Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Leaderboard

  1. தமிழ் சிறி

    கருத்துக்கள உறவுகள்
    9
    Points
    87988
    Posts
  2. goshan_che

    கருத்துக்கள உறவுகள்
    4
    Points
    19109
    Posts
  3. விசுகு

    கருத்துக்கள உறவுகள்
    2
    Points
    34971
    Posts
  4. suvy

    கருத்துக்கள உறவுகள்
    2
    Points
    33600
    Posts

Popular Content

Showing content with the highest reputation on 07/19/25 in all areas

  1. ‘பாரன்ஹீட் 451’ நாவல் – புத்தகங்களைச் சாம்பலாக்கக் கிளம்பிய தீயெரிப்புப் படை! தடைகளைத் தாண்டிய புத்தகங்கள் – 10 | ‘பாரன்ஹீட் 451’ நாவல் புத்தகங்களைச் சாம்பலாக்கக் கிளம்பிய தீயெரிப்புப் படை! அ. குமரேசன் “ஒரு புத்தகத்தை எரிக்க வேண்டுமானால் அதற்கு எத்தனையோ வழிகள் இருக்கின்றன. ஆனால் கையில் தீக்குச்சியை வைத்துக்கொண்டு அலைகிறவர்கள் இந்த உலகத்தில் நிரம்பியிருக்கிறார்கள்.” நாவல், சிறுகதை, திரைக்கதை எழுத்தாளரான ரே பிராட்பரி (Ray Bradbury) (1920 – 2012) என்ற இவ்வாறு நொந்து போனவராகப் பேசினார். கட்டற்ற சுதந்திரத்திற்கு அடையாளமாகக் கைகாட்டப்படும் அமெரிக்காவின் அதிகார வர்க்க அத்துமீறல்களும் தணிக்கைக் கடுமைகளும் அவரை இப்படிப் பேச வைத்தன. அந்த நிலைமைகளை வைத்தே அவர் எழுதி 1953ஆம் ஆண்டில் வெளியான நாவல்தான் ‘பாரன்ஹீட் 451’. அமெரிக்காவிலும் பிரிட்டிஷ் ஆட்சியின் கீழ் இருந்த தென்னாப்பிரிக்காவிலும் அந்த நாவலுக்குத் தடை விதிக்கப்பட்டது, பள்ளிகளின் நூலகங்களில் அந்தப் புத்தகங்களை வாங்கி வைக்கக்கூடாது என்று அரசாங்கங்கள் ஆணையிட்டன. அமெரிக்காவில் 1967இல் ஆட்சி நிர்வாக அமைப்பு மீது அவநம்பிக்கையை ஏற்படுத்துகிறது எனக் கூறி முதல் முறையும், பின்னர் 2006இல் மோசமான சொற்கள் பயன்படுத்தப்பட்டிருக்கின்றன எனக் கூறி இரண்டாவது முறையும் தடை விதிக்கப்பட்டது. ஆனால் அந்தத் தடை நடவடிக்கைகள், தணிக்கை முறை பற்றிய விரிவான விவாதங்களுக்கு இட்டுச் சென்றன. அதற்கு எதிரான கருத்துகள் மேலோங்கின. தடை விலக்கப்பட்டது. நாவலின் கதையே புத்தகங்களுக்கு எதிரான தடை பற்றியதுதான். ஆனால் அந்தத் தடை வெறுமனே புத்தகத்தை விற்கவோ வாங்கவோ கூடாது என்பதோடு நிற்கவில்லை. புத்தகங்களைக் கைப்பற்றி எரித்துச் சாம்பலாக்குகிற அளவுக்குப் போனது. அதற்கென்றே ஒரு ‘தீயெரிப்புப் படை’ அமைக்கப்படுகிறது! ‘பாரன்ஹீட் 451’ என்பது காகிதம் எரிவதற்கான வெப்பநிலையாகும். ஆகவே அந்தத் தலைப்பு புத்தகங்கள் எரிக்கப்படுவதன், அதன் மூலம் புத்தகத் தணிக்கையின், ஒடுக்குமுறையின் குறியீடானது. மேலும், கருத்துரிமை ஒடுக்குமுறைகளுக்கு எதிரான மக்கள் மனக் கொந்தளிப்பின் குறியீடாகவும் அந்தத் தலைப்பு அமைந்தது. தடையின் கதை உண்மையான நிகழ்கால அரசியலைத் தாக்குவதற்குக் கற்பனையான எதிர்கால சமூகத்தை நடமாட விடுகிற புனைவு உத்தியைத்தான் இந்த நாவலில் ரே பிராட்பரி (Ray