Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Leaderboard

  1. goshan_che

    கருத்துக்கள உறவுகள்
    18
    Points
    19869
    Posts
  2. தமிழ் சிறி

    கருத்துக்கள உறவுகள்
    12
    Points
    89120
    Posts
  3. கிருபன்

    கருத்துக்கள உறவுகள்
    9
    Points
    39465
    Posts
  4. செம்பாட்டான்

    கருத்துக்கள உறவுகள்
    8
    Points
    1610
    Posts

Popular Content

Showing content with the highest reputation on 02/24/26 in Posts

  1. பெயர்: சுமந்திரன் நண்பர்களுக்கு: சுமா எதிரிகளுக்கு: ஏப்ரஹாம் அலர்ஜி: ஒற்றுமைக்கு விவசாயம்: கமெராவுக்கு முன் போராட்டம்: காணி விடுவிப்பு அறிவித்த பின் வெறுக்கப்படுவது: பெரும்பான்மை தமிழர்களால் விரும்பபடுவது: சிறுபான்மை முஸ்லிம்களால் படித்தது: நாவன்மை படிக்காதது: நாவடக்கம் எப்போதும் செய்வது: எல்லோரிடமும் சண்டை இதுவரை செய்யாதது: இனத்துக்கு நன்மை வாழ்நாள் சாதனை: தமிழரசுக்கு அந்தியேட்டி வாழ்நாள் வேதனை: கடந்த தேர்தல் அநேகம் பயன்படுத்துவது: சாணக்கியனை தேவைபட்டால் பயன்படுத்துவது: சிவஞானத்தை நீண்ட நாள் ஏக்கம் : பிரதமர் பதவி அண்மைய கடுப்பு: முன்னாள் எம்பி அண்மைய வெற்றி: பதில் செயலாளர் தந்திரம்: தமிழரிடம் மட்டும் பிரயோகிப்பது இராஜதந்திரம்: கிலோ என்ன விலை? கிள்ளு கீரை: புலம்பெயர் தமிழர் ஓடில்லாத கூரை: ஏக்கிய ராஜ்ய தீர்வு மறக்கடிக்க முனைவது: இனப்படுகொலை விசாரணையை மறக்க முடியாதது: கெளசல்யாவின் வாக்கு எண்ணிக்கைய இந்தியப் பாசம்: சென்னை கிறிஸ்தவ கல்லூரியில் ஆரம்பித்தது இலங்கை பாசம்: கொழும்பு ரோயல் கல்லூரியில் ஆரம்பித்தது வாழ்க்கைக்கு: கொழும்பு வாழ்வாதாரத்துக்கு: யாழ்ப்பாணம் எதிரிகளின் ஆயுதம்: சமயம் நான் எடுக்கும் கேடயம்: சமயம் அழைத்வருக்கே ஆப்பு: சம்பந்தன் அழைத்தவரே ஆப்பு: விக்னேஸ்வரன் பிடித்த திசை: வடக்கு பிடித்த படம்: முதல்வன் முணுமுணுக்கும் பாடல்: ஒண்ணா இருக்க கத்துகணும் அல்ல பஞ்ச் டயலாக்: ஐ வில் சீ யூ இன் கோர்ட்
  2. ஏ எல் சோதனை முடிச்சு போட்டு, ஒரு இரெண்டு மாசம்… வெறும் இரண்டே மாசம்… அடுத்து என்ன செய்யலாம் (செகண்ட் ஷை எடுப்பதில்லை, விரும்பாத யூனி டிகிரியும் படிப்பதில்லை என தெளிவாக முடிவு எடுத்த பின்) என நினைக்கும் காலப்பகுதியில்…. வழமையாக கிரிக்கெட் அடிக்கும் கிரவுண்டில்/தெருவில்…. கடற்கரை கல்லு கும்பத்தில்…. கதிரேசன் கோவில் முற்றத்தில் என எல்லா இடத்திலும்… வழமையாக வரும் தோஸ்துகள் எண்ணிக்கை படிப்படியாக குறைய தொடங்கியது… மச்சான் ஒஸ்ரேலியா ஸ்டூடன் விசா ஓகே டா…. பவளோ ஸ்கொல் கிடைச்சிட்டுடா… கனடாவுக்கு ஏஜென்சி நாளைக்கு ஏத்திறாண்டா… யூனிக்கி போக முன் கெல்ட் கோர்ஸ் போய் இங்கிலீஸ் படிக்கோணும்டா… வாப்பா பெட்டா ஷொப்ப என்னிய பார்க்க சென்னார்டா… தினுசு தினுசான காரணங்களுடன் ஒவ்வொருவராக போய் விட… கடைசியில் நானும் என நண்பன் கிசோவும் ஒரு கடற்கரை கல்லில்… மச்சி இனி இங்க வாறேல்ல…எதாவது செய்யோணும்டா… என முடிவெடுத்து கொண்டோம். சற்றேற குறைய 30 வருடங்கள் ஓடிவிட்டன… ஒரே மாற்றம்… அன்று நானும் கிசோவும்… இன்று…. நானும் வாதவூரனும்😂 பிகு அன்று எதிர்காலம் எம் கையில் இருந்தது, இன்று 8 நாடுகளின் கையில்😂 கதையின் சூழமைவுக்கு 👇
  3. இன்றைய சுப்பர் 8 சுற்றுப் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய பாகிஸ்தான் அணி, சஹிப்ஸடா பர்ஹானின் அதிரடியான 63 (45 பந்துகள்) ஓட்டங்களுடனும், இன்னும் மூவரின் 20க்கு மேலான ஓட்டங்களுடனும் 9 விக்கெட்டுகளை இழந்து சவால் குறைந்த 164 ஓட்டங்களையே எடுத்தது. பதிலுக்குத் துடுப்பெடுத்தாடிய இங்கிலாந்து அணியின் வீரர்கள் பலர் நிலைத்து ஆடாவிட்டாலும், அணித்தலைவர் ஹரி ப்றூக்கின் மின்னல்வேக செஞ்சுரியான 100 (51 பந்துகள்) ஓட்டங்களுடனும், 8 விக்கெட்டுகளை இழந்து 166 ஓட்டங்களை எடுத்து வெற்றி இலக்கை அடைந்தது. ஷகீன் ஷா அஃப்ரிடி 4 விக்கெட்டுகளைச் சாய்த்திருந்தார். முடிவு: இங்கிலாந்து அணி 2 விக்கெட்டுகளால் வெற்றியீட்டியது. அத்துடன் அரையிறுதிப் போட்டிக்குத் தகுதி பெறுவதை உறுதிப்படுத்தியது. இங்கிலாந்து அணி வெல்லும் எனக் கணித்த 8 பேருக்குத் தலா இரு புள்ளிகள் கிடைக்கின்றன. பாகிஸ்தான் அணி வெல்லும் எனக் கணித்த 15 பேருக்குப் புள்ளிகள் கிடையாது. இன்றைய போட்டி முடிவுகளின் பின்னர் யாழ்களப் போட்டியாளர்களின் நிலைகள்: முதல்வர் நாற்காலியிலும், சுமைதாங்கிக் கல்லிலும் மாற்றங்கள் இல்லை. @Ahasthiyan மூன்றாம் இடத்திற்கு முன்னகர்ந்துள்ளார்!
  4. பரவாயில்லை.நான் அரை இறுதிக்கு இங்கிலாந்து போகும் என கணித்திருந்தேன். இத்துடன் எத்தனை தடவை சொல்லிச் சொல்லி அழுதாச்சு. தம்பி ஜக்கம்மா தெலுங்கராம். என்ன கோசான் நீண்ட நாட்களின் பின் அற் சைன் வேலை செய்யுது போல. @ரசோதரன் நாளை மழை பெய்யுமா? முதலமைச்சர் @கந்தப்பு க்கும் சுமைதாங்கி @goshan_che க்கும் வாழ்த்துக்கள்.
  5. எனது பேரனின் சில செய்கைகள் அல்லது பேச்சுக்கள் எனக்கு அதிசயமாக ஆச்சரியமாக இருக்கும். ஒரு நாள் வெளியே தோட்டத்தில் நின்று விட்டு வெயில் அதிகமாக இருந்ததால் வீட்டில் வரவேற்பு அறையில் இருந்தேன். அவன் தொலைக்காட்சியில் கார்ட்டூன் காணொளி ஒன்றை பார்த்துக் கொண்டு இருந்தான். நான் சோர்ந்து போய் இருந்தது அவனுக்கு தெரிந்து இருக்கவேண்டும். என்னைப் பார்த்து தாத்தா களைக்குதா? ஏதாவது வருத்தமா?? நித்திரை கொள்ளபோகிறீர்களா??? என்று இந்த மூன்றையும் ஒரே வசனத்தில் கேட்டான். நான் அதிர்ந்து போனேன். ஏனெனில் அவனுக்கு அப்போது இரண்டு வயது தான். அவனுக்கு பிறந்த நாள் வந்தது. பல கடைகளுக்கும் சென்று பார்த்தபோதும் அத்தனை பொருட்களும் அவனது அறையில் கண்டவையாகவே இருந்ததால் ஒன்றையும் வாங்கவில்லை. பிறந்த நாள் அன்று உனது உண்டியலை கொண்டு வா என்று பத்து ஈரோ தாள்களில் பத்தை கையில் எடுத்து வைத்துக் கொண்டு ஒவ்வொன்றாக உண்டியலுக்குள் போட சொல்லி கொடுத்துக்கொண்டே இருந்தேன். ஐந்தாவது தாளை உண்டியலுக்குள் போட்டவன் என்னை பார்த்து கேட்ட கேள்வி எனக்கு மட்டுமல்ல அங்கிருந்த அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியது. உங்களுக்கு வேற காசு பொக்கற்றில் இருக்கா தாத்தா என்று கேட்டான். ஓம் இருக்கு என்றதும் அப்படியானால் மிச்சத்தையும் போடுவோம் என்றான். இதை சொல்லும் போது அவனுக்கு மூன்று வயது தான். எனது கடைக்கு பக்கத்தில் எனது கார் நிற்பாட்டும் இடம் நிலத்தில் கீழே உள்ளது. அதற்கு செல்லும் கதவு திறந்து மேலே சென்று தான் உள்ளே போகணும். ஒரு நாள் அவனுடன் காரை எடுக்க சென்ற போது அவசரமாக செல்ல வேண்டி இருந்ததால் கதவு மேலே செல்வதற்கு முன் தலையை குனிந்து செல்ல முயன்றேன். எனது கையை பிடித்து பின்னுக்கு இழுத்தபடி சொன்னான் நீங்க தலையை குனியக்கூடாது தாத்தா என்று. எனக்கு தூக்கி வாரி போட்டது. இதை சொல்லும் போது அவனுக்கு மூன்றரை வயது தான். ஒரு நாள் மத்தியானம் சாப்பிட்டு விட்டு கொஞ்சம் கண் அயர்ந்து தூங்கிக் கொண்டு இருந்தேன். தோட்டத்தில் வேலை செய்து கொண்டு இருந்த எனது மனைவி பேரனிடம் தாத்தாவை எழுப்பி விடு எனக்கு அவரது உதவி தேவை என்று சொல்வது எனக்கு கேட்டது. அதற்கு அவன் சொன்ன பதில் என்னை கண் கலங்க வைத்தது. தாத்தா கனக்க நல்லது செய்து விட்டார். இனி அவரை தொந்தரவு செய்யாதீர்கள். அதைவிட முக்கியமானது இனி ஏதாவது தேவைப்பட்டால் என்னிடம் கேளுங்கள் என்றான். இந்த கடைசி வரிகளை என் பிள்ளைகள் கூட இதுவரை சொன்னதில்லை. மனைவி பேரனிடம் வந்து உதவி செய்ய சொல்லி கேட்ட அத்தனை உதவிகளையும் அவனே செய்தும் கொடுத்து விட்டு வந்தான். இதை சொல்லும் போது அவனுக்கு நான்கு வயது தான். எனக்கு இவை மிகவும் அதிசயமாக இருக்கிறது. எனது அம்மாவுக்கு ஐந்து பெண்பிள்ளைகளின் பின்னர் தான் நான் பிறந்தேன். அதனால் என்மீது அதீத பாசம் உண்டு அவருக்கு. எனது மனைவி சொல்வார். எனது தாயார் இறந்த அடுத்த கிழமை எனது மகள் தனது வயிற்றில் ஒரு அசைவு இருப்பதை உணர்ந்ததாக சொன்னாளாம். (எனக்கு மறு பிறப்பு மற்றும் அடுத்த பிறவியில் நம்பிக்கை இல்லை.)
  6. ரசோதரனைப் பார்த்து நேரவே சொல்லியிருக்கலாம்.😉 அதுக்கு கதை எல்லாம் எழுதி. இரண்டு நாள், உங்களோட நின்றார். இப்ப எங்கேயோ போய்விட்டார். 🤣 கதைதான். உயர் தரம் முடிய, நிறைய பசங்களின், மன ஒட்டத்தை நச் என்று சொல்லியிருக்கிறீர்கள். அதுவும் அந்த நேரத்தில். ஒரு 95/96 இருக்குமா. கூட்டிக் கழிச்சுப் பார்த்தா, ஒரு 50 வயசு வருதே.
  7. முதல்ல நிக்கிற இருவரும் இலங்கையின் மேல் காசப் போட்டிருக்கினம்.
  8. பிரித்தானிய நேரப்படி நாளை புதன் 25 பெப் ஒரு சுப்பர் 8 சுற்றுப் போட்டி நடைபெறவுள்ளது. யாழ் கள போட்டியாளர்களின் கணிப்புகள் கீழே: 58) சுப்பர் 8: குழு 2:புதன் 25 பெப்: 1:30 PM, கொழும்பு (RPS), நியூஸிலாந்து (Y2) எதிர் சிறிலங்கா (Y4) NZ எதிர் SL 15 பேர் நியூஸிலாந்து அணி வெல்வதாகவும் 06 பேர் சிறிலங்கா அணி வெல்வதாகவும், இருவர் சுப்பர் 8 சுற்றில் இல்லாத ஆப்கானிஸ்தான் அணி வெல்வதாகவும் கணித்துள்ளனர். ஆப்கானிஸ்தான் அணி வெல்லும் எனக் கணித்த இருவருக்கு புள்ளிகள் கிடையாது! போட்டியாளர் பதில் செம்பாட்டான் NZ ஏராளன் SL வசீ NZ புலவர் NZ சுவைப்பிரியன் NZ அல்வாயன் SL ஈழப்பிரியன் NZ நியூ பலன்ஸ் SL வாத்தியார் NZ கறுப்பி SL வாதவூரான் SL வீரப் பையன்26 NZ சுவி NZ கிருபன் NZ கோஷான் சே NZ அஹஸ்தியன் NZ கந்தப்பு SL நியாயம் NZ எப்போதும் தமிழன் NZ ரசோதரன் AFG பிரபா NZ நிலாமதி AFG நந்தன் NZ இப்போட்டியில் யாருக்குப் புள்ளிகள் கிடைக்கும்?
  9. அவர் மயிலேறி சுத்துறார் . ...... நாங்கள் நால்வர் எலிக்குமேல ...... ம் .....! 🙃
  10. ஜக்கம்மா தெலுங்கு தெய்வம்… நீங்கல் தமிழில ஏவ- அவா அதை தலைகீழா விளங்கிட்டா என நினைக்கிறேம். நெஷ்டு டைமு டெலுகுலே மாட்லாடு😂
  11. மேரி கொல்வின் - தமிழினம் மறக்காத வரலாற்றுப் பெயர்! "ஈழத் தமிழ் மக்கள் பட்ட அவஸ்தையை விட நான் பட்ட கஷ்டம் ஒன்றும் இல்லை..." – இலங்கை இராணுவத்தின் தாக்குதலில் தனது ஒரு கண்ணைப் பறிகொடுத்த போது மேரி கொல்வின் உதிர்த்த வார்த்தைகள் இவை. பிப்ரவரி 22 இந்த வீரமங்கையின் நினைவு நாள்! யார் இந்த மேரி கொல்வின்? 2001-ல் வன்னிக்குள் நுழைந்து, 6 ஆண்டுகளாக உலகம் அறியாமல் மறைக்கப்பட்ட ஈழத் தமிழர்களின் அவலத்தை வெளிக்கொண்டு வந்தவர். பார்வை இழந்தும் பணியைத் தொடர்ந்தவர். வன்னியிலிருந்து வெளியேறும்போது இலங்கை இராணுவம் வீசிய எறிகுண்டில் தனது இடது கண்ணை இழந்தார். அன்று முதல் கருப்புத் துணியால் கண்ணை மறைத்துக் கொண்டு, ஈழத்தின் குரலாய் உலக அரங்கில் வலம் வந்தார். வெள்ளைக் கொடி துரோகத்தின் சாட்சியும் இவரே. 2009 மே 18 அதிகாலையில், இலங்கை இராணுவத்திடம் சரணடையச் சென்ற அரசியல் துறைப் பொறுப்பாளர்கள் நடேசன், பு*லித்தேவன் ஆகியோர் சுட்டுக்கொல்லப்பட்ட அந்த 'வெள்ளைக் கொடி' துரோகத்தை உலகிற்கு அம்பலப்படுத்தியவர் இவரே! ஈழத்தில் ஒரு கண்ணை இழந்த மேரி, 2012-ம் ஆண்டு இதே நாளில் சிரியப் போரின் கோரத்தை ஆவணப்படுத்தியபோது குண்டுவீச்சில் கொல்லப்பட்டார். "மனிதாபிமானம் நசுக்கப்படும் இடங்களில் நான் இருப்பேன்" என்ற தனது கொள்கைக்காகத் தன் உயிரையே ஈந்தார். தமிழினம் என்றும் நன்றியுடன் நினைவுகூரும்! ஈழத் தமிழர்களின் நீதிக்கான போராட்டத்தில் மேரி கொல்வின் சிந்திய இரத்தம் ஒருபோதும் வீண் போகாது. ஒரு சர்வதேசப் பத்திரிகையாளராக அவர் அளித்த சாட்சியங்கள் இன்றும் இலங்கை அரசின் போர்க்குற்றங்களுக்கு எதிரான முக்கிய ஆதாரங்களாக விளங்குகின்றன. இன்று அவரின் நினைவு நாளில், தமிழ் மக்களின் சுயநிர்ணய உரிமைக்காகவும், நீதி நிலைநாட்டப்பட வேண்டும் என்பதற்காகவும் தன் வாழ்வையே பணயம் வைத்த அந்த வீரப்பெண்ணிற்கு தலைவணங்குவோம். உண்மையைச் சொன்ன குரல்கள் மௌனமாக மாறினாலும், அவை எழுப்பிய கேள்விகள் இன்னும் உயிருடன் உள்ளன. நீதி வெல்லும். காலம் பதில் சொல்லும். வீரமரணமடைந்த அந்த வீரமங்கைக்கு எமது வணக்கம். Babu Babugi
  12. சுன்னாகம் பொலிஸ் நிலையத்திற்கு புதிதாக நியமனமான தமிழ் பொறுப்பதிகாரி பதவியேற்றார்! சுன்னாகம் பொலிஸ் நிலையத்திற்கு புதிதாக பொறுப்பதிகாரியாக நியமிக்கப்பட்ட தமிழ் பொறுப்பதிகாரியான சிவானந்தன் நிதர்சனம் இன்றையதினம் தனது பதவியை உத்தியோகபூர்வமாக பதவியேற்றுள்ளார் அவர் தெல்லிப்பழை துர்க்கை அம்மன் ஆலயத்தில் பூஜை வழிபாடுகளில் ஈடுபட்டதுடன் அதனைத் தொடர்ந்து அவருக்கு பொலிஸ் நிலையத்தில் மாலை அணிவித்து , பொன்னாடை போர்த்தி வரவேற்பளிக்கப்பட்டிருந்தார் பின்னர் அவர் உத்தியோகபூர்வ ஆவணத்தில் அறிக்கையை எழுதி, தனது பணிகளை உத்தியோகபூராவமாக பொறுப்பேற்றார். அதனைத் தொடர்ந்து சமூக மட்ட அமைப்பினர், மதகுருமார் உள்ளிட்டோர் நினைவுச் சின்னங்களல வழங்கி அவரை கௌரவித்தமை குறிப்பிடத்தக்கது https://athavannews.com/2026/1465971
  13. இலங்கை நியுசிலாந்து போட்டியில் என்ன நடக்கும் என கேட்டதற்கு பையன் குறி சொல்பவர் போல சூசகமாக மாஜாலாம் நடக்கும் என குறி சொல்கிறாரே?🤣
  14. வந்தாலே வரவில் வைப்போம்… விட்டுப்போனா செலவில் வைப்போம்… அதான் வரணுமே😂
  15. 🤣.................. எனக்கு சம்பவங்கள் நடக்கும் விதத்தை அங்கே கோஷானின் கதையின் கீழே எழுதுவது தான் பொருத்தமாக இருக்கும். சுருக்கமாகச் சொன்னால்: '............ முன்னோடு நூலும் இல்லை பின்னோடு வாலும் இல்லை காற்றோடு போகும் காற்றாடி................'
  16. ந‌க்க‌ல் ஹா ஹா😁😄................. ஆர‌ம்ப‌ சுற்றுப் போட்டி ந‌ட‌ந்த‌ போது பொழுது போன‌து தெரிய‌ல‌
  17. நான் நினைக்கிறேன் தாவூத் இப்ராஹீம்தான் வீரபையன் என்ற பெயரில் எழுதுகிறார் என 😂
  18. பாகிஸ்தான் அணியினர் யாழ்களத்தில் உங்கள் பதிவினை உற்று கவனிக்கிறார்கள் என நினைக்கிறேன், நாணய சுழற்சியில் வென்று நீங்கள் கூறிய மாதிரியே பந்து வீச்சினை தெரிவு செய்துள்ளனர், அதே போல நீங்கள் கூறிய ஓட்ட இலக்கினையும் எடுத்துள்ளனர், இதனை விட வேறு என்ன ஆதாரம் வேணும்? அப்படியே இன்றைய போட்டி நிலமையினை சொல்லிவிடுங்கள், பார்ப்பதற்கு இலகுவாக இருக்கும்.
  19. இந்த சைம் அவுட் எப்பவும் ஒரே மாதிரித்தான் வண்டுவின் அலப்பறைக்குத்தான் ..அவருக்கு அடிக்கடி காயம் ...உவ்வளவு விக்கட் எடுக்கிற வருண் எவ்வளவு சிம்பிள்
  20. கதைப்பவற்றை வைத்து மட்டுப்படுத்த முடியும்தானே. எல்லோரும் ஏதோ ஒரு இடத்தில் நேரத்தில் இருந்திருக்கிறோம்.
  21. Turn your setbacks in to opportunities என்ற பொன்மொழிக்கேற்ப ஒரு கதை எழுதியுள்ளேன்😂.
  22. பாக்கிஸ்தான் க‌ப்ட‌ன் அடிச்சு அவுட் ஆகின‌தை இதில் வ‌டிவாய் காட்டின‌ம் த‌லைவ‌ரே..................... பாவ‌ம் பாக்கிஸ்தான் தொட‌க்க‌ வீர‌ர் ஆர‌ம்ப‌ம் தொட்டே விக்கே விழ‌ த‌ன‌து அதிர‌டி ஆட்ட‌த்தை நிறுத்த‌ வில்லை....................
  23. கிருபரே உந்த ஆட்டம் சகிக்கல ..... முன்பு இணைத்த பொம்மைகளை இணையுங்கள் . ...... அது சூப்பர் ......! 🙂
  24. அவருக்கு எல்லாம் தெரிஞ்சிருக்கு. கடைசியில முதலாவதாய் வருவார்.
  25. அது பையா செம்பாட்டானுடன் ஒரு சின்ன உரசல் வேறொன்றுமில்லை . ....... அந்த பிடியை நானும் பார்த்தேன் ரசித்தேன் .......! 😂
  26. ஓம் ஸ்டோக்சுக்குத்தான் கார்லோசின் அடி விழுந்தது…. இரெண்டு பேரையும் மாத்தி…மாத்தி அடிச்சானுவளா… நானே கன்பீஸ் ஆயிட்டேன்😂
  27. எனக்கு பிடிக்காத அரசியல் கட்சியோடு சேர்ந்து பயணிக்கும் ஒருவரை கைக்கூலி என்று நான் எடை போட்டால் உலகத்தில் என்னை தவிர மிகுதி அனைவரும் கைக்கூலிகள்!!!
  28. எல்லாரும் தெளிவாத்தான் இருக்கிறியல். 😉🤣
  29. அந்த வீரர் நின்ற இடத்தில இவர் பந்தை அடிச்சிருக்கக் கூடாது . .......! 😂
  30. நேற்று சிம்பாப்வேக்கு எதிராக கொஞ்சம் அதிகமாகவே ஏவி விட்டோம் போல...........
  31. தலைவனின் அதிரடி. 100 அடித்தவுடன் ஆட்டமிழந்தார். என்ன ஒரு ஆட்டம்.
