங்களுக்கு ஏற்ற அரசை உருவாக்கும் வரை ஓயமாட்டார்கள்.
  36. இந்தியாவில் ஷரியா சட்டம் ஆட்சிக்கு வருமட்டும் அப்படி, வந்தால் வந்த பின்பு மாஷா அல்லாஹ் இந்தியா உலகை ஆளவேண்டும் 🤣
  37. தமிழ் மக்களின் போக்கு இவ்வளவு மலினப்ப்ட்டு போவது வருந்ததக்க விடயம்தான் (அதனை செய்திருந்தால்).
  38. கம்பகவிற்கு நான் சென்றபோது எனது அக்காவும் கொழும்பிலிருந்து வந்திருந்தார். சித்தியின் வீட்டில் மதிய உணவை உட்கொண்டுவிட்டு பிற்பகலில் கொழும்பிற்குக் கிளம்பினோம். வத்தளையில் அக்கா இறங்கிக்கொள்ள நான் கொட்டகேனவுக்கு வந்து சேர்ந்தேன். அன்றிரவு ஜெயரட்ணம் கொழும்பில் உள்ள ஹொட்டேல் ஒன்றில் தங்க ஏற்பாடு செய்திருந்தான். மறுநாள், மார்கழி 1 ஆம் திகதி அவனுடைய பிறந்தநாள். கொழும்பில் தன்னுடைய‌ நண்பர் ஒருவரது திருமணத்திற்காக வந்திருந்த அவன் என்னையும் அன்றிரவு தன்னுடன் ஹோட்டலில் தங்குமாறு அழைத்திருந்தான். இரவு 8 மணியளவில் ஹொட்டேலுக்குச் சென்றேன். கிங்ஸ்பெரி என்று அழைக்கப்படும் ஐந்து நட்சத்திர விடுதி அது. 2019 ஈஸ்ட்டர் குண்டுத் தாக்குதலில் தாக்கப்பட்ட விடுதிகளில் ஒன்று. அறையில் சிறிதுநேரம் பேசிக்கொண்டிருந்துவிட்டு இரவுணவிற்காக‌ சிற்றுண்டிச்சாலைக்குச் சென்றோம். பல்வேறான உணவுவைகள். விரும்பியதைக் கூச்சமின்றி எடுத்துச் சாப்பிடக்கூடிய வசதி. உண்டு கொண்டிருக்கும் போது அங்கு கடமையாற்றும் பலர் நண்பனிடம் வந்து மரியாதையாகப் பேசுவதும் சுகம் விசாரிப்பதும் தெரிந்தது. அடிக்கடி இங்கு வந்துபோகிறான் என்பதும் புரிந்தது. உணவருந்திக்கொண்டே சுற்றுமுற்றும் நோட்டம் விட்டேன். சுமார் 200 அல்லது 250 விருந்தினர்கள் அங்கு உணவருந்திக்கொண்டிருந்தார்கள். பெரும்பாலானவர்கள் சிங்களவர்கள். ஒரு சில முஸ்லீம் குடும்பங்களும் அங்கிருந்தன. தமிழ்நாட்டைச் சேர்ந்த தமிழர்கள் சிலர் குழுவாக வந்திருந்தனர். இரவுச் சாப்பாடு ஒருவருக்கு 7500 இலங்கை ரூபாய்கள். இலங்கையில் சாதாரண தொழில் செய்யும் ஒருவருக்கு ஒருவேளைச் சாப்பாட்டிற்கு இவ்வளவு தொகை செலுத்துவதென்பது நினைத்துப் பார்க்கமுடியாத விடயம். ஆனாலும், பலர் அங்கே இருந்தனர். சுமார் 9:30 அல்லது 10 மணியளவில் மீண்டும் அறைக்கு வந்தோம். பல்கனியில் இருந்தபடி காலிவீதியின் போக்குவரத்தைப் பார்த்துக்கொண்டே பேசினோம். இரவு 12 மணிவரை இருந்து நண்பனுக்கு பிறந்தநாள் வாழ்த்துச் சொல்லி, அறையில் இருந்த கேக்கினை சிறிது வெட்டி உண்டுவிட்டு தூங்கிப்போனேம். முதலாம் திகதி காலை 7 மணிக்கு தூக்கம் கலைந்து எழுந்து, வழமைபோல நண்பனுக்கு முன்னர் காலைக்கடன் கழித்து, நண்பன் ஆயத்தமாகியதும் கீழே இருக்கும் உடற்பயிற்சிக் கூடத்திற்குச் சென்று முப்பது நிமிடம் உடற்பயிற்சியில் ஈடுபட்டு, குளித்துவிட்டு காலையுணவிற்கு மறுபடியும் சிற்றுண்டிச்சாலைக்குச் சென்றோம். நண்பனது பிறந்தநாள் குறித்து அங்கு பணிபுரிபவர்கள் நன்கு அறிந்தே இருந்தார்கள். ஆளாளுக்கு வந்து வாழ்த்துச் சொல்லிச் சென்றார்கள். நாம் காலையுணவை உட்கொண்டு முடித்ததும் தாமே தயாரித்து வைத்திருந்த பிறந்தநாள் கேக்கினை கொண்டுவந்து, சுற்றிநின்று சிலர் வாழ்த்துப்பாட, நண்பன் கேக்கினை வெட்டினான். அங்கும் சில புகைப்படங்களை எடுத்துக்கொண்டோம். சிறிதுநேரம் அறைக்குச் சென்று பேசிவிட்டு அவனிடமிருந்து விடைபெற்று நான் கொட்டகேனவுக்குப் போனேன். மறுநாள்ப் பயணம். கொழும்பில் சில பொருட்களை வாங்கவேண்டி இருந்தமையினால், பிற்பகலில் கொட்டகேனவை சுற்றி வலம் வந்தேன். இரவானதும் நான் தங்கியிருந்த உறவினர்கள் வீட்டில் சிலநேரம் பேசிக்கொண்டிருந்துவிட்டு 10 மணியளவில் குட்டித்தூக்கம் ஒன்றிற்காக முயன்றேன், தோல்வியில் முயற்சி முடிந்தது. அதிகாலை 3 மணிக்கு விமானம். விமான நிலையத்தில் இரண்டு மணித்தியாலங்களுக்கு முன்னராவது நிற்கவேண்டும் என்பதால் 12 மணியளவில் வீட்டிலிருந்து கிளம்பினோம். சுங்கப் பகுதியில் பிரச்சினை ஏதும் இருக்கவில்லை. கூடவந்த சித்தப்பாவிற்கு சைகை காட்டி வழியனுப்பிவைத்து விட்டு தில்லிக்குச் செல்லும் இந்தியன் எயர்லைன் விமான அலுவலகம் நோக்கி நடக்கத் தொடங்கினேன்
  39. கார்த்திகை 29. நான் இலங்கைக்கு வந்த காரணங்களில் இரண்டாவது முக்கியமானது. முள்ளிவாய்க்கால் நோக்கிய பயணம். 2009 வைகாசியிலிருந்து முள்ளிவாய்க்கால் எனும் பெயர் எனது மனதில் மிக ஆளமாகப் பதிந்துவிட்டது. எனது இனத்தின் மீது நடத்தப்பட்ட திட்டமிட்ட இனக்கொலையும், எமது ஒரே நம்பிக்கையாகவிருந்த போராட்டம் முற்றாக அழிக்கப்பட்டதும், தாயக விடுதலைக்கான கனவு முற்றாகக் கலைந்துபோனதும் இந்த இடத்தில்தான். பல்லாயிரக்கணக்கான எனது சொந்தங்களின் குருதி வழிந்து உறைந்துபோனதும் இந்த மணற்றரையில்த்தான். ஆகவே, முள்ளிவாய்க்கால் என்கிற பெயர் உச்சரிக்கப்படும் ஒவ்வொரு கணமும் மனதில் தாங்கொணாத் துயரும், ஏமாற்றமும், விரக்தியும் வந்துசேர்ந்துவிடும். காணொளிகள் மூலம் முள்ளிவாய்க்காலைப் பார்க்கும்போது அப்பகுதியில் இருந்து காற்றோடு காற்றாகக் கலந்து மாவீரரினதும், மக்களினதும் ஆன்மாக்களை மனம் தேடும். அவர்களின் உயிர் கடற்காற்றோடு கலந்து இன்னும் அங்கேயே இருப்பதாக மனம் நினைக்கும். ஆகவே அந்தவிடத்தைப் போய்ப்பார்த்துவிடவேண்டும் என்பது எனது நெடுநாள்த் தவம். ஆகவேதான் இலங்கை நோக்கிய எனது அண்மைய பயணத்தை அதற்காகத் தேர்ந்தெடுத்தேன். இலங்கைக்கான பயணம் ஓரளவிற்கு உறுதிப்படுத்தப்பட்ட பின்னர் முள்ளிவாய்க்கால் பயணத்தை மைத்துனர் மூலம் ஒழுங்குசெய்திருந்தேன். தனது வேலைக்கு லீவு போட்டுக்கொண்ட அவர் தனது இளைய மகனையும் அப்பயணத்திற்கு அழைத்திருந்தார். இப்பயணத்தில் மைத்துனரும் பங்குகொள்வதற்கு அவருக்கென்றொரு காரணமும் இருந்தது. மைத்துனரும் அவரது குடும்பமும் 2009 ஆம் ஆண்டு வைகாசி 17 ஆம் திகதி முள்ளிவாய்க்காலில் இராணுவத்தினரிடம் சரணடைந்து, முகாமில் வதைபட்டு சில மாதங்களின் பின்னர் வெளியே வந்தவர்கள். 2008 இலிருந்து 2009 வரையான படுகொலைகளையும் இறுதி இனக்கொலையினையும் நேரடியாகக் கண்டு மரணத்துள் வாழ்ந்து மீண்டவர்கள். யாழ்ப்பாணத்தில் வாழ்ந்துவந்தபோதும் இனக்கொலையின் ரணங்களும், அவலங்களின் அதிர்வுகளும் அவர்களை மீண்டும் அப்பகுதிக்குச் செல்வதைத் தடுத்தே வந்திருந்தன. ஆனால், நான் இப்பயணம் குறித்து அவரிடம் கேட்டபோது அவரும் வர ஒத்துக்கொண்டார். மேலும், தனது பிள்ளைகளுக்கும் நடத்தப்பட்ட அவலங்கள் குறித்த பதிவுகளை புரியவைப்பதற்கு இதனை ஒரு சந்தர்ப்பமாகவும் அவர் பாவிக்க நினைத்தார்.
