Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Leaderboard

  1. ஏராளன்

    கருத்துக்கள உறவுகள்
    7
    Points
    31977
    Posts
  2. தமிழ் சிறி

    கருத்துக்கள உறவுகள்
    6
    Points
    87990
    Posts
  3. விசுகு

    கருத்துக்கள உறவுகள்
    5
    Points
    34974
    Posts
  4. suvy

    கருத்துக்கள உறவுகள்
    4
    Points
    33600
    Posts

Popular Content

Showing content with the highest reputation on 08/30/24 in Posts

  1. ஐயையோ நான் ஆழம் தெரியாமல் காலை விட்டிட்டேன்... மன்னிச்சுடுங்க.... Krithi Shetty Srinidhi Shetty Siddhi Idnani
  2. அது நமக்கு வைச்சிருக்க....🥰
  3. ஜெயலலிதா அல்லது பத்மினி அல்லது சரோஜாதேவியை பகலில் நினைந்து கொண்டு கண்களை மூடுங்கள். பகல் கனவு அது தான் 😜
  4. எந்த வேட்பாளர் இந்த மொட்டைப் பிக்குகளிடம் ஆசிவாங்கச் செல்லாமல் அவர்களை மூட்டைகட்டி ஒதுக்கிவிட்டு வென்று வருகிறாரோ…! அப்படியானவர் வந்தபின்பு இலங்கைத் தீவு இந்துமா கடலில் மூழ்காமல், பூத்துக்குலுங்கும் காட்சியைக் காணும் சாத்தியம் ஏற்படலாம்.💐🙏
  5. 2009 இல் சிட்னியில் இலங்கையில் நிகழும் மனித அழிவை தடுத்து நிறுத்த கோரி மக்கள் பல வெளிநாட்டு தூதரங்களுக்கு மனுக்கொடுத்தார்கள், இந்திய தூதரகத்திற்கு மனுக்கொடுத்த போது அதனை அவர்கள் வாங்க மறுத்துவிட்டார்கள், அந்த நிகழ்வுகளை முன்னின்று நிகழ்த்திய ஒரு மாணவர் (25 வயதிற்கு மேலான அவர் வெளிநாட்டு மாணவராக கல்வி கற்று கொண்டிருந்தார் என நினைக்கிறேன்), உடனடியாக ஒரு கோசம் ஒன்றினை ஆரம்பித்தார்; "சோனியா, மாபியா!" என அவரை பின்பற்றி மற்றவர்களும் அவர் சோனியா என கூற மற்றவர்கள் மாபியா என கூற அங்கு நின்ற மற்றொருவர் வேண்டாம் என்றார், அவர் கூறிய உடல்மொழியில் அந்த கோசம் எவ்வளவு அருவருக்கதக்கதாக இருந்தது என்பதனை கோசமிட்டவர் உணர்ந்து உடன் நிறுத்திவிட்டார் (ஆனால் அவர் இதனை முன் கூட்டியே திட்டமிட்டே வந்திருப்பார் என நினைக்கிறேன்). படித்தவர்கள்தான் மற்றவர்களை தமது சுய நலஙளுக்காக தவறாக வழிநடத்துவார்கள், இந்த நிகழ்வில் சில சுயநலமிகள் தங்கள் விருப்பத்தினை மற்றவர்களை உசுப்பேற்றி நிகத்தியுள்ளார்கள், கலகக்காரர்கள் வெறும் அம்பு மட்டும்தான். இதில் கலகம் செய்தவர்கள் உண்மையாக தமது சமூகத்திற்கு நன்மை செய்ய விரும்பியிருப்பார்கள், ஆனால் இந்த தவறாக வழிநடத்துபவர்கள் ஒரு இரத்தம் உறிஞ்சும் அட்டைகள் மாதிரி தாம் சார்ந்த சமூகத்தினை கூட விற்று வயிறு வளப்பவர்கள், அவர்கள் உள்ளேயும் இருப்பார்கள் வெளியேயும் இருப்பார்கள், மோசமானவர்கள். எமது சமூகம் பல சமூக பீடைகளால் பீடிக்கப்பட்டுள்ள சமூகம், ரசோதரன் கூறுவது போல ஆதிக்க வெறியினை எம்மை நல்வழி படுத்தும் மதங்களூடாகவே பெறுகிறார்கள், இஸ்லாமியர்களை குறை கூறும் நாம் அவர்களவிற்கு இல்லை என்ற்றாலும் அதே அடிப்படை பண்புகள் அவர்களை குறை கூறும் இவர்களிடமும் உள்ளது.
  6. 👍........... எல்லோர் மத்தியிலும் இந்த ஒற்றுமையின்மை இருக்கின்றது என்பது உண்மையே. உதாரணமாக, தெலுங்கு மக்கள் எல்லோரும் மிக ஒற்றுமையானவர்கள் என்று ஒரு காலத்தில் தமிழர்கள் சொன்னார்கள். தமிழர்கள் தான் ஒற்றுமையில்லாதவர்கள் என்றனர் தமிழகத்து மக்கள். இந்திய ஐடி துறை தமிழர்களாலும், தெலுங்கு மக்களாலும் நிரம்பி வழிந்து கொண்டிருக்கின்றது. ஆகவே இந்த ஒப்பீடும், பேச்சுக்களும் அங்கே எப்போதும் இருக்கும். பின்னர், தெலுங்கு பேசும் மக்கள் இரு தேசங்களாகவே, ஆந்திரா மற்றும் தெலுங்கானா, என்று பிரிந்தார்கள். தெலுங்கு மக்களின் அபிப்பிராயமே வேறு மாதிரி இருக்கின்றது. அவர்களின் கூற்றுப்படி தமிழர்கள் மிகவும் ஒற்றுமையானவர்கள், ஆனால் தெலுங்கு மக்கள் ஒற்றுமை அற்றவர்கள் அல்லது குறைந்தவர்கள். இக்கரைக்கு அக்கரைப் பச்சை என்பது போல. இது கிட்டத்தட்ட எல்லா மக்கள் தொகுதிகளுக்கும் பொருந்துகின்றது. ஆனாலும், பலரும் உலகெங்கும் ஒரே குரலில் என்றும் சொன்னது ஈழத்தமிழர்கள் மிகவும் ஒற்றுமையானவர்கள் என்று. ஒரு படி மேலே போய், அதற்கான காரணத்தையும் சிலர் சொன்னார்கள். ஒடுக்கப்படும், துரத்திக் கலைக்கப்படும் மக்கள் மிகவும் ஒற்றுமையாக இருப்பார்கள் என்பதே அவர்கள் சொன்ன காரணம். கிட்டத்தட்ட ஒரு ஒற்றைத் தலைமையின் கீழ் நாங்கள் இருந்ததும் எங்களின் அன்றைய ஒற்றுமைக்கு இன்னொரு காரணமாக இருக்கக்கூடும். வேறு சிலர் சிறு தலைமைகளாக இருந்தாலும், அவர்களும் கூட பொதுவெளியில் இருந்தோரே. 'யார் இவர்...?' என்று எங்களை நினைக்க வைத்த ஒரு அமைப்போ அல்லது தனிநபரோ அன்று இருக்கவில்லை. இன்று எங்களில் பலர் ஒடுக்கப்படும், துரத்திக் கலைக்கப்படும் மனநிலையில் இல்லை. பலர் அங்கங்கே நிரந்தரம் ஆகிவிட்டார்கள். தலைமை என்பது அறவே இல்லை. எல்லோரும் தலைவர்கள். புதுமைப்பித்தன் ஒரு தடவை சொல்லியிருந்தார்: மூன்று நேரத்திற்கும் வழி (சாப்பாடு) இருந்தால், அடுத்ததாக ஆச்சாரமும், கலாச்சாரமும் அந்த வீடுகளில் புகும் என்று. ஆச்சாரமும் கலாச்சாரமும் மட்டும் இல்லை, அதிகாரமும் அந்த மனங்களில் புகும் என்று அதை திருத்தி எழுதவேண்டும். சுதந்திரம் அல்ல, சின்னச் சின்ன அதிகாரங்கள் வேண்டி அலைக்கழிய ஆரம்பித்துள்ளோம். எந்த நிலையிலும், ஒரு தனிமனிதனின் மதிப்போ அல்லது ஒரு சமூகத்தின் மதிப்போ அந்த மனிதனின், அதன் நடவடிக்கைகளாலேயே மற்றவர்களால் தீர்மானிக்கப்படும். செயல்களைப் போன்றே வார்த்தைகளும் முக்கியமானவை (இங்கு களத்திலும் எழுத்தில் வார்த்தைகள் முக்கியமானவையே.....😜). நாங்கள் இவற்றை இலகுவில் மறந்து விடக்கூடும், கடந்து விடக்கூடும், ஆனால் இவை மட்டுமே மற்றவர்களுக்கு நினைவில் தங்கியிருக்கும்.
  7. இனி இவருக்கு இவரின்ட சொந்தங்களே வாக்கு போட மாட்டார்கள் ...தமிழருக்கு சுய உரிமையா? ஒற்றையாட்சி பற்றி பேசுங்கோ
  8. என்ன எல்லாமே ஒரே செட்டியா இருக்கு? சரி ஒரு செட்டி ஓடர் பிளீஸ்.
