Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Leaderboard

  1. தமிழ் சிறி

    கருத்துக்கள உறவுகள்
    5
    Points
    87988
    Posts
  2. யாயினி

    கருத்துக்கள உறவுகள்
    5
    Points
    10207
    Posts
  3. ஈழப்பிரியன்

    கருத்துக்கள உறவுகள்
    4
    Points
    20010
    Posts
  4. ரஞ்சித்

    கருத்துக்கள உறவுகள்
    3
    Points
    8907
    Posts

Popular Content

Showing content with the highest reputation on 08/05/25 in all areas

  1. தலைவருக்கு வீரவணக்கம் செய்வது என்பதில் எனக்கு மாற்றுக்கருத்து இல்லை. அவர் இப்போது உயிருடன் இல்லை. நானும் புலிகள் தொடர்பில் எழுதத்தொடங்கிய போது - ஆவணங்களில் - 2021ம் ஆண்டு அதைத்தான் எழுதினேன். கோராவில் திரு. சாத்திரியாரின் 2011ம் ஆண்டு தலைவர் வீரவணக்க படத்தை பாவித்து செய்தேன். யாழ் எழுத்தாளர் நேசக்கரம் சாந்தி அவர்கள் செய்த நிகழ்விற்கு ஆதரவு நல்கினேன். இவர்கள் தலைவரின் வீரவணக்க நிகழ்வை செய்த திகதி பற்றி எனக்கு கவலை இல்லை. செய்ய வேண்டும் - செய்தார்கள். நல்லம். எனினும் இவர்கள் செய்த நிகழ்வில் சில செயல்களில் எனக்கு உடன்பாடு இல்லை. குறிப்பாக மக்களும் போராளிகளும் புனிதமாக பார்க்கும் வரிப்புலியை சிறார்களுக்கு அணிவித்து அதனைக் கொண்டு அணிநடை போட விட்டது மிகவும் இழிவான செயலாகும். அவ்வாறு செய்திருக்கக் கூடாது. வரிப்புலி கிடைக்காமல் ஆயிரக்கணக்கான மாவீரர்கள் உயிர்விட்டனர். ஆனால் இவர்களோ அதை இவ்வாறு பாவிப்பது ஏற்க முடியாத செயலாகும். அத்துடன் ஒவ்வொரு ஆண்டும் மே 18ம் திகதி செய்யப்போவதாக அறிவித்திருப்பது உண்மையில் மனமெரிய வைக்கும் செயலாகும். மே 18 என்பது இனப்படுகொலை நாளாகும். அதில் இதைக் கொண்டுவந்து செய்தால் - நாளை அது ஓர் பயங்கரவாதி உயிர்நீத்த நாள் என்று உலக நாடுகளாலும் இந்திய சிங்கள கூட்டுக் களவாணிகளாலும் ஒத்தூதப்படும். பின்னர் அந்நாள் தடை செய்யப்படும். இவர்கள இதை சிந்தித்தார்களா என்பது எனக்குத் தெரியவில்லை. என்னைப் பொறுத்தவரை தலைவரும் ஆயிரமாயிரம் மாவீரர்கள் போன்று ஓர் மாவீரர்தான். அதே போன்று தான் தலைவருக்கும் நவ. 27இல் தான் ஆண்டாண்டு வீரவணக்கம் இனி செய்ய வேண்டும். மே 18 இல் செய்தால் அது எல்லாவற்றையும் திசை மாற்றி விடும். எனவே மே 18இல் செய்யாமல் நவம் 27இல் ஆண்டுதோறும் செய்வது சாலச் சிறந்தது. மாறி செய்தால் இந்த இவர்களும்*** புலனாய்வுத்துறைகளின் நிகழ்ச்சி நிரலில் இயங்குவது உறுதியாகிவிடும்.
  2. மலையக மக்களின் அடையாளமான காமன் கூத்தும் கிழக்கில் காமண்டியும் – கிரிஜா மானுஶ்ரீ. written by admin August 2, 2025 மனிதனின் ஆர்வம், எதிர்பார்ப்பு எத்தகையது என்பது உலகறிந்த விடயமே. விடுக்கப்பட்ட அழைப்பிற்கிணங்க கிழக்கில் காமண்டி எவ்வாறு இருக்கப் போகின்றது என்ற ஆர்வத்துடன் அனைவரும் ஒன்றுத்திரண்டு சென்றோம். தப்பிசை ஒலி முழங்க வண்ணமயமான ஒளி அமைப்புகளுடன் வரவேற்றது காமண்டி. மலையகத்தில் ஒவ்வொரு வருடமும் மாசி மாதத்தில் அமாவாசை மூன்றாம் நாள் காமன் கூத்து நிகழ்த்தப்படுகின்றது. பிரித்தானியரால் இலங்கைக்கு கொண்டுவரப்பட்ட தமிழக மக்களின் 200வது ஆண்டினை நினைவு கூறுவதாகவே காமன் கூத்து சுவாமி விபுலாநந்த அழகியல் கற்கைகள் மாணவர்களால் கிழக்கில் காமண்டி என்ற பெயரில் நிகழ்த்தப்பட்டது. கடந்த வருடம்(2024) இந்த வருடமும்(2025) மலையக மக்களின் கூத்து வடிவங்களில் முக்கியமானதாக விளங்கும் காமன் கூத்து ஆற்றுகை செய்யப்பட்டது. இவ்வருடம் 2025ம் ஆண்டு 5ம் மாதம் 23ஆம் திகதி மாலை 6.30 மணி தொடக்கம் 11.00 மணி வரை நீடித்தது. என்னுடைய அனுபவமாக ஆறு வயதில் மஸ்கெலியாவில் கிலண்டில் தோட்டத்தில் மலையக மக்களின் நம்பிக்கை சார்ந்த ஆற்றுகை வடிவமான காமன் கூத்தினை சுமாராக 18 வருடங்களுக்கு பின்னர் கிழக்கில் காமண்டி என்ற பெயரில் பார்ப்பதற்கு வாய்ப்பு கிடைத்தது. ஒரு பக்கத்தில் நெருப்பில் தப்பு பறைகள் சூடேற்றப்பட்டன. மறுபக்கம் நடன நாடகத்துறை மாணவர்களால் காமன் கூத்துக்கான ஆயத்த வேலைப்பாடுகள் பரபரப்பாக செய்யப்பட்டன. காமன் கூத்தில் தப்பு பறை முக்கியமான இசைவாத்தியமாக விளங்குகின்றது இது காமன் கூத்தை பார்த்து ரசிக்க புத்துணர்ச்சி கொடுத்தது. இதற்கு வாத்தியம் வாசித்த மாணவர்களை