Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Leaderboard

  1. putthan

    கருத்துக்கள உறவுகள்
    8
    Points
    14676
    Posts
  2. தமிழ் சிறி

    கருத்துக்கள உறவுகள்
    6
    Points
    87990
    Posts
  3. valavan

    கருத்துக்கள உறவுகள்
    5
    Points
    1569
    Posts
  4. கந்தப்பு

    கருத்துக்கள உறவுகள்
    2
    Points
    12678
    Posts

Popular Content

Showing content with the highest reputation on 11/19/24 in all areas

  1. பழம்பெரும் அரசியல்வாதியான என்னை விட 12 புள்ளிகள் அதிகமாக வீரப்பையன் பெற்ற காரணத்தால் இன்றிலிருந்து நான் அரசியலில் ஒய்வு பெறுகிறேன்....இளஞர்களுக்கு வழிவிட்டு ....இளைப்பாறுகிறேன் ....தமிழ் தேசியம் இனி உங்கள் போன்றோரின் கையில் தான் உள்ளது...😅
  2. இதுவரை காலமும் மஹிந்தவுடன் இருந்து இவர்கள் அனுபவிச்ச பதவி சுகம் பறிபோனதை தாங்க முடியாமல் எதை தின்றால் பித்தம் தணியும் என்பதுபோல் எதை பேசி என்பிபி ஆட்சிக்கு எதிராக போர் தொடுக்கலாம் என்பது அவர் முகத்தில் அப்பட்டமாக தெரிகிறது. அதன் பிரதிபலிப்பாக மதவாதத்தை கையிலெடுத்து முஸ்லீம்களை அநுரவுக்கெதிரா கொந்தளிக்க மறைமுகமாக சொல்கிறார். கால சக்கரம் எதிராக சுழல்கிறது, கடந்த பல தாசாப்தங்களாக தமிழர்களுக்கெதிராக வன்மம் கக்கி சிங்களவர்களுடன் ஒட்டியுறவாடி பதவி பொருளாதாரம் என்று அனுபவித்த இனத்திலிருந்து விலகி அரசியலாலும் சிங்கள மக்கள் புரிதலாலும் படிப்படியாக சிங்கள சமூகம் தமிழர்களை நோக்கி நகர்கிறது. வெறும் மதவாத வன்மம் கக்கி சிங்களவர்களுக்கெதிராய் இவர்கள் காய் நகர்த்தினால் சிங்களம் தமிழர்களுடன் இறுக்கமான நட்பை பேணி இவர்கள் சமூகத்தை தள்ளி வைக்கும் நிலையில்தான் இந்த தேர்தலின் பின்னர் இலங்கை நிலவரம் இருக்கிறது. இவர்களுக்கு ஆப்பு வைத்ததில் பெரும்பங்கு சிங்களவர்களுடன் கூட இருந்தே அவர்களுக்கு குழிபறித்த சஹ்ரானுக்கு இருக்கிறது. தமிழர்களுடன் பெரும்போரில் ஈடுபட்டிருந்தாலும் நேருக்கு நேர் மோதிய நேர்மையான எதிரிகள் என்பது பல சிங்களவர்கள் மனதில் உண்டு.