  9. பிபிசி இன் இந்த வகை பிரச்சார வகை கட்டுரைகள் மக்களை ஒரு குறிப்பிட்ட காலத்திற்கு மட்டுமே யதார்த்தங்களில் இருந்து திசை திருப்ப முடியும், உண்மைகளை கூறுவதனால் போரின் மீதான வெறுப்பு இன்னும் அதிகமாகிவிடும் என்பதற்காக இவ்வாறான பிரச்சார கட்டுரைகளை பதிவிடுகிறார்கள் என கருதுகிறேன். கடந்த திங்களன்று F-16 இனை உக்கிரேன் இழந்தது, அதனை வெளியிட முடியாதவாறான நிலை உக்கிரேனுக்கு இருந்தது, அதற்குக்காரணம் மேற்கு நாடுகள் இந்த இழப்பினால் எதிர்கால உதவிகளை நிறுத்தி விடலாம் என்பதாலோ அல்லது உக்கிரேனால் சொல்லமுடியாத வேறு ஏதாவது காரணம் இருந்திருக்கலாம், ஆனால் வோல்ஸ்ரிட் ஜெனல் இந்த செய்தியினை வெளியிட அதன் பின் உக்கிரேன் விமானியின் தவறு என முதலில் கூறி தற்போது தமது பேற்றியாட்டின் மூலம் சுட்டு வீழ்த்தியதாக கூற்கிறார்கள், உண்மை நிலவரம் உக்கிரேனிற்கு மட்டும் தெரிந்திருக்கலாம். மேற்கு ஊடகங்கள் கேர்க்ஸ் ஊடுருவலுக்கு கொடுத்த பிரச்சாரத்தில் ஒரு பங்காவது அதனால் ஏற்படப்போகும் விளைவுகளை பற்றி விவாதித்திருந்தால் தற்போது கிழக்கு உக்கிரேன் மற்றும் கேர்க்ஸில் ஏற்பட்டிருக்கும் நெருக்கடி நிலை ஏற்பட்டிருக்காது, உக்கிரேனிய வீரர்கள் உண்மைநிலவரங்கள் பகிரப்படவேண்டும் என கோரிக்கை விடும் நிலைக்கு நிலவரங்கள் ஏற்பட்டிருக்காது. உக்கிரேனிய வீரர்கள் இராணுவ கட்டமைப்பு மறு சீரமைக்கவேண்டும் என கோருகிறார்கள் என கூறப்படுகிறது, உயர் பதவி வகீக்கும் இராணுவ உத்தியோகத்தர்களின் தகுதியின்மை களநிலவரத்தினை பாதிப்பதாக கருதுகிறார்கள், இவ்வகையான குழப்பநிலை ஒரு நெருக்கடிக்குள் சிக்கியிருக்கும் இராணுவத்தின் பண்பாகப்பார்க்கப்படுகின்றது, தற்போது உக்கிரேன் இராணுவம் ஒரு கடுமையான நெருக்கடிக்குள் சிக்கியுள்ளது, இவ்வாறான கட்டுரைகளால் இவ்வகையான பிரச்சினைக்கு தீர்வு ஏற்படாது.
  10. அதுக்காக செத்த கிளிகளையெல்லாம் சிங்காரிச்சு நினைத்துக் கொண்டிருப்பது ரெம்ப ஓவர் . .....! நீங்கள் வேற . .....இவர்களின் முகத்துக்கு இவர்கள் போதும் . ........! 😂
  11. உங்களின் டேஸ்ட்டே ரெம்ப வேஸ்ட் ........அதுவும் சமந்தா ,தமன்னா என்று உலகம் போய்கொண்டிருக்கும் நேரத்தில் ......! 😁
  12. ஏனப்பா... கந்தையா அண்ணைக்கு, சில்க் சிமிதா மாதிரி ஆட்களை கொடுங்களேன். 😂
  13. அவரது சொற்கள் எனது எழுத்தை உறுதி செய்வதற்காக என்றுமா புரியவில்லை உங்களுக்கு..? 🤣
  14. பிரியன் இருப்பதையிட்டுத்தான் விசுகர் பயந்துபோனார் என நினைக்கிறேன்,....🤣
  15. நடப்பதற்கு சாத்தியம் இல்லாத ஒரு விஷயத்தை, ‘பகல் கனவு காண்பது’ என்று சொல்வார்கள். ஆனால், பகல் கனவு காண்பது ஒருவரின் ஞாபக சக்தியை அதிகரிக்கவும் படைப்பாற்றலை ஊக்குவிப்பதற்கும் மன அழுத்தத்தை குறைப்பதற்கும் உதவும் என்று நரம்பியல் நிபுணர்கள் ஆய்வில் கண்டுபிடித்துள்ளனர். பகல் கனவு காணும் விதம்: பகல் கனவின்போது மனித மூளை மிகவும் சுறுசுறுப்பாக இயங்குகிறது என்று விஞ்ஞானிகள் எம்ஆர்ஐ ஸ்கேன் எடுத்து கண்டுபிடித்திருக்கிறார்கள். பகல் கனவு காண்பது மன அழுத்தத்தை வெகுவாகக் குறைக்கிறது. எப்போதும் பதற்றமாகவும் அவசரமாகவும் பரபரப்பாகவும் ஓடிக்கொண்டிருக்கும் இந்த உலகியல் வாழ்வில் பகல் கனவு மிகவும் உதவியாக இருக்கிறது. கவலை அல்லது சோகம், ஏமாற்றம் போன்ற உணர்வுகளை சந்திக்கும்போதும் மன அழுத்தத்தில் இருக்கும்போதும் பகல் கனவு காணத் தொடங்கலாம்.😵🤩
  16. இருபாலை, சுன்னாகத்தை ஏன் விட்டுவைத்தீர்கள்? எவன்டா என்ரை ஊரைப்பற்றி கதைக்கிறது? எட்றா வாளை. போலிசுக்கு பெட்டி கொடுப்பார்கள்.
  17. அத்துடன்... 14 மாதம் அவருடன் இருந்திருக்கின்றது. அவர் தான்... தன்னுடைய தந்தை என நினைத்திருக்கும். 🙂
  18. கடத்தியவரை பிரிய மனமின்றி, அழுத குழந்தை.
  19. இப்படி சொல்லி சொல்லியோ பிழைகளை. தொடர்ந்தும் செய்யலாமா?? தெருவிழாவை குழப்பியவார்களும். கேட்கலாம் பௌத்த பிக்குகளின். காலில் விழுந்த போது வராத வெட்கம் தெருவிழா குழப்பும்போது வருகிறதா ?? இதுவரை தெருவிழா குழப்பாமல் நடந்துள்ளது இந்த வருடம் ஏன் குழப்ப வேண்டும் ??. தற்போது உள்ள கனடா தமிழ் பேரவை உறுப்பினர்கள் பதவிகளை துறந்து வீடுகளில் இருப்பது நல்லது புதியவர்கள். பதவியேற்று இயங்குகிறது சிறப்பு தற்போது உள்ளவர்கள் இலங்கை அரசின் கைகூலிகள். இவர்களுக்கு தமிழர்கள் தெருவிழா நடத்த உரிமையும். தகுதியும் இல்லை பௌத்த பிக்குமாரின். காலில் இழந்து விட்டார்கள்
  20. கதைத்து பேசி தீர்வு காண வேண்டிய விடயத்துக்கு இரு பகுதியும் சேர்ந்து ஈழ தமிழர் மானத்தை வாங்கியிருக்கிறார்கள் .
  21. ஆயிரம் பெண்மை மலரட்டுமே ........! 😍
  22. ஆசை கூட
  23. அப்போ நடந்த சம்பவங்கள் எதற்கும்.... உங்கள் அபிமான கனடிய தமிழர் பேரவை பொறுப்பாளி அல்ல என்பதுதானே உங்கள் வாதம். இந்த தெருவிழா நடக்க முன்பே பல தமிழர் அமைப்புகள் பகிஷ்கரிப்பு கோரிக்கையை முன்வைத்ததாக அறிகின்றோம். அந்த நேரமாவது கனடிய தமிழர் பேரவை சம்பந்தப் பட்டவர்களை அணுகி என்ன பிரச்சினை என்பதனை பேசித் தீர்த்திருந்தால் இந்த அசம்பாவிதங்களை தவிர்த்து இருக்கலாமே. அதற்கு... அவர்களுக்கு தடையாக இருந்தது எது? ஒரு நகரத்தில் நடக்கும் நிகழ்வை ஓரிரு தமிழர் அமைப்புடன் கலந்து பேசி சுமூகமாக நடத்தி முடிக்க வேண்டிய தார்மீக பொறுப்பு கனடா தமிழர் பேரவைக்கு இல்லை என்றால்.... சிங்களவனுடன் "இமாலய பிரகடனம்" செய்வதில் ஏதாவது அர்த்தம் உண்டா.
