Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Leaderboard

  1. தமிழ் சிறி

    கருத்துக்கள உறவுகள்
    11
    Points
    87986
    Posts
  2. Kavi arunasalam

    கருத்துக்கள உறவுகள்
    6
    Points
    2948
    Posts
  3. யாயினி

    கருத்துக்கள உறவுகள்
    6
    Points
    10206
    Posts
  4. கிருபன்

    கருத்துக்கள உறவுகள்
    3
    Points
    38749
    Posts

Popular Content

Showing content with the highest reputation on 09/07/25 in all areas

  1. இந்த படம் அதிகளவில் பேசப்படுவது போல் உள்ளதே. பாலா சிவ கார்த்திகேயன் போல் வளர்வாரா?
  2. தேங்காய்க்கு Coconutனு ஆங்கிலத்தில் பேருன்னு எல்லாருக்கும் தெரியும். அது ஏன்னு தெரியுமா? o 0 o Coco என்றால் ஸ்பானிஷ், போர்த்துகீசிய மொழிகளில் தலை, மண்டை என்று பொருள். தேங்காயைப் பார்த்தால் மூன்று புள்ளிகளுடன் ஒரு முகத்தைப்போலத் தோன்றியதால், போர்த்துக்கீசிய நாட்டுப்புற இலக்கியங்களில் வரும் பேயையும் குறிக்கும் கோகோ என்ற சொல்லால் கோகோ நட் எனப் பெயர் வைத்தார்கள். அதுதான் coconut ஆனது. உலகில் இரண்டு வகை தேங்காய்கள் உள்ளன. ஒன்று இந்தியப் பெருங்கடலை ஒட்டிய நிலப்பகுதியில் உருவான தேங்காய். மற்றொன்று பசிபிக் கடலை ஒட்டிய நிலப்பகுதியைச் சேர்ந்த தேங்காய். எந்தெந்த நாடுகளில் தென்னை மரங்கள் உள்ளன என்பது உங்களுக்கே தெரிந்திருக்கும். (தெரியாவிட்டால் கூகுளில் பார்க்கவும்.) இந்தியப் பெருங்கடல் பகுதியிலிருந்துதான் உலகின இதர பகுதிகளுக்கு தேங்காய் பரவியது என்று ஒரு கருத்து நிலவியது. கடல் நீரோட்டத்தின் மூலமும், பயணிகள் மூலமும் பல நாடுகளுக்கும் பரவியது உண்மைதான். ஆனால் இந்திய-பசிபிக் கடலோரத் தேங்காய்களின் டிஎன்ஏவைப் பரிசோதித்தபோது, இரண்டும் வேறு வேறு எனத் தெரிய வந்துள்ளதாம். (இரண்டுக்கும் மத்தியில் உள்ள மடகாஸ்கரில் இரண்டின் கலவையும் உண்டாம்!) ஆக, ஒரே சமயத்தில் உலகில் பல பகுதிகளிலும் உருவாகி வளர்ந்தது தென்னை. தென்னையின் பயன் யாருக்கும் தெரியாதது அல்ல. தென்னையிளங் கீற்றினிலே தாலாட்டும் தென்றலது என்று டிஎம்எஸ் பாடியது முதல், கேஸ்ட் அவே திரைப்படத்தில் தனிமையில் வாடும் நாயகனின் தாகம் தீர்ப்பது வரை தென்னையின் பயன் பரந்துபட்டது. 🙂 Shahjahan R
  3. துணையோடு போனதால் 20 யூரோ போச்சு. ஆனால் எழுதுவதற்கு ஒன்று கிடைத்தது.
