Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Leaderboard

  1. தமிழ் சிறி

    கருத்துக்கள உறவுகள்
    11
    Points
    87990
    Posts
  2. நிழலி

    கருத்துக்கள பொறுப்பாளர்கள்
    8
    Points
    15791
    Posts
  3. ஈழப்பிரியன்

    கருத்துக்கள உறவுகள்
    7
    Points
    20018
    Posts
  4. யாயினி

    கருத்துக்கள உறவுகள்
    5
    Points
    10209
    Posts

Popular Content

Showing content with the highest reputation on 08/20/24 in Posts

  1. நான் ஐந்து சதமேனும் கொடுக்கவில்லை. மற்றவர்கள் போல் நான் கொடுத்து இருந்தாலும், புலிகள் தடை செய்யப்பட்ட அமைப்பென்பதால் வழக்கு போட்டு நானும் உள்ளே போக தயாராக இருக்க மாட்டேன். இங்கு கொடுத்த பலருக்கு என் மைத்துனன் உட்பட, கொடுத்ததற்கான எந்த ஆதாரமும் கொடுக்கப்படவில்லை. சட்ட ரீதியிலான, செல்லுபடக் கூடிய ஆவணம் ஏதும் இல்லை. இயக்கத்தின் மீது, தலைவரின் மீது நம்பிக்கை வைத்து (கிளிநொச்சி வீழ்ந்த பின்னும் கூட) கொடுத்தவர்கள் இவர்கள். இப்படி கொடுத்த ஆயிரக்கணக்கானோரின் ஆதங்கம், ஆத்திரம் மற்றும் எதிர்பார்ப்பு எல்லாம் கொடுத்த பணத்தை மீண்டும் பெறுவது அல்ல. வாங்கிய பணத்தில் குறிப்பிடத்தக்க ஒரு பகுதியையாவது போராளிகளின் குடும்பங்களுக்கும், கைதாகி விடுவிக்கப்பட்ட போராளிகளுக்கும் கொடுத்து கை தூக்கி விட்டிருக்கலாம் என்பதே. ஏனெனில் இப்படி பதுக்கியவர்களை பாதுகாப்பது போன்று அவர்களுக்கு சார்பாக நியாயம் பிளப்பதால்.
  2. பாவம் இவர்கள். இப்படி ஒரு வேலை பார்த்து, பின் மக்களை ஏமாற்றிச் சுருட்டிய பணத்தை வைத்துக் கொண்டு மனவேதனையில் புழுவாய் துடிப்பதால் தான், அந்த வேதனையை தீர்க்க, பல வியாபார நிலையங்களை வாங்கியும், வணிக கட்டிடங்களை கட்டியும், சொகுசு கார்களை வாங்கி வலம் வந்தும் கொண்டு இருக்கின்றனர். அதிலும் சிலர் மகள் கருத்தரிக்க கூடிய நிலையை உடலளவில் அடைந்தவுடன், அதை ஊருலகுக்கு அறிவிக்க விழா எடுத்து ஹெலியில் ஏற்றி வந்து கொண்டாடினம். எவ்வளவு நல்லவர்கள் இவர்கள்!
  3. எனக்கும் இதைப்பற்றி சரியான முடிவுகள் எடுக்க முடியாமல் உள்ளது. அட இவ்வளவு காலமும் இவர்களுக்கு தானே தமிழ்மக்கள் வாக்குகளைப் போட்டார்கள்.அதற்கான நன்றி கூட இல்லாமல் எவ்வளவு துரோகங்கள் கண் முன்னே செய்கிறார்கள். இவர் நல்லவர் அவர் நல்லரென்று சொல்வதற்கு எவருமே இல்லை. இப்போது என்ன செய்யலாம்? அடுத்து தேர்தலென்று வரும்போது இதே பொதுக்கட்டமைப்பை வைத்து புதிய கட்சியொன்று ஆரம்பித்து இளையோர்களை உள்வாங்கி தற்போதுள்ள கட்சிகளுக்கு சாவுமணி அடிக்க வேண்டும்.
  4. அவர் எழுத்து / சொல் பிழைகள் விட்டுள்ளார். புலிகள் இயங்க முடியாவிட்டாலும் வெளிநாடுகளில் பொருளாதார ரீதியில் பலமாக இருந்தால் தன் குடும்பமும் நெருங்கிய உறவுகளும் குடும்பம் நடத்த முடியும் , கோடிகளில் புரள முடியும் என்று சொல்லியிருக்க வேண்டும். கோத்தாவை விட, மஹிந்தவை விட, கடும் சிங்கள இனவாதிகளை விட தலைவர் கொல்லப்பட்டதை, புலிகள் அழிக்கப்பட்டதை மனசார மகிழ்வுடன் வரவேற்பவர்களாக இவர்களே இருப்பர்.
  5. 3 பாலங்கள் தகர்க்கப்பட்டுவிட்டதாக கேள்விப்பட்டேன், சரியாக தெரியவில்லை. உக்கிரேன் துருப்புக்கள் குறைந்த பயிற்சியுடன் இந்த சாதனைகளை செய்கிறார்கள்? கைது செய்யப்பட்ட உக்கிரேன் துருப்புகள் ஒரு வாரத்திற்கும் குறைவான பயிற்சியுடன் முன் களங்களில் சண்டை இடுகிறார்கள். இரன்டு தரப்பிலும் தொடரும் இப்போரினால் பெருமளவானவர்கள் கொல்லப்படுகிறார்கள், இரு தரப்பும் குறைந்த பயிற்சியுடன் பல அப்பாவி இளைஞர்களை பலி கொடுக்கிறார்கள், ஏற்கனவே இரண்டாம் உலகப்போரினால் பெருமளவான ஆண்கள் இறந்தமையால் இரஸ்சிய ஆண்களின் தொகையினை விட 4 மடங்கு பெண்கள் உள்ளதாக கூறுகிறார்கள். தற்போது உக்கிரேன் தரப்பு பெருமளவில் ஆளணிப்பற்றாக்குறையில் திண்டாடுகிறது, இந்த போரை நிறுத்தாமல் தொடர்ந்தால் எதோ ஒரு பகுதி தோற்றுவிடும், இதில் இந்த இரு தரப்பிற்கும் எந்த பெரிய இலாபமும் இல்லை, நட்டம் மட்டுமே மிஞ்சும் அரசியல்வாதிகள் எங்காவது ஒரு நாட்டில் இந்த போரினால் வந்த காசில் உள்ளாசமாக இருப்பார்கள் ஆனால் போரிட்டவர்கள் உடல் உள ரீதியான பாதிப்புடன் காலம் முழுவதும் வாழவேண்டியதுதான்.
  6. விஜய் கட்சியின் கொடி அறிமுகம் தமிழக வெற்றிக் கழகத்தின் கொடி பனையூரில் உள்ள கட்சி அலுவலகத்தில் பறக்கவிடப்பட்டது. நடிகர் விஜய், கடந்த பிப்ரவரி 2ஆம் திகதி தமிழக வெற்றி கழகம் என்ற கட்சியை தொடங்குவதாக அறிவித்தார். மேலும் 2026 சட்டமன்ற தேர்தலில் போட்டியிடப்போவதாகவும் அறிவித்தார். இந்நிலையில், வரும் 22ஆம் திகதி, தமிழக வெற்றி கழகத்தின் கொடியை விஜய் அறிமுகம் செய்வார் என தகவல் வெளியானது. தவெகவின் முதல் மாநாட்டை மதுரை, திருச்சி ஆகிய பகுதிகளில் நடத்த விஜய் தரப்பினர் திட்டமிட்டதாக தகவல் வெளியான நிலையில், தற்போது விக்கிரவாண்டியில் முதல் மாநாட்டை நடத்தப்போவதாகவும் அதற்கு முன்னர் தவெகவின் கொடியை விஜய் அறிமுகம் செய்வார் எனவும் கூறப்பட்டது. https://thinakkural.lk/article/308091
  7. ஐயா சம்பந்தரின் இறுதி அஞ்சலியின் போதுகூட இவ்வளவு மக்கள் கலந்து கொள்ளவில்லை என்பதை கவனத்தில் கொள்க.
