Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Leaderboard

  1. goshan_che

    கருத்துக்கள உறவுகள்
    14
    Points
    19869
    Posts
  2. தமிழ் சிறி

    கருத்துக்கள உறவுகள்
    10
    Points
    89120
    Posts
  3. கிருபன்

    கருத்துக்கள உறவுகள்
    8
    Points
    39465
    Posts
  4. suvy

    கருத்துக்கள உறவுகள்
    6
    Points
    33926
    Posts

Popular Content

Showing content with the highest reputation on 02/23/26 in Posts

  1. பெயர்: அனுர வேறு பெயர்: அரவிந்த, தமிழருக்கு சேர் பழைய தொழில்: கச்சான் விற்பது புதிய தொழில்: கஞ்சா விற்பது அல்ல அப்போது: பொதுவுடமைவாதி தற்போது: தேசியவாதி எப்போதும்: இனவாதி நம்புவது: பெளத்தாகமத்தை நம்பாதது: தமிழர்களை, முஸ்லிம்களை பழைய நண்பர்கள்: சந்திரிக்கா, மகிந்த, பசில், கோட்டா, விமல், டக்லஸ், கருணா, பிள்ளையான் புதிய நண்பர்கள்: இந்தியா, அமெரிக்கா பழைய எதிரிகள்: இந்தியா, அமெரிக்கா புதிய எதிரி: டில்வின் சில்வா எப்போதும் எதிரிகள்: தமிழர் உரிமையை கோருவோர், ரணில் பிடித்த டிவி சீரியல்: சித்தி பிடிக்காத படம்: மேட்டுக்குடி ஆர்ப்பாட்டமாய் செய்வது: யாழில் நடைபயிற்சி அமசடக்கமாய் செய்வது: வவுனியாவில் குடியேற்றம் அகற்றபடக்கூடாது: தமிழர் நிலத்தில் - புத்தர் சிலை அகற்ற பட வேண்டியது: தமிழர் மனதில் -சமஸ்டி நீண்டகால சாதனை: வடக்கு கிழக்கு பிரித்தது குறுகிய கால சாதனை : வடக்கில் 3 எம்பிக்களை பிடித்தது ஶ்ரீதரன் மறக்க கூடாதது: பார் லைசனஸ் விசாரணையை தமிழர்கள் மறக்க வேண்டியது: போர்குற்ற விசாரணையை தியாகிகள்: ஆயுதம் ஏந்திய சிங்கள இளைஞர்கள். பயங்கரவாதிகள்: ஆயுதம் ஏந்திய தமிழ் இளைஞர்கள் இலங்கையில் இல்லாதது: டொலர் கையிருப்பு, இனப்பிரச்சனை இலங்கையில் இருப்பது: வர்க்க அடக்குமுறை எப்போதும் பெருமை: முள்ளிவாய்க்கால் அவலத்தை சேர்ந்து நடத்தியது ஒருபோதும் வருந்தாதது: முள்ளிவாய்க்கால் அவலத்தை சேர்ந்து நடத்தியது மிரட்டினால் பணிபவர்: ஶ்ரீதரன் மிரட்டாமலே பணிபவர்: சந்திரசேகரன் நிரந்தர தலைவலி: சிங்கள வாக்காளர் ஒரே நிம்மதி: தமிழ் அனுர காவடிகள்
  2. இன்றைய சுப்பர் 8 சுற்றுப் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடப் பணிக்கப்பட்ட மேற்கிந்தியத் தீவுகள் அணி, ஷிம்ரோன் ஹெட்மயரின் அபாரமான மட்டையடி விளாசலால் எடுத்த 85 (34 பந்துகள்) ஓட்டங்களுடனும், றொவ்மன் பவலின் மின்னல்வேக 59 (35 பந்துகள்) ஓட்டங்களுடனும், ஷெர்ஃபேன் ரதபோர்ட்டின் அதிரடியான ஆட்டமிழக்காமல் எடுத்த 31 (13 பந்துகள்) ஓட்டங்களுடனும் 6 விக்கெட்டுகளை இழந்து, இந்த T20 தொடரின் அதிகூடிய ஓட்ட எண்ணிக்கையாகச் சாதனை படைக்கும் 254 ஓட்டங்களை அள்ளிக் குவித்தது. பதிலுக்குத் துடுப்பெடுத்தாடிய ஸிம்பாப்வே அணி, ஆரம்பத்தில் இருந்தே விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. பிராட் எவன்ஸ் மாத்திரம் 5 சிக்ஸர்களுடன் பந்துகளைச் சிதறடித்து 43 (21 பந்துகள்) ஓட்டங்களை எடுத்தார். மற்றையோர் மிகவும் குறைவான ஓட்டங்களை எடுத்ததால், 17.4 ஓவர்களின் சகல விக்கெட்டுகளையும் இழந்து 147 ஓட்டங்களுடன் சுருண்டுகொண்டது. முடிவு: மேற்கிந்தியத் தீவுகள் அணி 107 ஓட்டங்களால் வெற்றியீட்டியது. அனைவரும் போட்டியில் இல்லாத அவுஸ்திரேலியா அணி வெல்லும் எனக் கணித்தமையால் ஒருவருக்கும் புள்ளிகள் கிடையாது! இன்றைய போட்டி முடிவுகளின் பின்னர் யாழ்களப் போட்டியாளர்களின் நிலைகள் (மாற்றம் எதுவுமில்லை!):
  3. பழைய நண்பர்கள் லிஸ்டில் சுமந்திரனை சேர்த்தேன். பின் நீக்கி விட்டேன்….. யாழில்….திரிகளுக்கு கவனத்தை ஈர்க்க என சில பொது உத்திகள் உண்டு…. அவற்றில் ஒன்று சுமந்திரனை இழுக்க வேண்டிய இடத்தில் இழுக்காமல் விடுவது 😂. யாழ் களத்தில் சுமந்திரன் உப்பு மாரி… கூட போட்டாலும், குறைய போட்டாலும், அளவா போட்டாலும், போடாமல் விட்டாலும் எதிர்வினை வரும்😂. இதில் நான் சுமந்திரனை போட்டு இருந்தால் எக்ஸ்ராவா ஒரு லைக் கிடைச்சிருக்கும்… ஆனா இப்போ 3 கொமெண்ட்ஸ் கிடைச்சிருக்கு… இனி வியூசும் எகிறும்…. இதெல்லாம் #தொழில் ரகசியம்😂
  4. எங்கவீட்டு பிள்ளையில் நம்பியாரிடம் எம் ஜி ஆர் அடிவாங்கி கொண்டு இருப்பார். அதே நம்பியாரை (மற்றொரு) எம் ஜி ஆர் திருப்பி அடிப்பாரே. அந்த காட்சியை பார்க்கும் போது விறுவிறுப்பாக இருக்கும். ஐசிசி அண்மைக்காலங்களில் இந்தியாவுக்கு சார்பாக அதிக ஐசிசி தொடர்களை இந்தியாவில் நடாத்தி வருகிறது. இந்தியாவுக்கு சார்பான மைதானங்களில் முக்கிய அரை இறுதி போட்டிகளில் நடைபெற்று வருகின்றன. பணம் ஒன்றே முக்கிய குறிக்கோளாக இந்தியாவுக்கு சார்பாகவே ஐசிசி போட்டிகள் நடாத்தப்பட்டு வருகின்றன. இந்தியாவை மில்லரும், பேபி டிவிலர்ஸும் அடி அடி என்று 6, 4 ஓட்டங்கள் அடித்தார்களே அதை பார்க்கும் போது எவ்வளவு விறுவிறுப்பாக இருந்தது தெரியுமா?. ஒரு காலத்தில் சிறிகாந்தும், கபில் தேவ்வும் அடிக்கும் போது பார்த்து இரசித்தவன் நான். ஆனால் இப்பொழுது?
