Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Leaderboard

  1. தமிழ் சிறி

    கருத்துக்கள உறவுகள்
    16
    Points
    87988
    Posts
  2. நிலாமதி

    கருத்துக்கள உறவுகள்
    6
    Points
    11531
    Posts
  3. ரசோதரன்

    கருத்துக்கள உறவுகள்
    5
    Points
    3049
    Posts
  4. ஈழப்பிரியன்

    கருத்துக்கள உறவுகள்
    4
    Points
    20010
    Posts

Popular Content

Showing content with the highest reputation on 06/21/25 in all areas

  1. பயந்தாங்கொள்ளி ---------------------------- புலி ஒன்று ஒரு தடவையில் மூன்று குட்டிகளுக்கு மேல் ஈன்றாலும், அநேகமாக அவைகளில் ஒன்றே ஒன்று மட்டுமே தப்பிப் பிழைக்கும் என்கின்றார்கள். எந்தக் குட்டி தப்பிப் பிழைக்கப் போகின்றது என்பது கூட சில நாட்களிலேயே தெரிந்துவிடும். மூன்று குட்டிகளில் ஒன்று மிகத் துணிவானதாக இருக்கும், இன்னொன்று பயந்தாங்கொள்ளியாக இருக்கும், மூன்றாவது குட்டி ஒன்று எச்சரிக்கையுடன் இருக்கும். துணிவானதும், எச்சரிக்கையானதுமான இரு குட்டிகளும் சேர்ந்தே இருக்கும். பயந்தாங்கொள்ளி ஒதுங்கிப் பதுங்கி தனியாக இருக்கும். பூனையும் புலியும் ஒரு விலங்காகவே இருந்திருக்கவேண்டும். பரிணாம வழியில் எங்கோ இரண்டு விலங்குகளாக பிரிந்து ஒன்று புலியாகவும், இன்னொன்று பூனையாகவும் மாறிவிட்டன. ஆனாலும் பதுங்கிப் பாய்வதும், 24 மணி நேரத்தில் 20 மணி நேரத்துக்கு நாக்கால் நீவி நீவி சுத்தம் செய்வதும் இரண்டு விலங்கிடமும் அப்படியே இன்னமும் இருக்கின்றது. பூனைக்கும் பொல்லாத கோபம் வருகின்றது. மியாவ் என்னும் வழமையான ஒரு மெல்லிய ஒலியை விட, அது இன்னொரு கடுமையான ஒலியை கோபத்தில் எழுப்புகின்றது. காட்டில் புலி சந்தோசமான தருணங்களில் மியாவ் போல மெலிதான ஒலி ஏதாவது எழுப்புகின்றதா என்று தெரியவில்லை. வீட்டுக்கு வந்து போகும் கறுப்பு வெள்ளை பூனைக்கு என்று கொஞ்சம் கொஞ்சமாக பல வகைச் சாப்பாடுகள் வாங்கி வைத்திருக்கின்றோம். அது ஒரு தெருப்பூனை. அது எங்கே படுக்கின்றது, என்ன செய்கின்றது என்று கூட எங்களுக்கு தெரியாது. சில நாட்களில் அதிகாலையிலே வாசலில் நிற்கும். அதன் உணவைக் கொடுத்தால் சாப்பிடும். பின்னர் போய்விடும். மதியம் வரும், பின்னேரத்திலும் சில நாட்களில் வரும். இன்னும் சில நாட்களில் நன்றாக இருட்டும் வரை வீட்டின் பின்பக்கம் படுத்திருக்கும். இரண்டு வருடங்களின் பின், அதன் வாய் திறந்து மியாவ் என்று சொல்ல ஆரம்பித்தது. நன்றி என்று சொல்வதைப் போல அதன் மியாவ் இருப்பதில்லை. 'நீங்கள் நல்லா இருக்கிறீர்களா..............' என்று கேட்பது போலவே அதன் மியாவ் இருக்கின்றது. சில நாட்களில் ஒன்றும் சொல்லாது. அதன் பிரச்சனை அதற்கு என்று நினைத்துக்கொள்வேன். சேர்ந்தால் போல ஒரு மாதம் வரை வீட்டுப் பக்கம் வராமலும் இருந்துவிடும். அதன் கதை முடிந்து விட்டது போல, இனி இந்த மூட்டை மூட்டையாக கிடக்கும் பூனை உணவுகளை என்ன செய்வது என்று நினைக்க, ஒரு நாள் திடீரென்று வாசலில் வந்து நிற்கும். ஒரு நாள் நான்கு குட்டிகளை கூட்டிக் கொண்டு வந்து, அவைகளுக்கும் உணவு வேண்டும் என்று கேட்டால் எப்படி இருக்கும் என்று இடைக்கிடை நினைத்துக்கொள்வேன். ஆனால் இது ஆண் பூனை. ஆண் விலங்குகள் பொதுவாக அவ்வளவு பொறுப்பாக நடப்பது இல்லை. சில விதிவிலக்குகள் இருக்கின்றன, ஆனால் பூனைகளில் இல்லை என்று நினைக்கின்றேன். ஆகவே நான்கு குட்டிகள் என்றும் வீட்டுப் பக்கம் வரப் போவதில்லை என்றே இருந்தேன். பல வருடங்களின் முன் இங்கிருக்கும் ஒரு வார இறுதி திறந்த வெளிச் சந்தையில் ஒரு மாதுளம் கன்று வாங்கி வீட்டில் நட்டோம். அதை ஏசியன் மாதுளை என்று அவர்கள் சொன்னதாலேயே வாங்கினோம். அமெரிக்கன் மாதுளை கடும் சிவப்பு முத்துகள், அத்துடன் பெரும்பாலானவை பல்லைக் கூச வைக்கும் கூர்மையான புளிப்புச் சுவையும் கலந்தவை. பல்லுப் போனால் சொல்லும் போய்விடும் என்பது ஊரில், இங்கே பல்லுடன் சேர்த்து சொத்தும் போய்விடும். சொத்து ஏற்கனவே இல்லாவிட்டால் பல் வைத்தியம் பார்த்த கடன் ஒரு தலைமுறைக்கு நிற்கும். அதனால் எதுக்கு இந்த அமெரிக்கன் மாதுளை என்று அதை நாங்கள் வீட்டில் வைக்கவில்லை. ஏசியன் மாதுளை