Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Leaderboard

  1. தமிழ் சிறி

    கருத்துக்கள உறவுகள்
    11
    Points
    88402
    Posts
  2. ஏராளன்

    கருத்துக்கள உறவுகள்
    5
    Points
    32727
    Posts
  3. ஈழப்பிரியன்

    கருத்துக்கள உறவுகள்
    4
    Points
    20186
    Posts
  4. goshan_che

    கருத்துக்கள உறவுகள்
    2
    Points
    19368
    Posts

Popular Content

Showing content with the highest reputation on 01/12/26 in all areas

  1. 12 Jan, 2026 | 05:19 PM தைப்பொங்கல் மதங்களைக் கடந்து இயற்கையைப் போற்றுகின்ற ஒரு பண்பாட்டுப் பெருவிழா. இத்திருநாளில் தொன்றுதொட்டு இயற்கைக்கு இசைவான மண்பானைகளிலேயே பொங்கி வந்துள்ளோம். ஆனால், மண்பானைகளின் இடத்தை இப்போது அலுமினியப் பானைகள் ஆக்கிரமித்து விட்டன. இயற்கைக்கு நன்றி தெரிவிக்கும் ஒரு பெருவிழாவில் அலுமினியப் பானைகள் பொருத்தம் இல்லாதவை. உடல் நலத்துக்குக் கேடானதாகவும் உள்ளன. எனவே இயற்கையைப் போற்றுகின்ற இத்தைத்திருநாளில் மண்பானைகளில் பொங்கல் இடுவோம் என்று தமிழ்த் தேசியப் பசுமை இயக்கத்தின் தலைவர் பொ.ஐங்கரநேசன் அழைப்பு விடுத்துள்ளார். பசுமை இயக்கத்தின் மண்பானைப் பொங்கல் பொதிகள் வழங்கும் நிகழ்ச்சி வட்டுக்கோட்டையில் ஞாயிற்றுக்கிழமை (11) இடம்பெற்றது. இந்நிகழ்ச்சியில் உரையாற்றியபோதே அவர் இதனை தெரிவித்தார்அவர் மேலும் தெரிவிக்கையில் , அலுமினியம் பாரம் இல்லாததால் இலகுவில் கையாளக்கூடியதாக உள்ளது. உலோகம் என்பதால் இலகுவில் வெப்பத்தைக் கடத்த வல்லது. இதனால், சமையலை விரைந்து முடிக்க வல்லது. நெளிந்து வளைந்தாலும் உடைந்துவிடாது, ஒப்பீட்டளவில் விலையும் மலிவானது. இவை போன்ற காரணங்களால் சமையல் அறைகளில் பிரதான பாத்திரங்களாக அலுமினியப் பாத்திரங்கள் இடம்பெற்றுள்ளன. அலுமினியப் பாத்திரங்களில் உணவு சமைக்கும்போது அலுமினியம் உணவுடன் சேர்வதைத் தவிர்க்கும் பொருட்டுப் பாத்திரத்தின் உட்பகுதியில் அலுமினியம் ஒட்சைட்டுப் படலம் பூசப்படுகிறது. அலுமினியப் பாத்திரங்களைச் சுத்தம் செய்யும்போது பாதுகாப்புப்படலம் தேய்வடைந்து உணவுப் பாதுகாப்பு கேள்விக்குறியாகிறது. சமைக்கப்படும் உணவுப் பொருளின் அமில, கார இயல்பு, சேர்க்கப்படும் உப்பு, சமைக்கும் வெப்பநிலை ஆகியனவற்றைப் பொறுத்து அலுமினியம் உணவுடன் கலப்பதும் கண்டறியப்பட்டுள்ளது. உடலில் சிறுகச் சிறுகச் சேரும் அலுமினியம் மூளை நரம்புகளைப் பாதிக்கிறது. இதனால் நினைவாற்றலும் பேச்சுத் திறனும் தடைப்படுகிறது. ஏற்கனவே சிறுநீரக நோயுடையவர்களின் சிறுநீரகங்கள் மேலும் பாதிப்படைவதோடு எலும்புகளும் பலம் இழப்பதாக ஆய்வுகளில் தெரியவந்துள்ளன. மண்பானைகள் அவற்றின் மேற்பரப்பில் இயற்கையாகவே உள்ள நுண்ணிய துவாரங்கள் வழியாக வெப்பத்தைப் பரப்பி உணவைச் சீராக வேகவைக்கிறது. மெதுவாகவே சூடுபடுத்துவதால் உணவில் போசணைப்பொருட்களின் அழிவு மட்டுப்படுத்தப்படுகிறது. மண் கார இயல்பு கொண்டதால் உணவில் அமிலத் தன்மையைச் சமன் செய்கிறது. சமைக்கும்போது மண்ணிலிருந்து கனியுப்புகள் உணவுடன் சேர்வதால் உணவின் போசணைப்பெறுமானம் அதிகரிக்கிறது. இவற்றோடு உணவின் வாசனையுடன் மண்ணின் வாசனையும் சேர்ந்து கொள்ள உணவுக்குத் தனியானதொரு சுவையும் கிடைக்கிறது. எல்லாவற்றையும் அவசரம் அவசரமாகச் செய்துவிட வேண்டும் என்று நினைக்கும் நாம் உடலின் ஆரோக்கியத்தைப் பேணவேண்டிய சமையலையும் அவ்வாறே அவசரகதியில் முடிக்க எண்ணி உலோகப் பாத்திரங்களை நாடியுள்ளோம். இதன் விளைவாக நோய்களுக்கும் ஆளாகி வருகிறோம். மண்பாத்திரங்களுக்கு உடனடியாகத் திரும்;புவது கடினமாக இருக்கலாம். ஆனாலும் தமிழ் மக்களின் இயற்கையைப் போற்றும் தைப்பொங்கல் திருநாளிலாவது மண்பானைகளில் பொங்கல் இடுவோம். இது நலிவடைந்துள்ள மட்பாண்டக் கைவினையர்களது வாழ்வு மேம்படவும்; உதவும் என்றார். இயற்கையைப் போற்றுகின்ற தைத்திருநாளில் மண்பானைகளில் பொங்கல் இடுவோம் - பொங்கல் பொதிகள் வழங்கும் நிகழ்ச்சியில் ஐங்கரநேசன் அழைப்பு | Virakesari.lk
  2. தேசிய பூங்கா - அல்பெர்டா - கனடா
  3. அதீத செயற்கைவழி விவசாயமும் நாட்பட்டசிறுநீரக செயலிழப்பு நோயும் நிஜத்திலிருந்து..... சட்ட மருத்துவம் December 28, 2025 1 Minute வடமாகாணத்தின் முல்லைத்தீவு மற்றும் வவுனியா மாவட்டங்களில் இந்நோய் காரணமாக கணிசமானோர் பாதிக்கப்ட்டுள்ளனர். முல்லைத்தீவு மாவட்டத்தில் குறிப்பாக மல்லாவி, ஒட்டிசுட்டான் மற்றும் மணலாறு (வெலிஓயா ) பிரதேசங்களில் அதிகளவான நாட்பட்ட சிறுநீரக நோயாளிகள் உள்ளனர். இவ்வாறே இலங்கையின் வடமத்திய, வடமேல், கிழக்கு மாகாணங்களிலும், அம்பாந்தோட்டைகளின் ஒரு சில பகுதிகளிலும் இந்நோயானது கடந்த சில வருடங்களில் வேகமாக பரவி அங்கு வாழும் மக்களை குறிப்பாக விவசாயமும் விவசாயம் சார்ந்த தொழில்களில் ஈடுபடும் பாமர மக்களை பாதித்து வருகின்றது. இந்நோய் காரணமாக 15% வடமத்திய மாகாண மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். வடக்கு மாகாண மக்களாகிய எம்மையும் இக்கொடிய சிறுநீரக செயலிழப்பு நோய் வெகுவாக பாதிக்கும் காலம் வெகு தூரத்தில் இல்லை என்பதே யதார்த்தமாகும். 