  32. இலங்கையில் பிறந்த பேராசிரியர் பாலி புலேந்திரன் தலைமையிலான குழுவினரால் சுவாசக் கருவி தடுப்பூசி கண்டுப்பிடிப்பு 24 Feb, 2026 | 10:53 AM இலங்கையில் பிறந்த நோய் எதிர்ப்பு மண்டல ஆய்வாளர் பேராசிரியர் பாலி புலேந்திரன் ( Bali Pulendran) தலைமையிலான ஸ்டான்போர்ட் மருத்துவக் குழுவினர், ஒரு புரட்சிகரமான "யுனிவர்சல்" சுவாசக் கருவி தடுப்பூசியைக் கண்டுப்பிடித்துள்ளனர். மூக்கு வழியாகச் செலுத்தப்படும் இந்த தடுப்பூசி, கொரோனா வைரஸ் மற்றும் அதன் உருமாறிய வடிவங்களுக்கு எதிராக மட்டுமல்லாமல், அபாயகரமான பக்டீரியாக்கள் மற்றும் வீட்டில் தூசிகளால் ஏற்படும் ஒவ்வாமைகளுக்கும் எதிராகப் பாதுகாப்பு அளிக்கிறது. வழக்கமான தடுப்பூசிகள் ஒரு குறிப்பிட்ட வைரஸை மட்டும் குறிவைக்கும். ஆனால், இந்தப் புதிய தடுப்பூசி நுரையீரலில் உள்ள நோய் எதிர்ப்பு மண்டலத்தின் தகவல் தொடர்பு சமிக்ஞைகளை தூண்டி, உடலின் இயற்கையான பாதுகாப்பு அமைப்பை நீண்ட காலத்திற்கு விழிப்புடன் வைத்திருக்கச் செய்கிறது. எலிகளில் நடத்தப்பட்ட சோதனையில், இந்தத் தடுப்பூசி பல மாதங்கள் வரை நீடித்த பாதுகாப்பை வழங்கியது உறுதி செய்யப்பட்டுள்ளது. இது விஞ்ஞான இதழில் வெளியிடப்பட்டுள்ளது. பேராசிரியர் புலேந்திரன் இது தொடர்பில் தெரிவிக்கையில், இந்தத் தடுப்பூசி மனிதர்களுக்கான முதற்கட்டச் சோதனைகளுக்கு விரைவில் கொண்டு செல்லப்படும் எனத் தெரிவித்துள்ளார். நிதி உதவி மற்றும் சோதனைகள் வெற்றிகரமாக அமைந்தால், அடுத்த 5 முதல் 7 ஆண்டுகளில் இது பொதுமக்களின் பயன்பாட்டிற்கு வரக்கூடும். "இது மருத்துவத் துறையில் ஒரு மிகப்பெரிய மாற்றத்தை ஏற்படுத்தும். இலையுதிர்காலத்தில் ஒருமுறை இந்த நேசல் ஸ்ப்ரேயை எடுத்துக்கொண்டால், காய்ச்சல் , கொரோனா மற்றும் பொதுவான சளி போன்ற பல நோய்களில் இருந்து ஒரே நேரத்தில் பாதுகாப்பு பெற முடியும்," என அவர் நம்பிக்கை தெரிவித்துள்ளார். https://www.virakesari.lk/article/239434
  33. அமெரிக்காவுக்கு கீழே தென்அமெரிக்கா என்று பல ஸ்பானிய நாடுகள் உள்ளன. எல்லாமே வறிய நாடுகள். முழு வெளி வேலைகள் கோட்டல் வேலைகள் புல்லு வெட்டுதல் கட்டட வேலைகள் தோட்டங்களில் பழங்கள் பறிப்பது இப்படி அடுக்கிக் கொண்டே போகலாம்.
  34. இவரது இறுதிக் கிரியைக்கு நண்பர்களுடன் நானும் போயிருந்தேன். தனி ஒரு கூட்டமாக நின்ற எம்மை பலரும் அணுகி பெருமையாக பேசினார்கள். நினைவஞ்சலிகள்.
  35. பயோடேட்டா ........கலகலக்குது .........! 😂
  36. நம்ம நாட்டிலையும் மூணு தடவை மோசமாக்கிட்டுது....இப்பவும்...3 அடிச் சினோ வீட்டைசுத்தி இருக்கு ...பிரிசரில் உள்ள கோழியின் நிலைதான் நமக்கு ...சினோத்தம்பி ...அடிக்கத் தொடங்கவே நானும் மனையாளும் சவள் தூக்கிவிடுவம் ..நான் பருமட்டான..அடி ...அவர் அலங்கார அடி ...ஏலுமானவரை தூக்கி போடுவம் ...7 கார் பார்க் பண்ணுற முற்றம்...அத்துடன் மூலைவீடு ..தெருவான் எல்லாம் கூட்டிவந்து ..வரம்பும் கட்டிவிடுவாங்கள்... இந்த பயத்திலை தெருவில கொட்டினதைக்கூட ..வீட்டு மூலை காணிக்கை மெசினாலை அள்ளி இரைத்து விடுவம் ...இது ஒரு கடினமான சந்தோசம்தான் ...நீண்டகால கயிட்டம்தான் ...அதில் ஒரு திரில் இருக்கு
  37. பிச்சிட்டீங்க....சுமாவை...எதுகும் பஞ்சர் ஒட்டவும் தயாரா இருங்க
  38. அத்தோடு எல்லோருமே இளம் வயதினர். நாங்களும் இளம் வயதில் எங்களதும் அடித்து பக்கத்தில வேறு யாராவது உதவி தேவையானால் அவர்களுக்கும் உதவி செய்தோம். அத்தோடு எல்லோருமே இளம் வயதினர். நாங்களும் இளம் வயதில் எங்களதும் அடித்து பக்கத்தில வேறு யாராவது உதவி தேவையானால் அவர்களுக்கும் உதவி செய்தோம். ஸ்பானியர்கள் இல்லை என்றால் பல தொழில்கள் முடங்கிப் போய்விடும்.
  39. இதோ எந்தன் தேவம் முன்னாலே ........ என்னா நடிப்புடா சாமி ......... சொல்லி வேல இல்ல .......! 🙏
  40. எங்கவீட்டு பிள்ளையில் நம்பியாரிடம் எம் ஜி ஆர் அடிவாங்கி கொண்டு இருப்பார். அதே நம்பியாரை (மற்றொரு) எம் ஜி ஆர் திருப்பி அடிப்பாரே. அந்த காட்சியை பார்க்கும் போது விறுவிறுப்பாக இருக்கும். ஐசிசி அண்மைக்காலங்களில் இந்தியாவுக்கு சார்பாக அதிக ஐசிசி தொடர்களை இந்தியாவில் நடாத்தி வருகிறது. இந்தியாவுக்கு சார்பான மைதானங்களில் முக்கிய அரை இறுதி போட்டிகளில் நடைபெற்று வருகின்றன. பணம் ஒன்றே முக்கிய குறிக்கோளாக இந்தியாவுக்கு சார்பாகவே ஐசிசி போட்டிகள் நடாத்தப்பட்டு வருகின்றன. இந்தியாவை மில்லரும், பேபி டிவிலர்ஸும் அடி அடி என்று 6, 4 ஓட்டங்கள் அடித்தார்களே அதை பார்க்கும் போது எவ்வளவு விறுவிறுப்பாக இருந்தது தெரியுமா?. ஒரு காலத்தில் சிறிகாந்தும், கபில் தேவ்வும் அடிக்கும் போது பார்த்து இரசித்தவன் நான். ஆனால் இப்பொழுது?
  41. கழண்ட கத்திகள் ? - நிலாந்தன் சில ஆண்டுகளுக்கு முன் இந்திய வெளியுறவுச் செயலர் யாழ்ப்பாணத்திற்கு வருகை தந்திருந்தார். யாழ்ப்பாணத்தில் தெரிந்தெடுக்கப்பட்ட 10 பேரை அவர் சந்தித்தார். சந்திப்பு முடிந்து வெளியே வரும்போது சிவாஜிலிங்கம் அங்கிருந்த ஓர் அரசியல் விமர்சகரிடம் கேட்டார்… ”இந்த வாரக் கட்டுரை இதைப் பற்றித் தானா?” என்று. அப்பொழுது அரசியல் விமர்சகர் சொன்னார், ”இல்லை இந்தச் சந்திப்பில் நான் ரிப்போர்ட்டராகக் கலந்து கொள்ளவில்லை.இது மூடிய அறைக்குள் நடந்த ஒரு சந்திப்பு. தமிழ்த் தரப்பு இவ்வாறு மூடிய அறைகளுக்குள் நடக்கும் சந்திப்புகளில் பேசப்பட்ட விடயங்களை அப்பாவித்தனமாக அல்லது உள்நோக்கத்தோடு வெளியே விடுகிறது என்று ஓர் அபிப்பிராயம் ராஜதந்திர வட்டாரங்கள் மத்தியில் உண்டு” என்று. இதை இங்கே ஏன் எழுத வேண்டி இருக்கிறது என்றால், கடந்த வாரம் நடந்த இரண்டு விடயங்கள் தொடர்பாகத்தான். முதலாவது விடயம்,கடந்த திங்கட்கிழமை நடந்த பிரித்தானிய அரசாங்கத்தின் துணைப் பிரதமருக்கும் தமிழ்க் கட்சித் தலைவர்களுக்கும் இடையிலான சந்திப்பு. இரண்டாவது விடயம், சுவிஸ் தூதராகத்தால் கடந்த 19ஆம் திகதி ஏற்பாடு செய்யப்பட்டு பின்னர் இடைநிறுத்தப்பட்ட அதே தமிழ்க் கட்சித் தலைவர்களுக்கு இடையிலான ஒரு சந்திப்பு பற்றிய விடயம். பிரித்தானிய துணைப் பிரதமர் தமிழ்க் கட்சிகளைச் சந்தித்தபோது அதில் கஜேந்திரகுமார் தெரிவித்ததாகக் கூறப்படும் ஒரு கருத்துத் தொடர்பாக ஒரு தகவல் ஊடகம் ஒன்றில் வெளிவந்தது. ஆனால் கஜேந்திரகுமார் தான் அவ்வாறு கூறவில்லை என்று மறுத்திருந்தார். இதில் கஜேந்திரகுமார் அவ்வாறு கூறினாரா இல்லையா என்ற விவாதத்தை தனியாக வைத்துக் கொள்ளலாம். இங்கு முக்கியமாகக் கவனிக்கப்பட வேண்டியது என்னவென்றால், மூடிய அறைக்குள் நடந்த ஒரு சந்திப்பு தொடர்பாக செய்திகளைக் கசியவிடுவது பற்றியது. அதைவிட முக்கியமாக,கட்சிகளுக்கு இடையிலான முரண்பாட்டுக்குள் தூதரகங்களை இழுத்து விடுவது. இப்படித்தான் சுவிட்சர்லாந்து தூதரகத்தின் அனுசரணையோடு