• advertisement_alt
 • advertisement_alt
 • advertisement_alt

Leaderboard


Popular Content

Showing content with the highest reputation on வியாழன் 26 செப்டம்பர் 2019 in all areas

 1. 6 points
  மகளின் திருமணம் கூடி வந்ததில் வாணிக்கு மனதில் நின்மதி குடிகொண்டது. மூன்று பிள்ளைகளையும் வளர்த்து ஆளாக்கி பல்கலைக்கழகம் அனுப்பி வைத்து மூத்த மகளும் இரண்டாவது மகளும் வேலையும் செய்யத் தொடங்கியாயிற்று. ஆனாலும் இன்னும் வாணியால் நின்மதியாக இருக்க முடியவில்லை. பிள்ளைகளைக் கலியாணம் கட்டிக்கொடுத்தால்த்தான் ஒரு பெரிய பாரம் குறைஞ்ச மாதிரி. படிச்சு முடிக்கும் வரைக்கும் கூட பிள்ளைகள் இருவரும் யாரையாவது காதலிக்கிறேன் என்று கொண்டு வந்தால் என்ன செய்வது என்ற பயம் கூடவே ஓடிக்கொண்டே இருந்ததுதான். காதலிக்கிறது தப்பில்லை. ஆனால் வெள்ளையையோ அல்லது காப்பிலியையோ அல்லது வேற படிக்காமல் ஊர் சுத்துற எங்கட காவாலியள் யாரின் வலையில் பிள்ளைகள் விழாமல் இருக்கவேணும் எண்டு வேண்டாத தெய்வங்கள் இல்லை. பிள்ளைகளுக்கும் சாடைமாடையாக ஒழுங்காய் இருக்கவேணும் எண்டு சந்தர்ப்பம் கிடைக்கும் போதெல்லாம் சொல்லிச் சொல்லி நல்லகாலம் அவர்கள் இருவரும் யாரிடமும் மாட்டுப்படேல்லை. இது தானாக வந்த சம்மந்தம். வீட்டுக்குக் கடைசிப் பெடியன். தகப்பன் இல்லை சீதனம் எதுவும் கேட்க மாட்டினம் என்று நண்பி குடுத்த சாதகத்தை வாங்கிப் பொருத்தம் பார்த்த வாணிக்குச் சந்தோசத்தில் தலைகால் புரியவில்லை. 80 வீதம் பொருத்தம். இதை விட்டுடாதேங்கோ என்று பொருத்தம் பார்த்த அய்யர் சொன்ன உடனேயே தொலைபேசி இலக்கம் வாங்கி பெடியனின் தாயுடன் கதைத்துவிட்டாள் வாணி. மகளின் படத்தை அனுப்பச் சொன்னதும் வற்சப்பில் அனுப்பி அது தாய்க்குப் பிடிச்சு பிறக்கு மகனுக்கும் பிடிச்சு பெடியன்ர படத்தையும் அனுப்பி மகள் பார்த்துப் பிடிச்சிருக்கு என்ற பிறகு நேர்ல தாயும் மகனும் வர பையனைப் பார்த்து வாணிக்கு நின்மதி வந்தது. சிலபேர் படத்தில வடிவாயிருப்பினம். நேர்ல பார்க்க சப் என்று இருக்கும். என்ன இருந்தாலும் மூத்த மருமகன் எல்லே. களையாக இருந்தாலும் படிப்பு கொஞ்சம் சுமார் தான். அவசரப்படாதையென்று கணவன் கூறியதை வாணி ஏற்கவில்லை. எங்கட பிள்ளையும் பிஸ்நெஸ் மானேஜ்மென்ட் தானே படிச்சவள். பெடியன்ர பக்கம் பிரச்சனையில்லை. இதையே செய்வம் என்று ஒருவாறு கலியாணக்காட் அடிக்கிற வரையும் வந்தாச்சு. பெடியன் ரெஸ்க்கோவில மனேச்சராய் இருக்கிறான். அது காணும். வேலை வெட்டியில்லாத பெடியளுக்கே எங்கடை ஆட்கள் பிள்ளையளைக் கலியாணம் கட்டிக்குடுக்கினம். அதுக்கு இது எவ்வளவோமேல் என்று மனதையும் ஆறுதல்படுத்தி கணவனின் வாயையும் அடைத்து விட்டாள். உங்கை எத்தினை குமர்ப்பிள்ளைகள் முப்பது முப்பத்தைந்து கடந்தும் கலியாணம் கட்டாமல் இருக்குதுகள். அப்பிடிப் பார்க்கேக்குள்ள பெடியன் நல்ல பெடியனாத் தெரியிறான் என்று மனதுள் கூறிக்கொண்டு அடுத்த வேலையைப் பார்க்க ஆரம்பிக்கிறாள். அவள் காலையில் பத்து மணிமுதல் பள்ளி ஒன்றில் டின்னர் லேடியாக வேலை செய்வது. பின்னர் மாலை மூன்றுமணிக்கு இந்த வேலை முடிய ஐந்து மணியிலிருந்து பதினொருமணிவரை சான்விச் செய்யும் நிறுவனம் ஒன்றில் வேலை. கணவனும் அங்கேயே வேலை செய்வதால் இரவுவேலை முடிய கணவனுடனேயே வீட்டுக்கு வருவதில் எந்தப்பிரச்சனையும் இல்லை. எதுக்கு இரவிரவா வேலை செய்யிறாய். பின்னேரம் பிள்ளையளுடன் இரன் என்று கணவன் கூறியதையும் கேட்கவில்லை. வீட்டு மோற்கேஜ் இன்னும் ஒண்டரைலட்சம் இருக்கு. அதையும் கட்டி முடிச்சிட்டா நின்மதியாக இருக்கலாம் என்பதும் பிள்ளைகளின் திருமணத்துக்கு எப்பிடியும் ஒரு ஐம்பதாவது வேணும் என்னும் அவளின் கணக்கும் எவ்வளவு சொல்லியும் கணவனுக்குப் புரியாதது கவலைதான். ஒருவாறு இரண்டு நகைச் சீட்டுப் போட்டுப் போட்டு ஏற்கனவே கொஞ்ச நகைகள் வாங்கி வைத்திருக்கிறாள். மக்களின் சம்பளமும் இவள் கட்டுப்பாட்டில் தான். அந்தவரை பிள்ளைகளை தான் நன்றாக வளர்த்திருப்பதாக இறுமாப்பு இவளுக்கு. கலியாணக் காட் தெரிவு செய்யவே நாலு நாட்கள். சிம்பிளாய் இருக்கட்டும் என்று பார்த்தால் மகள் தெரிவு செய்த ஒரு காட் இரண்டு பவுன்ஸ் முடியுது. ஒருதடவை சொல்லிப் பார்த்தபின் விட்டுவிட்டாள். சரி ஒருதடவை தானே