  40. புலிகள் தமக்கு பின்னர் எதையாவது ஏற்பாடு செய்தார்களா என்பதற்கான பதில் அது. எனக்கு தற்போது அவர்களில் எந்த எதிர்பார்ப்பும் மக்கள் நலன் சார்ந்த உழைப்பும் இல்லை. இருக்கவும் வாய்ப்பு இல்லை. நன்றி
  41. யாழ்ப்பாணத்துக்கான எனது பயணத்தின் ஒற்றை நோக்கமே சித்தியைப் பார்ப்பதும், அவருடன் ஒவ்வொரு நாளும் சில மணிநேரங்களைச் செலவிடுவதும் தான். ஆனால், அது சாத்தியப்படாது என்பது அவருடனான முதலாவது சந்திப்பிலேயே என்னால் உணர்ந்துகொள்ள முடிந்தது. அவரால் அதிகம் பேச முடியவில்லை. அவரது உடல்நிலை அதற்கு இடம்கொடுக்கவில்லை. அதற்கு மேலாக, அவரை அவரது அறையிலிருந்து வெளியே அழைத்துவருவதற்கு அவருக்கு உதவி தேவைப்பட்டது. பிறரை எந்தவிதத்திலும் சிரமப்படுத்தக் கூடாது என்று நினைப்பவர் அவர், ஆகவே தன்னைப் பார்க்க வருவோரிடத்தில் நீங்கள் அலைக்கழிய வேண்டாம், இடைக்கிடை வந்தால்ப் போதும் என்று கூறியிருக்கிறார். அடுத்தது, மிகுந்த பலவீனமான நிலையில் இருப்பதால் அவரால் ஓரளவிற்கு மேல் சக்கர‌நாற்காலியில் நிமிர்ந்து அமர்ந்துகொள்ளவும் முடியாது. 30 - 40 நிமிடங்களுக்கு மேல் அவரால் அங்கிருப்பதே கஸ்ட்டமாகத் தெரிந்தது. அவரைப் பார்ப்பதற்காகவே நான்கு நாட்கள் யாழ்ப்பாணத்தில் நிற்க முடிவெடுத்திருந்தேன். எனது மொத்தப் பயணத்தினதும் காலம் வெறும் 7 நாட்கள்தான். ஒவ்வொருநாளும் போய் அவருக்குச் சங்கடத்தை ஏற்படுத்தக் கூடாதென்று நினைத்தேன். இடையில் இருக்கும் இரண்டு நாளில் யாழ்ப்பாணத்தைச் சுற்றிப் பார்க்கலாம் என்று ஒரு ஆசை. 1988 ஆம் ஆண்டிற்குப் பின்னர் முதன்முதலாக யாழ்ப்பாணத்தின் தெருக்களில் யாழ்ப்பாணத்தவர்களில் ஒருவனாகச் சுற்றப்போகிறேன் என்பதே மனதிற்கு மிகுந்த மகிழ்ச்சியைக் கொடுத்தது. எவ்வளவு நேரம் தூங்கியிருப்பேன் என்று தெரியவில்லை, திடீரென்று முழிப்பு வந்தது. நேரம் 5 மணிதான். இனித் தூங்க முடியாது, மைத்துனரோ நல்ல நித்திரை. அக்குடும்பத்தில் ஆறுபேர். பாடசாலைக்குச் செல்வோர், வேலைக்குச் செல்வோர் என்று அனைவருமே காலை வேளையில் அவசரப்பட்டு ஆயத்தப்படுவார்கள். ஆகவே, அவர்களின் நேரத்தை வீணடிக்காது, சிரமம் கொடுக்காது எனது காலைக் கடன்களை முடிக்க எண்ணினேன். அதன்படி 5:30 மணிக்கு குளித்து முடித்து வீட்டின் வரவேற்பறையில் இருந்த கதிரையில் அமர்ந்தபடி நேற்றைய உதயனைப் படிக்கத் தொடங்கினேன். மைத்துனரின் வீட்டில் இருந்த ஒரு சில நாட்களில் என்னைக் கவர்ந்த இன்னொரு விடயமும் இருக்கிறது. அருகில் இருக்கும் சிறிய கோயிலில் இருந்து காலை 5:45 மணிக்கு மணியோசையும் அதனைத் தொடர்ந்து ஒலிக்கும் சுப்ரபாதமும். அமைதியான அந்தக் காலை வேளையில், மனதிற்கு ஆறுதலைத் தரும் அந்த இசையயைக் கேட்கக் கொடுத்து வைத்திருக்கவேண்டும். இருந்த மூன்று நான்கு நாட்களில் அதனை முற்றாக அனுபவித்தேன். இந்த அமைதியும், பரவசமும் எங்கும் இல்லை. ஏனையவர்கள் ஒருவர் பின் ஒருவராக எழத் தொடங்கினார்கள். மைத்துனரின் மனைவி சுடச் சுட கோப்பி கொடுத்தார். அருந்திவிட்டு மாமியோடும் மைத்துனரோடும் சில நிமிடங்கள் பேசிக்கொண்டிருக்க காலையுணவு வந்தது. அவர்கள் என்னைக் கவனித்துக்கொண்ட விதம் அருமை. தமது வீட்டில் ஒருவனாக என்னையும் நடத்தியது பிடித்துக்கொண்டது. நிற்க, முதலாவது நாளில் நான் சந்தித்த முக்கியமான இன்னொருவரைப் பற்றிச் சொல்ல மறந்துவிட்டேன். நண்பனுடன் யாழ்ப்பாணத்தைச் சுற்றி வந்துகொண்டிருக்கும்போது, ராசா அண்ணையைப் (நண்பனின் மூத்த சகோதரர், எனக்கும் நெருங்கிய நண்பர்) பற்றிக் கேட்டேன். "இருக்கிறாரடா, பாக்கப்போறியோ?" என்று கேட்டான். "உங்களுக்கு நேரமொருந்தால்ப் போகலாம்" என்று நான் கூறவும், ராசா அண்ணையைப் பார்க்க ஆரியகுளத்திற்கு வாகனத்தை ஓட்டினான். ராசா அண்ணை சற்று மெலிந்து காணப்பட்டார். கடந்த ஐந்து ஆண்டுகளில் அவரிலும் சிறிய மாற்றங்கள். ஆனால் அதே புன்சிரிப்பும், அன்பான வார்த்தைகளும். சில நிமிடங்கள் ஆளையாள் சுகம் விசாரித்துக்கொண்டோம். "உங்களைப்பற்றிச் சிறிய கதையே எழுதினேன் அண்ணை" என்று நான் கூறியபோது, "என்னைப்பற்றி எழுத என்ன இருக்கிறது?" என்று கூறிச் சிரித்தார். சபரிமலைக்கு மாலை அணிந்திருந்தார். உரும்பிராயில் இருக்கும் சபரிமலை ஆலயத்திற்கு தனது வேலைத்தளத்தில் பணிபுரியும் ஒரு இளைஞனுடன் போகவிருந்தவரை நாம் நிறுத்திவைத்துப் பேசிக்கொண்டிருந்தோம். சுடச்சுட கோப்பியும் வடையும் கொடுத்தார். அதிகநேரம் அவரைக் காத்திருக்க வைக்க விரும்பவில்லை. "நான்கு நாட்கள் நிற்கிறேன், இன்னொருநாள் வந்து