Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Leaderboard

  1. தமிழ் சிறி

    கருத்துக்கள உறவுகள்
    12
    Points
    89361
    Posts
  2. suvy

    கருத்துக்கள உறவுகள்
    4
    Points
    34065
    Posts
  3. புரட்சிகர தமிழ்தேசியன்

    கருத்துக்கள உறவுகள்
    3
    Points
    16715
    Posts
  4. மோகன்

    கருத்துக்கள பொறுப்பாளர்கள்
    3
    Points
    10010
    Posts

Popular Content

Showing content with the highest reputation on 03/29/26 in all areas

  1. கவுண்டமணி: யுத்தத்த எப்போ நிறுத்துவீங்க சார்? ட்ரம்ப்: ஹோர்முஸ்ஸ திறந்தா நிப்பாட்டிடுவன். கவுண்டமணி: நீங்க யுத்தத்த ஆரம்பிக்கிறதுக்கு முன்னாடி, ஹோர்முஸ் எப்டி இருந்துச்சு சார்? டிரம்ப்: திறந்திருந்துச்சு. கவுண்டமணி: அப்போ என்ன மயிருக்கு யுத்தத்த ஆரம்பிச்ச?🤣"
  2. “நீங்கள் தமிழ்த் தேசியவாதியா?தமிழ் மீள தமிழ் ஆள தங்களால் முடிந்த பங்களிப்பை வழங்குங்கள்” என்று இணையத்தளங்களில் விளம்பரமும் வந்திருக்கின்றது
  3. அன்பார்ந்த யாழ் இணைய உறவுகளுக்கு, மண்ணினதும் மக்களதும் விடிவிற்காய் தம்முயிர் ஈய்ந்தவர்களின் நினைவோடு, யாழ் இணையம் தனது 27 ஆவது ஆண்டை நிறைவு செய்து இன்று (30.03.2026) 28 ஆவது அகவைக்குள் காலடி எடுத்து வைக்கின்றது. 1999 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட காலம் முதல் பல்வேறு சவால்களையும் தொழில்நுட்ப மாற்றங்களையும் கடந்து, உலகத் தமிழர்களை ஒன்றிணைக்கும் ஒரு தனித்துவமான குடிலாக யாழ் இணையம் மிளிர்ந்து வருகின்றது. எமது கடமையும் சமூகப் பொறுப்பும்ஒவ்வொரு ஆண்டும் நாம் வலியுறுத்துவது போலவே, கருத்தாளர்களாகிய உங்களிடம் மேலதிகமான சமூகப் பொறுப்பினையும் சகிப்புத்தன்மையையும் இந்த ஆண்டும் எதிர்பார்க்கின்றோம். குறிப்பாக: தகவல் நம்பகத்தன்மை மற்றும் செயற்கை நுண்ணறிவு (AI): இன்று ஊடக பலம் கொண்ட பெரும் சக்திகளால் திட்டமிட்டு பரப்பப்படும் தவறான மற்றும் உண்மையற்ற செய்திகள், பொதுமக்களால் உண்மையானவை என நம்ப வைக்கப்படுகின்றன. தாங்களே உலகின் பாதுகாவலர்கள் என்ற பிம்பத்தை இத்தகைய சக்திகள் கட்டமைக்கின்றன. துரதிர்ஷ்டவசமாக, இவ்வாறான ஒருதலைப்பட்சமான தகவல்களையே ஆதாரமாக வைத்து இங்கும் கருத்தாடல்கள் முன்னெடுக்கப்படுவதை அவதானிக்க முடிகின்றது. இதனுடன், தற்போது செயற்கை நுண்ணறிவு (AI) தொழில்நுட்பம் மூலம் உருவாக்கப்படும் உண்மை போன்றே தோற்றமளிக்கும் காணொலிகள் (Deepfakes), குரல் பதிவுகள் மற்றும் புகைப்படங்கள் இந்த நிலையை இன்னும் சிக்கலாக்குகின்றன. எனவே, இத்தகைய திட்டமிட்ட பரப்புரைகள் மற்றும் நவீன தொழில்நுட்பங்கள் மூலம் பரப்பப்படும் தகவல்கள் குறித்து நாம் மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும். எதையும் இங்கே ஆதாரமாகப் பதிவிடும் முன்னர், அதன் நம்பகத்தன்மையை