Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Leaderboard

  1. தமிழ் சிறி

    கருத்துக்கள உறவுகள்
    12
    Points
    89120
    Posts
  2. goshan_che

    கருத்துக்கள உறவுகள்
    11
    Points
    19869
    Posts
  3. செம்பாட்டான்

    கருத்துக்கள உறவுகள்
    10
    Points
    1610
    Posts
  4. ரசோதரன்

    கருத்துக்கள உறவுகள்
    7
    Points
    3165
    Posts

Popular Content

Showing content with the highest reputation on 02/27/26 in all areas

  1. நேற்றைய இன்றையப் போட்டிகளின் பின், நீங்கள் ஆவலுடன் எதிர் பார்த்த புள்ளி விபரம். முதல் இருவரும் குத்துக் கல்லாடம் போல் அங்கேயே இருக்க, அல்வாயன் 3வது இடத்துக்குத் தாவியுள்ளார். சுமைதாங்கிகளில் மாற்றமில்லை. இன்னும் 3 போட்டிகளே மீதமுள்ளன.
  2. சனிப்பிணம் தனிப்போகாது, இலங்கை பாகிஸ்தானையும் கூட்டிகொண்டு வெளியே போகும். நியுசிலாந்தின் துடுப்பாட்டம் வேலை இடைவேளையில் பார்த்த போது எடுத்திருந்த ஓட்டம் மிகுதி ஓவருக்கு ஒவ்வொரு பந்திற்கும் 1 ஓட்டமாக எடுதாலே 170 எட்டி விடும், நியுசிலாந்து வென்றுவிடும் என நினைத்தேன் 159 மட்டும் எடுத்துள்ளது, நல்ல போட்டியாக இருந்திருக்கும் என நினைக்கிறேன், இங்கிலாந்து அணி உலக கோப்பையினை எடுத்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை (நியுசிலாந்தும் சிறப்பாக விளையாடுகிறது).
  3. விஜய்யை அண்ணா என்று பின்பற்றும் அவரது ரசிகர்களுக்கு இது ஒரு பொருட்டே இல்லை. அவர்கள் எது நடந்தாலும் என்றும் விஜய்யின் ரசிகர்களே. விஜய்யை ஒரு மாற்று சக்தியாக நினைக்காதவர்களுக்கும் இது ஒரு விடயம் அல்ல. சினிமாவில் இது சாதாரணம் மற்றும் இது தட்டில் கிடந்த முழுப் பூசணிக்காய்............ எப்பவோ தெரிந்தது தான்................ ஆனால் முக்கியமான விசயம் ஒன்று உள்ளது.............. 100 ரூபாக்கள் கொடுத்து 50,000 ரசிகர்கள் தேர்தலுக்கு தவெகவின் விருப்ப மனு வாங்கிச் சென்றார்கள். அதில் 500 பேர் மட்டுமே அதை நிரப்பி திருப்பிக் கொடுத்தார்கள்......................🫣. சமூக ஊடகங்களில் ஸ்டேட்டஸ் போடுவது மட்டுமே விஜய் ரசிகர்களின் பிரதான நோக்கம்................ இன்று வரை ஒரு அரசியல் சக்தியாக அவர்கள் திரள்வதற்கான அறிகுறிகளே இல்லை.............. தேர்தல் அன்று வாக்குச் சாவடிகளுக்கு போவார்களா என்பதே சந்தேகம் தான்............................. வீட்டிலிருந்து கூட திரிஷா மட்டும் தான் போவார் போல.......................
  4. "நடிகையுடன் தொடர்பு! மன உளைச்சல்!" விஜய்யிடம் இருந்து விவாகரத்து கேட்டு சங்கீதா மனு! Vishnupriya RUpdated: Friday, February 27, 2026, 17:14 [IST] சென்னை: நடிகரும் தவெக தலைவருமான விஜய் மனைவி சங்கீதா, செங்கல்பட்டு குடும்ப நல நீதிமன்றத்தில் விவாகரத்து கோரி மனு தாக்கல் செய்துள்ளார். இதனால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. Also Read இதுகுறித்து சங்கீதா தனது மனுவில் கூறியிருப்பதாவது: எங்களது திருமண வாழ்க்கை தொடக்க காலத்தில் மகிழ்ச்சியாகவே கடந்தது. கடந்த 2021 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் எனது கணவர் விஜய்க்கு ஒரு நடிகையுடன் தொடர்பு இருப்பது எனக்கு தெரியவந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்தேன். பின்னர் கடந்த 2021 செப்டம்பர் டூ 2022 ஆம் ஆண்டு பிப்ரவரி கால கட்டத்தில் வழக்கறிஞர் மூலம் விஜய்யிடம் பேசினேன். அப்போது அந்த நடிகையுடனான தொடர்பை துண்டிப்பதாக தெரிவித்திருந்தார். ஆனால் அவர் என்னை ஒதுக்கி வைத்துவிட்டு நடிகையுடன் தொடர்பை தொடர்ந்தார். இது எனக்கு மனஉளைச்சலை ஏற்படுத்தியது. திருமணத்துக்கு மீறிய இந்த உறவை நான் தட்டிக் கேட்டதால் பொருளாதார ரீதியாக எனக்கு நிறைய கட்டுப்பாடுகளை விஜய் விதித்தார். Recommended For You குழந்தைகளின் படிப்பு பாதிக்கப்படும், அவர்களின் மனமும் பாதிக்கப்படும் என்பதால் விவாகரத்து கோருவதை தள்ளி வைத்தேன். அந்த நடிகையுடன் பல்வேறு பொது இடங்களுக்கும் வெளிநாடுகளுக்கும் விஜய் சென்று வருகிறார். அந்த நடிகையுடன் என் கணவருடன் எடுத்த புகைப்படங்களை சமூகவலைதளங்களில் பரப்பி வருகிறார். அந்த புகைப்படங்களுக்கு விஜய் எப்போதும் எதிர்ப்பு தெரிவித்ததில்லை. இதனால் எனக்கும் என் குழந்தைகளுக்கும் அவமானத்தை ஏற்படுத்தியுள்ளது. விவாகரத்துக்கான நோட்டீஸ் அனுப்பியும் இரு முறை பேச்சுவார்த்தை நடத்தியும் விஜய் ஒத்துழைக்கவில்லை. கவுரவமாக நவம்பர் 9ஆம் தேதி விஜய்யுடன் மீண்டும் பேச்சுவார்த்தை நடத்தி சுமுகமாக பிரிய விரும்பினேன். ஆனால் அதற்கும் அவர் ஒத்துழைக்கவில்லை. இதனால் நீதிமன்றத்தை நாடுவதை தவிர வேறு வழியில்லை என்பதை உணர்ந்தேன். You May Also Like அந்த நடிகையின் பெயரை தற்போது குறிப்பிடுவதை தவிர்க்கிறேன். கணவன்- மனைவி உறவில் விஜய் நம்பிக்கை துரோகம் செய்துவிட்டார். சென்சிட்டிவான இந்த வழக்கை தனி அறையில் விசாரக்க வேண்டும். 2021 ஆம் ஆண்டு முதல் என்னை வார்த்தையால் விஜய் நிறைய முறை அவமானப்படுத்தியுள்ளார். நெருக்கடி ஏற்படும் பட்சத்தில் எனது கணவருக்கும் நடிகைக்குமான ஆதாரங்களை வெளியிடுவேன். இவ்வாறு சங்கீதா தனது மனுவில் பல்வேறு அதிர்ச்சி தகவல்களை தெரிவித்துள்ளார். நடிகர் விஜய்க்கும் சங்கீதாவுக்கும் இடையே 1999 ஆம் ஆண்டு திருமணம் நடந்தது. இவர்களுக்கு ஒரு மகன், மகள் உள்ளனர். திருமணமாகி 27 ஆண்டுகள் ஆன நிலையில் தற்போது சங்கீதா விவாகரத்து கோரியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. கடந்த 2023 ஆம் ஆண்டு முதலே விஜய்யை சங்கீதா பிரிந்து வாழ்ந்து வருகிறார். https://tamil.oneindia.com/news/chennai/vijay-s-wife-sangeetha-files-for-divorce-in-chengalpattu-family-court-reports-777257.html?ref_source=OI-TA&ref_medium=Home-Page&ref_campaign=News-Cards தவெக தலைவர் விஜய்யின் மனைவி சங்கீதா செங்கல்பட்டு குடும்ப நல நீதிமன்றத்தில் விவாகரத்து வேண்டி மனு தாக்கல் செய்துள்ளார். என விகடனும் செய்தி போட்டுள்ளது. டிஸ்கி சோனாமுத்தா…போச்சா…. பின்ன திமுகவை நோண்டினா விட்டுவாங்களா.
