Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Leaderboard

  1. suvy

    கருத்துக்கள உறவுகள்
    8
    Points
    33600
    Posts
  2. தமிழ் சிறி

    கருத்துக்கள உறவுகள்
    5
    Points
    87988
    Posts
  3. புரட்சிகர தமிழ்தேசியன்

    கருத்துக்கள உறவுகள்
    5
    Points
    16468
    Posts
  4. ஈழப்பிரியன்

    கருத்துக்கள உறவுகள்
    4
    Points
    20010
    Posts

Popular Content

Showing content with the highest reputation on 11/15/25 in all areas

  1. Posted inStory “சவ்வு மிட்டாய்காரர் (90 கிட்ஸ்)” சிறுகதை – கு.மணி Posted byBookday04/11/2025No CommentsPosted inStory “சவ்வு மிட்டாய்காரர் (90 கிட்ஸ்)” சிறுகதை – கு.மணி பப்பர …. பப்பர …. பப்பர … ஒலிச் சத்தம் மாணவர்களின் காதுகளை கிழித்தது. சவ்வு மிட்டாய்காரர் தகரத்தால செய்யப்பட்ட நீண்ட புனல் போன்ற வடிவில் செய்யப்பட்ட ஒலி வாங்கிக்கொண்டு ஊதி கொண்டிருந்தார். ஊராட்சி ஒன்றிய துவக்கப் பள்ளியின் மாணவர்கள் காசிருப்போர் படையெடுத்து வந்தனர் சவ்வு மிட்டாய் வாங்கிட. ராமண்ணாவின் சவ்வு மிட்டாய்க்கு பெரியவர் முதல் சிறியவர் வரை அடிமை. அவரின் ஊதல் சப்தம் கேட்டாலே பலர் அவர் முன் குவிந்திடுவர் காரணம் அவரது சவ்வு மிட்டாய் மட்டுமல்ல. அந்த சவ்வு மிட்டாயை சுற்றி இருக்கும் மூங்கில் மேலே இருக்கும் பொம்மையின் கைத்தாளத்தை வேடிக்கை பார்ப்பதற்கே ஒரு கூட்டம் கூடிவிடும். ராமண்ணா மிகவும் நல்லவர். அவரின் பரம்பரையே சவ்வுமிட்டாய் தொழில் செய்பவர்கள். ராமண்ணா காலை 4 மணிக்கெல்லாம் எழுந்து சவ்வுமிட்டாய் தயாரிக்க ஆரம்பித்துவிடுவார். சீனி பாகு, லெமன், கலர் முதலியவற்றை சரியான முறையில் கலந்து பக்குவப்படுத்தி அதை இழுத்துப் பார்த்து நீண்ட பெரிய மூங்கிலிலே சுற்றி விடுவார். அதன் மீது ஈக்கள் புகாத வண்ணம் தரமான சவ்வுக்காகிதம் கொண்டு சுற்றிவிட்டு மூங்கிலின் மேலே அழகிய பொம்மை ஒன்றை வைத்து அதற்கு சட்டை, பாவாடை முதலியவற்றை அணிவதோடு பொம்மை காதினில் கடுக்கணும் மூக்கினில் மூக்குத்தியும் பொம்மையின் இரு கைகளிலும் வட்டமான ஜால்ரா கருவி (சிஞ்சா) யை பொருத்திவிட்டு மூங்கிலை தனது தோளிலே சுமந்தபடி 8 மணிக்கெல்லாம் ஆரம்பப் பள்ளியின் வாசலுக்கு வந்து விடுவார். அதன் பின்பு உயர்நிலைப்பள்ளி மற்றும் ஊர் சுற்றுவது என்று வாடிக்கையாக கொள்வார். ராமண்ணா காலை 8 மணிக்கு ஆரம்பப் பள்ளி வாசல் வந்தவுடன் அவரது பப்பர பப்பர ஓசை முழங்கிடும். ஆரம்பப்பள்ளியின் அருகே ஒருமணி நேரம் வியாபாரம். உணவு இடைவேளையின் போது உயர்நிலைப்பள்ளிஅருகே வியாபாரம் அதன் பின்பு ஊர் சுற்றி வியாபாரம் என வாடிக்கையாக வியாபாரம் செய்பவர். இவரின் ஊதல்சத்தம் கேட்டாலேசிறுவர் சிறுமியர் ஆர்வத்துடன் வெளியே வருவர். ராமண்ணா ராமண்ணா எனக்கு ஒரு வாட்ச், அன்னம், ரயில், வாத்து என மாணவர்கள் அனைவரும் அவரிடம் துளைத்துக் கொண்டு கேட்பர். ராமண்ணா ஒரு மிட்டாய்க்கு ஒரு விலை வைத்திருப்பார் 10 பைசா 20 பைசா 25 பைசா என டிசைனுக்கு தகுந்தவாறு சவ்வு மிட்டாயின் விலை அதிகரிக்கும். அதிகமாக வாட்ச் விற்பனையாகும். ஓசி மிட்டாய் கேட்டு ராமண்ணாவை குழந்தைகள் நச்சரிக்கும். சிறிது சவ்வுமிட்டாயைப் பிய்ந்து அவர்களது கன்னங்களில் ஒட்டி விடுவார். எந்தவித கள்ளம், கபடம் இல்லாது. குழந்தைகளைக் கூட அய்யா அம்மா என்றுதான் அழைப்பார். குழந்தைகளுக்கு ராமண்ணா மீது தனிப்பிரியம் இதுபோன்றுதான் உயர்நிலைப் பள்ளியிலும் விற்பனை.. அதோடு மட்டுமல்லாது ஊர் முழுவதும் வலம் வருவார். ஆண்கள், பெண்கள் என எல்லோரும் தங்களுக்குப்பிடித்த சவ்வுமிட்டாயை விரும்பிச் சாப்பிடுவர். யாரிடமும் கடுகடு என்று விழமாட்டார். யாராவது பையன் ராமண்ணா கடன் கொடுங்கள் நாளைக்கு தருகிறேன் என்றால் தம்பி இந்த வயதில் கடன் வாங்காதீர்கள் அது நல்ல பழக்கம் இல்லை. உங்களுக்கு சவ்வுமிட்டாய் வேண்டுமென்றால் வாங்கிக் கொள்ளுங்கள் என்று அன்புடன் இலவசமாக கொடுப்பார்.