ஏசியன் மாதுளை தான். ஊரில் இருக்கும் அதே மாதுளம் பழத்தின் இயல்புகள் தான். ஒரே ஒரு வித்தியாசம் மரத்தில் இருந்தது. மாதுளை மரம் ஒரு சின்ன ஆலமரம் போல பெரிதாக வளர்ந்து வந்தது. இங்கு எல்லாமே பெரிதாகவே இருக்கும், அதற்காக மாதுளை மரமுமா ஆல் போல வளர வேண்டும். அது வளர்ந்து பக்கத்து வீடு, பின் வீடு என்று இரு வீடுகளுக்குள்ளும் புகுந்து நின்றது. அந்த மனிதர்கள் அருமையானவர்கள். இதுவரை எதுவும் சொன்னதில்லை. இந்த மாதுளை மரத்தின் கீழே ஒரு சின்ன கொட்டகை இருக்கின்றது. அதை முன்னர் பார்க்கும் போது பெரிய கொட்டகையாகத்தான் இருந்தது. ஆனால் மாதுளை பிரமாண்டமாக வளர்ந்த பின், கொட்டகை சிறியதாக தெரிய ஆரம்பித்தது. ஒரு நாள் காலை அந்தப் பக்கமாக போன பொழுது கொட்டகையின் கூரையில் சில அசைவுகள் தெரிந்தன. என்னுடைய உயரத்துக்கு கொட்டகைக் கூரையின் மேற்பகுதி முழுவதுமாகத் தெரியாது. ஏணி ஒன்றில் ஏறிப் பார்த்தால், அங்கே நான்கு பூனைக் குட்டிகள் என்னைப் பார்த்துக்கொண்டு நின்றன. நான்கில் ஒரு குட்டி கறுப்பு வெள்ளை. ஆனால் எங்களின் கறுப்பு வெள்ளை இவ்வளவு பொறுப்பானவர் இல்லையே, இந்த நான்கும் எங்கேயிருந்து இங்கே வந்திருக்கும் என்று யோசனையாக இருந்தது. மண் நிறத்திலான வரிவரிப் பூனை ஒன்றும் வந்து போவதுண்டு. எங்களைக் கண்டவுடனேயே அது தலை தெறிக்க ஓடிவிடும். அது ஒரு பெண் பூனையாக இருக்கலாம். ஆனாலும் அதன் குட்டிகளை கொண்டு வந்து எங்கள் வீட்டில் விடும் அளவிற்கு அது எங்களை நம்புமா என்று தெரியவில்லை. நான்கு குட்டிகளில் இரண்டு வரிவரிப் பூனைக் குட்டிகளே. பூனைக் குட்டிகள் ஏற்கனவே ஓரளவு வளர்ந்திருந்தன. ஆடி ஓடி விளையாடிக் கொண்டிருந்தன. இரவிரவாக நித்திரை குழம்பிக் கொண்டேயிருந்தது. கூரையில் இருந்து அவை கீழே விழுந்து விடுமா, வேறு ஏதாவது விலங்கு ஒன்று வந்து இந்தக் குட்டிகளை பிடித்து விடுமா என்று பலப்பல யோசனைகள் வந்து கொண்டேயிருந்தன. எங்கோயோ பிறந்து இவ்வளவு நாட்களும் மிக ஆரோக்கியமாக ஒரு தாய்ப்பூனையால் மட்டும் வளர்க்கப்பட்ட அந்தக் குட்டிகள் இன்று என் கண்ணில்பட்டதால் என் கற்பனையில் பல ஆபத்துகளின் ஊடாக போய் வந்து கொண்டிருந்தன. காலை பொழுது விடிந்தும் விடியாததுமாக பின்பக்கம் ஓடினேன். ஏணியில் ஏறி எட்டிப் பார்த்தேன். மண் நிற வரிவரி அம்மா அங்கே குட்டிகளுடன் படுத்திருந்தார். என்னை அது நன்றாகப் பார்த்தது. உடனேயே ஏணியில் இருந்து இறங்கி வீட்டுக்குள் வந்துவிட்டேன். பின்னர் அது அங்கே இல்லாத நேரங்களில் நான்கு குட்டிகளையும் நன்றாகப் பார்த்துக்கொண்டேன். எது துணிந்த குட்டி, எது பயந்தாக்கொள்ளி என்று அடையாளம் கண்டுகொண்டேன். பயந்தாங்கொள்ளிக் குட்டிக்கு வெளி உதவிகள் கிடைக்காவிட்டால் அது தப்பிப் பிழைப்பது கஷ்டம் என்று வாசித்தது மனைதில் வந்து கொண்டேயிருந்தது. அடுத்த நாள் காலை அவைகளை பார்த்து விட்டு, மதிய நேரம் மீண்டும் போனேன். மூன்று குட்டிகள் மட்டுமே கூரையில் நின்றன. ஒரு வரிவரிக் குட்டியைக் காணவில்லை. அது தான் பயந்தாங்கொள்ளிக் குட்டி. அய்யய்யோ............ நான் நினைத்தது நடந்து விட்டதோ என்று நன்றாகத் தேடினேன். கொட்டகையின் ஒரு பக்கத்துடன் ஒட்டி இருந்த மாதுளைக் கிளை ஒன்றுக்கு இடையில் அந்தக் குட்டி மாட்டுப்பட்டிருந்தது. கீழேயும் விழாமல், மேலேறி கூரைக்கும் போக முடியாமல் அது கிளைக்கும் கொட்டகை சுவருக்கும் இடையில் சிக்கி தொங்கிக் கொண்டிருந்தது. ஆனால் சின்ன அசைவு இருந்தது. அது உயிருடன் தான் இருக்கின்றது என்று தெரிந்தவுடன், வீட்டுக்குள் மீண்டும் ஓடினேன். 'னேய், பூனைக்குட்டி ஒன்று நசிந்து தொங்குது. நீங்கள் ஒருக்கால் வாங்கோ...............' 'அதைப் பிடித்து விடுகிறது தானே................' 'நீங்கள் ஒருக்கால் வாங்கோ............' மனைவி அவசரம் அவசரமாக வந்தார். அங்கே இருந்த ஒரு சின்ன துவாயை எடுத்துக் கொண்டு நான் அவர் பின்னால் அவசரமாக ஓடினேன். நான் இந்த மரக் கொப்பை இழுக்கின்றேன், நீங்கள் குட்டியை கீழு பிடித்து கூரைக்கு தள்ளி விடுங்கள் என்றார். அவர் சொன்னபடியே செய்தேன். குட்டி துள்ளிப் பாய்ந்து கூரைக்கு ஓடியது. போன உயிர் வந்தது. பயந்தாங்கொள்ளிகளுக்கு எப்போதும் ஒரு துணையும் உதவியும் தேவைப்படுகின்றது.
