Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Leaderboard

  1. குமாரசாமி

    கருத்துக்கள உறுப்பினர்கள்
    14
    Points
    46783
    Posts
  2. ஏராளன்

    கருத்துக்கள உறவுகள்
    12
    Points
    31956
    Posts
  3. தமிழ் சிறி

    கருத்துக்கள உறவுகள்
    12
    Points
    87988
    Posts
  4. Justin

    கருத்துக்கள உறவுகள்
    7
    Points
    7044
    Posts

Popular Content

Showing content with the highest reputation on 07/28/25 in all areas

  1. எனது மரணம். நாம் எமது வாழ்க்கையில் பிறந்தது முதல் இறக்கும் வரைக்கும் ஏதோ ஒரு இலக்கை நோக்கியே சென்று கொண்டிருப்போம். நாம் பிறந்தவுடன் எமது பிற்காலத்தை ஓரளவு எம்மை பெற்றெடுத்தவர்கள் தீர்மானிப்பர். அது சில/பல வேளைகளில் நூறு வீதம் சரியானதாக இருக்காது. பிறந்து வளர்ந்து புத்திகள் வர புதிய சிந்தனைகள் உதிக்க சிலரது வாழ்க்கை பெற்றோர்கள் கீறிய கோட்டில் செல்லும். பலரது வாழ்க்கை பலவகையில் மாறி மாறி செல்லும். உதாரணத்திற்கு எனது வாழ்க்கை ஜேர்மனியில் அமைந்து முடியும் என நானும் எதிர்பார்க்கவில்லை.என்னை பெற்றெடுத்து வளர்த்தவர்களும் எதிர்பார்த்திருக்க மாட்டார்கள். ஏனென்றால் என்னை பெற்றெடுத்தவர்கள் எனது எதிர்காலம் பற்றி ஆயிரம் திட்டங்கள் வைத்திருப்பார்கள்.இது இவனுக்கு அது அவளுக்கு என பல கனவுகளை வளர்த்திருப்பார்கள்.பெற்றெடுத்தவர்களுக்கு அது எட்டாக்கனியாக மாறியிருக்கும். இப்படியான சம்பவங்கள் பலருக்கு நடந்திருக்கலாம். பெற்றோரின் கட்டுப்பாடு எனும் கையை விட்டு விலகும் போது பல விடயங்களை நம்மை நாமே அரசர்களாக்கி தீர்மானிக்கின்றோம். அது பல இடங்களில் தனி பறவையாக்கும் போது தானாகவே வந்து சேர்ந்து விடும்.நல்லது கெட்டது தெரியாத பருவத்தில் நாம் செய்வதெல்லாம் வீரமாக தெரியும். புத்திசாலித்தனமாக தெரியும். சரியானதாகவும் தெரியும். அதன் பின் மனித வாழ்வில் திருமண நிகழ்வு என ஒன்று வரும். அது ஒரு கூட்டு வாழ்க்கை.சந்ததிகள் உருவாகும்.சந்தோசங்கள் பெருகும்.சொந்தங்கள் பாசங்கள் உறவுகள் பெருகும். அதில் ஆயிரம் பிரச்சனைகள் வரும் போகும்.நன்மை தீமை என பல சம்பவங்கள் நடந்தேறும்.அப்போது எமக்குள் இருந்த பாசங்கள் விரிவடையும். முன்னர் இருந்த அயல் உறவு பாசங்கள் இல்லாமல் போகும்.....
  2. பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, சித்தரிப்புப் படம் கட்டுரை தகவல் முரளிதரன் காசி விஸ்வநாதன் பிபிசி தமிழ் 27 ஜூலை 2025 புதுப்பிக்கப்பட்டது 4 மணி நேரங்களுக்கு முன்னர் ராஜேந்திர சோழன் தனது புதிய தலைநகரமான கங்கை கொண்ட சோழபுரத்திற்கு குடிநீர் ஆதாரமாக ஒரு பிரமாண்டமான ஏரியை உருவாக்கினார். திருவாலங்காடு செப்பேடுகளில்கூட குறிக்கப்படும் அந்த ஏரியின் நிலை என்ன? அரசர்கள் புதிதாக ஒரு நகரத்தை உருவாக்கும் போது, அந்நகரம் ஆற்றங்கரையில் அமைக்கப்படும் அல்லது நகரம் அமைக்கும் போதே வேறு வகையில் குடிநீர் ஆதாரம் இருப்பது உறுதி செய்யப்படும். ராஜேந்திர சோழன் நீர்வளமிக்க தஞ்சாவூரை விட்டுவிட்டு, அங்கிருந்து சுமார் 50 கி.மீ. தூரத்தில் ஒரு வறண்ட பகுதியில் தனக்கான புதிய தலைநகரத்தை உருவாக்கினார். அப்போது, தனது புதிய தலைநகருக்கு நீராதாரமாக இருக்க வேண்டுமென அவரால் உருவாக்கப்பட்டதுதான் சோழ கங்கம் என்ற ஏரி. கி.பி. 1014ஆம் ஆண்டில் சோழப் பேரரசின் மன்னராக முடிசூட்டிக் கொண்ட ராஜேந்திர சோழன், தான் ஆட்சிக்கு வந்து சுமார் பத்து-பதினோரு ஆண்டுகளுக்குப் பிறகு சோழர் தலைநகரை தஞ்சாவூரில் இருந்து மாற்ற விரும்பினார். அதன்படி, தஞ்சாவூரில் இருந்து சுமார் 50 கி.மீ. தொலைவில் தனது தலைநகரத்தை உருவாக்க முடிவு செய்தார். அந்தத் தலைநகரம், கங்கை கொண்டபுரம், கங்காபுரம் உள்ளிட்ட பல பெயர்களால் அழைக்கப்பட்ட கங்கை கொண்ட சோழபுரம். இந்த இடம் தற்போது அரியலூர் மாவட்டத்தில் இருக்கிறது. இந்தப் புதிய தலைநகரத்தில், ஒரு மிகப்பெரிய அரண்மனை கட்டப்பட்டது. தஞ்சை பெரிய கோவிலைப் போலவே கங்கை கொண்ட சோழீச்சரம் என்ற பெயரில் மிகப்பெரிய கோவில் ஒன்று உருவாக்கப்பட்டது. அகழி, கோட்டைச் சுவருடன் கூடிய இந்த நகரம் 1,900 மீட்டர் நீளமும் 1,350 மீட்டர் அகலமும் உடையதாக இருந்தது. ஆனால், இந்தப் பகுதி தஞ்சையைப் போன்ற நீர்வளத்துடன் இருக்கவில்லை. ஆகவே, இந்த நகருக்கென ஒரு மிகப்பெரிய ஏரியை உருவாக்கினார் ராஜேந்திர சோழன். இந்த ஏரி, கங்கை கொண்ட சோழீச்சரம் கோவிலில் இருந்து சில கி.மீ. தூரத்தில் வெட்டப்பட்டது. இந்த ஏரிக்கு சோழ கங்கம் என்று பெயரிடப்பட்டது. தற்போது இந்த ஏரி பொன்னேரி எனக் குறிப்பிடப்படுகிறது. இந்த ஏரி கட்டப்பட்ட காலத்தில் இதன் கரைகள் தெற்கு - வடக்காக 14 முதல் 16 மைல் நீளத்திற்கும் அகலம் சுமார் 4 மைல் நீளத்திற்கும் இருந்ததாக வரலாற்று ஆசிரியர்கள் குறிப்பிடுகின்றனர். படக்குறிப்பு, ராஜேந்திர சோழன் உருவாக்கிய சோழ கங்கம் ஏரி இன்று... இவ்வளவு பெரிய ஏரிக்கான நீரைக் கொண்டு வர, கொள்ளிடத்தில் இருந்து ஒரு கால்வாயும் வெள்ளாற்றில் இருந்து ஒரு கால்வாயும் வெட்டப்பட்டதாகத் தனது 'ராஜேந்திர சோழன்' நூலில் மா. ராசமாணிக்கனார் குறிப்பிடுகிறார். இந்த சோழ கங்கம் ஏரியின் வடிகாலாகத்தான் தற்போதும் மிகப்பெரிய ஏரியாக விளங்கும் வீராணம் ஏரியே இருந்ததாக தனது 'பிற்காலச் சோழர்கள்' நூலில் குறிப்பிடுகிறார் தி.வை. சதாசிவ பண்டாரத்தார். கங்கைச் சமவெளி மீதான தனது வெற்றிகளைக் குறிக்கும் விதமாக இந்த ஏரிக்கு சோழ கங்கம் என்ற பெயரை ராஜேந்திர சோழன் சூட்டியிருக்கலாம். திருவாலங்காட்டுச் செப்பேடுகளில் உள்ள சமஸ்கிருத குறிப்புகள், இதை 'கங்கா - ஜலமயம் ஜெயஸ்தம்பம்', அதாவது 'நீர்மயமான வெற்றித் தூண்' எனக் குறிப்பிடுகின்றன. திருவாலங்காட்டு செப்பேடுகளில் சமஸ்கிருதத்தில் எழுதப்பட்ட 124வது வரியில் "சோளங் கங்கமிதி க்யாத்யா பிரதீதந் நிஜமண்டலே/ கங்கா ஜலமயந் தேவோ ஜயஸ்தம்பம் வியதத்த ஸ:" எனக் குறிப்பிடப்படுகிறது. அதாவது, "தனது மண்டலத்தில் சோழ கங்கம் என்ற பெயருடையதும் கங்கா நீரால் ஆனதுமான ஜயஸ்தம்பத்தை ராஜேந்திரன் நிறுவினான்" என்கிறது இந்தப் பாடல். ஷார்ட் வீடியோ Play video, "சிங்க வடிவிலான சோழர் கால கிணறு - சிறப்பம்சம் என்ன?", கால அளவு 1,07 01:07 காணொளிக் குறிப்பு, கே.ஏ. நீலகண்ட சாஸ்திரியின் 'சோழர்கள்' நூல், இந்த ஏரி குறித்து விரிவான தகவல்களைத் தருகிறது. 1855ஆம் ஆண்டில் வெளியான 'ஸ்தல சஞ்சிகை' ஒன்றை மேற்கோள் காட்டி அந்தத் தகவல்களை அவர் அளித்துள்ளார். "உடையார்பாளையம் தாலுகாவில் வடக்கு-தெற்காக 16 மைல் நீளத்திற்கு ஒரு கரை இருக்கிறது. இதில் வலிமை வாய்ந்த பெரிய கலிங்குகள் இருக்கின்றன. இது முற்காலத்தில் இந்தியாவிலேயே பெரிய நீர்த்தேக்கங்களில் ஒன்றாக இருந்திருக்க வேண்டும். இந்தப் பெரிய குளம் அல்லது ஏரிக்கு கொள்ளிடம் ஆற்றில் இருந்து ஒரு கால்வாய் வழியாகத் தண்ணீர் வந்தது. 60 மைல் நீளமுள்ள இந்தக் கால்வாய், அதனுடைய தென் கோடியில் இந்த ஏரிக்குள் நுழைகிறது. இதுவே இந்த ஏரிக்கு முக்கியமான நீர்வரத்து வழி" என்று அந்த நூலில் கூறப்பட்டுள்ளது. அதோடு, "ஏரியின் வட பகுதியில் நுழையும் ஒரு சிறு கால்வாய் வெள்ளாற்றின் நீரையும் இங்கே கொண்டு வருகிறது. இந்த இரண்டு கால்வாய்களின் அடிச்சுவடுகள் இன்றும் உள்ளன. இந்த ஏரி தூர்ந்துவிட்டதால் பல ஆண்டுகளாக அது எவ்விடத்திலும் பயன்படவில்லை. அந்த ஏரியின் நடுப்பகுதி முழுவதும் உயர்ந்த அடர்த்தியான புதர்களும் குறுங்காடுகளும் நிறைந்து பாழாகிவிட்டது. இந்த ஏரி படையெடுத்து வந்த ஒரு படையினர் வேண்டுமென்றே செய்த ஒரு கொடுஞ்செயலால் அழிந்துவிட்டதாக தலைமுறைதலைமுறையாகச் சொல்லப்படுகிறது" என்றும் நீலகண்ட சாஸ்திரி குறிப்பிட்டுள்ளார். சோழர்கள் நூலின்படி, ஏரியின் தென் கோடியில் காடு சூழ்ந்த ஒரு கிராமம், கங்கை கொண்டபுரம் என்ற பெயரால் இருந்து வருகிறது. அதன் சுற்றுப்புறத்தில் மிகப்பெரிய அளவினதும் அரிய வேலைப்பாடு உடையதுமாகிய ஒரு கோவில் இருக்கிறது. "அதற்கு அருகே காடு சூழப்பட்ட ஒரு பகுதியில் பழைய கட்டடங்களின் எஞ்சிய பகுதிகள் உள்ளன. மலைமேடுகள் போலவும் குவியல்கள் போலவும் உள்ள இவை பழங்காலத்து பாபிலோனை நினைவுபடுத்துகின்றன. மிகப் பரந்த பகுதியில் அழகிய அரண்மனை ஒன்று இருந்தது எனவும் அதன் பல்வேறு பகுதிகள்தான் இடிபாடுகளாகக் காட்சியளிக்கின்றன எனவும் கிராமத்தில் உள்ள முதியோர் கூறுகிறார்கள். இந்த அரண்மனை இருந்த காலத்தில் கங்கை கொண்டபுரம், முடியுடைய மன்னர் ஒருவரின் செல்வமும் செழிப்பும் நிறைந்த தலைநகராக விளங்கியது.." பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, கங்கை கொண்ட சோழீஸ்வரம் கோவில் இப்போது ஒற்றையடிப் பாதைகூட இல்லாத காடாக காட்சி தரும் பகுதியில் மைல்கணக்கான பெரும்பரப்புக்கு இந்த ஏரி பெரும் வளத்தை வாரி வழங்கியதாக நீலகண்ட சாஸ்திரி எழுதியுள்ளார். இந்த மாபெரும் ஏரியை மீண்டும் நிர்மாணிக்க வேண்டும் என அடிக்கடி பேசப்பட்டு வந்துள்ளது. ஆனால், பல்வேறு காரணங்களால் இந்தத் திட்டம் செயல்படுத்தப்படாமல் நிறுத்தி வைக்கப்பட்டு இருப்பதாகவும் கூறியுள்ளார். "எதிர்காலத்தில் எப்போதாவது இது நிறைவேற்றப்படும். ஆனால், அதுவரை இந்தப் பகுதி காடாகத்தான் இருக்கும். இங்கே இருக்கிற ஒரு சில கிராமவாசிகள் அந்த ஏரியின் பழங்காலக் கரையை முன்காலத்துப் பேரரசர்களின் மிகப்பெரிய முயற்சியின் சின்னமாகச் சுட்டிக்காட்டுவார்கள்" என்கிறது அந்த நூல். மேலே உள்ள குறிப்புகள் எழுதப்பட்டு சுமார் 170 ஆண்டுகள் ஆகிவிட்டன. இருந்தபோதும் இந்த ஏரி, இன்னமும் தூர்ந்துபோன நிலையிலேயே இருக்கிறது. ஷார்ட் வீடியோ Play video, "ராஜேந்திர சோழன் கட்டிய சோழ கங்கம் ஏரி", கால அளவு 1,20 01:20 காணொளிக் குறிப்பு, "இந்த ஏரிக்கான நீர் வரத்துக் கால்வாய் 60 மைல் தூரத்திற்கு அந்தக் காலத்திலேயே வெட்டப்பட்டுள்ளது" என்கிறார் கங்கை கொண்ட சோழபுரம் மேம்பாட்டுக் குழுமத்தின் நிறுவன அறங்காவலரான ஆர்.கோமகன். ஆக்கிரமிப்புகளை அகற்றி அந்தக் கால்வாயை இப்போதும் புதுப்பிக்க முடியும் எனக் கூறும் அவர், அதன் மூலம் கொள்ளிடத்தின் நீரை மீண்டும் இங்கே நிரப்ப முடியும் என்று வலியுறுத்துகிறார். இந்த ஏரி ஒரு பொறியியல் அற்புதம் என்கிறார் கோமகன். "இந்த ஏரியில் இருந்து நீர் வெளியேறும் பகுதிகளில் வண்டலை தக்க வைக்கும் ஓர் அமைப்பு இருந்தது. இதில் சேரும் வண்டல் பிறகு சேறோடும் துளை வழியாகவும், பிறகு நீரோடும் துளை வழியாகவும் செல்லும். இந்த வண்டல் கலந்து வரும் நீர் வயல்களில் படிந்து வயல்களை வளமாக்கும்." ஆனால், "இப்போது ஏரியின் பெரும்பகுதி இல்லாமல் போய்விட்டது என்று 1855ஆம் ஆண்டு வெளிவந்த கெஸட்டியர்களிலேயே இந்த ஏரி கைவிடப்பட்டு இருப்பதாக குறிப்பிட்டுள்ளது. அதனால், அதற்கு முன்பே இந்த ஏரி அழிந்திருக்க வேண்டும்" என்கிறார் ஆர். கோமகன். இப்போது இந்த ஏரியைப் புதுப்பிக்கப் போவதாக தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது. தற்போது 700 ஏக்கர் பரப்பளவுடன் இருக்கும் இந்த ஏரியின் கரைகளைப் பலப்படுத்துவதோடு, 15 கிலோமீட்டர் நீளமுள்ள உபரிநீர் வழிக் கால்வாய்களை புனரமைப்பது, 38 கிலோமீட்டர் நீளமுள்ள வரத்து வாய்க்கால்களைத் தூர்வாருவது ஆகிய பணிகளை மேற்கொள்ளப் போவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் இந்த ஏரியைச் சுற்றியுள்ள 1,374 ஏக்கர் நிலங்கள் பாசன வசதியைப் பெறும் என்கிறது தமிழ்நாடு அரசு. - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/c3wn6404xe4o