திருமணம். தங்கள் விருப்பத்துக்குச் செய்யட்டுமன் என்று மனதைச் சமாதானப்படுத்திக்கொண்டாள். சின்ன ஒரு மண்டபத்தில் செய்யலாம். ஒரு இரண்டாயிரத்துள் முடிக்கலாமென்று பார்த்தால் மாப்பிள்ளையின் தாய் தங்களுக்கு ஒரு ஐநூறு பேராவது வருவினம். கொஞ்சம் நல்ல கோலா எடுங்கோ எண்டதில் பெடியனும் பெட்டையும் அலைந்து திரிந்து எடுத்த கோல் ஏழாயிரம். என்ன இவ்வளவு அதிகமா இருக்கே என்றதற்கு இரண்டு நாட்களுக்கு இது மலிவு அம்மா என்று மகள் சொன்னதைக் கேட்டு நெஞ்சே அடைத்துவிட்டது வாணிக்கு. எதுக்கம்மா இரண்டு நாட்கள் என்றதற்கு அதுதான் இப்ப பாசன். முதல் கிழமை பதிவுத் திருமணம் முடிய எல்லாருக்கும் பார்ட்டி எங்கட விருப்பப்படி.. அடுத்த கிழமை அய்யரோட எங்கட கல்சர்ப்படி உங்கடை ஆசைக்கு வெட்டிங் அம்மா என்று மகள் கொஞ்சலாகக் கூறியதில் எதுவும் சொல்லமுடியாமல் தலையை மட்டும் ஆட்டவேண்டியதாகிவிட்டிது. எங்களுக்கும் ஒரு ஐநூறு சனமாவது வரும்தான். பதினைந்து வருடங்களாக இங்க குடுத்ததுகளை வாங்கத்தானே வேணும் என்பதாய் மனதை சமாதானம் செய்து கொண்டாள். ஏன் அவள் உந்த எடுப்பு எடுக்கிறாள் என்று கணவர் சினக்க அந்தாளையும் ஒருவாறு சமாதானம் செய்தாயிற்று. இன்று மூன்றாவது நாளாக சேலை எடுப்பதற்காய் அலைந்தாயிற்று. ஆயிரம் பவுண்ட்ஸ் சேலைவரை பார்த்தும் மகளுக்குப் பிடிக்கவில்லை என்பது சினத்தைத்தான் வரவழைத்தது என்றாலும் எதுவும் செய்ய முடியாது பார்த்துக்கொண்டே இருக்க மட்டும் தான் முடிந்தது. மண்டப அலங்காரம், வீடியோ, உணவு, கேக் அது இது என்று எல்லாம் பாத்துப்பார்த்தது ஓடர் செய்து முடிய கிட்டத்தட்ட முப்பதினாயிரம் பவுன்சுக்குக் கிட்ட முடிய வாணிக்கு மலைப்பாகத்தான் இருந்தது. கலியாணம் பேசி முடிஞ்சு இரண்டு பக்கத்தாரும் இருந்து கதைத்தபோது சீதனம் எதுவும் எங்களுக்கு வேண்டாம். கலியானச் செலவையும் நாங்கள் அரைவாசி பொறுக்கிறம் என்று வாயால் சொன்னதோடு சரி. அதுக்குப் பிறகு மறந்துபோய்த் தன்னும் எதுவுமே அவர்கள் கதைக்கவில்லை. செலவுக்கணக்கை அவைக்குக் காட்டுவமோ அப்பா என்று மனிசனிட்டைக் கேட்டதுக்கு சும்மா பேசாமல்விடு என்றதில் இவளும் அதுபற்றி மகளிடம் கூடக் கதைக்கவில்லை. என்ன இருந்தாலும் வீட்டில் முதல் திருமணம் என்பதும் ஐநூறு பேர்ல நானூற்றைம்பது பேராவது கட்டாயம் வருவினம். எப்பிடியும் ஒரு இருபதாயிரம் சேரும். ஒரு ஐயாயிரத்தை எடுத்துக்கொண்டு மகளின்ர பேர்ல போட்டுவிடுவம். பிறகு அவை வீடு வாங்க உதவும் என்று மனதில் எண்ணியபடியே கலியாண வேலையில் மூழ்கிப் போனாள். அப்பப்பா ஒரு கலியாணத்தை நடத்தி முடிக்க எவ்வளவைச் செய்யவேண்டி இருக்கு. முந்தியெல்லாம் ஒரு அய்யரே வந்து எல்லாவற்றையும் செய்திட்டுப் போவார். இப்ப ஐயர்மாருக்கு ஒரு சிண் வேறை. இரண்டு பேருக்கும் தட்சணை தனித்தனி. அதுக்காக அய்யர் இல்லாமல் கலியாணம் செய்ய ஏலுமே என்றும் மனத்தைத் தேற்றி மாப்பிளை பெண்ணின் கழுத்தில் தாலி கட்டி முடியத்தான் வாணிக்கு பெரிய நின்மதி ஏற்பட்டது. கிட்டத்தட்ட சொன்ன எல்லாருமே வந்திருந்து மணமக்களை வாழ்த்தியது அதைவிட பெரிய நின்மதி. சாப்பிட்டு முடியவே சிலர் வேலைக்குப் போகவேணும் என்று இவளிடம் என்வலப்பைக் கொடுத்துவிட்டுக் கிளம்பிவிட்டினம். நிண்டு படம் எடுத்துவிட்டுப் போங்கோ என்று இவள் சொன்னாலும் இன்னும் வீடியோக்காரர் பெண்ணையும் மாப்பிள்ளையையும் தனியா வைத்துப் படம் எடுத்து முடியவில்லை. சனங்கள் வேற சாப்பிட்டு முடிய தாமே வரிசையில் நிற்கவாரம்பிக்க இவள் ஆக்கள் வெயிற் பண்ணீனம். கேக்கை வெட்டிப்போட்டு பிறகு ஆட்கள்போனப்பிறகு இவையை வைத்து எடுங்கோவன் என்றதையும் வீடடியோக்காரர் கேட்கவில்லை. ஒருவாறு எல்லாரும் மணமக்களுடன் நின்று படம் எடுத்து முடிய வாணியின் குடும்பம் சகோதரர்கள் என்று ஒரு ஐந்து மணிக்கு திருமண வீடு நிறைவுக்குவர மணவறையில் பக்கத்தில் பரிசுகள் பணம் வைத்தபடி கொண்டுவரும் காட்டுகள் என்பவற்றைப் போடுவதற்கு அழகிய வேலைப்பாட்டுடன் வைக்கப்பட்டிருந்த மொய்ப் பெட்டிக்குக் காவலாக வாணி தனது மகனைக் காவலுக்கு வைத்திருந்தாள். ஆனால் இப்போது பார்க்க மாப்பிள்ளையின் தாயார் அப்பெட்டிக்குப் பக்கத்தில் போய் இவள் மகனிடம் எதோ சொல்லிவிட்டு பெட்டியைத் தூக்கிக்கொண்டு போய் தான் இருந்த கதிரையில் வைக்க