  8. https://timesofindia.indiatimes.com/videos/toi-original/kolkata-doctors-last-words-before-horrific-rape-murder-revealed-i-want-to-be-watch/videoshow/112552183.cms?fbclid=IwY2xjawEv0CZleHRuA2FlbQIxMAABHbKHKGXNSWu7n7YWPY1GNOELchx1Bs1iz558QA-bMuJm0VQbs4taiGEesw_aem_lcxvXznR72fMYKeYy-gYXw கிழித்தெறியப்படும் கவிதைகள் இந்தக் கவிதைகளை எங்கள் பண்பாடென ஒருகாலத்தில் நாங்கள் உறுதி பூண்டிருந்தோம் புழுக்கத்தில் கசியும் இரவுகளில் கூட நெறி தவறாமல் நாம் எம் கவிதைகள் படித்தோம் காலம் உருண்டோடி இச்சைக் கருவிக்குச் சண்டை போட்டபோது கசக்கி எறியப்பட்டன பல கவிதைத் தாள்கள் சாத்தான்களின் இவ்வுலகில் இங்கு யார்மீதும் புகார்களுக்கு இடமில்லை ஆதலால் எங்கள் கவிதைத் தாள்களை அடிக்கடி இங்கே பேய்கள் கூடிக் கிழித்தெறிகின்றன அந்தர வெளியில் மிதந்து காட்சிகள் மட்டுமே வாழ்வென நம்பும் தலைகீழ் பட்சிகளாய் எக்கணமும் அவிழ்க்கத் துடிக்கும் வன்மத்துடன் ஒவ்வொரு தெருவின் ஓரத்தையும் முகர்ந்து பார்த்தபடி நகரும் நிர்வாண நாய்கள் களியாட்டச் சுகம் தேடும் வேட்கையில் புணர்வதை மட்டுமே குறியாகக் கொண்டு குறிகள் நிமிர்த்தி நகக் குறிகள் பதித்து குரல்வளை நசுக்கும் கொடூர ஓநாய்கள் இரண்டகப் பிண்டங்கள் உலவும் பெருநகரில் கவிதைகள் பற்றிய தேடலில் பிசாசுகள் பேதங்கள் பார்ப்பதில்லை பிண்டம் ஒன்றே குறியெனக் கொண்டு எங்கள் கவிதைகளை அவை எப்போது வேண்டுமானாலும் நொடிப் பொழுதில் கிழித்தெறிகின்றன. தியா - காண்டீபன் #நீ_கொன்ற_எதிரி_நான்தான்_தோழா
  9. Published By: DIGITAL DESK 3 12 AUG, 2024 | 02:18 PM மியா லு ரூக்ஸ் என்ற செவித்திறன் குறைபாடுடைய பெண்ணொருவர் முதன் முறையாக தென்னாபிரிக்காவில் அழகு ராணி பட்டத்தை சூடியுள்ளார். சமூகத்தில் ஒதுக்கப்பட்டவர்கள் என்னைப் போலவே வெறித்தனமான கனவுகளை அடைய தனது வெற்றி உதவும் என்று நம்புகிறேன். மாற்றுத் திறனாளிகளுக்கு உதவ விரும்புகிறேன் என மியா லு ரூக்ஸ் தெரிவித்துள்ளார். 28 வயதுடைய மியா லு ரூக்ஸ்க்கு ஒரு வயதில் ஆழ்ந்த செவித்திறன் குறைபாடு இருப்பது கண்டறியப்பட்டது. அதன் பின்பு அவரது காதில் கோக்லியர் மின்னணு சாதனம் பொறுத்தப்பட்டது. அத்துடன், முதல் வார்த்தையை பேசுவதற்கு இரண்டு வருடங்கள் பேச்சு திறன் சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், மியா லு ரூக்ஸ் தற்போது அவர் மொடல் மற்றும் சந்தைப்படுத்தல் மேலாளராகவுள்ளார். "நான் ஒரு தென்னாப்பிரிக்க செவித்திறன் குறைபாடுடைய பெண் என்பதில் பெருமையடைகிறேன், ஒதுக்கப்படுவதால் ஏற்படும் வலி எப்படி இருக்கும் என்று எனக்குத் தெரியும். நான் எல்லைகளை உடைப்பதற்காக இந்த கிரகத்தில் படைக்கப்பட்டுள்ளேன் என்பதை தற்போது அறிகிறேன். நான் அதை இன்றிரவு செய்துள்ளேன் என தெரிவித்துள்ளார். https://www.virakesari.lk/article/190889
  10. என்ன சந்தேகம்?? சொல்லுங்கள் சில நேரம் உண்மை அல்லது பொய் ஆக இருக்கும் போராட்டம் தோற்றுவிக்கப்பட்டது இல்லையா??? அதில் உங்களுக்கு பங்கு உண்டு ஆனால் இந்த போராட்டம் 30 ஆண்டுகளுக்கு நடப்பதற்கு முக்கிய காரணங்களில் ஒன்று தங்களும். பங்களித்து மற்றவர்களையும் பங்களிப்புகளையும் வசூலித்து வன்னிக்கு ஒழுங்காக அனுப்பி கொண்டிருந்தால் தான் போராட்டம் வெற்றி பெற்றிருந்தால். உங்கள் கருத்துகள் சந்தேகங்கள் எப்படி இருக்கும் என்பதை நான் நன்கு அறிவேன். 2009 இல் நடந்த குளறுபடிகளுக்கு முக்கிய காரணம் புலிகளின். தடை ஆகும் உலக நாடுகள் புலிகளை அங்கீகரித்து இருத்தால். மேற்படி கோளாறுகள் ஏற்பட்டு இருக்காது என்பதுடன் சட்டநடவடிக்கையும். எடுக்க முடியும் போராட விருப்பம் இல்லாத தமிழன் பணம் கொடுக்க விரும்பமில்லாத தமிழன் போராட்டத்தில் தலைமை அழிக்கபட்ட. பின்னர் நடந்த மோசடிகளை பெரியளவில் கதைப்பதன். நோக்கம் என்ன?? அல்லது ஏன்?? இவ்வாறு கதைப்பதால் என்ன பலனுண்டு??? எந்தவொரு பலனுமில்லை இந்த பணம் சேர்த்தவர்கள் பெரியளவில் கொண்டாட்டம் நடத்தினால் ... வீடு வேண்டினால். கார் வாங்கினால,..... சுற்றுலா குடும்பமாக போனால் ......ஆ,.ஆ,.மக்களின் பணத்தை சுற்றி விட்டான். என்பார்கள் ஆனால் பணம் சேர்க்காமல் பணம் கொடுக்காமல் சும்மா இருந்தவன் கார். வாங்கினால் வீடு வாங்கினால் சுற்றுலா குடும்பமாக போகலாம்” பெரியளவில் கொண்டாட்டம் செய்யலாம் ஒரு சின்ன வேலை செய்பவர்களும். இதையெல்லாம் செய்கிறார்கள் எனவே… சந்தேகம் கூடாது கேடனாது பொல்லாதது தூக்கி எறியுங்கள் 🤣🙏
  11. இங்கே பதுக்கியவர்களை யாரேனும் பாதுகாத்ததாக தெரியவில்லை. அதைவிட நான்கு பூச்சிய தொகையை கொடுத்த என்போன்றோர் ஒரு போதும் இவற்றை மன்னிக்க மறக்க மாட்டார்கள். ஆனால் எனக்கு என்னுடன் நின்ற பலருடைய இன்றைய நிலை தெரியும். எங்களது இறுதி சர்வதேச பொறுப்பாளர் எந்த வித பென்சனோ அரச உதவிகளோ அற்று பிள்ளைகளின் கைகளை எதிர் பார்த்து தான் வாழ்கிறார். (இத்தனைக்கும் அவர் ஒரு எஞ்சினியர்)
  12. சிலருக்கு ஆறு விரல் உள்ளது போல, இவருக்கு இரண்டு பொக்கிள். 😂 🤣