  4. அஜீவன், தென்னிந்தியத் திரைப்படத்துறையில் இருந்தவர். மறைந்த நடிகர் முரளியின் நண்பன். யாழ் இணையத்தில்தான் அவருடனான தொடர்பு எனக்கு ஏற்பட்டது. சஞ்சீவ்காந்துடன் (இளைஞன்) என்னையும் என் மனைவியையும் சந்திப்பதற்காக ஒருதடவை யேர்மனிக்கு வந்திருந்தார். பழகுவதற்கு இனியவர். குறும்படங்கள் வெளிவரத் தொடங்கிய நேரம். ஐரோப்பாவில், ஜேர்மனி, பிரான்ஸ், சுவிஸ், லண்டன் போன்ற நாடுகளில் எம்மவர்கள் குறும்படங்களைத் தயாரித்து வெளியிட்டுக் கொண்டிருந்தார்கள். அந்தத் தயாரிப்புகளில் அஜீவனின் குறும்படங்கள் தனித்துவமானவை. அவை புலம்பெயர் வாழ்க்கையை அழகாக வடிவமைத்ததும், திரைப்படக் கலைஞராக அவரது திறமையை வெளிப்படுத்தியதும் உண்மை. அஜீவனின் திறமையும், திரைத்துறையில் அவர் பெற்ற அனுபவங்களும், அவர் எளிதில் ஈழத்துக்கான சினிமாவில் ஒரு உயர்ந்த நிலையை அடையக் கூடியவையாக இருந்தன. ஆனால், அதற்காக அஜீவன் மிகுந்த முயற்சி எடுக்கவில்லை. அவரின் அரசியல் தொடர்புகள், தனிமை, பொருளாதாரச் சிக்கல்கள், ஊக்கம் தராத நண்பர்கள் போன்றவை அதற்கான காரணங்களாக இருந்திருக்க வேண்டும். ஒரு திறமையான கலைஞனை இழந்திருக்கின்றோம். வாழும் போதெல்லாம் அவரின் திறமையை ப் பெரிதும் பாராட்டாமலும், மதிக்காமலும் இருந்துள்ளோம். அது தான் ஒரு கலைஞரின் வாழ்க்கையில் அவமானமாக இருக்கக்கூடிய ஒரு நிலை. அஜீவனின் எச்சில் போர்வை குறும்படத்துக்கு நான் எழுதிய விமர்சனம் (யாழ் இணையம் 27.09.2003) சப்பாத்தை அநாயசமாகக் கழட்டிவிட்டு சோர்வுடன் நடக்கும் கால்களுடன் வீட்டுக்குள் கமரா நுளைகிறது, கூடவே நாங்களும் நுளைவது போன்ற பிரமை. ஜக்கற்றை கழட்டி கட்டிலில் போடுவது, கடித உறையைக் கிழித்து கிழித்த துண்டைக் கீழே போடுவது போன்ற சிறு சிறு விசயங்களில் கூட நிறைய கவனம் செலுத்தப்பட்டிருப்பதை அவதானிக்கக் கூடியதாக இருக்கிறது. ஒரு வார்த்தை பேச வேண்டிய அவசியமே நாயகனுக்கில்லை. கமராவும் ஒளியமைப்பும் அவனுக்காகப் பேசுகின்றன. கதையை நகர்த்த பின்னணியில் குரல்கள் பேசுகின்றன. லுயிஸை சுவிசிற்கு அனுப்பிவிட்டு, ஒரு கடிதம் மூலமும், தொலைபேசி அழைப்பின் மூலமும் பெற்றோர்களின் எதிர்பார்ப்பை சுருக்கமாகச் சொல்லியிருக்கிறார் இதை ஆக்கியவன். ஒரு இலட்சம் அனுப்பு என்ற கடித வாசகத்தைப் பார்த்து (கேட்டு) லுயிஸ் பெருமூச்சு விடுவதும், இன்னும் இரண்டு கிழமைக்குள் பணம் அனுப்பு என்று சொல்லி துண்டிக்கப்படும் தொலைபேசியின் பின்னணிச் சத்தமும், இருளையே பார்த்து நிற்கும் லுயிஸின் இலயாமையும் நன்றாகச் சொல்லப்பட்டிருக்கின்றன. அதேபோல் லுயிஸிற்கு தொலைபேசி வந்திருப்பதாகச் சொல்ல வருபவரைக் காட்டாது அவரின் நிழலை லுயிஸின் முதுகில் காட்டி மறையவிடுவது தேர்ந்த கலைஞனின் ஒளியமைப்பினூடான கமராப் பார்வை. கலாச்சாரம், சினிமா என்ற வெட்டிப் பேச்சுக்களின் பின்னணியில் லுயிஸ் லிப்றில் 10வது மாடிக்குப் போவதும், பின்னணியில் நண்பனின் அறிவுரை ஒலிக்க மீண்டும் லிப்றில் கீழே பயணிப்பதும் நல்ல சேர்க்கை. யாழ்ப்பாண நிலமைகள், தங்கையின் கடிதம், தொலைபேசியில் ஒலிக்கும் தந்தையின் குரல், வெட்டிப்பேச்சு பேசும் குரல்கள் எல்லாம் மாறிமாறி ஒலிக்கும்போது, லுயிஸ் தனது வலது கைப் பெருவிரலை அசைப்பது சொல்ல வேண்டியதைச் சொல்லி நிற்கின்றது. முற்பகுதியில் இயற்கையான ஒலியுடனும் பிற்பகுதியில் வாத்திய இசையுடனும் பின்னணி சேர்த்திருப்பது அருமை. கதையின் நாயகனை விட்டு நாங்கள் அகலாத வண்ணம் எங்களை வைத்திருப்பதற்காக வேறு பாத்திரங்களை காட்டாதது உங்கள் எண்ணமானால், அறிவுரை தரும் நண்பனின் காலைக் காட்டுவதையும் தவிர்த்திருக்கலாமே. புலம்பெயர் தமிழ் இளைஞனே உன் தோளில் இத்தனை சுமைகளா? அழகாகச் சொல்லியிருக்கிறார் ஆக்கியவன் அஜீவன்.
  5. நான் ஏறக்குறைய 20 வருசமா Yarl வாசகாராக இருந்து இன்று இணைத்துள்ளேன்.