ஒன்றுக்கு மேற்பட்ட தடவை சரிபார்க்குமாறு உங்களை அன்புடன் வேண்டுகின்றோம். பண்பான விவாதம்: கருத்துக்களைக் கருத்துக்களால் எதிர்கொள்ளுங்கள். தனிநபர் தாக்குதல்களையும், வீண் மனஸ்தாபங்களையும் தவிர்த்து, ஆரோக்கியமான கருத்தாடல் தளமாக யாழ் களம் தொடர ஒத்துழைக்குமாறு கேட்டுக்கொள்கின்றோம். மத மற்றும் உணர்வுப்பூர்வமான மதிப்பளிப்பு: மற்றவர்களின் மத நம்பிக்கைகளையும் உணர்வுகளையும் புண்படுத்தாத வகையில் எமது கருத்துப் பதிவுகள் அமைதல் வேண்டும். உலகளாவிய நெருக்கடிகளும் மனிதாபிமானமும்இன்று உலகின் பல்வேறு பகுதிகளில் தொடர்ந்து நிகழும் போர்களும், அதனால் ஏற்படும் மனித அவலங்களும், பொருளாதார நெருக்கடிகளும் ஒட்டுமொத்த உலகத்தையுமே ஒரு பதற்றமான சூழலுக்குள் தள்ளியுள்ளன. இத்தகைய நெருக்கடி காலங்களில் ஏழ்மை நிலையில் உள்ள மக்களும், போரினால் பாதிக்கப்பட்ட சமூகங்களுமே பொருளாதார ரீதியாகப் பெரும் பாதிப்புக்கு உள்ளாகின்றார்கள். போரினால் சிதைக்கப்பட்ட ஒரு இனத்தைச் சார்ந்தவர்கள் என்ற வகையில், போரின் வலியை நாம் நன்கு அறிவோம். எனவே, இந்த 28 ஆவது அகவையில் தடம் பதிக்கும் இவ்வேளையில், பாதிக்கப்பட்ட மக்களின் துயர் துடைக்க நம்மால் இயன்ற பொருளாதார மற்றும் அறப்பணிகளில் கைகோர்ப்போம். உலகெங்கும் அமைதி நிலவவும், அடக்குமுறைகளுக்கு உள்ளாக்கப்பட்ட மக்களின் குரல்கள் ஒலிக்கவும் யாழ் இணையம் தொடர்ந்து ஒரு ஆக்கபூர்வமான தளமாக விளங்கும். தமிழ்த் தேசியமும் எமது பயணமும்தமிழ்த் தேசியச் சிந்தனையை வலுப்படுத்தி, எமது வரலாற்றைத் திரிபுகள் இன்றி அடுத்த தலைமுறைக்குக் கடத்தும் பணியில் யாழ் இணையம் என்றும் உறுதியாக இருக்கும். தமிழக உறவுகளை எமது பலமாகக் கருதி, கட்சிப் பாகுபாடின்றி நாம் என்றும் நேசிப்போம். அதேவேளை, எமது விடுதலைப் போராட்ட வரலாற்றினைத் திரிபுபடுத்தி, தமக்கான அரசியல் பலத்தைச் சேர்க்க முயலும் சுயநலக் கட்சிகளை நாம் வன்மையாக எதிர்ப்போம். அத்தகைய சக்திகளைச் சுட்டிக்காட்டும் அனைத்து முயற்சிகளுக்கும் யாழ் இணையம் தனது முழுமையான ஆதரவினை வழங்கும். ஈழத் தமிழர்களைத் தமது நலன் சார்ந்து போலிப் பிரச்சாரங்களுக்குப் பயன்படுத்துவோரை அடையாளம் கண்டு முறியடிக்க வேண்டிய விழிப்புணர்வு எமக்குத் தேவையாய் உள்ளது. புதிய தொடக்கம்இந்த 28 ஆவது ஆண்டில், இன்னும் அதிகமான புதிய உறுப்பினர்களை உள்வாங்க விரும்புகின்றோம். யாழ் இணையத்தின் பழைய உறுப்பினர்கள், உங்கள் சுற்றத்தாருக்கு இந்தத் தளத்தை அறிமுகம் செய்து, அடுத்த தலைமுறைப் படைப்பாளிகளையும் கருத்தாளர்களையும் உருவாக்க முன்வருமாறு வேண்டுகின்றோம். தமது உழைப்பையும் நேரத்தையும் அர்ப்பணித்து களத்தை வழிநடத்தும் மட்டுறுத்துனர்களுக்கும், ஆலோசனைகளை வழங்கும் நல்உள்ளங்களுக்கும், சுயமாகப் படைப்புகளை உருவாக்கித் தனித்திறமைகளை வெளிப்படுத்தும் உறவுகளுக்கும் எமது மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கின்றோம். எமது மண்ணோடும் மக்களோடும் என்றும் இணைந்திருப்போம். உறுதுணையாய், துணையாய், ஒற்றுமையாய் பயணிப்போம். "நாமார்க்கும் குடியல்லோம்" நன்றி, யாழ் இணைய நிர்வாகம் 30 மார்ச் 2026