  5. அன்பார்ந்த யாழ் இணைய உறவுகளுக்கு, எதிர்வரும் 30.03.2026 அன்று யாழ் இணையம் 27 அகவைகளைப் பூர்த்திசெய்து தனது 28 ஆவது அகவைக்குள் காலடி எடுத்து வைக்கின்றது. 1999ம் ஆண்டு மார்ச் மாதம் 30ம் நாள் தொடங்கப்பட்ட யாழ் இணையம், பல்வேறு சவால்களையும், தொழில்நுட்ப வளர்ச்சியின் வேகமான மாற்றங்களையும் தாண்டி, சமூக ஊடகங்களின் துரித வளர்ச்சிக்கும் ஈடுகொடுத்து இன்றும் தன்நிகரற்ற தமிழ் இணையத்தளமாக இருக்கின்றது. யாழ் இணையம் 28 ஆவது அகவையில் காலடி எடுத்து வைக்கும் நாளினைச் சிறப்பிக்கும் முகமாக இம்முறையும் கள உறுப்பினர்களின் சுயமான ஆக்கங்களைக் கோருகின்றோம். சுய ஆக்கங்கள் கவிதை, கதை, அனுபவங்கள்(பயணங்கள் உட்பட), மொழியாக்கம், பத்திகள், அறிவியல் கட்டுரைகள், ஆய்வுகள் போன்று எந்த வடிவிலும் அமையலாம். கலை வெளிப்பாடுகளைக் கொண்ட ஒளிப்படமாகவோ, ஓவியமாகவோ, காணொளியாகவோ கூட இருக்கலாம். குறிப்பு: ஆக்கங்கள், ஒளிப்படங்கள், ஓவியங்கள், காணொளிகள் செயற்கை நுண்ணறிவு செயலிகள் மூலம் உருவாக்கப்பட்டால் கட்டாயம் அவை செயற்கை நுண்ணறிவு மூலம் உருவாக்கப்பட்டது எனக் குறிப்பிடப்படவேண்டும். சுய ஆக்கங்கள் உறுப்பினர்கள் விரும்பும் எத்தகைய கருப்பொருள்களிலும் அமையலாம். இச் சுய ஆக்கங்கள் முகநூல் நிலைத்தகவல், டுவிட்டர் குறுஞ்செய்தி, துணுக்குகள் போன்று மிகவும் குறுகியதாக அமையாமல் இருத்தல் வேண்டும். மேலும், இச் சுய ஆக்கங்களில் யாழ் களம் 28 ஆவது அகவையில் காலடி வைப்பதற்கான வாழ்த்து விடயங்களை தவிர்ப்பது நல்லது. எமது நோக்கம் அனைத்து கள உறவுகளையும் அவரவர் திறமைகளுக்கேற்ப சுயமான ஆக்கங்களைப் படைப்பதற்கான வெளியை யாழ் கருத்துக்களத்தில் வழங்குவதேயாகும். இதன் மூலம் அனைத்து கள உறவுகளும் தேங்கிப்போயுள்ள தமது படைப்புத் திறனை வெளிக்காட்டுவார்கள் என்று நம்புகின்றோம். எனவே அனைவரையும் உற்சாகத்துடன் பங்குகொள்ளுமாறு கோருகின்றோம். யாழ் களம் 28 ஆவது அகவைக்குள் காலடி வைப்பதை முன்னிட்டு யாழ் கள உறவுகளின் சுய ஆக்கங்களுக்கான சிறப்புப் பக்கம் வெகுவிரைவில் தயாராகும். கள உறவுகள் சுய ஆக்கங்களைத் தயார்படுத்தவும், மெருகேற்றவும் ஒரு சில வாரங்களே இருக்கின்றன. நாட்கள் விரைந்து ஓடிவிடும் என்பதால், காலந்தாழ்த்தாது சுய ஆக்கங்களைத் தயார்படுத்த இப்போதே ஆயத்தமாகுங்கள். விதிமுறைகள்: யாழ் கள உறுப்பினர்கள் மட்டுமே ஆக்கங்களை படைக்கலாம். உறுப்பினர்கள் அல்லாதவர்கள் உறுப்பினர்களாக இணைந்து ஆக்கங்களை இணைத்துக் கொள்ளலாம். ஆக்கங்கள் கள உறுப்பினர்களின் சுயமான ஆக்கங்களாக இருக்கவேண்டும். ஆக்கங்கள் யாழ் இணையம் 28 அகவைக்கு எனத் தனித்துவமாக/பிரத்தியேகமாக புதிதாக உருவாக்கப்பட்டிருக்கவேண்டும். கருப்பொருள் எதுவாகவும் இருக்கலாம் (வாழ்த்துக்களைத் தவிர்த்து). எனினும் ஆக்கங்களின் உள்ளடக்கத்திற்கு உறுப்பினர்களே முழுப் பொறுப்பும் ஏற்க வேண்டும். ஆக்கங்கள், ஒளிப்படங்கள், ஓவியங்கள், காணொளிகள் செயற்கை நுண்ணறிவு செயலிகள் மூலம் உருவாக்கப்பட்டால் கட்டாயம் அவை செயற்கை நுண்ணறிவு மூலம் உருவாக்கப்பட்டது எனக் குறிப்பிடப்படவேண்டும். ஆக்கங்கள் முகநூல் நிலைத்தகவல், டுவிட்டர் குறுஞ்செய்தி, துணுக்குகள் போன்று மிகவும் குறுகியதாக அமையாமல் இருத்தல் வேண்டும். கள உறுப்பினர் ஒருவர் ஒன்றுக்கு மேற்பட்ட ஆக்கங்களைப் படைக்கலாம். எனினும் பலரது படைப்புத் திறன்களை வெளிக்காட்ட சந்தர்ப்பம் கொடுக்கவேண்டும் என்பதால் பத்துக்கு மேலாகவோ, தினம் ஒன்றாகவோ பதியாமல் தவிர்ப்பது விரும்பப்படுகின்றது. கள உறுப்பினர் ஒருவர் ஒன்றுக்கு மேற்பட்ட வகைமைகளில் ஆக்கங்களைப் படைக்கலாம். ஆக்கங்கள் இதற்கு முன் வேறெங்கும் பிரசுரம் ஆகாததாக இருக்கவேண்டும். வேறு தளங்களில், சமூகவலைத் தளங்கள் உள்ளடங்கலாக, பிரசுரிக்க விரும்பினால் குறைந்தது இரு நாட்கள் தாமதித்துப் பிரசுரிக்கலாம். ஆக்கங்கள் யாழ் கள விதிகளை மீறாத வகையில் அமையவேண்டும். "நாமார்க்கும் குடியல்லோம்" நன்றி யாழ் இணைய நிர்வாகம்
  6. பெயர்: சுமந்திரன் நண்பர்களுக்கு: சுமா எதிரிகளுக்கு: ஏப்ரஹாம் அலர்ஜி: ஒற்றுமைக்கு விவசாயம்: கமெராவுக்கு முன் போராட்டம்: காணி விடுவிப்பு அறிவித்த பின் வெறுக்கப்படுவது: பெரும்பான்மை தமிழர்களால் விரும்பபடுவது: சிறுபான்மை முஸ்லிம்களால் படித்தது: நாவன்மை படிக்காதது: நாவடக்கம் எப்போதும் செய்வது: எல்லோரிடமும் சண்டை இதுவரை செய்யாதது: இனத்துக்கு நன்மை வாழ்நாள் சாதனை: தமிழரசுக்கு அந்தியேட்டி வாழ்நாள் வேதனை: கடந்த தேர்தல் அநேகம் பயன்படுத்துவது: சாணக்கியனை தேவைபட்டால் பயன்படுத்துவது: சிவஞானத்தை நீண்ட நாள் ஏக்கம் : பிரதமர் பதவி அண்மைய கடுப்பு: முன்னாள் எம்பி அண்மைய வெற்றி: பதில் செயலாளர் தந்திரம்: தமிழரிடம் மட்டும் பிரயோகிப்பது இராஜதந்திரம்: கிலோ என்ன விலை? கிள்ளு கீரை: புலம்பெயர் தமிழர் ஓடில்லாத கூரை: ஏக்கிய ராஜ்ய தீர்வு மறக்கடிக்க முனைவது: இனப்படுகொலை விசாரணையை மறக்க முடியாதது: கெளசல்யாவின் வாக்கு எண்ணிக்கைய இந்தியப் பாசம்: சென்னை கிறிஸ்தவ கல்லூரியில் ஆரம்பித்தது இலங்கை பாசம்: கொழும்பு ரோயல் கல்லூரியில் ஆரம்பித்தது வாழ்க்கைக்கு: கொழும்பு வாழ்வாதாரத்துக்கு: யாழ்ப்பாணம் எதிரிகளின் ஆயுதம்: சமயம் நான் எடுக்கும் கேடயம்: சமயம் அழைத்வருக்கே ஆப்பு: சம்பந்தன் அழைத்தவரே ஆப்பு: விக்னேஸ்வரன் பிடித்த திசை: வடக்கு பிடித்த படம்: முதல்வன் முணுமுணுக்கும் பாடல்: ஒண்ணா இருக்க கத்துகணும் அல்ல பஞ்ச் டயலாக்: ஐ வில் சீ யூ இன் கோர்ட்
  7. அத்தோடு எல்லோருமே இளம் வயதினர். நாங்களும் இளம் வயதில் எங்களதும் அடித்து பக்கத்தில வேறு யாராவது உதவி தேவையானால் அவர்களுக்கும் உதவி செய்தோம். அத்தோடு எல்லோருமே இளம் வயதினர். நாங்களும் இளம் வயதில் எங்களதும் அடித்து பக்கத்தில வேறு யாராவது உதவி தேவையானால் அவர்களுக்கும் உதவி செய்தோம். ஸ்பானியர்கள் இல்லை என்றால் பல தொழில்கள் முடங்கிப் போய்விடும்.
  8. முதலமைச்சர் @கந்தப்பு க்கும் பாடி பில்டர் @goshan_che க்கும் வாழ்த்துக்கள்.
  9. பிரித்தானிய நேரப்படி நாளை செவ்வாய் 24 பெப் ஒரு சுப்பர் 8 சுற்றுப் போட்டி நடைபெறவுள்ளது. யாழ் கள போட்டியாளர்களின் கணிப்புகள் கீழே: 57) சுப்பர் 8: குழு 2:செவ்வாய் 24 பெப்: 1:30 PM, பல்லேகல, இங்கிலாந்து (Y1) எதிர் பாகிஸ்தான் (Y3) ENG எதிர் PAK 08 பேர் இங்கிலாந்து அணி வெல்வதாகவும் 15 பேர் பாகிஸ்தான் அணி வெல்வதாகவும் கணித்துள்ளனர். போட்டியாளர் பதில் செம்பாட்டான் PAK ஏராளன் PAK வசீ PAK புலவர் ENG சுவைப்பிரியன் ENG அல்வாயன் PAK ஈழப்பிரியன் PAK நியூ பலன்ஸ் ENG வாத்தியார் ENG கறுப்பி PAK வாதவூரான் PAK வீரப் பையன்26 PAK சுவி ENG கிருபன் PAK கோஷான் சே PAK அஹஸ்தியன் ENG கந்தப்பு ENG நியாயம் ENG எப்போதும் தமிழன் PAK ரசோதரன் PAK பிரபா PAK நிலாமதி PAK நந்தன் PAK இப்போட்டியில் யாருக்குப் புள்ளிகள் கிடைக்கும்?
