Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Leaderboard

  1. தமிழ் சிறி

    கருத்துக்கள உறவுகள்
    7
    Points
    87990
    Posts
  2. suvy

    கருத்துக்கள உறவுகள்
    6
    Points
    33600
    Posts
  3. ரசோதரன்

    கருத்துக்கள உறவுகள்
    6
    Points
    3054
    Posts
  4. ஈழப்பிரியன்

    கருத்துக்கள உறவுகள்
    5
    Points
    20014
    Posts

Popular Content

Showing content with the highest reputation on 08/22/24 in Posts

  1. தற்பொழுது விசா வழங்கும் திட்டம் ஒரு நெருக்கடியில் இருக்கின்றது. விஎஃப்எஸ் நிறுவனத்தின் ஊடாக விசா வழங்கும் திட்டத்திற்கு இலங்கை நீதிமன்றம் தடைவிதித்து இருக்கின்றது. விஎஃப்எஸ் நிறுவனத்தின் மேலதிக சேவைக் கட்டணம் மற்றும் இதன் பின்னால் உள்ள முறைகேடுகள் சம்பந்தமாக சுமந்திரன், ராவூப் ஹக்கீம் மற்றும் இன்னொருவர் கொண்டு வந்த வழக்கை அடுத்தே இந்தத் தடை விதிக்கப்பட்டிருக்கின்றது. ஆனால், முன்னர் இருந்த மென்பொருளுக்கும் உடனேயே திரும்பிப் போக முடியாதுள்ளதாக அரசாங்கம் தெரிவித்துள்ளது. கணனிகள் மற்றும் சிஸ்டம் எல்லாமே மாறி விட்டன என்றதொரு விளக்கத்தை கொடுத்திருக்கின்றார்கள். இதற்காகக் கூட இந்த ஆறு மாத திட்டத்தை இவர்கள் கொண்டு வந்திருக்கக்கூடும். விஎஃப்எஸ் உள்ளே வந்தவுடன் பயணிகளின் எண்ணிக்கையில் ஒரு வீழ்ச்சி காணப்பட்டது. ஆனாலும் விஎஃப்எஸ் அந்த வீழ்ச்சி தங்களின் சேவையால் ஏற்பட்டதல்ல என்று சொன்னார்கள். பயண முகவர்களும், நிறுவனங்களும் அதிகரித்த விசா கட்டணத்திற்கு எதிர்ப்பு தெரிவித்துக் கொண்டிருந்தார்கள். விசா கட்டணம் இல்லாமல், அல்லது மிகக் குறைந்த கட்டணத்துடன், மிக முக்கியமாக இலகுவாக்கப்பட்ட ஒரு நடைமுறையின் மூலம் அதிகளவிலான பயணிகளை கவர முடியும் என்பதே இந்தத் துறையில் பல நாடுகள் பெற்றுக் கொண்ட அனுபவம். தாய்லாந்து வருடம் இருபது மில்லியன் பயணிகளை பெற்றுக் கொண்டிருக்கின்றது, இலங்கையோ இரண்டு மில்லியன் பயணிகளை பெற்றுக் கொள்ளவே தள்ளாடிக் கொண்டிருக்கின்றது. வருடம் இரண்டு மில்லியன் பயணிகள் என்பது நான்கு மில்லியன் பயணிகள் என்றாகினால் கூட இலங்கை குறுகிய காலத்தில் மீண்டு வந்துவிடலாம்.
  2. இது முற்றிலும் ஏற்றுக்கொள்ளக்கூடிய கருத்து. அனால் இதில் புலம்பெயர்ஸ் செய்யும் அரசியல் என்பது புலத்திற்கு மனிதாபிமான உதவிகளைச்செய்வதும், லாபியிங் செய்து மூக்குடைபடுவதும், யாழில் பக்கம்பக்கமாக எழுதித்தள்ளுவதுமே. உண்மையில் இது மட்டுமே அவர்களால் செய்யக்கூடியதும். ஆனால் இந்த மண்குதிரைகளை எப்போது புலத்துத்தமிழர்கள் நம்பத்தலைப்பட்டார்கள் என்றால் அது புலிகளின் காலத்தில், உண்மையிலே ஒன்றுக்கும் உதவாத கூத்தாடி மண்குதிரைகள் புலிகளின் பக்கபலத்துடன் பெரும் விசையுடன் மக்களுக்கு முன்னாள் நிறுத்தப்பட்டார்கள். இவர்கள் புலிகளின் அரசியல் முகம் என்பதால் மக்களும் இவர்களை ஏற்றுக்கொள்ள இந்த கூத்தடிகளோ தங்களது உண்மையான விசை எது என்பதை அறியாமல் தங்களை பெரிய வீரர்களாகவும் மக்களோ இவர்களை ஏக அரசியல் பிரதிநிதிகளாகவும் வரித்துக்கொள்ள மண்குதிரைகளெல்லாம் பொன்குதிரைகளாயின. என்று விடுதலைப்புலிகள் ஈழத்தமிழர்கள் வரலாற்றிலிருந்து அழிக்கப்பட்டார்களோ அன்றிலிருந்து கூத்தாடிகளின் மாயவிம்பம் கலையத்தொடங்கியது. கூத்தாடிகளுக்கு தலைவர்கள் தரப்பட்டார்கள். கூத்தாடிகளின் பொறுப்பு ஒரு விற்பனை பிரதிநிதியின்(சேல்ஸ் Rep) இன் வேலை, ஆயிரம் பொய்யை சொல்லியாவது தரப்பட்ட தலைவரை ஈழத்தமிழர்களின் தலையில் கட்டிவிடுவது. அதை அவர்களும் சரிவர செய்தார்கள். ஈழத்தமிழர்களும் கூத்தாடிகளை பற்றிக்கொண்டிருந்த மாயவிம்பத்தை கைவிடத்துணியவில்லை. விழைவு கூத்தாடி மண்குதிரைகளை நம்பி இனப்படுகொலை பங்கில் எந்தவிதத்திலும் சளைக்காத பொன்சேகாவிற்கு பெருவாரியாக வாக்களித்து மகிழ்ந்தனர். அதாவது சர்வதேசத்தின் இந்த சோதனை முயற்சியில் ஈழத்தமிழர் சர்வதேசத்திற்கு சொல்லிய செய்தி நாங்கள் ஒரு சிறப்பான எடுப்பார்க்கைப்பிள்ளைகள்என்பதே. இன்று மண்குதிரைகளை நினைத்து அங்கலாய்க்கும் நாம் அன்று