  13. வட்டுவாகலில் இராணுவத்தினரிடம் ஒப்படைக்கப்பட்டவர்களை எங்கே கொன்று புதைத்தீர்கள்? - கொக்குதொடுவாய் புதைகுழிக்கு முன்பாக போராட்டம்! 20 AUG, 2024 | 01:00 PM கொக்குதாெடுவாய் மனித புதைகுழி விவகாரம் தொடர்பாக பாரிய கவனயீர்ப்பு போராட்டம் ஒன்று கொக்குதொடுவாய் மனித புதைகுழிக்கு முன்பாக இன்று செவ்வாய்க்கிழமை (20) இடம்பெற்றது. முல்லைத்தீவு கொக்குதொடுவாய் பகுதியில் கண்டுபிடிக்கப்பட்ட மனித புதைகுழி அகழ்வவு பணியானது மூன்று கட்டமாக இடம்பெற்று 52 மனித எச்சங்கள் அகழ்ந்தெடடுக்கப்பட்ட நிலையில் மூடப்பட்டுள்ளது. குறித்த அகழ்வு பணியின் போது கண்டுபிடிக்கப்பட்ட மனித எச்சங்கள் தொடர்பான எவ்வித உண்மைகளும் இதுவரை வெளிக்கொண்டுவரப்படவில்லை. எனவே கொக்குதொடுவாய் மனித புதைகுழி விடயத்தை மூடி மறைக்க வேண்டாம், எமக்கு உண்மையும் நீதியும் வேண்டும் என கூறி குறித்த போராட்டம் இடம்பெற்றிருந்தது. முல்லைத்தீவு வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளின் சங்கத்தினரால் முன்னெடுக்கப்பட்ட குறித்த போராட்டத்தில் பாராளுமன்ற உறுப்பினர் செல்வராசா கஜேந்திரன்,முன்னாள் வடமாகாணசபை உறுப்பினர் துரைராசா ரவிகரன்,வடக்கு மாவட்டங்களை சேர்ந்த முல்லைதீவு, கிளிநொச்சி, வவுனியா, மன்னார், யாழ்பாணம் காணாமல் போனவர்களின் உறவினர்கள் சங்க உறுப்பினர்கள், பொதுமக்கள், சமூக செயற்பாட்டாளர்கள் என பலரும் கலந்து கொண்டிருந்து தமக்கான நீதி கோரி போராடியிருந்தனர். குறித்த போராட்டத்தில் கொக்குதொடுவாய் மனிதபுதைகுழியை சுற்றி கண்ணீர் விட்டு கதறி அழுததோடு குறித்த போராட்டத்தில் ஈடுபட்ட மக்கள் உண்மையை மௌனமாக்காதே: கொக்குத்தொடுவாய் மனிதப் புதைகுழியின் சாட்சிகளை அச்சுறுத்தாதே ! ,கொக்குத்தொடுவாய் மனித புதைகுழிக்கு நீதி: ஸ்ரீ லங்கா இராணுவமே பொறுப்புக்கூற வேண்டும்! ,OMP ஒரு ஏமாற்று வேலை: காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கு இன்னும் நீதி இல்லை!, கொக்குத்தொடுவாய் மனித புதைகுழியில் இலங்கை இராணுவத்தின் பங்கை அம்பலப்படுத்துங்கள்!, வட்டுவாகலில் இராணுவத்தினரிடம் ஒப்படைக்கப்பட்ட எமது அன்புக்குரியவர்களை எங்கே கொன்று புதைத்தீர்கள் ? உள்ளிட்ட பல்வேறு கோசங்கள் எழுதப்பட்ட பதாதைகளை தாங்கியவாறும் கோசங்களை எழுப்பியவாறும் போராட்டத்தில் ஈடுபட்டனர். முல்லைத்தீவு மாவட்டத்தின் கொக்குத்தொடுவாய் மனிதபுதைகுழி கடந்த ஆண்டு 2023.06.29 ஆம் திகதி இனம்காணப்பட்ட நிலையில் மூன்று கட்டங்களாக அகழ்வு பணிகள் முன்னெடுக்கப்பட்டு இதுவரை 52 மனித எச்சங்கள் மீட்கப்பட்ட நிலையில் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது. இரண்டு கட்டங்களின் போது 40 மனித எச்சங்கள் மீட்கப்பட்ட நிலையில் மூன்றாம் கட்ட அகழ்வு கடந்த 04.07.2024 அன்று ஆரம்பமாகி 15.07.2024 வரை இடம்பெற்று 12 மனித எச்சங்கள் மீட்கப்பட்டுள்ளன. இதுவரை குறித்த விடயம் தொடர்பாக எவ்வித உண்மைகளும் வெளிவராத நிலையில் குறித்த போராட்டம் முன்னெடுக்கப்படட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது. https://www.virakesari.lk/article/191518
  14. இந்த லூச என்னவென்று சொல்ல , எதோ அமெரிக்கா சீனா இந்தியா பாக்கிஸ்தான் இஸ்ரேல் சேர்ந்து இந்த போரை வென்று கொடுக்க , இந்த கொக்கரக்கோ வுக்கு கூவ வந்திட்டுது ...
  15. தகவலுக்கு நன்றி, இந்த பொது வேட்பாளர் முயற்சி வெற்றி அளிக்குமா என்பதில் எனக்கும் சந்தேகம் உண்டு(அதற்கு காரணம் வேட்பாளர்கள் அல்ல இலங்கை சுதந்திரம் பெற்ற காலத்திலிருந்து பின்பற்றும் இனவாத போக்கு), ஆனாலும் தமக்கு சந்தர்ப்பம் வழங்கவில்லை என மிதவாத அரசியல்வாதிகள் வரலாறு முழுவதும் கூறும் குற்றச்சாட்டிற்கு நாம் ஏன் உடந்தையாக வேண்டும், மறுவளமாக இலகுவாக அரசியல் தீர்வு கிடைத்தால் சந்தோசம்தான். ஆனால் இந்த முயற்சியினை எதிர்ப்பவர்களும் இந்த மிதவாத அரசியல்வாதிகள்தான், இவர்கள் தான் 13 ஏற்காமல் விட்டதனை தவறென மூச்சுக்கு முன்னூறு தடவை கூவுபவர்கள். இந்த மிதவாத அரசியல்வாதிகளுக்கிடையேயான ஒற்றுமையின்மையினை குறிப்பிட்டிருந்தேன், இது ஒரு முரண்நகையாக உள்ளதல்லவா?
  16. யாழ் கோட்டைக் காவலில் புலி வீரர்கள் 1987 சுற்றுக்காவலின் போது
  17. இந்த ஆட்டு மந்தை செயற்பாடு ஆபத்தானது, ஆனால் இந்த பொது வேட்பாளர் கருத்தினை முதலில் முன் வைத்தது எந்த தமிழ் அரசியல்வாதிகளும் அல்ல, யாழ்கலத்தில் ரஞ்சித் இது தொடர்பாக ஆரம்பத்தில் கருத்து தெரிவித்திருந்தார், அதன் பின்னரே இது தமிழ் அரசியல்வாதிகளிடையே பேசு பொருளாகி இருந்ததாக உணர்கிறேன். எனக்கும் இந்த தேசியம் பேசி மக்களை கொள்ளை அடிக்கும் இந்த அரசியல்வாதிகளை பிடிப்பதில்லை, ஆனால் அவர்களால் முன் மொழியப்பட்ட இந்த பொது வேட்பாளரால் என்ன நன்மை வரும் என பொறுத்திருந்துதான் பார்க்கவேண்டும்; ஆனால் தொடர்ந்து இணக்க அரசியல் என்று குண்டு சட்டியில் குதிரை ஓட்டும் அரசியலால் எந்த மாற்றமும் இல்லாததால் (இது பற்றி விரிவாக ரஞ்சித் தனது கட்டுரையில் குறிப்பிட்டுள்ளார்) ஒரு மாற்று முயற்சியினை எதற்காக அந்த அரசியல்வாதிகளை பிடிக்கவில்லை (Bias) என்பதற்காக ஸ்ரியோ ரைப்பாக எதிர்க்க வேன்டும்? இதுதான் எனது புரிதல் உங்களுக்கு மேலதிகமாக இதில் ஏதாவது குறைகள் இருந்தால் குறிப்பிட்டு அதனை எதிர்த்தால் எனக்கு புரியும்!
  18. ஒரு இரவு, எங்களின் அறைக் கதவுகளில் படபடவென்று அடித்தார்கள். நாங்கள் திறந்தோம். வந்திருந்தவர்களில் சிலர் எங்களுக்கு ஏலவே தெரிந்த ஜேவிபி ஆதரவு மாணவர்கள். சிலர் எங்களின் பீடம், வகுப்பு, சிலர் வேறு பீடங்களைச் சேர்ந்தவர்கள். எங்களை வெளியில் நிற்க விட்டு விட்டு அறைகள் முழுவதும் தேடினர். சில 'புலிகள்' எங்களுடன் வந்து தங்கியிருப்பதாகச் சொன்னார்கள். போலீஸோ அல்லதோ இராணுவமோ வரவில்லை. இவர்கள் மட்டும் தான் வந்திருந்தனர். இடதுசாரிகள் என்னும் நிலையிலிருந்து சிங்கள தேசியத்திற்கு இவர்களின் தலைமை அன்று மாறிக் கொண்டிருந்தது. விமல் வீரவன்ச போன்றவர்களால் இந்த மாற்றம் பொதுவெளியிலேயே நடந்து கொண்டிருந்தது. அன்று வந்த எல்லா தீர்வுப் பேச்சுவார்த்தைகளையும் எதிர்த்தனர். இன்றும் தான்.