  6. "மூன்று கவிதைகள் / 07" 'வண்டியில மாமன் பொண்ணு' வண்டியில மாமன் பொண்ணு வாரார் கெறங்குறேன்டி ஒன்னழகில் நான் இன்று? பட்டுச்சரிகை என் கண்ணைக் குத்துது பருவ எழில் உடலை வாட்டுது பக்கத்தில் வந்தால் குறைந்தா போகும் ? கவலகொண்ட நெஞ்சம் கொஞ்சம் இங்கே கண்மணியே எந்தனுக்கு ஆறுதல் தாராயோ? கால்கள் என்ன இளவாழைத் தண்டுகளா? காத்திருக்க முடியலையே இறங்கி வாராயோ? காலம் போகிறதே கழுத்திலே தாலியேறாதோ? [கந்தையா தில்லைவிநாயகலிங்கம், அத்தியடி, யாழ்ப்பாணம்] .............................................. 'விளக்கேற்றி வைக்கிறேன் விடியவிடிய எரியட்டும்' விளக்கேற்றி வைக்கிறேன் விடியவிடிய எரியட்டும் களங்கமற்ற காதல் தடையின்றி மலரட்டும் இளநெஞ்சம் இரண்டும் மெதுவாகச் சேரட்டும் வளர்பிறையாக அன்பு நாள்தோறும் வளரட்டும்! சாளரம் திறக்கிறேன் விடியவிடிய வீசட்டும் அளவான புன்முறுவல் பாசத்தைக் கொட்டட்டும் ஈடில்லா உன்னழகு ஆசையைத் தூண்டட்டும் முடிவில்லா எம்முறவு நிரந்தரம் ஆகட்டும்!! [கந்தையா தில்லைவிநாயகலிங்கம், அத்தியடி, யாழ்ப்பாணம்] ............................................................... 'சீவி முடித்து சிங்காரித்து' சீவி முடித்து சிங்காரித்து கண்ணே, சிவந்த நெற்றியிலே பொட்டும் இட்டு, சீக்கிரம் வாராயோ என்னைக் கொஞ்சயோ! சித்திரம் சொல்லாத வனிதை நீயே, சீதை காணாத காதல் தருவேன்! கூவி அழைக்குது சிட்டுக் குருவி, தாவிப் போகுது அன்ன நடையில், தேவி அங்கே சுந்தரியைக் காண்கிறேன்! ஆவி பொருள் உடல் அனைத்தும், தூவி உன்னை மடியில் தாலாட்டுவேன்!! கந்தையா தில்லைவிநாயகலிங்கம், அத்தியடி, யாழ்ப்பாணம் "மூன்று கவிதைகள் / 07" https://www.facebook.com/groups/978753388866632/posts/31203921829256390/?
  7. நல் வரவாகுக . தொடர்ந்து இணைந்து இருங்கள்.
  8. விமர்சனம் : காந்தி கண்ணாடி 6 Sep 2025, 12:51 PM ஹீரோவாக ஜெயித்தாரா கேபிஒய் பாலா? டைட்டிலை பார்த்தவுடனேயே ‘இதென்ன இப்படியிருக்கு’ என்றே பெரும்பாலும் எண்ணத் தோன்றும். கூடவே, இந்த டைட்டிலை வைத்துக்கொண்டு கதையில் என்ன சொல்லிவிட முடியும் என்ற எண்ணமும் எழும். ஆனால், அந்தக் கேள்விக்குப் பதிலளிப்பதையே தங்களது பலமாக எண்ணிக் களமிறங்கியிருக்கிறது ‘காந்தி கண்ணாடி’ படக்குழு. ரணம் பட இயக்குனர் ஷெரீஃப் இயக்கியுள்ள இப்படத்தில் ‘கலக்கப் போவது யாரு’ பாலா நாயகனாக நடித்திருக்கிறார். ‘ஃபால்’, ‘நவம்பர் ஸ்டோரி’ ‘ட்ரிபிள்ஸ்’ வெப்சீரிஸ்களில் நடித்த நமீதா கிருஷ்ணமூர்த்தி இதில் நாயகி. இவர்களோடு பாலாஜி சக்திவேல் – அர்ச்சனா இருவரும் ஜோடியாக இதில் தோன்றியிருக்கின்றனர். விவேக் – மெர்வின் இணை இப்படத்திற்கு இசையமைத்திருக்கிறது. சரி, ‘காந்தி கண்ணாடி’ தியேட்டரில் உட்கார்ந்து பார்க்கும் அளவுக்கு உள்ளதா? ‘நெகிழ்ச்சி’ தருணங்கள்! ஒரு ‘ஈவெண்ட் மேனேஜ்மெண்ட்’ நிறுவனமொன்றை நடத்தி வருகிறார் கதிர் (கேபிஒய் பாலா). அவரது காதலி கீதா (நமீதா கிருஷ்ணமூர்த்தி) அதனை நிர்வகித்து வருகிறார். நண்பர்கள் சிலர் (மதன், ஜீவா சுப்பிரமணியன்) அந்த நிறுவனத்தில் பணியாற்றி வருகின்றனர். பணம் மட்டுமே பிரதானம் என்றிருக்கும் கதிர், தங்களது பணியாளர் வராவிட்டால் அந்த வேலையைத் தானே