  4. அமெரிக்கா முழுவதும் ட்ரம்ப் நிர்வாகத்திற்கு எதிராக பாரிய போராட்டம் Mar 29, 2026 - 11:30 AM அமெரிக்காவின் முக்கிய நகரங்கள் முழுவதும் ட்ரம்ப் நிர்வாகத்திற்கு எதிராக பாரிய எதிர்ப்பு போராட்டங்கள் ஆரம்பமாகியுள்ளன. இது முன்னதாக மில்லியன் கணக்கான மக்கள் பங்கேற்ற "மன்னர்கள் வேண்டாம்" போராட்டத்தின் மூன்றாம் கட்டத்தை குறிப்பதாக அமைந்துள்ளது. ஈரானுடனான போர், கூட்டாட்சி குடியேற்ற சட்டங்களை அமுல்படுத்துதல் மற்றும் அதிகரித்து வரும் வாழ்க்கைச் செலவு உள்ளிட்ட ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் கொண்டு வந்த கொள்கைகளுக்கு எதிராகவே இந்தப் போராட்டங்கள் முன்னெடுக்கப்படுவதாக போராட்டக்காரர்கள் தெரிவித்துள்ளனர். நியூயோர்க், வொஷிங்டன் மற்றும் லொஸ் ஏஞ்சல்ஸ் உள்ளிட்ட அமெரிக்காவின் அனைத்து முக்கிய நகரங்களிலும் தற்போது போராட்டங்கள் நடைபெற்று வருவதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இதன்போது போராட்டக்காரர்கள், ட்ரம்ப், துணை ஜனாதிபதி ஜே.டி. வான்ஸ் மற்றும் ஏனைய நிர்வாக அதிகாரிகளின் உருவப்பொம்மைகளை ஏந்தி, அவர்களை பதவிகளில் இருந்து நீக்குமாறும் கைது செய்யுமாறும் கோஷங்களை எழுப்பி வருவதாகக் கூறப்படுகிறது. https://adaderanatamil.lk/news/cmnbcna85000f356puzf7zq5a
  5. சிறியர், இங்கு போர் சம்மந்தமாக பகிரப்படும் கருத்துக்களை அவ்வப்போது பார்க்கின்றேன். வேறு பல தகவல் தளங்களிலும் பொது அபிப்பிராயங்களை பார்க்கின்றேன். இங்கு பிரச்சனை என்ன என்றால் பகிரப்படும் தகவல்கள் ஏதோ ஒரு தரப்புக்கு பக்கச்சார்பானதாகவோ/ஆதரிப்பதாகவோ/ஊக்குவிப்பதாகவோ உள்ளன. சுய, விறுப்பு வெறுப்புக்களை ஒரு பக்கம் தூக்கி எறிந்துவிட்டு யதார்த்தத்தை, உண்மை நிலையை அறிவுபூர்வமாக ஆராயும் பக்குவ நிலையான தகவல்கள் ஏறக்குறைய எங்கும் இல்லை. சுய அடையாளங்கள், குறுகிய வட்டங்களுக்கு அப்பால் சென்று பரந்த வீச்சில், அனைவருக்குமான சிறப்பான எதிர்காலம் என பார்த்தால் இப்போதுள்ள குழப்பங்கள் எமது எதிர்காலத்து வாழ்க்கையை, எமது சந்ததிகளை வெகுவாக பாதிக்கும். நொருங்கிய இடிந்த கட்டடத்துக்குள் குற்றுயிராக கிடப்பது எந்த நாட்டவன் எந்த இனத்தவர் என இனம்கண்டு அவர்கள் மீது இரக்கம் கொள்வதும் அல்லது திருப்தி அடைவதும், ஆட்களின் அடையாளத்தின் அடிப்படையில் அவர்களது இறப்பை கொண்டாடுவதும், துக்கம் அடைவதும் நாங்கள் அடிப்படை மனித விழுமியங்கள், உயர்வான நிலையை விட்டு விலகி இதர காட்டு விலங்கினங்கள் போல் பின்னோக்கிய பரிணாமத்திற்கு திரும்புகின்றோம் என்பதை குறிக்கின்றது.