  2. https://chng.it/ZZCGSdj7Bn Justice for the Forcibly Disappeared: Ensure Truth, Justice, and Accountability for Chemmani and Beyond We, the undersigned, call upon the Government of Sri Lanka to take immediate, transparent, and meaningful action to address the long-standing issue of enforced disappearances and mass graves, including the recent discovery at Chemmani, Jaffna. The excavation at the Ariyalai Siththupaaththi Hindu Crematorium has already uncovered 19 bodies, including three infants. This painful discovery has reopened the wounds of thousands of families whose loved ones were forcibly disappeared during Sri Lanka’s brutal civil war. Chemmani is not just a site of unmarked graves—it symbolizes decades of state denial, coverups, and broken promises. மேலே உள்ள சுட்டியை அழுத்தி உங்கள் விபரங்ளை பதிந்து நீதி கேளுங்கள்.
  3. @வீரப் பையன்26 ஈரானிய வெளிவிவகார அமைச்சர் இரசியா செல்வதாக ஒரு செய்தி பார்த்தேன். ஈரானின் வேண்டுதல் வான் பாதுகாப்பு ஆயுதங்களாக அமையலாம். ஈரான் தனது வான்பரப்பை பாதுக்காக்க முடியாத நிலையில் இஸ்ரேல் தாக்குதல்களுக்கு ஈடு கொடுக்க முடியாது. இஸ்ரேல் ஒரு கிழமையில் ஈரான் தமது கட்டுப்பாட்டுக்குள் விழும் என தவறாக கணித்து விட்டார்கள். கடந்த வியாழ கிழமையின் போது உலகமே வியக்கும்படி சரித்திரத்தில் நிலைக்கும்படியான ஒரு சம்பவம் இடம் பெறும் என இஸ்ரேல் தரப்பில் கூறப்பட்டது. அப்படி சொல்லிக்கொள்ளும்படியாக எதுவும் நடைபெற்றதாக தெரியவில்லை. ஈரானின் உளவு கண்காணிப்பு இஸ்ரேலின் எதிர்பாராதா தாக்குதலின் பின் உசாரடைந்து விட்டது. பல மொசாட் முகவர்கள் கைது செய்யப்பட்டுள்ளாக ஈரானிய தரபின் தகவல்கள் செய்திகளின் வந்துள்ளன. இஸ்ரேலின் பின்னடைவுக்கு முகவர்களின் கைதுகள் காரணமாக அமையக்கூடும்.
  4. பள்ளிக்கு போகும் வரை துள்ளி விளையாட எனக்கொரு தோழமை
  5. ஒரு வேளை கொரோனா இடைவெளியாய் இருக்குமோ ?😃
  6. வசியவர்களே நன்றி, யப்பானியர்களது கொடுமையைக் கண்ட உலகு அதையே திருப்பி ஏன் மற்றைய இனங்கள் மீதும்,நாடுகள் மீதும் தொடர்கிறது. எல்லாம் பொருண்மிய நலன். அகதியாக ஈராயிரமாண்டுகள் அலைந்ததாகக் கூறும் இஸ்ரேலியர்கள் இன்று பலஸ்தீனர்களை அகதியாக்கி நாடற்றவராக்கும் செயற்பாடு ஏன் நிகழவேண்டும். ரஸ்யா அச்சத்தில் போரிடவில்லை. அது தற்காப்பு நிலையெடுக்கிறது. ஒன்றாக இருந்து இன்று அயலவராக இருக்கும் உக்ரேன் தனது பகைச்சக்திகளைக் குடியேற்ற முனையத் தாக்குகிறது. இன்னும் சில ஆண்டுகளின் பின் மகிந்த சொல்லியது போல் நாம் மேற்கின் போரை நடாத்தினேன் என ஜெலன்ஸ்கி சொன்னாலும் ஆச்சரியப்பட முடியாது. நட்பார்ந்த நன்றியுடன் நொச்சி
  7. எல்லாம் இவ‌ரின் வ‌ர‌லாறுக‌ளை ப‌டித்த‌ பின்பு தான் அநீதிக்கு எதிராக‌ எழுத‌ ம‌ன‌ம் இட‌ம் கொடுக்குது...............................
  8. காணாமல் போனோர் என்றபடியால் எவருமே கண்டு கொள்ளவில்லையோ? இதுவே சீமானைப்பற்றி எழுதியிருந்தால் எல்லா இலையான்களும் இங்கே மொய்த்திருக்கும். நன்றி சிறி.
  9. இரானுக்குள் ஒரு ரகசிய வலையமைப்பை உருவாக்கி தளபதிகள், ராணுவ தளங்களை 'மொசாட்' தாக்கியது எப்படி? பட மூலாதாரம்,THE IDF படக்குறிப்பு, இரானில் தாக்குதல்களை மேற்கொள்வதில் மொசாட் முக்கிய பங்கு வகித்ததாக ஊகங்கள் உள்ளன. கட்டுரை தகவல் எழுதியவர், பிபிசி பாரசீக சேவை பதவி, 21 ஜூன் 2025, 08:36 GMT புதுப்பிக்கப்பட்டது 6 மணி நேரங்களுக்கு முன்னர் இரான் மீதான இஸ்ரேலின் தாக்குதலுக்குப் பிறகு வெளிவந்த பல அறிக்கைகள், போர் முனை வானத்தில் மட்டுமல்ல, நிலத்திலும் இருப்பதைக் குறிக்கின்றன. இரானில் ஆழமாக மேற்கொள்ளப்பட்ட உளவுத்துறை நடவடிக்கைகள் மற்றும் ஊடுருவும் செயல்பாடுகள் மூலம் இஸ்ரேல் இதற்கு நீண்ட காலமாக தயாராகி வந்துள்ளது. இருப்பினும், இரானின் பாதுகாப்புப் படைகளுக்குள், இஸ்ரேல் ஊடுருவலாம் என்ற அச்சத்தை இரானிய அதிகாரிகள் ஏற்கனவே வெளிப்படுத்தியிருந்தனர். ஆனால் இந்த முழு சம்பவத்தில் இஸ்ரேலின் உளவுத்துறை அமைப்பான மொசாட்டின் பங்கு எந்தளவுக்கு இருந்தது என்பதை மதிப்பிடுவது எளிதான காரியமல்ல. இஸ்ரேல் பொதுவாக மொசாட்டின் நடவடிக்கைகள் குறித்து கருத்து தெரிவிப்பதில்லை. அதேபோல், இரானில் மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகளில் பிற உளவுத்துறை அமைப்புகளும் ஈடுபட்டிருக்க