இறுதிப்போரில் இந்தியாவில் குப்புறப்படுத்துக்கொண்டிருந்துவிட்டு எல்லாம் முடிந்ததும் எமக்கு தீர்வு எடுத்து தருவதற்கு திரும்ப களத்திற்கு வந்த கூத்தாடி குதிரைகளை செருப்புத்தேய தேய கும்மியெடுத்திருந்தால் குறைந்தபட்சம் இந்த அரசியல் வெறுமையையாவது தடுத்திருக்கலாம். ஆனால் இந்த முடிவுகளை எல்லாம் ஈழத்தமிழர்களே எடுத்திருந்தினர். அறிவிலிகள், மடையர்கள் தான் ஒருவனால் ஒன்று முடியாது என்று தெரிந்துகொண்டே அதனை அவனிடம் கொடுத்து விட்டு அவன் அதை சரிவர செய்வான் என்று தொடர்ந்து எதிர்பார்ப்பார்கள் என்பது எனது கருத்து. என்னைப்பொறுத்தவகையில் ஈழத்தமிழர்கள் இந்த இரண்டுபதங்களாலும் அழைக்கப்பட சகலவகையிலும் பொருத்தமானவர்கள்
  3. ஊர்த் தாய்க்கு ஒரு கடிதம்! ************************* உயிருக்கு பயந்து ஒழித்தோடிப்போனவர்கள் என்று கேலி செய்கிறார்கள் அம்மா… அன்று நீதானே சொன்னாய் ஓடித்தப்பு பின் ஊர்களைக் காப்பாற்றவேண்டுமென்று. அதனால்.. வெளிநாடொன்றில் தஞ்சம் புகுந்து விட்டோம். எங்களை.. ஏற்றுக்கொள்ள எத்தனை கேள்விகள் எத்தனை விசாரணைகள் எத்தனை இழுத்தடிப்புகள் இப்படியே எத்தனை வருடங்கள் காத்துக்கிடந்தோம். அகதியென்ற பெயருடனும் கையில்.. அன்னத் தட்டுடனும் அவர்களின் முகாங்களில் அலைந்தபோது கூட எங்கள் துன்பங்களை உனக்கு சொல்ல நாம் விரும்பியதேயில்லைத் தாயே! விடிவு தேடும் உனது துன்பத்தை விட இது சிறியதென்பதால். நாங்கள்.. தாங்கியே வாழப் பழகினோம். வேறொரு மொழி, வேறொரு கலாச்சாரம், வேற்று மனிதர்கள் விபரம் தெரியாத நாம். அரசுகள் எங்களை ஏற்றுக்கொண்டபோதிலும் இங்கு சிலர் எங்களை வேற்ரு கிரக மனிதர்களாகவே பார்த்தார்கள். இப்படி இருந்தும் எங்களின் உழைப்பின் ஒருபகுதியை உனக்கு அனுப்பியே அங்குள்ளேரை வாழவைத்தாயென்பதை அவர்களுக்கு ஞாபகப் படுத்து தாயே! அனால் இன்றோ எங்களின் உழைப்பு பொய் களவில்லா எங்களின் வாழ்க்கை முறை மொழியின் தேர்ச்சி குழந்தைகளின் கல்வியின் உயற்சி பலதையும் பார்த்து மனிதநேயத்துடன் தங்களின் குழந்தைகளாக எங்களை பார்கிறார்கள். தாயா?தத்தெடுத்த தாயா? என்ற குளம்பம் எங்களை இப்போது வாட்டுகிறது. இருந்தாலும்- எம் உயிர் போகும் நிலை வந்தாலும் உன்னை மறக்கமுடியுமா? அம்மா.. எங்கள் பிள்ளைகளுக்கு பேரப் பிள்ளைகளுக்கு பூட்டப் பிள்லைகளுக்கு உன்னைத்தான் பேர்த்தி,பாட்டி பூட்டியென சொல்லி வளர்கிறோம் தாயே! ஒருகாலம் நாங்கள் வரும்போது-இது எனது பிள்ளைகள், எனது பேரப்பிள்ளைகள் எனது பூட்டப் பிள்ளைகளென்று “அங்கிருப்போர்க்கு” சொல்லிவை தாயே அது போதும் எங்களுக்கு! அன்புடன் -பசுவூர்க்கோபி.
  4. ரகு தாத்தா - சுப.சோமசுந்தரம் 1981 ஆம் ஆண்டு வெளிவந்த 'இன்று போய் நாளை வா' திரைப்படத்தில், "ஏக் காங்வ் மே ஏக் கிஸான் ரஹ்தா தா" என்ற இந்தி வாக்கியத்தைப் படிக்கும் தமிழ் மாணவன் "ரஹ்தா தா" என்பதை "ரகு தாத்தா" என மீண்டும் மீண்டும் சொல்வதை நகைச்சுவையாகப் படம் ஆக்கியிருந்தார்கள். இன்று வரை அந்த நகைச்சுவை தமிழ்நாட்டு மக்கள் மனதில் பதிந்திருப்பது இம்மண்ணில் அவ்வப்போது ஒன்றிய அரசின் இந்தித் திணிப்புக்கு எதிரான சவுக்கடிக்கான ஒரு குறியீடு என்று கூறுவது மிகையாகாது. எனவே 1960களில் இந்தி எதிர்ப்புப் போராட்டங்கள் தமிழ்நாட்டில் முழுவீச்சில் நடைபெற்ற பின்னணியில் பின்னப்பட்ட கதையை வைத்து இப்போது எடுக்கப்பட்ட ஒரு படத்திற்கு 'ரகு தாத்தா' எனப் பெயரிட்டது பொருத்தமான ஒன்றே ! இப்படம் பற்றிய விமர்சனங்கள் பல பத்திரிகைகளிலும் அவரவர் கோணத்தில் வெளிவந்த பிறகு என் பங்கிற்கு ஒரு முழுமையான விமர்சனம் அளிப்பது இந்த என் எழுத்தின் நோக்கமல்ல. பெரும்பாலான அவர்களிடமிருந்து நான் சற்று மாறுபடும் இடங்களையே சுட்ட எண்ணம். கிராமியச் சூழலில் ஒரு கட்டுப்பெட்டியான சமூகத்தில் வளர்ந்திருந்தாலும் நாயகி ஒரு முற்போக்குச் சிந்தனையாளராக அறிஞர் அண்ணா, தந்தை பெரியார் அவர்களின் தாக்கத்தினால் இந்தி எதிர்ப்பு, பெண்ணியம் பேசும் புதுமைப் பெண்ணாகச் சித்தரிக்கப்படுகிறார். அத்தனை விஷயங்களிலும் அவருக்கு உறுதுணையாய்த் தோளொடு தோள் நிற்கும் தோழனாய் விளங்குபவர் அவருடைய தாத்தா. படத்தின் 