ஆறுதலாகப் பேசலாம்" என்று கிளம்பி வந்துவிட்டோம். சரி, பழையபடி இன்றைய நாளுக்கு வரலாம், ஒரு 7:30 - 8 மணியிருக்கும். நண்பன் தொலைபேசியில் வந்தான். "மச்சான், இண்டைக்கு என்ன பிளான் உனக்கு?" என்று கேட்டான். "ஒண்டுமில்லை, சில நண்பர்களைப் பார்க்க வேண்டும். உரும்பிராயில் எனது நண்பர் ஒருவரின் தகப்பனாரைச் சென்று சந்திக்க வேண்டும். இப்போதைக்கு அவ்வளவுதான்" என்று கூறினேன். "சரி, பின்ன வா அக்கராயனுக்குப் போவம். நானும் கமத்துக்குப் போய் ஒரு மாசமாகுது, ஒண்டு இரண்டு மாத்து உடுப்பும் கொண்டுவா, அங்க இண்டைக்கு இரவு நிண்டு வருவம்" என்று கூறினான். எனக்கு அளவற்ற மகிழ்ச்சி. நண்பன் அடிக்கடி அக்கராயனில் உள்ள கமம் பற்றிப் பேசியிருக்கிறான். கொழும்பில் இருந்த காலங்களில் கமத்திலிருந்து வருவோரைக் கண்டு நான் பேசியிருக்கிறேன். ராசா அண்ணையும், நண்பனும் அக்கராயன் பற்றி அந்நாட்களில் பேசும்போது நானும் அங்கிருந்திருக்கலாம் என்றும் எண்ணியிருக்கிறேன். அந்த அக்கராயனைக் காணச் சந்தர்ப்பம் இப்போது வந்திருக்கிறதென்றால் எனது மகிழ்ச்சிபற்றிக் கேட்கவும் வேண்டுமா? இந்த அக்கராயன் பற்றிக் கூறவேண்டும். வன்னியில் இருக்கும் பச்சைப் பசேல் என்கிற விவசாயக் கிராமங்களில் ஒன்று அக்கராயன். 13 ஆம் நூற்றாண்டில் சிங்கள ஆக்கிரமிப்பாளர்களைக் கலைத்துவிட்டு இப்பகுதியை தமிழ் மன்னனான அக்கராயன் ராசன் ஆண்டுவந்ததால் இதனை அக்கராயன் என்று அழைக்கிறார்கள். 70 ஆம் ஆண்டுகளில் இப்பகுதியில் தங்கி நின்று விவசாயம் செய்வதற்கு பொதுமக்களுக்கு காணிகள் பகிர்ந்தளிக்கப்பட்டன. கமம் செய்வதற்கு 10 ஏக்கர்களும், வீடுகட்டி தோட்டம் செய்வதற்கு 5 ஏக்கர்களும் என்று மொத்தமாக 15 ஏக்கர்கள் ஒவ்வொருவருக்கும் பகிர்ந்தளிக்கப்பட்டு வந்தன. அக்காலத்தில் இலங்கையிலிருந்து மலேசியாவுக்கு வேலை நிமித்தம் சென்று வாழ்ந்தவர்கள் நாடுதிரும்பத் தொடங்கியிருந்தார்கள். அவ்வாறு மலேசியாவிலிருந்து நாடுதிரும்பிய நூறுபேருக்கும் அக்கராயனில் இந்த 15 ஏக்கர் நிலம் கொடுக்கப்பட்டது. அப்படி மலேசியாவிலிருந்து நாடு திரும்பிய குடும்பங்களில் ஒன்று எனது நண்பன் ஜெயரட்ணத்தின் குடும்பமும். அவர்கள் பிற்காலத்தில் இன்னும் பல நிலங்களைப் பணம் கொடுத்தும் வாங்கியிருந்தார்கள். அவர்களின் குடும்பத்திற்கு மட்டுமே இப்பகுதியில் கிட்டத்தட்ட 90 ஏக்கர்கள் நிலம் சொந்தமாக இருக்கிறது. அக்கராயனில் ஜெயரட்ணத்தின் குடும்பத்தாரின் காணிகள் இருக்கும் பகுதியை ஊடறுத்து ஒரு அழகான சாலை செல்கிறது. வன்னியில் இருக்கும் மிகவும் ரம்மியமான சாலைகளில் முதன்மையானது அது. அப்பகுதிக்குச் சென்று அதனைக் காட்சிப்படுத்தாத யூடியூப் பதிவாளர்கள் இல்லையென்று சொல்லுமளவிற்கு மிகவும் பிரபலமானது. அதற்கான காரணம் இந்தச் சாலையின் இருபுறமும் ஓங்கி வளர்ந்து பாதையினை மூடிக் குடைபோல காத்துநிற்கும் மரங்களும், சாலையின் ஒருபுறம் கண்ணுக்கெட்டிய தூரம் வரையில் தெரியும் பச்சைப் பசேல் என்ற வயற்காணிகளும் மறுபுறம் தெரியும் தென்னை மற்றும் கமுகு மரத் தோட்டங்களும்தான். இச்சாலையினைப் பலர் சொர்க்கத்தின் வாசற்படி என்று கூறவும் கேட்டிருக்கிறேன். இதில் விசேசம் என்னவென்றால், சாலையை அணைத்து வளர்ந்து நிற்கும் மரங்களை வைத்தது வேறு யாருமல்ல, அதே ராசா அண்ணைதான். சுமார் 600 மீட்டர்கள் தூரத்திற்கு சாலையின் இருபக்கமும் இந்த மரங்களை அவர் நட்டிருக்கிறார். 1987 ஆம் ஆண்டு இந்திய இலங்கை ஒப்பந்தம் கைச்சாத்தானபோது, நாட்டிற்கு அமைதி திரும்பிவிட்டதாக நினைத்து பலர் நற்காரியங்களில் ஈடுபடத் தொடங்கினார்கள். அப்படி இறங்கியவர்களில் ஒருவர் ராசா அண்ணை. அக்கராயனில் தமது கமம் இருந்த பகுதியூடாகச் செல்லும் சாலையின் இரு பக்கத்திலும் மரங்களை அவர் நட்டார். அவ்வாறு நட்டுக்கொண்டுவருகையில் இந்தியா ராணுவம் எம்மீதான தாக்குதலைத் தொடங்கியிருந்தது. இந்திய வல்லாதிக்கம் வன்னியை ஆக்கிரமித்த காலத்திலும் ராசா அண்ணையின் மர நடுகை தொடர்ந்து நடந்துவந்தது. அப்படியான‌ ஒரு நாளில் ராசா அண்ணையை இந்திய ராணுவம் தாக்கியது. புலிகள்மீதான ஆத்திரம் வீதியில் மரம் நட்டவர் மீது பாய்ந்தது. ஆனால், அவர் அன்று செய்த இந்த நற்காரியத்தின் பலனை இன்று அப்பகுதி மக்களும், அப்பகுதிக்கு வருவோரும் அனுபவிக்கிறார்கள். தனது நோக்கம் கனகபுரத்திலிருந்து அக்கராயன் முழுவதற்குமான வீதியின் இரு புறத்திலும் மரங்களை நடுவதுதான் என்று அண்மையில் கூறியிருந்தார். அவரது முயற்சி வெற்றிபெற எனது வாழ்த்துக்கள்.