  3. வினா 49) 23 போட்டியாளர்கள் தேசிய மக்கள் சக்தியில் இருந்து பிரதமர் தெரிவு செய்யப்பட்டார் என்பதை சரியாக கணித்திருக்கிறார்கள். 1)வாலி - 47 புள்ளிகள் 2)பிரபா- 46 புள்ளிகள் 3)வாதவூரான் - 45 புள்ளிகள் 4) நிலாமதி - 43 புள்ளிகள் 5) வீரப்பையன் - 42 புள்ளிகள் 6)அல்வாயான் - 41 புள்ளிகள் 7)தமிழ்சிறி - 40 புள்ளிகள் 8)புரட்சிகர தமிழ் தேசிகன் - 40 புள்ளிகள் 9)goshan_che - 40 புள்ளிகள் 10)வில்லவன் - 39 புள்ளிகள் 11)நிழலி - 39 புள்ளிகள் 12)கிருபன் - 38 புள்ளிகள் 13)ஈழப்பிரியன் - 38 புள்ளிகள் 14)நூணாவிலான் - 38 புள்ளிகள் 15)ரசோதரன் - 38 புள்ளிகள் 16)சுவைபிரியன் - 37 புள்ளிகள் 17)கந்தையா 57 - 36 புள்ளிகள் 18)சசிவர்ணம் - 34 புள்ளிகள் 19)வாத்தியார் - 32 புள்ளிகள் 20) அகத்தியன் - 31 புள்ளிகள் 21) குமாரசாமி - 31 புள்ளிகள் 22)புலவர் - 30 புள்ளிகள் 23)புத்தன் - 30 புள்ளிகள் 24) சுவி - 29 புள்ளிகள் 25) வசி - 22 புள்ளிகள் 26) தமிழன்பன் - 20 புள்ளிகள் இதுவரை 1, 2,4 - 13, 16 - 20, 22, 24 - 34, 37 - 43, 45, 48, 49, 52, 54 ,59 கேள்விகளுக்கு புள்ளிகள் வழங்கியுள்ளேன் ( அதிக பட்ச புள்ளிகள் 76)
  4. ஒரு சிறுபான்மை இனமாக இருந்து அதனால் ஏற்பட்ட அடக்குமுறைகளால் தமிழ் இளையோர் ஆயுதம் ஏந்திய பின்னர் புலிகள் தமிழ் மக்கள் நலன் சார் நிலையில் விட்டுக்கொடுப்பினை என்ற நிலையில் உறுதியாக நின்றார்கள், ஆனாலிஸ்லாமியர் ஆரம்பத்திலிருந்து தனித்துவமான போக்கினை கடைப்பிடிக்கின்றனர், புலிகளின் பின்னர் வந்த அரசியல்வாதிகள் தமது சொந்த நலனில் எந்தவித விட்டுக்கொடுப்பினையும் செய்யாமல் மறுவளமாக தமது இனத்தினை காட்டி வியாபாரம் செய்கிறவர்களாக இருப்பதால் சிங்கள பேரினவாதத்திற்கு இஸ்லாமியர்களும் அவர்களது அரசியல்வாதிகளும் அச்சத்தினை கொடுக்கின்ற நிலை காணப்படுகின்றது. இப்போது அவர்கள் இலக்கு இன்னொரு சிறுபான்மையினரான இஸ்லாமியார்களாக உள்ளார்கள், தமிழ் மக்களின் மீட்கு சிங்கள பெரும்பான்மை தாக்கும் போது அதனை தடுக்க எத்தனிக்காமல் அதனை விட மோசமான நடவடிக்கையாக தாமும் அதில் இணைந்து தவறு செய்தார்கள். தற்போது இஸ்லாமியருக்கு எதிராக திரும்பும் இந்த பெரும்பான்மைக்கு தமிழ் மக்கள் ஆதரவ்ளித்து தவறிழைக்க கூடாது, பாதிப்பிற்குள்ளாகும் சிறுபான்மையினரான இஸ்லாமியர்களுக்கே எமது ஆதரவு இருக்கவேண்டும்.
  5. ஓம்... புத்தன். முஸ்லீம் நாடுகளிடமிருந்து பணம் பெற்று காத்தான் குடியை கிட்டத் தட்ட அரபு தேசம் மாதிரி நினைப்பது போன்றவை எல்லாம்... அவர்களுக்கு ஒரு வெறுப்புக் கலந்த அச்ச உணர்வை ஏற்படுத்தி இருக்கும்.
  6. மக்கள் என்னை விரும்புவதாலும் மக்கள் உண்ணும் விரதம் இருப்பதாலும் எனது முடிவை மாற்றி தேசியல் பட்டியல் ஊடாக வருகின்றேன்... எனது முடிவை நாளை காலை ஜனாதிபதிக்கு தெரிவிக்கின்றேன்....😅
  7. இல்லை பொறகு தமிழ் தேசியம் அருச்சுனா கையில் கொடுத்த கெளசல்யா போல் ஆகி விடும்🤣. உங்களை தேசியபட்டியல் மூலம் உள்ளீர்க்க வேண்டும் என நான் சாகும் வரை உண்ணும் விரதம் இருக்கப்போகிறேன்🤣.