  3. ஒவ்வொருத்தர் வாழ்விலும் பிறப்பு தொடக்கம் இறப்பு வரைக்கும் வயது பருவங்களுக்கேற்ப விழாக்கள்,கொண்டாட்டங்கள் வந்து சென்று கொண்டே இருக்கும்.அது பிறந்தநாள் தொடக்கம் மரண நாள் வரையில் முடிவடையும்.எல்லா கொண்டாட்டங்களையும் அப்படியிருக்க வேண்டும் இப்படி இருக்க வேண்டும் என திட்டமிட்டு செய்வது வழக்கம். மரண நிகழ்வை மட்டும் யாரும் தீர்மானிக்க முடியாது.ஆனால் மரணச்சடங்கு இப்படித்தான் நடக்க வேண்டும் என பலர் திட்டமிட்டு வைத்திருப்பதில்லை.சிலர் அப்படி திட்டமிட்டு வைத்திருக்கிறார்கள்.அதில் ஒரு சில திட்டமிட்ட முறையிலும் நடைபெற வாய்ப்பில்லாமல் போகின்றது. நான் ஒரு மரணச்சடங்கு உயில் எனக்காக எழுதி வைத்துள்ளேன்😂.என் பெறோர்கள் எனக்காக காணி பூமி உறுதிகளை எழுதி வைத்து விட்டு சென்றார்கள். நானோ என் இறுதி பயணத்திற்காக உயில் எழுதுகின்றேன்.😜
  4. பட மூலாதாரம்,GETTY IMAGES கட்டுரை தகவல் ஜோஷ் எல்ஜின் பிபிசி செய்திகள் 26 ஜூலை 2025, 08:00 GMT புதுப்பிக்கப்பட்டது 7 மணி நேரங்களுக்கு முன்னர் மூளை சக்தியை அதிகரிக்கவும், பல்வேறு நோய்களிலிருந்து பாதுகாக்கவும், ஒரு நாளைக்கு 7,000 அடிகள் நடப்பது போதுமானதாக இருக்கும் என்று ஒரு முக்கிய ஆய்வு கூறுகிறது. 10,000 அடிகள் நடக்க வேண்டும் என்பது பொதுவாக அடைய வேண்டிய இலக்காக கருதப்படுகிறது. ஆனால், அதைவிட எளிதாக அடையக் கூடிய, யதார்த்தமான இலக்காக இது இருக்கலாம். லான்செட் பப்ளிக் ஹெல்த் இதழில் வெளியான ஒரு புதிய ஆய்வறிக்கை, புற்றுநோய், டிமென்ஷியா மற்றும் இதய நோய் போன்ற உடல்நலப் பிரச்னைகளின் அபாயம் குறைவதற்கும், இந்த எண்ணிக்கைக்கும் தொடர்புள்ளது என கண்டறிந்துள்ளது. மக்கள் தங்களது ஆரோக்கியத்தை மேம்படுத்துவதற்கான ஒரு வழியாக, தினசரி எத்தனை அடிகள் நடக்கிறோம் என்பதை கண்காணிக்க, இந்த ஆராய்ச்சி முடிவுகள் ஊக்குவிக்கக் கூடும் என ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர். "ஒரு நாளைக்கு 10,000 அடிகள் நடக்க வேண்டும்" என்ற கருத்து நம்மிடம் உள்ளது, ஆனால் அது ஆதாரங்களை அடிப்டையாகக் கொண்டது அல்ல" என்கிறார் முன்னணி ஆராய்ச்சியாளர் மெலடி டிங். 10,000 அடிகள் என்ற எண்ணிக்கை, 1960-களில் ஜப்பானில் நடந்த ஒரு விளம்பர நிகழ்ச்சியில் முதன்முறையாக அறிமுகமானது. 1964 டோக்கியோ ஒலிம்பிக்கிற்கு முன்னதாக, "10,000 அடி மீட்டர்" என்று பொருள்படும் 'மான்போ-கீ' என்ற பெடோமீட்டர் பிராண்ட் அறிமுகமானது. ஆனால், அதற்காக உருவாக்கப்பட்ட இந்த எண்ணிக்கை, "அந்தச் சூழலிலிருந்து எடுத்துக் கொள்ளப்பட்டு", அதிகாரப்பூர்வமற்ற வழிகாட்டுதலாக, இன்றும் பல உடற்பயிற்சி சாதனங்களாலும், செயலிகளாலும் பரிந்துரைக்கப்படுகிறது என்று ஆராய்ச்சியாளர் மெலடி டிங் கூறுகிறார். பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, தங்களது கண்டுபிடிப்புகள் எதிர்கால பொது சுகாதார நெறிமுறைகளை வடிவமைக்கும் என்று ஆராய்ச்சியாளர்கள் நம்புகிறார்கள். லான்செட் பப்ளிக் ஹெல்த் இதழில் வெளியான ஒரு முக்கிய ஆய்வில், உலகெங்கிலும் உள்ள 160,000 க்கும் மேற்பட்டவர்களின் உடல்நலம் மற்றும் செயல்பாடு குறித்த முந்தைய ஆய்வுகள் மற்றும் தரவுகள் பகுப்பாய்வு செய்யப்பட்டுள்ளன. ஒரு நாளைக்கு 2,000 அடிகள் நடப்பவர்களுடன் ஒப்பிடும் போது, 7,000 அடிகள் நடப்பவர்களுக்கு கீழ்க்கண்ட ஆபத்துகள் குறைவாக இருப்பது அந்த ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது. இதய நோய் - 25% குறைவு புற்றுநோய் - 6% குறைவு டிமென்ஷியா - 38% குறைவு மன அழுத்தம் - 22% குறைவு ஆனால், சில நோய்களைக் குறித்த புள்ளிவிவரங்கள், குறைந்த எண்ணிக்கையிலான ஆய்வுகளிலிருந்து பெறப்பட்டவை என்பதால், அவை மற்றவற்றை விட குறைவான துல்லியத்துடன் இருக்கலாம் என்று ஆராய்ச்சியாளர்கள் கருதுகின்றனர். சுருக்கமாகக் கூற வேண்டுமென்றால், வெறும் 2,000 அடிகள் நடப்பது என்ற மிகக் குறைந்த எண்ணிக்கையுடன் ஒப்பிடும்போது, ஒரு நாளைக்கு சுமார் 4,000 அடிகள் நடப்பது என்ற மிதமான எண்ணிக்கை சிறந்த உடல்நலத்துக்குப் பங்களிக்கிறது என்று அந்த மதிப்பாய்வு குறிப்பிடுகிறது. பெரும்பாலான உடல்நலக் குறைபாடுகளுக்கு, 7,000 அடிகள் வரை நடந்தாலே போதுமான நன்மைகள் கிடைக்கின்றன. ஆனால் அதைவிட அதிக அடிகள் நடந்தால் இதய ஆரோக்கியத்திற்கு கூடுதல் நன்மை கிடைக்கிறது. பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, உடற்பயிற்சி சாதனங்களில் தினசரி எத்தனை அடிகள் நடந்திருக்கிறோம் என்பதை எண்ணுவது ஒரு பிரபலமான பொழுதுபோக்காக மாறிவிட்டது. உடற்பயிற்சி செய்வதற்கான பெரும்பாலான நெறிமுறைகள், எத்தனை அடிகள் நடக்க வேண்டும் என்ற எண்ணிக்கையை விட உடற்பயிற்சி செய்வதற்கு செலவிடும் நேரத்தை மையமாகக் கொண்டுள்ளன. உதாரணமாக, 18 வயதுக்கு மேற்பட்டோர் ஒவ்வொரு வாரமும் குறைந்தது 150 நிமிடங்கள் மிதமான ஏரோபிக் பயிற்சியோ அல்லது 75 நிமிடங்கள் தீவிரமான ஏரோபிக் பயிற்சியோ செய்ய வேண்டும் என்று உலக சுகாதார நிறுவனம் கூறுகிறது. இந்த அறிவுரையை மக்கள் புரிந்துகொள்வது சில நேரங்களில் கடினமாக இருக்கலாம், ஆனால் தற்போதைய நெறிமுறைகள் ஒரு முக்கியமான நோக்கத்திற்கு உதவுகின்றன என்று கூறுகிறார் டிங் . "நீச்சல் பயிற்சியில் ஈடுபடுதல், சைக்கிள் ஓட்டுதல் அல்லது உடல் குறைபாடுகளின் காரணமாக நடக்க முடியாதவர்கள் உள்ளனர்," என்றும் அவர் விளக்குகிறார். ஆனால், மக்கள் எத்தனை அடிகள் நடக்க வேண்டும் என்பதற்கான பரிந்துரையை, ஒரு "கூடுதல்" தகவலாக சேர்க்கலாம் என்றும், இது மக்கள் "நாள் முழுவதும் சுறுசுறுப்பாக செயல்படுவது குறித்து சிந்திக்க உதவும்" என்றும் அவர் கூறுகிறார். லண்டனின் புருனல் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த, செடன்டரி பிஹேவியர் மற்றும் சுகாதார நிபுணரான மருத்துவர் டேனியல் பெய்லி, "ஒரு நாளைக்கு 10,000 அடிகள் நடப்பது அவசியம்" என்ற கருத்து, ஆதாரமற்ற 'கட்டுக்கதை' என்ற கருத்தை இந்த ஆய்வு முன்வைக்கிறது என்று கூறுகிறார். சுறுசுறுப்பாக இருப்பவர்களுக்கு 10,000 அடிகள் நடக்க வேண்டும் என்பது பொருத்தமான இலக்காக இருந்தாலும், மற்றவர்களுக்கு 5,000 முதல் 7,000 அடிகள் நடப்பது, "மிகவும் யதார்த்தமான மற்றும் அடையக் கூடிய இலக்காக" இருக்கலாம் என்று அவர் விளக்குகிறார். போர்ட்ஸ்மவுத் பல்கலைக் கழகத்தின் மருத்துவ உடற்பயிற்சி உடலியல் துறையின் மூத்த விரிவுரையாளர் டாக்டர் ஆண்ட்ரூ ஸ்காட், நடப்பதற்கு எண்ணிக்கை முக்கியமல்ல என்று கூறுகிறார். "அதிகமாக நடப்பது எப்போதும் நல்லது" என்று கூறும் அவர், செயல்பாடு குறைவாக இருக்கும் நாட்களில் ஒரு குறிப்பிட்ட இலக்கை அடைய வேண்டும் என்று மக்கள் அதிகமாக கவலைப்பட வேண்டாம் என்றும் அவர் கூறுகிறார். - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/cr797rrjm3eo
  5. ஒரு தவறை சுட்டிக்காட்ட ஒரு பண்பு இருக்கிறது. அது உங்கள் சுட்டிக்காட்டலில் அறவே இல்லை. தவறை சுட்டிக்காட்டுவதை விட அதை வைத்து ஒருவரை கோபப்படுத்துவது அல்லது குத்திக் குத்திக் காட்டுவது அல்லது சறுக்கி விட்டார் என்பதை வைத்து அவரது தேசியம் சார்ந்த பக்கத்தை பந்தாடுவது மட்டுமே இங்கே நான் காண்பது. யாழ் களத்தை அறிவூட்டுகிறோம் அல்லது தவறை சுட்டிக்காட்டி நேர்வழிப்படுத்துகிறோம் என்றபடி யாழில் தற்போது படித்தவர்கள் என்ற ஒரு சிலரது கம்பு சுத்துதல் மட்டுமே என்னால் காணக்கிடைக்கிறது. அதனால் தான் நானே யாழை விட்டு தள்ளிச்சென்று கொண்டிருக்கிறேன். இது தொடர்வதை காண்கிறேன். என் கண்முன்னே இது நடப்பதால் ஒரு அளவுக்கு மேல் கடந்து செல்ல முடியவில்லை
  6. விசுகர், "30 வயது முன்னாள் போராளி எனப்படும் ஒருவரை துப்பாக்கியோடு கைது செய்திருக்கிறார்கள்" இது தான் செய்தி. இதன் பின்னாலிருக்கும் சாத்தியங்கள் என்ன? அவர் புனர்வாழ்வு முகாமில் போராளியாக இல்லாமலே தடுத்து வைக்கப்பட்டிருந்த ஒரு சிவிலியனாக இருக்கலாம். அவர் இறுதி நேரத்தில் விரும்பி இயக்கத்தில் இணைந்து, பின்னர் சரணடைந்து புனர்வாழ்வு முகாமில் இருந்த ஒருவராக இருக்கலாம். அவர் இறுதிப்போரின் போது கட்டாயமாக இணைக்கப் பட்டு, பின்னர் சரணடைந்து புனர்வாழ்வு முகாமில் இருந்திருக்கலாம். இவையெதுவும் இல்லாமல் அரசினால் பொய்க்குற்றம் சாட்டப் பட்டு இப்போது கைதாகியிருக்கலாம். இவையெல்லாம் சாத்தியமான விளக்கங்களாக இருக்க, 30 வயது ஆளுக்கு 2009 இல் 6 வயது என்ற "கவுண்டமணி செந்தில்" விளக்கம் ஏன் அவசியம்😂? அந்த முட்டாள் தனமான விளக்கத்தை நிராகரிக்கும் ஒருவரை நோக்கி மன நோயாளி, குரைக்கும் ஜந்து எனும் வசவுகள் ஏன் அவசியம்? இந்த அவசியமில்லாத லூஸ் வேலைகளைக் கண்டிக்க உங்களுக்கு விருப்பமும் இல்லை, தற் துணிவும் இல்லை. ஆனால், "தேசியப் பற்றாளர்" என்று நக்கலுக்குரியவர்களை நான் நக்கல் செய்தால் கோபம் வந்து விடுகிறது உடனே!
