Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Leaderboard

  1. தமிழ் சிறி

    கருத்துக்கள உறவுகள்
    11
    Points
    88756
    Posts
  2. ஈழப்பிரியன்

    கருத்துக்கள உறவுகள்
    6
    Points
    20318
    Posts
  3. suvy

    கருத்துக்கள உறவுகள்
    6
    Points
    33754
    Posts
  4. Justin

    கருத்துக்கள உறவுகள்
    5
    Points
    7134
    Posts

Popular Content

Showing content with the highest reputation on 02/03/26 in all areas

  1. புலிகள் இல்லாமல் போனது சம்பந்தருக்கு ஏன் கவலையைக் கொடுக்க வேண்டுமென்று எதிர்பார்க்கிறீர்கள்? சம்பந்தர் போன்ற ஆயுத வழியை எட்ட நின்று பார்த்த அரசியல் வாதிகளும், சில சமயங்களில் எட்டி நின்றாலும் சுடப் பட்ட சிவ சிதம்பரம் போன்றவர்களும் புலிகள் இல்லாமல் போனால் ஒப்பீட்டளவில் நல்லதென நினைத்திருப்பர் தான். இந்த நினைப்பின் தோற்றுவாய் சம்பந்தரிடம் இல்லை, அமிர், யோகேஸ்வரன் சுடப் பட்ட காலத்தில் இருக்கிறது. இதன் பிறகு எதை எதிர்பார்த்து, யார் சம்பந்தருக்கு தொலை பேசி எடுத்தார்களாம்?
  2. இன்னொரு விடயம். மேலே எழுதபட்டுள்ளது மிக தந்திரமாக தனது அரசியல் நிலைப்பாட்டுக்கு ஏதுவாக வரலாற்றை திரிக்கும் முயற்சி. புலிகள் அழிய முன்னோ, அழிந்து கொண்டிருக்கும் போதோ…புலிகள் அழிந்தால் தீர்வு கிடைக்கும் என சம்பந்தர் கூறியதில்லை. சங்கரி, டக்லஸ், கருணாதான் அப்படி கூறியவர்கள். சம்பந்தர் சொன்னது… புலிகள் அழிந்த பின், அவர்களின் அழிவுக்கு பின் தீர்வை தருவோம் என சொன்னோர்… சொன்னபடி தந்தால்…புலிகளின் அழிவை ஒரு நல்ல விடயமாக கருதலாம் என்பதே. இரெண்டுக்கும் பாரிய வித்தியாசம் உண்டு. இந்தியாவில் போய் போனை ஆப் பண்ணி போட்டு குப்புற படுத்தது - இதை அத்தனை எம்பிகளும் செய்தார்கள். சிலர் இந்தியாவில், சிலர் இலண்டனில், ஈழவேந்தன் கனடாவில், சிலர் கொழும்பில்…. குப்புறபடுத்தார்கள்…எங்கே என்பதுதான் வித்தியாசம். பொன்னரும், சந்திரநேருவும், குதிரை கஜனும்…போரை நிறுத்த சொல்லி ஜெனிவாவில் தீக்குளிக்கவும் இல்லை, இலண்டனில் சாகும் வரை உண்ணாவிரதம் இருக்கவும் இல்லை. இவ்வளவு ஏன், முடிவு நெருங்கியதை அறிந்த பின், புலிகளின் தளபதிகள் கூட குடும்பங்களை ஆமி, நேவியிடம் அனுப்பி வைத்தனர்.
  3. பையா ஏன் இவ்வளசவு சுணக்கம்? கொப்பியடிக்க ஆளில்லாமல் செம்பாட்டானை பிடிக்க வேண்டியாதாக இருக்கிறது.
  4. இதுவரை போட்டியில் கலந்து கொண்ட 13 பேரின் பதில்கள் தரவேற்றப்பட்டுள்ளது. வெற்றிபெற வாழ்த்துக்கள்! செம்பாட்டான் ஏராளன் வசீ புலவர் சுவைப்பிரியன் அல்வாயன் ஈழப்பிரியன் நியூ பலன்ஸ் வாத்தியார் கறுப்பி வாதவூரான் வீரப் பையன்26 சுவி
  5. இலங்கை இந்தியாவில் வெள்ளைக்காரன் தேயிலையை அறிமுகப்படுத்தி ஓரிரு வருடங்கள் இலவசமாக சந்திக்கு சந்தி கொடுத்தார்கள். பெரும்பாலவர்கள் அடிமையாகி விட்டார்கள் என்று தெரிந்ததும் பணத்தைக் கொடுத்து தேயிலையை வாங்கி நீயே வைத்துக் குடி என்றான். இப்போதும் என்னவிலை என்றாலும் வாங்கி குடிக்கிறோம்.
  6. எல்லாம் அர‌சிய‌ல் சிங்க‌ள‌ அர‌சிய‌ல் வாதிக‌ள் 2004ம் ஆண்டு முர‌ளித‌ர‌னுக்கு எதிராக‌ அறிக்கை விட்ட‌வை முர‌ளி வ‌ன்னிக்கு வ‌ந்து அங்கு உள்ள‌ த‌மிழ் ம‌க்க‌ளை ச‌ந்திச்சு விட்டு ஊட‌க‌த்துக்கு பேட்டி கொடுக்க‌ சிங்க‌ள‌ம் போர் கொடி முர‌ளித‌ர‌னுக்கு எதிராக‌ தூக்கின‌வை த‌மிழ‌ன் என்ர‌ உன‌ர்வு இருந்த‌ ப‌டியால் தான் த‌மிழ் நாட்டு பெண்ண‌ திரும‌ண‌ம் செய்தார்............... 2009க்கு பிட்பாடு முர‌ளித‌ர‌னின் சில‌ ந‌ட‌வ‌டிக்கைக‌ள் என‌க்கு பிடிக்க‌ வில்லை..............ம‌கிந்தா கும்ப‌ல் இவ‌ரை வைத்து எதை சொல்ல‌ விரும்புகின‌மோ அதை முர‌ளித‌ர‌ன் ச‌ரியாக‌ செய்தார்............அதோட‌ சிறு வெறுப்பு இவ‌ர் மேல் ஆனால் இப்போது வாய் திற‌ப்ப‌தில்லை தானும் த‌ன்ட‌ பாடும்.........................
