Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Leaderboard

  1. Kavi arunasalam

    கருத்துக்கள உறவுகள்
    14
    Points
    2954
    Posts
  2. suvy

    கருத்துக்கள உறவுகள்
    10
    Points
    33600
    Posts
  3. தனிக்காட்டு ராஜா

    கருத்துக்கள உறவுகள்
    7
    Points
    9976
    Posts
  4. ஈழப்பிரியன்

    கருத்துக்கள உறவுகள்
    7
    Points
    20018
    Posts

Popular Content

Showing content with the highest reputation on 02/12/24 in all areas

  1. 7 31ந்திகதி குற்றவாளியைக் கைது செய்வதற்கான ஏற்பாடுகள் எல்லாம் துரிதமாக நடந்தேறின. குற்றம் சாட்டப்பட்டவரது விபரங்கள், கொலைக்கான ஆதாரங்களை எல்லாம் ஆராய்ந்த ஸ்வேபிஸ் ஹால் மூத்த அரச சட்டத்தரணி லுஸ்ரிக், ‘குற்றவாளி என சந்தேகிக்கப்படுவரை கைது செய்து விசாரிக்கலாம்’ என பொலிஸாருக்கு அனுமதி வழங்கினார். எந்த இடத்தில் இலக்கத் தகடு இல்லாமல் சில்வர் நிற VW கார் நின்றதோ அதற்கு முன்னாலேயே குற்றவாளி என சந்தேகிக்கப்படுபவருடைய வீடும் இருந்தது. அந்தக் காருக்குப் பக்கத்தில் இருந்து ஆராய்ந்த இரண்டு பொலிஸாருக்கும் அன்று அது தெரிந்திருக்கவில்லை. பொலிஸார் வீட்டுக்குள் சென்ற போது டானியல் ஷோபாவில் அமர்ந்து கோப்பி குடித்துக் கொண்டிருந்தான். பொலிஸாரைக் கண்டதும் எழுந்து கொண்டான். அவனது பத்து மற்றும் பன்னிரண்டு வயதான இரு பெண் குழந்தைகளும் தங்கள் அறையில் நித்திரையில் இருந்தார்கள். அறையை விட்டு வெளியே வந்த டானியலின் மனைவி ஆயுதங்களுடன் இருந்த பொலிஸாரைக் கண்டு பயந்து நின்றாள். வீட்டில் இருந்த அலுமாரிகள் எல்லாம் வெறுமையாக இருந்தன. தரையில் இருந்த சூட்கேஸுகள் நிரம்பி இருந்தன. சேர்பியாவுக்குப் பயணிப்பதற்கு தயாராக எல்லா ஏற்பாடுகளையும் செய்து விட்டு, கொஞ்சம் ஆற அமர இருந்து கோப்பி குடித்துக் கொண்டிருந்த டானியல் மாட்டிக் கொண்டான். பொலிஸ் கொமிஸனர் Inge (41) டானியலைக் கைது செய்யும் போது, அவன் எந்த எதிர்ப்பும் காட்டாது அமைதியா இருந்தான். அவனைக் கைது செய்யும் போது அவனது பணப் பையில் பல 100, 200 ரூபா யூரோ தாள்கள் இருந்தன. டானியலுடன் யேர்மனிய மொழியில் உரையாட முடியவில்லை. அவனைக் கைது செய்து பயணிக்கும் போது, பொலிஸ் கொமிஸனர், “குற்றம் செய்ததாக சந்தேகித்து உன்னைக் கைது செய்து விசாரணைக்காக கொண்டு செல்கிறோம்” என எழுதி அதை கூகுளில் சேர்பிய மொழியில் மொழி பெயர்த்து டானியலுக்குக் காட்டிய போதும் டானியல் அதை வாசித்து விட்டு அமைதியாக இருந்தான். டானியல் மேல் சுமத்தப்பட்ட கொலை வழக்கு பன்னிரண்டு தடவைகளாக ஹைல்புறோன் நகரில் உள்ள நீதிமன்றத்தில் நடந்தது. வழக்கு நடந்த ஒவ்வொரு தடவையும் அவனது பெற்றோர், சகோதரிகள், மனைவி ஆகியோர் சேர்பியாவில் இருந்து வந்து பார்வையாளர் பகுதியில் அமர்ந்திருந்தார்கள். கை விலங்கிடப்பட்ட நிலையிலேயே டானியல் நீதிமன்றத்துக்கு அழைத்து வரப்பட்டிருந்தான். வழக்கில் மொத்தமாக எழுபத்தி இரண்டு சாட்சிகள் விசாரிக்கப்பட்டார்கள். வழக்கின் 12வது அமர்வு 29.09.2023 அன்று நடைபெற்றது. அன்று டானியலின் 32வது பிறந்த தினம். தீர்ப்பு வழங்குவதற்கு முன்னர், மூத்த அரச தரப்பு சட்டத்தரணி லுஸ்ரிக் தனது வாதத்தின் தொகுப்பை வாசிக்க ஆரம்பித்தார். “எடித்லாங்கின் மரணமும் ஒரு கொலைதான். போதுமான தடயங்களை சேகரித்து வைக்காததும், எடித்லாங்கின் உடல் தகனம் செய்யப் பட்டதாலும் விசாரணைகளை தொடர்ந்து செய்ய முடியாமல் போனதாகவும் பொலிஸ் தரப்பில் சொல்லப்பட்டிருக்கிறது. மேலும் குற்றம் சுமத்தப்பட்ட டானியலின் டீஎன்ஏ பரிசோதனையில், அவர் கொலை நடந்த இடத்தில் இருந்தார் என்பதற்கான ஆதாரங்களும் தரப்படவில்லை. ஆகவே அந்தக் கொலையில் டானியலை குற்றவாளியாகச் சேர்க்க முடியாது. ஹைடமேரியின் கொலையில், கொலை நடந்த அன்று, டானியலை முதலாவது மாடியில் கண்டதாக சாட்சியங்கள் சொல்கின்றன. அன்று அவரது கையில் லீடில் சுப்பர் மார்க்கெற்றின் பிசுரங்கள் இருந்ததையும் கண்டிருக்கிறார்கள். கொலை நடந்த இடத்தில் டானியல் இருந்தார் என்பதற்கான தடயங்களை பொலிஸார் நீதிமன்றத்தில் சமர்ப்பித்திருக்கிறார்கள். டானியலின் ‘டீஎன்ஏ’யும் கொலை நடந்த இடத்தில் எடுத்த ‘டீஎன்ஏ’யும் பொருந்துகின்றன. டானியல் அணிந்திருந்த வெள்ளை அடிடாஸ் சப்பாத்தின் அடையாளங்களும், அது டானியலுடையதுதான் என அடையாளம் காணப்பட்டிருக்கிறது. கொலைக்கான ஆயுதம் கண்டுபிடிக்கப்படவில்லை. இல்ஸ்கொபனில், முதியவரைத் தாக்கியது, கொள்ளை முயற்சியில் ஈடுபட்ட வழக்கில், பாதிக்கப்பட்ட முதியவர், டானியல்தான் அதைச் செய்தது என்பதை உறுதிப்படுத்தி இருக்கிறார். மேலும், முதியவர் டானியலின் மாதிரிப் படத்தை வரைய உதவி செய்திருக்கிறார். அவர் சொன்ன அடையாளங்களை வைத்து வரையப்பட்ட மாதிரிப் படம் தொண்ணூறு சதவீதம் டானியலின் முகத்துடன் ஒத்துப் போயிருக்கிறது. அந்தப்படம் பின்னாளில் டானியலை இனம் காண பெரிதும் உதவியாகவும் இருந்திருக்கிறது. முதியவர் வீட்டின் அழைப்பு மணி, மற்றும் புதருக்குள் இருந்து எடுக்கப்பட்ட துப்பாக்கி,லீடில் சுப்பர் மார்க்கெற்றின் பிசுரங்கள், ஆகியவற்றில் இருந்து எடுக்கப்பட்ட தடயங்களை பரிசோதித்த போது அவை டானியலின் ‘டீஎன்ஏ” உடன் பொருந்தின. அன்று டானியல் பயணித்த கார் அவர், 29.12.2022 இல் ஹூஸைனிடம் இருந்து 350 யூரோக்களுக்கு வாங்கியது நிரூபிக்கப் பட்டது. காரை வாங்கும் போது, டானியல் விற்பனைக்கான ஒப்பந்தத்தை செய்ய விரும்பாததால், ஹூஸைன், தன்னுடைய பாது காப்புக்காக டானியலை அவரது கைத் தொலைபேசியில் படம் பிடித்திருக்கிறார். அந்தப் படம், பொலிஸ் திணைக்களத்தினால் வரையப்பட்ட மாதிரிப் படத்துடன் ஒத்துப் போயிருந்ததை கவனிக்க வேண்டும். அத்தோடு குற்றவாளியான டானியலையும் கண்டறிய அந்தப் படம் உதவி இருக்கிறது. ஹேரயுற்றேயின் மரணத்தில், அவர் தாக்கப்பட்டு கொலை செய்த ஆயுதமான சுத்தியல், ஹேரயுற்றேயின் வீட்டில் இருந்து 100 மீற்றர் தூரத்தில் கண்டெடுக்கப் பட்டிருந்தது. அந்தக் கொலையில் சேகரிக்கப்பட்ட தடயங்களில் டானியலின் டீஎன்ஏ கண்டுபிடிக்கப் பட்டிருக்கிறது. அவர் அணிந்த சப்பாத்தின் பதிவும் கொலை நடந்த இடத்தில் இருந்திருக்கிறது. டானியலைக் கைது செய்து, அவரது வீட்டைச் சோதனை செய்த போது அவரது வெள்ளை அடிடாஸ் சப்பாத்து கழுவப்பட்டு சுத்தம் செய்யப்பட்டிருந்தாலும், சப்பாத்து கட்டும் நாடாவில் இரத்தக்கறை இருந்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.. அது ஹேரயுற்றேயின் இரத்தம் என்பது நிரூபிக்கப் பட்டுமிருக்கிறது. கொலைக்கான 100 கிராம் உலோக எடையைக் கொண்ட சுத்தியலை அவர் கட்டிடப் பொருள் விற்பனை நிலையத்தில் இருந்து களவாடி தனது ஜக்கற்றினுள் மறைத்துக் கொண்டு, காசாளர் பகுதியில் தொலைபேசி கதைப்பது போல் வெளியேறியது கமராவில் பதிவு செய்யப்பட்டிருந்தது. அந்த வீடியோ நீதி மன்றத்தில் பார்வையிடப்பட்டிருந்தது….” “நான், எனது இரண்டு பிள்ளைகள் மனைவியுடன் ஸ்வேபிஸ் ஹாலுக்கு வந்தது, வாழ்வதற்காக மட்டுமே. யாரையும் நான் கொல்லவும் இல்லை, யாரிடமும் கொள்ளையடிக்கவும் இல்லை. எனக்கு ஆண்டவன்தான் சாட்சி” என்று டானியல் சொன்னான். “ஆயுள் தண்ட னை . தண்டனை முடிவடைந்ததன் பின்னால் டானியலின் நடவடிக்கை கவனிக்கப்பட்டு, விடுதலைக்கு தகுதியானவர் என்றால் மட்டும் அவர் விடுதலை பெற முடியும். அத்துடன் ஆயுள் தண்டனையை அவர் யேர்மனியிலேயே அனுபவிக்க வேண்டும்” என தீர்ப்பு வந்தது. கொலைகள் நடந்து, குற்றவாளி பிடிபட்டு தண்டனையும் வழங்கப்பட்டு விட்டது. ஸ்வேபிஸ் ஹால் நகரம் இப்பொழுது அமைதி ஆயிற்றா என்று நீங்கள் கேட்கலாம். 14.10. 2020இல், எல்பிரிடே கூகெரைக் கொன்றது யார் என்று இன்னமும் தெரியவில்லை. அந்தக் கொலையைச் செய்தவர் இன்னமும் சுதந்திரமாக நடமாடிக் கொண்டுதானே இருக்கிறார். கொஞ்சம் ஆறப் போட்டு, இரண்டு வருடங்களுக்குப் பின்னாலும் ஏதும் நடக்கலாம். டானியல் கூட ஒருவேளை, கூலிக்குக் கொலை செய்பவனாகவும் இருந்திருக்கலாம். இருந்தால் பார்க்கலாம்.
  2. சன்பிரான்ஸ்சிஸ்கோவில் 3 மாத. த்துக்கொரு தடவை தான் நண்டு பிடிக்க விடுவார்களாம். நேற்றைய தினம் கடலுக்கு போய் காவல் நின்று 4 நண்டுகள் ஒன்று 10$ படி வாங்கி வந்தோம். பேரனுக்கு நண்டு என்றால் அவரை நண்டுப்பிரியன் என்றே சொல்லலாம். இரவே அப்பப்பா கில் பண்ணு கறியைக் காச்சு என்று நின்றான்.பொறடா நாளைக்கு என்றேன். காலையில் எழும்பி இதே வேலையாகவே நின்றான். https://postimg.cc/gallery/zBh4N83
  3. யாழில் இளம் தலைமுறையினர், சினிமா நட்சத்திரங்களை பக்கத்தில் போய் பார்க்கத்தான் ஓடி வந்தார்கள். அதற்குள் போதையில் சிலர் இருந்திருக்கலாம் ; மனோ கணேஷன் யாழ்ப்பாணத்தில் நடந்த தமிழக சினிமா கலைஞர்களின் கலை நிகழ்வில் நடந்த தூரதிஷ்ட சம்பவங்கள், இலங்கை-தமிழக கலாச்சார உறவுகளுக்கு பாதகமாக அமைந்து விடக்கூடாது. இப்படியான பிரமாண்டமான கலை நிகழ்வுகள் நடத்தப்படும் போது, அவற்றுக்கான விதிமுறைகள் நடைமுறைக்கு வர வேண்டும். தமிழக சினிமா ஒரு பிரமாண்டமான பணம் கொழிக்கும் வியாபாரம். அங்கே யாரும் கலை சேவை செய்யவில்லை. அது ஒரு பணம் புழங்கும் தொழில் என்பதால்தான், இன்று சினிமா பெரும் வளர்ச்சி அடைந்த தொழிலாகி உள்ளது. அதனால்தான் பல புலம் பெயர்ந்த இலங்கை தமிழர்களே அதில் இருக்கிறார்கள். அதேவேளை, வடக்கில், “இது போர் நிகழ்ந்த பூமி, துன்பம் நிறைந்த பூமி, இங்கே ஆடல், பாடல், கச்சேரி வேண்டாம். அப்படியே, இருந்தாலும் அவை உரிமை கோஷங்களாக மட்டுமே இருக்க வேண்டும்” என்ற ஒரு சிந்தனை நிலைப்பாடும் இருக்கிறது. இவை அனைத்தையும் கணக்கில் எடுத்து, யாழ் மாவட்ட எம்பிக்கள், மாவட்ட செயலாளர், பொலிஸ், யாழ் மாநகரசபை, சிவில் சமூகம் ஆகியோர் யாழ் மாவட்ட ஒருகிணைப்பு குழுவில் கூடி அமர்ந்து பேசி தீர்மானிக்க வேண்டும். சினிமா கலைஞர்கள் அழைத்தால் வருவார்கள். வேண்டாம் என்றால், வர மாட்டார்கள் என தமிழ் முற்போக்கு கூட்டணி தலைவரும், கொழும்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான மனோ கணேசன் கூறியுள்ளார். இதுபற்றி மனோ எம்பி மேலும் கூறியுள்ளதாவது, நேற்று முதல்நாள் யாழ்ப்பாண முற்றவெளியில் நடந்த தமிழக சினிமா கலைஞர்களின் கலை நிகழ்வில் நடந்த தூரதிஷ்ட சம்பவங்களை கடந்து போக வேண்டும். இதை விட இசை நிகழ்வு கலவர பூமியாக மாறி, பலர் கொலையுண்ட சம்பவம் கொழும்பில், 2004ம் வருட டிசம்பர் மாதம் நிகழ்ந்தது. பொலிவுட் நடிகர் ஷாருக் கான் கலை நிகழ்ச்சி நடத்த கொழும்பு வந்த போது, குண்டு வீசப்பட்டது. நடிகர், ஷாருக், அப்படியே திருப்பிக்கொண்டு விமான நிலையம் போனவர்தான். இன்று, அவரது உலக வரைபடத்தில் இலங்கை இல்லையாம். அந்த வெடிப்பில், எனது சில நண்பர்கள் உட்பட, பல ரசிகர்கள் இறந்தார்கள். பிரபல சோம தேரரின் நினைவு தினமன்று இந்த கலை நிகழ்ச்சி நடத்த ஏற்பாடாகி இருந்ததால், அந்த நிகழ்வை சிங்கள-பெளத்த தீவிர அமைப்பினர் எதிர்த்து போராடியதால், ஒரு பதட்ட நிலைமை அன்று நிலவியது. அதையடுத்து, இத்தகைய கலை நிகழ்வுகள் தொடர்பில், பல விதிமுறைகள் அமுலுக்கு வந்துள்ளன. சினிமா ஒரு தொழில். அங்கே யாரும் கலை சேவை செய்யவில்லை. அது ஒரு பணம் புழங்கும் தொழில் என்பதால்தான், இன்று சினிமா பெரும் வளர்ச்சி அடைந்த தொழிலாகி உள்ளது. பணம் கொடுத்தால், சகாரா பாலைவனத்திலும் அவர்கள் ஆடல், பாடல், இசை நிகழ்ச்சிகளை நடத்துவார்கள். சினிமா, பணம் கொழிக்கும் வியாபாரம் என்பதால்தான் பல புலம் பெயர்ந்த இலங்கை தமிழர்களே அதில் இருக்கிறார்கள். கலைஞர்களை அழைத்தால் வருவார்கள். வர வேண்டாம் என்றால் வர மாட்டார்கள். இலங்கை வந்து செல்வது என்பது மிகப்பெரும் பணம் கொழிக்கும் முன்னணி வருவாய் இல்லை. பக்கத்தில் இருக்கும் நாடு என்பதால், சடுதியாக வந்து விட்டு, ஆடி, பாடி, நிகழ்வு நடத்தி போகலாம் என்று வருகிறார்கள். இனி எம்பிக்கள், மாவட்ட செயலாளர், பொலிஸ், யாழ் மாநகரசபை, சிவில் சமூகம் ஆகியோர் யாழ் மாவட்ட ஒருகிணைப்பு குழுவில் கூடி அமர்ந்து பேசி, இப்படியான நிகழ்வுகளுக்கு விதிமுறைகளை அறிவிக்கலாம். முழுக்க, முழுக்க ஏற்பாட்டாளர்களின் கைகளில் மட்டும் பொறுப்புகளை வழங்கி விட்டு, ஒதுங்க கூடாது. மக்களால் தெரிவு செய்யப்பட்ட யாழ் மாவட்ட எம்பிக்களுக்கு மக்களின் பாதுகாப்பு தொடர்பில் பொறுப்பும், அதிகாரமும் உண்டு. இளம் தலைமுறையினர், இசையை கேட்க, நட்சத்திரங்களை பக்கத்தில் போய் பார்க்கத்தான் ஓடி வந்தார்கள். அதற்குள் போதையில் சிலர் இருந்திருக்கலாம். இப்படியான ஒரு தரப்பு இளையோர் எங்கும் உள்ளார்கள். கொழும்பிலும், சென்னையிலும், லண்டனிலும், சிக்காகோவிலும் உள்ளார்கள். முற்றவெளியில், ஒலி அமைப்பு அரங்கத்தின் மீது இளையோர் ஏறி நின்றார்கள். பாரம் தாங்காமல் அந்த அரங்கு உடைந்து போயிருந்தால், பெரும் உயிர் சேதம் ஏற்பட்டு இருக்கலாம். இன்று, கொழும்பில் இந்நிகழ்வுகள் நடக்கின்றன. தொடர்ந்தும் நடக்கும். யாரும் வந்து முறைப்படி பார்க்கலாம். அதற்கான கட்டமைப்புகள் இங்கே இருக்கின்றன. கொழும்பை போன்று, யாழில் உள்ளக, வெளியக அரங்க கட்டமைப்புகள் இல்லை. கொழும்பிலும், சுகததாச உள்ளக அரங்கில் அதிகபட்சம் ஐயாயிரம் பேர் கூடலாம். இலட்சக்கணக்கில் கூட உள்ளக அரங்கு சரிவராது. வெளியக விளையாட்டரங்குதான் சரி. யாழில் கலாச்சார மண்டபத்தை ரூ. 200 கோடி அளவில் முதலிட்டு கட்டிக்கொடுத்த இந்திய அரசுக்கு அப்போது, இந்த முற்றவெளியை, கொழும்பு சுகததாச அரங்கம் மாதிரி கட்டிக்கொடுங்கள் என யாழ் மாவட்ட ஒருங்கிணைப்பு குழுவில் யோசனை முன்வைத்து கூறி இருக்கலாம். இனியாவது, வெளிநாட்டு அரசுகளோ, புலம்பெயர்ந்த தமிழர் அமைப்புகளோ, இதை செய்யலாம். உள்நாட்டில் அடுத்த பல வருடங்களுக்கு பணம் இல்லை. அடுத்து, “இது போர் நிகழ்ந்த பூமி, துன்பம் நிறைந்த பூமி, இங்கே ஆடல், பாடல், கச்சேரி வேண்டாம். அப்படியே, இருந்தாலும் அவை உரிமை கோஷங்களாக மட்டுமே இருக்க வேண்டும்” என்று கூறும் கருத்தும் சமாந்திரமாக இழையோடுகிறது. இது ஒரு தமிழ் தேசிய அரசியல் நிலைப்பாடு. இதை மறைக்க முடியாது. அப்படி இல்லை என்று கூறவும் முடியாது. ஆகவே, இது தொடர்பிலும், அரசியல்வாதிகள், சிவில் சமூகத்தினர் இடையே கலந்துரையாடல் நடக்க வேண்டும். ஒட்டுமொத்தமாக மக்களின் நிலைப்பாடு இதுவாகத்தான் இருக்குமானால், விடை சுலபமானது. யாழ்ப்பாணத்தில் இனிமேல் தமிழக சினிமா கலைஞர்களை கொண்டு இத்தகைய ஆடல், பாடல், இசை நிகழ்ச்சிகளை நடத்தாமல் விடலாம். https://www.madawalaenews.com/2024/02/i_22.html
  4. சுமந்திரன் இல்லை எவர் வந்தாலும் இங்குள்ள மக்களுக்கு விடிவு இல்லை
  5. டார்வினின் கூர்ப்புக் கோட்பாட்டைக் கற்காமல், புரியாமல் உயிரியல் துறையில் மேற்கொண்டு எதைப் படித்தாலும் சான்றிதழை வைத்து முதுகு சொறியலாம், அதை விட வேறெதுவும் உருப்படியாக உருவாக்க முடியாது. மேற்கு நாடுகளில் "படைப்புக் கொள்கை- creationism" என்பதை பாடத்திட்டத்தில் புகுத்த வலது சாரி கிறிஸ்தவர்கள் முயல்வது போலவே, இந்தியாவில் புராணங்களைப் போலி விஞ்ஞானமாகப் புகுத்த மோடி அணி முயல்கிறது என நினைக்கிறேன். இதன் முதல் படி தான் கூர்ப்பை அகற்றியமை. இனி "கௌவரவர்கள் தான் IVF இனைக் கண்டு பிடித்தார்கள்" என்ற ஜோக்கை பாடத்தில் இணைத்து விடுவார்கள் என நினைக்கிறேன்😂.
  6. இந்த NCERT எத்தனையாம் வகுப்பினைக் குறிக்கிறது? ஆனாலும் டார்வினின் பரிமாணக் கோட்பாட்டை பாடப்புத்தகங்களிலிருந்து நீக்கியதற்கான உண்மைக் காரணம் பாடச்சுமையென நான் நினைக்கவில்லை
  7. சட்டம் ஒரு கோழை ......ஆமையைப்போல்தான் நகரும்.......அப்பவும் அடிக்கடி தலையை ஓட்டுக்குள் இழுத்துக் கொள்ளும்......" ஏன் ஜட்ஜ் ஐயா, அந்த நிரூபணமான இரண்டு கொலை வழக்குகளுக்கு முதல்ல சரியான தண்டனையைக் குடுங்க.......பிறகு வரும் குற்றங்கள் நிரூபணமானால் அந்தத் தண்டனைகளையும் குடுங்கள் .......குற்றவாளி இறந்திருந்தாலும் பிரச்சினை இல்லை" .......பல வழக்குகளில் ஒருத்தர் செய்த குற்றங்களைப் பிரித்து பிரித்து 150 வருடங்களுக்கு மேல் தண்டனை கொடுக்கிறார்கள்......அதெல்லாம் சட்டப்படி செய்யும் ஏமாற்று வேலை என்று குடுக்கிறவருக்கும் தெரியும், வாங்கிறவருக்கும் தெரியும்.......பார்க்கிற மக்களுக்கும் தெரியும்.......! 😴
  8. இப்போது ஒவ்வொருவரும் பதவி ஆசையில் ஓடிக்கொண்டிருக்கிறார்கள். எப்படி பாராளுமன்ற கதிரையில் அமர்ந்து சுகம் காணலாம் என்று திரிகிறார்களே ஒழிய வேறு ஒன்றுமில்லை. சுமந்திரன் விலகினால் தீரும் என்றால் சுமந்திரன் வருவதட்கு முன்னர் ஏன் தீர்க்கப்படவில்லை. இதெல்லாம் நொண்டி சாட்டுக்கள். ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு நிகழ்ச்சி நிரல்கள் இருக்கின்றன. அதன்படி இயங்குகிறார்கள். பணம், பணம், பணம்.
  9. இந்த நிகழ்ச்சியை காணொளியாக எடுப்பதற்கு விஜய் தொலைக்காட்சிக்கு மட்டுமே அனமதி கொடுக்கப்பட்டுள்ளதாக அறிகிறோம். அதற்குப் பெருந் தொகைப் பணத்தை ஏற்பாட்டாளர்கள் வாங்கியிருப்பார்கய். அதனால்தான் முதலில் இலவல நிகழ்ச்சி என்று சொல்லிவிட்டு விஐபிக்களுக்கென்று கட்டணம் வ~லித்தார்கள். இலவச பார்வையாளர்களுக்கும் கட்டணப்பார்வையாளர்களுக்கும் இடையே பெரிய இடைவெளி விட்டு தடுப்புச் சுவர் அமைத்து அதற்கப் அப்பால் இலவச பார்வையாளர்களை நிறுத்து வைத்தார்கள்.அகன்ற தொலைக்காட்சித்திரைகளை ஏமாற்றுவதற்காக வைத்து விட்டு தரம் குறைந்த முசறயில் ஒளிபரப்பியதத மட்டுமன்றி தரமற்ற ஒலிபரப்பையும் வேண்டுமென்றே செய்தார்கள். அப்படி செய்தால்தான் பின்பு விஜய் தொலைக்காட்சியின் ஒளிபரப்பு வியாபாரம் களைகட்டும். அல்லது அதற்கு அனுசரணையாளர்கள் ஆதரவுகொடுக்க மாட்டார்கள். மக்களும் பார்க்க மாட்டார்கள்.தொலைக்காட்சியின் ரிஆர்பி ரேட்டும் ஏறாது.ஆனால் சிறந்த ஒலிஒளித்தொகுப்புடன் முற்றிலும் இலவசமாக நடந்த சந்தோஷ்நாரயணனின் இசை நிகழi;ச்சி எந்தக் குழப்பமும் இல்லாமல் இதே நடத்தில் நடந்து முடிந்திருக்கிறது. மக்களும் எந்தப் பிரச்சினையம் இல்லாமல்கண்டு களித்திருந்தார்கள்.மக்களை ஏமாற்ற ஏற்பாட்டாளர்கள் எடுத்த முயற்சி தோல்வியில் முடிந்திருக்கிறது. பழியாழ்ப்பாண மக்களின் மேல் சுமத்தப்பட்டிருக்கிறது.
  10. இசை நிகழ்ச்சிகளில் குழப்பம் வருவது யாழ்ப்பாணத்தில் மட்டும் நடக்கிற விடயம் அல்ல. மேற்கத்தைய நாடுகளிலில் நடந்த இசை நிகழ்ச்சிகயிலும் குழப்பங்கள் நடந்திருக்கின்றன. அத்தி பீத்தாற் பொல் அரிதாக நடக்கும் நிகழ்வு ஆகையால் மக்கள் ஆர்வத்துடன் ஏராளமானவர்கள் வந்திருந்தார்கள். நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் சரியாகக் கையாளவில்லை.மக்கள் மகிழ்ச்சியான பொழுதைக் கழிக்கத்தான் வந்திருந்தார்கள். அவர்களில் முகங்களில் அது தெரிகிறது. இன்று தமன்னாலவப் பார்க்க வந்த கூட்டம் நாளை தமிழர் உரிமை விடயத்தை மறந்து விடும் என்று நம்புவது பேதமை. தமிழகத்தில் ஏஆர் ரஹ்மான் நிகழ்சியிலும் குழப்பம் ஏற்பட்டது . அதற்கு ர1;மான் கற்றம் சொல்லப்பட்டது. ஆனால் யாழ்ப்பாணத்தில் நடந்த குழப்பத்திற்கு யாழ்ப்பாண மக்களை காவாலிகள் என்று சொல்லி அந்த மக்கள் மீது குற்றம் சுமத்தப்படுகிறதுஇ அது சரி அண்மைக்காலமாக அடிக்கடி இந்தியக் கலைஞர்களின் நிகழ்ச்சிகள் யாழ்ப்பாணத்தில் நடைபெறுவதற்கு என்ன காரணம். அந்த மக்களின் தமிழுணர்வை விடுதலை உணர்வை கொஞ்சமாக மழுங்கடிக்கும் முயற்சியா?