  6. ரம்புக்கு வந்த சோதனை😁, ஆடாதைய மனித ஆடாதே. கேள்விப்பட்டது Bharain இனில் அமெ படைகள் தளங்களை விட்டு மக்களுடன் கலந்துள்ளார்களாம்🫠
  7. பாட்டொன்று தருவார் பாராடியம்மா .........! 😍
  8. சினிமாவுக்கு கவிஞர் வாலி எழுதிய முதல் பாடல்
  9. வரதராஜ பெருமாள் - காஞ்சிபுரம்
  10. ஓரிடம் உன்னிடம் ( அந்த கால கிளுகிளுப்பு பாடல்) படம் : வீட்டுக்கு வந்த மருமகள் (1973) இசை: சங்கர் கணேஷ் பாடியோர்: TMS & வாணி ஜெயராம் வரிகள்: கண்ணதாசன்
  11. இந்தத் தாக்குதலில்… பல அமெரிக்க போர் விமானங்களும் சேதமடைந்ததாக சில செய்திகள் வருகின்றன. அது என்ன…. ஈரான் தாக்கினால் 10 அமெரிக்க படையினர் காயம், மூன்று இஸ்ரேலியருக்கு மூக்கால் இரத்தம் வடிந்தது என்று செய்திகளை போடுகின்றார்கள். 😂 ஒரு வேளை இவர்கள்…‘‘சாகாத வரம்‘‘ பெற்றவர்களோ… 🤣
  12. பரிசுப்பொருளை அறிவித்ததால் போட்டியில் பங்குபற்ற வேண்டும்போல்தான் தோன்றுகிறது ஆனால், அதை விட முக்கியமான ம ற்றொரு போட்டியின் முடிவை ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருக்கிறேன். அழைப்பிற்கு நன்றி ஈழப்பிரியன்!
  13. நீங்கள் சொல்லும் நடைமுறையே இங்குள்ள கோவில்களிலும் இருக்கின்றது. சிட்னி முருகன் கோவிலில் கூட இதே நடைமுறை என்று தான் நினைக்கின்றேன். திமுக ஹைடெக் திருடர்கள், அதிமுக அசட்டுத் திருடர்கள். கோவிலில் கைவைக்கும் அளவுக்கு அதிமுகவினருக்கு திருட்டுத் துணிவும் கிடையாது. அதைவிட எம்ஜிஆர், ஜெயலலிதாவைக் கண்டாலே அதிமுக அமைச்சர்களுக்கு சகலமும் நடுங்கும். திமுகவின் திருட்டுகளில் ஒரு சமஷ்டி, அதிகாரப் பரவலாக்கம் இருக்கும்....................🤣. சுவாமி ஐயப்பனின் தங்கங்கள் கேரளாவில் சமீபத்தில் திருடு போனது............ திமுக பாணி ஹைடெக் திருட்டு தான்.......... எடுத்தவற்றுக்கு மாற்றாக தங்க முலாம் பூசியவற்றை அந்த இடங்களில் வைத்திருந்தார்கள்..................😜. இது கமலுக்கு தெரியாதவரைக்கும் நல்லது................. அவருக்கு தெரிந்தால், ஏதாவது ஒரு சினிமா வெளியீட்டு விழாவில், 'வெங்கடாசலபதி வந்ததே முருகனில் இருந்து தான்.............. சிரஞ்சீவிக்கு கூட இது தெரியும்...............................' என்று குருவி வாணம் ஒன்றை கூட்டத்துக்குள் விட்டு விடுவார்.......................🤣.
  14. 🤣................ பொது எதிரியை சாய்ப்பதற்காக கொள்கைகளில் சில தளர்வுகளை செய்து கொள்வதில் தப்பேயில்லை................ நீங்கள் கூட்டணிக்கு வாருங்கள், தேர்தல் செலவுகளை நாங்களே பார்த்துக் கொள்ளுகின்றோம்...................😛.