  10. அவதானமாக இருங்கள் அய்யனே...வெளியில் போக வேண்டாம் ...கிரிக்கட்டை பாருங்கள் ... யாழில் கிறுக்குங்கள்
  11. 🤣............... என்னோட சேர்ந்து அப்பாவி சிம்பாப்வேயும் ஜக்கம்மாவிடம் மாட்டுப்பட்டு விட்டதே...........
  12. hetmyer ரின் அடியைப் பார்த்து அப்பிடி சொல்லக்கூடாது பையா ....... கிறிஸ்கெய்ல் லுக்கு அடுத்து நான் ரசிப்பது ஹெட்மயரைத்தான் .......! ஒரு கட்ச் தவறி விட்டது .......அதனால் என்ன கண்ணுக்கு விருந்து இன்றைய அடி ......!
  13. roesSodtnpt72524913f3um927l9308c9guuchgg0l1cgahl2l9 7cthac0c · “இந்த மலைதான் என் மனைவியின் உ/யி..ரை எடுத்தது” என்ற வேதனையுடன், அவர் எடுத்த முடிவு என்ன தெரியுமா? இந்தியாவின் பீஹார் மாநிலத்தில் உள்ள ஒரு சிறிய கிராமம் — கெஹ்லூர். அந்த கிராமத்தைச் சுற்றி இருந்தது ஒரு பெரிய மலை. அந்த மலை காரணமாக மருத்துவமனை, பள்ளி, சந்தை போன்ற அடிப்படை தேவைகளுக்கு மக்கள் பல கிலோமீட்டர் சுற்றி செல்ல வேண்டிய அவலநிலை. அந்த கிராமத்தில் வாழ்ந்த ஒரு சாதாரண கூலி தொழிலாளிதான் டஷ்ரத் மாஞ்சி. ஒருநாள் அவரது மனைவி காயமடைந்தார். அருகிலிருந்த மருத்துவமனைக்கு உடனே கொண்டு செல்ல முடியாமல், மலை சுற்றி நீண்ட தூரம் செல்ல வேண்டியதால் அவசர சிகிச்சை கிடைக்கவில்லை. அந்த வேதனை அவருடைய வாழ்க்கையை முழுவதும் மாற்றியது. “இந்த மலை தான் என் மனைவியின் உயிரை எடுத்தது” என்ற வேதனையுடன், அவர் எடுத்த முடிவு என்ன தெரியுமா? 👉"மலைக்கே எதிராக போராட வேண்டும்! 1960ஆம் ஆண்டு முதல், ஒரு சுத்தி மற்றும் ஒரு சீசல் (chisel) மட்டும் கொண்டு தனியாக மலை வெட்டத் தொடங்கினார். மக்கள் அவரை பெத்திய காரன் என்று சிரித்தார்கள். சிலர் அவமதித்தார்கள். ஆனால் அவர் நின்றுவிடவில்லை. 22 ஆண்டுகள்… ஆம், முழு 22 ஆண்டுகள் தனியாக உழைத்து, 110 மீட்டர் நீளம், 9 மீட்டர் அகலம், 7 மீட்டர் உயரம் கொண்ட பாதையை மலையில் உருவாக்கினார். அதன் விளைவு? 📍முன்பு 55 கி.மீ சுற்றி செல்ல வேண்டிய தூரம், 15 கி.மீ ஆக குறைந்தது. 📍"கிராம மக்களுக்கு மருத்துவ சேவை, கல்வி, வேலை வாய்ப்பு அனைத்தும் எளிதானது. 📍" ஒரே மனிதனின் உறுதி, ஒரு கிராமத்தின் விதியை மாற்றியது. அவரை உலகம் “Mountain Man” என்று அழைக்க ஆரம்பித்தது. டஷ்ரத் மாஞ்சி காட்டிய பாடம் என்ன? இன்று நாம் பல விஷயங்களை பற்றி குறை கூறுகிறோம். ஆனால் ஒரே மனிதன் 22 ஆண்டுகள் தனியாக மலை வெட்டி பாதை அமைத்தார். அது வெறும் கல் வெட்டிய கதை இல்லை. அது மன உறுதியின் சின்னம். அது காதலின் நினைவுச் சின்னம். அது மனிதனின் சாதனை. இந்த மனிதனை பாராட்டாமல் இருக்க முடியுமா? 🙏" #DashrathManjhi #MountainMan #Inspiration #RealHero.....!
  14. இப்ப என்ன சொல்ல வாரியள், புரியேல்லை ......! 😂
  15. @vasee @ரசோதரன் ஜ‌க்க‌ம்மா சொல்லிட்டா இண்டைக்கு வெஸ்சின்டீஸ் வெல்லுது என்று................ ஜ‌க்க‌ம்மாவை அக்க‌ம்மா என்று சொன்ன‌ குருவின்ட‌ மூஞ்சையில‌ ஜ‌க்க‌ம்மா இன்று க‌ரிய‌ பூசுவா ஹா ஹா😄..........................
  16. ஆம் அவ‌ர் விக்கேட் கீப்ப‌ர் தான் தொட‌க்க‌ வீர‌ராய் விளையாட‌ விட்டால் ந‌ல்ல‌ தொட‌க்க‌ம் கொடுப்பார் இந்த‌ உல‌க‌ கோப்பையில் ஒரு விளையாட்டில் தான் விளையாடி இருந்தார்.................ந‌ம்பீயா அணிக்கு கூட‌....................
  17. இந்த வார முடிவில் எனக்குத் தெரிந்தவர்களின் ஆலோசனை உடன் வருகிறேன்
  18. அருமையான நடப்பு அரசியல் அலசல் .........! 😂
  19. தமிழ் மக்களுக்கு ஒரு நல்லது நடக்க தமிழனே விடமாட்டான் ........ அவ்வளவும் கூடைக்குள் இருக்கும் நண்டுகள் .......! ஒரு ஊர் கதை .......ஒரு அதிகாரியிடம் கையொப்பம் வாங்க ஒருத்தர் போனார். அந்த அதிகாரியும் அவரை அலைக்கழித்துக் கொண்டிருந்தார். அப்போது தெருவில் போகிற ஒருத்தர் இவரிடம் ஒரு அரைபோத்தலோடு முடிகிற அலுவலுக்கு நீ நீதி நேர்மை என்று அல்லாடுகிறாய் என்று .......! 🙃
  20. தொல்பொருள் திணைக்களம், சுற்றாடல் அதிகாரசபை, பொலிஸ், இராணுவம் போன்றவை... தமிழர் பகுதிகளில்தான்... தமது அதிகாரங்களை பயன்படுத்தி, தமிழனுக்கு ஆப்பு அடிக்கும் செயல்களை செவ்வனே செய்கின்றார்கள். வைக்கோல் பட்டடை 🐕‍🦺கள்.