1. சிறுநீரக செயலிழப்பின் இருவேறு வடிவங்களும் எவை? சடுதியான சிறுநீரக செயலிழப்பு (Acute Kidney Injury) – குருதி இழப்பு, நஞ்சினை உட்கொள்ளல், அதிக வயிற்றோட்டம்… போன்ற பல்வேறு காரணங்களினால் ஒருசில மணித்தியாலங்களில் தொடங்கி ஒரு சிலநாட்கள் வரையான காலப்பகுதியில் சிறுநீரகத்தின் தொழில்பாடானது முற்றாக நிறுத்தப்படல் சடுதியான சிறுநீரக செயலிழப்பு எனப்படும். நாட்பட்ட சிறுநீரக செயலிழப்பு (Chronic Kidney Disease) – நீரிழிவு, உயர் குருதி அழுத்தம்… போன்ற காரணிகளினால் எமது சிறுநீரகத்தின் செயற்பாடானது வருடக்கணக்கில் சிறிது சிறிதாக குறைந்து முற்றாக அற்றுப்போதல் நாட்பட்ட சிறுநீரக செயலிழப்பு எனப்படும். 2. அறியப்படாத காரணவியல் கொண்ட நாட்பட்ட சிறுநீரக நோய் என்றால் என்ன? அறியப்படாத காரணவியல் கொண்ட நாட்பட்ட சிறுநீரக நோய் (CKDu – Chronic kidney disease of unknown etiology ) என்பது நீரிழிவு, உயர் இரத்த அழுத்தம் அல்லது பிற தெளிவான காரணங்கள் இன்றி ஏற்படும் நாட்பட்ட சிறுநீரக நோயின் ஒரு வடிவமாகும். இந்த நோய் மெதுவாக முன்னேறி, பின்னர் சிறுநீரகத்தில் மீள முடியாத சேதத்தை ஏற்படுத்தும். இந்த நோய் அதிகமாக விவசாயிகளில் ஏற்படுவதன் காரணமாக chronic interstitial nephritis in agricultural communities (CINAC) என்றும் இந்த நோய் அழைக்கப்படும். 3. இந்நோயின் தாக்கம் பற்றிய சில புள்ளி விபரங்கள் இந்நோயானது முதன்முதலாக 1990 ஆம் ஆண்டுகளின் ஆரம்ப காலப்பகுதிகளில் மதவாச்சி பகுதிகளில் கண்டுபிடிக்கப்பட்டது. இன்றுவரைக்கும் மூன்று லட்சத்திற்கும் அதிகமான விவசாயிகள் இந்நோயினால் பாதிக்கப்பட்டு உயிரிழந்துள்ளனர். வடமத்திய மாகாணத்தில் 15% மக்கள் தொகையினர் இந்நோயினால் பாதிக்கப்பட்டுள்ளனர். ஏறத்தாழ 10,000 வரையான மக்கள் இந்நோயிற்கான சிகிச்சையை தற்போழது பெற்ற வண்ணம் உள்ளனர். 4. இந்நோயின் தாக்கத்திற்கு உள்ளாகும் ஆபத்திற்கு கூடியவர்கள் யார்? இந்நோயானது ஏற்படுவதற்கு அச்சூழலில் காணப்படும் பல்வேறுபட்ட காரணிகள் செல்வாக்கு செலுத்துகின்றன. முக்கியமாக நீர், நிலம், ஆகியன மாசடைதல் ஆகும். இந்நோயின் தாக்கத்திற்கு உள்ளாகும் ஆபத்திற்கு கூடியவர்கள் • இலங்கையின் உலர்வலயத்தில் காணப்படும் மக்கள். • விவசாயமும் அதன் சார்ந்த தொழில்களிலும் ஈடுபடும் கூலித்தொழிலாளர்கள் • சமூக பொருளாதர நிலைகளில் பின்தங்கி உள்ளோர்கள். • குடிப்பதற்காக நிலத்தடி நீரினை கிணறு மூலம் பெற்றுக் கொள்ளும் மக்கள் • கடினத்தன்மையான (Hardness of water) நீரினை அருந்தும் மக்கள். • கசிப்பு போன்ற சட்ட விரோத மதுபானங்களை அருந்தும் ஆண்கள். • இந்நோயானது பொதுவாக 55-60 வயதுகளில் வெளிக்காட்ட ஆரம்பிக்கும். • பெண்களை காட்டிலும் ஆண்களே அதிகம் பாதிக்கப்பட்டுள்ளனர். • ஆண்: பெண் விகிதசமம் 3:1 ஆகும். • இந்நோய் பரவிய இடங்களில் பயிரிடப்படும் புகையிலை, மற்றும் மரக்கறிவகைகளை பயன்படுத்தும் மக்கள். 5. விவசாயிகளுக்கும் அவர்கள் சார்ந்தவர்களுக்கும் நாட்பட்ட சிறுநீரக செயலிழப்பு நோய் ஏற்படுவதற்கான காரணங்கள்? 1. ஆசனிக்கு, கட்மியம், ஈயம் போன்ற பார உலோகங்கள் மனித உடலை அடைதல் மனித உடலிற்கு தீங்கு பயற்கும் மேற்கூறப்பட்ட உலோகங்கள் பின்வரும் வழிமுறைகளின் ஊடாக மனித உடலை அடைகின்றன. அ) பயிர்களிற்குப் பாவிக்கப்படும் அசேதன வளமாக்கிகள் மூலம் குறிப்பாக பொசுபேற்று வகை வளமாக்கிகள் பார உலோகங்களான கட்மியம், ஆசனிக்கு, ஈயம் என்பவற்றை சிறிதளவில் கொண்டுள்ளன. எல்லா வகையான பொசுபரேற்று வளமாக்கிகளும் (Single Super Phosphate –SSP, Triple Super Phosphate – TSP, Epawella phosphate) ஆசனிக்கு என்ற உலோகத்தை சிறிதளவு கொண்டுள்ளது. இவ்வகை வளமாக்கிகளை அளவிற்கு அதிகமாக பாவிக்கும் போது மண்ணை அடையும் அவ்வுலோகம் நீரினால் கழுவப்பட்டு நீர்நிலைகளை அடையும். அங்கு நீரின் கடினத்தன்மைக்கு பொறுப்பான கல்சியம் மற்றும் மக்னீசியம் என்பவற்றுடன் தாக்கமடைந்து நீரில் கரையும் தன்மைக்கு மாற்றமடையும் பின்பு குடிக்கும் நீரின் ஊடாக உடலை அடையும். ஆசனிக்கு உலோகமானது உடலில் செறிவடையும் போது சிறுநீரகத்திற்கு பாதிப்பை ஏற்படுத்தும். ஆ) உணவுச்சங்கிலி மூலம் நீர் நிலைகளை அடைந்த ஆசனிக்கு கல்சியம் போன்ற பார உலோகங்கள் தண்ணீர் மீன்கள் மற்றும் தாமரைக்கிழங்கு போன்றவற்றினால் செறிவடையும் அவற்றை மனிதர்கள் உண்ணும் போது அவை மனித உடலை அடையும். 2. அளவிற்கு அதிகமான பூச்சிகொல்லிகளைப் பாவித்தல் சிலவகைகளான பூச்சி கொல்லிகளை விசுறும் போது (neonicotinoid) அவை நேரடியாக பழங்கள் மரக்கறிவகைகள் தானியங்களுடன் இணைந்து கொள்கின்றது. இவ்வுணவுகளை உண்ணும் மனிதர்களின் உடலில் செறிவடைந்து அவர்களின் சிறுநீரகத்தின் தொழிற்பாட்டைப் பாதிக்கும். குளோரோபிரிவோஸ் (Chloropyrifos) என்ற பூச்சிகொல்லியானது நேரடியாகவே சிறுநீரகத்தைப் பாதித்து இறப்பை ஏற்படுத்தும். உலக சுகாதாரநிறுவனம் நடத்திய ஆய்வுகளின் போது சிறுநீரக செயலிழப்பிற்கு உள்ளானவர்களின் 31 வீதமானவர்களின் சிறுநீர் மாதிரியில் பூச்சிகொல்லி மருந்துகள் அனுமதிக்கப்பட்ட அளவிற்கு மேல் காணப்பட்டது. 3. களை கொல்லிகள் (Herbicide) இனை மிதமிஞ்சி பாவிப்பதால் புரோப்பனில் (Propanil) போன்ற களை கொல்லிகளை விசுறும்போது அவை தோலின் ஊடாகவோ சுவாசத்தின் ஊடாகவோ அல்லது உணவுச்சங்கில் ஊடாகவோ மனிதஉடலை அடைந்து நாட்பட்ட சிறுநீரக செயலிழப்பை ஏற்படுத்துகின்றது. முக்கியமாக பயிர்ச்செய்கைக்கு முன்பாக மண்ணை பதப்படுத்தும் போது விசிறப்படும் கிளைபொசேற் (Glyphosate) எனும் களை கொல்லியானது ஏனைய வளமாக்கிகள் மூலம் மண்ணை அடையும் ஆசனிக்கு கட்மியம் போன்ற பார உலோகங்களை மண்ணுடன் நிலையாகப் பிணைத்து வைத்திருந்து நீர்நிலைகளை சென்றடைய உதவுகின்றது. 