எப்பொழுதும் தமிழர்களை அச்சுறுத்தலிலும் கட்டுப்பாட்டிலும் தமது கண்காணிப்பிலும் வைத்திருக்கவே சிங்களமும் தமிழ் அரசியல் வாதிகளும் சிந்திக்கின்றனர். தமிழரை வன்முறையை பற்றி சிந்திக்கவும் அதை நோக்கி தூண்டி இந அழிப்பை செய்யவும் நடவடிக்கையிலேயே அது தொடர்ந்து ஈடுபட்டுக்கொண்டிருக்கிறது. ஆவா குழு, கஞ்சா எங்கிருந்து யாரால் எப்போது வடக்கில் தலைதூக்கியது என்பது இந்த முட்டாளுக்கு தெரியவில்லை. ஏன், தெற்கில் பாதாள உலகம் மற்றும் இவர் சொல்லும் பிரச்சனைகள் துப்பாக்கிச்சூடுகள் அதிலும் நீதிமன்றத்திற்குள் இல்லையா? ஏன் வடக்கில் மட்டும் இவ்வளவு கரிசனை? ஒரு இராணுவ அதிகாரி, நிர்வாகம் செய்ய முற்பட்டால் கருத்து சொல்ல வெளிக்கிட்டால் இப்படித்தான் இருக்கும். இந்த பிரச்னைகள் சமூகப்பிரச்னைகள். இவற்றை உருவாக்கி, வளர்த்து, சுயநலம், வருமானம் காண்பவர்கள். அரசியல்வாதிகள் மக்களை நல்வழியில் நடத்துவதற்கு பதிலாக இவ்வாறான சமுக சீர்கேடுகளை,இந, மத வன்முறைகளை, முரண்பாடுகளை தூண்டி வயிறு வளர்க்கின்றனர். இதை தீர்க்க வேண்டியது நீதி, சட்ட, காவற்துறை சம்பந்தமானது. சட்டம் எல்லோருக்கும் சமமாக இயற்றப்படவேண்டும், பிரச்சனைகள் நீதிமன்றம்மூலம் நிஞாயமாக தீர்க்கப்பட வேண்டும். அதை விட்டு ஆயுதம் தூக்க தூண்டக்கூடாது, அடக்குமுறை செயற்படுத்தக்கூடாது. உண்மை, அந்த நாடுகள்போல் இங்கு சட்டங்கள் இல்லை, நீதி இல்லை, நாட்டு நலன் இல்லை, அரசியல் இல்லை, அரசியல்வாதிகள் இல்லை, எங்கே பிரச்சனையின் ஆரம்பம் என அடையாளம் காண முடியவில்லை அல்லது ஏற்றுக்கொள்ள தைரியம் இல்லை இவருக்கு. எல்லாவற்றையும் ஆயுதத்தாலும் அதிகாரத்தாலும் அடக்கிவிடலாமென நினைக்கிறார். அதனால் துரத்தப்பட்டவர்களை கண்டும் விளங்கிக்கொள்ளும் அறிவு இல்லை அல்லது தானும் மாட்டுப்பட்டு விடுவேன் என்கிற அச்சமோ தெரியவில்லை. இங்கு அது தான் பிரச்சனையே. அது தான் முக்கிய பிரச்சனை. அதை சரி செய்ய யாரும் இல்லை, சரி செய்யவும் விடமாட்டார்கள். அரசன் எவ்வழி குடிகள் அவ்வழி. அதுவே இப்போ பெரிய கள்ளர், கொலைகாரருக்கு வயிற்றில் புளியை கரைக்கிறது. இவருக்கு நாமல் போன்றவர்களுக்கு ஜனாதிபதி ஆசை அடங்கும் வரை இது தொடரும். குற்றவாளிகள் வெளியில் சுதந்திரமாக உலாவும்வரை இந்த நப்பாசை இருந்துகொண்டே இருக்கும். ஒரு வேலைக்கு விண்ணப்பம் செய்யும்போதுவிண்ணப்பதாரியின் நன்னடத்தை நற்சான்றிதழ் பரிசோதிக்கப்படுகிறது. வெளிநாட்டுக்கு குடியேற விரும்புவோருக்கும் அவ்வாறான நடைமுறைகளே பின்பற்றப்படுகின்றன. ஆனால் ஒரு நாட்டை ஆளும் தலைவர்களுக்கோ, அரசியல் தலைவர்களுக்கோ இது நடைமுறையில்லிலை. இந்த நாட்டில், பாராளுமன்றத்தில் இருப்பதெல்லாம் வடித்தெடுத்த கள்ளர், கொலை கொள்ளை, பொறுக்கி, போதைப்பொருள் கடத்திகள். நாடு எப்படி உருப்படும்? அனுர இப்படியானவர்களை தண்டித்து இப்டிப்பட்டவர்கள் அரசியலில் ஈடுபட தடைச் சட்டம் கொண்டுவரவேண்டும். நாளைக்கு இவர் தேர்தலில் நின்றாலும், தமிழர் வாக்கை இவருக்காக சேகரிக்க ஒரு கூட்டம் முண்டியடிக்கும் என்பதில் சந்தேகமில்லை.