Everything posted by Paanch
-
கருத்துக்களம் : பிரச்சனைகளும் தீர்வுகளும்
கணனி கேட்டது. ஐ பாட் எதையுமே கேட்கவில்லை ஐயா! இதன் நுட்பமோ, மர்மமோ என்ன.????
-
சுமந்திரன் சென்ற கூட்டத்தில் கூச்சல் குழப்பம்! வெளியான பகீர் வீடியோ.
சுமந்திரன் எதற்காக தமிழரசுக் கட்சிக்குள் நுழைந்தாரோ அதற்கான வேலையை அவர் கனகச்சிதமாக முடித்து அதில் வெற்றியும் அடைந்து விட்டார். அவர் ஒரு கொழுத்த பூனை, அவருக்கு மணிகட்ட எண்ணும் எலிகள் எல்லாம் மண்கவ்வுவது நிச்சயம்.🤔
-
மீன் சந்தையில், மீன் வாங்கும் போது கவனிக்க வேண்டியவை.
கவி அருனாசலம் அவர்கள் கவிதை எழுத எங்கு கற்றார் என்பது இப்போது புரிந்தது.😁
-
கருத்துக்களம் : பிரச்சனைகளும் தீர்வுகளும்
யாழுக்குள் வர “கணனிக்குள்” நுளைந்தேன் அது கதவை மூடிவிட்டது.☹️ “ஐ பாட்” மூலமாக நுளைந்தேன் அது ஆனந்தமாக வரவேற்றது.🤩
-
யாழில் தேங்காய் விலை ரூ. 250 தொட்டது!
இலங்கையில் புதிதாக அரசு வெளியிட்ட பாலர் பாடப்புத்தகத்திலிருந்து.🐕…..👇 நாய் அரிசி காக்கும்.
-
ஒரு ஆட்டுக்காரனின் பிரலாபம்
நானும் கேள்விப்பட்டதில்லைப் பிரியரே! ஆனால் ஆட்டையே சுட்டுத்தர “கொன்றால் பாவம் தின்றால் போகும்” என்ற பழமொழிக்கிணங்க, நானும் தின்றதுண்டு.😛
-
யாழில் தேங்காய் விலை ரூ. 250 தொட்டது!
புத்தர் உண்மையை சொல்கிறார் சூடு தாங்க முடியவில்லை. “குரங்கிலிருந்து பிறந்தவன் மனிதன்”.😂 இங்கு தேங்காய் ஒன்றின் விலை இலங்கைக் காசில் கணக்குப் பார்த்தால் 1000 ரூபாவிற்கும் விற்கப்படுகிறது. அத்துடன் வாங்கி வீட்டில் உடைத்த பின்புதான் தெரியும் அது அழுகலா, கொப்பறாவா, ஓடு கழன்றதா என்று. வாங்கினால் வாங்கியதுதான் திரும்ப கொடுத்து வேறொன்று வாங்கவும் முடியாது, குப்பையில்தான் போடவேண்டும். எந்த நிறுவனத்திலும் முறையிடவும் முடியாது, பணம் போனது போனதுதான்.😩😭
-
7 கோள்களும் ஒரே அணிவகுப்பில்; இலங்கையர்களுக்கு அரிதான சந்தர்ப்பம்!
இந்தக் கோள்கள் நேராக அணிவகுக்கும் அரிதான காட்சியை இலங்கையர்கள் பார்க்க முடிவதால் அவர்களுக்கு ஏற்படக்கூடிய நன்மைகள் என்ன?
-
'அழகான கடற்கரை ஓர் கவர்ச்சிகரமான சுற்றுலாத் தளம்' சுத்தப்படுத்தல் நிகழ்ச்சித்திட்டம்!..
கடல், கடற்கரைகளைச் சுத்தம் செய்வதால்…. கடல்பாசி, கடற்கழிவுகளை உண்டுவாழும் கடல்வாழ் உயிரினங்களுக்கு உணவுத் தட்டுப்பாடு ஏற்படாதா??.🥵
-
ஜெர்மனி தேர்தல்: எதிர்க்கட்சியான கன்சர்வேடிவ் கட்சிக்கு வெற்றி வாய்ப்பு! வெளியான Exit Poll ரிசல்ட்!