  7. அந்த‌க் கால‌த்தில் அடிச்சுப் பிடிச்சு பின‌லுக்கு வ‌ந்து ப‌ல‌ வாட்டி தோத்த‌ அணி என்றால் அது இல‌ங்கை அணியாக‌த் தான் இருக்க‌ முடியும் ப‌ல‌ வாட்டி ஆசிய‌ க‌ப் தூக்கி விட்டின‌ம் இர‌ண்டு முறை உல‌க‌ கோப்பை வென்று விட்டின‌ம்................ ப‌ழைய‌ இல‌ங்கை அணிய‌ மாதிரி இனி பார்க்க‌ முடியாது.............ப‌ல‌ ஜாம்பவாங்க‌ளின் ஓய்வோட‌ இல‌ங்கை அணி ப‌டுத்து விட்ட‌து................. இப்ப‌த்த‌ இல‌ங்கை வீர‌ர்க‌ள் ச‌ரியான‌ க‌ட்டை உய‌ர‌ம் இல்லை...............அனுப‌வ‌மும் சுத்த‌மாய் இல்லை...............இன்று இங்லாந் இல‌ங்கையை சின்ன‌ ஸ்கோர் அடிச்சே ம‌ட‌க்கி விட்டின‌ம்..............இந்த‌ உல‌க‌ கோப்பையில் இவ‌ர்க‌ள் ப‌ல‌மான‌ அணிக‌ளிட‌ம் அடி வேண்டுவ‌து உறுதி............... ம‌லை போல் இருந்த‌ அணி இப்போது ப‌ல்லு இல்லாத‌ பாம்பு போல் ஆகி விட்ட‌து ஹா ஹா............... மார்கேட்டில் கீரை விக்க‌ விட்டால் தான் இவ‌ங்க‌ள் ஒழுங்காய் விளையாடுவாங்க‌ள்..................
  8. சிறீ லங்காவின் முன்னாள் முதல் பெண்மணிக்கு இப்படியொரு விசாரணையா?
  9. கிருபன் வெற்றி பெற வாழ்த்துகள் ........! 😀
  10. வாருங்கள் கிருபன். போட்டியில் கலந்துகிட்டதில் மகிழ்ச்சி.
  11. இன்னும் மூன்று நாட்களே உள்ளதால் போட்டியில் கலந்துகொள்ள ஆர்வம் உள்ளவர்கள் விரைவில் உங்கள் பதில்களைத் தாருங்கள்.. @நியாயம் , @தமிழ் சிறி ஐயா, @குமாரசாமி ஐயா, @நிலாமதி அக்கா, @ரசோதரன் , @நந்தன் , @Eppothum Thamizhan , @கந்தப்பு , @நீர்வேலியான் , @Ahasthiyan , @goshan_che , @பிரபா , @theeya
  12. 22 ஆசனங்கள் கூட்டமைப்பிற்குக் கிடைத்த போது "பின் கதவால்" (தேசியப் பட்டியலின் இன்னொரு பெயர்!) புலிகளால் உள்ளே கொண்டு வரப் பட்டவர் தற்போது அமரராகி விட்ட ஈழவேந்தன். சம்பந்தர் நாட்டிலேயே இருந்து செய்யக் கூடிய விடயங்களைச் செய்து கொண்டிருந்தார், இதற்குப் பயன் இருந்ததா இல்லையா என்பது வேறான ஒரு விவாதம். அமரர் ஈழவேந்தன், பா. உக்களுக்கான விசேட சலுகைகளைப் பாவித்து உலகம் சுற்றினார். "உலகம் சுற்றும், விடு முறையில் நிற்கும் பா.உவுக்கு விடுதி எதற்கு?" என்று சிங்கள அரசு பறித்துக் கொள்ள முயன்ற போது விடுதிக்காகவும் போராடினார். பின்னர் "அளவுக்கதிகமாக விடுமுறை எடுத்துக் கொண்டார்" என்று பதவியைப் பறித்த போது ஈழவேந்தன் கனடாவில் செற்றிலாகி விட்டிருந்தார். சம்பந்தன் காலமாகிய திகதிக்கு அண்மையாக இவரும் காலமானார். "சம்பந்தர் இறந்தது நல்லது" எனக் கொண்டாடிய புலம் வாழ் தேசிய வீரர்கள் பலர் ஈழவேந்தன் கனடாவில் பரத நாட்டிய அரங்கேற்றங்களில் ஆற்றிய வீராவேச உரைகள் காரணமாக அவரைப் போற்றிப் புகழ்ந்தனர். எங்கள் ஆட்களுக்கு, பேச்சுத் தான் முக்கியம்! வாய் மட்டும் இருந்தால் எங்கள் புலத் தமிழர்கள் பலரைப் பேய்க்காட்டலாம் என்பதற்கு சிறந்த உதாரணம் இந்த சம்பந்தர் ஈழவேந்தன் ஒப்பீடு!
  13. அத தெரண கருத்துப்படங்கள்.
