Leaderboard
-
தமிழ் சிறி
கருத்துக்கள உறவுகள்13Points88402Posts -
goshan_che
கருத்துக்கள உறவுகள்8Points19368Posts -
ஏராளன்
கருத்துக்கள உறவுகள்8Points32727Posts -
Kavi arunasalam
கருத்துக்கள உறவுகள்6Points3013Posts
Popular Content
Showing content with the highest reputation on 01/05/26 in Posts
-
முன்னோடி - அடிப்படை சுகாதார வசதி திட்டம்
அண்ணை, புலர் அறக்கட்டளைக்கு ஊடாக இயலாமை உடையவர்களை மட்டுமே முன்னுரிமை கொடுத்து செயற்படுகிறோம். ஆனால் அந்த வங்கிக் கணக்கிற்கு பணம் அனுப்பினால் பணத்தை மீளப்பெற நிர்வாக அனுமதி கோரவேண்டும். அடிக்கடி பணத்தை மீளப்பெற நிர்வாகிகளை (அதிபர், ஆசிரியர்) தொந்தரவு செய்யவேண்டும். அதனால் தான் பயனாளிகளின் வங்கிக் கணக்கை பெற்று தர விரும்பினேன். இது சிரமம் என்றால் ஒரு வங்கிக் கணக்கை திறந்து தருகிறேன், அதனை "முன்னோடி - அடிப்படை சுகாதார வசதி திட்டம் 2026" மட்டுமே பயன்படுத்தும் வகையிலும் இணைய வங்கிச்சேவை, குறுஞ்செய்தி வசதி, வங்கி வரவு, செலவு அறிக்கை என்பவற்றை பெறக்கூடிய வகையிலும் செயற்படுத்தி தருவேன். மாதம் மாதம் வங்கி அறிக்கையை இங்கே வெளிப்படையாக பகிர்கிறேன். அரசு கண்காணிப்பு(ஒரு தடவையில் 10 இலட்சத்திற்கு மேல் அனுப்புவது) இருப்பதால் கவனமாக நிதியை கையாளவேண்டும்.4 points
-
மேல் மாடிகளை கட்டுவதை விடுத்து முதலீடுகள் செய்வதற்கு முன்வரவேண்டும்
முதலீடு என்றால் பார் திறப்பதுதானே ?3 points
-
முன்னோடி - அடிப்படை சுகாதார வசதி திட்டம்
நானும் அதையே சரியாக இருக்கும் என நினைக்கின்றேன் ஒரு வங்கி இலக்கம் புதிதாக உருவாக்கி அதை முன்னோடி அமைப்பின் பெயரில் பாவிக்கலாம் . அந்த வங்கி கணக்கு ஏராளன் பெயரில் இருக்கும். உதவி செய்ய விரும்புபவர்கள் அந்த இலக்கத்திற்கு தங்கள் பங்களிப்பினைச் செலுத்தலாம். . புலர் நிறுவனம் ஏற்கனவே ஒரு ஒரு கட்டமைப்பாக இயங்குவதால் அந்த நிறுவனத்தின் வங்கிக் கணக்கை வேறு ஒரு கட்டமைப்பிற்காக பயன்படுத்துவது ஒரு சில சிக்கல்களை ஏற்படுத்தலாம்🙏3 points
-
முன்னோடி - அடிப்படை சுகாதார வசதி திட்டம்
குமாரசாமி, இந்த எண்ணத்தைத் தவிர்க்கலாம் என்பதே எனது நிலைப்பாடு. ஏராளன் ஏற்கனவே ஒரு அமைப்பை உருவாக்கி, அதனூடாக பல்வேறு செயற்திட்டங்களைச் சிறப்பாக முன்னெடுத்து வருகின்றார். அவரது அமைப்பிற்கும் செயற்பாடுகளுக்கும் தனித்துவமான சில கட்டுப்பாடுகளும் நடைமுறைகளும் உள்ளன. எனவே, எந்தவித இடையூறும் இல்லாமல் அவர் தனது புலம் அமைப்பில் தொடர்ந்து செயற்படுவதுதான் உகந்ததாக இருக்கும். அதே நேரத்தில், அவரது முயற்சிகளுக்கு உதவுவதை யாழ்கள உறுப்பினர்கள் தொடர்ந்து மேற்கொள்ள வேண்டும். “எலி வளையானாலும் தனி வளை வேண்டும்” என்பதுபோல, ஒவ்வொரு முயற்சியும் தனது தனித்தளத்தில் வளர்வதே சிறந்தது. நாம் முன்னெடுக்க உள்ள அடிப்படை சுகாதார வசதி திட்டம் தனித்துவமானது. அதைச் செயற்படுத்துவதற்காக ‘முன்னோடி’ என்ற உதவி நிறுவனத்தை ஆரம்பிப்பது குறித்து ஏற்கனவே ஒரு தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது. இதுவரை யாரும் அதற்கு எதிரான கருத்தை முன்வைக்காததும் குறிப்பிடத்தக்கது. மேலும், ஏராளனும் இதற்கு தனது ஒப்புதலை வழங்கியுள்ளார். தற்சமயம், அவர் இந்தத் திட்டத்திற்கு தன்னாலான உதவிகளை வழங்க முன்வந்துள்ளதும் மகிழ்ச்சியளிக்கிறது. ‘முன்னோடி’ தற்போது ஒரு திட்டத்தை கையில் எடுத்துள்ளது. ஆகவே, அதை உறுதியுடன் செயற்படுத்துவோம். ‘முன்னோடி’க்கு தனியான கணக்கு இருப்பது பங்களிப்பாளர்களுக்கு வெளிப்படைத்தன்மையையும் நமக்குச் செயற்பாட்டு இலகுவையும் அளிக்கும். துளித் துளியாகச் சேர்ப்போம். எதிர்காலத்தில் அது நிறைந்த குடமாக மாறலாம்.3 points
-
நான்காவது கொலை - கருணாகரன்
2 pointsநான்காவது கொலை - கருணாகரன் ‘உங்களுடைய பொருளை நேரில் வந்து பெற்றுக் கொள்ளுங்கள்’ என்று அன்பான அழைப்பில் ஒரு கடிதம் சுங்கப் பகுதியிலிருந்து வந்திருந்தது. இலங்கையின் சுங்கப் பகுதியிலிருந்து இப்படி ஒரு அன்பான கடிதம், தமிழ் எழுத்தாளருக்கு வருவதாக இருந்தால், அந்தக் கடிதத்தின் எடையை நீங்கள் கற்பனை செய்தே பார்க்க முடியாது. தலையிலும் மனதிலும் சட்டென அந்தப் பாரம் ஏறி விடும். ‘அப்படியென்ன பெரிய பாரம்?’ என்று நீங்கள் கேட்கலாம். இந்தக் கேள்விக்கான பதிலை நான் சொல்வதையும் விட, நீங்களும் என்னோடு வந்தால் அதை அறிந்து விடலாம். நாங்கள் அந்தக் கடிதத்தை எடுத்துக் கொண்டு சுங்கப் பகுதிக்குச் செல்கிறோம். பொதிகள் பரிசீலனைப் பிரிவிலுள்ள வாடிக்கையாளர் இருக்கையில் ஐந்தாறுபேர் மட்டுமே இருக்கிறார்கள். நல்லவேளை, இன்று கூட்டம் அதிகமில்லை. சிலவேளை நிறையபேர் காத்திருப்பார்கள். கூட்டம் இல்லை என்பது கொஞ்சம் ஆறுதலாக இருக்கிறது. எதிர்பார்த்தபடியே அரை மணி நேரத்துள் கட்டண உத்தியோகத்தரைச் சந்திக்க முடிகிறது. கடிதத்தைக் கொடுக்கிறோம். அவர், கடிதத்தை வாங்கிப் பார்த்து விட்டு உதவியாளரை அழைத்து, அவரிடம் கொடுக்கிறார். உதவியாளர் கடிதத்தில் குறிப்பிட்டிருந்த பொதி இலக்கத்தைச் சரிபார்த்து, பொதியை எடுத்து வருகிறார். ஏற்கனவே பொதி பிரிக்கப்பட்டிருக்கிறது. இது எதிர்பார்க்கப்பட்டதே. அதிகாரியின் முன்னே உள்ள மேசையில் பொதியிலிருந்து பொருட்களை எடுத்து வைக்கிறார், உதவியாளர். நாங்கள் அதிகாரியைக் கூர்ந்து பார்த்துக் கொண்டிருக்கிறோம். ஐந்து புத்தகங்கள். கவிதை நூல் ஒன்று. நாவல் ஒன்று. படுகொலைகளைக் குறித்த நூலில் மூன்று பிரதிகள். அவற்றோடு, ஏதோ எழுதி வைக்கப்பட்ட ஒரு தாள். அநேகமாக அந்தப் பொதியைப் பற்றிய குறிப்பாக இருக்கலாம். புத்தகங்களைப் பார்த்த கட்டண உத்தியோகத்தர், மொழிபெயர்ப்பாளரை அழைத்து வருமாறு உதவியாளரிடம் பணிக்கிறார். அதற்கிடையில் அந்தத் தாளை எடுத்து கவனமாகப் படிக்கிறார், புருவங்கள் சுருங்குகின்றன. மொழிபெயர்ப்பாளர் வந்து புத்தகங்களை எடுத்து கையில் வைத்து கொண்டு எங்களிடம் சொல்கிறார், “இந்தப் புத்தகங்களில் கொலைகளைப் பற்றியெல்லாம் எழுதப்பட்டிருக்கு” அவருடைய குரலில் அதிகாரத்தின் வெம்மை புலப்படுகிறது. நாங்கள் ஒருவரை ஒருவர் பார்க்கிறோம். அப்படியே அதிகாரியையும் மொழிபெயர்ப்பாளரையும் பார்க்கிறோம். அவர்களும் எங்களைக் கூர்ந்து பார்க்கிறார்கள். இதொன்றும் வியப்பான சங்கதி இல்லை என்று எங்களுக்குத் தெரியும். ஏற்கனவே இந்த மாதிரி பல சந்தர்ப்பங்களில் பல புத்தகங்கள் தடுத்தாட்கொள்ளப்பட்டன. சிலவற்றை வாதிட்டு மீட்டிருக்கிறோம். சில கடல் கொண்டதைப்போல கைவிடப்பட்டன. பாதுகாப்பு அமைச்சு என்பது இந்த மாதிரி சந்தர்ப்பங்களில் ஆழக்கடல்தான். ‘தாழ்வதும் மீள்வதும் அதன் அருளாலே’ என்று ராகவன் பகடியாகச் சொல்வார். ‘அதன்’ என்று அவர் எதைக் குறிப்பிடுகிறார் என்று எல்லோருக்கும் தெரியும். பாதுகாப்புத்துறையின் தங்க மூளை. நான் வலிந்து, மெல்லிதாகச் சிரிக்கிறேன். ‘இதெல்லாம் எங்களுக்கு ஏற்கனவே தெரிந்ததுதான். இப்படித்தான் நடக்கும் என்று அறிவோம். இதைத்தானே எப்போதும் செய்து கொண்டிருக்கிறீர்கள்?’என்ற மாதிரி அவருக்கு அந்தச் சிரிப்புச் சொல்லியிருக்க வேணும். “ஆகவே, உங்களிடம் இவற்றை நாங்கள் தர முடியாது. இதை நாங்கள் பாதுகாப்பு அமைச்சுக்கு அனுப்புவோம். அங்கிருந்து பதில் கிடைக்கும்போது உங்களுக்குத் தகவல் தருவோம்” என்கிறார் மொழிபெயர்ப்பாளர். அதற்கும் சிரிக்கிறேன். இந்த மாதிரி சந்தர்ப்பங்களில் சிரிப்பு ஒரு ஆயுதம். சில நேரங்களில் அது பலமான கேள்விகளின் குறியீடாகும். “கொலைகள் நடந்தால், அதைப் பற்றி எழுதாமல் வேறு எதைப்பற்றி எழுதுவது?” கேட்கிறேன். அவர் பதிலளிக்கவில்லை. அதிகாரியின் முகத்தில் இறுக்கம் கூடுகிறது. பொருட்படுத்தாத மாதிரி, அவர் ஒரு படிவத்தை நிரப்பிக் கொண்டிருக்கிறார். எழுதுவதை நிறுத்தி விட்டுத் தலையை நிமிர்த்தி, எங்களைப் பார்த்துக் கொண்டு சொல்கிறார், “எங்களை நீங்கள் கோவித்துக் கொள்ளக் கூடாது. எங்களுடைய கடமையைச் செய்கிறோம். அதைத்தான் நாங்கள் செய்ய முடியும்” இந்தப் பொன்னான வார்த்தைகளைக் கேட்க உண்மையிலேயே எனக்குப் பெரிதாகச் சிரிப்பு வந்து வந்து விடுகிறது. அவர் ஒரு மாதிரியாக என்னைப் பார்க்கிறார். அந்தப் பார்வையில் தன்னை இளக்காரமாக எண்ணித்தான் சிரிக்கிறேனா? என்றொரு எண்ணம் ஓடியதாகப் பட்டிருக்க வேணும். முகத்தில் அசடு வழிகிறது. அவரை மேலும் குழப்பாமல், ”இங்கே கொலைகள் நடந்ததால், அதைப் பற்றி எழுதப்பட்டிருக்கு. அதற்கான ஆதாரங்களும் இணைக்கப்பட்டுள்ளன. புத்தகத்தை நன்றாகப் படித்துப் பாருங்கள். அப்பொழுது உங்களுடைய இதயம் என்ன சொல்ல விரும்புகிறதோ அதைச் சொல்லுங்கள்…” என்கிறேன். “மன்னிக்க வேணும். இதைப்பற்றி நீங்கள் எங்களோடு பேசுவதால் பயனில்லை. எங்களுக்குப் பணிக்கப்பட்டதைத்தான் நாங்கள் செய்ய முடியும்” மீண்டும் அதே பதிலைச் சொல்கிறார் அவர். மேலே ஏதோ நிழலாட, நான் அண்ணாந்து பார்க்கிறேன், ஒரு சிறிய குருவி அங்குள்ள கண்காணிப்புக் காமிராவின் மேலே வந்து அமர்கிறது. “இது, இந்தக் கொலைகள் நடந்து 30 ஆண்டுகளுக்கு மேலாகி விட்டது. இப்பொழுது ஒரு புதிய ஆட்சி வந்திருக்கு. நாட்டில் மாற்றங்களும் நீதி வழங்கல்களும் நிகழ்த்தப்படும் என்று சொல்லப்படுகிறது. அதனால், பாதிக்கப்பட்ட மக்கள் தங்களுக்கான நீதிக்காக இந்தக் குரலை இங்கே முன்வைத்திருக்கிறார்கள். இது அவசியமல்லவா! இதில் என்ன தவறிருக்கு?“ எனக் கேட்கிறேன். அவருக்கு ஒரு மாதிரி ஆகி விடுகிறது. “ஆம், நீங்கள் சொல்வது புரிகிறது. ஆனால், எங்களால் என்னதான் செய்ய முடியும்? நாங்கள் அரச உத்தியோகத்தர்கள். அரசாங்கத்தின் உத்தரவையும் கட்டளையையும்தான் நிறைவேற்ற முடியும். எங்களுக்கு விடுக்கப்பட்ட அறிவுறுத்தலின்படி இப்படியான புத்தகங்களோ, பொருட்களோ வந்தால், அதை நாங்கள் படைத்துறைக்குத்தான் (Military of Defence) பாரப்படுத்த வேண்டும். அவர்கள்தான் இதைப் பற்றிய இறுதி முடிவைச் சொல்ல வேணும். இல்லையென்றால் என்மீதுதான் கேள்விகள் வரும். நான்தான் அதற்கான பதிலைச் சொல்ல வேண்டியிருக்கும். இதற்குத் தனியே முடிவெடுக்கும் அதிகாரம் எனக்கு இல்லை. நீங்கள் சொல்வதைப் போல, ஆட்சியாளர்கள் மாறியிருக்கிறார்கள் என்பது உண்மையே. ஆனால், கட்டளைகள் – உத்தரவுகள் எதுவும் மாறவில்லையே!“ இதற்கு மேல் தன்னால் என்ன செய்ய முடியும் என்பது போல, ஒரு பரிதாபகரமான தோற்றத்தைக் காண்பிக்கிறார். உங்களுக்குச் சிரிப்பு வருகிறது. ஆனாலும் அந்தச் சூழலில் சிரமப்பட்டு உங்களைக் கட்டுப்படுத்திக் கொள்வதற்கு முயற்சிக்கிறீர்கள். “அரசாங்கம், பல அறிவிப்புகளைச் செய்திருக்கு. படைகளை விலக்குவதாக. ஜனநாயகத்தையும் கருத்துச் சுதந்திரத்தையும் பாதுகாப்பதாக. (நாற்பத்தைந்து வயதுடைய பயங்கரவாதச் சட்டத்தைப் பற்றி அப்பொழுது உங்களுக்கு நினைவுக்கு வருகிறது). போராளிகள் புதைக்கப்பட்ட மாவீரர் துயிலுமில்லங்களில் நிலைகொண்டிருக்கும் படையினர் கூட விலக்கப்படுவார்கள்… என்றெல்லாம். ஆனால், நீங்களோ இந்தச் சாதாரண புத்தகங்களையே தர மாட்டோம் என்று தடுத்து வைத்திருக்கிறீர்கள்… இது எவ்வளவு அநியாயம்?” என்று அப்பாவித்தனமாகக் கேட்பதைப் போல கேட்கிறேன். “ஐயா, நீங்கள் பேசுவது அரசியல். நாங்கள் இங்கே செய்வது நிர்வாகம். நான் அரசாங்கத்தின் உத்தரவைத்தான் செய்ய முடியும். என்னை மன்னித்து விடுங்கள். நான் ஒரு சிங்கள அதிகாரி. முன்பு இப்படி இங்கே, யாழ்ப்பாணத்தில் வந்து என்னைப் போன்ற ஆட்கள் வேலை செய்ய முடியாது. எனக்கும் யாழ்ப்பாணத்தில் நடந்த அநீதிகள் எல்லாம் கவலையைத்தான் தருகின்றன. இந்த நூலகம் (யாழ்ப்பாண நூலகம் இருந்த திசையைச் சுட்டி) எரிக்கப்பட்டதும் இங்கே உள்ள மக்கள் சிரமப்பட்டதும் எல்லாம் வேதனையே. ஆனால், நாங்கள் சமாதானமாக – சந்தோசமாக இருப்போம்… நீங்கள் இந்தப் படிவத்தில் கையெழுத்து இடுங்கள். நாங்கள் இந்தப் புத்தகங்களைப் பாதுகாப்பு அமைச்சுக்கு (MOD) அனுப்புகிறோம். அங்கிருந்து பதில் வந்ததும் உங்களுக்குத் தகவல் சொல்கிறோம்…” நீங்கள் இப்பொழுது அண்ணாந்து அந்தப் பணிமனையின் கூரையைப் பார்த்து சற்றுச் சத்தமாகவே சிரித்து விடுகிறீர்கள். அதிகாரி சற்றுக் கலவரமடைந்தது போல தெரிகிறது. வியப்புடன் எங்களைப் பார்க்கிறார். “அப்படியென்றால் அரசாங்கத்தரப்பினரால் சொல்லப்படுகின்ற மாற்றங்கள் எதுவுமே நடக்கவில்லையா?” என்று கேட்டுவிடுகிறீர்கள். “ப்ளீஸ்.. இதற்கு மேல் என்னை எதுவும் கேட்காதீர்கள். அதுதான் நான் சொன்னேன், நான் ஒரு சாதாரண உத்தியோகத்தன் என்று. நான் எதையும் தீர்மானிக்க முடியாது. அரசியல்வாதிகள் அப்படித்தான் சொல்வார்கள். அவர்கள் அதையெல்லாம் எங்களுக்கு எழுத்தில் – உத்தரவாகத் தந்தால் நாங்கள் அதை உங்களுக்குச் சேவையாகச் செய்வோம்.. இதற்கு மேல் என்னால் எதுவும் சொல்ல முடியாது… ஏனென்றால், என் மீதான உத்தியோக பூர்வமான கேள்விகளுக்கு நான்தான் பதில் சொல்ல வேண்டும். எந்தத் தலைவர்களும் அதைச் சொல்ல வர மாட்டார்கள்…” என்று எழுந்து விட்டார். அவருடைய முகத்தில் மெல்லிய சினம் நிழலாக ஆடியது. “நீங்கள் ஒற்றுமை பற்றி பேசுகிறீர்கள்? யாழ்ப்பாணத்தில் வேலை செய்வதில் மகிழ்ச்சி என்று சொல்கிறீர்கள். ஆனால் இந்த ஐந்து சாதாரண புத்தகங்களையே தடுத்து வைத்துக் கொண்டு, எப்படி நீங்கள் மகிழ்ச்சியாக இருக்க முடியும்? இந்த மாதிரி செயல்களால், எப்படி எங்களுக்கு மகிழ்ச்சியை அளிக்கப் போகிறீர்கள்?” அதிகாரி