சாத்திரம், ஜோதிடம், கிரகங்கள் மற்றும் கலியுகம், கலியுகம் என்று பூமியில் மக்களைக் கிலிபிடிக்க வைத்த புகழ்பெற்ற மேதைகளின் வார்த்தைகள் பொய்யல்ல என்பதை மெய்ப்பிக்க உண்மையில் இப்போதுதான் கலி தன் வாகனத்தில் பூமிக்கு வந்துள்ளது. பூமியில் தன் வாகனத்தைப் பார்க்செய்யக் கட்டணமற்ற இடம்தேடி முதலில் அமெரிக்காவில் கண்டுபிடித்தது. தன் ஆ ட்டத்திற்கு மேளமடிக்க டிரம்பும் அங்கு இருப்பதும் கண்டு மேலும் அளவில்லா ஆனந்தம் கொண்டுள்ளது. தொடர்ந்து ஐரோப்பா, ஆசியா, ஆபிரிக்ககா, தென்னமெரிக்கா என்று கண்டம் கண்டமாக அதன் ஆட்டம் தொடரும் என எதிர்பார்க்லாம். கிரகங்கள் தாக்கத்திலிருந்து தப்புவதற்காக கோமாதா தீர்த்தம் அருந்தி செய்யவேண்டிய பரிகாரங்களை உலகத்துக்கே அறியத்தந்த இந்தியா, கலியின் ஆட்டத்தால் தொடர்ந்து வரும் அமெரிக்க வானூர்திக் கிரகங்களைக் கண்டு செய்வதறியாது தடுமாறுகிறது. அமெரிக்காவுக்குக் கலியுக வரதனார் முதலில் வந்தாலும், அவருக்கு முந்திநின்று “ஏஎப்டி” என்று பெயர் சூட்டிப் பெருமைகொள்ளும் பெறுபேற்றை யேர்மனியே அடைந்துள்ளது.🏃🏽♀️💃🏼
-
அமெரிக்காவில் பயணிகள் விமானம் ஹெலிகொப்டருடன் மோதி ஆற்றில் வீழ்ந்தது ; மீட்பு நடவடிக்கைகள் ஆரம்பம்
எங்கள் பேத்தி காட்டிய கட்சிக்கு வாக்களித்தோம். சாமியார் எப்படி மோப்பம் பிடித்தார்??.🤔
-
BBC தமிழோசை ஆனந்தி சூரியபிரகாசம் அவர்கள் காலமானார்!!!
ஆனந்தி அவர்களின் ஆத்மா சாந்திபெற இறைவனை வேண்டுகின்றேன்.🙏
-
ஆரையம்பதியில் மைதானத்தில் விளையாடிக்கொண்டிருந்தவர்கள் மீது வாள்வெட்டுத் தாக்குதல் ; இருவர் படுகாயம்
உண்மைதான் புத்தரே! ஆனால் அரசன் செய்யும் ஆட்சி ..நல்லாட்சியா? இல்லையா? என்றும் கண்டுகொள்ள முடியும். மக்களாட்சியில் அது முடியாது.😲
-
யாழ். கோப்பாயில் இடம்பெற்ற இறுதி ஊர்வலத்தில் வாகன விபத்து - ஒருவர் பலி, ஐவர் காயம்
நான் யேர்மனி வந்து அந்த நாட்டுக் கலாச்சாரத்தில் பழகிய சில காலத்தின் பின்பு பிறந்தமண் சென்றிருந்தேன். அங்கு நான் சுவைத்த ஒரு இனிப்பைச் சுற்றிய பேப்பரைப் போடுவதற்கு என் உணர்வு குப்பைத்தொட்டியை தேடவைத்தது. அனேகமாக மேலைநாடு வந்து திரும்ப ஊர்சென்ற கள உறவுகள் பலருக்கும் இந்த உணர்வு ஏற்பட்டிருக்கும் என்பதை எண்ணுகிறேன்.
-
ஆரையம்பதியில் மைதானத்தில் விளையாடிக்கொண்டிருந்தவர்கள் மீது வாள்வெட்டுத் தாக்குதல் ; இருவர் படுகாயம்
மக்கள் ஆட்சி யுகம் மீண்டும் அரசன் ஆட்சி காலத்திற்குப் போய்விட்டதா??.🤔
-
பெரியார் தொண்டர்
எனக்குச் சீண்டித்தான் அமைந்தது……….இறைவன் கொடுத்த வரம்.🥰
-
பெரியார் தொண்டர்
நிலமைக்கு ஏற்ப நிறம் மாறும் ஓணான் அல்ல ஓணாண்டி அவர்கள். அது வாசிப்போரின் உள்வாங்கலைப் பொறுத்தது சுவி அவர்களே!🤔 சும்மாதான் ஒரு சீண்டல் சுவி.😁
-
பெரியார் தொண்டர்
எங்கள் பாட்டனார் அருனாசலம் அவர்களின் குடும்பச் சொத்தான திருநெல்வேலி பழங்கிணத்தடி பிள்ளையார் கோவிலில் எனது பெரியப்பாவும் தனக்குத் தெரிந்தவகையில் தேவாரம்பாடி பூசை செய்து வந்தார். பெரியப்பா இறந்ததும் கோவில் சற்று விசாலமாகக் கட்டப்பட்டு, கும்பாபிஷேகம் நடாத்தப்பட்டு, சிறிய மண்டபமும் கட்டிப் பிராமண ஐயர் தற்போது பூசை செய்துவருகின்றார்..