இதுவே அவர் வாழ்வின் வாடிக்கையாகிப்போனது. ஒருநாள் காலை தன் வேலையெல்லாம் முடித்துவிட்டு காலை 8 மணிக்கு தனது பப்பரப் பப்பர ஓசையை குழந்தைகளுக்கு அறிவித்தார். குழந்தைகள் வழக்கம்போல் சவ்வுமிட்டாய் வாங்க வந்தன. மூங்கிலில் உள்ள குச்சியில் உள்ள பொம்மையை கைத்தாளம் போட வைத்தார். குழந்தைகளும் அந்த பொம்மை போல கைத்தளம் போட்டுக்கொண்டு ஆடத் தொடங்கினார்கள். ராமண்ணா சவ்வு மிட்டாய் விற்பனை செய்து கொண்டிருந்தபோதே நிலை தடுமாறி கீழே விழுந்தார் சவ்வுமிட்டாய் மூங்கில் கட்டை “டம்“ என கீழே விழுந்தது. சில குழந்தைகள் பயந்து போய் ஓட்டம் பிடித்தன. சில குழந்தைகள் ராமண்ணா ராமண்ணா என்று எழுப்பி பார்த்தனர் .அவர் எழுந்தபாடில்லை. குழந்தைகள் ஆசிரியைரை நோக்கி படையெடுத்தனர்.சார் ராமண்ணா கீழே விழுந்து விட்டார் சார் அவருக்கு என்னாச்சு என்று தெரியவில்லை. குழந்தைகள் மாணிக்கம் ஆசிரியரிடம் சொல்ல அவருடன் கமலா டீச்சரும் சென்றார்.. மாணிக்கம் அருகில் வந்து அவரது கை கால்களை கசக்கி விட்டனர். ஒன்றும் உணர்வில்லை. சுற்றிவர குழந்தைகள் நின்று கொண்டு அழுதவாறு இருந்தன. ராமண்ணாவிற்கு ஒன்றுமில்லை அவரை ஹாஸ்பிடலுக்கு கொண்டு போனால் சரியாயிடும். நீங்க எல்லோரும் அவரவர் வகுப்பிற்கு போங்க கமலா டீச்சர் அறிவுரை. மனமில்லாமல் கண்கலங்கியவாறே குழந்தைகள் வகுப்புக்குச் சென்றனர். சார் முதல்லே ராமண்ணா வீட்டிற்கு தகவல் தெரிவியுங்கள். ஆம்புலன்ஸ்க்கு போன் செய்யுங்கள் மதிவண்ணன் ராமண்ணா குடும்பத்திற்கு தகவல் தந்த பின்பு பள்ளியின்அருகில் தொலைபேசி உள்ள வீட்டிற்குச்சென்று ஆம்புலன்ஸிற்கு போன்செய்தார்.. சிறிது நேரத்திற்கு பின்பு ராமண்ணாவின் உறவுகள் அனைத்தும் பதறி அடித்தபடி பள்ளிக்கு அருகில் வந்தனர். ஆம்புலன்சும் வந்தது. சார் யார் போன் செய்தது? நான் தான் சார். என் பெயர் மாணிக்கம் இந்த ஸ்கூல் டீச்சரா ஒர்க் பண்றேன். மாணிக்கம் அண்ணன் சவ்வுமிட்டாய் வித்துக் கொண்டிருக்கும்போதே மயங்கி விழுந்து விட்டாருன்னு குழந்தைகள் வந்து சொன்னாங்க அதான் உடனே உங்களுக்கு கால் பண்ணினேன் ஆம்புலன்ஸில் வந்த நர்ஸ் உதவியாளர்கள் ராமையாவை தொட்டுப் பார்த்தார்கள். சார் உயிர் போய் கிட்டத்தட்ட முக்கால் மணி நேரத்திற்கு மேலே ஆகிருச்சு மாரடைப்பால் உயிர் பிரிஞ்சிடுச்சு. ஆக வேண்டிய காரியத்தை குடும்பத்தில் உள்ளவரிடம் சொல்லி பார்க்கச் சொல்லுங்க. இது இயற்கை மரணங்கிறதுனாலா தாரளமா பிணத்தை வீட்டுக்கு எடுத்து சொல்லுங்க இருந்தாலும் சில பார்மாட்டிகளை முடித்து தருகிறோம். ராமண்ணாவின் மனைவி, மகன் உறவினர் என கதறி அழுதனர். பள்ளிக்கூடம் விடுமுறை அளிக்கப்பட்டது. தலைமை ஆசிரியர் ஏ.இ.ஓ விடம் அனுமதி வாங்கி பள்ளிக்கு விடுமுறை அளித்தார். குழந்தைகள் அழுது கொண்டே தங்களின் வீட்டிற்கு சென்றனர் ராமண்ணாவின் உடல் ஆம்புலன்ஸில் ஏற்றப்பட்டு அரசு மருத்துவமனைக்கு எடுத்து செல்லப்பட்டது. குழந்தைகள் கனத்த இதயத்துடன் அவரவர்கள் வீட்டிற்கு சென்றனர். மாலை ராமண்ணாவின் இறுதிச் சடங்கு நடைபெற்றது. சுடுகாடு எடுத்துச் செல்லப்பட்டது. நீ இறந்த பின்பு உன் பின்னால் வரும் கூட்டமே உன்னை முடிவு செய்யும் என்பார். முஃ ப்தி ஓமர். அதுபோல ராமண்ணாவின் இறுதி சடங்கில் நூற்றுக்கணக்கானோர் கலந்து கொண்டனர். ஆசிரியர்கள், பொதுமக்கள் என பலர் கலந்து கொண்டனர். இவற்றிற்கெல்லாம் காரணம் ராமண்ணாவின் நல்ல உள்ளமும் அவரின் சவ்வுமிட்டாய் ருசியும் தான். மறுநாள் காலை எட்டு மணி ராமண்ணாவின் “ பப்பரப் பப்பர“ ஒலி ஏதும் கேட்கவில்லை. குழந்தைகள் அவர் விற்கும் இடத்தையே வெறித்துப் பார்த்துக் கொண்டிருந்தனர். ராமண்ணா மிட்டாய் செய்து தருவது போன்றும் அந்த பொம்மை தாளமிடுவது போன்ற காட்சிகள் அந்த குழந்தைகளின் நெஞ்சை விட்டு நீங்கவில்லை. ஒவ்வொருவராக வந்து அந்த இடத்தை பார்த்துவிட்டு அழுதபடியே பள்ளிக்குள் சென்றனர். இப்படியே ஒரு மாதம் கழிந்தது திடீரென்று மீண்டும் “பப்பரப்பப்பர“ சத்தம் குழந்தைகளுக்கு ஒன்றும் விளங்கவில்லை. ஓடிவந்து பள்ளியின் நுழைவாயில் கேட்டருகே வந்து நின்றனர். ராண்ணாவின் மகன் முருகன் அந்த