  42. "இண்டைக்கு கார்த்திகை விளக்கீடு மச்சான், வீட்டிலை மரக்கறி, எங்க சாப்பிடப் போகிறாய்?" என்று கேட்டான். "எனக்கு மரக்கறி பிரச்சினையில்லை" என்று நான் கூறவும். "இல்லை, பிள்ளைகளுக்கும் மரக்கறியெண்டால் இறங்காது, வா கொத்து ஏதாவது சாப்பிடுவம், அப்படியே பிள்ளைகளுக்குக் எடுத்துக்கொண்டுவரலாம்" என்று நண்பன் கூறவும், சரியென்றேன். அவனது வீட்டிலிருந்து கச்சேரி நோக்கிப் போகும் வழியில், வைத்தியசாலை வீதியில் யு.எஸ் ஹோட்டல் என்று ஒரு அசைவக உணவகம் இருக்கிறது. சில மாடிகளைக் கொண்ட அக்கட்டிடத்தின் முதலாவது மாடியில் உணவகமும் அதற்கு மேல் நிகழ்வுகளுக்கான மண்டபமும் இருக்கிறது. கட்டடத்தின் முன்னால் வாகனத்தை நிறுத்திவிட்டு, அருகிலிருந்து மற்றைய உணவகங்களைப் பார்த்துக்கொண்டு வரும்போது நண்பனின் அலுவலக மேலாளர் ஒருவரைச் சந்திக்கும் வாய்ப்புக் கிடைத்தது. சிங்களவர், யாழ்ப்பாணத்தில் வசிப்பவர். தென்பகுதி அரசியல்வாதிகள், அமைச்சர்களோடு நெருங்கிய தொடர்பில் இருப்பவர். நண்பனைக் கண்டதும் சத்தமாகச் சிங்களத்தில் பேசினார். நண்பனுடன் அவர் பேசிக்கொண்டிருக்க, அப்பகுதியைச் சுற்றி நோட்டமிட்டேன். அந்த உணவகங்களின் முன்னாலும் பல சிங்களவர்களைக் காணக் கிடைத்தது. வான்கள், கார்கள் என்று ஓரளவிற்கு வசதிபடைத்த தென்பகுதி மக்கள் யாழ்ப்பாணத்திற்கு வருகிறார்கள் என்பது தெரிந்தது. அவரிடம் பேசும்போது, "இப்பகுதியில் ஓரளவிற்கு நல்ல கொத்து எங்கு வாங்கலாம்?" என்று நண்பன் கேட்கவும், "ஏன், யு.எஸ்ஸை முயற்சி செய்து பாருங்கள், அல்லது இன்னும் இரண்டு மூன்று இடங்கள் எனக்குத் தெரியும்" என்று அந்தச் சிங்களவர் கூறினார். நான் திகைத்துப் போனேன். ஒரு சிங்களவர் யாழ்ப்பாணத்தில் நல்ல உணவு கிடைக்கும் இடங்களை நன்கு தெரிந்து வைத்திருக்கிறார் என்றால், அவர்கள் எவ்வளவு தூரத்திற்கு அங்கு ஒற்றிவிட்டார்கள் என்பது புரிந்தது. அவர் கூறியவாறே யு.எஸ் உணவகத்திற்குச் சென்று ஆட்டுக் கொத்தும், கோழிக்கறியும் கேட்டோம். இடையே குடிப்பதற்கு ஜிஞ்சர் பியரும் கேட்டோம். சாப்பாடு அருமை. குளிர்ந்த சோடாவோடு சேர்த்து உண்ணும்போது அமிர்தமாக இருந்தது. அந்த உணவகத்தில் பணிபுரிந்தவர்கள் யாழ்ப்பாணத்துத் தமிழர்களாக இருக்கலாம், ஆனாலும் பேச்சு வழக்கில் வேறுபாடு தெரிந்தது. மிகவும் மரியாதையாகவும், பணிவாகவும் நடந்துகொண்டார்கள். அடிக்கொருமுறை சேர் என்று அழைத்தார்கள். நண்பன் இக்கடைக்கு அடிக்கடி வந்திருக்கலாம் என்று எண்ணிக்கொண்டேன். சாப்பிட்டு முடிந்ததும் அதற்கான கட்டணத்தையும், பணியாளருக்கான "சந்தோசப் பணத்தையும்" நண்பனே கொடுத்து (நான் கொடுக்கிறேன் என்று நான் கூறியும் பிடிவாதமாக மறுத்து, உனக்கு செலவுசெய்ய நான் சந்தர்ப்பம் ஒன்றைத் தருவேன், அப்போதுச் செய்தால்ப் போதும் என்று கூறிவிட்டான்) பிள்ளைகளுக்கும் தேவையான உணவினை வாங்கிக்கொண்டு மறுபடியும் வீடு வந்தோம். இரவு ஒன்பதரை ஒன்பதே முக்கால் ஆகுகையில் மீண்டும் என்னை மைத்துனரின் வீட்டின் முன்னால் இறக்கிவிட்டான் நண்பன். நான் உள்ளே போகும்வரை அப்பகுதியிலேயே வாகனத்தை நிறுத்திவிட்டு காத்து நின்றான். கேட் உட்பகுதியால் பூட்டப்பட்டிருந்தது. வெளியிலிருந்து அதனைத் திறக்க என்னால் முடியவில்லை. பலமாக கேட்டினைத் தட்டிப் பார்த்தேன், எவரும் வீட்டிற்கு வெளியே வரவில்லை. நண்பன் இன்னமும் அங்கு நிற்பது தெரிந்தது, "நீங்கள் போங்கோ, நான் கோல்பண்ணிப் பார்க்கிறேன்" என்று கூறி அவனை அனுப்பிவைத்தேன். ஆனாலும் வீட்டிலிருந்து எவரும் வெளியில் எட்டிக் கூடப் பார்க்கவில்லை. நான் தட்டிய சத்தம் கேட்டு பக்கத்து வீட்டுக்காரர் தனது கார்த்திகை விளக்கீட்டினை வீதிக்கு வந்துபார்ப்பது போல பாசாங்கு செய்துகொண்டு என்னை யாரென்று நோட்டம் விடுவது எனக்குத் தெரிந்தது. தோளில் பாரிய பையொன்று தொங்க, முன்பின் தெரியாத ஒருவர் பக்கத்து வீட்டின் முன்னால் இரவு 10 மணிக்கு நிற்கிறார் என்றால் சந்தேகம் வரத்தானே செய்யும்? சயன்ஸ் சென்ட்டர் எனும் பிரபல டியுஷன் நிலையத்திற்கு மிக அருகிலேயே மைத்துனரின் வீடு. இரவு வகுப்பு முடிந்து மாணவர்களும் போயாயிற்று. வீதியில் வெளிச்சம் இருந்தாலும் எப்போதாவது அவ்வீதியூடாகச் செல்லும் மோட்டார் சைக்கிள் அல்லது முச்சக்கர வண்டியைத் தவிர ஆளரவம் மிகவும் குறைவான வீதியது. என்னடா செய்யலாம்? இப்படியே காலை மட்டும் வீதியில் நிற்கவேண்டி வந்துவிடுமோ என்று ஒரு பக்கம் யோசனை. ஆனால், எவராவது சந்தேகத்தின் பேரில் என்னைப் பொலீஸில் போட்டுக்குடுத்தால் என்னசெய்வது என்கிற பயமும் உள்ளுக்குள் இருந்தது. ஆனால் ஒரேயொரு ஆறுதல், மைத்துனர் வேலை முடிந்து 10:30 மணிக்குத்தான் வீடுவருவார். அவர் வரும்வரை காத்திருக்கலாம் என்று அப்படியே வீதியில் நின்றுகொண்டேன். அதிஸ்ட்ட‌வசமாக மைத்துனரின் மனைவி வீட்டின் முன்கதவினைத் திறந்துபார்க்கவும், நான் பலமாக அவரை அழைத்து, "கேட்டை ஒருக்கால் திறவுங்கோ" என்று கேட்டேன். "அடகடவுளே, எவ்வளவு நேரமாய் உதிலை நிக்கிறியள்?" என்று கேட்டார். நானும், "இப்பத்தான், ஒரு அரைமணித்தியாலம் இருக்கும்" என்று கூறிச்சிரித்தேன். "கேட்டைத்திறந்து வந்திருக்கலாமே?" என்று கேட்கவும், திறக்க முயற்சித்தேன் ஆனால் முடியாமற்போய்விட்டது என்று கூறவும் சிரித்துவிட்டார். மறுபடியும் அலங்கார குமுழைத் திருகிக்கொண்டு நின்றிருக்கிறேன் என்பது புரிந்தது. குளித்துவிட்டு மாமியுடன் சற்று நேரம் பேசிக்கொண்டிருந்தேன். பழைய கதைகள், நீண்டகால தொடர்பில்லாத உறவினர்கள், எவரெவர் இப்போது எங்கிருக்கிறார்கள் என்கிற கேள்விகள் என்று சம்பாஷணை தொடர்ந்தது. மைத்துனர் இரவு 10:30 இக்கு வந்ததும் இரவுணவு அருந்திவிட்டு, வீட்டின் மண்டபத்தில் பாய் தலையணையுடன் படுத்திருந்து நெடுநேரம் பேசிக்கொண்டிருந்தோம். இரவு 12:30 - 1 மணிக்குத் தூங்கியிருப்போம் என்கிற நினைவு. யாழ்ப்பாணத்தில் எனது முதலாவது நாள் நிறைவிற்கு வந்தது.