வாய்ப்பு உள்ளது. ஆயினும், இரானிய மண்ணில் இலக்குகளை அடையாளம் காண்பதிலும், நடவடிக்கைகளை மேற்கொள்வதிலும் மொசாட் முக்கிய பங்கு வகித்ததாக நம்பப்படுகிறது. பட மூலாதாரம்,ATTA KENARE/AFP VIA GETTY IMAGES படக்குறிப்பு,இஸ்ரேலிய தாக்குதலில் கொல்லப்பட்ட இரானிய ராணுவத் தளபதிகள் மற்றும் அணு விஞ்ஞானிகளுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் டெஹ்ரானில் ஒரு பதாகை வைக்கப்பட்டது. இரானுக்குள் நீர்மூழ்கி எதிர்ப்பு அமைப்புகள், ஏவுகணை கிடங்குகள், கட்டளை மையங்கள் மற்றும் இலக்கு வைக்கப்பட்ட தனிநபர்கள் மீது ஒரே நேரத்திலும், மிகவும் துல்லியமாகவும் தாக்குதல்கள் நடத்தப்பட்டன என்பதை பல ஊடக அறிக்கைகளும், சில இஸ்ரேலிய அதிகாரிகளின் கருத்துகளும் தெளிவுபடுத்துகின்றன. இரானுக்குள் நீண்ட காலமாக செயல்பட்டு வந்த உளவுத்துறை நடவடிக்கைகள் மூலம் இந்தத் தாக்குதல்களை இஸ்ரேல் சாத்தியமாக்கியுள்ளது. இரான் உளவுத்துறைக்கு பெரும் இழப்பு பட மூலாதாரம்,MAJID SAEEDI/GETTY IMAGES படக்குறிப்பு,இரானின் தலைநகர் டெஹ்ரான் மீதான இஸ்ரேலிய தாக்குதலின் புகைப்படம் (13 ஜூன் 2025) இஸ்ரேலின் தாக்குதல்கள் இரானின் ராணுவம் மற்றும் அணுசக்தி நிலையங்களை குறிவைத்தது மட்டுமல்லாமல், அதன் உளவுத்துறை திறன்களுக்கும் கடுமையான சேதத்தை ஏற்படுத்தியுள்ளன. இதனால் இரான் தலைவர்களும், ராணுவத் தளபதிகளும் குழப்பமும், திகைப்பும் அடைந்துள்ளனர். தாக்குதல்கள் நடந்த ஐந்தாவது நாளில் இரானின் இஸ்லாமிய புரட்சிகர காவல்படை வெளியிட்ட அதிகாரப்பூர்வ அறிக்கை, உளவுத்துறை அபாயங்கள் குறித்து அரசாங்கத்தின் உயர் மட்டத்தில் கடுமையான கவலை இருப்பதைக் காட்டுகிறது. அந்த அறிக்கையில், அதிகாரிகள் மற்றும் அவர்களது பாதுகாப்புக் குழுக்கள் மொபைல் போன்கள், ஸ்மார்ட் வாட்ச்கள் அல்லது மடிக்கணினிகள் போன்ற எந்தவொரு தகவல் தொடர்பு நெட்வொர்க்குடனும் இணைக்கப்பட்ட சாதனங்களைப் பயன்படுத்த வேண்டாம் என்று எச்சரிக்கப்பட்டுள்ளது. இந்த எச்சரிக்கை அதிகாரிகளுக்கு மட்டும் அல்ல. பொதுமக்களும் இந்த சாதனங்களை முடிந்தவரை குறைவாகப் பயன்படுத்துமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர். இந்த அளவிலான பொது எச்சரிக்கை என்பது வெறும் முன்னெச்சரிக்கை நடவடிக்கை மட்டுமன்றி, இரானுக்குள் சைபர் பாதுகாப்பில் ஆழமான ஊடுருவல் குறித்த அச்சம் வேகமாக வளர்ந்து வருவதைக் காட்டும் ஒரு அறிகுறியாகவும் உள்ளது. இரானுக்குள் தளவாடங்களை கடத்தி, ஒருங்கிணைத்து, ஆயுத உற்பத்தியா? இஸ்ரேலிய மற்றும் மேற்கத்திய ஊடகங்கள் கூறுவதுபோல, இஸ்ரேலின் நடவடிக்கைகள் வெறும் முக்கியமான தகவல்களை அறிந்து கொள்வதோடு மட்டும் நின்றுவிடவில்லை. இஸ்ரேல், இரானிய மண்ணில் தாக்குதலுக்கு பயன்படுத்தப்படும் ஆயுதங்களைத் தயாரிக்கவும் , அவற்றை பயன்படுத்தவும் ஒரு திட்டமிட்ட வலையமைப்பை உருவாக்கியிருப்பதாக இந்த அறிக்கைகள் சுட்டிக்காட்டுகின்றன. நீண்ட காலம் நீடித்ததாகக் கூறப்படும் இந்த நடவடிக்கைகள், உள்ளூர் முகவர்களின் வலையமைப்பு, அவர்களுக்காக உருவாக்கப்பட்ட பாதுகாப்பு, போக்குவரத்து அமைப்புகள் மற்றும் நவீன தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி மேற்கொள்ளப்பட்டன. சமீபத்திய தாக்குதல்களுக்கான அடித்தளம் இந்த முன்தயாரிப்புகளில் இருந்தே கட்டமைக்கப்பட்டதாக நம்பப்படுகிறது. இராக் வழியாகச் செல்லும் லாரிகள், வணிகக் கொள்கலன்கள் மற்றும் பயணிகளின் சூட்கேஸ்களில் பொருட்கள் மறைத்து வைக்கப்படும் கடத்தல் முறைகளை பயன்படுத்தி, இஸ்ரேல் டிரோன்கள் மற்றும் ஏவுகணை உபகரணங்களை ஒவ்வொன்றாக இரானுக்குள் நகர்த்தியுள்ளதாக ராணுவ விவகார கண்காணிப்பாளரான 'தி வார் சோனும்' மற்றும் பிற ஆதாரங்களும் தெரிவித்துள்ளன. இந்த சாதனங்களில் மின்னணு கருவிகள் (electronic fuses), மேம்பட்ட எலக்ட்ரோ-ஆப்டிகல் கேமராக்கள், லித்தியம் பேட்டரிகள், இலகு ரக இயந்திரங்கள், ஜிபிஎஸ் அடிப்படையிலான வழிகாட்டுதல் அமைப்புகள் மற்றும் பாதுகாப்பான தகவல் தொடர்பு சாதனங்கள் ஆகியவையும் அடங்கும். பின்னர், பல ஆண்டுகளாக இரானின் பல்வேறு பகுதிகளில் மொசாட் அமைத்த ரகசிய இடங்களில், இந்த பாகங்கள் ஒன்று சேர்க்கப்பட்டு தாக்குதலுக்கு பயன்படுத்தப்படும் ஆயுதங்களாக மாற்றப்பட்டன என தகவல்கள் தெரிவிக்கின்றன. டெஹ்ரானுக்கு அருகில் மூன்று மாடி கட்டிடம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாகவும், இது தற்கொலை டிரோன்களை தயாரிக்கவும் சேமிக்கவுமான ஒரு தளமாக இருந்ததாக அதிகாரிகள் விவரித்துள்ளதாகவும் இரானிய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. பட மூலாதாரம்,MIZAN படக்குறிப்பு,இரானின் பல்வேறு பகுதிகளில், மொசாட் அமைத்த ரகசிய இடங்களில், பாகங்கள் ஒன்று சேர்க்கப்பட்டு ஆயுதங்களாக மாற்றப்பட்டன என தகவல்கள் தெரிவிக்கின்றன. இரானிய அரசு தொலைக்காட்சி வெளியிட்ட ஒரு செய்தியில், கட்டடத்தின் உள்ளே உள்ள மேசைகள் மற்றும் அலமாரிகளில் குறைந்தது ஒரு ட்ரோன், அதன் இறக்கைகள், பல்வேறு பாகங்கள் மற்றும் கட்டுப்பாட்டு உபகரணங்கள் இருந்தது காட்டப்பட்டது. அங்கே ஒரு 3D பிரிண்டரும் காணப்பட்டது. 