இடத்தில் சவ்வுமிட்டாய் விற்றுக் கொண்டிருந்தார். குழந்தைகள் அவரிடம் செல்ல தயக்கம் காட்டினர். அவரும் அப்பா போல அய்யாவே அம்மாவே வாங்க என்று அன்பாய் அழைத்தார். குழந்தைகள் ராமண்ணா இறந்து போயிட்டாரா? அவரு யாரு உங்க அப்பாவா? உங்க பேரு என்ன? என்பேரு முருகன். நாங்க உங்களை முருகண்ணா என்று கூப்பிடலாமா? தாரளமாக் கூப்பிடுங்க முருகன்னா எனக்கு ஒரு வாட்ச் கட்டி விடுங்க எனக்கொரு மயில் வேணும் ”தந்தை சொல் மிக்க மந்திரமில்லை” என்பதை உணர்ந்த மகன் முருகன் ஒவ்வொருவருக்கும் கண்ணீர் வடித்தபடியே சவ்வு மிட்டாய் விற்பனையை தொடங்கினார். ராமண்ணா : சாரி முருகண்ணா! நாளைக்கும் வாங்க. அப்பா மாதிரியே சவ்வுமிட்டாய் ருசி அப்படியே இருக்கு என்ற குழந்தைகளின் பேச்சு முருகனுக்கு ஆறுதல் தந்தது. பப்பர பப்பர ஒலி மீண்டும் கேட்டது. குழந்தைப்பொம்மையின் கைதட்டல் சிறார்களை மகிழ்வித்தது. எழுதியவர்: – கு. மணி த/பெ:குருசாமி தெற்குப்புதுத் தெரு சக்கம்பட்டி -625512 ஆண்டிபட்டி வட்டம், தேனி மாவட்டம் https://bookday.in/90s-kids-javvu-mittaikarar-tamil-short-story-written-by-k-mani/
  2. உள்ளதை சொல்வேன் .........! 😍
  3. இன்னுமா கையெழுத்து ......... கணனியில் எழுதச்சொல்லுங்கள் ........நானே கணனியில் அடிக்கிறன் ..........! 😇
  4. என்ன இப்படி சொல்லுறியள் . ...... அவர் வியர்வையை புறங்கையால் துடைத்து விட்டுத்தானே முன் கையால் இழுத்து இழுத்து வாட்ச் எல்லாம் செய்து தாறவர் .........பிறகென்ன வருத்தம் . ....... ( அப்பா இருந்த நோயெதிர்ப்பு சக்திதான் இப்பவும் எங்களைக் காப்பாற்றுது )........! 😂
  5. கனேடிய தம்பதியரை விமானத்தில் ஏற அனுமதி மறுத்த விமான நிறுவனம்: 7,000 டொலர்கள் இழப்பீடு வழங்க உத்தரவு கனடாவின் ஒன்ராறியோவில் வாழும் ஒரு இந்திய தம்பதியர் திருமணமாகி முதன்முறையாக வெளிநாடு சென்றிருந்த நிலையில், கனேடிய விமான நிறுவனம் ஒன்று அவர்களை மோசமாக நடத்தியுள்ளது. ஒன்ராறியோவில் வாழ்ந்துவரும் பார்வதி (Parvathy Radhakrishnan Nair) மிதுன் (Midhun Haridas) தம்பதியர், திருமணமாகி முதன்முறையாக டொமினிக்கன் குடியரசுக்கு சுற்றுலா சென்றுள்ளனர். சுற்றுலா முடிந்து வீடு திரும்பும் நேரத்தில் அவர்கள் விமான நிலையத்தில் சந்தித்த அனுபவம், அவர்கள் இவ்வளவு நேரம் செலவிட்ட இனிமையான நேரத்தை மறக்கச் செய்யும் அளவுக்கு மோசமாக இருக்கும் என அவர்கள் சற்றும் எதிர்பார்த்திருக்கமாட்டார்கள். கனடா திரும்புவதற்காக, Punta Cana சர்வதேச விமான நிலையத்தில் Air Transat நிறுவனத்தின் விமானத்தில் ஏறுவதற்காக தம்பதியர் செல்ல, அங்கு அவர்கள் வித்தியாசமாக நடத்தப்பட்டுள்ளார்கள். பார்வதி அங்குள்ள வாடிக்கையாளர் சேவை மையத்தை அணுகி, தன்னிடம் இந்திய பாஸ்போர்ட்தான் உள்ளது, கனேடிய பாஸ்போர்ட் இல்லை, தாங்கள் அதற்கென தனியான வரிசை எதிலாவது நிற்கவேண்டுமா என தனது சந்தேகத்தை வெளிப்படுத்த, அவர்களை தனியாக நிறுத்திய வாடிக்கையாளர் சேவை மைய அலுவலர் ஒருவர், ஒரு சிவப்புக் கோட்டுக்கு பின்னால் நிற்கும்படி கூறியிருக்கிறார். மற்றவர்கள் ஒவ்வொருவராக விமானத்தில் ஏற அனுமதிக்கப்பட பார்வதி, மிதுன் தம்பதியர் மட்டும் அங்கேயே நிறுத்தப்பட்டிருக்கிறார்கள். தாங்கள் வேண்டுமென்றே வித்தியாசமாக நடத்தப்படுவதை உணர்ந்த தம்பதியர், நடப்பதை வீடியோ எடுக்கத் துவங்க, அந்த வாடிக்கையாளர் சேவை மைய அலுவலர் பார்வதியை திட்டியிருக்கிறார். தங்களிடம் பாஸ்போர்ட்டும் பயணச்சீட்டும் இருந்தும் ஏன் தங்களை மட்டும் விமானத்தில் ஏற அனுமதிக்கவில்லை என தம்பதியர் கேட்க, உங்களை விமானத்தில் ஏற அனுமதிக்கவேண்டுமானால் நீங்கள் எடுத்த வீடியோ மற்றும் புகைப்படங்களை அழிக்கவேண்டும் என்று கூறியுள்ளார் அந்த அலுவலர். வேறு வழியில்லாமல் கடைசி நேரத்தில் ஏர் கனடா விமானம் ஒன்றில் விலை அதிகமான பயணச்சீட்டு வாங்கி தாமதமாக வீடு திரும்பியுள்ளனர் தம்பதியர். தாங்கள் சந்தித்த மோசமான விடயத்தை நீதிமன்றம் கொண்டு செல்ல முடிவு செய்த தம்பதியர், small claims court என்னும் நீதிமன்றத்தை அணுக, நடந்ததை அவர்கள் வீடியோ எடுத்ததற்காக Justice Marcel Mongeon என்னும் நீதிபதி அவர்களை பாராட்டியுள்ளார். இதுபோன்ற விடயங்களின்போது, வெறுமனே புகாரளிக்காமல், இதுபோல் வீடியோ ஆதாரங்கள் கொடுப்பதால், என்ன நடந்தது என்பதை நீதிபதி தனது கண்ணாலேயே பார்க்கமுடியும் என்றும் கூறியுள்ளார் நீதிபதி. அந்த வாடிக்கையாளர் சேவை மைய அலுவலர் பார்வதி மிதுன் தம்பதியரை நடத்திய விதத்தைக் கண்ட நீதிபதி விமான நிறுவனத்திடம் விளக்கம் கேட்க, தம்பதியரால் பாதுகாப்புப் பிரச்சினைகள் ஏற்படுமென தாங்கள் எண்ணியதாக விமான நிறுவனம் தெரிவித்துள்ளது. அப்படி அவர்களால் பாதுகாப்பு பிரச்சினை ஏற்படும் என்றால், வீடியோவை அழித்துவிட்டால் உங்களை விமானத்தில் ஏற அனுமதிப்பேன் என அந்த வாடிக்கையாளர் சேவை மைய அலுவலர் எப்படிக் கூறினார்? வீடியோவை அழித்துவிட்டால் பாதுகாப்பு பிரச்சினை சரியாகிவிடுமா? அவர்கள் அதற்கு அடுத்தபடியாக ஏர் கனடா விமானத்தில் வீடு திரும்பியுள்ளார்களே, அவர்களால் பாதுகாப்பு பிரச்சினை ஏற்படும் என்றால் ஏர் கனடா விமான நிறுவனம் அவர்களை எப்படி விமானத்தில் ஏற அனுமதித்தது என்றும் கேள்வி எழுப்பியுள்ளார் நீதிபதி. ஆக, பார்வதி, மிதுன் தம்பதியருக்கு Air Transat விமான நிறுவனம் 7,000 டொலர்கள் இழப்பீடு வழங்கவேண்டும் என உத்தரவிட்டுள்ளார் நீதிபதி. https://akkinikkunchu.com/?p=348636
  6. மருதங்கேணியார் இருவருக்கும் நேரம் மிகுதி என்று எழுதியிருந்தபடியால், சரி, இந்த விடயம் அப்படியே போகட்டும் என்று விட்டுவிட்டேன், கோஷான். நீங்கள் 1987ம் ஆண்டைக் குறிப்பிட்டவுடன், மருதங்கேணியாருடன் பகிடியாக எழுத நினைத்த விடயம் மீண்டும் நினைவில் வந்துவிட்டது................ 1987ம் ஆண்டு தான் என்னுடைய ஏ லெவல் வருடம். மே மாதம் 25ம் திகதி இரவு வல்வைக் கல்வி மன்றத்தில், அந்த நாட்களில் இது ஒரு தனியார் கல்வி நிலையம், சேர்ந்து படிப்பதற்காக நண்பர்கள் பலர் ஒன்றாக இருக்கின்றோம். அங்கேயே தான் அநேக நாட்களில் நித்திரையும் கொள்வோம். பலரும் ஒன்றும் படிப்பதில்லை. நன்றாக கதைத்து விட்டு, ஏதாவது சாப்பிட்டு விட்டு நித்திரையாகிவிடுவார்கள். ஒரு சிலர் பின்னர் இருந்து படிப்பார்கள். அன்றிரவு இலங்கை இராணுவத்தின் லிபரேஷன் ஆபரேஷன் ஆரம்பித்தது. ஒன்றாக ஓட ஆரம்பித்தோம். ஒவ்வொரு ஊராக நாங்களும் சேர்ந்தே பின்வாங்கிப் போனோம். அப்பொழுது சூசை தான் எங்கள் பிரதேச பொறுப்பாளர். இரண்டாம் நாள் இரவு. கற்கோவளம் கடற்கரையில் படுத்திருந்தோம். இராணுவம் முள்ளியிலும் இறங்கி விட்டார்கள் என்றார்கள். அதற்கு சாட்சியாக அந்தப் பக்கமாக வானம் பிரகாசமாக இருந்தது. இனிமேல் இங்கிருந்தால் எங்கள் எல்லோரையும் கடல் உட்பட நான்கு பக்கங்களாலும் சுற்றி வளத்துவிடுவார்கள் என்று நடுநிசியின் பின் வடமராட்சி கிழக்கு நோக்கி கடற்கரையால் நடந்தோம். அடுத்த நாள் பகல் பொழுதில் உடுத்துறையைப் போய்ச் சேர்ந்தோம். உடுத்துறையில் இருந்த நாட்களில் மருதங்கேணியினூடாக பளைக்கு போய் வந்து கொண்டிருந்தோம். இந்த ஊர்கள் எல்லாமுமே அப்பொழுது தான் தெரியவந்தன. 1987ம் ஆண்டின் பின் நான் மீண்டும் அந்தப் பக்கங்களுக்கு போகவில்லை. இப்பொழுது யாழில் மீண்டும் மருதங்கேணியார் அந்த நாட்களை நினைவுபடுத்துகின்றார்..................🤣. பின்னர் உடுத்துறையிலிருந்தும் இடம்பெயர வேண்டியதாக ஆனது. உடுத்துறைக்கு கீழே ஆனையிறவு இராணுவ முகாம். அங்கிருந்தும் இராணுவம் வடமராட்சி நோக்கி வரப் போகின்றார்கள் என்று ஒரு செய்தி வந்தது....................... கடைசியில் பார்த்தால் உயிருடன் வாழ்வதே ஒரு போனஸ் போலவே தெரிகின்றது........... இதில் அமெரிக்காவிற்கு ஆதரவா, அல்லது ரஷ்யாவிற்கு ஆதரவா என்றால்............ கற்கோவளம் கடற்கரை தான் கண்ணில் தெரிகின்றது..................😜.
  7. சுமந்திரனே ... 15,000 ஓட்டு வாங்கி, பாராளுமன்றம் போக முடியாமல் தோற்ற ஆள். அவரிடம் போய், ஆட்சியை கவிழ்க்க வரச் சொல்லி, ஆதரவு கேட்குது நாமல்.... சுமந்திரனுக்கு.... துணிவு இருந்தால், நாமலின் கூட்டத்திற்கு ஒருக்கால் போய் பார்க்கட்டுமன்.