  14. புரியுது உங்க‌ளின் வேத‌னை................அர்ச்சுனாவால‌ முர‌ளித‌ர‌ன் த‌ப்பினார் இல்லையேன் அவ‌ரும் எப்ப‌வோ காணாம‌ல் போய் இருப்பார்........................
  15. அரசியலில் இருந்து பாதுகாப்பு விளையாட்டு என்று எதுவானாலும் தமிழர்களைக் கண்டுபிடிப்பது ரொம்ப கஸ்டமாக உள்ளது. அப்போதிருந்து இப்போது வரைக்கும் விளையாட்டிலேயே இலங்கைக்கு எதிராக ஆடும் அணிக்கே ஆதரவாக குரல் கொடுக்க மனம் வேண்டுகிறது.
  16. @goshan_che இப்படி ஆதாரம் கேட்டு ரோதனை பண்ணக் கூடாது. நான் பாடினால் அது கவிதை. நான் வரைந்தால் அது ஓவியம். அப்படி ஏற்று கொள்ளப் பழகவேணும். அதுவே நல்ல பிள்ளைக்கு அழகு. நாங்களும் அப்படி தான் வளர்ந்தனாங்கள். அது தான் எங்க மரபு, பாரம்பரியம், கலாசாரம்.
  17. பகிடியான சிகப்பு அட்டை தருணங்கள் .......! 😂
  18. ''மத்தியவங்கியின் ஆளுநராக என்னை நியமித்தமை இன்னொருவர் கூறியே எனக்கு தெரியும்'' #indrajitcoomaraswamy #formergovernor #centralbank #powermoves #srilanka #lka
  19. பயிற்சியில் மட்டும்தான் கனடா தோற்கும் . ....... பரீட்சையில் ஆட்டமே வேற லெவல் .......!
  20. pdSonetsoruaiuhm1:m05uf38156t26i00u4e8nt7235 t 4a9,v72frh9ij · சிரிச்சு... வயிறு வலிச்சா நான் பொறுப்பல்ல... சொர்க்கத்துக்கு வருவோரின் கூட்டம் நாளுக்கு நாள் அதிகமாகிக் கொண்டே போனது. கடவுள் உடனே ஒரு தேவதையை அழைத்து, "நீ என்ன பண்ணுவியோ தெரியாது. ஆனா இனிமே சொர்க்கத்துக்கு வரவங்க கூட்டம் பாதியாகணும்". என்று சொல்லி விட்டுப் போய் விட்டார். தேவதையும் உட்கார்ந்து யோசித்தது. அதற்கு ஒரு அருமையான யோசனை வந்தது. அதாவது, சொர்க்கத்துக்குள் நுழைய நினைப்போரிடம் அவர்கள் எப்படி இறந்து போனார்கள் என்று கேட்க வேண்டும். யாருடைய இறந்த விதம் வித்தியாசமாக இருக்கின்றதோ, அவர்களை மட்டும் சொர்க்கத்திற்குள் அனுமதிக்க வேண்டும். தேவதைக்கு இந்த யோசனை மிகவும் பிடித்துப் போக , உடனேயே அதை செயல்படுத்த முடிவெடுத்தது. அப்போது இறந்து போன ஒருத்தன் உள்ளே நுழையும் போது, அவனிடம் சொர்க்கத்தின் புதிய விதியை தேவதை கூற, அவனும் அவன் இறந்த கதையை கூற ஆரம்பித்தான். "எனக்கு கல்யாணம் ஆகி 5 வருசம் ஆகுவது. குழந்தைங்க இல்ல. என் பொண்டாட்டி எனக்கு துரோகம் பண்றானு எனக்கு ஒரு நாள் தோணிச்சு. நான் ஒரு அபார்ட்மெண்ட்ல குடியிருக்கேன். என்னோட வீடு 5 ஆவது மாடில இருக்கு. ஒரு நாள் வேலைக்கு போறதா பொய் சொல்லிட்டு, பாதியிலேயே வீட்டுக்கு வந்துட்டேன். என் பொண்டாட்டி என்னைய எதிர்பாக்கல. என்னைப் பாத்ததும், 'ஏதாச்சும் மறந்து விட்டிட்டு போய்ட்டிங்களா?' ன்னு கேட்டா. நான் அவளுக்கு பதில் சொல்லாம வீடு பூரா தேடிப் பாத்தேன். ஆனா ஒருத்தனையும் காணோம். கடைசியா பால்கனிய (BALCONY) போய் பாத்தேன். நான் தேடி வந்த பன்னாடை அங்க பால்கனி க்ரில்ல புடிச்சி தொங்கிகிட்டு இருந்தான். எனக்கு ரொம்பக் கோபம் வந்துச்சி. அவன் வெரல்ல ஓங்கி ஓங்கி மிதிச்சேன். வலி தாங்காம அவன் பிடிய விட்டுட்டு கீழ விழுந்துட்டான். நான் கீழ எட்டி பாத்தேன். அந்த நாய் சாவாம ஒரு புதர் மேல விழுந்து கெடந்தான். நான் உடனே கிச்சனுக்குள்ள போய், பிரிட்ஜை இழுத்துகிட்டு வந்து, பால்கனி மேல கஷ்டப்பட்டு தூக்கி வச்சு, அந்த பிரிட்ஜை கீழ விழுந்து கெடந்த அவன் மேல போட்டு, அவன நசுக்கி கொன்னுட்டேன். இதெல்லாம் செஞ்ச பின்னாடி எனக்கு சந்தோஷத்துல நெஞ்சு வலி வந்து, அங்கேயே விழுந்து செத்துட்டேன்." அவன் கதையை கூறி முடித்ததும், தேவதை புன் சிரிப்புடன், "நீ உள்ளே போகலாம்". என்றது. அவன் போன சற்று