கடந்த 19ஆம் திகதி நடக்கவிருந்த சந்திப்புத் தொடர்பாகவும் தகவல்கள் முன்கூட்டியே ஊடகங்களுக்குக் கசிந்தன. அதுதொடர்பாக சுவிட்சர்லாந்து தூதரகம் சந்தோசமாக இல்லை என்றும் தெரிகிறது. இங்கேயும் ராஜதந்திர சமூகத்துடனான இடையூடாட்டங்கள் ஊடகங்களுக்குக் கசிய விடப்பட்டிருக்கின்றன. இது வேண்டுமென்று செய்யப்பட்ட ஒன்றா என்ற சந்தேகங்களும் உண்டு. எதுவானாலும் கட்சிகளுக்கிடையிலான முரண்பாடுகளைப் பிரதிபலிக்கும் விதத்தில் தூதரங்கள் தொடர்பான செய்திகள் கசிய விடப்படுகின்றன என்பது மட்டும் தெளிவாகத் தெரிகிறது இந்த இரண்டு சம்பவங்களும் தமிழ்க் கட்சித் தலைவர்களில் ஒரு பகுதியினர் ஓர் அரசு போலவும் சிந்திக்கவில்லை; ஒரு தேசமாகவும் சிந்திக்கவில்லை; ஆகக்குறைந்தது ராஜீய உறவுகளில் பேணப்பட வேண்டிய நிதானத்தோடாவது சிந்திக்கவில்லை என்பதைத்தான் காட்டுகின்றன. மேலும் ஒரு சம்பவம். இது வடமாகாண சபை இயங்கிக் கொண்டிருந்த பொழுது நடந்தது. அதில் வயதால் மூத்த தலைவர் ஒருவர் கனேடியத் தூதரகத்துடனான சந்திப்பு ஒன்றின் போது கூறப்பட்ட சில விடயங்களை சந்திப்பு முடிந்த கையோடு ஊடகங்களுக்கு அப்பாவித்தனமாக வெளிப்படையாகக் கூறிவிட்டார். அதுவும் அப்பொழுது தூதரக வட்டாரங்களில் அதிருப்தியோடு பார்க்கப்பட்டது. தமிழ்க் கட்சித் தலைவர்களில் ஒருபகுதியினர் ராஜதந்திர சமூகத்தைச் சந்திக்கும்போது ஓர் அரசைப்போல சிந்தித்து, ஓர் அரசைப் போல பக்குவமாக நடந்து கொள்வதில்லை என்பதுதான் கடந்த 16 ஆண்டு கால அனுபவம் ஆகும். ஓர் அரசைப்போல சிந்திக்காவிட்டாலும் பரவாயில்லை, குறைந்தபட்சம் ஒரு தேசமாகக்கூட அவர்கள் சிந்திக்கிறார்கள் இல்லை என்பதைத்தான் அண்மைக்கால நடப்புகள் நமக்குக் காட்டுகின்றன. நான்கு நூற்றாண்டுகளுக்கு முன்பு போர்த்துக்கீசர் தமிழ் மக்களிடமிருந்த ஒரு ராஜ்ஜியத்தை தோற்கடித்தார்கள். அங்கிருந்து தொடங்கி தமிழ் மக்கள் ஐந்து நூற்றாண்டுகளாக அரசற்ற தரப்பாகவே இருந்து வருகிறார்கள். இடையில் ஆயுதப் போராட்டம் 1985 வசந்த காலத்தில் தொடங்கி 2009 மே மாதம் வரையிலும் ஒரு கருநிலை அரசைக் கட்டி எழுப்பியது. அந்த கருநிலை அரசின் ஒரே ராஜதந்திரியாக அன்ரன் பாலசிங்கம் உலகம் முழுவதும் பிரகாசித்தார். அவர் துறைசார் ராஜதந்திரி அல்ல. முறைசாரா ராஜதந்திரிதான். ஆனாலும் ஈழத் தமிழர்களின் நவீன வரலாற்றில் பாலசிங்கம் உலகம் முழுவதும் ஈழத் தமிழர்களின் ஆயுதப் போராட்டத்தின் ராஜதந்திர முகமாக மதிக்கப்பட்டார். லண்டனில் அவருடைய இறுதி நிகழ்வானது, வெளி நாட்டுப் பிரதிநிதிகள் அதிகம் கலந்துகொண்ட ஒரு தமிழ் நிகழ்வாகக் காணப்பட்டது. சுமார் நான்கு நூற்றாண்டுகளில் அதிக காலம் அரசு இல்லாத சமூகமாக இருந்த காரணத்தாலோ என்னவோ, தமிழ் மக்கள் மத்தியில் ஓர் அரசைப்போல சிந்திக்கும் மாண்பு அனேகமாக இல்லாமல் போய்விட்டது. ஒரு தேசமாகச் சிந்திக்க முடியாத மக்கள் ஓர் அரசைப்போல சிந்திப்பார்கள், செயற்படுவார்கள் என்று எதிர்பார்ப்பது கடினமானதுதான். ஆனால் இனப்பிரச்சினைக்கு ஒரு தீர்வு வேண்டுமாக இருந்தால் அது தொடர்பில் வெளி உலகத்தை அணுகும்போது ஓர் அரசைப் போல சிந்தித்து செயல்படாவிட்டால் என்ன நடக்கும்? கட்சிகளுக்கு இடையிலான முரண்பாடுகளுக்குள் தூதரகங்கள் இழுத்துவிடப்படும். நிறுவன மயப்படாத தனியோட்டங்களே அதிகரிக்கும் இந்த இடத்தில் மேலும் ஓர் உதாரணத்தை இங்கு சுட்டிக்காட்டலாம். சில ஆண்டுகளுக்கு முன் தென்னிலங்கையில் இடம்பெற்ற மக்கள் எழுச்சிகளினால் ராஜபக்சக்கள் ஆட்சியில் இருந்து துரத்தப்பட்டார்கள். அதன் பின்னணியில் ஒரு புதிய ஜனாதிபதியை நாடாளுமன்றத்துக்கு ஊடாகத் தெரிவு செய்வதற்கான வாக்கெடுப்பு இடம்பெற்றது. இந்த தேர்தலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு எவ்வாறான நிலைப்பாட்டை எடுக்க வேண்டும் என்பதைத் தீர்மானிப்பதற்காக கட்சித் தலைவர்களுக்கு இடையில் ஒரு கூட்டம் ஒழுங்கு செய்யப்பட்டது. இதில் சில கட்சித் தலைவர்கள் ரணில் விக்கிரமசிங்கவுக்கு ஆதரவாக வாக்களிக்கும் நிலைப்பாட்டோடு காணப்பட்டார்கள். இந்த விடயத்தில் இந்தியாவின் நிலைப்பாடு என்ன என்பதனை அங்கிருந்த கட்சித் தலைவர்களுக்கு தெரியப்படுத்துவதற்காக கூட்டமைப்பின் முக்கியஸ்தர் ஒருவர் கொழும்பில் உள்ள இந்திய தூதரகத்தோடு தொலைபேசியில் தொடர்பு எடுத்திருக்கிறார். தூதரகத்தின் இரண்டாம் நிலை அதிகாரியோடு நடந்த அந்த உரையாடலை அவர் எல்லாரும் கேட்கக்கூடியதாக கைபேசியின் ஒலிபெருக்கியில் விட்டிருக்கிறார். அதுமட்டுமல்ல, அந்தத் தகவல் பின்னர் ஊடகங்களுக்கும் கசிய விடப்பட்டது. ஒரு வெளிநாட்டுத் தூதரகத்துக்கு அப்படி ஒரு அனுபவம் அதற்கு முன் ஏற்பட்டிருக்குமோ தெரியாது. ஆனால் அப்படிப்பட்ட அனுபவங்களின் பின் ராஜதந்திரிகள் தமிழ்க் கட்சித் தலைவர்களை நம்பிக் கதைப்பார்களா? மூடிய அறைக்குள் நடக்கும் சந்திப்புகளில் கூறப்பட்ட விடயங்களை சரியாகவோ, பிழையாகவோ அல்லது கட்சி முரண்பாடுகளைப் பிரதிபலிக்கும் விதத்திலோ வெளியே கசியவிடும் அரசியல்வாதிகளை எந்தத் தூதரகமாவது நம்பிக் கதைக்குமா? நமது தமிழ் தலைவர்களில் எத்தனை பேர் அவ்வாறு நம்பி கதைக்கத்தக்க தலைவர்களாகக் காணப்படுகிறார்கள்? எனது நண்பர் ஒருவர் தென்னராட்சியைச் சேர்ந்தவர். அவர் ”கழண்ட கத்திகள்” என்ற ஒரு சொற்றொடரைப் பயன்படுத்துவார். அதன் பொருள் கத்தியின் பிடி கழண்டு விட்டது, அல்லது பிடி கத்தியோடு இறுக்கமாக இல்லை என்பதாகும். அவ்வாறு கழண்ட கத்தியால் எதையாவது வெட்டினால்,அது ஒழுங்காக வெட்டாது மட்டுமல்ல,வெட்டுகிறவரின் கையையும் நன்னி விடும் ;காயப்படுத்தி விடும். இப்பொழுதுள்ள தமிழ் அரசியல்வாதிகளில் ஒரு பகுதியினர் அவ்வாறு கழண்ட கத்திகள்தானா? ராஜதந்திர சமூகம் அவர்களை நம்பி உறவாடி, ரகசியங்களைப் பரிமாறிக் கொள்ளுமா?இந்தக் கழண்ட கத்திகளை வைத்துக்கொண்டு தமிழ் மக்கள் எதைப் பெறப் போகிறார்கள்? https://www.nillanthan.com/8149/
  42. மேற்குலகின் இசை அல்பங்கள் போல அல்லாமல்... தென்னிந்தியாவின் இசை அல்ப்பம் ---- தான் இசை அமைத்த பாட்டுக்கு கூலியை வாங்கி கொண்டுள்ளார், எனவே படத்தின் பாடல், இசை உரிமை தயாரிப்பாளரிடமும் அவரிடம் உரிமையை வாங்கிய நிறுவனமிடமுமே உள்ளது என்பதே வாதம். இதை இந்திய சட்டப்படி கோர்ட் அணுகும். ஒவ்வொரு படத்திலும் இவருக்கும் தயாரிப்பாளருக்கும் இடையில் இருந்த ஒப்பந்த அடிப்படையில் சில உரிமை இவருக்கு வரலாம், வராமலும் போகலாம். இதெல்லாம் காப்புரிமை அடிப்படையில் கோர்ட் முடுவு செய்யும். இதில் காப்பரேட் கீப்ப்ரடேட் என புலம்புவது மாய்மாலம். காப்பரேட் லைக்காவையும், சோனியையும் தேவை என்டால் தலையில் வைத்து ஆடும் வியாபாரமே சினிமா. இவர்கள் என்ன தன்னார்வ தொண்டா செய்கினம் ? பிஜேபி கைக்கூலியான ராஜாவுக்காக டெல்லியில் அளுத்தம் கொடுக்காமல் இருக்க வேண்டும்.