  24. பட மூலாதாரம்,GETTY IMAGES கட்டுரை தகவல் எழுதியவர், க.சுபகுணம் பதவி, பிபிசி தமிழ் 29 ஆகஸ்ட் 2024, 03:09 GMT புதுப்பிக்கப்பட்டது 54 நிமிடங்களுக்கு முன்னர் எறும்புகளின் வாழ்வியல், அவற்றின் சமூகக் கட்டமைப்பு மனிதர்களுக்கு நிகரானவை என்பதை ஆய்வாளர்கள் பல தருணங்களில் உறுதி செய்துள்ளனர். அவைதம் சகோதரிகளுடன் கொண்டிருக்கும் உறவு, பாசப் பிணைப்பு ஆகியவை பல தருணங்களில் விஞ்ஞானிகளை வியப்பில் ஆழ்த்தியுள்ளது. அப்படிப்பட்ட ஒரு கண்டுபிடிப்பு சமீபத்தில் கிடைத்துள்ளது. ஈரப்பதம் மிக்க கட்டைகளில் கூடமைத்து வாழும் கட்டெறும்பு வகையைச் சேர்ந்த எறும்பு வகை ஒன்றில், ஃப்ளோரிடாவை சேர்ந்த விஞ்ஞானிகள் ஓர் அதிசயமான பழக்கத்தைக் கண்டறிந்தனர். அவை சக எறும்பின் உயிரைக் காப்பாற்ற அதன் கால் பகுதியை வெட்டியெடுப்பதை விஞ்ஞானிகள் பதிவு செய்துள்ளனர். இதுகுறித்த ஆய்வை மேற்கொண்ட வுர்ஸ்பர்க் பல்கலைக்கழகத்தின் பூச்சி நடத்தையியல் ஆய்வாளரான எரிக் பிராங்க், “விலங்குகள் மத்தியில், ஓர் உயிரைக் காப்பாற்ற பிற சகாக்கள் ஓர் உறுப்பை உடலில் இருந்து பிரித்தெடுப்பது பதிவு செய்யப்பட்டிருப்பது இதுவே முதல்முறை,” என்று தனது ஆய்வறிக்கையில் குறிப்பிட்டுள்ளார். சக உயிரினத்திற்கு அறுவை சிகிச்சைக்கு நிகரான சிகிச்சையை அளிக்கும் அணுகுமுறை விலங்கு உலகில் பதிவு செய்யப்படுவது இதுவே முதல்முறை. இருப்பினும், எறும்புகள் மத்தியில் தமது சகாக்களின் காயங்களுக்கு சிகிச்சை அளிப்பது, போரின்போது தம் உயிரைத் தியாகம் செய்து மற்றவர்களைக் காப்பது போன்ற நடத்தைகள் ஆய்வாளர்களால் பலமுறை பதிவு செய்யப்பட்டுள்ளன. அத்தகைய நடத்தைகளை நானும் பல தருணங்களில் அவதானித்துள்ளேன். அப்படிப்பட்ட ஒரு வாய்ப்பு சில நாட்களுக்கு முன்பும் கிடைத்தது. பட மூலாதாரம்,SUBAGUNAM KANNAN/BBC படக்குறிப்பு, இருவேறு புற்றுகளைச் சேர்ந்த எறும்புக் கூட்டங்களுக்கு இடையே நடந்த போரில், பின்னங்கால்கள் உடைந்து தனியாக சிக்கிக்கொண்ட ஓர் எறும்பை இரண்டு 'எதிரிகள்' மூர்க்கமாகத் தாக்கின வீட்டு வாசலில் நடந்த உக்கிரமான போர் அன்றைய தினம் மாலை வேளையில் வானம் மோடம் போட்டிருந்தது. பருவநிலை இதமாக இருந்ததால் தேநீர் அருந்தலாம் என்று கடைக்குச் செல்ல வீட்டைவிட்டு வெளியேறினேன். ஆனால், அங்கு நான் கண்ட காட்சி, தேநீரை மறந்து அடுத்த இரண்டு மணிநேரத்திற்கு என்னை வாசலிலேயே இருக்கச் செய்துவிட்டது. வீட்டு வாசலில் ஒரு கட்டெறும்பின் தலை மீதிருந்த உணர்கொம்புகளில் ஒன்றில் வேறொரு எறும்பின் தலை செருகப்பட்டிருந்தது. அதே எறும்பு தனது காலில் மற்றுமோர் எறும்பின் உயிரற்ற சடலத்தை இழுத்துக்கொண்டே நடந்து சென்றது. போருக்கு நடுவே அந்த எறும்பு வெற்றிக் களிப்பில் தனது எதிரிகளை மகுடமாகச் சூடிச் செல்வதைப் போல் அந்தக் காட்சி இருந்தது. ஆவலைத் தூண்டிய அந்தக் காட்சியின் விளைவாக, அங்கு என்ன நடக்கிறது என்பதை உற்றுக் கவனிக்கலானேன். அங்கு ஒரு போர் நடந்துகொண்டிருந்தது புரிந்தது. இருவேறு எறும்புப் புற்றுகளுக்கு இடையில் ஒரு மூர்க்கமான போர். பட மூலாதாரம்,SUBAGUNAM KANNAN/BBC படக்குறிப்பு, போருக்கு நடுவே தான் வீழ்த்திய ஓர் எறும்பின் தலையை உணர்கொம்பில் சுமந்தவாறு, மற்றோர் எறும்பின் சடலத்தை இழுத்துக்கொண்டு செல்லும் காவல்கார கட்டெறும்பு இந்தப் போர் குறித்து அசோகா சுற்றுச்சூழல் ஆய்வு அறக்கட்டளையைச் சேர்ந்த பூச்சியியலாளர் முனைவர் பிரியதர்ஷன் தர்மராஜனிடம் பேசியபோது, எறும்புகளுக்கு இடையிலான போர் பெரும்பாலும் இரு தருணங்களில் நிகழும் என்று விளக்கினார். அவரது கூற்றுப்படி, ஒரே வகையைச் சேர்ந்த எறும்பாக இருந்தாலும் இருவேறு புற்றுகளைச் சேர்ந்தவையாக இருப்பின் அவற்றுக்குள் உணவு மற்றும் வாழ்விடத்துக்கான மோதல் ஏற்படும் வாய்ப்பு உண்டு. மேலே நான் குறிப்பிட்ட போருக்கு இதுகூடக் காரணமாக இருக்கலாம். அதேபோல் மற்றுமொரு தருணத்தில் கூன்முதுகு எறும்புகளுக்கு (Hunchback ants) இடையிலான போரைக் காணும் வாய்ப்பு கிடைத்தது. அவை அருகருகே இருக்கும் இருவேறு புற்றுகளைச் சேர்ந்தவை. அவற்றுக்கு இடையே நிகழ்ந்துகொண்டிருந்த அந்தப் போர் உணவுக்கான போராக இருக்கக்கூடும். இதுவன்றி, எறும்புகளுக்கு இடையே போர் மூள மற்றொரு காரணமும் உண்டு. எறும்புகளைப் பொறுத்தவரை, அவற்றில் பல குழுக்கள் இருக்கின்றன. அதாவது, ஒரு சில எறும்பு வகைகளுக்கு மத்தியில் இருக்கும் ஒரே மாதிரியான நடத்தைகளை அடிப்படையாக வைத்து அவையனைத்தும் உயிரியல்ரீதியாக ஒரு குழுவாக வகைப்படுத்தப்பட்டுள்ளன. பட மூலாதாரம்,SUBAGUNAM KANNAN/BBC படக்குறிப்பு, போருக்கு நடுவே காயமடைந்து, உயிரிழக்கும் நிலையில் இருந்த காவல்கார எறும்பை இழுத்துச் செல்லும் வேலைக்கார எறும்பு அடிமைப்படுத்தும் எறும்புகள் எடுத்துக்காட்டாக, “சில எறும்பு வகைகள் இலை, குச்சி ஆகியவற்றைச் சேகரித்துச் சென்று புற்றுக்கு உள்ளேயே பூஞ்சைகளை வளர்த்து உணவாக்கிக் கொள்கின்றன. சிலவகை எறும்புகள், அஃபிட்ஸ் எனப்படும் பூச்சிகளுக்கு புற்றுக்கு உள்ளேயே அடைக்கலம் கொடுத்து, வளர்த்து, அவற்றில் இருந்து மில்க் டியூ (milk dew) எனப்படும் சர்க்கரைப்பாகு போன்ற ஒரு திரவத்தைக் கறந்து ஊட்டச்சத்து மிக்க உணவாக உட்கொள்கின்றன," என்கிறார் பிரியதர்ஷன். இந்தப் பூஞ்சை விவசாயமும் அஃபிட்ஸ் வளர்ப்பும், மனிதர்களின் விவசாயம் மற்றும் கால்நடை வளர்ப்பை ஒத்த பழக்கங்களாக இருப்பதாக பூச்சியியலாளர்கள் தெரிவிக்கின்றனர். இவற்றைப் போலவே, எறும்பு இனங்களில் அடிமைப்படுத்தும் எறும்பு (Slave-making ants) என்ற ஒரு வகை உண்டு. இவை மற்ற எறும்பு இனங்களின் புற்றுகளைச் சூறையாடி அவற்றின் இளம் லார்வாக்களை (புழுப் பருவத்தில் இருக்கும் முதிர்ச்சியடையாத எறும்புகள்) திருடி வந்து, வளர்த்து அடிமைகளாகப் பயன்படுத்துகின்றன. பட மூலாதாரம்,SUBAGUNAM KANNAN/BBC படக்குறிப்பு, சண்டையிட்டுக் கொள்ளும் இரு கட்டெறும்புகள் “இவை திருடி வரும் எறும்புகளுக்கும் அவற்றுக்கும் எந்தத் தொடர்பும் இருக்காது. அது முற்றிலும் தமது புற்றின் பணிகளைச் செய்துகொள்வதற்காக அவை மேற்கொள்ளும் ஓர் அடிமைப்படுத்தல் செயல்முறையே,” என்று விளக்குகிறார் எறும்புகளை நீண்டகாலமாக ஆய்வு செய்து வரும் முனைவர்.