நேரம் கழித்து, இன்னொருவன் வந்தான். அவனிடமும் தேவதை புது விதியை பற்றி கூற, அவன் அவனுடைய கதையை கூற ஆரம்பித்தான். "நான் ஒரு அபார்ட்மெண்ட்ல 6 ஆவது மாடில குடியிருக்கேன். நான் எப்பவும் ப்ரீயா இருந்தா பால்கனில யோகா பண்றது வழக்கம். அன்னைக்கு அப்படித்தான் தலைகீழ நின்னுக்கிட்டிருந்தேன். திடீர்னு பேலன்ஸ் மிஸ் ஆகி கீழ விழுந்துட்டேன். நல்ல வேளையா 5 ஆவது வீட்டு பால்கனி கிரில் கம்பிய பிடிச்சுக்கிட்டேன். அந்த வீட்டுல ஒரு புருஷனும் அவனோட பொண்டாட்டியும் மட்டும் இருக்காங்க. திடீர்ன்னு வெளிய வந்த அந்தம்மாவோட புருஷன், பால்கனில தொங்கிகிட்டு இருந்த என் கைய மிதிக்க ஆரம்பிச்சான். நான் வலி தாங்காம கீழ விழுந்துட்டேன். நல்ல வேளையா நான் விழுந்த எடத்துல ஒரு புதர் இருந்ததால நான் சாகல. ஆனா என்னோட முதுகு ஒடஞ்சி போச்சி. அந்தம்மாவோட புருஷனுக்கு என் மேல அப்படி என்னதான் கோபம்னு எனக்குத் தெரியல. கொஞ்ச நேரத்துல மேல இருந்து ஒரு பிரிட்ஜ்யை என் மேல தள்ளி வுட்டு என்ன கொன்னுட்டான்". அவன் பேசி முடித்ததும், தேவதைக்கு சிரிப்பு பொத்துக் கொண்டு வந்தது. கஷ்டபட்டு அடக்கிக் கொண்டு அவனை உள்ளே போக அனுமதியளித்தது. மூன்றாவதாக ஒருத்தன் வந்தான். அவனிடமும் தேவதை புது விதியை பற்றி கூறியது. அவனும் அவன் இறந்த கதையை கூற ஆரம்பித்தான். "எனக்கும் பக்கத்து தெருவுல ஒரு அபார்ட்மெண்ட்ல குடியிருக்குற ஒருத்தனோட பொண்டாட்டிக்கும் இடையில 2 வருஷமா கள்ள தொடர்பு இருந்துச்சி. அவ புருஷன் வேலைக்கு போனதும், அவ எனக்கு போன் பண்ணுவா. ஒடனே நானும் அவ வீட்டுக்கு போய்டுவேன். அன்னைக்கும் அப்படித்தான் அவ எனக்கு போன் பண்ணுனா. நானும் உடனே கெளம்பி அவ வீட்டுக்கு போனேன். ஆனா கொஞ்ச நேரத்திலேயே அவ புருஷன் வந்து கதவ தட்ட ஆரம்பிச்சான். அவ உடனே என்ன பிரிட்ஜ்க்குள்ள வச்சு பூட்டிட்டு கதவ தெறக்க போனா. நான் பிரிட்ஜ்க்குள்ளேயே பயந்து போய் உக்காந்திருந்தேன். அப்புறம் என்னாச்சுன்னா...?
  21. நியுசிலாந்து அணி இந்தியணியினை ஒருநாள் போட்டி தொடரினை வென்றதற்கு பின்னர் ரி 20 போட்டியில் நியுசிலாந்து அணியினை இந்தியணி துவம்சம் செய்திருந்தது, இந்த இந்தியணியினை பார்க்கும் போது நிச்சயமாக இந்தியாவிற்குத்தான் கோப்பை போல இருக்கின்றது, நான் வளமை போல இந்தியணியினை தெரிவு செய்யவில்லை அந்த அதிர்ஸ்டமும் இந்தியணிக்கு சாதகமாக உள்ளது.
  22. பாபர் மிக மெதுவாக இந்த தொடர் முழுவதும் ஆடினார், குறித்த போட்டியில் பவர் சேர்ச் இன் முதலாவது பந்தினை தான் எதிர்கொள்வதற்காக சிமித் ஓட்டத்தினை மறுத்து விட்டார் அதனால் ஏற்பட்ட மனஸ்தாபம். சிமித் சிறப்பாக இந்த போட்டி தொடரில் விளையாடினார் ஏனோ அவுஸ்ரேலிய அணியில் இடம் பிடிக்கமுடியவில்லை. புதிய தலைமுறை ரி20 வீரர்கள் முதலாவது பந்திலேயே அடித்தாடுகிறார்கள் பாகிஸ்தான் அணியினர் சிலர் ஆடியிருந்தார்கள் பெரிதாக ஒருவரும் சோபிக்கவில்லை, ஸாகின் சா அப்ரிடி கூட ஆரம்பத்தில் பந்து வீச்சில் தடுமாறினார் பின்னர் சிறப்பாக செயற்பட்டார், சிறப்பாக செயற்படவேண்டும் என நினைத்து மேலதிக அழுத்தத்தினை தாமாக உருவாக்கினார்களா என தெரியவில்லை. அந்த போட்டியின் பின்னர் சிட்னி சிக்ஸர் அணித்தலைவர் கூறினார் தாம் கலாச்சார இடைவெளியினை புரிந்து கொண்டோம் எனவும், பாபரினை பற்றி நல்ல விதமாகவே கூறினார், அதனை போலவே சிமித்தும் கூறியிருந்தார், பாபரின் ஈகோவினை பாதித்திருக்க கூடும் அதற்கான எதிர் வினையினை இந்திய யுரிப்கள் மிகைப்படுத்தியிருந்தார்கள் என நினைக்கிறேன். பாகிஸ்தான் வீரர்கள் பாபர் உள்ளடங்கலாக களத்தடுப்பில் மிக உற்சாகமாக இருந்தார்கள்.