Bradbury) கையாண்டிருக்கிறார். ஓர் எதிர்காலச் சமூகத்தில் புத்தகங்கள் தடை செய்யப்பட்டுள்ளன. தீயணைப்புப்படை இருக்கிறது – ஆனால் அதன் ஒரு முக்கிய வேலை, எங்காவது யாராவது புத்தகங்கள் வைத்திருக்கிறார்களா என்று கண்டுபிடித்து அவற்றை எரிப்பதுதான். ஆம் உண்மையில் அது “தீயெரிப்புப்படை”! அதன் பணியாளர்கள் தீயணைப்பு வீரர்கள் அல்ல, தீயெரிப்பு வம்பர்கள்தான். அந்தப் படையில் கய் மோன்டாக் ஓர் எரிப்பாளன். கேள்வி கேட்காமல் தனது வேலையைச் செய்துவரும் அவனுக்கு, தனது மனைவி மில்ட்ரெட் எதையுமே கண்டுகொள்ளாமல் பொழுதுபோக்குகளில் மட்டும் ஆர்வமாக இருப்பது பற்றிய கவலை இருக்கிறது. க்ளாரிஸ் மெக்லெல்லன் என்ற ஒரு மாறுபட்ட இளம் பெண்ணை அவன் சந்திக்கிறான். அவள் புத்தகங்களை நேசிக்கிறவள். அதனால் வளர்ந்த அறிவுக் கூர்மையும் அன்பின் இணக்கமும் நிறைந்தவள். உலகத்தைப் பற்றிய விரிந்த பார்வை கொண்ட அவளுடன் பேசப் பேச அவனுக்குத் தனது வாழ்க்கையைப் பற்றியும், புத்தகங்கள் பற்றியும் புதிய பார்வை ஏற்படத் தொடங்குகிறது. ஒரு நாள், தீயெரிப்புப் படையினர் வைத்த தீயில் வயது முதிர்ந்த ஒரு பெண் அவரது புத்தகங்களுடன் சேர்ந்து எரிக்கப்படுவதை கய் பார்க்கிறான். அது அவனை ஆழமாகப் பாதிக்கிறது. தான் இதுவரையில் எரித்த புத்தகங்களைப் பற்றி யோசிக்கிறான். சில புத்தகங்களை மீட்டு வீட்டில் ரகசியமாக மறைத்து வைக்கிறான். க்ளாரிஸ் திடீரென காணமாமல் போகிறாள். இது கய்யைக் குழப்பத்தில் ஆழ்த்துகிறது. அவள் ஒரு கார்விபத்தில் இறந்துவிட்டதாக மில்ட்ரெட் கூறுகிறாள். குறிப்பிட்ட பாதையில் க்ளாரிஸ் சென்றிருப்பாள் என்று கய் ஊகிக்கிறான். ஆனால் அதற்கான திட்டவட்டமான ஆதாரம் கிடைக்கவில்லை. அவன் தன்னிடமுள்ள புத்தகங்களைப் பற்றி மில்ட்ரெட்டிடம் சொல்ல முயல்கிறான், ஆனால் அவள் பொருட்படுத்தவில்லை. ஏமாற்றமடையும் கய் ஒரு புத்தகத்தை அவளுடைய நண்பர்களுக்கு வாசித்துக் காட்டுகிறான். அவர்கள் அதிர்ச்சியும் கோபமும் அடைகிறார்கள். ஆத்திரப்படும் மில்ட்ரெட் கய்யைக் காட்டிக் கொடுக்கிறாள். அவனும் தீயெரிப்புப் படையைச் சேர்ந்தவன்தான் என்றாலும், புத்தகங்களுடன் இருக்கும் அவனுடைய வீட்டைக் கொளுத்துவதற்குப் படைக் குழுவினர் வருகின்றனர். அங்கே நடக்கும் மோதலில் அவன் தனது மேலதிகாரியான குழுத் தலைவனைத் தாக்கிக் கொன்றுவிடுகிறான். ஊரைவிட்டுத் தப்பி ஓடுகிறான். நகரத்திற்கு வெளியே, அடுத்த சந்ததிகளுக்காகப் புத்தகங்களை மனப்பாடம் செய்து தலைமுறை தலைமுறையாகப் பாதுகாத்து வருகிற, ஒதுங்கி வாழ்கிற ஒரு குழுவை அவர் சந்திக்கிறான். ஒரு போர் மூள்கிறது. அதில் நகரம் அழிக்கப்படுகிறது. கய்யும் அந்த குழுவினரும் தொலைவிலிருந்து அதைப் பார்க்கிறார்கள். அழிவின் இடிபாடுகளிலிருந்து ஒரு புதிய சமுதாயத்தைக் கட்டியெழுப்ப அவர்கள் ஒன்றாகப் பயணிக்கிறார்கள். புத்தகங்களிலிருந்து பெற்ற அறிவையும் மானுட மாண்பையும் அவர்கள் சுமந்து செல்கிறார்கள். க்ளாரிஸ்சுக்கு என்ன ஆனது என்று