  11. யாழ்பாணத்தில் எதிர்காலத்தில் இசை நிகழ்ச்சிகள் நடைபெறும் போது குழப்பம் ஏற்படாமல் இருப்பதற்காக பாடுபவர்கள் மற்றும் நடிகைகளை நெருங்கி இருந்து பார்ப்பதற்கு வசதியாக கனம் பொருந்திய காவாலிகள் எல்லோருக்கும் முதல் வரிசையில் இலவசமாக இருக்கை வசதிகள் ஒதுக்கபட வேண்டும் என்று வலவன், புத்தன் அண்ணா தலைமையிலான புலம்பெயர் ஈழதமிழர் குழு ஒன்று முடிவு எடுத்துள்ளதாக செய்திகள் கசிய தொடங்கி உள்ளது.
  12. 6 17.12.2023இல் இல்ஸ்ஹொபன் கிராமத்தில் தோல்வியில் முடிந்த கொள்ளைக்குப் பின்னர், பொலிஸார் தேடிய காரைப் பற்றிய தகவல்களையும் அவர்களால் திரட்ட முடியாமல் இருந்தது. போக்குவரத்துப் பொலிஸாரின் கண்களில் கூட அந்தக் கார் படாமல் எங்கேயோ ஒழித்திருந்தது. வழக்கம் போல் அன்றும், போக்குவரத்துப் பணியில் இருந்தாள் லூயிஸா(21). காரின் வலது பக்கத்தில் அவள் அமர்ந்திருந்தாள். அவளது வேலைத் தோழன் காரை ஓட்டிக் கொண்டிருந்தான். அவர்களது கார் ஹாகன்பாகர் றிங் என்ற இடத்தில் பயணித்துக் கொண்டிருந்தது. இங்குதான் எல்பிரிடே கூகெர் 2020இலும் ஹைடமேரி, எடித்லாங் ஆகிய இருவரும் 2022இலும் கொல்லப்பட்டிருந்தார்கள். “ஒருவேளை அன்று இல்ஸ்கொபனில், முதியவரின் மனைவி இல்லாமல் இருந்திருந்தால், அந்த முதியவரையும் அவன் கொன்றிருக்கலாம்” “இருக்கலாம். ஆனால் கொலையாளி தனியாக இருக்கும் முதுமை அடைந்த பெண்களைத்தானே குறி வைக்கிறான். ஒருவேளை இவன் கொள்ளையடிக்க மட்டும் வந்தவனாக இருக்கும் கொலையாளி வேறு ஒருத்தனாகவும் இருக்கலாம்” திடீரென லூயிஸா, “ நிறுத்து நிறுத்து. காரை நிறுத்து” என்று சென்னாள். “ஏன்? என்ன பிரச்சினை?” “அதிலே ஒரு சில்வர் கலரிலே VW கார் பார்க் பண்ணியிருந்தது. ஒருவேளை நாங்கள் தேடுற காராகக் கூட இருக்கலாம். வா பாத்திட்டு வருவம்” அந்த சில்வர் கலர் காருக்கு முன்னால் லூயிஸாவும் அவளது சக தோழனும் நின்றார்கள். இலக்கத் தகட்டில் பொதிகளை ஒட்டும் நாடாவால் ஒட்டிய தடயங்கள், VW station wagon, Silver நிறம் என அவர்கள் தேடும் காரின் அடையாளங்கள் அத்தனையும் பொருந்தி இருந்தன. ஆனால் காரின் இலக்கத் தகடு மட்டும் இல்லை. பொதுவாக இலக்கத் தகடு இல்லாத கார்களை வீதிகளின் ஓரத்தில் நிறுத்தி வைக்க முடியாது. அத்துடன் இலக்கத் தகடு இல்லாவிட்டால் அது பதிவில் இல்லை என்பது மட்டுமல்ல பயணிக்கவும் முடியாது. கார் பூட்டி இருந்தது. கார் கண்ணாடியூடாக உள்ளை பார்த்தார்கள். ‘ரெட் புள்’ குடிபான ரின்கள், பொதிகளை ஒட்டும் நாடாக்கள் என்பன காருக்குள் இருந்தன. ஆக, கார் பாவனையில் இருக்க வாய்ப்பு இருக்கிறது என்று இருவரும் தீர்மானித்துக் கொண்டார்கள். அவர்களால் காரின் போனற்றைத் திறக்க முடிந்தது. இயந்திரத்தின் இலக்கத்தை எழுதிக் கொண்டு தங்கள் காருக்குத் திரும்பினார்கள். காரில் அமர்ந்து கொண்டே, தங்கள் வேலைத் தோழனைத் தொடர்பு கொண்டார்கள். “கார் எஞ்சின் ஒன்றின்ரை நம்பர் அனுப்பிறன். அதைப் பற்றி தகவல் வேணும்” தகவல் உடனேயே வந்தது, “அந்தக் கார் இப்ப பதிவிலை இல்லை” “கடைசிப் பதிவு ஆரின்ரை பேரிலை இருந்தது?” “அது… ஹூஸைன் என்றவரின்ரை பேரிலைதான் கடைசியா இருந்திருக்கு. ஆளின்ரை இடம் ஒப்பன் வைலர்” “இந்த விபரத்தை மேலதிகாரிக்குச் சொல்லிவிடு” ஒப்பன் வைலர் ஸ்வேபிஸ் ஹால் நகரில் இருந்து பதினைந்து கிலோ மீற்றர் தூரத்தில் இருக்கிறது. திடீரென பொலிஸாரைக் கண்டதும் ஹூஸைனுக்கு அதிர்ச்சியாக இருந்தது. சம்பிராதய கேள்விகளுக்குப் பிறகு, “VW station wagon, கார் எங்கே?” அந்தக் காரைப் பற்றிக் கேட்ட போது, ஹூஸைனின் முகம் இன்னும் வெளிறியது. “வித்துப் போட்டன்” “யாருக்கு வித்தனீ?” ஹூஸைனின் தலை மெதுவாக நிலத்தை நோக்கி குனிய ஆரம்பித்தது. “ சரி கார் விற்ற ஒப்பந்தத்தைக் காட்டு” “கார் விக்குற போது ஒப்பந்தம் ஒண்டும் போட இல்லை” “அதெப்படி ஒப்பந்தம் இல்லாமல் கார் கை மாறிச்சு?” “வாங்கினவர் அதை, தான் பதிவு செய்யிறன் எண்டு சொன்னவர்” “ஓ, அப்பிடியோ? சரி என்ன விலைக்கு வித்தனீ?” “350 யூரோக்களுக்கு” பொலிஸாரின் கேள்விகளுக்குப் பதில் சொல்ல முடியாமல் ஹூஸைன் தடுமாறிக் கொண்டிருந்தான். பொலிஸார் அங்கிருந்தே “நாங்கள் குற்றவாளியை அடையாளம் கண்டு விட்டோம்” என்று தங்கள் தலைமை அதிகாரிக்கு அறிவித்தார்கள், 01.02.2023 புதன்கிழமை. அதற்கு முதல் நாள் செவ்வாய்க் கிழமை காலையில் டானியலின் மனைவி, குழந்தைகளின் அறையை விட்டு வெளியே வந்த போது அதிர்ந்து விட்டாள். அவள் முன்னால் ஆயுதத்துடன் ஒருவன் நின்று கொண்டிருந்தான்
  13. அடிதடியில் அரிகரன் நிகழ்ச்சி! ***************************************** *இது முள்ளிவாய்க்காலில் கஞ்சி வாங்க நின்ற கூட்டமல்ல!, *முத்த வெளியில் கரிகரனைப் பார்க்க வந்த கூட்டம்.! கரிசனையில்லாத கூட்டம்.! *எங்கே போகிறது எம் சமுதாயம்? - இதிலே யாருக்கு இங்கு ஆதாயம்? *எப்போ ஆறியது இன அழிப்பின் காயங்கள்? இப்போ வெளுத்து விட்டது பலரின்… சாயங்கள்! *தமிழனைப் பார்த்தால் முப்பது ரூபா கூடக் கொடுக்காதவன், தமண்ணாவைப் பார்க்க முப்பதாயிரத்துடன் நிற்கிறான்….. *நட்புகளுக்குக் கூட கை கொடுக்காதவன், நடிகர்களுக்கு கை கொடுக்க மேடை ஏறுகிறான்! *ஆணும் பெண்ணும் என அத்தனை பேரும் கம்பத்தில்! அறுந்து விழுந்தால்…. அனைவரும் இருப்பார் நரகத்தில்..! *அப்படி இதிலென்ன மோகம்?... ஆருக்கு இதில் உண்டு லாபம்...? அங்கே, *கஞ்சப்பயல் எல்லாம், இலவசம் என்று வந்து,….. காசு கட்டியதுதான்….. கண்றாவியின் உச்சம்! *கஞ்சா அடித்தவனெல்லாம் களியாட்டம் என்று வந்து கால் கடுக்க நின்றதுதான் மிச்சம்.! “பனங்காட்டான்” என்றாலும் படித்தவன், பண்பாடு ஆனவன் என்ற பெயர் (எமக்கு) இருந்ததுண்டு! இன்று…. *படம் காட்டுபவர்கள் பின் ஓடிப் பெற்ற பெயர் “பட்டிக்காட்டான்!” -வெறும் “வெட்டிக்” காட்டான்.! *நடிப்பவர்களைச் சுமப்பது என்பது நமக்கெல்லாம் அவமானம்…! நாம் கேரளாவைப் பார்த்து அறிய வேண்டியது…. ஏராளம்…! *வெளிநாட்டுக் காசு இங்கு வெகுவாக இருக்குதென்று- பலருக்கு இங்கே கண்! .. - இதனால் பாழாய்ப் போகுது எமது மண்…! *இனியாவது, அனுப்புவதை நிறுத்துங்கள்! அலுப்பானவனை உழைக்க விடுங்கள்! *முடிவில், அடிதடியில் முடிந்திருக்கிறது அரிதரனின் நிகழ்ச்சி..! அவமானப் பட்டதில் அடமானம் போனது மகிழ்ச்சி?...... *கத்தலும், கதிரை எறிதலும் கலவரமும் என, காணொளிகளில் பல காட்சி! *நல்ல தலைவன் இல்லாததற்கு இவை எல்லாம் சாட்சி! *வடக்கிலும் சரி, கிழக்கிலும் சரி வலிகள் சுமந்த மக்களுக்கு வாழ்வு தருவது வேலை வாய்ப்புகள்தான்! *இவர்கள் செய்யும் வேலையெல்லாம் வெறும் ஏய்ப்புக்கள்தான்.! *கல்வி எம்நாட்டில் முக்கியம்தான்.. மறுப்பவரும் இல்லை! வெறுப்பவரும் இல்லை! *கட்டிக் கொடுங்கள் கல்லூரிகளை! கண்டிப்பவர்கூட எவரும் இல்லை..! *அதைவிட, முதலில் கற்பவனைத் தயார்படுத்துங்கள்! காலித் தனத்தைக் கட்டுப்படுத்துங்கள்! *கஞ்சா அடிப்பவன் கற்றுத் தெளிவானா? கஞ்சிக்கு வழியிலாதவன் கல்லூரிக்கு வருவானா? *கடைசியில் கிடைத்த நீதி……., *மக்களுக்குச் செய்ய ஆயிரம் உண்டு! மனம் வைத்தால் திருத்த வழிகளும் உண்டு! *காயப்பட்டவனுக்கு நாட்டில், கலைநிகழ்ச்சிகள் தேவையில்லை! வீட்டில், உலை எரிந்தாலே போதும்…! February 9, 2024 - எனது நீண்டகால நண்பரும் அயலவரும் எழுதிய கவிதை. மிகவும் தெளிவாக உள்ளத்தை தொட்டும் எழுதியுள்ளார்.
  14. அக்காவின் அக்கறை அன்பாய் என்னை அருகிலிருத்தி வலிக்காமல் தலைவாரி வகிடெடுத்த பின்னாலே சித்திரமாய் திலகமிட்டுடுவாள் தந்தையே தடியெடுத்திடினும் தானோடி வந்து தாவியெடுத்தென்னை தன்னோடணைத்து தான் அடிவாங்கி என்துயர் போக்கிடுவாள் முழுபாவாடையை முன் இடுப்பில் சொருகி எட்டுக்கால் கோட்டில் எம்பி எம்பி ஆடுகையில் பின் எல்லோரையும் தள்ளி விட்டு எஞ்ஞான்றும் அவளே ஜெயித்திடுவாள் கபடி விளையாடுகையில் கிளிபோலப் பறந்து பறந்து காலாலே கலங்கடித்து காளையரையும் விரட்டிடுவாள் எதிர் வீட்டு முகுந்தனிடம் மட்டும் எப்போதும் சண்டையும் சச்சரவும் கேலிசெய்து கொண்டு அவன் ஓட ஓட கோலிகுண்டால் எறிந்து கொண்டு பின்னாலே ஓடுவாள் முற்றத்து மாமரத்தில் கொக்கத்டியெடுத்து முற்றிய மாங்காய்களை நான் பறிக்கையில் முன்னால் வந்த அக்காளும் தடியெடுத்து தனக்கும் ரெண்டு பிஞ்சு பறித்துக்கொண்டாள் அக்காளும் முன்போல் இல்லை குறும்புத்தனமும் குறைஞ்சு போச்சு தடியெடுத்த தந்தையும் "யாரடி அவன்" என்று தளராமல் அடிக்கின்றார் அக்காளை அன்று என்னைப் பொத்திக் காத்தவளை அருகில் நெருங்கவும் என்னால் முடியவில்லை குறுக்கேவந்த அம்மாவுக்கும் குறைவின்றி அடிவிழுது வாடிய மலர்க்குவியலாய் மண்ணில் புரளும் அக்காள் படலையை தள்ளியே பதற்றமாய் வந்தாள் மாமி தந்தையிடம் தடியைப் பிடுங்கி எறிந்தாள் உன்ர பிள்ளையை நீ அடி அல்லது கொல் -ஆனால் என்ர வாரிசை வம்சத்தை அழிக்க உனக்கேது உரிமை விக்கித்து நின்ற அப்பாவை விலக்கிவிட்டு -அக்காளை அணைத்தெடுக்கையில் அருகே வருகின்றான் முகுந்தனும் இரு இறக்கைக்குள் குஞ்சுபோல் கூடவே அக்காள் செல்ல அம்மாவின் முகத்தில் நிம்மதி, அண்ணாந்து ஆகாசம் பார்க்கிறாள்......! ஆக்கம் சுவி ......! யாழ் அகவை 26 க்காக ........!
  15. அழகானது மட்டுமல்ல அமைதியையும் பழமையையும் பேணிக் காக்கும் ஒரு நகரம்தான், யேர்மனியில் இருக்கும் ஸ்வேபிஸ் ஹால் நகரம். இரண்டாம் உலகப் போரில் குண்டுகளுக்குத் தப்பியது மட்டுமல்லாமல் போர் நடந்து கொண்டிருந்த போது யேர்மனியின் பல நகரங்களுக்கு உணவுகளை வழங்கிய பெருமையையும் இந்த நகரம் தனக்குச் சேர்த்துக் கொண்டுள்ளது.. கோடை என்றில்லை குளிர் காலங்களிலும் பல சுற்றுலாப் பயணிகள் இந்த நகரத்துக்கு வந்து போவார்கள். இரவு நேரத்தில் தேவாலயப் படிக்கட்டுகளில் நடக்கும் நாடகங்களைப் பார்ப்பதற்கு என்றே வெளி நகரங்களில் இருந்து பலர் வருவார்கள். எனக்கு, ஸ்வேபிஸ்ஹால் நகரம் பிடித்துப் போனதால்தான், ஏறக்குறைய நாற்பது ஆண்டுகளாக நான் இந்த நகரத்திலேயே வாழ்கிறேன். இது எனது தாயகத்தில் நான் வாழ்ந்ததை விட அதிகமான வருடங்கள். சரி விடயத்துக்கு வருகிறேன். சனிக்கிழமைகளில் வரும் பத்திரிகையில்தான் அதிகமான விளம்பரங்கள் வருகின்றன. வீடு விற்பனைகள், வேலை வாய்ப்புகள், வர்த்தக விளம்பரங்கள், மரண அறிவித்தல்கள் என்று ஏகப்பட்டவை அடங்கி சனிக்கிழமைப் பத்திரிகை ஊதிப் பெருத்துப் போய் இருக்கும். 17.12.2022 அன்று வந்த பத்திரிகையிலும், வழமைபோலவே எல்லா விடயங்களும் இருந்தன. அதில், மரண அறிவித்தல்கள் பகுதியில் எடித் லாங் (86), 14.12.2022, புதன்கிழமை காலமாகிவிட்டதாகவும் அவரது உடல் 19.12.2022 அன்று தகனம் செய்ய இருப்பதாகவும் தகவல் இருந்தது. என்னைப் போலவே, எடித் லாங்கினைத் தெரியாதவர்கள் அந்த அறிவித்தலைக் கடந்து போயிருப்பார்கள். ஆனால் எடித் லாங்கின் மரணம் ஒரு கிழமை கழித்து செய்தி ஒன்றைச் சொல்லக் காத்திருந்தது. எடித் லாங்கின் வீட்டில் இருந்து 315 மீற்றர் தூரத்தில் வசித்த இன்னும் ஒரு மூதாட்டி, எடித் லாங்கின் இறப்புக்குப் பின் ஒரு கிழமை கழித்து 21.12.2022,புதன் கிழமை அன்று இறந்து போனார். ஒரு கிழமை இடைவெளியில் அதுவும் சொல்லி வைத்தது போல் புதன்கிழமையில் அருகருகே வசித்த இரு மூதாட்டிகளுக்கு மரணம் சம்பவித்திருந்தது பலருக்கு ஆச்சரியமாக இருந்தது. விசாரணைகளின் பின்னர், எடித் லாங்கின் மரணம், அவர் தரையில் தவறி விழுந்ததால் ஏற்பட்டது என அறிவிக்கப் பட்டிருந்தது. ஆனால் மற்றைய மரணம் ஒரு கொலை என்று அறிவிக்கப்பட்டது. நகரில் சந்தைக்கு வந்தவர்கள், வீதிகளில் சந்தித்துக் கொண்டவர்கள் என எல்லோர் வாய்களும் இந்த மரணங்களைப் பற்றிப் பேசிக் கொண்டன. “ஒருவேளை எடித் லாங்கின் மரணமும் கொலையாக இருக்குமோ?” என்ற சந்தேகம் மெதுவாக எழுந்தது. அதில் உண்மையும் இருந்தது. அமைதியாயிருந்த ஸ்வேபிஸ் ஹால் நகரம் மெது மெதுவாக அதை இழந்து கொண்டிருந்தது. அடுத்தடுத்து இரண்டு மரணங்கள். அதில் ஒன்று விபத்து, மற்றது கொலை, அதுவும் இரண்டும் சிறிய இடைவெளிகளில் உள்ள வீடுகளில் நடந்ததுள்ளன. இதையிட்டு ஸ்வேபிஸ் ஹால் நகரம் வெலவெலத்துப் போயிருந்த நேரத்தில், 25.01.2023 அன்று, அட அதுவும் கூட ஒரு புதன் கிழமைதான், நகரத்தில் இருந்து ஐந்து கிலோ மீற்றர் தூரத்தில் இருந்த மிஹேல்பாக் என்ற கிராமத்தில் 89 வயதான இன்னுமொரு மூதாட்டி, இறந்து போனார். 'அவரது இறப்பும் கொலைதான்' என விசாரணைகளை முடித்த பொலிஸ் உயர் அதிகாரி அறிவித்தார். யேர்மனியின் ஒரு ஓரமாக அமைதியாக இருந்த ஸ்வேபிஸ் ஹால் நகரம், அரச, தனியார் வானொலிகளில்,தொலைக்காட்சிகளில். இணையத் தளங்களில், சமூக வலைத்தளங்களில்... என்று எல்லாவற்றிலும் அடிபட்டுக் கொண்டிருந்தது. கொலைச் செய்திகளை வாங்கி, வெளி நாடுகளிலும் தங்கள் தங்கள் மொழிகளில் ஊடகங்களில் வெளியிடத் தொடங்கினார்கள். பொன் கிடைத்தாலும் புதன் கிடைக்காது என்பார்கள். ஸ்வேபிஸ் ஹால் நகரத்தில் புதன் வந்தாலே நடுக்கம் வர ஆரம்பித்திருந்தது. வயோதிபம் வந்தாலே நடுக்கம் தானாக வந்து விடும். புதன் வந்தாலே ஸ்வேபிஸ் ஹாலில் முதியவர்கள் இன்னும் நடுங்க ஆரம்பித்து விட்டார்கள். இந்த நேரத்தில் இன்னொரு கொலையும் எல்லோர் கவனத்துக்கும் வந்தது. ஏற்கெனவே திகிலாகப் பேசப்பட்ட அந்தக் கொலை 2020 இல் நடந்தது. எல்பிரிடே கூகெர் என்பவர் ஸ்வேபிஸ் ஹால் நகரத்தில் தனிமையில் வசித்து வந்தவர். அவர் பியர் தயாரிக்கும் ஒரு நிறுவனத்துக்குச் சொந்தக்காரி. பெரும் செல்வந்தரான அவர் கொலை செய்யப்பட்டிருந்ததும் ஒரு புதன் கிழமைதான். ‘புதன் கிழமைகள் கொலையாளிக்குப் பிடித்த நாள் போல’ என்று பத்திரிகையும் ஒரு குண்டைத் தூக்கிப் போட எழுபதுக்கு மேலே உள்ளவர்கள், அடுத்த புதன் “ நீயா?, நானா? எதுக்கும் வியாழக்கிழமை இருந்தால் பார்ப்போம்” எனப் பேச ஆரம்பித்தார்கள். “கொரோனா வந்து கனக்க வயது வந்தவர்களை அள்ளிக் கொண்டு போயிட்டுது. இப்ப கொலையாளி ஒருத்தன் வந்திருக்கிறான். பொலிஸ் என்னதான் செய்து கொண்டிருக்கு?” என மக்களிடம் இருந்து முணு முணுப்பு வர ஆரம்பித்தது. “தனி ஒரு கொலையாளியா? அல்லது ஒரு குழுவா? கொலைக்கான காரணம் என்ன? இறந்து போன மூவர்களிடம் பெரியளவில் பணம் இருக்கவில்லை. ஒருவேளை பணம் இருக்கிறது என்று போய், எதுவும் கிடைக்காது ஏமாந்து போனதால், கொள்ளையடிக்க வந்தவன்/ வந்தவர்கள் கொலைகளைச் செய்தானா/செய்தார்களா? உறவுகளுக்குள் சொத்துப் பிரச்சினை ஏதாவது இருந்து அதனால் கொலைகள் நடந்திருக்குமா? வெவ்வேறு காரணங்களுக்காக நடத்தப்பட்ட கொலைகளை ஒன்றாக ஒரு புள்ளியில் இணைத்துப் பார்க்கிறோமா?” என்று பலவிதமான சந்தேகங்களும் ஊகங்களும் எழுந்தன. பொலிஸாரால் ஒரு முடிவுக்கு வரமுடியவில்லை. திணறினார்கள்..