  15. போட்டியில் கலந்து கொண்டு பரிசில்களைப் பெற உடனே களத்தில் இறங்குங்கள். @மோகன் @இணையவன் @நிழலி @நியானி @கிருபன் @nunavilan @தமிழ் சிறி @ஏராளன் @யாயினி @ஈழப்பிரியன் @நிலாமதி @பெருமாள் @நன்னிச் சோழன் @Justin @vaasi @விளங்க நினைப்பவன் @குமாரசாமி @goshan_che @island @விசுகு @நெடுமாறன் @வாத்தியார் @nedukkalapoovan @சுவைப்பிரியன் @suvy @Kavi arunasalam @வாலி @நந்தன் @Kandiah57 @உடையார் @nochchi @புலவர் @ragaa @kandiah Thillaivinayagalingam @satan @புங்கையூரன் @ரசோதரன் @ரஞ்சித் @Sasi_varnam @Sabesh @Maruthankerny @புரட்சிகர தமிழ்தேசியன் @நியாயம் @வீரப் பையன்26 @alvayan @கறுப்பி @Ahasthiyan @Newbalance @வாதவூரான் @Eppothum Thamizhan @தமிழ் சிறி @நிலாமதி @செம்பாட்டான் வெல்பவர்களுக்கு ஒரு பரல் மசகு எண்ணெய் கிருபன் வழங்குவார்.
  16. தத்தை நெஞ்சம் .......சர்வர் சுந்தரம் . ......கே.ஆர் விஜயா......! 😍
  17. அண்ணி அவள் தாகத்துக்கு ........ படம் : மனைவி (1969) விஜயகுமாரி & ராமாபிரபா ........ ! 😍
  18. இந்த சிற்பக்கலைகளைக் காணும்போது அந்தச் சிற்பிகளின் பாதம் தொட்டு வணங்கவேண்டும் போல் இருக்கு . ........! 😊
  19. இனி வரும் காலங்களில் அடுப்பு,நெருப்பு இல்லாத சமையல்களே அன்றாட வாழ்க்கைக்கு வரும் போல் இருக்கின்றது. செய்முறை இணைப்பிற்கு நன்றி புரட்சியர்👈👍
  20. வரலாற்றில் தமிழீழ விடுதலைப் போராட்டத்தை உலகளாவிய அளவில் எடுத்து சென்ற ‘போர்ச் செய்தியாளர்’ மேரி கொல்வின் | 23 Feb, 2026 | மேரி கொல்வினின் இடது கண்ணை இலங்கை பறித்தது. அவரது உயிரையே காவு வாங்கி விட்டது சிரியா. எங்கெல்லாம் அரசப் படைகளின் தாக்குதலில் அப்பாவிகளின் அபயக் குரல் கேட்கிறதோ… அங்கெல்லாம் தனது இருப்பைப் பதிவு செய்த பத்திரிகையாளர் மேரி கொல்வின் 22.02.2012 கொல்லப்பட்டார் ”2001-ம் ஆண்டு வன்னியில் 5 லட்சம் தமிழரின் அவல நிலையை அறிந்துக்கொள்ள தமிழர்களுக்கு தனியரசை உருவாக்கிய தமிழீழ விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டுப் பிரதேசத்துக்குள் நான் நுழைந்தேன். அங்கு செல்வதற்கு சிங்கள அரசாங்கம் தடை விதித்து இருந்தது. சிறீலங்கா படைகளின் கண்ணில் படாமல் வெளியேறி விட வேண்டும் என்று நான் நினைத்தேன். சிறு விளக்குகளின் ஒளி, முட்கம்பி வேலிகள், இடுப்பளவு தண்ணீர் ஊடான காட்டுப் பாதையில் நான் பயணித்தேன். ஆனாலும், படையின் கண்ணில் பட்டேன். என்னைப் பார்த்ததும் துப்பாக்கிச் சூட்டை ஆரம்பித்தனர். வெளிச்சக் குண்டுகளை வீசினர். ‘நான் பத்திரிகையாளர்’ என்று கத்தினேன். அதை அவர்கள் பொருட்படுத்தவில்லை. அப்போது, கிரனேட் வைத்து தாக்கினார்கள். அந்த இரத்தக் காயத்துடன் முன்னே நடந்து வந்தேன். நிற்க முடியவில்லை. இரத்தம் வழிந்து கொண்டு