  23. பரவாயில்லை. இவரே ரம்புக்கு திரும்ப கொடுத்திடுவார்.
  24. பெரும்பான்மை பெளத்த சிங்களவர்கள் கூட இந்த தமிழ்தேசியம் தொடர்பான பீதியினாலேயே தமிழ் மக்களின் மீதான இன அடக்குமுறையாக சுமந்திரன் கூற முற்படுகிறார், இது எந்தளவிற்கு உண்மை என தெரியவில்லை, இலங்கையில் உள்ள அனைத்து சிறுபான்மை மக்களும் நேரடியான அடக்குமுறைக்குள்ளாக்கப்படுகின்றவர்களாகவே இருக்கின்றார்கள். அதிகார பரவலாக்கமோ அரசியல் சட்டமைப்பு சீர்திருத்தமோ நாட்டை பிரிக்கும் என நினைப்பது ஒரு முட்டாள்தனம் அதற்கான சூழலை இந்த அடக்குமுறைகளாலேயே உருவாக்குகிறார்கள். தமிழ் தேசியம் என்பது தவிர்க்க முடியாதது என்பது போலவே உணருகின்றேன், ரே டாலியோ இன் மாறுகின்ற உலக ஒழுங்கினை கையாள்வது எனும் புத்தகத்தில் கூறியுள்ள பண்புகளினடிப்படையில் தமிழ் தேசியத்தின் பண்புகள் பல இருக்கின்றது அதனால் எதிர்காலத்தில் அவ்வாறான ஒரு நிலை ஏற்படலாம். அது ஒரு வெறும் நிகழ்தகவு போன்ற விடயம்.
  25. தமிழ் தேசியம் தவிர்க்க முடியாத உண்மை, அந்த யதார்த்த புரிதல் எனக்கும் உள்ளது.
  26. வியாஸ்காந்த் மட்டும்தான் இப்போ இருக்கிற ஒரே ஆள். ஆனால் அவரின் பெறுபேறுகள் அவ்வளவாய் இல்லை. அவர் இலங்கை அணிக்காக இரு போட்டிகளில் சமீபத்தில் விளையாடியிருந்தார். அவரை அணியில் சேர்க்காதது ஆச்சரியமில்லை. தற்போது நடைபெற்றுவரும் 19 வயதுக்குட்பட்டோருக்கான உலகக்கிண்ணப் போட்டிகளில், மூன்று தமிழ் வீரர்கள் ஆடுகிறார்கள். அவர்களுக்கு நல்ல எதிர்காலம் உள்ளது. பார்ப்போம்.
  27. அது திறந்தால்தானே?அதுக்கிடையில் எத்தனை தேர்தலை வைக்க வேண்டும். அந்த மாயமானைக்காட்டித்தான் வடக்கின் வாக்குகளை அள்ள வேண்டும். ஆகா பையன் வந்துட்டான்யா! வந்துட்டான்! இனி இந்தத்திரி பட்டாசுதான்!
  28. இறுதியில் கண் விழிக்கும் போது முன்னே நிற்கும் எருமை இருக்கிறதே? அது தான் cherry on the top! சான்சே இல்லை😂!
  29. அத விடுங்க ....... தப்பு நடப்பது சாதாரணம் கந்தப்பு ........ நீங்கள் சுட்டிக்காட்டியதால் தான் நானும் கவனித்தேன் அவ்வளவுதான் . .......இல்லையென்றால் கிருபன் ஏதோ தான்தான் கண்டுபிடித்ததுபோல் பெரிய பில்டப் குடுத்திருப்பார் .......! 😂
  30. இது புதிய உலக ஒழுங்கின் பிரகாரம் இல்லை என நினைக்கிறேன். எனது நண்பர் ஒருவர் இருந்தார் (இப்போதும் இருக்கிறார் என நம்புகிறேன்), அவர் பேச்சுக்கள் அவரரது தோற்றத்திற்கும் எதிரும் புதிருமாக இருக்கும், அவர் 90 களின் பிற்பகுதிகளில் கூறினார் புலிகள் இல்லாவிட்டால் இலங்கை (அவர் கூறிய வார்த்தையினை அப்படியே கூற முடியாது) பாலியல் தொழில் செய்பவரது வீட்டில் இருக்கும் வெத்திலை பெட்டி போன்றது என்றார். அது தற்போது கண்முன்னால் நடைமுறையாகி நிற்கின்றததனை பார்க்கும் போது ஆச்சரியமாக இருக்கின்றது. 4 வகையான போர் விளைவுகளை கொள்கை வகுப்பாளர்கள் எதிர்கொள்கிறார்கள் என கூறுகிறார்கள். அரசியல் ரீதியான வெற்றி போர் முடக்கம் வெற்றி மோசமான விளைவுகளுடன் அற்புதமான வெற்றி புலிகளை தோற்கடித்ததன் மூலம் இலங்கை பெற்ற வெற்றி 3 ஆவது வகை அதன் பின்விளைவுகள் தற்போது புலிகள் இல்லாத நிலை ஏற்படுத்திய வெற்றிடம் இலங்கையில் பல சக்திகள் தலையீடு உறுதி செய்யப்பட்டுள்ளது (இது ஒரு ஆச்சரியமான பலச்சமனிலையின் பண்பாக இருக்கின்றது). இலங்கை இதிலிருந்து என்றும் வெளியேற முடியாது (இலங்கை அரசியல் பொருளாதார ரீதியாக பிச்சைக்கார நிலையிலிருந்து). இந்த நிலையினை இலங்கை மாற்றமுடியுமா? முடியும்! ஆனால் சிறுபான்மை மக்களின் உரிமைகள் மதிப்பளிக்கப்பட்டு உரிமைகள் வழங்கி சட்ட பாதுகாப்பு வழங்கப்பட்டு ஒரே சக்தியான நாடாக கட்டியமைத்தால் மட்டுமே சாத்தியம், மகா வம்ச சிங்கள மேலாதிக்க எண்ணத்தில் இருக்கும் இலங்கையால் அது சாத்தியமல்ல. இந்தியாவினை பொறுத்தவரை இலங்கை ஒரு நேர வெடிகுண்டு (உடைந்த அயல் தேசம்) எந்த ஒரு நாடும் தனது அயல் நாடு ஒரு உடைந்த தேசமாக இருக்க விரும்பாது அதனால் அதன் பாதுகாப்பிற்கு அச்சுறுத்தல் எப்போதும் இருக்கும். அதனால் ஏதோ ஒரு காலகட்டத்தில் தமிழ் மக்களின் பிரச்சினை தீர்விற்கு இந்தியா கடும் அழுத்தத்தினை இலங்கை மேல் பயன்படுத்தியே ஆக வேண்டிய நிலையினை தவிர்க்கவே முடியாது. இங்கு மகாவம்ச சிங்கள மேலாதிக்கத்தின் தோல்வி (ஆனால் இலங்கையின் தோல்வி எப்போதோ நடந்து விட்டது அதன் பெறுபேறுகள்தான் தற்போது நிகழ்கிறது) உறுதிப்படுத்தாத முறையில் (சுய நிர்ணயம், கூட்டாட்சி போன்றவற்ற வாசகங்களை தவிர்த்து ஆனால் அதே உரிமைகளை) அதிகாரப்பகிர்வு எனும் பதத்திற்கு தமிழர்கள் வரவேண்டும், அதனால் தமிழ் தேசியம் என கூறுவதனை தவிர்ப்பதன் மூலம் (மகா வம்ச சிங்கள மேலாதிக்கத்தின் முகத்தினை காக்க) பிரச்சினையினை இலகுவாக தீர்க்கலாம் என கருதுகிறேன்.
  31. தனிமையும் துணிச்சலும் January 31, 2026 துணிச்சலை இரண்டாகப் பகுக்கலாம் என்று நேற்று என் மாணவர்களிடம் சொல்லிக் கொண்டிருந்தேன். 'புறத்துணிச்சல், அகத்துணிச்சல். புறத்துணிச்சலே வன்முறை, தாக்குதல், உணர்ச்சியால் தூண்டப்பட்டு தன் உடலால் ஒரு வேலையைச் செய்தல். அகத்துணிச்சல் என்பது புற உலகிற்குப் பணியாமல் ஒருவர் தான் நம்பும் விழுமியத்துக்காக, நம்பிக்கைக்காக ஒன்றைச் செய்வது. இரண்டாவதுதான் இருப்பதிலேயே கடினம். 99% ஜனங்களால் அகத்துணிச்சலைக் காட்ட முடியாது.' இதைக் கேட்ட ஒரு மாணவர் அகத்துணிச்சல் ஏன் கடினமாகிறது என்று கேட்டார். நான் அவரிடம் சொன்னேன், "நாம் ஒரு குழுவுக்குள் இருக்கையில் நம் துணிச்சல் குழுவின் துணிச்சல்தான். குழு சொல்வதை, செய்வதை நாமும் அப்படியே செய்வோம். இத்துணிச்சலே அச்சத்தினால் விளைவதுதான். ஆக அது துணிச்சலே அல்ல. துணிச்சலைச் சரியாக விளக்குவதானால் அகத்தெளிவுடன் குழுவுக்கு எதிராகச் செயல்படுவதுதான். இதைச் செய்தால் நாம் வெளியேற்றப்படுவோம் எனும் அச்சத்தினாலே நாம் பதுங்கிக் கொள்கிறோம்." இதைச் சொல்லும்போதே குழுவுடன் இருப்பதன் பயன்கள் என்ன என்றும் நான் யோசித்துக் கொண்டிருந்தேன். குழுவுடன் இணங்குவது நமக்கான பல பிரச்சினைகளை தன்னிலையிலே சரி பண்ணிவிடும். எழுத்தாளர்களை, வாசகர்களைப் பாருங்கள். கட்டுப்பெட்டியான குழுக்களில் அவர்கள் இணைந்ததுமே அவர்களுக்கு நூறு கைகள் முளைத்ததைப் போல உணர்வார்கள். ஆனால் போகப்போகத்தான் அது முழுக்க உண்மையல்ல என்று தோன்றும். ஒருநாள் தன் இரு கைகளுமே கட்டப்பட்டதாகத் தோன்றும். கடைசியில் தனக்குக் கையே இல்லையெனத் தோன்றும். அப்போது அதை ஏற்காமல் தனக்கு நூறு கைகள் உள்ளதாகக் கற்பனை பண்ணி அதை ஊருக்கும் நியாயப்படுத்தப் பார்ப்பார்கள். மகிழ்ச்சியாக, சுதந்திரமாக இருப்பதாக நடிப்பார்கள். மனிதனாக இருப்பதே தனியனாக இருப்பதுதான். தனியர்கள் பரஸ்பரம் அன்பு