நாவல் தெரிவிக்கவில்லை. படையாட்களால் அவள் கொல்லப்பட்டிருக்கலாம் என்று பல வாசகர்கள் கருதுவதாகப் பதிவுகள் தெரிவிக்கின்றன. போராளிகளின் துணை மக்களின் அறிவு வளம் பெறுவது தங்களின் ஆதிக்கத்திற்குத் தடையாகிவிடும் என்று கருதும் ஆட்சியாளர்கள், அதிகார வர்க்கத்தினரைச் சாடும் இந்த நாவல், சிந்தனைகளுக்கு எதிரான ஒடுக்குமுறை பற்றிய கூர்மையான விமர்சனத்தை முன்வைக்கிறது. உலகம் முழுவதும் கருத்துச் சுதந்திரத்திற்காகப் போராடுகிறவர்களின் இலக்கியத் துணையாக அடையாளம் பெற்றிருக்கிறது. ரே பிராட்பரி அமெரிக்காவின் இலினாய்ஸ் மாநிலம் வாகீகன் நகரில் பிறந்த ரே டக்ளஸ் பிராட்பரி (Ray Bradbury) ‘தி மார்ஷ்யன் குரோனிக்கிள்ஸ்’, ‘சம்திங் விக்கெட் திஸ் வே கம்ஸ்’ உள்ளிட்ட படைப்புகளை அளித்திருக்கிறார். அவற்றிலும் அரசியல், சமூக விமர்சனங்கள் இருக்கின்றன என்று திறனாய்வாளர்கள் பதிவு செய்திருக்கிறார்கள். 400-க்கும் மேற்பட்ட சிறுகதைகள் மற்றும் 50-க்கும் மேற்பட்ட புத்தகங்களை எழுதி மறைந்த அவருடைய ஆனால் அவரது எழுத்துகள் இன்னும் உலகம் முழுவதும் வாசகர்களை ஈர்க்கின்றன என்று திறனாய்வாளர்கள் கூறியிருக்கிறார்கள். அமெரிக்காவில் 1940களில் குறிப்பாக இடதுசாரி சிந்தனையாளர்கள் கடுமையாக வேட்டையாடப்பட்டார்கள். சோவியத் யூனியன் கொள்கைகளின் செல்வாக்கு பரவுவதற்கு எதிரான திட்டமிட்ட அவதூறுகள் கிளப்பப்பட்டன. அரசியல், சமுதாய நிலைமைகளை விமர்சித்தவர்கள் சோவியத் கையாட்கள் என்று தாக்கப்பட்டார்கள். “இரண்டாவது சிவப்பு பீதி” என்று சித்தரிக்கப்பட்ட அந்தக் காலக்கட்டத்தில் ஏற்பட்ட எண்ணங்கள்தான் இந்த நாவலை எழுதத் தூண்டின என்றார் ரே பிராட்பரி (Ray Bradbury). ஜெர்மனியில் ஹிட்லர் புத்தகங்களைக் குவியல் குவியல்களாக எரித்த அட்டூழியங்களும், அமெரிக்காவிலும் அதே போன்ற வெறியாட்டங்கள் வர வாய்ப்பிருக்கிறது என்ற தனது அச்சமும் ‘பாரன்ஹீட் 451’ கதைக்கு மூலமாகின என்றும் அவர் தெரிவித்திருக்கிறார். புத்தகங்களுக்கு எதிரான, சொற்களைக் கட்டுப்படுத்துகிற அதிகாரப்போக்கு இன்றைய மெய்யான எதிரி என்றார். சொற்களைக் கட்டுப்படுத்தத் துடிக்கும் அப்படிப்பட்ட மெய்யான எதிரிகளை எங்கேயும் பார்க்க முடியும் – இங்கேயும்தான் – இல்லையா? எழுதியவர் : அ. குமரேசன் https://bookday.in/ray-bradbury-fahrenheit-451-novel-based-article-written-by-a-kumaresan/
  2. எம் ஜி ஆருக்கு போட்டியாக கருணாநிதி இவரை திரை நட்சத்திரமாக்க முனைந்தாராம். ஆனால் எண்ணையை பூசி கொண்டு பிரண்டாலும் ஒட்டுற மண்தானே ஒட்டும்🤣. மகன் நடிப்பதோ பிள்ளையோ பிள்ளை, அப்பன் அடிப்பதோ கொள்ளையோ கொள்ளை என்பது அன்றைய பிரபல அரசியல் வாசகமாம். பின்னாளில் இந்த முத்துவே எம்ஜிஆரிடம் சரணடைந்து பண உதவிகோரினாராம். உதவி செய்தாலும், அரசியலில் இவரை எம்ஜிஆர் சேர்த்துகொள்ளவில்லையாம். தன்னை கவிழ்ப்பார் என்ற பயமா அல்லது அப்பனுக்கு எதிராக மகனை நிறுத்த கூடாது என்ற நல்லெண்ணமா தெரியவில்லை. சார்ந்தோருக்கு அனுதாபங்கள்.