  8. Farvin Ishak · Suivre rsodtnoSep1elifbumu34 29u:9rl005 7othm1,0a3tneu01v7gu85t3641 · ஒரு ஊரில் ஒரு கோடீஸ்வரன் இருந்தான். அவனுக்குக் கடுமையான தலைவலி ஏற்பட்டது. பல ஊர்களிலிருந்து மிகப் பெரிய வைத்தியர்கள் வந்து பார்த்தும், வண்டி வண்டியாக மருந்துகள் சாப்பிட்டும் அந்தத் தலைவலி குணமாகவில்லை. ஒருநாள் அந்த ஊருக்கு ஒரு சன்யாசி வந்தார். அவர் பணக்காரனை வந்து பார்த்தார். பார்த்துவிட்டு, அவருக்கு ஏற்பட்ட தலைவலிக்குக் கண்ணில் இருக்கும் ஒரு நோயே காரணம் என்று கூறினார். அந்தக் கண்ணைக் குணப்படுத்த ஒரே ஒரு வழிதான். அந்தப் பணக்காரன் பச்சை நிறத்தைத் தவிர வேறெதையும் பார்க்கக்கூடாது என்று கூறிவிட்டுப் போய்விட்டார். பணக்காரன் முதலில் தன் வீட்டில் இருக்கும் எல்லாவற்றையும் பச்சையாக மாற்றினான். தலைவலி குணமாகி விட்டது. சன்னியாசி கூறியது சரிதான். உடம்பு சரியாகவே வீட்டைவிட்டு வெளியே போகத் தொடங்கினான். வெளியே போனால், இயற்கை எல்லா வண்ணங்களையும் அள்ளித் தெளித்திருந்தது. ஆனால், அவற்றைத் தான் அவன் பார்க்கக்கூடாதே! நிறையப் பச்சைப் பெயிண்டையும் பிரஷ்ஷையும் கொடுத்து சில ஆட்களை நியமித்தான். அவன் போகும் வழியில் இருக்கும் ஆடு, மாடு, மனிதர், குடிசை, வண்டி, மேசை, நாற்காலி எல்லாவற்றுக்கும் பச்சை நிறத்தை அடிப்பது அவர்களுடைய வேலை. அவர்களும் முதலாளி சொன்னபடியே செய்து வந்தார்கள். சில மாதம் கழித்து மீண்டும் சன்னியாசி அதே ஊருக்கு வந்தார். வேலையாட்கள் அவரைத் தடுத்து நிறுத்தி, அவர் மீதும் பச்சை வண்ணம் அடிக்கப் போனார்கள். சன்னியாசிக்கு ஆச்சரியமாகிவிட்டது. காரணம் கேட்டார். அவர்கள் ‘தங்கள் முதலாளியின் கட்டளை இது’ என்று கூறினார்கள். சன்னியாசி அதற்கு, “என்னை உங்கள் முதலாளியிடம் அழைத்துப் போங்கள்” என்றார். பணக்காரனுக்குத் தன் நோயைக் குணப்படுத்திய சன்னியாசி மீண்டும் வந்ததைக் கண்டு ஒரே மகிழ்ச்சி. வணங்கி அவரை உபசரித்தான். “இந்த ஊரில் எல்லாவற்றுக்கும் ஏன் பச்சைப் பெயிண்ட் அடிக்கிறீர்கள்?” என்று சன்னியாசி கேட்டார். “ஐயா, நீங்கள் சொன்னபடிதான் நான் செய்கிறேன்” என்றான் அவன் மிகப்பணிவோடு. “நான் என்ன சொன்னேன்?” என்றார் சன்னியாசி. “பச்சைநிறத்தைத் தவிர வேறெதையும் நான் பார்க்கக்கூடாது என்று கூறினீர்களே ஐயா” என்றான். “மகனே! நீ லட்ச லட்சமாகப் பணத்தைச் செலவழித்திருக்க வேண்டாம். ஒரு நூறு ரூபாய் கொடுத்து பச்சைக் கண்ணாடி வாங்கியிருந்தால், உன்னைச் சுற்றியிருக்கும் பொருள்களெல்லாம் பிழைத்திருக்கும். உன் பணமும் வீணாகி இராது. உன்னால் இந்த உலகம் முழுமைக்கும் பச்சைப் பெயிண்ட் அடிக்கமுடியுமா?” என்று கேட்டார் சன்னியாசி. நம்மில் பலரும் இந்தக் கதையில் வரும் பணக்காரனைப் போலத்தான் இருக்கிறோம். நம்மைத் திருத்தி அமைத்துக் கொள்வதற்கு பதிலாக, உலகத்தை எப்படியாவது மாற்றியமைத்து விடுவது என்று மிகவும் முயற்சிக்கிறோம். அது சாத்தியமல்ல. மிகுந்த காலமும், உழைப்பும் விரயமான பிறகு தான் ‘திருந்த வேண்டியது நாம்தான்’ என்பது புரிகிறது. Voir la traduction இந்தக் கதைக்கு இந்தப் படம் எதுக்கென்றே தெரியவில்லை . .......ஏதோ ஈயடிச்சான் கொப்பி மாதிரிப் போட்டு வைப்போம் .........! 😂
  9. அது சரி, வாத்தியார் என்று வாய்க்கு வாய் விளித்து எழுதுகிறீர்கள், யார் அவர்? அவர் ஏன் ஏதும் பேசாமல் இருக்கிறார்? அவர் இதை பார்ப்பதில்லையா, அல்லது பார்த்துவிட்டு கடந்து போகிறாரா??
  10. பும்ராவின் 5 விக்கெட் குவியலின் பலனாக தென் ஆபிரிக்காவை 159 ஓட்டங்களுக்கு சுருட்டியது இந்தியா Published By: Vishnu 14 Nov, 2025 | 06:36 PM (நெவில் அன்தின) கொல்கத்தா ஈடன் கார்ட்ன்ஸ் விளையாட்டரங்கில் இன்று வெள்ளிக்கிழமை (14) ஆரம்பமான முதலாவது டெஸ்ட் போட்டியில் வேகப் பந்துவீச்சாளர் ஜஸ்ப்ரிட் பும்ரா பதிவுசெய்த 5 விக்கெட் குவியலின் உதவியுடன் நடப்பு உலக டெஸ்ட் சம்பியன் தென் ஆபிரிக்காவை முதல் இன்னிங்ஸில் 159 ஓட்டங்களுக்கு இந்தியா சுருட்டியது. இந்தியாவில் எட்டு முயற்சிகளில் முதல் தடவையாக நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற தென் ஆபிரிக்கா, துணிந்து துடுப்பாட்டத்தைத் தெரிவுசெய்தபோதிலும் அவ்வணி ஒருநாள் போட்டியை ஒத்தது போன்று துடுப்பெடுத்தாடி 55 ஓவர்களில் சகல விக்கெட்களையும் இழந்தது. ஏய்டன் மார்க்ராம், ரெயான் ரிக்ல்டன் ஆகிய இருவரும் 57 ஓட்டங்களைப் பகிர்ந்து நல்ல ஆரம்பத்தை இட்டுக்கொடுத்தனர். ஆனால், அதன் பின்னர் தென் ஆபிரிக்காவின் 10 விக்கெட்களும் 102 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வீழ்த்தப்பட்டன. 51ஆவது டெஸ்ட் போட்டியில் விளையாடும் ஜஸ்ப்ரிட் பும்ரா ஓர் இன்னிங்ஸில் தனது 16ஆவது 5 விக்கெட் குவியலைப் பதிவு செய்ததுடன் மொஹமத் சிராஜ், குல்தீப் யாதவ், அக்சார் பட்டேல் ஆகியோர் மற்றைய 5 விக்கெட்களை வீழ்த்தி தென் ஆபிரிக்காவை திக்குமுக்காட வைத்தனர். சிறப்பாகத் துடுப்பெடுத்தாடிக்கொண்டிருந்த தென் ஆபிரிக்க ஆரம்ப வீரர்களான ரெயான் ரிக்ல்டன், ஏய்டன் மார்க்ராம் ஆகிய இருவரையும் 4 பந்துகள் இடைவெளியில் பும்ரா ஆட்டம் இழக்கச் செய்து போட்டியில் இந்தியாவுக்கு