குழப்பமடைந்து விடுகிறார். “மறுபடியும் சொல்கிறேன், நான்… நான் ஒரு சாதாரண அதிகாரி. நான் விதிகளைப் பின்பற்றுகிறேன்” “விதிகள்? இது சட்டபூர்வமாக தடை செய்யப்பட்ட புத்தகம் அல்ல! இது ஒரு வரலாற்று ஆராய்ச்சி. நடந்த சம்பவங்களைப் பற்றிய ஆதாரபூர்வமான குரல். இது உண்மையைப் பதிவு செய்கிறது. நாம் நமக்கு முன்னே உள்ள இடைவெளிகளை நிரப்பாமல், ஒற்றுமைக்கான பாலத்தை நிர்மாணிக்க முடியுமா? ஆனால், நீங்கள் மகிழ்ச்சியாக இருக்க முடியும், ஏனென்றால் நீங்கள் இந்த அமைப்பின் பாதுகாப்பில் இருக்கிறீர்கள். நீங்கள், எங்களுடைய குரல்களைக் கட்டுப்படுத்தும்போது, எப்படி நாம் மகிழ்ச்சியாக இருக்க முடியும்?” அதிகாரி சில நொடிகள் மௌனமாக இருக்கிறார். அவர் தனது கைகளை விரித்துப் பார்த்துக்கொண்டிருக்கிறார். ஆழ்ந்த யோசனை. “நான்… என்னால் என்ன செய்ய முடியும்? நான் ஒரு சிறிய கடிகாரத்தின் பல். அவ்வளவுதான்” “ஆமாம், நீங்கள் ஒரு கடிகாரத்தின் பல்தான். ஆனால் ஒவ்வொரு பல்லும் முழு கடிகாரத்தின் செயல்பாட்டிற்கு அவசியம். நீங்கள் இல்லாமல், இந்த அடக்குமுறை இயந்திரம் செயல்படாது. நீங்கள் மகிழ்ச்சியாக இருக்க முடியும், ஆனால் உங்கள் மகிழ்ச்சி, எங்கள் வலியின் மீதல்லவா கட்டப்பட்டுள்ளது” மின்விசிறியின் சத்தம் அறையில் முழுதாக நிரம்பிக்கிடக்கிறது. அதைத் தவிர சில நொடிகள் அங்கே வேறு எந்த ஒலிகளும் இருக்கவில்லை. மெதுவாக, ஆனால் கூர்மையாக அவருக்குச் சொல்கிறேன், “நீங்கள் ஒற்றுமையைப் பற்றிப் பேசுகிறீர்கள்? யாழ்ப்பாணத்தில் வேலை செய்வதில் மகிழ்ச்சி என்று சொல்கிறீர்கள்?” அதிகாரி தலையை உயர்த்துகிறார். “ஆம்…” “இப்படியான செயல்களால் எங்களுக்கு எப்படி மகிழ்ச்சியை அளிக்கப் போகிறீர்கள்?” அதிகாரி திணறுகிறார். “நான்… நாங்கள் விதிகளைப் பின்பற்றுகிறோம். ஒற்றுமைக்காக…” “ஒற்றுமை என்பது பாலம் கட்டுவது. இந்தப் புத்தகங்கள் அதற்கான இடைவெளிகளை நிரப்புகின்றன. இவை உண்மையைச் சொல்ல முயல்கின்றன. உண்மைகளை ஏற்றுக் கொள்வது கைகளை இறுகப் பற்றிக் கொள்வதாகும். இது சட்டபூர்வமாகத் தடை செய்யப்பட்ட புத்தகம் அல்ல! இது வெறும் வரலாற்று ஆவணம்.” “ஆனால்… பாதுகாப்பு…” “எந்தப் பாதுகாப்பு? யாருடைய பாதுகாப்பு? உண்மையிலிருந்து பாதுகாப்பா? நீங்கள் மகிழ்ச்சியாக இருக்கலாம். நீங்கள் ஒரு வேலையைச் செய்கிறீர்கள். ஆனால் உங்கள் மகிழ்ச்சி எங்கள் மீதான கட்டாய மௌனத்தின் மீது கட்டப்பட்டுள்ளது. அது எப்படி ஒற்றுமையாகும்?” இதைப் பார்த்துக் கொண்டிருக்கும் நீங்கள் பொறுத்துக் கொள்ள முடியாமல், இடையில் சொல்கிறீர்கள், “ஒற்றுமை என்பது வேறுபாடுகளை ஏற்றுக் கொள்வதில் வருகிறது, வேறுபாடுகளை மறைப்பதில் அல்ல“ அதிகாரி, தன்னுடைய இருக்கையில் வந்து அமர்ந்து கொண்டு, எங்களை நோக்கி முன்னே சரிந்து சற்றுத் தணிந்த மெல்லிய குரலில் சொல்கிறார், “நீங்கள் சொல்வதிலுள்ள நியாயத்தை நான் அறிவேன். ஆனால் நீங்கள் புரிந்து கொள்ள வேண்டும். இங்கே ‘மகிழ்ச்சி’ என்பது ஒருவகை உயிர்வாழ்தல். நான் மகிழ்ச்சியாக இருப்பதாகச் சொல்கிறேன், ஏனென்றால் நான் பயந்திருக்க வேண்டாம் என்று நினைக்க விரும்புகிறேன். நான் ஒற்றுமை பற்றி பேசுகிறேன், ஏனென்றால் நான் மோதல்களையோ முரண்பாடுகளையோ எதிர்கொள்ள விரும்பவில்லை” அவர் ஒரு ஆழமான மூச்சை விடுகிறார். எனக்கு ஒரு புதிய நம்பிக்கை ஏற்படுகிறது. குறைந்தது, இந்த அதிகாரியுடனாவது இந்த மாதிரி பேச முடிகிறதே! “இந்தப் புத்தகம் உண்மையின் ஒரு சிறிய பகுதியே. இதை விட நடந்தவற்றின் ரத்த சாட்சியாக உலகமெங்கும் பலர் இருக்கிறார்கள். அவர்களின் நினைவுகள், அவர்களின் கதைகள் – அவை எங்கும் உள்ளன” அவர் மேசையில் இருக்கும் புத்தகங்களைத் தொடுகிறார். முகம் மெல்லிதாக வாட்டமுறுகிறது. “இன்றைய அறிவியல் யுகத்தில், இந்தப் புத்தகத்தை மின்நூல்களாக லட்சம் பிரதிகள் உருவாக்க முடியும். இணையம் எங்கும் உள்ளது. அப்படியிருக்கும்போது…” என்று சிரிக்கிறேன். அது கசப்பான சிரிப்பு. “நீங்கள் இதைத் தடுப்பது, சூரியனைக் கைகளால் மறைப்பது போல சிரிப்புக்குரியது. உங்களுக்கு இது வெட்கம் தரும் செயலாக இல்லையா? நீங்கள் இதைத் தடுத்தாலும், இதை ஒளிப்படங்களாகவும், யூடியூப்களாகவும், PDF பிரதிகளாகவும் நாம் வெளியே இருந்து எடுக்கலாமே. உங்களுடைய விதிமுறைகள் அப்பொழுது என்ன செய்யும்? ஏராளமாக விரிந்து பரவிக் கிடக்கும் வலைத்தளங்களைத் தடுக்க முடியுமா? ஒவ்வொரு மின்நூலையும் கண்காணிக்க முடியுமா?” “நீங்கள் சொல்வது சரிதான். ஆனால்…” அவருடைய அகத்தில் வெட்கம் ஏற்படுவதை உணர்கிறோம். முகம் அதைப் பிரதிபலிக்கிறது. அது அவருடைய வெட்கம் அல்ல. அது நாட்டினுடைய, ஆட்சியினுடைய, அதிகாரத்தினுடைய வெட்கம். “ஆனால் நாங்கள் எங்களிடம் வரும் பொருட்களை மட்டுமே கட்டுப்படுத்துகிறோம். மின்நூல்கள்… அவை வேறு துறை. அது தொழில்நுட்பத் துறை. எங்களுக்கு எட்டாதது” “அப்படியானால், இந்தத் தடை வெறும் காட்சி மட்டுந்தானா? பொய்யான பாதுகாப்பா?” சமாளித்துக் கொண்டு அவர் சொல்கிறார், ”மக்கள் இவ்வாறான தடையைப் பார்க்கிறார்கள். அது ஒரு செய்தியை அவர்களுக்குச் சொல்கிறது. ‘இது அனுமதிக்கப்படாதது’ என்று. அதாவது இந்தப் பொதி தடுக்கப்படுவதை அவர்கள் பார்க்க முடியும். அது அவர்களை நிதானமடைய வைக்கும்” நான் அவரிடம் கேட்கிறேன், “இப்படிச் சொல்வதும் சிந்திப்பதும் வெட்கம் தருவதாக இல்லையா?“ அவருடைய கண்கள் கலங்குவதைப்போலிருக்கிறது. ஒரு நீண்ட மௌனத்திற்குப் பிறகு, “வெட்கமா? ஆம். எனக்கு வெட்கமாகத்தான் இருக்கிறது. ஆனால் நான் என்ன செய்ய முடியும்? உண்மையில் நாங்கள் ஒரு நாடகம் நடத்துகிறோம். இது அந்த நாடகத்தின் ஒரு காட்சி” அவர் சுற்றுமுற்றும் பார்க்கிறார், குரலைத் தாழ்த்திக்கொண்டு சொல்கிறார். “நீங்கள் PDF செய்தால், அதை அனுப்புங்கள். யூடியூபில் போடுங்கள். ஆனால்… இந்த இந்தப் புத்தகங்களை நாங்கள் தடுக்க வேண்டும். ஏனென்றால்… ஏனென்றால் அது எங்களுடைய ‘செயல்முறை’. இந்தச் செயல்முறை முக்கியம். மக்கள் அதைப் பார்க்க வேண்டும்: அரசு கட்டுப்பாட்டில்தான் எல்லாம் உள்ளது என்று.” “அப்படியானால், இது வெறும் பாசாங்கு?” “இல்லை. இது ஒரு அடையாளம். ஒரு குறியீடு. நாங்கள் நடைமுறை உலகில் இன்னும் அரசாங்கத்தின் கட்டுப்பாட்டைக் காட்ட வேண்டும். டிஜிட்டல் உலகில்… அங்கே நாங்கள் தோற்கடிக்கப்படுகிறோம். உண்மைதான். ஆனால் இங்கே இல்லை” ‘எங்களுக்கு அவரைப் பார்க்கப் பரிதாபமாக உள்ளது. அவரைப் பார்க்கும்போதல்ல, அரசாங்கத்தை எண்ணிப்பார்க்கும்போதுதான் பரிதாபமாக உள்ளது’ என்று நீங்கள் நினைக்கிறீர்கள். அதனால் உங்களுக்குச் சிரிப்பு வருகிறது. கூடவே கவலையும். ‘எப்படியெல்லாம் இந்த அதிகார மயக்கம் உள்ளது‘ என்று நினைத்துச் சிரிக்கிறீர்கள். கவலைப்படுகிறீர்கள். எத்தனை அறிவுசார் முன்னேற்றங்கள் வந்தாலும் அதிகாரத்தின் அறை எப்போதும் இருளாகத்தான் உள்ளது. நான் அதிகாரியிடம் சொல்கிறேன், “நான் இதை PDF ஆக மாற்றுவேன். அப்பொழுது எழுதுவேன், ‘இன்று சுங்கத்தில் தடுக்கப்பட்ட புத்தகம் இது. இப்போது இது உலகம் முழுவதும் வருகிறது. இனி இது உங்களுடையது‘ என்று. ஆனால் நான் இந்தப் பிரதிகளையும் விடமாட்டேன். ஏனென்றால்… இந்த எதிர்ப்பு முக்கியம். இது ஒரு குறியீடு. மக்கள் இந்தத் தடையைப் பார்க்க வேண்டும். அதற்கான எதிர்ப்பையும் அவர்கள் காண வேண்டும். இது சாட்சியமாக இருக்க வேண்டும். இது நீங்கள் செய்யும் கட்டுப்பாட்டு நாடகத்தின் சாட்சியாக. அதைப்போல, இந்தத் தடையை நாம் உடைப்பதையும் மக்கள் பார்க்க வேண்டும்” அதிகாரி ஆச்சரியத்துடன் பார்க்கிறார். “ஏன்? PDF ஆக்கி இணையத்தில் பரவ விடும்போதே உங்களுக்கு வெற்றி கிடைத்து விடுகிறதே?” “இது வெற்றி பற்றியது அல்ல. இது சாட்சி பற்றியது. இந்தப் புத்தகங்கள் இங்கே தடுக்கப்பட்டதை உலகம் பார்க்க வேண்டும். அது சாட்சியமாக இருக்க வேண்டும்.” அவர் எழுந்து நின்று, ஜன்னலுக்கு அருகில் செல்கிறார். “நீங்கள் கேட்டீர்கள் – எனக்கு வெட்கமாக இல்லையா? என்று. ஆம், வெட்கம்தான். ஆனால் இப்போது அந்த வெட்கம் வேறு வகையானது. இது எங்கள் சக்தியினுடைய வெட்கம். நாங்கள் இன்னும் காகிதத்துடன் போராடுகிறோம், ஆனால் உலகம் இலத்திரனியலில், தொழில்நுட்பத்தில், அறிவில் முன்னேறிவிட்டது” அவர் திரும்பிப் பார்க்கிறார். “நீங்கள் வார்த்தைகளைத் தடுக்கலாம், ஆனால் உண்மையைத் தடுக்க முடியாது. நீங்கள் புத்தகங்களைத் தடுக்கலாம், ஆனால் யுகங்களைத் தடுக்க முடியாது” எங்களுடன் தொடர்ந்து உரையாடவும் முடியாமல், அதைத் தவிர்க்கவும் விரும்பாமல் தடுமாறுகிறார் அதிகாரி. அவரிடம் “ஒரு கேள்வி. ஒன்று மட்டும்” என்கிறேன். அவர் அலுவலகத்தைக் கண்களால் சுற்றிப் பார்க்கிறார். அங்கே மௌனமான, கனத்த சுவர்கள், படிவங்களின் அடுக்குகள், விதிமுறைகளின் கனம் கூடியிருக்கிறது. நான், மெதுவாக, ஒவ்வொரு வார்த்தையும் எடை போட்டபடி, “ஆம், கொலைகளைக் கண்டு நீங்கள் அச்சமடைகிறீர்கள். அதனால்தான் இந்தத் தடை” என்கிறேன். அவர் பதறத் தொடங்கி விடுகிறார். முகம் கறுத்துச் சட்டெனச் சிவக்கிறது. கண்களும் சிவந்து கலங்குகின்றன. அவர் ஒரு புத்தகத்தை எடுத்து, அதைத் திறந்து ஒரு பக்கத்தைக் காட்டுகிறார். அது ஒரு செய்தித் தாளின் நகல். “மண்டைதீவில் கொல்லப்பட்டவர்கள் கிணற்றுக்குள் போடப்பட்டனர்” என்ற தலைப்பு. “நீங்கள் அந்தக் கொலைகளைச் செய்யாமல் தடுத்திருக்கலாம் அல்லவா? அதாவது உங்களுடைய படைகள், உங்களுடைய அரசாங்கம். அதுதானே நியாயமானது? அதுதானே சரியானது?” என்கிறேன். அதிகாரியின் முகம் வெளிறுகிறது. “நான்… நாங்கள்…” தடுமாறுகிறார். கண்ணாடியைக் கழற்றி மேசையில் வைத்து விட்டு, முகத்தைத் துடைத்துக் கொள்கிறார். “சரி. அதை விட்டுவிட்டுவோம். இப்பொழுது கொலைக்கான சாட்சியங்களைத் தடுப்பது, என்ன வகையில் நீதியாகும்?” அவர் புத்தகத்தை மேசைமீது வைக்கிறார். அது ஒரு சத்தமான தட்டச்சுப் போல் ‘தொப்‘ என ஒலித்தது. “இது இன்னொரு கொலை அல்லவா? ஆம். சாட்சியங்களின் கொலை.” அறை முழுவதும் மௌனம் பெருகித் தடித்துக் கனமாயிற்று. அவர் எதுவுமே பேசவில்லை. மொழிபெயர்ப்பாளர் மெதுவாக நழுவிச் செல்கிறார். நான் அவரைப் பார்த்துச் சிரிக்கிறேன். இப்போது அந்தச் சிரிப்பு கசப்பானது அல்ல; அது விடுதலை தரும் சிரிப்பு. அந்தச் சிரிப்பு அதிகாரிக்கு வெட்கத்தை அளித்திருக்க வேண்டும். அவர் வேறு ஒரு கோப்பை எடுத்து அந்த வேலையில் மூழ்குவதாக நடிக்கிறார். மெதுவான குரலில் சொல்கிறேன், “முதல் கொலை, உயிரை எடுத்தார்கள். இரண்டாவது கொலை, அந்த உயிரின் கதையை எடுக்கிறார்கள். மூன்றாவது கொலை, அந்தக் கதையின் நினைவை எடுக்கிறார்கள். இது எத்தனை மடங்கு கொலை?” அவர் நாற்காலியில் சாய்ந்து, இரண்டு கைகளையும் உயர்த்தித் தலையின் பின்பக்கமாகச் சரிந்து, கண்களை மூடுகிறார். முகம் மேலே மின்விசிறி நோக்கிக் கொண்டிருக்கிறது. “நீங்கள் விதிமுறைகளைச் சொல்கிறீர்கள். நான் நீதியைச் சொல்கிறேன். விதிமுறைகள் காகிதம். நீதி இரத்தம். எது கனமானது?” என்று கேட்கிறேன். அவருடைய இதயமும் காதுகளும் மிக விரிந்து கேட்டுக் கொண்டிருக்கின்றன. இப்போது முற்றிலும் அமைதியாக, ஆழ்ந்த துக்கத்துடன் குரலைத் தாழ்த்தி, அழுத்தமாகச் சொன்னேன், “நீங்கள் ஒரு விஷயத்தைப் புரிந்து கொள்ளவில்லை. நீங்கள் மனிதர்களை மட்டும் கொல்லவில்லை” அவர் எழுந்து நின்று, சுவரில் தொங்கிக் கொண்டிருக்கும் வரைபடத்தை நோக்கி நடக்கிறார். “நீங்கள் உண்மையைக் கொல்கிறீர்கள். வரலாற்றைக் கொல்கிறீர்கள். இந்தப் புத்தகம் வெறும் காகிதம் அல்ல; இது நடந்தவற்றின் சாட்சியம். நீங்கள் இந்தச் சாட்சியத்தைக் கொல்கிறீர்கள்” திரும்பி எங்களை அவர் பார்க்கிறார். என்னை என்ன செய்யச் சொல்கிறீர்கள்?‘ என்று கேட்பதைப்போலிருக்கிறது அந்தப் பார்வை. காட்டில் தனித்துத் தவித்து அலையும் மானின் கண்களைப்போல அவர் மிரட்சியடைவதைப் பார்க்கிறோம். “உண்மையும் வரலாறும் கொலை செய்யப்பட்டால் மிஞ்சுவது என்ன? பொய்களின் கோட்டை! உண்மைகள் மறக்கப்பட்ட பாலைவனம்!! ஒரு தேசத்துக்கு உண்மையும் வரலாறும் வேண்டாமா?” அதிகாரி மௌனமாக வந்து அமர்கிறார். அவருடைய விரல்கள் மேசையின் மீது வெறுமையாக எதையோ எழுதுகின்றன. “நடந்தவற்றுக்குப் பொறுப்புக் கூறுதலும் குற்றங்களை ஒப்புக்கொள்ளுதலும் அவசியமில்லையா? ஒரு தேசம் தன் குறைகளை ஒப்புக்கொள்ளாமல், தன் பிழைகளை மறைக்காமலும் எப்படி முன்னேற முடியும்? இது ஒரு குழந்தைத்தனத்தைப் போலல்லவா? தவறு செய்து, அதை மறைக்க முயல்வது? ஆனால், இங்கே வன்மையான கபடம் உள்ளது” அவர் புத்தகத்தைத் தூக்கி, அதை மெதுவாகத் தடவுகிறார். அது அவருடைய மனதின் உறுத்தல் என்று உங்களுக்குத் தோன்றுகிறது. “இந்தக் கொலைகள் நடந்தன. இது உண்மை. இப்போது, உண்மையைச் சொல்வதைத் தடுப்பது – இது இரண்டாவது குற்றம். முதலில் செய்த தவறை ஒப்புக்கொள்ளாமல், இரண்டாவது தவறும் செய்வது.” அவர் ஒரு ஆழமான மூச்சை விடுகிறார். “நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்? வரலாற்றை மறைத்தால், அது மாறிவிடுமா? இல்லை. அது காயமாகவே இருக்கும். ஆனால் அந்தக் காயம் சீழ்பிடித்துக் கொள்ளும். தேசத்தின் ஆன்மாவில் சீழ்பிடித்த காயம்” ‘ஆம்’ என்பது போல மெல்லத் தலையசைக்கிறார். ‘இருந்தாலும்..’ என்பதுபோல.. கண்கள் எதையோ சொல்ல முற்படுகின்றன. “ஒரு கேள்வி தோன்றுகிறது. நீங்கள் நூலகம் எரிக்கப்பட்டதைப் பற்றி வருத்தமடையவாகச் சொன்னீர்கள். அது ஒரு பெரும் இழப்பு என்றும். ஆனால்… இப்போது நீங்களே இந்தப் புத்தகங்களைத் தடுத்து வைக்கிறீர்கள். இந்த இரண்டுக்கும் இடையே என்ன வித்தியாசம்?” அதிகாரியின் முகம் வெளிறுகிறது. அவர் ஒரு வினாடி மௌனமாயிருக்கிறார். அவரது வாய் சிறிது திறந்திருக்கிறது. ஆனால் வார்த்தைகள் வரவில்லை. சிறிது நேரத்திற்குப் பிறகு மெல்லச் சொல்கிறார், “அது… அது வித்தியாசமான விஷயம்.” “உண்மையாகவா? 1981 இல், நூலகத்தில் இருந்த புத்தகங்கள் எரிக்கப்பட்டன. 2025இல், நூலகத்துக்கு வரவிருக்கும் புத்தகங்கள் தடுக்கப்படுகின்றன. இரண்டும் ஒரே இலக்கை நோக்கிய திட்டமில்லையா? ஞாபகங்களை, வரலாற்றை இல்லாமலாக்குவது? வரலாற்றை முடக்கி வைப்பது?” “அப்போது அதில் நான் இல்லை. நான் அங்கே இல்லை…” அவசரமாக மறுக்கிறார். “ஆனால் இப்போது நீங்கள் இங்கே இருக்கிறீர்கள். இப்போது நீங்கள்தான் அந்தத் தடையாளி. நூலகத்தின் காவலாளிகள் அன்று தீயை வைத்தனர். இன்று நீங்கள் இப்படிக் கதவைச் சாத்துகிறீர்கள். வித்தியாசம் என்ன?” அதிகாரி தனது நாற்காலியில் பின்னால் சாய்கிறார். அவரது கண்கள் கரைகின்றன. “நான் எரிக்கவில்லை. நான் வெறும் காகிதப் பரிமாற்றம் செய்கிறேன். ஒரு படிவம். ஒரு கையெழுத்து. MOD க்கு அனுப்புகிறேன். இது வித்தியாசம்தானே? நான் எரிக்கவில்லை. நான் எனக்குரிய… நிர்வாகப் பணியைச் செய்கிறேன். அவர்களே பொறுப்புச் சொல்ல வேண்டும்“ நான் அவரை மறுத்துச் சொல்கிறேன், “வித்தியாசம் இல்லை. கையாளும் முறை மட்டுமே மாற்றம். தீ மாறி படிவமாகியிருக்கிறது. அத்துமீறல் இங்கே மாற்றமடைந்து அதிகார உத்தரவாகியிருக்கிறது. இலக்கு ஒன்றே. வார்த்தைகளையும் எண்ணங்களையும் மௌனமாக்குவது, வரலாற்றை முடக்கி வைப்பது” அந்தப் புத்தகப் பொதியைச் சுட்டிக்காட்டிச் சொல்கிறேன், “மேலும் ஒரு விஷயம். இந்தப் புத்தகங்களைத் தடுத்து வைப்பது – இது உண்மையை மறைப்பது மட்டுமல்ல. இது ஒரு சிறை வைத்தலும்தான். அரசியற் கைதிகளைச் சிறை வைப்பதைப் போல, புத்தகங்களையும் சிறை வைக்கிறீர்கள். இவை அறிவுச் சிறை கைதிகள். சிந்தனைச் சிறை கைதிகள். உண்மையின் சிறை கைதிகள்” என்னுடைய குரலில் ஆவேசமும் புத்துணர்வும் ஏற்படுகிறது. அதிகாரியின் கண்களுக்குள் நாங்கள் புகுந்து இதயத்தைத் தாக்கி விட்டதைப்போலிருக்கிறது. அப்படித்தான் அவருக்கும் தோன்றியிருக்கக் கூடும். அவர் மிகச் சங்கடத்தில் தவித்துக் கொண்டிருக்கிறார். “நம்முடைய நாட்டின் அரசியற் சாசனத்திலோ, நீதித்துறையின் விதிமுறைகளிலோ, இதைப் பற்றி எழுதப்பட்டுள்ளதா? ‘புத்தகங்களைச் சிறை வைத்தல்’ என்று எந்தச் சட்டத்தில் உள்ளது? ‘கருத்துக்களைச் சிறை வைத்தல்’ என்று எந்தச் சட்டப் பிரிவில் சொல்லப்பட்டுள்ளது?” அதிகாரி பதிலளிக்க முன், தொடர்கிறேன், “நான் சட்டத்தைப் படித்தவன் அல்ல. ஆனால் இதை நன்றாக அறிவேன். சட்டம் மனிதர்களைச் சிறை வைக்கலாம். குற்றம் செய்தவர்களை. ஆனால் எண்ணங்களை? வார்த்தைகளை? உண்மைகளை? அவற்றை சிறை வைக்க முடியுமா? அது எந்தச் சட்டம்?” அவர் எங்களையே பார்த்துக் கொண்டிருக்கிறார். உதவியாளருக்குச் சங்கடமாகி விட்டது. தனக்கு ஆயிரம் வேலைகள் உண்டு என்பதைப்போல, எதையோவெல்லாம் செய்து கொண்டிருந்தார். காதுகளை இங்கே வைத்திருப்பதும் எடுப்பதும் என்ற மாதிரி இங்கும் அங்குமாக அலைந்து கொண்டிருந்தார். “இல்லை. இது சட்டம் அல்ல. இது பயத்தின் ஆட்சி. பயம் சட்டமாகும்போது, சட்டம் சிறைச்சாலையாகிறது. பயம் நீதியாகும்போது, நீதி நியாயமெல்லாம் கொலை செய்யும் கருவியாகிறது.” உதவியாளர் வந்து ஒரு கோப்பை அதிகாரியின் முன்னே வைத்துவிட்டுச் செல்கிறார். “நீங்கள் ஒரு புதிய வகை சிறையை உருவாக்குகிறீர்கள். இது பொது சிறையல்ல. இது ‘அறிவுச் சிறை’. இங்கு கைதிகள் மனிதர்கள் அல்ல; எண்ணங்கள். தண்டனை, தூக்குத் தண்டனை அல்ல; மறத்தல். இந்தச் சிறையில், புத்தகங்கள் செத்துக் கிடக்கின்றன. ஆனால் அவை இறக்கவில்லை; அவை மறைக்கப்படுகின்றன” சட்டென எழுந்து அவர் மறுக்கிறார் “இது… இது கடுமையான விமர்சனம்” குரல் சற்று உயர்ந்து காட்டமாக இருக்கிறது. “உண்மை எப்போதும் கடுமையானதுதான். சட்டம் மென்மையாக இருந்தால், அது சட்டம் அல்ல; விருந்தோம்பலாகி விடும் என்ற கலக்கம்” “போதும் இத்தோடு நாம் நிறுத்திக் கொள்வோம்” என்ற அதிகாரி, உதவியாளரை அழைத்து, அவ்வளவு புத்தகங்களையும் MOD க்கு அனுப்புவதற்கான படிவத்தை நிரப்பி, என்னிடம் கையெழுத்தைப் பெறுமாறு பணிக்கிறார். அலுவலகத்தின் மின்விசிறி சுற்றும் ஒலியைவிட, அவருடைய மனசாட்சி சத்தமாகச் சுற்றிக்கொண்டிருக்கிறது என்பதை அவருடைய குரலின் பதட்டம் காட்டுகிறது. MOD. பாதுகாப்பு அமைச்சு. ஒரு மூன்றெழுத்து வார்த்தைதான். ஆனால் அது ஒரு கண்ணி. திறக்கக் கடினமான ஒரு கடவுச்சொல். பல சந்தர்ப்பங்களிலும் அது ஒரு கல்லறை என்று உங்களுடைய மனதில் தோன்றுகிறது. MOD க்கான படிவம்: SR / Jaf / Post / 56 / 4054 மூலப்பிரதி தொடர் இல: 196448 மூடைகளைத் தடுத்து வைத்தல் பெயரும் கடவுச் சீட்டு / அடையாள அட்டை இலக்கமும்: ஞானசேகரம் அருட்குமரன் தடுத்து வைத்தலுக்கான காரணம்: பாதுகாப்பு அமைச்சகம் மற்றும் தகவல் துறையின் ஒப்புதலுக்காக நிலுவையில் உள்ளது (Pending Approval from MOD and Department of Information) தடுத்து வைக்கப்பட்ட பொருட்களின் விவரம் (எண்ணிக்கை, மாதிரி இல, முதலியவை) 05 புத்தகங்கள் (தமிழ்) 1. 1990 – லைடன்தீவு மண்டைதீவு படுகொலைகளும் புதைகுழிகளும் – 02 2. ஒரு சவரக்காரனின் கவிதை மயிருகள் – 02 3. நெரிந்து – 01 பரிந்துரை: பரிசீலனை செய்யப்பட வேண்டும். காரணம்: தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தல். பொருட்கள் தடுத்து வைத்த திகதி: 2025.11.20 சொந்தக்காரரின் ஒப்பம் உதவிக் கட்டண உத்தியோகத்தர் நான் ஒரு புன்னகையுடன் அவரைப் பார்க்கிறேன். “அப்படியென்றால், எதுவுமே மாறவில்லை. யுத்த கால நிலவரம்தான் இப்போதும். அப்போதும் MOD தான். இப்போதும் MOD தான்” அவர் எதுவுமே சொல்லவில்லை. சிரிக்கவும் முடியாமல், முறைக்கவும் முடியாமல் நெளிகிறார். அவர் கேட்கிறார்: “பெயர்?” நான் சொல்கிறேன்: எழுத்தாளர்களின் பெயர்களை அவர் எழுதினார்: “தமிழ் எழுத்தாளர்” நான் சொன்னேன்: “வரலாற்றாசிரியர்கள் அல்ல” அவர் எழுதினார்: “அரசியல் உள்ளடக்கம்” நான் சொன்னேன்: “மனித உரிமைப் பதிவு” அவர் எழுதினார்: “MOD-க்கு அனுப்பவும்.” நான்: கொலைகளைப் பற்றிய கதைகள்தான் உங்களை அச்சுறுத்தலாம். சாதியக் கவிதைகள்? அவர்: பாதுகாப்புச் சிந்தனையில் எல்லாம் ஒன்றுதான் நான்: ஆமாம், சரியாகச் சொன்னீர்கள். இலக்கை நோக்கி வீசப்படும் குண்டு வீச்சில் அதிகமாகக் கொல்லப்படுவது பொதுமக்கள்தான். அதைப்போலவே கொலைகளின் ஆவணமே இல்லாத மற்ற இரண்டு கவிதை நூல்களையும் தடுத்து விட்டீர்கள்… சுங்க அதிகாரியின் கண்ணெதிரே, புத்தகங்கள் பொதிசெய்யப்படுகின்றன. அவர் அதை ‘சரக்கு’ என்று நினைக்கிறார். நான் அதை ‘வரலாறு’ என்று எண்ணுகிறேன். இந்த உரையாடலை எல்லாம் கேட்ட புத்தகங்கள் அமைதியாக இப்போது ‘To MOD’ என்று எழுதப்பட்ட பெட்டியில் இருக்கின்றன. 02 புத்தகங்களின் குரல் இணைகிறது: “எங்களைப் பற்றி நீங்கள் கேள்விப்பட்டிருக்கிறீர்களா? நாங்கள் சாட்சியங்கள். எங்களில் சிலர் எழுதப்பட்டோம். பெரும்பாலானோர் எழுதப்படவில்லை. எங்களில் சிலர் இந்தப் புத்தகத்தில் இருக்கிறோம். பலர் இல்லை. ஒவ்வொரு தடுக்கப்பட்ட புத்தகமும், ஒவ்வொரு மௌனமான கதையும், ஒவ்வொரு அழிக்கப்பட்ட சாட்சியமும் – இவை அனைத்தும் ஒரே கொலையின் பகுதிகள். நீங்கள் இந்தப் புத்தகத்தைத் தடுக்கிறீர்கள் என்று நினைக்கிறீர்கள். ஆனால் உண்மையில், நீங்கள் மீண்டும் கொல்வதைத் தொடர்கிறீர்கள். ஒவ்வொரு முறையும் நீங்கள் எங்கள் கதையைத் தடுக்கிறீர்கள், எங்களை மீண்டும் கொல்கிறீர்கள். ஆனால் நீங்கள் எங்களைக் கொல்ல முடியாது. ஏனென்றால், சாட்சியங்கள் இரத்தத்தில் எழுதப்படுவது மட்டுமல்ல; அவை காலத்தில் எழுதப்படுகின்றன. அவை காற்றில் எழுதப்படுகின்றன. அவை மனித நெஞ்சில் எழுதப்படுகின்றன. எங்களை எரியுங்கள். இன்னும் நூறு புத்தகங்களை எழுதுவோம். இன்னும் ஆயிரம் கதைகளைச் சொல்வோம். நாங்கள் சாட்சிகள். எங்கள் வேலை, சாட்சியமளித்தல். உங்கள் வேலை, அதைத் தடுத்தல். யார் வெல்லுவார்கள் என்று நினைக்கிறீர்கள்? நீங்கள் எங்களைப் பொதியில் அடைத்தீர்கள். எங்களை MOD க்கு அனுப்புகிறீர்கள். ஒரு ஆவணமாக எண்ணுகிறீர்கள். தவறு. நாங்கள் வெறும் வார்த்தைகள் அல்ல. நாங்கள் கண்கள். 1983இல் நூலகத்தின் ஜன்னல்களில் இருந்து பார்த்த கண்கள். 1987இல் வீதிகளில் நடந்த கண்கள். 2009இல் முள்ளிவாய்க்கால் கரையில் நின்ற கண்கள். உண்மையான வரலாறு பகிரங்கமாக வெளியே உள்ளது. எல்லோருக்கும் தெரிந்தது. அது ஒவ்வொரு வீட்டு முற்றத்திலும் உள்ள ஆழமான வெட்டு. ஒவ்வொரு குடும்ப மரத்திலும் உள்ள ஆறாத புண். அந்தக் காயங்களில் இருந்து வடியும் குருதி – அது எங்கள் மையில் உள்ளது. நீங்கள் எங்களை மறைத்து வைக்கலாம். இந்த ஐந்து புத்தகங்களைத் தடை செய்யலாம். ஆனால் வெளியே உள்ள உண்மையை… அதனுடைய ஆதாரத்தை… காயாத அந்தக் குருதியை எப்படி மறைக்க முடியும்? அது யாழ்ப்பாணத்தின் மண்ணில் இருக்கிறது. கிளிநொச்சியின் வேர்களில் இருக்கிறது. முள்ளிவாய்க்காலில் வீசும் காற்றில் இருக்கிறது. கொக்கட்டிச்சோலையில், உடும்பன்குளத்தில், ஏறாவூரில், மன்னார் – முருங்கனில், வாகரையின் மணலில் கொதித்துக் கொண்டிருக்கிறது. நாங்கள் எதிரொலிகள். உண்மையின் எதிரொலிகள். கண்காணிப்புக் காமிரா 04: ரிக்கார்டிங். 10:25:15. பொருள்: ஒரு (அடையாளம்: தமிழ்) எழுத்தாளரும் நீங்களும் புத்தகப் படிவங்களோடு நுழைகிறீர்கள். நேரம் 10:45:22. பொருள்: சுங்க அதிகாரி (அடையாளம்: காமினி லொக்குபண்டார) புத்தகங்களைப் பிரிக்கிறார். 10:58:41. ஆண் சிரிக்கிறார். வாய்ப்பதிவு இல்லை. பாதுகாப்புக் காரணங்களுக்காக ஓடியோ ரிக்கார்டிங் முடக்கப்பட்டுள்ளது. 12:12:07. புத்தகங்கள் பக்கேஜ் செய்யப்படுகின்றன. 12:20:33. எழுத்தாளர் கையெழுத்திடுகிறார். காமிரா கோணம்: அவரது கைகள் மட்டுமே தெரிகிறது. புத்தகங்கள் மட்டுமே தெரிகிறது. முகங்கள் தெளிவாகத் தெரியவில்லை. ரிக்கார்டிங் முடிந்தது. கோப்பு MOD க்கு மாற்றப்படுகிறது. பறவை பார்த்தது: நீல நிறக் கூண்டு ஒன்று. அதன் உள்ளே, இரண்டு கால்கள் உள்ள மனிதப் பறவைகள், வெள்ளைத் தாள்கள் என்ற இறகுகளை அடுக்கி வைத்திருந்தனர். ஒருவர் மற்றவருக்கு ஒரு கறுப்பு வட்டத்தை (முத்திரை) கொடுத்தார். அது உணவு போல இல்லை; ஆனால் அவர் அதை வாங்கிக் கொண்டார். ஒரு பெரிய பொட்டலம், சிறு சிறு கறுப்பு எழுத்துகளால் நிறைந்தது. அது ஒரு பெட்டியில் வைக்கப்பட்டது. அந்தப் பெட்டியில் மற்றொரு பெரிய கூண்டுக்கு அனுப்பப்படும் என்பது போல, ‘MOD’ என்று குறிக்கப்பட்டிருந்தது. (பறவைக்குப் புரியவில்லை) எழுத்துகள் விதைகளா? இல்லை, அவை முளைக்கவில்லை. அவை பறக்கவும் முடியாது. பிறகு ஏன் அவற்றை காப்பாற்றுகிறார்கள்? அல்லது அழிக்கிறார்கள்? பறவை சிறகை அசைத்தது, மேலே பறந்தது. கீழே, நீலக் கூண்டு இன்னும் அங்கேயே இருந்தது. அதன் வாயில், ஒரு சிறிய மனிதப் பறவை நின்று கொண்டிருந்தான், காலத்தை வெளியே எறிந்து கொண்டிருந்தான்” பறவை பறந்து சென்றது. அது கீழே உள்ள நீலக் கூண்டைப் பார்த்தது. அது ஒரு பெரிய கட்டிடத்தைப் பார்த்தது. அதன் மீது மூன்று எழுத்துக்கள்: M O D. சுங்க அதிகாரியின் குறிப்பு: “அந்தப் பொதியைக் கட்டவிழ்க்கச் சொன்னபோது, என் கைகள் ஈரமாயின. ‘நடவடிக்கை எண் 15(ஆ): தேசிய பாதுகாப்புக்கு இடையூறான வெளிநாட்டு பொருட்கள்’ என்ற பிரிவு என் மனத்தில் ஒளிர்ந்தது. ஆனால் மறுகணம், ‘இவை புத்தகங்கள். வார்த்தைகள். காகிதம் மீது மை’ என்ற மெல்லிய குரல் எழுந்தது. பார்த்தேன் – அந்த எழுத்தாளர் அசைவற்று இருந்தார். அவர் கண்களில் எதிர்பார்ப்பும் தீவிரம் குன்றாத அறிவும் களைப்பான உறுதியும் மட்டுமே இருந்தது. அவர் எத்தனை முறை இந்த நாடகத்தில் முடிவில்லாமல் வாழ்ந்து கொள்ள வேண்டியுள்ளது? நான் எத்தனை முறை இந்த வரிகளைப் பேசியிருக்கிறேன்? துக்கமும் அவமானமுமாக உள்ளது. உண்மையும் நியாயமும் புரிகிறது. சரிகளைத் தெரிந்தும் அதை ஏற்றுக் கொள்ள முடியாமலிருப்பது, அவமானச் சுமையினால் அழுந்துவதன்றி வேறென்ன? ஒரு கணம், நான்தானா இந்தப் பொம்மலாட்டத்தை நடத்துகிறேன் எனத் தோன்றியது. பின், அலுவலகத்தின் பட்டியலில் என் பெயரைக் கண்டேன். காமினி லொக்குபண்டார’ ஆம். நான் இங்குள்ளேன். நான் இதைச் செய்வேன். கையெழுத்து. முத்திரை. MOD க்கு கடமை முடிந்தது. ஆனால் ஏன் இந்த மார்பு இப்படி இடிக்கிறது?” ஏனிந்தக் கண்களில் நீர்? MOD பெட்டியின் கண்ணோட்டம்: “நான் ஒரு பெட்டி. என்னுள் என்ன இருக்கிறது என்று எனக்குத் தெரியாது. ஆனால் இதுவரை, என்னுள் வந்த பல காகிதங்கள் ‘ரகசியம்’ என்று முத்திரை குத்தப்பட்டுள்ளன. அவற்றில் சில உண்மையில் ரகசியங்களாக இருக்கலாம். பெரும்பாலானவைப் பெரும் உண்மைகள். ஆனால் ‘ரகசியம்’ என்ற முத்திரை, ஒரு சாதாரண உண்மையைக் கூட ஒரு ஆயுதமாக மாற்றிவிடும்” அதிகாரியின் உள்உரையாடல்: “சாட்சியங்களின் கொலை.” இந்த வார்த்தைகள் என் நெஞ்சில் குத்தின. அவர் சொன்னது சரிதான். நாங்கள் என்ன செய்தோம்? நாங்கள் கொலைகளைத் தடுக்கவில்லை. அதைச் சொல்ல நான் பயப்படுகிறேன். ஆனால் அது உண்மை. 