செய்யக் கூடியவர். அதற்கான சம்பளத்தை எடுத்துக்கொள்ளக் கூடியவர். அப்படிப்பட்டவர் ‘அறுபதாம் கல்யாணம் செய்ய வேண்டும்’ என்று தன்னைத் தேடி வரும் காந்தியைக் (பாலாஜி சக்திவேல்) காண்கிறார். மனைவி கண்ணம்மாவின் (அர்ச்சனா) ஏக்கம் அது என்பதை உணர்ந்து, அதனைச் செயல்படுத்தத் துணிகிறார். தனது சம்பளம், சேமிப்பு ஆகியவற்றைத் தாண்டி ஒரு பெரிய தொகையில் அந்த நிகழ்வை நடத்த ஆசைப்படுகிறார். காந்தி ஒரு பெரிய ஜமீன் குடும்பத்தைச் சேர்ந்தவர். கோயம்புத்தூர் வட்டாரத்தில் வாழ்ந்து வரும் அவர் சிறு வயதில் நடனமாடும் கண்ணம்மாவை விரும்புகிறார். இரு வேறு சமூகத்தைச் சேர்ந்தவர்கள் திருமணம் செய்துகொண்டு இனிமையாக வாழ முடியாது என்பதை உணர்ந்து, இருவரும் சென்னைக்கு வந்துவிடுகின்றனர். அப்போது முதல் கண்ணம்மாவின் வார்த்தைகள் எதையும் காந்தி மீறியதில்லை. முதல்முறையாக, அவரது வார்த்தையை மீறித் தனது ஜமீன் குடும்பத்து சொத்துக்களை விற்றாவது இந்த அறுபதாம் கல்யாணத்தை நடத்திவிட வேண்டுமென்று நினைக்கிறார். அதற்கேற்ப, அவர் கைவசம் கிட்டத்தட்ட 1 கோடி ரூபாய் வரை கிடைக்கிறது. அதனைக் கொண்டு எளிதாகத் தனது கண்ணம்மாவின் ஆசையைத் தீர்க்கலாம் என்று நினைக்கிறார் காந்தி. அந்த நேரத்தில், பண மதிப்பிழப்பு நடவடிக்கையை அறிவிக்கிறது மத்திய அரசு. அதன்பிறகு தனது கையில் இருக்கும் லட்சக்கணக்கான பணத்தை எப்படி மாற்றுவது என்று தெரியாமல் தவிக்கிறார் காந்தி. அவரிடம் வாங்கிய பணத்தைக் கொண்டு எதுவும் செய்ய முடியாது என்று கதிரும் கைவிரிக்கிறார். அதன்பிறகு என்ன ஆனது? காந்திக்கு கதிர் உதவிகள் செய்தாரா என்று பதிலளிக்கிறது இப்படத்தின் மீதி. ஆசிரமம் ஒன்றை நடத்தி வரும் கதிர், அங்கிருந்த காந்தி காணாமல் போனதை அறிந்ததும் துணுக்குறுவதில் இருந்து திரைக்கதை தொடங்குகிறது. அதுவே ‘பிளாஷ்பேக்’குகள் நிறைந்த இப்படத்தைச் சலிப்பில்லாமல் பார்க்க வைக்கிறது. அது மட்டுமல்லாமல், இந்தக் கதையில் சாதாரண ரசிகர்கள் நெகிழ்ச்சியுறும்விதமாகச் சில தருணங்கள் உள்ளன. பண மதிப்பிழப்பு காலகட்டத்தில் வங்கி வாசலில் மக்கள் காத்துக் கிடப்பது போன்றவை அப்படிப்பட்டவை. கூடவே, ‘அதான் நீ இருக்கியே’, ‘தயிர்சாதம் சூப்பர்’ என்று பாலாஜி சக்திவேல் பேசுகிற வசனங்கள் தொடக்கத்தில் செயற்கைத்தனமாகவும், பிறகு நம்மை நெகிழவைக்கும் விதமாகவும் உள்ளன. ‘பொண்டாட்டி செஞ்சதை சாப்பிட்டு, அது நல்லாயிருக்குன்னு சொல்ல முடியலைன்னா, நீங்கள்லாம் என்ன …க்கு கல்யாணம் பண்றீங்க’ என்று அவர் வசனம் பேசுகிற இடத்தில் தியேட்டரே ஆர்ப்பரிக்கிறது. அந்த வகையில் முதல் பாதி இளைய தலைமுறைக்கானதாகவும் இரண்டாம் பாதி வயதானவர்களுக்காகவும் அமைந்திருப்பதே இப்படத்தின் சிறப்பு. திருப்தி கிடைத்ததா? இடைவேளை வரை ஆங்காங்கே கிச்சுகிச்சு மூட்டியவாறு நகர்கிறது திரைக்கதை. அதன்பிறகு அதில் நிறையவே தொய்வு ஏற்படுகிறது. ஒருகட்டத்தில் ‘இவ்ளோ கஷ்டப்பட்டு குறிப்பிட்ட தேதிக்குள்ள இந்த அறுபதாம் கல்யாணத்தை நடத்தனுமா’ என்று எண்ணும் அளவுக்குக் காட்சிகள் ‘சோக கீதம்’ வாசிக்கின்றன. ’முனுக்கென்றால் கோபம் வந்துவிடும்’ என்பது போலச் சட்டென்று கண்ணீரை உதிர்க்கக்கூடியவர்கள் தேம்பி அழும் அளவுக்கு இப்படத்தின் கிளைமேக்ஸ் காட்சிகள் இருக்கின்றன. அக்காட்சிகளில் தெரிகிறது