பாராட்ட வேண்டும். காமன் கூத்து பாடல்கள் தெளிவாகவும் விளக்கமாகவும் கதையை அழகாக எடுத்துக் கூறுவதாக அமைந்திருந்தது. கூத்தில் பக்கப்பாட்டுக்காரர்களே பாடல்களை கூத்து ஆரம்பத்தில் இருந்து நிறைவுறும் வரை பாடினார்கள். மங்கள விளக்கேற்றலுடனும், உரைகளுடனும் தொடங்கிய காமண்டி பார்வையாளர்களை ஆராவாரப்படுத்தியது. ஒரு மாணவரால் ரத்தின சுருக்கமாக காமன் கூத்தினுடைய கதை கூறப்பட்டது. கூத்தில் பங்கு பெற்ற அனைவரும் கம்பம் பாலித்து காப்புகளை கட்டி தயார் நிலையில் இருந்தார்கள். இந்த சுவாரஸ்யத்துடன் நாம் காமன் கூத்து தொடர்பான சில விளக்கங்களுடன் நிகழ்வுக்குள் செல்வோம். ஒவ்வொரு நிகழ்விற்கும் பின்னால் ஒரு வரலாறு இருக்கும் அல்லவா? ஆம் அதுபோல காமன் கூத்து நிகழ்த்தப்படுவதற்கும் காரணம் உண்டு. இதற்கு ஒரு புராண கதையும் உள்ளது. இது கந்தபுராணத்தில் குறிப்பிடப்பட்டுள்ளதனை பார்க்கலாம். அதாவது தேவர்களை அசுரர்கள் இன்னல்படுத்தினார்கள். சூரன் தலைமையில் தேவலோகம் கைப்பற்றப்பட்டது. இதனை தேவர்கள் சிவனிடம் முறையிட சிவன் தனக்கும் சக்திக்கும் மகன் பிறப்பான் அவனே அசுரர்களை அழித்து தேவர்களை மீட்பான் என்று கூறினார். பின்னர் நீண்ட ஆண்டுகள் தவத்தில் ஆழ்ந்திருந்த சிவன் தேவர்களின் முறையீடுகளை நிவர்த்தி செய்யவில்லை. ஆகையால் பிரம்மனிடம் தேவர்கள் முறையிட மன்மதனை சிவனுடைய தவத்தை அளிக்குமாறு பிரம்மதேவன் கூறினார். ரதி தடுத்தபோதும் கேட்காத மன்மதன் காமக்கணைகளை தொடுத்ததால் நெற்றிக்கண் திறந்த சிவன் மன்மதனை எரித்து சாம்பலாக்கினார். இதனை அறிந்த ரதி புலம்பி அழுதாள். இக்காரணத்தினால் சிவன் எவருடைய கண்களுக்கும் தென்படாது ரதிக்கு மாத்திரம் மன்மதனின் உருவம் புலப்படும் வகையில் மன்மதனை உயிர்பித்தார் இதுவே கந்தபுராணம் கூறும் கதையாகும். இது மலையகத்தில் ஆடப்படும் காமன் கூத்தில் சற்று வேறுபட்டது. சிவனிடம் தக்கன் சக்தியானவள் என்னுடைய மகளாகவும் சிவன் மருமகனாகவும் இருக்க வேண்டும் என்று கேட்க சிவன் வரமளித்தார். பின்னர் சிவனை தரிசிக்க சென்ற தக்கனை சிவன் தியானத்தில் இருந்ததால் பார்க்கவில்லை. தன்னை பார்க்கவில்லை என்ற கர்வம், கோபம் கொண்டு சிவனை நோக்கி தக்கன் யாகம் செய்கின்றான். தக்கனின் தவத்தை அழித்த சிவன் கோபத்தோடு தவம் இருக்கின்றார். சிவனுடைய கோபத்தின் அனலால் அவதியுறும் தேவர்கள் இந்திரனின் உதவியுடன் சிவனின் தவத்தை அழிக்குமாறு மன்மதனுக்கு தூதோலை அனுப்பினார்கள். கட்டளைக்கிணங்க சென்ற மன்மதன் சிவனின் நெற்றிக்கண் திறக்க காரணமாகி எரிந்து மடிகின்றான். பின்னர் சிவனிடம் ரதி அழுது புலம்பி முறையிடவே மன்மதனை உயிர்ப்பித்தார். இந்த கதையை அடிப்படையாகக் கொண்டே கிழக்கில் காமண்டியும் ஆற்றுகை செய்யப்பட்டது. காமன் கூத்து நிகழ்த்தப்படும் இடத்தையும் விளங்கிக் கொள்வது அவசியம். காமன் கூத்து நிகழ்த்தப்படுகின்ற களத்தினை “காமன் பொட்டல்” என்று கூறுவார்கள். அது அனைவரும் ஒன்று கூடும் பொது இடமாக இருக்கும். இதில் “காமன் பாலித்தல்” என்பது முக்கியமானது காமன் பொட்டலின் நடுவே கம்பம் பாலிக்கப்படும். அதாவது காமன் குழியில் பொன், வெள்ளி, காசு இட்டு காமன் கம்பத்தை (வாழைமரம்) ஊன்றி புனித தன்மையுடன் பூஜை செய்வார்கள். காமன் கம்பத்தை சுற்றி மூங்கில், தடி, மாவிலை என்பவற்றை வைத்து நான்கு மூலையிலும் நட்டு அதற்கு அலங்கார வேலைகளை செய்வார்கள். இதில்தான் காப்பு கட்டுதல், பூஜை செய்தல் போன்ற செயல்பாடுகளை செய்வார்கள். அந்த வகையில் நம்பிக்கைக்கும் ஆற்றுகைக்கும் இடையில் வேறுபாடு உண்டு. இருப்பினும் இதை நம்பிக்கை கலந்த ஆற்றுகையாக சுவாமி விபுலானந்த அழகியல் கற்கைகள் நிறுவனத்தில் கற்கும் நடன நாடகத்துறை மாணவர்கள் மிகவும் நேர்த்தியாக செய்திருந்தார்கள். இவ்வாறு நிகழ்விற்குள் அடியெடுத்து வைப்போம். முதல் நிகழ்வாக தப்பிசை முழங்க மன்மதன், ரதி, சிவன், பார்வதி, தேவசபை ஆகியோர் வெள்ளை துணையால் மறைத்து காமன் பொட்டலுக்கு பாட்டுக்காரர்களால் வரவு பாட வருகை தந்தார்கள். பழங்கள், பூக்கள் கொண்ட தட்டுகளை தோழியர்கள் கொண்டு வர காமன் கம்பத்திற்கு பூஜைகள் செய்யப்பட்டு தேவர் சபை முன்னிலையில் சிவனும் பார்வதியும் தாலி எடுத்துக் கொடுக்க தேவலோக ஆசீர்வாதத்துடன் மன்மதன் ரதியினுடைய திருமணம் நிகழ்ந்தது. மணமக்கள் காமன் கம்பத்தை