1983இல் நான் இளம் வயதினன். நாங்கள் செய்திகள் கேட்டோம். ‘தேசியப் பாதுகாப்பு’ என்று சொன்னார்கள். ‘அமைதி’ என்று சொன்னார்கள். ஆனால் இப்போது… இப்போது நான் கொலைகளைத் தடுக்கும் படையின் ஒரு பகுதி. ஆனால், நான் சுங்க அதிகாரி. அல்ல, இன்னும் மோசமானது. நான் கொலைகளை மறக்க வைக்கும் படையின் ஒரு பகுதி. முதல் கொலை: அவர்களுடைய உயிர். இரண்டாவது கொலை: அவர்களுடைய குரல். மூன்றாவது கொலை: அவர்களுடைய நினைவு. நான்காவது கொலை: அவர்களுடைய நீதி. ஆம், நான்கு கொலைகள். நான் நான்காவது கொலையில் பங்கு கொள்கிறேன். நான் ‘நீதியை’ கொல்கிறேன். வெறும் கையெழுத்து மூலம். வெறும் படிவம் மூலம். சட்டம் சொல்கிறது: இது தவறு அல்ல. ஆனால் மனசாட்சி சொல்கிறது: இது கொலை. 03 அவருடைய பதட்டத்தைக் கண்ட அந்த உதவிப் பணியாளர், இயந்திரம்போல மிக வேகமாக அதையெல்லாம் செய்து ஒப்பத்துக்காகப் பத்திரத்தை அதிகாரிடம் கொடுக்கிறார். பிரிக்கப்பட்ட பொதியில் புத்தகங்களை உள்ளிட்டு, மீளவும் பொதியாக்கி, To the MOD என்று எழுதுகிறார் உதவிப் பணியாளர். “ஆட்கள் மாறியிருக்கிறார்களே தவிர, ஆட்சி மாறவில்லை” என்கிறேன். ‘அதேதான்’ என்பது போல சிரித்தார் அதிகாரி. முகத்தில் ஒரு சிநேகபாவம் தோன்றியது. “உங்களுக்கு நல்ல பதில் கிடைக்க வேண்டும் என்று பிராத்திக்கின்றேன்” என்றார். “நல்ல பதில் அல்ல. புத்தகங்கள்தான், நீதிதான் கிடைக்க வேண்டும்” ஒப்பமிட்ட பின் ‘தடைசெய்யப்பட்டன புத்தகங்கள்’ என்று எழுதப்பட்ட பத்திரத்தை, அதிகாரியைப் பார்த்துக் கொண்டு வாங்குகிறேன். அந்த முத்திரையிட்ட உறையை வாங்கும்போது, என் கைகள் நடுங்கவில்லை. வரலாறு மீண்டும் தடுக்கப்பட்டதை உணர்கிறேன். ஆனால் அதிகாரியின் கண்களில், முன்பு இல்லாத ஒரு வெளிச்சம் இருக்கிறது. அவர் கடித உறையை நீட்டும்போது, அவரது விரல்கள் மெதுவாக என் கையினைத் தொடுகின்றன. அது ஒரு தவறுதலாக, தற்செயலானதாக இருக்கலாம். அல்லது ஒரு மௌனமான உரையாடலாக இருக்கலாம். அந்தத் தொடுகையில் நடுக்கத்தை உணர்கிறேன். நாங்கள் வெளியேறும்போது, அவர் மெதுவாகச் சொல்கிறார், “உங்கள் புத்தகம்… அதில் பல பக்கங்கள்… மிகவும் நன்றாக எழுதப்பட்டுள்ளது” அந்த வார்த்தைகள், அந்த இரும்புக் கதவைத் தாண்டி வந்து, எங்களுடன் நடந்து கொண்டிருக்கின்றன. 04 “அன்றிரவு, உங்களுடைய கனவில், நூலகமும் சுங்க அலுவலகமும் ஒன்றாக மாறியிருந்தன. புத்தக அலமாரிகள் சுங்க அலுவலக கவுண்டர்களாகி விட்டன. ஒவ்வொரு புத்தகத்தின் மேலும் ‘தடை செய்யப்பட்டது’ என்ற முத்திரை. ஆனால் புத்தகங்கள் பேசிக் கொண்டிருந்தன. அவை சத்தமாகப் படித்துக் கொண்டிருந்தன. ‘நாங்கள் எரிக்கப்பட்டோம். ஆனால் எங்கள் வார்த்தைகள் மட்டும் எரியவில்லை’ என்று ஒரு புத்தகம் சத்தமிட்டது. 05 இப்படியெல்லாம் நடப்பதைப் பற்றி நீங்கள் ஆழமாக யோசித்துக் கொண்டேயிருக்கிறீர்கள். இது உங்களுடைய மனதில் கனமான ஒரு நெருப்புத் துண்டைப்போலவே கிடக்கிறது. அப்படி யோசித்துக் கொண்டிருக்கும்போது உங்களுடைய நினைவுக்கு வந்த பதிவொன்று – அலெக்ஸாண்டிரியாவின் பழமையான நூலகத்தை (Library of Alexandria) பற்றி தெரியுமா உங்களுக்கு? இது எகிப்தின் அலெக்ஸாண்டிரியாவில் கி.மு 03 ஆம் நூற்றாண்டில் தாலமிக் வம்சத்தால் நிறுவப்பட்டது. ‘மௌசியோ’வின் (Mouseion) ஒரு பகுதியான இந்த நூலகம், உலகின் அனைத்து இலக்கியங்களையும் சேகரிப்பதை நோக்கமாகக் கொண்டிருந்தது. இதில் 40,000 முதல் 400,000 சுருள்கள் (scrolls) இருந்திருக்கலாம் என மதிப்பிடப்பட்டுள்ளது. விரிவுரைக் கூடங்கள், ஆய்வகங்கள், தோட்டங்கள் மற்றும் விலங்கியல் பூங்காக்களும் இதில் இருந்தன. அறிஞர்களுக்கான தங்குமிடம், வரி விலக்குகள், ஊதியத்தை எல்லாம் வழங்கியது. அறிஞர்களான பிளாட்டோ, அரிஸ்டாட்டில், ஹிப்போகிரேட்டஸ் போன்றோரின் படைப்புகள் இங்கே இருந்தன. இங்குப் பழங்காலத்தின் மிக பிரபலமான சிந்தனையாளர்கள் பலர் ஆய்வுகள் செய்தனர். பெரும்பாலான புத்தகங்கள் பாபிரஸ் காகித சுருள்களாக வைக்கப்பட்டிருந்தன. இது கலைகளின் ஒன்பது தெய்வங்களான, முஸைகளுக்கு அர்ப்பணிக்கப்பட்டது. கி.பி. 03 ஆம் நூற்றாண்டில் நடந்த உள்நாட்டுப் போரின்போது முக்கிய நூலகம் அழிந்தது. பின்னர், அதன் துணை நூலகமான செராபியம் (Serapeum) கி.பி 391 இல் கிறிஸ்தவர்களால் அழிக்கப்பட்டது. இந்த நூலகத்தில் உள்ள நூல்கள் தீக்கிரையாக்கப்பட்டு அழிவுக்கு உள்ளாயின. அதன் அழிவானது கலாச்சார அறிவு இழப்புக்கான ஒரு சின்னமாக மாறியது. இதனுடைய முழுமையான அழிவு கி.மு. 48 இல் ஜூலியஸ் சீசரின் இராணுவத்தால் மற்றும் கி.பி 270 இல் ஆரேலியனின் தாக்குதல் ஆகியவற்றால் ஏற்பட்டிருக்கலாம். எகிப்தை முஸ்லீம்கள் வெற்றி கொண்ட காலமான கி.பி. 642 இல் (அல்லது அதற்குப் பிறகு) நூலகம் இறுதியாக அழிந்தது. 06 இந்தக் கதையைக் கொந்தளிப்போடு நீங்கள், உங்களுடைய மகளுக்குச் சொன்னபோது, அவள் கேட்டாள், “வரலாற்றின் மனநோயாளிகளைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?” “அவர்கள் வரலாற்றைக் கண்டு அச்சமடைகிறார்கள் மகளே!” 00 https://vallinam.com.my/version2/?p=108332 points
-
வெனிசுலா ஜனாதிபதி மதுரோவும் அவரது மனைவியும் அமெரிக்க இராணுவத்தினரால் கைது!
இன்று வெனிசுலாவில் அரங்கேறி வரும் அமெரிக்காவின் அதே "கடத்தல்" தந்திரம், முப்பத்து மூன்று ஆண்டுகளுக்கு முன்பு ஆப்பிரிக்காவின் ஒரு மண்ணில் மிக மோசமாகத் தோல்வியடைந்தது. அந்த வரலாற்றுப் பாடத்தின் பெயர்: 'Mogadishu War' (1993). 1993-ல் சோமாலியாவின் உள்நாட்டுப் போரில் தலையிட்ட அமெரிக்கா, அங்கிருந்த முக்கியத் தலைவர்களைக் கடத்தத் திட்டமிட்டது. இதற்காக உலகின் மிகச்சிறந்த படைப்பிரிவாகக் கருதப்படும் Delta Force மற்றும் Rangers களமிறக்கப்பட்டனர். நவீன ஆயுதங்கள், அதிநவீன ஹெலிகாப்டர்கள் என ஒரு சினிமா பாணியில் அந்தத் தாக்குதல் தொடங்கியது. அமெரிக்காவின் கர்வத்தை உடைக்கும் விதமாக, சோமாலிய வீரர்கள் எளிய ஆயுதங்களைக் கொண்டு அமெரிக்காவின் பெருமைமிகு இரண்டு பிளாக் ஹாக் (Black Hawk) ஹெலிகாப்டர்களைச் சுட்டு வீழ்த்தினர். வானில் பறந்த அந்த இரும்புப் பறவைகள் மண்ணில் சரிந்தபோது, அமெரிக்காவின் திட்டமும் சுக்குநூறானது. ஒரு சில மணிநேரங்களில் முடியும் என்று நினைத்த அந்த நடவடிக்கை, 15 மணிநேரக் கொடூரப் போராக மாறியது. அடி என்றால் அப்படி ஒரு அடி…கனவிலும் கூட அப்படி ஒரு அடிவிழும் என நினைத்து பார்த்திருக்க மாட்டார்கள்… அந்த எதிர்த்தாக்குதலில் 18 அமெரிக்க வீரர்கள் கொல்லப்பட்டனர். 73-க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர். மிக முக்கியமாக, உயிரிழந்த அமெரிக்க வீரர்களின் உடல்கள் மொக்டிஷோ நகரின் தெருக்களில் இழுத்துச் செல்லப்பட்டன. உலகமே தொலைக்காட்சியில் பார்த்த அந்த காட்சிகள், அமெரிக்காவின் முகத்தில் பூசப்பட்ட அழிக்க முடியாத கரியானது. ஒரு வல்லரசின் அராஜகம், வீரமும் விசுவாசமும் நிறைந்த ஒரு எளிய தேசத்தின் முன்னால் எப்படிப் பாழாகிப் போகும் என்பதற்கு இதுவே சாட்சி. இந்த வரலாற்று அவமானத்திற்குப் பிறகு, சோமாலியா பக்கம் எட்டிப் பார்க்கவே அமெரிக்கா நீண்ட காலம் அஞ்சியது. இன்று வெனிசுலாவில் நடக்கும் அதிகார ஆக்கிரமிப்புகளுக்குப் பின்னால் அதே போன்ற ஒரு 'வெற்றி' கிடைக்கும் என அமெரிக்கா கணக்குப் போடலாம். ஆனால், வரலாறு எப்போதும் ஒரு பாடத்தை மீண்டும் மீண்டும் சொல்லிக் கொண்டே இருக்கிறது: "மண்ணின் மைந்தர்களின் வீரம், எந்த நவீன ஆயுதத்தையும் விட வலிமையானது." (குறிப்பு: இந்தச் சம்பவத்தை அடிப்படையாக வைத்துத்தான் புகழ்பெற்ற 'Black Hawk Down' திரைப்படம் எடுக்கப்பட்டது) email2 points
-
வெனிசுலா ஜனாதிபதி மதுரோவும் அவரது மனைவியும் அமெரிக்க இராணுவத்தினரால் கைது!
2 points
- முன்னோடி - அடிப்படை சுகாதார வசதி திட்டம்
எனது கருத்தும் இதுவே. கடந்தகால உதவித்திட்ட அனுபவங்களிலிருந்து, ஏராளன் வெற்றிகரமாக நடத்தி வரும் அமைப்புக்கு இடையூறு ஏற்படுத்தாமல் விடுவது நல்லது என்று தோன்றுகிறது.2 points- யாழில் 3012 குடும்பங்களுக்கு மலசலக்கூட வசதி இல்லை!
2 points- யாழில் 3012 குடும்பங்களுக்கு மலசலக்கூட வசதி இல்லை!
நன்றி அண்ணை. எனக்கு சம்பளம் தர விரும்பினால் அதனை புலர் அறக்கட்டளைக்கு உங்கள் நன்கொடையாக தரும்படி அன்புடன் கேட்டுக்கொள்கிறேன். (உண்மையில் சேவைக்கு ஊதியம் தேவையில்லை அண்ணை) என்னை இப்பணியில் ஈடுபட கேட்பது எனக்கு மிக மகிழ்ச்சி தருவது. ஏனெனில் வீட்டிற்குள் முடங்கி இருக்கும் நான் இந்தப்பணிகளுக்காக வெளியே பயணிப்பதில் அளவிட முடியாத மகிழ்வடைவேன். புதிய மூன்று சக்கர வாகனம் ஒன்றும் எனது கனடிய நண்பர் வாங்கித்தந்துள்ளார். ஒரே ஒரு பிரச்சனை நினைத்தவுடன் புறப்பட முடியாது. இன்னொருவர் வந்து வாகனத்தில் ஏற்றிவிடவேண்டும், முன்னர் தந்தையார் ஏற்றி விடுவார். உதவிக்கு வருபவர் பின்னேரம் தான் வருவார். இவையெல்லாவற்றையும் தாண்டி பொருளாதாரத்தில் பின்தங்கியுள்ள மக்களுக்கு உதவுவதில் ஆத்ம திருப்தி அடைகிறேன்.2 points- வெனிசுலா ஜனாதிபதி மதுரோவும் அவரது மனைவியும் அமெரிக்க இராணுவத்தினரால் கைது!
ஆனால் இதே அமெரிக்கா ரஸ்ய ஆக்கிரமிப்பு எதிராக பெருமளவு ஆயுதங்களையும் பொருளாதார உதவிகளையும் செய்தது ரஸ்யா உக்கிரேனை ஆக்கிரமிப்பது தவறானது என்று அமெரிக்காவும் அதன் கூட்டாளிகளான ஐரோப்பிய நாடுகளும் உக்ரைனுக்கு ஆயுத கபாருளாதார உதவிகளை வழங்கியதோடு ஐநாவை உடனடியாக கூட்டி பெரும்குற்றஞ்சாட்டுகளை ரஜயாவுக்கு எதிராக முன்வைத்தன. ஆனால் இப்போது எல்லோரும்நழுவல் போக்கில் கருத்துக்களை தெரிவிக்கின்றனர். ஐநாவும் ஒப்புக்கு அறிக்கையை விட்டுவிட்டு நித்திரைக்குப் போய்விட்டது. அமெரிக்கா வெனிசுலாலவை ஆதரித்ததற்கு கூறும் காரணம் முன்னுக்குப்பின் முரணானதும் ஏற்றுக்கொள்ள முடியாதததும் ஆகும். அமெரிக்கா தனது நாட்டுக்குள் போதை வஸ: கடத்தப்படுவதை அதன் எல்லைகளில் ஒழுங்கான பாதுகாப்பை வழங்காததே அதற்குக்காரணம். ஆகவே எந்த நாட்டில் இருந்து போதைப்பொருள் அமெரிக்காவுக்குள் வந்தாலும் அதற்கு அமெரிக்காவின் பாதுகாப்புக் குறைபாடே காரணம். வெனிசுலாலவை அமெரிக்கா அதன்அதிபரைக் கைது செய்தபின் அல்லது முற்றாக வெனிசுலாவை ஆக்கிரமித்தபின்னும் போதைப்பொருள் அமெpரிக்காவுக்குள் கடத்தப்படவில்லை என்று அமெரிக்காவால் உறுதியளிக்க முடியுமா? வேலியை சரியாகப் போடாமல் விட்டு விட்டு அடுத்தவன் தோட்டத்து மாடு எனது பயிரை மேய்ந்து விட்டது என்று கூறுவதை எப்படி ஏற்க முடியும.?அமெரிக்காவின் இந்த நடவடிக்கை எந்த ஒரு நாடும் எந்த ஒரு நாடடையும் ஒரு பலவீனமான குற்றச்சாட்டை வைத்து ஆக்கிரமிப்பதற்கு போதுமானதாகும்.ரஸ்யாவுக்கும் சீனாவுக்கும் ரூட்கிளியர்.2 points- முன்னோடி - அடிப்படை சுகாதார வசதி திட்டம்
கீழ்கண்ட திரியில் ஆலோசித்து ஏற்று கொண்ட வேலைத்திட்டத்தின் அடிப்படையில் செயற்பாடுகளை ஒருங்கிணைப்பதற்கான திரி. பிகு இதை கேணல் சங்கர் ஞாபகார்த்த அடிப்படை வசதி திட்டம் என பெயர் சூட்ட விரும்புகிறேன்ழ் புலத்தில் மிகபெரிய வசதி வாய்ப்பை உதவி விட்டு நாடு திரும்பிய முதலாவது வான்படை சிறப்புத்தளபதி கேணல் சங்கர் பெயரலால் இதை செய்வதில் அனைவரும் உடன்படுவீர்கள் என நம்புகிறேன். மாற்று கருத்து இருப்பின் தெரியப்படுத்தவும்.1 point- கிரீன்லாந்தை கைப்பற்றுவதற்கு அமெரிக்காவுக்கு எந்த உரிமையும் இல்லை – டென்மார்க் பிரதமர்
கிரீன்லாந்தை கைப்பற்றுவதற்கு அமெரிக்காவுக்கு எந்த உரிமையும் இல்லை – டென்மார்க் பிரதமர் 05 January 2026 "கிரீன்லாந்தை கைப்பற்றுவது தொடர்பான அச்சுறுத்தல்களை நிறுத்துங்கள்" என்று டென்மார்க் பிரதமர் டொனால்ட் ட்ரம்பிடம் கூறியுள்ளார். மேலும் "அமெரிக்கா கிரீன்லாந்தை கைப்பற்ற வேண்டிய அவசியம் பற்றி பேசுவதில் எந்த அர்த்தமும் இல்லை" என்றும் , டென்மார்க் இராச்சியத்தில் உள்ள மூன்று நாடுகளில் எதையும் இணைக்க அமெரிக்காவிற்கு எந்த உரிமையும் இல்லை" என்றும் டென்மார்க் பிரதமர் தெரிவித்துள்ளார். கிரீன்லாந்தின் இயற்கை வளங்கள் மற்றும் அதன் முக்கியமான புவியியல் இருப்பிடம் காரணமாக அமெரிக்கா அதன் மீது ஆர்வம் காட்டினாலும், அங்குள்ள மக்கள் அமெரிக்காவுடன் இணைவதை விரும்பவில்லை. அமெரிக்காவின் இத்தகைய அழுத்தங்கள் இரு நாடுகளுக்கும் இடையிலான நீண்டகால நட்புறவை பாதிக்கும் என டென்மார்க் எச்சரித்துள்ளது. அதேசமயம், வெனிசுலாவில் அமெரிக்கா மேற்கொண்ட அதிரடி நடவடிக்கைகள் மற்றும் அதன் ஆதிக்க மனப்பான்மை சர்வதேச அரசியலில் பெரும் பதற்றத்தை உருவாக்கியுள்ளதாக அவர் தெரிவித்தார். https://hirunews.lk/tm/439137/us-has-no-right-to-annex-greenland-danish-prime-minister1 point- நான்காவது கொலை - கருணாகரன்
1 pointசொல்லவேண்டிய விடயம்தான். ஆனால் அதைச் சொன்ன இடம் எனக்கு சரியெனப்படவில்லை. அவர் ஒரு அரச அதிகாரி அவர் தனக்குத் தரப்பட்ட வேலையை ஒழுங்காகச் செய்ய வேண்டும். அவரிடம் போய் விவாதிப்பதில் எதுவும் நடந்து விடாது. கேட்க வேண்டிய இடம் MOD. அங்கெல்லாம் நாங்கள் போய் கேட்க மாட்டோம். ஆனாலும் அவருக்கு தனது ஆதங்கத்தை தெரியப் படுத்தியதிலும், வெளியார் பார்வைக்கு கொண்டு வந்ததிலும் திருப்தி.1 point- அரச வைத்தியசாலையில் முதல் முறையாக உணவுப் பிரிவு ஆரம்பிக்க நடவடிக்கை!