  19. முதலில் இந்தப் படத்தைப் பார்த்தபோது இதன் அர்த்தம் புரியவில்லை... ஒரு சிறிய துவாரத்தில் பாம்பின் வால் வெளியே நீட்டிக்கொண்டிருப்பதை ஒரு பூனை பார்ப்பதாகவும், அது எலியின் வால் என்று நினைத்துக்கொண்டு வெளியே வரும் வரை அந்த வாலை இழுக்க முயற்சி செய்ததாகவும் தெரிகிறது... . பிறகுதான் புரிந்தது... இந்த புகைப்படம் இத்தாலியின் பிரபல ஓவியர் மார்கோ மெல்கிராட்டியின் படைப்பு, அவரது ஓவியத்தின் பொருள்: "யாருடன் விளையாடுகிறீர்கள் என்று தெரியாமல், அபாயத்தை தொடுகிறீர்கள், ஏனென்றால் அறியாமை, பணத்தை நோக்கிய தேடல், விரைவான தீர்வுகளை நாடுதல், பொறுமையின்மை போன்ற குணங்களால் இன்று நாம் சூழப்பட்டுள்ளோம்." இன்றைய வேகமான மற்றும் பிஸியான வாழ்க்கையில், நாம் காண்பது உண்மையின் ஒரு சிறிய பகுதியை மட்டுமே.... நாம் என்ன செய்து கொண்டிருக்கின்றோம் ?? சுகாதார நிலைமைகளை, நமது ஆரோக்கியத்தை எலியின் வால் என்று நாம் கருதுகிறோம் & சுவருக்குப் பின்னால் இருப்பது உண்மையான நாகப்பாம்பு என்று ஒருபோதும் யூகிக்க மாட்டோம். எனவே உங்கள் ஆரோக்கியத்திற்கு முன்னுரிமை கொடுங்கள். உங்கள் உடல்நிலையை ஒருபோதும் புறக்கணிக்காதீர்கள். நாகப்பாம்பின் வாலை எலி வாலாகக் கருதி விளையாட்டாக இருக்காதீர்கள். எப்போதுமே, வாழ்க்கை முக்கியமானது, ஆரோக்கியம் அதைவிட முக்கியமானது. இந்தப் படத்தை நினைவில் கொள்ளுங்கள்: நீங்கள் முழு படத்தையும் பார்க்க முடியாது. முழுப் படத்தையும் பார்க்க முடிந்தால், நாம் சிறியது என்று நினைப்பது உண்மையில் நம்மை விடப் பெரியது என்பதை நீங்கள் புரிந்துகொள்வீர்கள். எனவே உங்கள் உடல்நிலையை கவனித்து ஆரோக்கியமாக இருங்கள். Usha Ravikumar
  20. அனுதாப ஓட்டு எடுக்க முயற்சி பண்ணுகின்றார். அவர் மறியலில்… கையில் தட்டும், அரைக் கால்சாட்டையுடன் சாப்பாட்டுக்கு வரிசையில் நின்ற போது வராத அனுதாபம் இதுக்கா வரப் போகுது. 😂
  21. அமெரிக்கா எப்போதும் தயாராக உள்ளது. பொருளாதாரமும் கொஞ்சம் களைகட்டும்.
  22. இது சாதாரணமாக அறிவித்தலில் போடப்படும் வாசகம். இது கூட தெரியாமலா பேனாவை கையில் எடுத்தீர்கள்?? நாசமாய் போச்சு. 😭
  23. பையன் சொல்றது உண்மைதான், சமாரி அட்டபட்டுவ பாத்தா நமக்கே நித்திரை வருது, ஓவரா சாப்பிட்டு வாத்துமாதிரி நடக்குது பொண்ணு., ஆனாலும் அதிரடியில் பொம்பள ஷேவாக். ஆண்கள் அணியில் வெல்லாலகே இனிவரும் காலங்களில் இலங்கை அணியின் முதுகெலும்பாக இருக்கபோகிறார். பந்துவீச்சிலும், துடுப்பாட்டத்திலும் மிக சிறந்த ஒரு ஆல்ரவுண்டர் . இலங்கை அணி இந்தியாவுடனான ஒருநாள் தொடரை வென்றதுக்கு காரணமே வெல்லாலகேதான்.
  24. காத்திருந்தேன் காத்திருந்தேன் . .........! 😍
  25. கூட்டமைப்பின் பிரசாரக் கூட்டங்களுக்கு வந்த மக்களை விட அதிக மக்கள் கலந்து கொண்டுள்ளார்கள்.
  26. பின்னால அருண் சித்தார்த் வேற நிக்கிறான் போல இவன் தானே நல்லூரானை இடித்து கக்கூஸ் கட்டுவேன் என்று சொன்னவன் இப்ப எதுக்கு அங்க போனவன் ...?
  27. தம்பாப்பிள்ளை மகேஸ்வரன் அவர்கள் 25/06/1955ம் திகதி புங்குடுதீவில் பிறந்தார் தனது .யாழ்ப்பாணம் மத்திய கல்லூரியில் பயின்ற காலத்தில் அந்த பாடசாலையின் கால்பந்தாட்ட அணியில் விளையாடியவர். பின்னர் இரசாயனவியல் துறையில் university of London ல் பட்டம் பெற்றார். ஈழ போரட்டத்தில் தோன்றிய இயக்கங்களில் ஒன்றான தமிழீழ இராணுவத்தை தோற்றிவித்தவர். தம்பாப்பிள்ளை மகேஸ்வரன் அவர்கள் பனாங்கொட இராணுவ முகாமில் தடுத்து வைக்கப்பட்டிருந்த பொழுது அங்கிருந்து தப்பியோடினர் இதனால் இவரை பனாங்கொட மகேஸ்வரன் என்றும் அழைத்தனர். இன்னொரு சந்தர்ப்பத்தில் பனாங்கொட மகேஸ்வரன் கைது செய்யப்பட்டு வெலிக்கட சிறையில் இருந்த பொழுது ஜூலை கலவரம் இடம்பெற்றது இக்கலவரத்தில் குட்டிமணி, தங்கத்துரை ஜெகன் உட்பட பல போராளிகள் கொல்லப்பட்டனர். அச்சம்வத்தின் பின்னர் டக்ளஸ் தேவனாந்தா, பரந்தன் ராஜன், பனாங்கொட மகேஸ்வரன் போன்ற போரளிகள் மட்டக்களப்பு சிறைக்கு மாற்றப்பட்டனர் . பின்னாளில் மட்டக்களப்பு சிறையுடைப்பின் பொழுது வாவி வழியாக ஒரு படகில் காளி சுப்பிரமணியம் ஆகிய தமிழீழ இராணுவ போராளிகளுடன் தப்பிச் செல்ல முற்பட்ட வேளை வாவியை நோக்கி ஓடிய வரதனும், அழகிரியும் தம்மையும் அழைத்துச் செல்லும்மாறு கேட்டனர். படகில் அவர்களோடு தப்பிச் சென்றனர். ஈழ விடுதலை இயக்கங்கள் இயக்க செயற்பாட்டுக்காக நிதியை பெற்றுக்கொள்வதற்காக வங்கி கொள்ளையில் ஈடுபட்ட வேளை தம்பாப்பிள்ளை மகேஸ்வரன் 1984இல் மட்டக்களப்பில் காத்தான்குடி மக்கள் வங்கியை கொள்ளை இட்டார். கொள்ளைபோன நகைகளும், பணமும் மூன்று கோடி ரூபாய்களுக்கு மேல் இருக்கும் என்று மதிப்பிடப்பட்டது. இலங்கையில் நடைபெற்ற மிகப் பாரிய வங்கிக்கொள்ளை என்ற பெயரையும் அந்த நடவடிக்கை சம்பாதித்துக் கொண்டார் தம்பாப்பிள்ளை மகேஸ்வரன் அவர்கள். இதே வேளை தமிழ் நாட்டில் இருந்த தம்பாப்பிள்ளை மகேஸ்வரனுக்கு பயங்கரமான திட்டம் ஒன்று மூளையில் உதித்தது. சென்னை மீனம்பாக்கம் விமான நிலையத்திலிருந்து கொழும்பு வரும் “ஏர் லங்கா”விமானத்தில் ஒரு குண்டை வைத்துவிடவேண்டும. குறித் நேரத்தில் வெடிக்கும் அந்தக் குண்டு, விமானம் கொழும்பு விமான நிலையத்தில் தரையிறங்கி, பயணிகள் வெளியேறிய பின்னர் வெடிக்கும். திட்டத்தை நிறைவேற்ற மீனம்பாக்கம் விமானநிலையத்தில் பணிபுரிந்த சிலரது உதவியும் பெறப்பட்டது. ஏர் லங்காவில் பணியாற்றிய இந்தியாவை சேர்ந்த இருவரை கைக்குள் போட்டுக்கொண்டார்கள. பயணிகளின் பொதிகளோடு குண்டு வைக்கப்பட்ட சூட்கேசையும் சேர்த்துவிடவேண்டும். பொதுகளோடு பொதியாக அது விமானத்தில் கொழும்பு போய்ச சேர்ந்துவிடும். திட்டமிட்டபடி 1984 ஆகஸ்ட் இரண்டாம் திகதி சென்னை விமான நிலையத்திற்கு சூட்கேசில் குண்டு சென்றது. பொதிகளோடு பொதியாக சூட்கேஸ் வைக்கப்பட்டு, விமானத்தில் ஏற்றப்படத் தயாரானது. சுங்க அதிகாரிகளில் ஒருவருக்கு அந்த சூட்கேசில் சந்தேகம் வந்துவிட்டது. சூட்கேசை எடுத்து, அது யாருடையது என்று பயணிகளிடம் விசாரித்தார். வந்தது