  3. 19 JUL, 2025 | 10:07 PM உயிர்த்த ஞாயிறு தின குண்டுத்தாக்குதல்களை அறிந்திருந்தும் அவற்றை மறைத்ததாக குற்றஞ்சாட்டப்பட்ட முன்னாள் அரச புலனாய்வு துறையின் தலைவர் நிலந்த ஜெயவர்தன பொலிஸ் சேவையில் இருந்து நீக்கப்பட்டுள்ளார். இந்த தீர்மானத்தை பொலிஸ் ஆணைக்குழு எடுத்துள்ளது. நிலந்த ஜெயவர்தனவை பணிநீக்கம் செய்வதற்கான உத்தரவுகளை பிறப்பிக்கும் பணிப்புரையை, பொலிஸ் ஆணைக்குழு, பதில் பொலிஸ் மா அதிபர் பிரியந்த வீரசூரியவுக்கு அனுப்பியுள்ளது. நிலந்த ஜெயவர்தன தனது கடமையை புறக்கணித்ததாகவும், குற்றவியல் குற்றத்தைச் செய்ததாகவும் உயிர்த்த ஞாயிறு தின குண்டுவெடிப்புகள் தொடர்பான ஜனாதிபதி ஆணைக்குழு அறிக்கை பரிந்துரைத்திருந்தது. அதன்படி, நிலந்த ஜெயவர்தன, மீது ஒழுக்காற்று விசாரணை நடத்தப்பட்டு, அவர் செய்த குற்றச் செயலுக்காக வழக்குத் தொடரப்பட வேண்டும் என்று பொலிஸ் ஆணைக்குழு பரிந்துரைத்துள்ளமை குறிப்பிடத்தக்கது. https://www.virakesari.lk/article/220413
  4. சரியான நிலைப்பாடு ஆனால் வசன அடிப்படையில் இந்தியக் கடற்றொழிலாளர்கள் என்பதற்குப் பதிலாக இந்தியக் கடற்கொள்ளையர்கள் என குறிப்பிடப்பட்டிருக்கவேண்டும்!
  5. சுவிற்சலாந்து சூரிச் நகரத்தில் அதிக தமிழர்கள்தான் வசிக்கின்றார்கள். அவர்கள்... அந்த கடைத் தொகுதிக்கு "குட்டி தமிழீழம்" அல்லது "குட்டி யாழ்ப்பாணம்" என்று பெயர் வைக்காமல் "லிட்டில் ஸ்ரீலங்கா" என்று பெயர் வைதத்தமை அவர்களின் சிங்கள அடிமைக் குணத்தை காட்டுகின்றது. புதிய கடை கட்டி முடித்தவுடன்.... "லிட்டில் ஸ்ரீலங்கா" என்ற பெயரை மீண்டும் வைத்தால்... பெரும் பிரச்சினை காத்திருக்கு.
  6. “செம்மணியில் புதைக்கப்பட்டவர்களே!” செம்மணியில் புதைக்கப்பட்டவர்களே துயிலாத சடலங்களே கண்மணி மழலைகளும் கதறாத மௌனங்களே செம்மண்ணும் அவர்களைத் தழுவ மறுக்குதே காடையர்கூட்டம் அதன்மேல் கும்மாளம் அடிக்குதே! பாடசாலை சிறுமி சிதறிக் கிடக்கிறாளே பக்கத்தில் இன்னும் அவளின் புத்தகப்பையே புத்தர் போதித்தது மண்ணோடு மண்ணாகிற்றே அப்பாவி உடல்கள்மேல் வழிபாடு நடக்குதே! விலங்குக்கும் சில பண்பாடு உண்டே விபரம் அறிந்தால் நன்மை கிடைக்குமே விளக்கம் இல்லாத மதபோதனை எனோ களங்கப் படுத்துதே புண்ணியப் பூமியை! வரிசையில் எலும்புகள் அவலத்தைச் சொல்லுதே இடையில் சின்னஞ்சிறுசுகள் பாதகத்தைக் காட்டுதே பாவத்தை அழிக்கத் தோன்றிய கௌதமபுத்தனே சிலைசிலையாய் மண்ணைக் கவர்வது எதற்க்கோ! [கந்தையா தில்லைவிநாயகலிங்கம், அத்தியடி, யாழ்ப்பாணம்]
