Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Leaderboard

  1. தமிழ் சிறி

    கருத்துக்கள உறவுகள்
    19
    Points
    87990
    Posts
  2. குமாரசாமி

    கருத்துக்கள உறுப்பினர்கள்
    12
    Points
    46797
    Posts
  3. Kapithan

    கருத்துக்கள உறவுகள்
    10
    Points
    9308
    Posts
  4. விசுகு

    கருத்துக்கள உறவுகள்
    7
    Points
    34974
    Posts

Popular Content

Showing content with the highest reputation on 07/22/24 in Posts

  1. லதா மங்கேஷ்கரின், கடைசி வார்த்தைகள். இந்த உலகில் மரணத்தை விட உண்மை எதுவுமில்லை. உலகின் மிக விலையுயர்ந்த பிராண்ட் கார் எனது கேரேஜில் நிறுத்தப்பட்டுள்ளது. ஆனால், நான் சக்கர நாற்காலியில் அமர்த்தப்பட்டேன்! இந்த உலகில் உள்ள அனைத்து விதமான டிசைன்கள் மற்றும் வண்ணங்கள், விலையுயர்ந்த ஆடைகள், விலையுயர்ந்த காலணிகள், விலையுயர்ந்த அணிகலன்கள் அனைத்தும் என் வீட்டில் உள்ளன. ஆனால் நான் மருத்துவமனை வழங்கிய குட்டை கவுனில் இருக்கிறேன்! எனது வங்கிக் கணக்கில் நிறைய பணம் இருந்தாலும் அதனால் எனக்கு எந்தப் பயனும் இல்லை. என் வீடு எனக்கு அரண்மனை போன்றது, ஆனால் நான் ஒரு மருத்துவமனையில் ஒரு சிறிய படுக்கையில் படுத்திருக்கிறேன். நான் இந்த உலகில் ஐந்து நட்சத்திர ஹோட்டல்களுக்கு நகர்ந்து கொண்டே இருந்தேன். ஆனால் இப்போது நான் மருத்துவமனையில் ஒரு ஆய்வகத்திலிருந்து மற்றொரு ஆய்வகத்திற்கு அனுப்பப்படுகிறேன்! ஒரு காலத்தில் 7 சிகையலங்கார நிபுணர்கள் தினமும் என் தலைமுடியை செய்வார்கள். ஆனால், இன்று என் தலையில் முடி இல்லை. நான் உலகெங்கிலும் உள்ள பல்வேறு 5 நட்சத்திர ஹோட்டல்களில் சாப்பிட்டேன். ஆனால் இன்று என் உணவு ஒரு நாளைக்கு இரண்டு மாத்திரைகள் மற்றும் இரவில் ஒரு துளி உப்பு. நான் வெவ்வேறு விமானங்களில் உலகம் முழுவதும் பயணம் செய்து கொண்டிருந்தேன். ஆனால், இன்று இரண்டு பேர் எனக்கு மருத்துவமனை வராண்டாவிற்கு உதவுகிறார்கள். எந்த வசதியும் எனக்கு உதவவில்லை. அதற்காக நான் எந்த வகையிலும் தளரவில்லை. ஆனால், சில அன்பர்களின் முகங்கள், அவர்களின் பிரார்த்தனைகள் என்னை வாழ வைக்கின்றன. இதுதான் வாழ்க்கை. எவ்வளவு செல்வம் இருந்தாலும், கடைசியில் வெறுங்கையுடன் சென்று விடுவீர்கள். எனவே அன்பாக இருங்கள், உங்களால் முடிந்தவர்களுக்கு உதவுங்கள். பணத்திற்காகவும் அதிகாரத்திற்காகவும் மக்களை மதிப்பிடுவதை தவிர்க்கவும். நல்லவர்களை நேசியுங்கள், உங்களுக்காக இருப்பவர்களை நேசியுங்கள், யாரையும் புண்படுத்தாதீர்கள், நல்லவர்களாக இருங்கள், நல்லவர்களாகவே இருங்கள், ஏனென்றால் அதுதான் உங்களுடன் செல்லும்.😌 -லதா மங்கேஷ்கர்,,, Joseph Anthony Raj
  2. உயர்தர வாழ்க்கை என்பது பிச்சை அல்ல. அது கடின உழைப்பினூடாக அமைத்துக் கொள்வது.. சட்டத்தின் ஆட்சி Rule of Law எங்கெல்லாம் இருக்கிறதோ அங்கெல்லாம் பிரயாசை உள்ள மக்கள் சீரான உயர்தர வாழ்க்கையை அமைத்துக்கொள்ள முடியும்.
  3. வீட்டில் அனுமதி கேட்பவர்களை எமது சங்கத்தில் சேர்ப்பதில்லை. ஆசை கொஞ்ச நேரம் கூட நிலைக்கவில்லை 🤣
  4. விசுகர்! எமது தஞ்ச வாழ்வை வைத்து அறம் பற்றிய முடிவிற்கு வரமுடியாது. நீங்கள் கருதும் அறத்திற்கு பெயர் நன்றிக்கடன். நீங்கள் கருதும் மேற்குலக அறத்தை எமது மண்ணில் போரால் அல்லது வறுமையால் அவதிப்படும் மக்களிடம் போய் கேட்டுப்பாருங்கள். காசா மக்களிடம் கேட்டுப்பாருங்கள் மேற்குலகின் அறம் பற்றி.... ஆபிரிக்க நாடுகளில் போய் கேட்டுப்பாருங்கள் மேற்குலகின் அறம் பற்றி... விசுகர்! அறத்தையும் நன்றிக்கடனையும் ஒரே தராசில் வைக்க முடியாது.
  5. ஒரு எட்டு வருடங்களின் முன், இங்கு வேலையிலும்,வெளியிலும் சிலர் நேராகவே, வெளியாகவே பெண் ஒருவர் அதிபராக வருவதற்கு நாங்கள் வாக்களிக்க மாட்டோம் என்று சொன்ன போது ஆச்சரியமாகத்தான் இருந்தது. இன்னும் சிலரோ இதையே வெளியில் சொல்லாமல் இருந்திருக்கவும் கூடும். எட்டு வருடங்கள் ஆகி விட்டாலும், வெறும் கருத்துகளால் மனங்களில் மாற்றங்கள் உண்டாகும் வயதை அதற்கு முன்னேயே நாங்கள் தாண்டி விட்டோம், ஆகவே அவர்கள் இன்றும் அப்படியே இருப்பார்கள் என்றே நம்புகின்றேன். இப்பொழுது அவர்கள் சொல்லும் வார்த்தைகளில் ஏதும் வித்தியாசம் இருக்கலாம், உட்பொருளிலும் தெரிவுகளிலும் அநேகமாக எந்த மாற்றமும் இருக்காது. கமலா ஹாரீஸ் ஒரு எழுத்தாளராக முயற்சிக்கலாம். அவரிடம் அப்படியான ஒரு திறமை இருப்பது போலவே தெரிகின்றது. ஒரு வித 'தத்துவ அலட்டல்கள்' போன்றே அவரின் பேச்சுகள் இருக்கின்றன. இதுவே நடுநிலையில் நிற்கும் மக்களை அந்நியப்படுத்த போதுமானது. என்னுடைய இங்கு வாழும் இலங்கை மற்றும் இந்திய நண்பர்களில் மிகப் பெரும்பாலானோர் ஜனநாயக் கட்சியின் ஆதரவாளர்களே. அவர்கள் நேற்றிலிருந்து ஒரு புது உற்சாகத்துடன் இருக்கின்றார்கள். ஆனாலும் கலிஃபோர்னியா தேர்தல் கணக்கில் இல்லவே இல்லை என்பதும் அவர்களுக்கும் தெரியும். அமெரிக்காவின் ஆதிக்கம் என்பது அமெரிக்க அதிபர்களால் உண்டாக்கப்படுவதில்லை. அமெரிக்கா முதலாளிகளால், முதலாளிகளுக்காக மாற்றப்பட்ட ஒரு நாடு. ஆதிக்கம் அங்கிருந்தே உருவாக்கப்பட்டு பரப்பப்படுகின்றது. இன்று உலகில் கண்ணுக்கெட்டியவரை ஒரு மாற்று இல்லை என்பதே நிஜம். ஒரு பங்குச் சந்தை சரிவு, கோவிட் தொற்று, டாலரின் வீழ்ச்சி, கடைசியாக வந்த Antivirus என்று ஒவ்வொரு தடவையும், 'கதை முடிந்து விட்டது.........' என்று வெளியிலிருந்து பலரும் சொல்வார்கள். ஆனால் மாற்று கிடையாது. அமெரிக்காவின் ஆதிக்கம், அது பல வேளைகளில் மனிதாபிமானம் அற்றது தான், குறைக்கப்பட வேண்டும் என்றால், அது மற்றைய ஒவ்வொரு நாட்டிலிருந்துமே ஆரம்பிக்கப்படவேண்டும். இலங்கைத் தமிழர்களுக்கும் தமிழ்நாட்டிற்கும் இருக்கும் உறவும், ஊடலும், தேவைகளும் போலவே உலகில் பல நாடுகளுக்கும் அமெரிக்காவிற்கும் இடையே ஒரு தொடர்பு இருந்து கொண்டிருக்கின்றது. இங்கு எவர் அதிபரானாலும் அதில் மாற்றம் இல்லை.