4. நீரின் கடினத் தன்மை (Hardness of Water) உலகசுகாதார நிறுவனத்தின் ஆராச்சிகளின்படி அதிகளவு கடினத்தன்மை உள்ள நிலத்தடி நீரினை (>500mg/L) பாவிக்கும் பிரதேச மக்கள் அதிகளவில் நாட்பட்ட சிறுநீரக செயலிழப்பு நோயின் தாக்கத்திற்கு உள்ளாகியுள்ளனர். இதற்கான காரணம் என்னவெனில் நீரிலுள்ள சிறுநீரகத்தைப் பாதிக்கும் நச்சுத்தன்மைப் பதார்த்தங்களின் அளவு நீரின் கடினத் தன்மைக்கு நேர்விகித சமனாகக் காணப்படுகிறது மேற்கூறிய காரணிகளைத் தவிர பின்வரும் காரணிகளும் விவசாயிகளில் நாட்பட்ட சிறுநீரக செயலிழப்பு நோயை ஏற்படுத்துகின்றன. • கசிப்புப் போன்ற சட்டவிரோத மதுபாவனை • உள்நாட்டில் அதாவது நாட்பட்ட சிறுநீரக செயலிழப்பு நோய் பாதித்த பிரதேசங்களில் பயிரிடப்பட்ட புகையிலையின் பாவனை • அளவுக்கதிகமான வலிநோய் நிவாரணிப் பாவனை முக்கியமாக புரூவன் (Brufen) போன்ற (NSAIDs) மருந்துகளின் பாவனை. 7. வடமாகாணமக்களாகிய நாம் இந்நோயினையிட்டு ஏன் கவலைப்பட வேண்டும்? 1. வடமாகாணத்தின் பெருமளவு நீர்வளம் பாதிக்கப்பட்ட ஏனைய பிரதேசங்களைப் போன்று நிலத்தடி நீர்வளமாக காணப்படுகின்றமையும், நீரானது கடினத்தன்மையுள்ளதாக காணப்படுகின்றமையாகும். மற்றும் ஏறக்குறைய பெரும்பாலான மக்கள் நிலத்தடி நீரினை தமது அன்றாடத் தேவைக்காகப் பாவிக்கின்றனர். மற்றும் நீரின் கடினத்தன்மை பிரதேசத்திற்குப் பிரதேசம் வேறுபடுவதோடு நீரின் கடினத்தன்மையானது விவசாயிகளில் ஏற்படும் நாடப்பட்ட சிறுநீரக செயலிழப்பிற்கு நேர்விகித சமனாகவுள்ளது. 2. வடமாகாணத்தின் பெருமளவு நிலம் பாதிக்கப்பட்ட ஏனைய பிரதேசங்களைப் போன்று உலர்வலயத்தில் காணப்படுகின்றமையும் கிளிநொச்சி, முல்லைத்தீவு, வவுனியா ஆகிய மாவட்டங்களில் பெரும்பாலான மக்கள் விவசாயம் மற்றும் அதனோடு சார்ந்த தொழில்களை மேற்கொள்பவர்கள். 3. அண்மைக்காலமாக யுத்தம் நிறைவடைந்த பின்னர் குறிப்பாக பொருளாதாரத்தடை நீக்கப்பட்ட பின்னர் வடக்கிலுள்ள விவசாயப் பெருமக்கள் அளவுக்கதிகமான அசேதனப் பசளைகள், பீடைகொல்லி மற்றும் களைகொல்லிகளை பாவித்து வருகின்றனர் யுத்த காலத்தில் 30வருட காலமாக இப்பாவனை மட்டுப்படுத்தப்பட்டிருந்தது. அல்லது முற்றாக இல்லாமல் இருந்தது. 1977ம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்ட திறந்த பொருளாதாரக் கொள்கை காரணமாவும் மகாவலித் திட்டம் காரணமாகவும் வடமத்திய மாகாணத்தில் உரப்பாவனை அளவுக்கதிகமாக அதிகரித்ததன் விளைவே 1990ம் ஆண்டு மதவாச்சிப் பகுதியில் முதலாவதாக விவசாயி ஒருவருக்கு நாட்பட்ட சிறுநீரக செயலிழப்பு நோய் கண்டுபிடிக்கப்பட்டது. யுத்த காலத்தில் இருந்த மட்டுப்படுத்தப்பட்ட உரப்பாவனை காரணமாகவே வடமாகாண மக்கள் இன்னமும் இந்நோயின் தாக்கத்திற்கு உள்ளாகவில்லை, ஆனால் வவுனியாவின் தென்பகுதியில் உள்ள சில பிரதேசங்களில் இந்நோய் பரவியுள்ளது இனங்காணப்பட்டுள்ளது. இதன் மூலம் தெளிவாக விளங்குவது எனில் கடந்த 30 வருடங்களாக நாம் யுத்தம் காரணமாக மட்டுப்படுத்தப்பட்ட அளவில் விவசாய இரசாயனப் பொருட்களை பாவித்த காரணத்தினாலேயே நாம் இன்னமும் பாதிப்படையவில்லை, மற்றும் இந்நோயானது 12 தொடக்கம் 15 வருடங்களின் பின்பே வெளித்தெரியவரும். ஏன் எனில் பார உலோகங்களான ஆசனிக்கு, கட்சியம் போன்றன மெதுவான வீதத்திலேயே உடலில் சேர்கின்றமையும் நாட்பட்ட சிறுநீரக செயலிழப்பு நோய் இறுதிக்கட்டத்திலேயே கண்டுபிடிக்கப்படுகின்றமையும் ஆகும். 4. இன்றைய வடமாகாண சனத்தொகையில் பெரும்பான்மையினர் பெண்கள் ஆனால் விவசாயிகளில் ஏற்படும் நாட்பட்ட சிறுநீரக செயலிழப்பானது பெரும்பாலும் பெண்களைவிட ஆண்களையே பாதிக்கும். குறிப்பாக 50 தொடக்கம் 60 வயதில் உள்ளவர்களை பாதிக்கும். ஏற்கனவே போரினால் ஆண்களை அதிகளவில் இளந்துள்ள வடமாகாணம் இன்று நடைபெறும் அதிகரித்த விவசாய இரசாயனப் பொருட்களின் பாவனை காரணமாக எதிர்வரும் 12 தொடக்கம் 15 வருடங்களின் பின்பு குறிப்பாக உழைக்கும் குடும்பத் தலைவர்களின் உயிரிழப்பை அல்லது நோய்வாய்ப்பட்ட இயலாத நிலமையை எதிர்கொள்ள நேரிடும். இதன் காரணமாக குடும்பங்களின் பொருளாதாரநிலை மேலும் சரிவடையும். 5. வடமாகாணத்தில் தற்பொழுது கசிப்புப் போன்ற சட்டவிரோத மதுபாவனை அதிகரித்துள்ளது. அத்தோடு வடமாகாணத்தில் பலபிரதேசங்களில் புகையிலை பயிரிடப்பட்டு நுகரப்படுகின்றது. இதன்போது பூச்சி கொல்லிகள் புகையிலையின் மீது நேரடியாக விசிறப்பட்டு கழுவப்படாமல் உடலை அடைகின்றது. இவ்விரு காரணிகளும் நாட்பட்ட சிறுநீரக செயலிழப்பை விவசாயிகளில் ஏற்படுத்தும் சாத்தியக் கூறு அதிகம். 6. கிளிநொச்சி, முல்லைத்தீவு ஆகிய போரினால் மோசமாக பாதிக்கப்பட்ட மாவடடங்களில் உள்ள மக்களில் பெரும்பாலானோர் உளச் சோர்வு (Depression) நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர். இவர்களில் பெரும்பாலானோர் உடல் உபாதைகளிற்காக புரூவன் (Brufen) போன்ற வலி நிவாரணிகளை (NSAIDs) வைத்திய ஆலோசனை இன்றி பாவிக்கின்றனர். இம்மாத்திரைகள் காலப்போக்கில் சிறுநீரக செயலிழப்பிற்கு வித்திடும். 7. வடமத்திய மாகாணத்தில் உள்ள மக்கள் தான் இந்த நாட்பட்ட சிறுநீரக செயலிழப்பு நோயினால் அதிகளவு பாதிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் அங்கு உற்பத்தி செய்யப்படும் மரக்கறிவகைகள், நெல், சோளம், நன்னீர் மீன்கள் போன்றவற்றில் இந்நோயினை ஏற்படுத்தும் ஆசனிக்கு மற்றும் கட்மியம் போன்ற பார உலோகங்கள் நேரடியாகவோ அல்லது உணவுச் சங்கிலி மூலமாகவோ நிச்சயம் செறிந்து இருக்கும். உலக சுகாதமார நிறுவனத்தின் ஆராய்ச்சி முடிவுகளின்படி வட மத்திய மாகாணத்தில் உள்ள நன்னீர் மீன்கள் (திலாப்பியா) தாமரைக்கிழங்கு, சிலவகை அரிசி என்பவற்றில் இப்பார உலோகங்கள் காணப்பட்டுள்ளது. எனவே வடமத்திய, வடமேல் மாகாணங்களில் உற்பத்தி செய்யப்படும் ஏனைய மரக்கறிவகைகள் என்பவற்றில் இப்பார உலோகங்கள் அல்லது பூச்சி கொல்லிகள் காணப்படாது என்பதற்கு உத்தரவாதம் இல்லை. 