  7. எம்பியாக இருந்துமட்டும் என்னத்தை சாதித்தவராக்கும்? வரே வா அப்படி வழிக்கு என்று சொல்வார்கள். நேற்றுத்தான் சுமந்திரன், சாணக்கியன் இதை சொன்னால் விளைவு என்ன என்கிற மாதிரி கதை. இன்று இப்படி. சாணக்கியன் சிங்கள கட்சியிலிருந்து பதவிக்காக கட்சி தாவி இப்போ கிழக்கின் முதலமமைச்சர் பதவி கனவில், யாரிலும் நோகக்கூடாது என்று காத்திருக்கிறார். அன்று ஹிஸ்புல்லா சொன்னார், அதாவது கிழக்கில் முஸ்லீம், முதலமைச்சராக வந்தால் தமிழர், வடக்கு கிழக்கு தமிழர் தாயகம் என்று சொல்வார்களா? சொல்ல மாட்டார்கள் என்றார், அதே இன்று, ரவுப் கக்கீம் சொல்கிறார். தமிழரசுக்கட்சிகளோடு பல விட்டுக்கொடுப்புகளை செய்திருக்கிறார்களாம், முஸ்லிம்களுக்கென்று ஒரு மாகாணம் என்றால் அது கிழக்கு மாகாணம் தானாம், அதை தாங்கள் காத்துக்கொள்ள வேண்டுமாம். அப்போ சாணக்கியன் என்ன செய்வாரென ஆரூடம் கூறியாச்சு. முதலில் சாணக்கியன் தமிழரசில் போட்டியிடும்போதே தூஷண பிக்கரை கூட்டி வந்து அப்பாவி மக்களை பயமுறுத்தி வாக்கு சேர்த்தவர். அப்பவே அடித்து சொன்னேன் சாணக்கியனின் தந்திரத்தை. அங்கே முஸ்லிம்கள் காகித ஆலையை ஆட்டையைப்போட கங்கணம் கட்டுகிறார்கள். சிறீநாத், மற்றைய பாராளுமன்ற உறுப்பினர்கள் தடுக்க போராடுகிறார்கள். சாணக்கியன் கனவில் மிதக்கிறார். இருந்து பாருங்கள், சாணக்கியன் கிழக்கின் முதலமைச்சர் ஆனால், இருக்கும் தமிழரின் நிலங்களும் பறிக்கப்படும். அவர்களுக்கு தமிழரும் தேவையில்லை, நிலங்களும் தேவையில்லை, பதவி மட்டும் வேண்டும். அதற்காகவே சாணக்கியன், சுமந்திரன் தமிழரசுக்கட்சிக்கு நுழைந்தனர். சிங்கள மக்களோடு வாழ்வது அதிஷ்ட்டம் என்றவர், வடக்கு கிழக்கில் எனது உயிருக்கு ஆபத்து இராணுவம் மற்றும் அதிரடிப்படையின் பாதுகாப்பு வேணும் என்று சிங்களத்திடம் கேட்டு பெற்று விட்டு, வடக்கு கிழக்கிலே வாக்கு கேட்க்கும் வெட்கம் கெட்டவர், சிங்களத்திடம் எதிர்த்து கேள்வி கேட்க்கும் தைரியம் இருக்கா? சொன்னாரே, மன்னாரில் மனித புதை குழி தோண்டினார்கள், அப்போ நானும் அங்கிருந்தேன், அதன் பிறகு அதற்கு என்ன நடந்தது என்று தெரியவில்லையாம். செம்மணி புதைகுழி வெளிவந்தவுடன் பேட்டி கொடுக்கிறார். ஏன் அவரால் அதை முன்கொண்டு செல்ல முடியவில்லை? இவர் சட்டத்தரணிதானே? தமிழரின் பிரதிநிதி என்று வேறு அதிகாரம் செலுத்துகிறார். அப்போ ஏன் அவரால் முடியவில்லை? நீங்களும் அப்பப்போ சுமந்திரனுக்கு எதிரும் புதிருமாக கருத்துக்களை பதிந்து நடிக்கிறீர்கள். ஆனால் உங்கள் நடிப்பு அவர்களை காப்பாற்றாது.