  5. இன்றைய சுப்பர் 8 சுற்றுப் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய நியூஸிலாந்து அணி கிளென் பிலிப்ஸின் வேகமான 39 (28 பந்துகள்), டிம் செய்ஃபேர்ட்டின் விரைவான 35 (25 பந்துகள்), பின் அலெனின் அதிரடியான 29 (19 ) ஓட்டங்களுடனும் 7 விக்கெட்டுகளை இழந்து 159 ஓட்டங்களை எடுத்தது. பதிலுக்குத் துடுப்பெடுத்தாடிய இங்கிலாந்து அணி, ஆரம்பத்தில் இருந்தே விக்கெட்டுகளை பறிகொடுத்து தோல்வியை நோக்கி போயிருந்தபோதும் டொம் பண்டனின் வேகமான 33 (24 பந்துகள்), வில் ஜக்ஸ் ஆட்டமிழக்காமல் அதிரடியாக எடுத்த 32 (18 பந்துகள்), இறுதி ஓவர்களில் றெஹான் அஹ்மட் ஆட்டம் இழக்காமல் புயல்வேகத்தில் எடுத்த 19 (07 பந்துகள்) ஓட்டங்களுடன் 19.3 ஓவர்களில் 6 விக்கெட்டுகளை இழந்து 161 ஓட்டங்களை எடுத்து வெற்றி இலக்கை அடைந்தது. முடிவு: இங்கிலாந்து அணி 4 விக்கெட்டுகளால் வெற்றியீட்டியது. இங்கிலாந்து அணி வெல்லும் எனக் கணித்த 17 பேருக்குத் தலா இரு புள்ளிகள் கிடைக்கின்றன. நியூஸிலாந்து அணி வெல்லும் எனக் கணித்த நான்கு பேருக்குப் புள்ளிகள் கிடையாது. அத்தோடு சுப்பர் 8 சுற்றில் விளையாடாத ஆப்கானிஸ்தான் அணி வெல்லும் எனக் கணித்த இருவருக்கும் புள்ளிகள் கிடையாது!
  6. யாழ். வட்டுக்கோட்டையில் விஜய்க்கு எதிராக கண்டன ஆர்ப்பாட்டம்! இளைய தளபதி விஜயக்கு எதிராக எதிர்வரும் 2026.02.29 அன்று யாழ். வட்டுக்கோட்டையில் மாபெரும் கண்டன நிழல் ஆர்ப்பாட்டம் ஒன்று ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. நடிகர் விஜய் ஒரு நடிகையுடன் திருமணத்தை மீறிய உறவை தொடர்ந்து வருவதாகக் குற்றம் சாட்டி, அவரது மனைவி சங்கீதா விவாகரத்து கோரி மனு தாக்கல் செய்துள்ளார். தான் கண்டுபிடித்த பிறகும் விஜய் அந்த உறவை கைவிடவில்லை என சங்கீதா தனது புகாரில் குறிப்பிட்டுள்ளதாகப் பரபரப்பு தகவல் வெளியாகியுள்ளது. இந்நிலையில் சங்கீதாவின் பிறந்த ஊரான யாழ். வட்டுக்கோட்டை பகுதி மக்கள் இணைந்து இந்த நிழல் ஆர்ப்பாட்டத்தை 2026.02.29 அன்று முன்னெடுக்க தீர்மானித்துள்ளனர். இது விஜயின் அரசியலுக்கு மிகவும் பாதகமான ஒரு விடயமாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது. (யாவும் கற்பனையே😏) கஜி ரிப்போர்ட்
  7. 🤣............... ஆப்கானுக்கு தாலி கட்டியது போல ஆகி விட்டது என் நிலை....................🤣. முடியவில்லை, இன்னும் இருக்கின்றது, அண்ணா.................. சூப்பர் எட்டில் ஒரு குரூப்பில் முதலாவதாக வருவார்கள் என்று கூட தெரிவு செய்திருக்கின்றேன்................🤭. .... புல்லாகிப் பூடாய் புழுவாய் மரமாகி பல்விருகமாகி பறவையாய்ப் பாம்பாகி .... ... ஆப்கானை தெரிந்து.......................🤣.
  8. இரண்டு லட்சத்து நாற்பதினாயிரம் பேர் தமிழர் கொல்லப்பட்டது ...கிரிஸ்தவ மதகுருவுக்கு தெரியும் ...அதுக்கு இதுவரை ஒரு கதையில்லை ..300 பேர் கொல்லப்பட்டதை (கண்டிக்கப்படவேண்டும்) விசுவரூபமாக்கி உலகத்துக்கு காட்டமுற்படுவது .....என்ன நியாயம்....தமிழர் மனித இனமில்லையா
  9. இரண்டு நாட்டிலும் பூட்டிய அறையில் பரீட்சை எழுதி சித்தி எய்திய கல்வியாளர் தொகை கூடிவிட்டதோ?
  10. இன்றைய போட்டிகளை விமானப் பயணத்தில் பார்க்கம்கூடியதாக இருந்தது😀 இந்தியா அதிகூடிய ஓட்டங்கள் எடுத்தது மகிழ்ச்சி 🤩 புள்ளிகள் விபரம் நாளை தர முயற்சிக்கின்றேன்😊
  11. அத தெரண கருத்துப்படங்கள்.