சுற்றி வந்து திருமணத்தை இனிதே நிறைவு செய்கின்றார்கள். ரதியும் மன்மதனும் தங்களுடைய திருமண நிகழ்வை (உரையாடல் பாங்கில் பக்கப்பாட்டுக்காரர்கள் பாட) தோழர்களுக்கு கூறி ஆடினார்கள். இதில் அகட விகட பாத்திரமான கோமாளி மன்மதன், ரதிக்கு நடுவே இருந்து ஆட்டத்தாலும், உடல், முக பாவனையாலும் பார்வையாளர்களை ஈர்க்கச் செய்தது. தேவர்கள் தேவ சபைக்கும், சிவன் சக்தி யாகசாலைக்கும் செல்ல ரதி, மன்மதன் காமன் பொட்டலை விட்டு சென்றதன் பின்னர் இடைநிலை பாத்திரமாக “குதிரையும் நோனாவும்” மிகவும் ஆரவாரத்துடன் காமன் பொட்டலை நோக்கி ஆடி வந்தனர். காமன் பொட்டலை சுற்றி சுற்றி ஆடி பார்வையாளர்களை சந்தோஷ மழையில் மூழ்கச் செய்தனர். அத்துடன் குறவன், குறத்தி ஆட்டம் பார்வையாளர்களை சுவாரசியமாக்கியது. இரண்டு ஜோடிகளாக வந்து காமன் பொட்டலில் ஆடி அனைவரையும் மகிழ்வித்தனர். இது சற்று நேரம் நீடித்தது. அத்துடன் குறத்தி ரதியின் கையை பார்த்து சிவன் நெற்றிக்கண் திறக்க மன்மதன் எரிந்து மடிவான் என்பதனை கூறி செல்கின்றாள். தக்கன் சிவனிடம் வரத்தை பெற்ற பின்னர் சிவனும் பார்வதியும் இருக்கும் இடத்திற்கு சென்று சிவனை பார்த்தப்போது சிவன் தக்கனை பார்க்காததால் கோபம் கொண்ட தக்கன் சிவனுக்கு எதிராக தவம் இருத்தல் நிகழ்வு இடம்பெற்றது. தவத்தின் அக்கினி அனலை தாங்க முடியாததால் தேவர்கள் சிவனிடம் முறையிடுகின்றார்கள். தக்கனுடைய தவத்தை அழிக்குமாறு சிவன் முருகபெருமானை அனுப்புகிறார் ஆனால் முருகனோ கன்னிப்பெண்களை பார்த்து ஏமாந்து விடுகின்றார். பின்னர் கணபதியை அனுப்பிய போது தொந்தி கணபதியோ பழங்களைக் கண்டு ஏமாந்து விடுகின்றார். இதனை அறிந்து கோபம் கொண்ட சிவன் தனது வியர்வையை சிந்தும் போது அதிலிருந்து வீரபத்திரர் உருவாக்குகின்றார். வீரபத்திரரும் காளியும் தக்கனுடைய தவத்தை அழித்து விடுகின்றார்கள். ஆக்ரோஷமாக தீபந்தங்களுடன் வீரபத்திரவரும் காளியும் வரும் காட்சி மெய்சிலிர்க்க வைத்தது. சிவன் தபசுக்கு செல்கின்றார். சிவனுடைய தவத்தின் அனலால் இந்திரலோகம் அவதியுற்றதால் இந்திரனால் மன்மதனுக்கு சிவனுடைய தபசை அழிக்குமாறு ஓலை தூதனால் கொடுக்கப்படுகின்றது. இங்கு தூதனும் தீபந்தங்களுடன் காமன் பொட்டலை நோக்கி ஆடி வருகின்றான். தூதன் மன்மதனுக்கு ஓலையை கொடுக்க சிவன் தபசை அழிக்கும் தகவலினை அறிந்த மன்மதன் இவ்வாறு சிவனுடைய தபசையை அளித்தால் சிவனின் நெற்றிக்கண் திறக்க தான் எரிந்து சாம்பலாகி விடுவேன் என்பதையும் அறிந்து கொள்கின்றார். இதனைத் தொடர்ந்து ரதி மன்மதன் இருவருக்கும் இடையிலான தர்க்கம் இடம்பெறுகின்றது. அதாவது குறத்தி கூறியதை போலவே அனைத்தும் நிகழ்வதை உணர்ந்த ரதி மன்மதனை சிவனின் தபசை அழிக்க செல்வதனை மறுக்கிறாள். மன்மதன் : நான் அலரி மலர் கணைதொடுப்பனடி – என் ரதியே மானே ரதியே தேனே சிவன் தவசை நான் அழிப்பனடி. ரதி : அலரி மலர் கணை தொடுத்து மன்னா மன்னா சிவன் தபசை நீயழிக்க வேணா வேணா.. ரதி எவ்வளவு தடுத்தும் கேட்காத மன்மதன் இறுதியில் ரதியை மயங்க செய்துவிட்டு சிவனுடைய தபசை அழிப்பதற்கு செல்கிறார். பின்னர் ஆவேசமாக அம்மன் காமன் கம்பத்தை சுற்றி சுற்றி ஆடுகிறாள். இது அசம்பாவிதம் நடக்கப்போவதை கூறும் விதமாக இருந்தாலும் இது ஒரு இடைநிலை பாத்திரமே ஆகும். இறுதியாக நந்தி தேவர் வருகை இடம்பெறுகிறது. சிவனுடைய தபசை அழிக்க செல்ல வேண்டாம் என்பதனை மன்மதனுக்கு கூற மன்மதனோ அதனை கேட்கவில்லை. சிவனுடைய தபசை மன்மதன் அழிப்பதற்கு செல்ல எமதர்மர் எமதூதர்களுடன் காமன் பொட்டலை நோக்கி ஆடி வருகின்றார்கள். கறுத்த நிற தோற்றத்துடனும் கம்பீரமான ஆட்டத்துடனும் சுற்றி வந்து ஆடி செல்கின்றார்கள். மன்மதனோ சிவனுடைய தபசை அழித்து விடுகின்றான். சிவனுக்கு அம்பு தொடுக்க சிவன் நெற்றிக்கண் திறந்து மன்மதனை எரிக்கும் காட்சி இடம் பெறுகின்றது. சிவன் இருக்கும் யாகசாலையிலிருந்து காமன் பொட்டலுக்கு காமன் கம்பத்தை நோக்கி தீப்பொறி வர மன்மதன் எரிந்து சாம்பலாகுகின்றான். (காமன் கம்பமே மன்மதனாக சித்தரிக்கப்படுகிறது) மன்மதன் இறந்த செய்தி அறிந்த ரதி தலையில் முக்காடு போட்டு கொண்ட நிலையில் எரிந்து கொண்டிருக்கும் மன்மதனை சுற்றி சுற்றி அழுது புலம்புகின்றாள் . இதனைத் தொடர்ந்து மன்மதன் எரியும் காமன் பொட்டலில் மனக்குறைகளை நினைத்து உப்பு