சுள் என்று கோபம் தலைக்கு எற இவள் செய்வதறியாது திகைத்து நிக்கிறாள். கணவனைத் தேடிப்பிடித்து நீங்கள் போலிக் கேளுங்கோ அப்பா என்று சொல்ல எனக்கு ஏலாது. கொஞ்சம் அமைதியாய் இரு. அவையிண்ட ஆட்களும் தானே காசு குடுத்திருப்பினம். அதை எடுத்துப்போட்டு எங்கடையைக் குடுத்துவிடுவினம். எல்லாத்துக்கும் முன்னதுறதுதான் உன்ர வேலை என்று சொல்ல அவளுக்கும் அது நியாயமாகப் பட தன்னை எண்ணி வெட்கம் ஏற்பட்டது அவளுக்கு. திருமணம் முடிந்து ஒருவாரம் மாப்பிளை வீட்டிலேயே மக்களும் தங்கிவிட இவள் மகளைப் பார்க்கும் ஆவலில் போன் செய்து என்னம்மா இண்டைக்காவது நீங்கள் வாறியளோ என்று கேட்க இரண்டுநாள் கழித்து வருகிறோம் என்று மகள் கூற எத்தனை நாட்கள் வளர்த்து ஆளாக்கியும் கணவன் வந்ததும் எப்படி பிள்ளைகள் பெற்றோரை மறந்துவிடுகிறார்கள் என்று தவிப்போடு கணவனிடம் சொல்ல, அவள் மட்டும் இல்லை நீயும் அப்பிடித்தானே என்று கணவனின் கூற்றில் உண்மை இருக்க வேறு வழியின்றி இரண்டு நாட்கள் மக்களின் வரவுக்காக காத்திருக்க ஆரம்பித்தாள். காலையில் மலர்ந்த முகத்துடன் மகளைக் கண்டதும் எல்லா ஆதங்கங்களும் ஓடி ஒழிய கட்டி அணைத்தவளிடம் அம்மா இதை முதலில் பிடியுங்கோ. மாமி இதை உங்களிடம் குடுக்கச் சொல்லித் தந்தவ. பிறகு நான் மறந்திடுவன் என்று கூறி மகள் குடுத்த என்வலப்பை திறந்து பார்த்தவள், அதற்குள் ஒரு வெள்ளைத் தாளில் இவள் சொல்லித் திருமணத்துக்கு வந்தவர்கள் பெயர்கள் மட்டும் நிரையாக எழுதப்பட்டிருப்பதைக் கண்டு கோபம், அவமானம், கண்ணீர் என்பவற்றை ஒருங்கே அடக்கியபடி வாங்கோ பிள்ளையள் முதல்ல சாப்பிடுவம் என்றபடி குசினிக்குச் செல்லலானாள்.
 2. 3 points
  மிக்க நன்றிகள் அக்கா பணத்தைப் பெற்றுக் கொண்டேன். என்னை நம்பி இட்ட முதலுக்கு மிக்க மிக்க நன்றிகள்
 3. 3 points
 4. 3 points
  அனைவருக்கும் வணக்கம், இலங்கையில் இருந்து paypal இன் ஊடாகப் பணம் அனுப்பலாமே தவிரப் பெற முடியாது. வெளிநாட்டில் உள்ள ஒருவர் மூலம் தான் ஒரு கணக்குத் திறந்திருக்கிறேன். இதைப் பயன்படுத்திக் கொள்ளுங்கள் நன்றியுடன் மதிசுதா paypal.me/mathisutha
 5. 3 points
  நல்வரவு ரகு அண்ணை .... எமக்கிருக்கும் தீர்வு மற்றவனை கோர்த்து விட்டு நாம் தப்பிப்பிழைப்பது , முஸ்லிம்கள் செய்த அதே அரசியல் இனியில்லை என்னுமளவு மொள்ளமாரித்தனம் தான் ஆனால் வேறு தெரிவில்லை. இருப்பையாவது தக்க வைக்க வேண்டுமல்லவா. ஹிந்தியாவோ அவர்களின் proxy அரசியல்வாதிகளான கூத்தமைப்போ ஏதாவது பிடுங்குவார்கள் என்று எதிர்பார்ப்பது இல்லாத பாதைக்கு குருடன் வழிகாட்டுவது போல , 14 RSS பிரிவுகள் இலங்கையில் பலமுடன் இயங்கியும் நீராவியடி லார்ட் கணேஷிற்கு துணையாக யாரும் இல்லை. மறவன் புலவு சச்சி பிக்குகள் என்றால் காற்சட்டையிலேயே சுச்சி போய்விடுவார். கிறீஸ்தவர்களுடன் மட்டும் முட்டி மோதுவார்கள்
 6. 2 points
  நீங்கள் அரசியலை கணிப்பதில் ஒரு அசகாய சூரரா? டிரம்பின் வெற்றி, பிரெக்சிட் இப்படி எதிர்பார்ப்புக்கு மாறாக வந்த முடிவுகள் பலதை அசால்டாக முன்பே கணித்தவரா? உங்கள் அரசியல் தூர திருஸ்டியை தமிழ் கூறு நல்லுலகுடன் பகிர (படம் காட்ட) ஒரு அரிய சந்தர்பம் வாய்துள்ளது! இலங்கையின் ஜனாதிபதி தேர்தல் நவம்பர் மாதம் 16ம் திகதி நடைபெறுகிறது. இந்த தேர்தலில் முடிவுகள் எப்படி இருக்கும்? பதிலை அளியுங்கள், புகழை அள்ளுங்கள்! * பதில்கள் ஐக்கியரச்சிய நேரம் 14/11/2019, 23:59 ற்கு முன்னர் தரப்பட வேண்டும். + சர்ச்சை எழுமிடத்து நடத்துபவரின் தீர்ப்பே இறுதியானது. ——————————————————————— 1. இந்த தேர்தலில் எதாவது ஒரு வேட்பாளர் 1ம் சுற்றில் 50% வாக்குகளுக்கு மேலாக எடுப்பாரா?( 10 புள்ளிகள்). 2. 1ம் சுற்றில் அதிக வாக்கை பெறுபவர் யார்? (10 புள்ளிகள்). 3. 1ம் சுற்றில் அம்பாந்தோட்டை மாவட்டத்தில் யார் வெல்லுவார்? (10 புள்ளிகள்). 4. வடமாகாணத்தில் அதிக வாக்குகளை யார் பெறுவார்? (10 புள்ளிகள்). 5. கிழக்கு மாகாணத்தில் அதிக வாக்குகளை யார் பெறுவார்? (10 புள்ளிகள்). 6. யார் ஜனாதிபதி என்பதை உச்ச நீதிமன்றம் தீர்மானிக்குமா? (10 புள்ளிகள்). 7. இந்த தேர்தலில் வென்று ஜனாதிபதியாக 2020 ஜனவரியில் யார் பதவி ஏற்பார்? (40 புள்ளிகள்). எல்லோருக்கும் வாழ்துக்கள் .