ஆசை, அந்த சுங்க அதிகாரி சூட்கேசை தூக்கிக்கொண்டு தனது அறைக்குச் சென்றார். அவர் நினைத்திருந்தால் உடனடியாகவே சூட்கேசை திறந்து பரிசோதித்திருக்கலாம். செய்யவில்லை. அதற்கு காரணம் இருந்தது. “சூட்கேசுக்குள் கடத்தல் தங்கம்தான் இருக்க வேண்டும். பாரமாக வேறு இருக்கிறது. மெல்ல அமுக்கிக் கொண்டால் என்ன?" என்று அந்த அதிகாரிக்கு ஆசை வந்துவிட்டது. தனது காலடியில் மேசைக்கு கீழே சூட்கேசை பத்திரமாக வைத்துக்கொண்டார். சூட்கேஸ் கைமாறிவிட்டது. விமானத்தில் ஏற்றப்படவில்லை. சென்னை விமான நிலையத்துக்குள் வெடித்துவிடப்போகிறது என்று தமிழ் ஈழ இராணுவ உறுப்பினர்களுக்கு விளங்கிவிட்டது. பயணிகள் அனுப்ப வந்த பார்வையாளர்கள் போல் நின்று அனைத்தையும் அவர்கள் கவனித்துக்கொண்டிருந்தார்கள். விமான நிலையத்தை விட்டு வெளியே ஓடி, பொதுத் தொலைபேசி ஒன்றில் இருந்து விமான நிலையத்தோடு தொடர்பு கொண்டனர். “விமான நிலையத்தில் ஒரு சூட்கேசுக்குள் குண்டு இருக்கிறது. உடனே அப்புறப்படுத்துங்கள்” என்று தொலைபேசியில் தகவல் சொன்னார்கள். “ தங்கத்தை கடத்த முற்பட்டவாகள் தான் கயிறு விடுகிறார்கள்” என்று நினைத்து சுங்க அதிகாரி அலச்சியமாக இருந்துவிட்டார். மறுபடியும் தொலைபேசியில் தகவல் சொன்னார்கள். “அனாமதேய மிரட்டல், வழக்கமான ஏமாற்று” என்று நினைத்து பாதுகாப்பு உத்தியோகஸ்தர்கள் தம்பாட்டில் இருந்துவிட்டனர். மூன்றாவது தடவை சூட்கேசின் நிறத்தையும் கூறி தகவல் சொல்லப்பட்டது. சந்தேகம். தகவல் அறிந்த சுங்க அதிகாரிக்கும்“உண்மையாக இருக்குமோ? என்று சந்தேகம் வந்துவிட்டது. ஊழியர் ஒருவரை அழைத்து சூட்கேசை வெளியே கொண்டு செல்லுமாறு பணித்தார். சூட்கேசோடு ஊழியர் செல்ல, சுங்க அதிகாரியும், பாதுகாப்பு உத்தியோகத்தர்களும் கூடவே சென்றனர். விமான நிலைய கட்டிடத்தைவிட்டு அவாகள் வெளியேற முன்னர் குண்டுவெடிப்பு நிகழ்ந்து விட்டது. இலங்கையர் உட்பட முப்பதுக்கு மேட்பட்டோர் பலியானார்கள். நூறுபேர்வரை காயமடைந்தனர். இந்த தாக்குதல் எதிர்பார்த்தது போல் வெற்றி பெற்றிருந்தால் அன்று பனாங்கொட மகேஸ்வரன் விடுதலை இயக்கங்களின் மத்தியில் ஹீரோவாக பார்க்க பட்டிருப்பார். இங்கு ஏற்பட்ட இழுபறி தமிழீழ இராணுவம் என்ற இயக்கத்தை கொள்கை அற்ற இயக்கம் என்ற விமர்சனங்களை பெற வழிவகுத்தது. இதே வேளை தமது இயக்கத்திற்கு ஏற்பட்ட பழியை துடைக்க திட்டம் ஒன்றை தீட்டினார் மகேஸ்வரன். செப்படம்பர் மாதம் 23 ஆம் திகதி 1985 நல்லிரவு 12மணியளவில் கிளிநொச்சி பொலிஸ்- இராணுவ கூட்டு முகாம் முன்பாக ஒரு லொறி வந்து நின்றது. லெறியைச் செலுத்தியவர் இறங்கி ஓடிவிட்டார். லெறியில் வெடி மருந்து நிரப்பப்பட்டிருந்த்து. சாரதி இறங்கிச் சென்றதும் லொறி வெடிக்க வைக்கப்பட்டது.பாரிய சத்தத்தோடு லொறி வெடித்தபோது பொலிஸ் நிலைய கட்டிடங்கள் சேதமாகின. பொலிஸ் நிலையத்திலும், அதனைச்சுற்றியுள்ள பகுதிகளிலும் தீப்பிடித்துக்கொண்டது. லொறியில் பெற்றோல், டீசல் நிரப்பிய பீப்பாய்களும் வைக்கப்பட்டிருந்தமையால் குண்டு வெடிப்போடு அவையும் பற்றியெரியத் தொடங்கின. அதே வேளையில் பொலிஸ் நிலையம் மீது குண்டு தாக்குதலும் நடத்தப்பட்டது. தாக்குதல் நடைபெற்றுக்கொண்டிருந்தபோது பெற்றோல் நிரப்பப்பட்ட பவுசர் ஒன்று வந்து பொலிஸ் நிலையம் முன்பாக நின்றது. அதிலிருந்தும் சாரதி இறங்கி ஓடிவிட்டார். பவுசரை வெடிக்க வைக்க முயன்றார்கள். பவுசர் வெடிக்கவில்லை. பொலிஸ்- இராணுவ கூட்டுப்படை நிலையத்துக்கு அருகேதான் பெற்றோலிய கூட்டுத்தாபனத்தின் எரிபொருள் குதம் இருந்தது. பவுச்சர் வெடித்திருந்தால் அந்தப் பெற்றோல் குதமும் பற்றியெரிந்திருக்கும். நகரெங்கும் பலத்த சேதம் ஏற்பட்டிருக்கும். பவுசரை வெடிக்க வைத்து பெற்றோல் குதத்தையும் நாசம் செய்வதே தாக்குதல் நடவடிக்கையின் நோக்கங்களில் ஒன்றாக இருந்த்து. ஆனால் பவுசர் வெடிக்கவில்லை. அதனையடுத்து மீண்டும் மோட்டார் ஷெல் தாக்குதல் தொடர்ந்தது. பொலிஸ் நிலையத்திலிருந்து பொலிசார் தப்பிச் சென்றதால் பலத்த உயிரிழப்புகள் தவிர்க்கப்பட்டன. தாக்குதல் நடைபெற்றபோது கிளிநொச்சி பொலிஸ், இராணு கூட்டு முகாமில் 57 இராணுவ வீர்ர்களும், 39 பொலிசாரும் ஒரு உயரதிகாரியும் இருந்தனர். தாக்குதலில் ஒன்பது பேர் காயமடைந்தனர். அதில் நான்கு பேர் காயமடைந்தனர். அதில் நான்கு பேர் இராணுவ வீர்ர்கள். நான்கு பேர் பொலிஸ்கார்ர்கள். ஒருவர் அதிகாரி. தாக்குதல் நடவடிக்கைக்கு தமிழீழ இராணுவம் (TEA)உரிமை கோரியது. தம்பாபிள்ளை மகேஸ்வரன்தான் லொறியில் வெடி மருந்து நிரப்பியும், எரி பொருள்களை வைத்தும் வெடிக்கவைக்கும் தெழில்நுட்ப நேரடியாக்க் கவனித்தார். இலண்டனில் கற்றுகொண்ட தெழில் நுட்ப அறிவை பயன்படுத்தி பார்த்தார், தம்பாபிள்ளை மகேஸ்வரன் (பனாகொடை மகேஸ்வரன்) முதன்முதலில் வெடிமருந்து நிரப்பிய லொறியை பயன்படுத்தி நடத்தப்பட்ட தாக்குதலும் அதுதான். இந்த தாக்குதல் உத்தியை பின்னர் புலிகள் கரும்புலி தாக்குதலாக வடிவமைத்து நெல்லியடியில் முதன் முதலில் பயன்படுத்தினர். இதே போல் தம்பாப்பிள்ளை மகேஸ்வரன் மாலை தீவில் ஒரு தீவை விலைக்கு வாங்கி பின்தளமாக பயன்படுத்த முடிவு செய்தார். அந்த நேரம் plote மாலை தீவை கைப்பற்ற எடுத்த முயற்சி தோல்வி அடைந்ததால் இந்த திட்டம் வைவிடப்பட்டது. இதைவேளை ஆபிரிக்கா நாடு ஒன்றின் பின் தளம் அமைக்க முயற்சி மேற்கொள்ளப்பட்டது அந்த முயற்சி பயனளிக்கவில்லை. 1986 ம் ஆண்டு நவம்பர் காலப்பகுதியில் விடுதலைபுலிகள் Eprlf அமைப்பை தடை செய்த பின்னர் தமிழீழ இராணுவமும் தடை செய்யப்பட்டது. இப்பொழுது சில உறுப்பினகள் விடுதலை புலிகளோடு இணைந்து கொள்கின்றனர். எனையோர் இயக்கத்தை விட்டு வெளியேறினர். சண்முகலிங்கம் செந்தூரன்
  28. இவ்வரலாற்றில் ஒரு சிறு தவறு உள்ளது; நெல்லியடியில் கப்டன் மில்லர் வெடிப்பதற்கு முன்னரே புலிகள் ஒரு சக்கைலொறித் தாக்குதல் ஒன்றை யாழ்ப்பாணம் மாவட்டத்திலிருந்த அஞ்சலகம் ஒன்றின் மேல் நடத்தியிருந்தனர். அதனை "திலீப்" என்ற பெயருடைய புலிவீரன் மேற்கொண்டிருந்தார்.