  6. பிரமாண்டமாக ஏற்பாடு செய்யப்படும் “யாழ்ப்பாணம் எக்ஸ்போ 2024” தொழில்துறைகளை மேம்படுத்தும் நோக்கில் "யாழ்ப்பாணம் எக்ஸ்போ 2024" எனும் வர்த்தகக் கண்காட்சி யாழ்ப்பாணத்தில் நடைபெறவுள்ளது. இந்தக் கண்காட்சி முற்றவெளி மைதானத்தில் எதிர்வரும் ஓகஸ்ட் 23 முதல் 25ஆம் திகதி வரையில் நடைபெறவுள்ளது. இந்தக் கண்காட்சியை முற்றிலும் இலவசமாக பார்வையிடமுடியும். முதல் நாள் நிகழ்வில் யாழ். இந்திய துணைவேந்தர், வடக்கு மாகாண ஆளுநர் பிரதம அதிதியாக கலந்துகொள்வார்கள். இரண்டாம் நாள் கடற்தொழில் அமைச்சர் பிரதம அதிதியாக கலந்து கொள்ளவுள்ளார். கண்காட்சி தொடர்பில் யாழ்ப்பாணத்தில் உள்ள தனியார் விடுதி ஒன்றில் நடைபெற்ற ஊடக சந்திப்பிலேயே ஏற்பாட்டாளர்கள் அதனை அறிவித்துள்ளனர். கண்காட்சி தொடர்பில் மேலும் தெரிவிக்கையில், கட்டுமானம், பிற தொழில் துறைகளில் பங்காளர்களுக்கு தங்கள் தயாரிப்புகளை காட்சிப்படுத்த ஒரு தளத்தை உருவாக்குவதற்கான வாய்ப்பை ஏற்படுத்தும் நோக்கில் இந்தக் கண்காட்சி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. 200இற்கும் மேற்பட்ட காட்சி கூடங்களுடன் பல்வேறு நிபுணர்கள் மற்றும் தொழில்வல்லுநர்கள், கட்டுமானம் மற்றும் பிற தொழில்களை இணைந்து மேம்படுத்துவதற்காக ஒருங்கிணைக்கப்படுகின்றனர் இதேசமயம், சிறு தொழில் முயற்சியாளர்களின் தயாரிப்புகள் மற்றும் சேவைகளை பிரபலப்படுத்தவும் உதவும். வடக்கு, தெற்கு வர்த்தக இணைப்புகளை வலுப்படுத்தும் இந்த கண்காட்சியில் கட்டுமானம் சார் இயந்திரங்கள், உபகரணங்கள், விவசாயம் சார் உபகரணங்கள், மின் உபகரணங்கள், கைவினை பொருட்கள், செரமிக் மற்றும் கண்ணாடிப் பொருட்கள், வீட்டு உபயோகப் பொருட்கள், சுகாதாரம், உணவு மற்றும் உடைகள் போன்ற பல துறைகளில் உள்ள தயாரிப்புகள் மற்றும் சேவைகளை காட்சிப்படுத்தவுள்ளன. இந்தக் கண்காட்சியில், பொருட்கள் சேவைகளை 40 வீதம் வரையில் விலைக்கழிவுடன் பெற்றுக்கொள்ள முடியும். வடக்கைச் சேர்ந்த தொழில் முயற்சியாளர்களுக்கு முன்னுரிமை அடிப்படையில் காட்சிக்கூடங்களை வழங்கவுள்ளோம். -என்றனர் பிரமாண்டமாக ஏற்பாடு செய்யப்படும் “யாழ்ப்பாணம் எக்ஸ்போ 2024” (newuthayan.com)
  7. உற்சாகப் படுத்தியதற்கு நன்றி. ஆனால் வீட்டில் அனுமதி மறுக்கப்பட்டுவிட்டது. சுருட்டிக் கொண்டு ஒரு மூலையில் இருக்க வேண்டியதுதான்
  8. 🤣...... நித்தி அப்பவே சேலத்தில் விநோத உடைப்போட்டியொன்றில் பங்கு பற்றியிருக்கின்றார். அவசரத்தில் பெரிய ஒரு தடியாக கையில் கொடுத்து விட்டார்கள்.......... 'கம்பி கட்டுகிற கதை....' என்று சொல்வது இன்று, அன்றைய நித்தியின் கதை 'கரண்ட் அடிக்க வைத்த கதை.......'. கைலாசாவில் மனிசனிடம் இருந்த தங்கத்தை கூட இருந்த இரண்டு அமெரிக்கர்கள் சுருட்டி விட்டதாகச் சொல்கின்றார்கள். வரவு = செலவு ..................
  9. கைலாசா போகும் ஆட்களின் எண்ணிக்கை அதிகரிக்கும் போலுள்ளது.
  10. அடிமைத்தனத்திற்கு பழகிவிட்டால் நம் பலத்தையும் மறந்து விடுகின்றோம். அடிமைத்தனத்திற்கு பழகிவிட்டால் நம் பலத்தையும் நியாயங்களையும் மறந்து விடுகின்றோம். 😄
  11. இரவு பகல் பாராமல்,குளிர் தாங்கமுடியாமல் 12,13 மணித்தியாலங்கள் வேலை செய்து அளவிற்கு மிஞ்சிய வரிகள் கட்டி வாழும் வாழ்க்கையை உயர்தர வாழ்க்கை என்றால் என்ன செய்வது? 🤣 தலைக்கு மிஞ்சிய கடனை வைத்துக்கொண்டு உயர்தர வாழ்க்கை என்றால்.....? 😂
  12. இவரை எப்படி இந்திய வம்சாவளி கூற முடியும்? இவரது தகப்பன் ஜமேக்கா. தாய் இந்தியா. வம்சம் என்று தகப்பன் வழியைத்தானே கூறுவார்கள்.
  13. இன்று இந்த மறைந்த அரசியல்வாதிக்கெதிராக வைக்கப்படும் குற்றச்சாட்டுகளில் ஒன்று மக்களை ஒருங்கிணைக்கதவறியமை. 2009 முள்ளிவாய்க்கால் நிகழ்வின் மூலம் தமிழ் சிறுபான்மை மக்களின் உரிமைகளை நசுக்கிய பின் இங்கு சிட்னியில் இலங்கை தொலைக்காட்சி படப்பிடிப்பினை மேற்கொண்டது (ஒவ்வொரு வளர்ந்த நாடுக்ளிலும் இவ்வாறு படப்பிடிப்பினை மேற்கொண்டதாக கூறப்பட்டது). அந்த படப்பிடிப்பின் நோக்கம் இலங்கை உள்நாட்டு போரினை முடிவிற்கு கொண்டு வந்துவிட்டது அடுத்தது இவ்வாறு வளர்ச்சி அடைவதுதான் என்பதாக அவர்களது கருத்தாக இருந்தது. சிறுபான்மை தமிழர்களின் உரிமையினை இரும்புக்கரம் கொண்டு அடக்கி 15 வருடங்களின் பின்னர் இலங்கை வங்குரோத்து நிலமையிலிருந்து வெளிவருவது பற்றி கதைப்பதிலேயே காலம் போகிறது. மக்களை பிளவுபடுத்துவதால் அரசியல் இலாபம் பெறலாம் ஆனால் அதனால் நாட்டிற்கும் மக்களுக்கும் தீமைதான் ஏற்படும். சிறுபான்மை சமூகமாகிய நாம் பல பிரிவுகளாக பிரிந்திருப்பதால் மேலும் பலவீனமாகிறோம், ஆனால் அதற்கு எமக்குள் இருக்கும் அழுக்குகளை சுத்தம் செய்யாமல் குற்றம் சாட்டுவதற்கு ஒருவர் தேவைப்படுகிறார் அதற்கு பலிக்கடா இந்த அரசியல்வாதி.
  14. 1) ட்ரம்பின் துப்பாக்கி சூட்டின் போது... தாக்குதலாளி 120 மீற்றர் தூரத்தில் இருந்து சுடுகின்றார். 2) அதனை விட குறைந்த தூரத்தில் பாதுகாப்பு பிரிவினர் இன்னொரு கூரை மீது இருக்கின்றார்கள். 3) அவர்கள்... துப்பாக்கி சூடு நடத்தும் மட்டும், தாக்குதலாளியைக் காணவில்லையாம். 4) ட்ரம்ப் மீது துப்பாக்கி சூடு நடத்திய மறுகணம், தாக்குதலாளியை சுட்டுக் கொல்கிறார்களாம். 5) கூரை மீது இருந்த தாக்குதலாளி, மற்றைய கூரை மீது இருந்த அரச பாதுகாப்பு பிரிவினர், ட்ரம்ப் பேசிய மேடை மூன்றும்.... சாதாரண கண்ணால் பார்க்கக் கூடிய தூரத்தில் ஒரு முக்கோண வடிவில் அமைந்துள்ளது. அப்படி இருந்தும் முன்பே கண்டு பிடிக்காமல் இருந்தார்கள் என்பதை நம்பும் படியாக இல்லை. மயிரிழையில், சில மில்லி மீற்றர் தலை அசைவுடன்.. ட்ரம்ப் உயிர் தப்பியமை அதிசயம் என்றுதான் கூற வேண்டும். நீங்கள் கூறிய மாதிரி இன்னுமொரு தாக்குதல் நடந்தாலும் ஆச்சரியம் இல்லை. அப்படி நடத்தி விட்டு... பழியை வேறு யார் மீதாவது போட்டு தப்புவதும் அமெரிக்காவுக்கு முதல் முறை அல்ல.