  16. மாவை சேனாதிராஜாவின் பொறுக்க முடியாத சுயநலம் February 11, 2024 — டி.பி.எஸ்.ஜெயராஜ் — கடந்த பத்து வருடங்களாக இலங்கை தமிழரசு கட்சியின் தலைவர் பதவியை வகித்துவந்த மாவை சேனாதிராஜா ஜனவரி 21 திருகோணமலை நகர மண்டபத்தில் கட்சியின் பொதுச்சபை உறுப்பினர்கள் மத்தியில் நடத்தப்பட்ட இரகசிய வாக்கெடுப்பில் யாழ்ப்பாண மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன் புதிய தலைவராக தெரிவுசெய்யப்பட்ட பின்னரும் நிலைவரம் எல்லாம் ஏதோ பழைய மாதிரியே இருப்பது போன்ற நினைப்பில் இருக்கிறார். கௌரவமான முறையில் பதவியில் இருந்து இறங்காமல் அவர் தொடர்ந்தும் தொங்கிக்கொண்டிருக்கிறார். தமிழரசு கட்சி 2022 ஆம் ஆண்டு வரை தமிழ் தேசிய கூட்டமைப்பின் பிரதான அங்கத்துவக் கட்சியாக இருந்தது. வட மாகாணத்திலும் கிழக்கு மாகாணத்திலும் உள்ள சகல ஐந்து மாவட்டங்களிலும் பாராளுமன்றப் பிரதிநிதித்துவத்தைக் கொண்டிருக்கும் ஒரேயொரு தமிழ்க் கட்சியாக தமிழரசு கட்சியே விளங்குகிறது. ‘சமத்துவமான கட்சிகளில் முதலாவது ‘ என்ற அந்தஸ்தை அனுபவித்துவந்த போதிலும், அந்த கட்சி அண்மைக்காலமாக நகைப்புக்கிடமானதாக மாறிவிட்டது. இந்த நிலைக்கு சேனாதிராஜாவின் சுயநல நடத்தை பெருமளவுக்கு பங்களிப்புச் செய்திருக்கிறது. மாவை சேனாதிராஜா மொத்தமாக ஒரு ஐந்து வருடங்கள் பாராளுமன்றத்தில் தேசியப்பட்டியல் உறுப்பினராக அங்கம் வகித்தார். பிறகு 20 பொதுத்தேர்தல்களில் போட்டியிட்டு தெரிவாகி 20 வருடங்களாக யாழ்ப்பாண மாவட்ட பாராளுமன்ற உறுப்பினராக இருந்தார். அவர் மொத்தமாக 25 வருடங்களாக பாராளுமன்றத்தில் அங்கம் வகித்தார். 2014 தொடக்கம் 2024 வரை பத்து வருடங்களாக தமிழரசு கட்சியின் தலைவர் பதவியையும் அவர் வகித்தார். அதற்கு முதல் கட்சியின் பொதுச் செயலாளராகவும் செயற்பட்டார். தமிழரசு கட்சியின் தலைவர்கள் இரு பதவிக் காலங்களுக்கும் அதிகமாக பதவியில் தொடர்ந்து இருக்காத ஒரு பாரம்பரியம் கடைப்பிடிக்கப்படுகிறது. 2010 ஆம் ஆண்டில் தலைவராக வந்த முதுபெரும் தலைவர் இராஜவரோதயம் சம்பந்தன் இரு பதவிக்காலங்களுக்கு பிறகு 2014 ஆம் ஆண்டில் பதவியில் இருந்து இறங்கினார். அவர் தலைவராக இருந்த காலத்தில் கட்சியின் பொதுச் செயலாளராக இருந்த மாவை சேனாதிராஜா 2014 ஆம் ஆண்டு் தலைவரானார். இரு பதவிக்காலங்களுக்கு பிறகு 2018 ஆம் ஆண்டில் தலைவர் பதவியில் இருந்து அவர் இறங்குவார் என்று எதிர்பார்க்கப்பட்டபோதிலும், அவ்வாறு செய்யவில்லை. 2014 — 2024 காலப்பகுதியில் அவர் கட்சியின் தலைவர் பதவியில் தொடர்ந்தார். தமிழரசு கட்சியின் தலைவர் பதவியில் தொடர்ச்சியாக பத்து வருடங்களாக நீடித்த ஒரே அரசியல்வாதி மாவை சேனாதிராஜாவே ஆவார். கட்சியின் தாபகத் தலைவரான மதிப்புக்குரிய எஸ்.ஜே.வி. செல்வநாயகம் ( தந்தை செல்வா ) கூட அவ்வாறு பல வருடங்கள் தலைவராக இருந்ததில்லை. தமிழரசு கட்சியின் மகாநாடு : =================== சுமார் ஒரு தசாப்தகாலமாக “நல்ல வழியோ, கெட்ட வழியோ எப்படியாவது” மாவை தமிழரசு கட்சியின் தலைவராக இருந்துவிட்டார். புதிய ஒரு தலைவர் கட்சியின் பொது மகாநாட்டில் வைத்து பொதுச் சபையினாலும் மத்திய செயற்குழுவினாலும் தெரிவுசெய்யப்படுவதும் இரு வருடங்களுக்கு ஒரு முறை மகாநாடு நடத்தப்படுவதும் வழமை. ஆனால், 2014 மகாநாட்டில் மாவை சேனாதிராஜா தலைவராக தெரிவுசெய்யப்பட்ட பிறகு அடுத்த மகாநாடு 2019 ஆண்டில் மாத்திரமே நடத்தப்பட்டது. அந்த ஆண்டிலும் கட்சியின் தலைவராக மீண்டும் தெரிவான பிறகு இன்னொரு ஐந்து வருடங்களாக 2024 வரை அவரால் மகாநாட்டை ஒத்திவைக்கக்கூடியதாக இருந்தது. 2024 ஜனவரியில் மகாநாட்டை நடத்துவதற்கு திட்டமிடப்பட்டபோது தமிழரசு கட்சியின் தலைவர் பதவிக்கு உட்கட்சித் தேர்தல் ஒன்று நடக்கப்போகிறது என்பது தெளிவாகத் தெரிந்தது. தலைவரைத் தெரிவுசெய்வதற்கு தமிழரசு கட்சி தேர்தலைத் தவிர்த்து கருத்தொருமிப்பின் அடிப்படையிலான நடைமுறை ஒன்றே பாரம்பரியமாக கடைப்பிடிக்கப்பட்டுவந்த நிலையில் தலைவர் தெரிவுக்கு உட்கட்சி தேர்தல் ஒன்று நடத்தப்பட்டது இதுவே முதற்தடவை. போட்டித் தேர்தல் கட்சியைச் சிதறடித்துவிடும் என்ற அச்சம் கட்சி வட்டாரங்களில் நிலவியது. அந்த அச்சம் ஏற்றுக்கொள்ளக்கூடியதே. இந்த அச்சத்தை தனக்கு சாதகமாக பயன்படுத்துவதில் நாட்டம் காட்டிய மாவை சேனாதிராஜா இடைக்காலத் தலைவராக தானே பதவியில் தொடர்ந்துகொண்டு மகாநாட்டை காலவரையறையின்றி ஒத்திவைக்கலாம் என்று யோசனையை முன்வைத்தார். அவரின் அதிகாரத்தை முடிவுக்குக் கொண்டு வருவதற்கு பெரும்பாலான உறுப்பினர்கள் விரும்பியதால் அவரது யோசனையை ஏற்பதற்கு எவரும் இருக்கவில்லை. அதனால் தி்ட்டமிட்டபடி ஜனவரி 21 தமிழரசு தலைவர் தேர்தல் நடத்தப்பட்டது. இன்னொரு யாழ்ப்பாண மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரான மதியாபரணம் ஆபிரகாம் சுமந்திரனை சிவஞானம் சிறிதரன் 47 வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடித்து கட்சியின் புதிய தலைவராக தெரிவுசெய்யப்பட்டார். அதற்குப் பிறகு புதிய மத்திய செயற்குழுவும் கட்சியின் புதிய நிருவாக உறுப்பினர்களும் ஜனவரி 27 ஆம் திகதி தெரிவு செய்யப்படவிருந்தனர். மறுநாள் மகாநாட்டின் பொதுகூட்ட்டத்தில் பழைய தலைவர் சம்பிரதாயபூர்வமாக பதவியில் இருந்து இறங்கவும் புதிய தலைவர் பொறுப்பை ஏற்பதற்கும் ஏற்பாடாகியிருந்தது. பொதுச்செயலாளர் உட்பட புதிய நிருவாகிகளும் அன்னறயதினம் அறிமுகம் செய்யப்படவிருந்தனர். தமிழரசு கட்சியின் யாப்பின் பிரகாரம் மத்திய செயற்குழு புதிதாக அமைக்கப்பட்டவுடன் பழைய தலைவரின் பதவிக்காலம் முடிவுக்கு வருகிறது. தலைவராக தெரிவுசெய்யப்பட்டவர் தன்னியல்பாகவே புதிய தலைவராகிவிடுவார். அடுத்த நாள் மகாநாட்டில் முறைப்படி பதவிப்பொறுப்பைக் கையளிப்பது என்பது வெறுமனே அடையாளபூர்வமான ஒரு சம்பிரதாய நிகழ்வு மாத்திரமே. ஆனால், ஜனவரி 27 தமிழரசு கட்சிக்குள் குழப்பம் மூண்டது. ஆரம்பத்தில் சிறிதரன் சுமந்திரனுக்கு நேசக்கரம் நீட்டி இருவரும் சேர்ந்து பணியாற்றும் நிலை தோன்றியது. ஐம்பது உறுப்பினர்களைக் கொண்ட மத்திய செயற்குழு புதிதாக அமைக்கப்பட்டது. அடுத்து 2024 — 2026 காலப்பகுதிக்கான கட்சியின் புதிய நிருவாகிகள் பட்டியலும் இறுதிசெய்யப்பட்டது. பொதுச்செயலாளர் : ============= இந்த நிருவாகிகளில் முக்கியமான செயலாளர் பதவியும் அடங்குகிறது. 16 நிருவாக உறுப்பினர்கள் பட்டியலும் மத்திய செயற்குழுவினால் அங்கீகரிக்கப்பட்டது. அதைத் தொடர்ந்து அந்த பட்டியல் பொதுச்சபைக்கு ஒரு தீர்மானமாக முன்வைக்கப்பட்டது. புதிய தலைவர் சிறிதரனின் முன்மொழிவை குழு உறுப்பினரான பீட்டர் இளஞ்செழியன் வழிமொழிந்தார். அது ஏகமனதாக ஏற்றுக்கொள்ளப்பட்டது. அடுத்து சில கலந்தாலோசனைக்கு பிறகு பொதுச்சபையும் அதை அங்கீகரித்தது. தலைவர்,செயலாளர் என்ற முக்கிய பதவிகளை வடக்கையும் கிழக்கையும் சேர்ந்தவர்கள் பகிர்ந்துகொள்வது தமிழரசு கட்சியில் ஒரு நடைமுறையாகப் பின்பற்றுப்பட்டு வருகிறது. வட மகாணத்தைச் சேர்ந்தவர் தலைவராக இருந்தால் கிழக்கு மாகாணத்தைச் சேர்ந்தவர் செயலாளராக இருப்பார். கிழக்கு மாகாணத்தவர் தலைவராக இருந்தால் வட மாகாணத்தைச் சேர்ந்தவர் செயலாளராக இருப்பார். சிறிதரன் வடமாகாணத்தைச் சேர்ந்தவர் என்பதால் செயலாளர் கிழக்கு மாகாணத்தவராக இருக்கவேண்டும். சிறிதரனின் நெருங்கிய ஆதரவாளரான முன்னாள் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் ஞானமுத்து சிறீநேசன் செயலாளர் பதவி மீது கண்வைத்திருந்தார். ஆனால் அவருடன் சிறிதரன் பேசி திருகோணமலை மாவட்ட தமிழரசு கட்சி தலைவரான சண்முகம் குகதாசன் செயலாளராகுவதற்கு வழிவிட இணங்கவைத்தார். மதிய உணவுக்கு பிறகு கூட்டம் மீண்டும் தொடங்கியபோது மனமாற்றம் ஒன்று ஏற்பட்டுவிட்டது போன்று தெரிந்தது. தானே செயலாளராக வரவேண்டும் என்று தனது நலன் விரும்பிகள் விரும்புவதால் குகதாசனை செயலாளராக ஏற்றுக்கொள்ளமுடியாது என்று சிறீநேசன் கூறினார். சுமந்திரனின் ஆதரவாளராக குகதாசன் தவறாக கருதப்பட்டதால் சிறிதரனின் பல ஆதரவாளர்களும் அவரை கண்டனம் செய்ததுடன் செயலாளராக அவரை ஏற்றுக்கொள்ளப்போவதில்லை என்று கூறினர். பொதுச்செயலாளர் உட்பட முழு நிருவாகிகள் பட்டியலும் ஏற்கெனவே மத்திய செயற்குழுவினாலும் பொதுச்சபையினாலும் ஏற்றுக்கொள்ளப்பட்டிருந்ததனால் இப்போது அதை வாக்கெடுப்புக்கு விடுவதற்கு தீர்மானிக்கப்பட்டது. ‘தேர்தலை’ நடத்திவைக்குமாறு பதவி விலகும் தலைலர் சேனாதிராஜாவும் புதிய தலைவர் சிறிதரனும் சுமந்திரனைக் கேட்டு்க்கொண்டனர். பட்டியலை ஆதரிக்கிறார்களா அல்லது எதிர்க்கிறார்களா என்பதை பொதுச்சபை உறுப்பினர்கள் தங்கள் கைகளை உயர்த்தி வாக்களிப்பதன் மூலம் தெரிவிக்கலாம் என்று சுமந்திரன் கேட்டுக்கொண்டார். ‘ஆம்’ என்ற வாக்குகளும் ‘இல்லை’ என்ற வாக்குகளும் வரிசை வரிசையாக எண்ணப்பட்டன. சுமந்திரன் கைகளை எண்ணிக்கொண்டிருந்தபோது சிறிதரனின் உறுதியான ஆதரவாளரான நாவலனும் தனியாக கணக்கெடுத்தார். இருவரதும் எண்ணிக்கைகள் ஒன்றாகவே இருந்தன. சண்முகம் குகதாசன் : ===========•== செயலாளர் சண்முகம் குகதாசன் உட்பட நிருவாகிகள் பட்டியலுக்கு ஆதரவாக 112 வாக்குகளும் எதிராக 104 வாக்குகளும் கிடைத்தன. அதன் மூலமாக தமிழரசு கட்சியின் புதிய செயலாளர் குகதாசன் என்பது உறுதிசெய்யப்பட்டது. அதையடுத்து கூட்டம் முடிவுக்கு வந்தது. தமிழரசு கட்சியின் மகாநாடு மறுநாள் நடக்கவிருந்தது. புதிய தலைவரும் செயலாளரும் நிருவாகிகளும் பொதுமக்கள் முன்னிலையில் வைபவரீதியாக பதவிகளை ஏற்றுக்கொள்ளவிருந்தனர். தமிழரசு கட்சியின் உறுப்பினர்கள் கலைந்து சென்றுகொண்டிருக்கையில், பொதுச்சபை உறுப்பினர்களில் ஒரு குழுவினர் மாவை சேனாதிராஜாவை அணுகி குகதாசனை செயலாளராக தங்களால் ஏற்றுக்கொள்ளமுடியாது என்று கூறினர். புதிய தேர்தல் ஒன்று நடத்தப்படவேண்டும் என்று கோரிக்கை விடுத்த அவர்கள் ஜனவரி 28 கட்சியின் மகாநாடு நடத்தப்படக்கூடாது என்று வலியுறுத்தினர். சேனாதிராஜா அப்போது “விசித்திரமான” முறையில் நடந்துகொண்டார். புதிய தலைவர் சிறிதரனைக் கலந்தாலோசிக்காமல் முன்னாள் தலைவர் மாவை அடுத்த நாள் நடைபெறவிருந்த மகாநாடு காலவரையறையின்றி ஒத்திவைக்கப்படுவதாக அறிவித்தார். செயலாளர் பதவி தொடர்பில் தகராறு ஒன்று இருப்பதால் புதிய தேர்தல் விரைவில் நடத்தப்படும் என்றும் அதற்குப் பிறகு மாத்திரமே மகாநாடு நடைபெறும் என்றும் அவர் கூறினார். இன்னமும் கூட தானே கட்சியின் தலைவர் என்ற மாயையில் மாவை இருக்கிறார் போன்று தெரிந்தது. மாகாநாட்டில் மாத்திரமே சிறிதரன் உத்தியோகபூர்வமாக பதவியேற்பார் என்று மாவை நினைத்தார் போன்று தோன்றியது. அதனால் மகாநாட்டை ஒத்திவைத்ததன் மூலம் அவர் தனது தலைவர் பதவிக்காலம் மேலும் நீடிக்கப்படுவதாக நினைத்தார். சிறிதரனும் சுமந்திரனும் : =============== சிறிதரனும் சுமந்திரனும் ஜனவரி 28 சேனாதிராஜாவை சந்தித்தனர். தமிழரசு கட்சியின் யாப்பின் பிரகாரம் உண்மை நிலைவரம் என்ன என்பதை ஜனாதிபதி சட்டத்தரணியான சுமந்திரன் அந்த சந்திப்பில் சேனாதிராஜாவுக்கு தெரியப்படுத்தினார். ஜனவரி 27 மத்திய செயற்குழு கூட்டத்துக்கு பிறகு சேனாதிராஜா தலைவர் பதவியில் இல்லாமற்போய்விட்டார் என்று சுமந்திரன் சுட்டாக்காட்டினார். மகாநாடு நடத்தப்படுமோ இல்லையோ சிறிதரன் தான் இப்போது கட்சியின் தலைவர். அதனால் சேனாதிராஜாவினால் ஒருதலைப்பட்சமாக மகாநாடு ஒத்திவைக்கப்பட்டது செல்லுபடியாகாது. பொதுச் செயலாளராக குகதாசனின் தெரிவும் சட்டத்தில் செல்லுபடியாகும் என்றும் சுமந்திரன் வலியுறுத்திக்கூறினார். மத்திய செயற்குழு அதை ஏகமனதாக அங்கீகரித்திருந்தது. பொதுச்சபையும் ஏகமனதாக ஏற்றுக்கொண்டது. பிறகு வாக்கெடுப்புக்கு விடப்பட்டபோது ஆதரவாக 112 வாக்குகளும் எதிராக 104 வாக்குகளும் கிடைத்தன. அதனால், புதிய செயலாளரைத் தெரிவுசெய்யவேண்டியிருக்கிறது என்ற சாக்குப்போக்கில் மகாநாட்டை சேனாதிராஜா ஒத்திவைத்தது சரியானதல்ல. சுமந்திரனின் விளக்கத்தை சேனாதிராஜா ஏற்றுக்கொள்ளவில்லை. தானே இன்னமும் கட்சியின் தலைவர் என்ற நிலைப்பாட்டை அவர் எடுத்தார். தனது மகனின் திருமணத்துக்காக சிங்கப்பூர் செல்வதாகவும் பெப்ரவரி 10 ஆம் திகதியே நாடு திரும்பவிருப்பதாகவும் அவர் கூறினார். நாடு திரும்பியதும் பொதுச்சபையைக் கூட்டி பிரச்சினையைத் தீர்ப்பதாக அவர் கூறியது சிறிதரனுக்கும் ஏற்புடையதாக இருந்தது. சிறீநேசனை ஆதரிக்கும் தனது ஆதரவாளர்களின் நெருக்குதலின் கீழ் சிறிதரன் இருந்தார். சேனாதிராஜாவின் யோசனை தமிழரசு கட்சியின் யாப்புக்கு முரணானது என்று சுமந்திரன் அப்போது கூறினார். அதற்கு சேனாதிராஜா “கட்சியின் யாப்பின் பிரகாரம் எல்லாவேளையிலும் நடக்கவேண்டும் என்றில்லை” என்று பதிலளித்தார். கட்சியின் யாப்பை மீறுவதை ஏற்றுக்கொள்ளமுடியாது என்றும் அதனால் சட்டரீதியான விளைவுகள் ஏற்படலாம் என்றும் சுமந்திரன் கூறிவைத்தார். வார்த்தைகளில் கூறாமல் சிறிதரன் குறிப்பால் உணர்த்திய ஆதரவுடன் மாவை சுமந்திரனின் ஆலோசனையை அலட்சியம் செய்துவிட்டு சிங்கப்பூருக்கு பறந்துவிட்டார். சட்டரீதியான நிலைப்பாடு =============== அதைத் தொடர்ந்து தமிழரசு கட்சியின் தலைவர் மற்றும் செயலாளர் பற்றிய சட்டரீதியான நிலைப்பாட்டை விளக்கி சுமந்திரன் சிறிதரனுக்கு விரிவான கடிதம் ஒன்றை எழுதினார். சிறிதரனே தற்போது தலைவர் என்றும் சாத்தியமானளவு விரைவாக அவர் வைபவரீதியாகப் பதவியை ஏற்கவேண்டும் என்றும் சுமந்திரன் கடிதத்தில் வலியுறுத்தினார். கடிதம் ஊடகங்களுக்கும் வெளியிடப்பட்டது. தமிழன் பத்திரிகையின் பிரதம ஆசிரியர் ஆர். சிவராஜாவுக்கு சுமந்திரன் தொலைக்காட்சி நேர்காணல் ஒன்றையும் வழங்கினார். ‘நெற்றிக்கண்’ அலைவரிசையில் ஒளிபரப்பான அந்த நேர்காணலில் அவர் தமிழரசு கட்சியின் சர்ச்சைக்குரிய விவகாரங்கள் தொடர்பில் சட்டரீதியான நிலைப்பாட்டை மிகவும் விரிவாக விளக்கினார். அடிப்படை தமிழ் மொழியறிவும் கொஞ்சமேனும் பொது அறிவும் இருக்கும் எவரும் சுமந்திரனின் கடிதத்தையும் வாசித்து தொலைக்காட்சி நேர்காணலையும் பார்த்தால் தமிழரசு கட்சியின் தலைவர் மற்றும் செயலாளர் தெரிவு தொடர்பிலான தற்போதைய சட்ட அடிப்படையிலான நிலைப்பாட்டை எளிதாக விளங்கிக்கொள்ளமுடியும். ஆனால் மாவை அநாவசியமாக பிரச்சினையைத் தேடிக்கொண்டார் போன்று தெரிகிறது. செயலாளர் பதவி தொடர்பிலான தகராறு நீண்ட ஒரு காலத்துக்கு தானே தலைவர் பதவியில் தொடருவதற்கு வாய்ப்பாக அமையும் என்ற மருட்சியில் அவர் இருக்கிறார். சாத்தியமானளவு காலத்துக்கு கட்சியின் அதிகாரத்தை தன்வசம் வைத்திருப்பதில் மாவைக்கு இருக்கும் பேராசையை அடிப்படையாகக் கொண்டு நோக்கும்போது அவரது நடத்தை கண்டிக்கத்தக்கது என்றாலும் விளங்கிக் கொள்ளக்கூடியதே. ஒருதலைப்பட்சமான தனது நடவடிக்கையின் விளைவாக ஏற்படக்கூடிய சட்டரீதியான விளைவுகளை சேனாதிராஜா புரிந்துகொள்ளவில்லை. சட்டரீதியான தலைவராக இல்லாதபோது தமிழரசு கட்சியின் தலைவரின் அதிகாரங்களையும் கடமைப் பொறுப்புக்களையும் கையகப்படுத்துவது சாதாரண விடயம் அல்ல. தமிழரசு கட்சியின் யாப்பை மீறுவதற்கு தயாராயிருப்பது போன்று பேசுவது மேலும் மோசமானதாகும். இந்த கட்டத்தில் பெரிதாக ஊகங்களைச் செய்யவேண்டியதில்லை, ஆனால் விவகாரம் நீதிமன்றத்துக்குப் போனால் சேனாதிராஜா பெரும்்ஆபத்தில் சிக்கிக்கொள்ளக்கூடும். மகாநாட்டை திடீரென்று ஒத்திவைத்ததன் விளைவாக ஏற்கெனவே கட்சிக்கு பெரும் பணவிரயம் ஏற்பட்டிருக்கிறது. அதிகாரம் இல்லாமல் மகாநாட்டை சட்டவிரோதமாக ஒத்திவைத்ததன் மூலமாக ஏற்பட்ட இழப்புக்களை பொறுப்பேற்கவேண்டிய நிலைக்கு மாவை தள்ளப்படலாம். மேலும் தலைவர் தெரிவு உட்பட கட்சியின் தேர்தல் முழுவதுமே செல்லுபடியற்றது என்று பிரகடனம் செய்யப்படக்கூடும். அவ்வாறு நேர்ந்தால் அதற்கு மாவையே பிரதான காரணம். ஜனவரி 21 கட்சி தலைவர் தேர்தல் நடைபெற்றபோது சேனாதிராஜாவே தலைவராக இருந்தார். மத்திய செயற்குழுவுக்கு மேலும் 18 உறுப்பினர்களை நியமிப்பதற்கு அவர் தனது அதிகாரத்தைத் துஷ்பிரயோகம் செய்தார். அது கட்சியின் யாப்புக்கு எதிரானது. ஆனால் கட்சி யாப்பின் விதிமுறைகளை பின்பற்றுவதில் நம்பிக்கை இல்லாத சேனாதிராஜா அந்த நியமனங்களை தன்னெண்ணப்படி அடாத்தாகச் செய்தார். மகன் கலையமுதன் : ============= மத்திய செயற்குழுவுக்கு சட்டவிரோதமாக நியமிக்கப்பட்டவர்களில் சேனாதிராஜாவின் மகன் கலையமுதனும் அவரது மாமியார் சசிகலா ரவிராஜும் அடங்குவர். சசிகலா கொலை செய்யப்பட்ட யாழ்ப்பாண மாவட்டப் பாராளுமன்ற உறுப்பினர் நடராஜா ரவிராஜின் மனைவியாவார். அவர்களின் மகள் பிரவீனாவையே கலையமுதன் மணம் முடித்திருக்கிறார். இரு முன்னாள் யாழ்ப்பாண மாவட்டப் பாராளுமன்ற உறுப்பினர்களின் மகனுக்கும் மகளுக்கும் இடையிலான பந்தம் குடும்பத்தாருக்கு ஆதரவும் சலுகையும் அளிப்பதாக மாவைக்கு எதிராக குற்றச்சாட்டு கிளம்புவதற்கு வழிவகுத்திருக்கிறது. புதிய ஒரு அரசியல் வம்சத்தை உருவாக்கும் ஒரு முயற்சியாக சேனாதிராஜா தனது மகனை அரசியலில் ஊக்குவிக்கிறார் என்று அவருக்கு எதிரானவர்கள் ஏற்கெனவே குற்றஞ்சாட்டியிருக்கிறார்கள். வலிகாமம் வடக்கு பிரதேச சபையின் உறுப்பினராக கலையமுதன் தெரிவுசெய்யப்பட்டார். அந்த பிரதேச சபையின் தலைவராக அவரைத் தெரிவு செய்வதற்கு மேற்கொள்ளப்பட்ட முயற்சியும் தமிழரசு கட்சியின் இளைஞர் முன்னணியின் தலைவராக கலையமுதனை கொண்டுவருவதற்கான இன்னொரு முயற்சியும் முறியடிக்கப்பட்டன. சேனாதிராஜாவும் சசிகலாவும் 2020 பாராளுமன்ற தேர்தலில் போட்டியிடனர் எனினும் வெற்றிபெறவில்லை. கலையமுதன் வலிகாமம் வடக்கில் வீதியொன்றுக்கு தனது பெயரைச் சூட்டவைத்திருக்கிறார் என்பதும் கவனிக்கத்தக்கது. அரசியலில் சேனாதிராஜாவின் சுயநலச் செயல்களுக்கு பல சம்பவங்களைக் கூறமுடியும். 2020 பாராளுமன்ற தேர்தலில் உதயன் பத்திரிகை உரிமையாளர் சரவணபவனுடன் அணிசேர்ந்துகொண்டு தமிழரசு கட்சியின் சகபாடி வேட்பாளர்களுக்கு எதிராக வேலை செய்தது அவற்றில் ஒன்று. ஏனைய தமிழ்க்கட்சிகளுடன் சேர்ந்துகொண்டு தனது சொந்த தமிழரசு கட்சியின் நலன்களுக்கு எதிராக சேனாதிராஜா அடிக்கடி துரோகத்தனமாகச் செயற்பட்டிருக்கிறார். இன்பதுன்பம் கலந்த நீண்டகால அரசியல் வாழ்வொன்றில் சேனாதிராஜாவுக்கு நிலையான நண்பர்களோ அல்லது எதிரிகளோ இல்லை. ஆனால், ஒரு சுயநலத்துடன் கூடிய நிலையான நலன்கள் இருக்கின்றன. மாவையின் கடந்த காலம் ========= தமிழரசு கட்சியில் மாவை சேனாதிராஜாவின் கடந்தகாலத்தை இரு பகுதிகளாக பிரிக்கலாம். முதலாவது பகுதி அவரின் வாழ்வின் தொடக்ககாலத்துடன் தொடர்புடையது. இளைஞனாக பல போராட்டங்களில் பங்கேற்று அரசியல் காரணங்களுக்காக சிறைசென்ற அவர் கணிசமான தியாகங்களைச் செய்திருக்கிறார். இந்தியாவில் சுய அஞ்ஞாதவாசம் செய்த காலப்பகுதி பல்வேறு வழிகளில் கடுமையான இடர்பாடுகள் நிறைந்ததாக இருந்தது. அதை நான் நேரடியாக கண்டேன். அவரது வாழ்வின் இரண்டாவது பகுதி வித்தியாசமானது. இந்த பகுதியில் சேனாதிராஜா பழைய காலத்து இலட்சியவாதியாக நடந்துகொள்ளவில்லை. அரசியலில் உயர்மட்டத்தில் இருப்பதற்காக எதையும் செய்யத் தயாராயிருக்கும் ஒரு சுயநல அரசியல்வாதியாக மாறினார். அமிர்தலிங்கம் கொலைசெய்யப்பட்தை அடுத்து தேசியப்பட்டியல் பாராளுமன்ற உறுப்பினர் பதவியை தனக்கு தரவேண்டும் என்று கோரியது தொடக்கம் 2020 தேர்தல் தோல்விக்கு பிறகு தேசியப்பட்டியல் உறுப்பினராக வருவதற்கு அருவருக்கத்தக்க முறையில் மேற்கொண்ட முயற்சி வரை அரசியல் பதவியைப் பெறவதில் தனக்கு இருக்கும் சுயநல வேட்கையை சேனாதிராஜா வெளிக்காட்டினார். அவர் இவ்வாறு நடந்துகொள்வதற்கு கட்சியும் கட்சி உறுப்பினர்களும் ஏன் இடங்கொடுத்தார்கள் என்ற கேள்வி எழுகிறது. பொறுத்துக் கொள்ளமுடியாத சுயநலத்தை ஏன் அவர்கள் பொறுத்துக் கொண்டார்கள்? அதற்கு பதில் சேனாதிராஜாவின் கடந்த காலமே. தியாகங்கள் நிறைந்த அவரின் இளமைக்காலப் போராட்ட வாழ்வை நினைவில் வைத்திருப்பவர்கள் அவரை கண்டிக்கவோ விமர்சனம் செய்யவோ தயங்குகிறார்கள். தற்போது அவர் எவ்வாறு நடந்துகொண்டாலும் அதைப் பொருட்படுத்தாமல் கடந்த காலத்தைப் பற்றியே நினைக்கும் அவர்கள் தொடர்ந்தும் அவர் மீது அனுதாபம் காட்டுகிறார்கள். இந்த கட்டுரையாளரும் பொறுத்துக்கொள்ள முடியாத நிலை வரும்வரை “சேனாதி அண்ணை” மீது அன்புகொண்டிருந்தவர்களில் ஒருவரே! https://arangamnews.com/?p=10461