அரச வைத்தியசாலையில் முதல் முறையாக உணவுப் பிரிவு ஆரம்பிக்க நடவடிக்கை! 05 Jan, 2026 | 05:04 PM அரசாங்க வைத்தியசாலைகளில் தங்கி சிகிச்சை பெறும் நோயாளிகளுக்கு உரிய சத்தான மற்றும் சுவையான உணவை வழங்குவதற்காக சுகாதார மற்றும் வெகுஜன ஊடக அமைச்சகம், இலங்கை ஊட்டச்சத்து நிபுணர்கள் நிறுவனம் மற்றும் ஊட்டச்சத்து நிபுணர்கள் சங்கத்துடன் இணைந்து ஒரு விசேட திட்டத்தை ஆரம்பித்து உள்ளது. மேலும் அதன் முன்னோடி திட்டம் நாளை செவ்வாய்க்கிழமை (06) மஹரகம வைத்தியசாலையில் சுகாதார மற்றும் வெகுஜன ஊடக அமைச்சர் டாக்டர் நளிந்த ஜயதிஸ்ஸவின் தலைமையில் ஆரம்பிக்கபட உள்ளது. இந்த திட்டத்தின் முக்கிய அம்சம், நோயாளிக்கு அரிசி, காய்கறிகள், ஊறுகாய், இறைச்சி, மீன், முட்டை போன்றவற்றை தனித்தனியாக வழங்குவது ஆகும். உணவை ஒரு நோயாளி பார்த்தவுடன், சாப்பிட வேண்டும் என்ற எண்ணம் ஏற்படுவதாக பணிபுரியும் மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர். தற்போது, மஹரகம அபேக்ஷா வைத்தியசாலையில் ஒரே நேரத்தில் 2,000 பேருக்கு உணவு மற்றும் பானங்கள் தயாரிக்க கூடிய நவீன சமையலறை அமைக்கப்பட்டுள்ளது, மேலும் அந்த சமையலறையும் இந்த திட்டத்துடன் சேர்த்து திறக்கப்பட உள்ளது. வைத்தியசாலையின் சமையலறையின் பெயர் 'உணவு மற்றும் பானங்கள் துறை' என வழங்கப்பட்டுள்ளது. நவீன முறையில் உணவு மற்றும் பானங்களை தயாரித்து பரிமாற நியமிக்கப்பட்ட ஊழியர்களுக்கு சிறப்பு பயிற்சியும் வழங்கப்பட்டுள்ளது. மஹரகம அபேக்ஷா வைத்தியசாலையின் நிர்வாகம், சுகாதாரம் மற்றும் வெகுஜன ஊடக அமைச்சகம், இலங்கை ஊட்டச்சத்து நிபுணர்கள் நிறுவனம் மற்றும் ஊட்டச்சத்து நிபுணர்கள் சங்கம் ஆகியவற்றின் தலைமையில் செயல்படுத்தப்படும் இந்த விசேட திட்டத்திற்கு, ருஹுணு மகா கதிர்காம தேவாலயம் இலங்கை இராணுவம், லேடி ஜே நிறுவனம், ஹைட்ராமணி நிறுவனம் மற்றும் கிராண்ட் மோனார்க் ஹோட்டல் ஆகியவை தங்கள் ஆதரவினை வழங்குகின்றன. இந்தத் திட்டம் குறித்து மஹரகம அபேக்ஷா வைத்தியசாலையின் தலைவரும் ஒருங்கிணைப்பாளருமான ஊட்டச்சத்து நிபுணர் டாக்டர் சஜித மல்லவராச்சி தனது கருத்துக்களைத் தெரிவித்து, நோயாளிகளுக்கு சத்தான மற்றும் சுவையான உணவை வழங்குவது மிகவும் முக்கியம் என்றும், சரியான ஊட்டச்சத்து நிறைந்த உணவு நோயாளிகளுக்கு ஏற்படும் பல சிக்கல்களைக் குறைக்கும் என்றும் கூறினார். வீட்டிலிருந்து கொண்டு வரப்படும் உணவுக்கு சமமான அல்லது சிறந்த, அளவு, சுவையான மற்றும் அதிக ஊட்டச்சத்து சப்ளிமெண்ட்களைக் கொண்ட தரமான உணவை வழங்குவதே இந்த திட்டத்தின் முதன்மை நோக்கம் என்று அவர் மேலும் கூறினார். சுகாதார மற்றும் வெகுஜன ஊடக அமைச்சகம் எதிர்காலத்தில் இந்த திட்டத்தை தீவு முழுவதும் உள்ள அரசு மருத்துவமனைகளுக்கு விரிவுபடுத்த திட்டமிட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார். https://www.virakesari.lk/article/2352701 point- கருத்துக்களம் : பிரச்சனைகளும் தீர்வுகளும்
வணக்கம் யாயினி, உங்கள் தனிமடல் பகுதி முற்றாக நிறையாவிடினும் நீங்கள் இணைத்த படங்களின் எண்ணிக்கை அல்லது அளவுகளால் தனிமடல் பகுதியில் தரவுகளுக்காக ஒதுக்கப்பட்ட இடம் நிறைந்துள்ளது. இப் படங்களை நீக்கினால் தனிமடல் அனுப்ப முடியும். நன்றி.1 point- கருத்து படங்கள்
1 point- தையிட்டி விகாரைக்கெதிராக போராடியவா்களுக்கு சொந்தப் பிணை
சுமந்திரன் எடுத்துத் தந்தால் தமிழிழமே வேண்டாம் என்று சொன்ன தமிழ்சிறி அவர்களுடய கவனத்துக்கு இதைக் கொண்டு வருகின்றேன்.1 point- கருத்து படங்கள்
1 point1 point- வெனிசுலா ஜனாதிபதி மதுரோவும் அவரது மனைவியும் அமெரிக்க இராணுவத்தினரால் கைது!
வெனிசுலா மீதான அமெரிக்க தாக்குதலில் உயிரிழந்த 32 கியூபர்கள்! ஜனாதிபதி நிக்கோலஸ் மதுரோவை கைது செய்வதற்காக வெனிசுலா மீது அமெரிக்கா நடத்திய தாக்குதலில் தனது குடிமக்கள் 32 பேர் உயிரிழந்ததாக கியூப அரசாங்கம் ஞாயிற்றுக்கிழமை (04) தெரிவித்துள்ளது. உயிரிழந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் ஜனவரி 5 மற்றும் 6 ஆகிய திகதிகளில் இரண்டு நாட்கள் துக்கம் அனுசரிக்கப்படும் என்றும், இறுதிச் சடங்குகள் குறித்து அறிவிக்கப்படும் என்றும் ஹவானா குறிப்பிட்டுள்ளது. கியூப அரசாங்க அறிக்கை சில விவரங்களை மட்டுமே அளித்தது. ஆனால் இறந்தவர்கள் அனைவரும் கியூப ஆயுதப்படைகள் மற்றும் உளவுத்துறை நிறுவனங்களைச் சேர்ந்தவர்கள் என்று அது கூறியது. மதுரோ ஆட்சிக்கு வந்ததிலிருந்து கியூபா அவருக்கு ஓரளவு பாதுகாப்பை வழங்கியுள்ளது. 63 வயதான மதுரோ மற்றும் அவரது மனைவி சிலியா புளோரஸ் ஆகியோர் சனிக்கிழமை வெனிசுலா தலைநகர் கராகஸில் அமெரிக்கப் படைகளால் கைது செய்யப்பட்டு அமெரிக்காவிற்கு கொண்டு செல்லப்பட்டனர். போதைப்பொருள் குற்றச்சாட்டில் மதுரோ நியூயோர்க் தடுப்பு மையத்தில் திங்கட்கிழமை (04) நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்த காத்துள்ளனர். https://athavannews.com/2026/14583561 point- யாழில் 3012 குடும்பங்களுக்கு மலசலக்கூட வசதி இல்லை!
ஊதனம் என்ற சொல்லை இன்றுதான் கேள்விபடுகிறேன். நிதியுதவி யையா சொல்கிறீகள்? ஊதியத்தையே ஊதனம்என்று எழுதிவிட்டாரோ? வேலை மினக்கெட்டு செய்பவருக்கும் ஒரு பங்கு ஊதியம் கொடுத்தால் நல்லது.1 point- வெனிசுலா ஜனாதிபதி மதுரோவும் அவரது மனைவியும் அமெரிக்க இராணுவத்தினரால் கைது!
உலக அரசியலில் ரஷ்யாவும் அமெரிக்காவும் நிறுத்தி நிதானித்து அமைதியாக செயற்படுகின்றார்கள். இடையில் இருப்பவர்கள் தான் பொங்கி எழுகின்றார்கள். எதிரியாக இருந்தாலும் சீன வளர்ச்சி விடயத்தில் ஒருவரை ஒருவர் கட்டியணைக்க வேண்டிய கட்டாயம் இவர்களுக்கு..... அமெரிக்க ஆகாயத்தில் பலூன் பறக்க விட்டு அழகு பார்த்தவன் சீனன். அவனுக்கு அமெரிக்க நடவடிக்கைகளை கண்காணிக்க தனி செய்மதி தேவையில்லை.😂1 point- வெனிசுலா ஜனாதிபதி மதுரோவும் அவரது மனைவியும் அமெரிக்க இராணுவத்தினரால் கைது!
அது அப்ப. இப்ப தொல்பொருள் திணைக்களத்திற்குத்தான் எல்லாம் சொந்தம். அமெரிக்கா, இந்தியா இனி தொல்பொருள் திணைக்களத்துடன்தான் பேரம் பேச வேண்டும்.1 point- யாழில் 3012 குடும்பங்களுக்கு மலசலக்கூட வசதி இல்லை!
இன்றைய கால சூழ்நிலைகளில் ஏராளன் சிறந்த தேர்வாகவே எனக்கு தெரிகின்றார். வேலைகள்/நிதிகள் சம்பந்தப்பட்ட கண்காணிப்பை அவரிடமே ஒப்படைப்போம். அதற்குரிய ஊதனத்தை நாமே அவருக்கு செலுத்த வேண்டும். இது பற்றி உங்கள் கருத்தை சொல்லுங்கள். தகவலுக்கு நன்றி. 🙏1 point- வெனிசுலா ஜனாதிபதி மதுரோவும் அவரது மனைவியும் அமெரிக்க இராணுவத்தினரால் கைது!
பனிப்போர் காலகட்டத்தில் கடைப்பிடிக்கப்பட்ட குறைந்த பட்ச அனைத்துலக மற்றும் ஐநா சாசனங்கள் பனிப்போரிற்கு பின்னர் தேவையற்று போய்விட்டது. ஆனாலும் ஒற்றை துருவ அமெரிக்க ஏகாதிபத்திய உலக ஒழுங்கில் குறைந்த பட்ச தார்மீக சிந்தனையினடிப்படையில் மனித உரிமைகளை வெளித்தோற்றத்திற்கேனும் கண்டிக்க வேண்டிய தார்மீக தேவை அமெரிக்க ஏகாதிபத்தியத்திற்கு காணப்பட்டது. அதனால் அமெரிக்கா பயன்படுத்திய பின்னோக்கிய இராஜதந்திரம் என்பது சர்வதேச சட்ட விரோதங்கள் ஐநா சாசன விரோதமான விடயங்களை கண்டிக்கும் அதே நேரத்தில் பின் கதவு வழியான இராஜதந்திரம் மூலம் தனிப்பட்ட நபர்கள் அல்லது சர்ச்சைகுரிய நாடுகளினூடாக (இதற்கு உதாரணமாக இந்திய அரசியலில் சுப்பிரமணியசுவாமியினை குறிப்பிடலாம்) குறித்த சர்வதேச சட்டவிர்ரோத மற்றும் ஐநா சாசன விரோத நடவடிக்கைகளை முன்னெடுப்பது. ஆனால் பாதிக்கப்படும் பிரிவினர் வல்லரசே எமக்கு பின்னால் இருக்கிறது என எண்ணிக்கொண்டிருப்பார்கள், ஆனால் அவர்கள் உண்மையினை உணரும் போது காலதாமாகிவிடும். தற்போதய உலக ஒழுங்கு ஒரு வேறுபட்ட உலக ஒழுங்கு. நாம் 3 வேற்பட்ட உலக ஒழுங்குகளின் போக்கினில் வாழ்கின்ற சந்ததி, இந்த கால மாற்றத்தினை உணராவிட்டால், நட்டம் எமக்குத்தான். அரசியலில் நிரந்தர எதிரியுமில்லை நிரந்தர நண்பனுமில்லை. இங்கு fair என்பது subjective.1 point- வெனிசுலா ஜனாதிபதி மதுரோவும் அவரது மனைவியும் அமெரிக்க இராணுவத்தினரால் கைது!
Al JazeeraChina fears spark Indian race for cobalt in contested oce...India has sought rights to explore an underwater cobalt-rich mountain. But Sri Lanka also has eyes on the region.இலங்கைக்கு அணமையாக உள்ள கோபால்ட் கனிமவள கட்ல் மலையையைப்பற்றி ட்ரம்மின் காதில் போட்டு விட்டால் என்ன? இந்துப் பெருங்கடல் கடலடி கனிமவள மலைக்கான போட்டி இவ்வருடம் தீவிரமாகலாம். இலங்கைக்கு தெற்கே சுமார் ஆயிரம் கிலோமீட்டர் தொலைவில் உள்ள கோபால்ட் கனிமவள மலையை இந்தியா அடைவதற்கு எடுத்த முயற்சியை இதுவரை இலங்கை சிறப்பாக ஆப்பு வைத்து தடுத்துள்ளது. இலங்கையின் தென்முனையான தெய்வந்துறைக்கும் இந்தக் கனிமவள மலைக்கும் உள்ள தூரத்தைவிட வடக்குக் கிழக்கு தமிழர் தாயகத்தின் தென்முனையான குமணவுக்கும் இந்த மலைக்கும் உள்ள தூரம் குறைவு.ஏனென்றால் இந்த மலைப் பகுதி இலங்கைக்கு சரியாக நேர் தெற்கே இல்லாமல் தெற்கே சற்றுக் கிழக்காக உள்ளது. இந்தியா எமக்கு வைத்ததாக நினைத்த ஆப்புகள் எல்லாம் தனக்குத்தானே வைத்துக்கொண்ட வெடிகுண்டுகள் என்பதை காலம் ஒவ்வொன்றாக நிரூபித்து வருகிறது.அந்தப் பட்டியலில் இந்தக் கோபால்ட் மலை இழப்பும் சேரப்போகிறது. கோபால்ட் மலைக்கான போட்டி குறித்து சென்ற ஆண்டு அல் ஜஸீராவில் வந்த செய்திக் கட்டுரையின் இணைப்பு1 point- வெனிசுலா ஜனாதிபதி மதுரோவும் அவரது மனைவியும் அமெரிக்க இராணுவத்தினரால் கைது!
வெனிசுலாவில் அமெரிக்கா செய்வது பச்சை காடைத்தனம். இதை மெல்லவும் முடியாமல் முழுங்கவும் முடியாமல் ஐரோப்பா, யூகே, கனடா, அவுஸ், நியூசிலாந்த் வெளியிட்டுள்ள அறிக்கைகள் சுத்த பயந்தாங்கொள்ளி தனம். இரெட்டை நிலைப்பாட்டின் உச்சம். அமேரிக்கா போதை பொருள் கடத்தல் என சொல்வது பொய் சாட்டு. அது உண்மை எனிலும் கூட… ஒரு நாட்டின் தலைவரை இன்னொரு நாட்டின் உள்நாட்டு சட்டத்துக்கு அமைய, மற்றைய நாட்டில் புகுந்து தூக்கி வந்து வழக்கு போடுவது…. ஐநா சாசனத்தை மீறும் செயல்… சர்வதேச சட்டத்துக்கு முரணானது…. நிச்சயமாக இது ரஸ்யா, சீனா வுக்கு மட்டும் அல்ல அகண்ட் பாரத் கனவில் இருக்கும் சங்கிகளுக்கு கூட எதிர்காலத்தில் இன்னொரு நாட்டில் அடாவடி செய்ய ஒரு ப்ளூ பிரிண்ட்தான்.1 point- கனடாவில் சிகிச்சைக்கு சென்ற யுவதியிடம் தமிழ் மருத்துவர் பாலியல் சேட்டை..!
செயற்கை நுண்ணறிவை பாவித்து ஒரு சேனல் இனித்தான் செய்யலாமா என்று யோசிக்கிறேன். திறந்ததும் அறிவிக்கிறேன். சப்ஸ்கிரைப் பொத்தான் பெல் பொத்தானை சொடுக்கி எல்லாரும் இணைப்பு எடுத்திடுங்கோ.1 point- வெனிசுலா ஜனாதிபதி மதுரோவும் அவரது மனைவியும் அமெரிக்க இராணுவத்தினரால் கைது!
இதைத்தான் உக்ரேன் போர் ஆரம்பித்த நாளில் இருந்து எழுதுகிறேன். வல்(லூறு) அரசுகள் எப்போதும் வல்லூறுகளே. இதில் நாம் ஒடுக்கப்படும் தேசிய இனங்களை ஆதரிப்பது மட்டுமே எடுக்க கூடிய ஒரே ஒரு நியாயமான நிலைப்பாடு. இதை சொன்னால், புட்டின் மீதுள்ள அதீத காதலில், அல்லது மேற்கு வெறுப்பில் ஒரு பகுதியை மேற்கின் ஆதரவாளர் என பெயிண்ட் அடித்து, ரணகளம் பண்ணி விட்டார்கள்😂.1 point- வெனிசுலா ஜனாதிபதி மதுரோவும் அவரது மனைவியும் அமெரிக்க இராணுவத்தினரால் கைது!