 7. 2 points
  யாரோ?........அவன் தான் மனிதன். காத்தற் கடவுள் திருப்பதி வெங்கடாஜல கோவிலைப் பாதுகாக்க மனிதன் கண்டுபிடித்த 1400 கமராக்கள்.
 8. 2 points
  இலங்கையில் மட்டுமல்ல. வீட்டிலும் அதே நிலை தான் திருமணத்தின் போது வெட்கி தலை குனிந்து நிண்டவ தான் இப்ப எங்க வீட்டில் பிரதமர்.
 9. 2 points
  அன்பு உள்ளங்களுக்கு நன்றிகள். உண்மையில் இன்று எனக்கு மிகப் பெரும் வியப்பான நாள் ஒரே நாளில் இத்தனை பேர் கிடைத்தது அதிசயமாகவே இருக்கிறது. யாழ் களத்தில் இத்தனை ஊக்குவிப்பாளர்கள் இருப்பது தான் யாழ் களத்தின் பலம் என நினைக்கிறேன். இலங்கைக்கு paypal பரிமாற்றம் பூரண சேவை வழங்கலில் இல்லை, வெளிநாட்டில் உள்ள ஒருவரை ஒழுங்குபடுத்து விட்டு அவரை இணைத்து விடட்டுமா ?
 10. 1 point
  Niraj David ‘விதி ஒரு கதவை மூடினால் நம்பிக்கை மற்றொரு கதவைத் திறக்கும்’ என்பதை தன் வாழ்க்கையின் ஊடாக நிரூபித்துக்கொண்டிருக்கும் ஒரு போராளியை அண்மையில் தரிசித்தது மனநிறைவைத் தந்தது.முள்ளிவாய்க்கால் ஒரு இனத்தின் நம்பிக்கைகள் அத்தனைக்குமே முற்றுப்புள்ளி வைத்துவிட்டதாக எம்மில் பலர் நினைத்துக்கொண்டிருந்த நேரத்தில், அந்தப் பெரிய அலையில் எதிர்நீச்சல் போட்டு போராடி இன்று வெற்றியின் உச்சம் தொட்டு நிற்கின்ற குயிலின்பன்(சுரேஷ்) பலருக்கும் ஒரு உன்னத உதாரணம்.யாழ்பாணம், கோப்பாயில் குயிலின்பனின் crafttary என்ற கைப்பணித் தொழிற்சாலையில் நான் நின்ற அந்த கனப்பொழுது, எதையோ சாதித்துவிட்டதான திருப்தியை ஆனந்தக்கண்ணீருடன் நான் உணர்ந்து நின்ற ஒரு முக்கிய தருணம். சர்வதேச தரத்திலான கைவினைப் பொருட்கள், தமிழ் மன்னர்களில் பெயர்களிலான தொழில் கூடங்கள், அழகு தமிழில் அறிவித்தல் பலகைகள்;, தான் கற்றதை மற்றவர்களுக்கும் பகிர்ந்தளிக்கும் பயிற்சிக்கூடங்கள்.. இவற்றின் நடுவே அன்று நான் பார்த்த அதே தாழ்மையுடன் அந்தக் குயிலின்பன். எந்தச் சூழலுக்குள்ளும் தன்னைத் தகவமைத்துக்கொண்டு வாழப் பயிற்றப்பட்டவன்தான் ஒரு போராளி என்ற யதார்த்தத்தை உலகுக்கு விளக்கியபடி சிரித்துக்கொண்டு நிற்கும் குயிலின்பன் பலருக்கு ஒரு நல்ல உதாரணம். எமக்காக அற்பணிக்க முன்வந்த யாரையும் நாம் தலைகுனியவிடக்கூடாது என்று கங்கணம் கட்டியபடி, குயிலின்பன் போன்ற பலருக்கு வழிகாட்டிக்கொண்டிருக்கும்;; கரனுக்காக கடவுளுக்கு நன்றி கூறுகிறேன். (யாழ்ப்பாணம் செல்றும் உறவுகள் முடிந்தால் ஒருதரம் கோப்பாயில் உள்ள crafttary தொழிற்சாலைக்கும் சென்று வாருங்கள்: ஒரு போராளியின் ஓர்மத்தைக் கண்ணாரக் கண்டு ரசிக்கலாம்)
 11. 1 point
  வீட்டுக்குவீடு வாசல்படி. விட்டுத் தள்ளுங்க. சமாளிப்போம். ஓகோ அந்த தாக்கம் தான் இங்கே எதிரொலிக்குதோ?
 12. 1 point
  எங்கள் வீட்டில் ஜனாதிபதி, பிரதமநீதியரசர், சபாநாயகர், முப்படைகளின் தளபதியும் அவரே.
 13. 1 point
  துல்ப்பன் வெளிநாடுகளில் இலங்கையை விடச் சுத்தமாக இருந்தாலும் பல உணவகங்களில் எலிகள் நடமாட் டத்தைக் கட்டுப்படுத்தாது விட்டு அதனால் தற்காலிகமாக மூடவேண்டிய நிலை ஏற்பட்டிருக்கு. அத்தோடு இங்கும் குளிர்பதனப் பெட்டியில் அசுததமாக் உணவுகளை மூடாமல் இருப்பதையும் பலதடவைகள் தொலைக்காட்சியில் கண்டுள்ளேன்.
 14. 1 point
  மருதர், இதெல்லாம் வேண்டுமென்றே உணவு தயாரிக்கும் இடத்தைச் சுத்தமின்றி நடத்துவதால் வரும் பிரச்சினைகள் அல்ல! தலைமுடி, பிளாஸ்ரர், அலுமினியம் தற்செயலாக வருபவை, அங்கங்கே நடக்கும் தான்! ஆனால், தொடர்ந்து மேலே செய்தியில் இருப்பது போல தயாரிப்பிடத்தை வைத்துக் கொண்டு கடை திறந்து வைத்திருக்க இங்கே முடியாது என்பதே என் கருத்து! இலங்கையில் இது முடியும். இரசாயனங்கள் என்று பார்த்தாலும் ஆசிய நாடுகளை விட இங்கே அதிகம் என்று சொல்வதை ஏற்றுக் கொள்ள முடியாது! இங்கே இன்ன இரசாயனம் இவ்வளவு தான் இருக்கிறது என்று அளவிட்டு அது நன்மையா தீமையா என்று குறித்து வைத்திருப்பர். இலங்கை இந்தியாவில் என்ன வகை இரசாயனம் இருக்கிறது என்று பரிசோதிப்பதே கிடையாது. பரிசோதனை செய்யாததை எப்படி இரசாயனங்கள் குறைவென்று சொல்ல முடியும்?