  12. மிகவும் சரி வஞ்சிக்கப்பட்டது தமிழ்நாட்டு அண்ணி விஜயலட்சுமி இலங்கை அண்ணி சங்கீதா என்று பார்க்க வேண்டியது இல்லை வஞ்சிக்கப்பட்ட அண்ணிமார்களுக்கு நீதி வேண்டும்.
  13. மிக்க நன்றி செம்பாட்டான். களத்தில் போட்டிகளை எப்போதும் நடத்தும் கிருபனுக்கும், கந்தப்புவுக்கும் ஒரு உதவும் கரம் கிடைத்திருப்பது நல்லதொரு விடயம்.................👍.
  14. ஆமோதிக்கிறேன். நானும் எனக்காக காத்திருப்பதாக அல்லவா எண்ணி கொண்டேன்😂 இல(ழ)வு காத்த கிளி😂
  15. ❤️........................ மிக்க நன்றி செம்பாட்டான். களத்தில் போட்டிகளை எப்போதும் நடத்தும் கிருபனுக்கும், கந்தப்புவுக்கும் ஒரு உதவும் கரம் கிடைத்திருப்பது நல்லதொரு விடயம்.................👍.
  16. சாச்சா. நான் சும்மா பியோன். அங்க எடுத்து இங்க வைக்கிற வேலை.
  17. 😂 வேற லெவல் போங்கோ😂 நாளைக்கு எடுக்கும் போது ஒரு தென்னம்பிள்ளையை சேத்து எரிக்கோணும் 😂 கந்தப்பு செஞ்சுரி அடிச்சிட்டார். இப்ப நீங்களோ கிளாக்கர் வேலை? 😂
  18. வர்ணணை கேட்டபோது நீங்கள் சொன்னதுதான் மனதில் வந்து போனது. இன்னும் எத்தனை போட்டிகளைத்தான் இங்கிலாந்து ஒரு தனி மனிதனால் வெல்ல முடியும்?
  19. ரேடியோ வர்ணனையில் கேட்டு கொண்டே கார் பார்க்கிங் நோக்கி போனேன். போகும் போது இங்கிலாந்து எப்படியும் தோக்கும், முடிவை கேட்கதேவையில்லை, பார்க் பண்ணி விட்டு இறங்கி போவோம் என நினைத்தேன்: ரெஹான் ஆஹ்மெட் உள்ளே வர, அவர் அண்மையில் இங்கிலாந்து வீரர்கள் தமாசாக தமக்குள் நடத்திய range hitting இல் வென்றவர் எண்டார்கள்.. அட இதுவும் ஒரு ரேஞ் ஹிட்டிங் போட்டி போலத்தானே வந்து நிக்கிது என நினைத்தபடி, காரில் இருந்து கேட்க ஆரம்பித்தேன். சொன்ன படியே அடித்து துவம்சம் பண்ணி விட்டார்கள் ரெஹானும், வில்லும். ரெஹென் ஆமெட் இரெட்டை குடியுரிமை எடுத்தால் சாத்தியம்😂
  20. செவ்வணக்கம் தோழர் - சுப.சோமசுந்தரம் பொதுவாழ்க்கைக்குத் தம்மை அர்ப்பணித்த பொதுவுடைமைத் தோழர்களை நினைக்கும்போதெல்லாம் எனக்குப் புறநானூற்றுப் பாடல் ஒன்றே நினைவுக்கு வருவதுண்டு. அவர்களால்தான் இந்த உலகமே இயங்குகிறது என்று அப்பாடல் சொல்வதாய் உணர்கிறேன். இப்போது நம்மைக் கண்ணீர்க் கடலில் ஆழ்த்தி நம்மைப் பிரிந்த தோழர் ஆர்.நல்லகண்ணு பொதுவுடைமையாளராய் வாழ்ந்தவர் என்பதற்கு ஒரு படி மேலாகச் சென்று பொதுவுடைமையாகவே வாழ்ந்தவர் (More than being a communist, he was communism personified) என்பதே பொருத்தம். "உண்டால் அம்ம இவ்வுலகம்" (இவ்வுலகம் உண்டென்றால் - அதாவது இயங்குகிறது என்றால் - யாரால் தெரியுமா ?) என்று தொடங்கும் பாடல் அன்னாரின் பண்பு நலன்களை அடுக்குகிறது. "இந்திரர் அமிழ்தம் இயைவதாயினும் இனிதெனத் தமியர் உண்டலுமிலரே" என்றவிடத்து, இந்திரர் அமிழ்தமே தந்தாலும் அதனை இனிது எனத் தாம் மட்டுமே உண்ண மாட்டார்கள் எனச் சொல்கிறது பாடல். சொந்தக் கட்சி அவரது தன்னிகரற்ற சேவையைப் பாராட்டி ஒரு கோடி ரூபாயும் காரும் தந்த போது அவற்றைக் கட்சிக்கே திருப்பித் தந்த போதும், தமிழக அரசு 'தகைசால் தமிழர்' விருதளித்துக் கொடுத்த பத்து இலட்சம் ரூபாயைக் கூடுதலாக ஐயாயிரம் ரூபாயோடு தமிழக அரசுக்கே தந்த போதும் பாடலின் அவ்வரிக்குப் பொருளானார் தோழர் நல்லகண்ணு. சுதந்திரம் பெற்ற கையோடு அமைந்த இந்திய அரசு கம்யூனிஸ்டுகளை வேட்டையாடி, தேடித் தேடிக் கைது செய்த வரலாறு அறிந்தோர் வெகு சிலரே. தோழர் நல்லகண்ணு, ஜேக்கப் வாத்தியார் என்று அன்போடு அழைக்கப்பட்ட ஆசிரியர் தோழர் ஜேக்கப் போன்றோரைக் காவல் நிலையத்தில் தலைகீழாகத் தொங்கவிட்டு மீசையையும் கண்புருவ மயிரையும் பிடுங்கிய (ஒரு பொதுக் கூட்டத்தில் ஜேக்கப் வாத்தியாரே சொல்லக் கேட்டது) கொடுமையிலும் தளராத மனத் திட்பத்தைக் குறிக்கும் வரியை நாம் குறித்த புறநானூற்றுப் பாடலில் தேடியும் கிடைக்கவில்லை. 'அயர்விலர்' என்று பாடலில் வரும் ஒரு சொல்லை ஆறுதலாய்க் கொள்ளலாம். தோழர் நல்லகண்ணுவின் தந்தையார் தம் பிள்ளைகளுக்கு, இருந்த சிறிது சொத்துகளைப் பங்களித்த போது தோழர் பங்கினை மட்டும் இவருக்கு எழுதாமல் மருமகள் பெயருக்கு எழுதி வைத்து விட்டார் - தோழர் தமக்கென வைக்காமல் பொதுக் காரியங்களுக்குக் கொடுத்து விடுவார் என்ற பயம்தான். புறநானூற்றுப் பாடலின் பின்வரும் வரிக்கு இலக்கணமாய்த் தோழர் வாழ்ந்தார் என்பதற்கு அதுவே சான்று : "தமக்கென முயலா நோன்தாள் பிறர்க்கென முயலுநர் உண்மையானே". மேலும், உலகினை இயங்க வைப்போரின் வாழ்நிலை பற்றி மட்டுமே பாடல் பேசுகிறது (அன்னார்க்கு மரணம் இல்லை என்பதாலோ !). அவர்கள் இப்பூலகை விட்டுச் செல்லும் போது அழியும் உடலும் அழியாப் பயன் தரும் என்பதைப் பேசவில்லை. தோழர் மறைவுக்குப் பின் தம் உடலை ஈந்து மருத்துவ மாணாக்கர்க்குப் பாடமானார். எனவே புறநானூறு சொன்ன நல்வினைகளில் வாழ்ந்தார்; அது சொல்லாமல் விட்ட நன்னெறியிலும் வாழ்ந்தார். நாம் குறித்த புறநானூற்றுப் பாடலும் பொருளும் முழுமையாய் அறிய விழைவோர் "உண்டால் அம்ம இவ்வுலகம்" எனும் முதல் வரியை கூகுள் ஆண்டவரிடம் சொல்லிப் பெறலாம். https://www.facebook.com/share/p/1DrAP36SDy/
  21. முன்னர் காமராஜரைக் குறிப்பிடுவர். நம்முன் வாழ்ந்து வரலாறாக இருக்கிறார் தோழர் நல்லகண்ணு ஐயா.
