Everything posted by Paanch
-
யாழில். ஒரே பிரசவத்தில் மூன்று குழந்தைகளை பெற்ற தாய் உயிரிழப்பு!
உலக சாதனை : ஒரே பிரசவத்தில் 10 குழந்தைகள் பெற்றெடுத்த Gosiame Sithole | 10 Babies in 1 delivery Tamil Mithran (Latest Tamil Cinema News) 1.51M subscribers <iframe width="640" height="360" src="https://www.youtube.com/embed/DUigRYla65o" title="உலக சாதனை : ஒரே பிரசவத்தில் 10 குழந்தைகள் பெற்றெடுத்த Gosiame Sithole | 10 Babies in 1 delivery" frameborder="0" allow="accelerometer; autoplay; clipboard-write; encrypted-media; gyroscope; picture-in-picture; web-share" referrerpolicy="strict-origin-when-cross-origin" allowfullscreen></iframe>
-
அயர்ந்து தூங்கினார் அர்ச்சுனா
அபிமன்யு தாயின் வயிற்றில் இருக்கும்போதே போர் முறைகளைக் கேட்டறிந்தார் என்று பாண்டவர் இதிகாசம் சொல்கிறது. அர்ச்சுனா நித்திரை என்றாலும், 2026 ஆம் ஆண்டுக்கான வரவு-செலவுத்திட்டம் மீதான உரையைக் கேட்டு அறிந்திருப்பார். அதுபற்றிய அவர் கருத்துக்கள் இனி வெளிவரலாம்.🤪
-
உடன்பிறந்த தம்பியை அச்சுறுத்தி முறைகேடான உறவு கொண்ட சகோதரி கர்ப்பம்!
இதனை எப்படி அறிந்தீர்கள், செய்திகள்மமூலம்தானே? நேரில் அறிந்த அனுபவம் உண்ட??🧐
-
உடன்பிறந்த தம்பியை அச்சுறுத்தி முறைகேடான உறவு கொண்ட சகோதரி கர்ப்பம்!
மனித உணர்வுகளை ஆராயும் ஆராச்சியாளர்களின் கட்டுரை ஒன்றைப் படித்துள்ளேன். அதில் ஒரு பெண்மூலம் ஒரு ஆணின் விந்தில் உருவான ஆண் பெண் பிள்ளைகளிடம் காம ஈர்ப்புகள் ஏற்படாது என ஆராச்சி முடிவுகள் தெரிவித்திருந்தது. அப்படியானால் இந்தப் பெண்ணும், அந்தச் சிறுவனும் வேறு வேறு ஆண்களின் விந்துக்களால் ஒரு தாயிடம் உருவாகி இருக்கவேண்டும்.
-
அரசாங்கத்தின் அனுசரணையுடன் பாதாள குழுக்கள் செயற்படுகின்றன - நாமல் ராஜபக்ஷ
நுணலும் தன் வாயால் கெடும். நாமல்ராஜபக்ஷவும் தன் வாயால் கெடுவார்போல் தெரிகிறது. 😀😃😄😁🤣
-
இலங்கையில் 13,000க்கும் மேற்பட்ட குடும்பங்கள் பொது வெளிகளில் மலம் கழிப்பதாக தகவல்!
மண்ணுக்கு உரமாவது மட்டுமல்ல, பறவைகள் விலங்குகள் மற்றும் பிராணிகளுக்கு உண்ணக் கொடுத்து அவற்றின் பசிபோக்குவது பெரும் புண்ணியமே. ஒரு சிறிய கூட்டுக்குள் மூக்கைப் பொத்தி, முக்கி முணகி அல்லல் படுவதைவிட, வடலிக்குப் பின்னால், பனைமரம்பின்னால் சிறந்த காற்றோட்டத்துடன்……அனுபவித்தவர்களுக்கத் தெரியும் அதன் சுகானுபவம்.🤣
-
உள்ளூர் முதலீட்டாளர்களுக்கு கஞ்சா சாகுபடி திட்டத்தை திறக்கும் அரசாங்கம்!
யோசிக்கலாம்தான்……..ஆனால் புகையிலையை சாகுபடி செய்பவர்கள் 99% தமிழர்கள் அல்லவா.??
-
கடலில் கவிழ்ந்த கேஷான் புதா 1 மீன்பிடிக் கப்பல் - மீனவர்களை மீட்கப் புறப்பட்டது சிதுரல கப்பல்
நானும்தான். கோசானுக்கு நூறு வயது.🙌
-
ஹிஸ்புல்லாவிடம் இருந்து 2 மில்லியன் அமெரிக்க டொலர் மோசடி?