  43. பாஷையூரிலிருந்து நாம் படித்த பாடசாலையான பத்திரிசியார் கல்லூரி வழியால் சென்றோம். பழைய நினைவுகள் வந்து போயின. நான் படிக்கும் காலத்தில் இருந்த உயர் வகுப்புக்கள் இருந்த பகுதி முற்றாக காணாமற்போயிருந்தது. பாடசாலையின் மத்திய வகுப்புக்கள் இருந்த பகுதிக்கு அதனை மாற்றியிருப்பதாக நண்பன் சொன்னான். ஒரு சில கட்டடங்களைத்தவிர 80 களில் இருந்ததுபோன்றே அப்பகுதி தெரிந்தது. அப்படியே சேமக்காலை வீதிவழியாக கடற்கரை வீதிக்கு வந்து அங்கிருந்து யாழ்ப்பாணம் பண்ணைப்பகுதி நோக்கிச் சென்றோம். அப்பகுதியில் பாரிய மாற்றம் ஏதும் இல்லை. சின்னக்கடைக்கும் பண்ணைப்பகுதிக்கும் இடையில் இராணுவ முகாம் ஒன்று இருந்தது. சிறியதுதான், ஆனாலும் அவர்களின் பிரசன்னம் நன்றாகவே தெரிந்தது. அப்படியே புதிதாகக் கட்டப்பட்டுவரும் யாழ்ப்பாண மாநகரசபைக் கட்டத்தையும் பார்த்துக்கொண்டே பண்ணைப்பகுதிக்கு வந்தோம். சுற்றுலாத்தளம் போல் மிகவும் சுறுசுறுப்பாகவும் மக்கள் நிறைந்தும் காணப்பட்டது. கோட்டையின் பின்பகுதியில் தெற்கிலிருந்து சிங்கள மக்களை கொண்டுவந்த பஸ்வண்டிகள் நிறுத்தப்பட்டிருக்க, அதில் வந்தவர்கள் அப்பகுதியில் கேளிக்கைகளில் ஈடுபட்டிருந்தார்கள். கொத்துரொட்டிக் கடைகள், சிற்றுண்டிக் கடைகள், ஐஸ் கிறீம் கடைகள், சிறுவர்களுக்கான விளையாட்டுப் பொருட் கடைகள் என்று அப்பகுதியெங்கும் மக்கள் அலைமோதிக்கொண்டிருந்தார்கள். அங்கிருந்தவர்களில் தமிழர்களைவிடவும் சிங்களவர்களே அதிகமாகக் காணப்பட்டார்கள். யாழ்ப்பாணத்தைச் சென்று பார்ப்பதென்பது அவர்களைப்பொறுத்தவரையில் விருப்பமான ஒரு பொழுதுபோக்கு என்றே நினைக்கிறேன். நான் யாழ்ப்பாணம் வந்த ரயிலில்க் கூட பெருமளவு சிங்களவர்கள் யாழ்ப்பாணம் வந்திருந்தார்கள். பலவிடங்களில் இவர்களின் பிரசன்னம் இருந்தது. பண்ணையிலிருந்து ஊர்காவற்றுறை நோக்கிச் செல்லும் பாதையில் கடற்படை முகாமிற்கு சற்று முன்னர் வாகனத்தை நிறுத்திக்கொண்டோம். இறங்கி, இருபக்கமும் தெரிந்த இயற்கை அழகை மாலைச் சூரியன் மங்கும் வேளையில் படமெடுத்தேன். ரம்மியமாகவிருந்தது. இதேபகுதியை பலமுறை யூடியூப் தளத்தில் பலர் பதிவேற்றியிருக்கிறார்கள். மிகவும் அழகான‌ பகுதி. என்னைப்போலவே வேறு சிலரும் அப்பகுதியில் நின்று படமெடுப்பது தெரிந்தது. அன்று கார்த்திகை விளக்கீடு. யாழ்நகரெங்கும் வீடுகளின் முன்னால் விளக்குகள் ஏற்றப்பட்டு மிகவும் அழகாகத் தெரிந்தது. நண்பனின் வீட்டிற்குச் சென்றோம். அவனது வீட்டிலும் பிள்ளைகள் விளக்கீடு வைத்திருந்தார்கள். வீட்டின் முன்னால், முற்றத்தில், மதிலின் நீளத்திற்கு என்று பல விளக்குகள். யாழ்ப்பாணத்தில் நான் வாழ்ந்த காலத்தில் பார்த்ததற்குப் பின்னர் இன்றுதான் விளக்கீட்டினை மீண்டும் பார்க்கும் வாய்ப்பு எனக்குக் கிடைத்தது. ஊரை விட்டு எப்போதுமே நீங்கியதில்லை என்கிற உணர்வு ஒருகணம் வந்துபோனது. ஊரில் வாழ்பவர்கள் கொடுத்துவைத்தவர்கள் என்று மனதிற்குள் எண்ணிக்கொண்டேன்.கைலாசபிள்ளையார் கோயிலுக்குப் பின்னால் அவனது வீடு. கோயிலின் சுற்றாடல் என்றால் கேட்கவும் வேண்டுமா? அப்பகுதி விளக்கீட்டில் தெய்வீகமாகக் காட்சியளித்தது. பின்னர் அவனது பிள்ளையை வகுப்பிலிருந்து கூட்டிவர கட்டப்பிராய்ப் பகுதிக்குச் சென்றோம். போகும்போது நல்லூர்க் கோயிலூடாக செல்லும் வாய்ப்புக் கிடைத்தது. என்னைப்பொறுத்தவரை நல்லூரே யாழ்ப்பாணத்தின் அடையாளம் என்று எண்ணுவதுண்டு. கோயிலின் கம்பீரமும், அழகும் என்னைக் கவர்ந்தவை. அதனைப் பார்க்கும்போதே மனதிற்கும் இனம்புரியாத சந்தோசமும், பெருமையும் ஒருங்கே வந்துபோகும். இரவு விளக்கு வெளிச்சங்கள் கோயிலை இன்னும் அழகுபடுத்த, காரில் பயணித்தவாறே சில படங்களையெடுத்தேன். நாளை மாவீரர் நாள். நல்லூர் திலீபன் நினைவிடத்தில் பாரிய பந்தல்கள் இடப்பட்டு மக்கள் அப்பகுதியில் கூட்டமாக நின்று மாவீரர் நாள் ஒழுங்குகளைச் செய்துகொண்டிருப்பது தெரிந்தது. பந்தலின் முன்னால் நூற்றுக்கணக்கான மோட்டார்சைக்கிள்கள். இளைஞர்கள் விருப்புடன் வந்து அப்பகுதியில் பணிகளில் ஈடுபட்டிருந்ததைப் பார்க்கும்போது மக்களின் மனோநிலை எப்படியிருக்கிறதென்பது புரிந்தது. கட்டப்பிராயில் பருத்தித்துறை வீதியிலேயே வகுப்பு நடைபெற்றது. வாகனத்தை வீதியோரத்தில் நிறுத்திவிட்டு சில நிமிடங்கள் காத்திருந்தோம். அந்த இரவு வேளையிலும் பருத்தித்துறை வீதி மக்களும் வாகனங்களும் நிறைந்து காணப்பட்டது. குறுகலான வீதி, ஆனாலும் இருபுறமும் செல்லும் வாகனங்கள் வேகத்தைக் குறைக்காது, இலாவகமாக வீதியின் இடதுபக்கமும், வலதுபக்கமுமாக மாறி மாறி ஓட்டிக்கொண்டிருந்தார்கள். இவர்களுக்கிடையே மோட்டார்சைக்கிள்கள், முச்சக்க வண்டிகள், நடந்துசெல்லும் மனிதர்கள் என்று ஒரே கலேபரம். நண்பனின் பிள்ளை வகுப்பு முடிந்து வந்ததும், அவரை ஏற்றிக்கொண்டு மீண்டும் வீடு வந்தோம்.
  44. பயண நாள். கார்த்திகை 24, காலை மனைவி விமான நிலையத்தில் இறக்கிவிட்டார். வழமையான விமான நிலைய சடங்குகளுக்குப் பின்னர் 58 ஆம் இலக்க வாயிலுக்குப் போகச் சொன்னாள் எயர் இந்தியா விமானப் பணிப்பெண். சில நூறு பேராவது இருக்கும். அப்பகுதியெங்கும் இந்தியர்கள். ஒருகணம் நான் நிற்பது சிட்னி விமானநிலையம்தானோ என்று எண்ணவைக்கும் வகையில் இந்தியர்களின் சத்தம். பெரும்பாலும் ஹிந்தி, இடையிடையே மலையாளம் அல்லது தெலுங்கு. தமிழ் மருந்திற்கும் இருக்கவில்லை. 10 மணிக்கு எம்மை விமானத்தினுள் அனுமதிக்கவேண்டும், 11 மணிவரை விமானம் ஆயத்தமாக இருக்கவில்லை. நின்ற பல நூற்றுக்கணக்கான இந்தியர்களையும் என்னையும் இரு வரிசைகளில் நிற்கச் சொன்னாள் இன்னொரு பணிப்பெண். முதலாவது வரிசை பணக்காரப் பயணிகளுக்கானது, பிஸினஸ் கிளாஸ். அதன்பின்னர் சிறு குழந்தைகளுடன் பயணிக்கும் குடும்பங்கள். சிலர் அதுவரை தம்முடன் நடந்துவந்த தம்து பிள்ளைகளை திடீரென்று இடுப்பில் தூக்கி வைப்பதையும் காண முடிந்தது. இறுதியாக, என்னைப்போன்ற‌ சாதாரணமானவர்களை அழைத்தார்கள். உள்ளே சென்று, இருக்கையின் இலக்கம் பார்த்து அமர்ந்துகொண்டேன். மூன்றிருக்கை அமைப்பில், ஒரு கரையில் எனது இருக்கை. எனதருகில் ஒரு இந்தியப் பெண்ணும் அவரது சிறிய வயது மகனும் அமர்ந்துகொண்டார்கள். சிறுவன் அருகிலிருந்து என்னை உதைந்துகொண்டிருந்தான். எதுவும் பேசமுடியாது, பேசாமல் இருந்துவிட்டேன். அப்பெண்ணினது கணவனும் இன்னொரு கைக்குழந்தையும் எமக்குப் பின்னால் உள்ள வரிசயில் அமர்ந்திருந்தார்கள். அக்குழந்தை தொடர்ச்சியாக அழுதபடி இருந்தது. இடைக்கிடையே அக்குழந்தையை அப்பெண் தூக்கியெடுப்பதும், கணவரிடம் கொடுப்பதுமாக அவஸ்த்தப்பட்டுக்கொண்டிருந்தாள். கணவன் விமானப் பணிப்பெண் ஒருத்தியிடம் ஏதோ சொல்லியிருக்க வேண்டும், என்னிடம் வந்து "சேர், உங்கள் இருக்கையினை அவர்களுக்குக் கொடுத்துவிட்டு, அவர்களின் இருக்கையில் சென்று அமர முடியுமா?" என்று கேட்டாள். எனக்குப் புரிந்தது, "சரி, செய்யலாமே" என்று எழுந்து மாறி இருந்தேன். அதன்பின்னர் எவரும் என்னை உதைக்கவில்லை. நான் இருந்த வரிசையில் மூன்று இருக்கைகள். நான் யன்னலின் ஓரத்தில் அமர்ந்துகொண்டேன். நடுவில் எவரும் இருக்கவில்லை. மூன்றாவது இருக்கையில் ஒருவர் அமர்ந்துகொண்டார். இந்தியராக இருக்கமுடியாது. தமிழராக இருக்கலாம். சிலவேளை சிங்களவராகவும் இருக்கலாம், பேசவில்லை. 55 வயதிலிருந்து 60 வரை இருக்கலாம். கறுப்பான, மெலிந்த , சிறிய தோற்றம் கொண்ட மனிதர், தனியாகப் பயணம் செய்கிறார் போல. மதிய உணவு பரிமாறப்பட்டபோது, சலித்துக்கொண்டேன். நன்றாகவே இருக்கவில்லை. பாதி அவிந்தும், மீது அவியாமலும் இருந்தது உணவு. வேறு வழியில்லை, சாப்பிட்டே ஆகவேண்டும். அவசர அவசரமாக உள்ளே தள்ளிவிட்டு அவரிடம் பேச்சுக் கொடுக்கலாம் என்று எண்ணி, "நீங்கள் இந்தியரோ ?" என்று கேட்டேன். "இல்லை, இலங்கை" என்று கூறினார். "ஓ. அப்படியா, இலங்கையில் எங்கே?" என்று கேட்டேன். "கொழும்பு" என்று அவர் கூறினார். "நான் யாழ்ப்பாணம்" என்று கூறினேன். சிட்னியில் என்ன செய்கிறோம், எத்தனை வருடங்களாக வாழ்கிறோம் என்று சில விடயங்களைப் பகிர்ந்துவிட்டு மீண்டும் மெளனமானோம். அவர் தூங்கிவிட்டார். நானோ எனக்கு முன்னால் திரையில் தெரிந்துகொண்டிருந்த விமானத்தின் பறப்பின் பாதையினை வேறு வழியின்றிப் பார்த்துக்கொண்டிருந்தேன்.