-
நீதிமன்ற பாதுகாப்பை கேள்விக்குறியாக்கிய துப்பாக்கி சூடு!
- யாழ். தெல்லிப்பழையிலுள்ள கல்லூரியில் இல்ல அலங்காரத்துக்கு தடை ? : பழைய மாணவன் மீதும் தாக்குதல்!
- எதிர்காலத்தில் பாதாள உலகத்தை முடிவுக்குக் கொண்டுவர அனைத்து நடவடிக்கையும் எடுக்கப்படும் – ஜனாதிபதி
பாதாள உலகை முடிவுக்கு கொண்டுவருவது சாத்தியமாகலாம். ஆனால் பக்கத்தில் இருக்கும் மக்கள் நலம்கருதாத சுயநல இனவாதிகளை அதிகம் கொண்ட எதிர்க்கட்சி உலகானது….. ஆடுவது எப்போ விழும் கௌவித்தின்று ருசிக்கலாம் என்ற பின்னால் திரிகிறதே? அதிலிருந்து தப்பிவர அல்லது அதனை நல்வழிப்படுத்த நடவடிக்கை ஏதும் உள்ளதா?? இரண்டு கொழுத்த பெரிசுகளும் அங்கு இணைய வருவதாகச் செய்திகளும் வருகின்றனவே!.🤔- மேலும் 116 இந்தியர்களை நாடு கடத்திய அமெரிக்கா!
கொழும்பு தபால் கந்தோரில் வேலைசெய்யும் ஒரு ஊழியர் தபால்களைப் பிரித்து அனுப்பும் போது கனமாக உள்ளவற்றைக் கிலிக்கிப் பார்த்து உள்ளே காசு பணம் பெறுமதியான பொருட்கள் இருந்தால் ஆட்டையைப் போடுவது வழக்கமாம். ஒருமுறை கனதியான சரை ஒன்று இந்தியாவுக்கு அனுப்பும் தபாலில் இருக்க ஆவலோடு பிரித்துப் பார்க்க, அது வீபூதி நிறைந்த சரையாக இருந்தது கண்டு சிவ சிவா என்று அள்ளி நெற்றியிலிட்டு, வாயிலும் போட்டுப் பின்பு அத்துடன் இருந்த கடிதம் ஒன்றையும் பிரித்துப் பார்த்தாராம். “அன்புள்ள மாமா அறிவது! இத்துடன் இருக்கும் எங்கள் தாத்தாவின் அஸ்தியை கங்கையில் கரைத்து அவர் ஆத்மா சாந்தியடைய வேண்டிக் கொள்ளவும்”.😂🥵- 'நீங்கள் யுத்தத்தை ஆரம்பித்திருக்ககூடாது" ரஸ்ய உக்ரைன் யுத்தத்திற்கு உக்ரைன் ஜனாதிபதியே காரணம் என டிரம்ப் குற்றச்சாட்டு
உக்ரெயின் சோவியத் யூனியனின் ஒரு பகுதி. பிரிந்தபின் சிவனே என்று இருந்திருக்க வேண்டும். நாட்டோவை நாடியதால் நட்டாற்றில் நிற்கிறது. இலங்கையில் தமிழ் சிறார்களை குண்டுபோட்டுக் கொண்ற பழியும் சும்மா விடாது.- அணு ஆயுத திட்ட பணியாளர்களை மீண்டும் பணியமர்த்த அமெரிக்க ஜனாதிபதி உத்தரவு!
பூமிக்கு வெளியேஉள்ள சிறிய கோள் ஒன்று பூமியைத் தாக்கி அழிவுகளை ஏற்படுத்தலாம் என்று நாசா தெரிவித்துள்ளது. அதைவிடச் சிறிய கோள் ஒன்று பூமியின் உள்ளே இருந்து பூமியைத் தாக்கி அழிவுகளை ஏற்படுத்த முயல்வதை நாங்கள் காண்கிறோமே.😳- மாற்றி அடித்தார் அர்ச்சுனா எம்.பி
தமிழ் Mirror ஏன் தானும் குழம்பி எங்கள் பிழம்பையும் குழப்பியது? ஊழல் (கையூட்டு) அங்கும் உள்ளதா??🤔 தம்பி தமிழ் சிறியையும் மன்னிப்பு கேட்கும் நிலைக்கு கொண்டுவந்து விட்டதே???😢 - யாழ். தெல்லிப்பழையிலுள்ள கல்லூரியில் இல்ல அலங்காரத்துக்கு தடை ? : பழைய மாணவன் மீதும் தாக்குதல்!
Important Information
By using this site, you agree to our Terms of Use.