  8. மேலே பாத்திமா ரினோசா வீடியோவில் மிக தெளிவாக முஸ்லீம் சமூகம் பொறுமை காக்க வேண்டும் இல்லாவிட்டால் வேறுமாதிரி போய்விடும் முதலில் என்ன நடக்கிறது என்பதை பார்ப்போம் என்று தெளீவாக கூறியுள்ளார். பாத்திமா ரினோசா ஒரு முஸ்லீமாக இருந்தாலும் பெரும்பாலும் நடுலையாக பேசும் ஒரு ஊடகவியலாளர் ஒரு பெண் சிங்கம்போலவே கர்ச்சிப்பார், ஒருதடவை பரதநாட்டியம் பற்றி ஒரு முஸ்லீம் தலைவர் கொச்சையாக பேசியபோது தமிழர்களுக்கு ஆதரவாய் பேசி அவருக்கெதிராக கொந்தளித்து அவரை கிழித்து தொங்கவிட்டார் ரினோசா. அவர் மறைமுகமாக சொல்ல வருவது என்னவென்றால் நீங்கள் இனவாதம் பேசி கொந்தளித்தால் சிங்களவர்கள் தமிழர்களுடன் கைகோர்த்துவிடுவார்கள் என்பதே. ஏனெனில் யாழ்ப்பாண தமிழர்கள்பற்றி கீழே இருக்கும் சிங்கள வீடியோவில் ஆயிரம் சிங்களவர்களுக்குமேல் கருத்திட்டார்கள். தமிழர் தமிழர் அவர்கள் எம் மக்கள் என்று சொல்லி எத்தனை சிங்களவர்கள் அழுகிறார்கள், எமக்கு ஆதரவாக கருத்து போடுகிறார்கள், அதில் ஒரு முஸ்லீம்கூட கருத்திடவில்லை என்பதையும் கவனிக்கவேண்டும். ஒரு சிங்களவன்கூட தமிழருக்கெதிராய் கருத்திடவில்லை எவரும் கடந்தகால யுத்தங்கள் பற்றி பேசவில்லை, மாறாக கடந்தகால சிங்கள தலைவர்களையே திட்டியுள்ளார்கள். அந்த வீடியோவில் இந்த தேர்தலின் பின்னர் தமிழர்கள் தொடர்பான சிங்களவர்கள் கருத்து என்பதை பொறுமையாக ஒவ்வொன்றாக மொழி பெயர்த்து பாருங்கள். சிங்களவர் சமூகம் எமக்கு சார்பாய் 100% மாறிவிட்டது என்றோ அல்லது அநுர வந்திட்டார் இனிமே தமிழர்வீட்டு கூரைகளின்மீது பால்மழை பொழிய போகிறது என்றோ நான் ஒருபோதும் சொல்லமாட்டேன், ஆனால் முஸ்லீம்களைவிட தமிழர்கள் எவ்வளவோ நல்லவர்கள் எனும் சூழலை முஸ்லீம்களே சிங்களவர்கள் மனதில் ஏற்படுத்த போகிறார்கள் என்பதே கருத்து. முஸ்லீம்களுக்கு ஒரு அமைச்சு பதவி கொடுத்திருக்கலாம் என்பதில் உடன்பாடு உண்டு, நாமும் தமிழர்களுக்கு ஒரு அமைச்சு பதவி கொடுக்காமல் விட்டால் விமர்சித்திருப்போம் ஆனால் அநுரவின் இந்த அமைச்சரவை பொது தேர்தலுக்கு முன்னரே தீர்மானிக்கப்பட்ட ஒன்று, தமிழ் அமைச்சர்கள் என்று சொல்லப்படுகிறவர்கள்கூட 100% சிங்கள பகுதியில் வாழ்ந்தவர்களே, அதிலும் ஒரு பெண் தமிழ் அமைச்சர் சிங்களத்திலேயே சத்திய பிரமாணம் எடுத்தார்.