 15. 1 point
  ஜஸ்ரின் மேலே உள்ள காணெளி சிறு உதாரணமே. மருது சொன்னது போல எமக்கும் ஒருநாள் நடந்தது.அவர்கள் இலவசமாக பரிமாற முயன்றும் எமது வீட்டுப் பெண்கள் மறுத்துவிட்டனர். முன்னர் நிறைய தொலைக்காட்சி பார்க்கும் பழக்கமிருந்தது. அந்தநேரம் 20/20 என்ற நிகழ்ச்சி என்று நினைக்கிறேன் உணவகங்களில் நடந்த அநிஞாயங்களை காட்டுவார்கள்.நல்லவேளை நீங்க பார்க்கவில்லை. உணவகங்களுக்கு போனால் பின்பக்கம் போகவே கூடாது. அதற்காக எல்லா உணவகங்களும் என்றல்ல. இங்கே உணவகங்களில் வேலை செய்பவர்கள் ஏதாவது எழுதினால்த் தான் தெரியும்.
 16. 1 point
  எனக்கு இரண்டு முறை மயிர் கண்டு திருப்பி கொடுத்திருக்கிறேன் ஒரு முறை நாங்கள் 6 பேர் சாப்பிட சென்று இருந்தோம் எப்படியும் $150 பில் வந்திருக்கும் மேனேஜர் வந்து உங்களுக்கு பிரீயாக தருகிறோம் என்று சொல்லி போனார். எனது உணவையும் திருப்பி செய்து தந்தார்கள் .... அதை சாப்பிடத்தான் பயமாக இருந்தது கோவத்தில் துப்பிப்போட்டு தந்தார்களோ தெரியவில்லை ஒருமுறை மக்டோனாசில்லேயே ஒரு அலுமினத் பேப்பர் துண்டு இருந்து திருப்பி கொடுத்து இருக்கிறேன் எவ்வாறு வந்தது என்று புரியவில்லை .... நான் ஒரு வருடம் மேலாக மக்டோனாசில் வேலை செய்து இருக்கிறேன். அதுக்கு சாத்தியமே பெரிதாக இல்லை .. யாரோ வேண்டும் என்று வைத்திருக்கலாம் எனும் கோவத்தில்தான் திரும்பி சென்றேன். இங்கு மேலே இருப்பதுபோல குப்பை இல்லத்தை இருக்கலாம் உடலுக்கு தீங்கான இரசாயனம் மற்றைய பல அதகாளவாக இருக்கிறது
 17. 1 point
  பட்டது + படிச்சது + பிடித்தது - 196 இன்று திலீபன் இலட்சிய வேட்கை சுமந்து பசியால் மடிந்த நாள் கோரிக்கை காந்திக்குத்தான் அதே காந்தீய வழியில்.. சுதந்திரம் பற்றி தெரிந்தவனுடன் நாம் பேசியிருக்கணும் சுதந்திரம் கொடுக்கப்பட்டவனுடன் பேசியதே தவறு இது புரிந்தபோது அவனில்லை அவன் போனதுடன் காந்தியமும் உலகில் இல்லை அவனது தியாகமே அதி உச்சம் இவ்வுலகில் இனி திலீபன் மட்டுமே உலகில் இருப்பான் இருக்கின்றான்
 18. 1 point
 19. 1 point
 20. 1 point
 21. 1 point
  "தர்மத்தின் வாழ்வுதனை -- " 7 ம் வகுப்பில் மனனம் செய்து எழுதியது.. பாரதி உயிரோடு இருந்திருந்தால் தும்ப செடியில் தூக்கு மாட்டி தொங்கி இருப்பார்.!
 22. 1 point
 23. 1 point
  என்ன காந்தி செத்துட்டாரா? ஸப்பா ...கண்ணக் கட்டுது.... இப்போதுதான் பக்கம் பக்கமாக எழுதப்பட்டிருந்த "காமக் கிழவரும் இருட்டு அரை முரட்டுக்குத்து" பதிவுகளை வாசித்து விட்டு வந்து இருக்கிறேன். "அல்லாரும் நல்ல வச்சு செஞ்சியிருக்கீங்க"
 24. 1 point
  இங்கு வந்து உள்ளேன் ஐயா போட்டுவிட்டு யூடுப் பேஸ்புக் பக்கம் போறதில்லை ......
 25. 1 point
  இதனை இனிய பொழுது பகுதிக்கு நகர்த்தியுள்ளேன். முதலில் இதை சமூகச் சாளரம் பகுதிக்கு நகர்த்துவமா என யோசித்துக் கொண்டு இருந்தேன். ஆயினும் இனிய பொழுது பகுதி தான் ஏற்றது போலிருப்பதால் இங்கு நகர்த்தியுள்ளேன்.