  21. பிரெட், பிஸ்கட் போன்ற பதப்படுத்திய உணவுகள் குடல் ஆரோக்கியத்தை எவ்வாறு பாதிக்கின்றன? பட மூலாதாரம்,Getty Images கட்டுரை தகவல் மெலிசா ஹோகன்பூம் 4 மணி நேரங்களுக்கு முன்னர் வாசிக்கும் நேரம்: 5 நிமிடங்கள் பதப்படுத்தப்பட்ட உணவுப் பொருட்களை நீண்ட காலத்திற்கு மலர்ச்சியாக வைத்திருக்கச் சேர்க்கப்படும் சேர்க்கைப் பொருட்கள் நமது குடலில் உள்ள நுண்ணுயிர் தொகுதிகளின் ஆரோக்கியத்தில் எதிர்பாராத விளைவை ஏற்படுத்தக்கூடும். நமது உடல் அனைவருக்குள்ளும் டிரில்லியன்கணக்கான செல்களின் பரபரப்பான கூட்டம் ஒன்று உள்ளது, இது நமது ஆரோக்கியத்தின் பல அம்சங்களில் தாக்கத்தை ஏற்படுத்துகிறது. இதை நாம் நமது "மைக்ரோபயோம்" (நுண்ணுயிர் தொகுதி) என்று அழைக்கிறோம். "குடல் பன்முகத்தன்மையை ஒரு காடு போல நீங்கள் நினைக்கலாம். உங்கள் காட்டில் அதிக நுண்ணுயிரிகள் மற்றும் பல்வேறு வகையான நுண்ணுயிரிகள் இருந்தால், ஏதேனும் இடையூறுகள் ஏற்படும்போது அதைத் தாங்கும் அதிக ஆற்றல் உங்களுக்கு இருக்கும்," என்கிறார் டீக்கின் பல்கலைக்கழகத்தின் ஊட்டச்சத்து தொற்றுநோயியல் நிபுணர் மெலிசா லேன். ஆரோக்கியமான மற்றும் பன்முகத்தன்மை கொண்ட நுண்ணுயிர் தொகுதி என்பது நமது ஒட்டுமொத்த நல்வாழ்வுக்கு முக்கியமானது என்பதை அறிவியல் நீண்ட காலத்திற்கு முன்பே உறுதிப்படுத்தியுள்ளது, ஏனெனில் இது நமது மனநிலை முதல் வளர்சிதை மாற்றம் மற்றும் நமது மூளை வரை அனைத்திலும் செல்வாக்கு செலுத்துகிறது. குடலில் பாக்டீரியா பன்முகத்தன்மை குறைவாக உள்ளவர்களுக்குத் தூக்கப் பிரச்னைகள், மோசமான குடல் ஆரோக்கியம் மற்றும் வீக்கம் (Inflammation) ஏற்பட வாய்ப்புள்ளது, அதே சமயம் அதிக பன்முகத்தன்மை என்பது நீண்ட ஆயுளுடனும் தொடர்புடையது. "இது ஒரு முழுமையான சுற்றுச்சூழல் அமைப்பு. இது நமது உடலில் உள்ள ஒரு கூடுதல் உறுப்பு போன்றது," என்று லண்டன் கிங்ஸ் கல்லூரியின் ஊட்டச்சத்து பேராசிரியை சாரா பெர்ரி விளக்குகிறார். ஆனால் நாம் பொதுவாக உண்ணும் சில உணவுகள் இந்தச் சுற்றுச்சூழல் அமைப்பிற்குத் தீங்கு விளைவிக்கும் என்று சான்றுகள் தெரிவிக்கின்றன. குறிப்பாக அதிகப்படியாக பதப்படுத்தப்பட்ட உணவுகள் நமது குடலில் உள்ள நுண்ணுயிரிகளைச் சிதைத்து மாற்றக்கூடும். இதற்கான காரணங்களில் ஒன்று, நமது உணவில் உள்ள ஏராளமான சேர்க்கைப் பொருட்கள்தான் என்று அதிகளவில் கூறப்படுகிறது. இந்த சேர்க்கைப் பொருட்கள் நமது குடலுக்கு என்ன செய்கின்றன என்று என்னை யோசிக்க வைத்தது. பட மூலாதாரம்,Getty Images படக்குறிப்பு,பல சூப்பர் மார்க்கெட் உணவுகள் அவற்றின் வைப்பு கால அளவை நீட்டிக்கச் சேர்க்கப்பட்ட எமல்சிஃபையர்களைப் பயன்படுத்துகின்றன எதைச் சேர்க்கிறோம்? ஏன் சேர்க்கிறோம்? அடுத்த முறை நீங்கள் சூப்பர் மார்க்கெட்டில் பொருட்களைப் பார்க்கும்போது ஏதேனும் ஒரு மூலப்பொருள் பட்டியலைப் பார்த்தால், நமது உணவில் எத்தனை உணவு எமல்சிஃபையர்கள், செயற்கை இனிப்புகள் மற்றும் உணவுச் சாயங்கள் சேர்க்கப்படுகின்றன என்பதை நீங்கள் விரைவாகக் கவனிப்பீர்கள். உணவைச் சுவையாக்குவது அல்லது அதன் மொறுமொறுப்பை அதிகரிப்பது முதல் அதன் மேற்பரப்பு தன்மையை மாற்றுவது மற்றும் அதன் ஆயுளை நீட்டிப்பது வரை இவை அனைத்தையும் செய்கின்றன. உதாரணமாக, உணவின் ஊட்டச்சத்து தரத்தைச் சரிபார்க்க நான் பயன்படுத்தும் ஒரு செயலியின் படி, சமீபத்தில் நான் வாங்கிய ஒரு "ஆரோக்கியமான" சிக்கன் சாலட்டில் அதிக ஆபத்துள்ள சேர்க்கைப் பொருள் இருந்தது. அதில் பல எமல்சிஃபையர்கள் இருந்தன. எமல்சிஃபையர்கள் என்பது எண்ணெயும் நீரும் ஒன்றோடு ஒன்று கலக்க அனுமதிக்கும் பொருட்கள் ஆகும். பொதுவாக அதிகப்படியாக பதப்படுத்தப்படும் உணவுகளில் இவை காணப்படுகின்றன. உங்களுக்குப் பிடித்தமான, வாயில் வைத்ததும் கரையும் ஐஸ்கிரீமின் அமைப்பு? அது எமல்சிஃபையர்களால் உருவானது. அவை அதன் விற்பனைக்கான கால அவகாசத்தையும் நீட்டிக்கின்றன. சூப்பர் மார்க்கெட் ரொட்டிகள் நீண்ட காலத்திற்கு பஞ்சுபோல இருப்பதற்கும் எமல்சிஃபையர்கள் உதவுகின்றன. வீட்டில் செய்த கேக்கை விட கடையில் வாங்கிய கேக் நீண்ட காலத்திற்கு ஈரப்பதத்துடன் இருப்பதற்கும் இதுவே காரணம். ஒரு ஆய்வின்படி, பிரிட்டன் சூப்பர் மார்க்கெட்டுகளில் உள்ள 6,640 வெவ்வேறு உணவுப் பொருட்களில் எமல்சிஃபையர்கள் உள்ளன, இது ஆய்வு செய்யப்பட்ட மொத்த தயாரிப்புகளில் பாதியாகும். எனவே இது ஏன் கவலைக்குரிய விஷயம்? இந்த சேர்க்கைப் பொருட்கள் நமது குடல் நுண்ணுயிர் தொகுதியில் எதிர்மறை விளைவுகளை ஏற்படுத்தக் கூடும் என்று சான்றுகள் தெரிவிக்கின்றன. இவை குடல் அழற்சி நோய், எரிச்சல் கொண்ட குடல் நோய்க்குறி (Irritable bowel syndrome) மற்றும் பெருங்குடல் புற்றுநோயுடன் தொடர்புபடுத்தப்பட்டுள்ளன. விலங்குகள் மற்றும் மனிதர்களிடம் மேற்கொள்ளப்பட்ட ஆராய்ச்சிகள், எமல்சிஃபையர்களுக்கும் உடல்நலக் குறைவுக்கும் இடையே நேரடித் தொடர்பு இருப்பதைச் சுட்டிக்காட்டுகின்றன. நமது நுண்ணுயிர் தொகுதி எவ்வாறு பாதிக்கப்படுகிறது? பிரான்சின் பாரிஸில் உள்ள இன்ஸ்டிட்யூட் பாஸ்டரில் பெனாய்ட் சாசைங் தலைமையில் எலிகள் மீது நடத்தப்பட்ட ஆய்வில், பரவலாகப் பயன்படுத்தப்படும் இரண்டு எமல்சிஃபையர்களின் குறைந்த அளவுகள், குடல் பாக்டீரியாக்கள் குடல் சுவரை நோக்கி நெருங்கிச் செல்லக் காரணமாக அமைந்தன, இது வீக்கம் மற்றும் நோய் அறிகுறிகளுக்கு வழிவகுத்தது. ஏற்கனவே குடல் பிரச்னைகள் உள்ள எலிகள் மிகவும் கடுமையான வீக்கத்தை எதிர்கொண்டன. சாதாரணமாக நமது குடல் நுண்ணுயிரிகள் குடல் சுவரில் படர்ந்துள்ள ஒரு சளி அடுக்கினால் பாதுகாப்பான தூரத்தில் வைக்கப்படுகின்றன, இது வீக்கத்தைத் தடுக்க உதவுகிறது. பாக்டீரியாக்கள் நமது பாதுகாப்பு சளி அடுக்கைத் அரிக்கும்போதுதான் நாள்பட்ட அழற்சி நோய்களைத் தூண்டும் என்று சாசைங் கூறுகிறார். பட மூலாதாரம்,Getty Images படக்குறிப்பு,அதிகப்படியாக பதப்படுத்தப்பட்ட பல உணவுகளில் பயன்படுத்தப்படும் எமல்சிஃபையர்கள், குடல் அழற்சி நோய் போன்ற சாத்தியமான உடல்நலப் பிரச்சனைகளுடன் தொடர்புபடுத்தப்பட்டுள்ளன தொடர்ச்சியான ஆய்வு முடிவுகள் மனிதர்களுக்கும் பாதிப்புகள் ஏற்படுவதாக கூறுகின்றன. 2024-இல் பிரான்சில் 1,00,000-க்கும் மேற்பட்டவர்களிடம் நடத்தப்பட்ட ஒரு ஆய்வில், எமல்சிஃபையர்களுக்கு அதிகப்படியாக ஆட்பட்டவர்களுக்கு டைப் 2 நீரிழிவு நோய் ஏற்படும் அபாயம் அதிகம் இருப்பது கண்டறியப்பட்டது. 