'ரகு தாத்தா' அவரே ! அறுபதுகளில் வளர்ந்த என் போன்றோருக்கு இவை வெகு இயல்பாகத் தோன்றுகின்றன. திராவிட இயக்கச் சிந்தனை பலரிடம் தாக்கத்தை ஏற்படுத்தியதைக் கண்கூடாகக் கண்டவர்கள் நாங்கள். இடதுசாரி சிந்தனையைப் போலவே அது ஒரு நல்ல அரசியலாக அமைந்தது. எனவே பொதுவாக இக்கால இளைய சமுதாயத்திடம் நல்ல கொள்கை அரசியலும், திரைப்படம் போன்ற கலைகளில் நல்ல ரசனையும் இல்லாமல் போனதே என்று புலம்பும் தலைமுறையும் நாங்களே ! தலைமுறை இடைவெளி என்பது நியூட்டனின் நான்காவது விதியாக அமையலாமோ ! நிற்க. நாம் கையில் எடுத்துள்ள இப்படத்தின் நாயகி வங்கியில் பணிக்குச் செல்கிறார்; சொல்லிலும் செயலிலும் மட்டுமல்ல, எழுத்திலும் தம் முற்போக்கு சிந்தனைகளைப் பதிய வைக்கும் எழுத்தாளராய்த் திகழ்கிறார். பத்திரிகைகளில் தாம் எழுதும் சிறுகதைகளில் புதுமைப் பெண்களைப் படைக்கிறார். பெண் எழுதுவதைச் சமூகம் பெரிதும் வரவேற்காத காலகட்டத்தில், கயல்விழிப் பாண்டியன் எனும் தம் பெயரைக் க.பாண்டியன் எனும் ஆண் பெயரில் எழுத்துலகில் பதிவு செய்கிறார். அவரைத் திருமணம் செய்யும் நோக்கில் முற்போக்காளனாய் வேடமிட்ட ஒரு பிற்போக்குவாதியிடம் மனதளவில் ஏமாந்து பின் எவ்வாறு தப்பிக்கிறார் என்பதை ஒரு நல்ல நகைச்சுவைச் சித்திரமாக்கி இருக்கிறது படக்குழு. "முற்போக்குக் கருத்துகளை நகைச்சுவை இழையோடும் கதையம்சத்தோடு வழங்கியதால், கருத்துகள் நீர்த்துப்போய் ஆழமான தாக்கத்தை ஏற்படுத்தவில்லை; காமெடி படம் பண்ணலாமா அல்லது கருத்துப்படமாக ஆக்கலாமா என்ற குழப்பத்தில் விளைந்ததாகத் தெரிகிறது" என்ற விமர்சனம் சிலரால் வைக்கப்பட்டுள்ளது. இப்பார்வையில் முற்றிலும் முரண்படுகிறேன் நான். நகைச்சுவையுணர்வு என்பது சான்றாண்மைக்கான அறிகுறி என்பது சர். சார்லி சாப்ளின் போன்றோர் ஏற்கனவே உலகிற்கு எடுத்துக் காட்டிய ஒன்று. அவ்வகையில் இப்படம் தனது உயரிய நோக்கத்தை எந்த குழப்பமும் இன்றித் தெளிவாக வெளிக்கொணர்வதில் வெற்றி பெறுகிறது. கொள்கைகளை மட்டும் பேசினால் இது வெறுமனே ஒரு ஆவணப்படமாக முடிந்திருக்க வாய்ப்புள்ளது. எந்த ஒரு கொள்கையும் தொடக்கத்தில் கசப்பு மருந்தாகவே பெரும்பான்மை மக்கள் சமூகத்தால் பார்க்கப்படும். எனவே அருமையான திட்டமிடல், படமாக்கல் மூலமாக மருந்தைத் தேனில் குழைத்துத் தந்துள்ளது இயக்குநரின் அபார சாதனை. நாயகியான கீர்த்தி சுரேஷ் முகபாவனையிலும் கண்ணசைவிலும் நவரச நாயகியாக மிளிர்கிறார். 'நடிகையர் திலகம்' திரைப்படத்தில் சாவித்திரி அவர்களை நம் கண் முன் நிறுத்திய கீர்த்தி சுரேஷ் 'ரகு தாத்தா' திரைப்படத்தில் தாமும் ஒரு நடிகையர் திலகம் என்பதை நிரூபிக்கிறார். கீர்த்தி சுரேஷ் அளவிற்கு நடிக்கும் வாய்ப்பை இப்படம் தராவிட்டாலும், தமக்கு அளிக்கப்பட்ட பங்கினில் அப்பேத்திக்குத் தாத்தாவாகத் திறம்பட ஈடு கொடுக்கிறார் எம்.எஸ்.பாஸ்கர். இவர்கள் இருவர் தவிரவும் ஏனைய கதாபாத்திரங்களும் தத்தம் பொறுப்பினைச் செவ்வனே நிறைவேற்றுவது, குறித்து நோக்கத்தக்கது. தக்கோரைத் தேர்வு செய்து குறைந்த முதலீட்டில் படத்திற்கான கதை, உரையாடல் எழுதி இயக்கிய சுமன் குமார் பெரும் பாராட்டுக்குரியவர். பன்முகத்தன்மை படைத்த சுமன் குமாருக்குத் தமிழில் இந்த முதல் முயற்சியே சிறப்பாய் அமைந்துள்ளது. மற்றபடி காட்சி அமைப்பு, ஒளிப்பதிவு அனைத்தும் கிராமியச் சூழலிலும், ஆங்கமைந்த அலுவலகப் பின்னணியிலும் அறுபதுகளின் நெல்லை, தென்காசி, நாகர்கோவிலுக்கு நம்மை இயல்பாய் அழைத்துச் செல்கின்றன. பின்னணி இசை பற்றி எழுத, அத்துறையில் அடியேன் ஒரு ஞான சூனியம் என்பதை சொல்லித்தான் ஆகவேண்டும். மேலும் படத்தில் லயித்துவிட்டால் பின்னணி இசை என்று ஒன்று இருப்பதே தெரியாத பாமரர்களில் ஒருவன் நான். அவ்வப்போது நாடகத் தன்மை, சினிமாத்தனம், காற்றோடு பறக்கும் லாஜிக் இவை இல்லாமல் இல்லை. இந்த அம்சங்கள் நிறைந்த முன்னணி நடிகர்களின் மசாலா படங்களுக்கு நூறு கோடிக்கு மேல் நாம் அள்ளித் தராமல் விடுவதில்லையே ! மேலும் பொய்யுரை, உயர்வு நவிற்சி, இல் பொருள் உவமை அனைத்தும் நிரம்பிய இலக்கிய மரபுகளுக்குச் சொந்தக்காரர்கள்தாமே நாம் ! எனவே