சாதகமான திருப்புமுனையை ஏற்படுத்தினார். அதன் பின்னர் பொறுமையுடன் துடுப்பெடுத்தாட முயற்சித்த அணித் தலைவர் டெம்பா பவுமா, வியான் மல்டர் ஆகிய இருவரை குல்தீப் யாதவ் ஆட்டம் இழக்கச் செய்ததும் தென் ஆபிரிக்கா ஆட்டம் காணத் தொடங்கியது. தென் ஆபிரிக்க துடுப்பாட்டத்தில் ஏய்டன் மார்க்ராம் (31), வியான் மல்டர் (24), டோனி டி ஸோர்ஸி (24), ரெயால் ரிக்ல்டன் (23) ஆகிய நால்வரே 20 ஓட்டங்களுக்கு மேல் பெற்றனர். பந்துவீச்சில் ஜஸ்ப்ரிட் பும்ரா 5 ஓட்டமற்ற ஓவர்கள் உட்பட 27 ஓட்டங்களுக்கு 5 விக்கெட்களையும் குல்தீப் யாதவ் 36 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் மொஹம்மத் சிராஜ் 47 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் அக்சார் பட்டேல் 21 ஓட்டங்களுக்கு ஒரு விக்கெட்டையும் கைப்பற்றினர். பதிலுக்கு துடுப்பெடுத்தாடும் இந்தியா முதலாம் நாள் ஆட்டநேர முடிவில் ஒரு விக்கெட்டை இழந்து 37 ஓட்டங்களைப் பெற்றிருந்தது. இதற்கு அமைய முதல் இன்னிங்ஸில் 9 விக்கெட்கள் மீதமிருக்க தென் ஆபிரிக்காவைவிட 122 ஓட்டங்களால் இந்தியா பின்னிலையில் இருக்கிறது. யஷஸ்வி ஜய்ஸ்வால் 12 ஓட்டங்களுடன் ஆட்டம் இழந்தார். கே.எல். ராகுல் 13 ஓட்டங்களுடனும் புதிய 3ஆம் இலக்க வீரர் வொஷிங்டன் சுந்தர் 6 ஓட்டங்களுடனும் ஆட்டம் இழக்காதுள்ளனர். https://www.virakesari.lk/article/230383
  11. மூத்த மகள் மதுராவின் திருமண ஆண்டு விழா / 'Elder daughter Mathura's wedding anniversary [11 / 11 / 2025] இலங்கையில் பிறந்து இங்கிலாந்தில் வளர்ந்து இந்திரா லோகத்தை கனடாவில் அமைத்து இதயங்கள் இணைந்த நல்ல நாள் இன்பம் பொழியும் திருமணநாள் மகளே! நடனத்தின் நயம் இசையின் இனிமை அன்பின் அலை நீயே மதுரா! அமைதியின் ஆழம் உள்ளத்தில் பலம் பாசத்தின் கடல் நீயே ஹரி! ஆண்டுகள் கடந்தாலும் அன்பு நிலைக்கும் ஆயிரம் நடந்தாலும் உண்மை வாழும் முடிவில்லா ஒளியால் வாழ்வை நிரப்ப பெற்றோரின் வாழ்த்து ஆறாய் பாயட்டும்! புன்னகை விடியலை ஒளிரச் செய்ய அமைதி என்றும் உங்களைத் தழுவ உரிமைக்கு இடமளித்து உணர்வினை மதிக்க இனிதாய் வாழ்ந்திடுக அகிலம் போற்ற !💖 "இன்று போல் என்றும் இணைபிரியாமல், எல்லா வளமும் நலமும் பெற்று பல்லாண்டு வாழ வாழ்த்துகிறேன்" அப்பா & மாமா: [கந்தையா தில்லைவிநாயகலிங்கம், அத்தியடி, யாழ்ப்பாணம்] Born in Sri Lanka, blossomed in England, Built a heavenly home in Canada’s land. On this day when hearts became one, May joy shower endlessly, my beloved daughter. Grace of dance and music divine, Mathura, your soul forever shines! Hari, the calm depth where love does flow, A sea of affection, pure and aglow. Years may pass, yet love will stay, Truth will guide your hearts each day. With boundless light your lives be filled, By parents’ blessings gently stilled. May smiles brighten every dawn, May peace embrace you when night is drawn. Cherish, respect, and love as one — And live a life the world will crown. 💖 With love and blessings from Appa & Mama மூத்த மகள் மதுராவின் திருமண ஆண்டு விழா / 'Elder daughter Mathura's wedding anniversary [11 / 11 / 2025] https://www.facebook.com/groups/978753388866632/posts/32305914842390411/?
  12. சவ்வு மிட்டாய் தும்பு மிட்டாய் அப்பளம் என்று சிறுவயதில் வாங்கி சாப்பிட்டோம். இதிலே தும்பு மிட்டாய் இப்போதும் எனக்கு விருப்பம். சவ்வு மிட்டாய் வெறும் கையால் இழுத்து அழைகிறபடியால் இப்போ கஸ்டம்.
  13. நன்றாக இருக்கிறது ...இந்த விற்பனை கதாநாயகர்கள் ....நம்மூரில் வேறு தோற்றமும் ..அன்பு மொழியும் ...அவர்கள் நினைவை ...மீட்க வைத்ததிற்கு நன்றி
  14. என்ன மருதங்கேணியாரே, நான் தான் கிடைத்தேனா..................... அப்படி நான் எழுதியதை எடுத்துப் போடுவது தானே.................. நாங்களும் கொஞ்சம் சிரிப்போம் அல்லவா........... நான் விளையாடுவது அதிகம் தான்........... ஆனாலும் பின்னம் தலையில் அடிபட்டு நடுவில கொஞ்ச பக்கம் இன்னும் காணாமல் போகல்ல..................🤣.
  15. பிரான்ஸுக்கு ஏற்றுமதி செய்தால் ஈரோவிலும் சம்பாதிக்கலாம்! நான் பாரிஸுக்குப் போனால் பிரெஞ்சு ரெஸ்ரோரண்டில் நத்தை சாப்பிடுவதுண்டு! அப்புறம் லாசப்பல் போனால் எவர்சில்வர் கப்பில் தேத்தண்ணியும், ஒரு வடையும் சாப்பிடுவதும் உண்டு🤪
  16. தன்னைவிட கூடுதலாக வைத்திருக்கிறாரோ என்ற ஏக்கமாக இருக்கலாம்.
  17. உங்களுக்கு நான் சொல்வது விளங்குதெல்லா?….அவ்வளவும் போதும். விக்ரமாதித்தன் அளவுக்கு எனக்கு பொறுமை இல்லை😂
  18. தர்மம் தலை காக்கும் தக்க சமயத்தில் உயிர் காக்கும்.. படம்: தர்மம் தலைகாக்கும்(1963) இசை: K.V மகாதேவன் வரிகள் : கண்ணதாசன் பாடியவர்: TMS
  19. யாழ்பாணத்து பொட்டி கடைகளில் கிளிப் மாட்டி தொங்கியது எல்லாம் நினைவில் இருக்கா ரெல் மீ..
  20. அவ‌மான‌ தோல்வி கிடையாது முத‌லாவ‌து ஒரு நாள் போட்டி வெற்றிக்கு அருகில் வ‌ந்து கோட்டை விட்ட‌வை..........................