  22. நாங்க தான் திரும்ப திரும்ப சொல்கிறோம் இல்லையா எம் ஜி ஆர் வழியில் ஆட்சி அதிகாரத்தை பங்கிடுவோம் என்று....😛
  23. த்ரிஷா தான் தமிழகத்தின் எதிர்கால முதலமைச்சர். பொறுத்திருந்து பாருங்கள் .... ஜெயலலிதாவின் இடத்தை பிடிப்பார். Prashanthan Navaratnam
  24. தான் கேட்டும் விஜை விவாகரத்து தரவில்லை எனவே கோர்ட்டுக்கு வருகிறேன் என்கிறார் சங்கீதா. பேசாமல் கொடுத்து விட்டு போயிருக்கலாம். விஜி அண்ணி விடயத்தில் சீமான் விட்ட அதே தவறை விஜையும் விடுகிறார். தாய்குல வோட்டை லம்பா அள்ளுவார் என்றார்கள். இப்போ அது அம்போ.
  25. யார் முதலமைச்சர் நீதிபதி இளஞ்செழியன், சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன், யாழ்.மாநகர சபை உறுப்பினர் கபிலன், முன்னாள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, கம்பன் கழகம் ஜெயராஜ், நாடாளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா இவர்கள் வடக்கு மாகாணசபைத் தேர்தலை எதிர்கொண்டால் இவர்களில் யார் முதலமைச்சராகும் தகுதியானவர்? யாழ்ப்பாண புலனாய்வு
  26. வேல்ஸ் திருச்சபையில் சிறுவர் பாலியல் துஷ்பிரயோகம் மூடிமறைப்பு: விசாரணை அறிக்கையில் வெளியான தகவல்கள்! ஆண்டனி பியர்ஸ் (Anthony Pierce) என்ற பாதிரியார், 15 வயது சிறுவன் ஒருவனைப் பாலியல் ரீதியாகத் துன்புறுத்தியதாகக் கூறப்படும் புகார்களை வேல்ஸ் திருச்சபை சுமார் 30 ஆண்டுகளுக்கும் மேலாக மூடிமறைத்துள்ளது. இந்த மூடிமறைப்பால், ஆண்டனி பியர்ஸ் (Anthony Pierce) திருச்சபையின் உயரிய பதவிகளுக்கு உயர்ந்து, பின்னர் ஸ்வான்சி மற்றும் பிரெகன் (Swansea and Brecon) பகுதியின் பிஷப்பாக மாற முடிந்தது. இதேவேளை, 85 வயதான பியர்ஸ், மற்றொரு சிறுவனுக்கு எதிரான பாலியல் குற்றங்களுக்காகக் கடந்த ஆண்டு சிறையிலடைக்கப்பட்டார் . இதேவேளை, கடந்த 1986 முதல் 2010 வரை நான்கு முறை ஆண்டனி பியர்ஸ் (Anthony Pierce) மீது புகார்கள் அளிக்கப்பட்டும், திருச்சபையின் மூத்த அதிகாரிகள் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை என தெரிவிக்கப்படுகிறது. திருச்சபையின் நற்பெயரைப் பாதுகாப்பதற்காக உண்மைகளை “தரைவிரிப்பிற்கு அடியில் தள்ளி மறைக்கும்” கலாசாரம் அங்கு நிலவியதாக அறிக்கை சுட்டிக்காட்டுகிறது. இந்நிலையில் இந்த விவகாரத்தில் பாதிக்கப்பட்ட சிறுவன் தற்போது உயிருடன் இல்லை எனவும் கூறப்படுகிறது. இதேவேளை, 1999-ஆம் ஆண்டு பியர்ஸ் பிஷப்பாகத் தேர்ந்தெடுக்கப்பட்டபோது, அவரது நடத்தை குறித்த வதந்திகள் தெரிந்திருந்தும், அப்போதைய பேராயர் அல்வின் ரைஸ் ஜோன்ஸ் அவற்றை அலட்சியம் செய்ததாகக் கூறப்படுகிறது. மேலும், பாதிக்கப்பட்ட சிறுவன் ஆண் என்பதால் இது “பெடோஃபிலியா” இல்லை என்ற தவறான புரிதலும் திருச்சபையில் நிலவியது கண்டறியப்பட்டுள்ளது. தற்போதைய பேராயர் செர்ரி வான் (Cherry Vann) இந்த அறிக்கையை ஏற்றுக்கொண்டு தனது ஆழ்ந்த வருத்தத்தைத் தெரிவித்துள்ளார். இந்நிலையில் பாதிக்கப்பட்டவர்களின் புகார்களைக் கவனிக்கத் தவறிய வாய்ப்புகள் மற்றும் தவறான அணுகுமுறைகளை இந்த அறிக்கை தெளிவாகக் காட்டுகிறது என அவர் ஒப்புக்கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. https://athavannews.com/2026/1466498
  27. அத தெரண கருத்துப்படங்கள்.