சுவை கூட்டுவதாய் இக்குறைகளைப் புறந்தள்ளலாம். கொள்கைப் பரப்புரை எனும் மருந்தில் கலந்த தேனாய்க் கொள்ளலாம். இத்துணை எழுதியாயிற்று. திருவாளர் வெகுசனத்தை இப்படம் எவ்வளவு சென்றடைந்திருக்கும் என்று பார்ப்போமா ? வியாழனன்று (15-08-2024) வெளியான படத்தை நான் திங்கட்கிழமை பார்த்தேன். கூட்டம் சுமாருக்கும் குறைவுதான். சிறிய பட்ஜெட்டில் தயாரித்த படம் என்பதால் விளம்பரம் பெரிதாக இல்லை என்பது முதற் காரணமாக இருக்கலாம். சொல்லிக் கொள்ளும் அளவில் தமிழ்ப் படங்கள் வெளிவராத ஒரு இடைவெளிக் காலத்தை விட்டுவிட்டு தங்கலான், டிமான்டி காலனி போன்ற பெரிய பட்ஜெட் படங்களுடன் சேர்த்து வெளியிட்டது இன்னொரு காரணமாக இருக்கலாம். இன்னும் ஓரிரு நாட்களில் பெரும் வெற்றியடையப் போகும், வெற்றியடைய வேண்டிய மாரி செல்வராஜ் அவர்களின் 'வாழை' திரைப்படம் திரையரங்குகளை நிறைக்கப் போகும் நேரம். இத்தகைய காலகட்டத்தில் வெளியிட 'ரகு தாத்தா' படக்குழுவினருக்கு என்ன கால நெருக்கடியோ ! ஆனாலும் பெரியாரையும் அண்ணாவையும் முன்னிறுத்திய ஒரு திரைப்படத்தைத் திராவிட இயக்கத்தினரே பெரிய அளவில் கண்டு கொள்ளாமல் போனதன் காரணமென்ன ? கொள்கைகளைக் காமெடியுடன் கலந்து விட்டதனாலா ? ஏற்கனவே குறிப்பிட்டது போல், ஆவணப்படமாக வந்திருந்தால் இரண்டே நாட்களில் அரங்கத்தை விட்டே படம் ஓடி இருக்குமே ! அண்ணாவையும் பெரியாரையும் ஊறுகாய் போல் தொட்டுக்கொண்டு வணிகம் செய்கிறார்கள் என்ற கோபமா ? வணிகம் ஆகவே இருக்கட்டுமே ! அப்படியாவது நம் தலைவர்கள் மேலும் சிலரைச் சென்றடையட்டுமே ! அல்லது இயக்கத்திற்குத் தொடர்பே இல்லாதவர்கள் நம் கொள்கைகளைப் பேசுவதை நாம் வரவேற்பதில்லையா ? அண்ணாவும் பெரியாரும் திராவிட இயக்கத்திற்கு மட்டுமே உரியவர்களா ? கார்ல் மார்க்ஸ் கம்யூனிஸ்ட் கட்சியினருக்கு மட்டுமே உரியவரா, என்ன ? எது எப்படியோ இப்படத்தைப் பெரிய அளவில் கண்டு கொள்ளாமல் விட்டது திராவிட இயக்கத்தினரின் தவறே ! இனி OTT தளத்தில் வெளியாகி படம் பலரைச் சென்றடையும் என்று நம்புவோம். அண்ணாவையும் பெரியாரையும் வாசித்து, கேட்டு வளர்ந்த ஒருவன் அப்படித்தான் ஆசைப்பட முடியும். இது போன்ற படங்கள் தோல்வியுற்றால், சிறிது சிறிதாகத் தமிழ்ச் சமூகம் தோற்றுப் போகுமோ என்று இனம் புரியாத, 'இனம்' புரிந்த பயம் தொற்றிக் கொள்கிறது. https://www.facebook.com/share/p/t54RmctDGCko3Thm/?mibextid=oFDknk
  5. கிணற்றடியில் குளித்து கொண்டு நின்றவனுக்கு ,தம்பி குளிக்கும் பொழுது அந்த தேசிக்காய் மரத்துக்கு வாய்க்கால் தண்ணியை வெட்டிவிடு என தந்தை சொன்ன ஞாபகம் வரவே ஒடிப்போய் மண்வெட்டியை கொண்டு வந்து தண்ணியை திருப்பிவிட்டான். காலில் சேறு அதிகமாக படிந்துவிடவே கிணற்று படியில் தேய்த்து கழுவிவிட்டு மீண்டும் குளிக்க தொடங்கினான்.. "நீ உன்னை அறிந்தால் நீ உன்னை " என்ற பாடலை பாடியபடி வாளியை கிணற்றினுள் இறக்கினான் ,தொம் என கீழே விழுந்தது வாளியினுள் தண்ணீர் நிறைந்தவுடன் " உன்னிடம் மயங்குகிறேன்" என்ற அடுத்த பாடலை பாடியபடி இழுக்க தொடங்கினான் ,பக்கத்து வீட்டு வளவில் இருந்த கிணற்றடியிலிருந்து கண்ணா ஆரிடம் மயங்கிறாய் என்ற குரல் கேட்க வெட்கத்தில் "இல்லை அண்ரி சும்மா ரேடியோவில் போகின்றது அதை நான் பாடுகிறேன்." "உனக்கு நல்ல குரல் பாடிப்பழகு 'பாட்டுக்கு பாட்டு' போட்டியில் பாடலாம் வீரசிங்கம் மண்டபத்தில் வைக்க போயினமாம் அடுத்த மாசம்" " சும்மா பகிடி விடாமல் போங்கோ எனக்கு கிணற்றடியில் பாட்டு பாடத்தான் முடியும் நாலு பேருக்கு முன்னால் பேசவே மாட்டேன்" ".."இந்த கதியாலில‌ குமுதமும், ஆனந்த விகடனும் வைச்சிருக்கிறன் அக்காட்ட கொடுத்திட்டு வேறு புத்தகம் வாங்கி கொண்டு வைச்சுவிடு நான் குளிச்சிட்டு வந்து எடுக்கிறன்" கிணற்றுக்கட்டில் வைத்திருந்த துவாய்யை எடுத்தவனுக்கு கடந்த முறை முசுறு கடித்த ஞாபகம் வரவே இரண்டு மூன்று தடவை நன்றாக உதறிவிட்டு உடம்பை துடைத்தபின்பு தூவாயினால் உடம்பை சுற்றியபடியே சாரத்தை கழற்றி நன்றாக பிளிந்து கொடியில் காயப்போட்டுவிட்டு ,கதியாலில் வைத்திருந்த புத்தகத்தை எடுத்தான் . புத்தகத்தை புரட்டி பார்த்தபடியே சென்று அக்காவிடம் கொடுத்து விட்டு வேறு புத்தகம் இருந்தால் அண்ரி வாங்கி கொண்டு வரசொன்னவர் ,என்றான் .