ப்ரொனோய் பைத்யா. இந்த இரண்டு வகையான போர்களிலுமே எதிரி எறும்புகளின் காலனியை, அதாவது புற்றைச் சூறையாடுவது, அதிலிருக்கும் உணவுகளையோ சந்ததிகளையோ அபகரிப்பதே நோக்கமாக இருக்கும். “இந்தப் போர்களின்போது, படையெடுப்புக்கு உள்ளாகும் எறும்புப் புற்றைச் சேர்ந்த காவல்கார எறும்புகள் புற்றைத் தற்காத்து மூர்க்கமாகப் போரிடும். ஆனால், அந்தப் போரில் ஒருவேளை எதிர்த்தரப்பு முன்னேறிச் சென்று ராணியைக் கைப்பற்றிவிட்டால், படையெடுப்புக்கு உள்ளாகும் புற்றைச் சேர்ந்த காவல்கார எறும்புகள், வேலைக்கார எறும்புகள் அனைத்துமே போரிடுவதை நிறுத்திவிடும்,” என்கிறார் அசோகா அறக்கட்டளையின் ஆய்வு மாணவியான பெங்களூருவை சேர்ந்த சஹானாஸ்ரீ. படக்குறிப்பு, எறும்புப் புற்றில் பல்வேறு படிநிலைகள் இருக்கின்றன. அதற்குள் ராணி முட்டையிடுவதற்கு, உணவு, கழிவுகளுக்கு என்று பல்வேறு தனி அறைகள் பிரிக்கப்பட்டிருக்கும் எறும்புகளின் சமூகக் கட்டமைப்பு எப்படிப்பட்டது? ராணி கைப்பற்றப்பட்டால் போர் முடிவுறுவது ஏன்? ஒரு புற்றின் ராணிக்கும் மற்ற எறும்புகளுக்கும் இடையிலான தொடர்பு என்ன? இதுவரையிலான அறிவியல் ஆதாரங்களின்படி, ராணி எறும்புதான் ஒரு புற்று, அதாவது ஓர் எறும்பு சமூகத்தை உருவாக்குகிறது. அந்த ராணியை இழந்துவிட்டால், அந்தப் புற்றே அழிந்துவிடும். அதன் காரணமாகவே, ஒரு புற்றுமீது படையெடுப்பு நிகழும்போது அதிலுள்ள பிற எறும்புகள் தம் உயிரைப் பணயம் வைத்தேனும் ராணியைக் காப்பாற்றப் போராடுவதாக விளக்குகிறார் முனைவர் ப்ரொனோய் பைத்யா. பொதுவாக, ஒரு புற்றிலுள்ள அனைத்துமே பெண் எறும்புகள்தான். ஆனால், அவற்றில் மிகச் சில மட்டுமே இனப்பெருக்கம் செய்யும் திறன் கொண்டவை. அவையே ராணி எறும்புகள் என்றழைக்கப்படுகின்றன. அதுபோக, அவற்றோடு இனப்பெருக்கம் செய்யும் திறனுடைய ஆண் எறும்புகளும் மிகச் சொற்ப எண்ணிக்கையில் பிறக்கின்றன. இந்த ராணி எறும்புகளும் அவற்றோடு இனப்பெருக்கம் செய்யவல்ல ஆண் எறும்புகளும், பருவகாலத்திற்கு முன்னதாகத் தங்களது புற்றைவிட்டு வெளியேறி அவற்றைப் போன்ற பிற எறும்புகளோடு ஓர் இடத்தில் கூடும். அப்போது நடக்கும் இனப்பெருக்க செயல்முறையில், ராணி எறும்பு வேறு புற்றைச் சேர்ந்த ஓர் ஆண் எறும்பைத் தேர்ந்தெடுத்து, அதனுடன் காற்றில் பறந்தபடி இணைசேரும். பிறகு அந்த ராணி தனக்கேற்ற ஓரிடத்தைத் தேடி, அங்கு நிலத்தடியில் சிறிய அளவில் புற்று அமைத்து, அங்கு தனது இறகுகளை உதிர்த்துவிட்டு, முட்டையிடத் தொடங்கும். அடுத்த சில வாரங்களில் அந்த முட்டைகளில் இருந்து பிறக்கும் எறும்புகளின் மூலம் தனது புற்றை, அதாவது தனது சமூகத்தை விரிவுபடுத்தும். பட மூலாதாரம்,SUBAGUNAM KANNAN/BBC படக்குறிப்பு, இருவேறு புற்றுகளைச் சேர்ந்த இரண்டு எறும்புகள் மூர்க்கமாகப் போரிட்டுக் கொள்ளும் காட்சி. எறும்புகளின் படிநிலை இப்படியாகப் பிறக்கும் எறும்புகளில் இனப்பெருக்கம் செய்யவல்ல ஆண் எறும்பைத் தவிர மற்ற அனைத்துமே பெண் எறும்புகள்தான். ஒரு புற்றிலுள்ள எறும்புகளில் பல படிநிலைகள் இருக்கின்றன. அவை, ராணி எறும்புகள்: இனப்பெருக்கம் செய்ய வல்லவை, முட்டையிடுவதும் அவற்றைப் பராமரிப்பதும் மட்டுமே இவற்றின் பணி. அதிலும் முதல் தலைமுறை வேலைக்கார எறும்புகள் பிறந்தவுடன், சந்ததிகளைப் பராமரிக்கும் பணி அவற்றுக்குச் சென்றுவிடும். ராணியின் பணி தொடர்ந்து முட்டைகளை இட்டுக்கொண்டே இருப்பது மட்டுமே. ஆண் எறும்பு: இதன் பணி, ராணியின் இனப்பெருக்கத்திற்கு உதவுவது மட்டுமே. வேலைக்கார எறும்புகள்: புற்று அமைப்பது, பராமரிப்பது, உணவு தேடுவது, முட்டைகள் மற்றும் லார்வாக்களை பராமரிப்பது ஆகியவை இவற்றின் தலையாய பணியாக இருக்கும். காவல்கார எறும்புகள்: இவற்றின் பணி, புற்றைப் பாதுகாப்பது, தாக்குதலின்போது தற்காப்பது, வேறு புற்றுகள்மீது படையெடுத்து அபகரிப்பது. பட மூலாதாரம்,GETTY IMAGES இப்படியாக, ஒரு ராணியில் தொடங்கும் ஒரு சமூகம் (புற்று), சில நூறு முதல் பல லட்சம் எறும்புகள் வரைகூடப் பெருகும் என்று விளக்குகிறார் பூச்சியியலாளர் பிரியதர்ஷன். இதில், ராணி எறும்பைத் தவிர மற்ற பெண் எறும்புகள் அனைத்துமே இனப்பெருக்கம் செய்யும் திறனற்றவை. ஆகவே அவை தமது சமூகம் பெருகுவதற்கு ராணியையே முற்றிலுமாகச் சார்ந்திருக்கின்றன. இந்நிலையில், அந்த ராணியை இழந்துவிட்டால் எதிர்காலத்தையே அவை இழந்துவிடுகின்றன. ஆகையால்தான், ஒரு போரின்போது அந்த ராணியையும் அடுத்த சந்ததிகளையும் பாதுகாக்க, ஓர் எறும்புப் புற்றில் இருக்கும் வேலைக்கார, காவல்கார எறும்புகள் என அனைத்தும் தம் உயிரையே தியாகம் செய்து மிக மூர்க்கமாகப் போரிடுகின்றன. எறும்புகளின் உயிர்த் தியாகம் பட மூலாதாரம்,SUBAGUNAM KANNAN/BBC படக்குறிப்பு, கூண்முதுகு எறும்புகளுக்கு இடையே நடந்த போரின்போது தனியாகச் சிக்கிய எறும்பைச் சுற்றி வளைத்துத் தாக்கும் 'எதிரி' எறும்புகள் அத்தகைய மற்றுமொரு போரை ஹரியாணாவில் சூரியன் அஸ்தமித்த நேரத்தில் கவனிக்க நேர்ந்தது. அதிலும் அப்படித்தான் நிகழ்ந்து கொண்டிருந்தது. அநேகமாக அப்போதுதான் போர் தொடங்கியிருக்க வேண்டும். அது தோட்டங்களில், புல்தரைகளில் அதிகம் காணப்படும் ஒரு வகைக் கட்டெறும்பு. புற்றின் வாசலில் நிகழ்ந்த தாக்குதல்களில் காவல்கார எறும்புகள், எதிரிகளை உள்ளே நுழையவிடாமல் தற்காத்துக் கொண்டிருந்தன. அதில் பல மடிந்தும் கொண்டிருந்தன. அதேவேளையில், உணவு தேடி வெளியே சென்றிருந்த வேலைக்கார எறும்புகள் மீண்டும் வேகவேகமாகத் தமது புற்றுக்குள் சாரிசாரியாக வரிசை மாறாமல் ஓடிக்கொண்டிருந்தன. ஆனால், எங்கோ உணவு தேடிச் சென்றிருந்த எறும்புகளுக்குத் தமது புற்றில் நிகழும் படையெடுப்பு எப்படித் தெரிய வந்தது என்ற கேள்வி எழுந்தது. அதற்குக் காரணமாக எறும்புகளின் அபாரமான தொடர்பு உத்திகளைச் சொல்கிறார் முனைவர் ப்ரொனோய் பைத்யா. “எறும்புகளின் தொடர்பு உத்திகள் பல வழிகளில் செயலாற்றுகின்றன. இந்தத் தொடர்பு உத்திகள் மட்டுமின்றி அவை தம் உயிரைத் துச்சமெனக் கருதி புற்றைக் காக்கப் போராடுவதற்கும் அடிப்படைக் காரணமாக இருப்பது அவற்றின் சமூகநலப் பண்புதான்,” என்கிறார். படக்குறிப்பு, இந்த விளக்கப்படத்தில் இருப்பது போல, எறும்புகள் உடலில் இருந்து வெளிப்படும் வேதிமத்தைப் பயன்படுத்தி தாம் பார்க்கும் உணவுப் பொருளின் மீது வேதிமக் குறியிட்டு அடையாளப்படுத்துகின்றன அதாவது, தன்னைவிடத் தமது சமூகத்திற்கே முன்னுரிமை அளித்து உழைக்கும் குணம் கொண்டவை எறும்புகள். பொதுவாக, ஆரோக்கியமான சந்ததிகளை உருவாக்கி, தமது மரபணுவை அழியவிடாமல் அடுத்தடுத்த தலைமுறைக்குக் கொண்டு செல்வதே அனைத்து உயிரினங்களின் தலையாய பணி. இனப்பெருக்கச் செயல்முறை அத்தகையதே. இதையே டார்வின் 'வலியன பிழைக்கும்' என்ற கோட்பாட்டின் மூலம் உணர்த்தினார். அதாவது, வலிய மரபணு பிழைக்கும். இங்கு