Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Leaderboard

  1. தமிழ் சிறி

    கருத்துக்கள உறவுகள்
    11
    Points
    87986
    Posts
  2. குமாரசாமி

    கருத்துக்கள உறுப்பினர்கள்
    6
    Points
    46778
    Posts
  3. புலவர்

    கருத்துக்கள உறவுகள்
    4
    Points
    5830
    Posts
  4. goshan_che

    கருத்துக்கள உறவுகள்
    3
    Points
    19102
    Posts

Popular Content

Showing content with the highest reputation on 10/05/25 in all areas

  1. Published By: Digital Desk 3 05 Oct, 2025 | 12:06 PM “வாழ்க்கையே முடிந்தது என எண்ணினேன்…” – விசேட தேவையுடைய பிள்ளைகளின் பெற்றோர்களின் உணர்வுபூர்வ பகிர்வுகள்! (சரண்யா பிரதாப்) இலங்கையின் சுகாதார மற்றும் சமூகத் தளத்தில் ஒரு மைல்கல்லாக, விசேட தேவையுடைய சிறுவர்களுக்காக சகல வசதிகளுடன் உருவாக்கப்பட்ட முதலாவது தேசிய நிலையமான “அயத்தி” (Ayati), பல்லாயிரக்கணக்கான குடும்பங்களின் வாழ்க்கையில் ஒளியேற்றி வருகிறது. சமஸ்கிருதத்தில் “நம்பிக்கை” எனப் பொருள்படும் இந்த நிலையம், சவால்களை எதிர்கொள்ளும் சிறுவர்களுக்கும் அவர்களது பெற்றோர்களுக்கும் வாழ்வின் இரண்டாவது அத்தியாயத்தை ஆரம்பித்துள்ளது. இந்த நிலையம் 2016 ஆம் ஆண்டு அறக்கட்டளையாக நிறுவப்பட்டு, 2020 முதல் செயல்பட்டு வருகிறது. களனி பல்கலைக்கழகம், ஹேமாஸ் ஹோல்டிங்ஸ், மாஸ் ஹோல்டிங்ஸ் மற்றும் இராணுவத்தின் பங்களிப்புடன் நிர்மாணிக்கப்பட்ட இந்த நிலையம், இலங்கையின் விசேட தேவையுடைய சமூகத்துக்கு ஒரு வரப்பிரசாதமாக அமைந்துள்ளது. இந்த நிலையம் கம்பஹா மாவட்டத்தில், ராகமையில் களனி பல்கலைக்கழகத்தின் மருத்துவ பீடத்திற்குள் அமைந்துள்ளது. அயத்தி நிலையத்தின் முக்கியத்துவம் மற்றும் சேவைகள் இலங்கையில் ஐந்து சிறுவர்களில் ஒருவர் ஏதேனும் ஒரு விசேட தேவையுடையவராக உள்ளார். உரிய நேரத்தில் கண்டறியப்படாததால், இந்தச் சிறுவர்கள் கல்வி மற்றும் சமூக வாய்ப்புகளில் பின்தள்ளப்படுகிறார்கள். அயத்தி நிலையம் விசேட தேவையுடைய சிறுவர்களுக்கு , பல்துறை பராமரிப்பை வழங்குவதோடு, இவர்களுக்காக நாடளாவிய ரீதியில் விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறது. அயத்தி நிலையத்தில், வைத்திய நிபுணர்களால் ஆரம்ப பரிசோதனைகள், பேச்சு மற்றும் மொழி சிகிச்சை, ஒலியியல் (audiology), இயன்முறை மருத்துவம் (physiotherapy) மற்றும் தொழிற்பாட்டு சிகிச்சை (occupational Therapy) எனப் பல்துறை சிகிச்சை வழங்கப்படுகிறது. இங்கு இலங்கையின் முதலாவது உணர்திறன் அறை மற்றும் நவீன மறுவாழ்வு வசதிகள் உள்ளன. தலைமை நிறைவேற்று அதிகாரியன பிரபல வரத்தகர் தனஞ்சய் ராஜபக்ஷ கூறுகையில், இதுவரை 14,000க்கும் மேற்பட்ட சிறுவர்கள் பயனடைந்துள்ளனர். எனினும், மருத்துவர்களின் புலம்பெயர்வு, மருத்துவ உபகரணங்களின் அதிக செலவு போன்ற சவால்களை எதிர்கொள்வதாகவும், அவசர தேவைகளுக்கு 30 மில்லியன் ரூபாய் தேவைப்படுவதாகவும் அவர் தெரிவித்தார். பெற்றோர்களின் மனமுருகும் அனுபவங்கள் அயத்தி நிலையம், விசேட தேவையுடைய குழந்தைகளின் பெற்றோர்களின் வாழ்வில் பெரும் மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. சில பெற்றோர்கள் தங்கள் அனுபவங்களைப் பகிர்ந்துகொண்டனர். “எனது மகள் ஆன்யா, 33 வாரத்தில் பிறந்தாள். வைத்தியர்கள் அவளுக்கு மூளை வாதம் ஏற்பட்டு இருப்பதாக தெரிவித்தனர். அப்போது என் வாழ்க்கை முடிந்தது போல உணர்ந்தேன். கடும் மன அழுத்தத்துக்குள்ளானேன். குழந்தையைக் கொன்றுவிட்டு நானும் இறந்துவிடலாம் என நினைத்தேன்.” என தாயாரான டான்யா அரச குலசேகர கூறினார். ஆனால் 2019ல் ஆன்யாவை ‘அயத்தி’க்கு கொண்டு சென்றபின், அவள் ஓரளவு முன்னேற்றம் அடைந்தாள். இன்று ஆன்யா படுக்கையிலேயே இருப்பாள் என நினைத்த இடத்திலிருந்து, நிகழ்வுகள், திருமணங்களில் கலந்துகொள்கிறாள். குடும்பத்தினர் மற்றும் குழந்தைகள் அவளது நிலையை புரிந்து ஆதரவு வழங்குகின்றனர்; அவளை ஒரு சாதாரணக் குழந்தையாகவே நடத்துவதாக தெரிவித்தார். ராகமையில் வசிக்கும் சானிக்கா ருவன்குமாரி, தனது மகள் நிஷாலி ஏஞ்சலி. அவளுக்கு தற்போது 8 வயது. அவள் விசேட தேவையுடைய குழந்தை தெரிந்து, அயத்தி நிலையத்துக்கு வந்ததாகவும், இங்குள்ள வைத்தியர்கள் அளித்த ஊக்கம் மிகுந்த உதவியாக இருந்ததாகவும் தெரிவித்தார். சமூகத்தில் களங்கம் ஏற்படுத்துவது போன்று பேசுவது இன்னும் சவாலாக உள்ளன. “சில நேரங்களில் பலர் கேள்விகள் கேட்கிறார்கள் அல்லது கருத்துகள் தெரிவிக்கிறார்கள். அப்போது, அவளுக்கு சிறிய நோய் உள்ளது என நாங்கள் விளக்குகிறோம். அவள் சாதாரண வாழ்க்கையிலேயே வாழ்கிறாள்; அதைப் பாதுகாக்க நாங்கள் முயற்சிக்கிறோம்.”