உக்ரைனை நீ வச்சுக்கோ!தாய்வானை அவன்வச்சிருக்கட்டும்!!வெனிசுலாவை நான்வச்சிருக்கிறன். பட் இந்த டீல் எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு. பேக்கரி டீல் ஓவர்.1 point- நிக்கோலஸ் மதுரோவை கைது செய்தமைக்கு ஜே.வி.பி கண்டனம்
உந்தப் பெரிய அமெரிக்க போர்விமானங்கள் பலாலியில் இறக்கி சேக்கஸ் காட்டினது ...இப்பவே விளங்கினால் சரி ...மதுரோவும் சீனாப் புகழ்பாடி...சேட்டை விட்டவர் ...அனுரவும் அப்படியே ...இனி நடக்கப்போவதில் ...அவதானம் தேவை குமாரு...ரூட்டெல்லாம் அவைக்கு அத்துப்படியாகிட்டுது..1 point- வெனிசூலாவை ஆக்கிரமித்த அமெரிக்கா.. - எஸ்.வி.ராஜதுரை
வெனிசூலாவை ஆக்கிரமித்த அமெரிக்கா.. - எஸ்.வி.ராஜதுரை 4 Jan 2026, 11:48 AM 1823இல், அப்போது அமெரிக்கக் குடியரசுத் தலைவராக இருந்த ஜேம்ஸ் மன்றோவின் அரசாங்கத்தில் வெளியுறவு அமைச்சராக இருந்த க்வென்ஸி என்பவரால் எழுதப்பட்டதும் அன்று முதல் இன்று வரை அந்த நாட்டின் வெளியுறவுக் கொள்கையின் முக்கியக் கூறாக உள்ளதும்தான் ‘மன்றோ கொள்கை’ (Monroe Doctrine) எனக் கூறப்பட்டு வருகிறது. அக்காலத்தில் ஐரோப்பிய ஏகாதிபத்திய நாடுகளின் காலனிகளாக இருந்த தென்னமெரிக்க நாடுகளில் நடந்த புரட்சிகரக் கொந்தளிப்புகளின் காரணமாக அவை தேசிய விடுதலை பெறும் நிலையில் இருந்தன. இருந்தபோதிலும் அமெரிக்காவின் மன்றோ கொள்கை இனி ‘புதிய உலகம்’ எனச் சொல்லப்படும் அமெரிக்கக் கண்டங்களில், குறிப்பாக இலத்தின் அமெரிக்கா எனச் சொல்லப்படும் தென்னமெரிக்காவிற்குள் – ஐரோப்பிய நாடுகள் இனி புதிய ஆக்கிரமிப்புகளைச் செய்யக்கூடாது என்றும், அதேவேளை ஐரோப்பிய ஏகாதிபத்திய நாடுகளின் உள்விவகாரங்களிலோ அல்லது அவற்றிடம் எஞ்சியிருந்த இலத்தின் அமெரிக்கக் காலனி நாடுகளிலோ அமெரிக்கா தலையிடாது என்றும் மன்றோ கொள்கை கூறியது. ஆனால், இலத்தின் அமெரிக்க நாடுகளில் மட்டுமல்ல, உலகிலுள்ள வேறு எந்த நாட்டிலும் அமெரிக்கா தலையிடாது என்ற வரம்பு மன்றோ கொள்கையில் சேர்க்கப்படவில்லை. எனவே அமெரிக்கா இலத்தின் நாடுகளில் மட்டுமின்றி உலகின் ஆறு கண்டங்களிலும் தலையிட்டுள்ளது. புவிக் கோளத்தில் குறைந்தபட்சம் பாதியளவு தனது உடைமையில் இருக்க வேண்டும் என்பதுதான் அமெரிக்காவின் குறிக்கோள். இலத்தின் அமெரிக்க நாடுகளைத் தன் புழக்கடையாகக் கருதும் அமெரிக்கா தன் நலனுக்குப் புறம்பாக நடந்து கொள்ளும் நாடுகளை ஆக்கிரமித்தோ அல்லது அந்த நாடுகளில், தனது உளவுத் துறை மூலமாகவோ ‘எதிர்க் கட்சிகளை’ உருவாக்கி ஆட்சிக் கலைப்பு செய்தோ தன் ஆதிக்கத்தை நிலைநிறுத்திக் கொண்டு வருகிறது. உலக நாடுகளில் பிரதிநிதி என்று சொல்லப்படும் ஐ.நா.வின் விதிகளையும் சர்வதேசச் சட்டங்களையும் துச்சமெனக் கருதும் அமெரிக்கா, 2000த்தில் தொடங்கிய புத்தாயிரமாண்டில் மட்டும் லிபியா, சிரியா, இராக், பாலஸ்தீனம் முதலிய நாடுகளில் நேரடியாக இராணுவத் தலையீடு செய்துள்ளது. அண்மையில் வங்கதேசத்திலும் நேப்பாளத்திலும் நடந்த ”இளந்தலைமுறையினரின் புரட்சிகளி”லும் அமெரிக்காவின் கை உள்ளதாகச் சொல்லப்படுகின்றது. ஐரோப்பிய நாடுகள் அமெரிக்கக் கண்ட விவகாரங்களில் தலையிடக்கூடாது என்ற மன்றோ கொள்கையைக் காட்டி, 1950களில் குவாதமாலா நாட்டிற்கும் 1960களில் கியூபாவிற்கும் சோவியத் யூனியன் செய்த பொருளாதார உதவிகளையும்கூட அந்த நாடுகளின் உள்விவகாரங்களில் செய்யப்பட்ட தலையீடு என்று அமெரிக்கா கூறியது.1960 ஆம் ஆண்டு முதல் அமெரிக்கா, கியூபாவுடன் எந்த நாடும் வணிகம் செய்யக்கூடாது என்ற தடை விதித்து, அந்த நாட்டின் பொருளாதாரத்தை முடக்கியுள்ளது. இலத்தின் அமெரிக்க நாடுகள் ஏதும் சோசலிசத்தை மட்டுமல்ல சுயேச்சையான, இறையாண்மையுள்ள பொருளாதாரத்தை உருவாக்குவதைக்கூட அமெரிக்காவால் பொறுத்துக் கொள்ள முடியாது. எனவே நேரடியாகவும் மறைமுகமாகவும் எந்த நாட்டின் மீதும் இராணுவத் தலையீடு செய்யும் திமிர் அமெரிக்காவிற்கு இருந்து வருகிறது. அணு உலைகள் தொடர்பான சர்வதேச அமைப்பின் கண்காணிப்புக்கு ஈரான் உடன்படவில்லை என்று கூறியும் உலக எஜமானனாகத் தன்னைப் பாவித்தும் சிலமாதங்களுக்கு முன் அமெரிக்க இராணுவ விமானங்கள் ஈரானின் அணு உலைகள் இருந்த இடத்தின் மீது குண்டு மாரி பொழிந்துவிட்டுச் சென்றன. அந்த நடவடிக்கையில் அமெரிக்காவின் கூட்டாளியாக இருந்த இஸ்ரேலுக்கு தக்க பாடம் புகுத்தியது ஈரான். தற்போது ஈரானில் நிலவும் கடுமையான பொருளாதார நெருக்கடிகளின் காரணமாக அந்த நாட்டின் அரசை எதிர்த்து வன்முறைக் கிளர்ச்சிகளை நடத்துபவர்கள் மீது ஈரானிய அரசாங்கம் கடும் நடவடிக்கை எடுத்தால் அமெரிக்கா அந்த நாட்டில் தலையிடும் என்று இரண்டு நாள்களுக்கு முன் ட்ரம்ப் விடுத்த அறிக்கைக்குத் தக்க பதிலடி கொடுத்துள்ளது அந்த நாட்டு அரசாங்கம். 1998முதல் 2013 வரை வெனிசூலாவின் குடியரசுத் தலைவராக இருந்த ஹ்யூகோ சாவெஸ், அந்த நாட்டை சோசலிசப் பாதையில் கொண்டு சென்றார். அவரது ஆட்சிக் காலத்தின்போது அமெரிக்கா தன் உளவுப் படைகள் மூலமும் அங்குள்ள அரசியல் கைக்கூலிகள் மூலமும் சாவெஸ் அரசாங்கத்தைக் கவிழ்க்கப் பல முயற்சிகளைச் செய்தது. சாவெஸ் இறந்த பிறகு அவரது அரசியல் வாரிசான நிக்கோலா மதுரோ ஆட்சிக்கு வந்த நாள் முதல் அமெரிக்கா கடும் பொருளாதாரத் தடைகளை விதித்து அந்த நாட்டு மக்களின் வாழ்வாதாரம் சீர்குலையும்படி செய்து வந்தது. உலகிலேயே அதிக எண்ணெய் வளம் கொண்ட நாடு வெனிசூலா. அந்த வளத்தைக் கொள்ளையடித்து வந்த பன்னாட்டு முதலாளிய நிறுவனங்களைக் கட்டுப்படுத்தி வைத்திருந்தன வெனிசூலாவின் சாவெஸ், மதுரோ அரசாங்கங்கள். ட்ரம்ப் அமெரிக்கக் குடியரசுத் தலைவராக பதவியேற்ற முதல், வெனிசூலா அரசாங்கம் போதைப் பொருள்களை அமெரிக்காவுக்குக் கடத்திச் செல்லும் கும்பல்களுக்கு ஆதரவளிப்பதாகத் தொடர்ந்து பிரசாரம் செய்துவந்தார். அது உண்மைதான் என்று ஒரு வாதத்திற்கு வைத்துக் கொண்டாலும்கூட, உலகில் மிக சக்தி வாய்ந்த நாடாகத் தன்னைக் கருதிக் கொள்ளும் அமெரிக்கா போதைப் பொருள்கள் தன் நாட்டிற்குள் நுழைவதைத் தடுத்திருக்க வேண்டுமல்லவா? மேற்சொன்ன பிரசாரத்துடன், இந்த ஆண்டின் அமைதிக்கான நோபல் பரிசு பெற்றவரும் மதுரோவின் அரசாங்கத்திற்கு எதிராக மக்களில் ஒரு பகுதியினரைத் திரட்டிக் கொண்டு வந்துள்ளவருமான மரியா கொரினா மச்சோடோ போன்றவர்கள் மூலம் கடந்த இரண்டு ஆண்டுகளாகவே நாட்டில் கலவரச் சூழ்நிலையை ஏற்படுத்தி வந்தது ட்ரம்ப் அரசாங்கம். மேலும், அங்கு கூலிப் படைகளும் உருவாக்கப்பட்டுள்ளன. இலத்தின் அமெரிக்க நாடுகளில் தனக்குப் பிடிக்காத அரசாங்கங்களை எண்ணற்ற முறை கவிழ்க்கவும் தேவைப்பட்டால் அந்த நாடுகளின் ஆட்சியாளர்களைக் கொல்லவும் தீர்மானித்து வந்த அமெரிக்க அரசாங்கத்தின் இராணுவம், தன் கைக்கூலி நாடுகளுடன் இணைந்து 1983இல் கரீபியன்கடல் பகுதியிலுள்ள சின்னஞ் சிறு தீவு நாடான கிரெனாடாவின் மீது படையெடுத்து அந்த நாட்டின் பிரதமர் மாரிஸ் பிஷப்பைக் கைது செய்து வீட்டுக் காவலில் வத்து பின்னர் கொலை செய்தது. அமெரிக்க நேரப்படி 3.1.2026 அதிகாலையில் அமெரிக்க இராணுவ விமானங்கள் வெனிசூலாவின் தலைநகர காரகாஸ் மீதும் நாட்டின் பல பகுதிகள் மீது பரவலாகவும் குண்டுமாரி பொழிந்துள்ளன. வெனிசூலாவின் இராணுவத் தளங்கள், எண்ணெய் சுத்திகரிப்புத் தொழிற்சாலைகள் ஆகியவற்றின் மீதே தாக்குதல் தொடுப்பதாக ட்ரம்ப் அரசாங்கம் கூறினாலும், மக்கள் வசிக்கும் இடங்களிலும் இராணுவத் தாக்குதலை நடத்தியுள்ளது. இறந்தவர்களின் எண்ணிக்கை இனிமேல்தான் தெரிய வரும். இது ஒருபுறமிருக்க வெனிசூலாவின் குடியரசுத் தலைவர் நிக்கோலா மதுரோவையும் அவரது மனைவியையும் கைது செய்து வேறு நாட்டுக்குக் கொண்டு சென்றுள்ளதாக ட்ரம்ப் தன் எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார். இதைவிட அக்கிரமமான செயல் உலக அரசியலில் இருக்க முடியுமா? மதுரோவும் அவரது மனைவியும் உயிரோடு இருக்கிறார்கள் என்பதற்கான சான்றை அமெரிக்கா தர வேண்டும் என்று வெனிசூலாவின் துணைக் குடியரசுத் தலைவர் வற்புறுத்தியுள்ளார். அந்த நாட்டின் பாதுகாப்பு அமைச்சரோ, தனது நாடு எவருக்கும் பணிந்துவிடாது என்றும் அமெரிக்க இராணுவம் தங்கள் நாட்டிற்குள் நுழைந்தால் தக்க பதிலடி கொடுக்கும் என்றும் எச்சரித்துள்ளார். எத்தனை பிணக்குவியல்களை அந்த நாடு காணப் போகிறதோ? அமெரிக்க மக்களில் 35 விழுக்காட்டினர் மட்டுமே ட்ரம்புக்கு ஆதரவு கொடுத்துள்ளனர் என்றாலும் அமெரிக்காவின் மிகப் பெரும் பணக்காரர்களும், இராணுவமும், காவல் துறையும் ட்ரம்பிற்குப் பக்க பலமாக இருக்கின்றன. வியட்நாம் போரின் போது அமெரிக்க அரசாங்கத்திற்கு எதிராக அந்த நாட்டுக் குடிமக்கள் கிளர்ந்தெழுந்தது போன்ற நிகழ்வுகள் இப்போதும் நடக்குமா? அல்லது ரஷியா, சீனா, ஈரான் போன்றவை வெனிசூலாவுக்கு ஆதரவாக அறிக்கையுடன் நிற்காது வேறுவகையில் உதவி செய்யுமா? காஸா விவகாரத்தில் நடந்து கொண்டது போல இந்திய அரசாங்கம் இப்போதும் மெளனம் காக்குமா? பொறுத்திருந்து பார்ப்போம்.. ஆனால் ஒன்று மட்டும் நிச்சயம். அமெரிக்க ஏகாதிபத்தியம் என்ற தீய சக்தி ஒழிந்தால்தான் உலக மக்களுக்கு விடிவு காலம் பிறக்கும். கட்டுரையாளர் குறிப்பு: எஸ்.வி.ராஜதுரை – மார்க்சியச் சிந்தனையாளரும், எழுத்தாளரும் ஆவார். மார்க்சியம், பெரியாரியம், அம்பேத்கரியம் தமிழக அரசியல் பற்றிய பல நூல்களையும் கட்டுரைகளையும் தமிழிலும் ஆங்கிலத்திலும் எழுதியுள்ளார். சிறுகதைகளையும் கவிதைகளையும் தமிழாக்கம் செய்துள்ளார். மனித உரிமை இயக்கத்தில் களப்பணி ஆற்றியவர். பாரதிதாசன் பல்கலைக்கழகத்தில் பெரியார் உயர் ஆய்வு மையத்தின் தலைவராகப் பணிபுரிந்தவர். The Communist Manifesto என்னும் புகழ்பெற்ற நூலை ‘கம்யூனிஸ்ட் கட்சி அறிக்கை’ என்னும் தலைப்பில் தமிழாக்கம் செய்திருக்கிறார். வ.கீதாவுடன் இணைந்து மார்க்சியம், பெரியாரியம் சார்ந்த முக்கியமான நூல்களை எழுதியுள்ளார். https://minnambalam.com/the-monroe-doctrine-and-american-occupations/1 point- கருத்து படங்கள்
1 point1 point- வெனிசுலா ஜனாதிபதி மதுரோவும் அவரது மனைவியும் அமெரிக்க இராணுவத்தினரால் கைது!
வெனிசுலா எந்த விதத்திலும் அமெரிக்காவிற்கு அச்சுறுத்தல் இல்லாத நாடு. இருந்தும் அந்த நாடு மீது அமெரிக்கா ஆக்கிரமித்தது கண்டிக்க வேண்டிய செயல். கேவலம்.....அமெரிக்கர்கள் வீட்டுக்கு 5 வாகனங்கள் வைத்திருப்பவர்களின் எரிபொருள் தேவைக்காக......எண்ணை வளம் மிக்க வலிமை இல்லாத நாட்டை ஆக்கிரமிப்பது கேவலத்திலும் கேவலம். உக்ரேன் போரை இலங்கை ஒப்பிட்டது முடிந்து.....இனி வெனிசுலா பிரச்சனையையும் ஈழ பிரச்சனையோடு ஒப்பிடாத வரைக்கும் சந்தோசம்.1 point- நயினாதீவு விகாராதிபதி தையிட்டிக்கு விஜயம்
தையிட்டி - அறுபது ஆண்டுகள் தாண்டிய நினைவுகள்.... தையிட்டி விகாரை குறித்து நிறையச் செய்திகளைப் பார்க்கிறோம். ஒரு புறத்தில், அவற்றில் பல தகவல்களின் அடிப்படையில், நிதானமானவையாகவும் உணர்ச்சிபூர்வமானவையாகவும் உள்ளன. இன்னொரு புறத்தில், எந்த விதமான சரியான தகவல்களையும் கொண்டிருக்காதவர்கள் என்ன சொல்கிறோம் என்று கூடப் புரியாமலே வெளிப்படுத்தும் கருத்துகள் வந்துகொண்டிருக்கின்றன. இந்த மண்ணுடன் ஒரு நூற்றாண்டுக்கு மேலான தொடர்ச்சியான இணைப்புகளைக் கொண்டிருக்கும் தையிட்டி மக்களின் சமூகம் சார்ந்த உணர்வுகளைப் புரிந்துகொண்டு நாடளாவிய மத நல்லிணக்கத்தையும் மனதிற் கொண்டு இந்த விடயம் அணுகப்பட வேண்டும். இவ்வாறு, ஒரு நூற்றாண்டுக்கு மேற்பட்ட தையிட்டித் தொடர்ச்சியைக் கொண்ட குடும்பங்களின் மிக நெருங்கிய உறவாகவும் தலைமுறைகள் தாண்டிய நட்பாகவும் என்னால் உரிமையுடன் பேச முடியும். ஊர்ந்து - தவழ்ந்து - விழுந்து - எழுந்து - எண்ணும் எழுத்தும் அறிந்து - ஆரம்பக் கல்வி கற்று - எனது வாழ்வின் ஆரம்ப ஆண்டுகளைத் தையிட்டி மண்ணின் புழுதிக் காற்றை நுகர்ந்து வளர்ந்தவன் நான். மேலே போவதற்கு முன்னர் சுருக்கமாக சில புள்ளிக் குறிப்புகளைச் சொல்ல வேண்டும். + தையிட்டி மக்கள் யாரும் தாதுகோபத்தை (Dagoba அல்லது Stupa) (அல்லது விகாரையை) இடிக்குமாறு கேட்கவில்லை. தமது நிலத்தைத் தான் கேட்கிறார்கள். [பிற்குறிப்பு 1] + தையிட்டி விகாரைக்குக் கையகப்படுத்தப்பட்ட காணிகளின் உரிமைக்காரர்கள் கிட்டத்தட்ட எல்லோரிடமும் தொடர்ச்சியான உறுதிகள் இருக்கின்றன. + இந்த நீடித்த தொடர்புகள் மற்றும் காணி உறுதிகளின் நம்பத்தகு தன்மை போன்றன, - நயினாதீவு நாகதீப விகாரையாலும் - யாழ்ப்பாணம் நாகவிகாரையாலும் - வடமாகாண ஆளுநர் அலுவலகத்தாலும் - யாழ்ப்பாணம் மாவட்டச் செயலாளர் அலுவலகத்தாலும் - நீதி அமைச்சு மற்றும் புத்தசாசன அமைச்சு போன்றவற்றாலும் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளன. + எல்லாவற்றுக்கும் மேலாக, தையிட்டி திஸ்ஸ மகா விகாரையின் பிக்குவும் தனது கட்டடங்களை நகர்த்த ஒப்புக்கொண்டதோடு தான் வெளியேறவேண்டி வரத்தக்க வாய்ப்பையும் ஒப்பியிருக்கிறார். + கிட்டத்தட்ட எல்லாக் காணிகளும் உரிமைக் காணிகளாக உள்ளன. - தொண்ணூறுகளில் இடம்பெற்ற இடப்பெயர்வுகள் காரணமாக ஆவணங்கள் எல்லாவற்றையும் கொண்டுபோக முடியாததால் இப்போது மூல ஆவணங்கள் கையில் இல்லாத ஓரிரு குடும்பங்கள் இருக்கின்றன என்று அறிகிறேன். 