  7. உங்களுக்கு என்ன பிரச்சனை ? 30-16=6 என்பதை எல்லோரும் ஏற்றுக் கொள்ள வேண்டும் என்று பிடிவாதமாக இருக்கிறீர்களே. சரி அப்படியே வைத்துக் கொள்ளுங்கள்.
  8. காசாவில் இஸ்ரேலின் தொடர் குண்டுதாக்குதலால் முற்றிலும் அழிக்கப்பட்ட அல்லது தற்காலிகமாக செயலிழந்திருக்கும் வைத்தியசாலைகளை மீண்டும் புனரமைத்து அல்லது அதற்குப்பதிலாக தற்காலிக வைத்திய முகாம்களை நிறுவி அதன் மூலம் காசாவில் உள்ள சிறுவர்களுக்கு வேண்டிய உடனடி வைத்திய சேவைகளை மேலை நாடுகள் வழங்க வேண்டும். அதை விடுத்து அங்குள்ள குழந்தைகளையும் சிறுவர்களையும் தங்கள் தங்கள் நாடுகளுக்கு அழைத்து சென்று மருத்துவ உதவி வழங்க முன்வருவது காசாவில் இருந்து பலஸ்தீனியர்களை முற்றாக வெளியேற்றவேண்டும் என்ற இஸ்ரேலினதும் அமெரிக்காவினதும் நோக்கத்தை விரைந்து செயல்படுத்தும் திட்டத்துக்கு மறைமுகமாக முண்டு கொடுப்பதாகும். இப்படி பார்த்தால் காசாவில் உள்ள அனைத்து குழந்தைகளையும் தான் பிரிட்டனுக்கு கொண்டுசெல்லவேண்டிவரும். சிகிச்சை முடிந்தவுடன் அந்த குழந்தைகளை எங்கே கொண்டு சென்று விடுவார்கள். பிரிட்டனின் இந்த திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டால் இன்னும் சில மாதங்களில் காசா பிரதேசம் சன நடமாட்டம் அற்ற ஒரு நிலமாக மாறப்போவது உறுதி. குழந்தைகளை வெளியேற்றும்போது அவர்களுடன் அவர்களது தாய்மார்கள் அல்லது முழு குடும்பமோ கூட வெழியேறுவது தடுக்கமுடியாது. பாலஸ்தீன மக்களை கொன்றுகுவித்து அவர்களுக்கு அன்றாட வாழ்க்கையை சீரழிக்கும் போர் நடவடிக்கைகளை இருதரப்பும் முதலில் கைவிட வேண்டும். அதற்கு சர்வதேச நாடுகள் ஒற்றுமையுடன் முன்வந்து ஒரு தீர்வினை முன்வைத்து செயலாற்றவேண்டும்.
  9. ஏன் தமிழ்சிறி க்குப் பயத்தில் இப்படி நேரடிப் பதில் சொல்லாமல் சுத்தி வளைக்கிறீர்கள்😂? தற்போது 30 வயதான ஒருவருக்கு 2009 இல் 14 வயது (6 வயது என்பது தமிழ்சிறியின் "கவுண்டமணிக் கணக்கு"😎)! இறுதி யுத்த காலத்தில் 14 வயது என்பது பயிற்சி எடுக்கும் வயதாகவும் வன்னியில் இருந்திருக்கிறது. 6 மாதம் பயிற்சி கொடுத்த பின்னர் முன்னரங்கில் புலிகள் தங்கள் போராளிகளை விட்டது நீங்கள் கடைசியாக இலங்கையில் இருந்து கிளம்பும் போது இருந்த நிலை. 2009 இல் ஒரு நாள் இரு நாள் பயிற்சியோடு வலுக்கட்டாயமாகப் பிடித்துச் செல்லப் பட்டு முன்னரங்கில் பீரங்கித் தீனி (canon fodder) யாக விடப் பட்டோர் பலரை உங்களுக்குத் தெரிந்திருக்கும், ஆனால் தெரியாத மாதிரி நடித்தால் தானே "தேசியப் பற்றாளர்" விருது கிடைக்கும்😂?
  10. யாழ்ப்பாணத்தில் தமிழ் பெண்கள் சிங்களவர்களை திருமணம் முடிப்பது அதிகரித்து வருவதாக ஒரு செய்தியைப் பார்த்தேன். அதன் உண்மைத் தன்மை தெரியவில்லை. ஆனால் அதற்கான சாத்தியங்கள் நிறைய உள்ளது . ஒரு தமிழ் பெண் தமிழரை திருமணம் முடிப்பதை விட ஒரு சிங்களவரை திருமணம் முடிக்கும் பொழுது திருமணத்தின் பின் அவளுக்குக் கிடைக்கின்ற சுதந்திரம் அதிகமானது. ஒப்பீட்டளவில் தமிழ் ஆணை மணமுடிக்கும் பொழுது வருகின்ற சீதனப் பிரச்சனை, சாதிப் பிரச்சனை போன்றவை ஒரு சிங்களவரை மணம் முடிக்கும்போது போது குறைவாகத்தான் வரும். ஜாதகம் பார்ப்பது சிங்களவர்களிடேயும் இருந்தாலும் இறுக்கத்தன்மை மிகக் குறைவு. முக்கியமாக மணமகன் வீட்டில் இருக்கும் பெண்களால் மணப்பெண்ணுக்கு வருகின்ற அழுத்தங்கள் சிங்கள குடும்பங்களிலே மிக மிகக் குறைவு. ஒரு தமிழ் பெண் மனமுடிக்கும் பொழுது கணவனின் தங்கை ,அக்கா , அம்மா எல்லோரும் அந்த பெண்ணை ஒரு அடிமை மனநிலையிலேயே பார்க்கின்றார்கள். அண்மையில் இந்தியாவில் ஒரு ஆடியோ பதிவு லீக்காகி இருந்தது அதிலே ஒரு கணவன் தன் மனைவியை சீதனம் கேட்டு எவ்வாறு அடித்து கொடுமைப்படுத்துவேன் என்று தங்கையிடம் பேசும் பொழுது, அந்தத் தங்கை கணவனை பாராட்டி அவளுக்கு அப்படித்தான் இன்னும் அடிக்க வேண்டும் என்று செல்கிறார். இலங்கையில் அவ்வாறான ஓடியோக்கள் இல்லாவிட்டாலும் பல குடும்பங்களில் அவ்வாறு நடக்கின்ற ஆதாரங்கள் என்னிடமே இருக்கின்றன. அவர்களின் அடையாளம் வெளிப்படும் என்பதற்காகவும் , சில விவாகரத்து வழக்குகள் இப்பொழுது நிலுவையில் இருப்பதாலும், சிலவேளை அந்த ஆண் மகன்கள் மனசு மாறி மீண்டும் சேர்ந்து வாழலாம் என்ற சின்ன நம்பிக்கையிலும் அவை எதையும் நான் வெளியிடுவதில்லை. நான் சிங்களவர்களோடு பழகி அவர்களின் திருமணங்களுக்கு சென்ற பொழுது பார்த்த விடயம், திருமணத்தை தம்பதியினரே பிளான் பண்ணுகிறார்கள். அங்கு அவர்களுடைய பெற்றோருக்கும், குடும்பத்தாருக்கும் இருக்கின்ற அழுத்தம் தமிழ் பெற்றோருக்கு இருக்கின்ற அழுத்தத்தை விட மிகக் குறைவு. குறிப்பாக சிங்கள இளைஞர்கள் அது பெண்ணாக இருக்கட்டும், ஆணாக இருக்கட்டும் தங்கள் துணையை தாங்களே தீர்மானித்து கொள்ளவே விரும்புகிறார்கள். குறிப்பிட்ட வயது வந்ததும், குறிப்பாக பல்கலைக்கழகம் வந்ததும் அவர்கள் அனைவரும் ஏதோ ஒரு வகையில் தங்களுக்கு ஒரு துணையை தேடிக் கொள்ளவே விரும்புகின்றார்கள். அங்கு புரோக்கர், சாதி, ஜாதகப் பொருத்தம் போன்றவை மிக குறைவாகவே செல்வாக்கு செலுத்துகிறது. திருமணத்துக்கு பிறகு அந்த தம்பதியினரின் வாழ்க்கையில் மண மகனின் குடும்பத்தார் அளவுக்கு அதிகமாக செல்வாக்கு செலுத்துவதில்லை. அவர்கள் புதுமணத் தம்பதிகளை தனித்து சுதந்திரமாக வாழ அனுமதி கொடுப்பது தமிழர்கள் விட சிங்களவர்களிடம் அதிகமாக இருக்கின்றது. அக்காவுக்கு சீதனம் கொடுக்க வேண்டும், தங்கச்சிக்கு சீதனம் கொடுக்க வேண்டும் என்று மணப்பெண்ணை கொடுமை படுத்துவதும் அங்கு ஒப்பிட்டளவில் மிக மிகக் குறைவு. இந்தச் சுதந்திரங்களை அறியும் பொழுது நிச்சயமாக தமிழ் பெண்கள், தமிழ் மணமகனை மணமுடிப்பதை விட சிங்கள மணமகனை மணமுடிப்பதை விரும்புகின்ற போக்கு அதிகரிக்கும். Sivachandran Sivagnanam ·
  11. கள் போதைப் பொருளா அல்லது உணவுப்பொருளா? குழந்தைகளும் அதை குடிக்கலாமா? பட மூலாதாரம்,GETTY IMAGES கட்டுரை தகவல் சேவியர் செல்வகுமார் பிபிசி தமிழ் 5 மணி நேரங்களுக்கு முன்னர் தமிழகத்தில் கள்ளுக்கடைகளைத் திறக்க வேண்டுமென்ற கோரிக்கை அவ்வப்போது எழுப்பப்பட்டு வரும் நிலையில், தெலங்கானா மாநிலத்தில் கள் குடித்து 12 பேர் வரை அண்மையில் உயிரிழந்துள்ளனர். கள்ளில் கலப்படம் செய்ததே இதற்குக் காரணமென்று முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளதாக செய்திகள் வெளியான நிலையில், தமிழ்நாட்டில் கள் இறக்க அனுமதி வழங்க நாம் தமிழர் கட்சியின் சீமான் வலியுறுத்தியது பேசுபொருளானது. சமீபத்தில் நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான், பனை மரமேறி போராட்டம் நடத்தினார். மறுபுறம் கள் இறக்க புதிய தமிழகம் கிருஷ்ணசாமி, விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினர் உள்ளிட்ட பலரும் கடும் எதிர்ப்புத் தெரிவித்து வருகின்றனர். தமிழகத்தில் கள்ளுக்கடைகளைத் திறக்க வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி 'தமிழ்நாடு கள் இயக்கம்' நீண்ட காலமாக குரல் எழுப்பி வருகிறது. அரசியல்ரீதியாக இந்த கோரிக்கைக்கு ஆதரவும் எதிர்ப்பும் வலுத்து வரும் நிலையில், கள் மீண்டும் கவனம் பெற்றுள்ளது. தமிழ்நாட்டில் கள்ளை அனுமதிக்கக்கோரி போராடுபவர்கள் கூறுவதைப் போல, கள் போதையற்ற உணவுப் பொருளா? கள் உணவுப்பொருள் என்ற வாதம் சரியா? பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, சிந்தெடிக் ஆல்கஹால் ஏற்படுத்தும் எல்லாவித தீமைகளையும் கள்ளும் ஏற்படுத்தும் என்று மருத்துவர்கள் கூறுகின்றனர். கள்ளை போதைப்பொருள் பட்டியலில் இருந்து நீக்க வேண்டும், உணவுப்பட்டியலில் சேர்க்க வேண்டுமென்ற கோரிக்கைகள் குறித்து சமூக ஊடகங்களிலும் விவாதங்கள் வலுத்து வருகின்றன. இந்த சூழ்நிலையில், தெலங்கானா மாநிலம் ஹைதராபாத் நகரில், கள் குடித்ததில் 12 பேர் வரை உயிரிழந்துள்ளனர். இன்னும் சிலர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்தக் கடைகளில் விற்கப்பட்ட கள்ளில் அல்பிரஸோலம் மற்றும் டயஸெபம் (alprazolam and diazepam) கலந்திருக்கலாம் என சந்தேகிக்கப்படுவதாக தெலங்கானா மாநில கலால் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளதாக தெலுங்கு மற்றும் ஆங்கில ஊடகங்கள் தகவல் வெளியிட்டுள்ளன. கள்ளில் கலப்படம் செய்யப்பட்டதால் தான் உயிருக்கு ஆபத்தாக மாறியதாக கள் இயக்கத்தைச் சேர்ந்தவர்கள் வாதிடுகின்றனர். ஆனால் கள் உண்பதில் சில நன்மைகள் இருந்தாலும், சிந்தெடிக் ஆல்கஹால் ஏற்படுத்தும் எல்லாவித தீமைகளையும் கள்ளும் ஏற்படுத்தும் என்று மருத்துவர்கள் கூறுகின்றனர். கள்ளைக் குடிப்பதால் உடலுக்கு எந்தவிதமான விளைவு ஏற்படும், குழந்தைகளுக்குக் கொடுக்கும் அளவுக்கு