Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Paanch

கருத்துக்கள உறவுகள்
  • Joined

  • Last visited

Everything posted by Paanch

  1. “நல்லார் ஒருவர் உளரேல் அவர்பொருட்டு எல்லார்க்கும் பெய்யும் மழை” உலகெங்கும் நல்லோர்கள் அதிகரித்து விட்டனர். அதனால்தான் எங்கும் பெருமழை. கள உறவுகளே! நீங்கள் அறிந்த, தெரிந்த அனைத்து நல்லோரையும் அறியத்தந்து அவர்களுக்கு வாழ்த்தும் தெரிவியுங்கள். 😆
  2. இந்தச் செய்தி ஈழத்தில் இந்தியா செய்ததை ஞாபகப்படுத்துகிறது. ஆனால் கனடா, இந்தியாபோல் நம்பவைத்துக் கழுத்தறுக்கும் நாடல்ல.
  3. இவர்களைச் சிறையில் வைத்து தீனி போட அரசுக்கு எவ்வளவு செலவாகும்?….🤔
  4. நவ.27 அந்த மேதகு பிரபாகரன் என்ற மாபெரும் தலைவனைப் போற்றுவதற்குரிய உலகின் சிறந்த புனிதமான நாட்களில் ஒன்று. இதுதான் என்வரையிலும் ஏற்புடையது. இதைத்தவிர வேறு எந்தநாளைத் தெரிவு செய்தாலும் அது சிலராலோ அன்றிப் பலராலோ தூற்றப்படும் நாளாகவே அமையும்.
  5. முன்பு ஓட்டமாவடி ஒரு வட்டத்திற்குள் இருந்தது. இன்று அது பருத்து விரிந்து வாழைச்சேனையில் இருந்து புனானை வரையில் விரிந்து பரந்துவிட்டது. விரைவில் அங்குள்ள வாழைச்சேனை கடதாசி ஆலையும் முற்றாக அழிந்து அது ஒரு முசுலீம் கிராமமாக மாறிவிடும் சாத்தியங்கள் உள்ளதாகவும் நம்பப்படுகிறது.
  6. எப்போது சிங்களரின் ஆட்சி இலங்கையில் மாறுகிறதோ அப்போது காரணம் நாங்களே என ஏற்றுக்கொள்வார்கள்…….. மாற்றம் ஒன்றே மாறாதது. இலங்கையின் தென்பகுதி குமரிக் கண்டத்துடன் இணைந்து கொள்ளும் என்ற செய்திகளும் பரவலாக வருகிறது.
  7. செம்மணி புதைகுழிகளை உருவாக்கியது யார்………மூச்……. அது மிகவும் இரகசியமாகவே பாதுகாக்கப்படும்.🤫
  8. வட மாகாணத்தில் கல்வி நிலைமை பின்தங்கியுள்ளமைக்கு நிர்வாக பிரச்சனையே காரணம். உலகில் அறிவு பெற்ற இனத்திற்குள் தமிழினமும் உள்ளது. அதனால்தான் ஐரோப்பியர்கள் இலங்கை மக்களை அடிமைகளாக ஆண்ட காலத்திலும் தமிழர்களைத் தேர்ந்தெடுத்து பதவிகள் கொடுத்து தங்கள் நிர்வாகத்திற்கு வலுச்சேர்த்தார்கள். பிரிட்டன் மகாராணிக்கு கணிதபாடத்தில் ஏற்பட்ட சந்தேகத்தைத் தீர்க்க உதவியவர் அடங்காமுன்னணி சுந்தரலிங்கம் என்ற திருகோணமலை சேர்ந்த ஒரு தமிழர். முப்பத்து வருடங்களாக நீதி வழுவாத ஒரு அரசாட்சியை இலங்கையில் நடாத்திக் காட்டியவர் மேதகு பிரபாகரன் என்ற இன்னொரு தமிழர். தமிழர்களுக்குப் பதவிகள் கிடைப்பதைக் கண்ட அங்கு வாழும் சற்று அறிவுள்ள சிங்கள இனத்தவர்களும் தங்கள் மக்களின் அறிவை வளர்ப்பதற்கு உரிய வழிமுறைகளைத் தேடுவதை விட்டு தமிழர்கள்மேல் பொறாமை கொண்டுள்ளனர். இலங்கை சுதந்திரம் அடைந்தபின்பும் பெரும் பான்மை என்னும் பலம்கொண்டு அரசை சிங்களம் கைபற்றியபோதும் தன் இனத்தவரை அறிவைப் பெறுவதற்குரிய வழியில் வளர்க்காது தமிழினத்தையும் அவர்கள் அறிவையும் அழிக்கும் வழியிலேயே வளர்த்தது. தமிழரின் நூலகத்தை அழித்தது, சிங்களம் மட்டும் என்றும், தரப்படுத்தல் என்றும், இனக்கலவரம் என்றும் தமிழரை அழித்து அவர்கள் அறிவையும் அழிக்க இன்னமும் முயன்றும் வருகிறது. இவற்றை எல்லாம் செய்துகொண்டு தற்போது தமிழர் கல்விநிலமை பின்தங்கிவிட்டதாக நீலிக்கண்ணீர் வடிக்கிறது. இலங்கையில் தமிழரை அழிக்கலாம் ஆனால் தமிழர் அறிவை அழிக்க முடியாது. அதன் வேர்கள் இன்று உலகநாடுகளெல்லாம் பரந்தோடித் துளிர்விட்டு அந்த நாடுகளையும் முன்னேற்ற துடிக்கிறது. அந்நாடுகளும் தமிழருக்கு உயர்பதவிகள் கொடுத்து அழகுபார்க்கிறது. இதனால் சிங்களம் மேலும் மனம் புழுங்குகிறதே தவிர தன் குறை உணர்ந்து திருந்த முயல்வதாகத் தெரியவில்லை.