இருந்தது. அப்போது என் அருகில் வந்த படை வீரர்கள் பலமாகத் தாக்கத் தொடங்கினார்கள். என் உடைகளைக் கிழித்து நிர்வாணம் ஆக்கினார்கள். நான் மூச்சுவிடக் கஷ்டப் பட்டுக் கொண்டும், தலையில் கண்ணில் காயத்துடனும் நெஞ்சில் வெடிக்காயத்துடனும் இருந்தேன். அப்படியே தூக்கி கனரக வாகனத்தில் வீசினார்கள். அந்த மக்கள் பட்ட அவலத்தை விட நான் பட்ட துன்பம் ஒன்றும் இல்லை என்றாலும் எனது அனுபவம் தமிழர்களின் வேதனையைச் சொல்லப் போதுமானது” என்று, உலக நாடுகளின் கவனத்தை ஈர்த்தவர் மேரி கொல்வின். தமிழர்கள் மட்டுமே இந்தப் பிரச்சினையை பேசி வந்த போது சொற்பமாக ஒலித்த ஐரோப்பியக் குரல்களில் அழுத்தமானது இவருடையது. எங்கு உள்நாட்டு யுத்தம் நடந்தாலும் அங்கே மேரி கொல்வின் சென்று விடுவார். அதனாலேயே ‘போர்ச் செய்தியாளர்’ என்ற பட்டம் தாங்கினார். 2000-ம் ஆண்டில் தான் அவரது பார்வை சிங்கள பேரினவாத அரசின் பக்கமாகவும் திரும்பியது. நேரடியாக தமி ழீ ழம் வந்தார். அப்போது, அவர் மீது நடத்தப்பட்ட தாக்குதலில் தான் அவரது இடது கண்ணின் பார்வை முழுமையாகப் பறிபோனது. அன்று முதல், கறுப்புத் துணியைக் கண்ணில் கட்டிக் கொண்டு நடமாடினார். இந்தத் தாக்குதலை புலிகள் கண்டித்ததால், இவரை ‘புலி ஆதரவாளர்’ என்று சிங்கள அரசாங்கம் குற்றம் சாட்டியது. அதைப்பற்றிக் கவலைப்படாமல் தமிழர் பிரச்சினையை எழுதுவதில் தொடர்ந்து ஆர்வமாக இருந்தார். நான்காம் கட்ட ஈழப் போர் என்று அழைக்கப்படும் ‘முள்ளிவாய்க்கால் படுகொலை’ நேரத்தில் இறுதிக் கட்டப் பேச்சுவார்த்தை, ஐ.நா. அமைப்புக்கும் புலிகளுக்கும் நடந்த போது இணைப்பாளராக இருந்தவர் மேரி கொல்வின் தான். வெள்ளைக் கொடியுடன் வந்த புலிகளின் அரசியல் துறைப் பொறுப்பாளர்களான நடேசன், புலித்தேவன் ஆகிய இருவரும் மேரி கொல்வினின் வார்த்தை மீது நம்பிக்கை வைத்துத் தான் வெளியே வந்தார்கள். ஆனால், கோத்தபாய ராஜபக்ச – சரத் பொன்சேகா கூட்டணி, வாக்குறுதியை மீறி அந்த இருவரின் உயிரைக் குடித்தது. அது ஓர் அவசரமான அழைப்பு. ஆனால், சில மணிநேரத்தில் இறக்கப் போகும் ஒருவரின் அழைப்பு போன்று அது இருக்கவில்லை…..” என்று தொடங்கி மேரி கொல்வின் எழுதிய கட்டுரை இன்றைக்கும் தமிழின அழிப்பின் சாட்சியாக ஒலித்துக் கொண்டே இருக்கிறது. இதன் பிறகும், அவருக்கு மிரட்டல்கள் வந்தன. அதை அவர் பொருட்படுத்தவில்லை. எங்கோ பிறந்து... யாருக்காகவோ உழைத்து, எங்கோ இறந்து போன கொல்வினின் வாழ்க்கை, நம் அனைவருக்குமான தூண்டுதல்! தமிழீழ விடுதலைப் போராட்டத்தை உலகளாவிய அளவில் வெளியில் எடுத்து சென்றவரும் இறுதி இன அழிப்பின் சாட்சிகளில் ஒருவருமானவரானார் மேற்கத்தைய பெண்மணியான இந்த ஊடகவியலாளர் மேரி கொல்வின் அம்மையார். புலேந்திரன் முருகானந்தம்

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.