அது ஆரோக்கியமான பானமா என்பது குறித்து கோவையைச் சேர்ந்த மூத்த உணவியல் நிபுணர் வந்தனாவிடம் பிபிசி தமிழ் பேசியது. படக்குறிப்பு, கள்ளில் இயற்கையாக உருவாகும் ஆல்கஹால், ஒரு குறிப்பிட்ட நேரம் வரை 4 – 5 சதவீதமாக இருக்கும், அந்த நேரத்தைத் தாண்டினால் அதன் தன்மை அதிகமாகும் என்கிறார் உணவியலாளர் வந்தனா. கள் உண்மையிலேயே உணவுப் பொருள் என்ற கூற்றை மருத்துவ உலகம் எப்படிப் பார்க்கிறது? இந்த கேள்விக்கு பதிலளித்த மருத்துவர் வந்தனா, பனை மற்றும் தென்னை மரங்களின் குருத்துகளிலிருந்து இயற்கையாகச் சுரக்கும் திரவம் நொதித்தல் (fermentation) நிலையை அடைவதற்கு முன் பதநீர் மற்றும் நீரா போன்ற பானங்களாக எடுக்கப்படுகிறது. அந்த நிலையில் ஃப்ரெஷ் ஆக எடுக்கப்படும் இந்த இயற்கை பானங்களில் பி காம்ப்ளக்ஸ் வைட்டமின்கள், வைட்டமின் சி, பொட்டாஷியம், கால்சியம், மக்னீசியம் போன்ற தாதுக்கள் (Minerals) இருக்கின்றன, என்றார். ''இவற்றைக் குடிப்பதால் உடலில் நீர்ச்சத்து நன்றாயிருக்கும். நிறைய ஆன்டிஆக்சிடென்ட்ஸ் கிடைக்கும். இயற்கையாகவே உடலில் குளிர்ச்சியை ஏற்படுத்தும் தன்மையும் இந்த பானங்களுக்கு உண்டு. அதே நேரத்தில் இந்த பானங்களில் அதிகளவு கார்போஹைட்ரேட் இருப்பதால் சர்க்கரை அளவை (Glucose and fructose) அதிகரித்து விடும். நீரிழிவு பாதிப்புள்ளவர்கள் குடித்தால் சட்டென்று சர்க்கரை அளவு எகிறிவிடும்.'' என்கிறார் அவர். பதநீர், நீரா போன்றவை விரைவில் கெட்டுப்போகும் உணவுப்பொருட்கள் என்பதால், உடனே பதப்படுத்தாவிடில் சீக்கிரமே பாக்டீரியா கலப்புள்ள உணவாகிவிடும் என்று கூறும் உணவியலாளர் வந்தனா, "அதனால் வயிறு உப்புசம் போன்ற பாதிப்புகள் ஏற்படலாம்," என்கிறார். தொடர்ந்து இந்த இயற்கை பானத்தை நொதிக்கச் செய்வதன் மூலம் கிடைக்கும் பொருள்தான் கள் எனக்கூறும் அவர், "அதில் உடலுக்கு பயனளிக்கும் நல்ல நுண்ணுயிரிகளும் (Microbiota) கொஞ்சம் கிடைக்கும்," என்கிறார். "கள்ளில் இயற்கையாக உருவாகும் ஆல்கஹால், ஒரு குறிப்பிட்ட நேரம் வரை 4 – 5 சதவீதமாக இருக்கும். அந்த நேரத்தைத் தாண்டினால் அதன் தன்மை அதிகமாகும். இயற்கையாக உருவானாலும், ஆல்கஹாலை எந்த விதத்தில் எடுத்துக்கொண்டாலும், கல்லீரல் பாதிப்பு, மூளையில் மந்தத்தன்மை, ஒவ்வாமை இருப்பின் வாந்தி, பேதி போன்ற பக்கவிளைவுகள் ஏற்படும்,'' என்கிறார் வந்தனா. இயற்கை ஆல்கஹால் vs செயற்கை ஆல்கஹால் பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, ஆல்கஹாலை எந்த விதத்தில் எடுத்துக்கொண்டாலும் கல்லீரல் பாதிப்பு, மூளையில் மந்தத்தன்மை போன்ற பக்கவிளைவுகள் ஏற்படும் இயற்கையாக உருவாகும் இத்தகைய ஆல்கஹாலும், செயற்கையாக உருவாக்கப்படும் ஆல்கஹாலும் உடல்ரீதியாக ஏற்படுத்தும் பாதிப்புகளில் ஏதாவது வித்தியாசங்கள் இருக்கிறதா? இந்த கேள்விக்கு பதில் அளித்த அவர், ''ஏறத்தாழ ஒரு பீரில் இருக்கும் ஆல்கஹால் அளவுதான் கள்ளிலும் இருக்கிறது. இயற்கையான நொதியால் உருவான ஆல்கஹால் என்ற வகையில் கள்ளில் ஒரு சில நல்ல நுண்ணுயிரிகளால் ப்ரோபயாடிக் உருவாகும் என்பதைத் தவிர, சிந்தெடிக் ஆல்கஹால் ஏற்படுத்தும் எல்லாவித உடல்ரீதியான பாதிப்பையும் இந்த ஆல்கஹாலும் ஏற்படுத்தும். இதில் இரண்டுக்கும் இடையே பெரிய வித்தியாசங்கள் இல்லை,'' என்கிறார் வந்தனா. கள்ளை குழந்தைகளுக்கும் கொடுக்கலாமா? கள் இயற்கையானது என்ற கூற்றை முன்வைக்கும் ஒரு தரப்பு அதை பறைசாற்ற குழந்தைகளுக்கும் கள்ளை சிறிய அளவில் கொடுக்கிறது. இதற்கு கடுமையாக எதிர்ப்பு தெரிவிக்கும் உணவியலாளர் வந்தனா, ''எக்காரணத்தை முன்னிட்டும் குழந்தைக்கு கள் கொடுப்பது நல்லதல்ல. உலக சுகாதார நிறுவனம் (WHO), உணவு மற்றும் மருந்துக் கட்டுப்பாட்டு அமைப்பு (Food and Drug Administration–FDA) போன்றவை, குழந்தைகளுக்கான மருந்துகளில் எவ்வளவு சதவீதம் ஆல்கஹாலை அனுமதிக்கலாம் என்பதை வரையறுத்துக் கூறியுள்ளன.'' என்கிறார். பச்சிளங்குழந்தையிலிருந்து 6 வயதுக்குட்பட்ட குழந்தை வரையிலும் அதிகபட்சம் 0.5 சதவீதம் ஆல்கஹால்தான் மட்டும்தான் அனுமதிக்கப்பட்டுள்ளது எனக்கூறும் வந்தனா, அதற்கு மேல் மருந்தாகக் கூட அதை அனுமதிப்பதில்லை என்கிறார். கள் குடித்தால் பசி, செரிமானம் அதிகரிக்குமா? கள் குடித்தால் நன்றாகப் பசிக்கும், செரிமான சக்தி நன்றாயிருக்கும் என்பது உண்மைதானா? கள்ளில் இருக்கும் ப்ரோபயாடிக்ஸ் எடுத்துக்கொள்ளும்போது, குடலில் இருக்கும் நுண்ணியிரிகளை நன்றாக வளர்த்துக் கொடுத்து பசியைத் துாண்டும் என்பதும், அதனால் நன்றாகச் சாப்பிடலாம் என்பதும் உண்மை. ஆனால் அது ஆல்கஹால் உதவியால் துாண்டப்படும் பசி என்பதால் உணவியல் நிபுணர்கள் யாரும் அதைப் பரிந்துரைப்பதில்லை, என்கிறார் வந்தனா. இதை மேலும் விளக்கிய அவர், "அதைவிட வடித்த சாதத்தில் தண்ணீரை ஊற்றுவதால் நமக்கு இயற்கையாகக் கிடைக்கும் நீராகாரம்தான் மிகச்சிறந்த பானம். அதில் ஏராளமான ப்ரோபயாடிக்ஸ் இருக்கிறது. அதில் தயிர் அல்லது மோர் சேர்த்தால் உடலுக்குக் குளிர்ச்சியும் கூடுதலாகக் கிடைக்கும். வயதானவர்களாக இருந்தால் தயிரைத் தவிர்த்து மோர் சேர்த்துக் கொள்ளலாம். குழந்தைகளுக்கு தயிர் சேர்த்துக் கொடுப்பதால் கொழுப்புச்சத்தும் சேரும் என்பதால் பெரிதும் பயனளிக்கும்," என்கிறார். பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, 'எக்காரணத்தை முன்னிட்டும் குழந்தைக்கு கள் கொடுப்பது நல்லதல்ல.' உடல் வெப்பத்தை கள் குறைக்குமா? உடலின் வெப்பத்தைக் குறைக்க கள் உதவும் என்கிறார்கள். அதில் எந்தளவு உண்மை இருக்கிறது? "கள் குளிர்ச்சியை ஏற்படுத்தும் என்பது உண்மைதான். ஆனால் அதிலிருக்கும் ஆல்கஹால் தன்மை, மீண்டும் மீண்டும் அதைத்தேட வைக்கும் ஓர் உணர்வை உருவாக்கிவிடும் என்பதால் தேவையற்ற விதமாக போதைக்குள் விழச்செய்து, வேறு விதமான விளைவுகளை ஏற்படுத்தும் என்பதையும் கருத்தில் கொள்ள வேண்டும்," என்கிறார் வந்தனா. கள் எப்படி இயற்கையாக போதைப் பொருளாகிறது? கள் இயற்கையாகவே எப்படி போதைப்பொருளாக மாறுகிறது, அதிலுள்ள ஆல்கஹால் அளவு எவ்வளவு என்பது குறித்து, தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகத்தின் நுண்ணுயிரியல் துறை பேராசிரியர் (Microbiologist) கார்த்திகேயனிடம் பிபிசி தமிழ் பேசியது. நொதித்தல் (Fermentation) குறித்த ஆராய்ச்சியில் முனைவர் பட்டம் பெற்றுள்ள கார்த்திகேயன் பிபிசி தமிழிடம் இதுபற்றி விளக்கிய போது, "ஊறுகாய், தயிர், இட்லி போன்ற உணவுப் பொருட்கள் அனைத்துமே இயற்கையாக நொதிக்கப்பட்ட பொருட்கள்தான். இயற்கையான முறையில் தயாரிக்கப்படும் ஒயினும் இந்த முறையில்தான் புளிப்புச் சுவை பெறுகிறது. ஆனால் பாலில் நாம் சேர்க்கும் உறை மோரின் தன்மையைப் பொறுத்து, தயிரின் தன்மை மாறும்" என்கிறார். இதை மேலும் விவரித்த அவர், ''ஒயினில் மேலும் சில நுண்ணுயிரிகளை உட்செலுத்தி ஆல்கஹால் அளவை அதிகப்படுத்துவார்கள். ஆனால் கள் முழுக்க முழுக்க இயற்கையாக நொதித்தலில் உருவாகும் பானம்தான். கள்ளில் அதிகபட்சமாக 4 லிருந்து 5 சதவீதம் மட்டுமே ஆல்கஹால் அளவு இருக்கும். வேறு ஏதாவது பொருள் செயற்கையாகச் சேர்க்கப்படும் பட்சத்தில் அதன் ஆல்கஹால் அளவு அதிகரிக்கலாம். பிரெட் சாப்பிடும்போதும் நமக்கு ஒருவிதமான மந்தநிலை ஏற்படவும் நொதித்தலே காரணம்,'' என்றார். சில பிரெட்களில் துளைதுளையாக இருக்கும் என்பதைச் சுட்டிக்காட்டும் கார்த்திகேயன், நொதித்தலால் பிரெட்களில் கார்பன் டை ஆக்சைடும், ஆல்கஹாலும் உருவாகும் என்பதே அதைச் சாப்பிடும்போது ஏற்படும் மந்தநிலைக்குக் காரணம் என்கிறார். ஆனால் எவ்வளவு நல்ல சக்தியுள்ள மரத்திலிருந்து உருவாகும் கள்ளிலும் 5 அல்லது 6 சதவீதத்துக்கு மேல் ஆல்கஹால் அளவு அதிகரிக்க வாய்ப்பில்லை என்பதையும் பேராசிரியர் கார்த்திகேயன் விளக்கினார். தென்னை, பனை என எந்த வகைக் கள்ளுக்கும் இது பொருந்தும் என்கிறார். படக்குறிப்பு, கள் முழுக்க முழுக்க இயற்கையாக நொதித்தலில் உருவாகும் பானம் தான் என்கிறார் பேராசிரியர் கார்த்திகேயன். ''கள்ளில் குறைவான அளவு ஆல்கஹால் இருப்பதால்தான், லிட்டர் கணக்கில் உட்கொள்ளப்படுகிறது. மது பானங்களை மில்லி கணக்கில் எடுத்தாலே போதை அதிகமாவதற்கு அதில் சிந்தெடிக் ஆல்கஹால் அதிகளவு இருப்பதே காரணம். ஆனால் நொதித்தல் தன்மையால் உருவாகும் கள்ளில் ஆன்டிஆக்சிடன்ட்ஸ் உள்ளிட்ட சில சாதக அம்சங்கள் இருக்கிறது என்பது உண்மைதான். இருந்தாலும் இந்த கூற்றை நிரூபிப்பதற்கான ஆராய்ச்சிகள் இன்னும் முழுமை பெறாத நிலையில்தான் உள்ளன,'' என்றார் கார்த்திகேயன். கள் இறக்கப்பட்டு நாளாக ஆக அதிலுள்ள ஆல்கஹால் அளவு அதிகரிக்குமென்ற கருத்தை நிராகரிக்கும் பேராசிரியர் கார்த்திகேயன், கள்ளில் இருக்கும் சர்க்கரை அளவு உருமாறியே கார்பன் டை ஆக்சைடு, ஆல்கஹால் போன்ற கூறுகளாக மாறுகிறது. கள் குடிக்கும்போது, நாவில் பட்டதும் சுறுசுறுவென்ற உணர்வு ஏற்பட கார்பன் டை ஆக்சைடுதான் காரணம் என்கிறார். ஒரு முறை நொதித்தலில் வேறு நிலைக்கு மாறியபின் மீண்டும் ஆல்கஹால் அளவு அதிகரிக்க வாய்ப்பில்லை என்கிறார் அவர். ''உதாரணமாக இயற்கையாக தயாரிக்கப்பட்ட ஒயினை ஆண்டுக்கணக்கில் புதைத்து வைப்பார்கள். அதன் ஆண்டின் அளவுக்கேற்ப அதன் மதிப்பும் உயரும். ஆனால் ஆண்டுக்கணக்கில் ஆவதால் அதிலுள்ள ஆல்கஹால் அளவு அதிகரிக்காது. அதேநேரத்தில் ஆண்டுக்கணக்கில் நொதித்தால் பல நன்மைகளை உருவாக்கும் நுண்ணுயிரிகள் உருவாகும். அது உடலுக்கு பல விதங்களில் நன்மை தரும். அதற்கான மதிப்புதான் அந்த அதிகவிலை.'' என்றும் விளக்கினார் பேராசிரியர் கார்த்திகேயன். இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/c78n8wgpey8o