  17. பட மூலாதாரம்,GETTY IMAGES கட்டுரை தகவல் எழுதியவர், சுபாஷ் சந்திர போஸ் பதவி, பிபிசி தமிழ் 4 மணி நேரங்களுக்கு முன்னர் 1859க்கு முன்பு வரை உலகின் பெரும்பான்மையான மதங்கள், முதல் மனிதன் ஆதாமை கடவுளே படைத்தார் என்றே கூறி வந்தன. உலக மக்களும் தாங்கள் கடவுளால் படைக்கப்பட்டவர்கள் என்று தீர்க்கமாக நம்பி வந்தனர். அங்கொன்றும் இங்கொன்றும் இறைமறுப்பு, அறிவியல் சார் கருத்துக்கள் முளைத்து வந்திருந்தாலும் அதுவரை கடவுள் தான் மனிதனை படைத்தார் என்ற கோட்பாட்டை அசைக்க முடியவில்லை. திடீரென்று ஒரு தாடிக்கார மனிதன் தனது உயிரினங்களின் தோற்றம் என்ற கொள்கையை உலகின் முன் சமர்ப்பிக்க பிற சித்தாந்தங்கள் ஆடிப் போய்விட்டன. “மனிதனை கடவுள் படைக்கவில்லை. ஒரே வம்சாவளியில் தோன்றிய வெவ்வேறு இனங்கள் அது வாழ்ந்த சூழலுக்கு ஏற்ப தன்னை தகவமைத்து கொண்டு தன்னுடைய தற்போதைய நிலைக்கு வந்துள்ளன” என்ற ‘இயற்கையின் தேர்வில் உயிரினங்களின் தோற்றம்’ என்ற தனது ஆய்வை முன்வைத்தார் சார்லஸ் டார்வின். அதற்கு முன் நம்பப்பட்டு வந்த கடவுள், படைப்பு, மனித தோற்றம், உயிர்களின் பரிணாமம் குறித்த அனைத்து சித்தாந்தங்களையும் இந்த ஆய்வு கேள்விக்குட்படுத்தியது. அங்கொன்றும் இங்கொன்றுமாக எதிர்ப்பு கிளம்பினாலும் அதற்கு பின் டார்வினின் கொள்கையை புறந்தள்ளிவிட்டு அறிவியல் உலகத்தால் முன்னேற முடியவில்லை. அத்தகைய மாபெரும் ஆய்வு முடிவை சார்லஸ் டார்வின் பொது உலகிற்கு கொண்டு வர 20 ஆண்டுகள் எடுத்துக் கொண்டார். சொல்லப்போனால் அதை அவர் வெளியிடவே இல்லை. உண்மையில் அந்த ஆய்வு புத்தகம் வெளிவர காரணம் யார்? அதனால் ஏற்பட்ட சவால்கள் என்ன என்பதை இந்த தொகுப்பில் காணலாம். பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, சார்லஸ் டார்வின் உலகம் முழுவதும் பயணம் செய்து ஆயிரக்கணக்கான உயிரினங்கள் சார்ந்த மாதிரிகளை சேகரித்தார். யார் இந்த சார்லஸ் டார்வின்? பிரிட்டனின் ஷ்ரூஸ்பரி நகரில் 12 பிப்ரவரி 1809ஆம் ஆண்டு வளமையான குடும்பத்தில் பிறந்தவர் சார்லஸ் ராபர்ட் டார்வின். இவரது தாத்தா ஒரு இயற்கை விஞ்ஞானி, அப்பாவோ மருத்துவர். முதலில் தனது தந்தை விருப்பப்படி எடின்பர்க் பல்கலைக்கழகத்தில், மருத்துவம் படிக்க சென்ற டார்வின், அது பிடிக்காமல் அறிவியல் மீது ஆர்வம் கொண்டார். அங்கேயே பேராசிரியர்கள் மூலம் அறிவியல் சார்ந்து பல விஷயங்களையும் கற்றுக் கொண்டுள்ளார். பின்னர், கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தில் இறையியல் படிப்பில் சேர்ந்தார். கடவுள் மீது அவ்வளவு பற்றெல்லாம் இல்லாத டார்வினுக்கு தனது உண்மையான அறிவியலை ஆய்வு செய்ய, இந்த இடம் அதிக நேரம் தந்ததால் அங்கேயே படித்து 1831ஆம் ஆண்டு பட்டம் பெற்றார். பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, டார்வின் தனது உறவுக்கார பெண்ணான எம்மா என்பவரை திருமணம் செய்து கொண்டார். இருவருக்கும் 10 குழந்தைகள் இருந்தனர். டார்வினின் உலகப்பயணம் 1831ஆம் ஆண்டு கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழக பேராசிரியர் பரிந்துரைத்ததன் பேரில் தென்னமெரிக்க நாடுகளுக்கு சுற்றுப்பயணம் செய்ய இருந்த எச்எம்எஸ் பீகிள் கப்பலில் பயணிக்கும் வாய்ப்பு டார்வினுக்கு கிடைத்தது. இதை தனது ஆய்வுக்கு நல்வாய்ப்பாக பயன்படுத்தி கொண்ட டார்வின் அடுத்த ஐந்தாண்டுகளில் 4 கண்டங்களுக்கு 3000த்திற்கும் அதிகமான கிலோமீட்டர் பயணம் செய்து ஆயிரக்கணக்கான உயிரினங்கள் சார்ந்த மாதிரிகளை சேகரித்துக் கொண்டார். இந்தப் பயணத்தில்தான் உயிரிகளின் தோற்றம் மற்றும் பரிணாம வளர்ச்சி குறித்த தெளிவான புரிதலை அறிந்துக் கொண்டார். குறிப்பாக உலகின் பல்வேறு பகுதிகளில் வாழும் ஒரே இனத்தை சேர்ந்த உயிரிகளுக்கு வெவ்வேறு விதமான உடலமைப்புகள் இருப்பதை அவர் அறிந்துக்கொண்டார். 1838ஆம் ஆண்டு பயணத்தில் இருந்து திரும்பிய டார்வின் தனது உயிரினங்களின் தோற்றம் புத்தகத்தை எழுதத் தொடங்கிவிட்டார். ஆனால், அவர் அதை உடனே வெளியிடவில்லை. ஆனால் அந்த சமயத்தில் தனது கப்பல் பயணம் குறித்த புத்தகத்தை ‘The Voyage of Beagle’ என்ற தலைப்பில் வெளியிட்டிருந்தார். இதற்கிடையில் டார்வினின் குடும்பம் அடுத்தடுத்த இறப்புகளால் நிலைகுலைந்து போயிருந்தது. பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, 1831-ஆம் ஆண்டு தென் அமெரிக்க நாடுகளுக்கு எச்எம்எஸ் பீகிள் கப்பலில் பயணிக்கும் வாய்ப்பு டார்வினுக்கு கிடைத்தது. நிலைகுலைந்து போன டார்வினின் குடும்பம் டார்வின் தனது உறவுக்கார பெண்ணான எம்மா என்பவரை திருமணம் செய்து கொண்டார். இருவருக்கும் 10 குழந்தைகள் இருந்தனர். ஆனால், 1 மகன் மற்றும் இரு மகள்கள் நோய்வாய்ப்பட்டு இறந்து போயினர். இதற்கு காரணம் டார்வின் தனது குழந்தைகளை கண்டுகொள்ளாததும், அவர் மத நம்பிக்கைகளை பின் பற்றாததும் தான் என்று எம்மா நம்பினார். இதனால் அவர்கள் இருவருக்குள்ளும் உணர்ச்சி போர் நடந்து கொண்டிருந்தது. அடுத்தடுத்த இறப்புகளால் டார்வினும் மனம் தளர்ந்து போயிருந்தார். இந்நிலையில் புத்தகம் எழுதத் தொடங்கி 20 ஆண்டுகள் ஓடியிருந்தன. இந்த இடைப்பட்ட காலத்தில் ஆல்ஃபிரட் ரஸ்ஸல் வாலஸ் என்பவரும் இதே கோட்பாட்டை மையமாக கொண்டு தனது ஆய்வை செய்திருப்பது டார்வினுக்கு தெரிய வர இருவரும் ஒரே சமயத்தில் பிரிட்டனின் முன்னணி இயற்கை சார் வரலாற்று அமைப்பான லின்னியன் சொசைட்டிக்கு தங்களது ஆய்வறிக்கையை சமர்பிக்கின்றனர். பட மூலாதாரம்,VENKATESAN படக்குறிப்பு, விஞ்ஞானி வெங்கடேசன் கண்டுகொள்ளாத லின்னியன் சொசைட்டி ஆனால், அந்த அமைப்போ இருவது படைப்பையும் பெரிதாக எடுத்துக்கொள்ளாமல் முதலில் புறக்கணித்து விட்டதாக தெரிவிக்கிறார். கல்பாக்கம் இந்திரா காந்தி அணு ஆராய்ச்சி மையத்தின் கதிரியக்கம் மற்றும் சுற்றுச்சூழல் பாதுகாப்பு பிரிவு முன்னாள் தலைவர் டாக்டர். ஆர். வெங்கடேசன். டார்வினின் முதல் புத்தகம் வெளியானது குறித்து அவருடன் பேசிய போது பல புதிய தகவல்களை பகிர்ந்துக் கொண்டார். அவரின் தகவல்படி, “டார்வின் தனது புத்தகத்தை வெளியிடவில்லை. அவர் அந்த ஆய்வு தகவல்களை, தனது மனைவிக்கு ஒரு சிறு குறிப்போடு சேர்த்து ஒரு பழைய பெட்டியில் மூடி வைத்துவிட்டார்” “அந்த புத்தக குறிப்பின் மீது ‘Origin of Species by Natural Selection I think so’என்று குறிப்பிட்டு, அவரது மனைவிக்கு எழுதிய குறிப்பில், எனது அருமை மனைவியே, இந்த குறிப்புகளை புத்தக நிலையத்திற்கும் , நண்பர்களுக்கும் அனுப்பி விடவும்” என்று எழுதியிருந்தார் என்கிறார் ஆர். வெங்கடேசன். பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, சார்லஸ் டார்வின் உயிரினங்களின் தோற்றத்தை டார்வின் வெளியிடவில்லை அதற்கு காரணம் மேலே சொன்னது போல டார்வினின் குடும்ப நிலை. இது குறித்து பேசிய வெங்கடேசன், “தொடர்ந்து நிகழ்ந்த குழந்தைகளின் இறப்புக்கு காரணம் டார்வினின் அணுகுமுறை மற்றும் மத பழக்கங்களை கடைபிடிக்காமல் இருந்ததுதான் என்று எம்மா சண்டை போட்டார். ஆனாலும், டார்வின் செய்வதும் சரி என்ற நிலைப்பாட்டில் எம்மா இருந்தார். எனவே நீ சொன்னால் அதை பிரசுரிக்க அனுப்புகிறேன் என்று சொல்லி எம்மாவே அந்த புத்தக குறிப்பை முதன் முதலில் புத்தக நிலையத்திற்கு அனுப்பினார்” என்கிறார். அவரது ஆய்வுகளை கண்டு மிரண்டு போன புத்தக நிலையம் 1859ஆம் ஆண்டு நவம்பர் 24 அன்று அந்த ஆய்வுகளை தொகுத்து புத்தகமாக வெளியிட்டது. குறிப்பாக அந்த ஆய்வு மக்கள் புரிந்து கொள்ளும்படியான எளிய மொழியில் அறிவியலை கொண்டு சேர்த்தது என்கிறார் வெங்கடேசன். இந்த புத்தகம் வெளியான பிறகு பல்வேறு பதிப்புகளை கண்டது. இதன் ஒவ்வொரு பதிப்புகளிலும் விமர்சனங்களுக்கான பதிலையும் சேர்த்து பதிப்பித்தார் டார்வின். அப்படி இப்புத்தகத்தின் 5 வது பதிப்பில் தான் “Survival of the fittest” என்ற பதத்தை கொண்டு வருகிறார் அவர். இந்த வாசகம் தத்துவவாதி ஹெர்பர்ட் ஸ்பென்சர் என்பவருடையது. தன்னுடைய புத்தகத்திற்கு பொருத்தமாக இருக்கும் என்ற காரணத்தால் இதை கடன் வாங்கி கொண்டார் டார்வின். ஆனாலும், அதன் பொருள் தற்போதைய காலகட்டத்தில் வேறு வகையில் பயன்படுத்தப்படுவதை டார்வின் அறிந்தால் மனமுடைந்திருப்பார். பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, டார்வின் எந்த இடத்திலும் இறைமறுப்பை தீவிரமாக கையிலெடுக்கவில்லை தக்கன பிழைக்கும் (Survival of the fittest) என்பதன் உண்மைப் பொருள் என்ன? சார்லஸ் டார்வின் கூற்றுப்படி இதன் அர்த்தம், ‘தக்கன பிழைத்துக்கொள்ளும்’ என்பதே ஆகும். அதாவது பூமியின் பரிணாம வளர்ச்சிக்கு ஏற்றவாறு தன்னை தகவமைத்து கொண்டு பொருத்திக் கொள்ளும் உயிரினமே தொடர்ந்து வாழும். இதுகுறித்து பேசிய ஆர்.வெங்கடேசன், “இது வெவ்வேறு இனங்களுக்கு பொருந்துமே தவிர, ஒரு இனத்திற்குள் இருக்கும் ஒரே உயிரிக்கு பொருந்தாது. உதாரணமாக மனிதர்களில் பலம், பணம், சமூக அந்தஸ்து பொருந்தியவர்களே பிழைப்பார்கள் என்று சொல்வது தவறு. இதை டார்வினே தெளிவுபடுத்தியுள்ளார். ஒரு இனம் அது வாழும் இயற்கை சூழலுக்கு ஏற்ப பரிணாம வளர்ச்சி பெற்று தன்னை தகவமைத்துக் கொண்டால் மட்டுமே வாழ முடியும் என்பதே இதன் அறிவியல் விளக்கம்” என்று கூறுகிறார். டார்வின் எதிர்கொண்ட மதரீதியான தாக்குதல்கள் ஏற்கெனவே பின்பற்றி வரும் பழமையான கோட்பாடுகளை எதிர்த்து புதிய கோட்பாடு உருவாகும் போது எதிர்ப்புகள் கிளம்புவது இயல்பு. அப்படி டார்வினின் கோட்பாட்டுக்கும் எதிர்ப்பு எழுந்தாலும், கலீலியோ அல்லது டார்வினுக்கு முந்தைய ஆய்வாளர்களுக்கு நடந்த கொடுமைகள் நடக்கவில்லை என்கிறார் வெங்கடேசன். அதற்கு காரணமாக அன்றைய காலத்தில் வளர்ந்து வந்த ஜனநாயகத் தன்மை மற்றும் டார்வினுடைய சமூக நிலை ஆகியவற்றை முன்வைக்கிறார் அவர். டார்வினே தேவாலயத்தை சேர்ந்தவராகவும், இறையியல் படித்தவராகவும் இருந்தார். எனவே அங்கிருந்தே ஒருவர் வெளியே வந்து இந்த கேள்விகளை முன்வைக்கிறார் என்றே பார்க்கப்பட்டதாக தெரிவிக்கிறார் வெங்கடேசன். அதே சமயம் டார்வின் எந்த இடத்திலும் இறைமறுப்பை தீவிரமாக கையிலெடுக்கவில்லை. தனது குடும்பத்துடன் தேவாலயத்திற்கு செல்லும்போதும் கூட அவர்களை உள்ளே அனுப்பிவிட்டு வெளியே அமர்ந்து கொள்வாராம். கடவுளை மறுத்து பேசுவதை கையில் எடுக்காமல், தனக்கு முன் இருந்த கோட்பாடுகளை மட்டுமே அவர் கேள்விக்குள்ளாக்கியுள்ளார். இதனால், அவருக்கு பெரிதாக எதிர்ப்பு எழவில்லை என்கிறார் வெங்கடேசன். அப்படி பொதுவெளியில் டார்வின் கோட்பாடுகள் விமர்சனத்தை சந்தித்த போதெல்லாம் அவரை விட, அதை எதிர்கொண்டு விவாதித்து ஒன்றுமில்லாமல் ஆக்கியவர் உயிரியலாளர் தாமஸ் ஹக்ஸ்லி தான். பல முக்கியமான கூட்டங்களில் டார்வினின் கோட்பாடுகளுக்கு ஆதரவாக பேசி வெற்றி பெற்றுள்ளார் இவர். பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, லண்டனில் உள்ள சார்லஸ் டார்வின் சிலை டார்வின் ஏன் தேவை? என்னதான் 170 ஆண்டுகளுக்கு முன்பு பரிணாம வளர்ச்சி குறித்த கோட்பாட்டை டார்வின் வெளியிட்டிருந்தாலும் இன்னமும் வெகுமக்கள் மனித பிறப்பு குறித்த பழைய நம்பிக்கைகளையே பின்பற்றி வரும் சமயத்தில் டார்வினின் கோட்பாடு முக்கியமாகிறது என்கிறார் ஆர்.வெங்கடேசன். “சமீபத்தில் கூட NCERT பாடப்புத்தகங்களில் இருந்து டார்வினின் பரிணாமக் கோட்பாடு நீக்கப்பட்டுள்ளது. அதற்க்கு காரணமாக அதிக பாடச் சுமை கூறப்படுகிறது. ஆனால், அறிவியலின் அடிப்படையே படிக்காமல் எப்படி அடுத்த கட்டத்தை படிப்பது? அதனால்தான் இந்தியா முழுவதும் உள்ள ஆயிரக்கணக்கான விஞ்ஞானிகள் ஒன்றிணைந்து அந்த பாடங்களை நீக்க கூடாது என்று அந்த துறைக்கு கடிதம் எழுதியுள்ளோம்” என்று தெரிவிக்கிறார் விஞ்ஞானி ஆர்.வெங்கடேசன். https://www.bbc.com/tamil/articles/cyej7yeer1xo
  18. கட்டுரையில் நிலாந்தனே சுட்டிக் காட்டியிருக்கிறார்: ஆயுதம் ஏந்தாத தமிழ் கட்சிகளில், ஒரே கொள்கை, ஆனால் மாறு பட்ட அணுகுமுறை என்று இருந்தோர் பலர் இருந்திருக்கிறார்கள், இத்தகைய அணுகுமுறையின் பல்வகைத் தன்மை தமிழருக்குப் புதிதல்ல. வாக்காளர்கள் அல்லது கட்சி உறுப்பினர்கள் பெரும்பாலானோரிடம் பல்வகைத் தன்மைக்கு ஆதரவில்லா விட்டால் உரிய அரசியல் தலைவர்கள் தாமாகவே பதவியிழந்து போய் விடுவர் - மக்கள் விரும்பும் தலைவர்கள் முன் வரலாம், தொடரலாம்! ஆனால், எங்கள் தீவிர தேசியர்கள், குறிப்பாக புலம் பெயர்ந்த தீவிர தேசியர்கள் கேட்பது இதையல்ல: "தாயகத்தில் மக்கள் உனக்கு வாக்குப் போட்டாலும் நமக்குப் பிடிக்கவில்லையானால் நீ விலகி விட வேணும்"😎. இதைத் தான் சுமந்திரனிடம் எதிர்பார்க்கிறார்கள்.
  19. நீங்கள் அறிந்திருப்பீர்கள் அவுஸ்ரேலியாவில் கடந்த தடவை பிரதமர் மட்டும் இரண்டு மூன்று தடவை நாலு வருடத்தில் மாற வேண்டிய நிலை ...எதிர்கட்சி குழப்ப வில்லை..ஆளும் கட்சியில் உள்ளவர்களே தங்களது கட்சி தலமை மீது நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டுவந்தார்கள்..பிரதமர் மாற்றப்பட்டார்.... சில விடயங்கள் தவிர்க்க முடியாதவை ...அதற்காக ஒர் இனத்தின் மீதோ கட்சி மீதோ குற்றம் சாட்டா முடியாது... ஒர் இனம்,ஒர் மாவட்டம்,ஒர் மாகாணம் , .....தண்ணீர் கலக்காத சுத்தமான பால் போல இருக்க முடியாது .....தண்ணீர் கலந்த பாலிலும் சாயவை போட்டு குடித்து விட்டு சுப்பர் என சொல்லி நகர்ந்து செல்ல வேண்டிய நிலையில் உலகம் நகர்கின்றது
  20. இங்கு தினாவெட்டாக கேள்வி கேட்கவில்லை ...போராளிகள் பிறப்பதில்லை உருவாக்கப்படுகிறார்கள்...அந்நிய படையெடுப்பு நடை பெறும் காலங்களில் மக்கள் கிளர்த்தெழுவது இயற்கை ..ஒரு சிலர் சகித்து கொண்டு செல்வார்கள்,பந்தம் பிடித்து தப்பி பிழைப்பார்கள் ..வேறு சிலர் போராடுவார்கள்....முள்ளிவாய்காலில் நடந்த துயர சமபவம் போல் ஒன்று நடைபெற வேணும் என மகிழ்ச்சியடைந்த உத்தமர்களும் உண்டு... முள்ளிவாய்க்கால் நடந்த சம்பவத்தை தினாவெட்டாக கூறி அரசியல் கருத்து எழுத வேண்டிய வங்குரோத்து நிலையில் நான் இல்லை....தொடர்ந்து ஆக்க பூர்வமான கருத்துக்களை வைத்து அரசியல் விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டிய உத்தமர்கள் எல்லாம் இன்னும் நூறு வருடங்கள் சென்றாலும் இதே பல்லவி தான்... தமிழன் ஒற்றுமை இல்லை துரோகி பட்டம் சொல்லுவான் முள்ளிவாய்க்கால் அவலம் பிரதேசவாதம் பேசுகிறான் தமிழன் காவாலி சிங்களவன் தமிழனை விட நூறு மடங்கு நல்லவன் நீங்கள் சிங்கள் காவாலிகள் செய்த இன அழிப்பை மறைக்க குத்தி முறியும் பொழுது நான் தமிழ் காவலிகள் செய்த செயலை மறைக்க கருத்து எழுதினால் என்ன தப்பு....
  21. பட மூலாதாரம்,GETTY IMAGES கட்டுரை தகவல் எழுதியவர், சர்வப்பிரியா சங்வான் பதவி, பிபிசி செய்தியாளர் 8 மணி நேரங்களுக்கு முன்னர் எந்தவொரு வாடிக்கையாளரும் உணவுப் பொருட்களை வாங்க 6-10 விநாடிகள் மட்டுமே எடுத்துக் கொள்கிறார்கள் என்று பல ஆய்வுகள் காட்டுகின்றன. வாடிக்கையாளர்கள் பெரும்பாலும் அதன் காலாவதி தேதி மற்றும் விலையை மட்டுமே பார்க்கின்றனர். ஆனால், உணவுப் பொருள் பாக்கெட்டுகளின் பின்புறத்தில் நிறைய முக்கியமான தகவல்கள் உள்ளன. அதைப் படிக்கத் தெரிந்தால் அந்த பாக்கெட்டை, அந்த உணவுப்பொருளை நீங்கள் வாங்கவே மாட்டீர்கள். ஆனால், குறிப்பிட்ட உணவுப்பொருள் உடல்நலத்திற்கு நல்லதா அல்லது கெட்டதா என்பதை அறிய முடியாத வகையிலும் வாடிக்கையாளர்களுக்குப் புரியாத வகையிலும் இந்தத் தகவல்கள் எழுதப்பட்டுள்ளன. பாக்கெட்டில் உள்ள ஊட்டச்சத்து குறித்த தகவல்களைப் பார்த்தே உள்ளே இருக்கும் உணவின் தரத்தை மதிப்பிட கற்றுக் கொள்ளலாம். எந்தவொரு உணவுப் பொருளையும் வாங்குவதற்கான அடிப்படை என்னவென்றால், அதில் சில அளவு வைட்டமின்களும் தாதுக்களும் இருக்க வேண்டும். மேலும், அதன் அளவும் ஆரோக்கியத்திற்குத் தீங்கு விளைவிக்காத வகையில் இருக்க வேண்டும். முதலில், இந்தியாவில் செய்யப்படும் உணவு லேபிளிங் ஓர் ஆரோக்கியமான நபரின் உணவின் அளவு 2,000 கிலோ கலோரிகள் என்று கருதி செய்யப்படுகிறது என்பதை அறிந்து கொள்ளுங்கள். இதைத் தரமாகக் கருதி, ஒவ்வொரு உணவுப் பொருட்களின் பாக்கெட்டுகளிலும் பரிந்துரைக்கப்பட்ட ஊட்டச்சத்துகளின் அளவுகள் (RDA -Recommended Dietary Allowance) நிர்ணயிக்கப்பட்டுள்ளன. பரிந்துரைக்கப்பட்ட ஊட்டச்சத்துகளின் அளவுகள் பட மூலாதாரம்,GETTY IMAGES பொதுவாக இந்திய உணவுப் பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய ஆணையம் (FSSAI) இந்தியாவில் உணவு லேபிளிங் தேவைகளை அமைப்பதற்குப் பொறுப்பாகிறது. இந்த அமைப்பு லேபிளிங் விதிகளை முடிவு செய்து மேற்பார்வை செய்கிறது. பரிந்துரைக்கப்பட்ட ஊட்டச்சத்து அளவுகள் என்பது, அறிவியல் தகவல்களின் அடிப்படையில், ஆரோக்கியமாக உள்ளவர்களுக்கு இந்த அளவு ஊட்டச்சத்து போதுமானது என்று இந்திய உணவுப் பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய ஆணையம் தீர்மானித்துள்ளது. FSSAI வழிகாட்டுதல்களின்படி, கார்போஹைட்ரேட்டுகளின் பரிந்துரைக்கப்பட்ட அளவு ஒரு நாளைக்கு 130 கிராம். பதப்படுத்தப்பட்ட வேர்க் கடலையின் 30 கிராம் பாக்கெட்டை நீங்கள் சாப்பிட்டீர்கள் என்று வைத்துக்கொள்வோம். அதன் லேபிளின்படி, அதில் 24 சதவீதம் கார்போஹைட்ரேட் உள்ளது. எனவே, இது பரிந்துரைக்கப்பட்ட ஊட்டச்சத்துகளின் அளவில் தோராயமாக 18 சதவீதம். அதாவது, பதப்படுத்தப்பட்ட வேர்க்கடலை பாக்கெட்டுகளில் இருந்து 18 சதவீதம் கார்போஹைட்ரேட் கிடைத்துள்ளது. நீங்கள் 100 கிராம் பதப்படுத்தப்பட்ட வேர்க்கடலை சாப்பிட்டால், அன்றைய கார்போஹைட்ரேட்டில் 80 சதவிகிதம் சாப்பிட்டிருப்பீர்கள். ஆனால், நாள் முழுவதும் கார்போஹைட்ரேட் உள்ள மற்ற பொருட்களைச் சாப்பிட்டால், கண்டிப்பாக அன்றைய கார்போஹைட்ரேட் வரம்பை மீறுவீர்கள். பரிமாறும் அளவு: பாக்கெட்டின் பின்புறத்தில் 'சர்விங் சைஸ்' (serving size) லேபிளை காணலாம். மற்ற அனைத்துத் தகவல்களும் இந்த `சர்விங் சைஸ்` அளவை அடிப்படையாகக் கொண்டது. பல பாக்கெட்டுகளில் ஒன்றுக்கு மேற்பட்ட `சர்விங் சைஸ்` உள்ளன. இந்தியாவில், உணவு பாக்கெட் லேபிள்களில் ஒவ்வொரு உணவுப் பொருளுக்கும் 100 கிராம் அளவுக்குத்தான் ஊட்டச்சத்துகள் குறிப்பிடப்பட்டுள்ளன. நீங்கள் 100 கிராமுக்கு மேல் அதைச் சாப்பிட்டால், குறிப்பிடப்பட்டுள்ள அளவுக்கு ஏற்ப அந்த ஊட்டச்சத்துக்கள் உங்கள் உடலில் சேரும். இந்த உணவில் என்ன கூறுகள் உள்ளனவோ, அவை இறங்கு வரிசையில் லேபிளில் பதிவு செய்யப்படுகின்றன. அதாவது, எந்த ஊட்டச்சத்து அதிக அளவில் உள்ளதோ அது முதலில் வரும், எது குறைவாக உள்ளதோ அது கடைசியாக வரும். என்னென்ன ஊட்டச்சத்துகள்? பட மூலாதாரம்,GETTY IMAGES அனைத்து உணவு பாக்கெட்டுகளிலும் அதிலுள்ள ஊட்டச்சத்துகள் மற்றும் அவற்றின் அளவுகள் பற்றிய தகவல்களை வழங்குவது அவசியம். நீங்கள் மிகவும் கவனம் செலுத்த வேண்டிய நான்கு கூறுகள் உள்ளன. மொத்த கொழுப்பு, நிறைவுற்ற கொழுப்பு, உப்பு/சோடியம் மற்றும் சர்க்கரை. இந்தக் கூறுகள் அனைத்தும் உங்கள் எடை மற்றும் ரத்த அழுத்தத்தில் மாற்றங்களை ஏற்படுத்தும். இது இதய நோய்கள் மற்றும் பக்கவாதம் ஏற்படும் அபாயத்தை அதிகரிக்கிறது. சர்க்கரை பட மூலாதாரம்,GETTY IMAGES சர்க்கரையை நீங்கள் எந்தப் பெயரில் அழைத்தாலும் அதில் கார்போஹைட்ரேட்டை தவிர வேறு எந்த சத்தும் இல்லை. அதிக சர்க்கரையை உட்கொள்வது உங்கள் கலோரிகளை நிரப்புகிறது. அதன் விளைவாக நீங்கள் பசி உணர்வை இழப்பதால் ஆரோக்கியமான உணவைச் சாப்பிடுவது தடுக்கப்படுகிறது. இதனால், ரத்தத்தின் சர்க்கரை அளவை சரியாகப் பராமரிக்கும் உடலின் திறனும் பாதிக்கப்படுகிறது. அதிக சர்க்கரை, தேன், வெல்லம், கார்ன் சிரப், கார்ன் சர்க்கரை, பிரக்டோஸ் உள்ள உணவுகளில் கவனமாக இருங்கள். பிரௌன் சுகர், கரும்பு சர்க்கரை, கார்ன் ஸ்வீட்னர், டெக்ஸ்ட்ரோஸ், மால்டோஸ், பழச்சாறு செறிவு மற்றும் குளுக்கோஸ் ஆகியவையும் சர்க்கரை வகைகள்தான். இவை எதுவும் ஆரோக்கியமான சர்க்கரைகள் அல்ல. ஒரு ஜூஸ் பாக்கெட்டை எடுத்துக்கொள்ளுங்கள். ஒரு லிட்டர் ஜூஸ் பாக்கெட் என்றாலும், அதன் லேபிளில் உள்ள தகவல்கள் வெறும் 100 மி.லி.க்கு மட்டுமே குறிப்பிடப்பட்டிருக்கும். 100 மி.லி. ஜூஸ் குடித்தால், அதில் கிடைக்கும் மொத்த சர்க்கரை 12.6 கிராம். இதில், தனித்தனியாகச் சேர்க்கப்படும் சர்க்கரை 8.3 கிராம், இது உங்கள் உடலுக்குத் தேவையில்லை. உலக சுகாதார அமைப்பின் கூற்றுப்படி, ஒரு ஆரோக்கியமான நபர் ஒரு நாளைக்கு 25 கிராமுக்கு மேல் சர்க்கரையை உட்கொள்ளக்கூடாது. இது தோராயமாக 6 டீஸ்பூன் சர்க்கரைக்கு சமம். ஒரு சிறிய டம்ளர் ஜூஸில் இருந்து தினசரி சர்க்கரையில் பாதியைப் பெறுவதைக் கற்பனை செய்து பாருங்கள். அதேநேரத்தில், இந்த ஜூஸ் பாக்கெட்டில் 18 மில்லிகிராம் வைட்டமின் சி உள்ளது. வைட்டமின் சி ஒரு நாளைக்கு 40 மில்லிகிராம் தேவை. எனவே, வைட்டமின் சி காரணமாக நீங்கள் சர்க்கரை அதிகம் உள்ள ஜூஸை குடித்தால், உங்கள் உடலுக்கு அதிக தீங்கு ஏற்படும். உலக சுகாதார அமைப்பு பரிந்துரைத்துள்ள புள்ளி விவரங்களை FSSAI பின்பற்றுவது அவசியமில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது. இந்தியாவில் பரிந்துரைக்கப்பட்ட ஊட்டச்சத்து அளவுகள் வேறுபட்டதாக இருக்கலாம். ஓர் ஆரோக்கியமான நபருக்கு தினசரி உணவில் தேவைப்படும் சராசரி ஊட்டச்சத்து அளவு ஆர்.டி.ஏ எனப்படும். இந்தியாவில், இது தேசிய ஊட்டச்சத்து நிறுவனம் மற்றும் உலக சுகாதார நிறுவனத்தால் கூட்டாகச் செய்யப்படுகிறது. எடுத்துக்காட்டாக, FSSAI சர்க்கரை சேர்க்கும் வரம்பை 50 கிராமாக வைத்துள்ளது. இது உலக சுகாதார அமைப்பு பரிந்துரைத்த வரம்பைவிட இருமடங்கு அதிகம். உப்பு பட மூலாதாரம்,GETTY IMAGES உயர் ரத்த அழுத்த அபாயத்தைக் குறைக்க உதவும் குறைந்த அளவு சோடியம் உள்ள உணவுகளைத் தேர்ந்தெடுக்கவும். வழக்கமாக நாம் எடுத்துக்கொள்ளும் பல உணவுப் பொருட்களில் உப்பு சேர்க்கப்படுகிறது. உப்பு இருக்காது என நீங்கள் நினைக்கும் கேக்குகள், ரொட்டிகள், பிஸ்கட்கள் உள்ளிட்ட பல உணவுகளில் உப்பு இருக்கிறது. இந்தியாவில் 18 வயதுக்கு மேற்பட்ட நபர் ஒருவர் ஒரு நாளைக்கு 5-6 கிராமுக்கு மேல் உப்பை உட்கொள்ளக்கூடாது. இது தோராயமாக ஒரு தேக்கரண்டிக்குச் சமம். சில பொருட்களின் லேபிள்களில் உப்புக்குப் பதிலாக சோடியம் உள்ளது என்பதை நினைவில் கொள்ளுங்கள். அப்படி இருந்தால் சோடியத்தின் அளவை 2.5-ஆல் பெருக்கி உப்பின் அளவை அறியலாம். சோடியத்தின் அளவு ஒரு நாளைக்கு 2300 மி.கி அல்லது 2.3 கிராமுக்குக் குறைவாக இருக்க வேண்டும். உலக சுகாதார அமைப்பின் சமீபத்திய அறிக்கை இந்தியாவில் 18 கோடியே 80 லட்சம் பேருக்கு உயர் ரத்த அழுத்தம் இருப்பதாகக் காட்டுகிறது. ஆனால், 37 சதவீதம் பேர் மட்டுமே அதைப் பற்றி அறிய முடிகிறது. இதில், 30 சதவீதம் பேர் மட்டுமே சிகிச்சை பெற்று வருகின்றனர். கொழுப்பு பட மூலாதாரம்,GETTY IMAGES உணவுப் பாக்கெட்டுகளில் உள்ள நிறைவுற்ற கொழுப்பு, நிறைவுறா கொழுப்பின் அளவைப் பாருங்கள். ஆரோக்கியமான உணவுக்கு, நிறைவுற்ற கொழுப்பைக் குறைக்க வேண்டும். அதேநேரம், நிறைவுறா கொழுப்பை முற்றிலும் தவிர்க்கவும். வெண்ணெய், தேங்காய் எண்ணெய் போன்றவை நிறைவுற்ற கொழுப்புகள். ஆலிவ் எண்ணெய், கடுகு எண்ணெய் போன்ற நிறைவுறா கொழுப்புகள். உதாரணமாக, 100 கிராம் பாக்கெட் சிப்ஸில் 555 கிலோ கலோரிகள், 51 கிராம் கார்போஹைட்ரேட் மற்றும் 35 கிராம் கொழுப்பு உள்ளது. நீங்கள் நாள் முழுவதும் 2,000 கிலோ கலோரி உணவை எடுத்துக் கொண்டால், அதில் 20-35 சதவீதம் கொழுப்பு மட்டுமே இருக்க வேண்டும். அதாவது, 44-78 கிராம் கொழுப்பு. இப்போது பாருங்கள், ஒரு பாக்கெட் சிப்ஸில் 555 கிலோ கலோரி மற்றும் 35 கிராம் கொழுப்பும் கிடைக்கிறது. உலக சுகாதார அமைப்பின் கூற்றுப்படி, உடலில் அதிகப்படியான கொழுப்பு சேர்வதால், பல நோய்களின் அபாயம் அதிகரிக்கிறது. 13 வகையான புற்றுநோய், நீரிழிவு நோய், இதயம் மற்றும் நுரையீரல் தொடர்பான நோய்கள் ஏற்படுகின்றன. சில நேரங்களில் அதிக கொழுப்பு, மரணத்துக்குக்கூட காரணமாகிறது. கடந்த ஆண்டு உடல் பருமன் காரணமாக உலகம் முழுவதும் 28 லட்சம் பேர் உயிரிழந்துள்ளனர். நார்ச்சத்து பட மூலாதாரம்,GETTY IMAGES ஒரு சர்விங்குக்கு 5 கிராம் நார்ச்சத்து உள்ள உணவுகளை உண்ணுங்கள். FSSAI ஊட்டச்சத்து தொடர்பான சில நிபந்தனைகள் மற்றும் விதிகளை வரையறுத்துள்ளது. உதாரணமாக, 100 கிராம் தயாரிப்பில் உள்ள நார்ச்சத்து 6 கிராமுக்கு மேல், அதாவது 6 சதவீதத்திற்கு மேல் இருந்தால் மட்டுமே, உணவுப் பொருளில் நார்ச்சத்து அதிகம் உள்ளதாகக் கூற முடியும். எனவே, நீங்கள் உணவு பாக்கெட்டை வாங்கச் செல்லும் போதெல்லாம், அதன் லேபிளைப் படிக்க சிறிது நேரம் ஒதுக்குங்கள். இதன் மூலம் உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினருக்கும் நீங்கள் சரியான உணவுத் தேர்வை நீங்கள் செய்யலாம். https://www.bbc.com/tamil/articles/cz9m0q4953ro
  22. இந்த ஆலோசனையில் பிரச்சினையிருக்கிறதே? Saturated fat எனப்படும் நிறைவுற்ற கொழுப்பை தவிர்க்க வேண்டும், unsaturated fat எனப்படும் நிறைவுறா கொழுப்பை அன்றாடம் எடுக்கும் கலோரியில் 40% இனைப் பெற்றுக் கொள்வதற்காக எடுத்துக் கொள்ளலாம். அதிலும் mono-unsaturated fat எனப்படும் நிறைவுறா கொழுப்பின் வகையை எங்கள் உணவுகளைப் பொரிக்க, வறுக்கப் பயன்படுத்தவும் முடியும்.