8. இந்நோயின் பாதிப்பு, வராமல் தடுப்பதற்குரிய வழிமுறைகள் நாட்பட்ட சிறுநீரக செயலிழப்பு நோய் ஏற்பட்டு விட்டால் மருத்துவ சிகிச்சைகளின் மூலம் இந்நோயினை முற்றாக குணமாக்க முடியாது. சிறுநீரகத்தின் செயற்பாடு செயலிழக்கும் வீதத்தினை குறைக்கலாம். செலவுமிக்க சிறுநீரக மாற்றீட்டு அறுவைச் சிகிச்சையையே இந்நோயினை முற்றுமுழுதாக குணமாக்கவல்லது. இக்காரணங்களினால் இந்நோயினை வருமுன் காப்பதே சிறந்தது ஆகும். இந்நோயில் இருந்து எம்மை பாதுகாக்க நாம் சில வழிமுறைகளை பின்பற்ற வேண்டும் அவையாவன. 1) தேவையான அளவில் அசேதன பசளைகள், பீடைகொல்லிகள், மற்றும் பூச்சி கொல்லிகள் என்பவற்றை பாவித்தல் அல்லது முற்றாக பாவித்தலை தடைசெய்தல். 2) அசேதனப் பசளைகளிற்கு பதிலாக இயற்கயான பசளைகளை பாவித்தல். 3) இரசாயன பீடைகொல்லிகள் மற்றும் பூச்சி கொல்லிகள் என்பவற்றை பாவிப்பதற்க பதிலாக இயற்கையான முறைகள் மூலம் அல்லது உயரியல் கட்டுப்பாட்டு முறை மூலம் அவற்றை கட்டுப்படுத்தல். 4) விவசாயிகளுக்கு போதிய அறிவுட்டற் செயற்பாடுகளை செய்தல். குறிப்பாக அசேதன பசளைகளை அளவோடு பாவித்தல், பூச்சி நாசினிகளை விசிறும்போது கையுறை, காலணி, முகமூடி என்பவற்றை அணிதல். 5) புகையிலை மற்றும் கசிப்பு பாவனையை கட்டுப்படுத்தல். 6) உள்ளுரில் இயற்கை பசளைகளை கொண்டு உற்பத்தி செய்யப்படும் மரக்கறிவகைகள் மற்றும் பழவகைகளின் உற்பத்தி மற்றும் விற்பனையை ஊக்குவித்தல். 9. முக்கிய கேள்வி ஏன் ஒருசிலர் மட்டும் பாதிக்கப்படுகின்றனர்? உதாரணமாக ஒரு குடும்பத்தினர் ஆண்டாண்டு காலம் ஒரு இடத்தில் வசித்து தமது கிணற்று நீரினை பருகும் பொழுது ஏன் அக்குடும்பத்தில் ஒருவர் மட்டும் இந்த நாட்பட்ட சிறுநீரக செயலிழப்பு நோயினால் பாதிக்கப்படுகின்றனர். இந்த நாட்பட்ட சிறுநீரக செயலிப்பிற்கு பல்வேறு காரணிகள் செல்வாக்கு செலுத்துகின்றன. இந்த ஒரு காரணி மட்டும் தான் நாட்பட்ட சிறுநீரக செயலிழப்பு நோயினை உருவாக்கியது என்று திட்ட வட்டமாக கூறமுடியாது. உதாரணமாக அதிக நேரம் வெயிலில் இருக்கின்ற தன்மை, பிறப்பு நிறை குறைவாக இருக்கின்றமை, பாரம்பரியம், சிறுநீரக பாதிப்பினை ஏற்படுத்தும் மருந்துகளின் பாவனை, சிறுவயதில் அடிக்கடி ஏற்படும் கிருமி தொற்றுக்கள் … என பல்வேறு தனிநபருக்குரிய காரணிகள் ஒருவருக்கு நாட்பட்ட சிறுநீரக செயலிழப்பு செயலிழப்பு நோய் ஏற்படுவதினை தீர்மானிக்கும். 10. ஆறுதல் தரும் விடயம் 2017ம் ஆண்டு மேற்படி நோய் நிலவும் பிரதேசங்களில் மேற்கொள்ளப்பட்ட நீர் வழங்கும் வசதிகள் மற்றும் எடுக்கப்பட்ட தடுப்பு வசதிகள் காரணமாக 2024ம் ஆண்டு வட மத்திய மாகாணத்தில் குறித்த நோயாளர்களின் எண்ணிக்கையில் குறைவு ஏற்படத்தொடங்கியுள்ளது. மேலும் வழங்கப்படும் மருத்துவ வசதிகள் காரணமாக நோயாளர்களின் ஆயுட் காலமும் அதிகரிக்க தொடங்கியுள்ளது. மேலும் குறித்த நோயின் காரணமாக சிறுநீரகங்களின் செயற்பாடு குறித்த அளவு குறைந்த குறைந்த பின்னரே நாட்பட்ட சீறுநீரக செயலிழப்புக்கான அறிகுறிகள் எம்மில் வெளித்தெரிய வரும் எனவே அவதானத்துடன் இருப்போம். வரும் முன் காப்போம். நன்றி அதீத செயற்கைவழி விவசாயமும் நாட்பட்டசிறுநீரக செயலிழப்பு நோயும்
  4. முதல் நாள் இன்னும் முடியவில்லை. இது... ஐந்தாவது மணித்தியாலத்தில் எடுத்த படம். 😂 அதிகமாக உணவு உண்ட களைப்பாகவும் இருக்கலாம். 🤣
  5. வெனிசுவேலாவின் தற்காலிக ஜனாதிபதியாக டொனால்ட் ட்ரம்ப் தன்னை தானே அறிவித்துள்ளார்! வெனிசுலாவின் தற்காலிக ஜனாதிபதி தான் தான் என அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் அவருடைய ட்ரூத் சோசியல் சமூக ஊடக தளத்தில், ஒரு புதிய புகைப்படம் ஒன்றை பகிர்ந்துள்ளார். அந்த புகைப்படத்தில் அமெரிக்காவின் 45ஆவது மற்றும் 47ஆவது ஜனாதிபதி என்றும் உப ஜனாதிபதி ஜே.டி. வான்ஸ் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளதுடன், வெனிசுலாவின் தற்காலிக ஜனாதிபதி என்றும் தெரிவிக்கப்பட்டு இருந்தது. ஞாயிற்றுக்கிழமை பகிரப்பட்ட இந்தப் பதிவில், “வெனிசுலாவின் தற்காலிக ஜனாதிபதி, பதவியில் இருக்கும் ஜனவரி 2026” என்ற பதவியுடன் டிரம்பின் அதிகாரப்பூர்வ உருவப்படம் இடம்பெற்றுள்ளது. எனினும், சர்ச்சைக்குரிய இந்த பதிவுக்கு வேறு எந்த தலைப்பையும் வைக்கவோ அல்லது வேறு எந்த தகவலையோ ட்ரம்ப் பகிரவில்லை. வெனிசுலாவின் எண்ணெய் வளங்கள் மீது ட்ரம்ப் குறி வைத்திருக்கும் நிலையில், இந்த பதிவு வெளிவந்துள்ளது. வெனிசுலா ஜனாதிபதி நிக்கோலஸ் மதுரோ கைது செய்யப்பட்ட பின்னர், நாட்டின் தற்காலிக ஜனாதிபதியாக டெல்சி எலோய்னா ரோட்ரிக்ஸ் முறைப்படி பதவியேற்று கொண்டமையும் குறிப்பிடத்தக்கது. வெனிசுலாவில் அமெரிக்கா “பெரிய அளவிலான” இராணுவத் தாக்குதலை நடத்தி, ஜனாதிபதி நிக்கோலஸ் மதுரோவையும் அவரது மனைவி சிலியா புளோரஸையும் பிடித்து நியூயார்க்கிற்கு அழைத்து வந்த சில வாரங்களுக்குப் பின்னர் டொனால்ட் டிரம்பின் இந்த கூற்று வெளிப்பட்டது. https://athavannews.com/2026/1459597
  6. அடுத்தது ஈரான் ஜனாதிபதியாக சத்திய பிரமாணம் செய்ய உள்ளார். அடுத்தடுத்து பலநாட்டு ஜனாதிபதியாக சத்தியமாணம் செய்ய உள்ளார்.