போட்டு வேண்டினால் நிவர்த்தியாகும் என்ற நம்பிக்கையுடன் அனைவரும் உப்பு போட்டு வேண்டுதல்களை கேட்கின்ற நிகழ்வுடன் காமன் கூத்து இனிதே நிறைவடைந்தது. பரிபூரணமாக அன்று இரவு கிழக்கில் காமண்டி கோலாகலமாக நிகழ்த்தப்பட்டது காமண்டியில் கதாபாத்திரங்களுக்கான தோற்றம் நடை, உடை, பாவனை, பாத்திர அமைப்பு எல்லாம் அந்த பாத்திரமாகவே அவர்களை மாற்றியது. களத்திற்கு வருகை தந்த ஒவ்வொரு கதாபாத்திரமும் உணர்வு பூர்வமானதாக அமைந்தது. தேவர்கள் மன்மதன், ரதி, சிவன், பார்வதி, வீரபத்திரர், காளி, குறவன், குறத்தி, எமதர்மர், எமதூதர்கள், தக்கன், தூதன், இடைநிலை பாத்திரங்களான மாரியம்மன், கோமாளி, குதிரையும் நோனாவும் இவ்வாறு பல பாத்திரங்களை உள்ளடக்கியிருந்தது. அவர்களது ஒவ்வொரு பாத்திர அமைப்பும் பார்வையாளர்களை தங்களது கவனத்திற்கு கொண்டு வந்தது. கிழக்கில் காமண்டி கூத்தில் வந்த அகட விகட பாத்திரங்கள் அனைத்து பார்வையாளர்களையும் புத்துணர்ச்சியுடன் வைத்திருந்தது. கோமாளி இடைநிலை பத்திரமாக இருந்தாலும் கூத்தினுடைய அங்கமாக இருந்து அனைவரையும் மகிழ்வித்தது. மன்மதனுக்கும் ரதிக்கும் திருமணம் முடிந்த பின்னர் தோழியிடம் ரதி அருந்ததி பார்த்து திருமணம் ஆன செய்தியை மகிழ்ச்சியுடன் வெளிப்படுத்துவதாக ஆட்டமும், பாடலுடன் கூடிய தப்பிசையின் முழக்கமும் பார்ப்பதற்கும் கேட்பதற்கும் இனிமையானதாக இருந்தது. இது ஒரு திருமணமான பெண்ணின் பூரிப்பினை வெளிப்படுத்தியது. அதில் மன்மதன் ரதிக்கு இடையிலான உரையாடல் ஒரு பக்கம் கோமாளி பாத்திரம் பார்வையாளர் மத்தியில் மனதில் பதிய வைத்தது. இதனைப் போலவே குறவன் குறத்தி மற்றும் குதிரையும் நோனாவும் அகட விகட பாத்திரங்களாக பார்வையாளர்களை சிரிப்பு மழையில் ஆழ்த்தியது. ஒரு மனிதன் தன் கவலைகளை மறந்து சிரித்து களிப்புற காரணமாக அமைவது இவ்வாறான அகட விகட பாத்திரங்களே ஆகும். குறவன் குறத்தி இரண்டு ஜோடிகளாக வந்து காமன் பொட்டலை ஒரு கணம் ஆட்டம் பாட்டம் கொண்டாட்டம் நிறைந்த களமாக மாற்றியதாக இருந்தாலும் சிவனின் தபசை அளிக்க சென்றால் மன்மதன் இறந்து விடுவான் என்பதனை குறிச்சொல்லை செல்வதாக அமைந்தது இவ்வாறு ஒரு பாத்திரம் கூறி குறியீட்டு முறையாகவோ நேரடியாகவோ ஒவ்வொரு செய்தியை கையளித்து செல்வதாக அமைந்தது. காலனித்துவ ஆட்சி காலங்களில் துறைமார்கள் குதிரையில் வருவது வழக்கம். அவருடைய மனைவியை நோனா என்று கூறுவார்கள் இப்பத்திரங்களே கிழக்கில் காமண்டி கூத்தில் அமைகின்றது என்பதனை உணர்கின்றேன். இன்றும் நோனா என்று கூறும் வழக்கம் உண்டு. தாதியர்கள், கங்காணிமார்களது மனைவிமார், கூலி வேலை செய்யும் இடங்களில் உயர் நிலையில் இருக்கும் பெண்களை மலையக மக்கள் நோனா என்றே பெரும்பாலும் அழைக்கின்றனர். கிழக்கில் காமண்டியில் நோனா கையில் குலையுடன் செல்ல அதனைத் தொடர்ந்து குதிரையும் செல்கிறது. குதிரையில் வாள் எடுத்துக்கொண்டு நோனாவை குதிரை ஓட்டுபவர் துரத்துவதாகவும் அமைந்தது. இவ்வாறு சித்தரிக்கப்பட்ட குதிரையும் நோனாவும் என்ற பாத்திரம் பல்வேறான வழிகளில் சிந்திப்பதற்கு கூடியதாக இருந்தது. ஆறு வயதில் நான் ஹட்டன் மஸ்கெலியாவில் பார்த்த காமன் கூத்து ஆற்றுகையை நினைவுக்கூறுவதாகவும் அந்த நிகழ்த்துகைக்கும் கிழக்கில் காமண்டி கூத்துக்கும் இடையிலான வேறுபாடு என்பவற்றையும் ஒப்பிட்டு பார்க்க கூடியதாகவும் அமைந்தது. கடந்த பதினெட்டு வருடங்களில் கூத்து வடிவங்களில் எவ்வாறான மாற்றங்கள் ஏற்பட்டுள்ளது என்பதனை அறிய முடிகின்றது. இந்த வகையில் குதிரையும் நோனாவும் என்ற பாத்திரம் சிறுப்பராயத்தில் பார்த்த காமன் கூத்தில் இடம்பெறவில்லை. காமன் கூத்து மலையகத்தில் ஆண்களால் மட்டுமே ஆடப்படுகின்றது. பெண்களின் பாத்திரங்களையும் ஆண்கள் ஏற்று ஆடுவார்கள். கிழக்கில் காமண்டி கூத்தில் பெண்கள் பாத்திரங்களை பெண்கள் ஏற்று ஆடினார்கள். அதுபோல ஆண் பாத்திரங்களையும் மாணவிகள் ஏற்று ஆடியிருந்தார்கள். பிரம்மன், தக்கன், கோமாளி போன்ற இவ்வாறான பாத்திரங்களை பெண்களை ஏற்று ஆடியிருந்தார்கள். இது பெண்களுக்கு சமூகத்தில் முக்கியத்துவம் கொடுப்பதுடன் முன்னுரிமை கொடுப்பதனையும் எடுத்துக்காட்டுவதாக அமைந்துள்ளது. கிழக்கில் காமண்டி கூத்தியில் வீரபத்திரராக வந்த கதாபாத்திரத்தை செய்தவர் களுத்துறை பிரதேசத்தில் காமன் கூத்தில் ஆடும் கலைஞராவார் தீபந்தம் ஏந்தி