'தி வார் ஸோன்' என்ற வலைதளத்தின் தகவல்படி, இந்த வகையான பிரிண்டர் யுக்ரேனில் டிரோன் பாகங்களை உருவாக்க பயன்படுத்தப்பட்டுள்ளது. ஜூன் 16 திங்கட்கிழமையன்று டெஹ்ரானில் உள்ள ஒரு பகுதியில் நடத்தப்பட்ட இரண்டு தனித்தனி நடவடிக்கைகளில், மொசாட்டுடன் தொடர்புடைய 2 "முகவர்கள்" கைது செய்யப்பட்டதாக இரானிய காவல்துறை செய்தித் தொடர்பாளர் தெரிவித்தார். அவர்களிடம் இருந்து 200 கிலோகிராமுக்கும் அதிகமான வெடிபொருட்கள், 23 டிரோன் பாகங்கள், லாஞ்சர்கள், கட்டுப்பாட்டு அமைப்புகள் மற்றும் ஒரு நிசான் கார் ஆகியவை கைப்பற்றப்பட்டன. இரானின் மிகவும் முக்கியமான அணுசக்தி நிலையங்கள் அமைந்துள்ள இஸ்ஃபஹானில், ஏராளமான டிரோன் மற்றும் மைக்ரோ-டிரோன் உற்பத்திக்கான உபகரணங்கள் மற்றும் பாகங்களை வைத்திருந்த ஒரு பட்டறையை காவல்துறை துணை கண்காணிப்பாளர் சோதனை செய்தார். இது தொடர்பாக நான்கு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். 3D பிரிண்டர்கள் மற்றும் உள்ளூரில் தயாரிக்கப்பட்ட பொருட்களைப் பயன்படுத்தி டிரோன்கள் ஒன்று சேர்க்கப்பட்டுள்ளன என்பது இந்த தகவல்களின்படி தெரியவருகின்றது. இதனால் அதிக அளவில் பாகங்களை கடத்த வேண்டிய தேவை இல்லாமல் போவதால், இரான் பாதுகாப்பு நிறுவனங்களுக்கு மொசாட் சப்ளை சங்கிலியை கண்டுபிடிப்பது கடினமாகிவிட்டிருந்தது. இந்தக் கூற்றுகளை பிபிசி சுயாதீனமாக உறுதிப்படுத்தவில்லை. இருப்பினும், இஸ்ரேலுக்காக உளவு பார்த்ததாகக் குற்றம் சாட்டப்பட்டவர்களை இரானிய பாதுகாப்பு நிறுவனங்கள் இதற்கு முன்பு பலமுறை கைது செய்துள்ளன. ஏவுகணைகள், நவீன ஆயுதங்கள் மற்றும் ரிமோட் கண்ட்ரோல் பயன்படுத்துதல் பட மூலாதாரம்,TELEGRAM படக்குறிப்பு,ஸ்பைக் ஏவுகணை லாஞ்சர்களின் படங்கள், தரையில் உள்ள முக்காலி போன்ற அமைப்பின் மீது அதன் உருவத்தை மறைக்கும் உறைகளுடன் வைக்கப்பட்டிருப்பதைக் காட்டுகின்றன. உள்ளூர் மற்றும் வெளிநாட்டு ஊடகங்களின் தகவல்களின்படி, இஸ்ரேல் ரகசிய நடவடிக்கையின் ஒரு முக்கிய அம்சமாக, இரானிய மண்ணில் உள்ள இலகுரக, துல்லியமான மற்றும் தொலைவிலிருந்து கட்டுப்படுத்தப்படும் ஏவுகணை அமைப்புகள் காணப்படுகின்றன. இத்தகைய நவீன மற்றும் சிறப்பு தொழில்நுட்பத்தில் தயாரிக்கப்பட்ட ஆயுதங்களை, அவற்றை இயக்குபவரின் உதவி இல்லாமல் இரானுக்குள் இருந்து சுட முடியும். தொழில்நுட்பக் கண்ணோட்டத்தில், இது பாரம்பரிய முறைகளை நேரடியாக சவால் செய்யும் ஒரு நடவடிக்கையாகக் கருதப்படுகின்றது. இரானின் ஆங்கில செய்தி சேவையான பிரஸ் டிவி திங்களன்று தனது டெலிகிராம் சேனலில், "இரானிய வான் பாதுகாப்பு அமைப்புகளை குறிவைக்க பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்டிருந்த ஸ்பைக் ரக ஏவுகணைகளை இரானிய உளவுத்துறை அமைப்புகள் கண்டுபிடித்துள்ளன. இந்த அமைப்புகளில் இணைய-தானியங்கி மற்றும் ரிமோட் கண்ட்ரோல் பொருத்தப்பட்டிருந்தது" என்றும், "இந்த அமைப்பு மொசாட் முகவர்களால் இயக்கப்பட்டது"என்றும் அது குறிப்பிட்டுள்ளது. அவை ஒரு வாகனத்திலோ அல்லது டிரோனிலோ பொருத்தப்படவில்லை. மாறாக அவற்றை மறைக்கும் உறையுடன் கூடிய முக்காலி போன்ற அமைப்பின் மீது நிறுவப்பட்டு, தரையில் வைக்கப்பட்டிருந்தன என்பதை ஸ்பைக் லாஞ்சர் ஏவுகணைகளின் படங்கள் காட்டுகின்றன. இந்த ஏவுகணைகளில் எலக்ட்ரோ-ஆப்டிகல் வழிகாட்டுதல் அமைப்புகள், அதிநவீன கேமராக்கள் மற்றும் செயற்கைக்கோள் தொடர்பு ஆண்டெனாக்கள் பொருத்தப்பட்டிருந்தன. இதனால், தூரத்திலிருந்து கூட அவற்றுக்கு கட்டளை வழங்கப்படலாம். இதற்கு முன்பும், இரானில் இஸ்ரேல் ரிமோட் கண்ட்ரோல் ஆயுதங்களைப் பயன்படுத்தியதாக பதிவு செய்யப்பட்டுள்ளது. 