  9. இந்த முபறாக் முத்தி…. தமிழரை சாட்டி, பக்கத்து இலைக்கு பாயாசம் கேட்கிறார். 😂 இவ்வளவு காலமும்… மகிந்த, மைத்திரி, கோத்தா, ரணில் என்று ஜானாதிபதி பதவியில் இருப்பவர்களுக்கு குழை அடித்து காரியம் பார்த்துக் கொண்டு இருந்த ஆள்… எந்த வெட்கமும் இல்லாமல், ****… அனுர புகழ் பாட வந்து விட்டார். 🤣
  10. @வீரப் பையன்26 உங்களாலை, புத்தன் அரசியலை விட்டே ஒதுங்கப் போகின்றாராம். அவரை…. ஒதுங்க வேண்டாம் என்று சொல்லி விடுங்கோ. 😂 🤣
  11. கோசான் நீங்கள் ஒரு சிறந்த கருத்தாளர் ஆனால் NPP யையும் அனுரவையும் போட்டு வாங்குகிறீர்கள். எனக்கு உண்மையிலேயே JVP யை பிடித்ததில்லை, குறிப்பாக வீரவன்சவின் முகத்தை பார்த்தாலே கோவம் வரும். இந்த ஜனாதிபதி தேர்தல் ஆரம்பித்ததில இருந்து எங்கட ஹாட்லி சீனியர் ஒருத்தர் திசைகாட்டி சப்போர்ட். அவரின் முகநூலிலே அவரின் பதிவுகளுடன் கண்டபடி சண்டை பிடித்திருக்கிறேன். ஆனால் போகப்போக இந்த NPP பழைய JVP யில் இருந்து வேறுபட்டு தெரிகிறார்கள். தமிழர்களிடம், இருந்த தெரிவுகளில் NPP மட்டுமே சிறந்த தெரிவு. 2005 ஆம் ஆண்டு, நான் A/L படித்துக்கொண்டிருந்தேன். சமாதான பேச்சுவார்த்தை நடந்துகொண்டிருந்தது. இயக்கம் அந்த மிகமுக்கிய ஜனாதிபதி தேர்தலில் ரணிலை புறக்கணித்து மகிந்தவை ஜனாதிபதியாக்கினார்கள். இதற்காக மகிந்த பெருமளவு பணத்தையும் கொடுத்திருந்தார். இறுதியில் நடந்தது என்ன. போராட்டமும் அழிந்து மக்களும் அழிந்ததுதான் மிச்சம். தனித் தமிழீழம் தற்போதைய சூழலில் ஒரு போதுமே சாத்தியப்படாத ஒன்று. தலைவர் காலத்தில் நடக்காதது எக்காலத்திலும் நடக்காது. அதைவிட ஒரு மாகாண சபையையே நிர்வகிக்கத் தெரியாத விக்கி மாதிரியினாவர்கள் இருக்கும்போது யாரை நம்பி பொறுப்பைக் கொடுப்பது. ஒரு அரசியல் கட்சியையே ஒழுங்காக ஒற்றுமையாக நிர்வகிக்க முடியாதவர்கள். வைத்தியர் அருச்சுனா அருந்தப்பிலே வென்றிருக்கிறார். கிட்டத்தட்ட 17 வாக்குகளால். இவரால் எதுவுமே ஆகப்போவதில்லை. வாய்ச்சொல்லில் வீரர். இவரின் கட்சி ஒரு ஊடக சந்திப்பைக் கூட உருப்படியாக நடத்த முடியாதவர்கள். இவரின் மனநிலை எந்த நாள் எப்பிடி இருக்கும் என்று யாராலுமே சொல்ல ஏலாது. மூளைக்கும் வாய்க்கும் தொடர்பில்லாதவர். இப்படியானவர்கள் இருக்கும்போது தமிழர்கள் NPP யை தெரிவு செய்ததில் என்ன பிழை?
  12. பேசி ! பேசி ஆளை வீழ்த்துவது எப்படி ! குத்துச் சண்டை வீரர் ஒருவர் இருந்தார். அந்தப் பகுதியில் அவரை வெல்ல யாருமே இல்லை. சில குத்துக்களிலேயே எதிரியை வீழ்த்திவிடும் வலிமை அவருக்கு இருந்தது. தோல்வி என்பதையே அறியாமல் வாழ்ந்து வந்தார். இப்போதெல்லாம் அவருடன் போட்டியிட யாருமே முன்வருவதில்லை.. அவருடைய எதிரிகள் எவ்வளவோ விதங்களில் முயற்சி செய்தும் கூட அவரை வீழ்த்த முடியவில்லை.. நல்ல உடற்பயிற்சி , சத்தான உணவு , தேவையான அளவு உறக்கம் என்று தன்னுடைய உடலை நன்றாகப் பேணி வந்ததால், எதிரிகள் அவரை