  29. அச்சம் தவிர் ------------------- முன்னரே ஒரு தடவை தொலைபேசியில் கதைத்திருந்தாலும், அவனை நேரே பார்க்கும் போது, குறிப்பாக அவனின் நீண்ட தாடி அது நெஞ்சு வரை விழுந்திருந்தது, என்னவெல்லாமோ நினைக்க வைத்தது. அவனின் பெயரிலே அவன் யார், அவனின் மார்க்கம் என்னவென்று தெளிவாக இருக்கின்றது. ஆனாலும், இந்தியாவிலிருந்து அமெரிக்காவிற்கு வேலைக்கு வரும் போதும் அப்படியே, அதே தோற்றதுடனேயே வருவார்கள் என்று நான் எதிர்பார்த்திருக்கவில்லை. தனியாக வந்து வேலையில் சேர்ந்த அவன் சில மாதங்களின் பின்னர் அவனின் மனைவியை இங்கு வரவழைத்தான். இந்த நாட்டிற்கு உள்ளே வருவதற்கு மிக இலகுவான வழிகளில் ஒன்று இங்கு சட்டரீதியாக வேலை ஒன்றில் இருக்கும் கணவன்மார்களின் மனைவிகளுக்கு உண்டு. அந்த விசாவை கிட்டத்தட்ட எந்தக் கேள்வியும் இல்லாமல் இந்த நாடு வழங்கிக் கொண்டிருக்கின்றது. இங்கேயே உழைத்து, இங்கேயே செலவழிப்பார்கள் என்ற எதிர்பார்ப்பு போல. இதற்காக இங்கு சில பல்கலைகளில் கிடைக்கும் தகவல்களை ஆராய்ந்து அறிக்கைகள் கூட தயார் செய்திருப்பார்கள். இவர்களின் சில ஆராய்ச்சிகளைப் பார்த்தால், அவை 'மயிர் பிளக்கும்' ஆராய்ச்சிகள் போன்றே தோன்றும். ஆனாலும் அவற்றின் பின்னாலும் சில திட்டங்கள் இருக்கும் போல. மிக நேர்மையானவனாக இருந்தான். அதுவரை நான் அப்படி நேர்மையான ஒரு மனிதனை எங்களின் வேலையில் பார்த்திருக்கவில்லை. மிகத் திறமையானவனும் கூட. அவன் பொய்யே சொல்வதில்லை என்றே தோன்றியது. ஒரு நாள் நேரடியாகவே அதைக் கேட்டேன். மெல்லிய சிரிப்பு ஒன்றே அவனின் பதிலாக இருந்தது. தினமும் ஒரு கத்தியுடனேயே வேலைக்கு வந்து கொண்டிருக்கின்றான் என்று சில நாட்களில் தெரிய வந்தது. கத்தியை அவனின் மேசையில் இருக்கும் ஒரு அலுமாரியில் வைத்துக் கொள்வான். பின்னர் வேலை முடிந்து வீடு போகும் போது அதை கொண்டு போய்க் கொண்டிருந்தான். அவர்களின் மார்க்கத்தில் இருக்கும் இரண்டு பெரிய பிரிவுகளும் இல்லாமல் இன்னொரு பிரிவே அவனுடையது. முதன் முதலாக அந்த மார்க்கத்தில் இருக்கும் அப்பிரிவைப் பற்றி அவனிடமிருந்து கேள்விப்பட்டேன். ஆண்கள் கத்தியுடன் வெளியே போய் வரவேண்டும் என்ற ஒரு கட்டளை அங்கிருந்தது. சீக்கியர்களுக்கும் இப்படியான ஒரு வழக்கம், கத்தி ஒன்றுடன் போய் வரும், இருந்தது. இன்றும் பஞ்சாப்பில் நகரம் அல்லாத பகுதிகளில் இந்த வழக்கம் இருக்கக்கூடும். 9/11 தாக்குதலின் பின், இங்கு சில இடங்களில் சீக்கியர்கள் தாக்கப்பட்டார்கள், இஸ்லாமியர்கள் என்று தவறாக அடையாளப்படுத்தப்பட்டு. இவர்கள் இருவரும் ஒருவருக்கு ஒருவர் எதிரிகள் என்று சொன்னால் எவரும் நம்பமாட்டார்கள். இரு பக்கங்களும் ஒரே மாதிரியான தோற்றங்கள் மற்றும் ஆடைகள், ஒப்பனைகள், கத்திகளுடன் இருக்கின்றனர். ஒரு நாள் ஏதோ ஒரு விசா சம்பந்தமான அலுவல் ஒன்றுக்காக அவன் நகரத்தின் மையப்பகுதியில் இருக்கும் குடிவரவு அலுவலகத்திற்கு போக வேண்டியிருந்தது. எங்களின் வேலை இடத்தில் இருந்து ஒரு 25 மைல்கள் தூரத்தில் நகரத்தின் மையப்பகுதி இருக்கின்றது. அங்கே வேறு பல மத்திய, மாநில அரச அலுவலகங்களும் சுற்றிவர இருக்கின்றன. காலையில் இருந்தே அந்தப் பகுதி கூட்டமாக இருக்கும். காரை தரிப்பிடங்களில் நிற்பாட்டுவதற்கே நேரம் எடுக்கும். ஆதலால் அதிகாலையிலேயே போய், அருகே இருக்கும் ஒரு இடத்தில் காரை நிற்பாட்டி விட்டு, அவன் போக வேண்டிய இடத்திற்கு போகச் சொல்லியிருந்தேன். கூகிளுக்கு முந்திய காலம் இது. காரை நான் சொல்லியிருந்த இடத்தில் விட்டு விட்டு, அருகிலேயே இருக்கும் கட்டிடம் நோக்கி நடக்க ஆரம்பித்தவனுக்கு வலப்பக்கமா அல்லது இடப்பக்கமா, எந்தப் பக்கம் போவது என்ற சந்தேகம் வந்தது. அங்கே நின்ற ஒருவரைக் கேட்போம் என்று, கையில் ஒரு கடதாசியை நீட்டிக் கொண்டே, இந்த இடம் எங்கே இருக்கின்றது என்று அவன் கேட்கப் போனான். இவன் கையை நீட்டிக் கொண்டு வருவதைக் கண்ட அங்கு நின்ற நபர் திரும்பிப் பார்க்காமால் ஓட்டம் பிடித்தார். இவனும் மற்ற பக்கமாக ஓடி, காரை எடுத்துக் கொண்டு அப்படியே வேலைக்கு வந்து, அங்கு நடந்ததைச் சொன்னான். அந்த நபர் ஏன் ஓடினார் என்று அவன் என்னைக் கேட்டான். நீ ஏன் ஓடி வந்தாய் என்று நான் கேட்டேன். அந்த நபர் ஓடிப் போய் துப்பாக்கி எடுத்து வந்து சுட்டாலும் என்ற பயத்தில் தான் தான் ஓடி வந்ததாகச் சொன்னான். உன்னுடைய கத்தி எங்கே இருந்தது என்று கேட்டேன். இடுப்பைக் காட்டினான். இப்பவும் அந்தக் கத்தி அங்கேயே இருந்தது. இனிமேல் தான் அது மேசை அலுமாரிக்குள் போகும். சில மாதங்கள் அவன் இங்கிருந்து விட்டு இந்தியாவுக்கு திரும்பிப் போய்விட்டான்.
  30. உவ‌ர் தாத்தா க‌ண்டிய‌லோ கூக்கில்ல‌ வார‌ ப‌ட‌ங்க‌ள் எடுத்து என்னை ஏமாற்றுகிறார் அதை வைச்சு தான் சொன்னேன் தாத்தா ஈழ‌த்து அர‌விந்த‌ சாமி என்று.....................உண்மையான‌ ப‌ட‌ம் கிடைக்க‌ட்டும் வைச்சு செய்கிறேன் உவ‌ரை லொல்😁...................................
  31. போராட்டத்திற்காக சேர்க்கப்பட்ட நிதியை யார் யாரெல்லாம் சுட்டார்கள், கொள்ளையடித்தார்கள், பதுக்கி வைத்திருக்கிறார்கள், சுருட்டினார்கள் என்று 1) உங்களுக்குத்ப்தெரிந்திருக்க வேண்டுமே. 2) நீங்கள் ஏன் அவர்கள் எல்லோரையும் வெளிக்காட்ட முடியாது? உங்கள் கை சுத்தமானது என்கிறீர்கள். சரி. ஒப்புக்கொள்கிறோம். ஆனால் யார் யாருடைய கைகள் எல்லாம் அழுக்குப் படிந்தவை என்று தங்களுக்குத் 3) தெரிந்திருக்கத்தானே வேண்டும்? தெரியாமல் போவதற்கு 4) நியாயம் இல்லையே? இதில் ஆம் இல்லை என்று சொல்லும்படி எங்கே உங்கள் கேள்வி உள்ளது?? உங்களுக்கு என்ன பிரச்சினை? அதற்கு உண்மையில் நீங்கள் எந்த வைத்தியரை பார்க்க வேண்டும் என்று மட்டும் எனக்கு நன்றாக புரிந்தது.