எறும்புகளைப் பொறுத்தவரை, “ஒரு புற்றிலுள்ள அனைத்து எறும்புகளுமே சகோதரிகள். அவையனைத்தும் 75% மரபணுரீதியாக ஒத்துப் போகின்றன. அவையனைத்தின் இனப்பெருக்க மூலமாகச் செயல்படுவது ராணி மட்டும்தான். ஆக, ராணியும் அது இடும் முட்டைகளுமே அந்தப் புற்றிலுள்ள எறும்புகளின் அடுத்த சந்ததிக்கு அடிப்படை,” என்கிறார் ப்ரொனோய். “இதன் காரணமாகவே ராணிக்கும் லார்வாக்கள் மற்றும் வளர்ந்து வரும் எறும்புகளுக்கும் முன்னுரிமை கொடுத்து உணவூட்டுவது, பாதுகாப்பது ஆகியவை வேலைக்கார, காவல்கார எறும்புகளின் தலையாய பணியாகிவிடுகிறது,” என்கிறார் ப்ரொனோய். இதுவே படையெடுப்பு நிகழும்போது எறும்புகள், புற்றைக் காப்பாற்ற எந்த எல்லைக்கும் செல்வது, உயிர்த் தியாகம் செய்வது அவற்றின் அடிப்படைப் பண்பாகிவிடுகிறது. படக்குறிப்பு, உணவுப் பொருளை அவை வேதிமக் குறியிட்டு அடையாளப்படுத்திய பிறகு, அவைதம் புற்றுக்குத் திரும்பிச் செல்லும்போது வழிநெடுக பாதையில் வேதிமக் குறியிட்டுக்கொண்டே செல்லும் எறும்புகள் பேசும் மொழி என்ன தெரியுமா? சரி, எறும்புகளின் தொடர்பு மொழிக்கு வருவோம். எறும்புகளுக்கு எதற்கு ஆன்டனா? எறும்புகளின் உடலமைப்பில் ஆன்டனா எனப்படும் உணர்கொம்புகள் மிக முக்கியப் பங்கு வகிக்கின்றன. அவற்றின் தலைப் பகுதியில் கண்களுக்கு மேலே, இரண்டு மெல்லிய குச்சி போன்ற அமைப்பு நீண்டிருக்கும். அவையே உணர்கொம்புகள் எனப்படுகின்றன. இந்த உணர்கொம்புகள் இல்லையெனில், எறும்புகள் பிழைத்திருப்பதே சவாலான காரியம் என்கிறார் முனைவர் ப்ரொனோய். படக்குறிப்பு, அப்படி வழிநெடுக இருக்கும் வேதிமக் குறியீடுகளை மற்ற எறும்புகள் தங்கள் உணர்கொம்புகளின் மூலம் உணர்ந்து பாதையைக் கண்டறிந்து உணவு இருக்கும் இடத்தை அடைகின்றன. “எறும்புகளின் தொடர்பு மொழி என்பது வேதிம அடிப்படையிலானது. அவைதம் உடலில் இருந்து ஃபெரோமோன்ஸ் (Feromones) எனப்படும் ஒரு வகை வேதிமத்தை வெளியிடுகின்றன. அந்த வேதிமத்தை உணர்வதன் மூலமே எறும்புகள் ஒன்றுக்கொன்று தகவல் பரிமாறிக் கொள்கின்றன, தமது புற்றைச் சேர்ந்த சகாக்களை அடையாளம் காண்கின்றன,” என்கிறார் அவர். உதாரணமாக, உணவு தேடிச் செல்லும்போது ஓர் எறும்பு அதனால் தன்னந்தனியாக முற்றிலும் எடுத்துவர முடியாத அளவுக்கு ஓர் உணவுக் குவியலைக் காண்கிறது. அப்போது, அந்த இடத்தைத் தனது வேதிமத்தால் குறியிட்டுக் கொண்டே, அதாவது, அங்கிருந்து தனது புற்றுவரை ஃபெரொமோன்களை கசியவிட்டுக்கொண்டே வருகிறது. பிறகு, புற்றில் இருக்கும் மற்ற எறும்புகளுக்குத் தகவல் கொடுத்து, தனது வேதிமப் பாதையை ஒரு ஜி.பி.எஸ் போலப் பயன்படுத்தி அவற்றை அந்த உணவுக் குவியலை நோக்கி அழைத்துச் செல்கிறது. படக்குறிப்பு, ஒரு ஜி.பி.எஸ் போல எறும்புகள் இந்த வேதிமக் குறியீடுகளை உணர்கொம்புகளைப் பயன்படுத்தி உணர்ந்து மற்ற எறும்புகள் சென்ற பாதையைக் கண்டறிகின்றன இத்தகைய தொடர்பு உத்தியை எறும்புகள் பயன்படுத்தியே ஹரியாணாவில் நான் கண்ட போரின்போது, வேலைக்கார எறும்புகளிடம் போர் குறித்து எச்சரித்து, புற்றுக்குத் திரும்ப வைத்திருக்கலாம் என்று விளக்கினார் முனைவர் பிரியதர்ஷன். எறும்புகள் ஒன்றுக்கொன்று தொடர்புகொள்வதற்கும், தங்களது சுற்றத்தை, அதிலுள்ள ஆபத்துகளை உணரவும் அவற்றுக்கு உணர்கொம்புகள் மிகவும் அவசியம். அந்த உணர்கொம்புகளை வைத்தே எறும்புகள் வேதிமங்களையும் அவற்றின் மூலம் பகிரப்படும் செய்திகளையும் உணர்கின்றன. முனைவர் ப்ரொனோயின் கூற்றுப்படி, உணர்கொம்புகளை இழந்துவிட்டால், எறும்புகள் திசை மற்றும் பாதைகளை அறிவது, தங்களது சகாக்களுடன் தொடர்புகொள்வது, ஆபத்துகளை உணர்வது என அனைத்துத் திறன்களையுமே இழந்துவிடும். எளிமையாகச் சொல்ல வேண்டுமெனில், ஓர் எறும்பு உயிர் பிழைத்திருப்பதற்கே இந்த உணர்கொம்புகள் மிக அடிப்படையான தேவை. இதுபோக, புற்றைப் பராமரிக்க, காவல் காக்க அதிக எண்ணிக்கையிலான வேலைக்கார எறும்புகள் தேவை என்பதால், இனப்பெருக்கத் திறனற்ற எறும்புகளை அதிகளவில் இனப்பெருக்கம் செய்யுமாறு மற்றவை கட்டாயப்படுத்துவது, புதிதாகப் பிறந்த எறும்புகளுக்குத் தமது பணிகள், நடத்தைகளைக் கற்றுத் தருவது என இன்னும் பற்பல வியப்பூட்டும் வாழ்வியல் முறைகளை எறும்புகள் கொண்டுள்ளன. https://www.bbc.com/tamil/articles/c19kpp43yn1o
  25. பட மூலாதாரம்,BBC படக்குறிப்பு, சீமேநே எனும் ஒரு நாடோடி பழங்குடி சமூகத்தைச் சேர்ந்தவர் மார்டினா கட்டுரை தகவல் எழுதியவர், அலெகான்ட்ரோ மிலன் வலென்சியா பதவி, பிபிசி நியூஸ் முண்டோ 27 ஆகஸ்ட் 2024 பொலிவியக் காட்டில் மார்டினா காஞ்சி நேட் நடந்து செல்லும்போது, சிவப்பு வண்ணத்துப்பூச்சிகள் அவரைச் சுற்றி பறக்கின்றன. அவரின் வேகத்திற்கு ஈடுகொடுக்க முடியாமல் எங்கள் குழு அவரை மெதுவாக நடக்க கோரிக்கை வைத்தது. அவருடைய அடையாள அட்டை அவருக்கு 84 வயது என்று சொல்கிறது. ஆனால் 10 நிமிடங்களுக்குள், மூன்று யூக்கா (Yucca) மரங்களின் வேர்களில் இருந்து கிழங்குகளைப் பிரித்தெடுக்க அவற்றை தோண்டி எடுக்கிறார். தனது கத்தியால் இரண்டே வெட்டுகளில் ஒரு வாழை மரத்தை சாய்த்துவிட்டார். தன் முதுகில் ஒரு பெரிய வாழைத் தாரைச் சுமந்துகொண்டு, தனது தோட்டத்திலிருந்து வீட்டை நோக்கி நடக்க தொடங்குகிறார். இந்த தோட்டத்தில்தான் மரவள்ளிக்கிழங்கு, சோளம், வாழை மற்றும் அரிசி ஆகியவற்றை அவர் பயிரிடுகிறார். பொலிவியாவின் தலைநகரான லா பாஸுக்கு வடக்கே 600 கிமீ தொலைவில் உள்ள அமேசான் மழைக்காடுகளின் உள் பகுதிகளில் வாழும், Tsimanes (‘சீ-மே-நே’ என்று உச்சரிக்கப்படுகிறது) எனும் ஒரு நாடோடி பழங்குடி சமூகத்தைச் சேர்ந்தவர் மார்டினா. இந்த பழங்குடி சமூகத்தில் 16,000 பேர் வாழ்கின்றனர். மார்டினாவின் வலிமை என்பது அவரது வயதையொத்த ‘சீமேநே’ பழங்குடிகளுக்கு அசாதாரணமானது ஒன்றும் அல்ல. இதுவரை ஆய்வு செய்யப்பட்டதில் இவர்களுக்குதான் ஆரோக்கியமான தமனிகள் (Arteries) உள்ளன என்று விஞ்ஞானிகள் குழு கூறுகிறது. இவர்களின் மூளை வட அமெரிக்கா, ஐரோப்பா மற்றும் பிற பகுதிகளில் உள்ளவர்களை விட மெதுவாகவே மூப்படைகிறது என்ற முடிவுக்கு விஞ்ஞானிகள் வந்துள்ளனர். சீமேநே மிகவும் அரிதான ஒரு பழங்குடிக் குழு. வேட்டையாடுதல், உணவு தேடுதல் மற்றும் விவசாயம் என முழுமையான ஒரு வாழ்க்கை முறையை வாழும், உலகின் சில குறிப்பிட்ட சமூகங்களில் சீமேநேவும் ஒன்று. இந்த சமூகம், ஒரு கணிசமான அறிவியல் மாதிரியை வழங்கும் அளவுக்கு பெரியது. நியூ மெக்ஸிகோ பல்கலைக்கழகத்தின் மானுடவியலாளர் ஹில்லார்ட் கப்லான் தலைமையிலான ஆராய்ச்சியாளர்கள் இருபது ஆண்டுகளாக