வீழ்த்த வேறு ஏதாவது வகையில் திட்டம் வகுக்க ஒன்று கூடினார்கள். பல விதமான ஆலோசனைகளை அவர்கள் கூடிப் பேசினார்கள். ஏதாவது செய்து அவரைக் கொன்றுவிட்டாலும் அவர் வீரர்களுக்கெல்லாம் முன்மாதிரி என்று பேசப்பட்டு அழியாத புகழைப் பெற்று விடுவார். எனவே அந்த யோசனை கைவிடப்பட்டது. குடிப்பழக்கம் போன்ற கெட்ட பழக்கங்களை அவருக்கு அறிமுகப்படுத்தலாம் என்று முயற்சி செய்து அயல் நாட்டு போதை வஸ்துக்களை அவருக்குப் பரிசளிக்க முயன்ற போது அவர்களுக்கு முன்பாகவே அவர் அதை உடைத்து நொறுக்கி அவர்களை அவமானப்படுத்தி அனுப்பினார். உருப்படியாக எந்த ஒரு யோசனையும் கிடைக்காத நிலையில் அவர்களுக்குள் ஒரு முடிவெடுத்தார்கள். எதையாவது செய்து அவரைப் போட்டியில் வீழ்த்த வேண்டும். அவரை வீழ்த்துபவருக்கு 10லட்சம் பரிசு கொடுப்பதாக வாக்களித்தார்கள்.. பெரிய தொகைதான், இருந்தாலும் அவரை வீழ்த்த இதைவிட அதிகமாக செலவு செய்யவும் அவர்கள் தயாராக இருந்தார்கள். இந்தச் செய்தி காட்டுத்தீ போலப் பரவியது. இது புதிதாய் சண்டைப் பயிற்சி செய்து வரும் ஒரு இளைஞனின் காதிலும் விழுந்தது. 10 லட்சம் பரிசுத் தொகையாக அறிவிக்கப்பட்டாலும் அந்த வீரரின் வலிமை தெரிந்திருந்ததால் போட்டிக்கு வர யாருமே முன்வரவில்லை. இந்த நிலையில் அந்தப் புதிய இளைஞன் , தான் போட்டிக்கு வருவதாக முன்வந்தான். பலரும் அவனை பயமுறுத்தி அவரிடம் மோத வேண்டாம் என்று அறிவுரை கூறினார்கள். அவனோ தன் முடிவில் உறுதியாக இருந்தான். வீரரும் அவனுடன் சண்டையிட சம்மதித்து விட்டார். போட்டியின் நாள் அறிவிக்கப் பட்டது. புதிய இளைஞன் தன்னுடைய நெருக்கமான நண்பர்களை வரவழைத்தான் . அவர்களிடம் தனக்காக உதவிச் செய்யும்படி சில விஷயங்களைக் கூறினான். அவன் எதற்காக அப்படிச் சொன்னான் என்று அவர்களுக்குப் புரியவில்லையென்றாலும் நண்பனின் வெற்றிக்காக எதையும் செய்யத் தயாராக இருந்ததால் அவன் சொன்னதை அப்படியே செய்தார்கள். அதில் ஒருவன் , வீரரின் வீட்டுக்குப் பழங்களுடன் போய் அவர் போட்டியில் வெற்றி பெற வாழ்த்துகள் சொன்னான். அவரும் சந்தோஷமாக அவற்றைப் பெற்றுக் கொண்டு நன்றி சொன்னார். வந்தவன் திடீரென்று , "என்னய்யா ஆச்சு உங்களுக்கு ? பேசும் போதே இப்படி மூச்சு வாங்குதே. கல்லு மாதிரி இருந்தீங்களே.. உடம்பைப் பாத்துக்குங்க " என்று சொல்லிக் கிளம்பினான். "எனக்கு மூச்சு வாங்குதா ? நான் நல்லா தானே பேசுறேன் ? " . அவருக்குக் குழப்பம் வந்துவிட்டது. மறுநாள் அதிகாலை, அவர் வீதியில் ஓட்டப் பயிற்சியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தபோது திட்டப்படி இன்னொரு இளைஞன் அவருக்கு எதிர்ப்பட்டு வணங்கினான். " ஐயா , போட்டியில கலந்துக்கப் போறதா கேள்விப்பட்டேன் . நான் உங்க தீவிர ரசிகன். இப்பவும் நீங்கதான் ஜெயிக்கப் போறிங்க. அதுல சந்தேகமே இல்லை. ஆனாலும் முன்னால உங்க ஓட்டத்துல இருந்த வேகமும் , வலிமையும் இப்ப இல்லையே ? உடம்பு சரியில்லையா ? " என்று கேட்டுவிட்டு நகர்ந்தான். 