அந்த மேசையில் இரண்டு புத்தகம் இருக்கு கொண்டு போய் கொடு என்றாள் தமக்கை. புத்தகத்தை எடுத்து பார்த்துகொண்டு போனவனுக்கு அதிலிருந்த காட்சி அவனை அந்த கதையை வாசிக்க தூண்டிவிட்டது பெண் குளியலறையில் குளிப்பது போன்ற ஒர் ஒவியம், வழமையாக சிறு நகைச்சுவைகளை படிப்பவனுக்கு அன்று அந்த காட்சி கதையை முழுமையாக படிக்க தூண்டிவிட்டது என்று சொல்வதை விட காட்சி எப்படி விபரித்திருக்கிறார்கள் என்று அறிய ஆவலாய் வாசிக்க தொடங்கினான் .இரண்டு பக்க சிறுகதையில் ஒரே ஒரு வரி மட்டும் அந்த காட்சி விபரித்திருந்தது ... விலகி இருப்பது போன்ற‌ ...இன்று யூ டியுப் தலையங்கங்களும் தங்களது வருமானத்திற்காக தலையங்களை கவர்ச்சியாக போடுகின்றனர் ... யாழ்கள புத்தனும் விதிவிலக்கல்ல‌
  6. இலங்கை தேசிய உதைபந்தாட்ட அணியில் மன்னார் புனித சவேரியார் ஆண்கள் தேசிய பாடசாலை மாணவன் இணைத்துக் கொள்ளப்பட்டுள்ளார். மன்னார் புனித சவேரியார் ஆண்கள் தேசிய பாடசாலை மாணவன் செல்வன் கிதுஷன் 17 வயதுக்குட்பட்ட உதைபந்தாட்ட அணியில் இவ்வாறு இணைத்துக் கொள்ளப் பட்டுள்ளார். பல வீரர்களை தேசிய அணிக்கு மன்னாரிலிருந்து அனுப்பிய புனித சவேரியார் தேசிய பாடசாலை மீண்டும் ஒரு வீரரை 17 வயதுக்குட்பட்ட தேசிய அணிக்கு அனுப்பியுள்ளது. . மன்னார் புனித. சவேரியார் ஆண்கள் கல்லூரியில் இருந்து பல மாணவர்கள் இலங்கை தேசிய மட்ட உதைப்பந்தாட்ட குழுவினுள் இணைக்கப் பட்டுள்ள நிலையில், இந்த பாடசாலையின் 7 வது மாணவனாக செல்வன் கிதுஷன் இணைக்கப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. https://thinakkural.lk/article/308237
  7. இந்த கொடியின் நிறங்கள் விடுதலைப் புலிகளின் கொடி போலவே உள்ளன.
  8. பெட்டியையும்... சேர்த்து, சாப்பிட்டு விடுவோம் என நினைத்து விட்டார்கள் போலுள்ளது. 😂
  9. யாருக்கு வாக்களிப்பது என்று, வீட்டுக்குள் அடிபிடி. 😂
  10. ஐக்கிய இராச்சியம் (இங்கிலாந்து), அமெரிக்கா (அமெரிக்கா), கனடா, ஜேர்மனி, அவுஸ்திரேலியா, சவூதி அரேபியா, சீனா, இந்தியா, ரஷ்யா, உட்பட 35 நாடுகளின் பிரஜைகள் இலங்கைக்கு வீசா இன்றி பிரவேசிப்பதற்கு அனுமதி வழங்க அமைச்சரவை தீர்மானித்துள்ளது. தென் கொரியா, மற்றும் ஜப்பான். இந்த புதிய விசா இல்லாத கொள்கை அக்டோபர் 01, 2024 முதல் நடைமுறைக்கு வரும், மேலும் இது ஆறு மாத காலத்திற்கு அமலில் இருக்கும். List of countries to be offered visa-free access to Sri Lanka: 1. United Kingdom 2. Germany 3. Netherlands 4. Belgium 5. Spain 6. Australia 7. Denmark 8. Poland 9. Kazakhstan 10. Saudi Arabia 11. UAE 12. Nepal 13. China 14. India 15. Indonesia 16. Russia 17. Thailand 18. Malaysia 19. Japan 20. France 21. United States 22. Canada 23. Czech Republic 24. Italy 25. Switzerland 26. Austria 27. Israel 28. Belarus 29. Iran 30. Sweden 31. South Korea 32. Qatar 33. Oman 34. Bahrain 35. New Zealand https://adaderana.lk/news.php?nid=101403
  11. சந்தோஷ் நாராயணன் நான் யழ்களத்தில் அறிந்தது மகள் பாடிய பாட்டு வந்தது பார்த்திருக்கிறேன். தமனா யாழ்பாணம் வருவதற்கு முதல் சந்தோஷ் நாராயணன் வந்து நிகழ்ச்சி நடத்தியவர் எனக்கு லிஸ்ட் தந்த உறவு அனிருத் சந்தோஷ் நாராயணனை அங்கீகரிக்கவில்லை என்று நினைக்கின்றேன்😄 விளங்கியது 🤣
  12. Month 2023 2024 % Cha. 2024/23 January 102,545 208,253 103.08 February 107,639 218,350 102.09 March 125,495 209,181 66.68 April 105,498 148,867 41.10 May 83,309 112,128 34.60 June 100,388 113,470 13.0 July 143,039 187,810 31.30 August 136,405 September 111,938 October 109,199 November 151,496 December 210,352 Total 1,487,303 1,198,059 https://www.sltda.gov.lk/en/monthly-tourist-arrivals-reports 2023 ஜவிட 2024 இல் கூடுதலானவர்கள் போயிருக்கிறார்கள். இந்த தொகையில் அரைவாசி நம்மவர்களாக இருக்கும்.