  7. 'செவ்வருக்கை' நூல் அறிமுக உரை - சுப.சோமசுந்தரம் எழுத்தாளர் எம்.எம்.தீன் அவர்களின் சமீபத்தியப் படைப்பான 'செவ்வருக்கை' எனும் சிறுகதைத் தொகுப்பினை வாசிக்கும் பேறு பெற்றேன். தொகுப்பிலுள்ள முதற்கதையின் தலைப்பே நூலுக்கான தலைப்பானது. செவ்வருக்கை என்பது ஒரு வகை பலா மரத்தைக் குறிப்பதாகும் - வாழையில் செவ்வாழை போல. இதன் பழத்தில் சுளைகள் மிக அடர்த்தியாகவும் செவ்வண்ணத்திலும் அமைவன. கனியின் மணமும் சுவையும் தன்னிகரற்றவை. இத்தொகுப்பின் கதைகள் அனைத்தும் சாதி ஆணவம் பற்றிப் பேசுபவை. தீன் அவர்கள் தக்கோரிடம் கேட்ட உண்மை நிகழ்வுகளைக் கதைக்களத்திற்கு ஏற்றவாறு அமைத்தளித்த படைப்பு இது. நூலில் உள்ள அனைத்துக் கதைகளையும் நாம் இங்கு பேச வரவில்லை. ஒரு பானைச் சோற்றுக்கு நான்கு சோறு (!) பதமாய் நான்கு கதைகளைச் சொல்லி முழுச்சோற்றையும் நீங்களே உண்டு பாருங்கள் என அழைப்பு விடுவதே இவ்வெழுத்தின் நோக்கம். முதலில் செவ்வருக்கை. சுமார் முந்நூறு வருடங்களுக்கு முன்பு மலைப்பகுதியில் இருந்த ஒரு ஆதிக்க சாதியினரின் காட்டில் (தோட்டத்தில்) ஆத்தி புலையனும் அவன் மனைவி வெயிலாளும் மற்றும் சில குடியானவர்களும் உழைத்து வந்தனர். அதனைப் பொறுப்பாக வழிநடத்தியவன் ஆத்திபுலயன். வெயிலா நிறைமாத சூலியான நேரம் இரண்டு செவ்வருக்கைப் பழங்கள் ஒரு மரத்தில் காய்த்துக் கனிவாகின. அதனை உண்ண ஆசைப்பட்ட வெயிலா தனது அண்ணன் மாடப்புலையன் மூலமாக வெட்டிக் கொணர்ந்து ஆசை தீர உண்டாள். அதனை அந்த நில உரிமையாளர்கள் ஏற்கமாட்டார்கள் என்பதையுணர்ந்த ஆத்திபுலயன் குடும்பத்துடன் அங்கிருந்து தப்ப முயல, ஆதிக்க வெறி பிடித்தவர்களால் கொலையுண்டு முடிந்து போயினர். கொலையாவதற்கு முன் வெயிலா ஈன்ற ஆண் மகவினைக் காப்பாற்றிய மாடப்புலயன் அவனுக்கு செங்காடன் எனப் பெயரிட்டு வளர்த்து ஆளாக்கினான். செங்காடன் வளர்ந்து ஆளாகித் தன் அப்பன் - ஆத்தாளைக் கொன்றவர்களைக் கொன்று அந்தச் சண்டையில் தானும் உயிர் நீத்தான். இதன் பின்னர் பல இன்னல்களுக்கு ஆளான பண்ணையார் குடும்பத்துக்குப் பரிகாரம் சொன்ன மலையாள மாந்திரீகர்கள் ஆத்திபுலயன், வேலாயி, செங்காடன் ஆகியோருக்குப் பூடம் போட்டு வருடா வருடம் செய்முறைகள் செய்து வழிபடச் செய்தார்கள். இது நடந்து முந்நூறு வருடங்களுக்குப் பிறகு பழைய கதையெல்லாம் திரிந்து இப்போது பண்ணையார் குடும்பத்து வகையறாக்கள் அந்தத் தெய்வங்கள் தங்கள் குலத்தைச் சார்ந்த, தங்கள் குலத்தை ஆசீர்வதிக்கும் குலசாமி என்றே நம்புகின்றனர். தங்களுக்குக் கீழான பகைச்சாதியினர் மீது தாக்குதல் நடத்தப் போகும்போதெல்லாம் அக்குல தெய்வங்களை வணங்கி உத்தரவு பெற்றே செல்கின்றனர். "செங்காடனும் மற்ற குல தெய்வங்களும் பழியை மறந்து சமாதானம் ஆகியோ அல்லது அவர்களது அதிகாரம் கண்டு பயந்தோ சிரித்தபடியே உத்தரவு கொடுத்துக் கொண்டே இருக்கிறார்கள்" என்று எழுத்தாளர் தம் கூற்றாக அங்கதத்துடன் கதையை நிறைவு செய்கிறார். எம்.எம்.தீன் அவர்களின் கதை சொல்லும் நேர்த்தியைத் தனியாகச் சொல்ல வேண்டியதில்லை. எழுத்து அவருக்குப் புதிதல்ல. சமூக அவலங்களை எடுத்தியம்புவதில் நேரிடையாகச் சொல்ல வேண்டிய இடத்தில் நேரிடையாகவும், குறிப்பாகச் சொல்ல வேண்டிய இடத்தில் குறிப்பாகவும் சொல்வதில் அவருக்கு நிகர் வெகு சிலரே. ஒவ்வொரு கதையிலும் அவர் போடும் நிறைவுத் திரை பற்றி ஓரிரு வார்த்தைகள் சொல்வது நிறைவாய் அமையும். எடுத்துக்காட்டாக, செவ்வருக்கையை இப்போது கையிலெடுப்போம். தாங்கள் முன்னர் அநீதி இழைத்தவர்களிடமே வந்து ஆதிக்க வர்க்கத்தினர் மீண்டும் அந்த அநீதியைத் தொடர்ந்திட உத்தரவு கேட்பதும், அதற்கு அவர்கள் இசைவதுமான வெளிப்பாடு நகைமுரண் மட்டுமல்ல; இன்றைய சமூக அவலத்தின் அபாரமான குறியீடும் கூட. நமக்குத் தெரிந்து தலித் சமூகத்தினர் சிலரும், ஒரு காலத்தில் மேலாடை அணிய மறுக்கப்பட்ட சமூகத்தில் பலரும் அதே பாசிச சக்திகளிடம் சரணடைந்து நிற்பது என் போன்றோர் நினைவில் நிழலாடுவது தவிர்க்க இயலாத ஒன்று. எழுத்தாளர் இக்குறிப்பைத்தான் பெரும்பாலும் கொண்டிருப்பார்; உறுதியாகத் தெரியாது. எழுத்தாளர் சிந்தித்ததை வாசகரும் சிந்திக்க வைப்பதும், அவர் சிந்திக்காதையும் சிந்திக்க வைப்பதும்தானே சிறந்த எழுத்தாக அமைய முடியும் ! போகிற போக்கில் இக்கதை தொடர்பான வேறு ஒன்றைச் சொல்வது என் கடமை என எண்ணுகிறேன். இது செவ்வருக்கை. அறிஞர் அண்ணா எழுதிய சிறுகதை செவ்வாழை. முக்கனிகளில் இரண்டு வந்து விட்டனவே ! இரண்டு கதைகளின் பொதுவான அடிநாதம் மேட்டிமைத்தனம் சாடல். செவ்வருக்கை சாடுவது சாதிய மேட்டிமையை; செவ்வாழை சாடுவது வர்க்க மேட்டிமையை. செங்கோடன் என்னும் ஏழைக் குடியானவன் தன் குழந்தைகளிடம் ஆசையை வளர்த்து, தன் வீட்டுக் கொல்லையில் செவ்வாழை ஒன்றை வளர்த்து