'என்ன எல்லாரும் இப்படி கேக்குறாங்க?' இப்போது சிறிதாய் பயம் துளிர்விட்டது. போட்டி துவங்கும் நேரம் வந்தது. பலரும் வந்து அவருக்கு வாழ்த்து சொல்லி உற்சாகப் படுத்தினர். அவர் மேடையேறப் போகும் போது எதிராளியான இளைஞனின் நண்பனான மற்றொரு இளைஞன் கையில் பூங்கொத்துடன் வந்து அவரை வாழ்த்திக் கைகுலுக்கினான். "என்னய்யா , எப்பவும் உங்க பிடி இரும்பு மாதிரி இருக்கும் இப்ப ரொம்பவும் தளர்ந்து போச்சே என்னாச்சு உங்களுக்கு ? " என்று கேட்டுவிட்டு விடைபெற்றான் . அவ்வளவுதான் வீரர் முற்றிலுமாக சோர்ந்து போனார். போட்டி துவங்கியது . அவர் வேகமாய்த் தாக்குதலை ஆரம்பித்தாலும் இனம் புரியாத சோர்வு அவரை ஆட்கொண்டது. இளைஞனின் தாக்குதலை சமாளிக்க முடியாமல் பலவீனமாய் சரிந்தார். எல்லாரும் ஓடி வந்து இளைஞனின் சாதனையையும் , வீரத்தையும் பாராட்டினார்கள் . அவனோ நன்றிப் புன்னகையோடு தன் நண்பர்களின் முகத்தை ஏறிட்டான். பலருடைய வாழ்வில் , வந்துவிட்ட வியாதியைவிட , வந்துவிடுமோ என்று எண்ணி பயப்படுகிற வியாதியே பலரை கீழேதள்ளி வீழ்த்திவிடுகிறது. பலப்படுவோம் எண்ணங்களால் , நம்பிக்கைகளால்.. உடல் அளவில் பலவீனப்பட்டாலும் மனதளவில் மிருகபலத்தோடு இருப்போம்... பிறரின் வார்த்தைகளால் பயப்படவும் வேண்டாம் பலவீனப்பட வேண்டாம் !!!
  13. தமிழ் முஸ்லிம்கள் என்று எழுதினால் அவர்கள் முஸ்லிம்கள் தான் என்பது எனக்கே 😂 விளங்கும் அண்ணா இலங்கை முஸ்லிம்கள் தமிழ் தான் பேசுகின்றனர்
  14. no need divercity.....இதற்கு தான் அதிகம்பேர் தம்ஸ் அப் போட்டிருக்கினம் ...அதாவது படிச்ச காய்கள் பன்முகதன்மையை விரும்பவில்லை....
  15. உண்டியல் வைப்பது சிறந்தது திருப்பி கொடுக்க தேவையில்லை... யாழ்ப்பாணீஸ் மரவள்ளி கிழங்கு பயிரிடவும் ...பனங்கட்டியுடன் தேனீர் அருந்த பழகவும்... புலம்பெயர்ஸ் அனுப்பும் பணத்தில் 50% அரசாங்கத்துக்கு வரியாக செலுத்த வேண்டும் என சட்டம் வந்தால் புலம்பெயர்ஸ் ஒருசதமும் அனுப்பமாட்டான்..உந்த பக்கமே எட்டியும் பார்க்க மாட்டான் ...
  16. 👍................. மீண்டும் மீண்டும் கட்டுக்கதைகளையும், வதந்திகளையும் பரப்பும் ஊடகங்களை முற்றாக தவிர்க்க வேண்டும், பையன் சார். உங்களின் இந்த முடிவு மிகவும் வரவேற்கத்தக்கது. அத்துடன் தமிழ் கொலைகளைச் செய்யும் ஊடகங்களும் தவிர்க்கப்படவேண்டும். முக்கியமாக ஆதவன் போன்ற செய்தித் தளங்கள். தமிழ், தமிழ் என்று நாங்கள் சொல்லிக் கொண்டே, இவைகளை எப்படி ஆதரிக்க முடியும்............. ஒரு தனிநபர் தமிழில் தவறுகள் விடுவதை புரிந்து கொள்ளலாம். தமிழ்மொழி மிகக் கடினமான ஒரு மொழி.... ஆனால் ஒரு ஊடகம் என்று குழுவாக இருப்பவர்கள், இயங்குபவர்கள் இதே தவறுகளை மீண்டும் மீண்டும் செய்யக் கூடாது.............. மொழி மீது ஒரு பற்றும், மரியாதையும் அவர்களுக்கு இல்லை என்றே இதை எடுக்கவேண்டும்.