  13. நாங்கள் அவரை இரண்டு பக்கங்களுக்கும் இழுத்துக் கொண்டிருக்கின்ற இழுப்பில், அவரே விசா இல்லாமல் எந்த நாட்டிற்கு ஓடித் தப்பலாம் என்று யோசித்துக் கொண்டு இருக்கிறாரோ தெரியவில்லை.............🤣.
  14. 1993 , 1994 க‌ளில் யாழ்ப்பாண‌த்து அண்ணா மார்க‌ளின் விளையாட்டை பார்க்க‌னும்.....................மெஸ்சிய‌ மாதிரி ப‌ந்தை ந‌க‌ர்த்திட்டு போய் கோல் அடிப்பார்.....................1995 யாழ்ப்பாண‌ இட‌ம்பெய‌ர்து போன‌தோட‌ அவ‌ர்க‌ளின் விளையாட்டை பார்க்க‌ முடியாம‌ போச்சு அப்ப‌ நான் சின்ன‌ன் அவேன்ட‌ விளையாட்டை பார்க்க‌ விருப்ப‌ம் இடை சுக‌ம் விளையாட்டை போய் பாப்பேன் உண்மை தான் இல‌ங்கை தேசிய‌ அணி ப‌ல‌மான‌ அணி கிடையாது இந்தியா இல‌ங்கை ஒரு போதும் உல‌க‌ கோப்பை கால்ப‌ந்துக்கு தெரிவாக‌ மாட்டின‌ம் ஆசியாவில் ஜ‌ப்பான் சவுத் கொரேயா ஈரான் இந்த‌ மூன்று நாடும் ப‌ல‌மான‌ நாடுக‌ள் இவ‌ர்க‌ள் ஒவ்வொரு உல‌க‌ கோப்பையிலும் க‌ல‌ந்து கொள்ளுவின‌ம் 2018 உல‌க‌ கோப்பையில் ச‌வுத் கொரெயா ஜேர்ம‌ன‌ 2-0 என‌ வென்ற‌து...................... ஜ‌ப்பான் ம‌க‌ளிரும் கால் ப‌ந்து விளையாட்டில் ஆதிக்க‌ம் கூட‌ அமெரிக்கா ம‌க‌ளிர் கால்ப‌ந்தில் அவ‌ தான் கிங்🙏🥰.....................
  15. பையன் சார், அது ஒரு காலம். நான் அங்கே சில வருடங்கள் விளையாடியிருக்கின்றேன். தமிழர்களும், இஸ்லாமியர்களும் அன்று பெருமளவில் அணிகளில் இருந்தார்கள். என்னுடன் மன்னார் மாவட்டத்தைச் சேர்ந்த ஒரு இஸ்லாமிய நண்பனும் அணியில் இருந்தான். ஆனால் இன்று நிலைமை அப்படியில்லை. தமிழர்கள் விளையாடுவது மிகவும் குறைவு. எவர் விளையாடினாலும், விளையாடாவிட்டாலும், இலங்கை கால்பந்தாட்ட அணி ஒரு பலமான அணி கிடையாது. ஆனாலும் சமீப போட்டி ஒன்றில் இலங்கை இந்தியாவை வென்றதை செய்திகளில் பார்த்திருந்தேன்.
  16. பையா... 200 ரூபாய் உடன் பிறப்புகள் இந்த 100 ரூபாய் காசை, எப்படி 10,000 ரூபாய்க்கு வாங்குவார்கள் என்று தெரியவில்லையே. 😂
  17. அன்றைய மக்கள் திலகத்தின் பிசிறில்லாத பேச்சு ........! 👍
  18. ஆக, கூத்தமைப்பு உடை பட்டதற்கும்... நரியன் ரணில் காரணமாகி விட்டார்.
  19. ஆக மொத்தத்தில் நடக்காத தேர்தல் ஒன்றால், கூத்தமைப்பு உடைந்து போய் விட்டது! அக்னி இன்னொரு திரியில் இவர்களைப் பற்றி எழுதியது 100% சரி!
  20. சிந்துநதியின் மிசை நிலவினிலே ..........! 😍
  21. இலங்கையில் இதுவரை ஆண்ட அரசுகளே இந்தநிலைக்கு காரணம் என்கிறார்கள்.நீங்கள் வெறும் மகிந்த மேல் பழியைப் போட்டு மற்றவர்களை தப்பிக்க வைக்கிறீர்கள். அப்போ மகிந்த வராமல் ரணில் சயித் அனுரா யாராவது ஒருத்தர் வந்தால் உங்களுக்கு சந்தோசமே. பொதுவேட்பாளரை எதிர்க்க ஏதோ காரணம் என்று நினைத்துவிட்டேன்.
  22. Published By: DIGITAL DESK 3 20 AUG, 2024 | 01:18 PM விமான நிலையத்தில் கத்தரிக்கோல் ஒன்று காணாமல் போனதால் விமானங்கள் இரத்து செய்யப்பட்ட சம்பவம் ஒன்று ஜப்பானில் இடம்பெற்றுள்ளது. கடந்த சனிக்கிழமை (17) ஜப்பானில் கொக்கைடோவின் நியூ சிட்டோஸ் விமான நிலையத்தின் உள் நுழையும் வாயிலின் அருகே இருந்த கடையொன்றில் கத்தரிக்கோல் காணாமல் போனதால் 36 விமானங்கள் இரத்து செய்யப்பட்டதோடு, 201 விமான சேவைகள் தாமதமடைந்துள்ளன. விமான நிலையத்தின் உள்நாட்டு முனையத்தில் பாதுகாப்பு சோதனை நடவடிக்கைகளுக்காக சனிக்கிழமை (18) காலை சுமார் இரண்டு மணி நேரம் ஸ்தம்பித்ததால் பயணிகள் அவதிக்குள்ளாகியுள்ளனர். விமான நிலைய ஓய்வறையில் இருந்த பயணிகள் மீண்டும் சோதனைக்கு உட்படுத்தப்பட்டதால் பெரும் நெரிசல் மற்றும் வரிசைகள் காணப்பட்டன. ஞாயிற்றுக்கிழமை (18) கடையில் ஒரு தொழிலாளியால் கத்தரிக்கோல் கண்டுபிடிக்கப்பட்டதாக கொக்கைடோ விமான நிலையம் திங்களன்று அறிவித்தது. காணாமல் போன கத்தரிக்கோலும் இதுவும் ஒன்றுதான் என்பதை உறுதிப்படுத்தும் வரை அறிவிப்பை வெளியிடுவதை நிறுத்தி வைத்திருந்ததாக அதிகாரிகள் விளக்கினர். ஹொக்கைடோ விமான நிலையத்தை சம்பவம் தொடர்பில் ஆராய்ந்து, இவ்வாறு மீண்டும் நடைபெறாமல் தடுக்குமாறு நிலம், உட்கட்டமைப்பு, போக்குவரத்து மற்றும் சுற்றுலா அமைச்சகம் கேட்டுக் கொண்டுள்ளது. https://www.virakesari.lk/article/191519
  23. அந்த கத்தரிகோலை பயன்படுத்தி யாராவது விமான கடத்தலில் ஈடுபடலாம் என்ற அச்சம்தான்
  24. எங்கும் மரணம் மலிந்த தேசமாகி விடடது. அத்துடன் கொலை களவு ஏமாற்று அபகரிப்பு என்று உலகம் நாசமாகி விடடது எங்கே தேடுவோம் நீதியை.