  28. இரகுவரனும் இரவிக்கை நாடாவும். சேவல்கள் கூவ காகங்கள் கரைய இளங்காலைக் கதிர் காமத்துடன் பூமியைத் தழுவிக் கிடக்கையில் நல்லூரானின் முன் சந்நிதியில் மேளங்கள் முழங்க மாவிட்டபுரத்தழகி பூரணியின் பொன்னிறக் கழுத்தில் மங்கலநாண் பூட்டினான் நம்ம இரகுவரன் தாவணி போர்த்தி தாவி நடந்தவளை தரதரவென இழுத்து வந்து அறிவுரை தந்து ஆறுமுழம் சீலையை அழகாய் உடுத்தி விட்டு அலங்கரித்த அறைக்குள் தள்ளி விட்டனர் தோழியர் " இஞ்சேருங்கோ கொஞ்சம் வாங்கோ " கெஞ்சி கொஞ்சி அழைக்கிறாள் வஞ்சி, நம்ம இரகுவும் கண்கள் மின்ன நெஞ்சம் களித்திட கால்கள் தயங்க "என்னங்கோ " ஒற்றை வார்த்தை முனகி வருகிறது கட்டிய சேலை காலடியில் விழுந்து கிடக்க ஜாக்கட் தளர்ந்து தோள்வழி சரிய நின்றவள் கொஞ்சம் " இந்த நாடா கொக்கியை கழட்டி விடுங்களேன் கை எட்டுதில்லை " கிளி கொஞ்சுகிறது தாமரைக் கிழங்கும் சுவாசித்திருக்கும் தண்ணியில்லாத் தாமரைக் குளத்தில் முட்டிமோதி கிழங்கெடுக்கும் வராகம்போல் - நம்ம ரகுவும் தட்டுத்தடுமாறி கொக்கியை கழட்டுகிறான் ஆடை பாதி ஆசை மீதியென அலைக்கழிந்தவளை அள்ளியெடுத்து தன்னுடன் சேர்த்தணைத்தபடி அப்படி இப்படியென ஆயிற்று ஐயிரண்டு மாதம் அவன் கைகளில் ஓர் மழலை கொள்ளைச்சிரிப்புடன் காற்றும் புகாத நெருக்கத்திலும் முளைத்திருந்தான் நடுவில் மூத்தமகன் கட்டிலின் ஓர் புறத்தில் பூரணி ஆங்கே ஓர் ஓரத்தில் படுத்தும் புரண்டு படுத்திடவும் கால் நீட்டிடவும் இடமில்லை நம்ம இரகுவரனுக்கு கனிந்ததொரு சிறுபொழுதில் கணநேர ஸ்பரிசத்தில் மலர்ந்து சிரித்தன இரு மொட்டுகள் கொள்ளை அழகுடன் பூரணியோடு பிள்ளைகளுமாய் கட்டில் நிறைந்திட - இன்று மன்னவன் ரகு படுப்பதோ ஹாலில் கிடைக்கும் செற்றியில் செற்றியின் கட்டிலை இழுத்துறங்க அருகே ஒரு முனகல் பார்த்தால் காலடியில் வந்து கிடக்குது கடுவன் நாயும் நாலைந்து வருடங்கள் வேலையும் வீடுமாய் விரைந்தோடிட பூரணியின் நாணமும் வெட்கமும் கூடவே போயின நம்ம ரகுவுக்கு காதலும் காமமும் கணவாய் போயின ஆசைகள் மட்டும் அடிமனதில் கனன்று கொண்டிருக்கும் கல்லுக்குள் தேரையாய் கரைந்திருந்த நேரமது பிள்ளைகள் வளர்ந்தன படித்தன வெளியே பறந்தன " இஞ்சேருங்கோ இங்கே கொஞ்சம் வாங்களேன் " பூரணி அழைக்கிறாள் கிளி கொஞ்சும் குரலில் அதுவும் கொஞ்சம் என்கிறாள் அந்த கொஞ்சம் இன்று கொஞ்சத்தானோ , கற்பனைகள் பல அறைக்குள் வந்து அருகில் நெருங்கி ஆசையை மறைத்து மீசையை முறுக்கி "என்ன" என்று மிடுக்காய் வினவ மோகமாய் முறுவலித்து மெதுவாய் சொல்கின்றாள் இரவிக்கைக் கொக்கி நெளிஞ்சு போச்சு கையால் கழட்டிட வருகுதில்லை , முறுவலிக்கிறாள் பூரணி பரந்த முதுகு பழைய கதைகள் பல கூறுது மனம் சூடாகுது எனக்கு மட்டுமா அவளும் இந்நாள்வரை இதுக்காக காத்திருந்தாளா பல்லால் கடித்து இறுக்கி இழுத்திட ரவிக்கை நாடாவும் அறுந்து விட கழன்ற கொக்கியும் தெறித்துப் பறந்தது பயந்த மாதும் அவன் மார்பில் பதுங்கினள் பாசமுடன் பரிவாய் ரகுவரனும் அவளை மெதுவாய் அணைக்கிறான் சத்தம் கேட்டு அங்கே வந்த கடுவன் நாயும் கதவால் எட்டிப் பார்த்தே அனுங்கியவாறு ஹாலுக்கு வந்து செற்றியை பார்த்துக் கொண்டு வாலையும் ஆட்டியபடி நடந்தது வாசற்படிக்கு ......! யாழ் இணையம் 28 க்காக ஆக்கம் சுவி .......!
  29. பிச்சுமணி எனும் கோவில் மணி அடிக்கும் கரெக்டரில் இருக்கும் வடிவேலு தனக்கு அரச வேலை கிடைத்ததும் சொல்லுவார்… நான் அடிச்சமணி ஆண்டவனுக்கு கேட்டதோ இல்லையோ அரசாங்கத்துக்கு கேட்டிருக்கு… அது போல ஆப்கானிஸ்தான் “அடிக்கும்” என நீங்கள் சொன்னது தலிபானுக்கு கேட்டிருக்கு…😂 நேற்றிரவு எல்லையில் பாகிஸ்தான் ஆமிக்கு சப்பல் அடியாம்.
  30. ஆப்கானிஸ்தான் இலங்கை, அவுஸ்திரேலியா விளையாடிய குழுவில் இருந்திருந்தால் கட்டாயம் சூப்பர் 8 க்கு சென்று இருக்கும். நானும் சிலவேளை ஆப்கானிஸ்தான் நியூசிலாந்தினை வெல்லலாம் என முதலில் நினைத்தேன். பிறகு நியூசிலாந்தினை தெரிவு செய்தேன்.
  31. அதென்றால் உண்மைதான். ஆனாலும். ஸிம்பாப்வே அவிஸ்ரேலியாவுடன் விளையாடின விளையாட்டுத்தான் உச்சக்கட்டம். சொல்லி அடிச்சாங்கள்.