  17. சிறப்பு ....அந்த பிரதேசத்தில் வாழும் மக்களுக்கு வருமானம் வரும் வழிகளை செய்ய வேண்டும்... இந்தியா போல கோவில்களை கட்டி வருமானங்களை இந்தியாவுக்கு எடுத்து செல்லாமல் ... அனுராவின் அரசு பலாலி விமான நிலையத்தை சர்வதேச விமானமாக்கி(இந்தியா மட்டும் சர்வதேசம் இல்லை) புலம்பெயர்ஸ் நேரடியாக யாழ்மண்ணை முத்தமிட வழிவகை செய்தால் பொருளாதாரம் நிச்சயமாக தன்னிறைவு பெரும் மத்திய அரசு வரிகள் ஊடாக வருமான்ம் பெறலாம் (யாவும் கற்பனையே)
  18. திக்கம் வடிசாலை முன்னாள் அமைச்சரால் சூறையாடல்; அனைத்து மோசடிகளும் விசாரிக்கப்படும் என்கிறார் சகாதேவன் திக்கம் வடிசாலை கடந்த பத்துவருடங்களாக முன்னாள் அமைச்சர் ஒருவரால் சூறையாடப்பட்டுள்ளது. அங்கு பணிபுரிந்த முன்னாள் களஞ்சியசாலை காப்பாளர் துப்பாக்கி முனையில் பதவியில் இருந்து நீக்கப்பட்டுள்ளார்.இங்கு நடைபெற்ற அனைத்து மோசடிகளும் விசாரிக்கப்படும் என பனைஅபிவிருத்திச்சபையின் தலைவர் வி.சகாதேவன் தெரிவித்தார். வவுனியாவிற்கு இன்று விஜயம் செய்த அவர் நகரப்பகுதியில் அமைந்துள்ள பனை அபிவிருத்திச்சபையின் கீழ் உள்ள கற்பகம் பனை உற்பத்திபொருட்கள் விற்பனை செய்யும் நிலையத்தை பார்வையிட்டிருந்தார். அதன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.. தொடர்ந்து கருத்து தெரிவித்த அவர்…. தலைவராக பொறுப்பேற்றது முதல் பல்வேறு ஆய்வுகளை செய்து வருகின்றேன்.கடந்தகாலங்களில் பனை வளம் சார்ந்த விடயங்களை பாதுகாப்பதில் பல்வேறு குறைபாடுகள் உள்ளமை சுட்டிக்காட்டப்பட்டு்ள்ளது. பனை உற்பத்திசார் தொழிலாளர்களுக்கு உயர்ந்த வருமானத்தை பெற்றுக்கொடுக்கும் சூழ்நிலையில் சபை இல்லை என்ற குற்றச்சாட்டுக்கள் நிலவுகின்றது. திக்கம் வடிசாலை கடந்த பத்துவருடங்களாக முன்னாள் அமைச்சர் ஒருவரால் சூறையாடப்பட்டுள்ளது.அங்கு பணிபுரிந்த முன்னாள் களஞ்சியசாலை காப்பாளர் ஒருவர் முறைப்பாடு ஒன்றை எனக்கு வழங்கியுள்ளார். தான் துப்பாக்கி முனையில் அச்சுறுத்தப்பட்டு தனது வேலையில் இருந்து விலக்கப்பட்டதாகவும்,இன்றுவரை நீதி கிடைக்கவில்லை என்றும். தான் உயிரைமாய்க்கும் நிலைக்கு சென்றதாக அவர் தெரிவித்திருந்தார். அவரது அதிகாரப்பிடியில் பனை அபிவிருத்திசபை மட்டுமல்ல வடக்குமாகாணமும் சிக்கிசீரழிந்துகொண்டிருந்த நிலையில் இந்த நியமனத்தின் மூலம்தமக்கு நடந்த அநியாயங்களை வெளிக்கொண்டுவர பலர் துணிந்திருக்கிறார்கள். இலங்கையின் மிகப்பெரிய மது உற்பத்தி நிறுவனத்திடம் அந்த தொழிற்சாலை கையளிக்கப்பட்டுள்ளது. பனஞ்சாராய உற்பத்தி ஒன்றும்அங்கு நடந்தது. ஆனால் இதுபற்றிய எந்த தகவலும் பொதுமக்களுக்கு தெரியப்படுத்தப்படவில்லை. நான் சபையை பொறுப்பெடுத்த பின்னரே அந்த ஒப்பந்தத்தின் பிரதி பனை அபிவிருத்திசபைக்கே