இயக்குனர் ஷெரீஃபின் வித்தை. இப்படத்தில் திருவிழா காட்சிகள் ஆங்காங்கே வருகின்றன. அவற்றில் மட்டும் கொஞ்சம் பிரமாண்டம் தெரிகிறது. மற்றபடி இது சுமார் பட்ஜெட்டில் தயாரிக்கப்பட்டுள்ளது தெளிவாகத் தெரிகிறது. முடிந்தவரை அந்த எண்ணம் வராத அளவுக்குக் காட்சியாக்கத்தைச் சிறப்பாக மேற்கொண்டிருக்கிறது ஒளிப்பதிவாளர் பாலாஜி கே ராஜா, படத்தொகுப்பாளர் சிவாநந்தீஸ்வரன், தயாரிப்பு வடிவமைப்பாளர் மணிமொழியான் ராமதுரை கூட்டணி. ஒப்பனை, ஒலி வடிவமைப்பு, டிஐ போன்ற அம்சங்கள் காட்சிகளைச் செறிவாக்கும் விதத்தில் அமைந்திருக்கின்றன. திரையில் கமர்ஷியல் சினிமாவுக்கான ‘ஜிகினாத்தனம்’ தென்பட்டுவிடக் கூடாது என்று மெனக்கெட்டிருப்பது அருமை. அந்த வகையில் காட்சியாக்கத்தில் யதார்த்தம் நிறைந்திருக்கிறது. அதனைத் தாண்டி, திரையில் தெரியும் பிம்பங்களின் வழியே வெளிப்படும் உணர்வுகளை நமக்குள் கடத்த தூண்டுகோலாய் இருக்கிறது விவேக் – மெர்வினின் பின்னணி இசை. ‘திமிருக்காரி’ பாடல் ‘காந்தி கண்ணாடி’யின் அடையாளமாக உள்ளது. இது போக ‘புல்லட் வண்டி’, ‘ஹிந்தி நஹி மாலும்’ பாடல்களும் கேட்டவுடன் பிடிக்கும்விதமாக உள்ளன. அனைத்தையும் தாண்டி கிளைமேக்ஸ் பகுதியில் யுவன் சங்கர் ராஜா குரலில் ஒலிக்கிற ‘மெலடி மெட்டு’ நம் மனதைப் பிசையும்விதமாக உள்ளது. அதுவரை இப்படத்துடன் ஒன்றாதவர்கள் கூட, அந்த இடத்தில் இக்கதையோடு தம்மைப் பிணைத்துக் கொள்வார்கள் என்பதே நிஜம். ‘காந்தி கண்ணாடி’ கதையில் முதன்மையாக வரும் நான்கு பாத்திரங்களின் பின்னணி ‘விலாவாரியாக’ விளக்கப்படவில்லை. போலவே, இதர பாத்திரங்களும் காட்சிகளில் வருகின்றன, போகின்றன. அவற்றின் பின்னணியைக் கொஞ்சம் விளக்கியிருந்தால் இன்னும் முழுமையானதாகத் திரையனுபவம் மாறியிருக்கும். ஆனால், அந்த குறையை மறக்கடிக்கும்விதமாக இதில் நடிகர்களின் ‘பெர்பார்மன்ஸ்’ உள்ளது. அந்த வகையில் நாயகன் நாயகியை விட நம்மை வசீகரிப்பது பாலாஜி சக்திவேல் – அர்ச்சனா ஜோடி தான். அவர்களைப் புகழ்வது கடல் நீரில் பெருமழை பெய்வதைப் போலானது என்பதால் அடுத்திருப்பவர்களை உற்றுநோக்கலாம். பாலாவுக்கு இது நாயகனாக முதல் படம். அதனை உணர்ந்து சிரத்தை காண்பித்திருக்கிறார். தனது உடல் திரையில் கம்பீரமாகத் தெரிய மெனக்கெட்டிருப்பவர், முக பாவனைகளுக்கும் கொஞ்சம் முக்கியத்துவம் தந்திருக்கலாம். அது மட்டுமல்லாமல், முதல் பாதியில் அவர் கருமியாகவும் சுயநலமானவராகவும் இருப்பது தெளிவாகச் சித்தரிக்கப்படாதது ஒரு குறையே. மற்றபடி, தன்னைக் கொண்டாடுகிற ரசிகர்களை தியேட்டருக்கு வரவழைக்கும் அளவுக்கு இப்படத்தைத் தந்திருக்கிறார். அதிகமாக ‘காமெடி கவுண்டர்கள்’ அடிக்காமல் அடக்கி வாசித்திருக்கிறார். நாயகி நமீதா கிருஷ்ணமூர்த்தி அழகாக இருக்கிறார். தனக்கு ‘ஸ்கோப்’ இருக்கிற இடங்களில் அழகாக நடித்திருக்கிறார். ஆனாலும், அது போதுமானதாக இல்லை. ஒருவேளை நாயகன் நாயகி இருவருக்குமே அதிகளவில் ‘குளோஸ் அப்’ ஷாட்கள் வைக்காதது இயக்குனரின் குறையா என்றும் தெரியவில்லை. இவர்கள் தவிர்த்து ஜீவா சுப்பிரமணியன், மதன் மற்றும் பண மோசடிக் கும்பலைச் சேர்ந்தவர்களாக நடித்தவர்கள் என்று சிலர் வந்து போயிருக்கின்றனர். அமுதவாணன், நிகிலா