  8. 🌷கரிசக்காட்டுப்பூவே🌷 செல்வன் சௌந்தரராஜ் · tnoreoSpsdjuim717uu,ilt2t82e08u1 la85h50694ui:4cl62 1itag5u0 · உலகமே வியந்து பொறாமைப் பட்டு பொருளாதாரத்தில் உச்ச நிலையைத் தொட்ட ஆப்பிள் நிறுவனத்தின் அதிபர் ஸ்டீவ் ஜோப்ஸ் உடல்நலம் குன்றி தனது 56 வயதில் இந்த உலகை விட்டு பிரிவதற்கு முன்பாக சொன்ன செய்தி: வர்த்தக உலகில் வெற்றியின் உச்சம் தொட்டேன். மற்றவர் பார்வையில் என் வாழ்க்கை வெற்றிக்கு உதாரணமாகக் காட்டப்பட்டது. நோயுற்று மரண படுக்கையில் இருக்கும் நான் இப்போது என் முழு வாழ்க்கையையும் நினைத்துப் பார்க்கிறேன். பெற்ற புகழும், செல்வமும் அதனால் அடைந்த பெருமையும் இப்போது எனக்கு அர்த்தமற்றதாகத் தோன்றுகிறது. அதனால் எந்த வித பயனும் இல்லை. உங்கள் காரை ஓட்ட யாரையாவது நியமிக்கலாம். உங்களுக்காக சம்பாதிக்க, உங்கள் வீட்டு வேலைகள், தோட்ட வேலைகள் செய்ய எத்தனை பேரை வேண்டுமானாலும் நியமிக்கலாம். ஆனால் உங்கள் நோயையும் அதனால் சந்திக்கும் வேதனைகளையும் வலிகளையும் பயத்தையும் ஏற்றுக் கொள்ள யாரையும் நியமிக்க முடியாது. எந்தப் பொருள் தொலைந்தாலும் மீண்டும் தேடிவிட முடியும். ஆனால் வாழ்க்கை மற்றும் ஆரோக்கியம், உடல் நலம் தொலைந்து விட்டால் திரும்ப கிடைக்கவே கிடைக்காது. வாழ்க்கை எனும் நாடக மேடையில் இப்போது நீங்கள் எந்த காட்சியில் நடித்துக் கொண்டிருந்தாலும் நாடகம் முழுமையாக முடியும் என்று உறுதி சொல்ல முடியாது. நடுவிலேயே எப்போது வேண்டுமானாலும் உங்களுக்கு திரை விழலாம். அழைப்பு வரலாம். நாம் பக்குவமடையும் போதுதான் சில விஷயங்கள் புரியும். முடிந்தால் அதற்குள் உங்கள் கடமைகளை நிறைவேற்றுங்கள், அதற்கும் இறைவன் அருள் வேண்டும். செலவழிக்க வாய்ப்பு இல்லாதபோது உங்கள் மணிபர்சில் நூறு ரூபாய் இருந்தாலும் ஒன்றுதான். ஒரு கோடி இருந்தாலும் ஒன்றுதான். நீங்கள் தனிமையான பிறகு 300 சதுர அடி வீட்டில் வசிப்பதும், 30,000 சதுர அடி பங்களாவில் வசிப்பதும் ஒன்றுதான். ஆறடி நிலம் கிடைக்காமல் நாறிப்போனவர்கள் எத்தனையோ. ஆகவே உங்களைச் சுற்றிலும் இருக்கும் அனைவரிடமும் அன்புடன் பேசிப் பழகுங்கள். அதுதான் உண்மையான மன மகிழ்ச்சி , மன நிம்மதி. தங்கத்தை பூட்டி வைத்தாய் வைரத்தை பூட்டி வைத்தாய் உயிரை பூட்ட ஏது பூட்டு ?
  9. 1- அவர்களை குப்பை என்றபடி சுமந்திரனினை குண்டுமணியாக்கும் பணிக்கான எனது கருத்து மட்டுமே. 2- பட்டறிவே பாடம் 3- உலகெங்கும் முக்கியமாக கனடாவில் அவருக்கான ஒருமித்த ஆதரவு இருக்கிறது வெளிக்கொண்டு வர பட்டிருக்கிறது. ஆனால் முள்ளில் விழுந்த சேலையின் நிலை....
  10. பெற்ற மகனும் கட்டிய மனைவியும் நடக்கப்போவது தெரியாமல் நிம்மதியாக தூங்க, பாதகன் சொல்லிக்கொள்ளாமலேயே பிரிந்து சென்றான். அவன் உடலை மறைத்த நயவஞ்சக சீடர், அவர் ஞானம் எய்திவிட்டார் என்கிற பொய்யுரைக்க அந்தப் பொய்யில் மதத்தை தோற்றுவித்து வயிறு வளர்த்தனர் அவர்தம் சீடர். அதன் உண்மையை புரிந்துகொண்ட சிங்களம் தன் பங்குக்கு புத்தனை வைத்து கொலை, கொள்ளையடிக்கிறது. புத்தன் தான் கடவுளல்ல, தான் ஒரு ஞானி என்பதை வெளிப்படுத்தாமல் மறைத்ததும் நயவஞ்சகமே!
  11. நொச்சி அவர்கள் உணர்ச்சிபூர்வமாக உரையாடுபவர். அவரது இந்தக் கருத்தை சில நாட்களின் முன் வாசித்தேன். மிகவும் முரண்பாடான கருத்து இது. பலருக்கு தெரியாத விடயம் ஒன்று என்ன என்றால் தமிழர் அல்லாத இதர சமூகத்து மாணவர்களின் தொகை கணிசமான அளவு யாழ் பல்கலைக்கழகத்தில் உள்ளது. யாழ் மருத்துவபீடத்து மாணவர்களின் தீர்மானங்களுக்கு எதிராக குரலை உயர்த்த வேண்டிய தேவை இங்கு இல்லை.