  21. கனடாவின் மொன்றியல் நகராட்சி மன்ற உறுப்பினராக இலங்கையை பூர்வீகமாகக் கொண்ட பெண் தெரிவு 05 Nov, 2025 | 11:38 AM (இணையத்தள செய்திப் பிரிவு) கனடாவின் கியூபெக் மாகாணத்தின் மொன்றியல் நகரில் அரசியல் வரலாற்றில் ஒரு திருப்புமுனையாக, டார்லிங்டன் (Darlington) பகுதியில், கோட் -டெஸ்-நெய்ஜ் (Côte-des-Neiges) நகர சபைக்கு மிலானி தியாகராஜா தெரிவுசெய்யப்பட்டுள்ளார். இவ்வெற்றியுடன், கியூபெக், மொன்றியலில் தெரிவு செய்யப்பட்ட முதல் தமிழ் அரசியல்வாதி என்ற வரலாற்று மைல்கல்லை அவர் நாட்டினார். கோட் -டெஸ்-நெய்ஜ் (Côte-des-Neiges) பகுதியில் பிறந்து வளர்ந்த மிலானி தியாகராஜா, இலங்கையை பூர்வீகமாகக் கொண்டவர். இலங்கையின் வடபகுதியான யாழ்ப்பாணம் நல்லூரை பூர்வீகமாகக் கொண்ட லிங்கராஜா தியாகராஜா (சட்டத்தரணி - இலங்கை ), சண்டிலிப்பாயைச் சேர்ந்த பாமதி சிவபாதத்தின் மகளாவார். 'அன்சாம்பில் மொன்ட்ரியல்' (Ensemble Montréal) கட்சியின் உறுப்பினராக மிலானி தியாகராஜா, இணைந்து, பாதுகாப்பான, அனைவரையும் உள்ளடக்கிய, மற்றும் ஒன்றிணைக்கப்பட்ட ஒரு டார்லிங்டன் மாவட்டத்தை கட்டியெழுப்பும் வாக்குறுதியுடன் பிரச்சாரத்தில் இறங்கினார். கனடா சேவை மையத்தில் (Service Canada) பல ஆண்டுகளாகப் பணியாற்றிய இவர், மக்களுக்கு சேவை செய்வதில் நீண்ட அனுபவம் பெற்றவர். தனது வெற்றியையடுத்து வீரகேசரிக்கு கருத்துத் தெரிவித்த மிலானி தியாகராஜா, "இது ஒரு வெற்றி மட்டுமல்ல, ஒரு புதிய தொடக்கம். டார்லிங்டனில் உள்ள ஒவ்வொரு குடும்பத்தினரின் குரலும் மதிக்கப்படும், பிரதிநிதித்துவப்படுத்தப்படும் என்பதை உறுதிசெய்கிறேன். நமது சமூகத்தின் இணைப்பை வலுப்படுத்தியே இந்தப் பணியை மேற்கொள்வேன். நகரத்தின் தூய்மை மற்றும் பாதுகாப்பை உறுதிசெய்தல், மக்களுக்கு கிடைக்க வேண்டிய அடிப்படைத் தேவைகளை பூர்த்திசெய்தல். வீடற்றவர்களின் பிரச்சினைகளை தீர்க்கவும் எதிர்காலத்தில் நடவடிக்கை எடுக்கவுள்ளதாகவும் வீதிப் போக்குவரத்துகளில் ஏற்படும் பிரச்சினைகளை தீர்க்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறினார். கியூபெக் தமிழ்ச் சமூகத்தின் ஒரு பிரதிநிதியின் இந்த வரலாற்று வெற்றி, மொன்ட்ரியால் மற்றும் கியூபெக்கின் பல்பண்பாட்டு ஜனநாயகத்தில் ஒரு புதிய அத்தியாயத்தைத் திறந்துள்ளமை குறிப்பிடத்தக்கது. Virakesari.lkகனடாவின் மொன்றியல் நகராட்சி மன்ற உறுப்பினராக இலங்கையை பூர...கனடாவின் மொன்றியல் நகராட்சி மன்ற உறுப்பினராக இலங்கையை பூர்வீகமாகக் கொண்ட பெண் தெரிவு
  22. போதையை ஒழிக்க போர்க்கொடி தூக்குவோம்! ****************************************************************** எழுபது வருடமாய் ஆட்சியில் இருந்தவர் என்னத்தை எமக்கு கி̀̀̀̀ளித்தார்க̀̀̀̀̀̀̀̀̀ள். இலங்கையை விற்றுமே இனங்களை அழித்துமே இன்னல்கள் தந்துமே கெடுத்தார்கள். உலகத்தின் குழந்தையாய் உன்னத அழகியாய் இயற்கையே படைத்தாள் எம்நாட்டை ஊளலும்,இலஞ்சமும் போதையும்,சண்டையும் ஊரெல்லாம் அலைந்ததே எம் வாழ்க்கை. ஐவகை நிலமும் ஆறுகள் குளமும் அழகிய கடலும் அவள் தந்தாள். பொய்யையும் போரையும் உலகுக்கு காட்டி பொல்லாத செயல்செய்து அவன் உயர்ந்தான். அரசியல் வாதியோ நானில்லை - ஆனால் அனுர ஆட்சியை தினமறிவோம். இளையோரை கொல்லும் பாதாளப் போதையை எல்லோரும் சேர்ந்துமே ஒழித்திடுவோம். ஏற்றங்கள் தாழ்வுகள் கட்சிகள் பேதங்கள் எல்லாம் மறந்து அணிதிரள்வோம் -தோழரின் இத்திட்டம் மேம்பட இளையோரை காத்திட இனங்கள் அனைத்துமே கை கோர்ப்போம். வணக்கம். அன்புடன் -பசுவூர்க்கோபி.