சங்கர் ஜோடிக்குத் திரைக்கதையில் உரிய இடம் தரப்படவில்லை. பிளாஷ்பேக் காட்சிகளில் வரும் மனோஜ் பிரபு – ஆராத்யா ஜோடி சட்டென்று மனதில் பதிகிறது. அதே நேரத்தில், அவர்கள் ஊரை விட்டு வெளியேறுவதற்கான காரண காரியங்கள் இன்னும் தெளிவாகத் திரையில் சொல்லப்பட்டிருக்கலாம் என்றெண்ணுவதையும் தவிர்க்க முடியவில்லை. இந்த படத்தின் முடிவு சில ரசிகர்களுக்குத் திருப்தியைத் தராமல் போகலாம்; இவ்வளவு சோக முடிவு தேவையா என்ற கேள்வியை எழுப்பலாம். ‘இயக்குனர் என்ன சொல்ல வருகிறார்’ என்றும் தோன்றலாம். அனைத்தையும் தாண்டி சில மனிதர்கள், அவர்களது வாழ்வில் நிகழ்ந்த சில சம்பவங்கள் என்ற வகையில் நமக்கு இன்னொரு உலகத்தைக் காட்டுகிறது ‘காந்தி கண்ணாடி’. பெரிதாக எதிர்பார்ப்புகள் இல்லாமல் தியேட்டருக்குள் நுழைந்தால் இப்படம் ஓரளவுக்கு ஆச்சர்யத்தையும் நெகிழ்ச்சியையும் தரக்கூடும். https://minnambalam.com/gandhi-kannadi-movie-review-2025/
  9. Ribeiro என்னுடைய நண்பன். போர்த்துக்கல் நாட்டைச் சேர்ந்தவன். ஒரு சிறிய பயண நிறுவனத்தை நடத்தி வந்தான். தொண்ணூறுகளில் நான் வெளிநாடுகளுக்குப் பயணம் செய்த போதெல்லாம் என்னுடைய விமானச் சீட்டுகளை அவன்தான் ஒழுங்குபடுத்தித் தந்தவன். முதல் முறை எனக்கான விமானச்சீட்டை ஏற்பாடு செய்யும் போது, என் நீண்ட பெயரைப் பதிவதில் சிரமப்பட்டுக் கொண்டிருந்தான். அவனுக்கு எதற்குச் சிரமம்? என்று நினைத்து, என் பாஸ்போர்ட்டை அவனிடம் நீட்டினேன். அதை வாங்கிப் பார்த்தவுடன் அவன் சொன்னான், “நீ பிறந்த இடம் Point-Pedro அல்லவா? அந்தப் பகுதியில் 'பேட்ரோ' என்னும் போர்த்துக்கல் ஆளுநர் ஒருவர் இருந்துள்ளார்” என்றான். நான் சற்றே ஆச்சரியத்துடன், “என் ஊரைப் பற்றிய விபரம் உனக்கெப்படித் தெரியும்?” என்று கேட்டேன். அதற்கு அவன், “'பேட்ரோ' என்பது போர்த்துக்கீஸிஸ், ஆங்கிலத்தில் ‘பீற்றர்’, டொச்சில் ‘பேற்றர்’” என்றான். என்னுடைய சொந்த ஊரின் பெயரில் போதுமான வரலாறு இருப்பதை நான் அதுவரை அறியாதிருந்ததை உணர்ந்தேன். அந்த நிமிஷத்தில் என்னுள் ஒரு விருப்பம் பிறந்தது, ஒரு தடவை போர்த்துக்கலுக்குப் போக வேண்டும் என்று. பல நாடுகளுக்குப் பயணித்திருந்தும், போர்த்துக்கல் மட்டும் எப்போதும் சாத்தியப்படவில்லை. ஆனால் கடந்த வருடம், இந்த வருடக் கோடைகாலத்தில் போர்த்துக்கலுக்குப் பயணம் மேற்கொள்ள வேண்டும் என்று உறுதியாக முடிவெடுத்தேன். அந்த முடிவே இந்தப் பயணத்திற்கு வழிவகுத்தது. பயண நகரமாக போர்ட்டோ (Porto)வைத் தேர்ந்தெடுத்தேன். பறப்பதற்கு நேரம் 2 மணி 45 நிமிடங்கள் மட்டுமே. போர்ட்டோவிற்கு வந்ததும், உயரமாக வளர்ந்த மரங்களும், பழமையான கட்டிடங்களும்தான் முதலில் கண்களில் பட்டன. எங்கள் ஊரிலுள்ள பூவரச மரங்களின் உயரத்துக்கு இங்கு சிதம்பரத்தை மரங்கள் வளர்ந்து, பூத்து அழகாக நின்றன. சில இடங்களில் பனைமரங்களும் திமிராக நிமிர்ந்து நின்றன. வீதிகளில் நடக்கும்போது, அந்த நகர அமைப்பு எனக்கு கொழும்பு நகரத்தை நினைவூட்டியது. போர்ட்டோவில் இருந்த நாட்களில், இறைச்சி உணவுகளைத் தவிர்த்து, மீன்களை மட்டுமே சாப்பிடுவது எனத் தீர்மானித்தேன். அதில் என்னை மிகவும் கவர்ந்தது Corvina என்ற மீன். இவ்வளவு காலமும் நான் சாப்பிட்ட மீன்களில் இல்லாத