தற்போது என் மகள் முன்பள்ளிக்குச் செல்கிறாள், அங்கே இரண்டு பதக்கங்களையும் வென்றுள்ளாள். மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது,” என்றார். தனது மூன்றாவது மகள் செலோமி செமாயா, மனவளர்ச்சி குன்றி இருப்பதாக வைத்தியர்கள் தெரிவித்தபோது கவலை அடைந்ததாக வினிதா நில்மினி தெரிவித்தார். ஆனால், அயத்தியிலுள்ள வைத்தியர்கள் ஆறுதல் கூறியதாகவும், அது தனக்கு நம்பிக்கையை அளித்ததாகவும் தெரிவித்தார். “என் பிள்ளையை சமூகத்துக்கு அறிமுகப்படுத்த வேண்டும் என ஒரு தந்தை அறிவுரை வழங்கினார். அப்போதுதான், பிள்ளைகளை வீட்டுக்குள் மட்டும் வைத்திருக்கக் கூடாது, அவர்கள் சமூகத்தைப் பற்றி அறிய வேண்டும் என்பதை நான் உணர்ந்தேன்,” என்றார். ராகமையில் வசிக்கும் தரிந்து சேனாதித், தனது 5 வயது மகள் லிடியா யொஹானி, தனது ஆறாவது குழந்தை என்றும், ஏனைய ஐந்து குழந்தைகளும் பிறந்து இறந்ததாகவும் தெரிவித்தார். தனது மகள் மனவளர்ச்சியில் பின்தங்கி இருப்பதாக வைத்தியர்கள் தெரிவித்தபோது மிகவும் மனமுடைந்ததாகவும், ஆனால் அயத்தியில் பெற்ற சிகிச்சைகள் மற்றும் மனதளவில் கிடைத்த ஆதரவு, அவளை தற்போது சுயமாகச் செயல்பட வைத்துள்ளது என்றும் தெரிவித்தார். “அயத்தியின் பணியாளர்கள் எங்களை மரியாதையுடன் நடத்துகிறார்கள். நாங்கள் சந்திக்கும் மன அழுத்தங்களை அவர்கள் புரிந்துகொள்கிறார்கள். சிகிச்சையளிக்கும் நிபுணர்களுடன் உள்ள உறவு மிகவும் வலிமையானதும் முக்கியமானதுமாக உள்ளது. எங்களுக்கும் எங்கள் குழந்தைக்கும் ஆரோக்கியமான சூழலை உருவாக்குவதற்கு அவர்கள் முழுமையாக பாடுபடுகிறார்கள் என்றார். இந்த உணர்வுபூர்வமான பகிர்வுகள், அயத்தி நிலையத்தின் தேவை, அதன் முக்கியத்துவம் மற்றும் ஒரு சமூக மாற்றத்தை உருவாக்கும் சக்தி ஆகியவற்றை வெளிப்படுத்துகின்றன. மன அழுத்தம், சமூகத் தயக்கம், மற்றும் களங்கம் போன்ற சவால்களை இந்த மையம் பெற்றோர்களிடமிருந்து களைகிறது. இந்த முயற்சிகள், இலங்கையில் விசேட தேவையுடைய சிறுவர்களுக்கான பராமரிப்பை மேம்படுத்துவதோடு, உள்ளடங்கிய சமூகத்தையும் உருவாக்குவதை நோக்கமாகக்கொண்டுள்ளன. பலவகையான பயிற்சி மற்றும் ஆராய்ச்சி மையமாக அயத்தி நிலையம் திகழ்வதோடு, சுமார் 200 இளங்கலை மாணவர்கள் தற்போது மருத்துவப் பயிற்சியை பெறுகின்றனர். அயத்தி நிலையத்துக்கு தூர பிரதேசங்களில் இருந்து சிகிச்சைக்கு வருகை தருபவர்களுக்கு போக்குவரத்து செலவு மற்றும் உணவு வழங்கப்படுகிறது. இதேவேளை, அயத்தி நிலையத்தை புனரமைத்தல் மற்றும் அபிவிருத்தி பணிகளுக்காக தற்போது 30 மில்லியன் ரூபா தேவைப்படும் நிலையில், அயத்தி நன்கொடையாளர்கள் மற்றும் நலன் விரும்பிகளிடமிருந்து உதவியை எதிர்பார்த்து நிற்கின்றது. மேலதிக தகவல்களுக்கு ; www.ayati.lk தொடர்புகளுக்கு ; +94 11 7878501 https://www.virakesari.lk/article/226933
  2. சுவி ஐயாவின் பெறாமகன் சீக்கிம் குணமடைய இறைவனை வேண்டுகிறேன்.
  3. வினா 6) மழை காரணமாக அவுஸ்திரேலியா இலங்கைக்கு இடையிலான போட்டிகள் நடைபெறவில்லை. இதனால் போட்டியாளர்கள் அனைவருக்கும் தலா 2 புள்ளிகள் கிடைக்கிறது 1)ஏராளன் - 13 புள்ளிகள் 2)கிருபன் - 13 புள்ளிகள் 3)அகஸ்தியன் - 13 புள்ளிகள் 4)ஆல்வாயன் - 11 புள்ளிகள் 5)வாதவூரான் - 11 புள்ளிகள் 6) ரசோதரன் - 11 புள்ளிகள் 7) வீரப்பையன் - 11 புள்ளிகள் 8)சுவி - 10 புள்ளிகள் 9)புலவர் - 9 புள்ளிகள் 10)செம்பாட்டன் - 9 புள்ளிகள் 11) நியூபலன்ஸ் - 9 புள்ளிகள் 12)வாத்தியார் - 7 புள்ளிகள் 13) வசி - 7 புள்ளிகள் 14)கறுப்பி - 7 புள்ளிகள் 15)ஈழப்பிரியன் - 7 புள்ளிகள் இதுவரை வினாக்கள் 1 - 6, 41, 42 க்கு புள்ளிகள் வழங்கியுள்ளேன்.