  45. சரி, போவதற்கான அனுமதி கிடைத்தாயிற்று. பயணச் சீட்டை வாங்கலாம் என்று பார்த்தால் எல்லாம் விலை. எனக்கு மட்டும்தானே, சொகுசு எவையும் வேண்டாம், என்னையும், இரு பொதிகளையும் கொண்டுசெல்ல எந்த விமானமாக இருந்தாலும் பரவாயில்லை என்று நினைத்தேன். பார்த்துக்கொண்டு போனால் எயர் இந்தியாவே உள்ளவற்றில் மலிவானதாய் இருந்தது. அதற்கு அடுத்ததாக மலிவான எயர்லங்காவுக்கும் கிட்டத்தட்ட 500 டொலர்கள் வித்தியாசம். எதற்காக அவனுக்குக் கொடுக்க வேண்டும்? பேசாமல் இந்தியாவுக்கே போய் அங்கிருந்து கொழும்பிற்குப் போகலாம் என்று நினைத்து, அதனை வாங்கிவிட்டேன். பயணச் சீட்டு வாங்கியாயிற்று, ஆனாலும் பயணம் நடக்குமா என்பது இன்னமும் உறுதியில்லை. இறுதிநேரத்தில்க் கூட வீட்டில் சூழ்நிலை மாறலாம். பிள்ளைகள் ஏதாவது கூறலாம் என்று நினைத்து மூத்தவளிடம் "நான் தனியே போவதுபற்றி என்ன நினைக்கிறாய்?" என்று கேட்டேன். "நீங்கள் போகத்தான் வேணுமப்பா, அவ உங்களைப் பாத்தவ, போட்டு வாங்கோ, நாங்கள் சமாளிக்கிறம்" என்று சொன்னாள். அப்பாடா, பிள்ளைகள் ஓக்கே, அப்போ பயணிப்பது கிட்டத்தட்ட உறுதி ஆகிவிட்டது. சரி, யாழ்ப்பாணத்தில் எங்கே தங்குவது, கொழும்பில் எங்கே தங்குவது, பயணிப்பது எங்கணம் என்று அடுத்த விடயங்கள் தொடர்பான கேள்விகள். கொழும்பில் தங்குவதற்கு மனைவியின் சித்தியின் வீடு இருந்தது. என்னை ஒரு சில நாட்களுக்கு தம்முடன் தங்கவைப்பதில் அவர்களுக்குப் பிரச்சினையேதும் இல்லையென்று சொன்னார்கள். எனக்கும் நன்கு பரீட்சயமானவர்கள்தான், நானும் ஆமென்றுவிட்டேன். விமானநிலையத்திற்கு வந்து என்னை வரவேற்றது முதல், யாழ்ப்பாணத்திற்கான ரயில் சீட்டுக்களை முன்பதிவுசெய்து, அதிகாலை 5 மணிக்கு புறக்கோட்டை புகையிரத நிலையம் வந்து, ஓடி- ஏறி ஆசனம் பார்த்துத் தந்ததுவரை எல்லாமே சித்தப்பாதான். கடமைப்பட்டிருக்கும் சிலரில் அவருமொருவர். சரி, பயணத்திற்கு வரலாம். யாழ்ப்பாணத்தில் தங்குமிடம் பார்க்கவேண்டும். நண்பனிடம் கேட்டேன். "நீ பேசாமல் வா, நானெல்லோ இடம் ஒழுங்குபடுத்தித் தாரது" என்று சொன்னான். அவன் சொன்னால் செய்வான் என்பது தெரியும், ஆகவே மீண்டும் கேட்டுத் தொல்லை கொடுக்கவிரும்பவில்லை. பயணிப்பதற்கு முதல்நாள் அவனுக்கு குறுந்தகவல் அனுப்பினேன். "மச்சான், அறுவைச் சிகிச்சை ஒன்றிற்காக கொழும்பு வந்திருக்கிறேன், ஆறுதலாய் எடுக்கிறேன்" என்று பதில் வந்தது. அடக் கடவுளே, இப்போது என்ன செய்வது? வேறு இடமும் ஒழுங்குசெய்யவில்லையே, சரி போய்ப் பாப்பம் என்று கிளம்பிவிட்டேன். யாழ்ப்பாணத்தில் மைத்துனனின் வீடு இருக்கிறது, அவசரமென்றால் அங்கு தங்கலாம் என்று சொல்லியிருந்தான். ஆகவே, பரவாயில்லை என்று எண்ணிக்கொண்டேன். இந்தப் பயணத்தில் நான் செய்யவேண்டிய இரு முக்கிய விடயங்கள் என்று நான் நினைத்தவைகளில் முதலாவது சித்தியுடன் முடிந்தவரை அதிக நேரம் செலவிடுவது. மற்றையது வன்னிக்குச் செல்வது. குறிப்பாக கிளிநொச்சியில் இருந்து முல்லைத்தீவு வரை 2009 இல் எமது மக்கள் இடம்பெயர்ந்து சென்ற பாதை வழியே நானும் செல்வது, முள்ளிவாய்க்காலில் இறங்கி வணங்குவது. இவைதான். வேறு எதுவுமே மனதில் இருக்கவில்லை.