இச்சமூகத்தை ஆய்வு செய்துள்ளனர். படக்குறிப்பு, தனக்கு வயது 78 என்று சொல்கிறார் ஜுவான் ‘சீமேநே’ பழங்குடிகளின் வாழ்க்கை முறை விலங்குகளை வேட்டையாடுதல், பயிர் செய்தல் மற்றும் கூரைகளை வேய்தல் என ‘சீமேநே’ பழங்குடிகள் தொடர்ந்து சுறுசுறுப்பாக இயங்கக் கூடியவர்கள். பகல் நேரத்தில் 10%க்கும் குறைவான நேரத்தையே அதிக உடலுழைப்பு தேவைப்படாத வேலைகளில் சீமேநே பழங்குடிகள் செலவிடுகிறார்கள். அதே சமயம் தொழில்துறையில் உள்ள மக்கள், 54% நேரத்தை அதிக உடலுழைப்பு தேவைப்படாத வேலைகளில் செலவிடுகின்றனர். எடுத்துக்காட்டாக, ஒரு சராசரி வேட்டை நிகழ்வு எட்டு மணி நேரத்திற்கும் மேலாக நீடிக்கும் மற்றும் 18 கிமீ (11 மைல்) தூரம் வரை செல்ல வேண்டியிருக்கும். அவர்கள் மானிக்கி நதியில் வாழ்கின்றனர். பதப்படுத்தப்பட்ட உணவுகள், மதுபானம் மற்றும் சிகரெட்டுகள் போன்ற பொருட்கள் அவர்களுக்கு எளிதாகக் கிடைப்பதில்லை. அவர்கள் உண்ணும் கலோரிகளில் 14% மட்டுமே கொழுப்பிலிருந்து கிடைக்கிறது என்று ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்துள்ளனர், இது அமெரிக்காவில் 34% ஆகும். அவர்களின் உணவுகளில் நார்ச்சத்து அதிகம் மற்றும் 72% கலோரிகள் கார்போஹைட்ரேட்டிலிருந்து வருகின்றது. ஆனால் இது அமெரிக்காவில் 52% ஆகும். அவர்கள் வேட்டையாடும் பறவைகள், குரங்குகள் மற்றும் மீன்கள் போன்ற விலங்குகளிலிருந்து புரதங்கள் கிடைக்கின்றன. அவர்களது பாரம்பரிய சமையல் முறைப்படி உணவைப் பொரிப்பது இல்லை. பட மூலாதாரம்,MICHAEL GUVERN படக்குறிப்பு, சீமேநே பழங்குடிகளின் பாரம்பரிய சமையல் முறைப்படி உணவைப் பொரிப்பது இல்லை கலிபோர்னியா பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த பேராசிரியர் கப்லான் மற்றும் அவரது சக பணியாளரான மைக்கேல் குர்வெனின் ஆரம்பக்கால பணி மானுடவியல் சார்ந்ததாக இருந்தது. சீமேநே சமூகத்தின் முதியோர்களிடம் உயர் இரத்த அழுத்தம், நீரிழிவு அல்லது இதயப் பிரச்னைகள் போன்ற முதுமையின் பொதுவான நோய்களின் அறிகுறிகள் தென்படவில்லை என்பதை அவர்கள் கவனித்தனர். பின்னர் 2013இல் வெளியிடப்பட்ட ஒரு ஆய்வு பேராசிரியர் கப்லானின் ஆராய்ச்சி குழுவின் கவனத்தை ஈர்த்தது. அமெரிக்காவை சேர்ந்த இதய நோய் நிபுணர் ராண்டால் சி தாம்சன் தலைமையிலான குழு, பண்டைய எகிப்து, இன்கா மற்றும் உனங்கன் நாகரிகங்களிலிருந்து 137 மம்மிகளை ஆய்வு செய்ய சிடி (CT) ஸ்கேனிங்கைப் பயன்படுத்தியது. மனிதர்களுக்கு வயதாகும்போது, கொழுப்புச் சத்து, ரத்தக் கொழுப்பு மற்றும் இதர பொருட்களின் உருவாக்கம் தமனிகளை கெட்டியாக்குகிறது அல்லது கடினப்படுத்துகிறது. இதனால் அத்தரோஸ்கிலரோசிஸ் (atherosclerosis) என்ற பாதிப்பு ஏற்படுகிறது. 47 மம்மிகளில் இதற்கான அறிகுறிகளை அவர்கள் கண்டறிந்தனர். நவீன வாழ்க்கை முறைகளால்தான் இதுபோல ஏற்படுகிறது என்ற அனுமானங்கள் மீதான சந்தேகத்தை இது எழுப்பியது. இரண்டு ஆராய்ச்சிக் குழுக்களும் இணைந்து, 40 வயதிற்கு மேற்பட்ட 705 சீமேநே பழங்குடிகள் மீது சிடி ஸ்கேன்களை மேற்கொண்டனர். அடைபட்ட இரத்த நாளங்கள் மற்றும் மாரடைப்பு அபாயத்தின் அடையாளமாக இருக்கும் கரோனரி ஆர்டரி கால்சியத்தைக் (சிஏசி) கண்டறிவதே இதன் நோக்கம். ‘தி லான்செட்’ இதழில் 2017 ஆம் ஆண்டு முதன்முதலில் வெளியிடப்பட்ட அவர்களின் ஆய்வில், 75 வயதுக்கு மேற்பட்ட 65% சீமேநே பழங்குடிகளுக்கு சிஏசி இல்லை என்பதைக் காட்டுகிறது. அந்த வயதுடைய பெரும்பாலான அமெரிக்கர்கள் (80%) அதற்கான அறிகுறிகளைக் கொண்டுள்ளனர். படக்குறிப்பு, சீமேநே பழங்குடிகள் சராசரியாக ஒரு நாளைக்கு 16,000 முதல் 17,000 அடிகள் வரை நடக்கிறார்கள் ‘யாருக்கும் அல்சைமர் நோய் இல்லை’ கப்லான் கூற்றுப்படி, "75 வயதான சீமேநே பழங்குடிகளின் தமனிகள் 50 வயதான அமெரிக்கரின் தமனிகளைப் போன்று உள்ளது." இரண்டாம் கட்டமாக, 2023இல் ‘ப்ரோசீடிங்ஸ் ஆஃப் தி நேஷனல் அகாடமி ஆஃப் சயின்ஸ்’ இதழில் ஒரு ஆய்வு வெளியிடப்பட்டது. பிரிட்டன், ஜப்பான் மற்றும் அமெரிக்கா போன்ற தொழில்மயமான நாடுகளில் உள்ள மக்களுடன் ஒப்பிடும்போது, சீமேநே பழங்குடிகள் 70% குறைவான பெருமூளைச் சிதைவை எதிர்கொள்வதாக அந்த ஆய்வு கூறியது. "சீமேநே பழங்குடி மக்கள்தொகையில், யாருக்கும் அல்சைமர் நோய் இல்லை என்பதை நாங்கள் கண்டறிந்தோம். இது மிகப்பெரிய சாதனை" என்று ஆராய்ச்சியாளர்களின் மருத்துவ ஒருங்கிணைப்பாளரான பொலிவியன் மருத்துவர் டேனியல் ஈத் ரோட்ரிக்ஸ் கூறுகிறார். படக்குறிப்பு, ஹில்டா தனது இரண்டாவது கணவர் பாப்லோவுடன் வசித்து வருகிறார் ‘முதுமையை உணர்கிறோம்’ அவர்களின் பதிவுகளின்படி, ஹில்டாவுக்கு வயது 81. ஆனால் சமீபத்தில் தனது குடும்பம் ‘தனது 100வது பிறந்தநாளைக்’ கொண்டாடுவதற்காக ஒரு பன்றியை வெட்டி விருந்து வைத்ததாக ஹில்டா கூறுகிறார். தனக்கு வயது 78 என்று சொல்லும் ஜுவான் எங்களை வேட்டையாட அழைத்துச் செல்கிறார். அவரது தலைமுடி கருமையாகவும், கண்கள் உற்சாகத்துடனும், கைகள் உறுதியாகவும் உள்ளன. தனக்கு வயதாவதை உணர்வதாகவும் அவர் ஒப்புக்கொள்கிறார், "இப்போது எனக்கு மிகவும் கடினமான விஷயம் என் உடல்தான். நான் இனி அதிக தூரம் நடப்பதில்லை” என்கிறார் அவர். மார்டினாவும் தனது முதுமையின் சிரமத்தை ஒப்புக்கொள்கிறார். காடுகளின் உள்பகுதிகளில் வளரும் தாவரமான ஜடாட்டாவிலிருந்து மேற்கூரைகளை வேய்வதில் சீமேநே பெண்கள் புகழ்பெற்றவர்கள். இந்தத் தாவரத்தைக் கண்டுபிடிக்க, மார்டினா மூன்று மணி நேரம் காட்டுக்குள்ளும், பிறகு மூன்று மணி நேரம் வீட்டிற்கும், ஜடாட்டா கிளைகளை முதுகில் சுமந்து நடக்க வேண்டும். "நான் மாதத்திற்கு ஒரு முறை அல்லது இரண்டு முறை மட்டுமே இதைச் செய்கிறேன், இப்போது அது எனக்கு மிகவும் கடினமாக உள்ளது," என்று அவர் கூறுகிறார். படக்குறிப்பு, தனக்கு வயதாவதை உணர்வதாக ஜுவான் ஒப்புக்கொள்கிறார் இருப்பினும், பல சீமேநே மக்கள் முதுமையை அடைவதில்லை. இந்த ஆய்வு தொடங்கியபோது, அவர்களின் சராசரி ஆயுட்காலம் 45 ஆண்டுகளாக இருந்தது. இப்போது அது 50ஆக உயர்ந்துள்ளது. "80 வயதை எட்டும் இந்த மக்களில் சிலர், நோய்கள் மற்றும் நோய்த்தொற்றுகள் நிறைந்த குழந்தைப் பருவத்தில் இருந்து தப்பிப்பிழைத்தவர்கள்" என்கிறார் டாக்டர் ஈத். அனைத்து சீமேநே மக்களும் தங்கள் வாழ்நாளில் ஒட்டுண்ணிகள் அல்லது புழுக்களால் ஒருவித தொற்றுநோய்க்கு ஆளானதாக ஆராய்ச்சியாளர்கள் நம்புகின்றனர். அவர்கள் சீமேநே பழங்குடிகள் உடலில் அதிக அளவு நோய்க்கிருமிகள் மற்றும் வீக்கத்தைக் கண்டறிந்தனர். சீமேநே பழங்குடிகள் தொடர்ந்து தொற்றுநோய்களுடன் போராடுகிறார்கள் என்பதை இது காட்டுகிறது. உணவு பழக்கங்கள் மற்றும் உடற்பயிற்சியோடு சேர்த்து, வயதான சீமேநே மக்களின் ஆரோக்கியத்திற்கு பின்னால், இந்த ஆரம்பகால நோய்த்தொற்றுகள் மற்றொரு காரணியாக இருக்க முடியுமா என்று ஆச்சரியப்படுவதற்கு இது வழிவகுத்தது. படக்குறிப்பு, இரண்டு ஆராய்ச்சிக் குழுக்களும் இணைந்து, 40 வயதிற்கு மேற்பட்ட 705 ‘சீமேநே’ பழங்குடிகளுக்கு சிடி ஸ்கேன்களை மேற்கொண்டனர் ‘மாறிவரும் வாழ்க்கை முறை’ இருப்பினும், இந்த சமூகத்தின் வாழ்க்கை முறை மாறி வருகிறது. சில மாதங்களாக போதுமான அளவு பெரிய விலங்கை வேட்டையாட முடியவில்லை என்று ஜுவான் கூறுகிறார். 