  32. சிம்பாவேயுடன் விளையாடிய மேற்கிந்திய தீவுகள் அணி 254 ஓட்டங்கள் எடுத்தது. சிம்பாவேயுடன் எதிர்த்து விளையாடிய இந்தியா அணியும் 256 ஓட்டங்கள் எடுத்திருக்கிறது. அடுத்து தென்னாப்பிரிக்கா அணி சிம்பாவேக்கு எதிராக விளையாடப்போகிறது. மருந்துகள் தவறாமல் எடுங்கோ. நன்றாக ஓய்வு எடுங்கள்
  33. நான் அந்த வீடியோவை பார்க்க முயலவில்லை, வசீ, ஆனால் அவர்கள் நிற்கும் நிலைகளைப் பார்த்தாலே அவர்களின் போக்குகள் புரிகின்றன........... பொதுவாகவே எவ்வகையான கடும் போக்காளர்களிடமும் அவர்களுக்கு சார்பானவற்றை அன்றி வேறு எவற்றையும் பேச முடிவதில்லை............ அவர்களும் இறுதி வரை தாண்டி வெளியே வருவதில்லை................
  34. பாலை தண்ணீரில் கழுவி சுத்தமாக விற்கிறார்.
  35. ஈழப்போரில்... புலியை எதிர் கொள்ள முடியாமல், 11 நாடுகளுடன் சேர்ந்து போரிட்ட சிங்களவன்... இதைச் சொல்ல, எந்த அருகதையும் கிடையாது. அத்துடன்... உனக்கு ராஜபக்ச குடும்பம், "படி அளக்கிற" ஆட்களாக இருக்கலாம். அதற்காக நாமல்... ஆளுமை, ஆட்டுக் குட்டி என்றெல்லாம் கம்பு சுற்ற வேண்டாம். எமக்கு நாமல், ஒரு காமெடி பீஸ் மட்டுமே.
  36. நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிடும் AI கொலம்பியா நாடாளுமன்ற தேர்தலில் AI போட்டியிட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தென் அமெரிக்க நாடான கொலம்பியாவில் மார்ச் 8 ஆம் திகதி நாடாளுமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் பழங்குடி மக்களுக்காக ஒதுக்கப்பட்ட இடத்தில் AI போட்டியிட உள்ளது. கொலம்பியாவின் கரீபியன் கடற்கரையில் உள்ள ஜெனு சமூகத்தைச் சேர்ந்த கார்லோஸ் ரெடோண்டோ என்பவர் இந்த AI அவதாரை உருவாக்கி, Gaitana (கைடானா) என பெயரிட்டுள்ளார். கைடானா என்பவர் 16 ஆம் நூற்றாண்டில் ஸ்பானிஷ் காலனியாதிக்கத்தை எதிர்த்த பழங்குடி மக்களின் தலைவி ஆவார். இந்த கைடானா ரோபோவின் குரல் மற்றும் நீல நிற தோலுடன் வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த கைடானாவிற்கு வாக்களிக்க விரும்பும் வாக்காளர்கள், வாக்குச்சீட்டில் “IA” என்ற பெயரை தேட வேண்டும். இது “Inteligencia Artificial” என்பதன் ஸ்பானிஷ் சுருக்கம் ஆகும். கொலம்பிய சட்டம் மனிதரல்லாத வேட்பாளரை முறையாகப் பதிவு செய்ய அனுமதிக்காததால், கைடானா வெற்றி பெற்றால், கைதானாவின் உத்தரவுகளின்படி செயல்படும் ஒருவர் நாடாளுமன்ற உறுப்பினராக இருக்க தேர்தல் அதிகாரிகள் ஒப்புதல் அளித்துள்ளனர். உதாரணமாக, 200 பக்க மசோதா அறிமுகப்படுத்தப்பட்டால், கைடனா அதை முக்கிய தரவுகளைச் சுருக்கமாக மக்கள் எளிதாக புரிந்து கொள்ளும் வகையில் Info Graphics வடிவத்திற்கு மாற்றி, 10,000 க்கும் மேற்பட்ட மக்களைக் கொண்ட தனது சமூகத்துடன் பகிர்ந்து கொள்ளும். பங்கேற்பாளர்கள் வெளிப்படுத்தும் கருத்துக்களை, “ஆம்” மற்றும் “இல்லை” என்ற நிலைப்பாடுகளாக வடிகட்டி கைடனா அவற்றை எண்ணுவார். எந்தப் பக்கம் 50 சதவீதத்திற்கும்அதிகமான ஆதரவை பெறுகிறதோ அதுவே நாடாளுமன்றத்தில் அது எவ்வாறு வாக்களிக்கிறார் என்பதைத் தீர்மானிக்கும் என கூறப்படுகிறது. தரவு பாதுகாப்பு மற்றும் மாறுபட்ட கருத்துகளின் ஒருங்கிணைப்பு போன்ற பகுதிகளில் இந்த கைடானாவை இன்னும் மேம்படுத்த வேண்டியது உள்ளதாக அதை உருவாக்கிய ரெடோண்டோ ஒப்புக்கொள்கிறார். இந்த நடவடிக்கைக்கு பலரும் வரவேற்பு தெரிவித்தாலும், ஜனநாயக நடைமுறையில் AIயின் நேரடி பங்களிப்பு அவசியமா என பலரும் கேள்வி எழுப்பி வருகின்றனர். https://athavannews.com/2026/1466304
  37. வணக்கம் வாருங்கள் ... இப்பவும் இப்படி தமிழ்விளக்கம் கொடுக்கும் யாழ் தமிழரை காண்பதில் அதி சந்தோசம்
  38. கனிந்ததொரு சிறுபொழுதில் கணநேர ஸ்பரிசத்தில் மலர்ந்து சிரித்தன இரு மொட்டுகள் கொள்ளை அழகுடன் பூரணியோடு பிள்ளைகளுமாய் கட்டில் நிறைந்திட - இன்று மன்னவன் ரகு படுப்பதோ ஹாலில் கிடைக்கும் செற்றியில் இது வீட்டுக்கு வீடு வாசல்படிதான் ....எனினும் கிடைக்கும் இடைவெளியில்... அந்த சிலுசிலுப்பான நேரங்கள் ...சொற்கம்தானே சுவியர் ...இதிலை கவித்திறனைவிட ...உங்கள் ஆத்மார்ந்த அனுபவிப்பு ...கவிதையை உயிரோட்டமாக்குகிறது
  39. இன்றைய சுப்பர் 8 சுற்றுப் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடப் பணிக்கப்பட்ட நியூஸிலாந்து அணி, ஆரம்பத்தில் விக்கெட்டுகளைப் பறிகொடுத்து தடுமாறி ஒரு கட்டத்தில் 6 விக்கெட்டுகள் இழப்பிற்கு 84 ஓட்டங்களுடனுன் இருந்தபோதும் அணித்தலைவர் மிற்செல் சான்ட்னெரின் புயல்வேக 47 (26 பந்துகள்), கோல் மக்கொஞ்சியின் ஆட்டமிழக்காத 31 (23 பந்துகள்) ஓட்டங்கள், மற்றும் ரச்சின் ரவீந்திராவின் வேகமான 32 (22 பந்துகள்) ஓட்டங்களுடன் 7 விக்கெட்டுகள் இழப்பிற்கு 168 ஓட்டங்களை எடுத்திருந்தது. பதிலுக்குத் துடுப்பெடுத்தாடிய சிறிலங்கா அணியின் வீரர்கள் தொடர்ச்சியாக விக்கெட்டுகளைப் பறிகொடுத்து பவிலியனுக்குத் திரும்பினர். நியூஸிலாந்து அணியின் 17 சுழல்பந்து ஓவர்களுக்கு அடித்தாடமுடியாமல் தடுமாறி, கமிண்டு மெண்டிஸின் 31 (23 பந்துகள்) ஓட்டங்களுடனும், டுனித் வெல்லலகேயின் 29 (23 பந்துகள்) ஓட்டங்களுடனும் இறுதியில் 8 விக்கெட்டுகளை இழந்து 107 ஓட்டங்களுடன் சுருண்டனர். ரச்சின் ரவீந்திரா 4 விக்கெட்டுகளைச் சாய்த்திருந்தார். முடிவு: நியூஸிலாந்து அணி 61 ஓட்டங்களால் வெற்றியீட்டியது. நியூஸிலாந்து அணி வெல்லும் எனக் கணித்த 15 பேருக்குத் தலா இரு புள்ளிகள் கிடைக்கின்றன. சிறிலங்கா அணி வெல்லும் எனக் கணித்த ஆறு பேருக்குப் புள்ளிகள் கிடையாது. அத்தோடு சுப்பர் 8 சுற்றில் விளையாடாத ஆப்கானிஸ்தான் அணி வெல்லும் எனக் கணித்த இருவருக்கும் புள்ளிகள் கிடையாது! இன்றைய போட்டி முடிவுகளின் பின்னர் யாழ்களப் போட்டியாளர்களின் நிலைகள்: இன்று சுமைதாங்கிக் கல்லுக்கு @வாதவூரான் நகர்ந்துள்ளார். @Ahasthiyan இரண்டாம் இடத்திற்கும் முன்நகர்ந்துள்ளார்!