  43. வாச்சாத்தி - உண்டால் அம்ம இவ்வுலகம் - சுப.சோமசுந்தரம் கருப்பு, சிவப்பு, நீலம் என்ற இந்த மூன்று வண்ணங்களில் எதிலுமே நிற்காத ஒருவரிடம் நான் அரசியல் பேச விரும்புவதில்லை. அந்த மாதிரியான நபரிடம் என்ன இழவு அரசியலைப் பேசுவது என்று தெரியாததே காரணம். இந்த மூன்று வண்ணங்களும் முறையே திராவிட இயக்க அரசியல், இடதுசாரி அரசியல், தலித் அரசியல் இவற்றைக் குறிப்பன என்பது இன்று தமிழ்நாட்டில் சிறு பிள்ளைகளுக்கும் தெரியும், தெரிய வேண்டும் என்று நினைக்கிறேன். இந்த மூன்று வண்ணங்களையும் எனக்குச் சொந்தமாக்கிக் கொண்டவன் நான். அதாவது இவற்றில் எந்த ஒரு குறிப்பிட்ட கட்சியிலும் உறுப்பினர் ஆகாமலே மூன்றையும் கொண்டாடும் உரிமை பெற்றுள்ளேன். ஆங்கிலத்தில் சொல்வது சுருக்கமாகவும் அழுத்தமாகவும் இருக்கும் என நம்புகிறேன், "I own them, I belong to them". இதில் ஆகச் சிறந்த நன்மை ஒன்று உண்டு. ஏதாவது ஒரு நிலைப்பாட்டில் மூன்றில் எந்த ஒரு அணியும் மேற்சென்று இடித்தற் பொருட்டாய்க் கடிந்து கொள்ளும் உரிமையே அது. அந்த உரிமை அவர்களிடம் எடுத்து எனக்கு நானே கொடுத்துக் கொள்வது. ஆனால் எந்த நிலையிலும் எதிரிகளிடமும், தன் பெண்டு தன் பிள்ளையென மட்டும் வாழும் சராசரிகளிடமும் இந்த மூவண்ணத்தாரை நான் விட்டுத் தருவதில்லை. நான் வகுத்த வர்ணாசிரமம் இதுவே ! ஏன் இந்தப் பீடிகை ? இப்போது நாம் கையில் எடுத்துள்ள வாச்சாத்திக்கு வருவோம். வெகு சமீபத்தில் செங்கொடியினரால் வெளியிடப்பட்ட 'வாச்சாத்தி' எனும் ஆவணப்படத்தை மானிடர் அனைவரும் பார்க்க வேண்டும். அதன் இணைப்பு கீழே தரப்பட்டுள்ளது. வாச்சாத்தி தர்மபுரி மாவட்டத்தில் கிழக்குத் தொடர்ச்சி மலை அடிவாரத்தில் உள்ள ஒரு மலைவாழ் மக்களின் கிராமம். 1992 ஜூன் மாதம் 20, 21, 22 தேதிகளில் தமிழ்நாடு வனத்துறை, காவல்துறை, வருவாய்த்துறை இம்மூன்று அரசு இயந்திரங்களாலும் சூறையாடப்பட்ட சுமார் 200 குடும்பங்களைக் கொண்ட கிராமம். சுமார் 600 கோடி பெறுமானமுள்ள (1992 டிலேயே) சந்தன மரங்கள் சூழ்ந்திருந்த நிலையில், அப்போது தமிழ்நாட்டு ஆட்சிக் கட்டிலில் அமர்ந்திருந்த அதிமுகவினராலும் துணை போன அதிகார வர்க்கத்தாலும் மூன்றில் ஒரு பங்கு சந்தன மரங்கள் வெட்டிக் கடத்தப்பட்டதாகவும் அரசு இயந்திரங்களின் உதவியோடு மேலும் அத்தனையையும் வெட்டத் திட்டமிருந்ததாகவும் கேள்வி. இதற்கு எதிர்ப்புத் தெரிவித்து இடையூறாக இருந்த அந்தக் கிராமத்தினரை அப்புறப்படுத்தவே வன்முறை, பாலியல் வல்லுறவு, வீடுகளை அடித்து நொறுக்குதல், கிராமத்துக் கிணற்றில் மோட்டார் கழிவு எண்ணெயைக் கலத்தல் என எழுத்திலடங்கா வன்கொடுமை கட்டவிழ்த்து விடப்பட்டது. அதுவும் ஏதோ ரவுடிக் கும்பலால் அல்ல; மேலே குறிப்பிட்டுள்ள மூன்று அரசுத்துறைகள் எனும் கும்பலால். கிராம மக்கள் மீது சந்தனம் வெட்டிக் கடத்திய குற்றம் சுமத்தப்பட்டு சிறைப்படுத்தப்பட்டனர். எந்தக் குற்றத்தை அவர்கள் எதிர்த்தார்களோ அந்தக் குற்றமே அவர்கள் மீது சுமத்தப்பட்டது பேரவலம். மேலும் அவர்களுக்கு ஏற்பட்ட சொல்லொணாத் துயரங்களை இப்போது வெளியாகி உள்ள ஆவணப்படத்தில் அனைவரும் கண்ணீருடன் கண்டு குமுறலாம். அரசுத் துறைகளில் மெத்தப் படித்தோரும் பாதகஞ் செய்தனர். பாதிக்கப்பட்ட மக்களோடு நின்று அவர்களைச் சரியாக வழிநடத்தி 31 ஆண்டுகள் ஜனநாயக வழியில் நீதிப் போராட்டம், வீதிப் போராட்டம் என்று நடத்தி அவர்களுக்கு நீதியைப் பெற்றுத் தந்த வீரமும் ஈரமும் கொண்டோர் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சித் தோழர்கள்; அவர்கள் மட்டுமே ! அரசுத் துறை ரவுடிகளால் வன்புணர்வு எனும் கொடுமைக்கு ஆளான 18 பெண்கள் உட்பட அதிகார வெறியாட்டத்திற்கு ஆளான மக்களுக்கு நிவாரணம் பெற்றுத் தந்ததோடு அரசுத் துறைகளைச் சார்ந்த 269 பேர் குற்றவாளிகள் என்று வரலாற்றுச் சிறப்புமிக்க தீர்ப்பை வாங்கித் தந்தனர். 269 பேரில் இந்த 31 ஆண்டுகளில் மரணித்த 54 பேரைத் தவிர ஏனைய 215 பேரும் சிறைத் தண்டனை பெற்றனர். தங்கள் உயிரைப் பணயம் வைத்துப் போராடிய நம் செங்கொடித் தோழர்கள் மட்டுமா போற்றுதலுக்குரியவர்கள் ? பாதிக்கப்பட்ட அத்தனை பேரும் இத்தனை ஆண்டுகள் உறுதியோடு நின்றார்களே ! ஆளுங்கட்சித் தரப்பிலிருந்து அம்மக்களில் ஒவ்வொருவருக்கும், பிறழ் சாட்சியாக மாற, அவர்கள் நினைத்துப் பார்க்காத பணம் பேரம் பேசப்பட்டிருக்கும். ஒவ்வொருவரும் மிரட்டப்பட்டிருப்பர். ஆனால் ஒருவர் கூட உடன்படவில்லை, அஞ்சவில்லை என்பது வரலாற்றில் வேறு எங்கும் நிகழ முடியாத ஒன்று. CPI(M) மாநிலச் செயலாளர் தோழர் பி.சண்முகம் கூறியதைப் போல அந்த மக்களே தலையாய கதாநாயகர்கள் (protagonists). மக்கள் இயக்கம் என்பது எவ்வளவு வலுவானது என்பதை உலகுக்கே உணர்த்தியவர்கள். அரசியல் சூட்சமங்கள் அவ்வளவாகத் தெரியாத பாமரர் மனதில் சில கேள்விகள் எழுவது இயல்பு. வாச்சாத்தி கொடுமை நிகழ்ந்தது அதிமுக ஆட்சியில். மணக்கும் சந்தன காசை இழக்க மனமின்றி எத்தகைய கொலை பாதகத்திற்கும் அவர்கள் துணிந்தது புரிந்து கொள்ள முடிகிறது. போராட்டத்தில் மும்முரமாக நின்ற தோழர் பி.சண்முகம், தோழர் அண்ணாமலை இவர்களை ஏதாவது ஆக்சிடென்ட் செய்து கதையை முடிக்கச் சொன்ன அப்போதைய வனத்துறை அமைச்சர் செங்கோட்டையனின் தொலைபேசிப் பேச்சின் பதிவிலிருந்து தெளிவாகத் தெரிகிறது - அதிலும் அப்பதிவு தோழர்களின் கையில் கிடைத்ததால். இடையில் கலைஞர் கருணாநிதியின் திமுக ஆட்சி ஏற்பட்டபோது வழக்கைத் துரிதப்படுத்திக் குற்றவாளிகளை மக்களுக்கு இனங் காட்டியிருக்கலாமே ! மாறாக நீதிமன்ற உத்தரவின் படி சிறைப்படுத்தப்பட்ட 269 காவலர்களை கலைஞர் ஏன் விடுவித்தார் ? இதே கேள்வி ஸ்டெர்லைட் விவகாரத்திலும் எழுகிறது. அமைதி வழியில் போராடிய 13 போராளிகள் குருவிகளைச் சுடுவது போல் சுட்டுத் தள்ளப்பட்டது எடப்பாடியாரின் அதிமுக ஆட்சிக் காலத்தில்தான். ஆட்சி மாறிய பின் நீதியரசர் அருணா ஜெகதீசன் ஆணையப் பரிந்துரையின்படி, குற்றம் (குற்றேவல்) புரிந்த காவல் அதிகாரிகளின் மீதும் அரசு நிர்வாக அதிகாரிகளின் மீதும் ஸ்டாலின் அவர்களின் திமுக அரசு ஏன் கடுமையான நடவடிக்கை எடுக்கவில்லை ? இக்கேள்விக்கெல்லாம் அனுபவத்தால் முதிர்ச்சி பெற்ற தோழர் ஒருவர் பதிலிறுத்தார், "ஆட்சி மாறினாலும் காவல்துறையின் உயரதிகாரிகளும் நிர்வாக அமைப்பின் உயரதிகாரிகளும் உரியோரைச் சந்தித்து, தங்கள் ஆட்களின் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கும் பட்சத்தில் மொத்த அமைப்பும் நிலை குலைந்து போகும் - அதாவது demoralise ஆகும் - என்று ஓதிவிட்டு வருவார்கள் (சரியாகச் சொன்னால், எச்சரித்து விட்டு வருவார்கள்). என்ன இருந்தாலும் இவர்களை வைத்துதானே ஆட்சி நடத்த வேண்டும் என்ற அடிப்படையில் எந்த ஆளும் கட்சியும் அடக்கி வாசிக்கும்". இது மட்டுமா ? முதுகுளத்தூர் கலவரத்தில் தலித்துகளின் பக்கம் முழுமையாக நிற்க வேண்டிய பெருந்தலைவர் காமராஜரும் பேரறிஞர் அண்ணாவும் பஞ்சாயத்து பண்ணத்தானே முயற்சி செய்தார்கள் ? அங்கு பெரும்பான்மையாகத் திகழ்ந்த ஆதிக்க உயர்சாதியினரைப் பகைப்பது வாக்கு வங்கி அரசியலுக்குச் சரிவராது என்ற நிதர்சனம் அன்றி வேறென்ன ? அதுபோலவே கவின் கொலை போன்ற ஆணவக் கொலைகளைத் தடுக்க சிறப்புச் சட்டம் கொண்டு வருவதில் இப்போது காலதாமதம் ஏன் ? இதுதான் ஜனநாயகத்தின் அவலம். இந்த அரசியலை எதிர்கொள்ள வீதிமன்றத்திலும் நீதிமன்றத்திலும் போராடி ஆள்வோரை நிர்பந்திக்க மக்களும் மக்கள் இயக்கங்களும் முன்வர வேண்டும். இப்பணியினை வாச்சாத்தியில் பாதிக்கப்பட்டோரும் செங்கொடியினரும் செவ்வனே செய்து முடித்திருக்கிறார்கள். வாக்கு வங்கி அரசியலில் பங்கு கொள்ளாத கருப்புக் கொடியினரும் தலித் அமைப்பினரான நீலக் கொடியினரும் இதுபோல் இங்கு நிரம்பப் பணியாற்ற வேண்டும். ஏன் செங்கொடித் தோழர்கள் கூட, தம்மால் முன்னெடுக்கப்படாத ஸ்டெர்லைட் ஆலைப் போராட்டத்திலும், கூடங்குளம் அணு உலை எதிர்ப்புப் போராட்டத்திலும், இன்ன பிறவற்றிலும் பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி வேண்டிக் குரல் கொடுக்க வேண்டும். தமக்காக மட்டுமல்லாமல் பிறருக்காகவும் போராடும் ஒவ்வொருவரும் கம்யூனிஸ்ட்தானே ! இதை விட பொதுவுடைமைக்கு வேறு என்ன சிறந்த வரையறை இருக்க முடியும் ? உரைநடையில் கூட மரபுப் பாடல் ஒன்றினை வலுக்கட்டாயமாக இழுக்கும் மன நோய் எனக்கு உண்டு. குறைந்தது ஈராயிரம் ஆண்டுகளுக்கு முந்தைய புறநானூற்றுப் பாடல் ஒன்றைப் பாடி இக்கட்டுரைக்கு நிறைவுத் திரை போட விழைகிறேன். பொதுவுடைமைவாதிகளால்தான் இவ்வுலகமே இயங்குகிறது என ஆணிப்பொன்னாய் ஆணித்தரமாய்ச் சொல்கிறது பாடல். வாச்சாத்தியில் அயராது போராடிய மக்களுக்கும் அவர்களைச் செவ்வனே வழி நடத்திய செங்கொடியினருக்கும் பாடும் மங்கல வாழ்த்தாக இதனைக் கொள்ளலாம். எனது வலைப் பதிவிலிருந்து படி எடுத்து இங்கு பதிவு செய்கிறேன் : "உண்டால் அம்ம, இவ்வுலகம்! இந்திரர் அமிழ்தம் இயைவ தாயினும், இனிதுஎனத் தமியர் உண்டலும் இலரே; முனிவிலர்; துஞ்சலும் இலர், பிறர் அஞ்சுவது அஞ்சி ரபுகழ்எனின் உயிருங் கொடுக்குவர்; பழியெனின், உலகுடன் பெறினும், கொள்ளலர்; அயர்விலர்; அன்ன மாட்சி அனைய ராகித் தமக்கென முயலா நோன்தாள், பிறர்க்கென முயலுநர் உண்மை யானே !" ----புறநானூறு 182. (பொருள் கருதி சீர் பிரித்து எழுதப்பட்டுள்ளது). பாடியவர் கடலுள் மாய்ந்த பாண்டியன் இளம் பெருவழுதி. பாராளும் மன்னவரும் பாவலராய்த் திகழ்ந்த சங்க காலத்தில் இவர் பாண்டிய மன்னராய் அறியப் பெறுகிறார். பாடற்பொருள் : " இவ்வுலகம் உண்டெனில் இதனால்தான் !" (உண்டால் அம்ம இவ்வுலகம் - அம்ம என்பது வியப்பு குறித்த அசைச்சொல்) எனத் தொடங்குகிறது பாடல். இத்தன்மை உடையோரால்தான் இவ்வுலகம் இயங்குகிறது என்று அத்தன்மைகளைப் பட்டியலிடுகிறார் புலவர். அவையாவன :- இந்திரலோகத்து அமிழ்தமே கிடைத்தாலும், சுயநலத்துடன் இனியது எனத் தாம் மட்டும் உண்ண மாட்டார்கள்; பிறரிடம் சினம், வெறுப்பு கொள்ள மாட்டார்கள் (முனிவிலர்); தாம் மேற்கொண்ட பணியில் சோம்பல் பாரார்(துஞ்சலுமிலர்); பிறர் (நல்லோர்) அஞ்சும் தீமைக்குத் தாமும் அஞ்சுவர்; உலகம் புகழும் நற்செயல்களை மேற்கொள்ள உயிரையுங் கொடுப்பர்; பழிச்சொல் தரும் செயல்களுக்கு உலகையே பரிசாகக் கொடுத்தாலும் ஏற்க மாட்டார்கள்; செயல்திறனில் சோர்வு இலாதார் (அயர்விலர்); இந்த மாண்புகள் பொருந்தியவராகி (அன்ன மாட்சியர் அனையராகி), வலிமையான முயற்சி (நோன் தாள்) உடையவரெனினும், தமக்கென முயலாமல் பிறர்க்கென உண்மையாகவே முயலும் தன்மையர். இத்தகைசால் பண்புகள் வாய்க்கப் பெற்றவர்களாலேயே இவ்வுலகம் இயங்குகிறது.