  4. காசேதான் கடவுளடா படத்தில் இந்தப் பாடலை சுசிலா பாடியிருந்தார், மெல்லிசை மன்னர் எம். எஸ்.வி. இசையில், பாடலை கவிஞர் வாலி எழுதியிருந்தார். அப்போது இலங்கை தமிழ் ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தின் வர்த்தக சேவையியில் இந்தப் பாடலை கேட்கும் போது, சில வரிகளுக்குள் மாற்றங்கள் இருந்தது. இந்த மாற்றங்களுக்கான காரணம் தணிக்கையாகும். படம் தணிக்கைக்கு செல்லும் முன்னரே இசைத்தட்டு வெளியிடப்படுவது பொதுவாக இருந்தது. வானொலியில் இந்தப் பாடல் ஒலிக்கும்போது, “எங்கெங்கு தொட்டால் என்னென்ன இன்பம் அங்கங்கே தொட வேண்டும் கை பதமாக..." எனப் பாடல் வரிகள் இருக்கும். ஆனால், திரைப்படத்தில் "எங்கெங்கு வந்தால் என்னென்ன இன்பம் அங்கங்கு வர வேண்டும் என் நிழலாக..." என்று இருக்கும்
  5. தமிழ்நாட்டில் உருவாக்கப்பட்ட 'அரட்டை ' எனும் செயலியின் அதிகரித்து வரும் பயன்பாடு பேசு பொருளாகியுள்ளது. அமெரிக்கா எடுத்து வரும் அதிரடி நடவடிக்கைகள் காரணமாக, உலக நாடுகள் பலவும் சொந்தக் காலில் நிற்பது பற்றி அதிகம் சிந்தித்துச் செயற்பட்டு வருகின்றன. அந்த வகையில் அமெரிக்காவின் சேவையான WhatsApp இற்குப் பதிலாக அரட்டை எனும் செயலியினைப் ( Arattai App) பலரும் பயன்படுத்தத் தொடங்கியுள்ளனர். WhatsApp, Snapchat போன்ற செயலிகளைப் போன்றே அரட்டையும் பயன்படுகின்றது. தமிழ்நாட்டினைச் சேர்ந்த சோகோ நிறுவனத்தால் ( Zoho corporation) உருவாக்கப்பட்ட செயலி இதுவாகும். சென்னையினைத் தலைமையிடமாகக் கொண்டு இந்த நிறுவனம் செயற்படுகின்றது. இச் செயலியின் பெயர் தமிழ்ச் சொல்லாக இருப்பதுடன், 'அ' என்ற எழுத்தினை அடையாளமாகவும்கொண்டுள்ளது. நாமும் பயன்படுத்துவோமே! இச் செயலி வெற்றி பெற்றால் , அது ஒரு வகையில் தமிழின் வெற்றியாகவும் அமையும்.
  6. ஆண்களுக்கு எந்த விதத்திலும் சளைத்தவர்கள் அல்ல; மகளிர் கிரிக்கெட்டின் தலையெழுத்து மாறியது எப்படி? பட மூலாதாரம், Getty Images படக்குறிப்பு, ரசிகர்களுடன் செல்ஃபி எடுக்கும் மிதாலி ராஜ் (கோப்புப் படம், 2017) கட்டுரை தகவல் தினேஷ்குமார் பிபிசி தமிழுக்காக 4 அக்டோபர் 2025 நடப்பு மகளிர் உலகக்கோப்பையை இந்திய அணி கைப்பற்றும் என்பது பெரும்பாலான கிரிக்கெட் வல்லுநர்களின் கணிப்பாக உள்ளது. ஒருகாலத்தில் இந்திய ஆடவர் அணியின் நிழலில் ஒதுங்கியிருந்த இந்திய மகளிர் அணி, இன்று உலகின் வலிமையான அணிகளுள் ஒன்று. விராட் கோலி, ரோஹித் சர்மாக்களுக்கு இணையாக இன்று, ஸ்மிருதி மந்தனா, ஜெமிமா ரோட்ரிக்ஸ் போன்றோர் ரசிகர்களின் அபிமானத்தை பெற்றுள்ளனர். ஆடவர் கிரிக்கெட்டுக்கு சச்சின் எப்படியோ, அதேயளவு மிதாலி ராஜும் ஆதர்சமாக திகழ்கிறார். எள்ளி நகையாடப்பட்ட இந்திய மகளிர் அணி எழுச்சி பெற்றது எப்படி? இந்திய மகளிர் கிரிக்கெட்டின் வளர்ச்சியை புரிந்துகொள்வதற்கு, மகளிர் கிரிக்கெட்டின் ஆதிவரலாற்றை உள்வாங்கிக்கொள்ள வேண்டும். அது எப்படி இந்தியாவில் உள்வாங்கப்பட்டது என்பதையும் தொடக்க காலத்தில் ஏற்பட்ட பின்னடைவுகள் என்னவென்பதையும் அதன் முன்னத்தி ஏர்களையும் தெரிந்துகொள்ள வேண்டும். கிரிக்கெட்டில் ஆதியிலே பெண்கள் இருந்தார்கள் பட மூலாதாரம், Getty Images படக்குறிப்பு, ஸ்மிருதி மந்தனா கிரிக்கெட்டும் ஆதியில் சமத்துவத்திற்கு உட்பட்டதாகவே இருந்தது. பதினான்காம் நூற்றாண்டை சேர்ந்த யோகன் டி கிரிஸின் (Johann de Grise) ஓவியங்கள் அதற்கு இன்றளவும் சான்றாக உள்ளன. கிராமங்களில் வளர்ந்த ஆட்டம் என்பதால், ஒருசில கட்டுப்பாடுகள் தவிர்த்து அனைத்துத் தரப்பு மகளிரும் பொழுதைப் போக்கும் ஆட்டமாகத்தான் கிரிக்கெட் பதினேழாம் நூற்றாண்டு வரை இருந்தது. அதுநாள் வரை மகளிர் கிரிக்கெட் என்பது சேவல் சண்டையைப் போல, பாதுகாப்பு கவசங்கள் இல்லாத குத்துச் சண்டையைப் போல, குட்டைப் பாவாடை அணிந்து கொண்டு மகளிர் ஆடும் ஒரு சாகச ஆட்டம்; அவ்வளவுதான். பாதுகாப்பற்ற எக்குத்தப்பான களங்களில் மகளிர் ஆடுவதாலே அது ஒரு அதிசாகச ஆட்டமாக வர்ணிக்கப்பட்டது. அதனால் இயல்பிலேயே சூது, குடி உள்ளான கேளிக்கைகளுக்கு ஏற்றதாகவும் தீவிர அபிமானம் கொண்ட ரசிகர்கள் சண்டையிட்டுக் கொள்வதற்கு ஏதுவான பேசுபொருளாகவும் அது அமைந்தது. எளிமையாக சொல்ல வேண்டுமென்றால், ஆரம்பத்தில் மகளிர் கிரிக்கெட் ஒரு ஆங்கில ஆட்டமாக இருக்கவில்லை. விக்டோரிய யுகத்தில்தான் யார்யார் மட்டைப் பிடிக்க வேண்டுமென்ற எழுதப்படாத விதி ஒன்று உருவானது. சொல்லி வைத்தது போல அப்போதுதான் எம்சிசி (MCC) அமைப்பும் ஆட்டம் தொடர்பான விதிகளும் உருப்பெறத் தொடங்கின. உயர்குடி அல்லாத மகளிர் குறித்தான அந்தக் காலத்திய மதிப்பீடு 'அற்பத்தனமானது ; வளர்ச்சிக்கு வழியில்லாதது ; நன்நெறிகளுக்கு உட்படாது' என்றே இருந்தது என்கிறார் Playing the Game புத்தகத்தை எழுதிய காத்லீன் இ.