  23. “சிவப்புத் தீப நாளில்” / “On This Day of Red Flame” (நவம்பர் 27, 2025) “சிவப்புத் தீப நாளில்” (நவம்பர் 27, 2025) சிவப்புத் தீப நாளில் கல்லில் செதுக்காத பெயர்களையும் காற்று கிசுகிசுத்து செல்கிறது! சிதறிய தேசத்தின் நினைவுகளை நடுங்கும் எம் இதயங்களில் மீட்டுப் பார்க்கும் நாளிது! தோட்டாக்களுக்கு இடையில் புத்தகங்கள் ஏந்தி விடியலுக்குப் பதிலாக சாம்பல் ஆகிய குழந்தைகளை நாம் நினைவில் கொள்கிறோம்! கண்ணீரால் உலகையே இணைத்த தாய்மார்களின் தாலாட்டுப் பாடல்கள் புலம்பல்களாக மாறின வரலாற்றை நாம் நினைவில் கொள்கிறோம்! அநீதியின் புயல்களுக்கு எதிராக எழுந்து பனைமரம் போன்று உறுதியாக நின்ற தந்தையரை நாம் நினைவில் கொள்கிறோம்! வகுப்பறைகள் வயல்களில் எதிர்காலக் கனவுகண்டு சோதனைச்சாவடிகள் துப்பாக்கிச்சூடுகளில் காணாமல் போன இளைஞர்களை நாம் நினைவில் கொள்கிறோம்! முப்பது ஆண்டுகள் இரத்தம் சிந்தியது ஒவ்வொரு துளியும் கதையைச் சொல்லுது! நம்பிக்கை மறுக்கப்பட்டது குரல்கள் நசுக்கப்பட்டது வீடுகள் சாம்பலானது சுதந்திரம் கனவானது சுவாசிக்கவும் தடையானது ஆனாலும் உண்மை நிலைத்தது தமிழ் உணர்வு உயர்ந்தது! யாழ்ப்பாணத்தின் பண்டைய மணலிலும் முல்லைத்தீவின் துயரக் கரையிலும் மட்டக்களப்பின் தடாகங்களிலிலும் திருகோணமலையின் புனிதபூமியிலும் மன்னாரின் பண்டைய கடலிலும் கனடா, லண்டன், பாரிஸ், ஒஸ்லோ, சூரிச், சிட்னியிலும் தமிழ் இதயங்கள் துடிக்கின்றன சிவப்புத் தீபம் எழுகிறது! நீதிக்கான தீபம் நினைவிற்கான தீபம் பெயர் தெரியாதவர்களுக்கும் தீபம் கேள்விப்படாதவர்களுக்கும் ஒரு தீபம்! போருக்கான அழைப்பல்ல இது உண்மைக்கான அழைப்பு இது வெறுப்பின் பாடல் அல்ல இது மனிதகுலத்தின் பாடல் இது! சிறிய கல்லறை கூட உலக அன்பின் தீபமே மீறப்பட்ட வாக்குறுதிகளின் தீபமே! வீரர்களாக மட்டும் அல்ல புள்ளி விவரங்களாக அல்ல மறக்கப்பட்ட நிழல்களாக அல்ல தமிழ் மகன்கள் மகள்களாக சமத்துவத்தின் கனவு காண்பவர்களாக கண்ணியத்தை என்றும் தேடுபவர்களாக பூர்வீக இடத்திற்காக துடிப்பவர்களாக நாம் அவர்களை நினைவில் கொள்கிறோம்! அவர்களின் கதைகள் நட்சத்திரங்களாக தலைமுறைகளை முன்னோக்கி வழிநடத்த தியாகம் எல்லாம் விதையாகமாற நீதி அங்கே ஒருநாள் மலரட்டும்! இன்றைய நமது நினைவுகள் காயமடைந்த கடந்த காலத்திற்கும் சுவாசிக்கக் கூடிய எதிர்காலத்திற்கும் பாலமாக இனிமேல் அமையட்டும்! வீழ்ந்தவர்களுக்காக மறக்கப்பட்டவர்களுக்காக எதிர்காலத்திற்காக மண்ணிலிருந்து கடலிலிருந்து வானத்திலிருந்து நம்மிடமிருந்து அழிக்கமுடியாத தியாக பெயருக்காக சிவப்புத் தீப நாளில் ஒரு சுடர் எழுகிறது! [கந்தையா தில்லைவிநாயகலிங்கம், அத்தியடி, யாழ்ப்பாணம்] “On This Day of Red Flame” (27 November, 2025) On this day of red flame, When the wind carries whispers of names Carved not on stone, But on the trembling hearts Of a scattered nation— We remember. We remember the children Who carried books instead of bullets, But were met with smoke instead of dawn. We remember the mothers Who held the world together with their tears, Whose lullabies became laments For sons who never came home. We remember the fathers Who stood like palmyra trees Against storms of injustice, Their shadows long, their courage longer. We remember the youth, bright as early fire, Who dreamt of classrooms and fields and futures, But found only checkpoints, boundaries, and gunfire. For thirty years, the island bled, And every drop carried a story— Of hope denied, Of voices silenced, Of homes turned to ash, Of freedom dreamt but never allowed to breathe. But still, the Tamil spirit rose. From Jaffna’s ancient sands To the shores of Mullaitivu’s sorrow, From the lagoons of Batticaloa To the seas of Mannar, To Canada, London, Paris, Oslo, Zurich, Sydney— Wherever Tamil hearts beat, A flame rises on this day. A flame for justice. A flame for memory. A flame for those unnamed and unheard. This is not a call to war, But a call to truth. This is not a song of hatred, But a song of humanity. For even the smallest grave Holds a universe of love And a history of broken promises. We remember them— Not as soldiers alone, Not as statistics, Not as shadows of a forgotten war— But as Tamil sons and daughters, Dreamers of equality, Seekers of dignity, Hearts that beat for their rightful place In the land that bore them. May their stories become stars Guiding generations forward. May their sacrifice become seed From which justice one day blossoms. And may our remembrance today Be the bridge Between a wounded past And a future where all can breathe freely. Today, we light the flame— For the fallen. For the forgotten. For the future. For the Tamil name that cannot be erased From the soil, From the sea, From the sky, From us. [Kandiah Thillaivinayagalingam, Athiady, Jaffna] “சிவப்புத் தீப நாளில்” / “On This Day of Red Flame” (நவம்பர் 27, 2025 / 27 November, 2025) https://www.facebook.com/groups/978753388866632/posts/32389047344077160/?
  24. மனைவியை மிரட்ட சுருக்கு மாட்டிக்கொண்டவர் மூச்சுத்திணறி உயிரிழப்பு Nov 15, 2025 - 03:17 PM தற்கொலை செய்துகொள்வதாக மனைவியை மிரட்டுவதற்காக கழுத்தில் மாட்டப்பட்டிருந்த சுருக்கு இறுக்கியதில் மூச்சுத் திணறல் ஏற்பட்டு யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நபர் இன்று (15) அதிகாலை உயிரிழந்தார். உரும்பிராய் தெற்கு, உரும்பிராய் பகுதியைச் சேர்ந்த 33 வயதான ஜெ. சுரேந்தன் என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். இது குறித்து மேலும் தெரியவருகையில், கடந்த எட்டாம் திகதி இரவு மதுபோதையில் வீட்டுக்கு வந்த சுரேந்தன், மனைவி மற்றும் பிள்ளைகளுடன் முரண்பட்டதையடுத்து அவர்கள் வீட்டை விட்டு வெளியேறினர். பின்னர் அவர் ஒரு கதிரையில் அமர்ந்துகொண்டு, கழுத்தில் சுருக்கிட்டவாறு தான் தற்கொலை செய்யப்போவதாக மனைவியுடன் தொலைபேசியில் பேசியுள்ளார். கைபேசியில் பேசிக்கொண்டிருக்கும்போதே மதுபோதையில் அவர் உறங்கிவிட்டார். பின்னர் அவரது சகோதரன் அங்கு சென்று பார்த்தபோது, அவர் கழுத்தில் சுருக்குடன் குறட்டைவிட்டு உறங்கிக்கொண்டிருந்தார். உடனடியாக சகோதரன் அவரது கழுத்தில் இருந்த கயிற்றை அகற்றிவிட்டு, அவரைத் தரையில் படுக்க வைத்துள்ளார். இந்நிலையில் சிறிது நேரத்தில் அவருக்கு மூச்சுத் திணறல் ஏற்பட்டுள்ளது. இதனால் அவர் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு சிகிச்சை பெற்று வந்த அவர், சிகிச்சை பலனின்றி இன்று அதிகாலை உயிரிழந்துள்ளார். அவரது சடலம் மீதான மரண விசாரணைகளை திடீர் மரண விசாரணை அதிகாரி நமசிவாயம் பிரேம்குமார் மேற்கொண்டார். -யாழ். நிருபர் கஜிந்தன்- https://adaderanatamil.lk/news/cmi03sbk301mwo29np80sl4we

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.