  12. இலங்கை ரோம் உடன்படிக்கையில் கைச்சாத்திடாவிட்டாலும் சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தில் நிறுத்த முடியும்; இனத்துக்காக தமிழரசு ஒன்றுபட வேண்டும்; ஜெனிவாவில் தமிழ் மக்களின் ஆணை பெற்றவர்களை பயன்படுத்தி இலங்கை தப்பித்துள்ளது - கஜேந்திரகுமார் பொன்னம்பலம் 28 JUL, 2025 | 01:20 PM இலங்கை சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் (உரோம்) உடன்படிக்கையில் கையெழுத்திடா விட்டாலும் இலங்கையில் இடம் பெற்ற மனித குலத்துக்கு எதிரான குற்றங்கள் போர்க்குற்றங்கள் இன அழிப்பு ஆகியவற்றுக்காக சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தில் நிறுத்துவதற்கான வழிகள் இருப்பதாக அகில இலங்கை தமிழ் காங்கிரஸன் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்தார். நேற்று ஞாயிற்றுக்கிழமை (YMCA) மண்டபத்தில் சரேஷ்ட சட்டத்தரணி ஸ்ரீ காந்தா தலைமையில் இடம்பெற்ற 1983 கறுப்பு ஜூலை படுகொலை வாரத்தின் நேற்று, இன்று, நாளை மக்கள் கருத்தாய்வு நிகழ்வில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கையில் அவர் இவ்வாறு தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில் நாங்கள் 1983 கறை படிந்த கறுப்பு ஜூலை வாரத்தை நினைவு கூருவதுடன் மட்டும் நின்றுவிடாமல் வெலிக்கடை சிறைச்சாலையில் கொடூரமாக சித்திரவதை செய்யப்பட்டு படுகொலை செய்யப்பட்ட எமது உறவுகளின் கோரிக்கைகளுக்கு வலுச் சேர்ப்பவர்களாக இருக்கிறோமா என்பது தொடர்பில் சிந்திக்க வேண்டும். தமது உயிர் பறிக்கப்படப் போகிறது எனத் தெரிந்தும் எமது இனத்தின் கொள்கைக்காக எந்தவித விட்டுக்கொடுப்புக்களையும் காட்டிக் கொடுப்புகளையும் செய்யாது தமது உயிர்களை தியாகம் செய்தவர்கள். தமிழ் மக்களுக்கு எதிராக கட்டவிழ்த்து விடப்பட்ட அரச பயங்கரவாதம் ஒவ்வொரு காலப்பகுதிகளிலும் தமிழ் மக்களை அழித்த வரலாறுகளே அதிகம். தமிழ் மக்களுக்கு எதிராக நிகழ்த்தப்பட்ட இன அழிப்பு இனப்படுகொலை மற்றும் மனித குலத்துக்கு எதிரான குற்றங்கள் தொடர்பில் ஐநா மனித உரிமைகள் பேரவையில் சுமார் 12 வருடங்களாக கிடப்பில் கிடக்கின்றது. தொடர்ந்தும் தீர்மானங்களை எடுத்து அடுத்த கட்டத்திற்கு நகர விடாமல் ஐநா மனித உரிமைகள் பேரவையிலே தமிழ் மக்களின் எதிர்பார்ப்புகளை மட்டுப்படுத்தி வைப்பதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதனை அடுத்த கட்டத்திற்கு கொண்டு நகருவதற்காக அண்மையில் தமிழ் தேசியப் பரப்பில் பயணித்துக் கொண்டிருக்கின்ற அனைத்து தமிழ் கட்சிகளுக்கும் அழைப்பு விடுத்ததோடு சிவில் சமூகத்தையும் அழைத்தோம் துரதிஷ்ம் தமிழரசு கட்சி மட்டும் கலந்து கொள்ளவில்லை. ஐநா மனித உரிமைகள் பேரவையிலிருந்து தமிழ் மக்களுடைய விவகாரத்தை சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்திற்கு கொண்டு செல்வதற்கான இரண்டு வழிகள் இருக்கிறது . இலங்கை விவகாரத்தை பாதுகாப்புச் சபையிடம் பாரப்படுத்துவது அல்லது உடன்படிக்கையில் கைச்சாத்திடப்பட்ட நாடுகளில் விசாரணைகளை ஆரம்பிப்பது. இலங்கை ரோம் உடன்படிக்கையில் கைச்சாத்திடாவிட்டாலும் குற்றவியல் நீதிமன்றத்திற்கு பாரப்படுத்துவதற்கான உதாரணமாக மியன்மாரில் இடம் ரோஹிந்திய முஸ்லிம்களுக்கு எதிராக நிகழ்த்தப்பட்ட இன அழிபு விவகாரத்தை கூறலாம். சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தை இலங்கை போன்று மியான்மாரும் ஏற்காத நிலையில் ரோம் உடன்படிக்கையில் கைச்சாத்திட்ட அங்கத்துவ நாடு ஒன்றினால் விசாரணை கோரப்படடது. அதேபோன்று ரோம் உடன்படிக்கையில் அமெரிக்கா கைச்சாத்துடாவிட்டாலும் ஆப்கானிஸ்தானில் சென்று அமெரிக்கா இராணுவம் இழைத்த மனித உரிமைகள் மீறல் தொடர்பில் விசாரிப்பதற்கான கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளது. ஏனெனில் ஆப்கானிஸ்தான் ரோம் உடன்படிக்கையை ஏற்றுள்ள நிலையில் உடன்படிக்கையை ஏற்ற நாடு ஒன்றில் இன்னொரு நாடு சென்று இழைத்த மனித உரிமைகள் மீறல் தொடர்பில் விசாரணை மேற்கொள்வதற்கான ஏற்பாடுகள் இருக்கின்றது. அதுமட்டுமல்லாது ஐநாவுக்கு வெளியில் இலங்கையில் போர் குற்றங்கள் மனித குலத்துக்கு எதிரான குற்றங்கள் மற்றும் இன அழிப்பில் ஈடுபட்டவர்கள் ஐநா உறுப்பு நாடுகளுக்கு நுழையும் போது தமது நாடுகளில் போர் குற்ற விசாரணைகளை மேற்கொள்ள முடியும். இவ்வாறு பல வழிகள் இருக்கின்ற நிலையில் 2012 இல் இருந்து தமிழ் மக்களுடைய தீர்மானங்கள் தமிழ் மக்களின் ஆணை பெற்றவர்களினால் கிடப்பில் போடுவதற்கு காரணமாக இருந்துள்ளனர். இந்த நிலையை மாற்றி எல்லோரும் ஒரணியாக புதிய தீர்மானத்தை கொண்டு வருவதற்காக ஒன்றுபட்டு வாருங்கள் என அழைப்பு விடுத்தும் தமிழரசு கட்சி வரவில்லை. அவர்கள் வரவில்லை என்றாலும் எமது புதிய தீர்மானம் அனுப்பும் வரைவை தமிழரசின் தலைவர் மற்றும் செயலாளருக்கு அனுப்பி வைத்துள்ளோம் வராவிட்டாலும் திருத்தங்களை கூறினால் திருத்துவதற்கும் தயாராக இருக்கிறோம். ஆகவே தமிழ் மக்களுக்காக பல உயிர் தியாகங்கள் இந்த மண்ணில் இடம் பெற்றுள்ளதை நினைவில் வைத்து வர இருக்கும் ஜெனிவா அமர்வுகளை அடுத்த கட்டத்துக்கு கொண்டு செல்வதற்கான ஒத்துழைப்புக்களை அனைவரும் வழங்க வேண்டும் என அவர் மேலும் தெரிவித்தார். https://www.virakesari.lk/article/221154
  13. இந்தப் "பண்பு" பற்றிய உங்கள் அக்கறை மிகவும் வரவேற்கத் தக்கது! ஆனால், அதை எல்லோரது கருத்திலும் காட்டுங்கள், பாராட்டுகிறோம். இப்படி உங்கள் நண்பர்களை, சக தேசியப் பற்றாளர்களை நோக்கிப் பேசும் கருத்தாளர்களிடம் மட்டும் "பண்புப் பொலிஸ் வேலை" நாம் எல்லோரும் உங்களிடம் கண்டு அலுத்துப் போன ஒரு இயல்பு😎. இந்த செலக்ரிவ் பண்பு நாடலினால் ஒரு பயனுமில்லை! பல தடவைகள் சொல்லியிருப்பது போல, படிப்பு உங்களுக்கு கண்ணுக்குள் குத்தினால் நான் எதுவும் செய்ய இயலாது. அது உங்கள் பிரச்சினை, நீங்களே தீர்வு தேடுங்கள்!
  14. நீங்கள் வேற.. இப்பொழுதெல்லாம் யாழில் ஆராய்ச்சி மட்டுமே நடக்கிறது. அவை கருத்தாளரின் (மங்கிய) மூளை வளர்ச்சி கணக்கில் அவரது தராதரம் அவர் பார்க்கும் படிக்கும் பத்திரிகை மற்றும் பார்க்கும் தொலைக்காட்சி சார்ந்த மட்டமான அறிவுரை அதையும் தாண்டி விட்டால் தேசியப்பற்றாளர் என்று நளினம். 😡
  15. எந்த விதமான உடற்பயிற்சியும் கொஞ்சமாவது செய்தால் அதனால் பயனுண்டு என்பதைக் காட்டும் ஒரு ஆய்வு. இதில் கவனிக்க வேண்டிய ஒரு விடயம், "குறைந்த பட்சம் (minimum) எவ்வளவு நேரம் உடற்பயிற்சி செய்ய வேண்டும்?" என்ற கேள்வி பரவலாகக் கேட்கப் படும் ஒரு கேள்வியாக மாறி வருகிறது. "வாரத்திற்கு 150 நிமிடங்கள்" என்று பதில் சொன்னால், "நேரமில்லை" என்ற காரணத்தால் அதை உதாசீனம் செய்வோரும் இருக்கிறார்கள். அவர்களை உடற்பயிற்சியின் பக்கம் இழுக்கும் ஒரு ஆய்வு முடிவாக இது இருக்கக் கூடும். ஆனால், 7000 அடிகளை விட அதிகமாக நடப்பது நல்லது என்று தான் இந்த ஆய்வின் முடிவுகளில் இருந்து ஊகிக்கக் கூடியதாக இருக்கிறது. இணைப்பில் இருக்கும் மூலக் கட்டுரையின் வரைபுகளைப் பார்த்தால், 7000 அடிகளுக்கு அதிகமாக நடப்போரில் பெரும்பலான நோய் நிலைகள் தொடர்ந்து குறைந்து செல்வதைக் காணலாம். https://www.thelancet.com/action/showPdf?pii=S2468-2667%2825%2900164-1
  16. 5) இன்றைய தினம் 28/07/2025 வீட்டுத்திட்ட பணிகளை நிறைவு செய்ய உதவும் முகமாக செபஸ்தியாம்பிள்ளை லோகேஸ்வரன் (கனடா (யாழ்ப்பாணம்) அவர்கள் இரண்டாவது தரம் 60100 ரூபாவை திரு சி.லக்‌ஷன் அவர்களுடைய வங்கிக் கணக்கில் வைப்புச் செய்துள்ளார். 28/07/2025 இன்றுவரை மொத்தமாக 200070 ரூபா திரு லக்சனுடைய வங்கிக் கணக்கில் வைப்புச் செய்யப்பட்டுள்ளது.