 26. 1 point
  அடாவடியில் ஈடுபடும் பேரினவாத பிக்குகளுக்கு கடிவாளம் பூட்டவும்! ஜனாதிபதியிடம் வேலுகுமார் எம்.பி. வலியுறுத்து'' அன்பையும், அஹிம்சையையும் போதித்து தர்மத்தின் வழியில் வாழவேண்டிய பௌத்த துறவிகளில் ஒரு சிலர் காவி உடையை பாதுகாப்பு கவசமாக பயன்படுத்திக்கொண்டு அரசியல் இலாபங்களுக்காக இனவாதத்தை விதைத்து வருகின்றனர். அதுமட்டுமல்ல நாட்டில் சட்டம், ஒழுங்கையும் மதித்து செயற்படாமல் குழப்பங்களை ஏற்படுத்துவதற்கு முயற்சிக்கின்றனர். இதற்கு நீராவியடி பிள்ளையார் கோவில் வளாகத்தில் அரங்கேறிய அடாவடி சம்பவம் மற்றுமொரு சாட்சியாகும்.’’இவ்வாறு ஜனநாயக மக்கள் முன்னணியின் பிரதித் தலைவரும், இந்து சமய விவகார அமைச்சின் கண்காணிப்பு பாராளுமன்ற உறுப்பினருமான வேலுகுமார் சுட்டிக்காட்டினார்.நீதிமன்ற உத்தரவுகளை மீறி, முல்லைத்தீவு- பழைய செம்மலை நீராவியடிப் பிள்ளையார்ஆலய வளாகப் பகுதியில் பௌத்த பிக்குவின் உடல் பலவந்தமாக தகனம் செய்யப்பட்டுள்ள சம்பவத்தை வன்மையாகக் கண்டித்து வேலுகுமார் எம்.பி. இன்று (24.09.2019) விடுத்துள்ள அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,“பௌத்த மதமும் அதன் கோட்பாடுகளும் மற்றும் புத்த பெருமானின் தர்ம சிந்தனைகளும் உலக நீதிக்கு வழிகாட்டுகின்றன. மனித சமுகத்தையும் நல்வழிப்படுத்துகின்றன. இதன்காரணமாகவே ஏனைய மதத்தவர்களும் பௌத்த சமயத்தை மதித்து செயற்படுகின்றனர்.ஆனால் ‘காவி’ உடை அணிந்து கொண்டு புத்தரின் பெயரில் ஒரு சில பௌத்த துறவிகள் அதர்ம வழியில் செயற்பட்டு ஏனைய மதத்தவர்களை அடக்கி ஆளவே தீவிரமாக செயற்பட்டுவருகின்றனர். புத்த பெருமான் இருந்திருந்தால் இத்தகைய பேரினவாத பிக்குகளால் திட்டமிட்ட அடிப்படையில் அரங்கேற்றப்படும் சம்பவங்களைக்கண்டு இரத்த கண்ணீர் வடித்திருப்பார். அந்தளவுக்கு சட்டத்தையும், ஒழுங்கையும் கையிலெடுத்து – நீதிமன்ற கட்டளைகளையும் மதிக்காமல் அடாவடியில் ஈடுபட்டு நாட்டில் காட்டாட்சியை ஏற்படுத்த களம் அமைத்துவருகின்றனர்.பௌத்த பிக்குவின் சடலத்தை தகனம் செய்வதற்கான முயற்சியை மனிதாபிமான அடிப்படையில் முன்னெடுத்திருந்தால் சிலவேளே விட்டுக்கொடுப்புகளைகூட சம்பந்தப்பட்ட தரப்புகள் செய்திருக்கலாம். ஆனால், சண்டித்தனம் காண்பித்து, மக்களை மிரட்டி பௌத்த மேலாதிக்கத்தை முல்லை மண்ணில் விதைக்க இனவாத பிக்குகள் முற்பட்டதாலேயே சட்டத்தின் பாதுகாப்பை நாடவேண்டிய நிலை ஏற்பட்டது.இதன்படி ஆலய வளாகத்தில், பௌத்த பிக்குவின் உடலை எரிக்கவோ, புதைக்கவோ கூடாது என்றும், நீராவியடிப் பிள்ளையார் ஆலயத்துக்கு எதிரேயுள்ள இராணுவ முகாமுக்குப் பின்புறமாக, கடற்கரைப் பகுதியில் நீதிமன்றம் அடையாளப்படுத்தும் இடத்திலேயே சடலத்தை எரிக்க வேண்டும் என்றும் நீதிமன்றம் கட்டளையிட்டது.ஆனால், நீதிமன்ற உத்தரவுக்கு மதிப்பளிக்காமல் அதனை அப்பட்டமாகமீறும் வகையில் ஆலயத்துக்கு அருகேயுள்ள கேணி அமைந்துள்ள இடத்தில் பிக்குவின் உடலை எரிப்பதற்கு ஞானசார தேரர் தலைமையிலான பேரினவாத இனவாத கும்பல் நடவடிக்கை எடுத்திருந்தது. அதுமட்டுமல்ல சட்டத்தரணிகளையும் அச்சுறுத்தியுள்ளனர். பௌத்த பிக்குகளின் இந்த செயற்பாட்டை ஒருபோதும் அனுமதிக்க முடியாது என்பதுடன் சட்டத்தின் பிடிக்குள் இருந்தும் தப்பவேகூடாது. அரசாங்கம் உரிய நடவடிக்கைகளை முன்னெடுக்கவேண்டும். அதற்கான அழுத்தங்களை நாம் பிரயோகிப்போம்.பௌத்த பிக்குகள் என்ற போர்வையில் சிலர் தொடர்ச்சியாக நாட்டில் குழப்பங்களை ஏற்படுத்தி இனங்களுக்கிடையிலான ஐக்கியத்தை குழப்பி மத முறுகலை ஏற்படுத்த முயற்சித்துவருகின்றனர். இவர்களுக்கு எதிராக சட்டமும் தனக்கே உரிய பாணியில் கம்பீரமாக செயற்பட்டாலும் அரசியல் தலையீடுகள் காரணமாக தண்டனையிலிருந்து தப்பித்துக்கொள்கின்றனர். இதனால் சட்டம் அனைவருக்கும் சமனானது என்ற நீதிக்கோட்பாடும் மீறப்படுகின்றது.குறிப்பாக ஞானசார தேரருக்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நிறைவேற்று அதிகாரத்தை பயன்படுத்தி பொது மன்னிப்பு வழங்கினார். வெளியில் வந்த பின்னர் அவர் தற்போது என்ன செய்கின்றார்? மீண்டும் பழைய வழியிலேயே பயணத்தை ஆரம்பித்துள்ளனர். எனவே, பௌத்த மதத்தை மதிக்கும் உண்மையான அரச தலைவன் என்றால் பௌத்த தர்மத்துக்கு எதிராக செயற்படுபவர்களுக்கு எதிராக இனியாவது கடுமையான நடவடிக்கைகளை முன்னெடுக்கவேண்டும். பேரினவாதிகளுக்கு கடிவாளம் பூட்ட வேண்டும். அவ்வாறு இல்லாவிட்டால் இலங்கையை மீண்டும் இருண்ட யுகம் சூழ்ந்துக்கொள்ளும் நிலைமையே உருவாகும்.அதேவேளை, நாட்டின் அரசியலமைப்பில் பௌத்த மதத்துக்கு முன்னுரிமை வழங்கப்பட்டுள்ளமை உண்மையே. ஆனால், ஏனைய மதங்களின் பாதுகாப்பும் உறுதிப்படுத்தப்பட வேண்டும் எனவும் வலியுறுத்தப்பட்டுள்ளது. அதேபோல் ஒரு மதத்தை ஆக்கிரமித்து - அழித்துதான் பௌத்த மதத்தை நிலைநாட்ட வேண்டும் என புத்தரும் கூறவில்லை. எனவே, இனவாத பிக்குகள் எதற்காக இவ்வாறு செயற்படுகின்றனர். இதன் பின்னணி என்ன? இவர்களை இயக்கும் சக்திகள் எவை? என்பன கண்டறியப்படவேண்டும். '' என்றார். https://www.madawalaenews.com/2019/09/blog-post_838.html
 27. 1 point
  எழுக தமிழின் தோல்வி, ஒட்டு மொத்த தமிழினத்துக்கும் மூக்குடைவு என்பதே உண்மை. இந்த தோல்வியை கஜே கோஸ்டி தமது வெற்றியாக கொண்டாடுவது அருவருக்கத்தக்கது. “எனக்கு மூக்கு போனாலும் எதிரிக்கு சகுனப் பிழை” எனும் பொன்னம்பலத்தின் அரசியல் தொடர்சியே இது. இவர்களுக்கு கூட்டமைப்பு எவ்வளவோ பரவாயில்லை.