வருகிறான். அந்த ஏழையின் கனவு செழித்து வளர்ந்தது. இரண்டொரு நாட்களில் வாழைக்குலையினை வெட்ட எண்ணுகிறான். பிள்ளைகள் கொண்ட மகிழ்ச்சிக்கு அளவேயில்லை. அவன் வேலை செய்யும் பண்ணையின் உரிமையாளர் தம் வீட்டில் நிகழும் சுப நிகழ்ச்சியொன்றுக்கு அந்த செவ்வாழைக் குலையைக் கேட்டு ஆள் அனுப்புகிறார். மறுப்பது எங்ஙனம் ? தனது மற்றும் தன் குழந்தைகளின் கனவெல்லாம் நொறுங்க, அக்குலையை வெட்டிக் கொடுத்து விடுகிறான். குழந்தைகளின் அழுகை நாட்கணக்கில் ஓயவில்லை. ஓரளவு விவரம் தெரிந்த பெரிய பையனின் விரக்தி நிலையைக் கதையின் முத்தாய்ப்பாக அறிஞர் அண்ணா இவ்வாறு வைக்கிறார் - "பாவம் சிறுவன்தானே ! அவன் என்ன கண்டான் - செங்கோடனின் செவ்வாழை தொழிலாளர் உலகில் சர்வ சாதாரண சம்பவம் என்பதை !". உழுபவனுக்கே நிலம் சொந்தம் எனும் பொதுவுடமைக் கருத்தை அண்ணா முன்னெடுக்கும் கதை செவ்வாழை. தோழர் தீன் சமூக நீதியைக் கையிலெடுத்ததும், சமூக நீதியை அதிகம் பேசும் அறிஞர் அண்ணா பொதுவுடமை பேசியதும் ஒரு இனிமையான ஒப்பீடு ! வர்க்க விடுதலையும் சமூக நீதியும் பின்னிப் பிணைந்த வை என்னும் பொதுவுடைமைவாதிகளின் கருத்திற்கு உரமிடுவது. சாதியம் என்னும் இழிவு, மத எல்லைகளைக் கடந்தது என்பதை சுட்டிக்காட்ட எம்.எம்.தீன் ஒருபோதும் தவறவில்லை. இந்திய இஸ்லாமியரிடையே சாதியம் விரவிக் கிடப்பதை 'நாசுவம்' எனும் கதையிலும், கிறித்துவத்தில் சாதியப் போக்கினை 'ஊரு ஒப்பாது' எனும் கதையிலும் ஆணித்தரமாய் உரைப்பதில் அவர் பின்வாங்கவில்லை. இஸ்லாமிய சமூகம் பெருமளவில் வாழும் ஊருக்கு முடி திருத்தும் தொழிலுக்காகவே கொண்டுவரப்பட்ட குடும்பத்தின் வாரிசு ஒருவர் பிற்காலத்தில் சென்னை சென்று கட்டுமானத் தொழிலில் கொடி கட்டிப் பறக்கிறார். தம் மகனின் திருமணத்தை இந்த ஊரில் அவர் கட்டித் தந்த 'நிலா மஹால்'இல் நடத்த முடிவு செய்து ஊரடைக்க மதிய விருந்துக்கும் மாலை வரவேற்புக்கும் தடபுடலாக ஏற்பாடு செய்து அழைக்கிறார். மதிய விருந்துக்கு அந்த ஊர்க்காரர் ஒருவர் கூட வரவில்லை. அவரும் இஸ்லாமியராயினும் அவரது சாதி கருதி ஊர் மக்களான இஸ்லாமியர்கள் (!) திருமணத்தைப் புறக்கணித்த விவரம் அவருக்குத் தெரிய வருகிறது. நியாயமான அறச்சீற்றத்துடன் மாலை வரவேற்பை ரத்து செய்துவிட்டுக் குடும்பத்துடன் சென்னைக்குக் கிளம்பிச் சென்று விடுகிறார். திருமணத்திற்கு போன மாதிரியும் இருக்கட்டும், போகாத மாதிரியும் இருக்கட்டும் என்று மாலை வரவேற்புக்கு வந்த ஊர்க்காரர்கள் சிலரை பூட்டிய கதவு வரவேற்கிறது. வந்தவர்களில் தொப்பியும் பெரிய தாடியும் வைத்திருந்த பெரிய மனுசர் ஒருவர், "என்ன இருந்தாலும் நாசுவப் பயலுக்கு இம்புட்டு பவிசும் வீம்பும் ஆவாது" என்று சொல்ல, கதை முடிகிறது. இந்திய இஸ்லாத்திலும் சாதிய மனநிலை மாறவில்லை; மாறுவதாகவும் இல்லை என்பதை 'நாசுவ'த்தின் அந்த இறுதி நொடி உணர்த்துகிறது. இக்கதை அன்வர் பாலசிங்கம் எழுதிய 'கருப்பாயி என்ற நூர்ஜஹான்' எனும் குறுநாவலை நினைவுறுத்துகிறது. சாதியக் கொடுமையால் மீனாட்சிபுரத்தில் இஸ்லாத்தைத் தழுவிய தலித் சமூகத்தினர் பின்னர் தம் சமூகத்தாராலும், இஸ்லாமியராலும் ஒதுக்கி வைக்கப்பட்டு அல்லலுற்ற கதையைத் தத்ரூபமாகப் படம் பிடித்த நாவல் அது. அந்த நாவலை எழுதிய பின் அன்வர் பாலசிங்கம் பட்ட பாட்டை நண்பர்களிடம் கேள்விப்பட்ட நினைவு. நெஞ்சில் உரம் கொண்டு நேர்மைத் திறம் கொண்டு 'நாசுவம்' எழுதிய தோழர் தீன் அவர்களுக்குப் பாராட்டு. தேவாலயத்தில் இரு குடும்பங்கள் சந்தித்து மனமொத்து (தலைவனையும் தலைவியையும் சேர்த்துதான் !) ஒருவருக்கொருவர் விவரங்களைப் பகிர்ந்த பின், "நீங்க வேற நாங்க வேற; ஊரு ஒப்பாது" என்ற நூலிழையில் திருமணப் பேச்சு முறிந்து போகிறது. பின்வாங்கிய குடும்பம் தாங்கள் அவர்களை விட மேலோராக்கும் எனும் கற்பனையில் மிதக்கும் இடைநிலைச் சாதியினர் என்பதும், சிறிய அல்லது பெரிய ஏமாற்றத்துக்குள்ளான பிறிதொரு குடும்பம் வெளுத்ததெல்லாம் பால் என நினைக்கும் பட்டியல் இனத்தோர் என்பதும் சொல்லித் தெரிய வேண்டுமா என்ன ? அவர்களுக்குள் திருமணப் பேச்சு வார்த்தையை முன்னெடுத்த பாஸ்டரும் சாதிய மனநிலையில் இருந்து விலகியவர் அல்லர் என்பது சூசகமாக வெளிப்படுத்தப்படுகிறது. இதன் மூலம் அங்கேயும் உள்ள அநாகரிகத்தை 'ஊரு ஒப்பாது' கதையில் குறிப்பாக வெளிப்படுத்தியது எழுத்தாளரின் நாகரிகம். பன்னிரெண்டு கதைகளைக் கொண்ட இத்தொகுப்பின் கடைசிக் கதையான 'சாதி நாற்காலி', பட்டியலினப் பெண்ணுக்கு ஒதுக்கப்பட்ட ஊராட்சித் தலைவர் பதவியில் அமர்ந்த ஒரு படித்த அருந்ததியர் பெண் ஆதிக்க இடைநிலைச் சாதியினரால் எதிர்கொள்ளும் அவமானங்களைத் தோலுரித்துக் காட்டுவது. அவள் கற்ற கல்வி அவளைக் கொள்கைப் பிடிப்புடன் நிற்க வைக்கிறது. அவர்களால் கொடூரமாகத் தாக்கப்பட்டு