  17. பல் கலைக்கழகத்தில் சில தமிழ் ஆண் மாணவர்கள் சிங்களம் கதைக்க தெரிந்தால் ஆய பல கலைகளையும் கற்று கழட்டிவிடுவது வழமை😇. சிங்கள ஆண் பெண் மாணவர்களும் இதில் சளைத்தவர்களல்லா ஒரு சிலரை தவிர
  18. தங்கள் வரவிற்கும் கருத்திற்கும் மிக்க நன்றி. அதே போல் விருப்பு வாக்கு அளித்தமைக்கும்,விருப்பு வாக்கு அளித்தவர்களுக்கும் நன்றி. மனிதனுக்கு மட்டுமல்ல உயிரினங்கள் அனைத்திற்கும் மரணம் என்பது தவிர்க்க முடியாத ஒன்று.இது யாவரும் அறிந்ததுதான்.ஆனால் மனித இனத்திற்கு மட்டும் நாட்டுக்கு நாடு இனத்திற்கு இனம் இறுதிச்சடங்குகள் வேறுபடும்.பல இடங்களில் அது ஒரு நாடக மேடை போல் தோன்றும்.இல்லை இல்லை அது நாடக மேடையேதான்.பல சிவாஜிகணேசன்கள், பல வாழ்வே மாயம் ஸ்ரீபிரியாக்கள் ஸ்ரீதேவிகள்,கௌரவம் பண்டரிபாய் கூட்டம் என இறுதிச்சடங்கு நிகழ்வுகள் களைகட்டும்.கஸ்ரத்திற்கு உதவாதவர்கள் கண்ணீர் மல்க நிற்பர்.மரண ஆராய்ச்சியாளர்கள் ஆங்காங்கே கூடி நின்று மரணத்திற்கான ஆய்வுகளை நடத்திக்கொண்டிருப்பர்.இன்னொரு பகுதியினர் யார் யார் வரவில்லை என ஆந்தைக்கண்ணால் கணக்கெடுத்துக்கொண்டிருப்பர்.நீண்ட காலத்திற்கு பின் சந்தித்தவர்கள் விருந்து வைக்காத குறையாக சிரித்து சிரித்து மகிழ்ந்து கொண்டிருப்பர்.இதெல்லாம் என் மரணச்சடங்கில் நடக்கக்கூடாது என்பதில் கவனம் செலுத்துகின்றேன்.🙂
  19. பிராட்மேன், கோலியை சமன் செய்த கில்: பெருஞ்சுவராய் எழுந்து அணியை காத்த சுந்தர் - ஜடேஜா பட மூலாதாரம்,GETTY IMAGES கட்டுரை தகவல் தினேஷ் குமார் பிபிசி தமிழுக்காக 3 மணி நேரங்களுக்கு முன்னர் அடுத்து என்ன நிகழப் போகிறது என்று தெரியாத மர்மம்தான் டெஸ்ட் கிரிக்கெட்டை இன்னும் சாகாமல் உயிர்ப்புடன் வைத்திருக்கிறது. ஐபிஎல் தொடரின் வெற்றிக்கு பிறகு உலகம் முழுக்க எத்தனையோ டி20 லீக் தொடர்கள் முளைத்துவிட்டன. ஆனால், சமபலம் வாய்ந்த இரு அணிகள் மல்லுக்கட்டும் டெஸ்ட் போட்டியின் சுவாரஸ்யத்தை மட்டும், அவற்றால் இதுவரை விஞ்ச முடியவில்லை என்பதுதான் உண்மை. வரலாற்றை திரும்பிப் பார்க்கையில், நெருக்கடியின் போதுதான் இந்திய அணி, தனது உச்சபட்ச கிரிக்கெட்டை விளையாடியிருக்கிறது என்பதை பார்க்க முடியும். 2001 ஈடன் கார்டன்ஸ் டெஸ்டில் லக்ஷ்மண்–டிராவிட் இணையின் சாகசத்தை இன்றும் பேசிக் கொண்டிருக்கிறோம். 2021 சிட்னி டெஸ்டில், விஹாரி–அஸ்வின் இணையின் போராட்டம் வரலாற்றின் ஓரங்கமாகிவிட்டது அந்த வரிசையில், மான்செஸ்டர் டெஸ்ட் போட்டியும், சுந்தர்–ஜடேஜா இணையின் விடாப்பிடியான சதங்களும் காலம் கடந்தும் பேசப்படும். இந்த டெஸ்டில் இந்தியா வென்றிருந்தால் கூட, அது இவ்வளவு தாக்கத்தை ஏற்படுத்தியிருக்காது. வெற்றியை எளிதாக கொண்டாடிவிட்டு கடந்து சென்றிருப்போம். கிட்டத்தட்ட கைவிட்டுப் போன ஒரு டெஸ்டில், 142 ஓவர்கள் தாக்குப்பிடித்து விளையாடி, இந்திய அணி தோல்வியை தவிர்த்ததுதான், இந்த டெஸ்டை ஒரு கிளாசிக்காக மாற்றிவிட்டது. அதுவும் எப்படிப்பட்ட ஓர் அணியை வைத்து, இதை நிகழ்த்திக் காட்டியிருக்கிறோம் என்பதும் இந்த டிராவை ஒரு மகத்தான அனுபவமாக மாற்றியுள்ளது. மோசமான அணித்தேர்வு, ரிஷப் பந்த் காயம், தொடரில் 2–1 என பின்னிலை, கடைசி இன்னிங்ஸில் அவலமான தொடக்கம் (0–2). இத்தனை பின்னடைவுகளுக்கு பிறகு இன்னிங்ஸை தொடங்கிய ராகுல்–கில் இணை, கடைசி நாளில் இந்திய அணிக்கு நம்பிக்கையான தொடக்கத்தை ஏற்படுத்திக் கொடுத்தது. பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, சுப்மன் கில் மற்றும் கே.எல். ராகுல் இணை லார்ட்ஸ் டெஸ்டில் சதத்தின் மேல் கண்வைத்து கவனத்தை தொலைத்த, ராகுல் முதல் 1 மணி நேரம் கடுமையான போராட்டத்தை வெளிப்படுத்தினார். புதிய பந்தை எடுக்கும் வரை, டாசனுடன் சேர்ந்து கேப்டன் ஸ்டோக்ஸ் பந்துவீசியது பாராட்டத்தக்க நகர்வு. தனது முன்னணி வேகப்பந்து வீச்சாளர்களின் நலனுக்காக, பஞ்சு போல மாறியிருந்த பழைய பந்தில் தனது முழு சக்தியையும் இறக்கி, பந்துவீச துணிந்தார். வெற்றி தோல்விகளை கடந்து, ஸ்டோக்ஸ் ஏன் உலகின் தலைசிறந்த கேப்டனாக கொண்டாடப்படுகிறார் என்பதற்கு இந்த தன்னலமற்ற தலைமைத்துவம்தான் காரணம். உண்மையில், நேற்று ஸ்டோக்ஸ் முழு உடற்தகுதியிலும் இல்லை. ஒவ்வொரு பந்தையும் வீசி முடித்த பிறகு, தோளை பிடித்துக்கொண்டு வலியில் துடித்ததை பார்க்க முடிந்தது. ஆனாலும், உயிரைக் கொடுத்து வீசி, சதத்தை நெருங்கிக் கொண்டிருந்த ராகுல் விக்கெட்டை கைப்பற்றினார். சதத்தை தவறவிட்டாலும் ராகுலின் ஆட்டம், இந்தியாவுக்கு ஒரு வலுவான அடித்தளத்தை ஏற்படுத்தி கொடுத்தது. சிறந்த இன்னிங்ஸை விளையாடிய சுந்தர் ராகுல் விக்கெட்டை கைப்பற்றியது ஒரு அற்புதமான பந்து. ஷார்ட் ஆஃப் த லெந்த்தில் வீசப்பட்ட பந்து, இவ்வளவு தாழ்வாக உள்ளே நுழைந்து கால்காப்பை தாக்கும் என கனவிலும் ராகுல் நினைத்திருக்க மாட்டார். அதற்கு முந்தைய பந்து, கிட்டத்தட்ட அதே லெந்த்தில் இருந்து அதீதமாக எகிறியது ராகுலின் மனதில் நின்றிருக்கக் கூடும். ஸ்டோக்ஸ் பந்துவீசும் போது ஒவ்வொரு பந்திலும் விக்கெட்டுக்கு வாய்ப்பிருப்பது போலவே தெரிந்தது. ராகுல் ஆட்டமிழந்த பிறகு கேப்டன் கில்லுடன் கைக்கோர்த்த சுந்தர், டெஸ்ட் கிரிக்கெட்டில் தனது ஆகச்சிறந்த இன்னிங்ஸை விளையாடினார். இடக்கை பேட்ஸ்மேனான சுந்தருக்கு எதிராக ஆடுகளத்தில் உள்ள சொரசொரப்பை பயன்படுத்தி டாசன் வீசினார். இதைத் தடுக்கும் விதமாக, டாசன் பந்தில் சுந்தருக்கு ஸ்ட்ரைக் கொடுக்காமல் கில்லே பெரும்பாலான பந்துகளை விளையாடினார். பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, ஸ்டோக்ஸ் பந்துவீசும் போது ஒவ்வொரு பந்திலும் விக்கெட்டுக்கு வாய்ப்பிருப்பது போலவே தெரிந்தது. இந்திய டெஸ்டில் கில் பக்கம் அதிர்ஷ்டம் இருக்கிறது என்றுதான் சொல்ல வேண்டும். நான்காம் நாளில் 41 ரன்களில் கில் கொடுத்த கேட்ச் வாய்ப்பை டாசன் தவறவிட்டார். நேற்று ஸ்டோக்ஸ் பந்தில் 81 ரன்களில் இருந்தபோது கவர் திசையில் கொடுத்து வாய்ப்பை, போப் கோட்டைவிட்டார். இதை சரியாக பயன்படுத்திக்கொண்ட கில், இந்த தொடரின் நான்காவது சதத்தை விளாசினார். இதன்மூலம், ஒரு டெஸ்ட் தொடரில் அதிக சதங்கள்(4) குவித்த கவாஸ்கர், கோலி சாதனையை சமன்செய்தார். இங்கிலாந்து மண்ணில் ஒரு தொடரில் அதிக சதங்கள் எடுத்த பிராட்மேனின் சாதனையையும் கில் சமன் செய்தார். சதத்தை எட்டிய பிறகு ஏற்பட்ட கவனச்சிதறலில், ஆர்ச்சர் பந்துவீச்சில் வெளியே சென்ற பந்துக்கு பேட்டை நீட்டி கில் ஆட்டமிழந்தார். பொதுவாக ஆர்ச்சர், வலக்கை பேட்ஸ்மேனுக்கு உள்ளேதான் பந்தை எடுத்துக்கொண்டு வருவார். ஆனால், அந்தப் பந்தை தனது மணிக்கட்டை பயன்படுத்தி வெளியே கொண்டுசென்றார். அதை கில் கொஞ்சமும் எதிர்பார்த்திருக்க மாட்டார். சரணடையாத இந்திய அணி கில் விக்கெட்டுக்கு பிறகு, இந்தியா எளிதில் சரணடையும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், சுந்தர்–ஜடேஜா இணை, எவ்வித தவறுக்கும் இடம்கொடுக்காமல் மிகக் கவனமாக விளையாடி, ஒவ்வொரு அரைமணி நேரமாக ஆட்டத்தை நகர்த்தி சென்றது. வாஷிங்டன் சுந்தர், ஒரு டாப் ஆர்டர் பேட்ஸ்மேன் போலவே அபாரமான டெக்னிக்குடன் இங்கிலாந்தின் பவுன்சர் வியூகத்தை சமாளித்து விளையாடினார். ஸ்டோக்ஸ் பந்தில் அவர் பறக்கவிட்ட சிக்ஸர், 2021 பிரிஸ்பன் டெஸ்டில் கம்மின்ஸ் பந்தில் அடித்த ஹூக் ஷாட்டை ஞாபகப்படுத்தியது. அப்போதிருந்தே தொடர்ச்சியாக வாய்ப்புகளை ஏற்படுத்தி கொடுத்து, சுந்தரை வளர்த்தெடுத்திருக்க வேண்டும். ஆனால், இந்திய அணி நிர்வாகம் அவருடைய திறமையை அங்கீகரித்ததாக தெரியவில்லை. இன்று கடுமையாக போராடி, அவ்வப்போது கிடைத்த சொற்ப வாய்ப்புகளை கொண்டு, தன்னை நிரூபித்திருக்கிறார். உயரமான பேட்ஸ்மேன் என்பதால் உடலையும் கால்களையும் நன்றாக நீட்டி, சுழற்பந்து வீச்சையும் பிரமாதமாக விளையாடுகிறார். பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, கடுமையாக போராடி, அவ்வப்போது கிடைத்த சொற்ப வாய்ப்புகளை கொண்டு, தன்னை நிரூபித்திருக்கிறார் வாஷிங்டன் சுந்தர் இந்த தொடரில், இந்தியாவின் சிறந்த பேட்ஸ்மேன்களில் ஒருவரான ஜடேஜா, நேற்று புதிய சாதனை ஒன்றை படைத்தார். இங்கிலாந்து மண்ணில் 6 அல்லது அதற்கும் கீழான வரையில் பேட் செய்து, 9 முறை ஐம்பது ரன்களுக்கு மேல் கடந்த எதிரணி வீரர் என்ற கேரி சோபர்ஸ் சாதனையை சமன்செய்தார். இந்த தொடர் முழுக்கவே இரண்டாவது இன்னிங்ஸ்களில் ஜடேஜாவை இங்கிலாந்து அணியால் ஆட்டமிழக்க செய்யமுடியவில்லை என்பது அவர் எப்படிப்பட்ட ஃபார்மில் இருக்கிறார் என்பதற்கு சான்று. ஆனாலும், ஆங்கில ஊடகங்கள் ஸ்டோக்ஸ் பெயரைத் தான் தொடர்ந்து உச்சரிக்கின்றன. இந்திய டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் மிகவும் குறைத்து மதிப்பிடப்பட்ட வீரர்களில், ஜடேஜா முதலிடம் பிடிக்க வாய்ப்புள்ளது. சுந்தர்–ஜடேஜா பார்ட்னர்ஷிப்பை உடைக்க முடியாத இயலாமையால் இங்கிலாந்து அணியினர் வாய்ச்சவடாலில் இறங்கினர். முதலில் ஸ்கோரை சமன் செய்து, இன்னிங்ஸ் தோல்வியை வாய்ப்பில்லாமல் ஆக்கிய பிறகு, நம்பிக்கையுடன் அவர்கள் அடித்து விளையாட தொடங்கினர். இந்திய மகளிர் செஸ் உலகில் புதிய வரலாறு: உலகக்கோப்பை பைனலில் 2 இந்தியர்கள் பலப்பரீட்சை வரலாறு மீண்டும் திரும்புமா? சாதனைகள் அரங்கேறிய நாளில் கணிப்புகளை பொய்யாக்கிய இந்திய ஜோடி தமிழக வீரர் ஜெகதீசன் அனுபவமுள்ள இஷான் கிஷனை தாண்டி இந்திய அணியில் இடம்பிடித்தது எப்படி? இன்றும் வாடகை வீட்டில் வசிக்கும் இந்த சிஎஸ்கே வீரர் இந்திய அணிக்காக சாதிப்பாரா? அவர்கள் இருவரின் நேர்மறையான ஆட்டம், இங்கிலாந்து அணியின் நம்பிக்கையை உடைத்தது. ஒருகட்டத்தில் ஆட்டத்தை முடித்துக் கொள்வோம் என ஸ்டோக்ஸ் இறங்கிவந்து கேட்டபோது, இந்திய கேப்டன் கில் இசைவு தெரிவிக்கவில்லை. சுந்தரும் ஜடேஜாவும் சதத்தை நெருங்கிக் கொண்டிருந்தது ஒரு காரணமாக இருந்த போதும், இந்திய அணிக்கு வேறு வியூகமும் இருந்தது. ஏற்கெனவே, உடல் சோர்வில் இருக்கும் இங்கிலாந்து வேகப்பந்து வீச்சாளர்கள் மேலும் பந்துவீசி ஓய்ந்து போகட்டும் என இந்தியா நினைத்திருக்கலாம். இந்தியாவின் மறுப்பு, ஸ்டோக்ஸ் உள்பட இங்கிலாந்து அணி வீரர்களுக்கு கோபத்தை ஏற்படுத்தியது. டெஸ்ட் கிரிக்கெட்டில் பாவ புண்ணியம் பார்க்க முடியாது என்பதை பாடிலைன் பந்துவீச்சை கண்டுபிடித்த இங்கிலாந்து அணி எப்படி மறந்தது என தெரியவில்லை. சுந்தர்–ஜடேஜா இணை, 334 பந்துகள் தாக்குப்பிடித்து விளையாடி, 203 ரன்களை குவித்தது, இருவரும் சதம் அடித்தனர். லார்ட்ஸ் டெஸ்டில் ஜடேஜாவுக்கு ஏற்பட்ட மன வருத்தத்துக்கு ஆறுதலாக இந்த சதம் நிச்சயம் அமைந்திருக்கும். ஓவல் டெஸ்ட், இன்னும் இரண்டு நாள்களில் தொடங்கவுள்ள நிலையில், இங்கிலாந்து வேகப்பந்து வீச்சாளர்கள் களைத்துப் போயுள்ளனர். பும்ரா உள்பட இந்தியாவின் அனைத்து வேகப்பந்து வீச்சாளர்களும் முழு உடற்தகுதியில் உள்ளனர். இந்தியா 2-1 என தொடரில் பின்தங்கி இருந்தாலும், மான்செஸ்டர் டெஸ்டில் இந்தியா விளையாடிய விதம், உளவியல் ரீதியாக இந்திய அணிக்கு ஒரு எழுச்சியை கொடுத்துள்ளது. ஓவல் டெஸ்டில் இன்னொரு ரோலர் கோஸ்டர் ரைடுக்கு தயாராவோம். - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/c2kzdgd7zjxo
  20. விருது கொடுப்பது யார், அது நீங்களா? அல்லது உங்கள் எஜமானாரா? அறிய ஆவல்! மற்றவர்களுக்கு விருது பற்றி கதைப்பவர்கள், தாமும் இதையே எதிர்பார்த்து கதைப்பதுபோல் தெரிகிறது.