மேக்ரோன். 1998இல் தான் எம்சிசி நிறுவனம் மகளிர் கிரிக்கெட்டை முழுமையாக அங்கீகரித்தது. ஆண்களின் குறுகிய உலகம் பட மூலாதாரம், Getty Images படக்குறிப்பு, கிரிக்கெட் உலகின் உச்ச நட்சத்திரங்களில் ஒருவரான லென் ஹட்டன் (இடமிருந்து முதலில் இருப்பவர்) மகளிர் கிரிக்கெட்டை 'அபத்தம்' எனச் சாடினார். காலப்போக்கில் இந்த சமத்துவமின்மை மகளிர் கிரிக்கெட்டில் இருந்து கொஞ்சம் கொஞ்சமாக மறையத் தொடங்கியது. ஆனாலும் ஆண்மயக் கண்ணோட்டத்திலிருந்து அது பார்க்கப்படுவது தொடர்ந்தபடியே இருந்தது. கிரிக்கெட் உலகின் உச்ச நட்சத்திரங்களில் ஒருவரான லென் ஹட்டன் (Len Hutton) மகளிர் கிரிக்கெட்டை 'அபத்தம்' எனச் சாடினார். கிரிக்கெட் எழுத்தின் மணிமகுடம் என சொல்லத்தக்க 'The Art and science of Cricket' புத்தகத்தை எழுதிய பாப் ஊல்மர் அவன்/அவள் சிக்கல் தொடர்பான அரசியல் சரித்தன்மையை நியாயப்படுத்தும் பொருட்டு தனது முன்னுரையில் இப்படி எழுதுகிறார். "இந்தப் புத்தகம் அனைவருக்கும் பயன்படக் கூடியது என்றாலும் ஆடவர் கிரிக்கெட்டை மட்டுமே முன்னிறுத்தி எழுதப்பட்டது." இதே அர்த்தம் தொனிக்குமான ஒரு உரையை தனது 'On Form' புத்தகத்தில் இங்கிலாந்து முன்னாள் கேப்டன் மைக் பிரயர்லியும் எழுதுகிறார். மகளிர் கிரிக்கெட்டின் வளர்ச்சிக்கு ஆண் வர்க்கம் தொடர்ந்து முட்டுக் கட்டைகளை – தெரிந்தோ தெரியாமலோ – ஏற்படுத்தினாலும் அது ஆரம்ப காலம் தொட்டே ஒட்டுமொத்த கிரிக்கெட்டின் வளர்ச்சிக்கும் வழிகாட்டி வந்துள்ளது. அது டபிள்யூ.ஜி.கிரேஸிடமிருந்து (W. G. Grace) தொடங்குகிறது. நவீன பேட்டிங்கில் பெரும் தாக்கத்தை செலுத்திய கிரேஸின் கிரிக்கெட் குரு வேறு யாருமல்ல; அவருடைய தாய் மர்தா கிரேஸ்தான். இன்னும் கொஞ்சம் காலத்தை பின்னோக்கி நகர்த்தினால் 1820களில் கிறிஸ்டியானோ பந்தை தூக்கிப் போட்டு சிரித்துக் கொண்டிருக்கிறார். அவர்தான் கிரிக்கெட்டில் தற்போது நடைமுரையில் உள்ள 'Overarm' பாணியில் முதல்முறையாக பந்துவீசியவர். ஆனால் வழக்கம் போல வரலாற்றில் அவர் பெயர் மறைக்கப்பட்டு அவருடைய சகோதரரான ஜான் வைல்ஸின் (John Willes) கல்லறையில் 'Overarm பந்துவீச்சின் பிதாமகன்' என பொறிக்கப்பட்டது. ஆடவர் ஒருநாள் கிரிக்கெட் உலககோப்பை தொடர் நடத்துவதற்கு முன்னுதாரணமாக நின்று வழிகாட்டியவர் கேப்டன் ரேச்சல் ஹேஹோ பிளின்ட் (Rachael Heyhoe Flint). இங்கிலாந்து மகளிர் கிரிக்கெட் அணி கேப்டனான அவர் 1973இல் முதல் மகளிர் உலககோப்பை கிரிக்கெட் தொடரை வெற்றிகரமாக நடத்தியும் காட்டினார். பேட்டிங் திறன் அடிப்படையில் அவரை மகளிர் கிரிக்கெட்டின் முதல் உச்ச நட்சத்திரம் என சொல்லலாம். பட மூலாதாரம், Getty Images படக்குறிப்பு, டபிள்யூ.ஜி.கிரேஸ் இந்தியாவில் மகளிர் கிரிக்கெட் 18ஆம் நூற்றாண்டிலேயே இந்தியாவில் கிரிக்கெட் நுழைந்தாலும், மகளிர் கிரிக்கெட் முழுமையான வடிவம் எடுக்க 250 ஆண்டுகள் காத்திருக்க வேண்டியிருந்தது. 1973இல் தான் The Women's Cricket Association of India தொடங்கப்பட்டது. அக்காலத்திய மகளிர் கிரிக்கெட் என்பது பம்பாய், டெல்லி, கல்கத்தா மாதிரியான பெருநகரங்களில் வாழ்பவர்களுக்கான ஒன்றாகவே பார்க்கப்பட்டது. அன்றைய இந்திய மகளிர் கிரிக்கெட்டின் போக்கிற்கும் வர்க்க பார்வைக்கும் சரியான உதாரணமென பம்பாயின் 'த அல்பீஸ் கிளப்'பை (The Albees Club) சொல்லலாம். பெரு மதிப்பு வாய்ந்த அந்த கிளப்பின் வீரர்களில் ஒருவர் நூதன் கவாஸ்கர். இவர் லிட்டில் மாஸ்டர் சுனில் காவஸ்கரின் தங்கை. 70களில் மகளிர் கிரிக்கெட்டின் வளர்ச்சி குறிப்பிடத்தகுந்ததாக இருந்தது. அதற்கு அன்றைய பிரதமர் இந்திரா காந்தியின் ஆதரவும் ஒரு முக்கிய பங்காற்றியது என்பதை மறுக்க முடியாது. அன்றைய காலகட்டத்தில் நட்சத்திர வீரர்கள் என இருவரை அறுதியிட்டு சொல்ல முடியும். ஒருவர் சாந்தா ரங்கஸ்வாமி. இந்திய மகளிர் கிரிக்கெட்டின் முதல் ஆல்ரவுண்டர் இவர்தான். இன்னொருவர் இடக்கை சுழலரும் அதிரடி மட்டையாளருமான டயானா எடுல்ஜி (Diana Edulji). குறிப்பிடத்தக்க வெற்றிகள் கிட்டினாலும் கூட 90களின் இறுதிவரை வரை உச்ச நட்சத்திரம் என சொல்லும்படியான ஒரு ஆட்டக்காரர் இந்திய மகளிர் கிரிக்கெட்டில் உருப்பெறவில்லை. 