  23. சதை இருந்துச்சோ சி நாட்களில் பெரிய நண்டுகளில் சதை இருக்காதே அண்ண
  24. 🦀நல்ல சோடிகள் 🦀. தாத்தாவையும், பேரனையும் சொன்னேன். 😂🤣
  25. Kandiah57, உங்கள் கருத்து ஏற்றுக் கொள்ளக் கூடியதுதான். ஆனால் இங்கே குற்றவாளி பிடிபட்டிருக்கிறான் என்பது ஆறுதலான விடயம்
  26. தாங்கள் கூறுவது உண்மை. அண்மையில் ஒருவருடைய WhatsUp கண்க்கொன்றைப் பார்த்தேன். முதல்நாள் பிள்ளைகளுடன் இருந்த profile picture அடுத்த நாள் வித்தியாசமாக இருந்தது. இது என்ன வித்தியாசமாக இருக்கே என்று (வடிவேலுவின் style ல்)பார்த்தால் அதில் Kattunayake International Airport ல் இருந்து எடுத்த படம் இருக்கிறது.
  27. 1980 களில் இராணுவத்தின் அட்டூழியங்களை இனக்கொலை என்று அழைத்த இந்துவின் என்.ராம் 2009 இல் தமிழர்களையும், விடுதலைப் போராட்டத்தையும் அழித்தமைக்காக இனக்கொலையாளி ராஜபச்க்ஷவைப் போறிப் புகழும் அதே என்.ராம் தனது கடுமையான நிலைப்பாட்டிற்காக லலித் அதுலத் முதலி உள்ளூர் மற்றும் வெளிநாட்டுப் பத்திரிக்கையாளர்களால் பெரிதும் தேடப்பட்டவராக மாறினார். ஈழத்தமிழர் பிரச்சினையில் மிகுந்த ஈடுபாட்டுடன் முன்னர் எழுதிவந்தவரும் ஹிந்துப் பத்திரிக்கையின் ஆசிரியருமான என்.ராம், அதுலத் முதலியைப் பேட்டி கண்டார். அரசாங்கத்தின் அரசியல்ப் பேச்சாளரும், இராணுவப் பேச்சாளருமாக அதுலத்முதலியே அன்று செயற்பட்டு வந்தார். அத்துடன் சர்வகட்சி மாநாட்டின் உத்தியோகபூர்வப் பேச்சாளரும் அவராகவே இருந்தார். ராம் எழுதிய கட்டுரை புரட்டாதி 22 ஆம் திகதி ஹிந்துப் பத்திரிக்கையில் வெளிவந்திருந்தது. இரண்டு நாட்களுக்குப் பின்னர் கொழும்பில் இலண்ட் பத்திரிக்கை அதனை மீள்பிரசுரம் செய்திருந்தது. ராம் தனது பேட்டியினை இரு பகுதிகளாக வகுத்திருந்தார். முதலாவதாக சர்வகட்சி மாநாடு குறித்து லலித்திடம் வினவிய அவர் தமிழ் மக்களின் பிரச்சினைக்கான தீர்வு என்னவென்றும் கேட்டார். சிங்களவர்கள் ஏற்றுக்கொள்ளும் ஒற்றைத்தீர்வு மாவட்ட அபிவிருத்திச் சபைகள் மட்டும்தான் என்று லலித் பிடிவாதமாகப் பதிலளித்தார். அதற்குமேல் தமிழர்களுக்கு எதனையும் கொடுக்க அரசாங்கத்தால் முடியாது என்றும் அவர் கூறினார். இதனை விடவும் அதிகமான அதிகாரங்களை தமிழருக்கு அரசு வழங்கினால், அரசு மக்களால் புறக்கணிக்கப்பட்டு செயலற்றுப்போக, அதிதீவிர சிங்களக் கட்சிகள் ஆட்சியைப் பிடிக்கும், அதன்பின்னர் தமிழருக்கான தீர்வு குறித்து எவருமே பேசமுடியாது போய்விடும் என்றும் அவர் எச்சரித்தார். தனது பேட்டியில் இரண்டாம் பகுதியில் எதேச்சாதிகாரத்துடன் செயற்பட்டுவரும் இராணுவத்தை அரசாங்கம் கட்டுப்படுத்தாது இருப்பது குறித்து ராம் லலித்திடம் கேட்டார். இராணுவத்தினரின் பழிவாங்கல்த் தாக்குதல்களை லலித் மறுக்கவில்லை, நடப்பது உண்மைதான் என்று ஒத்துக்கொண்டார். ஆனால், அந்தப் பழிவாங்கல்த் தாக்குதல்களை அவர் நியாயப்படுத்தினார். தமது சகாக்கள் கொல்லப்படும்போது அவர்கள் தமது கட்டுப்பாட்டை இழந்து பழிவாங்கல்த் தாக்குதல்களில் ஈடுபடுகிறார்கள் என்று கூறினார். இராணுவத்தினரைக் கட்டுக்குள் கொண்டுவருவதற்கு சாதாரண சட்ட நடைமுறைகளையோ அல்லது இராணுவ நீதிமன்றங்களையோ அமைத்து ஏன் படுகொலைகளைத் தடுத்து நிறுத்த முடியாது என்று ராம் கேட்டார். இக்கேள்விக்கு சட்டரீதியாகப் பதிலளித்த லலித், போதிய ஆதாரங்கள் இல்லாமல் குற்றஞ்சாட்டுவதென்பது சாதாரண சட்ட வழக்குகளுக்கு பொருந்தாது என்றும், இராணுவத்தினருக்கு சட்ட விலக்கல்களும், சிறப்புரிமைகளும் இருப்பதாகவும் அவர் கூறினார். தொடர்ந்து பேசிய லலித், தாக்குதல் நடத்தப்படும் இடங்களுக்கு அருகில் வசிக்கும் பொதுமக்கள் இராணுவத்தினர் மீது தாக்குதல் நடத்த பயங்கரவாதிகள் முயல்வது குறித்து இராணுவத்தினருக்குத் தகவல் வழங்கத் தவறுவது பாரிய குற்றமாகும் என்றும் தெரிவித்தார். லலித்துடனான பேட்டியின் பின்னர் ஹிந்துப் பத்திரிக்கை தமது மூத்த செய்தியாளரான எஸ்.பார்த்தசாரதியை யாழ்ப்பாணத்தில் நிலவும் சூழ்நிலையினை அறிந்துவருமாறு அனுப்பியது. கொழும்பு வந்த பார்த்தசாரதி, யாழ்ப்பாணம் செல்லும் யாழ்தேவி புகையிரதத்தில் பிற்பகல் 2 மணிக்கு கொழும்பு புறக்கோட்டையில் இருந்து ஏறினார். 1984 ஆம் ஆண்டு ஐப்பசி மாதத்தின் நடுப்பகுதியில் யாழ்ப்பாணத்தில் நிலவிய பதற்றமான சூழ்நிலையினை இரு பாகங்களாக ஐப்பசி 16 மற்றும் 18 ஆம் திகதிகளில் ஹிந்துவில் வெளியிட்டார். அந்த அறிக்கையில் இருந்து சில பகுதிகளை நான் இங்கு இணைக்கிறேன். குறிப்பாக 20 ஆண்டுகளுக்கு முன்னர் (2005 ஆம் ஆண்டின்படி) ஹிந்துப்பத்திரிக்கை இப்படுகொலைகளை "இனக்கொலை" எனும் பதத்தினைப் பாவித்து விளித்திருந்தது என்பதை வாசகர்கள் கவனித்தல் வேண்டும். "இராணுவத்தினரின் வன்முறைகளும், கலாசார இனக்கொலையும்" என்கிற தலைப்பில் இந்த அறிக்கை வெளிவந்திருந்தது. "யாழ்ப்பாணத்திற்குச் செல்லும் ஒற்றை ரயிலில் ஏறி அமர்ந்துகொண்ட இந்தச் செய்தியாளர், ரயில் தமிழர் பகுதிக்குள் சென்றதும் பயணிகள் அனைவரும் பதற்றத்துடன் காணப்பட்டதை உணர்ந்தார். இறுகிய முகத்துடன் காணப்பட்ட இராணுவ வீரர்கள் தமது துப்பாக்கிகளை சுடுவதற்கு ஆயத்தமாக கைகளில் ஏந்தி வைத்துக்கொண்டு, அப்பெட்டியெங்கும் நிரம்பிக் காணப்பட்டனர். இன்னொரு நாட்டினுள் நுழைவது போன்ற மனப்பான்மையுடன் செயற்பட்ட அந்த இராணுவ வீரர்கள் அப்பெட்டியில் இருந்த தமிழர்களை மிரட்டி அவர்களின் அடையாள அட்டைகளைப் பரிசோதித்துக்கொண்டிருந்தனர். மாலையாகி, ரயில் யாழ்ப்பாணத்தை அடைந்ததும் ரயில் பிளட்போமில் பெரிய சனக்கூட்டம் நிரம்பி வழிந்தது. ஆனால், இவர்கள் எவரும் அங்கு நின்றிருந்த இராணுவத்தினரின் கழுகுப் பார்வையில் இருந்து தப்ப முடியவில்லை. யாழ்ப்பாண நகருக்கு முதன்முதலாக வரும் ஒருவருக்கு அந்த நகரம் இயல்பாகவும், அமைதியாகவும் இருப்பது போன்று தோன்றலாம். ஆனால், சில மணிநேரத்திற்குள் அந்த அமைதியும், இயல்புநிலையும் வெறும் மாயை என்பதும், அவற்றிற்குப் பின்னால் தொடர்ச்சியான பதற்றமும், அச்சமும் நிலவுவதும் தெரிந்துவிடும். வீதிகளில் சிறிய இடைவெளிவிட்டு நிரைகளாக இராணுவக் கவச வாகனங்களும், ட்ரக் வண்டிகளும் வேகமாக ரோந்துபுரிவதும், வீதியால் செல்லும் மக்களை உரசிக்கொண்டு போவதும் புரியும். தமது சொந்தத் தாயகத்தில், கைதிகள் போலத் தமிழ் மக்கள் அடையாள அட்டைகளைக் காவித்திரிய வேண்டும் என்று இராணுவம் வலியுறுத்தியிருக்கிறது, இதுவும் கிட்டத்தட்ட தென்னாபிரிக்கா போலத்தான் இருக்கிறது என்று அரசாங்க உத்தியோகத்தர் ஒருவர் என்னிடம் கூறினார். உங்கள் பார்வைக்குத் தெரிவதை அப்படியே நம்பிவிடாதீர்கள், சாட்சியங்களுடன் அவற்றை கண்டு உணருங்கள் என்று பயம் கலந்த பதற்றத்துடன் இரகசியமாக என்னிடம் பேசினார் அந்த அரசாங்க அதிகாரி". புரட்டாதி மாதத்தின் இறுதிப்பகுதியிலும், இந்த மாதத்தின் ஆரம்பத்திலும் பார்த்தசாரதி யாழ்ப்பாணத்தின் பல பகுதிகளுக்குச் சென்றுவந்தார். அப்பாவி மக்கள் மீது மூர்க்கத்தனமான தாக்குதலை இராணுவம் நடத்திவருவதை பார்த்தசாரதி கண்டார். இவ்வாறான பல தாக்குதல் சம்பவங்கள் யாழ்க்குடா நாடெங்கும் பரவலாக நடந்து வந்தது. தாக்கப்பட்டு உயிர்தப்பியவர்களை அவர் பேட்டிகண்டபோது, "உங்களை எதற்காகத் தாக்குகிறார்கள்?" என்று வினவியபோது, "பையன்கள் கொள்ளையிட்டார்களாம், இராணுவ ஆயுதக் கிடங்குகளுக்குள் நுழைந்து ஆயுதங்களை எடுத்துச் சென்றார்களாம், நகைகளைத் திருடினார்களாம் என்று எங்கள் மேல் பழிவாங்கல்த் தாக்குதல்களை நடத்துகிறார்கள். ஆனால், இன்றுவரை அவ்வாறு செய்த பையன்களில் ஒருவரைத்தன்னும் அவர்களால் பிடிக்க முடியவில்லை. அப்பாவி இளைஞர்களை பிடித்துச் சென்று, கடுமையான சித்திரவதைகளுக்கு உட்படுத்திக் கொல்கிறார்கள் அல்லது நடைபிணங்களாக வெளியே விடுகிறார்கள்" என்று அவர்கள் கூறினார்கள். பார்த்தசாரதி சென்ற இடமெல்லாம் இதே கதைதான் திரும்பத் திரும்ப மக்களால் அவருக்குச் சொல்லப்பட்டது. தம்மீதான போராளிகளின் தாக்குதல்களுக்குப் பழிவாங்கும் முகமாக 18 வயதிலிருந்து 35 வயது வரையான இளைஞர்களை சுற்றிவளைத்துப் பிடித்துச் சென்று கடுமையான சித்திரவதைகளை அவர்கள் மீது நடத்துகிறார்கள். சுற்றியிருக்கும் வீடுகளையும் கடைகளை தீயிட்டுக் கொளுத்துகிறார்கள். சந்தைகளும், ஆலயங்களும் அவர்களுக்கு விதிவிலக்கல்ல. ஒவ்வொரு இடத்திற்குள்ளும் ஆழமாகச் செல்ல செல்ல, அப்பகுதியில் இராணுவம் புரிந்துவரும் அட்டூழியத்தின் அளவும், மக்கள் எதிர்கொண்ட அழிவுகளின் அளவும் தெளிவாக வெளித்தெரிய ஆரம்பிக்கும். ஒருவர் எங்கு சென்றாலும், ஏதோவொரு வீட்டில் கொல்லப்பட்ட தமது உறவுகளுக்காக சொந்தங்கள் அழுதுகொண்டிருப்பதும், சுற்றிவளைத்துப் பிடிக்கப்பட்டுக் காணாமற் போன தமது பிள்ளைகளுக்காக‌ பெற்றோர்கள் அலறுவதும் கேட்டுக்கொண்டிருக்கும். குறைந்தது நூறு முறைகளாவது இராணுவம் தம்மீது மிகக் கொடூரமாகத் தாக்குதலில் ஈடுபட்டதென்பதை யாழ்ப்பாணத்து மக்கள் அவரிடம் சொல்லக்கேட்டர் அவர். யாழ்ப்பாணத்து மக்களால் சொல்லப்பட்ட இராணுவத்தினரின் பழிவாங்கும் தாக்குதல்ச் சம்பவங்களின் பட்டியல் முடிவின்றி நீண்டு சென்றுகொண்டிருந்தது. "ஆயுதம் தரிக்காத அப்பாவி ஆன்களும், பெண்களும், சிறுவர்களும் பல்லாயிரம்பேர் கொண்ட கனரக ஆயுதம் தரித்த சிங்கள இராணுவம் தம்மை யாழ்ப்பாணத்தில் முற்றுகை ஒன்றிற்குள் வைத்திருப்பதாக உணர்கிறார்கள். வங்கியொன்றில் முகாமையாளராகப் பணிபுரியும் ஒரு தமிழர் பார்த்தசாரதியிடம் பேசுகையில், வங்கியில் போராளிகள் கொள்ளையில் ஈடுபட்டிருக்கிறார்கள் என்று நாம் முறையாக பொலீஸாரிடமோ இராணுவத்தினரிடமோ முறைப்பாடு செய்தாலும், அவர்கள் அன்று வரப்போவதில்லை. போராளிகள் அங்கிருந்து அகன்று சென்றபின்னர், மறுநாள், தமக்கு சேதம் ஏதும் ஏற்படப்போவதில்லை என்பதை உறுதிப்படுத்திவிட்டு அங்கு வருவார்கள். வந்ததும் அங்கிருக்கும் பொதுமக்கள் மீது கண்மூடித்தனமாகத் துப்பாக்கித் தாக்குதல் நடத்தி அப்பாவிகளைக் கொன்று குவிப்பார்கள்". "உங்களின் சகாக்களின் காயங்களுக்கு நாம் மருந்திட வேண்டுமென்றால், அப்பாவிகளைக் கொல்வதை நிறுத்துங்கள் என்று யாழ்ப்பாண வைத்தியசாலையின் வைத்தியர்கள் சிலர் இராணுவத்தைக் கடிந்துகொண்டபோதுதான் தமிழர்களைக் கொல்வதை அப்போதைக்கு, அவர்கள் நிறுத்தினார்கள்" என்று உயிர்தப்பிய இன்னொருவர் கூறினார். பொலீஸார் பயம் காரணமாக பொலீஸ் நிலையங்களுக்குள் முடங்கிவிட, சட்டம் ஒழுங்கு சீர்குலைந்த சூழலில் சில சமூக விரோதிகள் தம் கைவரிசயினைக் காட்டவும் தயங்கவில்லை என்றும் மக்கள் கூறினார்கள்.
  28. கத்தார் நாட்டுடன் செய்து கொள்ளப்படட $78 பில்லியன் ஒப்பந்தத்துக்காகன பரிசு. மிக பெரிய விலை கொடுக்க பட்டிருக்கிறது.
  29. அறிவித்தால் மட்டும் போதாது. அதை செயலில் காடட வேண்டுமில்லையா. அதைத்தான் இப்போதும் செய்கிறார்கள். நம்மட ஆட்கள் மாதிரி வாயால் வடை சுடுபவர்கள் அல்ல. எனக்கு இன்னும் ஞாபகம் இருக்குது. ஒரு முறை காசி ஆனந்தன் ஒரு அரசியல் கூடத்தில் பேசுகிறார். பழம் பழுக்கும் , அப்போது வௌவால்கள் வரும், வவ்வால்களின் கால்களில் விடுதலைக்குரிய ஆயுதங்கள் இருக்கும், தமிழ் ஈழம் கிடைக்கும் என்கிறார். இப்போது என்ன பிச்சைவேணாம் நாயை பிடி என்ற நிலைமைதான். சிங்களவன் சொன்னதை செய்கிறான்.
  30. இப்பதான் ஒரு கூடடம் தப்பினோம் பிழைத்தோம் என்று அங்கிருந்து ஓடிப்போய் இருக்கிறார்கள். அதுக்குள்ள இவருமா? கெதியா வர சொல்லுங்க. 😛
  31. 90 களில் முற்றவெளியில் நடந்த இசை நிகழ்ச்சி. யாழ் முற்றவெளி இசை நிகழ்ச்சி:- யாழ் முற்றவெளி முற்று முழுதாக மக்களினால் நிரம்பியிருந்தது, இசையினையும் நிகழ்ச்சிகளையும் காணக் கூடிய மக்களின் எண்ணிக்கை அளவிட முடியாதது. அடுத்தடுத்த நாள்களில் வெளிவந்த வீரகேசரி கூடிய மக்களின் தொகை 'ஐந்து இலட்சம் ' எனச் செய்தி வெளியிட்டது ( நிகழ்வில் தொடக்கம் முதல் இறுதி வரை இருந்தவன் என்ற முறையில் அரை மில்லியன் என்ற தொகை சற்று அதிகம் தான், பாதியளவு இருக்கலாம் என எண்ணுகின்றேன்). இலங்கைப் படையினர் நிகழ்வினை அச்சுறுத்திக் குழப்ப முயன்ற போது சில எதிர்ப்புக் குரல்கள் எழுந்திருந்தனவே தவிர மற்றும் படி, நிகழ்வு இறுதி வரை அமைதியாகவே இடம் பெற்றது. நிகழ்வினை ஒழுங்குபடுத்திய மாணவர்களில் நானும் ஒருவன் என்பதால் மேடை உட்படப் பல இடங்களுக்கும் சென்று வந்ததில் மது போதையில் ஒருவரைக் கூடக் காணவில்லை. எந்தவொரு கெட்ட சொல்லும் எங்குமே ஒலிக்கவில்லை. நள்ளிரவில் நிகழ்ச்சி முடிந்த போதும், நிகழ்வுக்கு வந்திருந்த பெண்கள் உட்பட யாருக்கும் எந்த அச்சுறுத்தலும் இருக்கவில்லை. தடுப்பரண்கள் எதுவுமில்லை. வெறும் கயிறு மட்டுமே மேடைக்கு முன் கட்டப்பட்டிருந்தது. கூடியிருந்த இலக்கக் கணக்கான ( இலட்சக் கணக்கான) இளைஞர்களில் யாருமே கயிற்றினைத் தாண்டி வர முயலவில்லை. அப்படிக் கட்டுக்கோப்பாக இசை நிகழ்ச்சி நடந்து முடிந்தது 23.04.1990 இல் ஒரு திங்கள் கிழமையன்று. இசை நிகழ்ச்சியினை நடாத்தியது தேனிசைச் செல்லப்பா. இந்தியப் படை வெளியேறிய பின்பு, இலங்கைப் படையுடனான சண்டை தொடங்குவதற்கு இடைப்பட்ட காலத்தில் நடைபெற்ற நிகழ்வு அது. புலிகளால் ஏற்பாடு செய்யப்பட்ட நிகழ்வு. புலிகளின் மாணவர் ( SOLT) அமைப்பிடமே நிகழ்வினை ஒழுங்குபடுத்தி, மக்களை அமர வைக்கும் பொறுப்பு கொடுக்கப்பட்டிருந்தது. போராளிகள் மேடைப் பாதுகாப்பினையும், வெளிப் பாதுகாப்பினையும் மட்டுமே முதலில் பார்த்துக் கொண்டனர். அப்போது முற்றவெளிக்கு அருகே கோட்டையில் குடியிருந்த இலங்கைப் படையினரின் கண் முன்னமே நிகழ்வு நடந்தது, அதனால் முதலில் சீருடை அணிந்த/ ஆயுதம் தரித்த புலிகள் தமது இருப்பினை மறைத்து, ஊர்திகளுக்குள்ளேயும், மறைவிடங்களிலும் மட்டுமே இருந்தனர். படையினரும் முதலில் ஆயுதம் எதுவுமின்றி கோட்டை மதில் மீது வந்து அமர்ந்து வேடிக்கை மட்டுமே பார்த்தனர். மக்கள் கூடக் கூட, படையினருக்குப் பொறாமை வந்திருக்க வேண்டும். சிறிது சிறிதாக ஆயுதங்களை மக்கள் கூட்டம் முன் காட்டிக் கொண்டு வந்தனர். அதன் பின்னரே புலிகளும் ஆயுதங்களுடன் சுற்றி வர வெளிப் பாதுகாப்பினைப் பார்த்துக் கொண்டனர். இரு தரப்பினரும் சில மீற்றர் இடைவெளியில் ஆயுதங்களுடன் நேருக்கு நேர் நீட்டியபடி இருந்தனர். இசை நிகழ்ச்சி தொடங்கியது. மக்கள் எதனையும் பொருட்படுத்தவில்லை, இசையில் மூழ்கிக் கிடந்தனர். இதே யாழ் மக்கள் தான். நிகழ்வின் நோக்கமும், கருப்பொருளும் அப்படிப்பட்டவை. நம்புங்கள் இதே முற்றவெளிதான். முற்றவெளியில் அன்று ஒலித்த தேனிசைச் செல்லப்பாவின் குரல் இன்றும் காதில் ஒலிக்கின்றது- " நம்புங்கள் தமிழீழம் நாளை கிடைக்கும், நாட்டின் அடிமை விலங்கு உடைக்கும் " . ஆம் அன்று அங்கு கூடிய மக்களுக்கு ஒரு குறிக்கோள் இருந்தது, அதனால் ஒழுங்கும் இருந்தது, நேற்று முற்றவெளியில் அடிதடி செய்தோருக்கு பொதுவான இலக்கும் இல்லை, தனிப்பட்ட இலக்குகளுமில்லை. இலக்கில்லாத பயணங்கள் தறி கெட்டே போகும்.🙏🙏🙏 வாட்சப்பில் வந்தது
  32. நடந்த விடயத்தை ஒரு பாடமாக எடுத்து எதிர்வரும் காலங்களில் இவ்வாறான நிகழ்ச்சிகளை ஏற்பாடு செய்யும் போது கவனம் தேவை. சிறந்த முன்னேற்பாடுகள் அதிகளவில் கூட்டம் கூடும் போது கூட்டத்தை கட்டுப்படுத்தும் தந்திரோயாபாயத்தில் தேர்ச்சி பெற்ற ஒருங்கிணைப்பாளரிடம் நிகழ்ச்சி ஒருங்கிணைப்பை கொடுக்க வேண்டும் நிகழ்சிக்கான பொலிஸ் பாதுகாப்பு ஏற்பாடு மிக அவசியம். ஐரோப்பிய நாடுகளில் Event management துறைக்கு ஆட்களை அனுப்பி பயிற்றுவிக்கலாம். இல்லையெனில் கொழும்பு, மட்டக்களப்பு போன இடங்களில் இவ்வாறான பிரமாண்டமான மகிழ்ச்யாசியான நிகழ்ச்சிகளை நடத்தினால் மக்கள் அங்கு மகிழ்சசியாக நிகழ்ச்சியை ரசித்து செல்வர். யாழ்ப்பாணம் இதற்கு சரிப்பட்டு வரமாட்டாது.😂
  33. இப்பொழுதெல்லாம் வலியை உணர்த்த அதே தடியை தான் எடுக்க வைக்கிறார்கள்.