ஒரு தனிச் சுவை அந்த மீனில் இருந்தது. ஏன் இந்த மீன் யேர்மனியில் கிடைக்கவில்லை என அறிய இணையத்தில் தேடியபோது, “Meerrabe” அல்லது “Koenigs-Corvina” என்ற பெயர்கள் வந்தன. ஆனால் சந்தைகளில் கிடைக்கவில்லை. தமிழில் அதன் பெயரைக் கண்டு பிடிக்க முடியவில்லை. இனிமேல் மீண்டும் இந்த மீனைச் சாப்பிட விரும்பினால், போர்த்துக்கலுக்குத்தான் போக வேண்டும் போலிருக்கிறது. Corvina மீனை “போர்த்துக்கல் மீன்” என்றொரு பெயரிலும் அழைப்பார்கள் என்று தெரிந்தது. பழமையான கட்டிடங்கள், கல்வி நிறுவனங்களால் நிரம்பிய தெருக்கள்... என்றிருந்த இந் நகரத்தின் மத்தியில் Livraria Lello என்ற ஒரு பிரபலமான சிறிய புத்தகக் கடை இருந்தது. 1906ஆம் ஆண்டில் தொடங்கப்பட்ட இந்தக் கடை, இன்று “உலகின் அழகான புத்தகக் கடைகளில் ஒன்றாகக் கருதப்படுகிறது. இந்தக் கடைக்குள் செல்வதற்கு முன்பதிவு செய்ய வேண்டும். கடையின் வெளியே நீண்ட வரிசை. ஒவ்வொரு 15 நிமிடங்களுக்கு ஒருமுறை, ஒவ்வொரு வரிசையாக உள்ளே அனுமதிக்கின்றனர். வரிசையில் நின்றபோது, காலநிலை பாதுகாப்பிற்காக சிவப்புக் குடைகள் கொடுக்கப்பட்டன. எனக்கு முன்னால் ஒரு யேர்மனியக் குடும்பம், இரண்டு பிள்ளைகளுடன் வரிசையில் நின்றனர். அவர்கள் பேசுபவை காதில் விழுந்தன. “முன்பு கடைக்குள் செல்ல இரண்டு யூரோக்கள் மட்டும் கொடுக்க வேண்டியிருந்தது. பின்னர் ஐந்து யூரோக்கள் ஆகி, கொரோனாவுக்குப் பிறகு பத்து யூரோக்கள் ஆகிவிட்டது. ஆனால் உள்ளே புத்தகம் வாங்கினால் அந்தப் பத்து யூரோக்கள் கழிக்கப்படும். இல்லையெனில், அவர்களுக்குப் பத்து யூரோக்கள், எங்களுக்குத் திரும்ப வெறும் கைகள்தான்!” புத்தகக் கடைக்குள் சென்றபோது, என்னை மிகவும் கவர்ந்தது, நடுப்பகுதியில் இடது, வலது என இரண்டாகப் பிரிந்து வளைந்து செல்லும் சிவப்பு மரப் படிக்கட்டுகள். மேல்தளத்திலுள்ள வண்ணக் கண்ணாடிகள், அவற்றில் வரும் இயற்கை ஒளி, கடையை ஒரு கலை அரங்கமாக மாற்றிக் கொண்டிருந்தது. இந்தக் கடையை, ஹரி போட்டர் புத்தகத் தொடர் எழுத்தாளர் J.K. Rowling, போர்ட்டோவில் தங்கி இருந்த போது பார்வையிட்டதாகக் கூறுகிறார்கள். இந்தக் கடையின் சூழலும் படிக்கட்டுகளும் தான் ஹரி போட்டர் கதையில் இடம் பிடித்திருக்கும் ஹோக்வோர்ட்ஸ் பள்ளியின் வடிவமைப்புக்கு உந்துதலாக இருந்ததாகவும் சொல்லப்படுகிறது. இந்த ஒரு காரணம்தான், ஹரி போட்டர் ரசிகர்களையும், உலகளாவிய பயணிகளையும் இங்கே இழுத்து வருகிறது. என் முன்னால் நின்ற யேர்மனியப் பிள்ளைகளும் ஹரி போட்டர் ரசிகர்களாகவே எனக்குத் தெரிந்தார்கள். கடைக்குள் பல மொழிகளில் நூல்கள் இருந்தன. தமிழ் புத்தகங்கள் ஏதாவது இருக்குமா என்று தேடினேன். நீண்ட புத்தக அலுமாரியின் ஒரு பகுதியில் “Asian Literature” எனக் குறிப்பிடப்பட்டிருந்தது. அதில் சீன, ஜப்பான், கொரிய எழுத்தாளர்களின் நூல்கள் மட்டுமே இருந்தன. தமிழ் நூல்கள் எதுவுமே இருக்கவில்லை. “திருக்குறளை என்றாலும் வைத்திருக்கலாமே” என்ற ஏமாற்றம் மனதில் தோன்றியது. Livraria Lello–வில் நான் எதையும் வாங்கவில்லை. ஆனால் வாசிப்பு என்பது எல்லா மொழிகளிலும் ஒரு கலை என்பது தெளிவானது. உலகின் அழகான புத்தகக் கடைகளில் ஒன்றான இந்தக் கடை, உண்மையிலேயே ஒரு வாசகப் பூங்காதான்.