 28. 1 point
 29. 1 point
  இந்த ஊழல் பேர்வழி கொழும்பில் காணி வாங்கியுள்ளதாகவும் அதற்க்கு மாதாந்த தவனைப் பணம் கொடுக்க பல்வேறு ஊழல்களில் ஈடுபட்டதாக தெரிய வருகிறது.
 30. 1 point
  அது மட்டுமல்ல, வெளிப்படையான, இரகசிய அன்பளிப்புகளைப் பெற்று சில முக்கிய/சிக்கலான விடயங்களை மறைப்பதுவும் இராஜதந்திரத்தின் முக்கியமான ஒரு பகுதியாகும். இதில் வெளிப்படையான அன்பளிப்புகள் எனப்படுவது தமது நாட்டுக்கு தெரிய இடம், ஒப்பந்தம், வாய்ப்புகள், கடத்தல், கொலை போன்றவை அடங்கும். இதில் இரகசிய அன்பளிப்புகள் எனப்படுவது இராஜதந்திரிகள் தமது நாட்டுக்கு தெரியாமல் இரகசியமாக பெற்றுக்கொள்ளும் பணம் / பொருள் அன்பளிப்புகள், விலை உயர்ந்த மதுபான அன்பளிப்புகள், பெண்/ஆண் பாலியல் சேவைகள், ஆபரணங்கள் போன்றவை அடங்கும்.
 31. 1 point
 32. 1 point
  முன்னர் வவுனியாவில், வடக்கில் கப்பம் பெற்று கொலைகளுக்கு தரகுப் பணம் பெற்று சொகுசா வாழ்ந்த சித்தார்த்தன் இப்போது இந்தியன் வீசும் பிச்சைக் காசையும் எலும்புத் துண்டுகளையும் வைத்து எப்படி சொகுசாக வாழ்வது?
 33. 1 point
  மதி, அப்படி ஒருவரை விடுங்கள்.. கனடாவில் இருந்து இதில் பங்களிக்க விருப்பம் செய்கின்றவர்களுக்கு, மதியால் அவ்வாறு பேபால் மூலம் அனுப்பும் ஒருவரை இணைக்க முடியாமல் போனால், தனித்தனியாக பணத்தை அனுப்பாமல், ஒருவருக்கு பங்களிப்பை அனுப்ப அவர் பொறுப்பெடுத்து பணம் அனுப்பினால் நல்லம் என நினைக்கின்றேன். நான் வரும் புதன் கிழமை அல்லது வியாழக்கிழமை பணம் அனுப்ப நினைத்து இருக்கின்றேன்.
 34. 1 point
 35. 1 point
  ரத்த மகுடம்-71 ‘‘தொந்தரவுக்கு மன்னிக்க வேண்டும் மன்னா..!’’காவலாளி தகவல் சொல்லி அனுமதி பெற்று வருவதற்கு முன்பாகவே சாளுக்கிய மன்னர் விக்கிரமாதித்தரின் அந்தரங்க அறைக்குள் ஸ்ரீ ராமபுண்ய வல்லபர் நுழைந்துவிட்டார்.மன்னருக்கு சிரம் தாழ்த்தி வணக்கம் தெரிவித்துவிட்டு, ‘தங்களைக் காண போர் அமைச்சர் வந்திருக்கிறார்...’ என்று சொல்ல வாயைத் திறந்த சாளுக்கிய வீரன் தனக்குப் பின்னால் இருந்து ஒலித்த குரலைக் கேட்டு திடுக்கிட்டான். மன்னரின் முகத்தைக் கண்ட அந்த வீரன் புரிந்து கொண்டதற்கு அறிகுறியாக ,அவரை மீண்டும் வணங்கிவிட்டு மூன்றடிகள் அவரைப் பார்த்தபடியே பின்னோக்கி நகர்ந்து பின்னர் மன்னருக்கு முதுகைக் காட்டாமல் அப்படியே அறையை விட்டு வெளியே வந்தான். கதவை மூடினான். பழையபடி அறை வாசலில் காவலுக்கு நின்றான்.‘‘காரணமில்லாமல் இப்படி அவசரமாக நுழைய மாட்டீர்கள் என்று தெரியும்... சொல்லுங்கள்... என்ன விஷயம்..?’’ ‘‘மன்னா! நாம் வெற்றி பெற்றுவிட்டோம்!’’ முகமெல்லாம் மலர ஸ்ரீராமபுண்ய வல்லபர் தன் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார்.விக்கிரமாதித்தரின் முகத்தில் அந்த மலர்ச்சி எதிரொலிக்கவில்லை. மாறாக, ஆழ்ந்த சிந்தனையுடன் ‘‘அப்படியா..?’’ என்றார்.‘‘என்ன மன்னா இப்படி சர்வசாதாரணமாகச் சொல்லி விட்டீர்கள்! இது எப்படிப்பட்ட வெற்றி... பல்லவர்களை நாம் போரில் முறியடித்திருக்கிறோம்! அதுவும் நேருக்கு நேர் போரிட்டு...’’ வெற்றிக் களிப்புடன் போர் அமைச்சர் அறிவித்தார்.‘‘காஞ்சியை நாம் கைப்பற்றியதுகூட பெரிய விஷயமில்லை மன்னா... ஏனெனில் போர் புரிந்து நாம் காஞ்சி மாநகரத்தைக் கைப்பற்றவில்லை. நகரத்தைத் திறந்து வைத்துவிட்டு பல்லவ மன்னர் பரமேஸ்வர வர்மர் தன் படைகளுடனும் குடும்பத்துடனும் வெளியேறினார். எனவே காஞ்சி அரண்மனைக்குள் நாம் நுழைந்தது வெற்றியாகக் கருதப்பட மாட்டாது. ஆனால், இப்பொழுது...’’கண்கள் விரிய தன் மன்னரை ஏறிட்டார் ஸ்ரீ ராமபுண்ய வல்லபர். ‘‘உண்மையிலேயே நாம் ஜெயித்திருக்கிறோம். சாளுக்கியர்களின் நீண்ட நாள் கனவு நிறைவேறியிருக்கிறது. இனி வரலாறு உங்களது இந்த வெற்றியை... சாளுக்கியர்களின் வீரதீர பராக்கிரமத்தை எக்காலத்திலும் போற்றிப் புகழும்...இந்த வெற்றி முழுக்க முழுக்க தங்களுக்கே சொந்தமானது மன்னா...’’ சொல்லும்போதே ஸ்ரீராமபுண்ய வல்லபரின் குரல் தழுதழுத்தது.