2023 ஆம் ஆண்டின் இறுதியில் ஏற்பட்ட தொடர் காட்டுத் தீ, கிட்டத்தட்ட இரண்டு மில்லியன் ஹெக்டேர் காடுகளை அழித்தது. "நெருப்பு விலங்குகளை இங்கிருந்து வெளியேறச் செய்தது," என்று அவர் கூறுகிறார். அவர் இப்போது கால்நடைகளை வளர்க்கத் தொடங்கியுள்ளார். மோட்டார் படகுகளின் பயன்பாடும் மாற்றத்தைக் கொண்டுவருவதாக டாக்டர் ஈத் கூறுகிறார். இதன் மூலம் சீமேநே பழங்குடிகள் வணிகச் சந்தைகளை எளிதாக அடைய முடிகிறது. சர்க்கரை, மாவு மற்றும் எண்ணெய் போன்ற உணவுகளை அவர்களால் எளிதில் அணுக முடிகிறது. படக்குறிப்பு, மோட்டார் படகுகளின் பயன்பாடும் மாற்றத்தைக் கொண்டுவருவதாக டாக்டர் ஈத் கூறுகிறார் மோட்டார் படகுகள் காரணமாக அவர்கள் முன்பை விட குறைவான துடுப்பு படகுகளை பயன்படுத்துகிறார்கள் என்று டாக்டர் ஈத் சுட்டிக்காட்டுகிறார். "மிகவும் உடலுழைப்பு தேவைப்படும் செயல்பாடுகளில் துடுப்பு படகு ஓட்டுவதும் ஒன்று" என்கிறார் அவர். இருபது ஆண்டுகளுக்கு முன்பு, நீரிழிவு நோய் பாதிப்பு அரிதாகவே இருந்தது. இப்போது இம்மக்களிடையே அவை தோன்றத் தொடங்கியுள்ளன. மேலும் இளைஞர்களிடையே கொலஸ்ட்ரால் அளவும் அதிகரிக்கத் தொடங்கியுள்ளது என்று ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்துள்ளனர். "அவர்களின் பழக்கவழக்கங்களில் ஏதேனும் ஒரு சிறிய மாற்றம் இந்த சுகாதாரக் குறியீடுகளை பாதிக்கிறது" என்று டாக்டர் ஈத் கூறுகிறார். இந்த ஆராய்ச்சியாளர்களின் 20 ஆண்டுகால ஈடுபாடு சீமேநே பழங்குடிச் சமூகத்தில் ஒரு குறிப்பிடத்தக்க தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. கண்புரை அறுவை சிகிச்சை முதல் எலும்பு முறிவுகள் மற்றும் பாம்பு கடிகளுக்கான சிகிச்சை வரை சீமேநே மக்களுக்கான சிறந்த மருத்துவ வசதிகளை அவர்கள் ஏற்பாடு செய்துள்ளனர். ஆனால் ஹில்டாவைப் பொறுத்தவரை, முதுமை என்பது பெரிதாக எடுத்துக் கொள்ளப்பட வேண்டிய ஒன்றல்ல. "நான் இறப்பதைப் பற்றி பயப்படவில்லை, ஏனென்றால் அவர்கள் என்னை பூமியில்தான் அடக்கம் செய்யப் போகிறார்கள், நான் இங்கேயேதான் இருக்கப் போகிறேன்…மிகவும் அமைதியாக" என்று அவர் புன்னகையுடன் எங்களிடம் கூறுகிறார். https://www.bbc.com/tamil/articles/cly3z2dz2e2o
  26. சுரேன் ஆளுனராக இருந்த போது யாழ் நகரில் ஒரு புத்தகக் கண்காட்சியை ஒழுங்கு செய்திருந்தார். மிகவும் நன்றாக இருந்தது என்று இதில் பரிச்சயம் மிக்க நண்பர்கள் சொல்லியிருந்தனர். ஈழத்து எழுத்து, எங்களின் பதிப்பகம் என்று இந்த துறையில் எங்கள் மீது இருக்கும் தமிழ்நாட்டின் அளவு மீறிய செல்வாக்கை கட்டுக்குள் கொண்டு வர இது ஒரு ஆரம்பமாகவும் இருக்கும் என்றும் சொல்லப்பட்டது....... (ஆனால் அப்படி நடக்கவில்லை...) பின்னர் கனடாவில் ஒரு கூட்டத்தில் இலங்கையில் இனப் படுகொலை நடக்கவே இல்லை என்று சுரேன் சொன்னார். தொடர்ந்து இதே போன்ற இலங்கை அரசுக்கு ஆதரவான கருத்துகளை தெரிவித்துக் கொண்டிருக்கின்றார். இன்னொரு லக்‌ஷமன் கதிர்காமர் ஆவதே இவரின் இலட்சியம் போலுள்ளது. அதற்கான கல்வித் தகுதி ஏற்கனவே உள்ளது, பிற தகுதிகளை வளர்த்துக் கொண்டிருக்கின்றார்.......... University of Kent மற்றும் University of Ottawa இல் தான் படித்திருக்கின்றார். ஆதலால் ஒக்ஸ்ஃபோர்ட் புலமைப் பரிசில் தகவல் சரியானதாகத் தெரியவில்லை. அதே போன்றதே இவர் பௌத்த மதத்திற்கு மாறினார் என்பதும். மதம் எதுவும் இல்லை (Other) என்றே இவரின் இலங்கைப் பாராளுமன்ற உறுப்பினர் விபரத்தில் இருக்கின்றது. கனடாவில் அகதியாகப் பதிவது, பின்னர் கனடா குடியுரிமை பெறுவது, அரச உதவிகள் பெறுவது, இவை எல்லாம் ஒரு விடயங்களே அல்ல. இது எல்லோரும் செய்யும் மற்றும் சட்டத்திற்கு எதிரான விடயங்களும் இல்லை. வில்லங்கமான விசயம் என்னவென்றால், எந்தக் கட்சி, தலைவர்கள் இலங்கையில் ஆட்சிக்கு வந்தாலும் இவர் ஒரு அமைச்சராகவே இருப்பார். இருந்து கொண்டே இப்படியான கருத்துகளையும் தெரிவிப்பார். இப்படியானவர்களும் என்றும் வந்து கொண்டே இருப்பார்கள். அந்த நாளில் குமாரசூரியர் என்று ஒருவர் இருந்தாரே...............
  27. Vaazhai நல்லாருக்கா? Mari Selvaraj-க்கு இது சிறந்த படமா? ஊடகங்கள் சொல்வது இதுதான் | Vaazhai Review
  28. "அப்பா நாங்கள் accidents இல் ஒருவர் இறந்து விட்டார் என்று கேள்விப்பட்டவுடன், அவர் பாவம் என்று கடந்து விடுகின்றோம்... ஆனால் அவருக்கு பின்னால் அவர் அம்மா, அக்கா, அப்பா, பிரெண்ட், என்று எத்தனை பேர் துடிதுடித்து போவினம் என்று நாங்கள் நினைப்பதே இல்லை" என் மகள் இப் படம் முடிந்த பின் காரில் வரும் போது கூறியது. நேற்று மகளையும் கூட்டிக் கொண்டு மாரி செல்வராஜின் வாழை படம் பார்க்க போனோம். உன்னதமான திரைமொழியில், மிகச் சிறந்த உடல் மொழியில், நடப்பவற்றை சினிமா என நம்ப முடியாத காட்சிகளில், உயிரோட்டமான இசையில், பதைக்க வைக்கும் கிளைமாக்ஸில் வாழை எம் முன் விரிகின்றது. சிவனணைந்தான் எனும் சிறுவனின் பார்வை மற்றும் அனுபவத்தின் வாயிலாக வாழை ஒரு கிராமத்தில் கூலிக்காக சுரண்டப்படும், அதனை கேள்வி கேட்கும் சாதாரண மனிதர்களின் நாளாந்த கடின வாழ்வை பேசுகின்றது. குலை குலையாக வாழை குலைகளை சுமந்து வியாபாரிகளுக்காக உழைக்கின்ற ஏழைகளுக்கு கடும் பசியில் கூட ஒரே ஒரு வாழைப்பழத்தை சாப்பிட தானும் கொடுக்க மறுக்கும் உலகை மிக இயல்பாக வாழை காட்டுகின்றது. பதின்ம வயதில் ரீச்சர் மேல் வரும் ஈர்ப்பை கவிதையாக காட்டிய விதமும் அருமை. கொஞ்சம் கூட தனக்கு சம்பந்தம் இல்லாத, கேள்விப்படாத, கற்பனை செய்ய முடியாத, மாந்தர்களின் வாழ்வைஎ என் மகளுக்கு கூட உணர்வு பூர்வமாக புரிய வைக்கிறது மாரி செல்வராஜின் திரைமொழி. பல நாட்களுக்கு சிவனணைந்தான், அவன் காதல், அவனது அக்கா, சுற்றம், நட்பு, கிராமம், மாடு, அந்த கோழி எல்லாம் என் நினைவுகளை விட்டு அகலாது..