கோவிலை இடித்து மீன் சந்தை கட்டுவதில் புகழ்பெற்றவர் இவர்தானா.????
-
யாழ். செம்மணிப் புதைகுழிக்கு நீதிகோரி போராட்டம்
பிரபாகரன் மனதில் மனிதம் இல்லாது போயிருந்தால் இந்தநிலை தோன்றியிராது.🤔
-
யாழுக்கு வருகை தந்தார் கவிஞர் வைரமுத்து
கண்ணால் காண்பதுவும் பொய்யே, காதால் கேட்பதுவும் பொய்யே. கவிஞர் வைரமுத்துவை போற்றுவோம், தூற்றுவோம். நாங்கள் கண்ணால் காணவில்லை வாசித்தோம், காதால் கேட்டோம். போற்றுவோம், தூற்றுவோம். போற்றுவார் போற்றலும், தூற்றுவார் தூற்றலும் போகட்டும் கவிஞர் வைரமுத்துவிற்கே.
-
பஞ்சபூதங்கள் – உயிரின் இசை
நான் இன்றுதான் பார்த்தேன். அருமையிலும் அருமை.🤩 வாழ்த்துக்கள்!!
-
அரசாங்கத்திலும் ஒரு நாமல் இருக்கிறார் நாமல் ராஜபக்ஷ சாடல்
நாமல் கருணாரத்ன என்ற பெயரில் நாமல் இருக்கின்றார். மஹிந்த ஐயசிங்க என்ற பெயரில் மஹிந்த இருக்கின்றார். இதை ஏன் நினைவுபடுத்த மறந்தீர்கள் நாமல் அவர்களே? நாட்டை நாசப்படுத்திய அப்பனுக்கு தப்பாமல் பிறந்துள்ளீர்கள்.
-
அதென்ன குதிரை திறன்? ஏன்... கழுதை திறன், புலி திறன், சிங்க திறன், இருக்கக் கூடாதா?
குதிரைவலு, குதிரைத்திறன், குதிரைவிசை இவைஎல்லாம் சிறு வயதிலிருந்தே அனைவருக்கும் மனதில் பதிந்தது. மாற்றுவது கடினம். மாற்றினாலும் என்னதான் நியாயமான வாதங்கள் இருந்தாலும் அதனை ஏற்றுக்கொள்ள மனம் உடன்படாது. இந்துசமயம் எங்கள் சமயமல்ல என்ற உண்மையான மறுக்கமுடியாத வாதங்கள் இன்று இருக்கிறது ஆயினும் அதனை மாற்றுவதை மனம் ஏற்றுக்கொள்ள மறுக்கிறது. மாற்ற முயன்றால் அது எங்கள் மனதையே வருத்தும். இளமையில் கல்வி சிலையில் எழுத்து என்பதுபோல், மனதில் படிந்த குதிரையும் மாறாது. சிறுவயதில் எங்களுக்கு ஏற்படும் எண்ணங்களுக்கான தகுந்த தீர்வை தரமுடியாது பெரியோர்களும் சிரமப்பட்டதை சிரமப்படுவதை நாங்களும் பெரியோராகியதும் கண்டு உணரமுடிகிறது. சிறுவயதில் ஆண் பெண் வித்தியாசமின்றி அவர்களுக்குள் தோன்றும் எண்ணங்களுக்கும், கேள்விகளுக்கும் பதில் சொல்லமுடியாது முழிப்பதும், அன்றுதொட்டு இன்றுவரை பெரியவர்கள், படித்தவர்கள், மேதைகள் என்று உள்ளவர்களும் விழிபிதுங்கி நிற்பதையும், அதனை சமாளிக்க அவர்கள் சிறுவர்களை அதட்டி ஒடுக்குவதையும் வேறொரவர் சொல்லியல்ல, நாங்களே எங்கள் கண்களாலேயே காணுகின்றோம். “அனா” என்று சொல்லித் தந்துவிட்டு “அ” என்றுமட்டும் எழுத சரி என்கிறீர்களே? அந்த “னா” எங்கே போயிற்று? என்ற என் பேர்த்தியின் கேள்விக்கு என்னிடம் பதிலில்லை. இங்கு பேர்லின் நகரிலுள்ள ஒரு தமிழ் கல்விக்கழகத்தின் பாடசாலையில் “யானைய்” என்று பாடம் சொல்லித் தந்து எழுதும்படி ஆசிரியை ஒருவர் பாடம் சொல்ல, சிறுவர்கள் “யானை” என்று எழுத, அது பிழை என்று ஒரு ஆசிரியையே பிழை போட்டாராம், “ய்” யன்னா சேர்த்து “யானைய்” என்று எழுதவேண்டுமாம். அரை குறையாகப் படித்தாலும் அ,ஆ தெரிந்து ஆசிரியராக வந்தவர்கள் இங்கு சிலர் உள்ளனர். பொது இடங்களில் பிள்ளைகள் “ரீச்சர்”என்று அவர்களைக் கூப்பிடும்போது அவர்கள் அடையும் ஆனந்தத்திற்கு அளவே இல்லை. இதனை உங்களில் பலரும் கண்டு பார்த்திருக்கலாம்.