‘‘எவ்வளவு தீர்க்கத்துடன் யோசித்தீர்கள்... அப்பப்பா... காஞ்சியில் சாளுக்கியப் படைகளைக் குவித்து வைத்திருக்கிறோம்... வாதாபியில் போதுமான படைகள் இல்லை... எனவே, மறைந்து வாழும் பல்லவ மன்னர் பரமேஸ்வர வர்மர் படைகளைத் திரட்டி சாளுக்கிய தேசத்தைத் தாக்கி கைப்பற்ற முயற்சிப்பார் என்ற உங்கள் கணிப்பு பொய்க்கவில்லை.பரமேஸ்வர வர்மர் அப்படித்தான் செய்தார். இதை முன்பே ஊகித்து கங்க மன்னருக்கு தூது அனுப்பி படைகளுடன் அவரை பல்லவ மன்னரை எதிர்பாராமல் நீங்கள் தாக்கச் சொன்னது நல்லதாகப் போயிற்று! இந்தத் தாக்குதலை எதிர்பார்க்காத பல்லவப் படைகள் சிதறிவிட்டன. வாதாபியைக் கைப்பற்ற பரமேஸ்வர வர்மர் மேற்கொண்ட முயற்சியை இப்படியாக நீங்கள் முறியடித்திருக்கிறீர்கள்!’’மூச்சு விடாமல் பேசிய ராமபுண்ய வல்லபர், சாளுக்கிய மன்னரை நோக்கி வணங்கினார். ‘‘என்னதான் சாளுக்கியப் படைகளுக்கு நான் போர் அமைச்சராக இருந்தாலும், தங்கள் தந்தை காலம் முதலே பணியில் இருந்தாலும், தங்கள் அளவுக்கு எனக்கு புத்தி சாதுர்யம் இல்லை மன்னா! தங்களைப் போன்ற ஒருவரை மன்னராகப் பெற ஒவ்வொரு சாளுக்கியனும் கொடுத்து வைத்திருக்க வேண்டும்!’’‘‘கற்பனையான விஷயத்துக்கு புகழ்கிறீர்கள் அமைச்சரே... அதனாலேயே இப்புகழ்ச்சியை ஏற்க மனம் மறுக்கிறது...’’ நிதானமாகச் சொன்னார் விக்கிரமாதித்தர்.‘‘மன்னா!’’ அலறினார் ராமபுண்ய வல்லபர். ‘‘பல்லவப் படைகள் சிதறி ஓடியிருப்பதும் நாம் வெற்றி பெற்றிருப்பதும்...’’‘‘உண்மையல்ல...’’ இடைவெட்டினார் சாளுக்கிய மன்னர்.என்ன சொல்வது என்று தெரியாமல் பிரமை பிடித்து நின்றார் சாளுக்கிய போர் அமைச்சர். உள்ளங்கை நெல்லிக்கனியாக நாம் வெற்றி பெற்றிருப்பது தெளிவாக இருக்க மன்னர் எதற்காக அதை நிராகரிக்கிறார் என்ற கேள்வி அவருக்குள் எழுந்தது.விக்கிரமாதித்தரே அதற்கு விடை அளித்தார். ‘‘போக்குக் காட்டி நம்மை பல்லவர்கள் திசை திருப்பியிருக்கிறார்கள்... இதைப் புரிந்து கொள்ளாமல் நாம் சிறுபிள்ளைத்தனமாக நடந்துகொண்டிருக்கிறோம்... நானும் பெரிய யுத்த தந்திரத்தை அமைத்துவிட்டதாக எண்ணி இறுமாந்திருக்கிறேன்...’’‘‘மன்னா...’’‘‘யோசிக்க யோசிக்கத்தான் விடைகள் கிடைக்கின்றன ராமபுண்ய வல்லபரே...’’‘‘புரியவில்லை மன்னா...’’‘‘இன்னமுமா..?’’ கேட்ட சாளுக்கிய மன்னரின் கண்கள் இடுங்கின. ‘‘தன் நாட்டை எதிரி அபகரித்திருக்கும்போது எந்த ஒரு மன்னனும் என்ன செய்வான்..? அதை மீட்க முயல்வான். மாறாக, எதிரியின் தலைநகரத்தை நோக்கி படைகளைச் செலுத்துவானா..?’’‘‘மன்னா...’’‘‘அப்படிச் சென்ற படைகளில் பல்லவ மன்னர் பரமேஸ்வர வர்மர் இருந்திருக்கிறார். ஆனால்...’’ நிறுத்திய விக்கிரமாதித்தர் தன் முன்னால் பிரமை பிடித்து நின்றிருந்த ராமபுண்ய வல்லபரின் கண்களை உற்றுப் பார்த்தார். ‘‘அப்படையில் போர்த் தளபதியான சோழ மன்னர் இல்லை! இளமைத் துடிப்புடனும், சாதிக்க வேண்டும் என்ற பரபரப்புடனும் வலம் வரும் பல்லவ இளவரசன் இல்லை! அவ்வளவு ஏன்... பல்லவர்களின் அசுவ சாஸ்திரியும் உப தலைவனுமான கரிகாலன்கூட வாதாபியைத் தாக்க முற்பட்ட பல்லவப் படையில் இல்லை!புரிகிறதல்லவா..? நம்மை முழுக்க முழுக்க ஏமாற்றவும், திசை திருப்பவும் இந்த நாடகத்தை பல்லவ மன்னர் அரங்கேற்றி இருக்கிறார்!’’‘‘இதனால் அவருக்கு என்ன பயன் மன்னா..?’’‘‘அவகாசம் அமைச்சரே... அவகாசம்... போக்குக் காட்டி நம் கவனத்தை வேறு பக்கம் திருப்பிவிட்டு நிதானமாக படைகளைத் திரட்டி வருகிறார்கள். குறிப்பாக யானைப் படைகளையும் புரவிப் படைகளையும் வலுப்படுத்தி வருகிறார்கள்... இவை எல்லாம் இப்பொழுது புரிகிறது... ஆனால், ஒரு விஷயம் மட்டும் புரியவே இல்லை...’’‘‘என்ன மன்னா..?’’‘‘எதற்காக கரிகாலன் அத்தனை நாட்கள் காஞ்சியில் இருந்தான்..? என்ன காரணத்துக்காக நம் கவனத்தை எல்லாம் தன் பக்கமே இருக்கும்படி பார்த்துக் கொண்டான்..?’’ஸ்ரீ ராமபுண்ய வல்லபரிடம் சாளுக்கிய மன்னர் கேட்ட அந்தக் கேள்விக்கான விடையை வனத்தில் இருந்த பெரு மரத்தின் மீது சாய்ந்தபடி சிவகாமி பட்டுத் துணியில் எழுதினாள்.எழுதியதை திரும்ப ஒருமுறை படித்தாள்.அவள் தோள் மீது அமர்ந்தபடி புறா ஒன்றும் அதை வாசித்தது! http://kungumam.co.in/Articalinnerdetail.aspx?id=15933&id1=6&issue=20190920