காட்டுகிறார்கள், ஒத்திசைகிறார்கள், உழைக்கிறார்கள் என்று கூறலாம். ஆனாலும் இதனூடே தான் தனக்காகவே இருப்பதாக நினைக்கிறார்கள். இந்த உள்முரணே மனித நிலை. குழு இதை அனுமதிப்பதில்லை. குழு ஒரு மனிதனை மீண்டும் விலங்கு நிலைக்குக் கொண்டு போவதாக சிலர் நம்பலாம். ஆனால் கூட்டு விலங்குகளுக்கு தன்னிலை குறித்த உணர்வு இருந்தால் கூட அவை மனிதனைப் போன்றே யோசிக்கும். அதனாலே விலங்குகள் இடையே சூழலுடனும் வேறு உயிர்களுடனும் கலந்து புது விலங்குகள் தோன்றியபடியே இருந்திருக்கின்றன. நாம் நம்புகிற குழுவென்பது மனிதக் கண்டுபிடிப்புதான் என நினைக்கிறேன். அது அச்சம், குற்றவுணர்வை அடிப்படையாகக் கொண்டும், அதை மறைத்து பொய்யாக மகிழ்வையும் கொண்டாட்டத்தையும் சாதனை உணர்வையும் சிருஷ்டிக்கும் தந்திரங்களைக் கொண்டது. இந்த முரண்தான் அதன் அடிப்படை. ஒவ்வொரு குழுவும் தனிமனிதனை நோக்கியே "உன்னை மேம்படுத்துவேன், விடுதலை செய்வேன்" என்று சொல்லியே ஆரம்பிக்கப்படுகிறது. "குழுவை வளர்ப்போம், அதற்காக உன்னைத் தியாகம் பண்ணு" என்று எக்குழுவும் கோருவதில்லை. ஆனால் அதில் இணைந்தபின் அது "உன்னைத் தியாகம் செய்" என்று கோருகிறது. அவனது மேம்பாட்டை மறுத்து, அதைக் குற்றமாக்குகிறது; அவனது சுதந்திரத்தைப் பறித்து, அதை ஒழுங்கீனமாக்குகிறது. இந்தப் பொய்மையைப் புரிந்துகொண்டு தனியாக நிற்க ஆரம்பத்திலேயே பழகுவது நல்லது. உள்ளே போய் மாட்டிக் கொண்டு பழகி வெளிவர இயலாமல் தவிப்பவர்கள் ஏராளம். இது ஒரு மனிதக் கண்டுபிடிப்பு என்பதால் இது மனிதனின் தன்னியல்பான பலவீனம் அல்ல. மனிதன் தன்னியல்பாகத் தனியாகவே சிந்தித்து தனக்காகவே முடிவுகளை எடுக்கிறான். குழுவுக்குள் இயங்கவே அவனுக்குப் பயிற்சி தேவை. அப்பயிற்சி இல்லாவிட்டாலே அவன் தன்னிலையில் உருப்படியாக இருப்பான். பரஸ்பரம் பாராட்டுவது, பொய் சொல்வது, அற்ப அனுகூலங்களைத் தாண்டி குழுவுக்குள் ஒன்றுமில்லை என்பதை அவன் புரிந்துகொண்டால் போதும். குழுவுடன் இருக்கையில் பல ஆயிரம் பேர்களின் பகுதியாக, பேராற்றலின் துளியாக இருப்பதாக உணர்வது ஒரு பிரமை. ஒரு சின்ன குண்டு வெடித்த சப்தம் கேட்டால் அது கலைந்து விடும். எந்த மனிதனும் ஒரு சத்தம் கேட்டால் கை வேறு, கால் வேறு, மூக்கு வேறு, வாய் வேறு எனப் பிரிவதில்லை. தனிமையைப் பழகுவது, அதை ரசிப்பது, அதை ஏற்பதுதான் முதற்பகுதி. தனித்து யோசித்து முடிவெடுப்பது அடுத்தது. அதைச் செயல்படுத்துவது அடுத்தது. அதுதான் தைரியம், துணிச்சல். அதன்பிறகு யாருடனும் இருக்கலாம், எவ்வளவு அன்பையும் கொட்டலாம். எவ்வளவு பெருங்கூட்டத்திலும் இருக்கலாம். ஆனால் தனியாகத்தான். இதுதான் துணிச்சலின் உச்சக் கட்டம். தனிமையின் நேர்மறையான, சிறப்பான விளக்கம் இதுதான். இது பௌதீகத் தனிமை அல்ல, இது அகத்தனிமை. அகத்தனிமையே தைரியம்தான். அகத்தனிமை இருந்தால் யார் என்ன சொன்னால், செய்தால் என்ன என்று துணிச்சலாக இருக்கலாம். https://www.writerabilash.in/2026/01/blog-post_31.html
  32. புலவர் இனிப் போய் விடுவார்! வேறெங்காவது மீண்டும் வருவார், கேள்வி கேட்டால் மீண்டும் போய் விடுவார்😎! "சிவப்பு, பச்சை, நாவல்" என்று கலர் அடித்து விளையாடும் "முதிர்ந்தும் வளராத" பெரிசுகளுக்குரியவை தான் இது போன்ற திரிகள்😂! உண்மையா, திரிப்பா என்று உரசிப் பார்த்து வாசகர்களுக்கு தகவல் தெளிவை உருவாக்கும் பதிவர்களுக்குரியவையல்ல!