  44. சில நாட்களுக்கு முன் டி.ராஜேந்தர் பேசிய ஒரு காணொலி வைரலாயிட்டு இருந்துச்சு. அதில அவர் விரக்தியான புன்னகையுடன் கூறியது... “என்னுடைய மியூசிக்ல உயிருள்ளவரை உஷா படத்தில் வந்த பாடல்களை ஏ.வி.எம் ஆடியோ நிறுவனத்துக்கு ராயல்டி பேஸிஸ்ல கொடுத்தோம். இது வரைக்கும் சிங்கிள் பைசா எனக்கு கொடுக்கல. இந்திரலோகத்து சுந்தரி ராத்திரி, வைகைக்கறை காத்தே நில்லு பாடல்கள் எல்லாம் எவ்வளவு வியூவ்ஸ் வந்து நிறைய காசு பார்த்திருப்பாங்க. இந்த ராயல்டி வருமானத்தை ஏ.வி.எம் எங்களுக்கு எதுவுமே கொடுக்காம வேற யாருக்கோ வித்துட்டாங்க. இப்ப நான் உயிருள்ளவரை உஷா பட பாடல்களை என்னுடைய யூ டியூபில் அப்லோட் பண்ணினால் காப்பிரைட்னு வருது. இப்ப தான் எனக்கு ஒரு உணர்வு வருது. என்னுடைய பாடல்களின் காப்பிரைட்டை நான் எப்படி காப்பாத்தி வெக்கணும்னு” ஒரு இசையை படைத்த ஒரு படைப்பாளிக்கே அந்த பாடலை பயன்படுத்த உரிமை இல்லையாம்... ஆனால் இடைத்தரகராக அதை வாங்கி இன்னொருவருக்கு வித்தவர் அவரும் சம்பாரிச்சு அதை வாங்கிய கார்பரேட் நிறுவனமும் கொள்ளை லாபம் சம்பாதிப்பது என்பது எவ்வளவு பெரிய கொடுமை... இது தான் சமீபத்திய சரிகம நிறுவனம் பற்றிய சம்பவமும்... ஒரு விவசாயி தன்னுடைய விளைச்சலை நேரடியாக சந்தையில் விற்பதற்கும், அதையே கார்பரேட் கம்பெனிகள் விற்பதற்கும் உண்டான வித்தியாச அளவுகோல் தான் இந்த சம்பவத்தின் விபரீதமான எதிரொலி. இசைஞானி மட்டும் தன்னுடைய பாடல்களுக்கு காசு வாங்குவதாகவும், அதை கார்பரேட் கம்பெனிகள் என்னமோ சும்மா தூக்கி இலவசமாக மக்களுக்கு தாரை வார்த்து கொடுக்கிற மாதிரியும் பேசறாங்க... இதில வேற காப்பிரைட்டுக்கும் ராயல்டிக்கும் உண்டான வித்தியாசம் கூட தெரியாம கம்பு சுத்தறது தான் காலத்தின் கொடுமைன்னு சொல்லனும்.... அதாகப்பட்டது பார்த்தீங்கன்னா, 134 படங்களின் இசை மற்றும் பாடல்களுக்கு இசைஞானி உரிமை கோரவோ அல்லது நியாயமான பணத்தை கேட்கவோ வாங்கவோ முடியாது.. ஆனால் அந்த 134 படங்களுக்குமான காப்பிரைட் வாயிலாக கார்பரேட் நிறுவனம் மக்களிடம் யூடியூப் உள்ளிட்டவற்றின் வாயிலாக பணம் சம்பாதித்து கொள்ளலாம் என்று புரிந்து கொள்ள வேண்டும். அதே சமயம் கார்பரேட் நிறுவனங்களுக்கு எதிராக இந்த போராளிகள் கம்பு சுத்தவோ அல்லது அட்டகத்தியை வெச்சிகிட்டு ஆட்டவோ முடியாது... காரணம் கார்பரேட் நிறுவனங்கள் எல்லாம் இசைஞானி போல் ஏமாளிகள் அல்ல... அவர்களது நோக்கங்கள் முழுக்க வணிகமும் பணமும் தானே தவிர கலையோ கலாச்சார முன்னெடுப்போ அல்ல என்பதை புரிந்து கொண்டால் நலம்.... இதில ஒரு சேனல்காரர் கொடுத்த தலைப்பை பார்த்தவுடன் நிஜமாகவே என் இதயம் இனித்தது கண்கள் பனித்தது... நன்றி: சமூக வலைத்தளங்களில் பரவும் ஒரு பதிவு
  45. சிவப்பு கோவண்ம் மெல்ல மெல்ல கிழிகின்றது
  46. ஆதிமந்தி ஆட்டனத்தி - சுப.சோமசுந்தரம் உலகில் பரவலாக அறியப்படும் காதல் இணையரான ரோமியோ - ஜூலியட், ஆன்டனி - கிளியோபாட்ரா, லைலா - மஜ்னு, அம்பிகாபதி - அமராவதி போன்று சங்க காலத்தில் நம் தமிழ் நிலத்தில் ஆதிமந்தி - ஆட்டனத்தி காதலானது காவியம் போல் பேசப்பட்டுள்ளது என்பது சங்க இலக்கியங்களான குறுந்தொகை, அகநானூறு, மற்றும் சங்க மருவிய காலத்து சிலப்பதிகாரம் மூலமாகத் தெளிவு. ஆனால் இன்றைய பெரும்பான்மைத் தமிழ்ச் சமூகம் இக்காதலை அறியாமல் போனது விந்தையிலும் விந்தை. ஈழத் தமிழறிஞரான திரு.கந்தையா விநாயகலிங்கம் அவர்கள் யாழ் இணையதளத்தில் எழுதிய கட்டுரையானது அடியேனையும் எழுதத் தூண்டியது எனலாம். அன்னார் எழுதியதிலிருந்து பெரிதும் வேறுபட்ட எதனையும் எழுத எண்ணாமையால், பின் ஏன் இந்த எழுத்து எனும் கேள்வி எழல் இயல்பு. திருக்குறளுக்குக் காலந்தோறும் வெவ்வேறு சான்றோர் உரை எழுதுவது ஒவ்வொரு எழுத்தும் பார்வையும் தனித்தன்மை கொண்டமையாலும், உயரிய பொருள் மீண்டும் மீண்டும் உரைக்கப் பெற்று மென்மேலும் வளம் பெறுவதினாலுமேயாம். கண்ணதாசன் எழுதிய கவிதை நாடகமான ஆதிமந்தி ஆட்டனத்தி, அதன் திரை வடிவமான மன்னாதி மன்னன், பாரதிதாசன் படைத்த சேரதாண்டவம் எனும் நாடக நூல் ஆகியவை ஈண்டு கவனத்தில் கொள்ளத்தக்கவை. இவை நாம் முன்னம் குறித்த சங்கப்பாடல்கள் மற்றும் சிலப்பதிகாரம் வழியமைந்த ஆதிமந்தி - ஆட்டனத்தி கதையினை ஒட்டி அமைந்த புனைவு இலக்கியங்களாகும். நாம் இக்கட்டுரையில் கையிலெடுப்பது சங்கப்பாடல்கள் வழி நின்ற கதையை மட்டுமே. சோழன் கரிகால் பெருவளத்தான் காலத்தில் ஆடற் கலையில் சிறந்த ஆட்டனத்தி (ஆடல் + அத்தி) என்ற வீர இளைஞனும் ஆதிமந்தி எனும் ஆடல் மகளும் காதல் வயப்பட்டனர். சோழ நாட்டவர் தமக்குச் சோறிடும் காவிரி அன்னைக்குப் (காவிரியாற்றுக்கு) பெருவிழா எடுக்கும் வழக்கம் இருந்திருக்க வேண்டும். குறிப்பிட்ட நாளன்று சோணாட்டின் கழார் என்னும் துறையில் மன்னன் கரிகாலன் முன் ஆட்டனத்தி காவிரியில் தன் ஆட்டத்தின் திறம் காட்டிச் சாகசம் புரிந்தான்; நீர் விளையாட்டும் ஆட்டத்தில் ஒரு வகையாக இருந்திருக்க வேண்டும். அவன் ஆடற்திறம் கண்டு மன்னனும் மக்களும் குதூகலித்தனர் - ஆதிமந்தியும்தான். அப்போது காவிரியில் திடீரெனப் பெருக்கெடுத்த வெள்ளம் அவனை வாரிச்சுருட்டிச் சென்று விட்டது. காவிரி கடலில் கலக்குமிடம் கரை ஒதுங்கிக் கிடந்தவனை மருதி எனும் மீனவப்பெண் கண்டெடுத்துப் பேணி வந்தாள். கட்டழகன் அத்தியிடம் கட்டுக்கடங்காத காதல் கொண்டாள். (அவனும் அந்த மீனவப் பெண்ணின் காதல் வலையில் கட்டுண்டு பேரின்ப உலகில் திளைத்திருக்க வேண்டும். ஆடவன் பல காதல் கொள்ளும் முறை சங்க காலத்தில் இருந்தமைக்கான சான்றுகள் உண்டு (polygamist society). எனவே தற்கால ஒழுக்க அளவுகோல் அங்கு அவசியமில்லை). காதலனை இழந்த காரிகையான ஆதிமந்தி அருந்துயருற்றுக் கையறு நிலையில் அவனைத் தேடி காவிரிக் கரையிலுள்ள ஊரெல்லாம் அலைந்து திரிந்தாள். இறுதியாக மருதியிடம் வந்து சேர்ந்தாள். ஆதிமந்தி அத்தியிடம் கொண்ட காதல் திறம் கண்ட மருதி அவனை அவளிடமே ஈந்து தான் கடலுள் மாய்ந்து அக்காலத்தில் அழியா புகழ் பெற்றாள். இந்த ஆதிமந்தி - ஆட்டனத்தி காதலும், பிறிதின் நோய் தந்நோயாய்ப் போற்றிய மருதியின் தகைமையும் சங்க இலக்கியங்களில் ஆங்காங்கே அள்ளித் தெளிக்கப்பட்டுள்ளன. அவற்றைச் சிந்தாமல் சிதறாமல் அள்ளிப் பருகுவோமா ? முதலில் நம் கண் முன் காட்சி தருவது குறுந்தொகையில் ஆதிமந்தியார் எனும் பெயர் கொண்ட பெண்பாற்புலவரின் பாடல். புறநானூற்றில், பாட்டுத்திறம் படைத்த சேரமான் கணைக்கால் இரும்பொறை தன் நிகழ்வினைத் தானே பாடியது போல் சங்க காலத் தலைவி ஆதிமந்தியே ஆடற்கலையுடன் பாடல் திறனும் கொண்டு, தன் நிலையைக் கூறி இப்பாடலைப் பாடி இருக்கலாம். அல்லது ஔவையைப் போல் ஆதிமந்தியும் அப்போது பொதுவான பெயராய் இருந்து (common name), ஆதிமந்தியார் எனும் புலவர் தம் பெயரையுடைய நாயகியைப் பாடியிருக்கலாம். மூன்றாவது வாய்ப்பாக, பாடலின் புலவர் பெயர் தெரியாததால் பாடலில் உள்ள தலைவியின் பெயரே அவருக்குச் சூட்டப்பட்டிருக்கலாம் (பாடலில் உள்ள சொல்லால் பெயர் பெற்ற செம்புலப் பெயல்நீரார், அணிலாடு முன்றிலார் போல). பாடியவர் குறித்த வரலாறு தெளிவற்று இருப்பினும், பாடற் பொருள் தெளிவானது; பாடல் சுட்டும் வரலாறும் தெளிவு. பாடலில் தலைவி ஆதிமந்தி தோழியிடம் தனது பிரிவாற்றாமையை வெளிப்படுத்துகிறாள். இவ்வெளிப்பாடு காவிரியாற்றுக் கோர நிகழ்வுக்குப் பின் ஆற்றங்கரை ஊர்களில் அவனைப் பல இடங்களில் அவள் தேடித் திரிந்ததைச் சொல்கிறது. "வீரர்கள் கூடும் விழாக்கள், (அவன் ஆடற்தலைவன் என்பதால்) துணங்கை கூத்து நடைபெறும் இடங்கள் எனப் பலவாறு தேடியும் மாட்சிமை பொருந்திய அவனைக் காணேன். யானும் ஓர் ஆடுகள மகளே ! சங்கினை அறுத்து அமைக்கப்பெற்ற என் கை வளையல்கள் (நான் உடல் மெலிந்ததால்) நெகிழ்ந்திடக் காரணமான பெருமைமிக்க தலைவனான அவனும் ஓர் ஆடுகள மகனே !"