உருவேறி ஆடினார். அவர் மட்டுமல்லாமல் காளி, ஏமதூதர்கள், மன்மதன், ரதி, மாரியம்மன் போன்ற பாத்திரங்களும் உருவேறியது போன்று சம்பாஷனை செய்து இருந்தார்கள். அது உண்மையில் உருவேறி ஆடுவதைப் போலவே இருந்தது. காளி அம்மன் பாத்திரங்கள் தப்பு மற்றும் உடுக்கு இசைக்கு உண்மையில் உருவேறி ஆடினார்கள் இது காமன் கூத்தை நடிப்பு சார்ந்து இல்லாமல் உணர்வு சார்ந்த வகையில் பார்க்கக் கூடியதாக அமைந்தது. இவ்வாறு காமன் கூத்தை பார்க்கும் வாய்ப்பு கிடைத்தது சிறந்ததோர் அனுபவமாக அமைந்தது. அதில் வரும் ஒவ்வொரு கதாபாத்திரமும் ஆடல், பாடல்கள் எல்லாம் மிகவும் சுவாரஸ்யமாக அமைந்தது. மலையகத்தில் இன்று பல இடங்களில் காமன் கூத்து வருடாந்தம் நிகழ்த்தப்படுவதும் இல்லை. இவ்வாறான சந்தர்ப்பங்களில் இதுபோன்ற ஆற்றுகை வடிவங்களினை நிகழ்த்துவது என்பது அடுத்த தலைமுறைக்கு இதனை கொண்டு செல்லக்கூடியதாக அமையும். புதிய தலைமுறையை சேர்ந்தவர்கள் இக்கலை வடிவத்தை சிறந்த முறையில் ஒருமித்து செயற்படுவதும், ஒருங்கிணைந்து நிகழ்த்துவதும், அடுத்த சந்ததியினருக்கு ஆர்வத்தை தூண்டுவதாகவும், கலை சார்ந்த பற்றும் ஏற்படும். கலை என்றும் அழவுக்குட்படுத்தக் கூடாது. ஆரம்ப காலத்தில் இருந்த கலை வடிவம் இன்று மாற்றங்கள் எதுவும் நிகழாமல் உள்ளது என்று கூற முடியாது. கால ஓட்டத்திற்கு ஏற்ப கலப்பு தன்மையும், இயங்கியல் அம்சங்களும் நிறைந்து இருக்கும். இருப்பினும் மாற்றங்கள் மூலம் கலை வடிவத்தை அழியவிடாது பாதுகாத்தல் வேண்டும். இது கிழக்கில் காமண்டி என்ற மலையக காமன் கூத்தினை பார்த்து விளங்கிக் கொண்டதுடன் சிறந்ததொரு அனுபவமாக பார்க்கின்றேன். கலைகளின் நிலைப்பு தன்மைக்கு ஒரு சிறந்த எடுத்துக்காட்டாக மலையகத்தில் செய்யக்கூடிய காமன் கூத்தினை மலையகத்தைச் சேர்ந்த மாணவர்கள் அனைவரும் ஒன்றிணைந்து கிழக்கில் காமண்டி என்ற பெயரில் சுவாமி விபலானந்த அழகியல் கற்கைகள் நிறுவனத்தில் மிகவும் அழகாக நிகழ்த்தியுள்ளனர். இது வரவேற்கத்தக்க ஒரு விடயமாகும். கிரிஜா மானுஶ்ரீ கிழக்கு பல்கலைக்கழகம் இலங்கை Global Tamil Newsமலையக மக்களின் அடையாளமான காமன் கூத்தும் கிழக்கில் காமண்டி...மனிதனின் ஆர்வம், எதிர்பார்ப்பு எத்தகையது என்பது உலகறிந்த விடயமே. விடுக்கப்பட்ட அழைப்பிற்கிணங்க கிழக்கில் காமண்டி எவ்வாறு இருக்கப்…
  3. இனப்படு*கொ*லை | முன்னணியின் மூடிமறைப்பு அரசியல் .
  4. காசாவிற்கான் விடிவு காலம் அண்மிப்பதாகவே தெரிகிறது. ஹமாசின் பயங்கவரவாதத் தாக்குதலைச் சாட்டாக வைத்து, அதற்குப் பதிலடி வழங்குகிறேன், பணையக் கைதிகளை மீட்கப்போகிறேன் என்கிற போர்வையில் இஸ்ரேல் நடத்திவரும் இனவழிப்பு சர்வதேசத்தில் கடுமையான எதிர்ப்பினைச் சந்தித்து வருகிறது. முற்றுகைக்குள்ளாக்கப்பட்டிருக்கும் மக்களுக்கு ஒரு நாளுக்குத் தேவையான உணவு மற்றும் அத்தியாவசிய பொருட்களின் அளவு 600 பாரவூர்திகள் என்று கணக்கிடப்பட்டிருக்கையில் வெறும் 80 பாரவூர்திகளையே இஸ்ரேலிய அரசு அனுமதித்து வருகிறது. அத்துடன் இவ்வாறு அனுப்பப்படும் பாரவூர்திகளை சட்டவிரோத யூதக் குடியேற்றக்காரர்களும் அவ்வபோது மறித்து வருகிறார்கள். ஆக, மிகவும் திட்டமிட்ட வகையில் பட்டிணிச்சாவொன்று இஸ்ரேலினால் அங்கு அரங்கேற்றப்பட்டு வருகிறது. நாள் ஒன்றிற்கு பத்திற்கும் மேலான பலஸ்த்தீனர்கள், குறிப்பாகக் குழந்தைகள் பட்டினியினால் கொல்லப்பட்டு வருகிறார்கள். இந்த அவலங்களே சர்வதேசத்தின் கண்களைத் திறந்திருக்கின்றன. இதன் ஒரு அங்கமே பலஸ்த்தீனத் தேசத்தினை அங்கீகரிப்பது எனும் முடிவு. இன்று பலஸ்த்தீனத்தில் நடக்கும் அழிவுகளுக்குச் சற்றும் குறைவில்லாத வகையில் அவலங்கள் 2009 இல் முள்ளிவாய்க்காலில் அரங்கேற்றப்பட்டன. சர்வதேச அங்கீகாரமோ அல்லது யுத்த நிறுத்தமோ இல்லாது எமது மக்கள் கொன்றொழிக்கப்பட்டார்கள். சர்வதேசத்திலிருந்து வந்த உதவிகளும், போர்நிறுத்தத்திற்கான கோரிக்கைகளும், நிவாரணப் பொருட்களும் இந்தியாவின் தலைமையில் தடுத்து நிறுத்தப்பட்டு லட்சக்கணக்கான தமிழ் மக்கள் கொல்லப்படுவது உறுதிசெய்யப்பட்டது. பலஸ்த்தீனத்திற்கான விடிவென்பது எமக்கான விடிவையும் தேடித்தரலாம். ஆகவே பலஸ்த்தீனத்திற்கான விடிவிற்காய் நாம் ஆதரவு கொடுப்பது எமக்கு நாமே உதவுவதாக அமையும் என்பது எனது எண்ணம்.