சாவின் விளிம்பு வரை சென்று திரும்பும் அப்பெண் வீறு கொண்டு நிற்பதைப் பேசும் கதை இது. சமநிலையை ஏற்க மறுக்கும் சமூகத்திற்கு எதிரான போராட்டத்தில் அறிவாயுதம் கொண்டு நேர்மையாக சமூகப் பணியாற்றும் உறுதியேற்று உயிரையும் பணயம் வைக்கத் தயாரான புதுமைப் பெண்ணின் கதை இது. ஏனைய கதைகள் நிதர்சனத்தை சமூகத்தின் முகத்திலறைந்து சொல்லுகையில் இக்கதை ஒரு படி மேற்சென்று நம்பிக்கை ஒளியூட்டுவதாய் அமைகிறது. சமீபத்தில் வெளியான மாமன்னன் திரைப்படம் போல அறவழி நின்று எதிர்வினை ஆற்றுகிறது. தோழர் தீன் அவர்கள் தமது எழுத்துப் பணியான சமூகப் பணியினைப் பன்னெடுங்காலம் முன்னெடுத்துச் செல்வார்; செல்ல வேண்டும். https://www.facebook.com/share/p/1E5ofEE61x/
  8. விமல் வீரவன்ச... சாகும்வரை உண்ணாவிரதம் இருந்து, சாக... முற்கூட்டிய வாழ்த்துக்கள். 👍 இவன் சில வருடங்களுக்கு முன் உண்ணாவிரதம் இருந்த போது... உண்ணாவிரத மேடைக்கு பின்புறம் "மலிபன் பிஸ்கட்" பெட்டிகள் கண்டெடுக்கப் பட்டமை பத்திரிகைகளில் செய்தியாக வந்திருந்தது குறிப்பிடத் தக்கது. 😂
  9. ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்காவால் தான் ஒட்டுமொத்த அரசாங்கமும் ஓடிக்கொண்டிருக்கின்றனர் என்று கூறலாம். யாழ் கிளிநொச்சி மாவட்டத்தில் 3 ஆசனங்கள் வன்னி மாவட்டம் மற்றும் கரைதுறைப்பற்று பிரதேச சபைபையும் கைப்பற்றியுள்ளனர். தற்போது கரைதுறைப்பற்று பலநோக்கு கூட்டுறவு சங்கத்தையும் தேசிய மக்கள் சக்தி கைப்பற்றியுள்ளது. நாடும் அநுரவோடு ஊர் எங்களோடு என்று தேர்தல் காலங்களில் கூறிக்கொண்டிருந்தனர். ஆனால் தற்போது ஊரும் அநுரவோடு செல்வதை காணக்கூடியதாகவுள்ளது. இந்த விடயங்கள் தொடர்பில் ஆராய்கின்றது நாட்டு நடப்பு நிகழ்ச்சி.. Tamilwinமுல்லைத்தீவையும் விட்டு வைக்காமல் தமிழர் பகுதிக்குள் ஆழமா...ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்காவால் தான் ஒட்டுமொத்த அரசாங்கமும் ஓடிக்கொண்டிருக்கின்றனர் என்று கூறலாம். யாழ் கிளிநொச்சி ம...
  10. இதுமட்டும் இல்லை என நினைக்கிறேன். கொழும்பு-பொல்கஹாவல-பதுளை மார்கம் மெயின் லைன் எனப்படும். பொல்கஹாவல-காங்கேசந்துறை நோர்தெர்ன் லைன். மதவாச்சி-தலைமன்னார் - மன்னார் லைன். இரெண்டு லைனும் திருத்த வேலை நடக்குது ணெந் நினைக்கிறேன். புயலுக்கு முன் தினமும் 4(5? ) ரெயின் ஓடிய நிலையில் இப்போ 2 தான் ஓடுது?
  11. நான் அறிந்தவரையில் இவரது எடுபிடிகளும் கோடீஸ்வரர்களாகிக் கொண்டு தான் இருக்கிறார்கள்..யாழ் கச்சேரிக்கு ஏதாவது அலுவல் செய்யப் போனால் அங்கு லட்சக்கணக்கில் கேட்கிறார்களாகம்.அதுவும் பெண்கள்.ஆகவே சிறிதரன் மற்றும் இன்னும் சிலரை மக்கள் வீட்டுக்கு அனுப்புவதே சிறந்தது.
  12. பகிர்விற்கு நன்றி ஐயா. 300 வருடங்களிலே வரலாறே தலைகீழானதே!
  13. முகநூலில் இருந்து.. பிழையான நம்பிக்கைகள் : 1. பாலியல் பற்றிய அறிவை பிள்ளைகளுக்கு கொடுப்பதால் பிள்ளைகளிடையே பாலியல் பிறழ்வுகள் அதிகரிக்காது. 2. பாலியல் அறிவை பிள்ளைகளின் பாடத்திட்டத்தில் சேர்த்துள்ள நாடுகள் எல்லாம் இலங்கையை விட ஆகக்குறைந்தது ஆயிரம் மடங்காவது அபிவிருத்தி அடைந்த நாடுகள். 3. அந்த நாடுகளுக்கு நீங்கள் செல்ல வேண்டும் என்றால் அதற்கான ஒரு தகுதி தேவை, அதை நிரூபிக்க வேண்டும் அல்லது சட்டவிரோதமாக செல்ல வேண்டும். 4. அந்த அபிவிருத்தி என்பது பொருளாதார ரீதியான அபிவிருத்தி மட்டுமல்ல, அறிவியல் ரீதியான அபிவிருத்தி. 5. பாலியல் கல்வி என்பது ஒரு ஆணும் பெண்ணும் எப்படி மற்ற ஆட்களுக்கு தெரியாமல் கள்ளத்தனமாக செக்ஸ் வைப்பது என்று சொல்லிக் கொடுப்பதில்லை . 6. பாலியல் கல்வி என்பது ஒவ்வொரு வயதிலும் இயற்க்கையாக ஏற்படும் உடல் மாற்றம் , உணர்வு மாற்றம் போன்றவற்றை விளங்கப்படுத்தி அதை சரியாக எதிர்கொள்ள பற்றி அறிவூட்டுவது . பாலியல் துஷ்பிரயோகம் என்றால் என்ன , யாராவது அதற்கு முயற்சி செய்தால் அல்லது உண்மையாக பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டால் அதை எப்படி பெரியவர்களிடம் சொல்லி தீர்வு காண்பது என்று சொல்லிக் கொடுப்பதும்தான் பாலியல் அறிவு . மேலும் , ஒரு பெண்ணுக்கு பீரியட் தொடங்க முன்னமே , பேட் வாங்கி கொடுத்து அதை எப்படி பாவிப்பது என்று விளங்கப்படுத்தி, பீரியட் ஆரம்பித்ததும் அவளுக்கு வயிற்று வலி போன்றவை இல்லை என்றால் அடுத்த நாளைக்கே பாடசாலைக்கு அனுப்பி வைக்க வேண்டும் என்று சொல்லிக் கொடுப்பது தான் பாலியல் கல்வி. அதை விட்டுப் போட்டு பிள்ளையை 10 நாள் ரூமில் அடைத்து வச்சுப்போட்டு, பிறகு ஊருக்கே அழைப்பிதழ் கொடுத்து, மேக்கப் போட்டு பிள்ளையை காட்சிப் பொருளாக நிப்பாட்டி பிள்ளைக்கு பீரியட் தொடங்கிட்டு என்று தண்டோரா போட்டு சொல்லுறது மட்டுமில்லாமல் , ஹெலியில் கொண்டுவந்து