  34. அவர் அப்படி சொல்வதுடன் நிற்கவில்லை. அங்கு சகல வசதிகளுடன் கூடிய பாடசாலை அமைப்பதட்கும் பணமும் ஒதுக்கி விடடார். ரணில் ஐயாவின் ஐடியா உலக தலைவர் ஆக வேண்டுமென்பது. என்ன ஸ்ரீ லங்கா மக்கள்தான் அதனை ஏற்றுக்கொள்ளுகிறார்கள் இல்லை.
  35. ஏற்கனவே யாழ் களத்தில், இராச வன்னியன் அல்லது இன்னொரு தமிழக உறவு ஒன்றின் கேள்விக்கு, தென்னிந்தியர்களை, குறிப்பாக தமிழ்நாட்டினரை (+கேரள கப்பக்கிளங்குகளையும் 😉) இந்தியர்களாக நான் கருதுவதில்லை எனக் கூறியிருக்கிறேன். 🤣
  36. ஜனநாயகத்தின் உச்சம் பல கட்சிகள் இருப்பது .... ஏக பிரநிதிகளாக புலிகள் இருந்த காரணத்தால் தான் எமக்கு சரியான தீர்வு கிடைக்க வில்லை என பலர் சொன்னார்கள் இப்ப பல குழுக்கள் உண்டு இலகுவாக மக்களின் பிரச்சனைக்கு தீர்வு காணலாம்... எங்கே ? அன்று ஏக பிரநிதிகள் ,மாற்று கருத்துக்களை உள்வாங்குவதில்லை என குற்றசாட்டு... இன்று பல குழுக்களாக இருக்கின்றீர்கள் ...ஒரு தலமைத்துவதின் கீழ் வாங்கோ...பேசிக்கலாம் என்று சொல்லுறீயள்... ஒரு காலத்தில் எது நடந்தாலும் புலிகள் என கூறுபவர்கள் ....இன்று எது நடந்தாலும் புலம் பெயர் தமிழர்கள் மீது குற்றசாட்டு...
  37. 1980 களில் நிகழ்ச்சி நடை பெற்ற ஞாபகம் எனக்கு இல்லை...இளைஞர்கள் ஒன்று கூடினால் குரங்கு சேட்டை விடுவது சகஜம்....இப்படியானவர்கள் செய்யும் சமுக விரோத செயல்களை தடுப்பதற்காக தான் "சட்டம் ஒழுங்கை நிலை நாட்ட காவல் துறை " இருக்கின்றது யாழ் நகரில் 10 பேர் கலந்து கொள்ளும் ஊர்வலத்திற்கு எத்தனை பொலிசார் ,இராணுவம் ,மற்றும் அதிரடி படைகள் எல்லாம் வந்து காவல் புரிகின்றனர் ..... இவ்வளவு மக்கள் கூட்டம் வந்த பொழுது சரியான பாதுகாப்பு வழங்க ஏன் தவறி விட்டனர்...மேலும் மதுபானம்,கஞ்சா போன்ற போதை தரும் பொருட்களை பாவித்த இளைஞர்கள் உள்ளே செல்லும் பொழுது காவல் துறையினருக்கு நன்றாக விளங்கியிருக்கும் இவர்கள் சமுக விரோத செயல்களில் ஈடுபட போகின்றனர் என ... யாழ் நகர இளைஞர்கள் 100% தங்க கம்பிகளாக இருக்க வேணும் என நெட்டிசன்மார் நம்பினால் அது அவர்கள் தப்பு.... ஏன் இப்படி அசம்பாவிதம் நடந்தது என பொலிசாரிடம் அவர்களின் மேலதிகாரிகள் விசாரித்து அடுத்த முறை இப்படியான அசம்பாவிதங்கள் நடை பெறாமல் தடுக்க முயற்சி எடுக்க வேணும் ... ஐக்கிய இலங்கையை கட்டி எழுப்ப முனையும் அரசாங்கங்கம் இதுகளை கவனத்தில் எடுக்க வேண்டும் ... யாழ்ப்பாணத்து இளைஞர்கள் 1980 களிலும் அப்படி,2024 இலும் அப்படி அவர்களை திருத்தமுடியாது ...கவாலிகள் என‌ முத்திரை குத்தி கடந்து செல்லாமல்
  38. இது வரைக்கும் சாத்தியம் இல்லைதானே அதைதான் சொல்ல வந்தேன் ஒரு சில நாட்டுக்காரர் ( புலத்து தமிழர்கள்) போய் அரச குழுவினரை சந்தித்தால் அவர்களை விமச்சிப்பது இன்னொரு குழு இப்படி குழுவாக இருக்கிறோம் இந்த நிகழ்வை எடுத்துக்குக்கொண்டால் வெளிநாடுகளில் இருப்பவர்கள் சிலருக்கு இந்த நிகழ்வு அதுவும் யாழ்ப்பாணத்தில் நடப்பது பிடிக்கவில்லை அவர்களின் விமர்ச்னங்கள் நேரடியாக முகநூலில் இருந்தது மாறாக ஒரு குழு நடக்க வேண்டும் எனவும் இருந்தது ஆக மொத்தத்தில் தமிழன் குழுக்களாகவே
  39. மரக்கிளையில் இருந்தபடி மரக்கிளையை வெட்டும் பைத்தியமும் அதற்கு ஒரு காரணத்தை வைத்திருக்கும். நாம் பாவம் இன்னும் கொஞ்ச நேரத்தில் புரிந்து விடும் என்று விட்டு நமது நேரத்தை வீணாக்காமல் நகர்வது நல்லது.
  40. நீங்களும் சிட்னி முருகனும் சேர்ந்து ஒரு சந்திப்பை ஜனாதிபதியுடன் போடுவது
  41. 5 டானியல்(32), சேர்பிய நாட்டைச் சேர்ந்தவன். வேலை வாய்ப்புத் தேடி தனது மனைவி நத்தலி, பத்து, பன்னிரண்டு வயதான இரண்டு பிள்ளைகளுடன், 2022 செப்ரெம்பரில் யேர்மனிக்கு வந்தவன். தெரிந்தவர்கள் மூலமாக ஸ்வேபிஸ்ஹால் நகரத்துக்கு வந்து சேர்ந்தான். அவர்களுடன் சேர்ந்தே கட்டிட வேலைகள், தோட்ட வேலைகள் என்று கிடைத்த வேலைகளைச் செய்து கொண்டிருந்தான். வேலை வாய்ப்புகளுக்காக கிழக்கு ஐரோப்பிய நாடுகளில் இருந்து பலர் வந்து போய்க் கொண்டிருக்கிறார்கள். இதில் அநேகமானவர்கள் கட்டிடத் தொழிலிலேயே கவனம் செலுத்துகிறார்கள். சிலர் அஸ்பாரகஸ் பிடுங்கி எடுப்பது ஸ்ரோபரி பழங்கள் பறிப்பது போன்ற வேலைகளை தோட்டங்களிலும் செய்வதுண்டு. கறுப்பு வேலை செய்து துரிதமாக பணம் சம்பாதித்துக் கொண்டு தங்கள் நாட்டுக்குப் போய் விடுபவர்களும் இருக்கிறார்கள். ஆனால் டானியல் குடும்பமாக யேர்மனிக்கு வந்தது, நிரந்தரமாகத் தங்குவதற்கான எண்ணமாக இருந்திருக்கலாம். டானியலின் மனைவி நத்தலி, அவுஸ்திரியாவில் சில காலம் வசித்ததால் அவளுக்கு யேர்மனிய மொழி தெரிந்திருந்தது. வேலைகள் ஓரளவுக்குக் கிடைக்க, வாழ்வதற்கு ஓரளவு பணம் அவர்களுக்கு வர ஆரம்பித்தது. தெரிந்தவர்களுடன் தங்கியிருந்தாலும் தங்கள் குடும்பத்துக்கு என்று தனி வீடு தேவை என்பதை உணர்ந்து, அவர்கள் வீடு தேட ஆரம்பித்தார்கள். அப்பொழுதுதான் டானியல் குடும்பத்துக்கு ரன்ஜா (34) அறிமுகமானார். ரன்ஜாவும் அவளது கணவரும் ஸ்வேபிஸ் ஹாலுக்கு அடுத்த நகரத்தில் புதிதாக ஒரு வீட்டை வாங்கியிருந்தார்கள். அங்கு சென்று வாழ்வதற்காக, தற்போது அவர்கள் வாழும் வீட்டை வாடகைக்கு, அதுவும் தற்காலி கமாக யாருக்காவது கொடுக்கலாம் என்று விளம்பரம் செய்ய, முதலாவதாக அவர்கள் முன் வந்து நின்றது டானியலும், அவனது மனைவி, பிள்ளைகளுமே. 1300 யூரோக்கள் மாத வாடகைக்கு அந்த வீடு டானியலுக்குக் கிடைத்தது. நத்தலிக்கு மொழி தெரிந்ததால் டானியலுக்கு எந்தச் சிக்கலும் இல்லை. வேலைக்குப் போவது. மாலையில் நண்பர்களுடன் பொழுதைக் கழிப்பது என்று அவன் எப்பொழுதும் வெளியிலேதான் இருந்தான். நத்தலி மட்டும் வீட்டில் இருந்தாள். ஹைடமேரியின் கொலையாளியைக் கண்டு பிடிக்க முடியாமல் பொலிஸார் திண்டாடிக் கொண்டிருந்தார்கள். சில தடயங்களை அவர்கள் சேகரித்து வைத்திருந்தாலும், அடுத்து என்ன செய்வது என்று தெரியாமல் விழித்துக் கொண்டிருந்தார்கள். நாட்கள் ஒவ்வொன்றாகக் கடக்க, 2020இல் நடந்த கொலையையே துப்புத் துலக்கி கண்டு பிடிக்காதவர்கள், இதைக் கண்டு பிடித்து விடுவார்களா? என்ற ஏளனப் பேச்சு வரத் தொடங்கியது. அதாவது பொலிஸ் துறையின் கையாலகத் தன்மையைக் குறித்து விமர்சனம் பெரிதாக வர ஆரம்பித்தது. மீண்டும் ஒரு புதன்கிழமை. 25.01.2023 ஸ்வேபிஸ் ஹாலில் இருந்து பத்து கிலோ மீற்றர் தூரத்தில் உள்ள மிஹேல் பாக் என்ற கிராமம் அல்லோலகலப்பட்டது.” ஹேரயுற்றே (83) என்ற மூதாட்டி கொல்லப்பட்டார் " என்ற செய்தி வந்தது. இருந்த தலையிடி காணாதென்று பொலிஸாருக்கு மேலும் தலையிடி கூடியது? ஹேரயுற்றே சாவியால், தனது வீட்டுக் கதவைத் திறந்து உள் நுளையும் போது, பல தடவைகள் மறந்து போய் சாவியை கதவிலே விட்டு விடுவதுண்டு. அதே குடியிருப்பில் வசிக்கும் ஒரு மூதாட்டி இதை அவதானித்து ஹேரயுற்றேயிடம் பல தடவைகள் எச்சரித்தும் இருக்கிறார். “இங்கை யார் வரப்போயினம்?” என்று ஹேரயுற்றே அவருக்குப் பதில் சொல்லியிருக்கிறார். ஆனால் கொலையாளி வந்திருந்தான். கதிரையில் சாய்ந்தபடி அவர் உடல் இருந்தது. அவரைச் சுற்றி இரத்தங்கள் தெறித்திருந்தன. தலை சிதைக்கப்பட்டிருந்தது. கை,தோள்பட்டை, தலை ஆகிய பகுதிகளில் குறைந்தது 26 தடவைகள், தாக்கப்பட்டு அவர் கொலை செய்யப்பபட்டிருப்பதாக அறிக்கை வந்தது. ஹேரயுற்றே வீட்டுக்கு வெளியே வெறும் 100 மீற்றர் தூரத்தில் ஒரு புதருக்குள் இரண்டு கையுறைகளையும், ஒரு சுத்தியலையைம் பொலிஸார் கண்டெடுத்தார்கள். ஹைடமேரியின் கொலைக்கான ஆயுதம் கிடைக்காது திணறிக் கொண்டிருந்த பொலிஸார் , ஹேரயுற்றேயின் கொலைக்கான ஆயுதம் கிடைத்த போது மிகுந்த உசாரானார்கள். அதைத் துப்புத்துலக்குதலுக்கான பெரும் உந்துதலாக அவர்கள் எடுத்துக் கொண்டார்கள். புதிதாக வாங்கிய சுத்தியல்.அதன்மேல் ஒட்டப்பட்டிருந்த விலை கூட இன்னமும் அகற்றப்படவில்லை. பழுப்பு நிறமான கைப்பிடியின் பிற்பகுதி சிவப்பு நிறத்தில் இருந்தது. அந்த சுத்தியலைத் தயாரித்த நிறுவனம் கோனெக்ஸ் என்றிருந்தது. அதை ஸ்வேபிஸ்ஹாலில் விற்பனை செய்பவர்கள் ‘ஹேசெலே’ கட்டிட பொருட்கள் விற்பனை நிலையம் என்பதும் தெரிந்தது. இரண்டு பொலிஸார் ஹேசெலே கட்டிட பொருட்கள் விற்பனை நிலையத்துக்குச் சென்றார்கள். “சமீபத்தில் இந்தவகையான சுத்தியலை யாராவது வாங்கியிருக்கிறார்களா? என்று பார்த்துச் சொல்லுங்கள்” என உரியவர்களிடம் கேட்டார்கள். கணினியில் நன்றாக அலசிப் பார்த்த அவர்கள் சொன்னார்கள், “யாரும் சமீபத்தில் இந்தச் சுத்தியலை வாங்கவில்லை” என்று “வேறு எங்கே வாங்கலாம்” பொலிசார் கேட்டார்கள். “ஒன் லைனில் கிடைக்கிறது” என்றார்கள்.
  42. இங்கே மேற்கை ஆதரிப்போரும், எதிர்ப்போரும் புரியும் வாதங்களுக்கு நடுவிலே ஒருவர் புலிகளைப் பயங்கரவாதிகள் என்று கூறிவிட்டுப் போகிறார். அது உங்கள் இருவரினதும் கண்களுக்குத் தெரியவில்லை, நீங்கள் உங்கள் சண்டையில் மும்முரமாக இருக்க, சந்தில் சிந்துபாடிவிட்டு ஒருத்தர் போயிருக்கிறார். முடிந்தால், புலிகள் பயங்கரவாதிகள் இல்லை என்று கூறுங்கள் . அல்லது, அமைதியாக இருந்து அவர் சொல்வதை ஏற்றுக்கொள்ளுங்கள். கத்தோலிக்கர்களின் இயல்பான மேற்குச் சார்பு நிலையும், வேதாகமத்தின் வழியான யூதச் சார்பு நிலையும் சொந்த மக்களின் விடுதலைப் போராட்டத்தைப் பயங்கரவாதம் என்று கொச்சைப்படுத்திவிட்டுச் செல்ல தூண்டியிருக்கிறது. உங்களுக்கென்ன, அமெரிக்கா ஈரான் சண்டையில் நீங்கள் திளைத்திருங்கள் !
  43. 4 ஸ்வேபிஸ் ஹால் நகரசபைக்கு உட்பட்டதுதான் இல்ஸ்கொபன் கிராமம். இது ஸ்வேபிஸ் ஹால் நகரில் இருந்து 10 கிலோ மீற்றர் தூரத்தில் இருக்கும் இன்னுமொரு அமைதியான கிராமம். 87 சதவீதமான விவசாய நிலப்பரப்பைக் கொண்டது, இங்கு 6000க்கு சற்று அதிகமான மக்களே வசிக்கிறார்கள். பெரிய தொடர்மாடிக் குடியிருப்புகள் அதிகம் இல்லாத இந்தக் கிராமத்தில் தனித்தனி வீடுகளிலேயே பெரும்பாலானோர் வசிக்கிறார்கள். ஜனவரி 16, திங்கட்கிழமை அன்று, வீட்டின் அழைப்புமணிச் சத்தம் கேட்டு, முதியவர் (86) வந்து கதவைத் திறந்து பார்த்தால் அங்கே, கறுப்புக் கண்ணாடி அணிந்த ஒருவர் தனது கையில் லீடில் (Lidl super market) சுப்பர் மார்க்கெற்றின் வாராந்த பிரசுரங்களுடன் நின்றார். பனி விழும் குளிர்காலம். சூரியன் ஓய்வெடுக்கும் தருணம். கறுப்புக் கண்ணாடியுடன், சிரித்துக் கொண்டே, தன் வீட்டுக்கு முன்னால் நின்ற அந்நபரைக் கண்டதும், முதியவருக்கு ஆச்சரியமாக இருந்தது. “என்ன வேண்டும்?” என்று கேட்டார் அவன் கையில் இருந்த லீடில் சுப்பர் மார்க்கெற்றின் வாரந்த பிரசுரங்களைத் தூக்கிக் காண்பித்தான். “இதெற்கெல்லாம் பெல் அடிக்கத் தேவையில்லை. இந்தத் தபால் பெட்டிக்குள் போட்டு விட்டுப் போ” என்றார். அவன் அவரை நெருங்கி வந்தான். ஏதும் பேசவில்லை அவர் கையில் லீடில் சுப்பர் மார்க்கெற்றின் வாரந்தப் பிரசுரத்தைத் திணித்துவிட்டுப் போனான். “யாராயிருக்கும்? நான் சொன்னது இவனுக்கு விளங்கவில்லையா? வின்ரரிலும் கூலிங்கிளாஸ் போட்டிருக்கிறான். தலையில் ஏதாவது பிரச்சனையாக இருக்குமோ?” மனதில் எழுந்த கேள்விகளுடன் முதியவர் வாசல் கதவைச் சாத்திக் கொண்டு உள்ளே போனார். அடுத்தநாள் மதிய நேரம். முதியவர், உணவை முடித்து விட்டு வரவேற்பறையில் இருந்தார். ஒரு குட்டித் தூக்கத்துக்காக அவரது மனைவி ஷோபாவில் படுத்திருந்தார். வீட்டின் அழைப்பு மணி ஒலித்தது. வழமையாக இந்த நேரங்களில் யாரும் அழைப்பு மணியை அழுத்துவதில்லையே என்ற கேள்வி எழுந்தாலும், எழுந்து வந்து கதவைத் திறந்தார். அதே கறுப்புக் கண்ணாடி அணிந்த மனிதன். அதே உடுப்பு. நேற்றையைப் போல் இன்றும் அவன் கையில் லீடில் சுப்பர் மார்க்கெற்றின் பிசுரங்கள். வீட்டின் வாசலில் நின்றபடியே,“நேற்றுத்தானே தந்துவிட்டுப் போனாய். பிறகு எதுக்கு இப்ப? அதுவும் மத்தியான நேரம்” என்று எரிச்சல் கலந்த குரலில் முதியவர் கேட்டார் முதியவரின் கேள்விக்கு அவன் பதில் சொல்லவில்லை. முதல்நாள் போலவே இன்றும் அவரை நெருங்கி வந்தான். தனது வலது கரத்தால் அவன் விட்ட குத்து, அவர் கண்ணாடிக்குக் கீழ், மூக்கின் மேல் வேகமாக வந்து விழுந்தது. வாசல் படியில் நின்ற முதியவர், நிலைதடுமாறி, வீட்டினுள்ளே விழுந்தார். வீழ்ந்தவர் அதிர்ச்சியில் இருந்து மீள முன்னரே அவரது நெற்றியில் அவனது துப்பாக்கி முனை இருந்தது. வெளியில் கேட்ட சத்தங்கள், முதியவரின் மனைவியின் சிறு தூக்கத்தைக் கலைத்து விட்டிருந்தது. ஷோபாவில் இருந்து எழுந்தவரை, கணவனின் “உதவி, உதவி செய்யுங்கள்” என்ற கூப்பாடு விரைவு படுத்தியது. விழுந்திருந்த முதியவரை அவன் காலால் உதைக்க எத்தனித்தபோது, வாசலோடு ஒட்டியிருந்த அறையின் ஒளி புகாத கண்ணாடிக் கதவினூடாக ஒருவர்( முதியவரின்மனைவி ) ஓடி வருவதை அவதானித்தான். யாரோ வருகிறார்கள் என்ற பதட்டத்தில் அவன் கால் ஒரு அடி பின் வைக்க, அந்தச் சந்தர்ப்பத்தை பயன் படுத்தி, தரையில் விழுந்திருந்த முதியவர் தன் காலால் பலம் கொண்ட மட்டும் கதவைத் தள்ள வாசல் கதவு மூடிக் கொண்டது. அவன் வெளியே. அவர்கள் உள்ளே. தகவல் கிடைத்து பொலிஸார் வந்திருந்தனர். கறுப்புக் கண்ணாடி அணிந்திருந்தான் என்பதை முதியவர் மறக்காமல் சொன்னார். அவன் என் நெற்றியில் துப்பாக்கியை அழுத்திப் பிடித்த போது “நீ பணம்” என்று சொன்னான், என்பதையும் சொன்னார். பொலிஸாருக்குப் புரிந்து விட்டது. வந்தவன் வெளிநாட்டுக்காரன் மட்டுமல்ல, சமிபத்தில்தான் யேர்மனிக்கு வந்திருக்கிறான் என்பதுவும். இல்ஸ்கொபன் கிராமத்தின் வீதிகள், பூங்காவனம், விளையாட்டு மைதானம் என்று எல்லா இடங்களிலும் பொலிஸார் தேடினார்கள். அவன் அகப்படவில்லை. “கையில் லீடில் சுப்பர் மார்க்கெற்றின் வாரந்த பிரசுரங்களுடன் கறுப்புக் கண்ணாடியுடன் யாராவது நடமாடியதைப் பார்த்தீர்களா? “ என விசாரித்துப் பார்த்தார்கள். ஒரு பெண் சொன்னாள். “இன்று ஹோம் ஒபீஸ். மதிய இடைவேளைக்கு கொஞ்சம் காற்றாட வெளியே வந்த போது கையில் லீடில் சுப்பர் மார்க்கெற்றின் வாரந்த பிரசுரங்களுடன் ஒருவனைக் கண்டேன். கனிவான முகத்துடன்… “ஹலோ” சொல்லிச் சிரித்தான். நானும் ‘ஹலோ’ சொல்லிவிட்டுப் போனேன்” என்று. ஹேபாப் கடை வைத்திருந்தவர் சொன்னார், “ இங்கு உணவருந்த வருபவர்களை, அவர்கள் வெளியூரா, உள்ளூரா என என்னால் இனம் கண்டு கொள்ள முடியும். அவன் வெளிநாட்டவன்” என்று. ‘வந்தவன் கிராமத்தில் இருப்பதற்கு வாய்ப்பில்லை. அவன் நிச்சயமாக இல்ஸ்கொபனை விட்டு வெளியே போயிருப்பான்’ என்று பொலிஸருக்குப் புலப்பட்டது. “புதிதாக, சந்தேகப்படும்படியான, வெளியாருடைய வாகனங்களை யாராவது கண்டீர்களா?” என்று கேட்டுப் பார்த்தார்கள். கொஞ்சம் பலன் கிடைத்தது. ஒரு கார். அதன் இலக்கத் தகட்டில் பொதிகளை ஒட்டும் நாடாவால் ( duct tape)ஒட்டிய தடயங்கள் இருந்தன. அந்தக் கார் VW station wagon, Silver நிறம் என அடையாளங்களைத் திரட்டிக் கொண்டார்கள். தேடுதலின் போது, சம்பவம் நடந்த இடத்தில் இருந்து 250 மீற்றர் தூரத்தில் உள்ள விளையாட்டு மைதானத்தை அண்டிய பகுதியின் புதர்களுக்குள் இருந்து ஒரு சோடி கையுறைகளையும் ஒரு விளையாட்டுத் துப்பாக்கியையும், லீடில் சுப்பர் மார்க்கெற்றின் வாரந்த பிரசுரங்களையும் பொலிஸார் கண்டெடுத்தார்கள். அவனுடைய அங்க அடையாளங்களை முதியவரிடம் பெற்று, ஒரு கற்பனை முகத்தை (Fandom image) வரைய ஏற்பாடு செய்தார்கள்.