  29. 'துயிலும் இல்லப்பாடல்' என பொதுவாக அழைக்கப்படும் 'தாயகக் கனவுடன் சாவினைத் தழுவிய சந்தனப் பேழைகளே' பாடல் ஈழப்போராட்ட காலத்தே எழுந்த பாடல்களுள் நின்று நிலைக்கும் ஒரு பாடலாகும். எப்பாடலை தவிர்த்துப் போனாலும் இப்பாடலை தவிர்க்கமுடியாத அளவிற்கு இது முக்கியத்துவம் பெற்றுவிட்டது. காரணம் ஆண்டுதோறும் நினைவுகொள்ளப்படும் மாவீரர் நாள் அப்பாடலை ஒலிக்கச் செய்கிறது அல்லது நினைக்க வைக்கிறது. ஈழப்போராட்ட காலத்தில் எழுந்த பாடல்களில் துயிலுமில்லப் பாடல் கொண்டுள்ள சில முக்கியத்துவ நோக்குகளை இவ்விடத்தே நோக்கலாம். துயிலும் இல்லப்பாடல் இரண்டு சந்தர்ப்பங்களில் முக்கியமாக ஒலிக்க விடப்பட்டது, ஒலிக்கவிடப்படுகிறது. ஒன்று போர்க்காலத்தில் மாவீரர் துயிலும் இல்லத்தில் மாவீரர் ஒருவரின் வித்துடலினை புதைகுழியில் இடுவதற்கு முன்பாக வித்துடற் பீடத்திலே இடம்பெறும் உறுதியுரையினைத் தொடர்ந்து, துப்பாக்கி வேட்டுச் சத்தங்கள் மூன்று ஒலித்த பின்னே இப்பாடல் ஒலிக்கும். அத்துடன் உடல் கிடைக்கப்பெறாத மாவீரர்களுக்கான நினைவுக்கல் திரைநீக்கத்தின் போதும் துயிலுமில்லத்தில் இப்பாடல் ஒலிக்கும். மலரிடுதல், மண் போடுதல் என்பனவற்றிற்கு வேறு பாடல்களை புலிகள் கொண்டிருந்தனர். இரண்டாவது மாவீரர் நாளின்போது சுடர்கள் ஏற்றப்பட்ட பின்னர் இப்பாடல் ஒலிக்கவிடப்படும். இவையிரண்டுமே பிரதானமானவை. ●துயிலும் இல்லப்பாடல் மாற்றத்துக்குள்ளாகி மீளவும் ஒலிப்பதிவாக்கப்பட்டது ஏன்? தமிழீழ விடுதலைப் புலிகளினால் அறிமுகம் செய்யப்பட்ட பாவனையிலுள்ள துயிலும் இல்லப் பாடலானது தொகையறா, பல்லவி, அனுபல்லவி, இரு சரணங்களைக் கொண்டது. 'மொழியாகி எங்கள் மூச்சாகி நாளை' எனத்தொடங்கும் தொகையறாவும், 'தாயகக் கனவுடன் சாவினைத் தழுவிய சந்தனப் பேழைகளே' எனத்தொடங்கும் பல்லவியும் உண்டு. 'எங்கே எங்கே ஒருதரம் விழிகளை இங்கே திறவுங்கள். ஒருதரம் உங்களின் திருமுகம் காட்டியே மறுபடி உறங்குங்கள்' என்பது அனுபல்லவி. முதலாவது சரணம் ஆரம்பத்தில் இப்படி அமைந்திருந்தது. நள்ளிரா வேளையில் நெய்விளக்கேற்றியே நாமுமை வணங்குகின்றோம். உங்கள் கல்லறை மீதிலெம் கைகளை வைத்தொரு சத்தியம் செய்கின்றோம். சாவரும் போதிலும் தணலிடை வேகிலும் சந்ததி தூங்காது – எங்கள் தாயகம் வரும் வரை தாவிடும் புலிகளின் தாகங்கள் தீராது. (எங்கே எங்கே ஒருதரம் விழிகளை இங்கே திறவுங்கள்) இப்படி அமையப்பெற்றதே சரணம். காரணம் 1989 முதலாக ஆரம்பத்தில் குறிப்பிட்டளவு ஆண்டுகள் மாவீரர் நாளானது நவம்பர் 27ஆம் திகதி நள்ளிரவு வேளையில்தான் அனுட்டிக்கப்பட்டது. பின்னைய நாட்களில் மாலைப்பொழுதில் இடம்பெற்ற அத்தனை அம்சங்களும் முன்பு நள்ளிரவில்தான் நடந்தேறின. நள்ளிரவிலேயே அன்றைய நாட்களில் மக்கள் துயிலும் இல்லத்தில் சேர்ந்தனர். மக்கள் விழித்திருந்தே சுடர் ஏற்றினர். புலிகளின் தலைமையின் உரையும் நள்ளிரவில்தான் ஒலிபரப்பானது. காரணம் முதல் மாவீரன் சங்கர் அவர்கள் 1982இல் நள்ளிரா வேளையில் மரணித்ததான ஒருபதிவே தென்பட்டமை ஆகும். ஆயினும் மிகச்சிறந்த ஆவணவாதியும், புலிகளின் கல்விக்கழகக் பொறுப்பாளருமான வெ.இளங்குமரன் என்கிற பேபி அவர்கள் 1982இன் ஓர் ஆவணத்தை கண்டெடுத்துவிட்டார். அது புலிகளின் தலைமையின் பதிவு. மாவீரர் சங்கர் அவர்களுக்கானது. அதில் மாலை 06.05மணி என்பதே முதல் மாவீரரின் மரணிப்பு என்பதே பதிவாக காணப்பட்டது. உடனடியாகவே புலிகள் மாவீரர் நாளின் நேரத்தை மாற்றினர். நள்ளிரா தீபமேற்றல் மாலை 06.05 மணியானது. 1995இன் பின்னரே இம்மாற்றம் இடம்பெற்றதாக அறியமுடிகிறது. இது மட்டுமா? துயிலும் இல்லப் பாடலில் நள்ளிரா வேளை விளக்கேற்றுவதான வரிகள் உள்ளதே. அந்த நாட்களில் புலிகளால் மாவீரர் குடும்பங்களுக்கு வழங்கப்படும் மாவீரர் படங்களில் துயிலும் இல்லப்பாடலும் இடம்பெற்றிருக்கும். உடனடியாகவே பாடலின் சரணத்தினையும் புலிகள் மாற்றத்திற்குள்ளாக்கினர். கவிஞர் புதுவை இரத்தினதுரையே இப்பாடலை எழுதியவர். மேலே சொல்லிய முதற்சரணத்தில் உள்ள 'நள்ளிரா வேளையில் நெய்விளக்கேற்றியே நாமுமை வணங்குகிறோம்' எனும் வரியானது கீழ்வருமாறு மாறுதலானது. வல்லமை தாருமென்றுங்களின் வாசலில் வந்துமே வணங்குகின்றோம். என்பதே அவ்வரி. இதுவே இப்போது பாவனையில் உள்ளது. ஏனைய வரிகள் மாற்றம் பெறவில்லை. இவ்விடத்தே துயிலும் இல்லப் பாடலில் உள்ள இன்னுமொரு விடயத்தைச் சொல்ல வேண்டும். துயிலும் இல்லப் பாடலில் எந்த இடத்திலும் புலிகளின் தலைவரின் பெயர் இடம்பெறவில்லை. 'தலைவன்' என பொதுமைப்பட ஈரிடங்களில் வந்துள்ளதே தவிர அவரது பெயர் பாடலில் இடம்பெறவில்லை. உலகில் உருவாகிய தமிழ்ப்பாடல்களில் உலகெலாம் ஒரே திகதியில் ஒரே நேரத்தில் ஆண்டில் ஒரே ஒரு தடவை ஒலிக்கும் பாடல் எனும் பதிவும் புலிகளின் துயிலும் இல்லப்பாடலுக்கு உண்டு. இப்பாடலினை கவிஞர் புதுவை இரத்தினதுரை எழுத, இசைவாணர் கண்ணன் அவர்களின் இசையில் மாவீரர் சிட்டு, மணிமொழி, அபிராமி, வர்ணராமேஷ்வரன் ஆகியோர் பாடியிருந்தனர். --> புரட்சி
  30. மூர்க்கனும் முதலையும் கொண்டது விடா. அதாவது மகா ஜனங்களே,... தீர்க்கமான முடிவை முதலை போல அல்லது மூர்க்கன்போல யாரும் எடுக்கலாம். அதற்கு புத்தி தேவை இல்லை. முட்டாளாலும் தீர்க்கமான முடிவை எடுக்க முடியும். ஆனால் அது பயன்தருமா? ஆனால் அந்தத் தீர்க்கமான முடிவு புத்தியைப் பாவித்து எடுக்கப்பட்டால் மாத்திரமே அது பயன் தரும்.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.