2020 நவம்பரில், இரானில் அணுசக்தி திட்டத்தில் ஈடுபட்டிருந்த ஒரு மூத்த விஞ்ஞானி, ஒரு பிக்அப் வேனில் பொருத்தப்பட்ட ரிமோட் கண்ட்ரோல் ஆயுதத்தால் படுகொலை செய்யப்பட்டதாகவும், சம்பவம் நடந்த நேரத்தில் தாக்குதலில் ஈடுபட்ட எந்த நபரும் சம்பவ இடத்தில் இல்லை என்றும் இரானிய அதிகாரிகள் தெரிவித்திருந்தனர். பட மூலாதாரம்,MAJID SAEEDI/GETTY IMAGES படக்குறிப்பு, இஸ்ரேலிய தாக்குதலால் அழிக்கப்பட்ட இரானிய கட்டிடம் (13 ஜூன் 2025) இரானின் வான் பாதுகாப்பு மற்றும் தாக்குதல் அமைப்புகளை முடக்க திட்டம் இரான் மீது வான்வழி தாக்குதல்களை நடத்துவதற்கு முன்பு, இரானின் வான் பாதுகாப்பு வலையமைப்பை முடக்க ஒருங்கிணைந்த தாக்குதல்களை நடத்துவதே இஸ்ரேலிய நடவடிக்கையின் முக்கிய பகுதி என்று தகவல்கள் குறிப்பிடுகின்றன. சிறிய தற்கொலை டிரோன்கள், தரையில் இருந்து ஏவப்படும் இரானிய ஏவுகணைகள் மற்றும் மின்னணு போர் இயந்திரங்கள் ஆகியவற்றைப் பயன்படுத்தும் பல்வேறு முயற்சிகள் இந்த உத்தியில் இணைக்கப்பட்டிருந்தன. இரானின் ரேடார் அமைப்புகளை முடக்குவது, வான் பாதுகாப்பு ஏவுகணை கட்டமைப்பை அழிப்பது மற்றும் இஸ்ரேல் விமானப்படை தாக்குதல் நடத்த வசதியாக ஒரு பாதுகாப்பான வழியை உருவாக்குவது ஆகியவையே அதன் ஒட்டுமொத்த நோக்கமாக இருந்துள்ளது. ராணுவ விவகாரங்களை மையமாகக் கொண்ட வலைத்தளங்களின்படி, இந்த நடவடிக்கையின் தொடக்கத்தில், சிறிய மற்றும் இலகுரக குவாட்காப்டர் போன்ற டிரோன்கள் மற்றும் மைக்ரோ ட்ரோன்களின் தொகுதி ஒரே நேரத்தில் செயல்படுத்தப்பட்டுள்ளது. முந்தைய மாதங்களில் இந்த டிரோன்கள் ஏற்கனவே இரானின் பல பகுதிகளில் மறைத்து வைக்கப்பட்டிருந்ததாக நம்பப்படுகிறது. இரானின் முக்கிய தளபதிகளுக்கு குறி பட மூலாதாரம்,TASNIM/KHAMENEI படக்குறிப்பு,இரானிய இராணுவம் மற்றும் புரட்சிகர காவல்படையின் மூத்த அதிகாரிகளை இஸ்ரேல் குறிவைக்கிறது இரானிய ராணுவம் மற்றும் புரட்சிகர காவல்படையின் நிர்வாக அமைப்பை பலவீனப்படுத்துவதற்காக முக்கிய தளபதிகளுக்கு குறிவைத்தது தான் இஸ்ரேலின் நடவடிக்கையின் மற்றொரு முக்கிய அம்சமாகக் கருதப்படுகின்றது. மொசாட் மற்றும் அதன் கூட்டாளிகள் உளவுத் தகவல்கள் மற்றும் ஸ்மார்ட் ஆயுதங்களை பயன்படுத்தி, இரானின் பாதுகாப்புத்துறையில் கட்டளை பிறப்பிக்கும் அதிகார கட்டமைப்பில் சேதத்தை ஏற்படுத்தி, அதன் ராணுவ தயார் நிலையை மந்தமாக்கவும் முயன்றதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த நடவடிக்கையின் தொடக்கத்தில், ராணுவ தளங்கள் அல்லது ஏவுகணை ஏவுதளங்களை சில தாக்குதல்கள் குறிவைக்கவில்லை. மாறாக, உயர் அதிகாரிகளின் வீடுகள் அல்லது அலுவலகங்கள் மீது தாக்குதல்கள் மேற்கொள்ளப்பட்டன. இந்த தாக்குதல்கள் இரானுக்குள் இருந்தபடியே ஸ்பைக் ஏவுகணைகளைப் பயன்படுத்தி நடத்தப்பட்டன என ஊடக அறிக்கைகளும் குறிப்பிடுகின்றன. இந்த ஏவுகணைகளால், நேரடி கட்டுப்பாட்டு அமைப்பு மூலம் கட்டடங்களுக்குள் இருக்கும் மனிதர்களை நேரடியாக குறிவைக்க முடியும். இரான் தளபதிகளுக்கு மொசாட் குறி தாக்குதலுக்கு முன்பு மட்டுமல்லாமல், தாக்குதல் நடைபெறும் போதும் இஸ்ரேலின் உளவுத்துறை நடவடிக்கைகள் தொடர்ந்தன என்றும், அப்போது இரானின் உயர் ராணுவ அதிகாரிகள் தொடர்ந்து குறிவைக்கப்பட்டனர் என்றும் சான்றுகள் சுட்டிக்காட்டுகின்றன. மூன்றாவது நாள் நடந்த தாக்குதலில் புரட்சிகர காவல்படையின் உளவுத்துறைப் பிரிவு தலைவர் முகமது கசெமியும் அவரது உதவியாளரும் குறிவைக்கப்பட்டனர். வெள்ளிக்கிழமை கொல்லப்பட்ட தளபதிக்குப் பதிலாக நியமிக்கப்பட்ட அதிகாரியும் அடுத்த 4 நாட்களுக்குப் பிறகு கொல்லப்பட்டார். இஸ்ரேலின் முழுமையான உத்தி பல வருடங்களாக நடந்த தயாரிப்புகளின் விளைவு என அமெரிக்க சிந்தனைக் குழு 'ஹட்சன் இன்ஸ்டிடியூட்' வெளியிட்ட அறிக்கை குறிப்பிடுகின்றது. இந்த திட்டத்தில், தொடர்ச்சியான தகவல் சேகரிப்பு, நேரலையில் மேற்கொள்ளப்பட்ட கண்காணிப்பு நடவடிக்கைகள் மற்றும் திட்டமிடப்பட்ட இலக்குகளை ஆழமாக அணுகும் நடவடிக்கைகள் இடம்பெற்றிருந்தன என்றும் அந்த அறிக்கை சுட்டிக்காட்டுகிறது. - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/c2ez7yz1zmvo
  10. "கிருஷ்ண கானம் " பிறந்த கதை . ....... ஏ வி எம் .குமரன் அவர்கள் சொல்கிறார் . ........ ! 🙏
  11. செம்மணியில் மட்டும் 600 தமிழர்கள் அரசபடையினால் கொல்லப்பட்டார்கள். அவர்கள் இருந்தால் அவர்களின் அடுத்த சந்ததியும் சேர்த்து இப்பொழுது ஆயிரத்துக்கு மேல் இருந்திருப்பார்கள். செம்மணி மாதிரி எத்தனையோ அவலங்கள். சனத்தொகை குறைந்ததுக்கு பல காரணங்கள் இருந்தாலும் முக்கிய காரணம் அரச படைகளினால் திட்ட மிடப்பட்ட இன அழிப்பே முக்கிய காரணம்.