  15. Westக்கு அறம் என்பது அறவே இல்லை. அது தனது அதிகாரத்தை ஆதிக்கத்தை நிலைநிறுத்திக்கொள்ள எதை வேண்டுமானாலும் செய்யும். வரலாறு அதைத்தான் சொல்கிறது. Trump மீது இன்னுமொரு கொலை முயற்சி இடம்பெற்றாலும் ஆச்சரியம் இல்லை. சற்று யோசித்துப் பாருங்கள்,. Secret Service ன் மேலதிக பாதுகாப்பு கொடுக்கப்படவில்லை. கேட்டும் அது மறுக்கப்படுகிறது. தாக்குதலாளி எல்லோர் முன்னிலையிலும் கூரை மீதேறி துவக்குச் சூட்டை நடாத்துகிறார். த்Trump மீதான துப்பாக்கிப் பிரயோகத்தின்போது அவர் சற்றே இடதுகையால் ஊன்றி உடம்பை வளைத்து தலையைத் திருப்புகிறார். தலைக்கு வந்த துப்பாக்கி ரவை காதைத் துளைத்துச் செல்கிறது. ஒரு படுகொலை தவிர்க்கப்படுகிறது. Trump தலையைத் திருப்பியிருக்காவிட்டால் ......... உலக வரலாற்றில் இட்பெற்ற இன்னுமொரு அரசியல் படுகொலையை நாங்கள் கண்களால் கண்டிருப்போம். உடனே தாக்குதலாளி கொல்லப்படுகிறார். File closed. இப்போது Biden போட்டியிலிருந்து விலகுகிறார்,... இது சிரிப்பை வரவழைக்கவில்லையா? 😏 America வீழ்ச்சியடைய வேண்டும் என்கிற தங்கள் ஆதங்கம் புரிகிறது,....😁
  16. அமெரிக்கர்கள் ஒரு போதுமே பெண் ஒருவரை தம் சனாதிபதியாக தெரிவு செய்யப் போவதில்லை. அப்படி தெரிவு செய்வதற்கான மனப்பான்மை அவர்களுக்கு கிடையாது.
  17. பாவம் கிழவன். கடவுளாலும் தன்னை போட்டியிலிருந்து விலக வைக்க முடியாது என்று விடாப்பிடியாக நின்ற ஆளை… “கோவிட் - 2024” வந்து விலகப் பண்ணிப் போட்டுது. 😂 கபிதன்… நீங்கள் வேறு ஒரு திரியில்… பைடனுக்கு கோவிட் தொற்று ஏற்பட்டுள்ளது என்று இருந்த போது… ஆளை மாற்றப் போகின்றார்கள் என்று முன்பே கூறிய உங்கள் கணிப்பிற்கு பாராட்டுக்கள். 👍🏽 சென்ற வியாழக்கிழமை (18.07.) அன்றே நீங்கள் கணித்தது இன்னும் சிறப்பு. 😁
  18. எனக்கென்னவோ… விக்கியர் “டபிள் கேம்” விளையாடுற மாதிரி ஒரு பீலிங். 😂 🤣
  19. ஜனாதிபதி போட்டியிலிருந்து பைடன் விலகுகிறார். 81 வயதான ஜனாதிபதியின் சகிப்புத்தன்மை மற்றும் மன திறன்கள் குறித்து பல வாரங்களாக கவலைப்பட்ட பின்னர் ஜனாதிபதி ஜோ பிடனின் ஜனாதிபதி போட்டியில் இருந்து விலகியுள்ளார். முன்னாள் ஜனாதிபதி டொனால்ட் டிரம்பிற்கு எதிராக திறம்பட பிரச்சாரம் செய்வதற்கும் மேலும் நான்கு ஆண்டுகளுக்கு நாட்டை ஆளுவதற்கும் அவரது திறன் குறித்தும் பல சந்தேகங்கள் உள்ளன. பிடனின் முடிவு, அவரது எஞ்சிய காலத்திற்கான ஜனாதிபதியின் கடமைகளை நிறைவேற்றுவதற்கான அவரது திறனைப் பற்றிய கேள்விகளை எழுப்பக்கூடும். பல தசாப்தங்களில் ஒரு அமெரிக்க ஜனாதிபதி மறுதேர்தல் ஓட்டத்தில் இருந்து வெளியேறுவது இதுவே முதல் முறை, ஜனாதிபதி லிண்டன் ஜான்சன் 1968 இல் இரண்டாவது முழு பதவிக்காலத்தை நாடுவதற்கு எதிராக முடிவு செய்ததை நினைவு கூர்ந்தார் - இருப்பினும் பிடனின் முடிவு ஜான்சனின் அறிவிப்பை விட சில மாதங்களுக்குப் பிறகு பிரச்சாரத்தில் வந்தது. இது ட்ரம்பின் உயிருக்கு எதிரான முயற்சியை உள்ளடக்கிய ஒரு மிக அதிகமான அரசியல் பிரச்சாரத்தின் சமீபத்திய அதிர்ச்சியூட்டும் வளர்ச்சியாகும். ஆனால் படுகொலை முயற்சி மற்றும் பந்தயத்தில் அதன் கொந்தளிப்பான விளைவு கூட காங்கிரஸ் ஜனநாயகக் கட்சியினரிடையே பிடென் எதிர்கொள்ளும் ஆதரவின் இழப்பை இடைநிறுத்த முடியாது, அவர்கள் நவம்பரில் ஒரு துடைப்பம் தங்கள் வாக்குச் சீட்டுப் போட்டிகளையும் மூழ்கடிக்கும் என்று பெருகிய முறையில் உறுதியாக நம்பினர். https://www.cnn.com/politics/live-news/biden-trump-election-07-21-24/index.html
  20. கோட்பாட்டின் சதி ----------------------------- வார இறுதி நாட்களில் ஏதாவது ஒன்றின் பெயரால் ஒன்றாகக் கூடுவதும், அன்றைய அரசியலை, சினிமாவை, விளையாட்டுகளை அலசி ஆராய்வதும் புலம்பெயர் சமூகத்தின் ஒரு அடையாளம் ஆகிவிட்டது. சமூக ஊடகங்களை விட நேரில் ஒன்றாகக் கூடி விடயங்களைப் பகிர்வது மிக இலகுவான, சுமூகமான ஒரு செயல். இன்டெர்நெட்டில் அவர்களுக்குள் ஆவிகள் புகுந்தது போல சுற்றிச் சுழன்று அடிக்கும் பலர் நேரில் ஒரு வார்த்தை கூட கதைக்கமாட்டார்கள். ஒரு கருத்துமே அவர்களிடம் இருக்காது. அவர்களா இவர்கள் என்றும் தோன்றும். நிதானமான நிலையில், நேரிலும், இன்டெர்நெட்டிலும் தீ மிதிப்பின் போது வருவது போல கடும் உருக் கொண்டு உலாவுகின்றவர்கள் மிகச் சிலரே. எங்களின் வகுப்பு படித்த பாடசாலைக்கு எதற்கோ நிதி கொடுத்து, பின்னர் அது பெரும் பிரச்சனையாகியது. எல்லாமே வாட்ஸ்அப்பில் தான். அடுத்த வந்த ஒன்றுகூடல் ஒன்றில் கதைப்போம் என்று எல்லோரும் சுற்றி இருந்தால், இரண்டோ மூவரோ தவிர்த்து, வேறு எவரும் எதுவுமே சொல்லவில்லை. பந்தி பந்தியாக எழுதியவர்களால் கோர்வையாக எதையும் சொல்ல முடியவில்லை. இது மனதிற்கு பெரும் ஆறுதலைக் கொடுத்தது. விஸ்கியின் பின்னோ அல்லது காக்டெயிலின் பின்னோ கதைத்தால் அது வேற கணக்கு. ஒரு தடவை ஒரு இடத்தில் பெரும்பாலும் அமைதியாகவே இருக்கிற நண்பன் ஒருவன், அவன் நல்ல விவேகமானவனும் கூட, திடீரென்று சத்தம் போட ஆரம்பித்துவிட்டான். உள்ளுக்குள் இருந்த நண்பனின் மனைவி அவர்களின் சின்ன மகளிடம் 'அப்பாவின் சத்தம் கொஞ்சம் கூடக் கேட்குது, போய் என்னவென்று பார்த்து வா.....' என்று அனுப்பிவிட்டார். போய் பார்த்து விட்டு வந்த சின்ன மகள் 'அப்பா still standing.........' என்று சுருக்கமாக நிலவரத்தை சரியாகச் சொன்னார். அத்துடன் மனைவி சத்தத்தை பொருட்படுத்தாமல் விட்டுவிட்டார். ஒரு இடத்தில் புதியவர் ஒருவரை அறிமுகப்படுத்தினர். சமீபத்தில் நாட்டின் வேறொரு பகுதியிலிருந்து இங்கு இடம் பெயர்ந்து வந்திருக்கின்றார். 