90,000-க்கும் மேற்பட்டவர்களிடம் நடத்தப்பட்ட மற்றொரு ஆய்வு, எமல்சிஃபையர்களுக்கும் மார்பக மற்றும் புரோஸ்டேட் புற்றுநோய்களுக்கும் இடையே ஒரு சாத்தியமான தொடர்பைக் கண்டறிந்தது. இவை வெறும் தொடர்புகளாக மட்டுமே இருந்த நிலையில், குடல் மாதிரிகளைச் சேகரிப்பதன் மூலம் சாசைங் மற்றும் அவரது சகாக்கள் மனிதர்கள் மீதான ஒரு சிறிய சோதனையில், ஆரோக்கியமான நபர்கள் உணவில் கெட்டியாக்கியாக பொதுவாகப் பயன்படுத்தப்படும் ஒரு எமல்சிஃபையரை உட்கொண்டபோது, அது குடல் நுண்ணுயிரிகளைச் சிதைத்து, ஆரோக்கியமான நுண்ணுயிரிகளைக் குறைத்ததைக் காட்டியுள்ளனர். லண்டன் கிங்ஸ் கல்லூரியின் உணவுமுறை பேராசிரியர் கெவின் வீலன் மற்றும் சாசைங் ஆகியோர் சமீபத்தில் கிரோன் நோய் (Crohn's disease) பாதிப்புள்ள நபர்களிடம் ஒரு மருத்துவச் சோதனையில் இணைந்து பணியாற்றினர். அந்தச் சோதனையில், எமல்சிஃபையர் கட்டுப்படுத்தப்பட்ட உணவை உட்கொண்டவர்கள், தங்களது உணவின் ஒரு பகுதியாகத் தொடர்ந்து எமல்சிஃபையர் உட்கொண்டவர்களை விட மூன்று மடங்கு அதிகமாக நோயின் அறிகுறிகள் குறையப் பெற்றனர். அவற்றின் பயன்பாடு குறித்த உடல்நலக் கவலைகள் இருந்தபோதிலும், நாம் எமல்சிஃபையர்களைத் தவிர்க்க வேண்டுமா என்பது குறித்து பொது வழிகாட்டுதல்கள் எதுவும் இல்லை. இதற்கான ஒரு காரணம், நமது உணவில் ஏராளமான சேர்க்கைப் பொருட்கள் உள்ளன மற்றும் அவற்றில் எத்தனை நச்சுத்தன்மை வாய்ந்தவை அல்லது அவற்றின் கலவைதான் தீங்கு விளைவிக்கிறதா என்பதை விஞ்ஞானிகள் இன்னும் உறுதியாக அறியவில்லை என்று வீலன் கூறுகிறார். நாம் உண்ணும் எமல்சிஃபையர்கள் அனைத்தும் உணவுத் தொழில்துறையால் அங்கீகரிக்கப்பட்டவை என்று சாசைங் விளக்குகிறார். "அவை நச்சுத்தன்மை விளைவு அல்லது டிஎன்ஏ பாதிப்பை ஏற்படுத்தும் திறன் ஆகியவற்றிற்காக மட்டுமே சோதிக்கப்படுகின்றன. அந்த இரண்டு அம்சங்களிலும் அவை முற்றிலும் சரியாக உள்ளன. ஆனால் நுண்ணுயிர் தொகுதி மீதான நேரடி விளைவு குறித்து அவை கடந்த காலத்தில் ஒருபோதும் சோதிக்கப்படவில்லை," என்று அவர் கூறுகிறார். "ஐரோப்பிய ஒன்றியத்தில் அனைத்து உணவு சேர்க்கைப் பொருட்களும் 'E எண்' மூலம் அடையாளம் காணப்படுகின்றன. அவை உணவில் பயன்படுத்த அனுமதிக்கப்படுவதற்கு முன்பு அவற்றின் பாதுகாப்பு மதிப்பீடு செய்யப்படுகிறது," என ஐரோப்பிய உணவுப் பாதுகாப்பு ஆணையம் கூறுகிறது. இதேபோல் அமெரிக்காவில் உணவு மற்றும் மருந்து நிர்வாகம், "ஒரு உணவு சேர்க்கைப் பொருள் சந்தையில் விற்கப்படும் உணவில் பயன்படுத்தப்படுவதற்கு முன்பு உணவு மற்றும் மருந்து நிர்வாகத்தால் அங்கீகரிக்கப்பட வேண்டும்" என்று கூறுகிறது. இருந்தபோதிலும், நிச்சயமாகக் குவியும் விளைவுகள் இருக்கலாம் என்று சாசைங் கூறுகிறார். இந்த வேதிப்பொருட்களும் ஊட்டச்சத்துக்களும் எவ்வாறு ஒன்றோடொன்று வினைபுரிகின்றன என்பது "காக்டெய்ல் விளைவு" என்று அழைக்கப்படுகிறது - மேலும் பல மாற்றங்கள் இருப்பதால், ஒரு சேர்க்கைப் பொருளின் விளைவை மற்றொன்றிலிருந்து பிரித்து அறிவது கடினம். ஆய்வகத்தில் மனித செல்கள் மீது வெளிவரும் சான்றுகள், பொதுவாக உட்கொள்ளப்படும் பல சேர்க்கைப் பொருட்களின் ஒருங்கிணைந்த விளைவுகள் செல் சேதத்தை அதிகரிப்பதோடு தொடர்புடையவை என்று தெரிவிக்கின்றன. கூடுதலாக, ஊட்டச்சத்து உள்ளடக்கத்தைத் தாண்டி உணவு எவ்வாறு பதப்படுத்தப்படுகிறது என்பதும் குடல் ஆரோக்கியத்திற்கு முக்கியமானதாக இருக்கலாம் என்று சமீபத்திய ஆய்வு ஒன்று காட்டுகிறது. ஒரு சீரற்ற கட்டுப்பாட்டு சோதனையில் லேன் மற்றும் அவரது சகாக்கள் அதிகப்படியாக பதப்படுத்தப்பட்ட உணவுகளை அதிகம் எடுத்துக்கொள்ளும் உணவுமுறை குடல் நுண்ணுயிரி பன்முகத்தன்மை குறைவதற்கு வழிவகுத்தது என்பதைக் கண்டறிந்தனர். குழு இரண்டு பிரிவினரை மூன்று வாரங்களுக்கு ஒப்பிட்டது; இரண்டு பிரிவினரும் குறைந்த கலோரி உணவுகளை உட்கொண்டனர். அந்த உணவுகள் ஒப்பீட்டளவிலான ஊட்டச்சத்துகளைக் கொண்டிருந்தன. முக்கியமாக, ஒரு பிரிவு ஷேக்ஸ், சூப்கள் மற்றும் பார்கள் போன்ற அதிகப்படியாக பதப்படுத்தப்பட்ட உணவு மாற்றீட்டுத் தயாரிப்புகளை அடிப்படையாகக் கொண்ட உணவை உட்கொண்டது, மற்றொன்று குறைந்தபட்சம் பதப்படுத்தப்பட்ட, புதிதாகத் தயாரிக்கப்பட்ட உணவுகளைக் கொண்ட குறைந்த அளவில், அதிகப்படியாக பதப்படுத்தப்பட்ட உணவுகள் கொண்ட உணவுமுறையைப் பின்பற்றியது. இரண்டு குழுக்களும் ஒரே மாதிரியான எடை இழப்பைச் சந்தித்தாலும், ஒவ்வொரு குழுவிலும் உள்ள குடல் பாக்டீரியாக்கள் வியக்கத்தக்க வகையில் வேறுபட்டன. குறைந்த அளவில், அதிகப்படியாக பதப்படுத்தப்பட்ட உணவுகள் கொண்ட உணவு முறையைப் பின்பற்றியவர்கள் அதிகப் பன்முகத்தன்மை கொண்ட குடல் நுண்ணுயிரிகளைக் கொண்டிருந்தனர், அதே சமயம் அதிகப்படியாக பதப்படுத்தப்பட்ட உணவுகள் அதிகமாக கொண்ட உணவு முறையைப் பின்பற்றியவர்கள் குறைந்த பன்முகத்தன்மையையும், அதிக மலச்சிக்கலையும் கொண்டிருந்தனர். குடல் பன்முகத்தன்மை குறைந்த பங்கேற்பாளர்கள் வயிறு உப்புசம் மற்றும் வயிற்று வலி ஆகியவற்றில் சாதகமற்ற மாற்றங்களை சந்தித்ததாக கூறினர். ஏன் என்று குழுவினால் துல்லியமாகச் சுட்டிக்காட்ட முடியாவிட்டாலும், நார்ச்சத்து வகைகள் வேறுபட்டதே இதற்குக் காரணமாக இருக்கலாம் என்று லேன் கூறுகிறார். "அதிகமாகப் பதப்படுத்தப்பட்ட உணவுமுறையில் சேர்க்கைப் பொருட்களின் கலவைகள் மற்றும் மிகக் குறைந்த அளவிலான குறைந்தபட்ச பதப்படுத்தப்பட்ட பொருட்கள் இருந்தன, அதே சமயம் குறைந்த- அதிகப்படியாக பதப்படுத்தப்பட்ட உணவில் முழு உணவுகளிலிருந்து வரும் பல்வேறு வகையான நார்ச்சத்துக்கள் இருந்தன மற்றும் மிகக் குறைவான சேர்க்கைப் பொருட்களே இருந்தன," என்று அவர் கூறினார். பட மூலாதாரம்,Getty Images படக்குறிப்பு,உணவில் உள்ள சேர்க்கைப் பொருட்கள் நமது டிஎன்ஏ-வைச் சேதப்படுத்தாது என்று நிரூபிக்கப்பட்டுள்ளது, ஆனால் நமது குடல் நுண்ணுயிர் தொகுதியில் அவற்றின் விளைவுகள் குறித்து ஒப்பீட்டளவில் மிகக் குறைந்த ஆய்வுகளே உள்ளன ஆரம்பத்திலிருந்து சமைத்தல் கருத்தில் கொள்ள வேண்டிய மற்றொரு முக்கியமான விஷயம் என்னவென்றால், பல அதிகப்படியாக பதப்படுத்தப்பட்ட உணவுகளில் நமக்குத் தேவையான ஊட்டச்சத்துக்கள் குறைவாக உள்ளன, இதுவும் குடலைப் பாதிக்கலாம். நார்ச்சத்து மற்றும் பாலிபினால்கள் நிறைந்த உணவு நமது குடல் பாக்டீரியாக்களுக்கு ஊட்டம் அளிக்கிறது என்பது ஏற்கனவே நன்கு புரிந்து கொள்ளப்பட்டுள்ளது. பாலிபினால்கள் அழற்சி எதிர்ப்பு பண்புகளைக் கொண்டவை என்று அறியப்படுகின்றன. சான்றுகள் பெருகி வரும் நிலையில், எமல்சிஃபையர்களின் இந்தத் தீங்கு ஏற்படுத்தும் விளைவுகளில் சிலவற்றைத் தவிர்க்கப் பொதுமக்கள் எவற்றைக் கவனிக்க வேண்டும் என்று நான் பேசியவர்களிடம் கேட்டேன். முடிந்தவரை புதிய பொருட்களைப் பயன்படுத்தி ஆரம்பத்திலிருந்தே சமைப்பதுதான் சிறந்தது என்று பெர்ரி கூறுகிறார். அதிகப்படியாக பதப்படுத்தப்பட்ட உணவுகளை முழுமையாகத் தவிர்ப்பது என்பது யதார்த்தத்திற்கு அப்பாற்பட்டது என்று அவர் கூறுகிறார். வீலனும் இதை ஒப்புக்கொள்கிறார்: "உணவு சேர்க்கைப் பொருள் உள்ள எதையும் ஒருபோதும் சாப்பிட வேண்டாம் என்று நான் பொதுமக்களிடம் சொல்ல விரும்பவில்லை, நிச்சயமாக நான் அதைச் செய்யவில்லை, மக்களையும் அதைச் செய்யுமாறு நான் பரிந்துரைக்கவில்லை." நாம் அனைவரும் செய்யக்கூடியது என்னவென்றால், ஆரோக்கியமாக உண்பதைப் பற்றிச் சிந்திப்பதாகும் என்று அவர் கூறுகிறார். "உணவு என்பது நமது வாழ்வில் ஒரு விலைமதிப்பற்ற விஷயம், நாம் அதைக் கொண்டாட வேண்டும்." தெளிவாகக் கூறினால், அளவோடு இருப்பதுதான் முக்கியம், எதைத் தவிர்க்க வேண்டும் என்பதில் மட்டும் கவனம் செலுத்தாமல், நமது உணவில் எதைச் சேர்க்கலாம் என்பதையும் நாம் பரிசீலிக்கலாம் என்று பெர்ரி கூறுகிறார், குறிப்பாகத் தின்பண்டங்கள் (Snacks) என்று வரும்போது, அவை நமது தினசரி கலோரிகளில் கணிசமான பங்கைக் கொண்டுள்ளன. இறுதியில், ஒரு நல்ல விதி என்னவென்றால், முடிந்தவரை அதிகப் புதிய விளைபொருட்களை உண்பதாகும். நாம் அவ்வாறு செய்யும்போது, நமது உடலும் நமது நுண்ணுயிரிகளும் பயன் அடைகின்றன. - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/c3097v4pqemo
  22. சீனாவைக் காணேலையே? இதிலே சுமந்திரனுக்கு ஒரு பாத்திரம் இல்லாதது ஏமாற்றமாக உள்ளது. மற்றப்படி சூப்பர்.