  33. என்னய்யா, எங்கள் அரசியல் பனங்காய்கள் கடைசியில் புதிய உலக ஒழுங்கின் பிரகாரம் நாங்கள் இலங்கையில் இருந்து பிரிந்து உலக வல்லரசு இந்தியாவுடன் இணைந்திடலாம் என கதையை முடித்து வைக்க போகின்றார்களோ? எதற்கும் முப்பது நாட்களில் கிரமமாக கிந்தியில் கதைப்பது எப்படி என்கிற புத்தகத்திற்கு ஒரு ஓடர் கொடுப்போம்.
  34. நல்ல விசயம்.👍 ஓசியில பணியாரம் சுடுற கொம்பனியளுக்கு நல்ல சூடு.👁‍🗨 வணக்கம் யாழ்களம் 🙏
  35. தேர்தல் நேரம்… வோட்டுக்கு, பணம், குவாட்டர், பிரியாணி கொடுத்து வென்று.. மக்களை ஐந்து வருடம், கொத்தடிமையாக வைத்திருப்பதும், இதே வகைதான் தோழர். 😂
  36. @வீரப் பையன்26 ஓடி வாங்கோ, போட்டி தொடங்கப்போகிறது.
  37. Arun Kumar G · "நான் கேப்டன் ஆன பிறகு ஜெயிக்கற டீமை உருவாக்க நெனச்சேன். கிழக்கு , மேற்கு , வடக்கு, தெற்கு எந்த zoneஆ இருந்தாலும் அவனுக்கு experience குறைவா இருந்தாலும் flightல கொண்டு வந்து இறக்குங்க பாத்துக்கலாம் Skill இருந்தா போதும்னு சொன்னேன். Zaheer khan, Yuvi , Harbajan எல்லாரையும் டீம்ல சேர்த்தேன். Shewag லேட்டா வந்து இணைஞ்சார். அவரை Testல ஓபன் பண்ணவைக்கலாம்னு நெனச்சேன். 'நான் fail ஆகீட்டா என்ன பண்றது'ன்னு கேட்டார் அவர். நீ எத்தனை தடவை fail ஆனாலும் உன்னை நான் back பண்ணுவேன்னு சொன்னேன். Shewag ரொம்ப நல்லா set ஆனார் அந்த slotக்கு. இருந்தாலும் பேட்டிகள்ல 'எனக்கு Middle orderதான் comfortable னு சொல்லீட்டிருந்தார். நான் அதை கண்டுக்கல. ஒரு கேப்டனா ஆட்டத்தை மாத்தற capacity இருக்கற அதிரடி வீரர்களை எப்பவும் நான் எதிர்பாத்துட்டிருப்பேன். அப்படித்தான் 2004ல தோணிய பத்தி கேள்விப்பட்டேன். Challenger Trophy போட்டீல அவரை Opening இறக்கனேன். Netsல அடி பிரிச்சார். Wankadeல ஒரு போட்டீல 100 அடிச்சதும் இல்லாம Nehra ஓவர் பெரிய Six அடிச்சதை மறக்கமாட்டேன். Sachin, Shewag, நான்- 3 பேரும் இருந்தாலும் இன்னொரு Power hitterஆ தோணியை எதிர்பாத்தோம். அவர் ஒரு match winnerஆ இருப்பார்னு நம்பினோம். அவரை 2003 World cupல include பண்ண நெனச்சேன். ஆனா அந்த சமயத்துல அவர் Indian Railwaysல டிக்கெட் கலெக்டரா இருந்தார்னு கேள்விப்பட்டு ஆச்சர்யப்பட்டேன். ஆனா என் கணிப்பு தப்பாகல, தோணி பெரியாளா வந்தார். " GANGULY'S TEAM BUILT. 👏" (Excerpts from his Autobiography 'A Century Is Not Enough' ) Voir la traduction
  38. அமெரிக்காவில் கடும் பனிப்புயல்; 100க்கு மேற்பட்டோர் பலி! 03 Feb, 2026 | 04:51 PM அமெரிக்காவில் பெரும்பாலான பகுதிகளில் வீசும் கடும் பனிப்புயலால் 100க்கு மேற்பட்டோர் உயிரிழந்திருப்பதாக அந்நாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன. பல மாநிலங்களில் வீசிவரும் அதிகப்படியான பனிப்புயல் காரணமாக விபத்துக்கள் தொடர்ச்சியாக ஏற்பட்டு வருவதாகவும் பல இடங்கள் பலத்த சேதமடைந்துள்ளதாகவும் கடுமையான குளர் நிலைமை காணப்படுவதாகவும் கூறப்படுகிறது. வாகன விபத்துக்கள், பனிச்சரிவுகள், பனியை அள்ளி வீசுவதால் ஏற்படும் இதயம் தொடர்பான நோய்கள் முதலான காரணங்களால் இந்த உயிரிழப்புகள் பதிவாகியுள்ளன. மேலும், நியூயோர்க் நகர அதிகாரிகள் 14 பேர் குளிரில் உயிரிழந்ததாக தெரிவிக்கப்படுகிறபோதும், அவர்களது இறப்புக்கான காரணங்கள் இதுவரை உறுதிப்படுத்தப்படவில்லை என குறிப்பிடப்படுகிறது. அமெரிக்காவின் தென்கிழக்கு பகுதியை தாக்கிய இந்த பனிப்புயல் காரணமாக வட, தென் கரோலினா மாகாணங்கள் மற்றும் ஜோர்ஜியா மாகாணங்களில் கடும் பனிப்பொழிவு ஏற்பட்டுள்ளது. பனிக் குவியல்களால் மக்களின் அன்றாட வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளதாகவும் பல விமான சேவைகள் ரத்து செய்யப்பட்டுள்ளதாகவும் இன்னும் சில இடங்களில் மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளதாகவும் தகவல் தெரிவிக்கப்படுகிறது. https://www.virakesari.lk/article/237724

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.