  40. nerodtSspofhct4m71mm16u9h634 2tfu59m685m3g4281h1ht4050020g50 · எவ்வளவு அட்டூழியம் அராஜகம் இருந்தாலும் வெள்ளையர்களிடம் ஒரு நேர்மை இருந்தது. ஆனால் இன்றைய நம் அரசியல்வாதிகளிடம் அந்த நேர்மை இல்லை. வெள்ளையர்கள் ஆண்ட காலம். #திருநெல்வேலி க்கு அருகே #ரயில்பாதை அமைத்துக்கொண்டிருந்தனர். அதற்காக நிறைய பனைமரங்களை வெட்டவேண்டிய சூழல். அங்கு பனையை நம்பி வாழ்ந்து கொண்டிருந்த மக்களுக்கு மிகப்பெரிய வருத்தம். ஆங்கிலேயர்களிடம் சென்று பனையை வெட்டுவதை தடுக்கும் தைரியமில்லை. அதே நேரத்தில் பனைமரங்களை இழக்க மனமும் இல்லை. உச்சிவெயல் மண்டையை பிளக்க பசியோடு ஆங்கிலேய அதிகாரிகள் இருந்த நேரம்பார்த்து அங்கிருந்த மக்கள் மண்பானையில்கொண்டு வந்த ஒரு உணவுப்பொருளை அவர்களிடம் வழங்க ருசித்து சாப்பிட்டு வாழ்த்திச் சென்றனர். மறுநாள் ரயில் பாதை அமைக்கும் இடத்துக்கு வந்த வெள்ளைய அதிகாரிகள், "நேற்று சாப்பிட ஏதோ கொடுத்தீர்களே! என்ன அது? மிகவும் ருசியாக இருந்தது. நீண்ட நேரம் பசியெடுக்கவில்லை. மிகவும் இதமான உணவதை எப்படி தயாரித்தீர்கள்". என கேட்க, அந்த மக்கள் கைகளைகாட்டிய இடம் பனைமர உச்சி. அவர்கள் நம்பமறுக்க, பனையில் இருந்து இளம்பனைநுங்கோடு பதநீர் கலந்து, பனைவெல்லம் சேர்த்து மண்பானையில் சிறிது நேரம் வைத்திருந்து கொடுக்க நேற்று சாப்பிட்ட அதே ருசி. "வாவ்" என வாயை பிளந்த அதிகாரிகள் பனைமரங்களை வெட்டாமல் மாற்றுப்பாதையில் ரயில்பாதை அமைக்க உத்தரவிட்டனர். நுங்கு சீசன் முடியும்வரை அவர்களுக்கு மக்கள் தயாரித்தளித்த பனை உணவே மதிய உணவானது. மக்களின் சாதுர்யத்தால் பெரிய அளவில் பனைமரங்கள் வெட்டுவது தவிர்க்கப்பட்டது. வெள்ளையர்களிடமிருந்து பனைமரங்களை காத்த நம்மால் இன்று ஆளும்வர்க்கம் சாலை விரிவாக்கம் என்றப் பெயரிலும், அறியா மக்கள் பனை எதற்கு என்று முடிவெடுத்து அதை அழிக்கும் முடிவிலிருந்தும் காக்க முடியவில்லை. பனை என்றதும் இன்றைய தலைமுறைக்கு நினைவில் வருவது நுங்கு. வியர்குருக்கு மருந்தான நுங்கை ருசியான பாயசம் வைத்தும் அசத்த முடியும். நுங்கு எடுத்து சாப்பிட்டபின் காயைக் கொண்டு தயாரித்த வண்டி உருவாக்கி விளையாடிய அனுபவம் முன் தலைமுறையோடு பறிபோனது. முற்றிய நிலையில் உள்ள பனம்பழத்தை பறித்து சீவி, அவித்து சாப்பிட்ட ருசி, விழுந்த பழத்தை சுட்டு சாப்பிட்ட ருசி, இன்னும் நாவிலிருந்து அகலவில்லை. அன்றைய கிராமத்துவாழ்க்கையில் பனம்பழம் விழும்காலங்களில் எங்கள் முதல் வேலை பனம்பழம் பொறுக்குவது. பொறுக்கிவந்த பழங்களை ஒரு இடத்தில் குவித்துவைத்திருப்போம். சில வாரங்களில் நன்கு பழுத்து அந்த பகுதியில் செல்லும் போது வாசம் வரும் பக்குவத்தில் அதை தனித்தனி விதைகளாக பிரித்து உலரவிடுவோம். விதைகள் உலரும் அதே நேரத்தில் பனங்கிழங்கு விளையவைக்க இடத்தை தயார்செய்வோம். இரண்டடி ஆழத்திற்கு மண்ணை புரட்டி சாம்பல் மக்கிய உரங்கள் கலந்து நடுமிடத்தை மட்டமாக்கி, உலர்ந்த விதையின் தலைப்பகுதி மேலிருக்குமாறு அடுக்கி மேலே சிறிது மணல் தூவிவிட்டோமென்றால் போதும் 115 லிருந்து 130 நாட்களுக்குள் பனங்கிழங்கு தயாராகிவிடும். அவித்து உண்பதாகட்டும், சுட்டு சாப்பிடுவதாகட்டும் அவ்வளவு ருசி. அதுவும் இரவு படுக்கச் செல்லும்போது, விறகடுப்பு நெருப்பில் புதைத்து வைத்து காலையில் எடுக்கும் பனங்கிழங்கை இலேசாக வளைத்தால் சுருக்கம் சுருக்கமாக வந்தால் அது சரியாக வெந்திருக்கிறது என்பதை உணர்த்தும். சுட்ட பனங்கிழங்கை துருவி அதோடு அப்போது பறித்த தேங்காயின் துருவலை சேர்த்து சாப்பிட்டா..! அடடா பாழாய்போன பணத்தை தேடி நகரத்துக்கு வந்ததால் இழந்தவைதான் எத்தனை.! பனங்கிழங்கை சனி மாலை அறுவடைசெய்து அரையடி நீளத்துக்கு வேரைவிட்டு நறுக்கி விதைகளை நீக்கி