2006இல் தான் The Women's Cricket Association of India அமைப்பு பிசிசிஐ உடன் முறையாக இணைக்கப்பட்டது. பட மூலாதாரம், Getty Images படக்குறிப்பு, கபில் தேவுடன் சாந்தா ரங்கஸ்வாமி (நடுவில்) ஒப்பீடு என்னும் இழிவு மகளிர் கிரிக்கெட்டில் போய் ஆடவர் கிரிக்கெட்டை தேடாமல் இருக்க வேண்டும். அதுதான் மகளிர் கிரிக்கெட்டை ரசிப்பதற்கான அடிப்படை பால பாடம். இந்தப் புரிதல் இல்லாமல் போகும் போதுதான், அது வேகமில்லாத, ஆக்ரோஷம் குறைவான, சுறுசுறுப்பு இல்லாத ஆட்டமாக மட்டுப்படுகிறது. மகளிர் கிரிக்கெட், காணும் ஒவ்வொருவருக்கும் தனித்துவமான உணர்வெழுச்சியை உண்டாக்கவல்லது. ஒரு கலை வடிவத்தைப் போல. ஆடவர் கிரிக்கெட்டின் போலி தேசியவாத சலம்பல்களுக்கு மத்தியில் மகளிர் கிரிக்கெட் ஒரு ஆறுதல் என்கிறார் கிரிக்கெட் எழுத்தாளர் முகுல் கேசவன். மகளிர் கிரிக்கெட்டை புரிந்துகொள்ள திறந்த மனதும் அறிவுசார்ந்த நேர்மையான கற்பனை வளமும் தேவை என்கிறார் கார்த்திகேய தத்தா. இங்கிலாந்தின் முன்னாள் நட்சத்திர பேட்டர் சாரா டெய்லர், தனது ஆட்டத்திறனை விஸ்தீகரிக்கும் பொருட்டு ஓர் உள்ளூர் ஆடவர் அணியில் இணைந்து மட்டையாடினார். ஆனால் இது போன்ற முயற்சிகள் எல்லாம் மகளிர் கிரிக்கெட் மீதான கடந்த காலக் கற்பிதங்களை உறுதிப்படுத்துவதற்குத்தான் உதவும். ஒருமுறை மிதாலியிடம் உங்களுக்கு பிடித்த ஆண் கிரிக்கெட் வீரர் எனக் கேட்கப்பட்டது. அதற்கு சற்றும் யோசிக்காமல் அவர் சொன்ன பதில் "ஒரு ஆண் கிரிக்கெட் வீரரிடம் உங்களுக்கு பிடித்த பெண் கிரிக்கெட் வீரர் யார் எனக் கேட்பீர்களா?" பட மூலாதாரம், Getty Images படக்குறிப்பு, ஜெமிமா ரோட்ரிக்ஸ் WPL என்னும் கேம் சேஞ்சர் ஒருகாலத்தில் கிரிக்கெட்டை பின்தொடரும் பெண்களுக்கு இருந்த பிரச்னை, மகளிர் கிரிக்கெட்டில் அவர்களுக்கு என்று ரோல் மாடல்கள் இருக்கமாட்டார்கள். ஆடவர் கிரிக்கெட்டில் இருந்து தங்களுக்கான ரோல் மாடல்களை அவர்கள் வரித்துக்கொண்டாக வேண்டும். ஆனால், இன்று நிலைமை அப்படி இல்லை. மிதாலி ராஜை தொடர்ந்து ஹர்மன்பிரீத் கவுர், ஸ்மிருதி மந்தனா, ஜெமிமா ரோட்ரிக்ஸ் போன்றோர் நாடறிந்த பிரபலங்கள் உள்ளனர். மகளிர் கிரிக்கெட்டின் நிலை தற்போது நிறையவே மாறியிருக்கிறது என்கிறார் இந்திய முன்னாள் வீராங்கனை நிரஞ்சனா நாகராஜன். தமிழகத்தை சேர்ந்த ஆல்ரவுண்டரான இவர், மகளிர் டெஸ்ட், மகளிர் ஒருநாள், மகளிர் டி20 போட்டிகளில் இந்திய அணிக்காக விளையாடியுள்ளார். "முன்பு மகளிர் கிரிக்கெட்டர்கள் பெரும்பாலும் ஆடவர் கிரிக்கெட்டில் இருந்துதான் ரோல் மாடல்களை தேடுவார்கள். நான் 10 வயதிலேயே கிரிக்கெட் விளையாடத் தொடங்கிவிட்டேன். எங்கள் தெருவில் உள்ள பையன்களுடன் சேர்ந்து விளையாடுவேன். எனக்கு அப்போது சச்சின்தான் ஆதர்சம். மகளிர் கிரிக்கெட்டின் சூப்பர் ஸ்டாரான மிதாலி ராஜ் குறித்து அப்போது நான் அறிந்திருக்கவிலை. கிரிக்கெட்டில் அடுத்தடுத்த கட்டங்களுக்கு சென்ற பிறகுதான், மிதாலி ராஜ் யார் என்பது எனக்கு தெரியவந்தது. பிறகு அவருடன் இணைந்து விளையாடியதுடன், நெருங்கிப் பழகும் வாய்ப்பையும் பெற்றேன். ஆனால், இன்று அப்படியில்லை. ஸ்மிருதி மந்தனா இன்று வெளியே சென்றால், அவரை காண்பதற்கு ஒரு மிகப்பெரிய கூட்டம் காத்திருக்கிறது" என்கிறார். முன்பு கிரிக்கெட்டை ஒரு கரியராக பெண்கள் தேர்வு செய்ய முடியாத சூழல் இருந்தது. முன்னர் ரயில்வே அணியில் இருந்து பெரும்பாலான மகளிர் கிரிக்கெட்டர்கள், இந்திய அணிக்கு தேர்வானதை குறிப்பிட்டாக வேண்டும். வேலை உத்தரவாதம் கிடைப்பதால், தத்தமது மாநில அணிகளை விட ரயில்வே அணிக்கு விளையாடவே மகளிர் கிரிக்கெட்டர்கள் விரும்பினர். ஆனால், இன்று சூழல் வெகுவாக மாறியிருக்கிறது என்கிறார் நிரஞ்சனா நாகராஜன். பட மூலாதாரம், Getty Images படக்குறிப்பு, முன்பு கிரிக்கெட்டை ஒரு கரியராக பெண்கள் தேர்வு செய்ய முடியாத சூழல் இருந்தது என்கிறார் நிரஞ்சனா நாகராஜன். திருப்புமுனை தந்த 2017 உலகக்கோப்பை "2017 மகளிர் ஒருநாள் உலகக்கோப்பையில் இந்திய அணி பைனல் வரைக்கும் முன்னேறியது. இந்திய மகளிர் கிரிக்கெட் வரலாற்றில், அதுவொரு திருப்புமுனை தருணம் என்றே சொல்லவேண்டும். அதன்பிறேகே மகளிர் கிரிக்கெட்டை ரசிகர்கள் பெரியளவுக்கு பின்தொடர ஆரம்பித்தனர். 