இறக்கிறது , 13 வயது பிள்ளையை மச்சானை பார்த்தீங்களா என்று ஆட வைக்கிறதெல்லாம் மொக்குத்தனமென்பதை தாண்டி படு பட்டிக்காட்டுத்தனம் என்று புரிய வைப்பதுதான் பாலியல் கல்வி என்று சொல்லப்படும் அறிவியல் கல்வி . இதை சொல்வதால் எனக்கு எதிரிகள் அதிகரிக்கும் , ஏனென்றால் உடற்தொழிற்பாட்டை ஆழமாக கற்ற வைத்தியர்களே பிள்ளைகளுக்கு சாமத்திய வீடு சிறப்பாக செய்து வீடியோ போட்டு படம் காட்டும் சமூகம் நம் சமூகம். அப்படிப்பட்ட எல்லோருக்கும் இந்த கருத்தை சொல்வதால் நான் சமூக விரோதியாகிப்போவேன். சாராம்சம் : பாலியல் கல்வி ஒழுங்காக கொடுக்கப்படாததால் , 1. உங்கள் வீட்டில் உள்ள அநேகமான பெண்கள் இந்த பாலியல் அத்துமீறல்களை ஏதோ ஒரு வழியில் எதிர்கொண்டு அதை வெளியே சொல்ல முடியாமல் உள்ளே குற்ற உணர்வுடன் வாழ்ந்து கொண்டு இருப்பார்கள். 2. கொஞ்சமாவது ஒழுங்காக படித்த பெண்கள் வளர்ந்தும் சாமத்திய வீட்டு கெசட்டை எடுத்து ஒளித்து வைப்பார்கள் அல்லது உடைத்து எறிவார்கள். https://www.facebook.com/share/1GBhRW3hpn/?mibextid=wwXIfr
  14. ஈழத்தமிழர் மீதான இனவழிப்புப் போரில் எனது தனிப்பட்ட அனுபவங்கள் அண்மையில் இஸ்ரேலுக்குப் பயணம் செய்த தனது அனுபவங்களை திரு நிராஜ் டேவிட் அவர்கள் காணொளிகள் வாயிலாக வெளியிட்டு வருகிறார். அவற்றில் சில காணொளிகளில் அவர் அங்கு தங்கியிருந்த‌ நாட்களில் பயணித்த பலவிடங்களையும் காட்சிப்படுத்தியிருந்தார். அவற்றுள் ஒன்று யூத மக்கள் மீது இரண்டாம் உலக யுத்த காலத்தில் நாசிகளால் மேற்கொள்ளப்பட்ட இனக்கொலை தொடர்பான சாட்சியங்கள், ஆதாரங்கள் ஆகியவற்றினை பாரிய நினைவாலயம் ஒன்றினுள் காட்சிப்படுத்தியிருந்தமை பதிவுசெய்யப்பட்டிருந்தது. தம்மீது நிகழ்த்தப்பட்ட இனக்கொலை தொடர்பாக தமது சந்ததிகள் தொடர்ச்சியாக அறிந்துகொள்ளவேண்டும் என்பதும், இனிமேல் அவ்வாறனதொரு இனக்கொலை தமது இனம் மீது நடக்காது தவிர்ப்பது எந்தளவு முக்கியமானது என்பதையும் தம் இன மக்களுக்கு தொடர்ச்சியாக வலியுறுத்துவதும் இந்நினைவாலயத்தின் நோக்கம் என்றும் அவர் தெரிவித்திருந்தார். கொல்லப்பட்ட அறுபது இலட்சம் யூதர்களில் ஒரு பகுதியினர் பயன்படுத்திய காலணிகள், அவர்களால் அணியப்பட்ட கறுப்பும் வெள்ளையும் சேர்ந்த வரிரியிலான ஆடைகள், அவர்கள் பயன்படுத்திய உணவருந்தும் பாத்திரங்கள், அவர்களின் புகைப்படங்கள் என்பவற்றோடு அவர்களை வதைப்படுத்திக் கொன்றுபோட்ட பல நாசிப் படைத் தளபதிகளின் புகைப்படங்களும் அங்கு மிக நேர்த்தியாக காட்சிப்படுத்தப்பட்டிருந்தது. இவற்றைத் தனது காணொளிகளில் காண்பித்த டேவிட் அவர்கள், எமதினத்திற்கு நடந்த அக்கிரமங்கள், அழிவுகள் குறித்து நாம் பேசுவதை எம்மில் ஒரு பகுதியினரே தடுத்து வருவதையும், சிங்கள இனத்தோடு நாம் ஒன்றித்து வாழ்வதை இவ்வாறான "பழங்கதைகள் பேசுதல்" எனும் முயற்சி தடுத்துவிடும் என்றும், அது இனவொற்றுமையினைக் குலைத்துவிடும் என்றும் காரணம் கூறிவ‌ருவதையும் குறிப்பிட்டு அங்கலாய்த்திருந்தார். யூதர்கள் தமக்கு நடந்த அழிவினைத் தொடர்ச்சியாகப் பேசியும், காட்சிப்படுத்தியும், ஆவணப்படுத்தியும் வரும் நிலையில், நாமோ எம்மீது நடத்தப்பட்ட அழிவுகளை வேண்டுமென்றே மறுத்தோ அல்லது மறைத்தோ வாழத் தலைப்படுதல் ஈற்றில் எமது இருப்பிற்கே முடிவாய் அமைந்துவிடும் என்பதும் அவரது ஆதங்கமாக இருந்தது. இக்காணொளிகளின் இறுதிப்பகுதியில் தமிழ் மக்களை நோக்ல்கி வேண்டுகோள் ஒன்றினை அவர் முன்வைத்தார். அதுதான் நாம் அனைவரும், தனிப்பட்ட ரீதியிலோ அல்லது ஒரு குழுவாகவோ எம்மீது நடத்தப்பட்ட அனைத்து அக்கிரமங்களையும் ஏதோ ஒரு வகையில், ஏதோ ஒருவடிவில் கட்டாயம் ஆவணப்படுத்தியோ அல்லது காட்சிப்படுத்தியோ தீரவேண்டும் என்பது. அவரது காணொளிகளைப் பார்த்தபோது அவர் கூறுவது எனக்குச் சரியென்றே பட்டது. ஏனென்றால், எம்மீது நடத்தப்பட்ட அநீதிகளை நாமே பேசவோ அல்லது காட்சிப்படுத்தவோ மறுப்பின், வேறு யார்தான் இதைச் செய்யப்போகிறார் எனும் கேள்வி எனக்குள் வந்தது. ஆகவேதான் எம்மீது நடத்தப்பட்ட அக்கிரமங்கள் தொடர்பான எனது அனுபவங்களை இங்கு பதிவிடலாம் என்று நினைக்கிறேன். இத்தளத்தில் இருக்கும் ஏனையவர்களும் தமது தனிப்பட்ட அனுபவங்களை இங்கு பகிருமாறும் வேண்டிக்கொள்கிறேன்.
  15. அத தெரண கருத்துப்படங்கள்.
  16. 2026 ஏப்ரலில் வரும். யாழ்களத்தில் வந்த முதல் போட்டி 2006 ஏப்ரலில் நடைபெற்ற தமிழக சட்டசபை தேர்தல். 20 வருடங்களாக யாழ்கள போட்டிகள் நடைபெற்று வருகின்றது
  17. @Eppothum Thamizhan தலைவா நீங்கள் இல்லாமலா? கடைசி ஆளாக குதிப்பது நீங்கள் தான். இம்முறை கிருபனுக்கு வேலை கூடுதலாக இருப்பதால் நேரத்தோடு பதிந்தால் அவருக்கு கொஞ்சம் சுலபமாக இருக்கும்.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.