கிடைத்தது. முதல்தகவல் அறிக்கையின் பிரகாரம் கிட்டத்தட்ட 100மில்லியன் ரூபாய் நேரடியான பணப்பரிமாற்றம் அந்த இடத்தை கைப்பற்றுவதற்காக நடந்திருப்பதாக அறியமுடிகின்றது. அதனைவிட 2014ஆம் ஆண்டு சபையின் அன்றைய முன்னாள் தலைவரின் அறிக்கையின்படி 69 மில்லியன் பெறுமதியான மதுசாரம் ஆயுத முனையில் கொள்ளையடிக்கப்பட்டாதக கூறியிருக்கிறார். அங்கு நடைபெற்ற கொள்ளைகள் முறைகேடுகள் மிக அதிகமானவை. இப்போது ஒவ்வொன்றாக வெளிவருகின்றது. சாட்சியங்களை சேகரித்துவருகின்றோம்.இந்த விசாரணைகளில் யாரும் தப்ப முடியாது. இந்த தொழிலை மீள கட்டுவது சவாலான ஒரு விடயமாக மாறியிருக்கிறது. வடிசாலைகள் தென் இலங்கையை சேர்ந்தவர்களுக்கு வழங்கப்பட்டு குருநாகல் புத்தளம் பகுதிகளில் இருந்து கொண்டுவரப்படும் தென்னங்கள் இங்கு விற்பனை செய்யப்படுகின்றது.நெடுந்தீவுக்கும் தென்னங்கள்ளை விற்பனை செய்யும் நிலமை ஏற்ப்பட்டிருக்கிறது. பனைவளம் இருந்தும் அரசியல் வாதிகளின் ஊழல் நிறைந்த செயற்ப்பாட்டால் இந்த தொழில் அழிந்துபோயுள்ளது. நெடுந்தீவில் பிரதேசசெயலாளர் ஒருவரால் சட்டவிரோதமாக கள் உற்பத்தி நிலையம் நடாத்தப்பட்டு தென் இலங்கைக்கு விற்கப்பட்டுள்ளது. இவ்வாறு பல முறைப்பாடுகள் கிடைக்கிறது. பனைவளத்தை பாதுகாப்பதற்கான நடவடிக்கைகளை நான் எடுத்துள்ளேன். பொதுமக்களும் எமக்கு ஒத்துழைப்பு வழங்கவேண்டும். அத்துடன் 11 மாவடங்களில் பனைவளம் உள்ளது. எனவே முழுமையான கணக்கெடுப்பொன்றை செய்ய இருக்கிறோம். அதன் பின்னரே அவற்றை வெட்டுவதற்கு அனுமதி வழங்குவதா என்ற விடயத்தை ஆராயவுள்ளோம். பனை மீள் நடுகையின் போது நடந்த மோசடிகளால் நிதி அமைச்சுஅதனை இடைநிறுத்தியிருக்கிறது. பனை அபிவிருத்திச்சபை தமதுசட்டதிட்டங்களுக்கு அமைவாக செயற்ப்படாத காரணத்தால் அரசாங்கம் அந்த செயற்ப்பாட்டை இடைநிறுத்தியிருந்தது. அதனை மீள செயற்ப்படுத்துவதற்கான நடவடிக்கைகளை எடுத்துள்ளோம். பனஞ்சாராயத்தினை ஏற்றுமதி செய்வதன் மூலம் அதிகமான வருமானத்தை பெறமுடியும். அதற்கான அனுமதியை எமது சபையே வழங்கும் தனியாக எவரும் செய்யமுடியாது. ஒருசில ஊழல்வாதிகள் மற்றும் மதுவரித்திணைக்கள அதிகாரிகள் லஞ்ச மோசடியில் ஈடுபட்டு புதியவர்கள் இந்த தொழிலுக்கு வரவிடாமல் தடுத்துள்ளனர்.அவ்வாறான ஒரு விடயத்திற்காக 15 மில்லியன் பணம் வழங்கப்பட்டதற்கான ஆதாரம் கிடைத்துள்ளது. விரைவில் நடவடிக்கை எடுக்க உள்ளோம். ஏற்றுமதியில் ஈடுபடுவதற்கு பலர் விண்ணப்பித்துள்ளனர். அதற்கான கூட்டம் விரைவில் நடக்க உள்ளது- என்றார். https://thinakkural.lk/article/312326
  19. சாரி அல்வாயன், புலம்பெயர்ஸ் டமில் போலித் தேசிய வியாபாரிகள் தமிழரின் தலையில் மண்ணள்ளிக் கொட்டினதில் குழம்பிப்போட்டியளோ,....பிதற்றுகிறீர்கள்,.?

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.