-
இனிய தீபாவளி
ஒரு உயிர் உடம்பெடுக்கிறது. உடம்பு அடுத்த உயிர் எடுத்த உடம்பைக் கொன்று திண்று கொண்டாடுகிறது.
-
இஷாராவை போல ஈஸ்டர் தாக்குதல் கொலையாளிகளை தப்பிக்கவைத்த ஆனந்தன்!
நீங்கள் அத்தனை அழகான ஆண் ஆழகனா? பொடிகாட்ஸ்சும் மயங்க??
-
இஷாராவை போல ஈஸ்டர் தாக்குதல் கொலையாளிகளை தப்பிக்கவைத்த ஆனந்தன்!
நிழலி எப்போது கைதாவார்.????????🤔
-
2026 முதல் நாடு முழுவதும் முன்பள்ளிகளுக்கு ஒரே பாடத்திட்டம்
ஒரே பாடத்திட்டம் என்றால் அதன் அடிப்படை என்ன? அரசை நம்ப முடியுமா?? பாடத்திட்டம் இப்படி வந்தால்??? பல இனங்கள் இருந்த போதும் பாடம் ஒன்றுதான் பாடம் ஒன்றுதான் பல மொழிகள் இருந்த போதும் ஒரு மொழிதான் சிங்களம் ஒரு மொழிதான் சிங்களம் வழிபடவும் வரம் தரவும் ஒரு தெய்வம் புத்தர் தான் ஒரு தெய்வம் புத்தர் தான்.
-
தங்கத்திற்காகவே சுமார் 1 இலட்சம் வடக்கு முஸ்லீம் மக்களை விடுதலைப்புலிகள் வெளியேற்றினர் ; கறுப்பு ஒக்டோபர் தின நிகழ்வில் சட்டமாணி பி.எம் முஜிபுர் ரஹ்மான்
எழுத்துகளை சிறைவைப்பதால் கருத்து சோர்ந்து சுருங்கிவிடாது.🤩
-
தங்கத்திற்காகவே சுமார் 1 இலட்சம் வடக்கு முஸ்லீம் மக்களை விடுதலைப்புலிகள் வெளியேற்றினர் ; கறுப்பு ஒக்டோபர் தின நிகழ்வில் சட்டமாணி பி.எம் முஜிபுர் ரஹ்மான்
உண்மை சுடும் என்றும் சொல்வார்கள். சூடுபட்டு கொதிப்போரையும் களத்தில் காணலாம். “பாலை ஊற்றிப் பாம்பை நாம் வளர்த்தாலும் நம்மையே கடிக்கத்தானே வரும் அதை அடித்துக் கொல்ல நேருமே”.