2022இல் ஆடவருக்கும் மகளிருக்கும் சரிசமமான ஊதியம் என்பதை பிசிசிஐ உறுதிசெய்தது. ரோஹித் சர்மாவுக்கு எவ்வளவு ஊதியமோ, இன்று அதேயளவு ஹர்மன்பிரீத் கவுரும் பெறுகிறார். WPL அறிமுகமான பிறகு, பெண்களுக்கு கிரிக்கெட் விருப்பம்(passion) என்பதை கடந்து ஒரு கரியராகவும்(career) மாற்றமடைந்துள்ளது. நல்ல ஊதியம் கிடைப்பதால், மகளிர் கிரிக்கெட்டர்களின் பயிற்சி முறைகள், டயட் போன்றவை முன்னேற்றம் அடைந்துள்ளன. இது களத்தில் இந்திய அணியின் வெற்றிகளில் எதிரொலிக்கிறது" என்கிறார். சரிசமமான ஊதியம், WPL போன்றவை வளர்ச்சிக்கு வித்திட்டாலும், ஆடவர் கிரிக்கெட்டுக்கு கிடைக்கும் லைம்லைட், பெருந்திரள் ரசிகர் கூட்டத்தில் பாதியை கூட மகளிர் கிரிக்கெட் எட்டவில்லை. ஆனால், இந்த வாதத்தை முழுவதுமாக நிரஞ்சனா நாகராஜன் மறுக்கிறார். "நீங்கள், மகளிர் கிரிக்கெட்டை ஆடவர் கிரிக்கெட்டுடன் ஒப்பிடுவதே தவறு. மரபியல்ரிதியாக இரு தரப்புக்கும் நிறைய வேறுபாடுகள் உள்ளன. ஆடவர் கிரிக்கெட்டுக்கு இணையாக மகளிர் ஆட்டத்திலும் இப்போது பெரிய சிக்சர்கள் எல்லாம் பறக்கின்றன. ஊடக வெளிச்சம், ரசிகர்கள் ஆதரவு இல்லை என்பதை நான் முற்றிலுமாக மறுக்கிறேன். நடப்பு உலகக்கோப்பையில் இலங்கைக்கு எதிரான லீக் ஆட்டத்தை காண 22 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள்(22,843) கவுகாத்தி மைதானத்தில் குவிந்தனர். இந்த எண்ணிக்கையை கடந்த காலங்களில் கற்பனை செய்து கூட பார்க்க முடியாது." என்றார். பட மூலாதாரம், Getty Images படக்குறிப்பு, ஹர்மன்பிரீத் கவுர் அடுத்த பத்தாண்டுகள் எப்படி இருக்கும்? மகளிர் கிரிக்கெட்டின் சமீபத்திய வளர்ச்சிக்கு பிசிசிஐ அளித்த பங்களிப்பை மறுக்க முடியாது என்கிறார் கிரிக்கெட் வர்ணனையாளர் வித்யுத் சிவராமகிருஷ்ணன். CSK அணிக்காக தோனி தலைமையில் விளையாடிய வித்யுத், 11வது வீரராக களமிறங்கி ரஞ்சி கோப்பையில் சதமடித்த முதல் வீரர் என்ற சாதனைக்கும் சொந்தக்காரர். "கடந்த காலங்களில் இந்தியாவில் மகளிர் கிரிக்கெட்டுக்கு சரியான கட்டமைப்பு கிடையாது. ஊதியமும் மிகவும் சொற்பம் என்பதால், யாரும் கிரிக்கெட்டை ஒரு கரியர் வாய்ப்பாக பார்க்கவில்லை. ஆனால், WPL, ஆடவருக்கு இணையான ஊதியம் போன்றவற்றால் நிலைமை முற்றிலுமாக மாறியுள்ளது. உள்கட்டமைப்பை மேம்படுத்தியுள்ளதால், மகளிர் கிரிக்கெட்டர்களின் பீல்டிங், உடற்தகுதி போன்றவை கடந்த பத்தாண்டுகளில் முன்னேற்றம் கண்டுள்ளன. உலகளவில் மிகப்பெரிய ஜாம்பவான்கள் பங்கேற்கும் WPL, இந்திய மகளிர் கிரிக்கெட்டர்களுக்கு ஒரு வரப்பிரசாதம் என்றே சொல்ல வேண்டும். சமீப காலமாக நட்சத்திர வீராங்கனைகள் மட்டுமன்று உள்ளூர் கிரிக்கெட்டர்களும் WPL இல் முத்திரை பதித்துவருகின்றனர்." என்றார். அடுத்த பத்தாண்டுகளில் இந்தியா நிறைய உலகக்கோப்பைகளை கைப்பற்றும் என்று வித்யுத் சிவராமகிருஷ்ணன் நம்பிக்கை தெரிவிக்கிறார். "நடப்பு உலகக்கோப்பையை இந்திய அணி கைப்பற்ற அதிகபட்ச வாய்ப்புகள் உள்ளன. பிசிசிஐ தரும் கட்டமைப்பு வசதிகளை பயன்படுத்தி, நவீன கிரிக்கெட்டுக்கு இன்றியமையாத அம்சங்களான பவர் ஹிட்டிங் (power hitting) உள்ளிட்டவற்றை இந்திய மகளிர் கிரிக்கெட்டர்கள் மேம்படுத்திக் கொண்டுவருகிறார்கள்" என்றார். அங்கீகாரம் மறுக்கப்பட்டது அந்த காலம் அரை நூற்றாண்டுக்கும் மேலாக கிரிக்கெட் இதழாளராக உள்ள ஆர். மோகனிடம் இந்தியாவில் மகளிர் கிரிக்கெட்டின் வளர்ச்சிப் போக்கு பற்றி பேசினோம். 2006 இல் இந்திய மகளிர் கிரிக்கெட்டை பிசிசிஐ அமைப்பின் கீழ் முறையாக கொண்டுவந்த பிறகே நிலைமை மாறத் தொடங்கியது என்று கூறினார். "70–80களில் எல்லாம் மகளிர் கிரிக்கெட்டை யாரும் ஒரு பொருட்டாக கருத மாட்டார்கள். சாந்தா ரங்கஸ்வாமி உள்ளிட்ட நட்சத்திர வீரர்களை கிரிக்கெட் வட்டாரம் அறிந்திருந்தது. ஆனால், அவர்களுக்கு பெரியளவில் வாய்ப்புகளை அங்கீகாரமோ கிடைக்கவில்லை. கவாஸ்கர் போன்றவர்கள் மகளிர் கிரிக்கெட் வீராங்கனைகளை ஊக்குவிக்க வேண்டுமென விரும்பினர். ஆனால், நிறுவனங்களின் துணையின்றி தனிநபர்களால் ஓரளவுக்கு மேல் முடியவில்லை. உலகளவில் மகளிர் கிரிக்கெட்டில் ஏற்பட்ட மாற்றங்கள், 2006 இல் பிசிசிஐ மகளிர் கிரிக்கெட்டை அரவணைக்க வழிவகுத்தன. WPL, சரிசமமான சம்பளம் என தற்போது அது உச்சத்தை எட்டியுள்ளது" என்றார். நடப்பு உலகக்கோப்பையை இந்திய அணி கைப்பற்றினால், அது இந்திய மகளிர் கிரிக்கெட் வரலாற்றில் மைல்கல்லாக பார்க்கப்படும். ரசிகர்களின் நம்பிக்கையை பூர்த்தி செய்யுமா இந்திய அணி? - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு. https://www.bbc.com/tamil/articles/c5yqv93q634o
  7. படிச்சு படிச்சு சொன்னன் கேட்டியளே? 😂 கொஞ்ச நாளைக்கு எதுக்கெடுத்தாலும் பெயின்ற் வாளியை தூக்கி வெள்ளையடிக்கிற வேலை பாக்காமல் கள நிலவரத்தை பார்த்து வெளுத்து வாங்குங்கோ...🤣
  8. ஞாயிறு ...... இன்று ஒரு சுகமான ஒய்வு .......! 😃
  9. உங்க‌ட‌ பெறாம‌கள் கூடிய‌ சீக்கிர‌ம் குன‌மாக‌ க‌ட‌வுளை வேண்டுகிறேன்🙏🙏🙏...................