  23. சிறியர் நீங்கள் நோய் நொடியில்லாமல் பல்லாண்டு வாழ்க வளமுடன். பிந்திய வாழ்த்துக்களுக்கு மன்னிக்கவும். சுமந்திரனும் வேண்டாம், அர்ச்சுனாவும் வேண்டாம் கேக் வெட்ட குடும்பமே போதும். அவர்களை நீங்கள் அழைத்தாலும் தூதுவர் கதவை போய் தட்டுவார், ஒருவழியாய் வந்துசேர்ந்தாலும் கேக் வெட்ட முதல் வீட்டை இரண்டாக்கி கேக் சாப்பிடாமலே விருந்தினரை விரட்டிவிடுவார்.
  24. நீங்கள் அழைத்த பயனாளர்….தொடர்பு எல்லைக்கு அப்பால்….23ம் இடத்தில் இருக்கிறார். நாளைக்கும் அங்கதான் இருப்பார். போட்டிகள் முடிந்ததும் மீண்டும் அழைப்பை எடுக்கவும்😂 எனக்கு எல்லாமே சுகம்😂
  25. ஒப்பிலாமணி இயக்கத்தில் புலனாய்வு பிரிவில் பணியாற்றிய ஒருவர். நான் நினைக்கின்றேன் 1995 இல் இயக்கத்தால் தேடப்பட்டார். இவரை கண்டுபிடிக்க உதவுமாறு கேட்டு யாழ்ப்பாணத்து தமிழ் பத்திரிகைகளின் முகப்பில் இவரின் புகைப்படத்துடன் அறிவித்தல் கொடுக்கப்பட்டது. ஒன்று இரண்டு கிழமைகளாக ஒப்பிலாமணியை தேடி மிக கடுமையான தேடுதல் வேட்டையை இயக்கம் மேற்கொண்டது. கொக்குவில் பகுதியில் இவர் கிட்டத்தட்ட பிடிபடும் அளவிற்கு வந்தபோது இயக்கம் மீது கிரனேற் தாக்குதல் நடாத்திவிட்டு தப்பிவிட்டார். ஒப்பிலாமணி புலனாய்வு பிரிவில் முக்கிய பொறுப்பு வகித்த ஒருவர் என்பதே அப்போது நான் அறிந்த செய்தி. இவர் இயக்கத்திற்கு தெரியாமல் இலங்கை கடற்படையுடன் தொடர்பு எடுத்ததாக கூறப்பட்டது. இயக்கத்துடன் ஏன் எப்படி முரண்பட்டார் எனும் விடயம் தெரியவில்லை. ஆனால், கடைசியில் ஆனானப்பட்ட இயக்கத்திற்கே டிமிக்கி கொடுத்துவிட்டு ஒப்பிலாமணி தப்பிவிட்டார். அதன் பின்னர் சில கிழமைகளில் அப்போதைய பாதுகாப்பு அமைச்சர் அனுரத்த ரத்வத்தவுடன் ஒன்றாக கொழும்பில் நிற்கும் புகைப்படம் பத்திரிகைகளில் வெளியாகியது. இராணுவம் வலிகாமம் வடக்கு பகுதியில் முன்னேறுவதற்கு கடும் சிரமப்பட்டது. அது தெல்லிப்பளையில் நீண்டகாலம் நிலை எடுத்து நின்றது. ஆனால், பல தோல்வி முயற்சிகளின் பின்னர் 1995இல் மிக விரைவாக சுன்னாகம் பகுதிக்கு இராணுவம் முன்னேறியது. ஒப்பிலாமணியின் காட்டிக்கொடுப்பே இராணுவம் இலகுவாக முன்னேறியதற்கு காரணம் என அப்போது ஊரவர்களினால் பேசப்பட்டது. பிற்காலத்தில் ஒப்பிலாமணிக்கு இராணுவ வீரர்கள் அடங்கிய படை கொடுக்கப்பட்டதாகவும், இராணுவம் யாழ் மாவட்டத்தை கைப்பற்றிய பின்னர் தன்னுடன் இயக்கத்தில் பணியாற்றிய போராளிகளின் வீடுகளுக்கு இராணுவ வாகனத்தில் சென்று அவர்கள் பற்றி விசாரித்து சென்றதாகவும் கூறப்பட்டது. இராணுவ உடையில் உலாவிய ஒப்பிலாமணிக்கு இலங்கை அரசினால் அப்போது என்ன பதவி கொடுக்கபப்ட்டது என தெரியவில்லை. தனக்கு அறிமுகமான இயக்கத்து புலனாய்வு போராளிகள் சிலரை இலங்கை புலனாய்வு பிரிவினால் சுட்டு கொல்லப்படாமல் தப்புவதற்கு ஒப்பிலாமணி உதவி செய்துள்ளார் எனவும் அறிந்துள்ளேன். எப்போது எப்படி கனடாவுக்கு வந்தார் என தெரியவில்லை. இயக்கத்துடன் முரண்பட்டு விலகி சில வருடங்களின் பின் இவர் கதை அடங்கிவிட்டது. ஒப்பிலாமணி இயக்கத்தில் 1990களின் ஆரம்பத்தில் இணைந்து இருக்கலாம். வலுக்கட்டாயமாக சேர்க்கப்பட்டார் என்பது நம்பக்கூடியது இல்லை. தனியாக அல்லது நண்பர்களுடன் சேர்ந்து ஒரு ஆர்வத்தில் இயக்கத்தில் இணைந்து பின்னர் சிறுது காலத்தில் மனம்மாறி விலகமுடியாமல் பிரச்சனைப்பட்டாரோ தெரியாது. ஆனால், பதுங்கு குழி வெட்டுவதற்கு, மண் மூட்டைகள் கட்டுவதற்கு இயக்கம் தெருவில் ஆட்களை வலுக்கட்டாயமாக பிடித்து வேலை வாங்கியது என்பது உண்மை.