என்கிறாள். "மள்ளர் குழீஇய விழவி னானும் மகளிர் தழீஇய துணங்கை யானும் யாண்டுங் காணேன் மாண்டக் கோனை யானுமோ ராடுகள மகளே யென்கைக் கோடீ ரிலங்குவளை நெகிழ்த்த பீடுகெழு குரிசிலுமோ ராடுகள மகனே" (குறுந்தொகை பாடல் 31; பாடியவர் ஆதிமந்தியார்) அருஞ்சொற்பொருள் : மள்ளர் - வீரர்; குழீய - குழுமிய, கூடிய; விழாவினானும் - விழாக்களிலும்; மகளிர் தழீஇய - மகளிரைத் தழுவிய; துணங்கையானும் - துணங்கைக் கூத்து நிகழிடங்களிலும்; யாண்டுங் காணேன் - எவ்விடத்தும் யான் காணவில்லை; மாண் தக்கோனை - மாட்சிமை பொருந்தியவனை; கோடு - சங்கு; ஈர் - அறுத்து; இலங்கு வளை - அமைத்து விளங்கும் வளையல்களை; நெகிழ்த்த - நெகிழ வைத்த; பீடு கெழு - பெருமை பொருந்திய; குரிசில் - தலைவன் (குருசிலுமோர் - குருசிலும் ஓர்). அடுத்து அகநானூறு பாடல் 45 ஐக் காண்போம். பாடுபொருள் வேறாய் இருப்பினும் ஆதிமந்தி பற்றிய குறிப்பு அதன் கண் வரல் சிறப்பு. பிரிவாற்றாமையால் வருந்தும் தலைவியொருத்தி தோழி எத்துணைத் தேற்றினாலும் தேறாது, "காதலனால் ஏற்பட்ட சிறுமையுடன் (ஊரார் புறம் பேசும் சிறுமை), பிரிவுத் துயர் எனும் நோய் மேலிட ஆதிமந்திபோல் மனம் பேதலித்து ஆதரவற்று (அலந்து) உழன்று திரிவேனோ (உழல்வென் கொல்லோ)?" என்று புலம்புகிறாள். "காதலன் கெடுத்த சிறுமையொடு நோய் கூர்ந்துஆதிமந்தி போல பேது உற்றுஅலந்தனென் உழல்வென் கொல்லோ" (அகநானூறு பாடல் 45 ன் பகுதி; பாடியவர் - வெள்ளி வீதியார்) சங்கப் புலவர் பரணரின் பாடல்களில் இருந்து வரலாற்றுக் குறிப்புகளும் கிடைப்பதால் அவர் வரலாற்றுப் பதிவாளராயும் அறியப்பெறுகிறார். எடுத்துக்காட்டாக, பரணர் பாடிய அகநானூறு பாடல் எண் 135 ன் முற்பகுதியில் ஆதிமந்தி பற்றிய குறிப்பும் பிற்பகுதியில் வேளிர் குடி அரசர் பதினான்கு பேர் சேர்ந்து தாக்கிய தலைநகர் காமூரையும் கழுவுள் அரசனையும் பற்றிய குறிப்புகளும் வருகின்றன. நாம் தற்போது கையிலெடுத்துள்ள தலைப்பைக் கருத்தில் கொண்டு பாடலின் முற்பகுதியை மட்டும் பேசி, பிற்பகுதியை இக்கட்டுரையை வாசிப்போர்க்கே விட்டு விடுகிறோம். மீண்டும், பிரிவாற்றாமையில் வாடும் தலைவியொருத்தி தோழியிடம் கூறுவது : " திதலை மாமை தளிர் வனப்பு அழுங்கபுதல் இவர் பீரின் எதிர் மலர் கடுப்பபசலை பாய்ந்த நுதலேன் ஆகிஎழுது எழில் மழை கண் கலுழ நோய் கூர்ந்துஆதிமந்தியின் அறிவு பிறிது ஆகி பேது உற்றிசினே காதலம் தோழி" (அகநானூறு பாடல் 135 ன் முற்பகுதி; பாடியவர் பரணர்) பொருள் : எனது தேமல் (திதலை), மாநிறம் ஆகியவற்றின் தளிர் வனப்பு கெட (அழுங்க), புதர்களில் படர்ந்த (புதல் இவர்) பீர்க்கின் புதுமலர் (எதிர் மலர்) போன்ற (கடுப்ப) பசலை படர்ந்த நெற்றிடையுடையவள் ஆனேன் (நுதலேன் ஆகி). ஓவியம் போன்ற எழில் மிக்க, குளிர்ச்சி பொருந்திய கண்கள் அழும்படியாக (எழுது எழில் மழை கண் கலுழ) பிரிவுத் துயருற்று (நோய் கூர்ந்து) ஆதிமந்தி மதி மயங்கியது போல் (ஆதிமந்தியின் அறிவு பிறிது ஆகி) பேதலித்து நிற்கிறேன் (பேது உற்றிசினே), அன்பு கொண்ட அழகிய தோழியே ! (காதல் அம் தோழி ). பிரிவுத் துயரில் வாடி நின்ற ஒரு தலைவியைத் தோழி அழைக்கிறாள் : "முழவு முகம் புலரா கலி கொள் ஆங்கண்கழாஅர் பெரும் துறை விழவின் ஆடும் ஈட்டு எழில் பொலிந்த ஏந்து குவவு மொய்ம்பின்ஆட்டன்அத்தி நலன் நயந்து உரைஇதாழ் இரும் கதுப்பின் காவிரி வவ்வலின்மாதிரம் துழைஇ மதி மருண்டு அலந்தஆதிமந்தி காதலன் காட்டி படு கடல் புக்க பாடல் சால் சிறப்பின்மருதி அன்ன மாண் புகழ் பெறீஇயர்சென்மோ வாழி தோழி" (அகநானூறு பாடல் 222 ன் பகுதி; பாடியவர் பரணர்) பொருள் : முழவின் (ஒரு வகை முரசு) முகம் உலறா வண்ணம் (முகம் புலரா) - அதன் இடைவிடாத முழக்கத்தினால் - ஆர்ப்பரிக்கும் (கலி கொள்) கழார் என்னும் (காவிரி) துறையில் மென்மேலும் பெருகும் அழகுடன் (ஈட்டு எழில்) பொலிந்து எடுப்பான தோள்களுடன் திகழும் (ஏந்து குவவு) வலிமையான (மொய்ம்பின்) ஆட்டனத்தியின் நலன்களை விரும்பி (நலன் நயந்து), தனது பரந்து (உரைஇ) தாழ்ந்த இருண்ட கூந்தலால் (தாழ் இரும் கதுப்பின்) காவிரி கவர்ந்து கொண்டதால் (வவ்வலின்), திசையெல்லாம் தேடி (மாதிரம் துழைஇ) மதிமயங்கி (மதி மருண்டு) ஆதரவற்றுத் திரிந்த (அலந்த) ஆதிமந்தியிடம் அவளது காதலனான ஆட்டனத்தியைக் காட்டி - ஈந்து - ஒலிக்கும் கடல் புகுந்த (படுகடல் புக்க), புலவர் பெருமக்களால் பாடப்பெற்ற சிறப்பினையுடைய மருதியைப் போல் புகழ் பெறச் செல்வோமாக ! வாழிய தோழி ! (அஃதாவது தலைவனைத் தேடியும் காணாவிடத்து உயிர் துறந்து புகழ் பெறலாம் எனச் சொல்கிறாளோ !). (பாடலைப் போன்றே முற்றுப்புள்ளியின்றி பொருளை எழுதியமைக்கு மன்னிக்கவும். அப்படிதான் எழுத வந்தது !). பிரிவாற்றாமையை வகை வகையாய் பதிவு செய்கிறது அகநானூறு. "......................................அல்கல் அணி கிளர் சாந்தின் அம் பட்டு இமைப்பகொடும் குழை மகளிரின் ஒடுங்கிய இருக்கைஅறியாமையின் அழிந்த நெஞ்சின்ஏற்று இயல் எழில் நடை பொலிந்த மொய்ம்பின்தோட்டு இரும் சுரியல் மணந்த பித்தை ஆட்டன்அத்தியை காணீரோ எனநாட்டின் நாட்டின் ஊரின் ஊரின்கடல் கொண்டன்று என புனல் ஒளித்தன்று எனகலுழ்ந்த கண்ணள் காதலன் கெடுத்தஆதிமந்தி போல ஏதம் சொல்லி பேது பெரிது உறலே" (அகநானூறு பாடல் 236 ன் பகுதி; பாடியவர் பரணர்) பொருள் : இரவில் (அல்கல்) மணம் வீசும் சந்தனம் பூசி (அணி கிளர் சாந்தின்) அழகிய பட்டாடையினால் பொலிவு பெற்று (அம் பட்டு இமைப்ப), வளைந்த குழையணிந்த மகளிரிடம் (கொடுங்குழை மகளிரின்) அவன் சேர்ந்த இடம் (ஒதுங்கிய இருக்கை) அறியாது வருந்திய மனதுடன் (அறியாமையில் அழிந்த நெஞ்சின்) உள்ளேன். காளையைப் போன்று தீரத்துடன் நடையும் (ஏற்று இயல் எழில் நடை) பொலிவு பெற்ற வலிமையான தோள்களும் (பொலிந்த மொய்ப்பின் தோட்டு) கரிய சுருள் முடியும் (இரும் சுரியல்) கொண்டவனை (ஆட்டனத்தியைக் குறிப்பது) மணந்து பித்துப் பிடித்தவளாய் (மணந்த பித்தை), "ஆட்டனத்தியைக் கண்டீரோ ?"என்று நாடு நகரெங்கும் கூவித் திரிந்து, "கடல் கொண்டதோ ? ஆற்று வெள்ளம் (புனல்) ஒளித்துக் கொண்டதோ ?" என்று அழுத கண்ணோடு காதலனால் வருந்திய (காதலன் கெடுத்த) ஆதிமந்தி போல துயரினைக் கூறிப் (ஏதம் சொல்லி) பெரிதும் வருந்துகிறேன் (பேது பெரிது உறலே). பரணர் பாடிய அகநானூறு 76 ஆம் பாடலில் பரத்தை ஒருத்தி, "(இடுப்பில்) கச்சினை அணிந்தவனும், (காலில்) கழலை அணிந்தவனும், தேனொழுகும் மாலையினை மார்பில் அணிந்தவனும் (தேம் தார் மார்பினன்), வகையாக அமைக்கப்பெற்று வனப்புடன் பொலிவுறும் மாலையை அணிந்தவனும் (வகை அமை பொலிந்த வனப்பு அமை தெரியல்), சுருள் முடியுடன் (சுரியல்) திகழும் அழகிய (அம்) கூத்தனைக் (பொருநனை) கண்டீரோ என ஆதிமந்தி பித்துப் பிடித்து (பேதுற்று) அரற்றித் (இனைய) திரிய, கரையினில் மோதி (சிறை பறைந்து) உராய்ந்து (உரைஇ) செந்நிறம் கொண்ட கிழக்குத் திசையில் (செம் குணக்கு) பாயும் (ஒழுகும்) அழகிய குளிர்ச்சி பொருந்திய காவிரி (அம் தண் காவிரி) போல - காவிரியாறு ஆட்டனத்தியை இழுத்துச் சென்றது போல - (என்னிடம் வந்த தலைவனை) நானும் (யானே) கரம் பிடித்துக் கொண்டு செல்ல எண்ணுகிறேன் (கொண்டு கைவலித்தல் சூழ்ந்திசின்)" என்கிறாள். "கச்சினன் கழலினன் தேம் தார் மார்பினன்வகை அமை பொலிந்த வனப்பு அமை தெரியல்சுரியல் அம் பொருநனை காண்டிரோ எனஆதிமந்தி பேது உற்று இனைய சிறை பறைந்து உரைஇ செம் குணக்கு ஒழுகும்அம் தண் காவிரி போலகொண்டு கைவலித்தல் சூழ்ந்திசின் யானே" (அகநானூறு பாடல் 76 ன் பகுதி; பாடியவர் பரணர்) அகநானூறு பாடல் 376 