  32. ஒன்றிரண்டு புறநடைகள் தவிர்த்து உலகின் ஆயுதபோராட்ட இயக்கங்களை கனடா தடை பட்டியலில் வைத்திருப்பது ஒன்றும் ஆச்சரியத்திற்குரியதொன்றல்ல, பல்தரப்பட்ட மக்கள் கூட்டம் வாழும் கனடாவில் ஆயுத இயங்கங்களிற்கு சுதந்திரம் கொடுத்தால் பல்லின சமூகங்களிற்கிடையே மோதல் வரும் என்று நம்புகிறது. அதனால்தான் அங்கே அகதி தஞ்சம் கோருபவர்களை ஆயுதபோராட்ட இயக்கங்களுக்கு ஆதரவோ அல்லது அங்கத்தவராக இருந்தாலோ கனடா அவர்களின் மனுவை நிராகரித்து திருப்பி அனுப்ப முயற்சிக்கிறது. இங்கே கவனிக்கப்படவேண்டியது கனடா புலிகள் அமைப்பைத்தான் தடை செய்திருக்கிறது புலிகளை நேசிக்கும் மக்களை முடக்கி போடவில்லை அவர்கள்மீது நெகிழ்வு தன்மையையும் அவர்களுக்கு இழைக்கப்பட்ட அநீதியையும் ஓரளவாவது ஒப்புக்கொள்கிறது, உதவி செய்ய முயற்சிக்கிறது. புலிகளை தடை செய்தால் என்ன புலிகளை நேசித்த மக்கள்கூட நேசமா கனடிய அரசு இருந்தாலே போதுமே, பூலிகள் வேறு மக்கள் வேறா என்ன? ஆனால் கனடாவின் சட்ட திட்டங்களை கருத்தில் கொண்டு எமக்கான ஒரு தீர்வுகிட்டும்வரை கனடாவில் நடத்தும் எமது இனத்துக்கான போராட்டங்களின்போது புலிகொடிகளையோ அல்லது தலைவரின் படங்களையோ காவி செல்ல தூண்டும் சில அறபடித்தவர்கள் விடயத்தில் கனடாவாழ் தமிழ் மக்கள் எச்சரிக்கையாய் இருப்பது எம் நலன்களுக்கு உகந்தது. இல்லையென்றால் கனடிய அரசு எம்மைவிட்டு தூர போகும் நிலமையையே அது ஏற்படுத்தும். அவர்களாக தடையை எடுக்கும் காலம்வர காத்திருக்கலாம் அதுவரை கனடிய அரசை வெறுப்பேத்தாத விதத்தில் எமது அமைப்புக்கள் எம் மக்களுக்கான ஜனநாயக அழுத்தங்களை கொடுக்கலாம். பின்பு புலிகளை பகிரங்கமாகவே கொண்டாடலாம் தப்பில்லை. புலிகளை தடையை நீடிக்கிறார்கள் என்பதில் எமக்கு ஓரவஞ்சனை என்று கருத்தில் கொள்ள தேவையில்லை, புலிகள் அமைப்பு கனடாவில் தடை செய்யப்பட்ட பல பத்து ஆயுதபோராட்ட அமைப்புகளில் ஒன்று அவ்வளவுதான். கனடாவில் தடை செய்யப்பட்ட அமைப்புகளின் விபரங்கள்: Currently listed entities in XML format Abdallah Azzam Brigades (AAB) Abu Nidal Organization (ANO) Abu Sayyaf Group (ASG) Al-Aqsa Martyrs' Brigade (AAMB) Al-Ashtar Brigades (AAB) Al-Murabitoun Al-Muwaqi'un Bil Dima Al Qaida Al Qaida in the Arabian Peninsula (AQAP) Al Qaida in the Indian Subcontinent (AQIS) Al Qaida in the Islamic Maghreb (AQIM) Al Shabaab Al-Gama'a al-Islamiyya (AGAI) Ansar al-Islam (AI) Ansar Dine Aryan Strikeforce Asbat Al-Ansar (AAA) (The League of Partisans) Atomwaffen Division Aum Shinrikyo Babbar Khalsa International (BKI) Blood & Honour (B&H) Boko Haram Caucasus Emirate Combat 18 (C18) Ejército de Liberación Nacional (ELN) Euskadi Ta Askatasuna (ETA) Fatemiyoun Division (FD) Front de Libération du Macina Fuerzas Armadas Revolucionarias de Colombia (FARC) Gulbuddin Hekmatyar Gulbuddin Hekmatyar's Faction of the Hezb-e Islami, Hezb-e Islami Gulbuddin (HIG) Hamas (Harakat Al-Muqawama Al-Islamiya) (Islamic Resistance Movement) Haqqani Network Harakat al-Sabireen (HaS) Harakat ul-Mudjahidin (HuM) HASAM (Harakat Sawa'd Misr) Hay'at Tahrir al-Sham Hizballah Hizbul Mujahideen Indian Mujahideen (IM) International Relief Fund for the Afflicted and Needy - Canada (IRFAN – CANADA) International Sikh Youth Federation (ISYF) Islamic Movement of Uzbekistan (IMU) Islamic Revolutionary Guard Corps Islamic Revolutionary Guard Corps' Qods Force Islamic State Islamic State – Bangladesh Islamic State – Democratic Republic of the Congo Islamic State East Asia Islamic State in the Greater Sahara Islamic State – Khorasan Province (ISKP) Islamic State in Libya Islamic State – Sinai Province (ISSP) Islamic State West Africa Province Jaish-e-Mohammed (JeM) Jama’at Nusrat Al-Islam Wal-Muslimin James Mason Jaysh Al-Muhajirin Wal-Ansar (JMA) Jemaah Islamiyyah (JI) Kahane Chai (Kach) Kurdistan Workers Party (PKK) Lashkar-e-Jhangvi (LJ) Lashkar-e-Tayyiba (LeT) Liberation Tigers of Tamil Eelam (LTTE) Movement for Oneness and Jihad in West Africa (MOJWA) Palestine Liberation Front (PLF) Palestinian Islamic Jihad (PIJ) Popular Front for the Liberation of Palestine - General Command (PFLP-GC) Popular Front for the Liberation of Palestine (PFLP) Proud Boys Russian Imperial Movement Sendero Luminoso (SL) Taliban Tehrik-e-Taliban Pakistan (TTP) The Base Three Percenters World Tamil Movement (WTM) https://www.publicsafety.gc.ca/cnt/ntnl-scrt/cntr-trrrsm/lstd-ntts/crrnt-lstd-ntts-en.aspx
  33. வடக்கு கிழக்கு என்ன தனி ராஜ்ஜியமா? அதை சீனாவிடம் கொடுப்பதற்கு சிறிலங்கா அரசு உங்களிடம் அனுமதி கேட்பதற்கு?....இன்றைய காலகட்டதில் சிங்கள மக்களே சீனாவிடம் சிறிலங்காவை ஒப்படைக்க தான் விரும்புகின்றனர்