'கச்சேரியிலும்' உறுதிப்படுத்தப்பட்ட பிரதிகளைப் பெறமுடியாதிருக்கிறது. - உரிமைக்காரர்கள் நீண்ட காலத்துக்கு முன்னரே வெளிநாடுகளுக்குப் போனதால் ஓரிரு காணிகளுக்கு நேரடி உள்ளூர் உரிமைக்காரர்கள் அயலில் இருக்கமாட்டார்கள். - தமது காணிகளை மற்றவர்களுக்கு கையளிக்க முன்னரே இறந்தவர்களும் கொ*லப்பட்டவர்களும் சில காணிகளுக்கு 'உரிமையாளர்களாக' இருக்கிறார்கள் [பிற்குறிப்பு 2]. குழந்தையாகவும் சிறுவனாகவும் இருந்த போது எனது முகவரி பொன்மகால், சாந்தா வீதி, காங்கேசன்துறை [பிற்குறிப்பு 3]. சமையலறையும் நான்கு அறைகளும் கொண்ட ஒரு வீடு அது. அப்போதெல்லாம் கிராமங்களில் பொது வழக்கத்தில் இல்லாத வகையில் வீட்டுக்குள்ளேயே குளிப்பறையும் கழிப்பறையும் வைத்து, கதவு போட்ட garage ஒன்றுடன் அந்த வீடு இருந்தது. மாமா பதிவுசெய்யப்பட்ட மருத்துவராக தூரக் கிராமங்களில் வேலை செய்தபோது, ஆரம்ப அறுபதுகளில் வீடு கட்டிய காலங்களில், அப்பா தான் மேற்பார்வை செய்திருந்தார். அம்மாவும் நானும் இரண்டு தம்பிகளும் இரண்டு தங்கைகளும் அம்மாவின் தங்கையும் இருந்த அந்த வீட்டில், எனது ஒன்றுவிட்ட சகோதர்களும் தங்கியிருந்து காங்கேசன்துறை அமெரிக்கன் மிஷன் மகாவித்தியாலயத்தில் படித்தார்கள். நான்கு வயதில் அதே பாடசாலையில் நானும் சேர்க்கப்பட்டேன். எனது அந்த நான்கு சகோதரர்களும் அந்த வீட்டிலே இருக்கும்போதே பிறந்தார்கள். எனது ஒன்பதாவது வயது வரை அங்கு தான் எனது வாழ்க்கையின் அத்திவாரம் இடப்பட்டது. முன் வீட்டில் சிவகாமி, வடகிழக்கில் இரவி அண்ணை, அவருக்கு அடுத்த வீட்டில் முரளி என்று நாங்கள் ஒன்றாக வளர்ந்தவர்கள். அளவெட்டிக்குப் போன பின்னரும் குடும்பமாகவும் தனித்தும் பல்கலைக்கழகம் போகும் வரை இந்த வீட்டுக்கு அடிக்கடி போய் வந்திருக்கிறேன். மாமாவின் வீட்டுக்குப் பின்னால் தெற்காக உள்ள கலட்டி என்று சொல்லப்பட்ட திறந்த பெரிய வளவில் பட்டம் ஏற்றியிருக்கிறோம். கிறிக்கெற் விளையாடியிருக்கிறோம். ஓடும்போது கற்களிலும் முள்ளிலும் கால் வைத்துக் குருதி சிந்தியிருக்கிறோம். அந்த வளவும் தனது பராமரிப்பில் தான் இருப்பதாக மாமா சொல்லியிருக்கிறார், வீட்டிலிருந்து 150 - 200 மீற்றர் தூரத்தில் ஒரு புளியமரம் இருந்தது. அந்த மரத்தில் ஒரு முனி இருந்ததாக(!) சொல்லிக் கொள்வார்கள். ஆனால் நான் கண்டதில்லை! புளிய மரத்துக்கு மேற்கே கூப்பிடுதொலைவில் நாதோலை வைரவர் கோயில் இருந்தது. ஆண்டுக்கு இரண்டு முக்கிய நிகழ்வுகளாக கோயில் பொங்கலும் குளிர்த்தியும் நடக்கும். ஊரவர்கள் இதற்காக வெளியிடங்களிலிருந்து வருவார்கள். இப்போது நாங்கள் வாழ்ந்த வீட்டுக் கழிப்பறை இருந்த பின் மூலையில் ஒரு பெரிய வீடு முளைத்திருக்கிறது. அதற்கு 'விகாராதிபதி வதிவிடம்' என்று பெயராம். திறந்த பெரிய வளவில் புளியமரம் இருந்த இடத்தில் வெள்ளையாக புதிய தாதுகோபம் ஒன்று எழுந்திருக்கிறது. இந்த வளவு 1961-இல் திருமணம் செய்த எனது மாமாவுக்கும் அத்தைக்கும் ஆரம்ப-அறுபதுகளில் சீதனமாக வழங்கப்பட்டிருந்தது. முன்னதாக இந்த வளவும் இணைந்த தொடர் வளவுகளும் குடும்பங்களுக்கு நடு-முப்பதுகளில் (1936?) சீதனமாக வழங்கப்பட்டிருந்தன. அதற்கு முந்தைய தலைமுறை விலைக்குக் கொள்வனவு செய்த காணிகள் இவை. எனது அம்மம்மாவின் தங்கைக்கு அதற்குள் நிலச் சொத்துகள் இருக்கின்றன. எங்கள் வீட்டுக்கு முன்னால், வடக்கிலும் வடகிழக்கு மூலையில் இருந்த திரு ஐயாத்துரை அவர்களது வளவுகளும் கிட்டத்தட்ட இதே வரலாறு கொண்டவை என்று அறிந்திருக்கிறேன். அவர்களது திகதிகள் கொஞ்சம் முன்னால் போய், 1920களுக்கு முன்னால் வரை இருக்கக்கூடும். எங்கள் வீட்டுக்குத் தென்கிழக்குத் திசையில் கிட்டத்தட்ட 800 மீற்றர் தூரத்தில் ஒரு 'பாஞ்சாலை' இருந்தது. பார்க்கும்போது அஃது ஒரு மணிக்கோபுரம் மாதிரி இருந்தது. அந்த இடத்துக்கும் தென்கிழக்காக முருத்தனை என்று ஒரு குறிச்சியில் எங்கள் உறவினர்கள் இருந்தார்கள். இந்தப் பாஞ்சாலையைத் தாண்டித் தான் முருத்தனைக்குப் போகவேண்டும். சிறுவனாக நான் போகும்போது இந்த இடத்திலிருந்து கொஞ்சம் விலகித் தான் நடப்போம். அங்கிருந்த மணிக்கோபுரத்தைச் சுற்றி உடைந்த அறைகளும் சிதிலமடைந்த சுவர்களும் இருந்தன. சிறுவனாக இருந்த காலத்தில் போகக் கூடாது என்று அம்மா சொல்லியிருந்த இடத்துக்கு வளர்ந்த பின்னர் போக முடிந்தது. அந்த இடத்தின் உண்மையான பெயர் பன்சல (துறவிகளின் வாழுமிடம்) அல்லது பன்சலை (பர்ணசாலை என்பது இலைகளால் ஆன இடம் என்று பொருள் கொள்ளும்) என்று எனது பதின்ம வயதில் தான் தெரிய வந்தது. மணிக்கோபுரத்தின் உச்சியில் ஒரு தாதுகோபம் போன்ற வடிவம் இருந்தது. ஆமணக்கு - பூநாறி மரங்களுக்கு ஊடாக நில மட்டத்துக்குக் கீழே தெரிந்த தளத்தில் உடைந்த போத்தல் ஓடுகள் சிந்திக் கிடந்தன. ஒரு வகையில் தங்கள் சிரமமான கழிவுகளை வீசும் இடமாகவே அயலில் வாழ்ந்த மக்களுக்கு அந்தப் பாழடைந்த பன்சலை உதவியது. தரவுகள் மற்றும் செய்திகளின் படி, இந்தப் பன்சலைக்கான 20 பரப்பு அல்லது 1.25 ஏக்கர் காணி 1946-ஆம் ஆண்டு டிசம்பர் மாதத்தில் , ஆங்கிலேயர் ஆட்சிக்காலம் முடிவுக்கு வரும் காலத்தில், பிராமணவத்த தம்மகீர்த்தி திஸ்ஸ தேரோ (நயினாதீவு) மற்றும் களுத்துறை பண்டிதசீல தரதிஸ்ஸ தேரோ (காங்கேசன்துறை) ஆகியோர் பெயர்களுக்கு மாற்றப்பட்டதாக தகவல்கள் உள்ளன. பதிவுகளின்படி, இந்தக் காணி இருந்த குறிச்சி உளுத்தங்கலட்டி என்ற பெயரைக் கொண்டிருந்தது. அந்தக் காணியின் உறுதியில் கிழக்கு எல்லை [கலைவாணி] வீதி என்றும் மற்றைய எல்லைகள் தமிழர்களின் காணிகள் என்பதும் குறிக்கப்பட்டிருந்தன. பிக்குகள் குடியமர்ந்த பின்னர் இந்த இடம் புத்த கோயிலடி என்றும் சிங்களக் கலட்டி என்றும் அழைக்கப்பட்டதாம் [பிற்குறிப்பு 4]. இந்தப் பன்சலைக்குப் பொறுப்பாக இருந்த பிக்கு மிகவும் சாந்தமானவர் என்று எனது அம்மாவின் தங்கையின் கணவர் எழுபதுகளில் சொல்லக் கேட்டிருக்கிறேன். தங்கள் பதின்ம வயதில் பிக்குகள் நடாத்திய வகுப்புகளில் தானும் சில உறவினர்களும் சிங்களம் கற்றோம் என்று அவர் சொல்லியிருக்கிறார். அன்பான உபசரிப்பும் பாற்சோறும் பழங்களும் தங்களுக்கு அமிர்தமாக இருந்தன என்றும் அவர் நினைவுகூர்ந்தார். 1956 கலவரங்களின் பின்னர் தமிழர்கள் பன்சலைக்குப் போகத் தயங்கினார்கள் என்றும் சில ஆண்டுகளிலேயே பிக்குகள் அந்த இடத்தை விட்டுப் போய்விட்டதாகவும், கள்வர்கள் கதவுகள், ஓடுகள் என்று எல்லாவற்றையும் கொஞ்சம் கொஞ்சமாக எடுத்துவிட்டதாகவும் அவர் சொன்னார். பிறகு மழையும் உள்ளே முளைத்த செடிகளுமாக அந்த இடம் 'உடைந்த கண்ணாடி - பீங்கான் வீசும் இடம்' ஆயிற்று! நான் பல்கலைக்கழகம் போகும்வரை பன்சலையில் இருந்த மணிக்கோபுரம் பின்னர் சாய்க்கப்பட்டதாக அறிந்தேன் [பிற்குறிப்பு 4]. அதே வேளை, பிந்திய எழுபதுகளில் காங்கேசன்துறையில் பருத்தித்துறை - கீரிமலை வீதியில் ஒரு 'புதிய' பௌத்த வழிபாட்டிடம் ஒன்று இருந்ததையும் குறிப்பிடவேண்டும். எனது நண்பர்கள் சிலர் அங்கே சிங்களம் கற்றதையும் அறிந்திருக்கிறேன். அந்த விகாரை குறித்தும் யாராவது விபரமாக எழுதினால் நல்லது. காங்கேசன்துறை மக்கள் பிந்திய எண்பதுகளில் இடம்பெயர ஆரம்பித்தார்கள். தொண்ணூறில் பெரும்பாலான கரையோர மக்கள் பலவந்தமாக வெளியேற்றப்பட்டார்கள். அப்படியே, தையிட்டிப் பிரதேசம் மக்கள் இல்லாத கிராமமாக உயர்பாதுகாப்பு வலயத்துக்குள் அமிழ்ந்து புதைந்தது! தற்போதைய ஆளுனர் நாகலிங்கம் வேதநாயகன் மாவட்டச் செயலாளராக இருந்தபோது பழைய விகாரை இருந்த இடத்தில் விகாரை ஒன்று கட்டுவதற்காக அத்திவாரக்கல் நாட்டப்பட்ட்து. ஆனாலும், அங்கே கட்டடம் ஒன்றும் எழுப்பப்படவில்லை. பின்னர் சில சூக்குமமான விடயங்கள் நடந்தன. முதலியார் செ இராசநாயகம் எழுதிய நூல்களையும் சில வரலாற்று ஆவணங்களையும் காட்டி காங்கேசன்துறையில் அல்லது தையிட்டியில் ஒரு பெரிய பௌத்த வளாகம் இருந்ததாக உரிமைகோரல்கள் நடந்தன. அப்போது (2016 - 2017) பதக்கட வேகடபொல விமலஞான தேரோ என்ற ஒரு புதியவர் வந்து இறங்கி, தாமே திஸ்ஸ விகாரையின் பொறுப்பாளர் என்று அறிவித்தார். யாரோ 1940களில் வாங்கி ஆரம்பித்த பன்சலை இருந்த இடம் தான் பழைய தேவநம்பிய தீசன் காலத்து திஸ்ஸ விகாரை என்று அவரும் அவரது சகாக்களும் சொல்லிக்கொண்டார்கள். அந்தப் பிரதேசத்தைக் கையகப்படுத்துவது அவர்களது முதன்மை நோக்கமாக இருந்தது என்று தையிட்டி மக்கள் சொல்கிறார்கள். இவ்வாறான ஒரு 'விஸ்தரிப்பு வாதம்' தமக்கு உடன்பாடானது அல்ல என்பதோ அல்லது தமது கட்டுப்பாட்டுக்கு வெளியே இது போய்விடும் என்ற உணர்வோ, அதே அமரபுர நிக்காயாவைச் சேர்ந்தவராக இருந்த போதிலும், நயினாதீவு நாகதீப விகாராதிபதி இந்த முயற்சிக்கு ஒத்துழைக்க மறுத்தார். நாகதீப விகாராதிபதி தனது 20 பரப்பு காணியில் இந்த முயற்சியை அனுமதிக்க மாட்டார் என்று தெரிந்த போது, வெறுமையாக இருக்கும் காணியை அம்பாளிப்பதே வழி என்ற தீர்மானத்தை வந்தவரும் அரச கட்டமைப்புகளும் இணைந்து எடுத்தனர். தொண்ணூறு இடப்பெயர்வுக்குப் பின்னர் அந்தப் பகுதியில் மீள்குடியேற்றப்பட்ட நான்கு குடும்பங்கள் மீண்டும் வெளியேற்றப்பட்டனர். கிட்டத்தட்ட ஏழு - எட்டு ஏக்கர் காணியை வேலி போட்டு தமது எல்லை என்று இவர்கள் வைத்துக்கொண்டார்கள் [பிற்குறிப்பு - 5]. அப்போதைய ஆளுநர் றெஜினோல்ட் கூரே 2018-ஆம் ஆண்டில் விகாரை ஒன்று கட்டுவதற்காக இன்னொரு அடிக்கல்லை நாட்டினார். இந்தத் தடவை கிட்டத்தட்ட எங்கள் வீட்டுக்கு நேர் தெற்கே 300 - 350 மீற்றர் தூரத்தில் - முனி இருந்த புளியமரம் இருந்த இடத்தில் - சாக்கிய முனிக்கான புதிய தாதுகோபத்துக்கான அத்திவாரம் இடப்பட்டது. தாதுகோபத்துக்குக் கிழக்காக ஓர் அரசமரமும் நடப்பட்டது [பிற்குறிப்பு 6]. நல்லாட்சிக்கால அரசாங்கம் (மைத்திரி - ரணில்) காலத்தில் கட்டுமங்கள் தேக்கம் பெற்றிருந்தன [பிற்குறிப்பு 7]. இராணுவத்தின் நேரடி உதவியுடன் தாதுகோபம் கட்டப்பட்டது. கட்டப்படும் இடம் கடுமையான பாதுகாப்பு வலயத்துக்குள்ளும் வைக்கப்பட்டது. தொழிலாளர்கள் இல்லாத இடத்தில் அவர்களே கல்லடுக்கி அந்தக் கட்டடத்தை எழுப்பினார்கள் [பிற்குறிப்பு 8]. கட்டி முடியும்வரை பேசாமல் இருந்துவிட்டு இப்போது ஏன் விகாரைக்கு எதிராகப் போராடுகிறீர்கள் என்று கேட்பவர்களுக்கும் ஒரு பதில் இருக்கிறது. ஜூலை மாதம் முதலாம் திகதி 2019 அன்று தமிழ்நெற் செய்தி ஒன்றில் வலிகாமம் வடக்கு சண்முகலிங்கம் சஜீவன் தாதுகோபம் கட்டும் இடத்துக்குப் போனதும் அங்கே அவர் தடுத்து நிறுத்தப்பட்டதும் பற்றிய செய்திகளும் செப்ரெம்பர் ஏழாம் திகதி 2018 அவருக்கு தெல்லிப்பளை பிரதேச அலுவலகம் எழுதிய கடிதமும் அவரது குரல் பதிவும் உள்ளன [பிற்குறிப்பு 9]. அன்றிலிருந்தே மக்கள் ஏதோ ஒரு வகையில் இந்த விகாரைக்கும் நிலக் கையகப்படுத்தலுக்கும் எதிராக குரல் எழுப்பி வந்திருக்கிறார்கள். அப்போது இருந்த அரசுக்கு எதிரான பயமும் எல்லோருக்கும் தொல்லையாக வந்த கொரோனா பெருந்தொற்றும் இந்த தாதுகோபம் எழுவதற்கு வசதியாக இருந்திருக்கின்றன. மக்கள் வீட்டுக்கு வெளியே போவதற்கு அனுமதி இல்லாத காலத்தில் கனரக வாகனங்கள் உள்ளே போய் வந்ததை அவர்கள் 'இராணுவ முகாம் பலப்படுத்தப்படுகிறது' என்று எடுத்துக்கொண்டார்கள். அயலில் உள்ள வீடுகளைத் திருத்துவதற்குப் பறிக்கப்பட்டிருந்த கட்டடப் பொருட்களும் காணாமற் போனதாக உள்ளூர் மக்கள் வருத்தப்பட்டிருந்தார்கள். காணி தனிப்பட்டவர்களினுடையது என்று தெரிந்து கொண்டாலும், 2022-ஆம் ஆண்டில் முப்படைகளின் தளபதி சவேந்திர சில்வாவினால் தாதுகோபத்தின் கலசம் வைக்கப்பட்டது. எனது மாமாவின் காணி அவரது மகனுக்கு எழுதப்பட்டு இப்போது உரிய சட்ட அதிகாரங்களோடு அங்கே பிரதிநிதித்துவப்படுத்தப்படுகிறது. ஓர் அவுஸ்திரேலியனாக, உணர்வுபூர்வமான இணைப்பைத் தவிர, என்னை உருவாக்கிய நிலம் மற்றும் சூழல் என்பது தவிர, எனக்கு ஏதும் அங்கே உரித்து கிடையாது. ஆனாலும், இதற்காக சட்ட நடவடிக்கை ஒன்று ஏன் எடுக்கப்படவில்லை என்று மூத்த சட்டவாளர்களிடன் விசாரித்திருந்தேன். பல சவால்கள், + உயர்பாதுகாப்பு வலயம் + அரசியலமைப்பில் பௌத்த சமயத்துக்கான இடம் + கொரோனா காலத்தில் உரிமையாளர்களைக் கண்டுபிடிக்கும் - ஒன்றுசேர்க்கும் சவால்கள், + இந்த வழக்குகள் காணிக்குக் காணி தனித்துப் போடப்பட வேண்டிய தேவை + வழக்குகளுக்கு எடுக்கப்போகும் காலம் + எல்லைகளும் வேலிகளும் இல்லாத நிலைமை, இப்படி. ஆனால் காணிகளின் உரிமை யாருக்கு என்பதில் எந்த சந்தேகங்களும் இருக்கவில்லை. தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியும் உள்ளூர் மக்கள் சிலரும் ஒவ்வொரு முழுநிலவு நாளிலும் விகாரை வளாகத்துக்கு அண்மையில் கூடி ஆர்ப்பாட்டம் செய்தார்கள். சில உரையாடல்களில் காணப்பட்ட 'சட்டவிரோதக் கட்டடம்' என்ற சொற்பதமும் 'அகற்றப்படவேண்டும்' என்ற சொற்பதமும் "இவர்கள் விகாரையை உடைக்கச் சொல்லுகிறார்கள்" என்ற தொனியில் வெளியே பேசப்பட்டன. தையிட்டிக் காணி உரிமையாளர்களின் பிரதிநிதிகள் தொடர்ந்து எல்லோருடனும் பேசிக்கொண்டே இருந்தார்கள். ஆளுநருக்கும் மாவட்டச் செயலாளருக்கும் காணி உறுதிகளின் மூலப் பிரதிகள் காட்டப்பட்டன. நயினாதீவு மற்றும் யாழ்ப்பாண விகாராதிபதிகளுக்கு உறுதிகளைக் காட்டி மக்கள் தங்கள் ஆதங்கங்களை வெளிப்படுத்தினார்கள். நயினாதீவு நவந்தகல பதுமகீர்த்தி திஸ்ஸ தேரோ 2025 ஆரம்பத்திலே தாம் தையிட்டி மக்களுடன் நிற்பதை வெளிப்படையாகவே சொன்னார். 