-
தங்கத்திற்காகவே சுமார் 1 இலட்சம் வடக்கு முஸ்லீம் மக்களை விடுதலைப்புலிகள் வெளியேற்றினர் ; கறுப்பு ஒக்டோபர் தின நிகழ்வில் சட்டமாணி பி.எம் முஜிபுர் ரஹ்மான்
முசுலீம்கள் இன்று உலகம் முழுவதிலும் பரந்து வாழ்கிறார்கள். அவர்களின் வாழ்க்கைமுறை வாழும் நாட்டின் பூகோள நிலைக்கு ஏற்றதா என்று சிறிதும் சிந்திப்பதில்லை. தங்கள் மதத்தின் சட்டங்களுக்கு முன்னுரிமை கொடுத்து வாழ்வதிலேயே முனைப்பாக இருக்கிறார்கள். அந்தவழியில் அவர்கள் தங்கத்தையோ, தங்க நகைகளையோ நிறைய வைத்திருந்தார்கள் என்பது சந்தேகமே. இந்நிலையில் புலிகள் அவர்களின்ன தங்கத்தைப் பறித்தார்கள் என்று குற்றம் சாட்டுவது சிந்திக்க வேண்டியதொன்று. உம்மு சலமா (ர) அவர்கள் கூறுகிறார்கள் : எனது கழுத்தில் தங்கத்தால் ஆன கழுத்து மாலைகளை நான் அணிந்திருந்தேன். அப்போது நபி (ஸல்) அவர்கள் (என் அறைக்குள்) வந்தார்கள். என்னை கண்டுகொள்ளாமல் இருந்தார்கள். நான் (அவர்களிடம்) என் அலங்காரத்தை நீங்கள் பார்க்கமாட்டீர்களா? என்று வினவினேன். அதற்கு அவர்கள் உனது அலங்காத்தை நான் புறக்கணிக்கிறேன் என்று கூறினார்கள். மேலும் நபி (ஸல்) அவர்கள் உங்களில் ஒருத்தி வெள்ளியால் ஆபரணத்தை செய்து பிறகு அதனுடன் குங்குமச் சாயத்தை சேர்த்துக்கொள்வதில் என்ன சிரமம் இருக்கிறது? என்று கூறியதாக இதன் அறிவிப்பாளர்கள் கருதினார்கள். அஹ்மத் (25460)
-
தங்கத்திற்காகவே சுமார் 1 இலட்சம் வடக்கு முஸ்லீம் மக்களை விடுதலைப்புலிகள் வெளியேற்றினர் ; கறுப்பு ஒக்டோபர் தின நிகழ்வில் சட்டமாணி பி.எம் முஜிபுர் ரஹ்மான்
நான் அறிந்தவரையில் ஈழ விடுதலைப் போராளிகளை அழிக்க அரசு பெரும் நடவடிக்கைகளை எடுத்திருந்தது. யாழில் இருந்த முசுலீம்கள் தாங்கள் வைத்திருந்த ஆயுதங்களோடு, இலங்கை அரசு வழங்கிய பெருவளவான ஆயுதங்களையும் அங்குள்ள பள்ளிவாசல் ஒன்றில் பதுக்கி வைத்திருந்ததை போராளிகளோடு இணைந்திருந்த சில முசுலீம்களே போராளிகளுக்கு அறியத்தந்ததாக அறிந்தேன். இந்த விடையத்தை அனைவரும் அறியும் நிலை ஏற்பட்டால் அங்குள்ள அப்பாவி முசுலீம்களோடு அந்த இனமே தாக்குதலுக்கு உள்ளாகி உயிரிழப்புகளும் பெருமளவு ஏற்பட்டிருக்கும். அதனைத் தவிர்க்கவே தலைவர் அவர்களை பாதுகாப்பாக வெளியேற்றப் பணித்தார். உண்மை தெரிந்தவர்களே என்னைப் பொய்யனாக்கி தங்களுக்கு சார்பாக எழுதுவார்கள்.
-
இரசித்த.... புகைப்படங்கள்.
இரசித்த.... புகைப்படங்கள். பக்கம் 167ஐ தாண்டி விட்டது அனேக பக்கங்களில் படங்களில்லை, புகையுமில்லை, வெள்ளை வானமும் ஒரு கேள்விக் குறியுமே தெரிகிறது. யாழில் படங்கள், வீடியோக்களை இணத்துவிடும் மந்திரங்கள் தெரிந்த மந்திரவாதிகள் அந்த மந்திரங்களை உறவுகளுக்கு ஊட்டி மகிழ்ச்சியில் திளைக்க விடலாமே. பக்கத்து இலைக்கு பாயாசம்வேண்டுமாம். குரல் ஒன்று கேக்கறது.🧘♂️
-
பேரிச்சம்பழம் நல்லதா?கெட்டதா?
“போதும் என்ற மனமே பொன்செய்யும் மருந்து”. உங்கள் மனம் பொன்போன்றது. வாழ்த்துக்கள்!!😁🙌
-
கொலைசெய்யப்பட்ட ஊடகவியலாளர் நிமலராஜனின் 25 வது ஆண்டு நினைவு தின நிகழ்வு இன்று!
நிமலராஜன் படுகொலை செய்யப்பட்டமை தொடர்பாக எந்தவித சந்தேகமுமின்றி EPDP எனப்படும் ஈழ மக்கள் ஜனநாயக கட்சி மீதே குற்றம்சாட்டப்பட்டது. இராணுவத்துடன் இணைந்து துணை இராணுவமாக செயற்பட்ட, அப்போது சந்திரிக்காவின் ஆட்சியில் பங்காளியாகவும் புனர்வாழ்வு அமைச்சராவும் இருந்த டக்ளஸ் தேவானந்தாவே EPDP இற்குத் தலைவராக இருந்தார். சனத் பாலசூரியா.