  46. இராணுவ நடமாட்டத்தைக் கட்டுப்படுத்துதல் இராணுவ அடக்குமுறைமீது கடுமையான அதிருப்தியில் இருந்த மக்களின் மனோநிலையினை தமக்குச் சார்பாக பயன்படுத்த போராளிகள் முற்பட்டனர், முக்கியமாக புலிகள் இச்செயற்பாட்டில் முன்னிலை வகித்தனர். இராணுவத்தினர் மீதும் பொலீஸார் மீதும் தமது தாக்குதல்களை அவர்கள் தீவிரப்படுத்தினர். மேலும், இராணுவத்தினரை அவர்களது முகாம்களுக்குள் முடக்கிவிட கண்ணிவெடித் தாக்குதல்களையும் கைக்கொள்ளத் தொடங்கினர். மன்னார் மாவட்டத்தில், பூநகரிப் பாதையில் அமைந்திருந்த தள்ளாடி இராணுவ முகாமின் இரவு நேர ரோந்தை எதிர்பார்த்து விக்டர் தலைமையிலான புலிகளின் குழுவொன்று காத்திருந்தது. ஆவணி 11 ஆம் திகதி அதிகாலை 4:30 மணிக்கு ஜீப் வண்டியிலும், ட்ரக்கிலும் ரோந்துவந்த இராணுவத்தினரின் அணிமீது தாக்குதல் நடத்தப்பட்டது. இவ்வாகனங்களில் பயணம் செய்துகொண்டிருந்த 13 இராணுவத்தினரில் 6 பேர் அவ்விடத்திலேயே கொல்லப்பட்டனர், இன்னுமொருவர் காயப்பட்டார். வழமைபோல தம்மீதான தாக்குதல்களுக்கு பொதுமக்கள் மீது தனது பழிவாங்கல்த் தாக்குதல்களை இராணுவம் ஆரம்பித்தது. சிவில் உடையில் மன்னார் நகரத்திற்குள் நுழைந்த இராணுவத்தினர் தமிழருக்குச் சொந்தமான கடைகளையும் வீடுகளையும் எரிக்கத் தொடங்கினர். அடம்பன் பகுதியில் பொதுமக்களைத் தாக்கியதோடு வீடுகளையும் எரித்தனர். சிலவிடங்களில் முஸ்லீம் மக்களும் இராணுவத்தினரால் தாக்கப்பட்டனர். இந்த நாட்களில் மட்டும் கொல்லப்பட்ட தமிழர்களின் எண்ணிக்கை இருபது. கொல்லப்பட்டவர்களில் ஆறு இந்திய வம்சாவளித் தமிழர்களும் அடக்கம். அவர்களில் ஒருவர் ஒரு சில நாட்களில் இந்தியாவுக்குத் திரும்புவதற்காகக் காத்திருந்தவர். பொதுமக்கள் மீதான இராணுவத்தினரின் தாக்குதல்கள் குறித்து மன்னார் ஆயர் ஜெயவர்த்தனவிடம் முறைப்பாடு செய்திருந்தார். "ஆக்கிரமிப்பில் ஈடுபடும் இராணுவத்தினர் போன்று அவர்கள் தமது வழியில் அகப்பட்டவை எல்லாவற்றையும் அழித்து நாசம்செய்தபடி செல்கிறார்கள்" என்று அவர் குறிப்பிட்டார். மன்னாரில் இராணுவத்தினரால் ஏற்படுத்தப்பட்ட அழிவினை மதிப்பிட அமைச்சர் எச்.எம்.மொகம்மட் அங்கு சென்றிருந்தார். ஜெயாருக்கு அவர் வழங்கிய அறிக்கையில் மன்னாரில் எரிக்கப்பட்ட பெரும்பான்மையான கடைகளும் வீடுகளும் முஸ்லீம்களுக்குச் சொந்தமானவை என்று குறிப்பிட்டிருந்தார். தாக்குதல்களில் பாதிக்கப்பட்ட பொதுமக்கள் மொகம்மட்டிடம் பேசுகையில், தள்ளாட்டி இராணுவ முகாமில் தங்கியிருந்த இஸ்ரேலிய உளவுப்பிரிவான மொசாட்டின் அதிகாரிகளே முஸ்லீம்கள் மீதான தாக்குதலுக்கு உத்தரவிட்டதாகவும், வைகாசியில் கொழும்பில் இயங்கிவரும் மொசாட்டின் அலுவலகத்திற்கு முன்னால் முஸ்லீம்கள் சிலர் நடத்திய ஆர்ப்பாட்டத்திற்குப் பழிவாங்கவே இது நடத்தப்பட்டிருப்பதாகவும் குறிப்பிட்டிருந்தனர். அமிர்தலிங்கமும் சிவசிதம்பரமும் கூட மன்னாரில் ஏற்படுத்தப்பட்ட அழிவினைப் பார்வையிடச் சென்றிருந்தனர். அப்போது கொழும்பில் நடந்துகொண்டிருந்த சர்வகட்சி மாநாட்டில் தான் கண்டவற்றை அமிர்தலிங்கம் அறிக்கை வடிவில் வெளியிட்டார். இராணுவத்தினரைப் பாவித்து அரசாங்கம் தமிழரை அழித்துக்கொண்டிருக்கும் நிலைமையில் தமிழருக்கான அரசியல்த் தீர்வுகுறித்துப் பேசுவது பயனற்றது என்று அவர் குறிப்பிட்டார். "தமிழ் மக்கள் இராணுவத்தினரால் நாள்தோறும் துன்புறுத்தப்பட்டு, சித்திரவதைகளுக்கு உள்ளாக்கப்பட்டுக் கொல்லப்பட்டு வருகையில் நாம் இங்கே அமர்ந்திருந்து எதுவுமே நடக்காதது போல பாசாங்கு செய்துகொண்டு இருக்க முடியாது" என்றும் அவர் கூறினார். இந்திரா காந்தியிடம் கோரிக்கையொன்றினை அன்று விடுத்த அமிர், "பல லட்சக்கணக்கான தமிழர்கள் இராணுவத்தினரின் கைகளில் அகப்பட்டு முற்றான இனக்கொலை ஒன்றினைச் சந்திக்கும் முன்னர் அவர்களை நீங்கள் காப்பாற்ற வேண்டும்" என்று கேட்டுக்கொண்டார். இலங்கையில் தமிழர் மீது அதிகரித்துவரும் தாக்குதல்களையடுத்து தமிழ்நாடு, சென்னையில் தமிழர்கள், குறிப்பாக மாணவர்கள் ஆர்ப்பாட்டங்களில் ஈடுபடத் தொடங்கினர். தமிழர்களைக் காப்பாற்ற இலங்கையில் இந்தியா தலையீடு செய்யவேண்டும் என்று கோரி ஆர்ப்பாட்டப் பேரணிகளை அவர்கள் நடத்தினர். சென்னையில் அமைந்திருந்த இலங்கையின் துணைத் தூதுவராலயத்திற்கு பேரணியாகச் சென்ற மாணவர்களை பொலீஸார் குண்டாந்தடிப் பிரயோகம் செய்து கலைக்கவேண்டியதாயிற்று. சென்னையில் மேலும் இவ்வகையான போராட்டங்கள் நடைபெறலாம் என்று அஞ்சிய அன்றைய தமிழ்நாடு அரசு பாடசாலைகளுக்கும் கல்லூரிகளுக்கும் ஒருவார விடுமுறை அளிப்பதாக அறிவித்தது (அன்று எம்.ஜி.ஆர் செய்ததையே 2009 இல் கருநாநிதியும் செய்தார்). இத்தாக்குதல்களையடுத்து கொழும்பு மீது இந்திரா கடுமையான அதிருப்தி கொண்டார். அன்று புது தில்லியின் மனோநிலை குறித்து இந்துவின் செய்தியாளர் ஜி.கே.ரெட்டி பின்வருமாறு எழுதுகிறார், " தமிழர்கள் மீது அரசு நடத்திவரும் வன்முறைகளால் இந்திரா காந்தி தனது பொறுமையினை இழந்துவருகிறார்" என்று எழுதினார். ஆவணி 15 ஆம் திகதி செங்கோட்டையில் இருந்து இந்திய மக்களுக்கு ஆற்றிய சுதந்திர தின உரையில் இலங்கையரசை அவர் கடுமையாக எச்சரித்தார். கொழும்பு அரசாங்கம் தொடர்ச்சியாக தமிழர்களைக் கொன்றுவந்தால், இந்தியா வாளாவிருக்க முடியாது என்று அவர் கூறினார். இராணுவத்தினரினதும், பொலீசாரினதும் பழிவாங்கல் நடவடிக்கைகளால் போராளிகளின் செயற்பாட்டினைக் கட்டுப்படுத்த முடியவில்லை. டெலோ, ஈ.பி.ஆர்.எல்.எப் அமைப்புக்களும் செயற்பாட்டில் இறங்கலாயின. புலிகள் நடத்திவரும் தாக்குதல்களின் பிரமாண்டத்தைக் காட்டிலும் தாம் அதிகமாகச் செய்துவிட வேண்டும் என்று அவர்கள் எதிர்பார்த்தனர். இராணுவத்தினரினதும், பொலீஸாரினதும் நகர்வுகள், அவர்களின் சிறிய முகாம்கள் ஆகியவற்றின் மீது மட்டுமே தாக்குதல்களை நடத்தி அவர்களை முகாம்களுக்குள் முடக்குவதையே அன்று புலிகள் செய்துவந்தனர். அவர்களின் இந்த முயற்சி பலனளித்திருந்தது.