  5. என்னை நானே கிள்ளி பாக்கிறேன். ரொம்ப குளம்பி போயுள்ளார். 😇
  6. பிரபாகரன் மரணம் , காணாமல் போனோர். இந்த இரண்டிற்கும் என்ன சம்பந்தம் என்று புரியவில்லை. காணாமல் போனோர் பற்றி ஒரு தகவலும் இல்லை. அவர்களது உடல்கள் மட்டுமல்ல, அவர்களது உடுதுணிகள் கூட கண்டெடுக்கப் படவில்லை, எனவே அவர்களை உயிரோடிருப்போராகக் கருதித் தேட வேண்டியது அவசியம். பிரபாகரனின் உடல் இறந்த உடனேயே காண்பிக்கப் பட்டிருக்கிறது. இதை "பொடி டபுள்" என்று நம்பும் உரிமை யாருக்கும் இருக்கிறது. ஆனால், அதை வைத்து செல்வம் திரட்ட ஒரு குழு அலைவதை அப்படி நம்புவோர் மனதில் இருத்த வேண்டியது அவசியம்.
  7. தமிழ்நாட்டில் மட்டுமல்ல உலகின் பல பகுதிகளில் இதுதான் நடக்கின்றது.
  8. பள்ளிவாசலில் தொழுகையில் ஈடுபட்டுக்கொண்டிருந்தபோது புலிகள் முஸ்லிம்கள் போல் வந்து கொலைசெய்தனராம். புலிகள் ஏன் அப்படி வரவேண்டும்? ஏன் முஸ்லிம்களை கொல்ல வேண்டும்? புலிகளுக்கும் முஸ்லிம்களுக்கும் இடையில் என்ன பிரச்சனை? சிரியா முஸ்லிம்களுக்கும் சுதேச முஸ்லிம்களுக்கும் இடையிலேயே பிரச்சனை. அவர்களுடைய கொள்கைகளை பின்பற்றாதவர்கள் முஸ்லிம்களே இல்லை என்று பிரச்சாரம் செய்து, அந்த மக்களை வற்புறுத்தி, துன்புறுத்தியவர்கள் அவர்களே. 2020 அப்துல் பாஹிர்என்பவர் காணாமற் போய் விட்டார், புலிகள் அவரை கடத்தி விட்டார்கள் என்று வதந்தியை பரப்பி முறுகல் நிலையை ஏற்படுத்தினர். அவரை தேடி போலீசார் நடத்திய தேடுதலில் அவர் தனது வீட்டிலே சாவகாசமாக மறைந்து இருந்திருக்கிறார். இவர் ஈ பி டி யை சேர்ந்தவர். பொலிஸாரின் விசாரணையில், தான் வெளிநாடு செல்வதற்கு பணம் தேவைப்பட்டதாகவும் இந்த நாடகத்திற்கு சம்மதித்தால் பணம் தருவதாக கூறப்பட்டதாகவும் அதற்கு தான் சம்மதித்தே இந்த வேலையை செய்ததாகவும் கூறியிருக்கிறார். இதன் பின்னணியில் ஈ பி டி பி, முஸ்லீம் குழு, இராணுவ புலனாய்வு இருந்ததாக கூறப்படுகிறது. ஓட்ட மாவடியில் மணாளன் மகேசன் எனும் தமிழர் கொல்லப்பட்டு முஸ்லீம் பிரதேசத்தில் போடப்பட்டார், அதே நேரம் குசேன் உயிரற்ற உடல் வீசப்பட்டதற்கு கப்டன் ஹைஜி என்பவருக்கு சம்பந்தம் என்றும், நிந்தவூர் விடுதலைப்புலி உறுப்பினர் பூவண்ணன் வெட்டப்பட்டு முஸ்லீம் பிரதேசத்தில் ஈ பி டி பியால் போடப்பட்டதும் முஸ்லீம், தமிழர் கலவரத்தை ஏற்படுத்தும் முயற்சி வேண்டுமென்றே திணித்து புலிகளை வலிந்து இழுத்து முஸ்லிம்களை எதிரிகளாக்கினர். இதற்கு முஸ்லிம் ஊர்காவற் படை, ஈ பி டி பி, இராணுவ புலனாய்வுமே காரணம். நல்ல வேளையாக வடக்கிலிருந்து உயிரிழப்பில்லாமல் முஸ்லிம்கள் வெளியேற்றப்பட்டமையால் இந்த கலவரம் அங்கு தோன்ற வாய்ப்பிருக்கவில்லை. இல்லையேல் அங்கும் பல நாடகங்கள் அரங்கேறியிருக்கும். தமிழரின் காணிகளை பறித்து, முஸ்லீம் வியாபார தலங்களை அமைத்தேன், பேருந்து தரிப்பிடங்களை அமைத்தேன், எதிர்ப்பு தெரிவித்த நீதிபதியை எனது அதிகாரத்தை கொண்டு மாற்றினேன், கிழக்கு முஸ்லீம் மாகாணமாக மாற்ற வேண்டுமென்றால் ஒரு முஸ்லீம் முதலமைச்சராக வேண்டுமென்று ஹிஸ்புல்லா சவால் விட்டார். இப்போ கக்ஹீம் கூறுகிறார். அப்படியிருக்க முஸ்லிம்கள் நிலங்களை இழந்தனராம் நம்பக்கூடியதாகவா இருக்கிறது? வி. முரளிதரன் யாழ்ப்பாணத்தை சேர்ந்த தமிழர்கள் இருபத்திநான்கு மணித்தியாலங்களுக்குள் வெளியேற வேண்டுமென கட்டளை இட்டபோது, யாழ்ப்பாணத்தாரின் வியாபார நிலையங்களை முஸ்லிம்களே குறைந்த விலையில் பெற்றுக்கொண்டனர். தமிழரை விரட்டிவிட்டு அவர்களின் நிலங்களை அடாத்தாக பிடித்து குறைந்த விலையிலும் பயமுறுத்தியும் பிடித்துள்ளனர். இவர்களுடன் எந்தக்காலத்திலும் தமிழர் இணைந்து வாழ முடியாது. தமிழர் இவர்களை கழட்டி விட்டால், இவர்களை சிங்களம் கூட மதிக்காது.
  9. வேறு எதற்கு? ஒன்றில் வருவோரிடம் காசு சேர்த்து கும்மாளம் அடிப்பதற்கு! அல்லது ஏற்கனவே ஏமாற்றி சேர்த்த காசை கரியாக்குவதற்கு! வேறு என்ன உருப்படியாக செய்கிறார்கள் இவர்கள்!
  10. இஸ்ரேலியர்களை கிழக்குப் பகுதிக்கு பெருமளவில் அழைப்பதன் மூலம், நாட்டில் உள்ள சோனகருக்கும், இஸ்ரேலியர்களுக்கும் இடையில்... கலாச்சார பரிமாற்றத்தை செய்ய வேண்டும்.
  11. காணொளி ஆதாரங்களை ஏற்றுக்கொள்ள கூடிய ஆதாரங்களாக நீதிமன்றங்கள் கருதுவதில்லை, ஆதரவு ஆதாராமாக மட்டுமே எடுக்கப்படும் என கருதுகிறேன். தனது இறப்பின் பின்னர் தனது உடல் எதிரியிடம் கிடைத்தாலும் தனது மரணம் வெளிவரவேண்டும் என விரும்பிய ஒருவரின் கடைசி விருப்பிற்கெதிராக அவர் உயிருடன் இருக்கிறார் என பிரச்சாரம் செய்வது மிக தவறான செயலாகும்.