'தாதுகோபம் அப்படியே இருக்கட்டும். அதற்கு மாற்றீடாக நாம் எமது 20 பரப்பு காணியை கொடுக்கிறோம்' என்று நயினாதீவு தேரோ சொன்னார். ஒரு படி மேலே போய் 'அந்த விகாரையை தமிழ் மக்களே பராமரிக்கட்டும்' என்றும் சொன்னார். யாழ்ப்பாண விகாரை தையிட்டி மக்களுக்கு நீதி அமைச்சுடனும் பௌத்தசாசன அமைச்சுடனும் கூட்டங்களை ஏற்பாடு செய்து கொடுத்தது. உறுதிகளைக் காட்டுங்கள் என்று கேட்ட நீதி அமைச்சர் உறுதிகளைப் பார்த்தவுடன் மௌனமாகிப் போனார். எனது தொடர்புகளுக்கும், 'நான் வளர்ந்த மண்' என்ற உரிமையோடு சில கருத்துகளைச் சொல்ல முடிந்தது. செயமதிப் படங்களை வைத்துக்கொண்டு கலாநிதி குமாரவேலு கணேசன் தயாரித்த ஒரு முன்மொழிவை அனுப்ப முடிந்தது. இப்போது தாதுகோபம் இருக்கும் இடத்தையும் அரசமரம் இருக்கும் இடத்தையும் பெட்டி அடித்து நேரடியாக கலைவாணி வீதி வரை எடுத்துச் செல்வதானால் 24 பரப்பு - அல்லது 1.5 ஏக்கர் - நிலம் உள்ளடக்கப்படும். நயினாதீவு நாகதீப விகாரையின் 20 பரப்பு காணியையும் மனதில் வைத்து விகாராதிபதியுடன் இணைந்து இந்த 24 பரப்புக் காணியின் உரிமையாளர்களுடனும் பேசி ஒரு சமரசத் தீர்வுக்கு வருவதே நல்ல வழி என்பது இந்த முன்மொழிவின் சாரம். இரண்டு தரப்புகளும் கொஞ்சம் விட்டுக்கொடுப்புகளுடன் நல்லிணக்கமாக ஒரு தீர்வுக்கு வரலாம் என்பதே அடிநாதம் [பிற்குறிப்பு 10]. மீன்பிடி அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகரன் விகாரை தனியார் காணிகளில் அமைந்திருக்கிறது என்பதை ஒப்புக்கொண்டார். அந்த மக்களுக்கு மாற்றுக் காணிகளும் இழப்பீடும் வழங்கப்படும் என்று சொன்னார். வலிகாமம் வடக்கு பிரதேச சபை "இது ஒரு சட்டவிரோதக் கட்டடம்" என்று அறிவித்தல் பலகை ஒன்றை நாட்ட எடுத்த முயற்சிக்கு ஆதரவாக நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன், வேலன் சுவாமிகள், பிரதேச சபை தவிசாளர்கள் போன்றோர் இணைந்து கலந்துகொண்ட முயற்சி வன்மையான கைதுகளுடனும் மருத்துவநிலைய அனுமதிகளுடனும் முடிந்திருக்கிறது. ஒரு புறத்தில் தையிட்டி விகாராதிபதியுடன் பேசி தீர்வு ஒன்றைத் தேட முயன்ற நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அருச்சுனா மறுபுறத்தில் 'தையிட்டியில் ஒருத்தனுக்கும் காணி உறுதி இல்லை' என்று சொன்னது தையிட்டி மக்களுக்கு ஏமாற்றத்தையும் கோபத்தையும் ஏற்படுத்தியுள்ளது. அண்மையில் நயினாதீவு தேரோவும் யாழ்ப்பாணம் நாக விகாரையின் மூத்த தேரர்களும் இது மக்களின் காணி என்றும் காணிகள் விடுவிக்கப்படவேண்டும் என்றும் வெளிப்படையாகப் பேசுகிறார்கள். ஒரு வகையில் உணர்வூட்டப்பட்டிருக்கும் சிங்கள மக்களிடம் இந்தச் செய்தியைப் பக்குவமாக எடுத்துச் செல்லவேண்டியதன் அவசியத்தையும் அவர்கள் சுட்டிக்காட்டுகிறார்கள். இப்போது, ஆண்டின் இறுதி நாளன்று, தையிட்டி காணி உரிமையாளர்கள் மாவட்டச் செயலாளருடன் பேசியிருக்கிறார்கள். கட்டம் கட்டமாக காணிகள் விடப்படலாம். விகாராதிபதியின் வீடு மற்றும் கட்டுமானங்கள் நகர்த்தப்பட வேண்டிய தேவையும் இருப்பதால் எல்லாம் முடிவதற்கு கொஞ்சம் காலம் எடுக்கலாம் என்ற வகையில் மாவட்டச் செயலாளரின் முன்மொழிவு இருக்கிறது. தையிட்டி விகாராதிபதியின் கருத்துகளும் வரவேற்கத்தக்க வகையிற் தெரிகின்றன. எமது ஆவணங்களை உயர்மட்டக் குழுவிடமும் அமைச்சுகளிடம் கொடுத்திருக்கிறோம். இது எமது காணி இல்லை என்றால் நான் வெளியேறத் தயார் என்று அவர் சொல்லியிருக்கிறார். மாவட்டச் செயலாளர் தை முதல் வாரத்தில் தையிட்டி விகாராதிபதியைச் சந்திப்பார் என்று சொல்லியிருக்கிறார். இதற்கிடையில் ஜனவரி மூன்றாம் திகதி கவனயீர்ப்புப் போராட்டம் ஒன்றுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இந்தப் போராட்டத்தை அமைதியாக நடாத்த தையிட்டி மக்கள் விரும்புகிறார்கள். பொதுப் போராட்டமாக கட்சி வேறுபாடுகள் இல்லாது எல்லோரும் வந்து கலந்துகொள்ளவேண்டும் என்பது அவர்களது எதிர்பார்ப்பு. இந்தக் கவனயீர்ப்புப் போராட்டம் பெருமளவு மக்களும் கட்சிகளின் பிரதிநிதிகளும் நாடாளுமன்ற - உள்ளூராட்சிச் சபை உறுப்பினர்களும் கலந்துகொள்ளும் ஒன்றாக நல்லதொரு தீர்வு நோக்கிய முயற்சியாக நிறைவு பெறுவதாக! நவம்பர் மாதம் இரண்டாவது வாரம் எனது அம்மாவின் தங்கையின் மறைவுக்காக அவரசப் பயணம் ஒன்றை மேற்கொள்ள நேர்ந்தது. தையிட்டி வீட்டில் எனக்கு இரண்டாவது அம்மாவாக என்னை உருவாக்கிய அவரது இறுதிச் சடங்கின் மாலையில் தையிட்டி போனோம். கலட்டிக் காணியாக நாங்கள் ஓடி விளையாடிய மண்ணில் மண் நிரப்பி நன்றாக நிலத்தடி நீர் இறைக்கப்பட்ட மரங்களுக்கு மத்தியில் தாதுகோபமும் அரச மரமும் மற்றைய கட்டுமானங்களும் உள்ளன. இருநூறு வாகனங்கள் நிறுத்தும் அளவுக்கு மணல் நிரப்பிய பெரிய வளாகம் ஒன்றும் முன்னால் உள்ளது. நாங்கள் ஊஞ்சல் ஆடிய மாமரங்களுக்கும் இளநீர் குடித்த தென்னைகளுக்கும் கீழே வளர்ந்திருக்கும் பற்றைக்காடுகளுக்கு நடுவில் எங்கள் வீடு கூரை இழந்து சுவர்கள் சிதைந்து பழைய நல்ல நினைவுகளை உள்ளடக்கி வைத்திருக்கும் ஒரு பலமான கோது போல இன்னமும் நிற்கிறது. ஐம்பத்தைந்து ஆண்டுகளுக்கு முந்திய ஒரு கார்த்திகை விளக்கீட்டு நாளில் முன்வேலியின் கிளுவை மரத்தின் தடி ஒன்றில் சுற்றிய தேங்காய்நெய்ப் பந்தத்தை வைத்திருந்த தம்பி தவறுதலாகத் தொடையில் சுட்ட காயம் இருக்கும் இடத்தை ஒரு முறை தொட்டுப் பார்த்துக்கொண்டேன். [பிற்குறிப்பு 11] குறிப்பு: இது ஒரு நினைவு மீட்டல் மட்டுமே. பதிவு செய்யவேண்டும் என்று தோன்றியது. இதற்கெல்லாம் ஒரு சட்டப் பெறுமதியோ உரிமை கோரலோ கிடையாயது. முழுமையாக வாசித்தோருக்கு முழு நன்றி பாலா விக்னேஸ்வரன் 31 / 12 / 2025 பிற்குறிப்பு 1: அகற்றுதல் / இடித்தல் - சட்டவிரோத விகாரையை அகற்றுதல் என்பது அதை இடித்தல் என்று திரிபுபட்டமை வருந்தத்தக்கது. தாதுகோபம் (Dagoba அல்லது Stupa) என்பது வெண்மையான அந்தக் கட்டடத்தைக் குறிக்கும். விகாரை என்பது தாதுகோபத்துடன் சார்ந்த அரசமரம், தியான மண்டபம், ஓய்வுஅறைகள், நந்தவனம், வதிவிடம் எல்லாவற்றையும் அடக்கும். வளாகத்தின் அளவைச் சுருக்குதல் முதற்படி. அகற்றுதல் என்பது உரிய மென்னுணர்வுகளைப் புரிந்துகொண்ட மக்களின் சம்மதத்தோடு பக்குவமாகச் செய்யவேண்டிய பணி. விகாரை சார்ந்த சட்ட நடவடிக்கை எடுக்காத நிலையில் யாரும் 'சிநேகபூர்மாக அகற்றுங்கள்' என்று கேட்க முடியுமா என்பது விவாதத்துக்குரியது. பிற்குறிப்பு 2: உரிமையாளர்கள் மறைவு - தமது அப்பாவின் சார்பிலும் நேரடி உறவினர் சார்பிலும் அவர்கள் அதே இடத்தில் இருக்கும்போதும் முதிர்ச்சி அல்லது வேறு சவால்கள் காரணமாக உரிமையுடன் கேட்க்கும் மற்றவர்களையே 'இது உன்னுடைய காணியா' என்று அதிகாரத்தில் உள்ளவர்கள் மட்டுமன்றி வீதியில் நிற்பவர்களும் கேட்கும் நிலைமை இருக்கிறது. தமது காணியை அடுத்தவருக்கு எழுதி வைக்காமல் இறந்து போனவர்களின் ஈடுபாடுகளும் முறையாகக் கையாளப்படவேண்டும். பிற்குறிப்பு 3: வீடுகள் - படம் 1 காட்டும் மஞ்சள் கட்டம் மாமாவின் வீடு. அளவீடுகள் பருமட்டானவை. பிற்குறிப்பு 4: படம் 1 காட்டும் நீலக் கட்டத்தில் வாழ்ந்த நடராஜா முரளிதரன் எழுதிய பத்தி பின்னூட்டத்தில் உள்ளது. சிங்களக் கலட்டி என்று இந்த இடம் குறிப்பிடப்பதாம். ஆனால் எண்கள் வீடுகளில் புத்த கோயிலடி மட்டுமே புழக்கத்தில் இருந்தது. பிற்குறிப்பு 5: மீள்குடியேற்றப்பட்ட குடும்பங்கள் மீண்டும் வெளியேற்றப்பட்டனர் - தமிழ்நெற், தமிழ் காடியன் இணைப்புகள் பின்னூட்டத்தில் உள்ளன. பிற்குறிப்பு 6: புதிய தாதுகோபத்துக்கான அத்திவாரம் - தமிழ் காடியன் இணைப்பு பின்னூட்டத்தில் உள்ளது. தாதுகோபத்துக்குக் கிழக்காக நாட்டப்பட்ட அரசமரமம் - படம் 1 பிற்குறிப்பு 7: தாதுகோபம், அரசமரம், வதிவிடம், மற்றைய கட்டுமானங்கள் - கலாநிதி குமாரவேலு கணேசனின் 'காலத்தைப் பதிவு செய்யும் காணொளி பின்னூட்டத்தில் உள்ளது. பிற்குறிப்பு 8: தொழிலாளர்கள் இல்லாத இடத்தில் இராணுவத்தின் நேரடி உதவியுடன் அவர்களே கல்லடுக்கி அந்தக் கட்டடத்தை எழுப்பினார்கள் - படம் 2 + படம் 3. தமிழ் காடியன் இணைப்பு பின்னூட்டத்தில் உள்ளது. பிற்குறிப்பு 9: சண்முகலிங்கம் சஜீவன் 2018 முயற்சிகள் - 1 ஜூலை 2019 Tamilnet செய்தியில், அவரது குரல் பதிவும் செப்ரெம்பர் ஏழாம் திகதி 2018 அவருக்கு தெல்லிப்பளை பிரதேச அலுவலகம் எழுதிய கடிதமும் உள்ளன. பிற்குறிப்பு 10: கலாநிதி கணேசனின் முன்மொழிவு - ஒன்றும் நகராமல் இருந்த வேளையில், ஓர் ஆரம்பப் புள்ளியாக அதிகபட்ச விகாரை எல்லையாகச் சொல்லப்பட்ட விடயம் இது. இந்த அளவு நிலம் கொடுத்தால் அங்கே சிங்கள மக்கள் குடியேற்றப்பட்டுவிடுவார்கள் என்ற கருத்து ஒருபுறம். எட்டு ஏக்கரை வைத்திருக்கும் அவர்கள் 15 ஏக்கர் கேட்கிறார்கள். எங்கோ ஓர் இடத்தில் ஆரம்பிக்கவேண்டும். நிலைமைகளை contextualise பண்ணுவதற்கான ஒரு படம் இது. இரண்டு தரப்புகளும் கொஞ்சம் விட்டுக்கொடுப்புகளுடன் நல்லிணக்கமாக ஒரு தீர்வுக்கு வரலாம் என்பதே அடிநாதம் என்றார் Dr கணேசன். படம் 4 அவர்களது வெளியையும் (ஊதா) அதிகபடச விகாரையின் அளவையும் (நீலம்) பழைய விகாரைக் காணியையும் (சிவப்பு - பருமட்டு) காட்டுகிறது. பிற்குறிப்பு 11: எங்கள் சிதிலமடைந்திருக்கும் வீடு - உள்ளேயும் படங்கள் எடுத்தோம். அவர்கள் தடுக்கவில்லை. எனக்கு எங்கள் வீடு (படம் 5) தானே முக்கியம்! https://www.facebook.com/vicky.vigneswaran1 point- கருத்து படங்கள்
1 point1 point- முன்னோடி - அடிப்படை சுகாதார வசதி திட்டம்
1 point- யாழில் 3012 குடும்பங்களுக்கு மலசலக்கூட வசதி இல்லை!
கோசான் ..புதிய திரியில் சில எழுத்துப் பிழைகள் இருக்கிறது. கொஞ்சம் கவனத்தில் எடுத்தால் நன்று.1 point- லெப். கேணல் நிரோஜன்
0 pointsஇந்தியாவிலிருந்து ஒரு தொகை பொருட்கள் கடற்புலிகளின் விநியோக நடவடிக்கை மூலம் தமிழீழத்திற்க்கு கொண்டுவருவதற்காக ஒரு வேலைத் திட்டம் கடற்புலிகளுக்கு தலைவர் அவர்களால் வழங்கப்பட்டது அதற்கமைவாக 06.10.1999 அன்று ஏற்கனவே நிலைகொண்டிருந்த மன்னார் மாவட்ட கடற்புலிகளுடன் .மேலதிகமாக சாள்ஸ் படையணியும் இணைந்தது.கடற்புலிகளின் சிறப்புத்தளபதியால் திட்டம் விளங்கப்படுத்தப்பட்டது இத்திட்டத்தின்படி கடற்புலி மேஐர் காமினி அவர்கள் விநியோக நடவடிக்கைக்ப் பொறுப்பாக செல்வதென்றும் விநியோகப் பாதுகாப்புக்குப்பொறுப்பாக எழிற்கண்ணன் அவர்களும் நியமிக்கப்பட்டருந்தார்கள் .ஆனால் இறுதிநேரத்தில் இந்தியாவில் பொருட்கள் எடுக்கும் இடத்தில் சிறிது தூரம் நடந்து எடுக்கவேண்டி இருந்ததால் போராளிகள் கூடுதலாக போடப்பட்டு இத்திட்டம் மாற்றப்பட்டது.புதிதாக மாற்றப்பட்ட திட்டத்தில் விநியோகநடவடிக்கைக்குப் பொறுப்பாக எழிற்கண்ணன் அவர்களும் விநியோகபாதுகாப்புக்குப் பொறுப்பாக அன்றையதினம் சிறப்புத்தளபதி சூசை அவர்களுடன் வந்திருந்த கடற்புலிகளின் துணைத்தளபதி லெப் கேணல் நிறோயன் அவர்களும் நியமிக்கப்பட்டு விநியோக நடவடிக்கை ஆரம்பமானது.07 .10.1999 அன்று அதிகாலை காலநிலை சீரின்மையால் விநியோக அணி மீது தீடிரென வந்த சிறிலங்காக் கடற்படையினர் தாக்குதல் நடாத்தினர் அதனைத்தொடர்ந்து எமது கடற்த்தாக்குதல் அணிக்கும் கடற்படையினருக்கும் அதிகாலை நான்குமணிவரை கடும் கடற்சமர் நடந்தது .விநியோக நடவடிக்கைப் போராளிகள் எவ்வித இழப்பகளுமின்றி தளம் திரும்பினர்.இவ் விநியோக பாதுகாப்புச் சமரில் தமிழீழத்திற்க்கு பலம் சேர்க்கின்ற நடவடிக்கைகளில் முக்கிய பங்காற்றியவரும் தென் தமிழீழ விநியோக நடவடிக்கைக்கு பொறுப்பாக இருந்தவரும் பல கடற்சமரை கடலில் செவ்வனவே வழிநடாத்தியவரும் கடற்புலிகளின் துணைத் தளபதியுமான லெப் கேணல் நிறோயன் உட்பட்ட போராளிகள் வீரச்சாவடைந்தனர். லெப்.கேணல் நிரோயன் பாலசுப்பிரமணியம் கிருஸ்ணபாலன் புளியங்கூடல் தெற்கு, ஊர்காவற்றுறை, யாழ்ப்பாணம் மேஜர் காமினி (ஜெயராஜ்) குப்புசாமி அருணாசலம் கதிரவெளி, மட்டக்களப்பு மேஜர் நகுலன் சண்முகலிங்கம் லோகேஸ்வரன் மாரீசன்கூடல், இளவாலை, யாழ்ப்பாணம் மேஜர் குகன் (செல்லையா) யோசப் நியூட்டன் நானாட்டான், மன்னார் மேஜர் சோழன் சேவியர் யோசப்பற்றிக் சுண்டுக்குழி, யாழ்ப்பாணம் கப்டன் இளநிலவன் டேவிற் அன்ரன் அருள்தாஸ் குடத்தனை, வடமராட்சி கிழக்கு, யாழ்ப்பாணம் லெப்டினன்ட் நாகமணி கோபால் முருகவேல் தென்னியங்குளம், துணுக்காய், முல்லைத்தீவு லெப்டினன்ட் பாவேந்தன் இராசதுரை ஜோன்கலின் உரும்பிராய் கிழக்கு, யாழ்ப்பாணம் லெப்டினன்ட் சொற்கோ இராமலிங்கம் ரவி முருங்கன்பிட்டி, மன்னார் லெப்டினன்ட் தமிழ்நம்பி அருள்யோகநாதன் சுரேஸ்குமார் பருத்தித்துறை, யாழ்ப்பாணம் 2ம் லெப்டினன்ட் மாறன் கிருபாகரன் றமணன் கரணவாய் தெற்கு, கரவெட்டி, யாழ்ப்பாணம் 2ம் லெப்டினன்ட் இசைவாணன் பொன்னுத்துரை தவசீலன் நீதிபுரம், மாங்குளம், முல்லைத்தீவு வீரவேங்கை முதல்வன் சிவபாலசுந்தரம் விஜயராஜ் 6ம் வட்டாரம், மயிலிட்டி, யாழ்ப்பாணம் வீரவேங்கை செம்பியன் முத்துக்கறுப்பன் நிமலேந்திரன் மயிலிட்டி, யாழ்ப்பாணம் வீரவேங்கை இனியவன் இராசரத்தினம் சசிராஜ் 7ம் கட்டையடி, சண்டிலிப்பாய், யாழ்ப்பாணம் https://irruppu.com/2021/04/05/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%80%E0%AE%B4%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%95%E0%AF%8A%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81/?fbclid=IwY2xjawPIDAZleHRuA2FlbQIxMQBzcnRjBmFwcF9pZBAyMjIwMzkxNzg4MjAwODkyAAEe52uv6NTA1neoY4LR-PtjICQm3ZwCLRXtgb-lgNQdzwiAE3PkUctGcqcXn94_aem_EJ3rQvGnx-ktjegIshe3FQ0 points- வெனிசுலா ஜனாதிபதி மதுரோவும் அவரது மனைவியும் அமெரிக்க இராணுவத்தினரால் கைது!
மற்றது நிலவில் கால் பதித்தது உண்மை இல்லை என்பது மத நம்பிக்கையால் ஏற்பட்டது. சக்தி வாய்ந்த கடவுள் படைத்த நிலாவை கடவுளின் துதுவர் ஒரு முறை தான் பக்தர்களுக்கு ஏற்பட்ட சந்தேகத்திற்காக இரண்டாக பிளந்து காட்டினார் அப்படியான நிலவில் கடவுளால் படைக்கபட்ட கடவுளை கும்பிட்டு வாழவேண்டிய அற்ப மனிதன் கால் பதிப்பதாவது என்ற ஆழமான மத நம்பிக்கையே0 points - முன்னோடி - அடிப்படை சுகாதார வசதி திட்டம்
Important Information
By using this site, you agree to our Terms of Use.
Navigation
Search
Configure browser push notifications
Chrome (Android)
- Tap the lock icon next to the address bar.
- Tap Permissions → Notifications.
- Adjust your preference.
Chrome (Desktop)
- Click the padlock icon in the address bar.
- Select Site settings.
- Find Notifications and adjust your preference.
Safari (iOS 16.4+)
- Ensure the site is installed via Add to Home Screen.
- Open Settings App → Notifications.
- Find your app name and adjust your preference.
Safari (macOS)
- Go to Safari → Preferences.
- Click the Websites tab.
- Select Notifications in the sidebar.
- Find this website and adjust your preference.
Edge (Android)
- Tap the lock icon next to the address bar.
- Tap Permissions.
- Find Notifications and adjust your preference.
Edge (Desktop)
- Click the padlock icon in the address bar.
- Click Permissions for this site.
- Find Notifications and adjust your preference.
Firefox (Android)
- Go to Settings → Site permissions.
- Tap Notifications.
- Find this site in the list and adjust your preference.
Firefox (Desktop)
- Open Firefox Settings.
- Search for Notifications.
- Find this site in the list and adjust your preference.