'ஆள் கனக்க கதைப்பார்......' என்பது ஒரு இரகசியத் தகவலாகவும் சொல்லப்பட்டிருந்தது. அது சிறிது நேரத்திலேயே தெரிந்தும் விட்டது. எல்லா சதிக் கோட்பாடுகளையும் விரல் நுனியில் வைத்திருந்தார். 9/11 ஐ அமெரிக்கா எப்படி திட்டம் போட்டு முடித்தது என்று விளக்கினார். ஈராக்கை அடிக்க, மத்திய கிழக்கை வெருட்ட, அங்கிருக்கும் எண்ணை வளத்தை சுரண்ட என்று புள்ளிகளைப் போட்டு இணைத்தார். சந்திரனில் அமெரிக்கா இறங்கவே இல்லை என்றார். அமெரிக்கா அரிசோனா மாநிலப் பகுதியில் இருக்கும் பாலைவனத்தில் ஒரு போட்டோ ஷூட்டிங் செய்து தான் அந்தப் படங்களை எடுத்தார்கள் என்றார். இளவரசி டயானாவின் விபத்து. எகிப்தின் பிரமிட்டுகள். இப்படியே வரிசை போய்க் கொண்டிருந்தது. ஏலியன்ஸ் வந்து பிரமிட்டுகளை கட்டினது மட்டும் இல்லை, இன்றும் அவர்கள் எங்களுடன் பூமியில் வாழ்ந்து கொண்டிருக்கின்றார்கள் என்றார். எங்கள் இருவரில் ஒருவர் ஏலியனாகக் கூட இருக்கலாம் என்றார். அவர் கதைகளைத் தொடர தொடர, இவர்களுக்கு இவ்வளவு கொள்கைகளுடன் இரவில் நித்திரை எப்படி வரும், கண்களை ஆவது மூடுவார்களா என்ற சந்தேகம் எனக்கு வந்து கொண்டிருந்தது. 'பூமி தட்டை என்றும் சொல்கின்றார்களே............' என்று அவர் இடைவெளி விட்ட ஒரு கணத்தில் நான் ஒரு தலைப்பை எடுத்துக் கொடுத்தேன். பூமி தட்டையானது என்பதும் ஒரு பிரபலமான சதிக் கோட்பாடு. ஒருவர் பார்க்கும் போது எல்லாமே தட்டையாக, கண்ணுக்கெட்டிய தூரம் வரை தெரிவதே அதற்கு சாட்சி என்று சதிக் கோட்பாளர்கள் கூறுவார்கள். ஆனால் அவர் அந்த சதிக் கோட்பாட்டை ஒப்புக் கொள்ளவில்லை. பூமி உருண்டை தான் என்றார். இவர்களுக்கும் உட்பிரிவுகள் இருக்கின்றன என்று அன்று தெரிந்துகொண்டேன். ஒரு பெண்ணும், இரண்டு சிறுவர்களும் எங்களிடம் வந்தனர். அவரின் மனைவி, பிள்ளைகள் என்று அறிமுகப்படுத்தினார். பெரிய சிறுவன் பாடசாலை ஆரம்பித்திருந்தார். சின்னவர் இன்னும் போக ஆரம்பிக்கவில்லை. ஒரு சின்ன உரையாடலின் பின், பஸ்ஸுக்கு நேரம் ஆகி விட்டது என்று ஆயத்தமானார்கள். ஏன் பஸ், காரை திருத்த வேலைகளுக்கு விட்டிருக்கின்றீர்களா என்றேன். தன்னிடம் கார் இல்லை என்றார். இங்கு கார் ஒன்று இல்லாமல் வாழ்வது, அதுவும் குடும்பமாக, நினைத்தே பார்க்க முடியாத, நம்பவே முடியாத ஒரு விஷயம். கால்கள் இல்லாதது போல. ஏன் என்று கேட்க வாயெடுத்து விட்டு அப்படியே அதை விழுங்கிவிட்டேன். இவர்களிடம் அதற்கும் ஒரு கோட்பாடு இருக்கும். அவர் மனைவியை ஒரு தடவை பார்த்தேன். அவர் எப்போதோ வீதியைப் பார்க்க ஆரம்பித்திருந்தார்.
  21. ஆயுதங்களை கொடுத்து பலஸ்தீனியர்களை கொல்ல வைப்பது. பிறகு பலஸ்தீனியர்களுக்கு உணவு கொடுப்பது போல் பாசாங்கு பண்ணி உளவு பார்ப்பது. உக்ரேனியர்களை கொல்கிறார்கள் என்று ஒலிம்பிக்கில் ரஸ்யாவை தடை செய்வது. 37 ஆயிரம் பலஸ்தீன குழந்தைகள், பெண்களை கொன்றவர்கள் எப்படி ஒலிம்பிக்கில் பங்கு பற்றலாம்?
  22. உண்மையில் இது நல்ல விடயம்........! --- சிறு தொழில்கள் ஊக்குவிக்கப் பட்டு தொழில் முனைவர்கள் உருவாக வாய்ப்புண்டு........! --- மாணவர்கள் மற்றும் இளைஞர்களின் கண்டுபிடிப்புகள் பல உருவாகும்.......! --- வேலை வாய்ப்புகள் அதிகமாகும்........! பகிர்வுக்கு நன்றி பிழம்பு .......! 👍
  23. கந்தையருக்கு ஏன் இந்த வேண்டாத வேலை? 🤦🏼‍♂️
  24. சங்கரின் போய்ஸ் படமும் இளவட்டங்கள் நடித்த படம்தான், சிறப்பான ஒலி, ஒளிப்பதிவுகள், காட்சி அமைப்புக்கள், மற்றும் பாடல்கள் மிக பிரபலமானது ஆனால் படம் தோல்வியான படம் என நினைக்கிறேன். இந்த படத்தில்தான் தமிழில் முதல் முதலாக நேரத்துண்டுகள் (Time slice) தொழில்னுட்பம் பயன்படுத்தப்பட்டது. இந்த தொழில்னுட்பத்திற்கு இந்த காணொளியில் 55 புகைப்படக்கருவிகள் பயன்படுத்தப்பட்டுள்ளது. படத்தில் கதாநாயகி தனது காதலை சொல்ல சங்கர் பயன்படுத்திய தொழில்னுட்பம் இது சங்கரின் இந்த திரைப்பட பாடலில் 60 புகைப்படக்கருவிகள் பயன்படுத்தப்பட்டதாக கூறப்பட்டது, இரண்டு ஒளிப்பதிவுக்கருவிகள் இரண்டும் நேரெதிராக 180 பாகையில் அமைந்திருக்க 60 புகைப்பட கருவிகளும் அரைவட்டமாக (முதலாவது காணொளியில் உள்ளது போல) அமைந்திருக்கும் அந்த 2 ஒளிப்பதிவுகருவிகளும் 60 புகைப்பட கருவிகளும் ஒரு குறித்த காட்சியினை படம்பிடிக்கும் அதனை தொகுக்கும்போது ஒளிப்பதிவு கருவி #1 இலிருந்து 60 புகைப்பட கருவிகள் வரிசையாக தொகுக்கப்பட்டு இறுதியாக ஒளிப்பதிவு கருவி #2 இல முடிவடையும். 60 புகைப்படங்களை ஒன்றன் பின் ஒன்றாக வைக்கும்போது கிட்டதட்ட அந்த காட்சி 2.5 நொடிகள் நீடிக்கும் (24fps).