ல் காதல் பரத்தை தலைவனுடன் பேசுவதாக வருவது : "செல்லல் மகிழ்ந நின் செய் கடன் உடையென்-மன்கல்லா யானை கடி புனல் கற்று எனமலி புனல் பொருத மருது ஓங்கு படப்பைஒலி கதிர் கழனி கழாஅர் முன்துறைகலி கொள் சுற்றமொடு கரிகால் காண தண் பதம் கொண்டு தவிர்ந்த இன் இசைஒண் பொறி புனை கழல் சே அடி புரளகரும் கச்சு யாத்த காண்பின் அம் வயிற்றுஇரும் பொலம் பாண்டில் மணியொடு தெளிர்ப்பபுனல் நயந்து ஆடும் அத்தி அணி நயந்து காவிரி கொண்டு ஒளித்து ஆங்கு மன்னோநும் வயின் புலத்தல் செல்லேம்" (அகநானூறு பாடல் 376 ன் பகுதி; பாடியவர் பரணர்) பொருள் : செல்லாதே, மருதநிலத் தலைவனே ! (செல்லல் மகிழ்ந). உனக்கு நான் செய்யும் கடமை உள்ளது. (பாகனிடம்) கல்லாத யானை செறிந்த நீரோட்டத்தில் (கடி புனல்) விளையாடக் கற்று நீரில் மோத அதனால் பேரலையாய் எழுந்த நீர் (மலி புனல்) மோதும் மருத மரங்கள் உயர்ந்து நிற்கும் நிலங்களையும் (மருது ஓங்கு படப்பை), செழித்து வளர்ந்த கதிர்களைக் கொண்ட வயல்களையும் உடைய கழார் என்னும் ஊரின் (காவிரி) முன் துறையில் மகிழ்ச்சியால் ஆர்ப்பரிக்கும் சுற்றத்தாரோடு (கலி கொள் சுற்றமொடு) (சோழ மன்னன்) கரிகாலன் கண்டு மகிழ, புனல் விழாக்கோலம் பூண்டு (தண் பதம் கொண்டு) இன்னிசை தரவல்ல ஒளிரும் சதங்கை அணிந்த கழல் (இன்னிசை ஒண் பொறி புனை கழல்) சிவந்த காலடியில் புரள (சேவடி புரள), கருமையான கச்சு அணிந்து காண்பதற்கு அழகிய தன் வயிற்றில் (கருங் கச்சு யாத்த காண்பின் ஆம் வயிற்றில்) பெரும் பொன்னாலான (இரும் பொலம்) பாண்டில் எனும் இசை கருவி மணியுடன் ஒலிக்க (பாண்டில் மணியொடு தெளிர்ப்ப), புனலைப் பெரிதும் விரும்பி (புனல் நயந்து) ஆடிய அத்தியின் (ஆட்டனத்தியின்) அழகினை விரும்பி (ஆடும் அத்தி அணி நயந்து) காவிரி அவனைக் கவர்ந்து ஒளித்துக்கொண்டதைப் போல உன்னைக் கவர்ந்து வைத்துள்ளேன் (காவிரி கொண்டு ஒளித்தாங்கு அன்றோ). (உன் தலைவி உன்னைக் கவர்ந்து செல்லுமாறு) உன்னுடன் புலந்து நிற்க மாட்டேன் (நும் வயின் புலத்தல் செல்லேம்). அகநானூறு 396 லும் காதல் பரத்தை ஒருத்தி தலைவனிடம் சொல்கிறாள் : "இனி யான் விடுக்குவென் அல்லென் மந்திபனி வார் கண்ணள் பல புலந்து உறையஅடும் திறல் அத்தி ஆடு அணி நசைஇநெடு நீர் காவிரி கொண்டு ஒளித்து ஆங்கு நின்மனையோள் வவ்வலும் அஞ்சுவல்" (அகநானூறு 396 ன் பகுதி; பாடியவர் பரணர்) பொருள் : இனி உன்னை விடமாட்டேன் (இனி யான் விடுக்குவென் அல்லென்). ஆதிமந்தி நீர் வார்த்த கண்ணுடன் பலவற்றைச் சொல்லித் துயருறுமாறு (மந்தி பனிவார் கண்ணள் பல புலந்து உறைய), போர்த் திறம் கொண்ட ஆட்டனத்தி (அடுதிறல் அத்தி) ஆடும் அழகினை விரும்பி (ஆடு அணி நசைஇ) பெருவெள்ளம் கொண்ட காவிரி அவனைக் கவர்ந்து ஒளித்துக்கொண்டதைப் போல் உன்னை ஒளித்து வைத்துள்ளேன் (நெடுநீர் காவிரி கொண்டு ஒளித்தாங்கு). (அவனை மீண்டும் அவன் தலைவி ஆதிமந்தி கவர்ந்து கொண்டதைப் போல்) உன் மனையாள் உன்னைக் கவர்ந்து கொள்வாள் என அஞ்சுகிறேன் (நின் மனையாள் வவ்வலும் அஞ்சுவல்). இறுதியாக சங்கமருவிய காலத்துக் காப்பியமான சிலப்பதிகாரம் ஆதிமந்தி - ஆட்டனத்தி காதலைக் குறிக்கக் காணலாம். "மன்னன் கரிகால் வளவன்மகள் வஞ்சிக்கோன் தன்னைப் புனல்கொள்ளத் தான்புனலின் பின்சென்று கன்னவில் தோளாயோ என்னக் கடல்வந்து முன்னிறுத்திக் காட்ட அவனைத் தழீஇக் கொண்டு பொன்னங் கொடிபோலப் போதந்தாள் ..............." (சிலப்பதிகாரம்; மதுரைக் காண்டம்; வஞ்சின மாலை; வரிகள் 11-15) பொருள் : வஞ்சி நகரத் தலைவனைப் (ஆட்டனத்தியை) பேராற்று வெள்ளம் கொண்டு செல்ல, மன்னன் கரிகாலன் பெருவளத்தான் மகள் (ஆதிமந்தி) தானும் அப்புனலின் வழி சென்று, "மலையொத்த தோளினை உடையவனே (கன்னவில் தோளாயோ)" என்று கூவிக் கதற, கடலானது அவனை அவள் முன்னிறுத்திக் காட்ட, அவனைத் தழுவிப் பொற்கொடியைப் போல் திரும்பி வந்தாள். சிலம்பில் ஆதிமந்தி மன்னன் கரிகாலனின் மகளாகவும் ஆட்டனத்தி வஞ்சித் தலைவனாகவும் காட்டப்படுகின்றனர். ஆனால் அவர்களைப் பேசும் சங்கப்பாடல் எதிலும் அத்தகைய வரலாற்றுக் குறிப்பு இல்லை. குறிப்பாக, வரலாற்றுப் பதிவாளராகக் கொள்ளப்படுகிற பரணர் அவர்களைக் குறித்த ஆறு பாடல்களில் ஒன்றில் கூட அவ்வாறு குறிப்பிடவில்லை. எனவே சங்க இலக்கியங்களிலிருந்து, அவர்கள் இருவரும் ஆடுகள மக்களாகவே புலப்படுகின்றனர். சங்கமருவிய காலத்திலேயே காப்பியங்கள் தோன்றின. காப்பியங்கள் தன்னேரில்லாத் தலைவனையே முதன்மைப்படுத்தின. சிலம்பு குடிமக்கள் காப்பியம் எனப் பெயர் பெற்றாலும் கோவலனும் கண்ணகியும் சாதாரணக் குடிமக்கள் அல்லர். மன்னர் குலத்தவராக இல்லாவிடினும் நிலப்பிரபுத்துவ சமூகத்தில் செல்வச் செழிப்புள்ள வணிகர் குலத் தோன்றல்களாகவே காட்டப் பெறுகின்றனர். எனவே சிலம்பில் புகழ்பெற்ற தலைவன் - தலைவியாக சுட்டப்பெறும் ஆட்டனத்தி - ஆதிமந்தியும் ஏற்கனவே அக்கால மக்கள் வழக்கில் திரிபுகளைப் பெற்று மன்னர் குலத்தவராகக் கருதப்பட்டது இயல்பான ஒன்றே. புனைவும் காப்பியத்தின் அங்கம்தானே ! எது எப்படி ஆயினும் உலகக் காதலர்களைக் கொண்டாடும் தமிழ்ச் சமூகம் முதலில் ஆதிமந்தி - ஆட்டனத்தி காதலைத் தலையாயதாய்க் கொண்டாடுவதும், அதனை உலகோர் பார்வைக்குக் கொண்டு செல்வதும் தமிழர் பண்பாட்டை உலகிற்குக் கடத்தும் முயற்சியில் ஒன்றாய் அமையும்.
  47. வெஸ்சின்டீஸ் அணி புள்ளி அடிப்ப‌டையில் ந‌ல்ல‌ நிலையில் நிக்கின‌ம் இந்தியா வெஸ்சின்டீஸ் அணிய‌ பெரிய‌ புள்ளி வித்தியாச‌த்தில் வெல்ல‌னும் ஆனால் வாய்ப்பு மிக‌ குறைவு..............தென் ஆபிரிக்கா வெஸ்சின்டிஸ் அணியிட‌ம் தோத்து சிம்பாவேய‌ வென்றால் கூட‌ இந்தியா வெளிய‌😁............................
  48. தாய்லாந்து ‘டைகர் கிங்டம்’ பூங்காவில் 72 புலிகள் திடீர் மரணம்: கொடிய வைரஸ் பாதிப்பு! 24 Feb, 2026 | 01:16 PM தாய்லாந்தின் சியாங் மாய் நகரில் அமைந்துள்ள புகழ்பெற்ற ‘டைகர் கிங்டம்’ பூங்காவில், கடந்த இரண்டு வார காலப்பகுதியில் மாத்திரம் 72 புலிகள் உயிரிழந்துள்ளமை பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நாட்டின் கால்நடை உற்பத்தி திணைக்களம் நடத்திய முதற்கட்ட சோதனையில், 'கேனைன் டிஸ்டெம்பர் வைரஸ்' எனும் மிக வேகமாகப் பரவக்கூடிய வைரஸ் தொற்றினாலேயே இப்புலிகள் உயிரிழந்துள்ளமை கண்டறியப்பட்டுள்ளது. பொதுவாக நாய்கள் மத்தியில் காணப்படும் இந்த வைரஸ், புலிகளின் சுவாசப்பை, வயிறு மற்றும் நரம்பு மண்டலத்தை கடுமையாகத் தாக்கி மரணத்தை ஏற்படுத்துவதாகத் தெரிவிக்கப்படுகிறது. இது குறித்துத் கருத்துத் தெரிவித்த கால்நடைத் திணைக்கள பணிப்பாளர், "புலிகள் நோய்வாய்ப்பட்டிருப்பதை நாங்கள் கண்டறிந்தபோது நிலைமை கையை மீறிச் சென்றிருந்தது. பூனைகள் அல்லது நாய்களைப் போலன்றி, புலிகளின் நோய் அறிகுறிகளை ஆரம்பத்திலேயே கண்டறிவது மிகவும் கடினமானது" எனக் குறிப்பிட்டுள்ளார். இந்த அனர்த்தத்தைத் தொடர்ந்து, சுமார் 240க்கும் மேற்பட்ட புலிகளைக் கொண்டுள்ள குறித்த பூங்கா இரண்டு வாரங்களுக்குத் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது. அத்துடன் பூங்கா முழுவதும் கிருமி நீக்கம் செய்யும் பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருவதுடன், உயிரிழந்த புலிகளின் உடல்கள் தகனம் செய்யப்பட்டு புதைக்கப்பட்டுள்ளன. சுற்றுலாப் பயணிகள் புலிகளைத் தொட்டுப் பார்ப்பதற்கும் அவற்றுடன் புகைப்படம் எடுப்பதற்கும் இந்த 'டைகர் கிங்டம்' பூங்கா உலகளவில் பிரபலம் என்பதால், இந்தச் செய்தி சுற்றுலாத்துறையிலும் பெரும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. https://www.virakesari.lk/article/239451

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.