தலைப்பு மாற்றி நூறு கிழங்குகளாக கட்டி மறுநாள் ஞாயிறு சந்தைக்கு எடுத்துச்சென்று விற்று வீட்டுக்கு தேவையான பொருட்களை வாங்கிவருவோம். சரியாக கிழங்கு வராத சிறு விழுதுமட்டும் வந்த விதையை குறுக்காக வெட்டினால் உள்ளிருக்கும் பனம்பூவின் ருசிக்கு பனைமரத்தையே எழுதிவெக்கலாம். பனங்கிழங்கு அறுவடை செய்தபின் கிடைக்கும் விதைக்குடுகை அற்புதமான விறகு. பொங்கலுக்கு இருவாரங்களுக்கு முன்னே பனங்குருத்தை வெட்டி, சரியான அளவில் வகுந்து, பனியிலும் வெயிலிலும் பதப்படுத்தி முட்டுமாலை, நெத்திச்சுட்டி, அரிசிமாலை எனச்செய்து மண்பானை ஓட்டில் சாயம் காய்ச்சி, அதில் பனம் ஓலையில் செய்தபொருட்களை முக்கி, சாயமேற்றி மாட்டுப் பொங்கலன்று மாடுகளுக்கு அணிவித்து மகிழ்வோம். • பனை ஓலை காத்தாடி, • பனை ஓலை கொழுக்கட்டை, • பனை ஓலை பாய், • பனை ஓலை பெட்டி, • பனை ஓலை கூடை, • பனை ஓலை குச்சிபெட்டி, • அபூர்வமாய் இருந்த ஒரே மாதுளைச்செடியில் காய்களை அணில் கடிக்காமல் இருக்க அப்பா செய்து கட்டிவிடும் பனை ஓலை பெட்டி, • அக்கினி நட்சத்திரத்தன்று வெட்டி, அழகாய் அடுக்கி, பதப்படுத்திய பனை மட்டையில் வெய்த வீட்டில் கோடையில் குளிர்ச்சியையும், குளிர்காலத்தில் கதகதப்பையும் உணர்ந்த அனுபவம், • அப்பப்பா பனைஓலையில்தான் எத்தனை பரவசம். • பதநீர் குடிக்கவும், சாப்பிடவும் பயன்பட்ட பச்சை பனை ஓலை குடலை. • கால்சியம் நிறைந்த ருசியான பதநீர், அதில் காய்ச்சி எடுத்த நலம்பயக்கும் பனைவெல்லம். பதப்படுத்திய மருத்துவ குணம் கொண்ட பனங்கற்கண்டு. • வீடுகட்ட வாரை, விறகாக மட்டை, மிதியடிசெய்ய சப்பை (ஒரு காலத்தில் கீழ் தஞ்சையில் பலகுடும்பங்கள் பனைமட்டை நார் தயாரித்து கேரளாவுக்கு அனுப்பி அந்த நார் மிதியடியாக தமிழ்நாடு திரும்பும்). • காய்கறி பந்தல் போட நார். • வீடுகட்டவும், கட்டில் தயாரிக்கவும் பயன்படும் அகனி. • முக்கியமாக உடலுக்கு நல்லதா? கெடுதலா? என விவாதத்தில் இருக்கும் கள்ளு. • ஒரு ஏக்கர் நிலப்பரப்பில் பயிரிட்ட பனையிலிருந்து தயாரிக்கும் பனை வெல்லத்தோடு ஒப்பிடுகையில் அதே பரப்பில் பயிரிடும் கரும்பிலிருந்து கிடைக்கும் வெல்லத்தின் மதிப்பீடு குறைவு. • ஒருமுறைவிதைத்தால் பத்து ஆண்டுகளில் இருந்து ஒரு நூற்றாண்டுவரை பயன்தரக்கூடியது பனை. • மழைநீரை பூமிக்கடியில் சேகரித்து வெளியே விடாமல் பராமரிப்பது பனை. • தன்னிலிருந்து கிடைக்கக்கூடிய பொருட்களால் மனித வாழ்வை தன்னிறைவாக்கும் பனை. பனையின் பயன்களை இன்னும் அடுக்கிக்கொண்டே போகலாம். #பனைமரம் #பனை பனை மரத்தின் பெருமையை இதைவிட யாரும் அழகாக சொல்லி விட முடியாது... பனை சார்ந்த வாழ்வியலையும் பனை சார்ந்த உணவுகளையும் ஏனோ மறந்து போனது தமிழ் சமூகம்... 💥"#பனைவிவசாயம் 🌴" #பனை மரத்தை பாதுகாப்போம் 🔥" #palmtrees #Palm #பனைமரம்......!
  41. தன் சொந்த சொத்தை, நேரத்தை, புகழை போராட்டத்துக்கு பிரதிபலன் பாராமல் கொடுத்தவர் டாக்டர் சத்யமூர்த்த்தி. அவர், நீங்கள் உட்பட இப்படி பலர் வெளிநாட்டில் செய்தவேலைகள் போற்றப்பட வேண்டியன, எதிர்கால சந்ததிக்கு எடுத்து சொல்லபட வேண்டியன. அந்த வகையில் இந்த பகிர்வுக்கு நன்றி. நான் கெளரவ பட்டங்களை இனி பாவிக்க கூடாது என நினைப்பதன் முதன்மை காரணம் - அதை பெறும் தகுதி எவருக்கும் இல்லை என்பதல்ல, மாறாக அதை கொடுக்கும் தகுதி எவருக்கும் இல்லை என்பதே. போராட்டமும், இயக்கமும் வேரோடும், வேரடி மண்ணோடும் அழிக்கப்பட்டதன் பின் விழைவுகளில் இதுவும் ஒன்று.
  42. எவ்வளவு அர்ப்பணிப்புடன் செயல்பட்டிருக்கின்றார்கள் ....... அவர்களை வணங்குவதைத் தவிர வேறு என்ன செய்ய முடியும் . .......! தகவல்களுக்கு நன்றி கவி . அருணாசலம் அவர்களே .......!

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.