  12. ஶ்ரீநிவாஸ் எப்போ எம்மை கருவறுத்தார் அல்லது முயன்றார்? புலம்பெயர் குமுகாயம், கமுகமரம் எல்லாம் தென்னிந்திய தயாரிப்புகளை அடியோடு புறக்கணித்தே விட்டீர்களா? யாழ் பல்கலை மாணவர் ஒன்றியம் என்ன ஒட்டு குழுவா? அவர்களுக்கு தெரியாத? எப்போதும் உங்களிடம் கை ஏந்த வேண்டுமா? இசை நிகழ்சி மூலம் தம்மிடையே நிதி திரட்டினால் ஆகாதா? இப்படியவது பண்பாட்டு மையம் பயன்பாட்டுக்கு வந்ததே பெரிய விடயம்.
  13. உங்களுக்கு விளங்குதோ விளங்கவில்லையோ தெரியவில்லை சாத்தான்… நாம் ஏன் 16 வருடமாக ஒரே இடத்தில் நிண்டு சுத்துகிறோம் என்பதை உங்கள் நீண்டபதில்கள் விளக்கி நிற்கிறன. புலிகள் தவறிழைத்தார்கள், அதில் அப்பாவி முஸ்லிம்களும் பாதிக்கப்பட்டார்கள். முஸ்லிம் ஜிகாத், ஊர்காவல் படைகளால் தமிழர்களும் பாதிக்கப்பட்டார்கள். இராணுவத்தால் தமிழர்கள் பாதிக்கப்பட்டார்கள். இவை அனைத்தையும் விசாரிக்க வேண்டும். இதில் அப்போ அதிகாரத்தில் இருந்த, இப்போ எஞ்சியுள்ள அனைவரும் தண்டிக்கப்பட வேண்டும். இதற்கு ஈடாக ஒரு நியாயமான தீர்வு வர வேண்டும். இதுதான் உண்மையான நல்லிணக்க, பொறுப்புகூறும் முடிவாக இருக்கும். (Truth and reconciliation). இதை முந்தள்ளும் இயலுமையை நாம் பெறாதவரை, உங்கள் போன்றோரின் சிந்தனை எமது மக்களை வழி நடத்தும் வரை….. அடிப்படைவாத முஸ்லிம்களும், இலங்கை அரசும், பெளத்த பேரினவாதிகளும், அருண் சித்தார்துகளும் வென்றுகொண்டே இருப்பார்கள்.
  14. இதுபற்றி முன்னரும் கூறியிருந்தார்கள். ஆனாலும் நடைமுறையில் எதையும் காணவில்லை. இதை நடைமுறைப்படுத்தினால் நல்லது. ஒவ்வொரு தடவை இலங்கை போகும்போதும் இன்ரநசினல் அனுமதிப் பத்திரம் எடுத்துக் கொண்டே போகிறேன். சிலர் இதை இலங்கையில் பாவிக்க முடியாது என்கிறார்கள். இந்தமுறை கொழும்புதுறைக்கு மீன்வாங்க சென்றபோது மாம்பழம் சந்தியில் பொலிசார் நிற்பாட்டினார்கள். அருகில் சென்று நிற்பாட்டும்போது போகச் சொல்லி சைகை காட்டினார்கள். அனேகமான நாட்களில் மோட்டார் சைக்கிளிலேயே திரிந்தோம்.
  15. ஏன் சுமந்திரன், சாணக்கியனுக்குப் போவான்? இதை ஜஸ்ரினோ, ஐலண்டோ, கோசானோ சொல்லி விட்டு திட்டு வாங்காமல் போய் விட முடியுமா😂? அது தான் நிலைமை! இத்தனைக்கும் திட்டுவோர் பெரும்பான்மை கூடக் கிடையாது! A disproportionately loud minority!