  12. செம்மணியில் ஸ்கான் written by admin August 4, 2025 செம்மணி பகுதியில் தற்போது அகழ்வுப் பணிகள் முன்னெடுக்கப்பட்டு வரும் இரண்டு மனித புதைகுழிகளுக்கு மேலதிகமாக அப்பகுதியில் வேறு மனித புதைகுழிகளும் காணப்படுகின்றனவா என்பதனை கண்டறியும் நோக்குடன் ஸ்கான் நடவடிக்கைகள் இன்றைய தினம் திங்கட்கிழமை முன்னெடுக்கப்பட்டது. ஜி.பி.ஆர். ஸ்கானர் (தரையை ஊடுருவும் ராடர்) மூலம், பரந்துபட்ட ஸ்கான் நடவடிக்கைகளை முன்னெடுக்க பாதுகாப்பு அமைச்சின் அனுமதிகள் கிடைக்கப்பெறவில்லை . அந்நிலையில், ஶ்ரீஜெயவர்வத்தன புர பல்கலைக்கழகத்தில் உள்ள ஸ்கானர் கருவியை யாழ் பல்கலைகழகம் ஊடாக பெற்று அதனை பயன்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டது. அந்நடவடிக்கையை அடுத்து , இன்றைய தினம் திங்கட்கிழமை குறித்த ஸ்கானரை பயன்படுத்தி ஆய்வு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டது. அதேவேளை செம்மணி மனித புதைகுழிகளில் இருந்து மீட்கப்பட்ட சான்று பொருட்களான ஆடைகள் மற்றும் பிற பொருட்களை பொதுமக்கள் அடையாளம் காட்டும் வகையில் நாளைய தினம் செவ்வாய்க்கிழமை செம்மணி சிந்துபாத்தி இந்து மயானத்தில் மதியம் 1.30 மணி முதல் , மாலை 5 மணி வரையில் காட்சிப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. சான்று பொருட்களை பார்வையிட காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளுக்கு முன்னுரிமை வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. Global Tamil Newsசெம்மணியில் ஸ்கான் - Global Tamil Newsசெம்மணி பகுதியில் தற்போது அகழ்வுப் பணிகள் முன்னெடுக்கப்பட்டு வரும் இரண்டு மனித புதைகுழிகளுக்கு மேலதிகமாக அப்பகுதியில் வேறு…
  13. முக்கடல் சங்கமம் ❤️❤️❤️ (இசை கவி நகை )❤️❤️❤️❤️❤️ · விஜயா கிருஷ்ணன் ·Srdtopoesnju031h0a13iu8t24l7:gmta271u2014lc 1ff,l2f3uiiea80 · 😁டாக்டருக்கும் ஆக்டருக்கும் உள்ள ஒற்றுமை என்ன? இரண்டு பேரும் தியேட்டருக்கு வரவழைச்சு தான் கொல்லுவாங்க! 😁" சிவகாசிக்கும் நெய்வேலிக்கும் என்ன வித்தியாசம்? சிவகாசில காச கரியாக்குவாங்க. நெய்வேலிலே கரிய காசாக்குவாங்க! 😁" FILE க்கும் PILE க்கும் என்ன வித்தியாசம்? FILES அ உட்கார்ந்து பார்க்கணும். PILES க்கு பார்த்து உட்காரணும். 😁" செல்போனுக்கும் மனிதனுக்கும் என்ன வித்தியாசம்? மனிதனுக்கு கால் இல்லேன்னா பேலனஸ் பண்ண முடியாது. செல் போன்ல பேலன்ஸ் இல்லேன்னா கால் பண்ண முடியாது. ஓவ்வொரு இளைஞனின் மன உளைச்சலுக்கும் காரணம்? மதிப்பெண்ணும் மதிக்காத பெண்ணும்! 😁" வசதி இல்லாதவன் ஆடு மேய்க்கிறான்! வசதி உள்ளவன் நாய் மேய்க்கிறான்! 😁" ஆண்களை அதிக தூரம் நடக்க வைக்கும் விஷயங்கள் ரெண்டு? ஒன்று பிகர், மற்றொன்று சுகர்! 😁" என்னதான் சென்டிமென்ட் பார்த்தாலும் கப்பல் கிளம்பும்போது பூசணிக்காய் எலுமிச்சம் பழம் வச்சு நசுக்கினாலும் சங்கு ஊதிட்டுதான் கிளம்பும். 😁" கணிப் பொறிக்கும் எலிப் பொறிக்கும் என்ன வித்தியாசம்??? கணிப் பொறியில் எலி வெளியே இருக்கும். எலிப் பொறியில் எலி உள்ளே இருக்கும்.. 🍅" *சிரித்து சிந்தியுங்கள் இல்லைன்னா சிந்தித்து சிரியுங்கள்* .🍅" மொத்தத்துல சிரிங்க 😂" இனிய மாலை வணக்கம் .......... !
  14. பொதுவாகவே, இயல்பாக அரசியலை அவதானிப்போர், கிரமமாக பத்திரிகை வாசிப்போர் என்று சாமான்ய மக்களே புலிகளின் தலைவர் பிரபாகரன் உயிருடன் இல்லை என்பதை புரிந்து கொண்ட நிலையில், தீர்க்க தரிசனமான ஒரு தலைமையின் கீழ் வளர்ந்தோம் என்று பெரிதாக பீற்றி கொள்பவர்கள் சிலருக்கு 2009 ல் நடந்த விடயம் 2025 ல் கூட புரியவில்லை என்பது நல்ல ஜோக் தான். தீர்க்க தரிசனம் என்றால் 15 -20 வருடங்களுக்கு பின் நடக்க இருப்பதை இப்போதே தமது நுண்ணறிவின் துணைகொண்டு அனுமானிப்பது. ஆனால், இங்கு தீர்கக தரிசன கோஷ்டிக்கு 16 வருடங்களுக்கு முன் நடந்ததை கூட புரிந்து கொள்ளும் ஆற்றல் இல்லை. இதற்குள் இவர்கள் தமிழ் மக்களுக்கு அரசியல் வழிகாட்ட போகிறார்களாம். சின்ன புள்ள தனமா இல்ல. 😂
  15. இந்திய அணி தொடரையே வென்றது போன்ற மகிழ்ச்சியுடன் மைதானத்தை விட்டு வெளியேறும் படத்தை பார்த்தேன். மிகவும் சிரமப்பட்டு உள்ளார்கள் போலும். என்னதான் ஐபில் ஆட்டத்தை மாத கணக்கில் விளையாடினாலும் இந்திய மண்ணிற்கு வெளியில் போட்டி என வந்தால் இவர்களிற்கு போராட்டம் தான். ஐபிஎல் இல் அதிக ஓட்டங்கள் குவித்த சாய் சுதர்சனால் சோபிக்க முடியவில்லை. இவர் இந்திய மண்ணில் ஐபிஎல் விளையாடவே தகுதியானவர் போலும்.