  25. ஊர் விட்டு உயிரைகாக்காக்க ஓடினாலும் சென்ற இடம் பஞ்சுமெத்தை படுக்கையல்ல. கடுங் குளிரும் கடும் வெப்பமும் தின்று படாத பாடெல்லாம் பட்டுத்தான் நாமும் பிழைத்து உங்களுக்கும் வயிறார உணவுக்கு வழி வகை செய்தோம். இன்னும் எம் உடலிலும் ஓடுவது பிறந்த மண் தந்த சுவாசமும் பெற்ற தாய் தந்த உயிரும் தான். கவி வரிகளுக்குபாராட்டுக்கள்.
  26. செய்தி: ரூ 10000 செலுத்தி... 100 ரூபாய் பெறுமதியான கலைஞர் நாணயத்தை பெற்றுக்கொள்ளலாம்.
  27. பாரிஸில் இருந்து சுமார் 150 கி . மீ ல் இருக்கும் st .michel என்னும் திருத்தலம் .......இங்கு காலையில் இருந்து மாலை 5.00 மணிவரை நிலத்தில் ஒரு சொட்டு நீர் இருக்காது ....... பின்பு நீரின் வரத்து அதிகமாகி அலைகள் கோவிலைத் தாலாட்டிக் கொண்டிருக்கும் . ........நடுநிசியில் அந்த நீர் வடிந்து அடுத்தநாள் நிலம் புழுதி பறக்கும் . .........! 🙏
  28. அருமையான கவிதை கோபி ......... தொடர்ந்து எழுதுங்கள் . .........! 👍
  29. கவிதை அருமை.👍 கால மாற்றங்கள் தியாகங்களை,அர்பணிப்புகளை,உதவிகளை,பாச வலைகளை,கொண்ட கொள்கைளை சீரழித்து விட்டது. பசுவூரனை மீண்டும் கண்டதில் சந்தோசம்.🙏
  30. எனது பார்வையில் பொது வேட்பாளரை மட்டுமல்ல ஒட்டுமொத்தமான தமிழ் தரப்புக்களின் அரசியலுமே (புலம்பெயர் அரசியல் செய்வோர் உட்பட) எந்த விதமான வினை திறனும் அற்ற தமிழரை பொறுதவரை பாதகமான திசையிலேயே முட்டாள்தனமாக செலுத்தி செல்லும் மண்குதிரையே எனலாம். விடுதலை புலிகளை பொறுத்தவரை அவர்கள் சுதந்திர தனிநாட்டுக்கான ஆயுத போராட்டத்தில் ஈடுபட்டார்கள். சர்வதேச அரசியலில் அதன் சாத்திய தன்மை குறித்த சந்தேகங்கள் விவாதங்கள் இருந்த போதும் அதைத் தாண்டி அவர்களது அரசியல் தனி நாட்டை நோக்கியதாகவே இருந்தது. ஆயுத வழியில் தனிநாட்டை அடையலாம் என்ற ஒர்மத்துடன் அதை நோக்கிய பாதையில் போராடினார்கள். ஆகவே சர்வ தேசத்தை புறக்கணித்து தமிழரை மட்டும் மையமாக கொண்ட அவர்களது அரசியலில் நியாயம் இருந்தது. ஆனால் இன்றய நிலையில் தமிழரின் சார்பில் செயற்படும் எந்த தரப்பும் தனி நாட்டிற்காக போராடவில்லை. ஶ்ரீ லங்கா என்ற நாட்டிற்குள் அதன் அரசியலமைப்பை கூட்டாட்சி அரசியலமைப்பாக மாற்றவே போராடுகின்றார்கள். ஆகவே தமிழருக்குள் மட்டும் உசுப்பேற்றும் குண்டு சட்டி அரசியலின் மூலம் ஶ்ரீலங்காவில் அரசியலமைப்பை மாற்ற முடியுமா? அரசியலமைப்பை மாற்றுவதென்றால் நாட்டில் வாழும்அனைத்து இன மக்களிடமும் அரசியல் செய்யாமல் சாத்தியமா? உலகில் எந்த நாட்டிலாவது வரலாற்றில் அப்படி நடந்ததுண்டா? வட கிழக்கு மாகாணங்கள் இணைந்த சமஸ்டி என்றால் ஆக குறைந்தது அந்த இரு மாவட்டங்களிலும் வாழும் ஏனைய இன மக்களின் ஆதரவை பெறாவிட்டால் அதை பற்றி உலக நாடுகளிடம் வலியுறுத்த முடியுமா? தமிழ் மக்களிடம் அரசியல் செய்யும் அதே வேளை அதற்கு இணையாக சிங்கள மக்களிடமும் அரசியல் செய்து சமஸ்டிஅரசியலமைப்பின் நன்மைகள் பற்றிய விழிப்புணர்வையும் ஏற்படுத்துவதன் மூலம் அதற்கான் ஆதரவு தளத்தை ஏற்படுத்த வில்லை என்றால் இந்த தமிழ் தேசியவாதிகளது கோஷம் வெறும் வெற்றுக் கோஷமாகவே இருக்கும். அவர்களது பொழுது போக்கு மற்றும் பதவிகளை பெறும் சுயநல அரசியலாகவும. வெற்று வீரம் பேசும் புலம்பெயர் தேசியவாதிகளின் பண திருட்டு அரசியலாக மட்டும் அமைந்து அவர்களுக்கு மட்டும் பயன்தரும் அரசியலாக மட்டுமே அமையும் என்பது எனது கருத்து. தமிழ தேசியவாதிகள் என்று தம்மை அழைத்துக்கொண்டு செயற்படுவோர் மத்தியில் பல சட்டவாளர்கள், அரசியல் விற்பன்னர்கள், பத்தி எழுத்தாளர்கள், புலம் பெயர் இணையத்தள அரசியல் ஆய்வாளரகள், அதி தீவிர தேசியவாதிகள் என்று பலர் இருந்தும் இதை கணக்கில் எடுக்காதது ஏன்? நாம் இந்த உலகில் வாழும் வரை தமிழ் தேசியத்தை பொழுது போக்காக அல்லது வருமானத்தை பெருக்க, நிதி சேகரிக்க தமிழ் தேசியம் என்ற சொல்லாடலை உபயோகிப்போம் என்ற அவர்களது எண்ணமே இதற்கு காரணம்.