  25. இளமை திரும்பிவிடும் சந்தேகமே இல்லை ஆனால் செலவழிக்க இளமை இருக்க வேண்டுமே ........! 😴
  26. யாழ்ப்பாணத்தில் தேர்தல் சுவரொட்டிகள் – நிலாந்தன். ஜனாதிபதித் தேர்தலையொட்டி வடக்கில் கடந்த சில வாரங்களாக சுவரொட்டிகள் ஒட்டப்பட்டு வருகின்றன.வழமையாக யாழ்ப்பாணத்தின் சுவர்களை ஜேவிபி சுவரொட்டிகளே நிரப்புவதுண்டு. இம்முறை ஜனாதிபதி தேர்தலை முன்னிட்டு, ரணில் விக்கிரமசிங்க ஆவிக்குரிய சபைகள் கூறுவது போல நற்செய்தி வருகிறது என்ற பொருள்பட ஒரு பலவண்ண சுவரொட்டியை நாடு முழுவதும் ஒ ட்டினார். பன்னாட்டு நாணய நிதியத்தின் அடுத்த கட்ட உதவிகள் கிடைக்கப் போவதை முன்னிட்டு அதை தன்னுடைய ஆட்சிக் காலத்தில் சாதனையாக கருதி அவ்வாறு ஒரு சுவரொட்டியை அவர் வெளியிட்டார்.அந்த சுவரொட்டிக்கு அடுத்தபடியாக ரணில்தான் என்ற பொருள்பட ஒரு சுவரொட்டி ஒட்டப்பட்டது. அந்த இரண்டு சுவரொட்டிகளும் ஜனாதிபதி தேர்தலை முன்னோக்கி ஒட்டப்பட்டவை. அதற்குப்பின் தென்னிலங்கையில் தன்னெழுச்சி போராட்டங்களில் ஈடுபட்ட அமைப்புகளுக்கும் கட்சிகளுக்கும் இடையிலான கூட்டு ஒரு சுவரொட்டி போட்டது. அதில் தன்னெழுச்சி போராட்டங்களை முன்னெடுத்த மூவருடைய படங்களைப் போட்டு “நாங்கள் ரெடி” என்று ஆங்கிலத்தில் எழுதப்பட்டிருந்தது. இதற்கும் சிறிது காலம் செல்ல ஜேவிபி அண்மை நாட்களாக ஒரு பெரிய பலவண்ண சுவரொட்டியை ஒட்டி வருகின்றது.அதில் அனுரகுமாரவின் பெரிய முகம் அச்சடிக்கப்பட்டுள்ளது.”எங்கள் தோழர் அனுர” என்றும் எழுதப்பட்டுள்ளது. அதன் பின் நேற்று அதாவது சனிக்கிழமை யாழ்ப்பாணத்தில் ஒரு சுவரொட்டி. ஒட்டியது யார் என்று தெரியாது. அது ஒரு அனாமதேயச் சுவரொட்டி. அதில் வெள்ளை பேப்பரில் சிவப்பு மையால் “தேசமே பயப்படாதே”என்று எழுதப்பட்டுள்ளது. அதை யார் ஒட்டியது என்று தெரியாது. இனி வரும் நாட்களில் தெரிய வரலாம். முதலில் புதிர் போல ஒரு வசனத்தை போட்டு சுவரொட்டி வரும். பின்னர் அதற்கு விளக்கம் வரும். சில கிழமைகளுக்கு முன் ரணில் விக்கிரமசிங்க “இதோ நற்செய்தி வருகிறது” என்று ஒட்டியதும் அப்படித்தான். இவ்வாறாக தமிழ் பகுதிகளில் தென்னிலங்கைக் கட்சிகள் சுவரொட்டிகளை ஒட்டத் தொடங்கி விட்டன.ஆனால் தமிழ் மக்களின் நிலைப்பாடு என்ன! தேர்தலில் ஒரு பொதுத் தமிழ் வேட்பாளரை நிறுத்துவதற்காக முயற்சி செய்யும் மக்கள் அமைப்பும் தமிழ்த் தேசிய கட்சிகள் ஏழும் இணைந்து ஒரு புரிந்துணர்வு உடன்படிக்கைக்கு ஏற்கனவே வந்துவிட்டன. கடந்த மாதம் 29ஆம் தேதி வவுனியாவில் நடந்த ஒரு சந்திப்பில் அந்த உடன்பாடு எட்டப்பட்டது. அன்றைக்கே அந்த உடன்படிக்கையில் கையெழுத்திட்டு இருக்கலாம். ஆனால் சில கட்சிகள் அந்த உடன்படிக்கை கைதாத்திடும் நிகழ்வை பெருமெடுப்பிலான ஒரு நிகழ்வாக ஒழுங்குபடுத்த வேண்டும் என்று எதிர்பார்த்தன.எனினும்,அதனை முதலில் ஊடகவியலாளர்களுடன் ஒப்பீட்டளவில் கைக்கடக்கமான ஒரு நிகழ்வாகச் செய்வது என்று பின்னர் தீர்மானிக்கப்பட்டது. அதன்படி கடந்த ஆறாம் திகதி அந்த நிகழ்வு ஒழுங்கு செய்யப்பட்டது. ஆனால் தமிழ் அரசியலில் மூத்த தலைவராகிய சம்பந்தரின் மறைவையொட்டி அந்த நிகழ்வை ஒத்தி வைக்குமாறு கட்சிகள் கேட்டன. அவ்வாறு ஒத்திவைக்கப்பட்ட அந்த வைபவம் வரும் 22ஆம் தேதி திங்கட்கிழமை இடம்பெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.யாழ் தந்தை செல்வா கலையரங்கில் அந்த நிகழ்வு இடம் பெறும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி பொது வேட்பாளரை நிறுத்துவதற்குரிய நகர்வுகள் கட்டமைப்பு சார்ந்து முன்னேற தொடங்கியுள்ளன என்று தெரிகிறது. கட்சிகளும் தமிழ் மக்கள் பொதுச்சபையும் இணைந்து உருவாக்கும் கட்டமைப்பானது அடுத்த அடுத்த கட்ட வளர்ச்சிக்கு போகும் பொழுது, பொது வேட்பாளரை நோக்கித் தேர்தல் களம் மேலும் சூடாகும் என்று எதிர்பார்க்கலாம். ஒரு பொது வேட்பாளர் என்ற விடயம் எப்பொழுதோ மக்கள் மத்தியில் பேசுபொருள் ஆகிவிட்டது. அதற்கு ஆதரவாக ஒரு பகுதி ஊடகங்கள் எப்பொழுதோ இயங்கத் தொடங்கிவிட்டன. அண்மையில் மாவை சேனாதிராஜா ஒரு நேர்காணலில் பொது வேட்பாளருக்கு ஆதரவாகக் கருத்துத் தெரிவித்திருந்தார். அந்த நேர்காணலில் அவர் ஒரு விடயத்தைச் சுட்டிக் காட்டுகிறார். அதன்படி பொது வேட்பாளரை நிறுத்துவது என்பது, ஒரு புதிய மக்கள் ஆணையை பெறுவதற்காக என்பதை விடவும், மக்களை ஒன்று திரட்டுவதற்கானது அன்று மிகத் தெளிவாகக் கூறுகிறார். இப்பொழுது தமிழரசு கட்சியின் உத்தியோகபூர்வ தலைவர் அவர்தான். அதனால் அவருடைய கருத்துக்களுக்கு முக்கியத்துவம் உண்டு. தமிழ் மக்களை ஒன்றாகத் திரட்ட வேண்டும் என்ற விடயத்தை தமிழ்ப் பரப்பில் உள்ள பெரிய கட்சியின் தலைவர் வெளிப்படையாகப் பேசுகிறார்.அந்த நோக்கத்துக்காகத்தான் பொது வேட்பாளர் என்றும் அழுத்திக் கூறுகிறார்.ஏற்கனவே சிறீதரனும் அவருடைய அணியும் பொது வேட்பாளர் என்ற விடயத்தை பகிரங்கமாக ஆதரித்துக் கருத்துத் தெரிவித்து வருகின்றனர். எனவே தமிழரசுக் கட்சிக்குள் பொது வேட்பாளருக்கு ஆதரவான அணி படிப்படியாக பலம் பெற்று வருவது தெரிகின்றது.இது தமிழ்ப் பொது வேட்பாளருக்கு உரிய ஆதரவுத் தளத்தை மேலும் பலப்படுத்தும். தமிழ்ப் பொது வேட்பாளருக்கான ஆதரவுத் தளத்தைப் பலப்படுத்துவது என்பது அதன் பிரயோக வடிவத்தில் தமிழ் மக்களை ஒரு பெரிய திரளாக ஐக்கியப்படுத்துவதுதான். தமிழ் மக்கள் ஐக்கியப்படும் பொழுது சாதனைகளையும் சாகசங்களையும் செய்வார்கள். தமிழ் மக்கள் இப்பொழுது தம் பலம் எதுவென்று அறியாத மக்களாக சிதறிப் போய் இருக்கிறார்கள். ஆனால் தமிழ் மக்கள் கேந்திர முக்கியத்துவம் மிக்க புவிசார் அமைவிடத்தில் அமைந்திருக்கும் ஒரு மக்கள் கூட்டம். எல்லா பேரரசுகளின் இழு விசைகளுக்குள்ளும் வரும் ஒரு மக்கள் கூட்டம். அதனால் தமிழ் மக்களைக் கையாள வேண்டிய தேவை உலகின் மூன்று பேரரசுகளுக்கும் உண்டு.அந்த அடிப்படையில் பார்த்தால், தமிழ் வாக்குகள் பொன்னானவை.கேந்திர முக்கியத்துவம் மிக்கவை. அவ்வாறு கேந்திர முக்கியத்துவம் மிக்க தமிழ் வாக்குகளை கடந்த 15 ஆண்டுகளாக ஜனாதிபதி தேர்தல்களின் போது வெற்றுக் காசோலையாக வீணாக்கி வந்த ஒரு அரசியல் போக்கை மாற்றி, அவற்றை அவற்றுக்குரிய முக்கியத்துவத்தோடு, ராஜதந்திரப் பெறுமதியோடு,அரசியல் பெறுதியோடு ஒன்று திரட்டுவதே தமிழ் போது வேட்பாளரின் தேர்தல் இலக்கு ஆகும். இந்துப் புராணங்களில் வரும் அனுமாரைப் போல தமிழ் மக்களுக்குத் தங்கள் பலம் எதுவென்று தெரியவில்லை.அனுமார் வாயுபுத்திரர் ஆவார். காற்றைப் போல அவருக்கு சக்தி அதிகம். ஆனால் தன் பலத்தை அவர் அறிவதில்லை. அப்பாவியாக சாதுவாக இருப்பார்.