  9. துருக்கியர் ஒருவருக்குத் தமிழ் வாசிக்க தெரிந்து அவருக்கு யாழ்களத்திலும் உறவு இருந்தால்…தம்பி தமிழ் சிறி இனித் துருக்கிக்கு ஊர்உலா செல்லவோ, அங்கு தலைகாட்டவோ முடியாது.😭
  10. கலாசாரங்களில் பலதார மணம் எப்படி இருந்தது? பலதார மணம் நறுமணமா? நாற்றமா?? 😌😮‍💨
  11. அட பாவமே! பால்குடி பருவத்திலிருந்தே உங்களைப் பட்டினி போட்டுள்ளார்களே!!😭
  12. சும்மா சும்மா சாவகச்சேரியை கிண்டலடிக்கக் கூடாது கண்டியளோ உறவுகளே! அங்குதான் அருச்சுனா இருக்கிறார் அவர் குறிவைச்சால் தப்பாது கவனம்.😲
  13. எங்க ஊரில் குழந்தைகளுக்கு பம்பஸ் வாங்கிக் கட்டுவது குறைவு, எல்லாம் அங்குள்ள சூட்டுக்கு அவிஞ்சு சிவந்து போய்விடும், துண்டுதான் அதிகமாக கட்டுவார்கள். பழைய வேட்டி, சாரத்தை கிழித்துக் கட்டி அலம்பி அலம்பி காயவைத்துக் கட்டுவார்கள். செலவும் இருக்காது. பணம்படைத்தவர்கள் பகட்டுக்கு வாங்கிக் கட்டிவிட சூட்டில் எல்லாம் சிவந்து குழந்தை கத்திக் கதறும்.🫨
  14. குழந்தை எப்டிப் பிறந்தாலும் சீனநாட்டில் சிறீ லங்காவைப் போன்று குழந்தையை வயல் வெளியில் போடமாட்டார்கள் என்று நம்பலாம்.🥰
  15. கலவரம் என்ற போர்வையில் இலங்கை அரசுகளால் வகை தொகையின்றித் தமிழர்கள் அழித்தொழிக்கப்பட்ட வருடங்கள். 1958 கலவரம் முதன்மைக் கட்டுரை: இலங்கை இனக் கலவரம், 1958 58 கலவரம் என அறியப்பட்ட இக்கலவரம் சிங்கள் தமிழ் இனத்தவரிடையே பொலனறுவை கொழும்புப் பகுதிகளில் ஏற்பட்டது.[6] 1977 கலவரம் முதன்மைக் கட்டுரை: இலங்கைத் தமிழர் இனப்படுகொலைகள், 1977 1977 ஆம் ஆண்டு ஐக்கிய தேசியக் கட்சி ஆட்சிக்கு வந்த பின்னர், தமிழர்களை இலக்கு வைத்து, இக்கலவரம் நடத்தப்பட்டது.[2][7] 1983 கலவரம் முதன்மைக் கட்டுரை: கறுப்பு ஜூலை Tamil youth who attacked by the Sinhalese mobs, stripped naked on Colombo, 23 July 1983 கறுப்பு ஜூலை அல்லது ஆடிக்கலவரம் என பரவலாக அறியப்பட்டது. இதுவே தமிழருக்கு எதிராக மேற்கொள்ளப்பட்ட பெரிய கலவரமாக கருதப்படுகிறது.[3] 2000 கலவரங்கள்பிந்துனுவெவை கலவரம் முதன்மைக் கட்டுரை: பிந்துனுவேவா படுகொலைகள் பிந்துனுவெவையில் தடுத்து வைக்கப்பட்டிருந்த 25 தமிழ் கைதிகள் கிரமாத்தவர்களாலும் இராணுவத்தினராலும் கொலை செய்யப்பட்டனர்.[4] தலவாக்கலை-கொட்டகலை-அட்டன்-கினிகத்தனை பிந்துனுவெவை தடுப்பு முகாமில் கொலைச் செய்யப்பட்ட தலவாக்கலை,வட்டகொடைப் பகுதியைச் சேர்ந்த ஒருவரது உடல் அடக்கத்திற்காக கொண்டுவரப்பட்டப் போது. தலவாக்கலை, கொட்டகலை, அட்டன், கினிகத்தனை நகரங்களில் தமிழர்களுக்கு எதிராக கலவரங்கள் மேற்கொள்ளப்பட்டன.