  10. 14 வயது நல்லது கெட்டதைச்சீர்தூக்கிப் பார்க்கத் தெரியாத வயது.மேலும் குறித்த மாணவி கடந்த ஒருவருட காலம்தான் குறித்த பாடசாலை விடுதியில் தங்கியிருந்து படிக்கிறார்.இயல்பாக பழகுவதற்கு இந்தக் காலம் போதுமானதாக இல்லீமல் இருக்கலாம்.பிறிதொரு பிரதேசத்தில் இருந்து வந்து குறித்த மாணவி முதலிடம் பெற்றது நெடுங்காலம் ஒன்றாகப் பழகிய மாணவிகளிடத்தில் ஒரு தாழ்வு மனப்பான்மையை தோற்றுவித்திருக்கலாம்.அதனால் அவர்கள் அந்த மாணவியை புறமொதுக்கி இருக்கலாம்.காலப்போக்கில் அவர்கள் சேர்ந்து நல்ல நணபர்களாக கூடிய வாய்ப்பு இருந்தது.தனிமைப்படுத்தப்பட்டதில் அந்த மாணவி உளவியல் ரீதியாகப் பாதிக்கப்பட்டிருக்கலாம்.காலம் காயங்களை ஆற்றியிருக்கும்.மாணவி அவரசரப்பட்டு விட்டார்.காரணம் வயது.யார்நம்மை புறக்கணித்தார்களோ அவர்கள் முன்னால் புறக்கணிக்க முடியாத சக்தியாக வளர்ச்சியடைந்து நிற்பதே தேவையானது.தேவையானது.உளவளக்கல்வி.விளையாட்டு உளவளத்தை சீராக்கும் என்பார்கள்.ஆனால் அந்த விளையாட்டே இங்கு வினையாகி இருக்கிறது.தோல்வி என்றும்நிலையானதல்ல என்பதைப் புரிய வைக்க வேண்டும்.
  11. ஹமாஸ் அனைத்து பணயக்கைதிகளையும் விடுவிக்க ஒப்புக்கொண்டது மற்றும் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்பின் அமைதித் திட்டத்திற்கு ஆதரவளித்தது. நீடித்த அமைதிக்கான பாதையில் நம்பிக்கையை வெளிப்படுத்தி, காசாவில் குண்டுவெடிப்பை உடனடியாக நிறுத்துமாறு டிரம்ப் இஸ்ரேலுக்கு உத்தரவிட்டார் - வெளிநாட்டு ஊடகங்கள்- adaderana.lk BBC NewsLive updates: Trump tells Israel to stop bombing Gaza as...The US president says he believes Hamas is "ready for a lasting peace", as the group seeks further negotiations on his peace proposal.
  12. வடமராட்சி கிழக்கு கெளரவ மதியாபரணன் ஆபிரகாம் சுமந்திரன் அவர்களின் பிறந்த பூமி. அவருக்கு தகவல் தெரிவிக்காமல் தள்ளித் திரிகின்றனர். முதலமைச்சர் கனவில் இருப்பவருக்கு தெரிவித்தால் உடனடியாக செயற்பட்டு புதிய பஸ்களைப் பெற்றுத் தருவார்😁
  13. வணக்கம், இப்படத்தை முழுமையாக பாருங்கள். இப்படத்தின் தயாரிப்புச் செலவை மீட்டெடுக்க நன்கொடை தாருங்கள். அந்த உதவி நாங்கள் மேலும் இத்தகையப் பணிகளைச் செய்ய உதவும். நன்றி Ramana Communications presents Thirukkural FULL MOVIE | IlaiyaRaja Musical | A.J. Balakrishnan | திருக்குறள் விமர்சனங்கள் தினமலர் வலைதளத்தில் வந்த விமர்சனத்தில், "படத்தின் முடிவில் வரும் போர்க்களக் காட்சிகள் மற்றும் மதுரை இலக்கியச் சங்கத்தில் திருவள்ளுவருக்கு கிடைக்கும் அங்கீகாரம் ஆகியவற்றை இயக்குநர் பாலகிருஷ்ணன் காட்சிப்படுத்திய விதம் ரசிக்கும்படியாக இருந்தது" என்று எழுதி மதிப்பீடுகளை வழங்கினர்.[5] இந்து தமிழ் திசை வலைதளத்தில் வந்த விமர்சனத்தில், "திருக்குறளின் மேன்மையை சிறந்த பொழுதுபோக்குப் படமாகக் கொடுத்திருப்பதற்காகவே இப்படத்தைக் குடும்பத்துடன் காணலாம்" என்று எழுதினர்.[6] தினத்தந்தி வலைதளத்தில் வந்த விமர்சனத்தில், "திருவள்ளுவர் காலத்தை கண்முன் நிறுத்தி, அதில் காதல், மோதல் உள்ளிட்ட பல்வேறு அம்சங்களை புகுத்தி ரசிக்க வைத்திருக்கிறார், இயக்குனர் ஏ.ஜெ.பாலகிருஷ்ணன். திருக்குறள் - பெருமை." என்று எழுதினர்.[7]
  14. தாங்கள் விண்ணிலும் மண்ணிலும் மக்களுக்கான பாதுகாப்பு விண்ணர்கள் என பறை சாற்றுபவர்கள் புலுடா விட தொடங்கி விட்டார்கள்.இப்படியான மேற்கத்தைய செய்திகளை கேட்டு இருண்டகண்ட மக்களும் கொடுப்புக்குள் சிரித்து மகிழ்கின்றார்களாம். இதற்குள் வேற்று கிரக வாசிகள் பூமிக்குள் நுழையாமல் பாதுகாக்கின்றோம் என அறிக்கைகள் வேறு.
  15. யாழ்ப்பாண பெருமை திமிர் சாதி பார்க்கும் ஊத்தைப் பழக்கங்கள் ஒழிய வேண்டும். அரசும் மற்றய இடங்களில் நல்ல கல்வி கற்க முடியும் என்ற நிலையை ஏற்படுத்த வேண்டும்.
  16. மாணவி தவறான முடிவு எடுத்துள்ளார். அவருக்கு தகுந்த அறிவுரை, அத்துடன், தேவையான ஆதரவு, உதவி கொடுக்க வேண்டும். சாதி, சமூக பிரச்சனைகளை இதற்குள் இழுக்கத்தேவை இல்லையே? பழிவாங்கும் மனநிலையும் மாடியில் இருந்து குதிக்க காரணமாக அமையலாம் அல்லவா?