  12. எம்மை அவமதித்தவர்களுடனோ அல்லது நாம் அவமதித்தவர்களுடனோ கூட்டுசேர்வது நம்மை நாமே அடிமாடாக்கும் செயல். சுமந்திரனுக்கு எங்கும் எதிலும் பதவி வேண்டும், அதற்காக எந்தளவுக்கு கீழிறங்க முடியுமோ அந்தளவுக்கு இறங்குவார். இந்த கூட்டு எவ்வளவு காலத்திற்கு நிலைத்து நிற்குமென்று எதிர்வு கூறமுடியாது. மணிவண்ணனுக்கு சைக்கிளோடு சேர்ந்து போக முடியாது, ஆகவே இந்த அரசியல் கோமாளியோடு சேர்ந்திருக்கிறார்கள்.
  13. சில மாதங்களுக்கு முன்பு யாழ். களத்தில் வந்த செய்தியில்... உப அரசாங்க அதிபர் மருதலிங்கம் பிரதீபன் அவர்களின் மகன், நிறை போதையில் தந்தையின் அரச வாகனத்தை செலுத்தி, கந்தர்மடத்தில் பெரிய விபத்து ஒன்றை ஏற்படுத்தியதாக வாசித்த நினைவு உள்ளது. அந்த வாகனத்தில்... மகனின் நண்பரும் இருந்து பெரும் காயம் அடைந்ததாக செய்தி வந்திருந்தது. அதனைப் பற்றிய செய்தி இணைப்பை தேடினேன் என்னால் கண்டு பிடிக்க முடியவில்லை. யாராவது கண்டால்... இணைத்து விடவும். மருதலிங்கம் பிரதீபன் அவர்களின்... அரச செல்வாக்கு, மகன் செய்த குற்றங்களை மறைத்தது மட்டுமல்ல பாதுகாத்து பதவி உயர்வும் பெற்றுக் கொடுத்துள்ளது. தேசிய மக்கள் சக்தியும்.... மற்றைய சிங்கள கட்சிகளைப் போல்தான். மாற்றம் வரும் என்று நம்பியவர்களுக்கு.. "அல்வா" கொடுக்கின்றது.
  14. சிங்கள சம்பந்திகளுக்கு இடையில் ஏற்பட்ட இணக்கப்பாடு என்ன? என்பதை... பத்திரிகைகள் ஏன் வெளியிடவில்லை. இதில்... சுத்துமாத்துத்தனம் செய்வதற்காக அதை இரகசியமாக வைத்துள்ளார்களோ. விக்கியரின்... மாகாணசபைத்தலைவர் பதவிவிக்கு ஆப்பு வைத்த சுமந்திரன், இதிலும் விக்கியரின் காலை வருவார் என எதிர்பார்க்கலாம்.. சிலருக்கு... பட்டும், புத்தி வரமாட்டுது என்றால்.. ஒன்றும் செய்ய முடியாது.
  15. வடக்கில் சனத்தொகை வீழ்ச்சிக்கு காரணங்களாவன: தமிழ் மக்களை குறி வைத்து நிகழ்த்தப்பட்ட கலவரங்கள், பொருளியல் பொருளாதார சேதம், விவசாய நிலத்தில் இராணுவ ஆக்கிரமிப்பு, நில ஆக்கிரமிப்பு, சொந்த நிலத்திலிருந்து விரட்டல், தேவையற்ற கைதுகள், பயமுறுத்தல்கள், போர், இநவழிப்பு, விதவைகள், அனாதைகள் அதிகரிப்பு, தமிழ் மக்கள் திட்டமிட்ட புறக்கணிப்பு, அவர்களுக்கு பாதுகாப்பற்ற சூழல், தேவையற்ற கைதுகள் போன்றனவே முக்கிய காரணங்கள்.
  16. "ரஜ லுனு"க்கு தீர்வு வழங்கியாச்சோ சந்திரா....உப்புக்கே தீர்வு வழங்க காணவில்லை இதில புலம்பெயர்வை தடுக்க போகின்றாராம்...ம்ம்ம்ம்ம் ..
  17. ரொம்ப வெள்ளை மனசுங்கூட, அப்படியே எழுத்து நடையில் நெளிகிறது.
  18. பரம்பரை ஊழல்வாதிகள்போலும். இவர்களால் தான் நாடு இப்ப டி உருவாகி இருக்கிறது .
  19. நல்ல கதை. நல்ல இயற்கை ரசிகன். யாரோ வீட்டுப் பூனைக்கு உணவு வாங்கி வைத்து பராமரிக்கும் இளகிய (குழந்தை )மனசு .