[5][6][7][8][9][10][11] 2001 மாவனல்லை கலவரம் 2001 ஆம் ஆண்டு மாவனல்லை நகரிலும் அதற்கு அண்மையில் இருந்தப் பகுதிகளிலும் இருந்த இஸ்லாமியர்களுக்கு எதிராக சிங்களவர் மேற்கொண்டக் கலவரமாகும்.[12][13] 2006 கலவரங்கள்திருகோணமலை
  16. மாலைதீவைப் பிடிக்க புளட் படையை அனுப்பிப் பின்னால் அந்தத் தீவைப் பாதுகாக்க இந்தியப் படையை அனுப்பினார் இந்திரா காந்தி என்ற செய்தி அன்று. ஜனாதிபதியுடன் நாமலும் என்ற செய்தி இன்று. தீவுக்கு என்னாகுமோ? ஏதாகுமோ??🫣
  17. இதற்கு உச்ச நீதிமன்றம்போல் இறுதியான தீர்ப்பு வழங்கும் ஈழப்பிரியரை இன்னும் இங்கு காணவில்லையே, வெள்ளத்திற்கு ஓடியவர் இன்னும் திரும்பவில்லையா?🤔
  18. மோட்டுப் பெண் “நான் காதலனையே கல்யாணம் செய்யப் போகிறேன்” என்று அடம்பிடித்து இருந்தால் நகைகள் சீதனமாகவே வந்து சேர்ந்திருக்கவும் வாய்ப்பு வந்திருக்கலாம் அல்லவா??.
  19. துன்பம் நேர்கையில் யாழெடுத்து நீ இன்பம் சேர்க்க மாட்டாயா. அளவுக்கு அதிகமானால் அமிர்தமும் நஞ்சாகும். யாழ்களமும் முன்பு அதிகமாக இன்பம் சேர்த்து விட்டதோ? அதனால்தான் வினை வந்ததோ??.🤔
  20. உண்மையான தகவல் தந்தமைக்கு நன்றி யஸ்ரின் அவர்களே!🙏 1980ல் நான் பிறந்த மண்ணை விட்டுப் பறந்துவிட்டேன். எனக்கு குடியகல அனுமதி தந்தவர்கள் அம்மாளுக்குத் தர மறுத்துவிட்டார்கள் அதனால் தப்பிவிட்டேன் என எண்ணுகிறேன்.🤔
  21. மனிதமும் மிருகமும் கலந்ததுதான் மனித இனம். எந்தக்கடவுளாக இருந்தாலும், கடவுள் நம்பிக்கை என்பது மனிதர்களில் உறைந்திருக்கும் மிருக குணங்களை அழித்து மனித மனத்தோடு ஆனந்தமாக, அமைதியாக வாழவைப்பது. அழிக்கத்தான் வேண்டும் என்றால் தவறாக உணரப்படும் வழிபாட்டு முறைகளை அழிக்கலாம். “இன்பமே சூழ்க எல்லோரும் வாழ்க” என்பது அனேகமாக தமிழர்களின் கடவுள் வழிபாட்டில் தலையாக உள்ளதைக் காட்டுகிறது.🙏
  22. தமிழ் நாட்டில் தமிழில் உறுதிமொழி எடுப்பதை உலக அதிசயங்களில் ஒன்றாக இணைத்துக்கொள்ள சிபாரிசு செய்கிறேன்.🙌
  23. இன்றுமுதல் சிறையில் வைக்கப்படுவோரை நிர்வாணமாகவே வைப்பதற்கு அரசு முடிவு செய்துள்ளது. அரைஞான் கொடியும் அறுத்தெறியப்படும். இதற்கான அங்கீகாரத்தை அமைச்சரவையைக் கூட்டி விரைவில் பெறப்படும்.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.