ராமாயணத்தில் அவருக்கு அவருடைய பலத்தை உணர்த்தி “நீ வாயுபுத்திரன் ; ஒரே மூச்சில் சமுத்திரத்தைக் கடப்பாய்” என்று அவருக்கே அவருடைய பலத்தை உணர்த்தியது ஜாம்பவான் என்ற வானரத் தளபதி ஆகும். தன் பலம் எதுவென்று தெரிந்ததும் அனுமார் விஸ்வரூபம் எடுத்தார். ஒரே மூச்சில் சமுத்திரத்தைக் கடந்தார். சீதையைக் கண்டார். எனவே அனுமாரைப் போல தமிழ் மக்களுக்கும் அவர்களின் பலம் எதுவென்று தெரியவில்லை. ஒரு காலம் அவர்கள் அதிசயங்களையும் அற்புதங்களையும் செய்த மக்கள்.முழு உலகத்தையும் திரும்பி பார்க்க வைக்கும் ஒரு போராட்டத்தை நடத்திக் காட்டிய மக்கள். ஆனால் இன்று சிதறிப்போய் இருக்கிறார்கள். அவிழ்த்து விட்ட பாக்கு மூட்டை போல அவர்கள் சிதறிப்போய் இருக்கிறார்கள். அவர்களை திரும்பவும் கூட்டிக்கட்டினால், அவர்கள் மீண்டும் அதிசயங்களையும் அற்புதங்களையும் செய்வார்கள். எனவே தமிழ் மக்களுக்கு அவர்களுடைய பலம் எது என்பதை, அவர்களுடைய கேந்திர முக்கியத்துவம் எது என்பதனை, எடுத்துக் கூறவள்ள தலைமைகள் மேல் எழ வேண்டும். அவ்வாறு தமிழ் மக்கள் தங்கள் பலம் எது என்பதை கண்டுபிடிக்கும் விதத்தில் அரசியல் முடிவுகளை எடுக்க வேண்டும்.அப்படி ஒரு முடிவுதான் தமிழ்ப் பொது வேட்பாளர் என்று தெரிவு. இந்த அடிப்படையில் தமிழ்மக்கள் தமது பொன்னான வாக்குகளை அவற்றுக்குரிய கேந்திர முக்கியத்துவத்தோடு உபயோகிப்பார்களாக இருந்தால் அவர்கள் மீண்டும் தங்கள் ஒன்று திரண்ட பலத்தோடு எழுவார்கள். இதுவரையிலும் 7 தமிழ் தேசிய கட்சிகளே தமிழ் மக்கள் பொதுச்சபையுடன் உடன்பாட்டுக்கு வர இருக்கின்றன. எதிர்காலத்தில் தமிழ்த் தேசிய நிலைப்பாட்டை கொண்ட ஏனைய கட்சிகளும் இப்பொதுக் கட்டமைப்புக்குள் இணையக்கூடும். தமிழ் மக்கள் ஒன்றாகத் திரளும் பொழுது கட்சிகள் மக்களைப் பிரதிபலிக்கும். இப்பொழுது தமிழ் மக்கள் பொதுச்சபையில் இருப்பவர்களில் பலர் கடந்த 15 ஆண்டுகளாக தமிழ்த் தேசியக் கட்சிகளை ஒருங்கிணைக்கும் பணிகளில் ஈடுபட்டவர்கள்தான். அதில் அவ்வப்போது சிறிய சிறிய வெற்றிகளைப் பெற்றிருக்கிறார்கள். எனினும் எல்லா கட்சிகளையும் ஒரு கட்டமைப்பாக கூட்டிக் கட்டுவதில் அவர்கள் தொடர்ச்சியாகத் தோல்வியடைந்து வந்திருக்கிறார்கள்.இந்தத் தோல்வி கரமான அனுபவங்களின் பின்னணியில், இதற்கு முன் உருவாக்கப்பட்ட தமிழ் மக்கள் பேரவை போன்ற கட்டமைப்புகளில் இருந்து கற்றுக் கொண்ட பாடங்களின் அடிப்படையில், உருவாக்கப்பட்டதே தமிழ் மக்கள் பொதுச்சபையாகும். எனவே கடந்த 15 ஆண்டுகால அனுபவங்களிலிருந்தும் கற்றுக் கொண்ட தமிழர்கள் மீண்டும் ஒரு பலமான திரட்சியாக மாறுவதற்குரிய வாய்ப்புகளை ஜனாதிபதித் தேர்தல் களம் திறந்து வைத்திருக்கின்றது. தென்னிலங்கைக் கட்சிகள் தமிழ் மக்களுடைய சுவர்களில் தங்களுடைய விலை கூடிய பல வண்ணச் சுவரொட்டிகளை ஒட்டிக் கொண்டிருக்கின்றன. ஆனால் தமிழ் மக்களின் மனங்களில் சிறு பொறியாகச் சுடரத் தொடங்கியுள்ள “ஒன்றுபடுவோம்” என்ற பெரு விருப்பை ஓர் அரசியல் ஆக்க சக்தியாக தமிழ் பொது வேட்பாளர் மாற்றுவாரா? https://athavannews.com/2024/1393135
  27. இதில் ‘அனைத்தும்’ என்பது பிடிச்சிருக்கு.போகலாமா என்று யோசிக்கிறேன். வயது கொஞ்சம் தடுக்கிறது.
  28. அமெரிக்க ஜனாதிபதி தேர்தல் வேட்பாளராக கமலா ஹாரிஸ் தேர்வாக வாய்ப்பு - துளசேந்திரபுரம் கிராம மக்கள் மகிழ்ச்சி 22 JUL, 2024 | 02:51 PM திருவாரூர்: அமெரிக்காவின் ஜனநாயக கட்சி ஜனாதிபதிர் வேட்பாளராக இந்திய வம்சாவளியை சேர்ந்த கமலா ஹாரிஸ் அறிவிக்கப்பட்ட வாய்ப்பு அதிகரித்துள்ள நிலையில் தமிழகத்தின் துளசேந்திரபுரம் கிராம மக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். வரும் நவம்பர் மாதம் அமெரிக்க நாட்டில் ஜனாதிபதி தேர்தல் நடைபெற உள்ளது. அமெரிக்க ஜனாதிபதிர் தேர்தலுக்கான போட்டியில் இருந்து தற்போதைய ஜனாதிபதி ஜோ பைடன் விலகியுள்ளார். தான் சார்ந்த ஜனநாயகக் கட்சி மற்றும் தேசத்தின் நலனுக்காக இந்த முடிவை எடுத்திருப்பதாக அவர் கூறியுள்ளார். துணை ஜனாதிபதியாக இந்திய வம்சாவளியைச் சேர்ந்தவருமான கமலா ஹாரிஸ் ஜனாதிபதியாவதற்கு தனது ஆதரவையும் ஜோ பைடன் தெரிவித்துள்ளார். கமலா ஹாரிஸ் திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி அருகே உள்ள துளசேந்திரபுரம் கிராமத்தை பூர்விகமாகக் கொண்டவர். ஆங்கிலேய அரசாங்கத்தில் இவரது தாத்தா பி.வி. கோபாலன் சிவில் சர்வீஸ் அதிகாரியாக பணியாற்றினார். ஷாம்பியா நாட்டுக்கு அகதிகளை கணக்கெடுக்க ஆங்கிலேய அரசாங்கம் பி.வி. கோபாலனை அனுப்பி வைத்தது. அப்போது ஷாம்பியா நாட்டுக்கு குடும்பத்தோடு சென்று பி.வி கோபாலன் குடியேறினார். பின்னர் அமெரிக்காவில் பி வி கோபாலன் குடும்பம் குடியேறியது.இவரது இரண்டாவது மகள் சியாமளாவுக்கும் ஜமைக்கா நாட்டை சேர்ந்தவருக்கும் பிறந்தவர் தான் கமலா ஹாரீஸ். இவர் வழக்கறிஞராக பணியாற்றினார். அரசியலில் தன்னை ஈடுபடுத்திக் கொண்டு கலிபோர்னியாவின் முதல் பெண் செனட் உறுப்பினராக பதவி வகித்தார். அரசியலில் வளர்ந்து கடந்த 2019ம் ஆண்டு நடைபெற்ற ஜனாதிபதி தேர்தலில் ஜனநாயக கட்சி சார்பில் ஜோ பைடன் வெற்றி பெற்ற போது துணை அதிபராக போட்டியிட்டு கமலா ஹாரிஸ் வெற்றி பெற்றார். கமலா ஹாரீஸ் குடும்பம் இன்றளவும் தமிழகத்தோடு நெருக்கமாக உள்ளது. அவரது சித்தி சென்னையில் வசித்து வருகிறார். அவரது உறவினர்களில் சிலர் துளசேந்திரபுரம் கிராமத்தில் இன்றும் வசிக்கின்றனர். மேலும் அவரது குலதெய்வ கோயிலான தர்ம சாஸ்தா கோயில் துளசேந்திரபுரத்தில் உள்ளது. அந்த கோயிலுக்கு கமலாஹரிஸ் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னர் நன்கொடை அளித்துள்ளார் என்ற விபரம் கோயில் கல்வெட்டில் பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் ஜனநாயக கட்சி சார்பில் ஜனாதிபதி வேட்பாளராக கமலா ஹாரிஸ் அறிவிக்கப்பட்ட வாய்ப்பு அதிகரித்துள்ள நிலையில் தமிழகத்தின் துளசேந்திரபுரம் கிராம மக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். கமலா ஹாரீஸ் கடந்த 2019 ம் ஆண்டு "Truth Be Hold'' என்ற புத்தகத்தில் தனது தாத்தா . கோபாலன் தனக்கு ஊக்க சக்தியாக இருந்ததாகவும் கடந்த 1991 ஆம் ஆண்டு தனது தாத்தாவுக்கு நடைபெற்ற குடும்ப நிகழ்ச்சியில் குடும்பத்தினரோடு கலந்து கொண்டது இன்றளவும் தனது நினைவில் மகிழ்ச்சியை ஏற்படுத்தி இருப்பதாகவும் தெரிவித்துள்ளார் என்பதிலிருந்து தனது பொது வாழ்க்கைக்கு இந்திய வம்சாவளி உறவுகள் தான் அடித்தளம் அமைத்து கொடுத்துள்ளதை உணர்ந்திருக்கிறார் என அவரது உறவினர்கள் பெருமிதத்தோடு தெரிவிக்கிறார்கள். https://www.virakesari.lk/article/189090
  29. அண்ணை இந்தக் கடிதம் முன்னாள் ஜனாதிபதி சொல்லச் சொல்ல எழுதினதோ?!