  16. உங்கள் பிரச்சினை என்னவென்று புரியவில்லை😂. ரஞ்சித் விளக்கமாக எழுதியிருக்கிறார், அதற்கு விருப்பக் குறி இட்டிருக்கிறீர்கள். ரஞ்சித் எழுதிய அதே விடயத்தை ஏனையோர் சுருக்கமாக எழுதியிருக்கிறார்கள். அவர்கள் சொல்வது புரட்டு என்று வாதிடுகிறீர்கள்! நான் நினைக்கிறேன், இன்னும் நீங்கள் பிரபாகரன் உயிருடன் இருக்க வேண்டுமென்ற விருப்பத்தில், வெளியே இருந்து வரும் உங்கள் விருப்பத்திற்கு மாறான தரவுகளை உதாசீனம் செய்து விட்டு ஒரு குமிழிக்குள் அமர்ந்திருக்கிறீர்கள்.
  17. இந்த விசாரணை தேவை என்பதைவிட ...தமது அரசியல் இருப்பு பாதுகாக்கக்ப் படவேண்டும் என்ற முசுலிம் அரசியல்வாதிகளின் தூண்டலே தற்சமயம் உடனடியாக ...இந்த விசாரணைத் தூண்டல் ...இதனை செய்து குழப்பியடிப்பதன் மூலம் அரசுடன் அண்டுவதே இவர்களின் நோக்கம் ...இதற்கு இம்மக்கள் பகடைக்காய்கள்...சிலவேளைதமிழருக்கான ஏதோ தீர்ப்புவந்தால் ..அதை வைத்தே இவர்கள் வாதிடமுடியும்...ஆனால் அவர்கள் விசாரணை கேட்பது .. நீங்கள் குறிப்பிட்ட அரசியல்வாதிகளின் சுயநலம் கருதி என்பது என்னுடைய கருத்து
  18. முற்றான இனவழிப்பிற்குள்ளாக்கப்பட்டு, தமக்கான நீதிகோரி, கைகளில் இறந்த தமது உறவுகளின் உருவப்படங்களை ஏந்தி கண்ணீருடன் வீதிகளில் அலைந்து திரியும் ஒரு இனம், மற்றையவர்ளைக் கடத்திச் சென்று கொன்றுதள்ளும் கொடூரமான மனோநிலையினைக் கொண்டவர்கள் என்று எவ்வாறு இந்தியர்களால் படமாக்க முடிகிறது? இதனை தமிழர்களே ஆகா ஓகோ என்று கொண்டாடி மகிழ்வது எப்படி? இக்குப்பைக்கும், பமிலி மேன்‍-2, மட்ராஸ் கபே ஆகிய அபத்தங்களுக்கும் இடையே என்ன வித்தியாசம் இருக்கிறது? தயவுசெய்து இக்குப்பைகளைக் கொண்டாடுவதைத் தவிருங்கள்.
  19. மாவீரர் நாளினை அனுஷ்ட்டிப்பதை அரசு நேரடியாக ஏற்றுக்கொள்ளாவிட்டாலும், போரில் கொல்லப்பட்டவர்களை உறவினர்கள் நினைவுகூர்வதைத் தாம் தடுக்கப்போவதில்லை என்றே கூறுகிறது. போரில் கொல்லப்பட்டவர்கள் என்று கூறும்போது பொதுமக்கள், போராளிகள் என்று அனைவரும் உள்ளடக்கப்படுவார்கள் என்பதை அரசு தெரிந்தே வைத்திருக்கிறது. தலைவரின் மறைவு குறித்த தெளிவான, தீர்க்கமான வெளிப்படுத்தலினை சிங்கள அரசைத் தவிர வேறு எவருமே இதுவரை செய்யத் தவறியிருக்கும் நிலையில் அவருக்கான அஞ்சலியினைச் செலுத்துவது குறித்த தயக்கம் தமிழ் மக்களிடையே இருந்து வருகிறது. இது அவர் இன்னும் உயிருடன் இருக்கிறார் என்று நம்பும் அல்லது அவ்வாறு எண்ண விரும்பும் ஒரு தரப்பினரிடையே இருந்துவரும் அழுத்தங்களினால் ஏனைய தரப்புக்கள் இதுகுறித்து எதுவும் பேசாது மெளனமாகக் கடந்து செல்வது நடக்கிறதாகவே நான் எண்ணுகிறேன். தாயகத்தில் தலைவரின் உருவப்படம் வைப்பதற்கு இருக்கும் அரச எதிர்ப்பு என்பது சாதாரண போராளி ஒருவரின் மறைவினை நினைவுபடுத்த வைக்கப்படும் ஒளிப்படத்திற்கு நிகரானது என்பதனை என்னால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. தலைவரின் திருவுருவப் படத்தினை தாயகத்தில் எவர் வைத்து வணக்கம் செலுத்தினாலும் நிச்சயமாக அரசு அவர்மீது தனது கவனத்தைத் திருப்பும். தலைவர் வாழ்ந்த வீட்டினை முற்றாக இடித்தழித்து, அவரது வாழ்வுகுறித்த சிறிய அடையாளங்கள் கூட தாயகத்தில் இருக்கக் கூடாது என்பதில் கண்ணும் கருத்துமாக இருக்கும் அரசு, அவரது திருவுருவப் படத்தினை வெளிப்படையாகவே வைத்து கெள‌ரவிக்க அனுமதியளிக்கப்போவதில்லை என்பது திண்ணம். ஆகவேதான் தாயகத்தில் இதுகுறித்த முயற்சிகள் எடுக்கப்படுவதில்லை என்று நான் நினைக்கிறேன். ஆனால் புலத்திலோ அவ்வாறான அரச அழுத்தங்கள் இல்லாதபோதிலும், நான் மேலே கூறிய அவர் இருக்கிறார் என்று நம்பும், நம்ப ஆசைப்படும் ஒரு தரப்பினரிடமிருந்து வரும் எதிர்ப்பும், அவரது மறைவினை வெளிப்படுத்துவதினால் தனிப்பட்ட நலன்கள் பாதிக்கப்படும் என்று அச்சப்படும் ஒரு குழுவினரும் இதனை வெளிப்படையாக அனுஷ்ட்டிப்பதை எதிர்க்கிறார்கள். தனிப்பட்ட ரீதியில் தலைவருக்கான அஞ்சலியினை ஒவ்வொரு தமிழரும் தமது மனதில் செய்தாலே போதுமானது என்று நான் எண்ணுகிறேன். அவர் எப்போதும் எமது மனங்களில் வாழ்ந்துகொண்டிருப்பார். அவரை நினைவுகூர நாம் நாள்ப்பார்ரபதைத் தவிர்த்து முன்னோக்கிச் செல்வதே அவருக்குச் செய்யும் உயர்ந்த கெளரவிப்பாக இருக்கும்.
  20. வாகனங்களை வாங்கி பூசை செய்ய வருவோரை, பூசைக்கு முதல் விசாரணை செய்து பொலிஸாரின் சான்றிதழோடு வாருங்கள் என்று திருப்பி அனுப்பப்போகிறார் பூசாரி.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.