  20. அனைவருக்கும் நன்றி! உண்மை! ஆனால், மனிதர்களுக்குச் சுடும். அவர்கள் பூனைகள். இன்றுகூட டீ.எல்.எவ் DeutschlandFunk வானொலியில் காலையில் 5:30மணிக்கு இளம் யூத அமைப்பின் தலைவரையும், 15:30க்கு ஈரான் புலம்பெயரமைப்பின் ஒருங்கிணைப்பாளரையும் செவ்விகண்டு ஒலிபரப்புகிறார்கள். இந்த ஊடகங்கள் 2009இல் சிங்களம் இன அழிப்பில் ஈடுபட்டபோது, எமது மக்கள் தினம்தோறும் வீதிகளில் நின்று அவலக் குரலெழுப்பியபோது திரும்பிக்கூடப் பார்க்கவில்லை. உலக அமைதியை ஒரு முனையில் வட அத்திலாந்திக் கூட்டாண்மையின் நாட்டாண்மைத்தனம் உரசிப்பார்க்கத் தீப்பற்றிய நிலை. மறுபுறத்தே மிகப்பெரும் இனவழிப்பை இஸ்ரேல் மேற்கொள்வதன் ஊடாக மத்திய கிழக்கைக் கொதிநிலையாக்கியதோடு, அனைத்துலக விதிகளுக்கு முரணாக ஈரான் மீது அத்துமீறிய தாக்குதலைத் தொடுத்துள்ளது. இதற்கு முட்டுக்கொடுப்பதில் அதிதீவிரமாக யேர்மனியும் ஈடுபட்டிருப்பதன்வாயிலாக, அதனது சனநாயக முகமூடி கிழிந்து தொங்குகிறது. நட்பார்ந்த நன்றியுடன் நொச்சி நீங்கள் கூறுவதைப் பார்த்தால் ஊர்ச் சண்டியர்களின் நினைவுதான் வருகிறது. அதாவது பார்த்ததற்காகச் சண்டைக்குப்போதல். தர்க்கரீதியாக யோசித்தால் அமெரிக்காவும் இஸ்ரேலியர்களும் செய்த, செய்கின்ற அத்துமீறிய அநியாயங்களின் முன் இவர்களால் அச்சுறுத்தலை எதிர்கொள்ளும் நாடுகள் அணுகுண்டை ஏன் வைத்திருக்கக் கூடாது. யப்பானியர்களை எலிகளாக எண்ணி அணுகுண்டைப் போட்டழித்த அமெரிக்காவுக்கு ஈரானை அணுகுண்டு செய்யாதே என்று உத்தரவிடும் தார்மீக உரிமை இருக்கிறதா? 90 அணுகுண்டுகளை வைத்திருக்கும் இஸ்ரேலுக்கு ஈரானைத் தாக்க என்ன அருகதை இருக்கிறது போன்ற வினாக்களுக்கு விடைகாண முடியுமா? நிகழ்தகவைக் குறைத்தல் என்பது முதலில் 5000க்கு மேல் அணுகுண்டுகளை வைத்திருக்கும் அமெரிக்காவிலிருந்து தொடங்க வேண்டும். தமது அணுகுண்டுகளை அழித்தொழித்துவிட்டல்லவா ஏனைய நாடுகளைக் கேட்கவும் தாக்கவும் வேண்டும். ஐ.நா. என்று ஒரு நிறுவகம் உலகில் இருக்கிறதா? அப்படி இருந்தால் அடாத்தாக ஆபிரிக்க நாடுகளுள் இறங்கும் ஐ.நா. படைகள் இலங்கைத் தீவிலோ அல்லது இஸ்ரேலிலோ இறங்கி இன அழிப்பைத் தடுக்க முனையவில்லை. அமெரிக்கா ஆப்கான் முதல் லிபியா வரை வளர்த்தவிட்ட தீவிரவாதத்தைவிட வேறொருநாடும் செய்துவிட முடியாது. ப.வி. இயக்கத்தைப் பலவீனப்படுத்த இஸ்ரேல் உருவாக்கிய பல குழுக்களில் கைமாறிக் கட்டுமீறியதே கமாஸ். " இந்த உலகம் நீதியின் அச்சில் சுழலவில்லை. தார்மீகச் சட்டநெறிகளோ, மக்களின் உரிமைகளோ அல்ல, பொருளாதார வணிக நலன்கள்தான் தற்போதைய உலகப் போக்கைத் தீர்மானிக்கின்றன..." என்ற மேதகு அவர்களின் கூற்று 17 ஆண்டுகளைக் கடந்தும் பொருந்திப் போகிறது. நட்பார்ந்த நன்றியுடன் நொச்சி அதனை மாற்றியமைக்க முனைந்தவர்களை உலக வல்லாதிக்க சக்திகள் அழித்து வரும் நிலை தொடர்வதால் உலகம் தொடர்ந்தும் நசிந்தழிகிறது. ஆனால், பல சர்வாதிகாரிகளை இந்த உலகம் கடந்து நிமிர்வதும் நடந்துள்ளது. இனியும் நடக்கும் என நம்புவோம். நட்பார்ந்த நன்றியுடன் நொச்சி
  21. இந்தியாவின் தொட‌க்க‌ம் மிக‌ அருமை த‌மிழ‌க‌ வீர‌ர் அவ‌ரின் முத‌ல் டெஸ்ட் போட்டியில் ர‌ன்ஸ் எதுவும் அடிக்காம‌ அவுட் ஆகி விட்டார்..................................
  22. யாழ்ப்பாணத்தைக் கட்டியெழுப்பும்போது யாழில் கம்பீரத்தை எடுத்துக்காட்டும் வகையில் நிர்மாணங்கள் இடம்பெற வேண்டும் என ஜனாதிபதி எமக்கு ஆலோசனை வழங்கியுள்ளார். கட்டி..எழுப்பும்போது...தயிட்டி விகாரை மாதி பத்தை கட்டிவிட்டல் ...கம்பீரமாக எழுந்து நிற்கும்
  23. இவர் தான் புத்தகோவில் விவகாரத்தில் அரசுக்கு சார்பாக போய் பார்த்து அங்கே எதுவுமே இல்லை என்று சொன்ன ஆளோ?
  24. கிருபன் இந்தியா நாடாளுமன்ற தேர்தல்- தமிழகம் போட்டியிலும் முதலாவது இடத்தை பிடித்திருக்கிறார் போட்டியை நடாத்திய கோஷான், முதல் 3 இடங்களை பெற்ற கிருபன், ஈழப் பிரியன், வாதவூரான் ஆகியோருக்கு வாழ்த்துகளுடன் பாராட்டுகள்.
  25. மொத்தக்குடும்பமுமே ஊழல் குடும்பம் போலுள்ளது. நாட்டில் உள்ள அரசியல்வாதிகள்ளெல்லாம் உழைத்து வாழவில்லை, ஊழல் செய்தே வாழ்ந்திருக்கிறார்கள்.
  26. பாகிஸ்தான் இஸ்ரேலுடனான உறவை துண்டித்ததுடன், ஈரானுக்கு முழு ஆதரவை தெரிவித்துள்ளதாக ஒரு செய்தி பார்த்தேன். ஈரான், பாகிஸ்தான் அண்டைய நாடுகள் எனும் வகையில் பார்க்கும்போது, அத்துடன் முஸ்லீம் நாடுகள் எனும் வகையில் ஒன்றிணையும்போது இது போரில் மாற்றத்தை கொண்டு வரும். உடனடியாக இல்லாவிட்டாலும் ஈரானும் ஆயுத வழங்கல்கள் வெளியில் இருந்து கிடைக்கும் என்றே தோன்றுகின்றது.
  27. விக்கி ஐயாவின் வீட்டில் இருக்கும் பெரிய படத்தில் இருப்பவர் செக்ஸ் சாமியார் + கொலைகாரன் பிரேமானந்தா தானே?

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.