  30. விரும்பு அடையாளம் முடிவடைந்து விட்டது. சிறந்த கருத்து.
  31. எல்லாம்... இந்தியாவின் மீது உள்ள கோபம்தான் விசுகர். 😂 அந்தக் கோபம்... கமலாவின் மீது, திரும்பி விட்டது. 🤣
  32. அப்படித் தான் நாமும் கில்லாரி போட்டி போடும்போது எண்ணினோம். ஆனாலும் ரம்பைவிட எத்தனையோ லட்சக் கணக்கான கூடுதல் வாக்குகளைப் பெற்றார். இருந்தும் சில சிறிய மாநிலங்களில் தோற்றுப் போனார்.துவேசத்தை தூண்டிவிட்டதும் ரம்புக்கு ஒரு சாதகமாகிவிட்டது. நீங்கள் சொல்லும் எல்லா பயங்கரவாதிகளையும் தோற்றுவித்தது யார் என்று தெரியும் தானே. எனவே அவர்களைக் கையாள்வது பெரிய பிரச்சனை இருக்காது.
  33. உறவே அனிந் தான் இப்ப நல்ல மியுசிக் போடுவார் என்று நிழலி சொன்னதாக நினைவு அதே வயதுடைய உலக ஜனாதிபதி வேட்பாளர் நடக்கவே கஷ்டபட்டவர் இவர் நடனமே ஆடுகிறரே 😄
  34. இணைய‌த்தில் இந்த‌ பாட்டை அதிக‌ ம‌க்க‌ள் விரும்பி கேட்க்கின‌ம் பிள்ளைக்கு சிறுவ‌ய‌து அருமையான‌ குர‌ல்.....................இந்த‌ பாட்டை நானும் ப‌ல‌ வாட்டி இன்று கேட்டு விட்டேன்🙏🙏🙏🥰..................பாடின‌ பிள்ளைக்கும் பாட‌லுக்கு இசை அமைத்த‌ இசை அமைப்பாள‌ருக்கும் வாழ்த்துக்க‌ள்🙏🙏🙏...............................பாட‌ல் வ‌ரி மிக‌ அருமை🙏🙏🙏..............................
  35. நம்ம கமலாக்கா மீது என்ன கோபம் உங்களுக்கு???🤣
  36. பலகாரங்களை எப்படி ஆட்டையைப் போடுவது என்பதைப் பற்றியும் ஒரு காணொளி போடவும் ஐயா. எதிர்காலத்தில் முயற்சி பண்ணத் தான். இங்கே வரியைக் காணலையே? கப்பமாகவே தெரிகிறது. இது நம்ம இலங்கை அரசு போலவல்லவா இருக்கிறது.
  37. இதுக்குள்ளயே நிண்டால் யாயினி போக வேண்டிய பஸ் நம்பரும் வேறை என்று போட்டு விடுவீங்கள் போலுள்ளது..🤭😆சோ..நான் வறுமை பட்ட மக்கள் பக்கமே எப்போதும் நிற்பேன்.🖐️.....
  38. AMIS DES ARBRES Iny Vaini · 1 j · L'impressionnant arbre de Ceiba en Amérique du Sud ! ஒரு கலைமான் போலப் படுத்திருக்கு......! 🙏
  39. மாற வேண்டியது யாருடைய பார்வை? - ‘இந்தியன் 2’ படத்தை முன்வைத்து சில கேள்விகள்! கமல்ஹாசன் - ஷங்கர் கூட்டணியில் உருவாகியுள்ள ‘இந்தியன் 2’ திரைப்படம் தற்போது திரையரங்குகளில் வெளியாகி, ரசிகர்களிடையே கலவையான விமர்சனங்களைப் பெற்று வருகிறது. இப்படத்தில் மூலம் வெளிப்படும் சமூகப் பார்வை எழுப்பும் கேள்விகள் மிக முக்கியமானது. இயக்குநர் ஷங்கரின் இயக்கத்தில் கடைசியாக கடந்த 2018-ம் ஆண்டு ‘2.0’ திரைப்படம் வெளியானது. கிட்டத்தட்ட 6 வருடங்களுக்குப் பின் ‘இந்தியன் 2’ வெளியாகியுள்ளது. தனது கடைசி 2 படங்களில் எதிர்கால தொழில்நுட்ப வளர்ச்சி குறித்து முன்னோக்கிய சிந்தனையை வெளிப்படுத்தும் விதமாக ரோபோடிக் பற்றி பேசியிருந்தார் ஷங்கர். தொழில்நுட்ப ரீதியாக இவ்வளவு முன்னோக்கி சிந்தி்க்கும் அவர் 2024-ம் ஆண்டிலும் சமூகம் குறித்த சில பிற்போக்குத்தனமான சிந்தனைகளைக் கொண்டிருப்பது அவரது ‘அப்டேட்’ ஆகாத தன்மையை மட்டுமல்லாமல் வன்மத்தையும் வெளிப்படுத்துகிறது. ‘இந்தியன் 2’-வில் என்ன பிரச்சினை? - மொத்தப் படமுமே பிரச்சினை என்றாலும், ஷங்கரின் முந்தையப் படங்களில் இருக்கும் எளிய, ஒடுக்கப்பட்ட மக்கள், திருநங்கைகள் மீதான அவரது மோசமான பார்வை இன்னும் மாறவேயில்லை என்பதை இப்படம் உறுதி செய்கிறது. படத்தில் ஆரம்பத்தில் தொழிலதிபர் ஒருவரை தனது வர்மக் கலையால் கொல்கிறார் கமல். கொல்லப்படுவதற்கு முன், வர்மத்தால் பாதிக்கப்படும் தொழிலதிபரின் உடல்மொழி ஒருவித நளினத்துடன் மாற்றம் பெறுகிறது. திருநங்கைகளை குறிப்பிடும் வகையில் கேலியாக சித்தரிக்கப்பட்ட அந்தக் காட்சி அபத்தமானது. அடுத்தடுத்து தொழிலதிபர்கள் கொல்லப்படும்போது, அவர்கள் மிருகங்கள் போன்ற உடல்மொழியால் பாதிப்புக்கு ஆளாகி துன்புறுத்தப்பட்டு பின்னர் கொல்லப்படுகினறனர். அப்படியென்றால் ஆண், பெண்ணைப் போன்ற நளினத்துடன் மாறுவது மிகப் பெரிய தண்டனையா? அவமானமா? இதைப் பார்க்கும் மூன்றாம் பாலினத்தவர்களின் மனநிலை குறித்த இயக்குநர் ஷங்கரின் பார்வை என்ன? சமூக அங்கீகாரம் மறுக்கப்பட்டு முன்னேற்றம் காண போராடி வரும் மூன்றாம் பாலினத்தவர் இன்னும் எத்தனை நாட்களுக்குத்தான் ஷங்கர் மட்டுப்படுத்திக் கொண்டேயிருப்பார்? அவரது இயக்கத்தில் வெளியான ‘ஐ’ படத்திலும் திருநங்கைகள் குறித்த இதே மனநிலையில் தான் ஒரு கதாபாத்திரத்தையும் காட்சியையும் அமைத்திருந்தார். மட்டுமின்றி நேரடியாக திருநங்கைகளை தாக்கும் வசனங்களையும் இடம்பெறச் செய்திருந்தார். இத்தனைக்கும் அப்படம் விழிப்புணர்வு இல்லாத காலக்கட்டத்தில் வெளியானதல்ல. சமூக வலைதளங்கள் மக்களிடையே பரவலாக பயன்பாட்டுக்கு வந்த காலகட்டத்தில் வெளியானதுதான். ஊழலில் இருந்து மக்கள் விடுபடுவது இருக்கட்டும், முதலில் இப்படியான மனநிலையில் இருந்து இயக்குநர் ஷங்கர் விடுபட வேண்டும். அதேபோல, மற்றொரு காட்சியில் கமல் ஆன்லைனில் ஊழல் தொடர்பாக நீண்....ட வகுப்பெடுத்து கொண்டிருப்பார். அப்போது கலரிங் அடித்த தலைமுடியுடன் வட சென்னையைச் சேர்ந்த மக்களின் மொழி மற்றும் உடல் பாவனைகளுடன் காட்சிப்படுத்தப்பட்டிருக்கும் இளைஞர்கள் சிலர், கமலுக்கு எதிராக சமூக வலைதளத்தில் கமென்ட் இடுவார். அதற்கு பதிலளிக்கும் கமல், ‘கழிப்பறை சுவர்ல எழுதிட்டு இருந்தவங்கல்லாம் ஃபேஸ்புக் சுவர்ல எழுத ஆரம்பிச்சிட்டீங்களா?’ என கேட்பார். இதன் அர்த்தம் என்ன? எளிய மக்களின் சமூக வலைதள பயன்பாடு உங்களை ஏன் அசசுறுத்துகிறது? அதே எளிய மக்கள் தைரியமாக சமூக ஊடகங்களில் பேசுவதால்தான் பல சமூக பிரச்சினைகள் வெளியே தெரிகின்றன. ஆன்லைன் அப்யூசர்களாக அவர்களை மட்டும் குறிப்பிட்டு தனித்து காட்சிப்படுத்தி புளங்காகிதம் அடைவது ஏன்? ‘இவங்கள்ளாம் வந்துட்டாங்களே’ என்ற மொழிநடையின் மாற்று முகம்தானே மேற்கண்ட வசனம்? ஒடுக்கப்பட்ட மக்களின் மீதான ஷங்கரின் வன்மம் புதிதல்ல. ‘முதல்வன்’ படத்தில் ஒரு காட்சியில் கல்லூரி மாணவி ஒருவர் ஒருநாள் முதல்வரான அர்ஜுனிடம் ‘குப்பத்து பொறுக்கிப் பசங்க’ என்று சொல்வதைப் போல ஒரு வசனம் வைத்திருப்பார். குடிசைவாழ் மக்களை பொதுமைப்படுத்தி காழ்ப்புடன் வைக்கப்பட்ட வசனமாகவே இதைப் பார்க்கமுடிகிறது. பார்க்கில் குடித்து விட்டு துங்குபவர், ரோட்டில் குப்பை போடுபவர், எச்சில் துப்புபவர் இவர்களெல்லாம் தான் ஷங்கரின் படங்களில் ஆகப் பெரும் தேச துரோகிகள். அவர்களை குற்றவாளிக் கூண்டில் ஏற்றி மரண தண்டனை கொடுக்க வேண்டும் என்பது போன்ற ஆபத்தான கருத்தியலை ‘அந்நியன்’ போன்ற படங்கள் பேசின. இந்தியன் 2-விலும் படத்தின் ஆரம்ப காட்சியிலேயே, குப்பைகளை ஏற்றிச் செல்லும் தூய்மைப் பணியாளரைப் பார்த்து ஜெகன் நக்கலான தொனியுடன், ‘அய்யா துப்புரவு தொழிலாளரே, காசு வாங்குறீங்கள்ல’ என்று கேட்பார். இன்னும் ஒரு படி மேலே போய், ஒரு காட்சியில் இலவச திட்டங்களால் பயனடையும் மக்களையே குற்ற உணர்ச்சிக்கு ஆளாக்கும் வகையில் வசனம் வைத்திருக்கிறார். மேடையிலும், பிக் பாஸ் போன்ற நிகழ்ச்சிகளிலும் சமூக நீதியை பேசும் கமல், இந்தக் காட்சிகளையும், வசனங்களையும் அனுமதித்ததுதான் ஆச்சர்யம். சென்னையின் பிரதான இடத்தில் இருக்கும் உயர் வகுப்பைச் சேர்நத பாபி சிம்ஹா, சிபிஐ அதிகாரியாகவும், கொத்தவால்சாவடி பகுதியில் இருக்கும் அனைவரும் பாடி பில்டர்கள், வர்மத்தை கூட சரியாக உச்சரிக்கத் தெரியாத ரவுடிகளாகவும் சித்தரிக்கும் அதீத புரிதலும், மறைமுக ஒடுக்குதலும் போகிற போக்கில் ஏற்றும் விஷ ஊசிகள். மார்க்கெட்டில் மீன் விற்கும் ஒரு பெண் கூட மீனின் வயிற்றில் கோலி குண்டுகளை நிரப்பி வாடிக்கையாளர்களை ஏமாற்றுகிறார். படம் பார்ப்பவர்களை முட்டாளாக நினைத்தால் மட்டுமே இப்படியான ஒரு காட்சியை வைப்பது சாத்தியம். மேலும், கிட்டத்தட்ட படத்தில் வரும் அரசு ஊழியர்கள் அனைவருமே லஞ்சம் வாங்குபவர்கள் தான்; மருந்துக்கு கூட ஒரே ஒரு ஊழியர் கூட நல்லவராக காட்டப்படவில்லை. பொதுமக்களோ, இயக்குநர்களோ, அரசியல்வாதிகளோ அனைவருமே ஒருகாலத்தில் புரிதல் இல்லாமல் தவறான கருத்துகளை வெளிப்படுத்தியிருக்கலாம். ஆனால் காலப்போக்கில் வாசிப்பு, பரந்த பார்வை ஆகியவற்றின் மூலம் விழிப்புணர்வு ஏற்பட்ட பின் அவற்றை மாற்றிக் கொள்வதே இயல்பு. ஷங்கரின் இனி வரக்கூடிய படங்களிலாவது ஒடுக்கப்பட்ட, எளிய மக்களின் மீதான அவரது பார்வை மாறும் என்று நம்பலாம். மாற வேண்டியது யாருடைய பார்வை? - ‘இந்தியன் 2’ படத்தை முன்வைத்து சில கேள்விகள்! | question to director shankar on kamal haasan starrer indian 2 movie explained - hindutamil.in
  40. இந்தியன் 1 இல் தந்த கிறக்கத்தால் இரண்டு தரம் அகன்ற திரையில் படத்தைப் பார்த்தேன்😻 இந்தியன் 2 இல் நித்திரைதான் வந்தது! இப்போது மனிஷா இப்படி இருக்கா!
  41. அம்பலமாகும் மருத்துவத்துறையின் இன்னுமொரு மோசடி ஆதாரங்களுடனும், சாட்சிகளுடனும் தைரியமான இன்னொமொரு வைத்தியரின் வாக்குமூலம் பாதிக்கப்பட்ட, பாதிக்கப்பட்டுக்கொண்டிருக்கும் வடபுல நோயாளர்களுக்காக நீதி தேடி குரல் கொடுக்கின்றது CAPITAL TVயின் அதிகாரம் நிகழ்ச்சி https://www.facebook.com/share/pLAgunfSG3zDjVXL/
  42. சங்கருக்கு சரக்கு தீர்ந்து போயிட்டுது. எழுத்தாளர் சுஜாதாவின் மறைவின் பின், அவர் எடுத்த படங்கள் எல்லாம் குப்பை. சிவாஜியில் தொடங்கிய சறுக்கல், எந்திரன் 1, ஐ (கொடுமையான படம்), எந்திரன் 2 என்று நீண்டு இன்று இந்தியன் 2 இல் முழுமையாக சறுக்கி விட்டார் என்று தெரிகின்றது. இடையில் நண்பன் படம் மட்டுமே கொஞ்சம் ஆறுதல் (அது இந்திப் படம் 3 idiots இன் remake என்பதால்) கமல் என்னும் நல்ல கலைஞன், அரசியல் கோமாளி ஆகிய பின், இன்னும் தன்னை மேதாவி என்று நினைத்துக்கொண்டு இருக்கின்றார் என நினைக்கின்றேன். சமூக வலைத்தளங்களில் எல்லாம் இந்தப் படத்தை கழுவி கழுவி ஊற்றுகின்றார்கள். முக்கியமாக சமூக வலைத்தளங்களில் இப்படி சினிமாவை, அரசியலை விமர்சிக்கின்றவர்களை, கக்கூஸில் முன்னர் கிறுக்கியவர்கள் என சங்கர் வசனங்கள் வைத்தமையால் சலங்கை கட்டி ஆடுகின்றார்கள். நான் இன்னும் இந்தியன் 2 இனைப் பார்க்கவில்லை. OTT இல் வந்தால் கூட அநேகமாக பார்க்க மாட்டேன் என நினைக்கின்றேன் கதையை நம்பாமல் பிரமாண்டம் என்ற பெயரில் பெரும் செலவில் எடுக்கப்படும் இப்படியான சினிமாக்கள் தோற்று, குறைந்த செலவில் கதையை மட்டும் நம்பி எடுக்கப்படும் கருடன், மஹாராஜா போன்ற படங்கள் வெல்லும் காலம் இது.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.