  31. இதெல்லாம் சங்கிலித்தொடர்,வலைப்பின்னல் போன்ற விடயங்கள். முதலாம் கட்ட பங்களிப்பு சேர்ப்பாளர்கள் அப்பாவிகள். என் தொழில் சம்பந்தமாக தொழில் ரகசியங்கள் உண்டு அதே போல் அதிக பணம் வைத்திருப்பவர்களுக்கும் பல ரகசிய சித்து விளையாட்டுகள் தெரிந்திருக்கும்.
  32. எனக்கு இந்த நாட்டை வித்த மகிந்த கூட்டம் ஆட்சிக்கு வரக்குடாது.. இன்னும் ஒருக்கா நான் மணெண்ணைக்கும் பெற்றோலுக்கும் லைன்ல நிக்கேலாது.. ஒரு அப்பிள் ஒரு ஆரேஞ் ஆயிரம் ரூபாய்க்கு வாங்கி பிள்ளைகளுக்கு கொடுக்கேலாது.. ஒரு றாத்தல் பாணுக்கு மத்தியானமே போய் லைன்ல நிக்கேலாது.. எனக்கு என் வாழ்வாதார பிரச்சினை.. விடிஞ்சா பிள்ளையள் சாப்பிட சாப்பாடு செய்ய சாமான் மலிவா கிடைக்கோணும்.. பாம்பு கீம்பு கடிச்சா இல்லா அவசர அத்தியாவசியத்துக்கு ஆஸ்பத்திரிக்கு ஓட வாகனத்துக்கு பெற்றோல் இருக்கோணும்.. வெளிநாட்டில் இருப்பவர்களுக்கு ஊர் அரசியல் ஃபண் எடுக்கிறதுக்கு கதைக்கிறது.. ஊரில் இருக்கிறவனுக்கு அது பிள்ளைகுட்டியளுக்கு சாப்பாடு போடுற வாழ்வாதார பிரச்சினை.. மீண்டும் நாட்டை வித்த மகிந்தா யுகம் வருவதை ஒரு சாமானிய ஏழையால் நினைத்துக்கூட பார்க்க முடியாது.. அந்த வலி ஊரில் பட்டவனுக்கு தெரியும்.. ஒரு மாத கொலிடேயில் ஊருக்கு வந்தவையே லைன்ல பெற்றோலுக்கு நிக்க ஏலாது எண்டு பேஸ்புக்கில பந்தி எழுதினவை.. அதுவே வாழ்வாய்போனவனுக்கு எப்படி இருந்திருக்கும்.. அந்த யுகம் மீண்டும் வர தூனைபோகும் இந்த பொதுவேட்பாளர்கூட்டத்தின் நயவஞ்சகத்தை ஒரு போதும் மன்னிக்க முடியாது.. தங்களையும் தங்கள் குடும்பங்களையும் வெளிநாட்டிலும் கொழும்பில் சிங்களவர்களுடன் சம்பந்தம்வைத்து வசதியாக செட்டில் ஆக்கிவிட்டு ஓய்வுகாலங்களை கழிக்க அரசியலில் ஈடுபட்டு எங்கள் வாழ்வை அழிக்கும் இந்த நயவஞ்சக கூட்டத்தை ஒரு போதும் மன்னிக்கமுடியாது.. இனத்துரோகிகள் இவர்கள்.. தமிழர்களின் வாக்கு ஒரு போதும் தமக்கு கிடையாது என தெரிந்துகொண்ட இன அழிப்பு செய்த மகிந்த கூட்டம் இவர்களுக்கு பெட்டி குடுக்க பெட்டி வாங்கிக்கொண்டு மற்றைய ஆட்சியை பிடிக்ககூடிய கட்சிகளுக்கு விழக்கூடிய வாக்குகளை விழவிடாமல் தடுக்க மீண்டு ஒரு இருண்ட யுகத்துள் இலங்கையை தள்ள சூழ்ச்சி செய்யும் சகுனிகள்தான் இந்த பொதுவேட்பாளர் கூட்டம்..
  33. நான் இருக்கும் இடத்திற்கு அருகில் ஒரு இயற்கை நிறைந்த காட்டுப்பிரதேசத்தில் சிவப்பு சந்திரனை தரிசிக்க ஐரோப்பிய ஹிப்பிகள் கடந்த ஒரு வாரமாக ஒன்று கூடினார்கள்.அப் பிரதேசம் கிட்டத்தட்ட 100கிலோமீற்றர் சுற்றளவு கொண்ட பிரதேசம். அரை நிர்வாணம்,முழு நிர்வாணமாக சிறு பிள்ளைகளுடன் கூடாரம் அமைத்து பல இடங்களில் சிறு தீமூட்டி பாட்டுப்பாடி நடனமாடிக்கொண்டிருந்தார்கள். எனினும் சிவப்பு தரிசனம் செய்ய முதல் அரசு அவர்களை அகற்றிவிட்டது. படங்களை சீராக இணைக்கமுடியாமைக்கு மன்னிக்கவும். "Rainbow Family"
  34. பிள்ளைகளும் அவரைத்தான் தேடித் திரிகின்றனர் ........ அவரது துப்பாக்கியை வாங்குவதற்கு ........! 😂
  35. 😀.... இந்த விஎஃப்எஸ் விடயத்தில் மிகவும் வெளிப்படையாகவே நாட்டையும், மக்களையும் இந்த அரசாங்கம் எப்படி ஏமாற்றிக் கொண்டிருக்கின்றது என்று அறிந்த பின், இது எங்கே போய் முடியப் போகின்றது என்று அறியும் ஒரு ஆவலிலேயே இந்தச் செய்திகளை தொடர்ந்து வாசித்து வருகின்றேன். சர்வாதிகாரிகள் இப்படிச் செய்வார்கள், அவர்களை ஏன், எதற்கு என்று கேள்விகள் கேட்கவும் முடியாது. ஆனால் ஒரு ஜனநாயக அரசிலுமா இப்படி..........

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.