  17. உங்களுட்ட தட்டிவான் நிறய இருக்குத்தானே....அத எடுத்து ஓடுங்க சார் எண்டு சந்திரசேகர் சொன்னாலும் சொல்லுவார்.😁
  18. விஜயின் கரூர் சம்பவத்தை போல் சீமான் அவர்களது பிரச்சார கூட்டத்தில் ஏதாவது அசம்பாவிதம் நடந்திருந்தால் ஆமையோட்டுடன் ஒரு கேலிச்சித்திரம் கட்டாயம் வரைந்திருப்பீர்கள் என நான் நம்புகின்றேன்.😂 நேசமானவர்கள் எது செய்தாலும் கை துடிக்காதாக்கும். 🙃 சும்மாபகிடிக்கு😃
  19. உப்பிடித்தான் உங்கை/இஞ்சை எண்டு கனபேர் பொதுவெளியிலை சாமியும் இல்லை சாம்பிறானியும் இல்லை எண்டு முழங்கிப்போட்டு வீட்டுக்க போனால் கப்சிப்.😂 சினிமா பாட்டுக்கள் கேட்பதில்லையோ? எதுக்கும் குசினிக்கை போய் புட்டுக்குழல் எந்த நாட்டு தொழில்நுட்பம் எண்டதை ஒருக்கால் பாருங்கோ 🤣
  20. முன்னாள் திமுக MLA சங்கரவள்ளியின் மகன் தான் நீதிபதியாம்.. அதனால் நியாயமா இருப்பார் என்று நம்புகிறேன். Sooriya Prakash ################# ################## நீதியரசர் இல்ல விழாவில் கலந்து கொண்ட நம்ம முதல்வர். நீதிதான் மறைந்தது விஜய் மறையவில்லை அவரின் புகழ் பலமடங்கு ஏறிக்கொண்டுள்ளது. Er. K. Arumugam
  21. முடிந்த அளவு எண்டால் அது எந்த அளவு? 😂 உங்கட வீட்டு சாவியை ஒருக்கால் தரமுடியுமா? ஒருக்கால் வீட்டுக்குள்ள இருக்கிற தட்டுமுட்டு சாமான்களை செக் பண்ணி பார்க்க வேணும். 🤣
  22. சக மாணவிகள் விலகி இருந்தனரா? அல்லது bullying செய்தனரா என்றும் விசாரிக்கவேண்டும். யாழ்ப்பாணத்தில் பெருமையும் திமிரும் பிடித்தவர்கள் பிற மாவட்டங்களைச் சேர்ந்தவர்கள் நன்றாகப் படித்தால், விளையாட்டுக்களில் முன்னிலையில் இருந்தால் அல்லது பெரிய பதவிகளில் இருந்தால் (அமைச்சர் சந்திரசேகர், யாழ்.போதனா வைத்திய சாலையின் பணிப்பாளர் சத்தியமூர்த்தி ) பொறாமை கொள்ளுவது காலம் காலமாக இருந்துவருகின்றது. இப்படியான ஊத்தைப் பழக்கங்களை பாடசாலையில் வளரவிடக்கூடாது. பாதிக்கப்பட்ட மாணவி மனதைரியத்தை வளர்த்து, மீண்டும் நலமாகி ஓட்டத்தில் முதலாவதாக வரவேண்டும்.
  23. அந்த மாணவி விளையாட்டுப் போட்டியில் முதல் இடத்தைப் பெற்று இருந்தால்… மற்றைய மாணவிகள் அவரை பாராட்டி இருப்பது தான், நல்ல ஒரு பண்பாக இருந்திருக்கும். அதனை விடுத்து எரிச்சல், பொறாண்மை பட்டு… வெற்றி பெற்ற மாணவியை ஒதுக்கி வைத்தது எவ்விதத்திலும் நியாயம் அல்ல. இந்தப் பிரச்சினை மேலும் விஸ்வரூபம் எடுத்து தற்கொலை வரை செல்ல முன்…. பாடசாலை அதிபரும், ஆசிரியர்களும், பெற்றோரும் அந்த மாணவிகளிடம் ஒற்றுமையை ஏற்படுத்த அவசரகதியில் முன்வர வேண்டும்.
  24. இந்த அரட்டை அப்பை நான் தவிர்கிறேன் இது வாட்சப்பின் மார்கெட்டின் ஒரு பங்கையாவது பிடிக்க இறக்கப்பட்ட இந்தியாவின் அப். முடிந்தளவு made in India வை நான் தவிர்ப்பதுண்டு. இதில் தகவல் பாதுகாப்பு உத்தரவாதம் எப்படி இருக்கும் ? இந்திய தயாரிப்பு தரம் நாம் அறிந்ததே. நாளைக்கே உங்கள் தகவல் முழுவதும் dark web இல் கூவி, கூவி விற்கப்படும். இந்த வேம்பு மாமா ஒரு அக்மார்க சங்கி. தமிழர்கள் நஞ்சை கூட நஞ்சு என தமிழில் பெயர் வைத்தால் முண்டியட்டித்து வாங்கி குடிக்கும் கூட்டம் என்பதை அறிந்தோ என்னமோ அரட்டை என்ற பெயரோடு வருகின்றனர். தூக்கி எறிவோம் அரட்டையை.
  25. மகா பிரபுவே வணக்கங்கள் பல.🙏🙂‍↕️ திருநெல்வேலிகாரன் ########################## எலி, ஏன்... ஜட்டி போட்டுக் கொண்டு ஓடுது என்று பார்த்தேன். இப்படிப் பட்டவரிடமிருந்து வேறு எதை எதிர்பார்க்க முடியும். ஒரு கட்சிக்கு சார்பானவர் நீதிபதியாக இருக்கும் தகுதியை இழந்து விட்டார்.
  26. வங்காளதேசத்திலும் பெண்கள் கிரிக்கெட் விளையாடுகின்றார்கள் என்று எனக்கு முன்னரே ஒருவரும் சொல்லவில்லை..................... ஏதோ எட்டாவது அணியாக உள்ளே பிடித்துப் போட்டிருக்கின்றார்கள் என்று நான் நினைத்துவிட்டேன்....................😜. 'இன்று கறுப்பு பிட்சில் வெள்ளைப் பந்து போட்டார்கள்................' என்று கலர் கலராக காமெண்ட்ரி சொல்லும் வசீயின் காமெண்ட்ரி மிஸ்ஸிங்..............❤️.
  27. எனது பெறாமகன் ஒருவர் கொஞ்சம் கடுமையான சுவீனத்தால் ஆஸ்பத்திரியில் இருப்பதால் அங்கும் இங்கும் ஓடித்திரியவே நேரம் போய் விடுகின்றது பையா .......அதுதான் அதிகம் இங்கு மினக்கட முடியவில்லை . ....... பார்க்கலாம் .......! 🙂

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.