  26. பெண்ணின் பெருமையே பெருமை . ........ படம் : மனைவி , நடிப்பு விஜயகுமாரி & ராமாபிரபா ........அருமையான பாடல் ........ பார்த்தால் புல்லரிக்கும் , கேட்டால் மெய் சிலிர்க்கும் . .......! 😍
  27. நூற்றாண்டை எட்டும் புலம்பெயர்ந்த ஈழத்தமிழ் நாவல்! written by admin February 22, 2026 யாழ்ப்பாணத்துப் பிள்ளையார் கோயில் திருப்பணிக்கு உதவினார் மலாயாவின் முஸ்லிம் மன்னர்! 1927 இல், மலாயாவில் வெளியான புலம்பெயர்ந்த ஈழத்தமிழ் நாவல் ஒன்று, இம்மாதம் யாழ்ப்பாணத்தில் மீளவும் அச்சிடப்பட்டு வெளியாகின்றது. சாம்பசிவம் – ஞானாமிர்தம் என்ற இந்த நாவலுக்குக் கதைக்களம் அன்றைய மலாயா-சிங்கப்பூரும் இலங்கையும். நாவலை எழுதியவர், யாழ்ப்பாணம், காரைநகர், சம்பந்தர்கண்டியைச் சேர்ந்த அருணாசலம் நாகலிங்கம் (1901-1979). அவர், அப்பொழுது, கோலப்பிலா திறைசேரியில் முதன்மை எழுதுவினைஞராகப் பணியாற்றிக்கொண்டிருந்தார். நாவல், கோலாலம்பூரின் லாஸர் அண்ட் சன்ஸ் அச்சகத்தில் 1000 பிரதிகள் அச்சிடப்பட்டது. இந்த நாவலின் விற்பனையால் வரும் பணத்தில், காரைநகர், மருதடிப் பிள்ளையார் கோயிலின் பாழடைந்த திருக்குளத்தைச் சீரமைத்துக் கட்ட நாவலாசிரியர் எண்ணியிருந்தார்; செய்துமுடித்தார். கோயில் என்பதற்கு அப்பால், இக்குளத்தின் ஊர்ப்பயன்பாடு, நீர்ப்பயன்பாடு, கால்நடைகளின் பயன்பாடு என்பன அவர் சிந்தனையில் முன்னின்றதை நூன்முகத்தால் அறிந்துகொள்ளலாம். புலம்பெயர்ந்த ஈழத்தமிழ் எழுத்தை ஊக்குவித்து, அக்காலத்தில் 100 வெள்ளி பணம் கொடுத்து, பிள்ளையார் கோயில் திருப்பணிக்கு உதவியவர், அன்றைய மலே கூட்டாட்சி அரசுகளின் (Federated Malay States) நகரி செம்பிலான் (Negeri Sembilan) மன்னராக இருந்த, சேர். முகமது ஷா. பின்னாளில் சென்னைப் பல்கலைக்கழகத் தமிழ்ப் பேராசிரியரான, R. P. சேதுப்பிள்ளை; அக்காலத்தில் ஈழத்து முன்னணி நாவலாசிரியரும் இந்துசாதனப் பத்திராசிரியருமான (உலகம் பலவிதம்) ம. வே. திருஞானசம்பந்தப்பிள்ளை; யாழ்ப்பாண வரலாற்றாய்வாளர், செ. இராசநாயக முதலியார்; புனித பத்திராசிரியர் கல்லூரித் தமிழ்ப் பண்டிதர், வ. சு. இராச ஐயனார், ஆகியோர் நாவலுக்கு முன்னுரை வழங்கியிருந்தனர். சாதி, சமயம், சமூகம், சீதனம், மதுவையும் புலாலையும் தவிர்த்தல், பண்பாட்டு அடிமைத்தனம், பயிர்த்தொழில், உள்ளூர் உற்பத்தி போன்ற விடயங்களில், காந்தியக் கருத்துக்களை, தமிழ்ச் சிந்தனை மரபுப் பின்னணியுடனும், இலக்கிய மேற்கோள்களுடனும் நாவலாசிரியர் முன்வைக்கிறார். இரண்டாம் உலகப்போரின் யப்பானிய ஆட்சிக்காலத்தில், கோலப்பிலா மருத்துவ மனைக்கு முதன்மை எழுதுவினைஞராகப் பணிமாறிய அவர், சிங்கப்பூரில் நிறுவப்பட்ட சுபாஸ் சந்திர போஸின் இந்திய அரசுக்கும் ஆதரவளித்துள்ளார். 1947 இல் காரைநகர் திரும்பிவிட்டார். கோலப்பிலாவில் தமிழ்ப்பள்ளி நிறுவி அதன் முகாமையாளராகவும், முருகன் கோயில் முகாமையாளராகவும் இயங்கிய இந்த நூலாசிரியர், ஊரிலும் காரைநகர்ச் சிவன் கோயில் குடமுழுக்கு (1970), அனைவருக்கும் ஆலய வழிபாட்டுரிமை, நூற்பதிப்புகள் என, பல்வேறு சமய, சமூகப் பணிகளில் பங்குகொண்டு, 1979 இல் இயற்கை எய்தினார். 25-02-1901 இல் பிறந்த நாகலிங்கம் அவர்களுக்கு இது 125 ஆவது ஆண்டு. அவரை, 1975 இல் மல்லிகை பத்திரிகை பேட்டிகண்டு, அட்டைப்படத்துடன் கட்டுரை ஒன்றை வெளியிட்டிருந்தது. படங்களுடன் வெளியான முதலாவது ஈழத்தமிழ் நாவல் அவருடையது என சில்லையூர்ச் செல்வராசன் குறிப்பிட்டுள்ளார். இந்த நாவல் ஏற்கனவே வலைத்தளங்களில் பதிவிடப்பட்டுள்ளது. இப்பொழுது மீளச்சில் வெளியிடுபவர், நா. பாலக்கிருஷ்ணன், சம்பந்தர்கண்டி,காரைநகர். அம்பலம். நூற்றாண்டை எட்டும் புலம்பெயர்ந்த ஈழத்தமிழ் நாவல்! - Global Tamil News
  28. நேற்று 21´ம் திகதிதான் பிறந்தநாள் ஈழப்பிரியன். 65 வயது இல்லை. 67 வயது. வாழ்த்துக்களுக்கு நன்றி. 🙏 கேக் வெட்ட... சுமந்திரன் வேண்டாம். 😂 வைத்தியர் அர்ச்சுனாவை ... ஒழுங்கு படுத்தி விடுங்கோ. 🤣 வாழ்த்துக்களுக்கு நன்றி நிழலி. 🙂
  29. கழண்ட கத்திகள் ? - நிலாந்தன் சில ஆண்டுகளுக்கு முன் இந்திய வெளியுறவுச் செயலர் யாழ்ப்பாணத்திற்கு வருகை தந்திருந்தார். யாழ்ப்பாணத்தில் தெரிந்தெடுக்கப்பட்ட 10 பேரை அவர் சந்தித்தார். சந்திப்பு முடிந்து வெளியே வரும்போது சிவாஜிலிங்கம் அங்கிருந்த ஓர் அரசியல் விமர்சகரிடம் கேட்டார்… ”இந்த வாரக் கட்டுரை இதைப் பற்றித் தானா?” என்று. அப்பொழுது அரசியல் விமர்சகர் சொன்னார், ”இல்லை இந்தச் சந்திப்பில் நான் ரிப்போர்ட்டராகக் கலந்து கொள்ளவில்லை.இது மூடிய அறைக்குள் நடந்த ஒரு சந்திப்பு. தமிழ்த் தரப்பு இவ்வாறு மூடிய அறைகளுக்குள் நடக்கும் சந்திப்புகளில் பேசப்பட்ட விடயங்களை அப்பாவித்தனமாக அல்லது உள்நோக்கத்தோடு வெளியே விடுகிறது என்று ஓர் அபிப்பிராயம் ராஜதந்திர வட்டாரங்கள் மத்தியில் உண்டு” என்று. இதை இங்கே ஏன் எழுத வேண்டி இருக்கிறது என்றால், கடந்த வாரம் நடந்த இரண்டு விடயங்கள் தொடர்பாகத்தான். முதலாவது விடயம்,கடந்த திங்கட்கிழமை நடந்த பிரித்தானிய அரசாங்கத்தின் துணைப் பிரதமருக்கும் தமிழ்க் கட்சித் தலைவர்களுக்கும் இடையிலான சந்திப்பு. இரண்டாவது விடயம், சுவிஸ் தூதராகத்தால் கடந்த 19ஆம் திகதி ஏற்பாடு செய்யப்பட்டு பின்னர் இடைநிறுத்தப்பட்ட அதே தமிழ்க் கட்சித் தலைவர்களுக்கு இடையிலான ஒரு சந்திப்பு பற்றிய விடயம். பிரித்தானிய துணைப் பிரதமர் தமிழ்க் கட்சிகளைச் சந்தித்தபோது அதில் கஜேந்திரகுமார் தெரிவித்ததாகக் கூறப்படும் ஒரு கருத்துத் தொடர்பாக ஒரு தகவல் ஊடகம் ஒன்றில் வெளிவந்தது. ஆனால் கஜேந்திரகுமார் தான் அவ்வாறு கூறவில்லை என்று மறுத்திருந்தார். இதில் கஜேந்திரகுமார் அவ்வாறு கூறினாரா இல்லையா என்ற விவாதத்தை தனியாக வைத்துக் கொள்ளலாம். இங்கு முக்கியமாகக் கவனிக்கப்பட வேண்டியது என்னவென்றால், மூடிய அறைக்குள் நடந்த ஒரு சந்திப்பு தொடர்பாக செய்திகளைக் கசியவிடுவது பற்றியது. அதைவிட முக்கியமாக,கட்சிகளுக்கு இடையிலான முரண்பாட்டுக்குள் தூதரகங்களை இழுத்து விடுவது. இப்படித்தான் சுவிட்சர்லாந்து தூதரகத்தின் அனுசரணையோடு கடந்த 19ஆம் திகதி நடக்கவிருந்த சந்திப்புத் தொடர்பாகவும் தகவல்கள் முன்கூட்டியே ஊடகங்களுக்குக் கசிந்தன. அதுதொடர்பாக சுவிட்சர்லாந்து தூதரகம் சந்தோசமாக இல்லை