  21. காவோலை வேலிக்கால ஓட்டை போட்டு பக்கத்து வீட்டு விடுப்பு பார்த்த யாழ்ப்பாணத்தானுக்கு பேஸ் புக் ஒரு வரப்பிரசாதம்.😂
  22. நாட்டில் வாழும் மனித மிருகங்களை விட காட்டில் வாழும் மிருகங்கள் ஓரளவிற்கு பரவாயில்லை.
  23. வரும் 2026 ஓ/எல் எடுக்கும் மாணவர்கள் இந்த புதிய திட்டத்தின் கீழ் பரீட்சைக்கு தோற்றுகின்றார்களா? வழமையில் ஆண்டு பத்தில் தானே புதிய மாற்றத்தை கொண்டு வர முடியும்? ஏற்கனவே ஆண்டு பத்தில் உள்ளவர்கள் புதிய முறைக்கு எப்படி உள் வாங்கப்படமுடியும்? அதற்கு போதிய கால அவகாசம் உள்ளதா? இந்த செய்தியை உறுதிப்படுத்தும் நம்பகரமான செய்தி மூலத்தை பகிருங்கள் வாசித்து பார்ப்போம். மதியம் ஒன்று முப்பதுக்கு நிறைவு அடையும் பாடசாலைகள் மாலை நான்கு வரை நீடிக்கப்படவுள்ளதாக ஒரு தகவல் அறிந்தேன். உண்மை நிலை தெரியவில்லை.
  24. இது சரியான தகவல் அல்ல. "அம்மாள் வருத்தம்" என்று நாம் அழைக்கும் Pox வைரசுகளால் ஏற்படும் நோயை மனிதரில் உருவாக்கும் வைரஸ் குடும்பம், மாடு, ஒட்டகம் ஆகிய விலங்குகளிலும் மனிதரில் போன்றே பொக்களங்கள் போடும் நோயை உருவாக்குகிறது. பெரியம்மை (Smallpox) நோயை 80 களில் உலகில் இருந்து ஒழித்தார்கள். இந்த பெரியம்மை நோய் ஒழிப்பிற்குக் காரணமான முதலாவது தடுப்பூசி தயாரிக்கப் பட்டது, மாடுகளில் நோய் ஏற்படுத்தும் அம்மை நோய் (Cowpox) வைரசில் இருந்து தான். எனவே, 1980 ஓடு அம்மாள் மனிதர்களில் வருவதும் நின்று விட்டது!
  25. வரலாறு மீண்டும் திரும்புமா? சாதனைகள் அரங்கேறிய நாளில் கணிப்புகளை பொய்யாக்கிய இந்திய ஜோடி பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, கே.எல். ராகுல் மற்றும் சுப்மன் கில் கட்டுரை தகவல் தினேஷ் குமார் பிபிசி தமிழுக்காக 27 ஜூலை 2025, 01:52 GMT இந்த டெஸ்ட் தொடர் தனது இயல்பை (எதிர்பாராத்தன்மை) மாற்றிக்கொள்ளாது போல. ஆட்டம் முடிந்தது, எல்லாம் அவ்வளவுதான் என நினைக்கும் போதெல்லாம், இரு அணிகளும் போட்டி போட்டுக்கொண்டு மீண்டுவருவதை பார்க்கிறோம். நான்காம் நாளில் இந்தியா பெட்டியைக் கட்டும் என கிரிக்கெட் உலகமே எதிர்பார்த்த நிலையில், உறுதியுடன் போராடி ஆட்டத்தை கடைசி நாளுக்கு எடுத்து சென்றிருக்கிறது இந்தியா. எவ்வளவு நேரம் தோல்வியை தள்ளிப்போட முடியும் என்ற கவலையுடன் இந்திய அணி நான்காம் நாள் ஆட்டத்தை தொடங்கியது. 544–7 என்ற வலுவான நிலையில் ஆட்டத்தை ஆரம்பித்த இங்கிலாந்து அணி, தொடக்கம் முதலே ரன் சேர்ப்பதில் தீவிரம் காட்டியது. மழை பெய்திருந்ததால், ஆடுகளம் பந்துவீச்சுக்கு சாதகமாக இருக்குமென்ற எதிர்பார்ப்பு இருந்தது. ஆனால், வழக்கம் போல இந்திய பந்துவீச்சாளர்கள் லைன் அண்ட் லெந்த் பிடிக்காமல் பந்துவீசி ரன்களை வாரி இறைத்தனர். ஆடுகளத்தில் முன்னுக்கு பின் முரணான பவுன்ஸ் தென்பட்டது. பழைய வேகம் இல்லையென்றாலும் பும்ராவின் பந்துவீச்சில் நம்பிக்கை தெரிந்தது. நல்ல லெந்த்தில் டாசனுக்கு அவர் வீசிய பந்து ஒன்று எதிர்பாராத உயரத்துக்கு எழும்பியது. அடுத்த பந்தை அதே லெந்த்தில் வீசிய அவர், சரியாக ஆஃப் ஸ்டம்ப்பின் தலைப்பகுதியை தாக்கி டாசனின் விக்கெட்டை கைப்பற்றினார். டாசன் ஆட்டமிழந்ததும், களமிறங்கிய கார்ஸ், கேப்டன் ஸ்டோக் உடன் இணைந்து அடித்து விளையாட தொடங்கினார். சிராஜ் பந்தில் பவுண்டரி விளாசி, சதத்தை எட்டினார் ஸ்டோக்ஸ். கடந்த இரண்டு ஆண்டுகளில் அவர் அடித்த முதல் சதம் இது என்பது குறிப்பிடத்தக்கது. மூன்றாம் நாள் ஆட்டத்தில் ஓரளவுக்கு சுமாராக பந்துவீசிய சுந்தர் பந்துவீச்சையும் ஸ்டோக்ஸ் விட்டுவைக்கவில்லை. ஒரே ஓவரில் சிக்ஸர், பவுண்டரி அடித்து, சுந்தரின் லெந்த்தையும் ரிதத்தையும் சீர்குலைத்தார். பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, சிராஜ் பந்தில் பவுண்டரி விளாசி, சதத்தை எட்டினார் ஸ்டோக்ஸ் உணவு இடைவேளைக்கு முன்பாக, இந்தியாவை பேட் செய்ய வைத்திட வேண்டும் என்கிற திட்டத்துடன் இங்கிலாந்து விளையாடியது. கில்லின் கேப்டன்சி, வழக்கம் போல நேற்றும் சொதப்பலாகவே இருந்தது. ஜடேஜா பந்துவீச்சை எதிர்கொள்ள ஸ்டோக்ஸ் விரும்பமாட்டார் என்பதை மறந்துவிட்டு, நேரம் கடந்த பின்தான் ஜடேஜா கையில் பந்தை கொடுத்தார். சாதனைகளை நிகழ்த்திய இங்கிலாந்து புயல் வேகத்தில் சென்றுகொண்டிருந்த இங்கிலாந்து கேப்டனை ஜடேஜாவாலும் தடுத்து நிறுத்த முடியவில்லை. இங்கிலாந்து வீரர்களுக்கு இது சாதனைகளை நிகழ்த்துவதற்கான டெஸ்ட் போல. நேற்று ரூட் பல்வேறு சாதனைகளை செய்த நிலையில், இன்று ஸ்டோக்ஸ், தன் பங்குக்கு சிலவற்றை நிகழ்த்தினார். ஒரே டெஸ்டில் சதமும் 5 விக்கெட்களும் கைப்பற்றிய, நான்காவது இங்கிலாந்து வீரர் என்ற சிறப்பை பெற்றார். முன்னதாக, டோனி கிரைக், இயன் போத்தம், கஸ் அட்கிட்சன் ஆகியோர் இந்த சாதனையை நிகழ்த்தியுள்ளனர். வெஸ்ட் இண்டீஸ் ஜாம்பவான் கேரி சோபர்ஸ், காலிஸ் ஆகியோருக்கு பிறகு டெஸ்ட் கிரிக்கெட்டில் 7,000 ரன்களுடன் 200 விக்கெட்களை கைப்பற்றிய மூன்றாவது வீரர் என்ற சாதனையை படைத்தார். ஜடேஜா பந்தில் தொடர்ச்சியாக இரண்டாவது சிக்ஸர் அடிக்க முயற்சித்து, லாங் ஆன் திசையில் சாய் சுதர்சனிடம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார். அதிரடியாக 47 ரன்கள் குவித்த கார்ஸ் விக்கெட்டையும் ஜடேஜா கைப்பற்ற, இங்கிலாந்து அணி 669 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. இந்திய அணிக்கு எதிராக இங்கிலாந்து, 600 ரன்களுக்கு மேல் குவிப்பது, இது ஏழாவது முறையாகும். 6 இல் 5 டெஸ்ட்களில் இங்கிலாந்து அணி வெற்றிபெற்றுள்ளது. 2002 டிரெண்ட்பிரிட்ஜ் டெஸ்டில், இந்திய அணி டிராவிட் சதத்தின் உதவியுடன் போராடி தோல்வியை தவிர்த்தது. பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, சாய் சுதர்சன் உணவு இடைவேளைக்கு 15 நிமிடங்கள் இருந்த நிலையில், 311 ரன்கள் பின்தங்கிய இருந்த இந்தியா இன்னிங்ஸை தொடங்கியது. ஒன்றரை நாட்களுக்கு மேல் தாக்குப்பிடித்தால்தான் தோல்வியை தவிர்க்க முடியும் என்கிற நெருக்கடியுடன் களமிறங்கிய இந்திய அணி, முதல் ஓவரிலேயே ஜெய்ஸ்வால், சுதர்சன் விக்கெட்டுகளை இழந்தது. இந்த டெஸ்ட் தொடர் முழுக்க சுமாராக பந்துவீசிய வோக்ஸ், நேற்று சரியான நேரத்தில் ஃபார்முக்கு திரும்பினார். 311 ரன்கள் பின்தங்கியிருக்கிறோம் என்பதை விட உணவு இடைவேளைக்கு முன்பு 15 ஓவர்கள் விக்கெட் இழக்காமல் விளையாடியாக வேண்டும் என்ற நெருக்கடியே அவர்களது விக்கெட்டை காவு வாங்கிவிட்டது எனலாம். ஸ்டம்ப் லைனில் வந்த பந்தை சரியான கோணத்தில் பேட்டை வைக்காமல் தடுக்க முயன்று, ஸ்லிப் திசையில் ரூட்டிடம் கேட்ச் கொடுத்து நடையைக் கட்டினார். முதல் ஓவரிலேயே விக்கெட் விழும் என எதிர்பார்க்காத சாய் சுதர்சன், முறையான தயாரிப்புகளின்றி அவசர அவசரமாக களத்துக்கு ஓடிவந்தார். கடுமையான உடற்சோர்விலும் மனச்சோர்விலும் இருந்த சுதர்சன், ஷார்ட் ஆஃப் லெந்த்தில் வோக்ஸ் வீசிய பந்தை தொடலாமா வேண்டாமா என்ற இரட்டை மனநிலையில், கடைசி நொடியில் பேட்டை உயர்த்தி கீப்பரிடம் கேட்ச் கொடுத்து 'கோல்டன் டக்'காகி பெவிலியன் திரும்பினார். கில்லின் உச்சபட்ச ஆட்டம் கடைசியாக இந்திய அணியின் இரு தொடக்க வீரர்களும் ' டக் அவுட்' ஆனது, 1983 இல் வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான சென்னை டெஸ்டில். அந்த டெஸ்டில் நான்காவது இடத்தில் களமிறங்கிய கவாஸ்கர் ஆட்டமிழக்காமல் 236 ரன்களை குவித்தது குறிப்பிடத்தக்கது. ஆடுகளம் முதல் சில ஓவர்களுக்கு தாறுமாறாக ஸ்விங் ஆனதால், உணவு இடைவேளைக்கு பிறகு இந்திய அணி விரைவில் சரணடையும் என்ற எதிர்பார்ப்பு இருந்தது. ஆனால், அனுபவ வீரர் கேஎல் ராகுலுடன் கைகோர்த்த கில், தனது உச்சபட்ச ஆட்டத்தை வெளிப்படுத்தினார். ராகுல் வழக்கம் போல, பந்தை தேய்த்துக் கொடுக்கும் வேலையை எடுத்துக்கொள்ள, தைரியமாக கில் பவுண்டரிகளை அடித்து விளையாடத் தொடங்கினார். கோட்டுக்கு (crease) வெளியே நின்றுகொண்டு, நல்ல லெந்த்தில் வீசப்பட்ட பந்துகளையும் ஹாஃப் வாலிகளாக மாற்றி கோடு கிழித்தது மாதிரி சில டிரைவ்கள் அடித்து, இந்திய ரசிகர்களை உற்சாகப்படுத்தினார். பாயிண்ட் திசையில் கில் கொடுத்த எளிமையான கேட்ச் வாய்ப்பை டாசன் தவறவிட்டார். இதை சரியாகப் பயன்படுத்திக்கொண்ட கில், அபாரமாக விளையாடி அதிரடியாக அரைசதத்தை கடந்தார். 