  44. 3 ஏறக்குறைய 30 சென்டிமீட்டர் நீளத்துக்குக் காய்ந்து போயிருந்த நிலையில் அந்தக் கறை இருந்திருக்கிறது. வீட்டின் வாசலில் இருந்து சமையல் அறைக்குப் போகும் பாதையில் இருந்த இரத்தக்கறை, பார்வைக்கு இலகுவாகத் தெரிந்து விடும் விதமாகவே இருந்திருக்கிறது. ஆனாலும் பொலிஸாரின் கண்களுக்கு ஏனோ அது தெரியாமற் போய் விட்டது. சில வாரங்கள் போய் விட்டதால் அந்தக் கறை இப்பொழுது காய்ந்து கறுப்பு நிறத்துக்கு வந்து விட்டிருந்தது. உலர்ந்த அந்த இரத்தம் எடித் லாங்கின்(86) உடையது என்பதுவும் இப்பொழுது தெளிவாகிவிட்டது. அந்தக்கறையைப் பார்க்கும் போதே, இங்கே ஒரு குற்றம் நடந்திருக்க வேண்டும் என்பது வெள்ளிடை மலை. ஏனோ அது பொலிஸாருக்குத் தெரியாமற் போய் விட்டது. 14.12.2022 அன்று எடித் லாங் தனது சமையலறையில் இறந்திருந்தார். மாலையில் எடித் லாங்கின் மகள் ஹைக்கே(64), தனது தாயார் சமையலறையில் இறந்திருப்பதைக் கண்டு பொலிஸாருக்குத் தகவல் தந்திருக்கிறார். அவரது உடல் சமையல் அறையின் தரையில் இருந்தது. இடது கை பின் நோக்கி நீண்டிருந்தது. யாரோ அவரை அங்கே இழுத்து வந்து விட்டது போலவே அந்தக் காட்சி இருந்தது. அவசர உதவி மருத்துவரும், மருத்துவ உதவியாளர்களும் இதே கருத்தைத்தான் முன் வைத்தார்கள். ஆனால் குற்றப் பிரிவுப் பொலிஸார் அன்று மாலையே விசாரணைகளை நடத்தி, ”இந்த மரணத்துக்கும் வெளியாட்கள் எவருக்கும் தொடர்பு இருக்க வாய்ப்பில்லை. தரையில் விழுந்ததால், தலையில் காயம் ஏற்பட்டு மரணம் நிகழ்ந்திருக்கிறது. இது ஒரு விபத்து மரணம்” என்று அறிவித்தார்கள். ‘எடித் லாங் தடுமாறி விழுந்திருக்கிறார், உச்சந் தலையில் காயம் ஏற்பட்டிருக்கிறது. எடித்லாங்கின் கைப்பை திறந்திருந்தது. அந்தக் கைப்பை, பணம் இல்லாமல் வெறுமையாக இருந்தது’ எடித் லாங்கின் மரணச் சான்றிதழில் இப்படித்தான் பதிவு செய்யப்பட்டுள்ளது. அடுத்த வாரம் 19.12.2022, திங்கட்கிழமை எடித்லாங்கின் உடல் தகனம் செய்யப்பட்டது. பொலிஸார் சிரத்தை எடுத்து எடித்லாங்கின் மரணத்தில் சரியான முறையில் விசாரணையை மட்டும் மேற்கொண்டிருந்திருந்தால், அடுத்து நடந்த கொலையை ஒருவேளை தடுத்திருக்கலாம். எடித்லாங்கின் இறப்பு விபத்தால் ஏற்பட்ட மரணம் என அறிவிக்கப் பட்டதால், கொலையாளி தன்னைத் தானே தட்டிக் கொடுத்து , அதே பாணியில் இன்னுமொரு கொலையையும் செய்வதற்கு ஏதுவாக எடித் லாங்கின் மரண விசாரணையின் தீர்ப்பு அமைந்து விட்டிருந்தது. எடித் லாங்கின் உடல் தகனம் செய்யப்பட்டதன் பின்னர் ஹைக்கே தனது தாயாரின் வீட்டை த் துப்பரவு செய்து ஒழுங்கு படுத்துவதற்குச் சென்று பார்த்த போது, தனது தாயார் விபத்தில் இறக்கவில்லை மாறாக கொலை செய்யப்பட்டுள்ளார் என்பதற்கான சில தடயங்களைக் கண்டறிந்தார். பாதுகாப்புக்கு என்று போடப்பட்டிருந்த கதவுச் சங்கிலி உடைக்கப் பட்டிருந்தது. தொலைபேசி வயர் துண்டிக்கப் பட்டிருந்தது. கட்டிலின் கீழ் இருந்த மரப் பெட்டி உடைக்கப்பட்டு இருந்தது. அந்த மரப் பெட்டியின் மீது இரத்தக் கறை இருந்தது. இந்தத் தகவல்களை உடனடியாகப் பொலிஸாருக்கு அறிவித்து தன் தாயின் மரணத்தில் இருந்த சந்தேகத்தையும் ஹைக்கே பதிவு செய்தார். மீண்டும், எடித்லாங்கின் வீட்டை பரிசோதித்த பொலிஸார் மேலதிக விசாரணைகளுக்காக வீட்டைப் பூட்டி ‘சீல்’ வைத்து விட்டுப் போனார்கள். “கொலை நடந்திருப்பதற்கான சாத்தியம் இருப்பதை நாங்களும் ஏற்றுக் கொள்கின்றோம். மேலதிகத் தடயங்கள் கிடைக்கவில்லை. எடித் லாங்கின் உடலும் எரிக்கப்பட்டு விட்டது. ஆகவே மேற்கொண்டு எதுவும் செய்வதற்கு இல்லை. நீங்கள் அந்த வீட்டை இனி துப்பரவு செய்து கொள்ளலாம்” என பொலிஸ் தரப்பில் இருந்து, ஹைக்கேக்கு பதில் வந்தது. தாயின் இழப்பில் ஏற்பட்ட சோகம், பொலிஸாரின் கையாலாகத் தனம் எல்லாம் சேர்ந்து ஹைக்கேயால் நிம்மதியாக உறங்க முடியாதிருந்தது. அப்பொழுதுதான் ஸ்வேபிஸ் ஹால் நகரப் பத்திரிகையில் இந்த விடயத்தைப் பற்றி அலசி ஆராய்ந்து கொண்டிருந்த நிருபரின் தொடர்பு அவருக்குக் கிடைத்தது. பத்திரிகை நிருபர், லுமினோல் எண்ணெய்யை ( Luminol oil)இணையத்தளத்தில் இருந்து வாங்கிக் கொண்டார். சந்தேகப்படும் இடங்களில் லுமினோலை பூசினால், அங்கே இரத்தம் இருந்தாலும், அவை சரியாகத் துடைக்கப்படாமல் இருந்தாலும் அந்தப் பகுதி ஒளிர ஆரம்பிக்கும். கொலைகள் நடக்கும் இடங்களில், விசாரணைகளில் தடயங்களைக் கண்டறிவதற்காக லுமினோலை புலானாய்வாளர்கள் பயன்படுத்துவார்கள். இப்பொழுது பத்திரிகை நிருபர் லுமினோலைப் பயன் படுத்தி ஒளிரும் இடங்களைப் படம் பிடித்துக் கொண்டார். “விசாரணையில் அசட்டையீனம். ஒரு கொலை, விபத்தாக காட்டப் பட்டிருக்கிறது” என்று அடுத்தநாள் பத்திரிகைச் செய்தியின் தலைப்பு இருந்தது. கூடவே, தரைக் கம்பளத்தின் கீழே இரத்தம் உறைந்திருந்தது. கொலையாளி அந்த இரத்தக் கறையை மறைப்பதற்காக, அவசரத்தில் பக்கத்தில் இருந்த கம்பளத்தை எடுத்து இரத்தம் இருந்த இடத்தில் போட்டு மூடி விட்டிருக்கிறார். கதவு வாசலில் இருந்து சமையலறை வரை தரையில் இரத்த அடையாளங்கள் இருக்கின்றன. அது எடித் லாங்கை, வாசலில் வைத்து தாக்கிக் கொலை செய்து விட்டு, கொலையாளி அவரை இழுத்து வந்து சமையலறையில் போட்டதைக் காட்டுகிறது. தரையில் இருந்த இறத்தக் கறையை சமையலறையில் இருந்த துணியினால் துடைத்து, பின் அதை சமையல் அறைத் தண்ணீர் தொட்டியில் கழுவியதற்கான அடையாளங்கள் இருக்கின்றன…” என படங்களுடன் செய்தி வெளியானது. உள்ளூரில் வெளியிடப்பட்ட இந்தச் செய்தியை யேர்மனியின் பல பாகங்களிலும் வெளியாகும் பல பத்திரிகைகள் வாங்கி தங்கள் தங்கள் பத்திரிகைகளிலும் பிரசுரித்தார்கள். இந்தச் செய்தியால், பொலிசார் மீது விமர்சனங்கள் எழுந்தன. பொலிசாரது செயற்பாடுகள் சரியாக அமையவில்லை என்பதால், மக்கள் பொலிசார் மீதான தமது அதிருப்தியை வெளிப்படையாகவே கதைத்தார்கள். பொலிஸாரின் மேலதிகாரி ஊடகவியலாளர்களை அழைத்து, தங்களது பக்க நியாயங்களைச் சொன்னார். “எடித் லாங், மருந்துகளை உட் கொள்பவர். மயக்கம் அவருக்கு அடிக்கடி வருவதுண்டு என்று அவரது குடும்ப வைத்தியர் குறிப்பிட்டிருக்கிறார். முதுமை, தள்ளாட்டம் என்பன காரணமாக அவர் விழுந்ததனால்தான் சம்பவம் நடந்திருக்கிறது என்ற நோக்கிலேயே நாங்கள் விசாரணைகளை மேற்கொண்டோம். எதுவானாலும் தவறு நடந்து விட்டது என்பதை நாங்கள் ஒத்துக் கொள்கிறோம். அதற்காக வருந்துகிறோம். எடித் லாங்கின் வீட்டில் இருந்து மேற்கொண்டு தடயங்களை எங்களால் பெற முடியவில்ல. ஹைடமேரியின் கொலையில் இருந்து தடயங்களைச் சேகரித்து வைத்திருக்கிறோம். கொலையாளியைக் கண்டுபிடிக்கும் எங்களது வேலை தொடர்கிறது” பொலிஸாரிடம் இருந்து வந்த இந்தக் கருத்தைப் பற்றி எடித் லாங்கின் மகள் ஹைக்கே இப்படிச் சொல்லி இருந்தார், “ எனது தாயார் தலையில் தாக்கப் பட்டு கொல்லப் பட்டிருக்கிறார். பொலிஸார் அதை விபத்து என்றார்கள். நாங்கள் அதை கொலை என்று நிரூபித்திருக்கிறோம். தவறி விழுந்த ஒருவருக்கு உச்சந் தலையில் காயம் எப்படி ஏற்படும் என்றாவது குறைந்த பட்சம் அவர்கள் ஏன் விளங்கிக் கொள்ளவில்லை. ‘தவறு, வருந்துகிறோம்’ போன்ற சொற்களுடன் இந்த விடயத்தை பொலிஸ் தரப்பு கடந்து போயிருக்கிறது. எனக்கு அவர்கள் மேல் இருந்த நம்பிக்கையும் மரியாதையும் வெகுவாகக் குறைந்து விட்டன. மக்கள் மேல் தங்களுக்கு நம்பிக்கை குறைந்து விட்டது என்பது பொலிஸாருக்கும், மரண விசாரணை மேற்கொண்ட அரச சட்டத்தரணிக்கும் தெளிவாகத் தெரிந்து விட்டது. ஆகவே நடந்த இரண்டு கொலைகளை யார் செய்தது என்பதை கண்டுபிடிப்பது மட்டுமல்லாமல் அதை விரைவாக முடிக்க வேண்டிய கட்டாயமும் அவர்களுக்கு வந்தது.. கொலையாளியை க் கண்டு பிடிக்கும் வேலையை அவர்கள் செய்யட்டும். அந்த இடைவெளியில் நாங்கள் இல்ஸ்கொபன் கிராமத்துக்குப் போய் வருவோம்.
  45. கவிதை அருமை வாழ்த்துக்கள் சுவி அண்ணை ஆனால் இப்படி ஒரு மாமி. தவம் இருந்து தேடினாலும். கிடையாது
  46. ஒரு குட்டிக்கதை : கருடன் பறந்து வந்து ஒரு மரத்தில் இருந்தது..... சற்று தூரத்தில் எமன் கயிற்றுடன் யோசித்துக் கொண்டு நிற்பதைக் கண்டது..... கீழே மரப்பொந்தில் ஒரு குருவி பயத்துடன் அமர்ந்திருந்தது..... கருடனுக்கு குருவியின் கதை முடியப்போகுது என்று தெரிந்தது..... உடனே அதைத் தூக்கிக் கொண்டு பறந்தது....... அடுத்தமலையில் உள்ள ஒரு பொந்துல விட்டது.... அதில் இருந்த பாம்பு லபக்கென்று குருவியைப் பிடித்து விழுங்கியது..... கருடன் கவலையுடன் அங்கிருக்க அங்கு எமன் வந்தார்.....சிரித்தார்..... என்ன யோசிக்கிறாய் கருடா என்றார் ....... குருவியை உன்னிடமிருந்து காப்பாற்ற நினைத்தேன் முடியவில்லை ...... சரி நீ ஏன் அப்போது யோசித்துக் கொண்டு நின்றாய்...... அதுவா.....இந்தக் குருவியின் மரணம் அடுத்த மலையில் உள்ள பாம்புக்கு இரையாக வேண்டும்..... அது எப்படி நிகழும் என்று யோசித்தேன்..... நல்ல காலம் நீ வந்து அதை முடித்து வைத்தாய்......! அங்கு இங்கு ஓடுவதைவிட வீட்டிலேயே அவள் கையாள சாப்பிட்டுட்டு இருக்கிறேன்.....! உங்கள் அன்புக்கு நான் அடிமை கந்தையர் ......! 🙏
  47. போதமும் காணாத போதம் – 16 பிந்திப்புலர்ந்த விடியலுக்கு முன்பாகவே மழை துமித்தது. உறக்கம் கலைந்து லாம்பைத் தீண்டினேன். ஆறு மணியாகியிருந்தது. அதிவேகமாய் வீட்டின் கதவைத் திறந்து பட்டியடிக்கு ஓடினேன். ஆரம்ப சுகாதார நிலையத்தை தாண்டி வலதுபுறம் திரும்பினால் வருகிற குச்சொழுங்கையில் அரைக்கட்டை நடந்தால் பட்டியடி சிவன் கோவில் வரும். அதற்குப் பின்னாலிருக்கும் பாழடைந்த வீட்டில்தான் சந்திப்பதாகவிருந்தது. நான் சென்றடைவதற்கு முன்பாகவே யசோ வந்திருந்தாள். பீத்தல் விழுந்த குடையொன்றை ஏந்தி நின்றாள். பீத்தல் புகுந்து அவளை நனைக்கும் மழைத்துளிகள் பேறுடையன. ஆயிரம் கண்களுடைய மயில் தோகையை நினைவுபடுத்தும் வடிவமைப்பிலான ஆடை அணிந்திருந்தாள். ஈரம் விழுந்து துளிர்த்த தளிரென குளிர்பதுக்கி நின்ற யசோவை கட்டியணைத்து முத்தமிட்டேன். விசுக்கென தள்ளி விலக்கினாள். என் யாக்கையின் மாண்பு திகைத்து திணறியது. மீண்டும் முன்நகர்ந்து அவளை இறுக அணைத்து முத்தமிட விழைந்தேன். அவள் விளையமறுத்த நிலமென முகத்தை பலகோடுகளாய் கோணலாக்கி இறுக்கியிருந்தாள். “யசோ! என்ன நடந்தது? ஏதேனும் பிரச்சனையோ!” கேட்டேன். சடை பின்னப்பட்டிருந்த கூந்தலை அவிழ்த்து விரித்தாள். காமக் களிறை உருவேற்றும் பெண் கூந்தலில் காட்டுப் பூ வாசனை. அவளுடைய கண்களில் பெருகும் கள்ளம் என்னை ஆணாக அறிவித்தது. அவளருகே என்னை அழைத்தாள். வசியமிடப்பட்ட அடிமை நான். எத்தனை சவுக்குகளையும் என்னில் வீசும் உரிமை படைத்தவள். ஆயிரம் கண்கள் கொண்ட மயில் தோகையை கழற்றி வீசினாள். பீத்தல் கூடையை சுருக்கி வைத்தாள். எப்போதும் சுருக்கவியலாத மேகமெனும் பிரமாண்டமான குடையில் எத்தனை பீத்தல்கள். யசோ! பருவத்தின் காற்றில் அசைந்து வளரும் பூக்களும், காய்களும், கனிகளும் கொண்டவள். என்னை முத்தமிட்டு முத்தமிட்டு களிகூர்ந்தாள். என் ஆடைகளை உருவி எறிந்தாள். மழையில் நிர்வாணம் பூத்து நின்றோம். “மழையில் கூடல், உடலுக்கு சுதி, உனக்கு எப்பிடி” என்று கேட்டேன். அவளுக்கு களைப்பாய் இருந்தது. அடிவயிற்றில் குளிரளித்து நின்றது சுக்கிலத்து ஈரம். யசோ எழுந்து ஆடைகளை அணிந்தபடி “நான் இண்டைக்கு வரமாட்டேன் என்று நினைத்தாய் அல்லவா” என்று கேட்டாள். “பின்ன, மழை பெய்கிறது. இவ்வளவு கஷ்டப்பட்டு சந்திக்கத்தான் வேண்டுமா. ஆனாலும் நீ வந்திருப்பாய் என்று மனம் சொன்னது” என்றேன். “சரி நேரம் போய்ட்டுது. ஆடுகளை பட்டியிலிருந்து சாய்த்துவிடவேண்டும். வெளிக்கிடுகிறேன்” “இன்றைக்குப் பின்னேரம் சந்திக்கிறோமா” “வாய்ப்பில்லை. எங்கட சொந்தக்காரர் வீட்டு விஷேசம். அங்க போகவேண்டும்” “எந்த இடத்தில” “அதுவோ… உருத்திரபுரம். ஏன் வரப்போறியளோ” “இல்லையில்லை. நீ போய்ட்டு வா. நாளைக்குப் பார்க்கலாம்.” “ஏன் நாளைக்கும் மழை பெய்யுமோ” என்று கேட்டபடி அங்கிருந்து ஓடிச்சென்றாள். பட்டியில் ஆடுகள் நனைந்து நின்றன. அவள் திறந்ததும் பழக்கப்பட்ட திசைவழியில் ஓடின. வழிமாறிய ஆடுகளை மேய்த்தபடி பாழடைந்த வீட்டைப் பார்த்தாள். கூரைவரை உயர்ந்தேறிய கொடியில் மஞ்சள் பூக்கள் அசைய வானம் குனிந்து பார்த்தது. அங்கிருந்து வீட்டிற்குப் போகும் வழியிலேயே இருந்த வாய்க்காலில் குளித்தேன். ஆயிரம் புரவிகளில் ஏறித்திரிந்த கம்பீரத்தின் தினவு உடல் புகுந்திருந்தது. தண்ணீரில் நின்று கண்களை மூடினால், யாவும் அளிக்கும் ஒரு அமிழ்தக் கொடியாக நிலத்தில் படர்ந்திருக்கிறாள் யசோ. அடிவயிற்றில் மீன்களின் தீண்டல். பாதங்களை உய்விக்கும் பாசிகளின் அசைவு. தண்ணீரில் கொதிக்கும் என்னுடல். யசோ! உன்னுடைய கானகத்தின் பாதையில் திக்கற்று நிற்கும் என்னை எங்ஙனம் தாங்குவாய் சொல்! யசோவுக்கும் எனக்குமிடையே காதல் மலர்ந்து இரண்டு வருடங்கள் ஆகியிருந்தன. அவளுடைய தாயார் இறந்துபோன அன்றைக்குத்தான் முதன்முறையாக என்னுடைய கைகளைப் பிடித்து, வீட்டினுள்ளே அழைத்துச் சென்றாள். “உன்னை விட்டால் எனக்கினி யார்” என்பதைப் போல என்னுடைய விரல்களைப் பற்றினாள். போராளியாக களமுனையிலிருந்த யசோவின் சகோதரி அடுத்தநாள் காலையிலேயே வரமுடியும் என்பதால் அன்றிரவு முழுதும் தாயின் பூதவுடல் வீட்டில் கிடத்தப்பட்டிருந்து. மூன்று பெற்றோல் மாக்ஸ் வெளிச்சத்தில் பந்தல் ஒளிர்ந்தது. கடதாசிக் கூட்டம் விளையாடுபவர்கள், பீடி புகைப்பவர்கள், வெற்றிலை போடுபவர்கள், அரசியல் கதைப்பவர்கள் என எல்லோருக்கும் மத்தியிலும் பூதவுடல் தனிமையிலிருந்தது. யசோ, தாயின் தலைமாட்டிலிருந்து வேப்பிலையால் பூச்சிகளை விரட்டினாள். சோர்வும் தனிமையும் அவளை மிரட்ட ஆரம்பித்திருந்தன. அழுது அடைத்திருந்த குரலோடு, முகம் காய்ந்திருந்தது. அவளருகே சென்று “எப்பனாய் சாப்பிடுங்கோ யசோ” என்றேன். அவள் வேண்டாமென்று தலையசைத்துவிட்டு தாயின் பூதவுடலில் விழுந்து ஊர்ந்த சக்கரபாணி வண்டைத் தூக்கி எறிந்தாள். நள்ளிரவு இரண்டு மணிவரை அப்படியே அமர்ந்திருந்தாள். ரத்தச் சொந்தங்களில் சிலர் இழவு காத்தனர். தயாரின் மூத்த சகோதரி நேரம் பிசகாமல் ஒப்பாரி பாட விழித்திருந்தாள். “என்னையழைத்த யசோ “எனக்குத் துணையாக வரமுடியுமா” என்று கேட்டாள். “எங்கே போகவேண்டும்” கேட்டேன். “எனக்கு சுகமில்ல, துணிமாத்த வேணும். வீட்டுக்குப் பின்னாலவுள்ள மறைப்புக்குத்தான்” “ஆரும் பார்த்தால் பிழையாய் நினைப்பினம்” என்று தயங்கினேன். “இனைச்சால் இனைக்கட்டும். என்னோட வாங்கோ” கையிலிருந்த டோர்ச் லையிற் வெளிச்சத்தோடு யசோவை கூட்டிச்சென்றேன். வீட்டுக்குப் பின்பக்கத்தில் அவள் சொன்னது மாதிரி மறைப்பு ஏதும் இல்லை. அவளின் பின்னால் நடந்து சென்றேன். கொஞ்சம் தள்ளி வாய்க்கால் ஓடிக்கொண்டிருந்தது. என்னிடமிருந்த டோர்ச் லையிற்றை வாங்கியவள் ஒருமரத்தின் கீழே எதையோ சுற்றுமுற்றும் தேடினாள். பிறகு அங்கேயே அமர்ந்து என்னையும் அப்படியே பணித்தாள். “யசோ…துணி மாத்தேல்லையோ, நீங்கள் மாத்துங்கோ நான் நிக்கிறன்” என்றேன். என்னை இறுக கட்டியணைத்து மூச்சொலி தெறிக்க முத்தமிட்டு ஆடைகளைக் களைந்தாள். வெறுமையிருள் பிளந்து இனிமை சுரக்கும் சுடர் ஏந்தி என்னை ஆட்கொண்டாள். வாய்க்காலின் நீர்ப்பெருக்கு புதிய இச்சைகளோடு சப்தமிட்டது. யசோ வானத்துக்கும் பூமிக்கும் பறந்து விழுகிற உக்கிரத்தோடு இயங்கினாள். அழிவற்ற கண்ணீருக்கு அங்குண்டு பீடம். உடல் எழுந்து பறையென அதிர்கிறது. மலையிருந்து நிலமோடி வருகிற நீர்த்தடத்தின் வெளிச்சமென யசோவும் நானும் அங்கே துய்த்து நிறைந்தோம். “உன்னுடைய அம்மா, அங்கே தனித்திருக்கிறாள். எழுந்து செல்வோம் யசோ” “அப்பாவை ஆர்மியிடம் பறிகொடுத்த நாளிலிருந்து இற்றைக்கு இருபதாண்டுகளாக அம்மா இப்படித்தான் இரவுகளைப் போக்கினாள். அவளுக்கு நிம்மதிமிக்க இரவு இன்றுதான் வாய்த்திருக்கிறது. அதையெண்ணி நீ கவலைப்படாதே” “ஆனாலும், போகலாம். ஆராவது உன்னைத் தேடி வந்தால் பிழையாகிவிடும். நீயேன் பொய் சொல்லி என்னை அழைத்து வந்தாய்” “அது பொய்யில்லை. உண்மைதான். ஆனால் இப்ப ஒண்டையும் காணேல்ல” யசோ சிரித்தாள். இருவரும் வாய்க்காலில் இறங்கி உடலைக் கழுவினோம். யசோ அடிவயிற்றில் மீன்களைப் போல தீண்டி இரையாடினாள். காணும் போகலாம் என்றேன். “அமைதியாக இரு. கொம்புத்தேன். வெறுமையையும் துக்கத்தையும் எரிக்கிறது. தண்ணீரில் நீ விறைத்து நிற்கிறாய். உன்னுடைய உடலில் சுடரும் நிலவின் வெளிச்சம் என்னை மோகிக்கிறது. துண்டு துண்டாகி சிதறிக்கிடக்கும் உளத்தை சிறுசிறு அகல் விளக்காக மாற்றும் இந்தச் சுகத்தை நீ எனக்குத் தராமல் போகாதே. கொம்புத்தேன் உருகட்டும்” என்றாள். நாங்களிருவரும் பந்தலுக்குள் நுழையும் போது இன்னும் சிலர் உறங்கியிருந்தனர். கடதாசிக் கூட்டம் விளையாடிக்கொண்டிருப்பவர்கள் அளவில் குறைந்திருந்தனர். தாயின் தலைமாட்டில் போய் அமர்ந்தாள். அடிக்கடி என்னைப் பார்த்து கண்களை மருளச் செய்தாள். யசோவிடம் ஏதோவொரு மூர்க்கம் பெருகி நிற்கிறது. அவளினுள்ளே தணல் மூண்டிருக்கும் தீயின் சடசடப்பை அறியக் காத்திருந்தேன். அதிகாலையிலிருந்து ஆட்கள் வரத்தொடங்கியிருந்தனர். களமுனையிலிருந்து யசோவின் சகோதரி வந்திருந்தார். தாயின் பூதவுடலைக் கட்டியணைத்து அழுதார். அம்மா.. அம்மாவென்ற அரற்றல் சுருக்கமாகவே தீர்ந்தது. அதன்பிறகு யசோவும் நானும் பலதடவைகள் சந்தித்துக் கொண்டோம். எங்களிடம் தீர்ந்து போகாத தாழிகளில் காமம் நொதித்து கள்ளென வழிந்தது. கலவியிலிருந்த கணமொன்றில் கண்கள் பனித்து “ இப்பிடி இருக்கேக்க மட்டும்தான் எங்கட நாட்டில யுத்தம் நடக்கிறதே மறந்து போகுது. ஒரு அஞ்சு நிமிஷம் அப்பிடிச் சுகமாய் இருக்கு” என்றாள் யசோ. “நல்லாயிருக்கு உங்கட கதை. நாங்கள் ரெண்டு பேரும் சந்தோசமாய் இருக்கேக்க, எத்தின பேர் நாட்டுக்காக உயிரை விடுகினமோ!” என்றேன். “இதுவும் ஒரு போராட்டம் தானே. யுத்தத்தை மறக்க ஒரு உபாயம். அப்பாவை ஆர்மிக்காரன் பிடிச்சிட்டு போன நாளிலயிருந்து அம்மா பட்ட கஷ்டங்களில இதுதான் பெரிசு. உன்ர கொப்பர் கனவில வந்து கொஞ்சச் சொல்லி அடிக்கடி கேக்கிறாரடி என்பாள் அம்மா. அப்பிடியொரு கனவு வருகிற கணங்கள் மட்டும்தான் அம்மாவோட உளம் இந்த யுத்த அவலங்களை மறந்திருக்கும். இல்லையோ!” “துயரம் தான் யசோ” “கவலைப்பட எதுவுமில்லை. ஆனால் இவ்வளவு யுத்தத்துக்கு மத்தியிலும் எங்கட ஆஸ்பத்திரிகளில குழந்தைகள் பிறக்கினம் தானே. யுத்தம் ஒட்டுமொத்த மனுஷனிட்ட தோக்கிற இடமிதுதான்” “அடிசக்கை… இதை நீங்கள் எங்கட தவபாலன் அண்ணைக்கு சொன்னியள் எண்டால், ரெண்டுநாள் பெரிய ஆய்வுக்கட்டுரை வாசிப்பார்” “இப்பிடியொரு உண்மையை இயக்கத்தின்ர ரேடியோவில சொல்லுறதால அதைப் பொய்யெண்டு நம்பவும் வாய்ப்பிருக்கு. அதை நானே வைச்சுக் கொள்கிறேன்” என்றாள். ஆடுகளை மேய்த்துவந்து பட்டியில் அடைத்து அந்தியின் சிவந்த ஒளியில் வியர்வை சிந்த எங்கள் வீட்டிற்கு வந்திருந்தாள். காலையில் பெய்த மழையில் நம்வெள்ளம் நீந்தியதை அவளுக்கு நினைவுபடுத்தினேன். உணவை சட்டியில் போட்டுக் கொடுத்து “அம்மா வீட்டில் இல்லை, இரணைமடு வரைக்கும் போயிருக்கிறா” என்றேன். அதே ஆயிரம் மயில் கண்கள் திறந்த சட்டை. ஆட்டு மந்தையின் மொச்சை மணம் ஏறிய கிளர்ச்சி. வெயிலில் காய்ந்த யசோ தகித்திருந்தாள். எங்கிருந்தோ எம்மைத் தேர்ந்தடுக்கும் இந்த உணர்வை இறையிருக்கையில் அமர்த்தி பூசிக்கவேண்டும். யுத்தம் பொல்லாத செருக்கின் அநீதி. ஆனாலும் நானும் யசோவும் உடல்களை இழைத்து யுத்தத்தை மூடினோம். அது தருவித்த தழும்புகளில் ஒரு வழித்தோன்றலை உருவாக்க எண்ணினோம். யசோவை வீட்டினுள்ளே அழைத்தேன். அவள் வேண்டாமென மறுத்தாள். என்னுடைய கைகளைப் பற்றி முத்தமிட்டு, வேறொரு நாளில் வைத்துக் கொள்வோம் என்றாள். இப்போதே, இக்கணமே நாம் யுத்தத்தை மறக்கவேண்டுமென தோன்றுகிறது என்றேன். நாம் யுத்தத்தை சில கணங்கள் மறப்போமாக! அது நம்மீது சுமத்திய காயங்களை எடையற்ற இறகுகளாக ஊதிப் பறக்க விடுவோமாக! என்று சொல்லியபடி நிலத்தின் மீது கொடியெனப் படர்ந்து பூவின் அதழ்களைத் திறந்தாள். இயங்கி முயங்கும் அந்திப்பொழுதில் முன்நிலவு மேலெழுந்து வானறைந்தது. “ஆராவது வந்துவிடப் போகிறார்கள், நிறுத்திக்கொள்ளலாம்” யசோ சொன்னாள். “அம்மா வருவதற்கு நேரம் செல்லும். நீ ஏன் புதிதாகப் பயப்படுகிறாய்” என்று கேட்டேன். “யுத்தத்தை மறக்கலாம். ஆனால் இது சனங்களுக்குத் தெரிஞ்சால் மானக்கெடுத்து போடுங்கள்” “இதைத்தானே நான் அண்டைக்கு இரவும், வாய்க்காலடியில வைச்சு சொன்னான்” “எண்டைக்கு இரவு” “உங்கட அம்மா செத்த அண்டைக்கு, வாய்க்காலுக்கு கூட்டிக்கொண்டு போனியளே” “அங்கே, ஏன் நான் கூட்டிக்கொண்டு போனான். உங்களுக்கு என்ன விசரே” “நல்ல கதையாய் இருக்கே. கூட்டிக்கொண்டு போய் செய்யாத வேலையெல்லாம் செய்துபோட்டு, இப்ப அப்பாவி மாதிரி, வேஷம் போடுறியள்” “சத்தியமாய் நான் அப்பிடி ஒண்டும் செய்யேல்ல. விடியும் வரை அம்மாவின்ர தலைமாட்டில இருந்து வேப்பிலையால விசுக்கி கொண்டெல்லே இருந்தனான்” “அய்யோ, இதென்ன பொய். உங்களுக்கு சுகமில்லை. துணி மாத்தவேணும். வா எண்டு என்னைக் கூட்டிக்கொண்டு போனியளல்லே” “சத்தியமா இல்ல” “அப்ப, நான் சொல்லுறது பொய். அப்பிடித்தானே” “நான் சொன்னானோ எனக்குத் தீட்டு எண்டு?” யசோவின் இந்தக் கேள்வியிலிருந்த தீவிரம் சூழலுக்கு மிக அந்நியமாய் இருந்தது. ஆனாலும் நான் ஓமென்று தலையசைத்தேன். “அம்மா செத்த அண்டைக்கு அவாவுக்கு தான் மூன்றாம் நாள் தீட்டு லேசாய் இருந்தது” என்ற யசோ என்னை இறுக அணைத்தாள். “யசோ, நீ என்ன சொல்லுகிறாய்?” “இருபது வருஷத்துக்கு பிறகு அம்மா அண்டைக்கு நிம்மதியாய் உறங்கியிருக்கிறாள். அவளும் சில கணங்கள் யுத்தத்தை மறந்து இருந்திருக்கிறாள்” என்று சொல்லியபடி யுத்தம் ஒழிக! யுத்தம் ஒழிக! என்று முயங்கினாள். https://akaramuthalvan.com/?p=1664
