வடகொரியாவிற்குள் சுற்றுலாச் செல்லும் வெளிநாட்டவர்கள் தாம் போகும் இடங்களையோ, அங்குன் நடப்பவற்றையோ ஒளிப்படமாகவும், புகைப்படமாகவும் எடுப்பது முற்றாகத் தடைசெய்யப்பட்டிருக்கிறது. சுற்றுலாப் பயணிகளை வழிநடத்துவோர் எனும் பெயரில் அவர்களை ஒவ்வொரு இடமாக அழைத்துச் செல்லும் வடகொரியாவின் உளவுத்துறையினர், மிகவும் திட்டமிட்ட முறையில் இப்பிரயாணங்களை ஒழுங்கமைத்திருப்பர். அவர்கள் அழைத்துச்செல்லும் இடங்களில் ஆடம்பரமான முறையில் வசதிகள் செய்துகொடுக்கப்பட்டிருக்கும், ஆனால் பெயரிற்குத் தன்னும் ஒரு உல்லாசப் பயணியையும் அங்கு காணமுடியாது. வெறிச்சோடிக் கிடக்கும் உல்லாச விடுதிகள், வாகனமேதுமற்ற நீண்ட நெடுஞ்சாலைகள், இரவில் மின்சாரமின்றி இருளில் மூழ்கிக் கிடக்கும் மொத்த நாடென்று கிம் உலகிற்குக் காட்ட விரும்பும் தனது சர்வாதிகார அரசாட்சிக்கும் உண்மையில் அங்கு நடப்பதற்கும் சம்பந்தம் இருக்காது. கிம்மின் உளவுத்துறையின் கண்களில் மண்ணைத்தூவி விட்டு அவ்வப்போது சிலர் இரகசியமாக கமெராக்களை ஒளித்துக் கொண்டு உள்ளே சென்று சில படங்களை எடுத்திருக்கிறார்கள். இவையே அங்கு நடப்பவற்றை உலகிற்குக் கொண்டுவந்தன. பட்டினியினால் வாடும் பெரும்பாலான மக்களுக்கு கிம் தொடர்ச்சியாக தனது ஏவுகணைகளைப் பரிசோதித்துப் பார்க்கும் இலக்குகளான தென்கொரியாவும் ஜப்பானுமே உதவுகின்றன. இதைத்தவிரவும் சர்வதேச உதவி அமைப்புக்களும் வடகொரியாவின் பெரும்பாலான மக்களை பட்டினிச்சாவிலிருந்து காப்பற்றி வருகின்றன. ஆனால் கிம்மோ ஒரு பேரரசருக்கான அனைத்துச் செல்வச் செழிப்பையும் அனுபவித்து வருகிறார். அவரது தகப்பனார் தனது வாழ்நாள் முழுதும் விலைகூடிய மதுவை அருந்துவதிலும், சர்வதேச நட்சத்திரங்களைக் கூட்டிவந்து படம் எடுப்பதிலும் செல்வழித்தார். மகனோ தனது ஆட்சிக்கு ஆபத்தானவர்கள் என்று தான் நினைப்பவர்களையெல்லாம் ஒன்றில் விஷம் ஏற்றியோ, 50 கலிபர் துப்பாகியினாலோ சுட்டுக் கொன்று வருகிறார். இவர்களுள் இவரது அண்ணா இருவரும், மாமன் ஒருவரும் அடக்கம். அண்மையில் கிம்மின் புதிய நாசகாரக் கப்பலொன்றினை வெள்ளோட்டம் விடும் நிகழ்வில் கிம் பார்த்திருக்கவே கப்பல் கடலினுள் இறங்கும்போது இரண்டாகப் பிளந்து போனது. இக்கப்பலினைக் கட்டியவர்களும், வெள்ளோட்டத்தினை மேற்பார்வை செய்தவர்களும் கிம்மின் கோபத்திற்கு ஆளாகியிருக்கிறார்கள். அவர்களுக்கு 50 கலிபர் தண்டனை நிச்சயமாக வழங்கப்படும் என்பதில் சந்தேகமில்லை. ஆனால், நிச்சயமாக கிம்மை ஆதரிக்கும் சிலர் யாழில் இருக்கிறார்கள். தாம் வணங்கும் வாழும் தெய்வமான புட்டினின் நெருங்கிய சகா என்பதால் கிம்மை இவர்கள் ஆதரிக்கிறார்கள். ஆகவேதான் கிம்மிடம் அணுவாயுதம் இருப்பதும், அதனை கிம் ஈரானிற்கு வழங்குவதும் அவசியம் என்று கருதுகிறார்கள். சிலவேளை மேற்குலகை அழித்துவிட்டால் எல்லாம் சரியாகிவிடும் என்கிற நோக்கமாக இருக்கலாம். ஆனால், மேற்குலகு அழிந்தபின்னர் எங்குதான் இவர்கள் போய் அடைக்கலம் தேடுவார்கள்? ரஸ்ஸியாவிலும், வடகொரியாவிலுமா?