2016 ஆம் ஆண்டு இங்கிலாந்துக்கு எதிராக விராட் கோலி எடுத்த 655 ரன்களை கில் முந்தினார். ஒரு டெஸ்ட் தொடரில் இந்திய கேப்டனாக அதிக ரன்கள் எடுத்தவர் என்ற சுனில் கவாஸ்கரின் சாதனையை (732) நெருங்குகிறார். மறுமுனையில், நிதானமாக விளையாடிக் கொண்டிருந்த ராகுல், தவறான லைன் அண்ட் லெந்த்தில் கிடைத்த பந்துகளை பின்னங்காலுக்கு சென்று பவுண்டரிக்கு அனுப்பவும் செய்தார். இந்திய அணி இந்தளவுக்கு போராடும் என்பதை இங்கிலாந்து நிச்சயம் எதிர்பார்த்திருக்காது. ஸ்டோக்ஸ் பந்துவீசாததை இந்திய பேட்ஸ்மென்கள் சாதகமாக பயன்படுத்திக் கொண்டார்கள் என்றுதான் சொல்ல வேண்டும். பந்துவீச்சாளர்கள், பீல்டர்கள் என ஒட்டுமொத்த இங்கிலாந்து அணியினரும் களத்தில் சோர்வில் இருந்தது அப்பட்டமாக தெரிந்தது. ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் சுவாரசியமே இதுதான். எல்லா வித தடைகளையும் கடந்து எந்த அணி கடைசி வரை உறுதியுடன் நிற்கிறதோ அதுவே வெற்றிபெறும். தமிழக வீரர் ஜெகதீசன் அனுபவமுள்ள இஷான் கிஷனை தாண்டி இந்திய அணியில் இடம்பிடித்தது எப்படி? இன்றும் வாடகை வீட்டில் வசிக்கும் இந்த சிஎஸ்கே வீரர் இந்திய அணிக்காக சாதிப்பாரா? சச்சின் சாதனையை நெருங்கிய ஜோ ரூட் - விவேகத்தை விட்டு ஆட்டத்தை தொலைத்த இந்தியா காயம்பட்ட ரிஷப் பந்தின் காலுக்கு குறி வைத்த இங்கிலாந்து - வியூகத்தில் கோட்டை விட்ட இந்தியா பட மூலாதாரம்,GETTY IMAGES ராகுல்–கில் இணை, கிட்டத்தட்ட 60 ஓவர்களுக்கு மேல் உறுதியுடன் விளையாடி, 174 ரன்களை எடுத்துள்ளது. தொடக்க வீரர்கள் ரன்னின்றி (0–2) ஆட்டமிழந்த பிறகு மூன்றாவது விக்கெட்டுக்கு 100 ரன்கள் சேர்ப்பது, வரலாற்றில் இதுவரை 2 முறை மட்டுமே நிகழ்ந்துள்ளது. 1977/78 ஆஸ்திரேலிய சுற்றுப்பயணத்தில், மெல்பர்ன் டெஸ்டில் மொஹிந்தர் அமர்நாத்–குண்டப்பா விஸ்வநாத் (105), 1902 இல் லார்ட்ஸ் டெஸ்டில் இங்கிலாந்துக்கு எதிராக ஆர்ச்சி மெக்லாரன்–ஸ்டான்லி ஜாக்சன் (102*). ஐந்தாம் நாளில் மழைக்கு வாய்ப்பு இருப்பதாக கூறப்படும் நிலையில், ஆட்டம் நிச்சயம் ஒரு முடிவை நோக்கி சென்றுகொண்டிருக்கிறது என்பது மட்டும் உறுதியாக கூற முடியும். பந்த் உடற்தகுதியுடன் இல்லாத நிலையில், ராகுல்–கில் இருவரும் இன்று முடிந்தமட்டும் நிலைத்து நின்று விளையாட வேண்டியது அவசியம். இந்தியா கடந்த காலத்தில் இதுபோன்ற கடினமான சூழல்களில், மனஉறுதியுடன் விளையாடி தோல்வியை தவிர்த்துள்ளது. 2001 ஈடன் கார்டன்ஸ் டெஸ்ட், ஒரு சிறந்த உதாரணம். டிராவிட்–லக்ஷ்மண் போல, ராகுல்–கில் அசாதாரண ஆட்டத்தை வெளிப்படுத்தி, தோல்வியின் பிடியில் இருந்து இந்தியாவை மீட்டெடுப்பார்களா? - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/cvgn41n7e3eo
  26. முதுகெலும்பு இல்லாத கூட்டம் தேவையற்று சமய சண்டைகளை வளர்க்க விரும்புகினம் .
  27. பல்லின கலாச்சாரம் வேணும் எண்டால் ஆபிரிக்க பிரதர்ஸ்ச காசு குடுத்து எண்டாலும் கூட்டிக்கொண்டு வரத்தான் வேணும் 😂
  28. தேசிய மக்கள் சக்தியை சேர்ந்த எட்டுப் பேரை கைது செய்துள்ளார்களாம். இவங்கள் வெறியில்… மாதா சிலையை உடைத்ததை விட, ஊரில் உள்ள புத்தர் சிலைகளை உடைத்திருக்கலாம். 😂
  29. அதுதானே சிங்கப்பூர் மாதிரி செய்யலாமே? இப்படி எத்தனையோ தடவைகள் அறிவித்தும் நடைமுறைப்படுத்துவதில் சிக்கல்களை எதிர்நோக்குகிறார்கள்.
  30. உலக நாயகனுக்கு வாழ்த்துக்கள்! இதுவும் ஒரு பிக் பொஸ் நிகழ்ச்சியாக அமையுமோ? யார் யாரை வெற்றிகரமாக வெளியில் அனுப்புகின்றார் என பார்ப்போம்.
  31. கள்ளு அப்பம் புளிக்க வைக்கவும் பாவிக்கிறவை.அதோட கள்ளு உடம்புக்கு குளிர்ச்சி தரும் எண்டும் சொல்லுறவை.கள்ளு கெமிக்கல் சேர்க்காத இயற்கை தந்த மது பானம். அதை அளவோடு பருகினால் வாழ்க்கை முழுவதும் ஆனந்தம்...ஆனந்தம்.😍
  32. வவுணதீவு இரட்டைக் கொலை சம்பவத்திலும்... விடுதலைப் புலிகளின் முன்னாள் போராளிகள் மீது இந்தக் கொலைகள் சுமத்தப்பட்டு, பலர் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டிருந்தனர். குற்றம் செய்யாதவர்களை மாட்டி விட்டதில்... அப்போதைய மட்டக்களப்பு மாவட்ட புலனாய்வுப் பிரிவு பொறுப்பதிகாரியும், சஹ்ரான் ஹாஷிம் தலைமையிலான பயங்கரவாதக் குழுவிற்கும் தொடர்பு இருப்பது வெளிச்சத்திற்கு வந்துள்ளது. 2018 ஆம் ஆண்டு நடந்த கொலையின் உண்மை 2025,ம் ஆண்டுதான் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. அதுவரை தமிழ் அப்பாவிகளை போட்டு சிங்களவனும், சோனகனும் சித்திரவதை செய்வார்கள்.
  33. 4) சுழிபுரம் கிழக்கைச் சேர்ந்த அமரர் பூலோகதேவி ஆண்டியப்பன் ஞாபகார்த்தமாக உருவாக்கப்பட்டுள்ள "சுழிபுரம் பூலோகதேவி அறக்கட்டளை" ஊடாக பேரன் அபிஷேக் அசோக் (சென்னை, அமெரிக்கா) குடும்பத்தினர் வீட்டுத்திட்ட பணிகளை நிறைவு செய்ய உதவும் வகையில் திரு லக்சன் அவர்களுடைய வங்கிக் கணக்கில் 35000 ரூபாவை வைப்பிட்டுள்ளனர். 23/07/2025 இன்றுவரை மொத்தமாக 139970 ரூபா திரு லக்சனுடைய வங்கிக் கணக்கில் வைப்புச் செய்யப்பட்டுள்ளது.
  34. 👉தமிழ் நாட்டிலுள்ள ஏனைய அரசியல்வாதிகள் அனைவரும் சீமானை விட நேர்மை,ஒழுக்க சீலர்களாக, நியாய பூர்வ உள்ளம் நிறைந்தவர்களாக இருப்பின்......👈 சீமானை எதிர்ப்பதில் நியாயம் இருக்கின்றது.👇 திமுக போகத்திற்கு போகம் பாஜகவுடன் கள்ள உறவு வைத்திருந்ததை/வைத்திருப்பதை யாராலும் மறக்கவும் மறுக்கவும் முடியாது.😎
  35. நான் சில திரிகளுக்குள் வர விருப்படுவதில்லை..ஆனாலும் சில கருத்துக்களை பார்க்கும் போது அதுவும் பெண் பிள்ளைகளை வைத்திருப்போரோ இப்படி எழுதும் போது என்ன செய்வது.. சில செய்திகளை கண்டும் காணாதது போல் போவதே மேல் இது அனைவருக்கும்.. .காரணம்..யாருடைய பிள்ளையாக இருந்தாலும் வாழ வேண்டிய பெண் பிள்ளை..மற்றையது முழுப் பிழைளயும் பெற்றோரில் தான் இருக்கிறது..ஓரளவுக்கு வந்து போகும் உறவுகளை பற்றி கொஞ்சமாவது புரிந்து இருக்க வேணும்.ஏன் இவர் அடிக்கடி வாறார்....இவரது நோக்கம் என்ன...வீட்டிலிருக்கும் பிள்ளைகளோடு எப்படி பழகுகிறார்கள் என்பதை கவனிக்க வேணும்.இவை அனைத்து வயதினருக்கும் பொருந்தும்.அதை விடுத்து.....
  36. 26 JUL, 2025 | 05:08 PM யாழ்ப்பாணத்தில் மது போதையில் தேவாலயத்திற்குள் அத்துமீறி நுழைந்து மாதா சிலையை அடித்து உடைத்து, தேவாலயத்திற்கு சேதம் விளைவித்த குற்றச்சாட்டில் அரசியல் கட்சி ஒன்றின் தீவக அமைப்பாளர் உள்ளிட்ட 08 பேரை பொலிஸார் கைது செய்துள்ளனர். ஊர்காவற்துறை மெலிஞ்சிமுனை நாரயம்பதி மாதா தேவாலயத்தில் இருந்த சுமார் 50 இலட்சம் ரூபா பெறுமதியான மாதா சிலையையே இந்த கும்பல் அடித்து உடைத்துள்ளார்கள். இந்த சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது, தேவாலயத்திற்கு அருகில் வெள்ளிக்கிழமை (25) அரசியல் கட்சியின் தீவக அமைப்பாளரின் தலைமையில் சுமார் 20 பேர் கொண்ட கும்பல் ஒன்று மது விருந்து கொண்டாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். சற்று நேரத்தில் இந்த கும்பல் மது போதையில், தேவாலயத்திற்கு சென்றவர்களுடன் முரண்பட்டு அவர்களை தகாத வார்த்தைகளால் பேசியுள்ளனர். பின்னர் தேவாலயத்தினுள் அத்துமீறி நுழைந்து , இந்தியாவில் இருந்து கொண்டுவரப்பட்ட சுமார் 50 இலட்ச ரூபாய் பெறுமதியான மாதா சிலையை அடித்து உடைத்துள்ளனர். அத்துடன், தேவாலயத்தினுள் காணப்பட்ட ஏனைய பொருட்களையும் சேதப்படுத்தியுள்ளனர் சம்பவம் தொடர்பில் தேவாலய நிர்வாகத்தினரால், ஊர்காவற்துறை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டதை அடுத்து, பொலிஸார் மேற்கொண்ட விசாரணைகளின் அடிப்படையில் அரசியல் கட்சியின் தீவக அமைப்பாளர் உள்ளிட்ட 08 பேரை கைது செய்து பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைத்துள்னர். கைது செய்யப்பட்டவர்களின் வாக்கு மூலத்தின் அடிப்படையில் ஏனையவர்களை கைது செய்யும் நடவடிக்கைகளில் பொலிஸார் ஈடுபட்டுள்ளனர். https://www.virakesari.lk/article/221007 NPP தீவக அமைப்பாளரும் கைது என்ற செய்தி வாசித்தேன்.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.