  16. பள்ளிகளுக்கு பதில் தந்தையின் கல்லறைகளுக்கு அருகில்; காசா சிறுமிக்கு ஏற்பட்டுள்ள சோக முடிவு காசா மக்களின் யதார்த்த வாழ்வை ஆவணப்படுத்தும் விருப்பத்தில், Palestine Chronicle எனும் ஊடகத்திற்கு செய்திகளை வழங்கி வந்த 11 வயது சிறுமி Lama Nasser இஸ்ரேலிய வான்வழித் தாக்குதலில் உயிரிழந்தார். கடந்த 2023 அக்டோபர் மாதத்தில் தொடங்கிய இஸ்ரேல் காஸா மோதலில் தற்போதுவரை 58,000 பாலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டிருப்பதாக பாலஸ்தீன சுகாதார அதிகாரிகள் தெரிவித்திருக்கின்றனர். தொடர் மோதலால் காஸாவில் 2.3 மில்லியன் குடியிருப்பாளர்கள் பட்டியின் விளிம்பிற்குத் தள்ளப்பட்டிருக்கின்றனர். இந்தப்போரில் காஸாவில் நடக்கும் நிகழ்வுகளை உலகுக்குத் தெரிவித்த பல பத்திரிகையாளர்கள் கொல்லப்பட்டனர். கடந்த ஏப்ரல் மாதத்தில் வெளியாகியிருந்த Watson Institute for International and Public Affairs’ Costs of War project எனும் அறிக்கை, காசா மீதான இஸ்ரேலின் போரில் 232 பத்திரிகையாளர்கள் கொல்லப்பட்டிருப்பதாகத் தெரிவித்தது. இந்த எண்ணிக்கை மாதத்திற்கு சராசரியாக 13 பத்திரிகையாளர்கள். அதுமட்டுமின்றி, உலகப் போர்கள், வியட்நாம் போர், யூகோஸ்லாவியாவில் நடந்த போர்கள் மற்றும் ஆப்கானிஸ்தானில் அமெரிக்கப் போர் என உலகில் நடந்த எந்தப் போர்களையும் விட காஸாவில் நடக்கும் போரில் அதிகளவில் பத்திரிகையாளர்கள் கொல்லப்பட்டிருக்கின்றனர் என்றும் அந்த அறிக்கை தெரிவித்தது. இதற்கிடையே, குறிப்பாக தொடர்ச்சியாக பத்திரிக்கையாளர்கள் கொல்லப்படுவதை அடுத்து, நூற்றுக்கணக்கான தன்னார்வலர்களும், காஸா மக்களும் தாங்கள் எதிர்கொள்ளும் நிகழ்வுகளை வீடியோக்களாகப் பதிவேற்ற ஆரம்பித்தனர். இதில் குழந்தைகள் பலரும் இணைந்து கொண்டனர். அப்படி துணிச்சலாக குரல் கொடுத்த குழந்தைகளில் ஒருவர்தான் லாமா நாசர் எனும் 11 வயது குழந்தை. இவர் தனது வீடியோக்களில் தனது நண்பர்களையும் சேர்த்துக்கொண்டு காஸாவில் நடக்கும் நிகழ்வுகளை உலகிற்கு தெரிவித்து வந்தார். Palestine Chronicle எனும் ஊடகத்திற்கும் செய்திகளை வழங்கி லாமா நேற்று இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் உயிரிழந்திருக்கிறார். நகரத்தில் உள்ள ஆறு மாடி கட்டிடத்தின் மீது விழுந்த இஸ்ரேலிய குண்டு, அக்கட்டத்தை மொத்தமாக சிதைத்தது. இந்தத் தாக்குதலில் லாமா, அவரது பெற்றோர், அவரது சகோதர சகோதரிகளும் உயிரிழந்தனர். Palestine Chronicle ஊடகத்திற்கு கடைசியாக அவர் அளித்த வீடியோவில், “காசா என்பது குழந்தைப் பருவமும் வேதனையும் ஒன்று சேர்ந்த இடம். அங்கு உள்ள சிறுவர்கள், உலகின் மிகக் கடுமையான சூழ்நிலைகளில் ஒன்றில் வாழ்ந்துகொண்டு இருக்கின்றனர். ஒரு வருடத்திற்கும் மேலாக நீடித்து வரும் ஆக்கிரமிப்பு காரணமாக குழந்தைகள் கடினமான மற்றும் பேரழிவு தரும் சூழ்நிலைகளை கடந்து செல்கின்றனர். காசாவில், குழந்தைகள் பட்டினியால் அவதிப்படுகிறார்கள். சாப்பிட உணவு இல்லை. சாப்பிட உணவு இல்லை. மேலும், அவர்கள் தொற்றுநோய்கள், குறிப்பாக போலியோ பரவலால் அவதிப்படுகிறார்கள். இஸ்ரேலிய ஆக்கிரமிப்புகள் பள்ளிகளையும் பல்கலைக்கழகங்களையும் அழித்ததால், குழந்தைகள் கல்வி கற்கும் உரிமையை இழந்துள்ளனர். குழந்தைகள் பள்ளிக்குச் செல்வதற்கு பதிலாக, அவர்கள் தங்கள் தந்தையின் கல்லறைகளுக்கு அருகில் அமர்ந்திருக்கிறார்கள் அல்லது தங்கள் குடும்பங்களுக்கு தண்ணீர் வேண்டி வரிசையில் நிற்கிறார்கள். காசாவின் குழந்தைகள் உலகில் உள்ள எந்தக் குழந்தையையும் போலவே அமைதியாக வாழ விரும்புகிறார்கள். இனப்படுகொலையை நிறுத்துங்கள்!” எனத் தெரிவித்திருக்கிறார். https://thinakkural.lk/article/319073

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.