என்றும் தெரிகிறது. இங்கேயும் ராஜதந்திர சமூகத்துடனான இடையூடாட்டங்கள் ஊடகங்களுக்குக் கசிய விடப்பட்டிருக்கின்றன. இது வேண்டுமென்று செய்யப்பட்ட ஒன்றா என்ற சந்தேகங்களும் உண்டு. எதுவானாலும் கட்சிகளுக்கிடையிலான முரண்பாடுகளைப் பிரதிபலிக்கும் விதத்தில் தூதரங்கள் தொடர்பான செய்திகள் கசிய விடப்படுகின்றன என்பது மட்டும் தெளிவாகத் தெரிகிறது இந்த இரண்டு சம்பவங்களும் தமிழ்க் கட்சித் தலைவர்களில் ஒரு பகுதியினர் ஓர் அரசு போலவும் சிந்திக்கவில்லை; ஒரு தேசமாகவும் சிந்திக்கவில்லை; ஆகக்குறைந்தது ராஜீய உறவுகளில் பேணப்பட வேண்டிய நிதானத்தோடாவது சிந்திக்கவில்லை என்பதைத்தான் காட்டுகின்றன. மேலும் ஒரு சம்பவம். இது வடமாகாண சபை இயங்கிக் கொண்டிருந்த பொழுது நடந்தது. அதில் வயதால் மூத்த தலைவர் ஒருவர் கனேடியத் தூதரகத்துடனான சந்திப்பு ஒன்றின் போது கூறப்பட்ட சில விடயங்களை சந்திப்பு முடிந்த கையோடு ஊடகங்களுக்கு அப்பாவித்தனமாக வெளிப்படையாகக் கூறிவிட்டார். அதுவும் அப்பொழுது தூதரக வட்டாரங்களில் அதிருப்தியோடு பார்க்கப்பட்டது. தமிழ்க் கட்சித் தலைவர்களில் ஒருபகுதியினர் ராஜதந்திர சமூகத்தைச் சந்திக்கும்போது ஓர் அரசைப்போல சிந்தித்து, ஓர் அரசைப் போல பக்குவமாக நடந்து கொள்வதில்லை என்பதுதான் கடந்த 16 ஆண்டு கால அனுபவம் ஆகும். ஓர் அரசைப்போல சிந்திக்காவிட்டாலும் பரவாயில்லை, குறைந்தபட்சம் ஒரு தேசமாகக்கூட அவர்கள் சிந்திக்கிறார்கள் இல்லை என்பதைத்தான் அண்மைக்கால நடப்புகள் நமக்குக் காட்டுகின்றன. நான்கு நூற்றாண்டுகளுக்கு முன்பு போர்த்துக்கீசர் தமிழ் மக்களிடமிருந்த ஒரு ராஜ்ஜியத்தை தோற்கடித்தார்கள். அங்கிருந்து தொடங்கி தமிழ் மக்கள் ஐந்து நூற்றாண்டுகளாக அரசற்ற தரப்பாகவே இருந்து வருகிறார்கள். இடையில் ஆயுதப் போராட்டம் 1985 வசந்த காலத்தில் தொடங்கி 2009 மே மாதம் வரையிலும் ஒரு கருநிலை அரசைக் கட்டி எழுப்பியது. அந்த கருநிலை அரசின் ஒரே ராஜதந்திரியாக அன்ரன் பாலசிங்கம் உலகம் முழுவதும் பிரகாசித்தார். அவர் துறைசார் ராஜதந்திரி அல்ல. முறைசாரா ராஜதந்திரிதான். ஆனாலும் ஈழத் தமிழர்களின் நவீன வரலாற்றில் பாலசிங்கம் உலகம் முழுவதும் ஈழத் தமிழர்களின் ஆயுதப் போராட்டத்தின் ராஜதந்திர முகமாக மதிக்கப்பட்டார். லண்டனில் அவருடைய இறுதி நிகழ்வானது, வெளி நாட்டுப் பிரதிநிதிகள் அதிகம் கலந்துகொண்ட ஒரு தமிழ் நிகழ்வாகக் காணப்பட்டது. சுமார் நான்கு நூற்றாண்டுகளில் அதிக காலம் அரசு இல்லாத சமூகமாக இருந்த காரணத்தாலோ என்னவோ, தமிழ் மக்கள் மத்தியில் ஓர் அரசைப்போல சிந்திக்கும் மாண்பு அனேகமாக இல்லாமல் போய்விட்டது. ஒரு தேசமாகச் சிந்திக்க முடியாத மக்கள் ஓர் அரசைப்போல சிந்திப்பார்கள், செயற்படுவார்கள் என்று எதிர்பார்ப்பது கடினமானதுதான். ஆனால் இனப்பிரச்சினைக்கு ஒரு தீர்வு வேண்டுமாக இருந்தால் அது தொடர்பில் வெளி உலகத்தை அணுகும்போது ஓர் அரசைப் போல சிந்தித்து செயல்படாவிட்டால் என்ன நடக்கும்? கட்சிகளுக்கு இடையிலான முரண்பாடுகளுக்குள் தூதரகங்கள் இழுத்துவிடப்படும். நிறுவன மயப்படாத தனியோட்டங்களே அதிகரிக்கும் இந்த இடத்தில் மேலும் ஓர் உதாரணத்தை இங்கு சுட்டிக்காட்டலாம். சில ஆண்டுகளுக்கு முன் தென்னிலங்கையில் இடம்பெற்ற மக்கள் எழுச்சிகளினால் ராஜபக்சக்கள் ஆட்சியில் இருந்து துரத்தப்பட்டார்கள். அதன் பின்னணியில் ஒரு புதிய ஜனாதிபதியை நாடாளுமன்றத்துக்கு ஊடாகத் தெரிவு செய்வதற்கான வாக்கெடுப்பு இடம்பெற்றது. இந்த தேர்தலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு எவ்வாறான நிலைப்பாட்டை எடுக்க வேண்டும் என்பதைத் தீர்மானிப்பதற்காக கட்சித் தலைவர்களுக்கு இடையில் ஒரு கூட்டம் ஒழுங்கு செய்யப்பட்டது. இதில் சில கட்சித் தலைவர்கள் ரணில் விக்கிரமசிங்கவுக்கு ஆதரவாக வாக்களிக்கும் நிலைப்பாட்டோடு காணப்பட்டார்கள். இந்த விடயத்தில் இந்தியாவின் நிலைப்பாடு என்ன என்பதனை அங்கிருந்த கட்சித் தலைவர்களுக்கு தெரியப்படுத்துவதற்காக கூட்டமைப்பின் முக்கியஸ்தர் ஒருவர் கொழும்பில் உள்ள இந்திய தூதரகத்தோடு தொலைபேசியில் தொடர்பு எடுத்திருக்கிறார். தூதரகத்தின் இரண்டாம் நிலை அதிகாரியோடு நடந்த அந்த உரையாடலை அவர் எல்லாரும் கேட்கக்கூடியதாக கைபேசியின் ஒலிபெருக்கியில் விட்டிருக்கிறார். அதுமட்டுமல்ல, அந்தத் தகவல் பின்னர் ஊடகங்களுக்கும் கசிய விடப்பட்டது. ஒரு வெளிநாட்டுத் தூதரகத்துக்கு அப்படி ஒரு அனுபவம் அதற்கு முன் ஏற்பட்டிருக்குமோ தெரியாது. ஆனால் அப்படிப்பட்ட அனுபவங்களின் பின் ராஜதந்திரிகள் தமிழ்க் கட்சித் தலைவர்களை நம்பிக் கதைப்பார்களா? மூடிய அறைக்குள் நடக்கும் சந்திப்புகளில் கூறப்பட்ட விடயங்களை சரியாகவோ, பிழையாகவோ அல்லது கட்சி முரண்பாடுகளைப் பிரதிபலிக்கும் விதத்திலோ வெளியே கசியவிடும் அரசியல்வாதிகளை எந்தத் தூதரகமாவது நம்பிக் கதைக்குமா? நமது தமிழ் தலைவர்களில் எத்தனை பேர் அவ்வாறு நம்பி கதைக்கத்தக்க தலைவர்களாகக் காணப்படுகிறார்கள்? எனது நண்பர் ஒருவர் தென்னராட்சியைச் சேர்ந்தவர். அவர் ”கழண்ட கத்திகள்” என்ற ஒரு சொற்றொடரைப் பயன்படுத்துவார். அதன் பொருள் கத்தியின் பிடி கழண்டு விட்டது, அல்லது பிடி கத்தியோடு இறுக்கமாக இல்லை என்பதாகும். அவ்வாறு கழண்ட கத்தியால் எதையாவது வெட்டினால்,அது ஒழுங்காக வெட்டாது மட்டுமல்ல,வெட்டுகிறவரின் கையையும் நன்னி விடும் ;காயப்படுத்தி விடும். இப்பொழுதுள்ள தமிழ் அரசியல்வாதிகளில் ஒரு பகுதியினர் அவ்வாறு கழண்ட கத்திகள்தானா? ராஜதந்திர சமூகம் அவர்களை நம்பி உறவாடி, ரகசியங்களைப் பரிமாறிக் கொள்ளுமா?இந்தக் கழண்ட கத்திகளை வைத்துக்கொண்டு தமிழ் மக்கள் எதைப் பெறப் போகிறார்கள்? https://www.nillanthan.com/8149/
  30. பிறப்பதற்கும் இறப்பதற்கும் நடுவிலே மனம் பெரிய பெரிய கனவு கண்டது முடியல வாழ்வதற்கும் வாழ்வதற்கும் நடுவிலே விதி வருவது எந்த உருவத்திலோ தெரியல. இறைவனுக்கும் மனிதனுக்கும் இடையிலே நடக்கும் ரகசியத்தை இன்னும் எவரும் அறியவில்லை பெருகிவரும் மனிதகுலம் உலகிலே எதற்கு பிறக்கிறது என்று இதுவரைக்கும் புரியலை பெற்றவரும் மற்றவரும் பிரிவு தானம்மா நீ பெற்றெடுத்த பிள்ளைகளும் வேறு தானம்மா உற்ற பொருள் செல்வம் எல்லாம் சொந்தம் ஏதம்மா இந்த உலகத்திலே எல்லாம் உனக்கு இரவல் தானம்மா

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.