  34. இது 'கீற்று' இணையத்தில் இருந்தது. கவிஜி இதை எழுதியிருந்தார். இதை வாசிக்கும் போது மனம் இலேசாக ஆனது. உங்களுக்கும் இது பிடிக்கலாம். ************************************************* மதகத ராசாக்களே சிரியுங்கள் வயதாகும் போது கோமாளிகள் ஆகாமல் இருக்க கவனத்தோடு இருக்க வேண்டும். பல கெத்துகள் வெத்துகளானதை பார்த்து விட்டோம். பார்த்துக் கொண்டிருக்கிறோம். பார்க்க பார்க்க வயதாகி விடுவது இயல்பு. அது ஒரு ப்ரோஸஸ். வயது ஏற ஏற மனதின் வடிவம் மாற வேண்டும். தன்மையின் தகவமைப்பில் பழம் போல பழுத்து... சுவை கூடும் இனிப்பில் புன்னகைக்க வேண்டும். மொட்டு விடும் அனிச்சையின் மொழி கொள்ளலே வயதாவதின் வடிவம். இயல்பினும் இயல்பாக பனி உருளும் நுனிப் புல் ஆகி எட்டு திசைக்கும் இசை பட அசைதல் அது. முந்திக் கொண்டு நிற்பது கூடாது. முன்ன விட்டு வழி நடத்துதலே அழகு. பின்னிருந்து பேசுதல் ஆகாது. உண்மையில் இருந்து பேசுதல் பேரழகு. உரக்க பேச வேண்டிய தேவை இல்லை. உள்ளத்தின் கதவுகள் திறந்திருந்தாலே போதும். மௌனமும் மொழி ஆகும். மனமெல்லாம் பூ வாகும். கருணை கொப்பளிக்க காலம் கூடும். கடவுள் ஆகி விட்டால் கவலை தீரும். ஒன்று புத்தகம் போல இருக்க வேண்டும். எந்தப் பக்கம் திருப்பினாலும்... செய்தி கிடைக்கும். அல்லது ட்ரங்கு பெட்டியாக இருக்க வேண்டும். திறக்க திறக்க நினைவுகளில் நீந்தும் சிறுபிள்ளை வாசம். இரண்டும் இல்லாமல் டிவி பொட்டியாக இருந்துவிடல் ஆகாது. சலிப்பு ஏற்படும். பக்கத்து வீட்டை எட்டிப் பார்க்க கற்றுத்தரும் சீரியல் மொழி மனிதன் சின்னவனாகும் வழி. குறுக்கு புத்தியில் இருந்து வெளியேறும் வயதுக்கு பலம் அதிகம். குதர்க்க சித்துவில் இருந்து வெளியேறும் மனதுக்கு பவள வண்ணம். வளைந்து கொடுக்காத மரம் புயலுக்கு தாங்காது போல.. வாழ்க்கை பொழியாத மனம் வயதாவதற்கு ஆகாது. வாரி அணைக்க தெரிந்த கைகளில் ஒரு மொத்த வாழ்வின் முத்தங்கள் ரேகையாய் படிந்திருக்கும். எல்லாருக்கும் கொடுத்து விட்டு எல்லையில் நிற்கும் சாமியாகும் வரம் வயதாவதற்கே கிடைக்கிறது. எனக்கு எனக்கு என்று ஆளாய் பறக்கும் மனதில் அனுபவமற்ற அரைவேக்காடு தானே மூடி உதைத்துக் கொண்டிருக்கும். முழு மனிதர் ஆக வயதாவதை ஏற்றுக் கொள்ளல் முக்கியம். பிறகு அதற்கு தகுந்தாற் போல காரியங்களை ஆற்றுவது அதன் பக்குவத்திற்கு கிடைக்கும் பரிசு. வெளித் தோற்றத்திற்கான பூச்சு காலத்துக்கு தக்க இயல்பாகி விட்டாலும்.... உள்ளே பூச்சற்ற வெண்மை தாலாட்ட வேண்டும். முகத்துக்கும் தலைக்கும் பூசும் பூச்சு நிம்மதி தரும் என்றால்... மனதுக்கு பூசும் பூச்சு நிம்மதி எடுக்கும். பொறுமைக்கு அருஞ்சொற்பொருள் மூத்த மனிதனின் முகக்கனிவென்றே இருக்கட்டும். குற்றம் கண்டு கொண்டே இருக்க சுற்றம் இருப்பது இருக்கட்டும்... உற்றதே விலகத் தொடங்கும். மரணத்துக்கு பயந்தவர் மற்றவருக்கு இரங்குவதில்லை. தன்னைப் பற்றியே சிந்திக்கும் சீக்கு முதுமைக்கு அழகல்ல. தன்னியல்பின் நிழலாக அசையும் ஆறு போல இருந்தால்... வேறு என்ன வேண்டும். விதி விட்ட வழி என்றெல்லாம் ஒன்றுமில்லை. வீட்டுக்கே வெளிச்சமாகும் வல்லமை வயதாவதற்கு உண்டல்லவா. கிடந்து தவித்தல் கடிந்து கொண்டே இருத்தல். எழுந்து பறக்க... கடினப்பட்ட கவசத்துக்கு ஆகாது. பழம் போல இருக்க வேண்டும்... வயதான மனது. விழுந்து சிதறினாலும்... பல உயிர்களுக்கு உணவாக வேண்டும். முடங்கிக் கொண்ட மூச்சில் விஷம் ஏறுவது இயல்பு. மூர்க்கம் கொண்ட மனதில் சர்ப்பம் ஊர்வது இயல்பினும் இயல்பு. உணர்வினில் இருக்க... சில இயல்புகளை தகர்ப்பது காலத் தேவை. பூக்களின் குதூகலத்திற்கு பழகிய மனதில் உடல் ஒரு சாது. வீதியில் இருக்கும் வேப்ப மர பூவையும் ரசிக்க பழகு. செய்தித்தாளில் சிக்கி சீரழியாமல் இருக்க மாற்று வழிகள் நிறைய உண்டு... மதகத ராசாக்களே. வேடிக்கை பார்க்கும் கண்களில் வானம் பூமி யாவும் பேரழகு. வீடியோ பார்க்கும் கண்களில் தான் புரை விழுகிறது. மீசையை முறுக்கிக் கொண்டே கிடப்பது வெத்து. கொத்து சாவியை இடுப்பில் கொண்டே திரிவது வெத்திலும் வெத்து. வியாக்கியானத்தை விட்டொழிந்த கணத்தில் கவனிக்கலாம்... கனமற்ற கண்களில் சிறுபிள்ளை கோலி குண்டு சுழலும். நினைவுகளை அசை போடுதலில் இருக்கும் சுகம் கண்டு கொள்ளுங்கள். எதிர் வீட்டு மனிதர்க்கும் இரங்கும் குணம் வாழ்வின் அடிப்படை. பிடிவாதங்களில் இருந்து விடுபடும் போது ஒரு வாதமும் உடன் இருப்பதில்லை. முடக்கு வாதம் கால்களில் வருவதை விட மனதில் வருவது பேராபத்து. வயதாவதைப் போல துக்கம் இல்லை தான். ஆனால் வாழ்வின் போக்கில் அதை அப்படியே ஏற்க பழகுதலே அதைக் கொண்டு வெளிப்படும் தீவிரத்தை அடக்கும் வழி. இனம் புரியாத கோபங்களை தவிர்க்க... முளைத்த கொம்புகளை மடக்க முயற்சியுங்கள். தேவையில்லாத பதட்டங்களை அழகாய் அழிக்க மூத்தவனாகுதலே முறை. வழியை அடைத்துக் கொண்டு நிற்கையில் தான் கூட்டம். வழி விட்டு விட்டால்... ஆட்டம் பாட்டம் தான். அமைதிக்குள் செல்வது தான்... வயதாவது. மரணத்துக்குப் பழகுவது தான்... வயதாவது. மனிதர்களிடையே தெய்வமாகுதல் தான் வயதாவது. இப்படி நோக்கினால்... எப்படி வரும் மன நோவு. உடல் நோவுக்கும்கூட உடன் இருக்கும் அழுத்தம் தானே முதற் காரணம். மூடி இருக்கும் கைகளில் வியர்வை இருக்கும். திறந்து சிலுவையாகி விடுங்கள்.. சிள் காற்றில் சிலிர்க்கலாம். பேரன்பில் திளைக்கும் மனதுக்கு வயது ஆவதே இல்லை. பெரு வனமாய் ஆகும் சிந்தைக்கு சீக்கு எப்படி வரும். உடல் கடந்த உன்னதத்திற்கு பழக... வயதாவதைப் போல சிறந்த வண்ணம் ஏது. பிள்ளைகளிடம் இருக்கும் கண்டிப்பு அவர்கள் பிள்ளைகளிடம் ஏன் இல்லை தெரியுமா. அது தான் முதிர்ச்சி. தளர்ச்சி என்று எடுத்துக் கொள்வது பின்னடைவு. மலர்ச்சி என்று எடுத்துக் கொண்டால்... மரணமும் நிறைவு. மனம் விட்டு சிரியுங்கள். மற்றவர் சிரிக்க ரசியுங்கள். மாதுளை என இருக்கட்டும் உங்கள் மௌனம். தலை வாழையென கிடக்கட்டும் உங்கள் வாழ்வு. பூமியை முதுகில் சுமப்பதை விட்டு விட்டு... இதயத்தில் வானத்தை ஏற்போம். - கவிஜி https://keetru.com/index.php/2018-01-12-06-00-39/2014-03-08-04-42-57/2014-03-14-11-17-83/47000-2024-07-30-21-29-09
  35. ஆங்கில விக்கிப்பீடியாவில் உருவாக்கப்பட்ட தமிழ் இனப்படுகொலை பக்கத்தை அழிக்கும் முயற்சி முறியடிக்கப்பட்டது. இதற்கு சிங்களவரோடு சேர்ந்து ஒத்தூதியவர்களில் சிலர் தீவிர பாலஸ்தீன ஆதரவு முஸ்லிம்கள் என்பது குறிப்பிடத் தக்கது.
  36. --- கொல்கத்தா பெண் மருத்துவர் கொலை: கல்லூரி முதல்வர் ராஜினாமா; போலீஸுக்கு மம்தா ‘கெடு’.....! --- உ.பி: மருத்துவமனையில் வைத்து பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட செவிலியர்... மருத்துவர் உட்பட மூவர் கைது! இவைபோன்ற வன்புணர்வுக் கொலை செய்திகள் வரும் போதெல்லாம் உங்களின் கவிதை மனதில் தாக்கத்தை ஏற்படுத்துவது தவிர்க்க முடியாதது ..........! 😢

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.