  10. அவகேடோ(avocado) என்ற சொல் Nahuatl மொழியில் ahuacatl என்பதிலிருந்து உருவானது, அதன் அர்த்தம் ஆண் விதைப்பை. அடுத்தமுறை அவகேடோ வாங்கும் போது உங்கள் நினைவுக்கு வரும்
  11. வணக்கம் வாருங்கள்.வாழ்த்துக்கள் !!!
  12. மச்சி ஆறு! நீ பெரிய ஆளடாப்பா மச்சி!
  13. The Shawshank Redemption, திரையிடப்பட்ட போது படம் பிரபலம் அடையவில்லை. தோல்வி அடைந்தது என்றே கருதப்பட்டது. ஆனால், பல ஹொலிவூட் விருதுகளுக்கு பரிந்துரைக்கப்பட்டது. பின்பு, வாய்மொழியால் பிரபலம் அடைந்தது.
  14. இலங்கையில் பெரிதும் பேசப்பட்வரான டாக்ரர் கோவூரின் பேரனுமாவார்.
  15. மூட்டை மூட்டையா ..காசு சேர்த்த மூனாக்கள் ... இப்பவும் முழுக்கோழி முழுங்கிவிட்டு ...மினு மினுப்பா ..முழுசா திரியினாம் ...அவைக்கு அனுரா பயமோ...
  16. Tom Hanks நடித்த Forrest Gump படமும் நான் பல தடவைகள் பார்த்த சிறந்ததொரு படம். எத்தனை தடவைகள் பார்த்தாலும் சலிக்காது. Cast Away யும் பல தடவைகள் பார்த்தாலும் சலிக்காத இன்னொரு நல்ல படம்.
  17. அததெரண கருத்துப்படங்கள்
  18. அஜீவன் அண்ணாவுடன் யாழ்கள உறுப்பினர்களின் சந்திப்பு பற்றிய திரி
  19. அஜீவனை அமெரிக்கா வந்த போது போய்ச் சந்தித்தேன். அவரிடம் நிறைய கெட்டித்தனங்கள் இருந்தது. ஒரு புகைப்படக் கலைஞர். ஆழ்ந்த இரங்கல்கள். அவரது பிரிவால் வாடும் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கல்கள்.
  20. வணக்கம் வாங்கோ...நானும் ஜேர்மன்காரன் தான் 😃
  21. வணக்கம் வாருங்கள்.
  22. வணக்கம் ! வாங்கோ !! வாழ்த்துக்கள் !!!
  23. வணக்கம், உங்கள் வரவு நல்வரவாகட்டும்.
  24. இல்லை. IMDb இல் பல ஆண்டுகளாக ரசிகர்களின் விருப்பமான படங்களில் முதலாவது இடத்தில் உள்ளது https://www.imdb.com/search/title/?groups=top_100&sort=user_rating,desc&ref_=ext_shr_lnk நான் பல தடவைகள் பார்த்தும் இன்னும் அலுக்கவில்லை! ஆனாலும் எனது விருப்பமான படம் Pulp Fiction. இங்கிலாந்துக்கு வந்த பின்னர் திரையில் பார்த்த இரண்டாவது படம்! எப்படியும் 20 தடவைக்கு மேல் VHS, DVD, BlueRay, Streaming இல் பார்த்திருப்பேன். எனக்கு பிடித்த லைன்! "I'm Winston Wolf, I solve problems”
  25. இது வரைக்கும் இப் படத்தை 6 தடவை பார்த்து விட்டேன். ஒவ்வொரு முறையும் ஒவ்வொரு அனுபவத்தை தரும் சிறந்த திரைப்படம்!
  26. இப்ப எனக்கு உங்கள் மேல்தான் சந்தேகமாய் இருக்கு ....... பக்கத்தில் நின்று பார்த்ததுபோல் சொல்கிறீர்கள் . ...... முன் அனுபவமோ .........! 😂

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.