  48. போதமும் காணாத போதம் – 15 கரியன் காயப்பட்டு கிளிநொச்சி மருத்துவமனையில் இருப்பதாக தகவல் வந்தது. சைக்கிளை உழக்கிப் பறந்தேன். இயக்கத்தில் சேர்ந்து ஒரு வருடத்திற்குள் நான்காவது தடவை காயப்பட்டுள்ளான். இதற்கு முன்பு மன்னாரில் நடந்த மோதலில் முதுகில் காயமடைந்திருந்தான். “முதுகில் காயப்படுகிறதெல்லாம் அவமானம் கரியா, புறமுதுகு காட்டி ஓடினவனென்று அர்த்தம்” என்றேன். “நெஞ்சைக்காட்டி ஓடியிருந்தால் நான் மிஞ்சிவந்து இப்ப கதைச்சிருக்க மாட்டேன்” என்றபடி தோடம்பழத்தை உரித்தான் கரியன். இந்தத் தடவை கடுமையான தீக்காயமென்று அறிந்தேன். நான் மருத்துவமனைக்குள் நுழைந்து காயப்பட்ட போராளிகளை வைத்திருக்கும் பகுதிக்கு சென்றேன். உள்ளே செல்வதற்கு அனுமதியில்லையென கூறினார்கள். அதன் பொறுப்பதிகாரியாக இருந்தவரிடம் கெஞ்ச வேண்டியிருந்தது. உள்ளே வலி பொறுக்கவியலாது கதறுங்குரல்களை கேட்கவே வேடிக்கையாகவிருந்தது. போர்க்காயங்களைப் பார்ப்பதில் ஆர்வம் கூடியிருந்தது. சொற்ப நிமிடங்கள் மட்டும் ஒதுக்கித் தந்தனர். உள்ளே போனதும் கரியனின் இயக்கப்பெயரைச் சொல்லி எங்கே இருக்கிறார் என்று கேட்டேன். மருத்துவப் பிரிவுப் போராளி என்னை கரியனிடம் கூட்டிச் சென்றார். உடல் முழுக்க எரிந்துலர்ந்திருந்தது. தீமிதிக்கும் கிடங்கில் சாம்பலுக்கு மத்தியில் கங்குகள் ஒளிர்வதைப் போல ஊண் சிவந்து தகித்தது. அரை உயிரோடு நெருப்பிலிருந்து ஊர்ந்து சென்ற சாரைப் பாம்பை ஞாபகப்படுத்துவதைப் போல கட்டிலில் கிடந்தபடி கைகளை அசைத்தான். பக்கத்தில் நின்று “ நான் ஸ்பார்ட்டகஸ் வந்திருக்கிறேன். எப்பிடி இருக்கிறாய்” கேட்டேன். கண்களைத் திறந்து பார்த்து “மச்சான், இந்த ஆர்மிக்கார பு**யாண்டியளால எல்லாமும் நாசமாய் போய்ட்டுது “ என்றான். கரியனிலிருந்து நான்காவது கட்டிலில் படுத்திருந்தவரின் கால் நீக்கப்பட்டிருந்தது. அவர் சத்தமாக என்னவெல்லாமோ சொல்லிக்கொண்டார். “அவனுக்கு இப்ப தான் மெல்ல மெல்ல மயக்க மருந்து தெளியுது. காலமையிலிருந்து ஒரே சத்தம் தான். பச்சைத் தூஷணத்தில எல்லாரையும் திட்டுறான்” கரியன் சொன்னான். சிகிச்சை அளிப்பதற்காக மயக்க மருந்து வழங்கப்பட்ட போராளிகள் இப்படித்தான் பேசுவார்கள் என்று கேள்விப்பட்டிருக்கிறேன். ஆனால் இன்றுதான் முதன்முறையாக அனுபவிக்கிறேன்” என்றேன். “இவனெல்லாம் பரவாயில்லை. நேற்றைக்கு இம்ரான் பாண்டியன் படையணிக்காரர் ஒருவர் இஞ்ச இருந்தவர். அவருக்கு அடிவயிற்றில பெரிய காயம். இரவு முழுக்க ஒரே கச்சேரிதான். எல்லாருக்கு ஏச்சுத்தான். இயேசுவை சுடவேணுமெண்டு சொல்லுறார். மகாத்மா காந்திக்கு தண்டனை அளிக்க வேண்டுமென்று என்னவெல்லாமோ கதைச்சார். ஒரே சிரிப்புத்தான் எங்களுக்கு. அதிகாலையில தான் இஞ்ச இருந்து ஆள் போனது” “எங்க , மெடிஸ்க்கு மாத்திட்டாங்களோ” “இல்லையில்லை. ஆளுக்கு பஞ்சு. அதிகாலை நாலு மணியிருக்கும் ஒரு பெரிய சத்தம். மூச்சை வானுக்கு எறிஞ்சு நிலத்தில விழுத்திற எத்தனத்தோட ஒரு மூர்க்கம். அப்பிடியே கையைத் தொங்கவிட்டுட்டார்” “அய்யோ, வீரச்சாவே!” “பின்ன, அவ்வளவு பெரிய மூச்சை விட்டால்…” என்று சொல்லிக்கொண்டிருக்கும் போதே, இன்னொரு கட்டிலில் இருந்து சத்தம் எழுந்தது. “அன்பார்ந்த தமிழீழ மக்களே! நான் மரணத்தைப் பார்த்துவிட்டேன். அதனுடைய பாறை மேல் அமர்ந்திருந்து தவளையைப் போல உலர்ந்திருக்கிறேன். மரணம் அவ்வளவு மர்மானதொன்றுமில்லை. எங்களுடைய வேவு அணிக்காரர்கள் போல கண்டறியமுடியாததும் இல்லை. பயத்தின் நுகத்தடியில் அது பிணைக்கப்பட்டிருக்கிறது. மரணத்தின் நுழைவாயிலில் நின்று மிழற்றும் என் காற்றுக்கு எதுவும் தெரியவில்லை. ஆனாலும் ஒன்றைச் சொல்கிறேன், நான் மரணத்தினாலும் மீதம் வைக்கப்படுவேன். நன்றி. வணக்கம்” என்று உரையை முடித்தார். “இவன் அரசியல்துறையில இருந்து படையணிக்கு போயிருப்பான் போல, தமிழ்ச்செல்வண்ணையை விட வித்துவமாய் கதைக்கிறான்” என்றான் கரியன். அந்தப் பகுதி முழுக்கவே போர்க்களத்தில் காயப்பட்டு வந்திருந்த போராளிகள் மட்டுமே சிகிச்சைக்காக தங்க வைப்பட்டிருந்தனர். சிறிய காயங்களோடு இருந்தவர்கள் ஏனையோருக்கு ஒத்தாசை புரிந்தனர். கையில் ஒரு விரல் மட்டும் இல்லாமல் போயிருந்தவரைப் பார்த்து பெரிய காயக்காரரொருவர் “ எடேய் உந்தச் சுண்டுவிரல் இல்லாமல் போனத காயமெண்டு சொல்லி களத்த விட்டு வந்திருக்கிறியே. உனக்கு வெக்கமா இல்லையோ” என்று கேட்டதும் எல்லோரும் சிரித்தார்கள். சுண்டுவிரல் காயக்காரன் கைகள் இரண்டையும் மேல்நோக்கித் தூக்கி, நாளை நான் களத்திற்குச் சென்றுவிடுவேன். ஆனால் இந்தச் சுண்டுவிரலுக்கும் ஒரு பெறுமதி இருக்கெண்டு உங்களுக்கு சொல்ல வேண்டுமெனத் தோன்றுகிறது” என்றான். அன்றைக்கு மாலையிலேயே சின்னக்காயங்களோடு வந்தவர்கள் மீண்டும் களமுனைக்குச் செல்ல ஆயத்தமாகினார்கள். கரியனோடு களமுனையில் இருந்த போராளியொருவன் நெற்றியில் சிறியக் காயப்பட்டிருந்தான். அவனும் என்னோடு வந்தமர்ந்து கொண்டான். “உனக்கு என்ன மச்சான் நடந்தது. உடம்பெல்லாம் அடி வாங்கியிருக்கிறாய். என்ன ஏதேனும் புகைக்குண்டுக்குள்ள மாட்டுப்பட்டனியோ” கேட்டேன். “அதைச் சொன்னால் வெக்ககேடு. உன்னை நம்பிச்சொல்லமுடியாது. நீ வன்னியில இருந்து பி.பி.சிக்கு செய்தி அனுப்புவாய்” கரியன் சிரித்தான். எடேய், சும்மா சொல்லு. “இது என்ன இயக்க ரகசியமே. மறைக்கிறதுக்கு. நாளைப்பின்ன நீ வீரச்சாவு அடைந்தால் ஊருக்குள்ள சொல்லித்திரிய கதை வேண்டாமே” என்றேன். ஸ்பார்ட்டகஸ் உன்னை நம்பி சொல்லுறது தான் தயக்கமாய் இருக்கு. ஆனாலும் வேற ஆரிட்டையும் சொல்லக்கூடாது. சத்தியம் பண்ணு” என்று கையை நீட்டினான். ஆர் மேல சத்தியம் செய்யவேண்டுமெனக் கேட்டேன். உனக்குப் பிடிச்ச ஆளோட பெயரைச் சொல்லி செய் என்றான். “என்ர நண்பன் கரியன் மேல சத்தியமாய் ஆரிட்டையும் சொல்லமாட்டேன்” என்றேன். “என்ர சாவைப் பார்க்கிறதில உனக்கு என்ன விருப்பமோ. சரி நடந்ததைச் சொல்லுறன். கேள்.” என்றான். பத்து நாளைக்கு முன்னால கடுமையான சண்டை. எங்கட இரண்டு கிலோமீட்டர் பகுதியை இராணுவம் கைப்பற்றியது. எங்களில இருபதுக்கு மேற்பட்டோர் வீரச்சாவு. மூண்டு பேருடைய வித்துடல் அவங்களிட்ட விடுபட்டு போச்சுது. பெரிய சோர்வும் கொந்தளிப்புமாய் ஆகிட்டுது. எங்கட தளபதிக்கு அதுவொரு கெளரவ பிரச்சனை ஆகிட்டுது. தக்க வைச்சிருக்கிற இடத்தை இழந்திருக்க கூடாதெண்டு எல்லாருக்குள்ளையும் ஒரு கருத்திருந்தது. பிறகு தளபதி ஒரு திட்டம் போட்டு, வலிந்து ஒரு தாக்குதல் செய்ய முடிவெடுத்தார். நாங்கள் நினைச்ச மாதிரி சண்டையில்லை. அது வேற. கட்டளைகள் ஒவ்வொன்றுக்கும் பின்னால், எதிரிக்கு பேரிழப்பு நிகழ்ந்தபடியிருந்தது. ஒருநாள் நள்ளிரவு தொடங்கிய சண்டையில் முன்னணி போர்முனையிலிருந்து தாக்குதலைச் செய்த அணியில் நானுமிருந்தேன். துவக்கின் வாய்முனை தகித்து பூத்தது. என்னோடிருந்த போராளி “மொஸ்கோ” துவக்கைத் தன்னுடைய நெஞ்சோடு அணைத்து வைத்திருந்தபடி “என்னால ஒருத்தனையும் நோக்கிச் சுட ஏலாமல் கிடக்கு. ஆனால் என்னைச் சுடமுடியுமெண்டு நினைக்கிறேன்” என்றான். “மொஸ்கோ உனக்கேதும் விசரா. துவக்கை கீழ போட்டுட்டு சும்மா இரு. நான் சண்டை செய்கிறேன்” என்றேன். அவன் துவக்கை கீழே போட்டான். ஆனால் அதற்கு முன்பாகவே ஒரேயொரு தடவை தன்னுடைய டிகரை அழுத்தி தாடைக்கு கீழிருந்து பாய்ச்சினான். அவன் தற்கொலை செய்து கொண்டதை எல்லோரிடமும் மறைத்தேன். அவன் வீரச்சாவு என்ற செய்தியை நானே கட்டளைப்பணியகத்துக்கு அறிவித்தேன். “அது பிழையான விஷயமில்லையே” “ஒருத்தன் களத்தில் ஆயுதமேந்தி சண்டை செய்து, ஏதோவொரு நாள் தன்னால எதிரியைச் சுட முடியேல்ல எண்டு சொல்லி தன்னைத்தானே அழிக்கிறான். அவனும் வீரன்தான். அவனும் வீரச்சாவுதான். எல்லாத்துக்கும் மேல அவனோட உயிர்போன முகத்தைப் பார்த்தன். நல்ல செழிப்பு. ஏதோவொன்றை சாதித்துவிட்ட இளைப்பாறல்” என்கிற கரியனைப் பார்த்து வியந்தேன். “சொல்லுறத கேள்” “ஓம், சொல்லு” “அவனுடைய வித்துடலை எடுத்துக் கொண்டு பின்னால போய்ட்டாங்கள். ஆனால் அவன்ர துவக்கு என்னட்டத்தான் இருக்கு. நான் அதை வைத்துக் கொள்வதாக அறிவித்தேன். இராணுவம் நினைத்ததைப் போல எங்களை ஒன்றும் செய்ய முடியாமல் விழி பிரட்டி நின்றது. தளபதிக்கு உற்சாகமான களமாக அது மாறியது. இராணுவம் மெல்ல மெல்ல பின்வாங்கத் தொடங்கியது. நீயும் நானும் பனம்பழம் பொறுக்கப் போவமெல்லே, அப்ப ஜெயக்கொடியோட பனந்தோப்பில பழங்கள் விழுந்து கிடக்கிற மாதிரி வெளிமுழுதும் இராணுவத்தின் பிணங்கள். போராளிகள் முன்னேறினோம். இராணுவத்தின் பைகளைப் பிரித்து அவர்களது உணவுகளை எடுத்தேன். பிஸ்கட் பை, பணிஸ் என்று நிறைய இருந்தது. சிகரெட் பெட்டியும் இருந்தது. ஒன்றை அடித்தால்தான் என்ன என்று தோன்றியது. “அய்யோ, கெடுவானே ஆராவது பார்த்தால் சுட்டிருப்பாங்களே” “ஆருக்கும் தெரியாமல் எடுத்து பொக்கெற்றுக்குள்ள வைச்சிட்டன். கொஞ்ச நேரத்தில் பிடிச்ச பகுதியில அரண் அமைச்சு இருந்தம். சண்டை ஓய்ந்திருந்தது. ஆனால் நூறுக்கும் மேற்பட்ட ஆர்மிக்காரர்களோட சடலங்கள் இப்ப எங்கட கட்டுப்பாட்டுக்குள்ள இருக்கு. எனக்கு ஒரே வேடிக்கையா இருந்தது. பாவம் செத்துப்போன ஆர்மியள். சம்பளம் வாங்கி சாக வந்தவங்களை நினைச்சு கவலைப்பட்டும் பிரியோசனம் இல்லை என்று தோன்றியது. களமுனையில் ஆசுவாசம் கொள்ளும்படியாய் காற்று எழுந்தது. கந்தக நெடில் ஒருபக்கம் தலை சுற்றியது. மின்மினிகள் ஏனென்று தெரியாமல் அபத்தமான வெளிச்சம் அடித்து திரிந்தன.” “எடேய், இன்னும் நீ காயப்பட்ட கதைக்கு வரேல்ல” ம். பிறகு நான் கொஞ்சம் காலாற நடந்து வரவிரும்பினேன். எங்கே நடப்பது? மொஸ்கோ தற்கொலை செய்து கொண்டவிடத்திற்குச் சென்று விட்டு திரும்புவதாக உத்தேசித்தேன். பொக்கேற்றுக்குள் இருக்கிற சிகரெட்டை எடுத்து கைக்குள் திணித்தேன். ஒரு வீட்டின் சிறிய கிணறு வடிவாய் இருந்தது. சக போராளிகளின் நடமாட்டம் எதுவுமில்லை. மெல்ல அதற்குள் இறங்கி, படியில் அமர்ந்து சிகரெட்டை ஊதினேன். இவ்வளவு சுதியான சிகரெட். அருமையான வாசனையும், உறைப்பும் விறுவிறுத்து தொண்டைக்குள் இறங்கியது. வேக வேகமாய் படிக்கட்டில் ஏறி மேலே வந்தேன். தற்கொலை செய்து கொண்ட இடத்தை அடைந்ததும், அவனுடைய ரத்தம் காய்ந்திருந்ததைப் பார்த்தேன். அது ஒரு சிறிய செந்தழல் பூவாக நிலமீது ஊர்ந்து என்னை நோக்கி வந்தது. கண்களை கசக்கியபடி மீண்டும் பார்த்தேன். காய்ந்த ரத்தம். பிறகு நிலமீது ஊர்ந்து வரும் பூ. அங்கே நிற்கவே ஏதோவொரு நடுக்கம் தோன்றியது. அவன் இறுதி நாளன்று பேசிய வார்த்தைகள் நினைவுக்கு வந்தன. “துவக்கை விடவும் விடுதலையை எங்களிடம் கூட்டிவர வேற வழியில்லையோ. அல்லது நாங்கள் இன்னும் அதை யோசிக்கலையோ” “மொஸ்கோ, துவக்கோ, தடியோ எங்களைக் காப்பாற்றிவிடுமெண்டு நாங்கள் நம்பேல்ல. ஆனால் எங்களை அழிக்கத் துடிச்சவனை ஆயுதத்தால தான் பயமுறுத்த முடியும், இல்லையே” “ஆனால், எதிரியைப் பயப்பிடுதுறது வேலை இல்லையே, விடுதலை தானே வேணும்” “அதுக்குத்தான் நாங்கள் உயிரைக் கொடுத்துப் போராடுறம். நீ இத்தனை வருஷமாய் சண்டை செய்கிறதுக்கு அதுக்குத் தானே” “உயிர் எடுத்தல் – கொடுத்தல் இந்த இரண்டு பாதையிலும் விடுதலையை சந்திக்க இயலுமே” “மொஸ்கோ, நீங்கள் கனக்க படிச்சனியள். எனக்கு மூத்த போராளி. உங்கட பட்டறிவுக்கு முன்னால் என்ன பதில் சொல்லியும் என்னால உங்களைத் திருப்தி படுத்த ஏலாது” “அப்ப உயிர் கொடுக்கிறதில, எடுக்கிறதில விடுதலை வராது எண்டு ஒத்துக்கொள்ளுறியள், அப்பிடித்தானே” எனக்கு தலையில் ஒருவித சுழிப்பு மின்னல் அடிக்கத் தொடங்கியது. மெல்லிய தந்திகள் அதிரும் தோரணையில் உள்ளிருந்து ஏதோவொரு சத்தம் கேட்கத் தொடங்கியது. வேகவேகமாய் முன்னரங்குக்கு ஓடினேன். சடலங்கள் மீது இலையான்கள் அமைதியாக அமர்ந்திருந்தன. வானத்தை பார்க்க மறுத்து குப்புறக் கவிழ்ந்து கிடக்கும் இராணுவச் சீருடைகளைப் பார்க்கையில் பரவசம் எழுந்தது. ஒருவனின் சடலம் மட்டும் வானத்தைப் பார்த்திருந்தது. அவனது முகத்தில் கறுப்பு வண்டொன்று ஏறியது. அதனைப் பிடித்து தூக்கி எறிந்து, முகத்தை துடைத்துவிட்டேன். நல்ல வடிவான பெடியன். அவனுக்கு நெஞ்சில் வெடி விழுந்திருக்கிறது. கைகள் ரத்தத்தில் பதிந்திருக்கின்றன. ரத்த வெடுக்கு வீசும் குரோட்டன் செடியைப் போலவிருந்த அவனது கையை எடுத்து உடலில் வைத்தேன். கண்கள் ஒளியிழந்து தலை சுற்றத் தொடங்கியது. களமுனையில் மீண்டும் சத்தம் கேட்கத் தொடங்கியது. ஓடிச் சென்றேன். போராளிகள் மீண்டும் தாக்குதலை தொடங்கினர். அது மெல்ல மெல்ல சூடு பிடிக்கும். இன்றைக்கு மிச்சப்பகுதிகளையும் மீட்டுவிடுவதென திட்டம். ஆனால் இராணுவமும் தாக்குதலை திறனாக எதிர்கொண்டது. நாங்கள் கடுமையான வியூகங்கள் அமைத்து சண்டையிட்டோம். எதிர்த்தாக்குதல் மெல்லப் பலமிழந்து பின்வாங்கல் தொடங்கியது. போராளிகள் முன்னகர்ந்தோம். மீண்டும் இராணுவ அணியினர் உயிரிழக்க வேண்டியதாயிற்று. உக்கிரமான தாக்குதலுக்கு ஈடுகொடுக்க முடியவில்லை. கால்களுக்கடியில் இறைஞ்சும் சொற்கள் நசிபட முன்னேறி ஓடினோம். ஒரு இராணுவத்தினன் கனரக ராக்கெட் ஆயுதத்தோடு சாவடைந்திருந்தான். அவனுடைய ஆயுதத்தை அப்படியே கைப்பற்றினேன். என்னுடைய கால்கள் அந்தரத்தில் மிதப்பதை உணர்கிறேன். போர்க்களம் கானல் அலையென கண்களுக்குள் பொங்கியெழ ஆட்லறிகளும், துப்பாகிகளும், எதிரிகளும், போராளிகளும் சின்னஞ்சிறு மீன் குஞ்சுகளைப் போல நீந்தி விழுகின்றனர். இராணுவத்தின் தாக்குதல் திடீரென பலங்கொண்டு கனைத்தது. போராளிகள் திடுதிடுமென திணறத் தொடங்கினர். பல்குழல் எறிகணைகள் வெளிமுழுதும் சொரிந்து விழுந்து வெடித்தன. என்னுடைய அணியில் இருந்தவர்கள் நான்கிற்கு மேற்பட்டவர்கள் வீரச்சாவு அடைந்தனர். என்ன செய்வதெனத் தெரியாமல் கண்கள் சொருகின. மயக்கமா? மரணமா? உடல் முழுதையும் சோதனை செய்கிறேன். எங்கேனும் காயப்பட்டு ரத்தம் போய்விட்டதா என்கிற சந்தேகம். உடலில் எங்கும் எதுவுமில்லை. நன்றாகவேயுள்ளேன் என்ற உறுதிப்பாடு. கையில் கிடந்த ராக்கெட் ஆயுதத்தை எடுத்துக்கொண்டு முன்னரங்கில் இருக்கிற மண் அணைக்கு மேலே ஏறிச்சென்று எதிரிகளின் திசை நோக்கி வீசினால் என்னவென்று நீதான் என்னிடம் சொன்னாய் ஸ்பார்ட்டகஸ். “நானா, உனக்கு மூளையும் எரிஞ்சு போச்சு போலகிடக்கு” ஸ்பார்ட்டகஸ். நீதான் சொன்னாய். என்னை நம்பு. உன்னுடைய கதையைக் கேட்டு மண் அணைக்கு மேலே ஏறி நின்று, ராக்கெட்டை இயக்கினேன். அது புறப்படும் போது வெளித்தள்ளிய நெருப்புச் சுவாலை என்னை இப்படியாக்கிவிட்டது. நான் மண் அணையிலிருந்து தூக்கி வீசப்பட்டேன். பிறகு சுயநினைவற்று எரிகாயத்தோடு கண்டுபிடிக்கப்பட்டிருக்கிறேன். இனிக் காயம் மாறியதும் இயக்கம் தண்டனை வழங்குமென நினைக்கிறேன்” “உனக்கெதுக்கு தண்டனை. நீதான் சண்டை செய்து காயப்பட்டிருக்கிறியே” “அதுசரி, ஆனாலும் போதை மருந்து புகைச்சது இயக்க ஒழுக்கத்திற்கு எதிரானது தானே” “போதை மருந்தா, எது சிகரெட்டா” “அது சிகரெட் மாதிரி கொடுக்கப்பட்ட போதை மருந்தாம். இராணுவத்தில இருக்கிறவங்கள் பயம் தெரியாமல் சண்டை செய்ய கொடுக்கப்படுகுதாம்” என்றான் கரியன். “அப்ப, நீ வெறியில தான் ஏறி அடிச்சனியோ” “பின்ன, நான் அண்டைக்கு தன்னைச் சுட்டுச் செத்தானே மொஸ்கோ அவனை மாதிரி என்ன வீரனே?” எதுவும் சொல்லாமல் கரியனையே பார்த்துக் கொண்டிருந்தேன். சிரித்தபடி “உன்னட்ட ஒண்டக் கேக்க வேணும்” என்றான். “என்ன” “அவன் செத்த இடத்தில் ஒரு பூ ஊர்ந்து வந்தமாதிரி இருந்ததே, அது என்னெண்டு நினைச்சனி” “உனக்கு வெறியில அப்பிடி தெரிஞ்சிருக்கு” “அதுதான் இல்லை. அது மொஸ்கோவின்ர மூளை. வீரனோட மூளை, போர்க்களத்தில பூ மாதிரி கிடக்கிறத சொன்னால் நீங்கள் நம்பமாட்டியள். நான் போதைவஸ்த புகைச்சது தான் காரணமெண்டுவியள்” “சரி. அது வீரனோட மூளைதான். ஒத்துக்கொள்கிறேன். இப்ப நீ படு. நான் நாளைக்கு வருகிறேன்” என்று புறப்பட்டேன். அப்போது என்னுடைய கையைப் பிடித்துச் சொன்னான் “ இந்த விஷயத்தை ஆரிட்டையும் சொல்ல மாட்டனெண்டு எனக்கு சத்தியம் செய்திருக்கிறாய் மறந்திடாத” “சத்தியமாய் சொல்லமாட்டன்” என்று விடைபெற்றேன். கரியன் சில மாதங்கள் மருத்துவ விடுமுறையில் இருந்தான். அவனை பராமரித்து வந்த மருத்துவ முகாம் காட்டுப் பகுதிக்குள் இருந்ததால் போராளிகளைத் தவிர எவராலும் போக முடியாது. உடல் நிலை தேறி, நேராகவே களமுனைக்குச் சென்றான். போர்க்களத்தில் நிறையப் பாராட்டுக்களைப் பெற்றான். எதிரிகளை கொன்று குவிப்பதில் பெயர் பெற்றான். ஒருவேலையாக கிளிநொச்சிக்கு வந்திருந்த சமயம், என்னை வீதியில் கண்டு வாகனத்தை நிறுத்தினான். ஓடிவந்து அணைத்துக் கொண்டான். “ஸ்பார்ட்டகஸ். நிலமூர்ந்து வரும் பூக்கள் களத்தில் நிறையவே மலர்கின்றன. அவர்கள் வீரர்கள்” “இப்படி ஏன் நடக்கிறது. எதைக் கண்டு அஞ்சுகிறார்கள்” கேட்டேன். “தெரியவில்லை ஸ்பார்ட்டகஸ். ஆனாலும் அடிக்கடி அப்படி நடந்து விடுகிறது. மொஸ்கோவைப் போல இதுவரைக்கும் பத்துப் பேர், நிலமூர்ந்து வரும் பூக்களை மண்ணில் விதைத்து விட்டார்கள்” “நாளாந்த கள அறிக்கையில் இதனை அழுத்தம் திருத்தமாக எழுதி அனுப்பி. தளபதி பார்க்கட்டும்” “ஒன்று சொன்னால் கோபித்துக்கொள்ளாதே, தளபதியே நேற்று அப்படியொரு முடிவை எடுத்து தப்பியிருக்கிறார்” “அய்யோ என்ன சொல்லுகிறாய். அவருக்கே இப்படித் தோன்றுகிறதா” “எனக்கும் தோன்றிவிட்டது ஸ்பார்ட்டகஸ்” “விசரா உனக்கு. மொஸ்கோவைப் போல அழித்துக் கொள்வதெல்லாம் வீண்சாவு. அதனைச் செய்யாதே. ஒரு மதிப்புமிருக்காது” என்றேன். கரியன் சிரித்தபடி வாகனத்தில் ஏறினான். விடுப்பில் வருகிறபோது சந்திக்கலாம் என்று புறப்பட்டான். இரண்டு நாள் கழித்து மேஜர் மொஸ்கோவாக வீட்டிற்கு கொண்டுவரப்பட்டிருந்த வித்துடலின் தலைப்பகுதியை ஓடிச்சென்று பார்த்தேன். நிலமூர்ந்து போகும் பூ கரியனிடமே இருந்தது. கரியன் வீரன். https://akaramuthalvan.com/?p=1608
  49. அவன் எங்கள் வழிகாட்டி !

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.