பல பகுதிகள் இதன்மூலம் ஆக்கிரமிப்பிலிருந்து விடுவிக்கப்பட்டதோடு அப்பகுதிகளில் தமது நிர்வாகக் கட்டமைப்புக்களையும் புலிகள் 1984 ஆம் ஆண்டின் இறுதிப்பகுதியில் இருந்து செயற்படுத்த ஆரம்பித்திருந்தனர். ஆவணி 11 முதல் ஆவணி 14 வரையான நான்கு நாட்களில் மட்டும் புலிகள் இரு பொலீஸ் நிலையங்களைத் தாக்கியதோடு கண்ணிவெடித் தாக்குதல்களையும் நடத்தியிருந்தனர். ஆவணி 11, சனிக்கிழமை காலை இராணுவத்தினரின் சீருடையில் வந்த சுமார் 50 புலிகள் ஊர்காவற்றுரையில் இயங்கிவந்த பொலீஸ் நிலையம் மீது தாக்குதல் மேற்கொண்டனர். இராஜாங்க அமைச்சின் பேச்சாளர் கூறுகையில் பொலீஸாரும் போராளிகளும் காலை 3:30 மணியில் இருந்து நேரடித் துப்பாக்கிச் சமரில் ஈடுபட்டதாகவும், முடிவில் போராளிகளின் முயற்சி தோற்கடிக்கப்பட்டதாகவும் கூறினார். சண் மற்றும் பிற்காலத்தில் டெயிலி மிறர் பத்திரிக்கையின் ஆசிரியராகக் கடமையாற்றிய லலித் அழகக்கோன் ஊர்காவற்றுறை தாக்குதலை பின்வருமாறு விபரித்தார், "ஊர்காவற்றுறை பொலீஸ் நிலையத்தின்மீதும் தபால் அலுவலகத்தின்மீதும் பயங்கரவாதிகள் மேற்கொண்ட தாக்குதல் வெற்றிகரமாக முறியடிக்கப்பட்டிருக்கிறது. காலை 3:30 மணியிலிருந்து தொடர்ந்து நான்கு மணித்தியாலங்கள் நடைபெற்ற நேரத் துப்பாக்கிச் சமரில் பயங்கரவாதிகள் தோற்கடிக்கப்பட்டிருக்கிறார்கள்". ஆவணி 14 ஆம் திகதி, செவ்வாயன்று வல்வெட்டித்துறையில் அமைந்திருந்த பொலீஸ் நிலையம் மீதும் புலிகள் தாக்குதல் மேற்கொண்டார்கள். காலை 4:30 மணிக்கு பொலீஸ் நிலையத்திலிருந்த பாதுகாப்பு வெளிச்சம் மீது தாக்குதல் நடத்தி, அதனை செயலிழக்கப் பண்ணியதன் பின்னர் இருட்டில் இத்தாக்குதல் நடத்தப்பட்டிருந்தது. பொலீஸ் நிலையத்தின் முற்பகுதியை மட்டும் விட்டு விட்டு ஏனைய மூன்று பகுதிகளில் இருந்தும் பொலீஸ் நிலையத்தின் மீது கிர்னேட்டுக்களையும், பெற்றொல்க் குண்டுகளையும் எறிந்து அவர்கள் தாக்குதல் நடத்தினார்கள். இஸ்ரேலினால் பயிற்றப்பட்ட பொலீஸ் கொமாண்டோக்கள் உள்ளிருந்து நான்குதிசைகளிலும் கண்ணுக்குத் தெரியாத எதிரிமீது தாக்குதல் நடத்தினார்கள். இத்தாக்குதல் சுமார் ஒரு மணிநேரம் நீடித்தது. இத்தாக்குதலில் சுமார் 50 பொலீஸார் கொல்லப்பட்டதுடன் கட்டடமும் கடுமையான சேதத்தினைச் சந்தித்தது. ஆனாலும், பொலீஸார் புலிகளின் தாக்குதலை முறியடித்து விட்டதாக கொழும்பு ஊடகங்கள் செய்தி வெளியிட்டன. அதேநாள் இரவு, ஈ.பி.ஆர்.எல்.எப் அமைப்பின் ஆயுதப் பிரிவான மக்கள் விடுதலை இராணுவம் காரைநகரில் அமைந்திருந்த பாரிய கடற்படை முகாம் தொகுதி மீது துணிகரமான, பாரிய தாக்குதல் ஒன்றினை ஆரம்பித்தது. இன்று ஈ.பி.டி.பி யின் தலைவராக இருக்கும் டக்கிளஸ் தேவானந்தாவே அன்று மக்கள் விடுதலை இராணுவத்தின் தளபதியாக இருந்தார். தாக்குதல் நடத்தப்பட்ட வேளை அவர் சென்னையில் தங்கியிருந்தார். முன்னாள் ஈ.பி.ஆர்.எல்.எப் இன் மத்திய குழு உறுப்பினரும், தற்போதைய தலைவருமான சுரேஷ் பிரேமச்சந்திரன் அப்போது யாழ்ப்பாணத்தில் இருந்தார். தோல்வியில் முடிவடைந்த ஈ.பி.ஆர்.எல்.எப் இன் காரைநகர் கடற்படை முகாம் மீதான தாக்குதல் மக்கள் விடுதலை இராணுவத்தின் யாழ்ப்பாணத் தளபதியான ரொபேர்ட் என்று அறியப்பட்ட சுபத்திரனினாலும் , சுரேஷ் பிரேமச்சந்திரனினாலும் காரைநகர் முகாம் மீதான தாக்குதலினை நடத்தும் முடிவு எடுக்கப்பட்டது. தாம் அண்மையில் பயன்படுத்தத் தொடங்கியிருந்த இரு புதிய வழிமுறைகளைப் பாவித்து இத்தாக்குதலினை நடத்தலாம் என்று அவர்கள் எண்ணினார்கள். தமிழ்நாடு கும்பகோணம் முகாமில் பயிற்றப்பட்டவரும், லெபனான் உள்நாட்டுப் போரில் ஈடுபட்டவருமான திருகோணமலையைச் சேர்ந்த சின்னவன் என்பவர் மோட்டார் உந்துகணை தொடர்பான பயிற்சியினைக் கொண்டிருந்தார். தனது இயக்கத்திற்காக மோட்டார்க் குண்டுகளையும் அவரே உள்ளூரில் தயாரித்துமிருந்தார். இதனைவிடவும், இயக்கத்தின் இன்னொரு உறுப்பினரான சுதன் எனப்படுபவரால் தயாரிக்கப்பட்ட உள்ளூர்க் கவச வாகனம் ஆகியவற்றைப் பயன்படுத்தி தாக்குதலில் ஈடுபடலாம் என்று ஈ.பி.ஆர்.எல்.எப் நினைத்தது. மோட்டார்த் தாக்குதலை நடத்திவிட்டு பின்னர் முகாமின் முன்வாயில் ஊடாக கவச வாகனத்தை ஓட்டிச் செல்வதே அவர்களின் திட்டம். ஆனால், இரு திட்டங்களும் தோல்வியில் முடிவடைந்தன. அவர்கள் ஏவிய பெரும்பாலான மோட்டார்கள் வெடிக்கவில்லை. மேலும், அவர்களின் கவச வாகனமும் முகாமின் வாயிலிற்பகுதியில் செயலிழந்து நின்றுவிட்டது. ஆரம்பத்தில் முகாமின் பிற்பகுதிக்குப் பின்வாங்கிச் சென்றிருந்த கடற்படையினர், ஈ.பி.ஆர்.எல்.எப் இன் தாக்குதல் பிசுபிசுத்துப் போனதையடுத்து முகாமின் முற்பகுதி நோக்கி முன்னேறி கடுமையான எதிர்த்தாக்குதலில் ஈடுபடத் தொடங்கினர். கடற்படையினரின் பலத்த எதிர்த்தாக்குதலில் பல போராளிகள் கொல்லப்பட, கொல்லப்பட்ட தமது சகாக்களையும், காயப்பட்டவர்களையும் இழுத்துக்கொண்டு மீதிப்பேர் அங்கிருந்து பின்வாங்கிச் சென்றனர். இத்தாக்குதலில் ஈ.பி.ஆர்.எல்.எப் அமைப்பினர் தமது முதலாவது பெண்போராளியை இழந்திருந்தனர். தனது 15 வயதில் மக்கள் விடுதலை இராணுவத்தில் ஷோபா என்கின்ற அந்தப் பெண்போராளி இணைந்திருந்தார்.
  47. மாட்டுப்பண்ணையை ஆரம்பித்துள்ள மெட்டா உரிமையாளர் மார்க். மெட்டா நிறுவனத்தின் நிறுவனர் மார்க் ஜுக்கர்பெர்க்கின் வணிகங்களில் மற்றொரு புதிய வணிகம் சேர்ந்துள்ளது. அதாவது, ஜுக்கர்பெர்க் மாடு வளர்க்கும் புதிய பண்ணை தொழிலைத் ஆரம்பித்துள்ளார். தனது ஃபேஸ்புக் மற்றும் இன்ஸ்டாகிராம் கணக்கில் இது தொடர்பாக பதிவிட்டுள்ள அவர், உலகின் மிக உயர் தரமான மாட்டிறைச்சியை உற்பத்தி செய்வதே தனது இலக்கு என்று கூறியுள்ளார். இதனிடையே, இந்த பசுக்களுக்கு வழங்கப்படும் உணவு குறித்தும் ஜுக்கர்பெர்க் கருத்து தெரிவித்துள்ளார். அதன்படி, அதே பண்ணையில் தயாரிக்கப்படும் உணவு பசுக்களுக்கு வழங்கப்படும் என்றும், ஜுக்கர்பெர்க் தனது மகள்களின் உதவியோடு இதனை மெருகு படுத்துவார் என்றும் குறிப்பிடப்படடுள்ளது. https://athavannews.com/2024/1365847

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.